1 00:00:12,971 --> 00:00:15,015 வங்கிய கொள்ளையடிச்சவங்க, முகமூடி போட்டிருந்தாங்க. 2 00:00:15,599 --> 00:00:17,434 வங்கியில யாருமே அவங்க முகத்தைப் பார்க்கலை. 3 00:00:18,227 --> 00:00:21,355 சுடப்பட்டவரைப் பொறுத்தவரை, சுடுவதற்கு பயன்பட்ட துப்பாக்கி கிடைக்கவேயில்லை. 4 00:00:21,438 --> 00:00:23,232 உன் ஆடையிலோ, உடம்பிலோ எந்த வித கறையும் இல்லை. 5 00:00:24,024 --> 00:00:26,485 உன்னை அடிச்சாலும் உதைச்சாலும், 6 00:00:26,568 --> 00:00:29,363 உன்னைக் கைது செய்த அதிகாரிங்களால, அடிபட்டவருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாத்த 7 00:00:29,446 --> 00:00:33,116 முயற்சி செய்திட்டிருந்தன்னு தான் சொல்ல முடியுது. 8 00:00:34,493 --> 00:00:35,994 உன்னை வங்கியில பார்த்ததாக நிரூபிக்க முடியலை. 9 00:00:36,578 --> 00:00:38,413 துப்பாக்கி உங்கிட்ட இருந்ததையும் நிரூபிக்க முடியலை. 10 00:00:38,497 --> 00:00:40,666 உங்கிட்ட பணம் இருந்ததாகவும் நிரூபிக்க முடியலை. 11 00:00:40,749 --> 00:00:42,042 அவர் பெயர் என்ன? 12 00:00:44,586 --> 00:00:45,587 அந்த அதிகாரியோட பெயர். 13 00:00:47,631 --> 00:00:49,633 கான்ஸ்டன்டைன் ஃபுளோரிஸ் 14 00:00:53,011 --> 00:00:54,179 கிரேக்கர் போலத் தெரிகிறது. 15 00:00:56,390 --> 00:00:58,684 கான்னீயா? கான். 16 00:00:59,560 --> 00:01:01,937 இல்லன்னா கஸ். சில சமயம் கஸ்ன்னு அழைப்பாங்க. 17 00:01:05,022 --> 00:01:06,483 அவருடைய மனைவிக்கு ஒரு கடிதம் எழுதணும். 18 00:01:06,567 --> 00:01:07,734 உனக்குப் பைத்தியமா, டேல்? 19 00:01:07,818 --> 00:01:09,528 நீ இப்போ ஹெராயின் எடுத்துக்கறது இல்லன்னு சொன்னாங்க. 20 00:01:09,611 --> 00:01:10,737 அந்த பழக்கத்தை விட்டுட்டேன். 21 00:01:11,947 --> 00:01:14,825 ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்போ எல்லாத்தையும் உள்ளபடி பார்க்க முடியுது. 22 00:01:14,908 --> 00:01:16,451 அப்போ, இதிலிருந்து எப்படி வெளியே வர்றதுன்னு யோசி. 23 00:01:16,535 --> 00:01:20,080 ஒரு நிரபராதி எதுக்காக பாதிக்கப்பட்டவரோட மனைவிக்கு கடிதம் எழுதணும்? 24 00:01:20,163 --> 00:01:21,623 நீ எதையுமே எழுத்துல வாக்குமூலமா தரலைங்குறது தான், 25 00:01:21,707 --> 00:01:23,625 எங்களுக்குச் சாதகமா இருக்கிற ஒரு விஷயம். 26 00:01:24,626 --> 00:01:26,044 ஒரு மனிதர் கொல்லப்பட்டிருக்கார். 27 00:01:29,339 --> 00:01:33,218 அது நடக்காதது போல நான் நடந்துகொள்ளணுமா? 28 00:01:34,595 --> 00:01:35,637 கேளு, மகனே. 29 00:01:36,430 --> 00:01:38,515 நீ மனசு ரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கன்னு நினைக்கிறேன். 30 00:01:38,599 --> 00:01:40,100 நீ சில தவறுகளைச் செய்திருக்க. 31 00:01:40,184 --> 00:01:42,769 அது என்ன தவறா இருந்தாலும் சரி, 32 00:01:42,853 --> 00:01:45,355 நீ அதுக்காக வருத்தப்படுறதே பெரிய விஷயம்தான். 33 00:01:45,439 --> 00:01:47,065 எங்கம்மா உங்களுக்கு எவ்வளவு பணம் தர்றாங்க? 34 00:01:47,149 --> 00:01:49,151 எனக்கு எவ்வளவு கிடைக்கணுமோ, அவ்வளவு. 35 00:01:49,902 --> 00:01:53,238 இன்னும் இருக்கிற காலம் மோசமாகாம நான் பார்த்துக்கறேன், அதுக்கு நீ எனக்கு உதவி செய். 36 00:01:53,947 --> 00:01:56,200 அதுக்கு தான் உங்கம்மா எனக்கு பணம் கொடுத்திருக்காங்க. 37 00:02:02,247 --> 00:02:05,083 கான்டீக்கு எதிராக அரசுத்தரப்பு தொடுத்த வழக்கில் 38 00:02:05,167 --> 00:02:07,878 திரு. கான்டீ, உங்கள் கோரல் என்ன? 39 00:02:40,661 --> 00:02:41,703 குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். 40 00:02:44,039 --> 00:02:45,040 நான் குற்றவாளி. 41 00:04:07,456 --> 00:04:11,460 உடைந்த மனதோடும், அடிபட்ட கௌரவத்தோடும் ஒருவன் நகரத்தில் வாழ முடியும். 42 00:04:12,336 --> 00:04:16,423 ஆனால் ஒரு சேரியில் பிழைக்க, அவன் அதையெல்லாம் திறந்து, எல்லோருக்கும் காட்ட வேண்டும். 43 00:04:17,507 --> 00:04:21,261 நான் அப்படிச் செய்தால், எனக்கு ஒருவேளை இங்கே ரெண்டாவது வாய்ப்பு கிடைக்கலாம், 44 00:04:22,053 --> 00:04:23,931 என் தலைவிதியை ஏற்க வேண்டியதுதான், 45 00:04:24,723 --> 00:04:26,058 ஆனால் அப்போது அது எனக்குத் தெரியாது. 46 00:04:26,683 --> 00:04:28,977 நான் அனுபவிக்க வேண்டிய இன்னொரு தண்டனை என அதைக் கருதினேன், 47 00:04:29,645 --> 00:04:31,146 மேலும் என்னுடைய அறியாமையினால், 48 00:04:31,230 --> 00:04:34,942 அவர்களுக்கு தவறாகத் தெரியாத ஒரு விஷயத்தை நான் சரிபடுத்த நினைத்தேன். 49 00:04:48,956 --> 00:04:51,041 ஆஹா! அசலாம் ஆலேகும், திரு. லின். 50 00:04:52,709 --> 00:04:55,045 நாங்க உங்களுக்கு வேலை கொடுத்துட்டோம், இல்ல? 51 00:04:55,128 --> 00:04:57,506 என்னால் முடிந்ததை செய்யறேன். முயற்சி பண்ணறேன். 52 00:04:57,589 --> 00:05:00,968 அதுக்கு மேலே யாரும் எதிர்பார்க்கவும் இல்ல. நீங்க எங்க கூட இருப்பதே எங்க அதிர்ஷ்டம் தான். 53 00:05:08,433 --> 00:05:09,643 சோனம். 54 00:05:45,470 --> 00:05:48,599 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 55 00:05:52,060 --> 00:05:55,147 ருஜுல் ஆடேகர் நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி 56 00:06:01,486 --> 00:06:03,864 -நீ என்ன செய்யற? -மினிஸ்டர் பான்டே. 57 00:06:03,947 --> 00:06:05,032 துணை மினிஸ்டர். 58 00:06:05,115 --> 00:06:07,868 ரொம்ப நாள் இல்ல. ருஜுல் போயாச்சு. 59 00:06:10,537 --> 00:06:12,581 வலீத்பாய் உங்களுக்கு தன் நல்வாழ்த்துகளை அனுப்புகிறார். 60 00:06:12,664 --> 00:06:14,666 நீங்க அதை ஏத்துக்கிட்டா உங்களுக்கு நல்லது. 61 00:06:23,592 --> 00:06:24,676 நான் சொல்றதக் கேளுங்க. 62 00:06:26,303 --> 00:06:28,972 பார்க்காம நான் சிகிச்சை செய்ய முடியாது. 63 00:06:29,056 --> 00:06:30,933 முடியாது, என்னால அனுமதிக்க முடியாது. 64 00:06:31,016 --> 00:06:33,268 சரி, பாருங்க. நீங்க மருத்துவமனைக்குப் போனீங்களா? 65 00:06:34,520 --> 00:06:38,941 நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்களா? நான் திருமணமானவ, இதெல்லாம் முடியாது. 66 00:06:40,025 --> 00:06:41,318 வெறுமனே பார்க்கணும், அவ்வளவுதான். 67 00:06:41,401 --> 00:06:43,654 தயவுசெய்து என்னைத் தொடாதீங்க! இந்த வெள்ளைக்காரனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. 68 00:06:44,238 --> 00:06:46,323 சரி, சோனம், நீங்க எதுக்கு வந்தீங்க? 69 00:06:46,406 --> 00:06:48,033 யாராவது என்னைக் காப்பாத்துங்க! 70 00:06:48,116 --> 00:06:49,743 லின் உன்னை உடனே கூப்பிடுறார். 71 00:06:51,912 --> 00:06:55,249 -அவள எங்கே கூட்டிட்டுப் போற? -அவ செய்ய வேண்டிய வேலை இருக்கு! 72 00:07:01,004 --> 00:07:03,465 பார்வதி, நல்ல வேளை. அவங்க என்னை பரிசோதனை செய்ய அனுமதிக்கலை. 73 00:07:03,549 --> 00:07:05,884 பார்வதி, தயவுசெய்து அவங்ககிட்ட சொல்லுங்க. 74 00:07:05,968 --> 00:07:08,720 அவர் என்னை எல்லா இடத்திலும் தொடுறார். என் புடவையை கழட்டச் சொல்லுறார். 75 00:07:08,804 --> 00:07:10,597 லின், என்னது இது? அவங்க திருமணமானவங்க. 76 00:07:10,681 --> 00:07:14,226 இந்த குடிசையில, ரெண்டு பேரும் தனியா இருக்குறப்போ, அவங்கள நிர்வாணமாக்க முடியாது, 77 00:07:14,309 --> 00:07:17,145 -நான் போன தடவையே சொன்னேன், இல்ல? -அப்போ அவங்க எதுக்கு திரும்ப வந்தாங்க? 78 00:07:17,229 --> 00:07:19,565 அது தான் அவங்களோட நிபந்தனைன்னா, அதுபடியே நடக்கட்டுமே? 79 00:07:19,648 --> 00:07:22,401 -இல்ல, அவங்க புருஷனைக் கூட்டிட்டு வரலாமே? -அவங்க புருஷன் வேலைக்குப் போகிறார். 80 00:07:22,484 --> 00:07:25,153 ஒரு கட்டட வேலை, மணிக்கணக்கா அங்க இருந்து வேலை செய்யறார். 81 00:07:25,237 --> 00:07:27,239 எல்லாத்தையும் விட்டுட்டு, உங்கிட்ட வர முடியாது. 82 00:07:27,322 --> 00:07:30,242 நீங்க ரெண்டு பேரும் விவாதிச்சுட்டீங்கன்னா, நாங்க தயார். 83 00:07:32,286 --> 00:07:33,996 டாக்டர். லின், இப்போ கேளுங்க. 84 00:07:36,081 --> 00:07:38,292 அவங்க புண்ணை திரும்பவும் பாருங்க. பிளீஸ். 85 00:07:40,502 --> 00:07:41,962 காட்டுங்க, ஆன்டி. 86 00:07:44,506 --> 00:07:47,509 போன முறை பார்த்ததோட, இன்னும் சிகப்பாவும் மோசமாவும் இருக்கு. பரவிக்கிட்டிருக்கு. 87 00:07:47,593 --> 00:07:50,721 அது சிகப்பாவும், முன்பை விட மோசமாகவும் இருக்கு. 88 00:07:52,514 --> 00:07:54,474 என்னால சாப்பிடவோ தூங்கவோ முடியலை. 89 00:07:54,558 --> 00:07:59,229 இரவெல்லாம் வியர்க்குது, அதோட வயித்தை வலிக்குது. 90 00:07:59,771 --> 00:08:01,982 அதிகமான வியர்வையும், வயித்து வலியும் இருக்கு. 91 00:08:02,065 --> 00:08:04,026 வியர்வையும், வயித்துல வலியும் இருக்கு. 92 00:08:04,610 --> 00:08:05,861 இன்ஃபெக்ஷன் பரவியிருக்கு. 93 00:08:05,944 --> 00:08:08,780 வெறுமனே மருத்துவமனைக்குப் போய் ஒரே ஒரு ஊசி போட்டுட்டு வந்திருந்தா போதும். 94 00:08:10,657 --> 00:08:12,492 நீங்க மருத்துவமனைக்குப் போகலையா? 95 00:08:12,576 --> 00:08:16,747 நான் மூணு தடவை மருத்துவமனைக்குப் போனேன், 96 00:08:16,830 --> 00:08:19,791 ஆனால் உனக்கு தான் தெரியுமே, அங்கே எப்படின்னு. யாரும் என்னைப் பார்க்க மாட்டாங்க. 97 00:08:21,251 --> 00:08:23,587 மூணு முறை போயிருக்காங்க, ஆனால், அவங்க இவங்கள பார்க்கலை. 98 00:08:23,670 --> 00:08:26,173 அவங்க மூணு முறை போயிருக்காங்க, ஆனால், இவங்களை அவங்க கவனிக்கலை. 99 00:08:27,007 --> 00:08:28,509 "அவங்க கவனிக்கலை"ன்னா என்ன அர்த்தம்? 100 00:08:28,592 --> 00:08:31,136 நான் மக்களை அங்க அனுப்புறதே, என்னால அவங்கள இங்க பார்க்க முடியலைன்னு தானே. 101 00:08:31,220 --> 00:08:32,386 நீ இவங்கள அங்கே அனுப்புற 102 00:08:32,471 --> 00:08:34,515 அவங்க இவங்கள உன் கிட்டயே திருப்பி அனுப்புறாங்க. 103 00:08:35,849 --> 00:08:37,433 நான் இப்போ சொன்னது உனக்குக் காதுல விழுந்ததா? 104 00:08:37,518 --> 00:08:39,436 அவங்களுக்கு இப்போ ஆன்டிபையாடிக்ஸ் கொடுக்கலைன்னா, இறந்துடுவாங்க. 105 00:08:43,148 --> 00:08:44,608 நான் ஒண்ணு சொல்லட்டுமா? இதை விடு. 106 00:08:45,651 --> 00:08:48,320 பார்வதி, நாம இவங்கள மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறோம்னு சொல்லு. 107 00:08:48,403 --> 00:08:51,448 -நீ என் கூட வரணும். நீயும் தான், பார்வதி. -லின்பாபா, எனக்கு வேலை இருக்கு. 108 00:08:51,532 --> 00:08:54,201 -சரி, நான் வர்றேன், நிச்சயமா உதவி செய்யறேன். -நான் இதை சரி செய்யப் போறேன். 109 00:09:00,582 --> 00:09:03,877 மேடம். உங்கள சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. நான் தான் ஆகாஷ் பான்டே. 110 00:09:04,419 --> 00:09:06,797 இவ்வளவு சீக்கிரம் என்னை சந்திக்க ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. 111 00:09:09,633 --> 00:09:12,678 மினிஸ்டர் பான்டே, உங்களுக்கு புது பதவி கிடைச்சதுக்கு, எங்களோட நல்வாழ்த்துகள். 112 00:09:12,761 --> 00:09:14,304 இன்னும் எதுவும் முடிவாகலை. 113 00:09:14,388 --> 00:09:16,306 அது வெறும் ஒரு சம்பிரதாயம்தான்னு கேள்விப்பட்டேன். 114 00:09:16,390 --> 00:09:18,892 நம்ம பிசினஸும் அதே மாதிரி நல்லா நடக்கணும்னு விரும்புறேன். 115 00:09:21,144 --> 00:09:24,648 நான் கொடுத்துள்ள சாகர் வாடாவுக்கான டெவலப்மெண்ட் பிட்டுக்கு 116 00:09:24,731 --> 00:09:27,025 மினிஸ்டர் ஆடேகர் ஏற்கனவே அப்ரூவல் கொடுத்திருக்கார். 117 00:09:27,901 --> 00:09:31,154 கஃப் பரேட் பேயைப் பார்த்தா மாதிரி நாலு உயர் அடுக்குக் கட்டடங்கள். 118 00:09:31,238 --> 00:09:34,783 முப்பது மாடிகள், ஒவ்வொரு தளத்திலும் நாலு ஃபிளாட், ஒவ்வொண்ணும் அஞ்சு கோடி. 119 00:09:34,867 --> 00:09:36,577 அது கிட்டதட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் 120 00:09:36,660 --> 00:09:40,289 அதோட, அந்த சுத்துவட்டார குடியிருப்புகளையும், பொருளாதாரத்தையும் முன்னேற்றுவதற்கான திட்டம். 121 00:09:41,039 --> 00:09:44,209 கண்டிப்பா, நாங்க ருஜுலுக்கு பெரிய நன்கொடை கொடுக்கத் திட்டமிட்டிருந்தோம். 122 00:09:44,293 --> 00:09:47,921 துரதிர்ஷ்டவசமா, அவர் காலமாயிட்டார். அந்த பரிசுகள் எல்லாம் இப்போ உங்களுக்கு வரும். 123 00:09:49,631 --> 00:09:53,635 மினிஸ்டர் பான்டே, நீங்க எங்களை ரொம்ப நல்ல கூட்டாளிகளா கருதலாம். 124 00:09:54,261 --> 00:09:56,763 நிச்சயமா. ஆனால்... 125 00:09:57,472 --> 00:10:01,059 ஆனால், மேடம், ஒரே ஒரு சின்ன பிரச்சினை. 126 00:10:01,727 --> 00:10:02,728 அது என்ன பிரச்சினை? 127 00:10:03,228 --> 00:10:05,022 சாகர் வாடாவை ஏற்கனவே பேசி முடிச்சாச்சு. 128 00:10:05,522 --> 00:10:08,066 பேசி முடிச்சாச்சா? யாருக்கு? 129 00:10:08,150 --> 00:10:09,443 நமஸ்தே. 130 00:10:13,488 --> 00:10:14,615 நான் தான் வலீத் ஷா. 131 00:10:16,074 --> 00:10:17,451 உங்கள சந்திச்சதுல மகிழ்ச்சி, திரு. ஷா. 132 00:10:18,202 --> 00:10:19,536 நீங்க அழகானவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். 133 00:10:19,620 --> 00:10:22,122 ஆனால் அதெல்லாம் உங்கள சரியா வர்ணிக்கல, என்ன? 134 00:10:23,498 --> 00:10:27,169 காதர்பாய்க்கு எப்போதுமே, இதிலெல்லாம் நல்ல ரசனை உண்டு. 135 00:10:27,669 --> 00:10:31,048 நானோ, எப்போதுமே, கொஞ்சம் முரட்டு வழியில போறவன் தான். 136 00:10:31,882 --> 00:10:34,968 இப்போ, நான் காதர்பாய் கிட்ட மரியாதையா இருக்க விரும்புறேன். 137 00:10:36,136 --> 00:10:40,933 ஆனால் அவர் என் புதிய நண்பர், மினிஸ்டர் பான்டே மேல கை வச்சார்னா, அது சண்டையில முடியும். 138 00:10:41,016 --> 00:10:43,185 அதோட, மிருதுவான விஷயங்கள் எப்போதுமே சண்டையைத் தாங்காது, மேடம். 139 00:10:44,353 --> 00:10:46,980 திரு. ஷா, நான் ஒரு கான்சார்டியத்தின் பிரதிநிதியாக... 140 00:10:47,064 --> 00:10:49,066 வேண்டாம், என்ன? நாம யாருன்னு நமக்குத் தெரியும். 141 00:10:49,149 --> 00:10:50,984 நாம என்ன செய்யணும்னு நமக்குத் தெரியும். 142 00:10:51,068 --> 00:10:54,988 உங்க வேலை, காதர்பாய் கிட்டப் போய், சாகர் வாடா என்னுடையதுன்னு சொல்லணும். 143 00:10:57,950 --> 00:11:00,494 மெடிக்கல் கிளினிக் 144 00:11:04,831 --> 00:11:08,335 -எல்லாம் நலம், பாஸ். -திரு. ஃபோர்டு. 145 00:11:18,679 --> 00:11:21,849 வாங்க, வாங்க. உட்காருங்க, வாங்க. உட்காருங்க. 146 00:11:22,432 --> 00:11:26,061 இன்னிக்கு எனக்கு வேலை அதிகம், ஆனால் உங்களுக்காக நோயாளிகளைப் பார்த்துட்டேன். 147 00:11:26,144 --> 00:11:27,688 -ரொம்ப நன்றி. -பிளீஸ், உட்காருங்க. 148 00:11:28,981 --> 00:11:31,233 இவங்க சோனம், இவங்களுக்கு ஒரு புண், மோசமா இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு. 149 00:11:31,316 --> 00:11:33,068 அவங்களுக்கு ஐவி ஆன்டிபையாட்டிக்ஸ் தேவை. 150 00:11:33,151 --> 00:11:35,946 அவங்க மூணு தடவை இங்க வந்திருக்காங்க. ஆனால் யாரும் கவனிக்கவேயில்லை. 151 00:11:37,406 --> 00:11:40,158 பாருங்க, எனக்கு ரொம்ப வேலை இருந்தது. ஆனால் இப்போ, அவங்களப் பார்க்குறேன். 152 00:11:40,242 --> 00:11:41,952 உங்களுக்காக தான் அவங்களப் பார்க்குறேன். 153 00:11:48,417 --> 00:11:50,377 அவங்களப் பார்க்க கைக்கூலி வேணுமா? 154 00:11:51,712 --> 00:11:54,006 இது அரசு மருத்துவமனை. எல்லாமே இலவசமா கிடைக்கணும். 155 00:11:54,506 --> 00:11:56,133 உங்க கிட்ட ஒரு ஃபிசிஷியனோட ரெஃபரல் இருக்கா? 156 00:11:58,135 --> 00:12:00,637 -எனக்கு அதெல்லாம் எப்படிக் கிடைக்கும்? -இன்னொரு டாக்டர்கிட்டேர்ந்து தான். 157 00:12:00,721 --> 00:12:02,181 அதை வாங்குறதுக்கு அவருக்குப் பணம் தரணும். 158 00:12:02,264 --> 00:12:05,976 எனக்குத் தேவை பணம் இல்லன்னா ரெஃபரல், இல்லன்னா வெளியப் போய் மத்தவங்களோட காத்திருங்க. 159 00:12:06,059 --> 00:12:08,562 இது தான் இங்கே சிஸ்டம். பாருங்க, அது அவங்களுக்கும் தெரியும். 160 00:12:08,645 --> 00:12:10,439 எனவே, நீங்க அவங்கள அப்படியே சாக விடுவீங்களா? 161 00:12:11,023 --> 00:12:12,691 என்ன மாதிரி கேவலமான டாக்டர் நீங்க? 162 00:12:12,774 --> 00:12:14,693 நாங்க தினமும் 600 நோயாளிங்களப் பார்க்கறோம். 163 00:12:14,776 --> 00:12:16,987 என் ஊழியர்களுக்கும் எனக்கும் ஆறு மாசமா சம்பளமே தரலை. 164 00:12:17,070 --> 00:12:19,072 நான் எப்படிப்பட்ட டாக்டர்னு சொல்றதுக்கு, நீ யாரு? 165 00:12:19,156 --> 00:12:21,575 -நீயும் உன் உதவாக்கரை நண்பர்களும், உடனே போங்க. -சரி தான். 166 00:12:21,658 --> 00:12:23,327 -உடனே இப்போ செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன். -கேளுங்க. 167 00:12:23,410 --> 00:12:24,411 மன்னிச்சிடுங்க, சார். 168 00:12:25,495 --> 00:12:26,872 லின், நாம போகணும். 169 00:12:26,955 --> 00:12:29,791 இங்கே நிறைய போலீஸ் இருக்காங்க. பெரியப் பிரச்சினை. சீக்கிரம், வா. 170 00:13:00,072 --> 00:13:02,282 நான் உன்னை எழுப்ப விரும்பலை. 171 00:13:04,076 --> 00:13:05,077 நன்றி. 172 00:13:18,423 --> 00:13:19,758 எப்படி இருக்க? 173 00:13:19,842 --> 00:13:20,968 பரவாயில்லை. 174 00:13:21,844 --> 00:13:22,845 அது... 175 00:13:24,263 --> 00:13:26,765 தினமும் குறைஞ்சுக்கிட்டே வருது. 176 00:13:26,849 --> 00:13:28,892 என்னை கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி, செபாஸ்டியன். 177 00:13:30,352 --> 00:13:31,937 எனக்குக் கூப்பிடக்கூட, வேறு யாருமில்லை, எனவே... 178 00:13:32,020 --> 00:13:33,689 வேற இன்னொருத்தரை நீ எதுக்குக் கூப்பிடணும்? 179 00:13:34,273 --> 00:13:36,942 நான் உன்னை பார்த்துக்குவேன், லீசா. உனக்கே இது தெரியுமே. 180 00:13:39,945 --> 00:13:42,030 என் இடத்துக்கே திரும்பிப் போக நினைக்கிறேன். 181 00:13:43,574 --> 00:13:44,908 உன் விருப்பம் போல செய். 182 00:13:48,036 --> 00:13:50,873 உன் மீதான என் அன்பு உனக்கேத் தெரியுமே, லீசா. 183 00:13:54,209 --> 00:13:55,210 தெரியும். 184 00:13:57,171 --> 00:14:01,800 நானும் உன் மேல அன்பு வச்சிருக்கேன். ஆனால் நான்... 185 00:14:04,011 --> 00:14:07,514 நான் அது மாதிரி யார் மேலேயும் அன்பு வச்சு ரொம்ப காலமாகிடுச்சு. 186 00:14:07,598 --> 00:14:08,974 என் மேலேயும் தான். 187 00:14:18,400 --> 00:14:20,444 என் இடத்துக்கு நீ என்னோட வருவயா? 188 00:14:20,527 --> 00:14:22,738 நான் அங்கே தனியா இருக்க விரும்பலை. 189 00:14:25,616 --> 00:14:29,453 நமக்கு சோனமோட மருந்து வாங்க போதிய பணம் கிடைக்கிற வரைக்கும், உன்னோட இருக்கேன். டீலா? 190 00:14:29,536 --> 00:14:30,913 டீல், லின்பாபா. 191 00:14:40,088 --> 00:14:41,215 தி மும்பை நேஷனல் 192 00:14:41,298 --> 00:14:43,509 நில மந்திரி ருஜுல் ஆடேகர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் 193 00:14:43,592 --> 00:14:44,843 லின்! 194 00:15:00,150 --> 00:15:02,694 சில வாரங்களுக்கு முன்னாடி நானும் உங்களப் போல ஒருவனா இருந்தேன். 195 00:15:02,778 --> 00:15:04,947 நீங்க செய்யப் போகும் தவறுகள எல்லாம் நான் செய்தேன். 196 00:15:05,030 --> 00:15:08,450 எனவே, நீங்க அதையெல்லாம் செய்யாம, பணத்தை மிச்சப்படுத்தணும்னா, எங்ககிட்ட வாங்க. 197 00:15:08,534 --> 00:15:11,370 நீங்க நிறைய பேர் சேர்ந்து வந்தால் விலை இன்னும் குறையும். 198 00:15:11,453 --> 00:15:16,166 நல்ல உணவு, நல்ல விலை, நல்ல ஹோட்டல் எல்லாம் வசீகரமானது, பாஸ். 199 00:15:16,250 --> 00:15:17,292 -வாங்க, வாங்க. -வாங்க, வாங்க. 200 00:15:25,759 --> 00:15:27,135 ருஜுல சாகடிச்சிருக்க தான் வேணுமா? 201 00:15:27,719 --> 00:15:30,973 நமக்கு தெரிஞ்ச உடனே, அவனை நேர கூப்பிட்டுப் பேசி, நம்ம கிட்டயே திரும்ப சேர்த்திருக்கலாமே. 202 00:15:31,056 --> 00:15:32,432 இப்போ திரும்பவும் ஆரம்ப கட்டத்துகே வந்துட்டோம். 203 00:15:32,516 --> 00:15:34,142 நான் 20 வருஷமா ருஜுலுக்கு ஆதரவு தந்தேன். 204 00:15:34,226 --> 00:15:37,020 எனக்கு துரோகம் செய்ய அவனை அனுமதிச்சா, இங்கே என்னை எவன் மதிப்பான்? 205 00:15:38,355 --> 00:15:40,274 இந்த புது மினிஸ்டர் பான்டேயைப் பத்தி சொல்லு. 206 00:15:41,191 --> 00:15:43,652 அவனுக்கு, அவனுடைய சமூகத்திலும் மந்திரி சபையிலும் நல்ல மதிப்பு இருக்கு. 207 00:15:44,319 --> 00:15:46,905 நல்ல ஆஸ்தீகமான ஹிந்து, திருமணமாகி 12 வருஷமாகுது, இரண்டு பசங்க. 208 00:15:47,739 --> 00:15:50,492 பெரியோர்களால செய்யப்பட்ட திருமணம். அவகிட்ட பணம் இருக்கு. அவன்கிட்ட தொழில். 209 00:15:50,576 --> 00:15:54,162 அவளோட அப்பாதான் அவனுடைய பிரச்சாரத்துக்கு பணம் தந்தார். தருகிறார். விசேஷமா எதுவுமில்ல. 210 00:15:54,246 --> 00:15:56,707 இன்னும் விசாரிச்சுப் பாரு. ஆண்களுக்கு ரகசியங்கள் இருக்கும். 211 00:15:57,374 --> 00:15:58,834 அவனுடய ரகசியங்கள் நமக்கு உதவுமான்னு பார்க்கலாம். 212 00:15:58,917 --> 00:16:01,086 அவன் தான் சாகர் வாடாவின் முக்கிய புள்ளி. 213 00:16:06,300 --> 00:16:08,552 வலீத் வந்த உடனே உனக்கு எப்படி இருந்தது? 214 00:16:09,845 --> 00:16:10,888 பயமா இருந்தது. 215 00:16:11,555 --> 00:16:13,432 அது அவனுக்கும் தெரியும். அவன் அதை ரசிச்சான். 216 00:16:14,641 --> 00:16:16,935 அந்த தருணத்துல நான் துச்சமா இருப்பது போல, தனிமையை உணர்ந்தேன். 217 00:16:19,980 --> 00:16:20,981 மஹேந்திரா கெஸ்ட் ஹௌஸ் மலிவு விலை & சிறப்பான அறைகள் 218 00:16:21,064 --> 00:16:22,858 -நாளைக்கு காலையில சந்திக்கலாம். -நன்றி. பை-பை. 219 00:16:25,110 --> 00:16:26,111 இந்தா. 220 00:16:26,737 --> 00:16:29,072 இல்ல, இல்லயில்ல. எனக்கு எல்லாமே வேணும், நண்பா. 221 00:16:31,825 --> 00:16:34,286 நான் மருந்து வாங்கணும். நான் அதுக்காக தானே இங்கே வந்தேன். 222 00:16:35,579 --> 00:16:38,916 லின்பாபா. மருத்துவம் உன் தொழில், சரியா? என்னோடது இல்ல. 223 00:16:39,625 --> 00:16:42,961 என் தொழில், பார்வதியைத் திருமணம் செய்ய பணம் சேர்க்குறது. 224 00:16:44,171 --> 00:16:45,172 நீ ஜோக் அடிக்கிற. 225 00:16:47,132 --> 00:16:49,134 உன் திட்டம் நடக்காது, பாஸ். 226 00:16:49,885 --> 00:16:53,305 சரி, நான் உனக்கு இதைக் கொடுத்தாலும் உனக்கு மருந்து எங்கிருந்து கிடைக்கும்? 227 00:16:54,264 --> 00:16:58,060 உங்கிட்ட பிரிஸ்கிருப்ஷன் கிடையாது, ரேஷன் கார்டு, ஐடி கார்டு, டாக்டர் ரசீது எதுவும் இல்லையே. 228 00:16:59,144 --> 00:17:00,270 கருப்புச் சந்தை மருந்து. 229 00:17:01,188 --> 00:17:03,690 யாருக்கும் உன்னை தெரியாது, நம்பமாட்டாங்க, உனக்கு விக்கவும் மாட்டாங்க. 230 00:17:03,774 --> 00:17:08,237 -பிரபு, சோனம் காரணமில்லாம இறந்துடுவாங்க. -லின், யாரும் உன்னை பழி சொல்ல மாட்டாங்க. 231 00:17:08,319 --> 00:17:09,613 நான் என்னை குத்தம் சொல்லுவேன். 232 00:17:11,573 --> 00:17:12,574 நீ தப்பு செய்யற. 233 00:17:13,700 --> 00:17:16,078 லின், நீ எங்கேப் போற? 234 00:17:16,161 --> 00:17:17,287 மருந்து வாங்க. 235 00:17:22,251 --> 00:17:23,877 பயப்படறதுல வெக்கம் எதுவும் இல்ல. 236 00:17:25,921 --> 00:17:29,091 பயந்த பின்னும் செயல்ல இறங்குவது தான் தைரியம். 237 00:17:38,016 --> 00:17:40,602 ஒருபோதும் நீ தனியா இருக்கமாட்ட, கார்லா. 238 00:17:47,609 --> 00:17:51,488 அப்புறம் நம்ம கட்டட நிறுவனங்கள், அவங்களுக்கு எல்லாம் இன்னும் எதுவும் தரணுமா? 239 00:17:52,197 --> 00:17:55,075 நல்லது. அந்த கசல் பாடகர்களை அவங்க விரும்பினாங்களா? 240 00:17:55,158 --> 00:17:59,705 நீங்க அங்கே இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, அதுவும் வினோதமான அந்த நண்பரோட. 241 00:17:59,788 --> 00:18:02,624 இப்போ எனக்குப் புரியுது, உனக்கு ஏன் திரு. ஃபோர்டைப் பிடிச்சிருக்குன்னு. 242 00:18:03,458 --> 00:18:04,751 நீங்க அவங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்குறீங்க? 243 00:18:06,545 --> 00:18:10,549 சரி, யாருக்கு உதவி தேவையோ அவங்களே வழியை தேடி வர விடுவோம். 244 00:18:12,050 --> 00:18:13,719 என்னைத் தெரியாததுப் போல நடிச்சீங்களே. 245 00:18:15,012 --> 00:18:17,139 நமக்குள்ள தொடர்பு இருக்குன்னு அவனுக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சீங்க. 246 00:18:17,222 --> 00:18:20,309 நமக்குள்ள இருக்கும் தொடர்பை நாம ரகசியமா வச்சிருக்குறது உன் பாதுகாப்புக்காக, எனக்காக இல்ல. 247 00:18:40,120 --> 00:18:41,622 இங்கே போதை மருந்தின் வாடை. 248 00:18:58,847 --> 00:19:00,641 உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ, போகலாம். 249 00:19:04,394 --> 00:19:05,646 என்னோட இரு. 250 00:19:07,022 --> 00:19:08,190 இந்த எழவை விட்டுடு. 251 00:19:08,273 --> 00:19:09,816 இல்ல, நாம இதை சுத்தம் செய்யணும். 252 00:19:10,317 --> 00:19:12,778 -லீசா, அவசியம் இல்லை... -நான் இதை சுத்தம் செய்யணும். 253 00:19:17,741 --> 00:19:18,825 நான் செய்யணும். 254 00:19:22,496 --> 00:19:23,747 உனக்குப் புரியுதா? 255 00:19:37,010 --> 00:19:40,013 ஹே, ரமேஷ், சரிதானே? என்னை நினைவிருக்கா? 256 00:19:40,097 --> 00:19:42,391 அன்னிக்கு நான் அப்துல் காதர் கானோட வந்திருந்தேன். 257 00:19:42,474 --> 00:19:44,393 பாரு, அவருக்கு ஒரு செய்தி அனுப்பணும் 258 00:19:44,476 --> 00:19:46,812 இதுபோல லின் ஃபோர்ட் உங்கக்கிட்ட அவசரமா, உடனே பேசணும்னு. 259 00:19:46,895 --> 00:19:47,896 உன்னால அதைச் செய்ய முடியுமா? 260 00:19:47,980 --> 00:19:50,357 -சரி. நான் செய்யறேன். -அப்போ சரி. நல்ல மனிதன். 261 00:19:50,858 --> 00:19:51,859 மன்னிக்கணும். 262 00:20:20,262 --> 00:20:21,597 நான் எடுத்துக்கலை... 263 00:20:21,680 --> 00:20:22,848 பரவாயில்லை. 264 00:20:23,515 --> 00:20:26,351 உனக்குத் தேவைன்னா, அது கொஞ்சம் உதவும்னா, அப்போ... 265 00:20:28,437 --> 00:20:29,646 உனக்கு எது வேணுமோ அது. 266 00:20:31,190 --> 00:20:32,900 என்னை நீ தடுக்கணும். 267 00:20:33,901 --> 00:20:35,903 செய்யக்கூடாதுன்னு நீ எனக்குச் சொல்லணும்! 268 00:20:37,279 --> 00:20:40,741 நான் தப்பு செய்யறபோது கண்டிக்கணும்! தடுக்கணும்! என்னை தடுத்து நிறுத்து! 269 00:20:40,824 --> 00:20:41,992 நீ ஏன் மாட்டேங்குற... 270 00:20:49,708 --> 00:20:51,835 மொடேனா, சும்மா நான் செய்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்லாதே. 271 00:20:53,253 --> 00:20:54,838 எங்கூட நீ வாழ நினைக்கிறாயா, 272 00:20:55,464 --> 00:20:59,134 நமக்குள்ள அர்த்தமுள்ள உறவு இருக்கணும்னா, நீ வெறுமனே சரின்னு சொல்லிட்டு இருக்காதே. 273 00:21:00,219 --> 00:21:01,803 எங்கிட்ட தைரியமா இரு. 274 00:21:03,514 --> 00:21:07,726 அந்த கண்ராவியை இனிமேல் என்னைத் தொட விடாதே, என்ன ஆனாலும் சரி. 275 00:21:08,644 --> 00:21:09,770 நான் வாக்குத் தரேன். 276 00:21:11,313 --> 00:21:13,148 நாம இங்கேர்ந்து முதல்ல போய் தொலையலாம். 277 00:21:34,336 --> 00:21:35,337 திரு. லின். 278 00:21:49,935 --> 00:21:52,145 லின், உன்னை பார்க்க சந்தோஷமா இருக்கு. 279 00:21:52,229 --> 00:21:55,899 -ஆம், உடனே சந்திக்க ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. -ரமேஷ்கிட்ட அவசரம்னு சொன்னயாம். 280 00:21:55,983 --> 00:21:58,235 ஆம், பாருங்க, உங்ககிட்ட இதை கேட்குறதுக்கு மன்னிக்கணும், 281 00:21:58,318 --> 00:21:59,945 ஆனால் எனக்கு மருத்துவ பொருட்கள் தேவை. 282 00:22:00,571 --> 00:22:04,867 நான் ஜனங்கள மருத்துவமனைகளுக்கு அனுப்புறேன், ஆனால் யாரும் உதவுறதில்லை. பணம் கொடுத்தா தான். 283 00:22:04,950 --> 00:22:07,619 நான் இலவசமா எதையும் எதிர்பார்க்கலை. நான் ஏதோ ஒரு வழியிலே திருப்பிடுவேன். 284 00:22:07,703 --> 00:22:10,122 அதனால, எங்கிட்டேர்ந்து நீ என்ன எதிர்பார்க்குற? 285 00:22:10,622 --> 00:22:13,417 மருத்துவ பொருட்கள் கிடைக்குற கருப்புச் சந்தையோட எனக்கு தொடர்பு கிடையாது. 286 00:22:14,585 --> 00:22:16,170 எனக்கு இருக்குன்னு நீ நினைக்கிற. 287 00:22:16,253 --> 00:22:18,463 ஏன்னா... ஏன்? 288 00:22:19,381 --> 00:22:20,924 நான் கொள்ளக்காரனா? 289 00:22:26,388 --> 00:22:28,265 இல்ல, நான்... நினை... 290 00:22:30,559 --> 00:22:32,686 சும்மா தமாஷ் செய்தேன். 291 00:22:33,979 --> 00:22:36,899 நிறைய பேருக்கு இது தெரியாது, ஆனால் நான் முதல்ல மும்பைக்கு வந்தபோது, 292 00:22:36,982 --> 00:22:39,610 நான் சாகர் வாடாவைப் போல ஒரு குடிசைப் பகுதியில தான் இருந்தேன். 293 00:22:40,194 --> 00:22:42,362 நான் உனக்கு அந்த தொடர்பை ஏற்படுத்தித் தரேன். 294 00:22:43,405 --> 00:22:44,865 நன்றி, காதர்பாய். 295 00:22:44,948 --> 00:22:48,118 அப்துல்லா எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டு, உங்கிட்ட சொல்லுவான். 296 00:22:50,120 --> 00:22:51,288 எப்போன்னு சொல்ல முடியுமா? 297 00:22:52,497 --> 00:22:54,625 என்னன்னா, அங்கே ஒரு அம்மா இருக்காங்க, சாகக்கிடக்குறாங்க 298 00:22:54,708 --> 00:22:56,084 நான் உடனே சிகிச்சை செய்யலன்னா இறந்துடுவாங்க. 299 00:22:56,752 --> 00:23:00,214 அப்போ, இன்ஷால்லா, நாம ஒண்ணா சேர்ந்து, அதை தவிர்க்கலாம்னு நம்புவோம். 300 00:23:01,006 --> 00:23:02,341 உன்னை சந்திச்சதுல சந்தோஷம், லின். 301 00:23:05,719 --> 00:23:06,720 நன்றி. 302 00:23:16,897 --> 00:23:18,482 நான் இப்போதே அவனை கூட்டிட்டுப் போறேன். எதுக்காக காத்திருக்கணும்? 303 00:23:18,982 --> 00:23:22,736 அவனுக்குத் தேவை அதிகமாகும் போது, லின் இன்னும் நன்றிக்கடனோட இருப்பான். 304 00:23:24,321 --> 00:23:25,447 அதை பெரிசாக்கு. 305 00:23:41,964 --> 00:23:44,466 என் சப்ளையர், நான் பாதி தொகையை முன்பணமா கொடுக்கணும்னு கேட்குறான், 306 00:23:44,550 --> 00:23:47,344 அதுக்கு அப்புறம் மொடேனா சரக்கை உன்னிடம் கொடுப்பான், அதுக்கு அப்புறம் நீ பாக்கியைக் கொடு. 307 00:23:49,471 --> 00:23:50,848 நீ நிச்சயம் கொடுப்பன்னு நான் எப்படி நம்புறது? 308 00:23:53,267 --> 00:23:56,061 நான் ஏமாத்தினா, எவ்வளவு காலம் என் பிசினஸ் ஓடும், சொல்லு? 309 00:23:56,144 --> 00:23:57,563 உண்மை தான். 310 00:23:57,646 --> 00:24:01,275 சின்ன அளவுல பிசினஸ் செய்யறது ரொம்ப கஷ்டமா இருக்கு, இல்ல? 311 00:24:04,111 --> 00:24:07,030 ரஹீம், மிரட்டிப் பார்க்குறதுக்கெல்லாம், நீ இன்னும் ரொம்ப தூரம் போகணும், தெரியுமா. 312 00:24:07,948 --> 00:24:10,951 வாங்கு இல்ல வாங்காமப் போ. தொழில் செய்ய எனக்கு இன்னும் பல பேர் இருக்காங்க. 313 00:24:11,034 --> 00:24:13,036 ஆனால் லாகோஸ்ல என்ன தேவைன்னு நீ தெரிஞ்சுக்கிட்டன்னா, 314 00:24:13,120 --> 00:24:14,830 நீ மும்பையில இருக்க தேவையில்லை. புரியுதா? 315 00:24:22,504 --> 00:24:25,716 எனவே, இவங்கள பிடிச்சிருக்கா, லீசா? நான் இவங்கள நம்பலாமா? 316 00:24:26,758 --> 00:24:27,759 கண்டிப்பா. 317 00:24:28,343 --> 00:24:30,262 நாங்க எதைப் பத்தி பேசுறோம்னு உனக்குத் தெரியுமா? 318 00:24:30,345 --> 00:24:31,430 தெரியவே தெரியாது. 319 00:24:32,014 --> 00:24:34,641 ஆனால், நான் இவங்கள நம்புறேன். இவங்க தான் என் உற்ற நண்பர்கள். 320 00:24:37,895 --> 00:24:39,271 எனக்குத் தெரியலை. 321 00:24:40,189 --> 00:24:42,357 ஆனால் நான் உன்னை நம்பப் போறேன்னு நினைக்கிறேன். 322 00:24:43,317 --> 00:24:45,235 ரொம்ப அழகா இருக்க, நீ பொய் சொல்ல மாட்ட, இல்ல? 323 00:24:46,028 --> 00:24:47,779 அது என் மனசயே உடைச்சிடும். 324 00:24:47,863 --> 00:24:48,864 சரி தான். 325 00:24:50,032 --> 00:24:51,742 முதல்ல ஒரு கிலோ வாங்கிட்டுப் போய் பார்க்குறேன். 326 00:24:51,825 --> 00:24:53,619 அது நல்லாயிருந்தா, நாம இன்னும் தொழில் செய்யலாம். 327 00:24:54,912 --> 00:24:55,913 அற்புதம். 328 00:25:05,464 --> 00:25:06,465 காஃபி. 329 00:25:08,884 --> 00:25:11,678 இந்த ஆளைப் பத்தி லின் எங்கிட்ட சொன்னான். 330 00:25:11,762 --> 00:25:15,516 ஏதோ, நீ, லீசா அப்புறம் அந்த பேலஸ் எல்லாம் சம்மந்தப்பட்டதுன்னு நினைக்கிறேன். 331 00:25:16,225 --> 00:25:21,522 இப்போ நீயும் லீசாவும் பிரிஞ்சுட்டீங்க, அதோட லின்னும் காணாமப்போயிட்டான். 332 00:25:21,605 --> 00:25:22,606 இவ்வளவு காலத்துக்கு அப்புறம், 333 00:25:22,689 --> 00:25:25,400 உனக்கு சம்மந்தமில்லாத விஷயங்களப் பத்தி நீ கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறயா? 334 00:25:25,484 --> 00:25:29,571 இல்லயில்ல. அப்படி இல்ல. ஆனால், ஆம். ஒரு கேள்வி. 335 00:25:31,907 --> 00:25:33,659 நீ நல்லா இருக்கியா, என் செல்லம்? 336 00:25:34,743 --> 00:25:35,786 நான் நல்லாயிருக்கேன். 337 00:25:37,579 --> 00:25:39,998 லின் இங்கே தான் இருக்கான். அவன் ஒரு சேரியில குடியிருக்கான். 338 00:25:40,832 --> 00:25:41,834 என்னது. 339 00:25:41,917 --> 00:25:45,671 எதுவும் சொல்லாம, அப்படியே போறயே. கார்லா, பிளீஸ். சொல்லிட்டுப் போ. 340 00:25:55,389 --> 00:25:56,849 உன் அறிவுரை தேவையில்லை. 341 00:25:57,349 --> 00:25:59,351 நீ போனதை தப்பு சொல்லலை... 342 00:25:59,852 --> 00:26:01,311 நீ நல்லாயிருக்கயான்னு கவலை. 343 00:26:01,395 --> 00:26:02,563 எவ்வளவு பெரிய மனசு உனக்கு. 344 00:26:03,981 --> 00:26:05,983 நீ ரொம்ப பெரிய மனுஷிய மாதிரி பேசுறயே? 345 00:26:06,692 --> 00:26:08,151 நீ திரும்பி வந்துடு. 346 00:26:08,235 --> 00:26:09,444 நீ எனக்குத் தேவை இல்ல. 347 00:26:09,528 --> 00:26:10,946 அவங்க ரெண்டு பேரும் தான் தேவையா? 348 00:26:11,029 --> 00:26:13,448 -நீ மாறணும்னு ஆசைப்பட்டயே, லீசா. -ஒழிஞ்சு போ, கார்லா. 349 00:26:14,366 --> 00:26:16,410 நீ என்னை நம்பினதே கிடையாது, இனிமேலும் நம்பமாட்ட. 350 00:26:17,828 --> 00:26:20,414 நான் இப்போ உபயோகிக்கறது இல்லை. நான் போதை மருந்துக்கு அடிமை இல்லை. 351 00:26:20,998 --> 00:26:22,791 நான் சுத்தமாகணும்னு ரொம்ப முயற்சி செய்யறேன். 352 00:26:24,293 --> 00:26:25,961 மொடேனா அதுல எனக்கு உதவி செய்யறான். 353 00:26:26,920 --> 00:26:28,881 அவன் உண்மையாவே என்ன நேசிக்கிறான். 354 00:26:29,673 --> 00:26:31,466 அவங்க உன்னை வம்புல மாட்டி விடுவாங்க. 355 00:26:31,550 --> 00:26:32,759 நீ மட்டும் செய்யலையா? 356 00:26:34,303 --> 00:26:35,804 பத்திரிகைகளைப் பார்த்தயா? 357 00:26:37,764 --> 00:26:39,600 நீ உள்ளுக்குள்ள சோகமா இருக்க, கார்லா. 358 00:26:40,475 --> 00:26:42,269 ஆழ் மனசுல, வெறும் துக்கம் தான். 359 00:26:43,270 --> 00:26:45,939 எனக்குச் சோகமா இருக்கப் பிடிக்கலை, நான் சந்தோஷமா இருக்கணும். நினைவிருக்கா? 360 00:26:46,732 --> 00:26:51,111 சிரிக்க, ஜோக் அடிக்க, புன்னகை செய்ய விரும்புறேன், தெரியுமா? அது தான் வேணும். 361 00:27:08,670 --> 00:27:09,922 பிரபு, தானே? 362 00:27:11,632 --> 00:27:13,050 ஆமாம், நீங்கதானே கார்லா மேடம். 363 00:27:13,550 --> 00:27:15,719 நான் லின்னைத் தேடிட்டு இருக்கேன். அவர் எங்கேன்னு காட்ட முடியுமா? 364 00:27:15,802 --> 00:27:18,680 நான் டூரிஸ்ட் கைட் வேலையை செய்திட்டு இருக்கேன். மன்னிச்சிடுங்க, என்ன? 365 00:27:18,764 --> 00:27:21,850 நீங்க ஏன் லின் இருக்குற இடத்துக்கு என்னை கைட் பண்ணக்கூடாது? 366 00:27:34,488 --> 00:27:37,741 பாருங்க, இதெல்லாம் கட்ட, லின் நிறைய டாலர்கள் தரான். 367 00:27:37,824 --> 00:27:39,952 -ஏன்? -அவன் ரொம்ப நல்லவன். 368 00:27:40,035 --> 00:27:41,578 சாகர் வாடாவுக்கு நல்ல நண்பன். 369 00:27:41,662 --> 00:27:44,957 முதல்ல என் நண்பனா இருந்தான், ஆனா இப்போ அனைவரும் அவனை ரொம்ப விரும்புறாங்க, சரியா? 370 00:27:45,040 --> 00:27:47,793 இப்போ பெரிய டாக்டர் ஆகிட்டான், நாள் முழுக்க எல்லோரையும் குணப்படுத்தறான். 371 00:27:48,752 --> 00:27:50,254 நான் டீ, நாஷ்டா வாங்கி வரவா... 372 00:27:50,337 --> 00:27:52,631 எனக்கும் என் உற்ற நண்பனுக்கும், கார்லா மேடம். 373 00:27:53,131 --> 00:27:54,675 எவ்வளவு தைரியமிருந்தா இங்கே வருவ! 374 00:27:54,758 --> 00:27:56,176 நாளெல்லாம் பார்வதியை எங்கே கூட்டிட்டுப் போன? 375 00:27:56,260 --> 00:27:58,846 -மருத்துவமனைக்குத் தான், லின்பாபாவோட. -மருத்துவமனைக்குத் தானா. பிளீஸ்! 376 00:27:58,929 --> 00:28:01,431 நான் விரும்பி தான் போனேன். அவன் மேல தப்பில்லை. 377 00:28:01,515 --> 00:28:03,559 நீங்க ரெண்டு பேரும் நாளெல்லாம் கொலாபாவை சுத்திட்டு இருந்தீங்க. 378 00:28:03,642 --> 00:28:04,643 நாங்க தப்பா எதுவும் செய்யலை. 379 00:28:04,726 --> 00:28:06,979 நாங்க ஒரு உயிரைக் காப்பாத்த உதவினோம், அம்மா. 380 00:28:07,062 --> 00:28:09,231 காலையிலிருந்து உன்னைத் தேடிட்டு இருந்தோம். 381 00:28:09,314 --> 00:28:11,108 யாரையும் கேட்டுப் பாரு. நாங்க உன்னை தேடிட்டு இருந்தோம். 382 00:28:12,776 --> 00:28:14,736 எங்ககிட்ட சொல்லியிருக்கணும். 383 00:28:22,160 --> 00:28:23,829 நீ எப்படி இங்க உள்ள வந்த? 384 00:28:23,912 --> 00:28:25,956 இங்கே வர்றது சட்டவிரோதம்னு தெரியாமப் போச்சே. 385 00:28:26,957 --> 00:28:29,084 பிரபுவுக்கு பணம் கொடுத்துக் காட்டச் சொன்னேன். 386 00:28:31,753 --> 00:28:34,131 இதையெல்லாம் எடுத்துக் கட்ட நீ பணம் கொடுத்தன்னு பிரபு சொன்னான். 387 00:28:34,756 --> 00:28:36,466 நான் கொடுத்தப் பணமா தான் இருக்கணும்னு நினைக்கிறேன். 388 00:28:36,967 --> 00:28:39,011 -ஆமாம். -லின்பாபா. 389 00:28:41,346 --> 00:28:43,140 அதனால தான் நீ இவ்வளவு பிரபலமா இருக்க. 390 00:28:50,272 --> 00:28:52,232 நீ இன்னும் இங்கே என்ன செய்யற, லின்? 391 00:28:52,316 --> 00:28:54,276 கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி, இங்கேர்ந்து வெளியேற துடிச்ச, 392 00:28:54,359 --> 00:28:55,694 இப்போ டாக்டரா வேஷம் போடுற. 393 00:28:57,404 --> 00:28:59,656 வேற எல்லோரும் மறுத்தப்போது இந்த மக்கள் எனக்கு உதவி செய்தாங்க. 394 00:29:06,205 --> 00:29:08,081 பாரு, என்னை இங்கேயும் யாரோ பின்தொடர்ந்து வந்தாங்க. 395 00:29:08,165 --> 00:29:10,375 என்னை தீர்த்துக் கட்டுறதுக்கு வந்தது ஃஜூவோட ஆட்களா இருக்கலாம். 396 00:29:11,710 --> 00:29:13,253 அந்த தீ விபத்து அதுல தான் ஆரம்பிச்சது. 397 00:29:15,088 --> 00:29:16,548 அது எப்படி உன்னோட தப்பாகும்? 398 00:29:19,009 --> 00:29:21,220 அந்த சிறுவனோட அம்மா, என்னால இறந்துட்டாங்க. 399 00:29:25,766 --> 00:29:27,017 நான் அவங்களுக்கு கடன்பட்டிருக்கேன். 400 00:29:27,100 --> 00:29:29,978 எவ்வளவு தான் கேவலமா இருந்தாலும், என்னால அவங்களுக்கு ஒரு உபயோகம் இருக்கு. 401 00:29:32,564 --> 00:29:34,274 உன் பாஸ்போர்ட் காணாத நிலையிலே, உன்னைத் தேடி வேறு யாரும் வரலாம்னு 402 00:29:34,358 --> 00:29:35,692 உனக்குக் கவலையா இல்லையா? 403 00:29:35,776 --> 00:29:36,985 பயங்கர கவலைதான். 404 00:29:37,069 --> 00:29:40,113 ஆனால் லக்ஷ்மீயும் தான் கவலைப்பட்டாள், எனவே அந்த சாக்கைச் சொல்லிட்டு இருக்க முடியாது. 405 00:29:57,381 --> 00:29:58,465 நான் பத்திரிகைப் பார்த்தேன். 406 00:29:59,508 --> 00:30:00,926 அந்த ஆளு, ருஜுல், இறந்துட்டானே. 407 00:30:01,885 --> 00:30:03,846 அதுக்கும் நான் தான் பொறுப்பு ஏத்துக்கணுமா? 408 00:30:03,929 --> 00:30:05,097 வேண்டாம். 409 00:30:05,180 --> 00:30:08,308 "வேண்டாம்"ன்னா, உனக்கு அக்கறையில்லையா, இல்ல, நமக்கு அதோட தொடர்பில்லங்குறதாலா? 410 00:30:08,392 --> 00:30:09,726 ரெண்டும். 411 00:30:09,810 --> 00:30:12,229 ருஜுல் ஆடேகர் சரியான ஊழல் பேர்விழி. 412 00:30:12,896 --> 00:30:15,148 என் வாடிக்கையாளர் ஒருவரோட தொழிலுக்கு அவன் இடைஞ்சலா இருந்தான். 413 00:30:15,941 --> 00:30:17,609 நான் அவனை எச்சரிக்க நினைச்சேன். 414 00:30:17,693 --> 00:30:19,069 அந்த விஷயம், அவ்வளவு தான். 415 00:30:20,571 --> 00:30:22,406 அவன் கொள்ளையடிக்கப்பட்டதா பத்திரிகைகள் சொல்கின்றன. 416 00:30:23,031 --> 00:30:26,076 மும்பையின் அந்தப் பகுதியில பணக்காரங்கப் போனால் சில சமயம் நடக்கும். 417 00:30:31,665 --> 00:30:33,250 நீ இங்க என்ன செய்யற கார்லா? 418 00:30:33,959 --> 00:30:35,919 அன்னிக்கு ராத்திரி நான் உன்னைப் பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். 419 00:30:37,004 --> 00:30:38,881 நான் நினைச்சேன் நீ ரெனால்டோ'ஸ் வருவன்னு. 420 00:30:38,964 --> 00:30:42,176 -நீ வரலைன்ன உடனே, நான்... -ஏது. உனக்குக்கூட அக்கறை இருக்குப் போல. 421 00:30:45,846 --> 00:30:47,598 எனக்கு இது தேவைதான். 422 00:30:48,098 --> 00:30:50,767 இருந்தாலும், நீ தான் நான் போறதுக்குப் பண உதவி செய்த, நியாயம் தான். 423 00:30:50,851 --> 00:30:52,394 அதைத் தான் நீ தானம் செய்துட்டயே. 424 00:30:53,312 --> 00:30:54,313 ஆமாம். 425 00:30:55,564 --> 00:30:57,482 காதர் கானோட நீ என்ன செய்துட்டிருந்த? 426 00:30:58,692 --> 00:31:01,111 புகைப்பிடிச்சேன், டீ குடிச்சேன். 427 00:31:01,195 --> 00:31:04,364 வம்பே வேண்டாம்னு சொல்ற ஒருத்தருக்கு, நீ சுவாரசியமான சகவாசங்கள தான் வச்சிருக்க. 428 00:31:04,448 --> 00:31:05,616 உன்னயும் சேர்த்துச் சொல்றயா? 429 00:31:06,200 --> 00:31:09,244 அப்படித்தான் நம்புறேன். சுவாரசியமானவளா தான் இருக்க விரும்புறேன். 430 00:31:10,954 --> 00:31:12,623 ஆம், வேறு மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை. 431 00:31:13,832 --> 00:31:15,501 ரொம்ப மர்மமானவள். 432 00:31:19,505 --> 00:31:21,006 நான் கிளம்பணும். 433 00:31:25,344 --> 00:31:27,429 ஏழ்மை உனக்கு நல்லது தான் செய்திருக்கு, லின். 434 00:31:28,347 --> 00:31:31,517 நீ ரொம்ப ஏழை ஆகிட்டா, அப்புறம் வசீகரமாகிடுவ. 435 00:31:35,312 --> 00:31:36,563 அந்நியனா இருக்காதே. 436 00:32:02,714 --> 00:32:05,509 அவளை குணப்படுத்துவீங்களா, டாக்டர். லின்? 437 00:32:06,593 --> 00:32:09,137 ஏன் எதுவும் செய்யமாட்டேங்குறார்? 438 00:32:10,806 --> 00:32:12,891 அவங்களுக்கு மருந்து கொடுக்க முடியாதா? 439 00:32:36,748 --> 00:32:39,710 சரிதான், நாம என்ன செய்யலாம்? ஒரு பாத்திரத்தில் எடுக்கலாமா? 440 00:32:40,294 --> 00:32:41,879 உன்னால முடியும்! 441 00:32:41,962 --> 00:32:44,673 -ஆம்! -கிட்டதட்ட. 442 00:32:48,468 --> 00:32:50,137 இவ்வளவு பக்கத்துல. 443 00:33:01,231 --> 00:33:03,066 அப்படித்தான், ஜித்தேந்திரா, நண்பா. 444 00:33:23,921 --> 00:33:25,672 லின்பாபா, நீங்க வீட்டுல இருக்கீங்களா? 445 00:33:28,425 --> 00:33:29,468 லின்பாபா. 446 00:33:31,845 --> 00:33:33,013 லின். 447 00:33:33,096 --> 00:33:34,973 ஆமாம், பிரபு, வீட்டுல தான் இருக்கேன். 448 00:33:42,648 --> 00:33:44,274 ஏற்கனவே சாப்பிட்டுவிட்டீங்களா? 449 00:33:44,358 --> 00:33:45,400 இல்ல, இன்னும் இல்ல. 450 00:33:45,484 --> 00:33:50,197 நல்லது, ஏன்னா ரவி உங்களுக்காக ஸ்பெஷலா, ருசியானதை கொண்டு வர்றான். 451 00:34:00,207 --> 00:34:03,293 பாம்பில். இது தான் மும்பை வாத்து. 452 00:34:03,377 --> 00:34:05,921 ரொம்ப பிரபலமான மீன். 453 00:34:06,713 --> 00:34:08,632 சாப்பிடு. சாப்பிடுன்னா? 454 00:34:08,715 --> 00:34:11,385 பார்க்க நல்லா இருக்கு, ரவி. நன்றி. நீ செய்ய வேண்டிய அவசியம் இல்ல... 455 00:34:11,467 --> 00:34:13,637 நான் உங்கள காயப்படுத்த நினைச்சதுக்கு மன்னிச்சிடுங்க. 456 00:35:04,605 --> 00:35:05,939 ஒருவேளை கார்லா சொன்னது சரியாக இருக்கலாம். 457 00:35:06,607 --> 00:35:08,275 நான் ஆபத்தை வலிய இழுத்திருக்கலாம். 458 00:35:08,358 --> 00:35:11,820 ஏன்னா அன்றாடம் சமாளிக்க வேண்டிய ஆபத்துகளின் வலிமை, என் கடந்த காலத்தைப் 459 00:35:11,904 --> 00:35:13,572 பத்தி மறக்க, எனக்கு உதவியாக இருந்தது. 460 00:35:29,171 --> 00:35:31,131 பாரு, ஜானி? அவன் திரும்பிப் போயிருக்கான். 461 00:35:33,258 --> 00:35:34,635 இப்போ காலையிலே எப்படியிருக்க, லின்? 462 00:35:35,260 --> 00:35:36,261 அற்புதமா இருக்கேன். 463 00:35:36,845 --> 00:35:40,224 பாரு, அவன் இப்படிச் சொல்றான், ஆனால் விபரீதமா இருக்கு. பார்த்தா தெரியுது. 464 00:35:40,307 --> 00:35:43,769 ஏற்கனவே அவன் ஒரு முறை கழிப்பறைக்குப் போனதைப் பார்த்தேன். 465 00:35:43,852 --> 00:35:44,937 ஜித்தேந்திரா சொன்னது சரிதான். 466 00:35:45,521 --> 00:35:46,939 ரெண்டு பேரும் என்ன சொல்லிக்கிட்டே இருக்கீங்க? 467 00:35:47,022 --> 00:35:49,233 லின்பாபா, நேத்து இரவு நீ அங்கே ரெண்டு, மூணு, நாலு தடவை போனயாமே, 468 00:35:49,316 --> 00:35:52,027 உன் பக்கத்து வீட்டுக்காரர் ஜித்தேந்திரா, சொல்றார். 469 00:35:52,110 --> 00:35:53,612 அதனால அவன் ராத்திரி எல்லாம் முழிச்சிருந்தானாம். 470 00:35:53,695 --> 00:35:54,821 ஜித்தேந்திரா நல்லா சொல்லுவானே. 471 00:35:54,905 --> 00:35:57,115 அவனும் அவன் மனைவியும், ராத்திரி எல்லாம் சத்தமா ஜல்சா செய்தாங்க. 472 00:35:57,658 --> 00:36:01,620 ஜித்தேந்திரா, ரத்னா, இவங்களோட சல்லாபம், சாகர் வாடா முழுக்க பிரபலம். 473 00:36:01,703 --> 00:36:03,497 நீ சொல்லு, உனக்கு லூஸ் மோஷனா? 474 00:36:03,997 --> 00:36:06,333 ஆமாம். சரி தான், பிரபு, எனக்கு பேதி. 475 00:36:06,416 --> 00:36:07,501 உனக்கு சந்தோஷம் தானே? 476 00:36:08,418 --> 00:36:10,963 நீயும் ரவியும் கொண்டு வந்த அந்த மீன் தான் ஒத்துக்கலையோன்னு தோணுது. 477 00:36:11,046 --> 00:36:12,589 அர்ரே, லின். இல்ல. 478 00:36:12,673 --> 00:36:15,843 உனக்கு, அமைதிக் கொடியா, அந்த மீனை அவனே பிடிச்சுட்டு வந்தான். 479 00:36:15,926 --> 00:36:18,887 ரொம்ப ஃபிரெஷ். அதை எங்கிட்ட கொண்டு வந்து உனக்குக் கொடுக்க உதவச் சொன்னான். 480 00:36:18,971 --> 00:36:20,514 சரி. அப்போ மீன் இல்ல. 481 00:36:21,014 --> 00:36:23,475 நீ வேணும்னா சந்து டீயை குடிச்சுப் பாரேன். 482 00:36:23,559 --> 00:36:26,186 உன் கழிவை கெட்டிப்படுத்தி, நல்ல நிறத்தையும் தரும். 483 00:36:28,397 --> 00:36:30,566 திரு. லின், நீங்க என்னோட வரணும். 484 00:36:32,025 --> 00:36:34,820 இந்த ஆளு ரொம்ப ஆபத்து, லின். கொலைக்காரப் பாவி, இவன். 485 00:36:34,903 --> 00:36:36,989 பரவாயில்லை, பிரபு. எனக்கு அவனைத் தெரியும். 486 00:36:37,072 --> 00:36:38,365 உனக்கு எப்படி அவனைத் தெரியும்? 487 00:36:38,949 --> 00:36:39,950 அதைப் பத்தி நீ கவலைப்படாதே. 488 00:36:40,033 --> 00:36:42,619 இந்த ஆளோட உனக்கு எதுவும் ஆச்சுன்னா, என்னால உதவி செய்ய முடியாது. 489 00:36:44,621 --> 00:36:45,706 என்ன பிரச்சினை? 490 00:36:45,789 --> 00:36:46,832 இல்ல, பிரச்சினை எதுவும் இல்ல. 491 00:36:48,667 --> 00:36:50,752 நீங்க லின்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்கன்னு யோசிக்கிறேன். 492 00:36:52,337 --> 00:36:55,966 அவன் என் பார்ட்னர், ரீகலின் பக்கத்து சந்துல எங்களுக்கு பிசினஸ் இருக்கு. 493 00:36:57,551 --> 00:36:58,677 உன் பெயர் என்ன? 494 00:36:59,845 --> 00:37:00,846 பிரபு. 495 00:37:01,680 --> 00:37:03,515 நீ பெரிய ஆளாதான் இருக்கணும், என்னைக் கேள்வி எல்லாம் கேட்குறயே. 496 00:37:03,599 --> 00:37:05,475 ஒருவேளை நான் உன்னை "பிரபுபாய்" அப்படின்னு கூப்பிடணுமோ. 497 00:37:06,101 --> 00:37:08,645 கொலாபா மார்கெட்டின் தலைவன். சாகர் வாடாவின் அரசன் அப்படின்னு கூப்பிடணுமா? 498 00:37:08,729 --> 00:37:13,775 -இப்ப போ, உன் சந்துல இருக்குற தொழிலை கவனி. -விடு. அப்துல்லா, அவன் என் நண்பன். பிளீஸ். 499 00:37:18,488 --> 00:37:20,032 உனக்கு மருந்து வேணுமா வேண்டாமா? 500 00:37:25,287 --> 00:37:26,330 பரவாயில்லை, விடு. 501 00:38:41,738 --> 00:38:44,616 ரூபி ஆன்டிக்கிட்டப் போய் சொல்லு இது போல அப்துல்லா டஹெரி வந்திருக்கான்னு. 502 00:38:48,453 --> 00:38:51,206 நான் அறிமுகப்படுத்தி விடுறேன். அப்புறம் நீ பார்த்துக்கோ. 503 00:39:22,279 --> 00:39:23,614 நமஸ்தே, ஆன்டி. 504 00:39:25,157 --> 00:39:28,035 இவங்க ரூபி. இவங்க தான் காலா டோபிஸின் பாஸ். 505 00:39:28,118 --> 00:39:30,037 மும்பையில உள்ள மிகச் சிறந்த கடத்தல்காரங்க, மற்றும் திருடங்க. 506 00:39:31,079 --> 00:39:34,374 வணக்கம். என் பெயர் லின். 507 00:39:38,003 --> 00:39:39,421 அவங்கக்கிட்ட உன் பட்டியலைக் காட்டு. 508 00:39:42,007 --> 00:39:43,592 அது ஆங்கிலத்தில் இருக்கு. 509 00:39:45,093 --> 00:39:49,932 உங்களுக்கு வேணும்னா நான் மொழிப்பெயர்த்துத் தரேன். 510 00:39:50,724 --> 00:39:53,018 நான் பிறந்தபோது இப்படி பிறக்கலை, தெரியுமா. 511 00:39:53,936 --> 00:39:55,979 ஒரு காலத்துல, நான் சார்டர்டு அக்கௌன்டெண்ட் ஆக இருந்தேன், 512 00:39:56,688 --> 00:39:58,607 மஹாலக்ஷ்மீயில எனக்குன்னு சொந்த ஃபிளாட் இருந்தது. 513 00:39:59,316 --> 00:40:00,734 நான் தப்பா சொல்ல வரலை. 514 00:40:02,236 --> 00:40:03,737 நீ என்னோட டீ சாப்பிடுவயா? 515 00:40:08,325 --> 00:40:09,326 நிச்சயமா. 516 00:41:33,827 --> 00:41:35,495 இதெல்லாத்தையும் நான் உனக்குத் தர முடியும். 517 00:41:36,788 --> 00:41:39,291 ஒரு லக்ஷம், 50000 ரூபாய்கள். 518 00:41:39,374 --> 00:41:40,918 எங்கிட்ட அவ்வளவு பணம் கிடையாது. 519 00:41:42,252 --> 00:41:43,712 உங்களால கொஞ்சம்... 520 00:41:45,130 --> 00:41:46,965 நாம ஒரு டீல் போடலாம்னு நினைச்சேன். 521 00:41:48,717 --> 00:41:49,843 டிஸ்கௌண்டா? 522 00:41:50,511 --> 00:41:52,471 அந்த மக்களுக்கு வேற கதியே இல்லை. 523 00:41:55,474 --> 00:41:57,434 எங்களை புறக்கணித்த இந்த மக்களுக்கு 524 00:41:59,269 --> 00:42:01,355 நாங்க உதவி செய்யணும்னு நினைக்கிறியா? 525 00:42:02,981 --> 00:42:04,983 இங்கே எங்களை, விலங்குகள மாதிரி வாழும் நிலைக்குத் தள்ளிவிட்டாங்களே? 526 00:42:06,485 --> 00:42:11,740 முடியாது. நான் தொழில் செய்யறேன். இது தான் விலை. 527 00:42:23,919 --> 00:42:26,004 எனக்கு வெறுமனே ஆன்டிபையாடிக்ஸையும், ஐவிக்களையுமாவது கொடுங்க. 528 00:42:34,721 --> 00:42:37,140 அவன் கிட்ட பெனிசில்லினும், ரெண்டு ஐவி கிட்டுகளையும் கொடுங்க. 529 00:42:43,105 --> 00:42:44,106 வச்சுக்கோங்க. 530 00:42:45,107 --> 00:42:47,359 பாக்கியை நான் போதிய பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துட்டு எடுத்துக்குறேன். 531 00:43:06,670 --> 00:43:09,089 -கொஞ்சம் நிறுத்த முடியுமா? -என்ன? 532 00:43:09,173 --> 00:43:10,299 நான் கழிப்பறைக்குப் போகணும். 533 00:43:10,841 --> 00:43:12,092 -கழிப்பறையா? -ஆமாம். 534 00:43:14,428 --> 00:43:15,429 அதோ அங்கே உள்ள. 535 00:43:16,138 --> 00:43:17,222 -இங்கேயா? -ஆமாம். 536 00:43:18,640 --> 00:43:19,641 அதைப் பிடி. 537 00:43:24,229 --> 00:43:25,939 நண்பா. இது ஒரு கழிப்பறையா? 538 00:43:35,991 --> 00:43:37,284 வாட்டர் கிளாசெட். 539 00:44:00,516 --> 00:44:03,060 சாவு, வெக்கங்கெட்டவனே. 540 00:44:30,838 --> 00:44:32,756 இன்னிக்கு நீ செத்த, ராஃபிக். 541 00:44:33,549 --> 00:44:36,176 ஹே! ஹே. 542 00:44:36,260 --> 00:44:38,011 இங்கே இன்னிக்கு யாரும் இறக்கக்கூடாது. 543 00:44:43,851 --> 00:44:46,186 நாம இப்போ வேற இடத்துக்குப் போகணும். உடனே. 544 00:45:15,090 --> 00:45:17,259 நண்பா, நான் இந்த பொருட்களை எடுத்துக்கிட்டு, திரும்பணும். 545 00:45:17,342 --> 00:45:18,552 நான் உன்னைக் கொண்டு விடறேன். 546 00:45:18,635 --> 00:45:21,305 நடந்து போறதோட சீக்கிரமா போயிடலாம், ஆனால் நான் உங்கூட முதல்ல பேசணும். 547 00:45:22,931 --> 00:45:24,933 சீதாப்பழம். எனக்கு ரொம்பப் பிடிக்கும். 548 00:45:26,185 --> 00:45:28,854 அதுக்கு அப்புறம் சப்போட்டா, அப்புறம் சாத்துக்குடி. 549 00:45:30,856 --> 00:45:34,484 எனவே, என்ன, அவ்வளவுதானா? ஒருத்தனக் கொல்ல முயற்சி, அப்புறம் ஐஸ் கிரீமா? 550 00:45:36,153 --> 00:45:39,072 அவனை கொல்ல விட்டிருக்கணும். இனிமே சண்டை வந்துட்டே இருக்கும். 551 00:45:41,491 --> 00:45:42,701 அது உனக்கு உறுத்தாதா? 552 00:45:45,913 --> 00:45:49,458 இங்கே வர்றதுக்கு முன்னாடி, நான் ஈரானில் இருந்தபோது, அது மட்டும் தான் தெரியும். 553 00:45:50,584 --> 00:45:53,629 எதுக்குன்னு எல்லாம் தெரியாது. எங்கே காட்டினாங்களோ, அங்கே போவேன். 554 00:45:57,132 --> 00:45:58,342 ரெண்டு சகோதரர்கள் இருந்தாங்க, 555 00:45:59,301 --> 00:46:00,302 இப்போ போயாச்சு. 556 00:46:01,553 --> 00:46:03,514 ஒருத்தனா மட்டும் இருப்பது நல்லதில்ல. 557 00:46:04,640 --> 00:46:07,142 இப்போ நான் எதுக்காக சண்டை போடறேன்னு தெரியும். 558 00:46:08,977 --> 00:46:10,062 காதர்பாய். 559 00:46:11,313 --> 00:46:12,314 ஆமாம். 560 00:46:14,441 --> 00:46:16,610 எதிர்காலத்தை உருவாக்குபவர் தான் காதர்பாய். 561 00:46:16,693 --> 00:46:18,862 நாம, நாமெல்லாம் அது வர்றதுக்காக காத்திருப்போம். 562 00:46:19,488 --> 00:46:22,866 ஆனால் அவர் அதை கனவு காணுறார், திட்டமிடுகிறார், அப்புறம் நடக்க வைக்கிறார். 563 00:46:25,869 --> 00:46:28,872 காதர்பாய் உங்கிட்ட என்னை அனுப்பியபோது, எனக்குப் புரியலை. 564 00:46:29,748 --> 00:46:32,084 என்ன மாதிரி வெள்ளைக்காரன் இவன், டாக்டராக விரும்புறான்? 565 00:46:35,254 --> 00:46:36,880 ஆனால் இன்னிக்கு நீ என் உயிரைக் காப்பாத்திட்ட. 566 00:46:38,048 --> 00:46:39,174 நானும் உன்னைக் காப்பாத்தினேன். 567 00:46:40,467 --> 00:46:42,469 காதர்பாய் நம்மகிட்ட ஏதோ உண்மையா இருக்குன்னு நினைச்சிருக்கார். 568 00:46:42,970 --> 00:46:45,347 நாம சகோதரர்கள் போல தெரிந்திருக்கலாம். 569 00:46:49,601 --> 00:46:52,604 அப்துல்லா, நீங்க எல்லோரும் செய்யறதுல நான் ஈடுபட முடியாது. 570 00:46:54,773 --> 00:46:57,734 நான் தலைமறைவா இருக்கணும் என்பதை காதர்பாய் புரிந்துகொள்ளணும். 571 00:46:59,152 --> 00:47:01,780 எந்த வம்பும் தும்பும் இல்லாம. யாரும் என்னை கவனிக்காம இருக்கணும். 572 00:47:02,781 --> 00:47:04,491 உனக்கு என்ன வேணுங்கிறது ஒரு பொருட்டே இல்லை. 573 00:47:05,576 --> 00:47:09,246 நம்மள மாதிரி இருக்கிறவங்களுக்கு, தலையெழுத்து ஏற்கனவே எழுதப்பட்டிருக்கு. 574 00:47:18,255 --> 00:47:20,549 நான் உடனே இந்த மருந்துகளை திரும்ப எடுத்துட்டு போகணும். 575 00:47:46,074 --> 00:47:47,784 கழிப்பறைக்கா? 576 00:47:48,493 --> 00:47:49,536 ரவி. 577 00:47:51,163 --> 00:47:53,081 நீ எனக்கு மோசமான மீனைக் கொடுத்தயா? 578 00:47:54,291 --> 00:47:55,334 இதுவும்... 579 00:47:58,545 --> 00:47:59,546 உங்களுக்குத் தான். 580 00:48:02,341 --> 00:48:03,425 நல்லது தான், நண்பா. 581 00:48:05,427 --> 00:48:07,346 நீங்க காசிம் சித்தப்பாகிட்ட சொல்லப் போறீங்களா? 582 00:48:09,473 --> 00:48:11,099 -மாட்டேன். -ஏன்? 583 00:48:13,310 --> 00:48:15,604 ஏன்னா என்னிக்காவது ஒரு நாள் நீ என்னை வெறுக்குறத நிறுத்துவன்னு நம்புறேன். 584 00:48:31,370 --> 00:48:32,579 சரி, ஆமாம். நல்லது. 585 00:48:39,336 --> 00:48:41,255 "உங்களுக்கு இப்போ சரியாகிடும்" அப்படின்னு எப்படி சொல்றது? 586 00:48:47,845 --> 00:48:49,137 சோனம். 587 00:49:08,240 --> 00:49:09,658 இல்லயில்ல. இல்ல. இல்ல. 588 00:49:22,171 --> 00:49:24,423 சாகர் வாடா விஷயத்துக்காக, வலீத் தான் ராஃபிக்கை 589 00:49:24,506 --> 00:49:26,091 அனுப்பினான்னு நீ நினைக்கிறயா? 590 00:49:26,175 --> 00:49:27,176 இல்ல. 591 00:49:27,259 --> 00:49:29,052 தாதாக்களும், அவங்க ஆளுங்களும் அமைதியா போனாலும், அவங்களுக்காக 592 00:49:29,136 --> 00:49:30,637 போராடினவங்க அதை மறந்துட்டாங்கன்னு சொல்ல முடியாது. 593 00:49:31,138 --> 00:49:32,222 ராஃபிக் என்னை வெறுக்கிறான். 594 00:49:32,306 --> 00:49:34,808 என்னைத் தனியாப் பார்த்தான், கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டான். 595 00:49:35,434 --> 00:49:37,227 கதையை முடிச்சிருப்பான், லின் மட்டும் இல்லன்னா. 596 00:49:37,311 --> 00:49:38,604 அவன் உன் வாழ்க்கையைக் காப்பாத்திட்டான். 597 00:49:38,687 --> 00:49:40,898 தன் உயிரை பணயம் வச்சான். தயங்கவே இல்லை. 598 00:49:41,690 --> 00:49:44,860 ஆனால் ராஃபிக்கை கொல்ல என்னை அனுமதிக்கலை. வினோதமான மனுஷன். 599 00:49:45,861 --> 00:49:47,112 உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா? 600 00:49:47,196 --> 00:49:49,198 பிடிச்சிருக்கு. அவன் கிட்ட சுவாபிமானம் இருக்கு. 601 00:49:50,199 --> 00:49:51,617 ரூபிக்கிட்டேர்ந்து அவனுக்கு வேணுங்கிறது கிடைச்சுதா? 602 00:49:51,700 --> 00:49:53,785 கொஞ்சம் தான். அவன் கிட்ட பணம் இல்லை. 603 00:49:53,869 --> 00:49:54,870 அவன் செய்ய நினைக்கிறதுக்கு பத்தாது. 604 00:49:56,830 --> 00:49:59,666 உன் உயிருக்கு நான் என்ன கைமாறாத் தரமுடியும், அப்துல்லா? 605 00:50:00,667 --> 00:50:03,420 அவன் இன்னிக்கு நமக்கு தந்திருக்கிற பரிசு இது தான், உன்னுடைய புதிய சகோதரன். 606 00:50:05,881 --> 00:50:06,882 ராஃபிக்கை என்ன செய்ய? 607 00:50:08,008 --> 00:50:09,009 முடிச்சிடவா? 608 00:50:10,052 --> 00:50:11,053 வேண்டாம். 609 00:50:14,431 --> 00:50:15,557 இப்போ வேண்டாம். 610 00:50:16,225 --> 00:50:20,437 வலீதோட போராடித் தான் ஆகணும்னா, நாம அதை ஆரம்பிக்க வேண்டாம். 611 00:50:21,104 --> 00:50:22,314 அவன் திரும்பவும் முயற்சி செய்தா? 612 00:50:22,981 --> 00:50:24,650 அவன் சடலத்தை யாரும் கண்டுப்பிடிக்கக்கூடாது. 613 00:50:50,259 --> 00:50:51,718 உன்னைத் தேடிப் பிடிக்கிறது கஷ்டம்தான். 614 00:50:53,095 --> 00:50:55,347 அப்துல்லா, நீ இங்க என்ன செய்யற? 615 00:50:56,890 --> 00:50:58,559 காதர் என்னைத் திரும்பவும் ரூபிக்கிட்ட அனுப்பினார். 616 00:50:59,852 --> 00:51:01,144 இதுக்கு பதிலா என்ன எதிர்பார்க்கிறார்? 617 00:51:02,187 --> 00:51:04,439 நீ செய்யற நல்ல வேலைக்கு, எதுவும் வாங்கிக்க, உன் கௌரவம் இடம் தராதுன்னு 618 00:51:04,523 --> 00:51:05,983 காதர்பாய்க்கு தெரியும் போல. 619 00:51:09,570 --> 00:51:11,280 உனக்கு வேணுமா, வேண்டாமா? 620 00:51:18,662 --> 00:51:22,207 இப்போ, இந்த திட்டத்தில உனக்கும் ஒரு பங்கு உண்டு, அப்படி தானே? 621 00:51:23,208 --> 00:51:25,377 நான் தீய சக்திகளோடு விளையாடுகிறேன்னு தெரிந்தது, 622 00:51:25,460 --> 00:51:28,797 ஆனால், அது எதுவாக இருந்தாலும், அதில் பங்கெடுக்க நான் ஆவலாக இருந்தேன். 623 00:51:29,506 --> 00:51:31,675 என் நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அது பயத்தைத் தந்திருக்க வேண்டும். 624 00:51:32,176 --> 00:51:33,510 மாறாக நான் உற்சாகமாக இருந்தேன். 625 00:51:40,601 --> 00:51:42,519 Shantaram என்ற நாவலை அடிப்படையாக் கொண்டது எழுதியவர் கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் 626 00:53:02,599 --> 00:53:04,601 தமிழாக்கம் அகிலா குமார்