1 00:00:01,376 --> 00:00:03,961 Foundation-ல் இதற்கு முன்னர்... 2 00:00:06,423 --> 00:00:08,175 வெடிப்புக்கு முன்னர் 3 00:00:08,258 --> 00:00:11,845 அனக்ரியான் மற்றும் தெஸ்பின் போர் முழக்கம் ஒலித்திருக்கிறது. 4 00:00:11,929 --> 00:00:16,683 நீங்கள் இறக்கப் போகிறீர்கள், நீ செய்ததற்கு இது போதாது. 5 00:00:17,184 --> 00:00:18,727 இவை எல்லாமே சரியாக நடக்கும், ரேய்ச். 6 00:00:18,810 --> 00:00:20,771 நீங்கள் வேறொரு வழி இருக்க வேண்டுமென்று விரும்பியதுண்டா? 7 00:00:20,854 --> 00:00:22,439 ஒவ்வொரு நாளும், மகனே. 8 00:00:24,983 --> 00:00:27,194 கேல், நீ போக வேண்டும். இப்போதே! 9 00:00:27,861 --> 00:00:29,112 பகா எண்களை எண்ண மறக்காதே. 10 00:00:29,613 --> 00:00:30,656 பகா எண்களை எண்ண மறக்காதே. 11 00:00:30,739 --> 00:00:33,951 எண்பத்தி ஆறு மில்லியன், தொள்ளாயிரத்து எண்பத்து ஓர் ஆயிரம்… 12 00:01:42,477 --> 00:01:44,395 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 13 00:02:04,624 --> 00:02:07,919 படுக்கையில் என் அம்மா என்னிடம் சொன்ன கதைகளிலேயே 14 00:02:08,002 --> 00:02:10,380 கருந்துளை பற்றிய கதைதான் என்னை மிகவும் பயமுறுத்திய ஒன்று. 15 00:02:13,758 --> 00:02:15,551 அந்த காரிருள் என்னை பயமுறுத்தவில்லை. 16 00:02:16,427 --> 00:02:18,221 நான் இருளில் சௌகரியமாக இருப்பேன். 17 00:02:20,932 --> 00:02:23,226 அது கருந்துளை எல்லை பற்றிய எண்ணம்தான். 18 00:02:26,604 --> 00:02:27,939 அந்த எல்லைக்குள் நுழைந்தால், 19 00:02:28,022 --> 00:02:31,359 புவியீர்ப்பு விசை உங்களை மீண்டும் திரும்ப விடாது. 20 00:02:32,902 --> 00:02:35,822 தப்பிப்பது சாத்தியமற்றதாகிவிடும். 21 00:02:52,046 --> 00:02:54,299 கேல். காலை சடங்குகளுக்கு நேரமாகிவிட்டது. 22 00:03:01,222 --> 00:03:08,229 முன்பு... 23 00:03:15,695 --> 00:03:17,363 நாம் வார்த்தைளைப் பேசுகிறோம். 24 00:03:17,447 --> 00:03:19,782 வார்த்தைகள் நம்மை பார்க்க வைக்கின்றன. 25 00:03:20,658 --> 00:03:24,078 உங்கள் மத்தியில் இந்த குழந்தையை வரவேற்கிறேன், 26 00:03:24,996 --> 00:03:30,084 இவன் ஆசீர்வதிக்கப்படவும், அன்பு செலுத்தவும், போற்றப்படவும், 27 00:03:31,085 --> 00:03:33,338 அறியப்படவும், பார்க்கப்படவும் வேண்டும், 28 00:03:33,922 --> 00:03:36,257 ஸ்லீப்பரின் வார்த்தைகளால். 29 00:03:36,341 --> 00:03:37,675 விழித்தவுடன். 30 00:03:38,259 --> 00:03:39,677 விழித்தவுடன். 31 00:03:40,178 --> 00:03:45,350 சியர் டொமினி, தடைசெய்யப்பட்ட செயல்களுக்காக பல்கலைக்கழகத்தை சோதனையிட வேண்டும். 32 00:03:48,519 --> 00:03:50,480 அகொலைட் டோர்னிக். 33 00:03:52,273 --> 00:03:55,485 நேற்று இரவு ஜன்னலில் வெளிச்சம் தெரிந்ததாக சியர் டொமினி சொன்னார். 34 00:03:55,568 --> 00:03:57,362 ஆனால் அது கைவிடப்பட்ட பல்கலைக்கழகம். 35 00:03:58,071 --> 00:03:59,113 பாருங்கள். 36 00:05:02,594 --> 00:05:03,803 பயிற்றுவிப்பாளர் சோர்ன்? 37 00:05:08,057 --> 00:05:09,058 கேல்? 38 00:05:09,809 --> 00:05:12,604 நீ அகொலைட்டாக மாறிவிட்டாய் என்று கேள்விப்பட்டேன். 39 00:05:14,397 --> 00:05:15,773 நீ உன் தந்தையைப் போலவே இருக்கிறாய். 40 00:05:16,357 --> 00:05:19,777 மிகவும் பக்தியாக. மத நம்பிக்கையற்றவர்களை வேட்டையாடுகிறாய். 41 00:05:19,861 --> 00:05:23,906 நீ உன் அம்மாவின் மடியில் உறங்கிய எத்தனையோ இரவுகளை 42 00:05:24,407 --> 00:05:26,784 நான் உன் பெற்றோர்களோடு பேசி களித்திருக்கிறேன். 43 00:05:28,286 --> 00:05:30,121 அது மிக நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது போல இருக்கிறது. 44 00:05:30,204 --> 00:05:32,749 உன் பெற்றோர்கள் வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள், இல்லையா? 45 00:05:34,208 --> 00:05:37,503 உன்னைப் போலவே. வேறொரு வாழ்க்கை முறையை. 46 00:05:38,129 --> 00:05:42,800 நீங்கள் இங்கே இருக்கக்கூடாது, திரு. சோர்ன். சியர்கள் இந்த கட்டிடத்தை தடை செய்திருக்கிறார்கள். 47 00:05:43,384 --> 00:05:44,761 மத நம்பிக்கை அற்றவர்களுக்காகத் தானே? 48 00:05:45,720 --> 00:05:49,474 எல்லா பகுப்பாய்வு கற்றலும் சியர் தேவாலயத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராகவே இருக்கின்றன. 49 00:05:50,224 --> 00:05:52,685 ஏன் இப்படி சிந்திக்கிறாய், கேல்? எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பாய். 50 00:05:52,769 --> 00:05:55,855 நில்லுங்கள். புத்தகங்களைப் போட்டுவிட்டு செல்லுங்கள். 51 00:05:56,981 --> 00:06:00,485 நீங்கள் இங்கிருப்பது சியர்களுக்குத் தெரிந்தால், உங்களை கொன்றுவிடுவார்கள். 52 00:06:00,568 --> 00:06:01,611 ஆம். 53 00:06:01,694 --> 00:06:04,530 நீங்கள் இறக்க வேண்டுமென ஒரு கிரகம் விரும்பினால், நீங்கள் இறந்து விடுவீர்கள். 54 00:06:05,031 --> 00:06:06,449 ஓடுங்கள். 55 00:06:06,532 --> 00:06:08,534 அவை வெறும் வார்த்தைகள்தான். 56 00:06:08,618 --> 00:06:09,911 அப்படியா? 57 00:06:10,787 --> 00:06:12,914 காலேவின் மடிக்கப்பட்ட புத்தகம். 58 00:06:13,706 --> 00:06:16,501 அவர் இதை எழுத தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார். 59 00:06:18,044 --> 00:06:19,045 ஒழுக்கின்மை கோட்பாடு. 60 00:06:19,629 --> 00:06:23,716 அறிவை பெருக்குவதே மனித இனத்தின் உன்னதமான பணி, கேல். 61 00:06:24,384 --> 00:06:25,385 நினைவில் கொள். 62 00:06:26,719 --> 00:06:27,720 இதைப் பிடி. 63 00:06:31,266 --> 00:06:32,558 உனக்காக நான் பிடிக்கிறேன். 64 00:06:35,311 --> 00:06:38,147 இந்த "அறிவை அழிக்கும்" நிலை மாறும், கேல். 65 00:06:39,232 --> 00:06:40,984 அவர்களின் வேகம் குறையும். 66 00:06:41,609 --> 00:06:44,070 நம் தலைமுறையில் அல்ல, ஆனால் ஒருநாள் நடக்கும். 67 00:06:45,738 --> 00:06:47,532 எல்லாவற்றுக்கும் ஒரு சுழற்சி உண்டு. 68 00:06:48,241 --> 00:06:50,994 அழிவுக்குப் பிறகு, மறுபிறப்பு. 69 00:06:51,786 --> 00:06:56,082 மறுபிறப்பு காலம் வரும் வரை அழிவிலிருந்து தப்பிக்க அறிவு நமக்கு வழிகாட்டும். 70 00:06:56,165 --> 00:06:58,626 -வெள்ளங்கள்... -ஸ்லீப்பரிடமிருந்து வந்த எச்சரிக்கை, 71 00:06:59,335 --> 00:07:03,673 அவர் மறுபிறப்புக்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க நாம் வெல்ல வேண்டிய சவால். 72 00:07:03,756 --> 00:07:07,010 இல்லை. அது உனக்கே தெரியும். இல்லை. 73 00:07:07,093 --> 00:07:08,219 கேல்? 74 00:07:12,140 --> 00:07:15,184 நீங்கள் கிளம்ப வேண்டும். தயவுசெய்து. 75 00:07:15,268 --> 00:07:18,062 நாம் எரிமலை துவாரங்களை அதிகமாக தோண்டிவிட்டோம். 76 00:07:18,563 --> 00:07:22,609 பனிப்பாறைகளை உருக்கிவிட்டோம். இதைச் செய்தது நாம்தான். உறக்கத்திலுள்ள உன் கடவுளல்ல. 77 00:07:22,692 --> 00:07:24,027 "நாம்" என்ற வார்த்தைக்கே இடமில்லை. 78 00:07:24,527 --> 00:07:27,780 நான் உங்கள் பக்கம் கிடையாது. நான் உங்களைப் போல அல்ல. 79 00:07:30,658 --> 00:07:35,788 காலேவின் எண்களுக்கு எதிராக அந்த கருத்தை சோதித்து பார்க்க நீ தயாரா? 80 00:07:37,332 --> 00:07:38,333 அங்கிருக்கிறாய். 81 00:07:41,794 --> 00:07:43,338 அது டாக்டர் சோர்ன். 82 00:08:42,647 --> 00:08:46,025 கருணையுள்ள ஸ்லீப்பரே, எங்களை சுத்தப்படுத்துங்கள், 83 00:08:46,109 --> 00:08:50,822 நாங்கள் உங்கள் வார்த்தைகளில் ஒன்றிணைந்து உங்கள் கனவில் நிலைத்திருக்க வேண்டும். 84 00:08:51,322 --> 00:08:53,366 விழித்தவுடன். 85 00:08:54,325 --> 00:08:55,702 விழித்தவுடன். 86 00:08:59,122 --> 00:09:00,415 அகொலைட் டோர்னிக். 87 00:09:01,291 --> 00:09:03,668 ஸ்லீப்பர் பார்த்துக்கொண்டிருக்கிறார். 88 00:09:22,270 --> 00:09:24,856 இதற்காக, இவர் சுத்தப்படுத்தப்படுவார். 89 00:09:44,959 --> 00:09:47,837 இதனால் கடல் உயர்வதை தடுக்கவோ... 90 00:09:48,713 --> 00:09:51,382 பாசி பூக்கள் அழிவதையோ தடுக்க முடியாது. 91 00:09:51,466 --> 00:09:53,843 அறிவினால் மட்டுமே அதை செய்ய முடியும். 92 00:12:05,266 --> 00:12:08,019 6 மணிக்கு சடங்கு இருக்கிறது. நீ சியர் டொமினிக்கு உதவு வேண்டும். 93 00:12:09,520 --> 00:12:10,772 இன்று மாலை என்னால் போக முடியாது. 94 00:12:11,898 --> 00:12:13,816 பசுமையைத் தேடி நான் இன்னும் தூரமாக பயணப்பட வேண்டும். 95 00:12:14,400 --> 00:12:18,905 தண்ணீர் வெதுவெதுப்பாக மாறி வருகிறது. நிறைய பாசிகள் இறந்துவிட்டது. 96 00:12:18,988 --> 00:12:20,156 இது பருவமழை காலம். 97 00:12:20,239 --> 00:12:22,992 வோட்டரிக்கு நீ எப்போது போகிறாய் என்று டொமினி உன்னிடம் சொன்னாரா? 98 00:12:23,493 --> 00:12:26,746 அவர் உன்னை அளவுக்கதிகமாக நம்புகிறார், கேல். என்னால் அதைப் பார்க்க முடிகிறது. 99 00:12:26,829 --> 00:12:29,874 வோட்டரிக்கு கணிசமான அதிகாரப்பூர்வமற்ற சேவை கட்டணம் கிடைக்கும், இல்லையா? 100 00:12:31,000 --> 00:12:34,420 -மூன்று மாதத்திற்கு இருநூறு கைட்டன்கள். -அது போதும். 101 00:12:34,504 --> 00:12:35,964 அது பத்தாது. 102 00:12:37,715 --> 00:12:39,092 பெருவெள்ளம் வருகிறது. 103 00:12:39,759 --> 00:12:42,011 ஸ்லீப்பரின் வார்த்தையைக் கேள்வி கேட்க நீ யார்? 104 00:12:42,595 --> 00:12:44,138 வெள்ளம் வருகிறது. 105 00:12:44,222 --> 00:12:46,474 எல்லாவற்றையும் உயர்ந்தவில்லை என்றால் மக்கள் இறக்கப்போகிறார்கள்... 106 00:12:46,557 --> 00:12:47,558 போதும். 107 00:12:48,977 --> 00:12:50,436 பிரார்த்தனை செய். 108 00:12:55,066 --> 00:12:57,318 ஆசீர்வதித்து, பாருங்கள், ஓ, ஸ்லீப்பர். 109 00:12:57,944 --> 00:13:00,071 உங்கள் ஞானத்திற்கும் கனவுகளுக்கும் நன்றி. 110 00:13:28,600 --> 00:13:30,476 லேசர் ஒளிக்கற்றை தகவல் அனுப்ப வேண்டும். 111 00:13:33,104 --> 00:13:34,731 உங்களால் உதவ முடியும் என்றார்கள். 112 00:13:35,481 --> 00:13:38,151 முடியாது. தேவாலய வேலைகளாக இருந்தாலொழிய, சியர்கள் வெளி உலக 113 00:13:38,776 --> 00:13:40,945 -தொடர்பை அனுமதிக்கமாட்டார்கள். -நான் பணம் தருகிறேன். 114 00:13:44,741 --> 00:13:46,409 ஐம்பது கைட்டன்கள். 115 00:13:49,704 --> 00:13:52,874 -தகவலை எங்கே அனுப்ப வேண்டும்? -ட்ரான்டோர். ஸ்ட்ரீலிங் பல்கலைக்கழகத்திற்கு. 116 00:14:14,354 --> 00:14:18,316 சின்னிக்ஸ் உள்ள யாரோ ஒருவர் இம்பீரியல் கணக்கு போட்டியில் கலந்துகொண்டதாக சியர்கள் சொல்கிறார்கள். 117 00:14:18,399 --> 00:14:20,360 நீ இதை நிறுத்த வேண்டும், கேல். 118 00:14:20,443 --> 00:14:22,904 இதைத் தொடர்வதன் மூலம் நீ எங்கள் எல்லோரையும் ஆபத்தில் தள்ளுகிறாய். 119 00:14:22,987 --> 00:14:23,988 இதை விட்டுவிடு. 120 00:15:41,608 --> 00:15:45,820 வாழ்த்துக்கள், செல்வி டோர்னிக். என் பெயர் ஹேரி செல்டன். 121 00:15:45,903 --> 00:15:48,948 நான் ட்ரான்டோரில் உள்ள ஸ்ட்ரீலிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறேன். 122 00:15:49,991 --> 00:15:52,327 அப்ராக்ஸஸ் அனுமானத்திற்கு புதுமையான முறையில் தீர்வு கண்டதால் 123 00:15:52,410 --> 00:15:56,956 நான் உன்னை வாழ்த்த விரும்புகிறேன். 124 00:15:57,040 --> 00:15:59,334 நீ உன் தீர்வுகளை வெளியிட்டதால், 125 00:15:59,417 --> 00:16:02,378 கல்வி குழுக்கள் உன் சாதனையின் மீது 126 00:16:02,462 --> 00:16:03,713 சந்தேகத்தை கிளப்புகிறார்கள். 127 00:16:03,796 --> 00:16:06,883 பல அறிஞர்களை குழப்பமடைய செய்த இந்த அனுமானம், 128 00:16:06,966 --> 00:16:08,843 பல நூற்றாண்டுகளாக நீடிக்கிறது. 129 00:16:09,510 --> 00:16:12,889 சின்னிக்ஸ் உள்ள ஒருவரிடமிருந்து இந்த பதில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன், 130 00:16:13,473 --> 00:16:15,266 அதுவும் ஒரு இளம் பெண் என்பதால் 131 00:16:15,350 --> 00:16:18,102 இதை ஏற்றுக்கொள்ள அவர்களின் மனம் மறுக்கிறது. 132 00:16:18,603 --> 00:16:21,522 ஆனால் கணிதத்தின் அழகே அது தூய்மையானது என்பதுதான். 133 00:16:22,565 --> 00:16:24,651 உன் தீர்வை நான் ஆராய்ந்தேன், 134 00:16:25,610 --> 00:16:30,156 அதோடு உன் ஆதாரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் எனது ஆதரவை வழங்க விரும்புகிறேன். 135 00:16:30,740 --> 00:16:36,162 இது தனித்துவமானது, நேர்த்தியானது மற்றும் உண்மையானது. 136 00:16:36,746 --> 00:16:38,456 சபாஷ், செல்வி டோர்னிக். 137 00:16:39,540 --> 00:16:42,293 சந்தேகம் விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். 138 00:16:42,794 --> 00:16:44,796 உன்னிடம் குறிப்பிடத்தகுந்த அறிவு இருக்கிறது. 139 00:16:45,755 --> 00:16:50,009 நீ என் விருந்தாளியாக ட்ரான்டோருக்கு வந்தால் அதை என் கௌரவமாக கருதுவேன். 140 00:16:50,510 --> 00:16:53,388 உன் தீர்வை என் மாணவர்களுக்கு நீ படிப்படியாக விளக்கலாம். 141 00:16:53,471 --> 00:16:56,349 நீ எப்படி சாதித்தாய் என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 142 00:16:57,308 --> 00:17:01,187 சந்தேகத்திற்கு இடமின்றி, அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் உனக்கு தெரிவிக்கப்படும். 143 00:17:01,271 --> 00:17:05,984 ஆனால், நீ முதலில் என் அழைப்பை ஏற்றுக்கொள்வாய் என்று நம்புகிறேன். 144 00:17:10,488 --> 00:17:13,825 நன்றி, ஸ்லீப்பர். நன்றி. 145 00:17:20,248 --> 00:17:22,709 நம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ட்ரான்டோருடன் தொடர்பு கொள்கிறாரா? 146 00:17:22,792 --> 00:17:24,294 -இது அவமானம். -அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 147 00:17:24,377 --> 00:17:25,545 கேல். 148 00:17:27,922 --> 00:17:28,923 கேல். 149 00:17:32,427 --> 00:17:33,511 அது வருகிறது. 150 00:17:34,387 --> 00:17:36,806 எல்லாவற்றையும் பத்து மடங்கு உயர்த்தினால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. 151 00:17:36,889 --> 00:17:38,975 கணிதம் மறுக்க முடியாதது. 152 00:17:39,058 --> 00:17:41,227 சூறாவளி காற்று, பெருவெள்ளம் வரப்போகிறது... 153 00:17:41,310 --> 00:17:43,563 இவை உன் மூலமாக ஸ்லீப்பர் சொல்லும் வார்த்தைகளா? 154 00:17:43,645 --> 00:17:44,646 இல்லை. 155 00:17:45,857 --> 00:17:46,899 இது கணிதம். 156 00:17:48,776 --> 00:17:50,403 நான் அந்த புதிரை தீர்த்துவிட்டேன். 157 00:17:51,445 --> 00:17:53,448 சியர்கள் தேடுவது என்னைத்தான். 158 00:17:55,866 --> 00:17:59,078 ஹேரி செல்டன் என்னை ட்ரான்டோருக்கு அழைத்து இருக்கிறார். நீங்களும் என்னோடு வாருங்கள். 159 00:17:59,162 --> 00:18:00,371 ட்ரான்டோருக்கா? 160 00:18:01,623 --> 00:18:02,915 இயந்திர உலகிற்கா? 161 00:18:05,209 --> 00:18:06,836 அதற்கு பதிலாக என் மகள் சாகலாம். 162 00:18:22,936 --> 00:18:26,272 குழந்தையாக இருந்தபோது கருந்துளைகள் பற்றிய கெட்ட கனவுகள் வந்தன. 163 00:18:29,233 --> 00:18:34,864 ஏதோவொரு அதிசயத்தை நோக்கி நகர்வது, பெரும்பாலானவர்களால் புரிந்துகொள்ளக்கூட 164 00:18:35,865 --> 00:18:40,536 முடியாத ஒன்றை நான் காண்பது, பிறகு திரும்பி வர முடியாத நிலையை 165 00:18:42,372 --> 00:18:47,961 அடைந்துவிட்டதை தாமதமாக உணர்வது எப்படி இருக்குமென்று கற்பனை செய்வேன். 166 00:18:50,797 --> 00:18:52,674 நீ என்ன செய்திருக்கிறாய்? 167 00:19:28,251 --> 00:19:31,337 விழித்த பிறகும் கூட, அந்த பயம் தொடர்ந்தது... 168 00:19:33,214 --> 00:19:35,883 இப்போது... 169 00:19:36,718 --> 00:19:39,887 ...ஒரு எதிரொலியை, முணுமுணுப்பைப் போல... 170 00:20:04,704 --> 00:20:09,792 காலப்போக்கில் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தாலும் ஒருபோதும் முழுமையாக பயம் நீங்கவில்லை. 171 00:20:30,563 --> 00:20:31,564 ஹலோ? 172 00:20:43,409 --> 00:20:44,619 ஹேரி? 173 00:20:53,253 --> 00:20:55,338 ஹலோ? யாராவது இருக்கிறீர்களா? 174 00:20:55,421 --> 00:20:56,631 ஹலோ? 175 00:21:00,343 --> 00:21:01,511 தயவுசெய்து. 176 00:21:01,594 --> 00:21:03,137 யாராவது இருக்கிறீர்களா? 177 00:21:03,221 --> 00:21:04,472 தயவுசெய்து. 178 00:21:14,565 --> 00:21:15,817 என்னை விடுங்கள்... 179 00:21:15,900 --> 00:21:19,779 என்னை வெளியே விடுங்கள்! 180 00:21:24,575 --> 00:21:26,327 என்னை வெளியே விடுங்கள்! 181 00:21:26,828 --> 00:21:28,788 தயவுசெய்து. என்னை வெளியே விடுங்கள்! 182 00:21:28,871 --> 00:21:30,790 உதவி! 183 00:21:30,873 --> 00:21:32,584 தயவுசெய்து. 184 00:21:32,667 --> 00:21:33,835 தயவுசெய்து. 185 00:21:34,627 --> 00:21:35,712 இல்லை! 186 00:21:49,767 --> 00:21:52,270 உறைநிலை கால தரவு பதிவேற்றப்படுகிறது. 187 00:21:52,353 --> 00:21:55,398 ரேய்ச் ஃபாஸ் வருகை நடைமுறை தொடங்குகிறது. 188 00:22:08,244 --> 00:22:09,454 ஹலோ? 189 00:22:58,544 --> 00:22:59,796 ஹலோ? 190 00:22:59,879 --> 00:23:01,839 கட்டளையை அடையாளம் காண முடியவில்லை. 191 00:23:03,049 --> 00:23:04,300 இது என்ன இடம்? 192 00:23:04,384 --> 00:23:06,886 அடையாளம் தேவை. 193 00:23:07,637 --> 00:23:09,764 நான் கேல் டோர்னிக். 194 00:23:09,847 --> 00:23:12,016 நான் எங்கிருக்கிறேன்? இது என்ன கப்பல்? 195 00:23:13,309 --> 00:23:15,895 கேப்டன் யார்? எல்லோரும் எங்கே? 196 00:23:15,979 --> 00:23:18,940 பயணிகள் பட்டியல் கேல் டோர்னிக் 197 00:23:19,023 --> 00:23:20,358 நான் மட்டும் தானா? 198 00:23:27,991 --> 00:23:29,117 சரி. 199 00:23:30,285 --> 00:23:34,205 நான் லூயிஸ் பைரீனுக்கு ஒரு தகவல் அனுப்ப வேண்டும். 200 00:23:34,789 --> 00:23:36,082 டெலிவரன்ஸை தொடர்பு கொள். 201 00:23:36,165 --> 00:23:41,713 ஏகாதிபத்திய காலம் 12/11/12,072 அன்று டெலிவரன்ஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது. 202 00:23:41,796 --> 00:23:44,841 இருக்க முடியாது. அது இன்னும் பறந்துகொண்டிருக்கிறது. 203 00:23:47,176 --> 00:23:49,387 12,072… 204 00:23:50,888 --> 00:23:52,432 இது என்ன வருடம்? 205 00:23:53,099 --> 00:23:54,601 எவ்வளவு காலமாக உறக்கத்தில் இருந்தேன்? 206 00:23:55,184 --> 00:23:58,563 ஏகாதிபத்திய காலம் 12,102. 207 00:23:58,646 --> 00:24:04,152 உங்கள் உறைநிலை உரக்க காலம் 34 வருடங்கள், 223 நாட்கள். 208 00:24:16,164 --> 00:24:17,999 வடக்கு எல்லை வேலி 209 00:24:30,219 --> 00:24:31,512 அவர்கள் என்ன செய்கிறார்கள்? 210 00:24:31,596 --> 00:24:34,098 நிறமாலை மறைத்தல். அதை அவர்கள் மறைக்கிறார்கள். 211 00:24:34,682 --> 00:24:36,225 அது இங்கிருப்பது நமக்கு ஏற்கனவே தெரியுமே. 212 00:24:42,982 --> 00:24:44,651 அவர்கள் நம்மிடமிருந்து அதை மறைக்கவில்லை. 213 00:25:10,551 --> 00:25:11,552 கண்காணிப்பாளர்களே, நிலை என்ன? 214 00:25:11,636 --> 00:25:13,638 அவர்கள் மேற்கு வேலியை நோக்கி சுடுகிறார்கள். 215 00:25:13,721 --> 00:25:15,556 மேற்கு எல்லை வேலி 216 00:25:15,640 --> 00:25:17,558 கிழக்கில் 50 பேர் வருகிறார்கள். 217 00:25:17,642 --> 00:25:18,977 கிழக்கு எல்லை வேலி 218 00:25:19,060 --> 00:25:21,271 மேற்கிலும் அதே அளவு ஆட்கள் வருகிறார்கள். 219 00:25:21,854 --> 00:25:24,440 தைரியமாக நில்லுங்கள். அவர்கள் உங்களை பயமுறுத்த முயல்கிறார்கள். 220 00:25:24,524 --> 00:25:25,566 சரி, வார்டன். 221 00:25:26,818 --> 00:25:29,404 -இங்கே. -நான் ஒரு விஞ்ஞானி. 222 00:25:29,487 --> 00:25:32,073 பார், நீ இதை செய்யவில்லை என்றால், இறந்த விஞ்ஞானி ஆகிவிடுவாய். 223 00:25:32,156 --> 00:25:33,157 உன் விருப்பம். 224 00:25:47,755 --> 00:25:49,299 உங்கள் மாபெரும் வேட்டைக்காரி ஒரு பொய்யர். 225 00:25:50,341 --> 00:25:53,886 அவளுடை எண்ண ஓட்டம் தவறானது, விரும்பத்தகாதது. 226 00:25:53,970 --> 00:25:57,515 எதை இழந்தாலும் சரி, அவள் அழிக்கவே வந்திருக்கிறாள். 227 00:25:58,016 --> 00:26:00,059 மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறாய், வார்டன். 228 00:26:03,104 --> 00:26:05,315 நாங்கள் எல்லோரும் அனக்ரியான் வடுக்களை உடையவர்கள். 229 00:26:06,024 --> 00:26:07,025 ஃபாரா வித்தியாசமானவள். 230 00:26:07,609 --> 00:26:11,779 அவள் கதை முடிந்துவிட்டது. அவளால் வேறு எதுவும் செய்ய முடியாது. 231 00:26:11,863 --> 00:26:15,575 நீங்கள் எங்களை விட அதிகம் பேர் இருக்கலாம், ஆனால் நீங்கள் நம்பிக்கையற்று நிற்கிறீர்கள். 232 00:26:15,658 --> 00:26:16,659 பயப்படுகிறீர்கள். 233 00:26:16,743 --> 00:26:19,037 நம்பிக்கையற்றவர்கள் தவறு செய்வார்கள். 234 00:26:32,175 --> 00:26:33,509 அது... 235 00:26:33,593 --> 00:26:35,136 ஒரு ஏகாதிபத்திய விண்கப்பல் வருகிறது. 236 00:26:43,645 --> 00:26:46,064 நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்துவிட்டார்கள். 237 00:26:54,572 --> 00:26:57,283 ஒரு ஏகாதிபத்திய விண்கப்பல் கிரகத்தைச் சுற்றி வருகிறது. அப்படியே இருங்கள். 238 00:26:58,868 --> 00:27:02,455 பேரரசசு நமக்காக வரும் என்று தெரியும். ஹேரியும் அப்படித்தான் நினைத்திருப்பார். 239 00:27:06,876 --> 00:27:08,378 நம்மை காப்பற்றுவார்கள் என்று நினைக்கிறாயா? 240 00:27:12,131 --> 00:27:14,425 -நிலை என்ன? -டெர்மினஸை நெருங்குகிறோம், தளபதி. 241 00:27:14,509 --> 00:27:16,386 கிரகத்தின் பரந்த அளவிலான ஸ்கேனை காட்டு. 242 00:27:16,469 --> 00:27:18,680 மக்கள்தொகை, மின் நிலையங்கள், ஆயுதங்கள் பற்றி தெரிய வேண்டும். 243 00:27:19,264 --> 00:27:22,267 வடக்கே பத்து கிலோமீட்டரில் ஒரு புவிவெப்ப செல் முதன்மை சக்தி ஆதாரமாக இருக்கிறது. 244 00:27:22,350 --> 00:27:25,228 பேரரசு வழங்கிய நிலையான மின் வேலியால் நகரம் பாதுகாக்கப்படுகிறது... 245 00:27:25,311 --> 00:27:26,854 தளபதி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். 246 00:27:26,938 --> 00:27:29,816 மூன்று போக்குவரத்து விண்கப்பல்கள் இருக்கின்றன, அவை பேரரசுடையது அல்ல. 247 00:27:30,400 --> 00:27:31,567 அனக்ரியான் போர்க்கப்பல்கள். 248 00:27:32,527 --> 00:27:34,445 கப்பலின் இலக்கு டெர்மினஸ் நகரத்தின் மீதே இருக்கட்டும், 249 00:27:34,529 --> 00:27:37,198 ஆனால் தரையிறங்கும் பாதையில் செல்லவும் தயாராக இருங்கள். 250 00:27:37,282 --> 00:27:39,242 -என்கிரிப்ட் செய்த தொடர்புகளுடன் இணையுங்கள். -முடியாது, சார். 251 00:27:39,325 --> 00:27:42,161 ஒளிபரப்ப தகவல்தொடர்பு மிதவை இல்லாததால், அலைவரிசை போதவில்லை. 252 00:27:42,245 --> 00:27:45,582 பொது அலைவரிசையை முயற்சியுங்கள். நாம் தொடர்பு கொள்வது தெரிய வேண்டும். ஹலோ சொல்வோம். 253 00:27:47,125 --> 00:27:49,002 தகவல்தொடர்புகள் இணைப்பு திறக்கிறது 254 00:27:51,713 --> 00:27:54,674 டெர்மினஸ் நகரம் மற்றும் ஃபவுண்டேஷன் இயங்குனர் லூயிஸ் பைரீன். 255 00:27:54,757 --> 00:27:57,885 இது ஏகாதிபத்திய விண்கப்பல் ஏஜிஸின் தளபதி க்ரே டோர்வின். 256 00:27:57,969 --> 00:27:59,178 தற்போதைய நிலை பற்றி சொல்லுங்கள். 257 00:27:59,262 --> 00:28:00,597 நான் இங்கிருக்கிறேன். 258 00:28:00,680 --> 00:28:03,933 லூயிஸ் பைரீன், தளபதி. ஃபவுண்டேஷனின் இயக்குனர். 259 00:28:04,517 --> 00:28:06,227 நாங்கள் முறையாக பேரரசின் உதவியை கோருகிறோம். 260 00:28:06,311 --> 00:28:07,645 பேரரசு உங்களுக்கு உதவி செய்யும். 261 00:28:08,229 --> 00:28:10,315 இருந்தாலும், எங்களுக்கு முதலில் தகவல் வேண்டும். 262 00:28:10,398 --> 00:28:12,150 நான் உங்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பேச வேண்டும். 263 00:28:12,233 --> 00:28:17,071 இது சிறிய புறக்காவல் நிலையம், தளபதி. எங்களிடம் ஆயுதப் படைகள் இல்லை. 264 00:28:17,155 --> 00:28:18,906 அப்படியென்றால் உளவுத்துறை இயங்குனர்? 265 00:28:21,367 --> 00:28:24,245 அனக்ரியான் துருப்புகளின் நடமாட்டம் குறித்து யாருக்குத் தெரியும்? 266 00:28:24,329 --> 00:28:25,747 எனக்குத் தெரியும், தளபதி. 267 00:28:26,289 --> 00:28:28,583 சால்வோர் ஹார்டின். டெர்மினஸின் வார்டன். 268 00:28:28,666 --> 00:28:31,169 தளபதி, அனக்ரியான் இராஜ்ஜியம் ஒரு ஏகாதிபத்திய எதிர்வினையைத் 269 00:28:31,252 --> 00:28:33,588 தூண்டும் என்ற நம்பிக்கையில் தகவல்தொடர்பு மிதவையை 270 00:28:33,671 --> 00:28:36,299 அழித்ததாக ஒப்புக்கொண்டதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 271 00:28:36,382 --> 00:28:39,469 ஏன் நீங்கள் இங்கே வர விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறியும் வரை பொறுமையாக இருங்கள். 272 00:28:39,552 --> 00:28:41,971 ஒப்புக்கொண்டதா? அவர்கள் சார்பாக பேசியது யார்? 273 00:28:42,055 --> 00:28:44,390 நாங்கள் அவர்களின் தலைவரை காவலில் வைத்திருக்கிறோம், தளபதி. 274 00:28:44,474 --> 00:28:47,185 ஃபாரா கேய்ன். அவர்களின் மாபெரும் வேட்டைக்காரி. 275 00:28:47,268 --> 00:28:49,312 அவளை கோபுரத்திற்கு அழைத்து வாருங்கள். நேரில் பார்க்க விரும்புகிறேன். 276 00:28:49,395 --> 00:28:51,731 -நிச்சயமாக, தளபதி. -அது தவறு, சார். 277 00:28:51,814 --> 00:28:54,025 ஃபாரா கோபுரத்தில் நுழையத்தான் முயற்சி... 278 00:28:54,108 --> 00:28:55,693 ஹலோ? 279 00:28:55,777 --> 00:28:58,029 -ஹலோ? -நம் உள்ளூர் தொடர்பை முடக்குகிறார்கள். 280 00:28:59,113 --> 00:29:02,825 பத்து நிமிடங்கள், இயக்குனரே. வேட்டைக்காரி என் முன்னால் இருக்க வேண்டும். 281 00:29:03,701 --> 00:29:06,704 நாம் எளிமையான தொழில்நுட்பம் குறைவாக கொண்ட கிரகம் என்று நினைக்கிறார். 282 00:29:06,788 --> 00:29:08,957 அவர் என்ன நினைத்தால் என்ன? நாம் அவளை அழைத்துவர கூடாது. 283 00:29:09,040 --> 00:29:13,086 உன் மகள் யூகங்களின் அடிப்படையில் பேரரசை மீற தயாராக இருக்கலாம், மரி, 284 00:29:13,169 --> 00:29:14,254 ஆனால் நான் மாட்டேன். 285 00:29:14,337 --> 00:29:16,381 தொடர்பை துண்டிக்க இப்போது வரை ஏன் காத்திருக்க வேண்டும்? 286 00:29:17,131 --> 00:29:20,051 அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அவளை நகர்த்தப் போவது அவர்களுக்குத் தெரியும். 287 00:29:30,979 --> 00:29:32,689 வேலியில் கட்டுப்பாடுகள் கோபுரத்தில் உள்ளன. 288 00:29:34,899 --> 00:29:37,819 எல்லோரையும் நகரத்திற்கு அழைத்துச் செல். நான் தலைமையகம் திரும்ப வேண்டும். 289 00:29:37,902 --> 00:29:38,987 ஏன்? 290 00:29:39,070 --> 00:29:40,613 ஃபாரா வேலியை அகற்றப் போகிறாள். 291 00:29:59,841 --> 00:30:01,551 நான் தொடர்புகொள்ள வேண்டும். 292 00:30:01,634 --> 00:30:03,177 அங்கீகாரம் தேவை. 293 00:30:03,261 --> 00:30:05,013 நான் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். 294 00:30:05,096 --> 00:30:07,724 -அங்கீகாரம் தேவை. -என்னை அங்கீகரி! 295 00:30:07,807 --> 00:30:09,767 கட்டளையை அடையாளம் காண முடியவில்லை. 296 00:30:10,768 --> 00:30:12,020 டெர்மினஸ் செல்ல பாதையை அமை. 297 00:30:12,103 --> 00:30:13,605 அங்கீகாரம் தேவை. 298 00:30:15,815 --> 00:30:16,983 யோசி. 299 00:30:17,066 --> 00:30:18,693 யோசி. 300 00:30:20,945 --> 00:30:22,030 சரி. 301 00:30:24,991 --> 00:30:27,702 தேடுவதற்கு எனக்கு அங்கீகாரம் உள்ளதா? 302 00:30:28,286 --> 00:30:31,456 "ஏகாதிபத்திய பொது பதிவில் உள்ள எதையும் தேடலாம்." சரி. 303 00:30:32,040 --> 00:30:34,292 டெர்மினஸின் மக்கள்தொகையைத் தேடு. 304 00:30:34,876 --> 00:30:36,169 டெர்மினஸின் மக்கள் தொகை 305 00:30:37,462 --> 00:30:38,588 அவர்கள் அதை அடைந்துவிட்டார்கள். 306 00:30:41,257 --> 00:30:42,550 சரி. 307 00:30:45,345 --> 00:30:46,804 சரி. 308 00:30:52,143 --> 00:30:56,022 ஹேரி செல்டனின் மரணத்தைத் தேடு. 309 00:31:00,693 --> 00:31:03,863 மாலை வணக்கம். கனத்த இதயத்துடன் இந்த செய்தியை பதிவு செய்கிறேன். 310 00:31:03,947 --> 00:31:09,410 8/8 ஆம் தேதி, ஏகாதிபத்திய காலம் 12,068, 311 00:31:09,494 --> 00:31:10,787 ஹேரி செல்டன்... 312 00:31:13,957 --> 00:31:15,375 ஹேரி செல்டன் கொல்லப்பட்டார். 313 00:31:15,458 --> 00:31:17,502 அவரது வளர்ப்பு மகனான ரேய்ச் ஃபாஸ் 314 00:31:17,585 --> 00:31:20,672 குத்தியதால் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்தார். 315 00:31:20,755 --> 00:31:23,091 அதோடு ஃபாஸின் கூட்டாளிதான், கேல் டோர்னிக். 316 00:31:23,174 --> 00:31:25,301 இல்லை. 317 00:31:25,385 --> 00:31:28,346 செல்டனின் இறப்பு உத்தரவின் படி, 318 00:31:28,429 --> 00:31:31,057 அவரது உடல் அவரே வடிவமைத்த கலசத்தில் 319 00:31:32,392 --> 00:31:34,269 இந்த விண்கலத்திலிருந்து வெளியேற்றப்படும். 320 00:31:37,897 --> 00:31:40,984 திட்டத்தின் வரிசை உரிமையின் படி, 321 00:31:41,567 --> 00:31:46,948 ஃபவுண்டேஷனின் தலைமையை ஏற்றுக்கொள்வது மூத்த கவுன்சிலராக என் பொறுப்பாகிறது. 322 00:31:47,031 --> 00:31:48,283 இந்தக் கப்பலில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் 323 00:31:48,366 --> 00:31:52,453 ஒரு காரணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நான் முழு மனதுடன் நம்புகிறேன் 324 00:31:52,537 --> 00:31:56,416 ஹேரி செல்டனின் பாரம்பரியத்தை நாம் பாதுகாத்து அதை மேலும் உயர்த்துவோம். 325 00:31:57,250 --> 00:32:01,087 பேரரசு மற்றும் அதன் அனைத்து குடிமக்களையும் வரவிருக்கும் அழிவிலிருந்து 326 00:32:02,297 --> 00:32:06,050 பாதுகாக்க, நாம் நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போம். 327 00:32:06,968 --> 00:32:08,469 திட்டம் தொடர்கிறது. 328 00:32:10,430 --> 00:32:11,931 ஒளி ஒருபோதும் மங்காமல் இருக்கட்டும். 329 00:32:14,142 --> 00:32:16,436 நிறுத்து. நிறுத்து! 330 00:32:30,158 --> 00:32:31,326 தேடு… 331 00:32:32,285 --> 00:32:33,661 ரேய்ச் ஃபாஸ். 332 00:32:34,662 --> 00:32:35,788 எச்சரிக்கை. 333 00:32:35,872 --> 00:32:38,666 ஹேரி செல்டனின் வாழ்க்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. 334 00:32:41,544 --> 00:32:44,213 ரேய்ச், ஏன்? 335 00:32:46,382 --> 00:32:47,467 அது... 336 00:32:48,676 --> 00:32:49,677 திட்டமிடப்பட்டதா? 337 00:32:51,220 --> 00:32:54,349 டாக்டர் செல்டனின் இறப்பு முந்தைய இரவில் நீ அவருடன் வாக்குவாதம் செய்ததை அறிவோம். 338 00:32:54,432 --> 00:32:58,144 நீ அவருடைய தீர்க்கதரிசனத்தைக் கேள்வி கேட்டிருக்கிறாய், 339 00:32:59,228 --> 00:33:01,564 அவை நிலையற்றவை என்று சொல்லி. 340 00:33:02,607 --> 00:33:04,776 கடவுளே, ஏதாவது சொல்! 341 00:33:05,860 --> 00:33:07,403 அவர் உன்னை மகனைப் போல நேசித்தார். 342 00:33:08,154 --> 00:33:11,741 அவர் உன்னை வெப்பக் குழாய்களில் இருந்து காப்பாற்றினார். அவர் உன்னை... 343 00:33:13,743 --> 00:33:15,536 எங்கள் எல்லோரையும் போல காப்பாற்றியிருப்பார். 344 00:33:16,537 --> 00:33:18,706 எது உன்னை அப்படி செய்யவைத்திருக்கும்... 345 00:33:21,084 --> 00:33:22,752 கேல் டோர்னிக் அதை செய்யச் சொன்னாளா? 346 00:33:22,835 --> 00:33:25,505 அவளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதைச் செய்தது நான்தான். 347 00:33:25,588 --> 00:33:27,340 நீ அவளை பாதுகாக்க வேண்டியதில்லை. 348 00:33:27,423 --> 00:33:29,717 நான்தான். நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். 349 00:33:29,801 --> 00:33:32,387 ஏன்? பேசு! 350 00:33:33,054 --> 00:33:35,431 நீ என்ன செய்திருக்கிறாய் என்பதாவது உனக்குப் புரிகிறதா? 351 00:33:35,515 --> 00:33:36,891 உங்களை விட நன்றாக எனக்குப் புரிகிறது. 352 00:33:36,975 --> 00:33:41,437 அப்போது நீ உன் சொந்த விருப்பப்படியும் 353 00:33:41,521 --> 00:33:43,815 உன் சுயநினைவோடும் தான் ஹேரி செல்டனை 354 00:33:43,898 --> 00:33:46,484 கொன்றதாக ஒப்புக்கொள்கிறாயா? 355 00:33:47,402 --> 00:33:49,320 -இல்லை. -நடக்கப் போவது தெரிந்திருக்கும். 356 00:33:59,497 --> 00:34:00,748 தேடு… 357 00:34:01,624 --> 00:34:02,792 ரேய்ச் ஃபாஸின்... 358 00:34:04,002 --> 00:34:05,336 மரணதண்டனையை. 359 00:34:19,892 --> 00:34:21,477 இறுதி வார்த்தைகள் ஏதாவது? 360 00:34:22,687 --> 00:34:24,856 அது கடினமாக இருக்குமென்று எனக்குத் தெரியும். 361 00:34:26,941 --> 00:34:29,569 நான் என்ன செய்தேன் என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும். 362 00:34:31,070 --> 00:34:33,364 ஆனால் நீ திட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாது. 363 00:34:34,574 --> 00:34:35,575 எப்போதும். 364 00:34:36,451 --> 00:34:39,329 நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று எங்களுக்கு சொல்ல உனக்கு தைரியம் உள்ளதா? 365 00:34:44,083 --> 00:34:45,877 இன்னும் உன்னால் புதிரை தீர்க்க முடியும்... 366 00:34:49,297 --> 00:34:50,840 சில பகுதிகள் இல்லாமல் கூட. 367 00:34:54,092 --> 00:34:55,094 நான்... 368 00:34:59,349 --> 00:35:00,350 நான்... 369 00:35:52,110 --> 00:35:53,111 ச்சே. 370 00:36:03,329 --> 00:36:05,456 -நட. -எனக்கு உடம்பு சரியில்லை. 371 00:36:07,542 --> 00:36:08,710 கொஞ்சம் நேரம் கொடு. 372 00:36:08,793 --> 00:36:10,962 நாம் இங்கே நிற்கக்கூடாது. 373 00:36:17,760 --> 00:36:19,470 -அவள் என்ன செய்கிறாள்? -என்ன நடந்தது? 374 00:36:22,849 --> 00:36:25,184 உங்கள் வார்டன் பேச்சை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். 375 00:36:26,728 --> 00:36:28,021 அது என்ன? 376 00:36:49,500 --> 00:36:50,501 பாலி, லெய்லோ. 377 00:36:50,585 --> 00:36:52,879 குழந்தைகளே இப்போதே ஊருக்குத் திரும்புங்கள், கேட்டதா? 378 00:36:53,463 --> 00:36:54,589 நான் செல்வதைச் செய்யுங்கள்! 379 00:38:05,159 --> 00:38:07,203 எல்லாவற்றுக்குமே ஒரு சுழற்சி உள்ளது. 380 00:38:07,287 --> 00:38:09,205 அழிவுக்குப் பிறகு, மறுபிறப்பு. 381 00:38:10,164 --> 00:38:14,752 மறுபிறப்பு ஏற்படும் வரை அழிவிலிருந்து தப்பிக்க அறிவு நமக்கு பல வழிகளை காட்டும். 382 00:38:30,518 --> 00:38:34,606 கணினியே, கப்பலின் பாதை மாறும் செயல்பாடு நடந்ததா? 383 00:38:34,689 --> 00:38:37,692 -ஒரு சுற்றுப்பாதையில் நுழைய தொடங்குகிறோமா? -ஆம். 384 00:38:37,775 --> 00:38:39,110 எனவே நம் வேகம் குறைகிறது. 385 00:38:40,236 --> 00:38:42,530 அதாவது நாம் ஒரு இலக்கை நெருங்குகிறோம். 386 00:38:43,323 --> 00:38:45,074 நம் இலக்கை அடையாளம் காட்டு. 387 00:38:45,158 --> 00:38:46,951 அங்கீகாரம் தேவை. 388 00:38:55,877 --> 00:38:58,129 நட்சத்திர வரைபடத்தை பார்க்க எனக்கு அங்கீகாரம் உள்ளதா? 389 00:39:02,842 --> 00:39:05,219 நிலைமாற்ற குறிப்பு புள்ளிகளை காட்ட முடியுமா? 390 00:39:05,303 --> 00:39:07,805 நேரடி பார்வையில் உள்ள அனைத்து குவாசர்களின் வான கோள 391 00:39:07,889 --> 00:39:09,682 இருப்பிடங்களையும் எனக்குக் காட்ட முடியுமா? 392 00:39:11,517 --> 00:39:13,645 க்ளோவர்லீஃப் குவாசரை விளக்கமாக காட்டு. 393 00:39:13,728 --> 00:39:15,313 க்ளோவர்லீஃப் 394 00:39:16,397 --> 00:39:18,232 எளிய பார்க்கும்படியான வழிகாட்டி. 395 00:39:18,316 --> 00:39:24,739 சரி, ஸ்வென்-யென் 214, ஆஸ்டஸ் 11, ஹட்சன் 8,053 நேரடி பார்வையில் இருக்கிறதா? 396 00:39:24,822 --> 00:39:26,616 -ஆம். -அவற்றைக் காட்டு. 397 00:39:29,118 --> 00:39:32,497 இப்போது க்ளோவர்லீஃப் மற்றும் இந்த மூன்று நட்சத்திரங்களின் கோணப் பிரிப்பைக் காட்டு. 398 00:39:34,290 --> 00:39:38,878 சரி, 23.5 டிகிரி அரை கோணத்துடன் ஒரு கூம்பைக் காட்டு. 399 00:39:38,962 --> 00:39:40,755 அதோடு, மைய அச்சைக் காட்டு. 400 00:39:40,838 --> 00:39:45,218 கணினியே, மேல் நுனி சாத்தியமான நிலைகளைக் கண்டுபிடிக்க முடியுமா? 401 00:39:45,760 --> 00:39:48,263 இன்னொரு கூம்பு? முப்பது டிகிரி அரை கோணம். 402 00:39:49,681 --> 00:39:53,226 மூன்றாவது கூம்பு காட்டு, 62 டிகிரி அரை கோணத்தில். 403 00:40:00,441 --> 00:40:01,442 நாம் இங்கே இருக்கிறோம். 404 00:40:02,777 --> 00:40:06,322 இது நம்மை ஆர்கோ செக்டாரில், யூ லிங் ஸ்ட்ரீமிற்கு அருகில் காட்டுகிறது. 405 00:40:06,906 --> 00:40:08,658 இப்போது, நாம் எந்த திசையில் செல்கிறோம்? 406 00:40:08,741 --> 00:40:10,159 அங்கீகாரம் தேவை. 407 00:40:11,244 --> 00:40:13,997 எனக்கு நட்சத்திர நிறமாலை கிடைக்குமா? 408 00:40:14,080 --> 00:40:15,999 -ஆம். -ஆம். சரி. 409 00:40:16,082 --> 00:40:20,003 ஸ்வென்-யென் 214 ஆஸ்டஸ் 11, ஹட்சன் 8,053 க்கான தற்போதைய மற்றும் 410 00:40:20,086 --> 00:40:22,630 சிறிய நிறமாலைகளைக் காட்டு. 411 00:40:23,548 --> 00:40:25,174 சார்பியல் டாப்ளர் மாற்றம். 412 00:40:25,883 --> 00:40:28,177 முட்டாள் கப்பலே, நான் உன் அறிவை மிஞ்சப் போகிறேன். 413 00:40:37,437 --> 00:40:38,688 சரி. 414 00:40:39,564 --> 00:40:44,152 ஒரு திசையனை காட்டு, விண்மீன் சட்டகத்தின் திசையமைவில், 415 00:40:44,235 --> 00:40:49,574 289 டிகிரி அளவில், மைனஸ் 5.3 டிகிரி உயரத்தில். 416 00:40:50,742 --> 00:40:51,743 அதோ! 417 00:40:52,619 --> 00:40:53,995 இதுதான் நமது தற்போதைய வேகமா? 418 00:40:54,078 --> 00:40:56,080 அங்கீகாரம் தேவை. 419 00:40:56,164 --> 00:40:58,791 திசையன் 'ரேவனின்' நீள் அச்சுக்கு இணையாக உள்ளதா? 420 00:40:58,875 --> 00:41:00,168 இல்லை. 421 00:41:00,251 --> 00:41:03,713 திசையன் 'ரேவனின்' நீள் அச்சுக்கு எதிராக இருக்கிறதா? 422 00:41:03,796 --> 00:41:04,881 ஆம். 423 00:41:06,007 --> 00:41:10,887 சரி. எனவே அந்த கடைசி திசை மாற்றம் கப்பலை புரட்டியிருக்கிறது. 424 00:41:12,430 --> 00:41:13,640 நம் வேகம் குறைகிறது. 425 00:41:17,560 --> 00:41:19,228 நம் இறுதி இலக்கு... 426 00:41:22,023 --> 00:41:24,525 இங்கே உள்ளது. 427 00:41:30,031 --> 00:41:34,786 கணினியே, அது உண்மையான ஜன்னலா அல்லது மெய்நிகர் காட்சி திரையா? 428 00:41:34,869 --> 00:41:36,120 காட்சி திரை. 429 00:41:41,125 --> 00:41:43,044 இந்த இப்பகுதியில் உள்ள நட்சத்திரங்கள் அல்லது கிரகங்கள் 430 00:41:43,127 --> 00:41:45,255 வெளிப்படுத்தும் அனைத்து அலைநீளங்களையும் காட்டுகிறாயா? 431 00:41:45,338 --> 00:41:46,464 இல்லை. 432 00:41:47,048 --> 00:41:49,634 -நான் பார்ப்பதை நீ தணிக்கை செய்கிறாயா? -ஆம். 433 00:41:49,717 --> 00:41:51,886 எனவே எனது இலக்கை நான் பார்ப்பதை நீ விரும்பவில்லை. 434 00:41:52,679 --> 00:41:54,013 ஏன்? 435 00:41:54,097 --> 00:41:58,142 முதன்மை இலக்கை தெரிந்துகொள்ள ரேய்ச் ஃபாஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 436 00:41:58,226 --> 00:41:59,978 எந்த அர்த்தமும் இல்லை. 437 00:42:01,145 --> 00:42:03,022 நான் அதை என் கண்களால் பார்க்க வேண்டும். 438 00:42:18,663 --> 00:42:23,418 86,981,959. 439 00:43:00,246 --> 00:43:01,581 பின்வாங்குங்கள்! 440 00:43:01,664 --> 00:43:04,292 பின்வாங்குங்கள்! செல்லுங்கள்! 441 00:43:13,468 --> 00:43:15,678 -அம்மா! -இதோ! இதைப் பிடி! 442 00:43:15,762 --> 00:43:17,305 அம்மா, போகலாம்! இங்கிருந்து போவோம்! 443 00:43:18,473 --> 00:43:19,474 சீக்கிரம்! 444 00:43:24,103 --> 00:43:25,104 என்ன நடந்தது? 445 00:43:25,188 --> 00:43:27,815 பாதுகாப்பை சீர்குலைக்கும் கருவியை கட்டிடத்திற்குள் கொண்டுவந்திருக்கிறாள். 446 00:43:27,899 --> 00:43:30,360 -எங்கே அவள்? -மருத்துவ கிடங்கில். 447 00:43:30,443 --> 00:43:31,653 உன் அம்மாவை பிடித்துவைத்திருக்கிறாள். 448 00:43:39,827 --> 00:43:41,829 அவர்கள் ஏகாதிபத்திய வேலியை அகற்றிவிட்டார்கள், சார். 449 00:43:41,913 --> 00:43:42,997 புவி ஒத்திசைவை ரத்து செய். 450 00:43:43,081 --> 00:43:44,999 தரையிறங்கத் தொடங்கு. அதிகபட்ச வேகத்தில். 451 00:44:09,065 --> 00:44:10,316 தளபதி வருகிறார்! 452 00:44:11,442 --> 00:44:14,320 ஐந்து நிமிடங்களில் கிரகத்தில் தரையிறங்குகிறோம். 453 00:44:14,404 --> 00:44:15,655 இதை நினைவில் கொள்ளுங்கள். 454 00:44:15,738 --> 00:44:17,824 அனக்ரியான்கள்தான் ஸ்டார் பிரிட்ஜைத் தகர்த்தார்கள். 455 00:44:17,907 --> 00:44:21,411 இந்த காட்டுமிராண்டிகளின் கைகளால் 100 மில்லியன் மக்கள் இறந்தனர். 456 00:44:21,494 --> 00:44:24,038 உங்களில் சிலருக்கு இது தனிப்பட்ட விஷயம் என்று எனக்குத் தெரியும், 457 00:44:24,122 --> 00:44:26,291 அப்படியென்றால் இது நம் அனைவருக்கும் தனிப்பட்ட விஷயம்தான். 458 00:44:33,506 --> 00:44:35,883 -இங்கே இருக்கிறேன், வார்டன். -நீங்கள் நலமா? 459 00:44:35,967 --> 00:44:37,802 'டெலிவரன்ஸ்' குழுவினரின் பெயர் பட்டியலை கேட்கிறாள். 460 00:44:37,885 --> 00:44:39,220 நீ உண்மையில் அதற்காகத்தான் வந்தாயா? 461 00:44:39,304 --> 00:44:41,681 ஒரு ஏகாதிபத்திய கப்பலை இயக்க எங்களுக்கு உதவி தேவை. 462 00:44:41,764 --> 00:44:44,934 உங்கள் மக்களின் கழுத்தில் கத்தி வைக்காமல் நாங்கள் அதைப் பெறப் போவதில்லை. 463 00:44:45,018 --> 00:44:46,728 எனவே அந்த துப்பாக்கியை கீழே போடு. 464 00:44:46,811 --> 00:44:49,105 இல்லையென்றால்? அவரை சுடுவாயா? உடனே நீ சொல்வதைக் கேட்பேன் என நினைக்கிறாயா? 465 00:44:49,188 --> 00:44:51,858 தாய்மார்கள் தாய்மார்கள்தான். நீ சுடமாட்டாய். 466 00:44:51,941 --> 00:44:53,568 ஏனென்றால் எங்களுக்கிடையே உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறதா? 467 00:44:53,651 --> 00:44:56,446 எல்லோரும் அப்படி சொல்லலாம். ஆனால் நான் சொல்கிறேன், நான் அப்படி உணர்ந்ததில்லை. 468 00:44:56,529 --> 00:44:59,407 இவரை காப்பாற்ற நான் ஃபவுண்டேஷனை பலிகொடுக்க வேண்டுமா? 469 00:44:59,490 --> 00:45:00,533 அழுவதென்றால் அழுதுகொள்ளுங்கள், அம்மா. 470 00:45:00,617 --> 00:45:03,161 என் நான்காம் வயதில் வால்ட்டிடம் இருந்தபோது நீங்கள் தரையில் ஊர்ந்து வர 471 00:45:03,244 --> 00:45:05,455 -முயற்சித்ததை நினைத்துப்பாருங்கள். -நான் பயந்தேன். 472 00:45:05,538 --> 00:45:08,166 செய், ஃபாரா. உனக்கு கிடைத்த வாய்ப்பை சுடு, மீண்டும் தொடங்குவோம். 473 00:45:08,249 --> 00:45:10,543 வாயை மூடு, அல்லது நாம் இருவரும் அனாதைகளாவோம்! 474 00:45:10,627 --> 00:45:11,628 நல்லது! 475 00:45:17,300 --> 00:45:19,928 -அம்மா, மன்னித்துவிடுங்கள். -என்னைப் படுக்க சொன்னாய், இல்லையா? 476 00:45:20,011 --> 00:45:21,638 -படுத்து ஊர்ந்து வரவா? -ஆம், அம்மா. 477 00:45:21,721 --> 00:45:23,806 -அதைத்தான் சொன்னாயா? -சரியாக செய்தீர்கள், அம்மா. 478 00:47:06,492 --> 00:47:08,912 மெதுவாக. உன்னால் இதைச் செய்ய முடியும். 479 00:47:09,996 --> 00:47:11,873 மூச்சு விடு. மூச்சு விடு. 480 00:47:23,509 --> 00:47:24,719 சரி. 481 00:47:25,303 --> 00:47:27,805 இலக்கு இங்கே இருக்க... வேண்டும். 482 00:47:29,057 --> 00:47:30,224 ஒன்றுமில்லை. 483 00:47:47,116 --> 00:47:48,576 நீ எதை மறைக்கிறாய்? 484 00:47:52,163 --> 00:47:53,706 அங்கே ஏதோ இருக்கிறது. 485 00:47:54,707 --> 00:47:56,542 ஆனால் வெறும் கண்ணால் பார்க்க முடியாதது. 486 00:47:58,503 --> 00:48:00,964 நான் பார்க்க முடியாதபடி இங்கே என்ன இருக்க முடியும்? 487 00:48:02,966 --> 00:48:05,843 இன்ஃப்ராரெட் கதிர்களை வடிகட்டு. சரி. 488 00:48:06,344 --> 00:48:07,345 இன்ஃப்ராரெட் ஸ்கேன் 489 00:48:07,428 --> 00:48:10,848 சிறிய வெள்ளை நட்சத்திரம், பிரகாசமான பெரிய நட்சத்திரம்... 490 00:48:13,142 --> 00:48:14,269 இதோ இருக்கிறது. 491 00:48:14,852 --> 00:48:17,772 ஒரு இருண்ட நட்சத்திரம். அதனால் தான் உன்னைப் பார்க்க முடியவில்லை. 492 00:48:21,234 --> 00:48:22,318 இருண்ட நட்சத்திரம். 493 00:48:25,780 --> 00:48:28,449 மேற்பரப்பில் மிதக்கிறோம். உயரம் 1,000 மீட்டர். 494 00:48:28,533 --> 00:48:29,701 வெளிப்புற தகவல்தொடர்பை திற. 495 00:48:31,369 --> 00:48:32,412 தாக்குதலை நிறுத்துங்கள். 496 00:48:33,580 --> 00:48:34,831 தாக்குதலை நிறுத்துங்கள். 497 00:48:34,914 --> 00:48:36,749 ஹேய், இங்கிருந்து போ! இங்கிருந்து போ! 498 00:48:46,342 --> 00:48:47,468 அதை என்னிடம் கொடு. 499 00:48:54,726 --> 00:48:57,020 பார், வார்டன். அங்கு. 500 00:48:57,103 --> 00:48:59,981 எல்லாவற்றையும் இழப்பது என்னவென்று எனக்குப் புரிகிறது. 501 00:49:00,064 --> 00:49:03,192 உங்கள் உழைப்பு முழுவதும் எரிவதை பார்ப்பது. நான் கண்டிப்பாக செய்வேன். 502 00:49:03,276 --> 00:49:05,778 பேரரசு எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. 503 00:49:05,862 --> 00:49:08,740 இப்போது நாங்கள் அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்கிறோம். 504 00:49:08,823 --> 00:49:12,035 நிஜமாகவே உங்கள் மக்களுக்கும் ஸ்டார் பிரிட்ஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால், 505 00:49:12,118 --> 00:49:14,495 அனக்ரியான் குற்றமற்றதாக இருந்தால், 506 00:49:14,579 --> 00:49:16,539 டெர்மினஸுக்கு நீ எப்படி அதையே செய்ய முடியும்? 507 00:49:16,623 --> 00:49:19,792 போதும். டெர்மினஸ் அப்பாவி அல்ல. 508 00:49:20,460 --> 00:49:24,047 செல்டனின் கணிப்புகள் பேரரசுக்கு கோபமூட்டியது. 509 00:49:24,714 --> 00:49:29,302 உன் தீர்க்கதரிசி சொன்ன விஷயத்தால், என் உலகமே எரிந்தது. 510 00:49:30,011 --> 00:49:31,012 பார். 511 00:50:09,926 --> 00:50:11,261 ஹ்யூகோ! 512 00:50:15,098 --> 00:50:16,557 வானத்தைப் பார்க்க முடிந்தால், 513 00:50:16,641 --> 00:50:19,727 நீங்கள் பேரரசுக்கு உட்பட்ட இறையாண்மை பிரதேசத்தில் அத்துமீறி நுழைகிறீர்கள். 514 00:50:20,395 --> 00:50:23,064 பதிமூன்றாம் பேரரசர் க்ளியோனின் அதிகாரத்திடம் 515 00:50:23,147 --> 00:50:26,609 உடனடியாக சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். 516 00:50:27,735 --> 00:50:29,153 அயன்வூட் தலைவரே, 517 00:50:30,071 --> 00:50:31,155 நீ தொடர அனுமதிக்கிறேன். 518 00:50:34,867 --> 00:50:35,868 சுடு. 519 00:50:40,707 --> 00:50:42,875 -ஆயுத தாக்குதல் எச்சரிக்கை! -எதிர் தாக்குதல் செய்! 520 00:50:42,959 --> 00:50:44,502 மிக நெருக்கத்தில் இருக்கிறோம். 521 00:51:18,411 --> 00:51:21,623 இது குறைவாக காயப்படுத்துகிறதா? உன் சகோதரனை விட, உன் குடும்பத்தை விட? 522 00:51:21,706 --> 00:51:24,626 என்ன தெரியுமா, நான் வெறுமையை உணர்ந்திருக்கலாம். 523 00:51:25,168 --> 00:51:27,378 ஆனால் இது குறைவாகவே காயப்படுத்துகிறது. 524 00:51:27,462 --> 00:51:29,297 நாம் அவளைக் கொல்ல வேண்டும். 525 00:51:30,131 --> 00:51:31,591 நாம் திட்டத்தின் படி நடப்போம். 526 00:51:32,800 --> 00:51:34,218 அவள் அமைதியாக இருப்பாள். 527 00:51:50,485 --> 00:51:53,154 இருண்ட நட்சத்திரத்தை சுற்றிவரும் வாழக்கூடிய கிரகம் ஒன்றுதான் உள்ளது. 528 00:51:53,237 --> 00:51:55,615 நான் அங்கு செல்ல வழியே இல்லை. 529 00:51:59,744 --> 00:52:02,372 கணினியே, நம் இலக்கு ஹெலிகான் என்பது எனக்குத் தெரியும். 530 00:52:02,455 --> 00:52:03,539 திசையை மாற்று. 531 00:52:04,999 --> 00:52:06,626 ஹெலிகான் ஹேரியின் சொந்த உலகம். 532 00:52:07,335 --> 00:52:10,546 நான் அவரைக் கொன்றதாக அவர்கள் நினைக்கிறார்கள். திசையை மாற்று. 533 00:52:12,173 --> 00:52:13,716 கணினியே, கேட்கிறதா? 534 00:52:45,290 --> 00:52:46,499 ஹேரி? 535 00:52:49,294 --> 00:52:50,295 ஹேரி? 536 00:53:00,096 --> 00:53:02,098 வசனத் தமிழாக்கம் அருண்குமார்