1 00:00:17,360 --> 00:00:19,320 நான் சில அரக்கர்களை கோருகிறேன். 2 00:00:20,480 --> 00:00:23,560 -அப்படியா? -பீல்செபப்பின் முழு ஒப்புதல் எனக்கிருக்கு. 3 00:00:23,640 --> 00:00:26,480 லண்டன் மீது நான் அரக்க படையெடுப்பு செய்ய முடியும். 4 00:00:26,960 --> 00:00:27,800 அரக்கர்களா? 5 00:00:27,880 --> 00:00:29,080 மிக மோசமானது வேணும். 6 00:00:29,160 --> 00:00:31,840 மிக மிக மோசமானதாய் வேணும். கொலையாளிகள் வேணும். 7 00:00:33,360 --> 00:00:35,840 சரி. எத்தனை? 8 00:00:37,120 --> 00:00:39,400 பத்தாயிரம் அரக்கர்கள். 9 00:00:43,160 --> 00:00:45,120 மன்னிக்கணும், 10,000னா சொன்னீங்க. 10 00:00:57,760 --> 00:01:00,000 விக்பர் தெரு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் (மாதாந்திர) கூட்டம். 11 00:01:03,880 --> 00:01:07,280 -நீங்க உண்மைல இதை செய்யப்போறீங்களா? -நிச்சயமா. 12 00:01:07,680 --> 00:01:09,440 நான் பார்க்கலாமா? 13 00:01:19,880 --> 00:01:22,480 அது மிகவும் பொருத்தம். 14 00:01:22,560 --> 00:01:24,880 இன்றிரவு அதை நீங்க கொண்டு வரணும். 15 00:01:26,200 --> 00:01:27,440 அது மிக முக்கியம். 16 00:01:27,520 --> 00:01:31,720 இன்று மாலை விக்பர் தெரு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் சங்க மாதாந்திர 17 00:01:31,800 --> 00:01:33,680 சந்திப்புக்கு இசைக்கலைஞர்கள் தேவை. 18 00:01:33,759 --> 00:01:36,560 உங்க ஹார்ப்சிகார்ட் உடன் உங்களை அங்கே சந்திப்போம். 19 00:01:37,560 --> 00:01:38,440 வேண்டாம், நன்றி. 20 00:01:39,400 --> 00:01:40,800 சேண்ட்விச்கள் உண்டு. 21 00:01:40,880 --> 00:01:42,800 பத்து வருஷத்துக்கு முன் போனேன். 22 00:01:42,880 --> 00:01:45,440 கிறிஸ்தமஸ் விளக்குகள் பற்றி குறை சொல்லிகிட்டு 23 00:01:45,520 --> 00:01:48,280 ஜன்னலில் உள்ள போர்டுகளில் தப்பா ஒற்றை மேற்கோள்குறி 24 00:01:48,360 --> 00:01:50,680 போட்டது பற்றி தீர்மானம் போட்டாங்க. 25 00:01:50,759 --> 00:01:53,320 இன்னிக்கு இரவு நான் அங்கே வரவே மாட்டேன். 26 00:01:53,400 --> 00:01:54,600 அப்படியா. 27 00:01:55,240 --> 00:01:56,240 அப்படினா... 28 00:01:57,280 --> 00:01:59,920 எனக்கு வேறு வழி தெரியல. 29 00:02:00,680 --> 00:02:03,240 என் புத்தக கடையின் பின்புறத்தில ஒரு 30 00:02:04,120 --> 00:02:07,760 1965 டாக்டர் ஹூ ஆனுவல் இருக்கு. 31 00:02:09,280 --> 00:02:13,040 1965 டாக்டர் ஹூ ஆனுவல்னு ஒண்ணும் இல்ல. 32 00:02:13,160 --> 00:02:16,440 முதலாவது 1966 கவர் மேல் தேதியிட்டு, பிரசுரிக்கப்பட்டது... 33 00:02:16,560 --> 00:02:18,160 செப்டம்பர் 1965ல். 34 00:02:18,280 --> 00:02:23,800 பிபிசியில் பிரச்சினை இருந்ததினால் 1965 ஆனுவல் அச்சிடப்படவில்லை. 35 00:02:23,880 --> 00:02:28,360 என்னிடம் இருப்பதுதான் ஒரே அறியப்பட்ட ஒப்புப் பிரதி. 36 00:02:30,040 --> 00:02:32,120 நான் அதை பார்க்க விடுவீங்களா? 37 00:02:32,160 --> 00:02:36,120 ஒரு நாலு இசைக் கலைஞர் குழுவோட மீட்டிங் வந்தீங்கன்னா, 38 00:02:36,160 --> 00:02:37,400 நீங்க எடுத்துக்கலாம். 39 00:02:44,280 --> 00:02:45,680 அர்னால்ட்ஸ் 40 00:02:45,760 --> 00:02:47,920 -என்ன செய்தாய்? -அதை பத்தி பேச வேண்டாம். 41 00:02:48,000 --> 00:02:49,320 ஒரு புத்தகம் கொடுத்துட்ட. 42 00:02:49,400 --> 00:02:50,640 கொடுத்தே ஆகணும். 43 00:02:52,800 --> 00:02:55,440 மேகியும் நீனாவும் என்னை நம்பியிருக்காங்க. 44 00:02:55,520 --> 00:02:57,440 அது இன்னும் அவங்களுக்கு தெரியாது. 45 00:02:58,079 --> 00:03:01,000 ஒரு ஆயிரம் ரத்ததாகம் கொண்ட அரக்கர்கள். 46 00:03:05,640 --> 00:03:07,240 நாம் ஹெல்லில் இருக்கோம். 47 00:03:07,760 --> 00:03:09,600 பீல்செபப்பின் அதிகாரம் இருக்கு. 48 00:03:09,680 --> 00:03:12,360 உனக்கு சாத்தானிடமிருந்து கூட அதிகாரம் இருக்கலாம். 49 00:03:12,440 --> 00:03:14,280 என்னிடம் ஆள் இல்ல, அனுப்ப முடியாது. 50 00:03:14,360 --> 00:03:17,320 கொடிய அஞ்ச வைக்கும் உணர்வுள்ளவர்களைத் தரலாம். 51 00:03:17,400 --> 00:03:19,000 எனக்கு எதுக்கு அஞ்ச... 52 00:03:20,160 --> 00:03:23,560 ஐநூறு. ஐநூறு காலாட்படையாவது இருக்கணுமே. 53 00:03:23,640 --> 00:03:24,760 எதுக்காக? 54 00:03:25,800 --> 00:03:27,320 ஒரு புத்தகக்கடையை தாக்க. 55 00:03:27,760 --> 00:03:31,200 யாரிடமும் சொல்லாதே, ஆனா நாம் ஏஞ்சல்களோடு போரிட வேண்டி வரும். 56 00:03:33,680 --> 00:03:34,680 100 வேணா தரேன். 57 00:03:35,040 --> 00:03:36,840 -என்ன-- -70ஆ குறைஞ்சு போச்சு. 58 00:03:36,920 --> 00:03:38,200 எடுத்துக்கறேன். 59 00:03:55,680 --> 00:03:58,280 ஹலோ, நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? 60 00:03:58,360 --> 00:04:01,560 இன்றிரவு நடக்கும் மாதாந்திர கடைக்காரர்கள் மீட்டிங் பற்றி. 61 00:04:01,640 --> 00:04:06,000 இன்றிரவு நான் நிச்சயமா அங்கே இருக்க முடியாது. 62 00:04:06,080 --> 00:04:08,720 அன்று என் திருமண நாள், 63 00:04:08,800 --> 00:04:11,520 என் அன்புத் துணைவியை டின்னர் கூட்டிட்டு போறேன். 64 00:04:15,520 --> 00:04:18,320 என்னிடம் எஸ்.டபிள்யு. எர்ட்னேஸின் 65 00:04:18,360 --> 00:04:22,520 எக்ஸ்பெர்ட் அட் த கார்ட் டேபிள் முதல் பிரதி இருக்கு. 66 00:04:28,360 --> 00:04:30,080 முதல் பிரதி இருக்கா? 67 00:04:30,160 --> 00:04:32,520 அது எர்ட்னேஸின் சொந்த பிரதி. 68 00:04:32,600 --> 00:04:35,240 தன் உண்மை பெயரில் கையொப்பம் இட்டிருக்கார். 69 00:04:36,000 --> 00:04:37,480 குறிப்பும் எழுதியிருக்கார். 70 00:04:39,080 --> 00:04:42,200 -எவ்வளவு? -அது விலைக்கு இல்லை. 71 00:04:43,640 --> 00:04:44,920 இருந்தாலும், 72 00:04:45,720 --> 00:04:48,520 இன்றிரவு நீங்க மீட்டிங் வந்தீங்கன்னா, 73 00:04:49,200 --> 00:04:53,080 உங்களுக்கு அதை கடன் கொடுக்க முடியும். 74 00:04:54,320 --> 00:04:56,920 என் மனைவியிடம் வேற வேலை இருக்குன்னு சொல்லிடறேன். 75 00:04:57,040 --> 00:04:58,200 அவங்களும் வரட்டும். 76 00:04:58,240 --> 00:05:01,640 அது நல்ல இரவா இருக்கும்னு உறுதி சொல்வேன். 77 00:05:10,800 --> 00:05:12,240 ஹலோ, மிஸ் செங். 78 00:05:12,920 --> 00:05:14,800 இன்றிரவு ஒரு மீட்டிங் இருக்கு... 79 00:05:14,920 --> 00:05:16,040 த ஸ்ட்ரீட் ட்ரேடர்ஸ்? 80 00:05:16,680 --> 00:05:18,240 நானும் திரு. செங்கும் வரோம். எத்தனை மணிக்கு? 81 00:05:18,360 --> 00:05:19,760 6:30. 82 00:05:20,360 --> 00:05:21,880 அங்கே பார்க்கலாம்! நல்ல நாளாகட்டும்! 83 00:05:32,680 --> 00:05:34,080 வணக்கம். 84 00:05:37,280 --> 00:05:41,159 நான் சொல்வதை கேளுங்க, லீஜன்ஸ் ஆஃப் ஹெல் 85 00:05:41,800 --> 00:05:43,640 நம் பணி... 86 00:05:43,720 --> 00:05:44,920 மன்னிக்கவும்? 87 00:05:46,680 --> 00:05:47,520 என்ன? 88 00:05:51,159 --> 00:05:54,480 ஒரு லீஜன் என்பது, சுமார், 6,000 அரக்கர்கள் கொண்டது. 89 00:05:54,560 --> 00:05:55,960 ஆமா, எனக்கு தெரியும். 90 00:06:01,480 --> 00:06:05,440 இன்றிரவு நாம் ஒரு தாக்குதல் நடத்தப் போறோம். 91 00:06:06,600 --> 00:06:12,560 துணிவில் முன்னோடியில்லாதது, தனித்துவமான... 92 00:06:14,240 --> 00:06:15,520 என்ன, சொல்லு? 93 00:06:15,600 --> 00:06:19,760 பார்க்கப்போனா நாம் ஒரு லீஜனின் 1/75 அளவுதான் இருக்கோம். 94 00:06:20,320 --> 00:06:23,960 எனக்குத் தெரியும். ஆனால் நாம் எண்ணிக்கையில் குறைந்தாலும், 95 00:06:24,040 --> 00:06:29,320 கொடூரத்தில் அதிகம் மேலும்... 96 00:06:31,360 --> 00:06:33,040 -பயமுறுத்துவதில்? -இல்லை. 97 00:06:34,880 --> 00:06:36,080 எனக்கு மறந்து போச்சு. 98 00:06:38,560 --> 00:06:44,360 கொடூரம் மற்றும் பயங்கரம். 99 00:06:44,440 --> 00:06:48,520 ஏன்னா நாம அரக்கர்கள் அவங்க சாதாரணமான மனிதர்கள். 100 00:06:48,600 --> 00:06:50,920 அப்ப, நாம ஏஞ்சல்களுக்கு எதிரா போகலையா? 101 00:06:52,040 --> 00:06:54,040 ஏஞ்சல்களுக்கு எதிரா போறோம்னு சொன்னார். 102 00:06:54,120 --> 00:06:55,240 அப்படி யார் சொன்னா? 103 00:06:55,320 --> 00:06:57,480 ஃபர்பர். அது உண்மையா? 104 00:06:57,560 --> 00:06:59,600 நாம் பூமிக்கு போறோம், 105 00:07:00,320 --> 00:07:01,640 லண்டனுக்கு, 106 00:07:02,400 --> 00:07:04,840 ஒரு புத்தகக் கடையை தாக்க. 107 00:07:15,080 --> 00:07:16,880 திரு ஃபெல், நான் ஆங்கிலம் பேசுவேன். 108 00:07:16,960 --> 00:07:19,160 இங்கே 15 வருஷமா இருக்கேன். 109 00:07:23,280 --> 00:07:24,320 சரி... 110 00:07:40,480 --> 00:07:41,480 ரெண்டு நொடி மட்டும். 111 00:07:44,640 --> 00:07:46,840 தெரு கடைக்காரர் மீட்டிங்னா வரேன், 112 00:07:46,920 --> 00:07:50,960 ஆனா 7:00 மணி வரைதான் இருப்பேன், அப்புறம் பிசி ஆயிடுவோம். 113 00:07:56,680 --> 00:07:58,920 சரி, 6:30. அங்கே சந்திப்போம். 114 00:08:04,680 --> 00:08:08,080 ஏஞ்சல்கள் இல்லேன்னு உறுதியளிக்க முடியும் தானே? 115 00:08:08,160 --> 00:08:11,480 ஏன்னா, சில ஏஞ்சல்கள் பயங்கரமானவங்க. 116 00:08:11,880 --> 00:08:13,800 நம்மை பிரிச்சு மேஞ்சிடுவாங்க. 117 00:08:13,880 --> 00:08:16,920 உங்களுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கக் கூடியது, 118 00:08:17,000 --> 00:08:18,640 அருமை சன்ஷைனே, 119 00:08:18,720 --> 00:08:22,040 நீ என்னை இன்னொரு முறை குறுக்கிட்டேன்னா, 120 00:08:22,920 --> 00:08:25,000 காலத்துக்கும் வருத்தப்படுவே. 121 00:08:26,520 --> 00:08:27,520 புரியுதா? 122 00:08:32,000 --> 00:08:34,440 உலகத்தின் எல்லா மொழியும் பேசறீங்க. 123 00:08:34,520 --> 00:08:35,679 -இருவரும்தான். -ஆம். 124 00:08:35,760 --> 00:08:37,360 ஃபிரெஞ்சுக்கு என்ன ஆச்சு? 125 00:08:37,440 --> 00:08:40,039 கஷ்டமான வழியில் கத்துகிட்டேன். 126 00:08:40,120 --> 00:08:43,520 1760ல் மெஸ்ஸியோ ரோசிக்னோலின் இரவு வகுப்புக்கு போனேன். 127 00:08:49,080 --> 00:08:53,160 உனக்கு அத்தை இல்லை. அவளுக்கு தோட்டக்காரன் இல்ல. அவனிடம் பேனா இல்ல. 128 00:08:53,240 --> 00:08:54,360 சொன்னது புரிஞ்சுது. 129 00:08:54,880 --> 00:08:57,760 ஏன்னா 250 வருஷமா, உன் கற்பனை அத்தை கொண்டையைப் பத்தி 130 00:08:57,840 --> 00:09:00,480 பினாத்திகிட்டே இருக்க. 131 00:09:00,520 --> 00:09:01,480 சபாஷ். 132 00:09:01,520 --> 00:09:03,400 -என்ன? -காட்சி எனக்கு பிடிச்சிருக்கு. 133 00:09:05,480 --> 00:09:08,600 இன்றிரவு தெரு கூட்டமைப்பு மீட்டிங், என் கடையில் 6:30க்கு, 134 00:09:08,640 --> 00:09:11,960 சாதாரண அழைப்பு, எந்த உள்குத்தும் இல்லாம. 135 00:09:12,040 --> 00:09:16,160 கிறிஸ்துமஸ் விளக்குகள் பத்தி பேசுவாங்களா? எனக்கு சொல்றதுக்கு இருக்கு. 136 00:09:17,040 --> 00:09:18,720 -ஆமா. -நான் வரேன். 137 00:09:24,000 --> 00:09:25,760 அவர் ஒரு மீட்டிங்கும் நடத்தினதில்ல. 138 00:09:25,880 --> 00:09:27,880 -இப்ப என்ன? -கணிக்க முடியாதவர். 139 00:09:28,000 --> 00:09:29,960 தன் சமூக கடமைகள் ஞாபகம் வந்துடுச்சு. 140 00:09:31,720 --> 00:09:33,240 இருவரும் ரொம்ப நாள் பழக்கமா? 141 00:09:33,880 --> 00:09:35,520 -யார்? -நீங்க, உங்க பார்ட்னர். 142 00:09:35,600 --> 00:09:37,880 இல்ல, அவர் என்... அந்த மாதிரி இல்ல. 143 00:09:38,000 --> 00:09:40,760 இங்கேருந்து பார்த்தா அப்படித்தான் தெரியுது. 144 00:09:40,840 --> 00:09:43,000 -சமீபத்தில பழக்கமானீங்களா? -இல்ல-- 145 00:09:43,080 --> 00:09:46,400 உங்களுக்கு கணவன் உண்டா? காதலன்? புத்தக்கடைக்காரர் சின்ன வீடா? 146 00:09:46,480 --> 00:09:50,880 அவர் யாருக்கும் சின்ன வீடா இருக்க முடியாத சுத்தமான ஆள். 147 00:09:50,960 --> 00:09:54,440 -அவர் ஒரு ஏஞ்சல். -நீங்க சொன்னா சரி. 148 00:09:55,040 --> 00:09:57,320 ஆனா, மற்றவரின் காதல் வாழ்க்கைகள் 149 00:09:57,400 --> 00:10:00,000 நம்முடையதை விட இன்னும் நேரடியா இருக்கு. 150 00:10:13,000 --> 00:10:15,400 இன்றிரவு நாம் கிளம்புகிறோம். 151 00:10:17,080 --> 00:10:23,080 யாரால் ஒருங்கிணைய முடியாதோ அவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்படும். 152 00:10:23,640 --> 00:10:26,160 நாம் அந்த பெரிய வண்டியை பயன்படுத்துவோம்... 153 00:10:30,640 --> 00:10:32,520 என்ன? என்ன விஷயம்? 154 00:10:34,400 --> 00:10:36,120 அந்த பெரிய வண்டி பழுதா இருக்கு. 155 00:10:36,200 --> 00:10:39,000 நாம் சின்ன வண்டியை பயன்படுத்தலாம், ஒவ்வொருத்தரா. 156 00:10:39,440 --> 00:10:40,600 இல்ல படிக்கட்டு வழியா. 157 00:10:56,520 --> 00:10:58,080 நாம் படிக்கட்டு வழியா போவோம். 158 00:12:14,440 --> 00:12:16,520 அத்தியாயம் 5: தி பால் 159 00:12:26,600 --> 00:12:28,920 குட் ஓமன்ஸ் 160 00:12:41,480 --> 00:12:42,800 ஒரு க்ளாஸ் வேணுமா? 161 00:12:43,120 --> 00:12:44,400 நான் வேலையில் இருக்கேன். 162 00:12:44,480 --> 00:12:47,040 நான் மீட்டிங்குக்கு தயார் செய்யணும். 163 00:12:47,120 --> 00:12:48,840 உள்ளே போய் காத்திருங்களேன்? 164 00:12:49,560 --> 00:12:52,120 -உள்ளே காத்திருப்பது பிடிக்குமே. -அப்படி இல்ல. 165 00:12:52,760 --> 00:12:56,360 உங்க புத்தக கடையில் ஒரு மறதி கொண்ட ஆர்கேஞ்சல் இருக்கார். 166 00:12:56,440 --> 00:12:58,400 நேற்றிரவு, எழுந்திடுவாரோன்னு பயந்தேன். 167 00:12:58,480 --> 00:13:01,560 தான் யார்னு அவருக்கு ஞாபகம் வந்தா? அவர் ஏமாத்தியிருந்தா? 168 00:13:01,640 --> 00:13:05,040 என்னைத் தாக்கலாம். கேப்ரியல் தாக்கினா, நீங்க... 169 00:13:07,160 --> 00:13:10,640 -தாக்கினா? தாக்கினா? -தாக்கினதுதான். 170 00:13:10,720 --> 00:13:12,240 தேவையில்லாம கவலைப்படாதே. 171 00:13:12,320 --> 00:13:16,600 முற்றிலும் பாதுகாப்பானதுதான். அவர் முன்போல் இப்போது இல்ல. 172 00:13:16,680 --> 00:13:18,440 அதாவது, நான் சொல்றது, அவர், ஆனா... 173 00:13:19,760 --> 00:13:22,360 அவர் கூட பேச நினைச்சீங்களா? 174 00:13:25,120 --> 00:13:27,000 நிஜமா, செய்யறேன். 175 00:13:32,440 --> 00:13:35,320 இன்றைய மெனு 176 00:13:38,800 --> 00:13:42,720 முன் வாசல் சாவி கெட்டில் அருகே உள்ளது. என்கிட்டே பேச முயற்சிக்காதே. 177 00:13:42,800 --> 00:13:44,560 நான் என் சகோதரியுடன் உள்ளேன். 178 00:13:44,640 --> 00:13:46,080 அவளாவது தன்னை விட பிறர் மேல் அக்கறை வைத்திருக்கிறாளே 179 00:13:49,520 --> 00:13:50,920 சே! 180 00:14:14,800 --> 00:14:16,000 ஒளி உண்டாகட்டும். 181 00:14:20,800 --> 00:14:23,600 ஹலோ, கேப்ரியல். 182 00:14:24,320 --> 00:14:25,480 அருமை. 183 00:14:26,440 --> 00:14:29,560 -ஆனா நான்... -ஆமா, ஆமா, ஆமா, இல்ல, இல்ல, இல்ல. 184 00:14:29,640 --> 00:14:32,120 இல்ல. இப்ப நீ ஜிம். 185 00:14:32,800 --> 00:14:34,800 உன் தேவை போல கிடைச்சது இல்லையா? 186 00:14:34,880 --> 00:14:37,080 ஆமா. திரு ஃபெல் ரொம்ப அன்பா இருக்கார். 187 00:14:37,160 --> 00:14:40,040 இல்லையா? ஆச்சரியம்தான், 188 00:14:40,600 --> 00:14:43,000 அதுவும் கடைசி முறை நீங்க சந்திச்சப்ப, 189 00:14:43,960 --> 00:14:45,960 அவரை அழிக்க நீ முயற்சி செஞ்ச. 190 00:14:49,240 --> 00:14:50,680 எனக்கு அது ஞாபகம் இல்ல. 191 00:14:50,760 --> 00:14:52,080 இல்லையா, ஜிம்? 192 00:14:54,080 --> 00:14:56,560 திரு. ஃபெல்க்கும் அது ஞாபகம் இல்ல. 193 00:14:57,160 --> 00:14:59,120 அவர் அங்கே இல்ல, தெரியுமா. 194 00:14:59,200 --> 00:15:00,720 -அவர் அங்க இல்லையா? -பெரிய கதை. 195 00:15:00,800 --> 00:15:04,680 ஆனா... அங்க நான் இருந்தேன். 196 00:15:05,840 --> 00:15:09,520 உன் முகம் போன போக்கு எனக்கு தெளிவா 197 00:15:09,600 --> 00:15:13,080 ஞாபகம் இருக்கு, ஆர்கேஞ்சல் கேப்ரியல், 198 00:15:14,960 --> 00:15:16,720 சும்மா வாயை மூடிகிட்டு சாவுன்னு 199 00:15:16,800 --> 00:15:20,280 என் ஒரே நண்பரிடம் சொன்னபோது! 200 00:15:24,320 --> 00:15:29,240 நான் அதைப் பத்தி கவலைப்படல. 201 00:15:29,720 --> 00:15:31,440 அது நான் இல்லேன்னு தோணுது. 202 00:15:32,520 --> 00:15:33,720 ஆனா நான் வருந்தறேன். 203 00:15:34,680 --> 00:15:36,760 இப்ப பிரச்சினை குடுக்கலேன்னு நம்பறேன். 204 00:15:36,840 --> 00:15:39,720 உனக்கு இன்னும் மோசமான செய்தி, ஜிம்மி பாய். 205 00:15:41,320 --> 00:15:44,920 அவர் வாழ்க்கையையே பணயம் வைக்கிறதுக்கு நீ காரணமா இருக்கே. 206 00:15:45,000 --> 00:15:48,240 ஒ, ஐயோ, உண்மையில் வருந்தறேன். 207 00:15:48,960 --> 00:15:51,000 -நான் ஏதாவது செய்ய முடியுமா? -முடியும். 208 00:15:51,640 --> 00:15:53,000 ஆமா, 209 00:15:53,640 --> 00:15:54,840 அந்த ஜன்னல் வழியா குதி. 210 00:15:56,920 --> 00:15:57,920 சரி. 211 00:16:09,320 --> 00:16:10,320 நிறுத்து! 212 00:16:14,080 --> 00:16:15,080 கீழே இறங்கு. 213 00:16:17,960 --> 00:16:20,040 நீ அவனா இல்லேன்னா, 214 00:16:20,120 --> 00:16:21,520 யார் நீ? 215 00:16:21,600 --> 00:16:24,520 எனக்குத் தெரியல. நான்... நான் 216 00:16:25,560 --> 00:16:29,760 ஒரு காலி வீடு போல் உணர்கிறேன். 217 00:16:29,840 --> 00:16:32,560 -வீடா? -ரொம்ப நாளா யாரோ இருந்த வீடு, 218 00:16:32,640 --> 00:16:35,800 ஆனா இப்ப யாரும் இல்ல, 219 00:16:35,880 --> 00:16:39,440 ஆனா பொருட்கள் இருந்த இடத்தை அந்த வீடு சொல்லும், 220 00:16:39,520 --> 00:16:41,720 இது எப்படி தொடங்கியதுன்னு நினைவு வந்தப்ப. 221 00:16:42,280 --> 00:16:44,720 நீ முதலில் இங்கு வந்தப்ப, உனக்கு ஏதோ 222 00:16:44,800 --> 00:16:48,520 பயங்கரமா செய்ய திட்டமிட்டிருக்காங்கன்னு சொன்னே. 223 00:16:48,600 --> 00:16:52,040 அதனால், அப்ப உனக்கு ஞாபகம் வந்தது, இப்ப ஞாபகப்படுத்து. 224 00:16:52,840 --> 00:16:54,600 ஞாபகப்படுத்தினா வலிக்குது. 225 00:16:54,680 --> 00:16:56,680 என் தலை அதை தாங்காது. 226 00:16:56,760 --> 00:16:59,240 தெரியும். இருந்தாலும் செய்! 227 00:17:02,680 --> 00:17:04,520 அது இல்ல... எனக்கு நினைவு இல்ல. 228 00:17:04,560 --> 00:17:06,319 அப்ப உன் நினைவு எங்கே? 229 00:17:08,520 --> 00:17:09,960 ஒரு தீப்பெட்டியில். 230 00:17:13,040 --> 00:17:15,520 இல்ல, முதலில் நான் அதை வெளியே எடுத்தேன். 231 00:17:17,480 --> 00:17:19,760 -தீப்பெட்டிலேருந்து நினைவை எடுத்தியா? -ஆம். 232 00:17:19,800 --> 00:17:23,480 அதை வெளியே எடுத்து ஒரு பெட்டியில் வெச்சு இங்க கொண்டு வந்தேன் 233 00:17:23,560 --> 00:17:25,079 -அது... -சொல்லு? 234 00:17:25,200 --> 00:17:26,520 ...எங்கேயும் இருக்கு. 235 00:17:26,760 --> 00:17:28,160 வேற என்ன ஞாபகம் இருக்கு? 236 00:17:31,440 --> 00:17:34,080 அது மறுபடியும் நடந்தா, அது ஒரு நிறுவன 237 00:17:34,200 --> 00:17:36,080 -பிரச்சினை போல ஆயிடும். -என்ன? 238 00:17:36,160 --> 00:17:37,960 எனக்குத் தெரியாது. நான்... 239 00:17:38,800 --> 00:17:39,680 எனக்கு தெரியும். 240 00:17:39,760 --> 00:17:42,200 சாமான் இல்லாத இடத்தில் தேடற மாதிரி. 241 00:17:51,320 --> 00:17:54,640 உனக்கு ஹாட் சாக்லேட் வேணுமா? 242 00:17:58,080 --> 00:18:00,560 த ரிசரக்ஷனிஸ்ட் சேஃப்டி மாச்சஸ் 243 00:18:03,560 --> 00:18:05,640 அதிசயம் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டே? 244 00:18:05,720 --> 00:18:07,720 அதை சரிபார்த்துகிட்டு இருக்கேன். 245 00:18:07,800 --> 00:18:12,280 காதலில் இருப்பது கொஞ்ச நாள் காத்திருந்த பிறகே சொல்ல முடியும். 246 00:18:12,320 --> 00:18:14,880 ஏன்னா மனுஷங்க ஒரு மாதிரி, அப்படிதான் நடக்கும். 247 00:18:14,960 --> 00:18:18,000 எனக்கு அது தெரியும். கேப்ரியல் பத்தி ஏதாவது? 248 00:18:18,080 --> 00:18:20,160 சரி. அது... 249 00:18:20,240 --> 00:18:23,480 அவன் நிச்சயமா கடையில் இல்லை. அதை துப்புன்னு சொல்லலாமா? 250 00:18:23,560 --> 00:18:25,640 -அசிராஃபேல் மட்டும்தான். -துரோகி. 251 00:18:25,720 --> 00:18:28,560 ஆமா. அவர் பார்க்க ரொம்ப... 252 00:18:30,960 --> 00:18:31,800 துரோகத்தனமா. 253 00:18:32,400 --> 00:18:34,320 அவரின் கடுப்பான நண்பர், திரு குரோலி. 254 00:18:34,440 --> 00:18:37,560 -அந்த அரக்கன். -அதான் கடுப்பு போலிருக்கு. 255 00:18:38,160 --> 00:18:41,800 அப்புறம், அவர் உதவியாளர்? 256 00:18:42,320 --> 00:18:44,680 அவரை பார்த்த மாதிரி தெரியல. 257 00:18:44,760 --> 00:18:46,320 அவர் உதவியாளரா? 258 00:18:47,800 --> 00:18:50,200 -அவருக்கு உதவியாளர் இல்ல. -இல்ல. 259 00:18:50,560 --> 00:18:53,240 இல்லையா? சாரி. அதை எதுக்கு சொன்னேன்னு தெரியல. 260 00:18:53,320 --> 00:18:54,960 இருக்கா? இருக்கா? 261 00:18:55,040 --> 00:18:56,080 நாம சந்திக்கல... 262 00:18:56,160 --> 00:19:00,000 யாரோ எது பத்தியோ... 263 00:19:00,640 --> 00:19:02,200 -புத்தகங்களா? -இல்ல, இல்ல. 264 00:19:02,280 --> 00:19:05,000 அது அசிராஃபேல்தான். அவருக்கு புத்தகங்கள் பிடிக்கும். 265 00:19:06,080 --> 00:19:08,480 ஆமா. ஆமா. 266 00:19:09,400 --> 00:19:11,880 -என்ன? -இது உபயோகமா இருக்குமான்னு தெரியல, 267 00:19:11,960 --> 00:19:14,880 ஆனா ஒரு சமயத்தில், திரு. ஃபெல்லும் திரு, அதாவது... 268 00:19:14,960 --> 00:19:16,640 அந்த துரோகியும் அந்த அரக்கனும் 269 00:19:17,240 --> 00:19:19,720 இனி என்ன செய்யறதுனு ரகசிய மீட்டிங் போட்டாங்க. 270 00:19:21,560 --> 00:19:22,560 அப்புறம்? 271 00:19:23,800 --> 00:19:26,720 -என்ன? -அவங்க என்ன சொன்னாங்க? 272 00:19:27,520 --> 00:19:28,800 நான் அதை கேட்கல. 273 00:19:28,920 --> 00:19:30,400 அது ரகசியம்னு சொன்னாங்க. 274 00:19:37,680 --> 00:19:39,000 நன்றி. 275 00:19:41,720 --> 00:19:44,040 -நீங்க ரொம்ப நல்லவர். -எனக்கு நன்றி சொல்லாதே. 276 00:19:44,080 --> 00:19:45,920 நான் நல்லவன் இல்ல. 277 00:19:46,920 --> 00:19:48,800 உன்னை யாரும் நம்பவும் மாட்டாங்க. 278 00:20:05,320 --> 00:20:08,560 -என்ன செய்கிறாய்? -நடக்க வேண்டிய எல்லாத்துக்கும் 279 00:20:08,640 --> 00:20:10,560 இடம் பண்ணிக்கிட்டு இருக்கேன். 280 00:20:10,680 --> 00:20:12,680 ஏதோ செய்யப் போறேன்னு புரியுது. 281 00:20:12,760 --> 00:20:14,680 -என்ன திட்டம்? -பொறுத்து பாரு. 282 00:20:15,280 --> 00:20:17,720 பொறுத்து பாக்கவா? இது செம எரிச்சல்னு தெரியுமா? 283 00:20:17,800 --> 00:20:20,040 சரி. இங்கே நின்னு குறை கண்டுபிடிச்சா, 284 00:20:20,080 --> 00:20:22,040 நீனா இல்ல மேகி விஷயத்தை கவனிச்சு 285 00:20:22,080 --> 00:20:24,160 அவங்களை வழிக்கு கொண்டு வரலாம். 286 00:21:02,280 --> 00:21:04,960 என்னை எதுக்கு கூப்பிட்டீங்கன்னு தெரியல, திரு ஃபெல். 287 00:21:05,040 --> 00:21:07,720 நீங்க விக்பெர் தெரு வணிகர், திருமதி சேண்ட்விச், 288 00:21:07,800 --> 00:21:10,640 -மேலும் சமூகத்தின் தூண். -அப்படி இருக்கலாம். 289 00:21:10,720 --> 00:21:12,200 வேலை முடிந்து வரும் கூட்டம் 290 00:21:12,280 --> 00:21:14,640 மேலும் வாடிக்கையாளர்களை கவனிக்கணுமே. 291 00:21:14,720 --> 00:21:17,040 உங்க இளம் பெண்கள் பார்த்துப்பாங்க. 292 00:21:17,080 --> 00:21:18,400 நீங்க இப்படி சொன்னா சரி. 293 00:21:18,480 --> 00:21:22,800 நான் கேட்கவே இல்ல, அவங்க என்ன பண்றாங்க? 294 00:21:23,960 --> 00:21:26,160 அவங்க தன் சொந்த காலில் நிக்கறாங்க. 295 00:21:26,240 --> 00:21:27,800 அரசாங்கம் சொன்னது போல. 296 00:21:35,800 --> 00:21:40,000 தெரு வணிகர் கூட்டமைப்பு மீட்டிங் ஆரம்பிக்கப் போகுதுன்னு சொல்ல சொன்னார். 297 00:21:40,080 --> 00:21:43,080 -நான் ஒரு மீட்டிங்கை விட்டதில்ல. வரேன். -பரவாயில்ல. 298 00:21:52,600 --> 00:21:55,440 மீட்டிங்குக்கு நான் கொடுத்த இருக்கைகள் எங்கே? 299 00:21:55,520 --> 00:21:56,720 -தேவையில்ல. -தேவையில்லயா? 300 00:21:56,800 --> 00:21:59,640 நடனம் ஆரம்பிக்கும்போது அவற்றை நகர்த்தியாகணும். 301 00:21:59,720 --> 00:22:01,520 அதை இப்பவே செய்யறது நல்லது. 302 00:22:01,600 --> 00:22:02,840 நடனமா? 303 00:22:11,200 --> 00:22:14,840 "கிவ் மீ காஃபி ஆர் கிவ் மீ டெத்." காஃபி கடைக்கு வேடிக்கையான பெயர். 304 00:22:14,920 --> 00:22:16,440 வேற பெயர் கிடைக்கல. அது என்ன? 305 00:22:16,520 --> 00:22:18,080 -ஞாபகப் படுத்த-- -மீட்டிங்கா? 306 00:22:18,160 --> 00:22:19,720 -நான் வரலை. -வந்தாகணும். 307 00:22:19,800 --> 00:22:21,160 முடியாது, நான் வரலை. 308 00:22:21,240 --> 00:22:24,680 என்... என் தோழர், லிண்ட்சே செய்தி போட்டிருக்கா, 309 00:22:25,080 --> 00:22:27,240 அவ இப்ப என் முன்னாள் தோழர். 310 00:22:27,320 --> 00:22:30,440 கிறிஸ்துமஸ் விளக்கு பத்தி பேச எனக்கு களைப்பா இருக்கு. 311 00:22:30,520 --> 00:22:33,840 வீட்டுக்கு போய், தண்ணி போட்டு மட்டை ஆகி காலி வீட்டில் அழுவேன். 312 00:22:33,920 --> 00:22:35,280 -அதை செய்யாதீங்க. -ஏன்? 313 00:22:35,840 --> 00:22:38,200 பாதுகாப்பு இல்ல. ஏதோ நடக்குது. 314 00:22:39,360 --> 00:22:40,520 ஏதோ தவறா இருக்கு. 315 00:22:40,600 --> 00:22:42,920 நிறைய விஷயம் இப்ப தவறாத்தான் இருக்கு. 316 00:22:43,000 --> 00:22:45,240 ஆனா இப்ப, அது அலை அலையா வருது. 317 00:22:45,320 --> 00:22:46,280 பின்விளைவு மாதிரி. 318 00:22:46,360 --> 00:22:48,440 -போறேன். -அங்க பத்திரமா இருப்பீங்க. 319 00:22:48,520 --> 00:22:50,640 உங்களை என் நண்பர் பாதுகாப்பார். 320 00:22:50,720 --> 00:22:52,680 வாழ்வில் ஒரு தடவையாவது, நம்புங்க. 321 00:22:52,760 --> 00:22:55,160 -ஒரு மாதிரி ஆள் நீங்க. -செய்யுங்க! 322 00:23:08,560 --> 00:23:09,880 எனக்கு பைத்தியம் தான். 323 00:23:09,960 --> 00:23:13,160 இது நீனா, நம் அனைத்து தேவைக்கும் காஃபி அளிப்பவர். 324 00:23:13,240 --> 00:23:14,880 சந்தோஷம். 325 00:23:14,960 --> 00:23:18,360 இது, எப்படி சொல்ல, நடன இரவு? 326 00:23:18,440 --> 00:23:19,720 ஜஸ்டின், என்ன நடக்குது? 327 00:23:19,800 --> 00:23:23,320 அன்பு சீமாட்டி காஃபி விற்பவரே, இன்றிரவு 328 00:23:23,400 --> 00:23:26,560 விக்பெர் தெரு கடைக்காரர்கள் கூட்டமைப்புக்கான மீட்டிங். 329 00:23:26,640 --> 00:23:29,680 நாம் அனைவரும் திரு ஃபெல்லின் உபசரிப்பில் பங்கு பெறுவோம். 330 00:23:29,760 --> 00:23:34,200 இந்த சின்ன குட்டி உணவை முயற்சி செய்து பார்க்கறீங்களா? இலவசம்தான். 331 00:23:38,840 --> 00:23:40,440 நீனா! ஒ, நான்... 332 00:23:41,040 --> 00:23:43,320 நீங்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி. 333 00:23:43,800 --> 00:23:45,760 நடனம் ஆரம்பிக்கப் போகுது. 334 00:23:45,840 --> 00:23:48,480 நான் கோபமா இருக்கேன். ஏன் கோபமா இருக்கக் கூடாது? 335 00:23:49,000 --> 00:23:51,080 இன்றிரவு கோபத்துக்கு இடம் இல்லை. 336 00:23:51,160 --> 00:23:54,600 இளைஞர்கள் நீங்க மகிழ்ச்சியா இருப்பதை பார்க்க விரும்புகிறேன். 337 00:23:54,680 --> 00:23:55,960 நடனமா? 338 00:23:56,040 --> 00:23:59,880 நடனம் இல்லாம கடைக்காரர்கள் கூட்டமைப்பு மீட்டிங் இல்ல. 339 00:23:59,960 --> 00:24:04,000 என்ன நடக்குதுனு தெரியல. உங்க நண்பர் எனக்கு ஆபத்துன்னார். 340 00:24:04,080 --> 00:24:06,880 இப்ப இங்கே நீங்க எல்லாம்... என் மண்டை குழம்புது. 341 00:24:06,960 --> 00:24:08,880 இப்ப நீங்க இங்க இருக்கீங்க, 342 00:24:08,960 --> 00:24:10,720 அதுதான் முக்கியம். 343 00:24:10,800 --> 00:24:13,680 நீங்க இங்க நிச்சயமா பத்திரமா இருப்பீங்க. 344 00:24:14,800 --> 00:24:19,120 நல்ல மாலைப்பொழுது ஆகட்டும், சீமாட்டி நீனா. இந்த கடைக்காரர்கள் கூட்டமைப்பு 345 00:24:19,200 --> 00:24:22,160 மீட்டிங் முடியும் முன் நாம் நம்மை புரிந்து கொள்வோம். 346 00:24:22,800 --> 00:24:25,640 நான் கிறிஸ்துமஸ் விளக்கு பற்றி பேச விரும்பறேன். 347 00:24:45,680 --> 00:24:46,760 யார் நீங்க? 348 00:24:47,320 --> 00:24:48,320 யார் அனுப்பிச்சாங்க? 349 00:24:51,400 --> 00:24:52,800 நீங்க அரக்கர்கள். 350 00:24:52,880 --> 00:24:56,200 கடைநிலை அரக்கர்கள், சபிக்கப்பட்டவங்க. 351 00:24:56,760 --> 00:24:57,960 இங்க என்ன பண்றீங்க? 352 00:24:58,040 --> 00:24:59,760 நீங்க இங்க என்ன செய்றீங்க? 353 00:24:59,840 --> 00:25:03,400 திடீர்னு தோன்றி பிரச்சினை செய்யக்கூடாது. விதிமுறைகள் இருக்கு. 354 00:25:03,480 --> 00:25:07,080 -ஏஞ்சலை எங்ககிட்ட குடு. -எங்களுக்கு கேப்ரியல் வேணும். 355 00:25:10,560 --> 00:25:13,440 நீங்க செய்யறது சரியானது இல்ல! 356 00:25:26,000 --> 00:25:28,040 நீங்க என்ன தொழில் செய்றீங்க? 357 00:25:29,080 --> 00:25:30,600 நான் ஒரு தையல்காரி. 358 00:25:30,680 --> 00:25:33,080 சரிதான், ஒரு நல்ல தொழில். 359 00:25:33,840 --> 00:25:38,040 இல்ல, நான் தையல்காரி இல்ல. நான் ஒரு தையல்காரி. 360 00:25:39,960 --> 00:25:41,000 சாவட்டும். 361 00:25:42,120 --> 00:25:43,160 ஒரு தையல்காரி. 362 00:25:43,840 --> 00:25:46,040 சுருக்கமா, நீங்க ஒரு தையல்காரி. 363 00:25:46,120 --> 00:25:48,320 இல்ல, நான் வீணாப்போன தையல்காரி இல்ல. 364 00:25:48,400 --> 00:25:51,680 நான் ரொம்ப பாழாப்போன தையல்காரி! 365 00:25:53,760 --> 00:25:55,840 நான் "தையல்காரி" வார்த்தை சொல்ல கூடாதா? 366 00:25:55,920 --> 00:25:58,440 தொழிலை விளக்கமா சொல்லணும்னா. 367 00:25:58,520 --> 00:26:00,960 அதேதான், நன்றி. 368 00:26:01,040 --> 00:26:03,840 ஒரு மனைவியின் கனிவான கவனிப்பு ஒரு 369 00:26:03,920 --> 00:26:06,440 கனவானுக்கு தேவைப்படும் போது, 370 00:26:06,520 --> 00:26:09,480 அவர் என் நிறுவனத்துக்கு வரலாம் 371 00:26:09,560 --> 00:26:14,120 வந்து அவர் சட்டையையோ, காலுறையையோ சரி செய்து கொள்ள அங்கு தயாராய் இருக்கும் 372 00:26:14,200 --> 00:26:19,600 ஒரு அருமையான பெண்கள் கூட்டத்தில் யாரை வேணும்னாலும் தேர்ந்தெடுக்கலாம். 373 00:26:19,680 --> 00:26:22,720 பட்டன் தைச்சு குடுக்க கூட. 374 00:26:23,800 --> 00:26:24,880 ஆனா அதுக்கு தனியா. 375 00:26:25,000 --> 00:26:26,680 எல்லா பெண்களும் செய்ய மாட்டாங்க. 376 00:26:30,440 --> 00:26:31,720 ஒரு தையல்காரி. 377 00:26:55,960 --> 00:26:58,160 -நீ என்ன செய்கிறாய்? -சொன்னேனே. 378 00:26:58,240 --> 00:27:00,200 ஜேன் ஆஸ்டின். நல்லா போகுது. 379 00:27:00,280 --> 00:27:03,560 -நாம் பேசணும். முக்கியம். -நான் ஒரு வணிக கூட்டம் நடத்தறேன். 380 00:27:03,640 --> 00:27:07,640 இப்ப வந்துடறேன். கொஞ்சம் தின்பண்டம் எடுத்துக்கோ. 381 00:27:29,040 --> 00:27:30,400 இது புதுசா இருக்கு. 382 00:27:30,480 --> 00:27:32,480 இது முழு பித்து மாதிரி இருக்கு. 383 00:27:32,560 --> 00:27:36,240 ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்லேந்து வந்த மாதிரி ஏன் எல்லோரும் பேசறாங்க? 384 00:27:36,320 --> 00:27:38,600 விஷயத்தின் சாரத்துக்குள் நுழையறாங்க. 385 00:27:38,680 --> 00:27:40,160 விஷயத்தின் சாரமா? 386 00:27:40,240 --> 00:27:43,680 இது கூட்டமைப்பு மாதாந்திர மீட்டிங் தானே. 387 00:27:43,760 --> 00:27:44,600 ஆமா. 388 00:27:45,240 --> 00:27:46,920 நீங்க அப்படி சொன்னா... 389 00:27:47,920 --> 00:27:49,080 நாம் நடனமாடுகிறோமா? 390 00:27:49,560 --> 00:27:50,560 ஆமா. 391 00:27:50,640 --> 00:27:52,880 இந்த நடனத்தை முன்பே கத்துகிட்டீங்களா? 392 00:27:52,960 --> 00:27:54,840 நாம் செய்யறதுதான், இல்லையா? 393 00:27:54,920 --> 00:27:56,760 இல்ல. இல்ல, அப்படியில்ல. 394 00:27:59,960 --> 00:28:01,080 இது கொஞ்சம் பித்து. 395 00:28:01,160 --> 00:28:02,480 இது அவங்க தவறு. 396 00:28:03,240 --> 00:28:04,320 இதை அவங்க செய்யறாங்க. 397 00:28:36,600 --> 00:28:39,400 நான் புத்தக விற்பனையாளர். ஆனா இவை புத்தகங்கள் இல்ல. 398 00:28:39,480 --> 00:28:42,240 இவை உணவுத் துண்டுகள். நான் இவற்றை விற்கல. 399 00:28:42,320 --> 00:28:43,600 சும்மா குடுக்கறேன். 400 00:28:43,680 --> 00:28:46,600 அப்ப நிச்சயமா நாங்க பூந்து விளையாடணும். 401 00:28:50,040 --> 00:28:53,360 இப்போதைக்கு இன்னும் ஒண்ணு தேவையா இருக்கும். 402 00:28:53,880 --> 00:28:56,200 இவ்வளவு விரும்பத்தக்கதாவும் 403 00:28:56,280 --> 00:28:59,360 இவ்வளவு நளினமாகவும் 404 00:28:59,440 --> 00:29:02,840 இவ்வளவு நல்ல உருவமைப்பும் இயல்பும் கொண்ட ஒருவரை 405 00:29:02,920 --> 00:29:06,040 வரவேற்பதில் இந்த சின்ன ஊர் பெருமை எப்போதும் அடைஞ்சதில்ல. 406 00:29:07,280 --> 00:29:09,680 இதுவா? இது நேர்த்தியானது, இல்லையா? 407 00:29:09,760 --> 00:29:12,000 இது எதெல்லாம் செய்யும்னு நான் பார்க்கிறேன். 408 00:29:12,080 --> 00:29:15,280 -நேற்றிரவு படுக்கைல ஒண்ணு கண்டுபிடிச்சேன். -சர்! 409 00:29:15,360 --> 00:29:17,000 உங்ககிட்ட அதை காண்பிக்கட்டுமா? 410 00:29:17,080 --> 00:29:19,080 -சரி. -நான் ஒப்புக்கணும் 411 00:29:19,160 --> 00:29:20,800 எங்களை வினோதமா ஆர்வமூட்டறீங்க. 412 00:29:20,880 --> 00:29:23,600 இங்கே, இங்கே, இங்கே. பாருங்க. பாருங்க. பாருங்க. 413 00:29:39,120 --> 00:29:41,920 மழை பெய்ய வைப்பது ஒண்ணுன்னா, ஒருத்தர் கூட ஆட... 414 00:29:42,000 --> 00:29:45,120 ஏதோ தவறு இருக்கு. ஏதோ ரொம்ப தவறா இருக்கு. 415 00:29:45,200 --> 00:29:48,600 நாம் நடனம் ஆடறபோது நீ சொல்லலாம். 416 00:29:48,680 --> 00:29:49,760 நாம் நடனம் ஆடறதில்ல. 417 00:30:01,160 --> 00:30:02,520 கதவுகள் திறக்கின்றன. 418 00:30:03,080 --> 00:30:04,520 பூமி. 419 00:30:19,640 --> 00:30:21,120 எவ்வளவு அருமை. 420 00:30:21,600 --> 00:30:23,520 அவங்க ஒரு பார்ட்டி நடத்தறாங்க. 421 00:30:24,360 --> 00:30:26,200 -நாம் என்ன செய்யலாம்? -தெரியல. 422 00:30:26,960 --> 00:30:28,360 என் நாள் நல்லதா இல்ல. 423 00:30:28,440 --> 00:30:30,920 என் பார்ட்னர், லிண்ட்சே, போயாச்சு. 424 00:30:31,880 --> 00:30:33,640 -அது என் தப்பா? -என்ன? 425 00:30:34,160 --> 00:30:36,400 இல்ல. அப்படி இல்ல. 426 00:30:37,080 --> 00:30:40,000 அந்த ராத்திரி தான் முடிவானது. 427 00:30:40,080 --> 00:30:42,040 ரொம்ப நாளா புகைஞ்சுகிட்டே இருந்தது. 428 00:30:43,640 --> 00:30:46,000 என்னை லிண்ட்சேக்கு அவ்வளவா பிடிக்கலைன்னு தோணுது. 429 00:30:47,440 --> 00:30:49,280 நான் கொஞ்சம் கஷ்டம்னு தெரியும். 430 00:30:49,360 --> 00:30:50,400 நான்... 431 00:30:52,960 --> 00:30:54,200 அதாவது... 432 00:30:54,880 --> 00:30:56,600 எனக்கு கஷ்டம் பத்தி பயம் இல்ல. 433 00:30:57,960 --> 00:30:59,800 ஹெல் அரக்கர்களை அனுப்பியிருக்கு. 434 00:30:59,880 --> 00:31:02,600 வெளியே காத்திருக்காங்க... கேப்ரியல் வேணுமாம். 435 00:31:02,680 --> 00:31:04,680 நாம் இங்க பத்திரமா இருக்கோம். 436 00:31:04,760 --> 00:31:07,880 இந்த புத்தகக்கடை ஒரு தூதரகம் மாதிரிதான். 437 00:31:07,960 --> 00:31:10,280 இப்படி நடனமாடுவதை நிறுத்திட்டு 438 00:31:10,360 --> 00:31:12,600 ஆக வேண்டியதை நாம் பார்க்கணும். 439 00:31:12,680 --> 00:31:15,480 நான் ஜிம்மை அவர்களிடம் தரப் போவதில்ல. 440 00:31:15,560 --> 00:31:17,840 மக்களுக்கு அடி படும், ஏஞ்சல். 441 00:31:17,920 --> 00:31:21,720 நமக்கு இருக்கும் பிரச்சினையை நீங்க பெரிசு பண்றீங்கன்னு நினைக்கிறேன். 442 00:31:28,840 --> 00:31:29,680 அப்ப? 443 00:31:32,160 --> 00:31:33,160 ஒ, அட. 444 00:31:33,240 --> 00:31:34,920 "சரண்டர் த ஏங்கிள்"? 445 00:31:35,000 --> 00:31:38,920 ஆமா, ஸ்பெல்லிங் அவங்களுக்கு சரியா வராது. அவங்க சொல்ல வந்தது... 446 00:31:39,000 --> 00:31:40,640 சரண்டர் த ஏஞ்சல். 447 00:31:40,720 --> 00:31:44,520 கேப்ரியலை வெளியே அனுப்பு. யாருக்கும் ஒண்ணும் ஆகாது. 448 00:31:44,600 --> 00:31:46,120 நடக்கவே நடக்காது. 449 00:31:46,200 --> 00:31:49,280 இந்த புத்தகக் கடை ஹெவனின் ஒரு முன்னாள் புறக்காவல் ஆன 450 00:31:49,360 --> 00:31:51,440 ஒரு தற்சார்புள்ள தூதரகம், 451 00:31:51,520 --> 00:31:54,480 என்பதை உங்களுக்கு ஞாபப்படுத்தணுமா, அதனால்... 452 00:31:54,560 --> 00:31:56,440 நீ நாடுகடத்தப்பட்டவன், அசிராஃபேல். 453 00:31:57,160 --> 00:31:58,600 உனக்கு பாதுகாப்பு கிடையாது. 454 00:31:59,440 --> 00:32:02,400 என்னிடம் ஒரு அரக்கர் படை இருக்கு. 455 00:32:03,400 --> 00:32:05,920 ஆனா உனக்கு தீங்கு செய்ய நான் விரும்பல. 456 00:32:06,600 --> 00:32:08,800 இங்கே உன்னோடு உள்ள மனிதர்களை மட்டும். 457 00:32:10,040 --> 00:32:13,080 ஆர்கேஞ்சல் கேப்ரியலை கொடுக்க உனக்கு 60 விநாடி தரேன். 458 00:32:13,160 --> 00:32:16,760 அதற்குப் பிறகு மக்களை கொல்ல ஆரம்பிப்போம். 459 00:32:21,360 --> 00:32:22,320 மன்னிக்கணும். 460 00:32:27,160 --> 00:32:28,360 ஐம்பது வினாடிகள். 461 00:32:28,440 --> 00:32:29,800 நீ என்ன சொன்ன? 462 00:32:30,320 --> 00:32:32,440 இதெல்லாம் என்னால் தானே? 463 00:32:32,520 --> 00:32:35,520 அவங்களுக்கு நான் வேணும், இல்லையா? 464 00:32:40,000 --> 00:32:41,000 நீ என்கிட்டே வந்த. 465 00:32:41,880 --> 00:32:43,480 உன்னை காப்பாத்துவேன்னு சொன்னேன். 466 00:32:44,280 --> 00:32:45,640 அதை செய்வேன். 467 00:32:45,720 --> 00:32:48,640 நீங்க செய்ய வேண்டாம். நான் வெளியே போறேன். 468 00:32:59,080 --> 00:32:59,960 இதோ வந்தேன். 469 00:33:01,240 --> 00:33:02,480 உங்களுக்கு தேவை நான். 470 00:33:03,640 --> 00:33:04,480 நினைக்கிறேன். 471 00:33:05,240 --> 00:33:06,320 நான் தான் அது. 472 00:33:07,080 --> 00:33:10,360 நீ என்ன செய்றேன்னு தெரியல, ஆனா நீ குறுக்கே வர்ற. 473 00:33:11,920 --> 00:33:15,440 ஏஞ்சலை வெளியே அனுப்பு. இல்ல புத்தகக் கடையில் உள்ள எல்லோரும் காலி! 474 00:33:15,520 --> 00:33:16,920 உறுதியா சொல்றேன். 475 00:33:17,640 --> 00:33:18,560 ஹை. 476 00:33:19,080 --> 00:33:20,080 கேளு, 477 00:33:21,120 --> 00:33:25,880 ஏஞ்சல் கேப்ரியல் நான்தான். 478 00:33:25,960 --> 00:33:29,640 ஆனா நான் ஜிம்மும்தான். ஜேம்ஸ்க்கு சுருக்கமா. ஆனா கேப்ரியலும்தான். 479 00:33:30,520 --> 00:33:33,480 வாயை மூடுறியா? 480 00:33:34,680 --> 00:33:39,520 உள்ளே போ, இப்பவே, இந்த நிமிஷமே, 481 00:33:39,600 --> 00:33:43,480 போய் அந்த கழுதை அசிராஃபேல்கிட்டவும் 482 00:33:43,560 --> 00:33:46,840 துரோகி குரோலிகிட்டவும் சொல்லு 483 00:33:46,920 --> 00:33:51,680 ஏஞ்சல் கேப்ரியலை வெளியே அனுப்பலேன்னா, பொசுக்கிடுவேன்! 484 00:33:52,640 --> 00:33:57,440 பொ-சி-கி-டி. 485 00:33:58,320 --> 00:34:00,120 பொசுக்கிடுவேன்! இப்ப... 486 00:34:13,639 --> 00:34:14,760 என்ன ஆச்சு? 487 00:34:16,520 --> 00:34:21,040 என்னை உள்ளே போய் ஏஞ்சலை வெளியே அனுப்ப சொல்லி சொல்ல சொன்னாங்க. 488 00:34:23,480 --> 00:34:24,639 ஆமா சொன்னாங்க. 489 00:34:24,760 --> 00:34:27,480 அது அவன்னு தெரியாதிருக்க ஒரு அதிசயம் செய்தோம். 490 00:34:27,560 --> 00:34:29,800 இப்ப யாருக்கும் அது அவன்தான்னு தெரியல. 491 00:34:29,880 --> 00:34:31,639 மன்னிக்கணும், திரு. ஃபெல். 492 00:34:31,679 --> 00:34:34,159 யார் இவங்க? என்ன நடக்குது? 493 00:34:34,280 --> 00:34:36,199 இருபது வினாடிகள், ஏஞ்சல். 494 00:34:36,320 --> 00:34:38,639 மக்களை காயப்படுத்துவதற்கு முன். 495 00:34:38,679 --> 00:34:40,480 பீஸ் பீஸா ஆக்கும் முன். 496 00:34:40,560 --> 00:34:43,360 நீ நேரடியா மனிதர்களுக்கு தீங்கு செய்ய அனுமதி இல்ல. 497 00:34:43,440 --> 00:34:45,520 -அது உனக்கு தெரியும், ஷாக்ஸ். -இருக்கலாம். 498 00:34:45,600 --> 00:34:47,520 ஆனா அவங்களை மறைமுகமா தாக்கலாம். 499 00:34:47,600 --> 00:34:50,440 ஏஞ்சல்களோட போரிடும்போது அவங்களை காயப்படுத்த முடியும். 500 00:34:50,520 --> 00:34:52,159 மனித இறப்புகள் நடக்கும். 501 00:34:52,639 --> 00:34:54,600 இந்த தாக்குதல் அதிகாரபூர்வமானதா, 502 00:34:54,639 --> 00:34:57,360 சண்டை விதிகளின் படிதான் நடக்குதா? 503 00:34:57,440 --> 00:35:01,040 தாக்குதல் நடத்த அதிகார பூர்வ அனுமதி உனக்கு கொடுக்கப்பட்டதா? 504 00:35:04,000 --> 00:35:05,280 நான் முட்டாள் இல்ல. 505 00:35:06,320 --> 00:35:07,400 அனுமதி இருக்கு. 506 00:35:08,640 --> 00:35:11,520 சண்டையின் நிலை விதிகள். பிரிவு 112, துணைப்பிரிவு 3. 507 00:35:11,600 --> 00:35:15,400 "மனிதர்கள் போர் இடத்தை விட்டு அகல நேரம் தரப்பட வேண்டும்." 508 00:35:15,480 --> 00:35:17,200 வேணும்னா அசிராஃபேல் ஹெல் சிற்றரசு 509 00:35:17,320 --> 00:35:19,880 டார்க் கவுன்சிலுக்கு குற்றச்சாட்டு அனுப்பலாம், 510 00:35:19,960 --> 00:35:23,840 அவங்க பதில் தரும் வரை, நீ காத்திருக்கணும். வாரக்கணக்காகும். 511 00:35:24,440 --> 00:35:26,800 உங்க கூட்டத்துக்கு பெரும் பிரச்சினை. 512 00:35:33,400 --> 00:35:36,880 அப்ப, மனிதர்களை இங்கிருந்து வெளியே அனுப்புங்க. 513 00:35:37,560 --> 00:35:38,480 நிச்சயம். 514 00:35:39,920 --> 00:35:42,480 கதை விட்டேன். முட்டாள்கள் சரி பார்க்க மாட்டாங்க. 515 00:35:42,560 --> 00:35:45,680 மனிதர்களை வெளியே அனுப்பிச்சுட்டு, திரும்பி வரேன். 516 00:35:45,800 --> 00:35:48,400 -தெரியுது. ஆனா ஒரு யோசனை-- -நான் பாத்துக்கறேன். 517 00:35:48,480 --> 00:35:52,440 நான் உங்க எல்லாரையும் வெளியே கூட்டிப் போறேன். நான் சொல்ற படி செஞ்சா, 518 00:35:52,520 --> 00:35:55,160 -யாருக்கும் எதுவும் ஆகாது. -என்ன நடக்குதுனு தெரியல, 519 00:35:55,280 --> 00:35:57,480 ஆனா நான் அதை சமாளிக்க போறேன். 520 00:35:57,560 --> 00:35:59,560 -மன்னிக்கணும். -இது மோசமா ஆகப்போகுது. 521 00:36:06,280 --> 00:36:07,480 மேடம். 522 00:36:10,320 --> 00:36:13,560 விக்பெர் தெரு வணிகர்கள் மற்றும் கடைக்காரர் கூட்டமைப்பு 523 00:36:13,640 --> 00:36:15,680 மீட்டிங்கை ஏன் தடுக்கறீங்கன்னு தெரியல. 524 00:36:15,840 --> 00:36:16,840 நடனம். 525 00:36:17,760 --> 00:36:20,400 மீட்டிங் இல்ல. நடனம் ஆடிகிட்டிருந்தீங்க. 526 00:36:22,400 --> 00:36:25,280 இவங்களைத் தடுக்க உங்களுக்கு அதிகாரமில்ல. 527 00:36:26,280 --> 00:36:29,640 சரி. நான் அவசர சேவைகளை கூப்பிடறேன். 528 00:36:31,680 --> 00:36:34,080 குரோலி, இந்த இடத்தின் எல்லை எது? 529 00:36:34,160 --> 00:36:36,040 வாசல் கதவு, அதை நீ தாண்ட முடியாது. 530 00:36:43,600 --> 00:36:45,000 நீ இப்படி செய்ய கூடாது! 531 00:36:45,080 --> 00:36:48,120 செஞ்சோம். சிவிலியன் இறப்பு. 532 00:36:48,160 --> 00:36:51,640 எல்லாரையும் வெளியே கொண்டு வா. இல்ல ஒவ்வொருத்தரா கொல்வோம். 533 00:36:52,760 --> 00:36:53,840 சரி. 534 00:36:56,480 --> 00:36:59,160 எனக்கு இன்னும் புரியல. என்ன நடக்குது? 535 00:37:00,640 --> 00:37:02,160 கொஞ்சம் சிக்கலான விஷயம். 536 00:37:02,280 --> 00:37:04,760 ஆனா இதை நீங்க மறக்கறது நல்லது. 537 00:37:04,840 --> 00:37:07,200 திரு. குரோலி சொல்றபடி செய்யுங்க. 538 00:37:07,320 --> 00:37:10,200 என்னை மயக்கப் பார்க்கறீங்களா? அதுதான் நடக்குதா? 539 00:37:10,320 --> 00:37:12,640 -நீங்க ஏதோ செய்றீங்க. -உங்க உயிரை காக்கறேன். 540 00:37:12,760 --> 00:37:14,680 சரி. வாங்க, ரெண்டு ரெண்டா நில்லுங்க. 541 00:37:14,800 --> 00:37:17,960 திருமதி சேண்ட்விச் எனக்கு முன்னால். நீனா, மேகி, பின்னால். 542 00:37:18,040 --> 00:37:19,760 -வாங்க. -அவர் அவங்களை தனியா 543 00:37:19,840 --> 00:37:21,280 சமாளிக்க விட்டு வர மாட்டேன். 544 00:37:21,360 --> 00:37:24,280 நடன்னு சொன்னவுடன், நடங்க. 545 00:37:24,360 --> 00:37:28,000 அவங்க கண்ணைப் பார்க்காதீங்க. என் பின்னால் வாங்க. நீனா, வர்றியா? 546 00:37:30,760 --> 00:37:31,640 இல்லை. 547 00:37:31,680 --> 00:37:34,600 நின்னு தைரியமா சாகப் போறியா? நல்லது. 548 00:37:34,640 --> 00:37:37,080 சரி. காப்பாத்து. ஹேட்பின் இருக்குதானே? 549 00:37:37,160 --> 00:37:39,440 -அதைவிட அதிகமா இருக்கு. -நிச்சயமா. 550 00:37:39,520 --> 00:37:41,000 போகலாம். 551 00:37:41,880 --> 00:37:44,200 -திருமண நாள் வாழ்த்துக்கள். -வாழ்த்துக்கள். 552 00:37:44,320 --> 00:37:45,520 உன் தபால் இதோ. 553 00:37:46,400 --> 00:37:49,440 -ஏன்? -வாசலில் குவிஞ்சு கிடக்கு. 554 00:37:50,120 --> 00:37:51,960 இப்ப வெச்சுக்கோ. நேரம் சரியில்ல. 555 00:37:54,280 --> 00:37:55,960 -தலை குனியுங்க. -பார்க்காதீங்க. 556 00:37:59,440 --> 00:38:01,560 -தூக்கிட்டாங்க. -நல்லா இருக்காரா? 557 00:38:02,040 --> 00:38:05,360 இருக்காது. எல்லோரும் வெளியே போன பிறகு பார்க்கலாம். சரியா? 558 00:38:06,160 --> 00:38:07,640 போய்கிட்டே இருங்க. 559 00:38:16,120 --> 00:38:18,440 இந்த விக்பெர் தெரு கடைக்காரர் மீட்டிங் 560 00:38:18,520 --> 00:38:21,880 முடிஞ்சதுன்னு முறையா அறிவிக்கிறேன். 561 00:38:21,960 --> 00:38:25,640 அவங்கவங்க கடைக்கு சீக்கிரமா திரும்பிப் போய், 562 00:38:25,680 --> 00:38:28,520 இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மறந்துடுங்க. 563 00:38:28,600 --> 00:38:29,920 போங்க. 564 00:38:30,560 --> 00:38:31,640 நீ ஒரு நல்ல பையன். 565 00:38:32,080 --> 00:38:34,080 உண்மையில் அப்படியில்ல... எதுவோ. 566 00:38:34,160 --> 00:38:35,360 ஆனா நன்றி. 567 00:38:38,400 --> 00:38:40,760 -நீங்க ஏன் போகல? -என்ன நடக்குதுன்னு சொல்லுங்க. 568 00:38:40,840 --> 00:38:42,960 -உங்களுக்கு ஆபத்து. -எதுவும் புரியல. 569 00:38:43,040 --> 00:38:45,440 பிரச்சினையில் உங்களை விட்டுட்டு போக மாட்டோம். 570 00:38:45,520 --> 00:38:49,560 எங்களுக்கு ஆபத்து இல்ல. குரோலி வந்துடுவார். அவர் திட்டம் வெச்சிருப்பார். 571 00:38:49,640 --> 00:38:51,880 உங்களுக்காக நீங்களே திட்டம் போடுங்க. 572 00:38:51,960 --> 00:38:55,360 செய்வேன். ஆனா என்னை காப்பாத்துவது அவரை சந்தோஷப் படுத்தும். 573 00:39:06,800 --> 00:39:09,160 ஆஃபிசர், ஒரு குற்றத்தைப் புகாரளிக்கணும். 574 00:39:10,880 --> 00:39:12,400 நான் தப்பான... 575 00:39:12,480 --> 00:39:15,800 -நீங்க ஒரு சட்ட அமலாக்க ஆஃபிசர் தானே? -ஆமா. நிச்சயமா-- 576 00:39:15,880 --> 00:39:18,600 ஒரு ஆஃபிசரா, ஒரு குற்றம் நடந்தா கைது செய்யலாம். 577 00:39:18,640 --> 00:39:21,440 -ஆமா, ஆனா... -நல்லது, அப்ப, என்னை கைது செய்யுங்க. 578 00:39:21,520 --> 00:39:22,840 -என்ன? -நான் சொன்னது போல, 579 00:39:22,920 --> 00:39:24,840 விலங்கு மாட்டுங்க, சப்தம் போடாம வரேன். 580 00:39:27,080 --> 00:39:30,280 கஷ்டம், ஆனா நான் உண்மையில் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் இல்ல, 581 00:39:30,360 --> 00:39:31,960 மனித சட்ட அமலாக்க ஆஃபிசர். 582 00:39:32,040 --> 00:39:34,920 நீங்க ஒரு ஏஞ்சல்னு தெரியும். அதான் சரணடையறேன். 583 00:39:35,000 --> 00:39:37,640 ஹெவனுக்கு எதிரான குற்றம் பற்றி தெரிஞ்ச ஒரு அரக்கன். 584 00:39:37,680 --> 00:39:40,160 என்னை கைது செய்யுங்க. நமக்கு நேரமில்ல. 585 00:39:40,280 --> 00:39:41,440 ஆனா நான் எப்படி-- 586 00:39:41,520 --> 00:39:44,040 "கைது செய்றேன், பிளா பிளான்னு" சொல்லுங்க. 587 00:39:44,120 --> 00:39:46,400 -" பிளா பிளா..." -சரி. கைது செய்துட்டீங்க. 588 00:39:46,480 --> 00:39:48,800 -நானா? -ஆமா. " பிளா பிளா" சொன்னீங்க. 589 00:39:48,880 --> 00:39:51,040 பரவாயில்ல, ஆஃபிசர். சப்தம் போடாம வரேன். 590 00:39:51,120 --> 00:39:52,440 எங்க வரீங்க? 591 00:39:53,440 --> 00:39:54,880 ஹெவன். 592 00:40:01,160 --> 00:40:02,120 சரி. 593 00:40:02,560 --> 00:40:03,920 கதவுகள் திறக்கின்றன. 594 00:40:10,800 --> 00:40:13,120 என்னை நீங்க ஏமாத்தலையே? 595 00:40:13,160 --> 00:40:16,040 நீங்கதான் என்னை கைது செய்றீங்க. நான் எதுக்கு ஏமாத்துவேன்? 596 00:40:20,760 --> 00:40:21,840 கதவை மூடுங்க. 597 00:40:23,280 --> 00:40:24,880 கதவுகள் மூடுகின்றன. 598 00:40:28,920 --> 00:40:30,200 மேலே செல்கிறோம். 599 00:42:22,280 --> 00:42:24,280 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 600 00:42:24,360 --> 00:42:26,360 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா