1 00:00:43,752 --> 00:00:46,296 நான் சொல்கிறேன், இவள் புத்திசாலி. இவள் நமக்குப் பயன்படுவாள். 2 00:00:46,296 --> 00:00:47,631 இவள் விஷயங்களை உணர்வாள். 3 00:00:47,631 --> 00:00:49,383 என்னால் உணர முடியும். அது உண்மைதான். 4 00:00:49,383 --> 00:00:51,593 இவளை நாம் நம்ப முடியாது. இவள் பாஸுடன் வேலை செய்திருக்கிறாள். 5 00:00:51,593 --> 00:00:54,054 நாம் அனைவரும் அவருக்கு வேலை செய்கிறோம், ஆனால் அது நல்ல பாயின்ட்தான். 6 00:00:54,054 --> 00:00:57,891 - இவளை ஏன் நம்ப வேண்டும்? - இவள் அருமையானவள். இவள் ஒளியைப் பார்த்தாள். 7 00:00:57,891 --> 00:01:00,018 என்னிடம் சில விஷயங்கள் விளக்கப்பட்டன. 8 00:01:00,018 --> 00:01:03,188 நான் ஏற்றுக்கொள்ளாத சில காரணங்களுக்காக கடவுளுக்கு அந்த மேப் தேவைப்படுகிறது. 9 00:01:03,188 --> 00:01:07,568 கிளர்ச்சி செய்வதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது, ஆனால் நீங்கள் யார்? 10 00:01:07,568 --> 00:01:09,361 நாங்கள் கால-வெளி தொடர்ச்சி முழுவதிலும் உள்ள 11 00:01:09,361 --> 00:01:11,280 மிகவும் பயங்கரமான கொள்ளைக் கூட்டம் நாங்கள். 12 00:01:11,280 --> 00:01:13,448 நீ செரப் மசாலா உருவாக்குபவன் என நினைத்தேன். 13 00:01:13,448 --> 00:01:14,950 அதுவும்தான். அது என் வேலை. 14 00:01:15,784 --> 00:01:17,119 அதில் உனக்கு எதுவும் பிரச்சினையா? 15 00:01:17,119 --> 00:01:19,371 இல்லை, மக்களுக்கு செரப் மசாலா பிடிக்கும். 16 00:01:19,371 --> 00:01:20,622 அது காரமாக இருப்பதாகக் கூறுவார்கள். 17 00:01:20,622 --> 00:01:22,165 ஆம். 18 00:01:23,125 --> 00:01:24,084 நீ ஏற்கிறாயா? 19 00:01:26,628 --> 00:01:28,046 ஆம், ஏற்கிறேன். 20 00:01:28,046 --> 00:01:29,715 நல்லது, எனில் கேள். 21 00:01:29,715 --> 00:01:32,050 - பாபி? - இதுதான் திட்டம்: அதைத் திருடுகிறோம். 22 00:01:32,050 --> 00:01:32,968 எதைத் திருடுகிறோம்? 23 00:01:32,968 --> 00:01:35,179 அந்த மேப்பைத் திருடுகிறோம். 24 00:01:35,179 --> 00:01:38,640 ஆம். அதில் சின்ன பிரச்சினை என்னவெனில், அதை ஏற்கனவே திருடியுள்ளனர். 25 00:01:38,640 --> 00:01:41,768 அந்த புதர் வடிவமைப்பாளர்களாலா? அவர்களை நீ சந்தித்துள்ளாயா? 26 00:01:41,768 --> 00:01:44,855 - அவர்களைத் தேடியுள்ளேன். - அவர்கள் முட்டாள்கள். 27 00:01:44,855 --> 00:01:47,649 அதுதான் பாஸ் அந்த மேப்பை அடைய விரும்புவதற்கான உண்மையான காரணம். 28 00:01:47,649 --> 00:01:49,651 அந்த முட்டாள்கள் அவரை ஏமாற்றியது அவருக்கு அவமானமாக உள்ளது. 29 00:01:49,651 --> 00:01:51,778 அது எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. 30 00:01:51,778 --> 00:01:53,447 - ஆனால் உங்களுக்குத் தெரியுமா? - கண்டிப்பாகத் தெரியும். 31 00:01:54,281 --> 00:01:56,700 நாம் அந்த மேப்பை அடைந்ததும், எல்லாம் மாறப் போகிறது. 32 00:01:57,534 --> 00:02:00,370 அந்தக் கொள்ளையர்களிடம் அது ஏற்கனவே இருக்கும்போது அதை நாம் எப்படி அடைவது? 33 00:02:00,370 --> 00:02:01,580 நான் காட்டுகிறேன். 34 00:02:14,760 --> 00:02:16,178 ட்ராய். 35 00:02:17,638 --> 00:02:18,472 {\an8}ட்ராய் கிமு 1,200 36 00:02:18,472 --> 00:02:21,391 {\an8}- அது தீப்பற்றி எரிகிறதா? - நான் இங்கே வந்துள்ளேன். 37 00:02:21,391 --> 00:02:24,019 - இது கலவரமாக இருந்தது. - இங்கே ஏன் திரும்பக் கூட்டி வந்தாய், கெவின்? 38 00:02:24,019 --> 00:02:24,937 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 39 00:02:24,937 --> 00:02:26,021 இல்லை. 40 00:02:26,021 --> 00:02:29,024 இருக்கிறார். கசாண்ட்ரா. அவரால் எதிர்காலத்தைக் கூற முடியும். 41 00:02:29,024 --> 00:02:30,859 - முடியாது. - இல்லை, முடியாது. 42 00:02:30,859 --> 00:02:32,736 அவர் என்னிடம் கூறிய அனைத்தும் உண்மையாகியுள்ளன. 43 00:02:32,736 --> 00:02:35,739 மேப்பின் காணாமல் போன பகுதி எங்கே உள்ளது என்று அவரால் கூற முடியலாம். 44 00:02:35,739 --> 00:02:37,574 அதைக் கண்டறிய அவரால் உதவ முடியும் என நினைக்கிறாயா? 45 00:02:37,574 --> 00:02:38,825 ஆம். 46 00:02:40,202 --> 00:02:42,037 - ஆம். - சரி, போகலாம். 47 00:02:42,037 --> 00:02:44,915 நிச்சயமாக நாம் உள்ளே செல்ல வேண்டுமா? அது தீப்பற்றி எரிகிறது. 48 00:02:49,753 --> 00:02:52,506 இந்த நகரம் பகலின்போது இன்னும் வன்முறையாக உள்ளது. 49 00:02:52,506 --> 00:02:54,883 இது கிரேக்கர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. 50 00:02:55,467 --> 00:02:57,636 நீ எங்களை போரின் நடுவே கூட்டி வந்துள்ளாய். 51 00:02:57,636 --> 00:02:59,388 வழக்கமான உன் வேலைதான். 52 00:03:01,139 --> 00:03:02,850 ஈட்டிகளை கவனமாக எறியுங்கள். யாரையேனும் கொன்றுவிடப் போகிறீர்கள். 53 00:03:03,767 --> 00:03:06,979 சரி, இந்தக் குழப்பத்தில் கசாண்ட்ராவை எப்படிக் கண்டறிவது? 54 00:03:06,979 --> 00:03:08,105 யாரிடமாவது கேட்போம். 55 00:03:08,605 --> 00:03:10,399 - மன்னிக்கவும்? - ஜாக்கிரதை, கெவின். 56 00:03:11,066 --> 00:03:13,026 நீதான். உன்னை நேற்றிரவு பார்த்தோம். 57 00:03:14,027 --> 00:03:16,738 நாங்கள் ஒரு நண்பரைப் பார்க்க வந்தோம். கசாண்ட்ரா. 58 00:03:16,738 --> 00:03:18,115 அவளை சிறையில் அடைத்துவிட்டனர். 59 00:03:19,408 --> 00:03:20,826 - சரி. - சரி. 60 00:03:20,826 --> 00:03:21,743 நாங்கள் சரணடைகிறோம். 61 00:03:21,743 --> 00:03:24,246 - நாங்கள் ஜெயித்துவிட்டோம்! - நீங்கள் தோற்றுவிட்டீர்கள், ட்ரோஜன்களே! 62 00:03:24,246 --> 00:03:25,706 சரி, உனக்கு உதவுகிறோம். பிரச்சினையில்லை. 63 00:03:26,290 --> 00:03:28,292 தோஸ், டியோமீடிஸ், இவர்களை சிறைக்குக் கூட்டிச் செல். 64 00:03:28,292 --> 00:03:30,460 மற்றவர்களையும் சிறைக்குக் கூட்டிச் செல், ஆனால் பார்ப்பதற்கு மட்டும். 65 00:03:30,460 --> 00:03:31,545 சரி, சார். 66 00:03:34,590 --> 00:03:36,842 இதில் யார் பார்ப்பதற்கு மட்டும் என்று கூறினார்? 67 00:03:36,842 --> 00:03:38,719 தெரியவில்லை. நான் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 68 00:03:39,845 --> 00:03:41,972 நீங்கள்... நீங்கள்... 69 00:03:42,472 --> 00:03:43,348 செல்லுங்கள்! 70 00:03:46,643 --> 00:03:47,978 சரி, போகிறோம். 71 00:03:49,771 --> 00:03:51,815 உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடர்பில் இருங்கள். 72 00:03:54,318 --> 00:03:55,652 - அற்புதம். - அருமை, கெவின். 73 00:03:55,652 --> 00:03:57,196 ஆம், அருமை, கெவின். 74 00:03:57,196 --> 00:03:58,906 அவர் இங்குதான் எங்காவது இருக்க வேண்டும். 75 00:03:58,906 --> 00:04:00,908 கெவின், உனக்கு நாங்கள் உதவத்தான் விரும்புகிறோம், 76 00:04:00,908 --> 00:04:03,118 - ஆனால் நீ அதைக் கடினமாக்குகிறாய். - ஆம். 77 00:04:03,118 --> 00:04:04,912 தானம் கொடுத்த குதிரையை பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டும். 78 00:04:04,912 --> 00:04:06,955 அதைத்தான் நான் கூறினேன், ஆனால் யாரும் கேட்கவில்லை. 79 00:04:06,955 --> 00:04:08,207 இப்போது நம்மைப் பார். 80 00:04:08,207 --> 00:04:10,250 அது அவர்தான்! கசாண்ட்ரா! 81 00:04:11,627 --> 00:04:14,379 கெவின்! உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 82 00:04:14,379 --> 00:04:15,881 அவர் அதை நிஜமாகக் கூறுவதாகத் தோன்றவில்லை. 83 00:04:15,881 --> 00:04:16,798 இல்லை. 84 00:04:16,798 --> 00:04:19,593 இவருக்கு ஒரு சாபம் உள்ளது. இவர் என்ன கூறினாலும் நாம் நம்ப மாட்டோம். 85 00:04:19,593 --> 00:04:21,261 அப்பா என்னிடம் நடந்துகொள்வது போல உள்ளது. 86 00:04:21,261 --> 00:04:23,263 கிட்டத்தட்ட, ஆனால் நீ வழக்கமாக பொய்தான் கூறுவாய். 87 00:04:23,263 --> 00:04:26,350 - என்னவோ. - கெவின், பேரண்டத்தைக் காப்பாற்றிவிட்டாயா? 88 00:04:26,350 --> 00:04:29,394 இன்னும் இல்லை. என் பெற்றோரைக் காப்பாற்றிய பிறகு அதைச் செய்யப் போகிறேன். 89 00:04:30,103 --> 00:04:34,358 முதலில் பேரண்டத்தைக் காப்பாற்றிவிட்டு உன் பெற்றோரைக் காப்பாற்றலாம் எனத் தோன்றவில்லையா? 90 00:04:34,358 --> 00:04:37,694 புராணங்களின் காலத்தைக் கண்டறிவதற்கான மேப்பின் காணாமல் போன பகுதி தேவை. 91 00:04:37,694 --> 00:04:39,780 அதை எங்கே கண்டறியலாம் எனத் தெரியுமா? 92 00:04:45,077 --> 00:04:46,411 அவருக்குத் தெரியும் என நினைக்கிறேன். 93 00:04:46,411 --> 00:04:47,913 ஆம், இது நல்லவிதமாகத் தோன்றுகிறது. 94 00:04:47,913 --> 00:04:49,414 ஆம், அவர் நமக்கு உதவப் போகிறார். 95 00:04:49,414 --> 00:04:50,832 அவர் என்னவொரு தீர்க்கதரிசி. 96 00:04:56,338 --> 00:05:00,384 அதைக் கடைசியாக எங்கே பார்த்தீர்கள்? 97 00:05:00,968 --> 00:05:02,761 - கமான். - அது எதிர்காலத்தைக் கூறுவதில்லை. 98 00:05:02,761 --> 00:05:05,472 அது தீர்க்கதரிசனம் இல்லை. அது அம்மா எப்போதும் கூறுவது. 99 00:05:05,472 --> 00:05:07,224 அது நல்ல அறிவுரைதான். 100 00:05:07,724 --> 00:05:09,601 அதைக் கடைசியாக எங்கே பார்த்தீர்கள்? 101 00:05:09,601 --> 00:05:12,938 அதைக் கடைசியாகப் பார்த்தது... 102 00:05:15,023 --> 00:05:16,525 - ஆம். - எப்போது? 103 00:05:16,525 --> 00:05:17,734 சூசன் இறந்தபோது. 104 00:05:17,734 --> 00:05:20,445 நாங்கள் காலக் கொள்ளையர்கள். சூசன்தான் முக்கியமான கொள்ளையராக இருந்தாள். 105 00:05:20,445 --> 00:05:21,572 அவள்தான் எங்களில் சிறந்தவள். 106 00:05:21,572 --> 00:05:24,408 சூசன். அவர் ஒரு பெரிய பாறையால் நசுக்கப்பட்டார், இல்லையா? 107 00:05:24,408 --> 00:05:26,618 நன்றி, கெவின். மிகவும் உணர்வுப்பூர்வமானது. 108 00:05:26,618 --> 00:05:28,704 - அது அவசியமா, கெவின்? - அது நன்றாக இல்லை, கெவின். 109 00:05:28,704 --> 00:05:33,208 சூசன் இறந்த இடத்தில்தான் மேப்பின் காணாமல் போன பகுதியைக் கடைசியாகப் பார்த்தீர்கள் எனில், 110 00:05:33,208 --> 00:05:34,793 அங்குதான் நாம் செல்ல வேண்டும். 111 00:05:34,793 --> 00:05:36,295 - அது சரியாக இருக்கலாம். - இருக்கலாம். 112 00:05:36,295 --> 00:05:37,838 - ஆம், இருக்கலாம். - அவன் சொல்வது சரிதான். 113 00:05:37,838 --> 00:05:39,131 இப்போது அப்படித் தோன்றவில்லை. 114 00:05:39,131 --> 00:05:40,340 ஆம், வாய்ப்பே இல்லை. 115 00:05:40,340 --> 00:05:41,717 நம்மால் சூசனையும் காப்பாற்ற முடியலாம். 116 00:05:41,717 --> 00:05:43,802 - நாங்கள் பலமுறை முயன்றோம். - நாங்கள் பலமுறை முயன்றோம். 117 00:05:43,802 --> 00:05:44,970 பலமுறை முயன்றோம். 118 00:05:44,970 --> 00:05:46,638 நான்கு முறைக்குப் பிறகு நான் கணக்கை விட்டுவிட்டேன். 119 00:05:46,638 --> 00:05:48,223 நீங்கள் உங்கள் நண்பரைக் காப்பாற்ற மாட்டீர்கள். 120 00:05:48,223 --> 00:05:49,391 இந்த முறை காப்பாற்ற முடியும் என நினைக்கிறேன். 121 00:05:49,391 --> 00:05:51,101 - நம் நண்பரைக் காப்பாற்றுவோம். - நாம் காப்பாற்றுவோம். 122 00:05:51,101 --> 00:05:53,729 - அதற்கு அதுதான் அர்த்தம். எனவே... - நம் நண்பரைக் காப்பாற்றப் போகிறோம். 123 00:05:53,729 --> 00:05:56,398 இங்கிருந்து எப்படிப் போவது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 124 00:06:07,451 --> 00:06:11,205 ஒரு கேள்வி, நான் காவினுடன் மீண்டும் இணைவேனா? 125 00:06:12,164 --> 00:06:14,416 என்னைக் கொல்ல விரும்புபவர்கள் கண்ணில் படாமல் இருக்க முயல்கிறேன். 126 00:06:14,917 --> 00:06:15,918 இணைவேனா இல்லையா? 127 00:06:16,460 --> 00:06:19,171 இந்தத் தேடலைத் தொடர்ந்தால் அவருடன் மீண்டும் இணைவாய். 128 00:06:19,880 --> 00:06:22,508 - எனில் அவனைப் பார்க்கவே மாட்டேன். - அந்த சாபம் நினைவிருக்கட்டும். 129 00:06:22,508 --> 00:06:24,426 அவளை நம்புவது கடினமாக உள்ளது. 130 00:06:24,426 --> 00:06:26,887 காவின் ஒரு மனிதனின் தலையின் மீது வசிக்கிறார். 131 00:06:27,554 --> 00:06:30,140 பார், சாபமோ இல்லையோ, அது கிறுக்குத்தனமானது. 132 00:06:30,140 --> 00:06:33,393 நாங்கள் வெறும் புதர் வடிவமைப்பாளர்கள் இல்லை என்று கடவுளுக்குக் காட்டுவோமா? 133 00:06:33,393 --> 00:06:34,561 ஆம். 134 00:06:35,354 --> 00:06:37,189 என் காதல் பிரிவை நான் கடப்பேனா? 135 00:06:37,898 --> 00:06:39,191 - இல்லை. - நல்லது. 136 00:06:39,191 --> 00:06:40,234 நான் தனிமையாக இருப்பேனா? 137 00:06:40,859 --> 00:06:41,860 ஆம். 138 00:06:41,860 --> 00:06:43,403 கெவின் எப்போதாவது மேதாவியாக நடந்துகொள்வதை நிறுத்துவானா? 139 00:06:43,403 --> 00:06:45,781 - இல்லை. - நாங்கள் முழுமையான தீயசக்தியை வீழ்த்துவோமா? 140 00:06:45,781 --> 00:06:48,367 இல்லை. கண்டிப்பாக இல்லை. 141 00:06:48,367 --> 00:06:50,285 அருமை. உத்திரவாதமான வெற்றி. 142 00:06:50,285 --> 00:06:51,495 ஆனால் அது நல்லதில்லை. 143 00:06:52,162 --> 00:06:56,083 பேரண்டத்தைக் காப்பாற்ற மறக்காதீர்கள். உங்களால் முடியும். உங்களை நம்புகிறேன்! 144 00:06:57,292 --> 00:06:58,836 சரி, போர்ட்டலுக்குப் போய், 145 00:06:58,836 --> 00:07:01,213 காணாமல் போன மேப்பின் பகுதியைக் கண்டுபிடிக்கலாம். வாருங்கள். 146 00:07:01,213 --> 00:07:02,339 - பதுங்கி ஓடலாம். - பதுங்கி ஓடலாம். 147 00:07:02,339 --> 00:07:06,802 செல்லுங்கள்! சிறுவர்களை கேடயமாகப் பயன்படுத்துங்கள்! 148 00:07:24,528 --> 00:07:25,988 ”மனிதனின் தலை மீது வசிக்கிறார்.” 149 00:07:25,988 --> 00:07:28,073 போர்ட்டல் இங்குதான் எங்காவது இருக்க வேண்டும். 150 00:07:29,741 --> 00:07:31,034 அதுதான் போர்ட்டலா? 151 00:07:32,119 --> 00:07:33,620 மேப்பின்படி அது இல்லை. 152 00:07:41,003 --> 00:07:42,546 என்ன அது? 153 00:07:47,801 --> 00:07:49,261 அது நெப்டியூனா? 154 00:07:49,887 --> 00:07:51,638 அது பொசைடன். கிரேக்கக் கடவுள். 155 00:07:51,638 --> 00:07:54,308 பொசைடன் முன்பு மண்டியிடுங்கள்! 156 00:07:54,933 --> 00:07:56,685 எல்லா வரலாறும் இந்தளவுக்கு சுவாரஸ்யமாக இருக்க விரும்புகிறேன். 157 00:07:56,685 --> 00:07:59,730 இது வரலாறு இல்லை, சாஃப். இது புராணம். 158 00:07:59,730 --> 00:08:01,982 சரி. வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. 159 00:08:01,982 --> 00:08:04,526 மேப்பைத் திருப்பிக் கொடுங்கள். 160 00:08:04,526 --> 00:08:06,236 அது கடவுள்! 161 00:08:07,112 --> 00:08:10,532 நாங்கள் முழுமையான தீயசக்தியிடமிருந்து எங்கள் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். 162 00:08:10,532 --> 00:08:12,367 எங்களுக்கு உதவுவீர்களா? 163 00:08:12,367 --> 00:08:14,995 எனக்குச் சொந்தமானதைத் திருப்பிக் கொடுங்கள்! 164 00:08:14,995 --> 00:08:19,917 கெவின், உன்னால் அவரிடம் பேச முடியாது. அவருக்கு கடவுள் மனப்பான்மை உள்ளது. ஓடு! 165 00:08:31,345 --> 00:08:33,679 - ஓ! - “ஓ” என்பது சரிதான். 166 00:08:34,431 --> 00:08:37,308 மன்னிக்கவும், உன்னை பயமுறுத்த நினைக்கவில்லை, கெவ்ஸ்டர். 167 00:08:37,308 --> 00:08:38,936 கெவ்ஸ்டர்தானே? 168 00:08:38,936 --> 00:08:40,604 அது, ஆம். 169 00:08:41,270 --> 00:08:43,440 நினைத்தேன். நான் யாரெனத் தெரியுமா? 170 00:08:43,440 --> 00:08:45,359 கடவுளா? 171 00:08:45,359 --> 00:08:47,236 ஆம், கடவுள். 172 00:08:47,236 --> 00:08:48,904 இது சொர்க்கமா? 173 00:08:48,904 --> 00:08:50,364 இல்லை, இது சொர்க்கம் இல்லை, கெவின். 174 00:08:50,364 --> 00:08:51,740 இது நான் வெறுமையிலிருந்து உருவாக்கிய, 175 00:08:51,740 --> 00:08:54,535 பெரிய, பரந்த உறுதியற்ற வெள்ளைநிற வெற்றிடம். 176 00:08:55,077 --> 00:08:56,411 அதற்கு முன் அந்த வெறுமை என்னவாக இருந்தது? 177 00:08:56,411 --> 00:08:58,330 முழுமையான கருமைநிற இருள். 178 00:08:59,122 --> 00:09:01,416 அதற்கு முன், அனைத்தும் பின்க் நிறத்தில் இருந்தன. 179 00:09:01,416 --> 00:09:03,961 என்னால் உனக்குப் பிடித்த எதையும் உருவாக்க முடியும். 180 00:09:05,254 --> 00:09:06,505 அருங்காட்சியகம் போலவா? 181 00:09:07,089 --> 00:09:08,257 அருங்காட்சியகமும் கூட. 182 00:09:08,257 --> 00:09:12,386 ஆங்காங்கே சில பழங்காலப் பொருட்கள், அஞ்சலட்டைகள் விற்கும் பரிசுக் கடை, 183 00:09:12,386 --> 00:09:14,179 கேவலமான உணவுகளைக் கொண்ட கஃபே. 184 00:09:14,179 --> 00:09:18,016 நீ விரும்பும் எதையும் என்னால் உருவாக்க முடியும், ஆனால் இப்போது இல்லை. 185 00:09:18,016 --> 00:09:19,476 ஆனால் உங்களால் இப்படி... 186 00:09:20,269 --> 00:09:21,812 அது அப்படி நடக்காது. 187 00:09:21,812 --> 00:09:22,938 அதற்கு நேரம் எடுக்கும். 188 00:09:22,938 --> 00:09:25,858 மேலும், இப்போதெல்லாம் ஹெச்ஆர் தொல்லைகள் உள்ளன. 189 00:09:26,733 --> 00:09:27,776 ஆம், மிகவும் தொல்லை. 190 00:09:27,776 --> 00:09:31,738 கெவின், அருங்காட்சியகங்கள் கட்டுவது பற்றிப் பேச உன்னை இங்கே கூட்டி வரவில்லை. 191 00:09:32,531 --> 00:09:36,827 இல்லை, என் மனதில் வேறு உள்ளது, எனக்கு வேறொன்று தேவை. 192 00:09:36,827 --> 00:09:38,745 அது என்னவென்று கணிக்க முடியுமா? கணிக்காதே. நான் சொல்கிறேன். 193 00:09:38,745 --> 00:09:40,706 - உங்களுக்கு மேப் வேண்டும். - எனக்கு... உனக்குத் தெரியுமா? 194 00:09:40,706 --> 00:09:42,082 உனக்கு... உனக்கு எப்படித் தெரியும்? 195 00:09:42,082 --> 00:09:44,459 அந்தப் பெரிய தலையில் நீங்கள் இருக்கும்போது நீங்கள்... 196 00:09:44,459 --> 00:09:46,128 ஆம். எனவே உனக்குத் தெரியும். ஆம், சரி. 197 00:09:46,128 --> 00:09:48,672 ஆம், எனக்கு என் மேப் வேண்டும். அதை எப்படி நான் பெறுவது? 198 00:09:48,672 --> 00:09:50,674 கொள்ளையர்கள் அதை உங்களிடம் கொடுக்க விரும்பவில்லை. 199 00:09:51,758 --> 00:09:52,759 சாபங்கள். 200 00:09:53,385 --> 00:09:55,470 என் பக்கம் இருந்து எனக்கு 201 00:09:55,470 --> 00:09:57,181 உதவக்கூடிய ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும். 202 00:09:57,181 --> 00:09:59,892 ஒற்றன் போலவா? 203 00:10:00,976 --> 00:10:03,228 ஒற்... அது நல்ல யோசனை. 204 00:10:04,146 --> 00:10:06,440 நீ கற்பனைத்திறன் மிக்க சிறுவன், இல்லையா? 205 00:10:06,440 --> 00:10:07,858 ஆம், ஒற்றன் போல. 206 00:10:07,858 --> 00:10:11,778 அசல் உரிமையாளருக்காக பொருட்களைத் திருடிக் கொடுக்கும் ஒற்றன். 207 00:10:11,778 --> 00:10:13,697 அவர்கள் அந்த மேப்பை உன்னிடம் கொடுத்து, அதை நீ 208 00:10:13,697 --> 00:10:18,911 என்னிடம் கொடுத்தால், மாறாக உனக்கு நான் ஒன்று கொடுப்பேன். 209 00:10:19,953 --> 00:10:22,456 நான் வசிப்பதற்கென தனியாக ஒரு ஸ்டோன்ஹென்ஜா? 210 00:10:22,456 --> 00:10:23,373 இல்லை. 211 00:10:23,373 --> 00:10:26,585 உன் பெற்றோரைத் திருப்பித் தருவது போன்றதைக் கூறலாம் என்றிருந்தேன். 212 00:10:26,585 --> 00:10:28,128 உங்களால் அது முடியுமா? 213 00:10:30,380 --> 00:10:31,465 என்னால் அது முடியுமாவா? 214 00:10:31,465 --> 00:10:33,008 என்னால் எதுவும் முடியும், கெவின். 215 00:10:34,384 --> 00:10:36,136 உன் பெற்றோரை என்னால் காப்பாற்ற முடியும், தம்பி. ஆம். 216 00:10:36,136 --> 00:10:38,639 மேலும், அந்தப் பெற்றொர் கிட்டத்தட்ட ஒரு தவறுதான், 217 00:10:38,639 --> 00:10:39,723 உண்மைதானே? 218 00:10:39,723 --> 00:10:41,225 உனக்குப் பிடித்தவற்றில் அவர்களுக்கு ஆர்வமில்லை, 219 00:10:41,225 --> 00:10:44,603 அவர்கள் வரலாறு பற்றி அக்கறை கொள்வதில்லை, நீ புத்தகம் படிப்பதை அவர்கள் வெறுக்கின்றனர். 220 00:10:44,603 --> 00:10:46,438 அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவில்லை, கெவின். 221 00:10:47,022 --> 00:10:49,024 உன் பெற்றோரின் சிறந்த பதிப்பை என்னால் கொடுக்க முடியும். 222 00:10:49,608 --> 00:10:52,402 அது எப்படி உள்ளது? உன் மீது ஆர்வம் காட்டும் பெற்றோர். 223 00:10:52,402 --> 00:10:53,737 நீ எதையும் பெறலாம்... 224 00:10:55,614 --> 00:10:56,532 அல்லது யாரையும் பெறலாம். 225 00:10:56,532 --> 00:10:58,450 நீ விரும்பும் எந்தப் பெற்றோரையும் நீ பெறலாம், கெவின். 226 00:11:03,372 --> 00:11:05,207 - ஒருவேளை நீ விரும்புவது... - கெவின். 227 00:11:05,207 --> 00:11:06,959 - ...இதுவாக இருக்கலாம். - எங்கள் அணிக்கு வா. 228 00:11:06,959 --> 00:11:08,585 இல்லை, எங்களுடன் வந்து விளையாடு, கெவ். 229 00:11:09,419 --> 00:11:11,380 அனைவரும் உன்னை விரும்புகின்றனர். அவர்களைப் பார். 230 00:11:11,380 --> 00:11:12,798 அவர்களுடன் இணையப் போகிறாயா, கெவின்? 231 00:11:12,798 --> 00:11:14,967 கெவின், எங்களுக்கு வரலாற்று உண்மைகளைக் கூறு. 232 00:11:14,967 --> 00:11:16,218 ஆம், கால்பந்து வேண்டாம். 233 00:11:16,218 --> 00:11:18,512 வரலாறு! 234 00:11:18,512 --> 00:11:20,722 என்ன சொல்கிறாய், கெவின்? இதை ஒப்புக்கொள்கிறாயா? 235 00:11:22,599 --> 00:11:23,600 கெவின். 236 00:11:25,269 --> 00:11:28,021 கேள், கெவின். அந்த மேப் எனக்கு மிகவும் முக்கியமானது, சரியா? 237 00:11:28,021 --> 00:11:29,356 ஆம். 238 00:11:29,356 --> 00:11:31,775 என் ஒற்றனாக இரு, அந்தக் கொள்ளையர்களிடம் செல் 239 00:11:31,775 --> 00:11:33,610 அந்த மேப்பை என்னிடம் கொடு. 240 00:11:38,782 --> 00:11:41,827 நீ விரும்பும் எதையும் நீ பெறலாம். 241 00:11:45,664 --> 00:11:47,416 அப்படிக் கூறுவது நன்றாக இல்லை. 242 00:11:47,416 --> 00:11:49,001 மிகவும் நெருக்கம். 243 00:11:49,001 --> 00:11:50,544 அது மிகவும் நெருக்கமாக வந்தது. 244 00:11:50,544 --> 00:11:52,713 - அவர் கிட்டத்தட்ட கெவினைப் பிடித்துவிட்டார். - அவர் நம்மை எப்படிக் கண்டுபிடித்தார்? 245 00:11:52,713 --> 00:11:54,256 ஏன் எல்லாமே தவறாக நடக்கிறது? 246 00:11:54,256 --> 00:11:57,634 பெனெலோபியின் மோசமான தலைமைப் பண்புகளால்தான் எல்லாம் தவறாக நடக்கின்றன. 247 00:11:57,634 --> 00:11:59,469 அல்லது உனக்கு மேப் படிக்கத் தெரியாததால், 248 00:11:59,469 --> 00:12:06,018 திரு. “ஓ, நாம் டண்ட்ராவில் உள்ளோம்”, “ஓ”... “பாரீஸ், 1920” என நினைக்கிறேன். 249 00:12:06,018 --> 00:12:08,145 நாம் அந்த இடத்திற்குப் போகப் போகிறோம். நீங்கள் பார்ப்பீர்கள். 250 00:12:08,145 --> 00:12:10,647 ஒருவேளை நம்மிடையே ஒற்றர் இருக்கலாம். 251 00:12:11,565 --> 00:12:14,276 - ஜூடி எங்கே? - ஆம். ஜூடி எங்கே? 252 00:12:14,276 --> 00:12:17,196 அதைப் பற்றிப் பேசுவோம் அல்லது நீ பாலைவனத்தில் காணாமல் போனது பற்றிப் பேசுவோம். 253 00:12:17,946 --> 00:12:21,450 நீங்கள் அனைவரும் காணாமல் போனீர்கள். நான் போகவில்லை. 254 00:12:21,450 --> 00:12:22,868 வழக்கமான ஒற்றரின் வேலை. 255 00:12:22,868 --> 00:12:24,077 - யார், நடிகனா? - ஆம். 256 00:12:24,077 --> 00:12:27,289 எப்போதும் தானாக இருக்காத, மாறுவேடத்தில் கைதேர்ந்தவன், சரியா? 257 00:12:27,289 --> 00:12:29,416 நீங்கள் மூவரும் ஒன்றாக வேலை செய்கிறீர்கள் என நினைக்கிறேன். 258 00:12:29,416 --> 00:12:30,667 அது ஒரு ஒற்றர் குழு. 259 00:12:30,667 --> 00:12:32,586 என்னால் உண்மை மட்டும்தான் கூற முடியும். 260 00:12:32,586 --> 00:12:34,671 உன் நடிப்பு உண்மையைக் கூறுவது இல்லை, நண்பா. 261 00:12:34,671 --> 00:12:37,257 நான் ஒற்றன் இல்லை, பெனெலோபி. உன் நோக்கம்தான் வெளிப்படையானது இல்லை. 262 00:12:37,257 --> 00:12:39,885 - என்ன? - நாம் கவனம் செலுத்தலாமா? 263 00:12:39,885 --> 00:12:40,928 ஆம். 264 00:12:40,928 --> 00:12:42,387 ஆம், நாம் கவனம் செலுத்த வேண்டும். 265 00:12:42,387 --> 00:12:44,264 நாம் சூசன் இறந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். 266 00:12:44,264 --> 00:12:46,350 ஓ, கமான். அது மிகவும் தூரம். 267 00:12:46,350 --> 00:12:49,019 நாம் அங்கே செல்ல பல இடங்களையும் காலத்தையும் கடக்க வேண்டும். 268 00:12:49,019 --> 00:12:53,023 போகும் வழியில் உள்ள எல்லா நிறுத்தங்களையும் அகற்ற நான் ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்துள்ளேன். 269 00:12:53,023 --> 00:12:55,317 விரும்பினால் அதை விரைவு வழி என அழைக்கலாம். 270 00:12:55,317 --> 00:12:59,571 - அதில் எதுவும் சிக்கல் உள்ளதா? - இல்லை. ஆம்... 271 00:13:08,413 --> 00:13:10,707 அடக் கடவுளே. கிட்டத்தட்ட விழுந்திருப்போம். 272 00:13:10,707 --> 00:13:12,709 நாம் கிட்டத்தட்ட குன்றிலிருந்து விழுந்திருப்போம்! 273 00:13:12,709 --> 00:13:13,794 வாவ், நான் சரியாகக் கூறியுள்ளேன். 274 00:13:13,794 --> 00:13:16,004 நாம் கண்டிப்பாக உயிர்பிழைப்போம் என்று கூறினாய். 275 00:13:16,547 --> 00:13:18,298 - கிட்டத்தட்ட கண்டிப்பாக. - கிட்டத்தட்டவா? 276 00:13:18,298 --> 00:13:21,051 - ஆம், சுமார் 60 சதவீதம் கண்டிப்பாக. - 60 சதவீதமா? 277 00:13:21,051 --> 00:13:24,596 பெனெலோபியின் நோக்கம் வெளிப்படையானது இல்லை என்று என்ன கூறினாய்? 278 00:13:25,472 --> 00:13:28,392 ஓ, ஆம். பெனெலோபி என்னிடம் ரகசியமாக, 279 00:13:28,392 --> 00:13:30,769 காவின் இருக்கக்கூடிய இடங்களுக்குக் கூட்டிச் செல்லும்படி கூறினாள். 280 00:13:30,769 --> 00:13:32,938 அதுதான் பெனெலோபியின் திட்டம். இல்லையா, பெனெலோபி? 281 00:13:32,938 --> 00:13:34,398 - என்ன? - யார்? 282 00:13:34,398 --> 00:13:35,482 அவளது முன்னால் வருங்காலக் கணவன். 283 00:13:35,482 --> 00:13:39,069 அவர் மறைந்ததால்தான் முன்னாள். இன்னும் ஒன்றாகத்தான் உள்ளோம். 284 00:13:39,069 --> 00:13:43,031 இல்லை. இதை சுதந்திரமாக இருக்கவும், கிளர்ச்சி செய்யவும், வாழ்க்கையை வாழவும் செய்வதாகக் கூறினாய். 285 00:13:43,031 --> 00:13:44,950 இவ்வளவு நாட்களும், நீ உன் முன்னாள் காதலனைத் தேடிக்கொண்டிருந்தாயா? 286 00:13:44,950 --> 00:13:46,702 - வருங்காலக் கணவன். - எங்களிடம் பொய் கூறியிருக்கிறாயா? 287 00:13:46,702 --> 00:13:48,912 நான் அதை அப்படிக் கூற மாட்டேன். 288 00:13:48,912 --> 00:13:52,332 இல்லை, அது... அது இன்னும் பெரிய விஷயம். 289 00:13:52,332 --> 00:13:54,710 அது... அவன் தவறாகக் கூறுகிறான். 290 00:13:56,003 --> 00:13:58,297 பாருங்கள். அது மாவோரியிடம் நாம் பிடிபடுவது. 291 00:13:58,297 --> 00:14:00,174 {\an8}- பாருங்கள்! அது ஜூடி. - ஜூடி! 292 00:14:00,174 --> 00:14:01,633 {\an8}ஆவோடியரோ கிபி 1320 293 00:14:01,633 --> 00:14:03,343 ஜூடி! வெற்றிடத்தைத் தவிர்த்துவிடு! 294 00:14:03,343 --> 00:14:06,054 நம்மால் நம்மைக் கேட்க முடியவில்லை. ஜூடி! 295 00:14:06,638 --> 00:14:07,723 மீண்டும் காலம் கடந்துவிட்டது. 296 00:14:07,723 --> 00:14:09,683 - எப்போதும் தாமதம்தான். - ஆம். 297 00:14:09,683 --> 00:14:12,603 - அஞ்சலி செலுத்துவோம். - இங்குதான் சூசன் இறந்தார். 298 00:14:12,603 --> 00:14:14,605 - நன்றி, கெவின். - மிகவும் உணர்வுப்பூர்வமானது. 299 00:14:14,605 --> 00:14:15,856 - மிகவும் உணர்வுப்பூர்வமானது. - நன்றி. 300 00:14:15,856 --> 00:14:19,776 ஆம், இந்தக் குன்றிலிருந்துதான் சூசன் விழுந்தாள், 301 00:14:19,776 --> 00:14:23,530 ஆம், இங்குதான் பாறையால் அவள் நசுக்கப்பட்டாள். 302 00:14:23,530 --> 00:14:25,282 - ஆம். அது வலிக்கும், இல்லையா? - அந்த ஷூக்கள். 303 00:14:26,074 --> 00:14:28,076 அதுதான் அவளின் மிச்சம். 304 00:14:29,411 --> 00:14:31,872 கீழே இறந்த உடல் தெரியவில்லையே. 305 00:14:31,872 --> 00:14:33,373 இல்லை, நாங்கள் அலறல்களைக் கேட்டோம். 306 00:14:33,373 --> 00:14:35,000 அவள் குன்றிலிருந்து விழுவதைப் பார்த்தோம். 307 00:14:35,000 --> 00:14:38,003 பிறகு அவள், “நான் இந்தக் குன்றிலிருந்து விழுகிறேன்” என்று கூறினாள். 308 00:14:38,003 --> 00:14:41,340 பிறகு அவள், “இப்போது இந்தப் பெரிய பாறை என்னை நசுக்கப் போகிறது” என்றாள். 309 00:14:43,175 --> 00:14:44,510 அது சோகமாக இருந்தது. 310 00:14:44,510 --> 00:14:47,304 அவளை நினைவுகூர இருப்பதெல்லாம் அந்த ஷூக்கள்தான். 311 00:14:47,304 --> 00:14:48,847 அளவு 13. 312 00:14:49,556 --> 00:14:52,100 - சூசனுக்காக அஞ்சலி செலுத்தலாமா? - சரி. 313 00:14:53,852 --> 00:14:54,686 சூசன். 314 00:15:00,442 --> 00:15:02,402 இந்த சோகமான மனநிலையைக் குறுக்கிட விரும்பவில்லை, 315 00:15:02,903 --> 00:15:04,488 ஆனால் அங்கே இருப்பது அவரா? 316 00:15:04,488 --> 00:15:06,156 அடக் கடவுளே. 317 00:15:06,156 --> 00:15:08,075 அது... அது அவள்தான்! 318 00:15:08,075 --> 00:15:09,535 அவள்... அவள்... 319 00:15:09,535 --> 00:15:10,994 சூசன்! 320 00:15:10,994 --> 00:15:16,333 - சூசன்! - சூசன்! 321 00:15:17,042 --> 00:15:18,043 சூசன்! 322 00:15:19,336 --> 00:15:21,672 - சூசன்! - அவர் உங்களிடமிருந்து ஓடுகிறார். 323 00:15:21,672 --> 00:15:23,757 - அவளுக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை, சரியா? - ஆம். 324 00:15:23,757 --> 00:15:25,175 - சூசன், நாங்கள் வருகிறோம்! - சூசன்! 325 00:15:25,175 --> 00:15:27,427 - சூசன்! - நாங்கள் வருகிறோம்! 326 00:15:27,427 --> 00:15:29,763 சூசன்! 327 00:15:29,763 --> 00:15:33,433 - சூசன்! - அந்தப் போர்ட்டல் மேப்பில் இல்லை. 328 00:15:33,433 --> 00:15:35,310 இல்லை, அவளிடம் மேப் இல்லை. 329 00:15:35,310 --> 00:15:36,436 அவரிடம் இருக்கலாம். 330 00:15:36,436 --> 00:15:38,188 காணாமல் போன பகுதி. 331 00:15:38,188 --> 00:15:39,815 அதைத் திருடுவதற்காக அவர் பொய்யாக இறந்திருக்கலாம். 332 00:15:39,815 --> 00:15:41,775 சூசன் அப்படிச் செய்ய மாட்டாள். 333 00:15:41,775 --> 00:15:43,652 நாங்கள் வருகிறோம், சூசன்! 334 00:15:43,652 --> 00:15:45,529 எங்களைப் பார்த்தால் சூசன் மகிழ்ச்சியடைவாள்! 335 00:15:45,529 --> 00:15:46,989 சூசன்! 336 00:15:50,284 --> 00:15:55,372 சூசன்! 337 00:16:00,460 --> 00:16:02,087 {\an8}கின் ராஜ்ஜியம் கிமு 220 338 00:16:02,087 --> 00:16:04,715 {\an8}சூசன்! 339 00:16:05,591 --> 00:16:07,050 - சூசன்! - சூசன்! 340 00:16:07,050 --> 00:16:08,594 சூசன்! அவளால் நம்மைக் கேட்க முடியவில்லை. 341 00:16:08,594 --> 00:16:10,387 அந்தப் பாறையால் அவளது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம். 342 00:16:10,387 --> 00:16:13,640 கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்குமா? உங்களை யாரும் புறக்கணித்ததில்லையா? 343 00:16:13,640 --> 00:16:16,143 சூசன்! 344 00:16:19,396 --> 00:16:21,523 - சூசன், இது நாங்கள்தான்! - சூசன்! 345 00:16:21,523 --> 00:16:24,276 காவலர்களே, அவர்களை நிறுத்துங்கள். நில்லுங்கள். 346 00:16:24,276 --> 00:16:27,362 நீங்கள் இந்தப் பக்கம் ஓட முடியாது. இங்கே சுவர் உள்ளது. 347 00:16:28,322 --> 00:16:31,533 இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தைத் தாண்டி ஓடிய எங்கள் 348 00:16:31,533 --> 00:16:35,162 தோழியைப் பிடிக்க முயல்கிறோம். 349 00:16:35,162 --> 00:16:38,207 யாரும் இந்தச் சுவரைத் தாண்ட முடியாது. அது சாத்தியமில்லை. 350 00:16:38,207 --> 00:16:40,918 ஆனால் அவள் தாண்டினால், ஏனெனில் இங்கே சுவர் இல்லை. 351 00:16:40,918 --> 00:16:43,962 - சுவர் உள்ளது. - எனில் அவள் எப்படி அங்கே போனாள்? 352 00:16:44,546 --> 00:16:48,133 - சூசன்! - அது குறியீட்டு வார்த்தையா? “சூசன்!” 353 00:16:49,635 --> 00:16:50,802 நீங்கள் யாரெனத் தெரியும். 354 00:16:51,386 --> 00:16:55,724 என் எதிரிகளால் என்னைக் கொல்ல அனுப்பப்பட்ட கொலைகாரர்கள். 355 00:16:57,518 --> 00:16:59,645 நான் மூடநம்பிக்கை உடையவன் என மக்கள் கூறுகின்றனர். 356 00:16:59,645 --> 00:17:01,438 ஆனால் என்னை தொடர்ந்து விஷம் வைத்துக் 357 00:17:01,438 --> 00:17:04,733 கொல்ல முயன்றால் நான் மூடநம்பிக்கை உடையவன் இல்லை. 358 00:17:04,733 --> 00:17:06,234 - நாங்கள் அதைச் செய்ய முயலவில்லை. - இல்லை. 359 00:17:06,234 --> 00:17:09,530 இதுபோன்ற விஷயங்களைத் தடுக்கத்தான் என் சுவரைக் கட்டியுள்ளேன். 360 00:17:09,530 --> 00:17:11,531 நீங்கள் கின் ஷி ஹுவாங்கா? 361 00:17:11,531 --> 00:17:13,032 ஆம், குட்டிக் கொலைகாரனே. 362 00:17:13,032 --> 00:17:15,827 வாவ். நான் எப்போதும் உங்கள் பெருஞ்சுவரைப் பார்க்க விரும்பியுள்ளேன். 363 00:17:15,827 --> 00:17:18,288 சரி, ஆனால் இது... 364 00:17:18,288 --> 00:17:21,583 அற்புதம். நிஜமாகவே, இது சிறப்பானது. 365 00:17:21,583 --> 00:17:23,669 இது முடியவில்லை, ஆனால் நன்றி. 366 00:17:23,669 --> 00:17:24,920 பரவாயில்லை. 367 00:17:24,920 --> 00:17:26,171 சரி, போகலாம். 368 00:17:26,171 --> 00:17:27,839 அவர்கள் இந்தப் பக்கம் வந்தால், 369 00:17:27,839 --> 00:17:29,716 அவர்களது கண்களில் குத்தி, அவற்றை மீன்கள் போல வெளியே எடுங்கள். 370 00:17:29,716 --> 00:17:34,513 - அடக் கடவுளே. - நிஜமாகவா? இல்லாத சுவரைத் தாண்டாததற்கா? 371 00:17:34,513 --> 00:17:36,265 அது மிகவும் கண்டிப்பானது. 372 00:17:36,265 --> 00:17:38,225 இருங்கள். நான் எதிர்காலத்தைக் கணிப்பவன். 373 00:17:38,225 --> 00:17:41,478 எதிர்காலத்தைக் கணிப்பவனா? சுவருக்குபிறகு எனக்குப் பிடித்த விஷயம். 374 00:17:41,478 --> 00:17:42,604 ஆம், உலகம் முழுவதிலும் இருந்து 375 00:17:42,604 --> 00:17:46,400 மக்கள் கூட்டம் கூட்டமாக உங்கள் சுவரைப் பார்க்க வருவார்கள் எனக் கூறுகிறேன். 376 00:17:46,400 --> 00:17:49,528 இது மக்களைக் கவர்வதற்கானது இல்லை. அது அவர்களை வரவிடாமல் தடுப்பதற்காக! 377 00:17:49,528 --> 00:17:51,238 இல்லை, இது வர வைக்கும். 378 00:17:51,238 --> 00:17:56,451 இது நான்கு மில்லியன் செங்கற்களால் உருவாக்கப்படும், இதை முடிக்க 2,000 ஆண்டுகள் ஆகும். 379 00:17:56,451 --> 00:17:57,744 2,000 ஆண்டுகளா? 380 00:17:57,744 --> 00:18:01,206 என் கட்டுமானப் பணியாளர்கள் நான்கு மாதங்கள் என்றனர். இது நம்ப முடியாதது, இல்லையா? 381 00:18:01,206 --> 00:18:03,417 நல்ல கட்டுமானப் பணியாளர்கள் கிடைப்பது கடினம். 382 00:18:03,417 --> 00:18:06,378 - சரியா? - வாவ், நான்கு மில்லியன் செங்கற்கள். 383 00:18:06,378 --> 00:18:09,006 - வாவ். வாழ்த்துகள். - அருமை. 384 00:18:09,006 --> 00:18:11,008 - நாங்கள் ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும். - ஆம், அருமை. 385 00:18:11,592 --> 00:18:13,218 காவலர்களே, அவர்களை உள்ளே விடுங்கள். 386 00:18:13,802 --> 00:18:15,470 - நன்றி. - விஷம் உள்ளதா எனச் சோதியுங்கள். 387 00:18:16,221 --> 00:18:17,681 எனக்கு அந்த யோசனை பிடித்துள்ளது. 388 00:18:17,681 --> 00:18:20,809 நான்கு மில்லியன் செங்கற்கள் என்பது அருமையானது. 389 00:18:20,809 --> 00:18:23,437 என்னை நம்புங்கள், அது சிறப்பாக வேலை செய்யும். 390 00:18:23,437 --> 00:18:25,898 நீங்கள்தான் சீனாவின் முதல் பேரரசராவீர்கள். 391 00:18:25,898 --> 00:18:28,066 - சீனா என்றால் என்ன? - சீனா என்பது... 392 00:18:28,066 --> 00:18:31,945 கெவின், நாம் சூசனைப் பிடிக்க வேண்டுமெனில், நாம் ஓட வேண்டும். 393 00:18:37,868 --> 00:18:38,994 சூசன்? 394 00:18:39,578 --> 00:18:41,830 அது சூசன்! 395 00:18:42,372 --> 00:18:43,832 அடக் கடவுளே! 396 00:18:45,584 --> 00:18:47,753 இது ஒலிம்பிக் போட்டியா? உயரம் தாண்டுதலா? 397 00:18:47,753 --> 00:18:51,173 {\an8}இன்னும் மோசம். இது 1343-இல் உள்ள காஃபா நகரம். 398 00:18:51,173 --> 00:18:52,257 {\an8}காஃபா 1343 399 00:18:52,257 --> 00:18:54,510 {\an8}இது மங்கோலியப் படைகளால் தாக்கப்படுகிறது, 400 00:18:54,510 --> 00:18:57,763 அவர்கள் கொள்ளை நோயால் இறந்தவர்களை நகரத்திற்குள் வீசுகின்றனர். 401 00:19:00,599 --> 00:19:02,768 கருமம். உனக்கு ஏன் இது தெரிகிறது? 402 00:19:02,768 --> 00:19:05,687 இதுதான் பதிவுசெய்யப்பட்ட முதல் உயிரியல் ரீதியான போர். 403 00:19:05,687 --> 00:19:08,190 இப்படித்தான் கொள்ளை நோயானது ஐரோப்பாவிற்கு வந்தது. 404 00:19:08,190 --> 00:19:10,776 சரி... எனவே, நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 405 00:19:10,776 --> 00:19:13,403 ஆம், நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஜாம்பிகளைக் கடந்து செல்வதுதான். 406 00:19:13,403 --> 00:19:16,865 வரலாற்றில் இந்தப் பகுதியை படிப்பது மட்டுமே நல்லது. 407 00:19:16,865 --> 00:19:18,367 - சூசன் எங்கே? - சூசனைத் தொலைத்துவிட்டோம். 408 00:19:18,367 --> 00:19:22,955 சூசன்! 409 00:19:24,414 --> 00:19:25,958 சூசன்! திரும்பி வா! 410 00:19:25,958 --> 00:19:27,543 ஹேய்! 411 00:19:27,543 --> 00:19:31,088 ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் என்ன செய்கிறீர்கள்? 412 00:19:31,088 --> 00:19:32,005 என்ன இது? 413 00:19:32,005 --> 00:19:34,049 எங்கள் உற்ற நண்பரான சூசனைத் தேடுகிறோம். 414 00:19:34,049 --> 00:19:38,387 ஆம், மேலும் தொற்றக்கூடிய மிகவும் ஆபத்தான நோயிடமிருந்து விலகியிருக்க முயல்கிறோம். 415 00:19:38,971 --> 00:19:41,223 ஆம், ”கொடூரமான கொள்ளை நோய்” எனப்படும் நோய். 416 00:19:41,223 --> 00:19:42,766 நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 417 00:19:42,766 --> 00:19:47,896 மிகவும் ஆபத்தான தொற்றுநோய் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது கிறுக்குத்தனம். 418 00:19:47,896 --> 00:19:51,733 இல்லை, அது சாதாரண காய்ச்சல்தான். அனைவருக்கும் அது வரும். 419 00:19:52,484 --> 00:19:54,027 - நிஜமாகவா? - இல்லை. 420 00:19:54,027 --> 00:19:58,240 வயதானால்தான் கொள்ளை நோய் வரும், எங்களுக்கு 24 வயதுதான் ஆகிறது. 421 00:19:58,907 --> 00:20:02,703 அல்லது குளித்தாலும் வரும், சரியா? குளிக்காதீர்கள். அது முக்கியம். 422 00:20:02,703 --> 00:20:03,787 அவர் குளிக்கிறார். 423 00:20:04,705 --> 00:20:06,206 ஆம், ஆனால் சிறுநீரில். 424 00:20:07,165 --> 00:20:08,333 ஆம். 425 00:20:08,333 --> 00:20:09,710 - இல்லை. - ஆம். 426 00:20:09,710 --> 00:20:13,297 உத்திரவாதமான கொள்ளை நோய் பாதுகாப்பு, 100 சதவீதம். 427 00:20:13,297 --> 00:20:15,048 இன்னும் நிறைய குறிப்புகளுக்கு என்னைப் பின்தொடருங்கள். 428 00:20:15,048 --> 00:20:16,216 எதில்? 429 00:20:16,216 --> 00:20:17,885 கால்நடையாகத்தான். என்னைப் பின்தொடர்ந்து நடங்கள். 430 00:20:17,885 --> 00:20:19,887 இந்த வழியில், இடதுபக்கம்தான் என் கடை உள்ளது. 431 00:20:19,887 --> 00:20:22,055 - இல்லை. நாங்கள் பின்தொடர மாட்டோம். - உங்களுக்காக கம்பளங்கள் உள்ளன. 432 00:20:22,055 --> 00:20:23,682 நீங்கள் மகிழ்வீர்கள். வாருங்கள். 433 00:20:25,559 --> 00:20:28,937 சூசன்! திரும்பி வா. இது நாங்கள்தான். சூசன்! 434 00:20:34,234 --> 00:20:35,235 சூசன்! 435 00:20:35,235 --> 00:20:37,362 சூசன், உன்னால்... சூசன்! 436 00:20:39,531 --> 00:20:41,074 சூசன், இது நாங்கள்தான். 437 00:20:41,074 --> 00:20:43,160 சூசன்! 438 00:20:44,620 --> 00:20:47,247 நீ ஓடிக்கொண்டே இருந்தால் உன்னைக் கண்டறிவது கடினமாக இருக்கும். 439 00:20:48,415 --> 00:20:50,459 சூசன்! 440 00:20:54,338 --> 00:20:56,757 - சூசன், இது நாங்கள்தான். ஆம். - சூசன். 441 00:20:56,757 --> 00:21:00,719 இது நீதான் என்று தெரியும், ஏனெனில் நாங்கள் சொல்வது உனக்குப் புரியவில்லை! 442 00:21:01,428 --> 00:21:03,263 நான் விலகுகிறேன், சரியா? 443 00:21:03,847 --> 00:21:05,265 நான் இனி கொள்ளையர் இல்லை. 444 00:21:05,265 --> 00:21:06,892 சூசன் ஒருபோதும் அப்படிக் கூற மாட்டாள். 445 00:21:06,892 --> 00:21:09,269 - நான்தான் சூசன்! - நிஜமான சூசனை என்ன செய்தாய்? 446 00:21:09,269 --> 00:21:10,437 நான்தான் சூசன், 447 00:21:10,437 --> 00:21:14,191 நான் ஓர் இடத்திற்குச் செல்ல முயல்கிறேன், நீங்கள் பின்தொடர்வதை விரும்பவில்லை. 448 00:21:14,191 --> 00:21:16,985 என்னைத் தனியாக விடுங்கள். 449 00:21:22,574 --> 00:21:23,408 எனக்கு... 450 00:21:24,326 --> 00:21:25,577 எனக்குப் புரியவில்லை. 451 00:21:29,289 --> 00:21:30,374 அனைவரும் கவனியுங்கள். 452 00:21:31,291 --> 00:21:32,668 நான் முக்கியமான ஒன்றைக் கூறப் போகிறேன். 453 00:21:34,211 --> 00:21:35,587 ஒரு நிமிடம். 454 00:21:41,218 --> 00:21:43,637 ஒரு நிமிடம். அது இருமலா? 455 00:21:43,637 --> 00:21:46,181 அது என் தொண்டையைச் செருமுவது. 456 00:21:46,181 --> 00:21:48,725 நான் உரையாற்றப் போகிறேன், இதுபோல. 457 00:21:51,311 --> 00:21:55,274 ஆல்டோ, கொள்ளை நோயைக் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் வெளியாட்கள் கொல்லப்பட்டனர். 458 00:21:55,274 --> 00:21:57,025 - ஆனால் நமக்கு கொள்ளை நோய் இல்லையே. - இல்லை. 459 00:21:57,025 --> 00:21:58,277 அதைக் கேட்டீர்களா? 460 00:21:58,861 --> 00:22:02,364 நான் உண்மை என்று நம்பாத, கொள்ளை நோயை இந்த ஊடுருவிகள்தான் 461 00:22:02,364 --> 00:22:04,283 கொண்டு வந்துள்ளனர் என நினைக்கிறேன். 462 00:22:04,283 --> 00:22:05,742 என்ன? இல்லை, மக்களே. 463 00:22:05,742 --> 00:22:08,579 எங்களுக்கு கொடூர நோய் இருப்பதாக நினைப்பதால் எங்களைக் கொல்லாதீர்கள். 464 00:22:08,579 --> 00:22:11,957 எங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கும் அந்த நோயே எங்களைக் கொல்லட்டும். 465 00:22:17,880 --> 00:22:18,964 - இல்லை. நான் அதைக் கூறியிருக்க... - இல்லை. 466 00:22:19,965 --> 00:22:24,428 உள்ளே வீசப்படும் பிணங்களில்தான் கொள்ளை நோய் உள்ளது, எங்களுக்கு இல்லை. 467 00:22:24,428 --> 00:22:25,596 நாங்கள் இல்லை. விட்ஜிட்... 468 00:22:28,640 --> 00:22:29,725 அடக் கடவுளே. 469 00:22:34,104 --> 00:22:35,105 விநோதமானது. 470 00:22:35,606 --> 00:22:37,107 எங்களைக் கொல்லாதீர்கள். 471 00:22:37,107 --> 00:22:40,319 - வாருங்கள். - சூசன். 472 00:22:42,404 --> 00:22:43,780 அது என்னவாக இருக்கும்? 473 00:22:54,917 --> 00:22:57,294 ஓ, ஆம். சூசன் நம்மைக் காப்பாற்ற வந்தாள். 474 00:22:57,294 --> 00:22:59,630 அந்தக் கூட்டம் நம்மைக் கொல்ல அவள் விட மாட்டாள் எனத் தெரியும். 475 00:22:59,630 --> 00:23:02,591 நாம் அவளைப் பின்தொடர விரும்பவில்லை என்று அவள் விளையாட்டுக்குக் கூறினாள் எனத் தெரியும். 476 00:23:02,591 --> 00:23:04,051 அவளுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். 477 00:23:04,051 --> 00:23:06,345 சூசன்! அவள் எங்கே? 478 00:23:06,345 --> 00:23:08,222 சூசன்! 479 00:23:08,722 --> 00:23:10,974 உங்கள் போலி நண்பர் கண்டிப்பாக அந்த வீட்டில்தான் இருப்பார். 480 00:23:13,060 --> 00:23:14,478 ஏன் அப்படி நினைக்கிறாய்? 481 00:23:15,062 --> 00:23:17,314 ஏனெனில் இங்கே அது மட்டும்தான் உள்ளது? வேறென்ன. 482 00:23:17,314 --> 00:23:19,525 இல்லை, நான் அதைக் கூறப் போனேன். போகலாம். 483 00:23:19,525 --> 00:23:23,403 கடவுள் உள்ளே இருந்தால் என்ன செய்வது, அதுவும் அவர் ஸியூஸ் உருவத்தில் இருந்தால்? 484 00:23:23,403 --> 00:23:25,656 இது இந்த ஒற்றர் செய்து வைத்த பொறியாக இருக்கலாம். 485 00:23:25,656 --> 00:23:27,449 என் சகோதரி ஒற்றர் இல்லை. 486 00:23:27,449 --> 00:23:30,869 அவள் இங்கே வருவதற்கு முன்பிருந்தே எல்லாம் தவறாக உள்ளன. 487 00:23:30,869 --> 00:23:33,038 நீ வந்ததிலிருந்துதான் அப்படி உள்ளன. 488 00:23:33,038 --> 00:23:34,623 ஆம், கெவின்தான் ஒற்றன் என நினைக்கிறேன். 489 00:23:35,791 --> 00:23:39,002 சரி. யார் ஒற்றர் என்று சூசனுக்குத் தெரியும், சரியா? 490 00:23:39,002 --> 00:23:42,965 நான் கொள்ளையராக இருக்கவில்லை என்று அவர் கூறியதன் காரணத்தைத் தெரிந்துகொள்வோம். 491 00:23:53,851 --> 00:23:54,852 காவின்? 492 00:23:57,104 --> 00:23:58,188 என்னால் நம்ப முடியவில்லை. நான்... 493 00:23:59,481 --> 00:24:02,568 இவ்வளவு காலம் கழித்து, உன்னை நான் கண்டுபிடித்துவிட்டேன். 494 00:24:02,568 --> 00:24:04,027 ஓ, காவின். 495 00:24:06,446 --> 00:24:07,447 சூசன்? 496 00:24:08,240 --> 00:24:09,241 காவின். 497 00:24:09,783 --> 00:24:12,911 - காவின்? சூசன்? - அருமை. 498 00:24:12,911 --> 00:24:14,913 காவின் உன் உற்ற தோழியுடன் வசிக்கிறான், 499 00:24:14,913 --> 00:24:18,333 நீ இருவரையும் ஒரே நேரத்தில் பார்ப்பதற்காக. 500 00:24:19,459 --> 00:24:21,170 என்ன நடக்கிறது? 501 00:24:22,713 --> 00:24:26,508 அவன் மீதிலிருந்து கையை எடு, சூசன், அவனுக்கு ஆதரவு தேவைப்பட்டால் தவிர. 502 00:24:26,508 --> 00:24:28,886 ஆனால் ஆதரவு தேவைப்பட்டாலும், நான் அவனை ஆதரிப்பேன். 503 00:24:28,886 --> 00:24:29,970 ஓடிப் போ. 504 00:24:29,970 --> 00:24:32,848 பெனெலோபி, நான் சூசனை நேசிக்கிறேன். 505 00:24:34,224 --> 00:24:35,309 நான் காவினை நேசிக்கிறேன். 506 00:24:36,101 --> 00:24:37,603 இல்லை, ஆனால் நான்... 507 00:24:37,603 --> 00:24:40,689 உன்னைக் கண்டுபிடித்து, என்னால் என்ன செய்ய முடியும், என்னால் யாராக இருக்க முடியும் என்று 508 00:24:40,689 --> 00:24:44,193 காட்டுவதற்காக காலத்தைக் கடந்து பயணித்துள்ளேன். 509 00:24:44,193 --> 00:24:45,944 அது உனக்கு நல்லது. 510 00:24:45,944 --> 00:24:49,990 இல்லை... இல்லை, உனக்குத்தான். அது உனக்காக. எனக்காக இல்லை. 511 00:24:51,158 --> 00:24:56,288 பிறகு மாற்றாக, இந்தக் கொள்ளையரை, திருடியை, இவள்... 512 00:24:56,288 --> 00:24:59,333 என் உண்மையான காதலனை நீ அபகரித்துவிட்டாய். 513 00:24:59,333 --> 00:25:01,168 பெனெலோபி, நான் ஒன்றும் பொக்கிஷம் இல்லை. 514 00:25:02,503 --> 00:25:03,587 எனக்கு நீ பொக்கிஷம்தான். 515 00:25:04,463 --> 00:25:06,507 நீதான் இந்தப் பேரண்டத்திலேயே மிக அற்புதமான பொக்கிஷம். 516 00:25:07,174 --> 00:25:09,510 அதை எப்படி உன்னிடம் கூறுவது எனத் தெரியவில்லை, அதனால் நான் ஓடிவிட்டேன். 517 00:25:10,135 --> 00:25:11,887 இல்லை... இல்லை, நான்... 518 00:25:11,887 --> 00:25:17,893 உனக்காக உலகின் சிறந்த பொக்கிஷங்களைச் சேகரிக்க, என் உயிரையே பணயம் வைத்தேன். 519 00:25:17,893 --> 00:25:21,188 பார், அவை என்னிடம் உள்ளன. பார்த்தாயா? 520 00:25:21,188 --> 00:25:24,566 இதைப் பார், இது உனக்குத்தான். இவை அனைத்தையும் பார். 521 00:25:24,566 --> 00:25:28,445 இது ஜார்ஜியன் காலத்தைச் சேர்த்த கரண்டிகள், ...சாண்ட்விச்சின் ஏர்லிடமிருந்து. 522 00:25:28,445 --> 00:25:29,530 பிறகு இது... 523 00:25:29,530 --> 00:25:34,910 பேரரசர் மூஸா மற்றும் கெய்ரோவின் சுல்தானிடமிருந்து பெற்ற தங்கத்தையும் மாணிக்கங்களையும் பார். 524 00:25:34,910 --> 00:25:37,037 இது டைனோசர் பல். 525 00:25:37,037 --> 00:25:38,830 உனக்கு இது வேண்டாமா? 526 00:25:38,830 --> 00:25:40,916 பெனெலோபி, நான் பொக்கிஷத்தை விரும்பியதே இல்லை. 527 00:25:42,543 --> 00:25:46,213 நான் விரும்பியதெல்லாம் உன்னுடன் இருப்பதுதான், ஆனால் நீ பிற விஷயங்களில் நேரம் செலவிட்டாய். 528 00:25:47,381 --> 00:25:49,424 எனில் உன் படமும் உனக்குத் தேவையில்லையா? 529 00:25:55,305 --> 00:25:57,182 அது நானா? 530 00:25:58,225 --> 00:25:59,893 இது நீதான், இல்லையா? 531 00:26:01,395 --> 00:26:05,274 இல்லை, அது... நீ விரும்பியதை நீ பார்த்துள்ளாய் என நினைக்கிறேன், பெனெலோபி. 532 00:26:06,984 --> 00:26:11,655 ஆனால் அதைப் பற்றி யோசிக்கும்போது, இது அருமையான நெக்லஸாக இருக்கும். 533 00:26:11,655 --> 00:26:13,824 இல்லை, இப்போது இதை நீ எடுத்துக்கொள்ள முடியாது. 534 00:26:13,824 --> 00:26:15,450 இங்கே என்ன நடக்கிறது? 535 00:26:16,034 --> 00:26:18,745 உங்களிடமிருந்து விலகியிருக்க, இறந்தது போல நடித்தேன். 536 00:26:19,663 --> 00:26:23,542 நீங்கள் என்னை இங்கே கண்டறியக் கூடாது என்பதற்காக மேப்பின் ஒரு பகுதியைத் திருடினேன். 537 00:26:26,336 --> 00:26:28,672 நீ பெனெலோபியிடமிருந்து விலகியிருக்க விரும்பியது எனக்குப் புரிகிறது, 538 00:26:28,672 --> 00:26:30,632 ஆனால் எங்களிடமிருந்து ஏன் விலகியிருக்க விரும்பினாய்? 539 00:26:30,632 --> 00:26:33,427 ஆம். ஒருமுறை கொள்ளையர் ஆகிவிட்டால், எப்போதும் கொள்ளையர்தானே? 540 00:26:34,720 --> 00:26:35,721 உண்மையை யோசியுங்கள், நண்பர்களே. 541 00:26:35,721 --> 00:26:37,723 கிட்டத்தட்ட இறந்திருப்பது மற்றும் திருடுவதில் 542 00:26:37,723 --> 00:26:42,102 தோல்வியுறுவதைத் தவிர நாம் வேறென்ன செய்தோம்? 543 00:26:42,102 --> 00:26:45,689 நான் காவ் உடன் இருக்க விரும்பினேன், ஆனால் நீங்கள் அதைத் தடுத்தீர்கள். 544 00:26:47,024 --> 00:26:48,025 சரி. 545 00:26:48,734 --> 00:26:51,820 நாங்கள் சில பொருட்களைத் திருடினோம், ஆனால் நான்... 546 00:26:51,820 --> 00:26:54,823 ஆனால் என்ன? அவ்வளவுதான் உங்கள் மொத்த முயற்சியே. 547 00:26:54,823 --> 00:26:56,658 ஜூடி எங்கே? 548 00:26:56,658 --> 00:26:58,368 அவள் வெற்றிடத்தில் மாட்டிக்கொண்டாள். 549 00:26:59,411 --> 00:27:00,495 ஓடிப் போயிருக்க அதிக வாய்ப்புள்ளது. 550 00:27:00,495 --> 00:27:02,331 நீங்கள் காலக் கொள்ளையர்கள் இல்லை. 551 00:27:03,123 --> 00:27:06,627 நீங்கள் மகிழ்ச்சியற்ற வரலாற்றுச் சுற்றுலாப் பயணிகள். 552 00:27:07,211 --> 00:27:08,587 உங்கள் நோக்கம் என்ன? 553 00:27:09,379 --> 00:27:11,798 நாம் செய்யப் புறப்பட்ட எதையும் நீங்கள் செய்யவில்லை. 554 00:27:16,553 --> 00:27:18,388 ஆம். இல்லை, அது உண்மைதான். 555 00:27:18,388 --> 00:27:21,975 நாம் செய்யப் புறப்பட்ட எதையுமே நாம் செய்யவில்லை. 556 00:27:21,975 --> 00:27:23,560 நம் நோக்கம்தான் என்ன? 557 00:27:24,561 --> 00:27:26,230 நாம் அனைவரும் சூசன் செய்ததைப் போல 558 00:27:26,230 --> 00:27:30,859 மேப்பின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தனியே சென்று, 559 00:27:30,859 --> 00:27:33,654 பிறகு ஒருவரையொருவர் மீண்டும் பார்க்கக் கூடாது என நினைக்கிறேன். 560 00:27:44,164 --> 00:27:45,249 பெனெலோபி. 561 00:27:47,251 --> 00:27:51,046 காவினுக்கு நீங்கள் தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் எனக்குத் தேவை. 562 00:28:40,220 --> 00:28:41,221 நன்றி, கெவின். 563 00:28:48,145 --> 00:28:49,354 சூசன் கூறுவது சரிதான். 564 00:28:49,354 --> 00:28:52,149 நாம் செய்யப் புறப்பட்ட எதையும் நாம் செய்யவில்லை, 565 00:28:53,609 --> 00:28:55,277 ஆனால் நாம் பிற விஷயங்களைச் செய்துள்ளோம். 566 00:28:56,361 --> 00:28:57,696 நம் நோக்கம் என்ன? 567 00:28:57,696 --> 00:29:02,534 நாம் சில நபர்கள் ஒன்றாக இருக்கும் ஒரு குழு. 568 00:29:03,368 --> 00:29:07,164 ஆம். சில நபர்கள் ஒன்றாக இருப்பது, ஆம். உண்மைதான். அதை மறுக்கவில்லை. 569 00:29:07,164 --> 00:29:08,665 நான் இன்னும் முடிக்கவில்லை. 570 00:29:10,125 --> 00:29:11,168 நாம் ஒரு அணி. 571 00:29:12,002 --> 00:29:13,962 நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வோம். 572 00:29:13,962 --> 00:29:16,924 அதுதான் நம் நோக்கம். அதைத்தான் நாம் செய்துள்ளோம். 573 00:29:16,924 --> 00:29:20,260 நம் மீது அக்கறை கொள்ளாதவர்களை நாம் ஈர்க்க வேண்டியதில்லை. 574 00:29:20,260 --> 00:29:24,723 நாம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டுள்ளோம், நம் அணியின் புதிய உறுப்பினர்கள் உட்பட. 575 00:29:26,225 --> 00:29:29,019 அதனால்தான் பேரண்டத்தின் மிகவும் ஆபத்தான இடத்திற்கு வெளியே அவர்களைக் கூட்டிச் சென்று, 576 00:29:30,729 --> 00:29:34,983 அவர்களது பெற்றோரைக் காப்பாற்ற உதவப் போகிறோம். 577 00:29:37,569 --> 00:29:44,034 பெனெலோபி, நான் நித்திய இருளின் கோட்டையின் வாசல் வரை உன்னைப் பின்தொடர்வேன். 578 00:29:44,034 --> 00:29:47,037 நானும்தான், வாயில் வரை வருவேன், அதைத் தாண்டி வர மாட்டேன். 579 00:29:47,037 --> 00:29:49,081 நானும்தான். நான் மகிழ்ச்சியுடன் அது வரை வருவேன், 580 00:29:49,081 --> 00:29:51,875 ஆனால் உள்ளே இல்லை, ஏனெனில் எனக்கு மிகவும் பயமாக உள்ளது. 581 00:29:52,918 --> 00:29:56,421 சரி. சூசன், நீ எடுத்த அந்த மேப்பின் பகுதி எங்களுக்கு வேண்டும், 582 00:29:56,421 --> 00:29:58,757 அப்போதுதான் புராணங்களின் காலத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியும். 583 00:29:58,757 --> 00:30:02,719 புராணங்களின் காலத்தைக் கண்டுபிடிக்க உங்களுக்கு மேப் தேவைப்படாது, முட்டாள்களே. 584 00:30:02,719 --> 00:30:04,388 நீங்கள் ஏற்கனவே அதில்தான் இருக்கிறீர்கள். 585 00:30:08,851 --> 00:30:10,143 நிலநடுக்கம்! 586 00:30:11,061 --> 00:30:12,145 நிலநடுக்கம்! 587 00:30:16,233 --> 00:30:18,277 என்ன இது? 588 00:30:18,902 --> 00:30:20,362 கெவின்! ஜாக்கிரதை! 589 00:30:33,000 --> 00:30:34,918 என்ன இது? 590 00:30:34,918 --> 00:30:38,172 - அது ஹென். - நீ ராட்சத மனிதனின் தலையில் வசிக்கிறாயா? 591 00:30:42,050 --> 00:30:44,094 ”ஓர் ஆலின் தலையில் வசிக்கிறான்.” 592 00:30:51,351 --> 00:30:52,269 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 593 00:30:52,269 --> 00:30:53,270 உருவாக்கிய கதாப்பாத்திரங்களின் பகுதியளவை அடிப்படையாகக் கொண்டது 594 00:30:59,359 --> 00:31:00,777 'Time Bandits' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 595 00:32:04,341 --> 00:32:06,343 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்