1 00:00:12,638 --> 00:00:14,890 {\an8}ஜெர்மன் விமானப் படைதான் மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்ட் முகாமை நடத்தினார்கள். 2 00:00:14,890 --> 00:00:16,350 {\an8}மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்ட் - சாகன், ஜெர்மனி மார்ச், 1944 3 00:00:16,350 --> 00:00:18,644 {\an8}எங்களுடைய முகாம்களில் அவர்களுடைய சிறைப்பிடிக்கப்பட்ட பைலட்டுகள் இருந்ததால், 4 00:00:18,644 --> 00:00:20,854 எங்களுடைய ஆட்களை அவர்கள் மனித நேயத்துடன் நடத்தினார்கள். 5 00:00:21,855 --> 00:00:23,524 குளிரும் மிகவும் கொடுமையாக இருந்தது. 6 00:00:23,524 --> 00:00:27,152 வருடம் முழுவதும் அவர்களுக்கு உருளைக்கிழங்கும் நூல்கோலும்தான் உணவாக இருந்தது. 7 00:00:27,152 --> 00:00:31,114 ஆனால் சுகாதாரம், வசதிகள், புத்தகங்கள் மற்றும் இசை இவற்றுக்கு அனுமதி இருந்தது. 8 00:00:31,740 --> 00:00:34,826 அவர்கள் வீடு திரும்பும் அந்த நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை தரும் 9 00:00:34,826 --> 00:00:38,330 ஒரு செய்தியைத்தான் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். 10 00:00:38,330 --> 00:00:39,414 நன்றி. 11 00:00:40,541 --> 00:00:41,542 உதவி வேண்டுமா? 12 00:00:42,042 --> 00:00:43,252 வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். 13 00:00:44,837 --> 00:00:46,004 தபால் பற்றி ஏதாவது தகவல் உண்டா? 14 00:00:46,004 --> 00:00:47,089 இல்லை. 15 00:00:48,090 --> 00:00:49,550 இன்னொரு பிரச்சினையா? 16 00:00:50,259 --> 00:00:51,260 போர். 17 00:00:52,386 --> 00:00:55,180 முகாமிற்குள் தபாலைக் கொண்டு வருவதற்கு ரெட் கிராஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 18 00:00:55,764 --> 00:00:57,724 இந்தா, குட்டி, பூனைக் குட்டி, குட்டி. 19 00:00:58,350 --> 00:00:59,685 அது உன்னை நோக்கித்தான் வருது, ஹேமி. 20 00:00:59,685 --> 00:01:02,104 இதோ இந்தா, பூனைக் குட்டி, குட்டி. 21 00:01:02,104 --> 00:01:03,188 சரி, என்னால் அதைப் பார்க்க முடியுது. 22 00:01:03,856 --> 00:01:04,982 இங்கே வா. 23 00:01:10,946 --> 00:01:11,947 கமான். 24 00:01:12,573 --> 00:01:13,574 அப்படித்தான். 25 00:01:15,951 --> 00:01:17,202 கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா? 26 00:01:25,419 --> 00:01:26,962 அந்த சூப்புல என்ன இருந்ததுன்னு சொன்ன? 27 00:01:27,671 --> 00:01:28,922 அவன் சொல்லவேயில்லையே. 28 00:01:32,092 --> 00:01:33,135 முயலா? 29 00:01:34,386 --> 00:01:35,262 ஆம், நிச்சயமா. 30 00:01:35,762 --> 00:01:38,932 நம்ம பாராக்குகளுக்குக் கீழே நிறைய பூனைகள் இங்கும் அங்கும் ஓடிட்டு இருக்கே. 31 00:01:41,101 --> 00:01:42,269 பக்கெட்டுல வாந்தி எடு. 32 00:01:45,272 --> 00:01:48,400 முடிந்தால் அடக்கிக்கொள், பென்னி. 33 00:01:49,151 --> 00:01:52,487 ரெட் கிராஸ் வரும் வரையில நமக்கு கிடைக்கக் கூடிய புரதம் அதுதான். 34 00:01:53,280 --> 00:01:54,698 அடுத்ததைப் பார்ப்போம், மக்களே. 35 00:01:55,199 --> 00:01:56,617 கிட்டத்தட்ட செய்திகள் நேரம் ஆயிடுச்சு. 36 00:02:00,454 --> 00:02:02,331 பர்மாவில், பிரிட்டிஷ், இந்திய மற்றும் கோர்க்கா படையினர் 37 00:02:02,331 --> 00:02:04,625 எதிரியின் முன்னணித் தாக்குதலிலிருந்து வெகு தூரம் உள்ளே ஊடுருவிச் சென்று 38 00:02:04,625 --> 00:02:08,127 மேஜர் ஜெனரல் ஓர்ட் வின்கேட்... சின்டிட் எக்ஸ்பிடிஷனில் சேர்ந்துகொண்டு 39 00:02:08,127 --> 00:02:10,172 தொடர்ந்து ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர், 40 00:02:10,172 --> 00:02:13,717 இத்தாலியில் உள்ள மோன்டே கசீனோவில், பிரிட்டிஷ் படைகள் மீண்டும் பின்தள்ளப்பட்டன, 41 00:02:13,717 --> 00:02:16,637 அதே சமயத்தில் நட்பு நாடுகளின் படைகளால் அன்சீயோ கடற்கரைகளைவிட்டு முன்னேற முடியவில்லை. 42 00:02:16,637 --> 00:02:18,096 - என்ன ஆச்சு? - கிழக்கு முகப்பில்... 43 00:02:18,096 --> 00:02:19,681 எதுவும் நல்லாயில்லை. 44 00:02:23,143 --> 00:02:24,561 உயர் அதிகாரிகள் வந்திருக்காங்க. 45 00:02:26,855 --> 00:02:29,566 மான்டே கசீனோவில் பிரிட்டிஷ்காரங்க இன்னொரு முறை தாக்க முயற்சி செய்திருக்காங்க. 46 00:02:30,526 --> 00:02:31,610 நல்லவிதமா முடியலை. 47 00:02:31,610 --> 00:02:34,821 அதோடு, கிரௌட்கள் சுமார் ஒன்பது, பத்துப் பிரிவுகளை, அன்சீயோவிற்கு அனுப்பியிருக்காங்க. 48 00:02:35,489 --> 00:02:37,032 தகவலை அப்படியே பரப்பிவிடு. 49 00:02:37,032 --> 00:02:39,326 ஆட்களுக்கு உள்ள எதிர்ப்பார்ப்புகள் கொஞ்சம் யதார்த்தமா இருக்கணும்னு விரும்பறோம். 50 00:02:40,285 --> 00:02:41,245 நண்பர்களே, வாங்க போகலாம். 51 00:02:41,245 --> 00:02:42,621 சர்ப்ரைஸ் அமைப்பு. 52 00:02:43,997 --> 00:02:46,291 சீக்கிரம். வாங்க. வந்துடுங்க. 53 00:02:47,835 --> 00:02:49,586 வாங்க, நண்பர்களே. சீக்கிரம். 54 00:02:51,380 --> 00:02:52,381 போங்க! 55 00:03:00,639 --> 00:03:01,640 சாலமன். 56 00:03:03,308 --> 00:03:04,810 அது ஒரு யூத பெயர்தானே? 57 00:03:04,810 --> 00:03:06,353 போகலாம். போகலாம். 58 00:04:14,546 --> 00:04:16,089 நாங்க ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கோம்! 59 00:04:22,095 --> 00:04:23,263 நாசமா போச்சு. 60 00:04:26,767 --> 00:04:28,644 ஆனால் அவங்களுக்கு ஹெட்ஃபோன் கிடைக்கவில்லை. 61 00:04:30,020 --> 00:04:32,189 சரி, நல்லவேளை அவங்களுக்குக் கிடைக்கல. கடவுளுக்கு நன்றி. 62 00:06:36,563 --> 00:06:39,024 {\an8}டொனால்ட் எல். மில்லரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 63 00:06:58,335 --> 00:07:03,298 ஏழாம் பாகம் 64 00:07:12,099 --> 00:07:16,770 {\an8}ஐரோப்பாவின் மீதான படையெடுப்பு நிகழ்வது உறுதி என்பது 1944-லிலேயே தெரிந்திருந்தது. 65 00:07:17,896 --> 00:07:20,232 அதில் 100-வது குண்டுப் படையினருக்கும் ஒரு பங்கு இருந்தது. 66 00:07:20,774 --> 00:07:21,775 ஆம், சார். 67 00:07:22,317 --> 00:07:25,028 ஜெர்மனியைத் தாக்கும் மிஷன்கள் அதிகரித்தால், போர்வீரர்களின் இழப்பும் அதிகரிக்கும். 68 00:07:25,028 --> 00:07:27,739 போர்வீரர்களை இழந்தால், அவர்களுக்கு மாற்று வீரர்கள் வருவது அவசியம். 69 00:07:27,739 --> 00:07:28,824 ஹே, ரூக்! 70 00:07:28,824 --> 00:07:32,578 என்லிஸ்ட் ஆனவங்க எனக்கு வலது பக்கமும், அதிகாரிகள் இடது பக்கமும் வரணும். 71 00:07:32,578 --> 00:07:34,121 கவலைப்படாதே, நாம அதை மாற்றிவிடுவோம். 72 00:07:34,121 --> 00:07:36,164 - நேரே பாருங்கள். - என்லிஸ்ட் செய்தவர்கள் எனக்கு வலது பக்கம் 73 00:07:36,164 --> 00:07:38,750 - அதிகாரிகள் என் இடது பக்கம். - குழந்தைகள், நண்பா. 74 00:07:38,750 --> 00:07:41,545 - நீ விளையாடுற. - ஹே, புதுசு. 75 00:07:41,545 --> 00:07:44,047 டிலேனி. ஆல்பர்ட். 76 00:07:45,382 --> 00:07:46,633 ஃபுல்லர். 77 00:07:46,633 --> 00:07:49,636 அனைவருமே குறைந்தது ஒரு நல்ல நண்பனையாவது இழந்திருந்த காரணத்தால், 78 00:07:50,304 --> 00:07:52,931 சிலருக்குப் புதியவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதில் தயக்கம் இருந்தது. 79 00:07:54,725 --> 00:07:57,603 அதில் பலரும் அதிக நாட்கள் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை. 80 00:07:58,437 --> 00:08:00,355 ஆனால் யாராவது அவர்களுக்கு கற்றுத் தர வேண்டுமே. 81 00:08:02,024 --> 00:08:03,025 காலை வணக்கம், வீரர்களே. 82 00:08:04,776 --> 00:08:07,863 நான்தான் ராபர்ட் ரோஸென்தால். நான் 418-வது அணியைச் சேர்ந்த ஒரு பைலட். 83 00:08:07,863 --> 00:08:09,740 நீங்க அனைவரும் இங்கே வந்திருப்பதில் சந்தோஷம். 84 00:08:09,740 --> 00:08:11,241 உணவு மதியம் பன்னிரண்டு மணிக்கு. 85 00:08:12,075 --> 00:08:14,661 நான் அப்போது மீண்டும் வந்தால் என்ன? நான் உங்கள் அனைவரையும் அங்கே அழைச்சுட்டுப் போறேன். 86 00:08:15,370 --> 00:08:16,455 100-வது அணிக்கு வரவேற்கிறோம். 87 00:08:16,455 --> 00:08:17,873 மிக்க நன்றி, சார். 88 00:08:18,832 --> 00:08:23,337 அவ்வப்போது, அந்த மொத்த முகாமையே உயிரூட்டும்படியாக ஏதாவது நடக்கும். 89 00:08:23,337 --> 00:08:24,338 யார் வந்திருக்காங்க பாருங்க! 90 00:08:24,338 --> 00:08:25,839 ரீகன்ஸ்பர்கில் நாங்கள் இழந்த பல வீரர்களின் பட்டியலில் குவின்னும் பெய்லியும் 91 00:08:25,839 --> 00:08:28,759 இருந்தார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம், 92 00:08:28,759 --> 00:08:31,011 ஆனால் பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் ரெசிஸ்டென்ஸ் காரணமாக, 93 00:08:31,011 --> 00:08:33,554 - அவங்க தோர்ப் அப்போட்ஸ் திரும்பினார்கள். - குவின் மற்றும் பெய்லி! 94 00:08:33,554 --> 00:08:36,892 இழந்துவிட்டோம் என கருதியவர்கள் திரும்பியதில் எங்களுக்கு கிடைத்த நம்பிக்கை அலாதி. 95 00:08:36,892 --> 00:08:38,184 நல்லாயிருக்கீங்க, வீரர்களே. 96 00:08:38,184 --> 00:08:41,313 அவங்களுடைய நல்ல ராசி, ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவிலிருந்து ஒருவர் 97 00:08:41,313 --> 00:08:44,775 தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பிழைத்து வந்தால் பிறகு அவர்கள் எந்த மிஷனிலும் போகத் தடை இருந்தது. 98 00:08:45,359 --> 00:08:47,236 ஏனெனில் ஒரு பைலட் மீண்டும் சுடப்பட்டு 99 00:08:47,236 --> 00:08:50,572 கிஸ்டாப்போவால் சிறையெடுக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டால், தப்பிக்கும் ரூட்டுகளைப் பற்றி 100 00:08:50,572 --> 00:08:51,949 அவர்களிடமிருந்து ஏராளமாக தெரிந்துகொள்வதுடன் 101 00:08:51,949 --> 00:08:54,785 அவர்களுக்கு உதவிய பிரெஞ்சு, பெல்ஜிய மக்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். 102 00:08:55,369 --> 00:08:57,829 அந்த அதிர்ஷ்டக்காரர்களால் வீடு திரும்ப முடிந்தது. 103 00:08:59,790 --> 00:09:01,166 பத்திரமாக திரும்பிச் செல்லுங்கள், நண்பர்களே. 104 00:09:01,166 --> 00:09:03,585 - வீட்டிற்கு பாதுகாப்பாகச் செல்லுங்கள்! - பின்னர் சந்திப்போம், நண்பர்களே! 105 00:09:07,381 --> 00:09:09,341 இல்லை, இனி அப்படி முடியாது. ஏனெனில் அது முடிஞ்சுடுச்சு. 106 00:09:12,594 --> 00:09:14,054 இன்னொரு ஸ்காச் வேண்டுமா, கோர்டன்? 107 00:09:14,054 --> 00:09:15,639 - என் மேஜை மீது வைத்துவிடு. - சரி, சார். 108 00:09:15,639 --> 00:09:17,349 இருக்கட்டும், நீ என்ன செய்யப் போற? 109 00:09:17,349 --> 00:09:20,143 நீ புளோரிடா கேட்கப் போறயா? டெக்சாஸ்ஸா? 110 00:09:21,478 --> 00:09:23,355 நான் ஏற்கனவே டெக்சாஸில் இருந்திருக்கேன், டூருக்கு முன்னாடி. 111 00:09:25,023 --> 00:09:27,609 புளோரிடாவில் பைலட்டுகளுக்குப் பயிற்சி தரும் பணி இன்னும் நல்லா இருக்கும். 112 00:09:27,609 --> 00:09:30,779 அதோடு, அது, புதுசா வர்றவங்களுக்கு, 25 மிஷன்கள் சாதிக்கக்கூடியதுதான் 113 00:09:30,779 --> 00:09:33,740 என்று காண்பிப்பது நல்லாயிருக்கும் என்பதுதான். 114 00:09:34,616 --> 00:09:37,077 ஆம். இங்கே அப்படி ஒன்று நடந்து கொஞ்ச காலம் ஆயிடுச்சு. 115 00:09:38,078 --> 00:09:40,372 டேவ் மைனரும் அவனுடைய ஆட்களும் 24-ல் இருக்காங்க. 116 00:09:40,372 --> 00:09:43,542 ஒரு வருஷத்துக்கு பின், இங்கே உள்ள பனிமூட்டத்திலிருந்து போய் 117 00:09:43,542 --> 00:09:45,419 அங்கே பைலட்டுகளுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் சேர நான் எதுவும் செய்வேனே. 118 00:09:47,504 --> 00:09:49,173 சரி, அதுக்கும் காலம் வரும், கிராஸ். 119 00:09:50,507 --> 00:09:52,843 ஆபரேஷன்களில் பணி செய்வதில் இதுதான் பிரச்சினை. 120 00:09:53,343 --> 00:09:55,429 நமக்கு பறக்க வாய்ப்பு கிடைப்பதே அரிது. 121 00:09:55,429 --> 00:09:56,930 பிரேமனுக்குச் சென்ற 18 விமானங்களில் 122 00:09:56,930 --> 00:09:59,099 திரும்பி வந்த ஒரே பைலட் அவர்தான்னு கேள்விப்பட்டேனே. 123 00:09:59,099 --> 00:10:01,226 அவர்தான் இங்கே இருப்பதிலேயே மிக ராசியானவராக இருக்கணும், இல்லையா? 124 00:10:01,810 --> 00:10:02,978 அது முன்ஸ்டர். 125 00:10:03,604 --> 00:10:04,855 மேலும் அப்போது 13 விமானங்கள்தான் இருந்தன. 126 00:10:05,898 --> 00:10:07,733 மேலும் அதுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. 127 00:10:09,193 --> 00:10:11,612 - அது மலூலிதானே? - ஆம், சார். 128 00:10:11,612 --> 00:10:14,907 நான் பார்த்ததிலேயே பி-17 விமானத்தை ஓட்டுவதில் ரோஸீ தான், சிறந்த பைலட். எக்காலத்துக்கும். 129 00:10:15,908 --> 00:10:20,287 அவனைப் போல, பாதி திறனுடன் விமானத்தைச் செலுத்த முடிந்தாலும் 25 மிஷனை கடந்துவிடலாம். 130 00:10:21,705 --> 00:10:22,748 ச்சே. 131 00:10:22,748 --> 00:10:23,749 போய் சாதிப்போம். 132 00:10:23,749 --> 00:10:25,209 கவனமா இருங்க, மக்களே. 133 00:10:25,209 --> 00:10:27,002 - இனிய இரவு. குடிச்சிடுங்க. - ஹே, இனிய இரவு. 134 00:10:27,002 --> 00:10:28,712 இல்லை, இல்லை, நல்லாதான் இருக்க. நீ நல்லாதான் இருக்க. 135 00:10:29,505 --> 00:10:31,381 உங்க அணி இந்த மிஷனில் பங்குகொள்ளவில்லை. 136 00:10:41,808 --> 00:10:44,686 என்னன்னா, நான் சிறுவனாக இருந்தபோது, நானே கைகொண்டு செயத கிரிஸ்டல் ரேடியோ ஒன்றிருந்தது. 137 00:10:45,812 --> 00:10:47,940 அது இங்கே வேலை செய்யுதா, பார்க்கலாமான்னு யோசிக்கிறேன். 138 00:10:47,940 --> 00:10:51,527 நம்முடைய பழையதைப் போல வராது ஆனாலும் போதுமான அளவுக்கு வேலை செய்யலாம். 139 00:10:52,569 --> 00:10:54,738 தாமிர வயர், கிராஃபைட், ஒரு சேஃப்டி பின். 140 00:10:55,697 --> 00:10:57,366 எனக்காக அவற்றை எங்கிருந்தாவது திருடிட்டு வர முடியுமா? 141 00:10:57,366 --> 00:11:00,160 என் குட்டி க்ரிஜீ மார்கோனியா, ஹம்? 142 00:11:01,119 --> 00:11:02,829 என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன். 143 00:11:05,707 --> 00:11:07,334 இவ்வளவு கிழக்குல, பகலில் ரெய்டா? 144 00:11:07,334 --> 00:11:09,253 பாராக்குகளுக்குத் திரும்பிப் போங்க! 145 00:11:11,839 --> 00:11:13,632 பாராக்குகளுக்குத் திரும்பிப் போங்க, உடனே! 146 00:11:24,476 --> 00:11:28,188 - அது பெர்லினாதான் இருக்கும், இல்ல? - ஏஏ சூடுகளிலிருந்து சொல்வது கஷ்டம். 147 00:11:28,188 --> 00:11:30,732 அவங்க பாதி ஜெர்மனியில தரைவழி எதிர்தாக்குதலை தயார் செய்திருக்காங்க, போல. 148 00:11:32,401 --> 00:11:34,945 இதோ ஆரம்பிக்கிறது. வலது பக்கத்திலிருந்து வருவது போல இருக்கு. 149 00:11:36,113 --> 00:11:37,573 பெர்லினாக இருக்கணும், இல்ல அதன் பக்கத்தில்தான். 150 00:11:37,573 --> 00:11:38,740 உனக்குக் கேட்டுதா? 151 00:11:40,284 --> 00:11:41,285 அது பெர்லின்தான். 152 00:11:43,036 --> 00:11:46,206 ஹே, நல்ல திங்கட்கிழமைதான் உனக்கு, அடால்ஃப். 153 00:11:46,206 --> 00:11:49,168 - 100-வது அணி அதுல இருக்காங்கன்னு நினைக்கிறயா? - இருக்கணும். 154 00:11:49,168 --> 00:11:50,752 அங்கே பயங்கரமாக இருக்கும். 155 00:11:51,253 --> 00:11:52,963 முதல் முறையா பட்டப்பகலில், ஜெர்மனியின் தலைநகரில் நடக்கும் ரெய்டு. 156 00:11:55,507 --> 00:11:56,717 அது என்ன கண்றாவி? 157 00:11:57,759 --> 00:12:00,053 - அது இன்னும் பக்கத்துல போல. - காப்பாத்துங்க! 158 00:12:00,053 --> 00:12:00,971 வா, வா. 159 00:12:00,971 --> 00:12:02,306 ஒரு டாக்டரைக் கூப்பிடணும்! 160 00:12:03,098 --> 00:12:04,892 அந்த கதவுகளை திறந்து விடு. அவற்றை திறந்து விடுங்க. 161 00:12:04,892 --> 00:12:06,977 - உடனே உள்ளே போங்க! - என்ன நடந்தது? 162 00:12:06,977 --> 00:12:08,395 ஹேரியை சுட்டுட்டாங்க! 163 00:12:08,395 --> 00:12:10,898 - ஹே, நீங்க எங்க ஆளுங்க ஒருவரை அடிச்சுட்டீங்களே? - அவன் வெளியே இருந்தான். 164 00:12:10,898 --> 00:12:13,275 - கிளெம்னிட்ஸ் எங்கே? - காரணமே இல்லாம அவனை சுட்டுவிட்டாங்க. 165 00:12:13,275 --> 00:12:14,651 - கிளம்னிட்ஸை காப்பாத்தணும்! - உள்ளே! 166 00:12:14,651 --> 00:12:15,861 - கிளெம்னிட்ஸ்! - ரொம்ப அதிகமா இரத்தம் கசியுது! 167 00:12:15,861 --> 00:12:17,446 அவனை டாக்டரிடம் காண்பிக்கணும். 168 00:12:17,446 --> 00:12:19,072 உள்ளே! உள்ளே! 169 00:12:20,490 --> 00:12:22,367 உள்ளே திரும்பிப் போங்க. உடனே. 170 00:12:25,871 --> 00:12:27,748 ஹே, ஹே! அந்த நாயைப் பிடி! 171 00:12:27,748 --> 00:12:30,709 அந்த நாயை நிறுத்துங்க! நிறுத்துங்க! 172 00:12:30,709 --> 00:12:31,919 உள்ளே திரும்பிப் போங்க! 173 00:12:34,087 --> 00:12:36,423 ஹேரி அந்த பிளாக்கில் இருந்தான். அவனை ஏன் சுட்டாங்க? 174 00:12:36,423 --> 00:12:38,133 அவனை சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டு போங்க. 175 00:12:38,634 --> 00:12:40,552 - சீக்கிரம்! - என்னுடன் வாங்க. 176 00:12:44,598 --> 00:12:46,975 - உடனே! உள்ளே திரும்புங்க! - ஹே! உள்ளே போங்க! 177 00:12:49,269 --> 00:12:51,480 திரும்பி உள்ளே போ. உடனே. 178 00:12:53,106 --> 00:12:55,817 இந்த தடியனுங்க நம்மள ஒவ்வொருவரையா போட்டுத் தள்ளப் போறாங்க, பக். 179 00:12:55,817 --> 00:12:57,611 உள்ளே போங்க! 180 00:12:59,613 --> 00:13:01,532 - முன்னாடி இருந்ததைப் போலவே... - ஆமாம். 181 00:13:01,532 --> 00:13:02,741 ...லெப்டினன்ட் அப்படித்தான் சொல்கிறார். 182 00:13:03,534 --> 00:13:04,993 - சரி. - திருப்பிப் போடு. 183 00:13:06,578 --> 00:13:09,122 எங்க மிஷன்கள் சேரச் சேர, இன்னும் ஆபத்துகளும் அதிகமானது, 184 00:13:09,122 --> 00:13:12,292 அந்த கேவலமான ரெட் மிஷன் விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதுபோல இருந்தது. 185 00:13:13,335 --> 00:13:14,878 நாங்கள் எப்போதும் அழுத்தத்திலேயே இருந்தோம். 186 00:13:15,796 --> 00:13:17,714 அப்புறம் நாங்க பெர்லினை தாக்கப் போவதாகச் சொன்னாங்க. 187 00:13:18,882 --> 00:13:21,510 முகாமிலிருந்த ஒவ்வொருவரும், இது எவ்வளவு இழப்புகளை தரப் போகிறது 188 00:13:21,510 --> 00:13:24,054 என்பதைப் பார்க்க, திகிலுடன் காத்திருந்தனர். 189 00:13:26,723 --> 00:13:28,892 அதோ. அதோ! நான் பார்த்துட்டேன்! 190 00:13:30,269 --> 00:13:33,814 ஒண்ணு, ரெண்டு, மூணு. 191 00:13:34,356 --> 00:13:37,442 நாலு, ஐந்து. 192 00:13:38,402 --> 00:13:40,779 ஆறு, ஏழு. 193 00:13:41,363 --> 00:13:44,908 எட்டு, ஒன்பது, பத்து. 194 00:13:46,910 --> 00:13:48,036 பதினொண்ணு. 195 00:13:48,662 --> 00:13:53,584 பன்னிரெண்டு, 13, 14. 196 00:13:53,584 --> 00:13:56,670 15 மற்றும் 16. 197 00:14:00,132 --> 00:14:01,466 கடவுளே. 198 00:14:02,551 --> 00:14:03,760 அப்படின்னா, 15 போயிடுச்சு. 199 00:14:07,890 --> 00:14:09,099 ஆமாம். 200 00:14:12,686 --> 00:14:13,770 நகருங்க! 201 00:14:19,568 --> 00:14:20,694 ச்சே. 202 00:14:21,570 --> 00:14:22,571 நாம் போவோம்! 203 00:14:24,281 --> 00:14:25,199 அவங்களை வெளியே கொண்டு வருவோம்! 204 00:14:29,077 --> 00:14:32,414 இங்கே யாராவது அந்த மார்ஃபீனுடன் வாங்க! 205 00:14:34,833 --> 00:14:37,503 நிதானம். பிடியுடைய கோட்டை எடு. 206 00:14:41,798 --> 00:14:42,883 நிதானம். நிதானம். 207 00:14:44,426 --> 00:14:46,720 இறக்கைகளை செக் செய்யுங்க! இறக்கைகளை செக் செய்யுங்க! 208 00:14:49,014 --> 00:14:50,557 அடிபட்டவர்களை முதலில் கவனியுங்க. 209 00:14:51,808 --> 00:14:54,895 இன்னொரு விமானம் வருவதற்கு தயாரா இருங்க! அதுக்கு ஒரு குழு வேண்டும்! 210 00:14:56,522 --> 00:14:59,149 இன்னொரு ஸ்ட்ரெச்சர் வேணும்! நகரட்டும், நகரட்டும்! 211 00:15:00,317 --> 00:15:02,277 விமானத்துல அடிபட்டவங்க இருக்காங்க! 212 00:15:02,277 --> 00:15:03,612 கமான். வாங்க போகலாம். 213 00:15:04,404 --> 00:15:06,406 நிதானம், நிதானம், சரியா? 214 00:15:06,406 --> 00:15:08,534 குணமாயிடுவீங்க. நாங்க பார்த்துக்கறோம், சரியா? 215 00:15:08,534 --> 00:15:11,453 - நீங்க நல்லா ஆயிடுவீங்க. - இன்னும் மூணு ஸ்ட்ரெச்சராவது வேணும். 216 00:15:11,453 --> 00:15:13,539 லெம்மன்ஸ், காக்பிட்டுல ஒரு கண்ணு வச்சுக்கறயா? 217 00:15:13,539 --> 00:15:15,082 இங்கே உடனே ஒரு மெடிக் வேணும்! 218 00:15:23,882 --> 00:15:26,426 அவர் கால்களைப் பிடியுங்க! 219 00:15:27,970 --> 00:15:29,304 நீங்க நல்லா ஆயிடுவீங்க, நண்பா. நாங்க பார்த்துக்கறோம். 220 00:15:29,304 --> 00:15:30,931 நிதானமா. இப்போ போகலாம். 221 00:15:30,931 --> 00:15:32,349 அவரை சமாதானப்படுத்தணும். 222 00:15:32,349 --> 00:15:35,352 அவரை வெளியே எடுப்போம். ஒண்ணு, ரெண்டு, மூணு. 223 00:15:37,521 --> 00:15:41,024 மார்ச் 6-ம் தேதி, 1944, அந்த நாளை கருப்பு திங்கட்கிழமை என்று அழைத்தார்கள் 224 00:15:41,817 --> 00:15:43,819 ஏனெனில் அன்று நாங்கள் இழந்த வீரர்களின் எண்ணிக்கையால். 225 00:15:44,611 --> 00:15:46,822 சுமார் 150 நபர்கள் அதில் 100-வது அணியைச் சேர்ந்தவர்கள். 226 00:15:51,702 --> 00:15:53,787 அவங்க அனைவரும் காக்பிட்டிலேயே அடி வாங்கினவங்க. 227 00:15:54,538 --> 00:15:56,707 மைனரும் கின்செல்லாவும் உடனையே இறந்து போயிருக்க வேண்டும். 228 00:15:57,749 --> 00:15:59,918 குறைந்தபட்சம் அவங்க துன்பம் அனுபவிக்காம இருந்திருக்கணும். 229 00:16:01,253 --> 00:16:03,130 அவங்க விமானம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. 230 00:16:03,755 --> 00:16:06,842 நேரா மேலே போச்சு, நேராக மேல் பிரிவின் விமானங்களை நோக்கிப் போச்சு. 231 00:16:07,718 --> 00:16:10,304 அதனால அடிபடுவதைத் தவிர்க்க, ஹேரிசன் நெளிஞ்சு வளைஞ்சு போனான். 232 00:16:11,889 --> 00:16:15,058 அதன்பின் அது நேரா கீழே விழுந்தது. 233 00:16:15,058 --> 00:16:16,810 அவங்களுடைய 25-வது மிஷன். 234 00:16:17,603 --> 00:16:22,357 அந்த கேடுகெட்டவங்க, பாராசூட்டுகள்ல இறங்கும் நம்ம ஆட்களையும் விட்டுவைக்கல, ஒருவர் பின் ஒருவராக. 235 00:16:24,484 --> 00:16:25,694 அவங்க அனைவரையும் கொன்னுட்டாங்க... 236 00:16:27,362 --> 00:16:28,780 கடைசி நபர் வரை. 237 00:16:33,160 --> 00:16:35,162 எங்க குழுக்கள்ல இன்னும் இளைஞர்கள் அதிகரித்து வந்ததால 238 00:16:35,787 --> 00:16:38,707 எங்களுடைய இழப்புகளும் அதிகமாச்சு, அதனால முகாம்ல நிலவிய மனநிலையும் சரிந்துபோனது. 239 00:16:40,792 --> 00:16:43,420 நாங்க எல்லோரும் நடக்கும் போரிலிருந்து எங்கள் மனதை திசைதிருப்ப வேண்டியிருந்தது. 240 00:16:46,381 --> 00:16:48,217 நான் சேன்ட்ராவைக் கூப்பிட தீர்மானித்தேன். 241 00:16:49,968 --> 00:16:53,263 எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், என்னுடன் சிரிக்கவும் குடிக்கவும் ஒருவர் இருந்தால் போதும் என்றேன், 242 00:16:53,263 --> 00:16:55,432 ஆனால் இரண்டாவது முறையும் அவளை அழைத்தேன். 243 00:16:56,850 --> 00:16:57,935 பின்னர் மூன்றாவது முறை. 244 00:17:11,906 --> 00:17:12,907 லக்கி ஸ்ட்ரைக் 245 00:18:14,303 --> 00:18:15,304 இதோ வந்திடுச்சு. 246 00:18:29,651 --> 00:18:30,861 நல்லாயிருக்கா? 247 00:18:30,861 --> 00:18:32,237 சிறப்பா இருக்கு. 248 00:18:35,365 --> 00:18:36,992 மெயில் கால்! 249 00:18:40,120 --> 00:18:42,039 சரி. மர்ஃபி? 250 00:18:42,039 --> 00:18:44,041 - அப்பாடி, ஒருவழியா. - மர்ஃபி. 251 00:18:44,541 --> 00:18:45,542 ஹேமில்டன். 252 00:18:46,752 --> 00:18:47,586 நன்றி. 253 00:18:47,586 --> 00:18:49,254 மற்றும் கிளீவென். 254 00:18:49,922 --> 00:18:51,715 - மிக்க நன்றி. - அவ்வளவுதான், நண்பர்களே. 255 00:18:51,715 --> 00:18:53,091 அடுத்த முறை கிடைக்கலாம். 256 00:18:53,091 --> 00:18:54,343 மெயில் கால்! 257 00:18:55,886 --> 00:18:57,429 எங்க அம்மாவிடமிருந்து. 258 00:18:59,640 --> 00:19:00,766 உனக்கு யார் எழுதியிருக்காங்க, பக்? 259 00:19:01,391 --> 00:19:03,727 - மார்ஜ். - மார்ஜ். 260 00:19:07,523 --> 00:19:10,609 பிரேமன் தாக்குதலுக்கு முன்னாடி நான் எழுதிய கடிதத்துல, ஒரு கேள்வி கேட்டிருந்தேன். 261 00:19:14,446 --> 00:19:15,447 எழுதினாயா? 262 00:19:18,283 --> 00:19:19,326 அவளும் சரின்னு சொல்லிட்டா. 263 00:19:23,038 --> 00:19:24,039 அதனால? 264 00:19:25,165 --> 00:19:26,166 அது சிறந்த விஷயம். 265 00:19:28,585 --> 00:19:29,878 நல்வாழ்த்துகள். 266 00:19:34,758 --> 00:19:37,469 நீதான் என்னுடைய மாப்பிள்ளைத் தோழனா இருப்பது வரை திட்டமிட்டிருந்தேன். 267 00:19:45,143 --> 00:19:46,603 நான் உன் மாப்பிள்ளைத் தோழனா இருக்கேன். 268 00:19:58,532 --> 00:20:01,785 {\an8}மார்ச் 7, 1944 269 00:20:01,785 --> 00:20:02,870 அன்புள்ள திருமதி ஹாலுக்கு 270 00:20:02,870 --> 00:20:04,872 உங்கள் மகனுக்கு என்னவானது என்று எங்களுக்குத் தெரியவில்லை, 271 00:20:04,872 --> 00:20:07,749 ஆனால் உங்கள் மகன் என்னுடைய உற்ற நண்பனாக இருந்தான் என்று உங்களிடம் சொல்வதற்காகத்தான் இதை எழுதுகிறேன். 272 00:20:10,085 --> 00:20:11,086 இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறாரா? 273 00:20:12,337 --> 00:20:13,964 எழுதுவதற்கு இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது, சார். 274 00:20:25,809 --> 00:20:28,979 - எப்படி தாக்குப்பிடிக்கிற? - நான் நலமாக இருக்கேன். 275 00:20:33,192 --> 00:20:34,359 நாளைய மிஷன் பற்றி. 276 00:20:35,944 --> 00:20:37,529 மீண்டும் பெர்லினா? 277 00:20:43,827 --> 00:20:46,997 ஜாக், மீண்டும் அதே ரூட்தான். நேத்து மாதிரியேதான். 278 00:20:50,125 --> 00:20:52,085 நம்மை எல்லோரையும் கொல்றாங்களேன்னு அவங்க கவலையே படலை, இல்லையா? 279 00:21:17,110 --> 00:21:18,487 சரிதான். 280 00:21:19,154 --> 00:21:20,197 சரி. 281 00:21:45,222 --> 00:21:47,891 - நாசம். - யாங்கீஸ் டிமாஜியோவை மாத்திக்கறாங்களா? 282 00:21:48,475 --> 00:21:50,018 சரியா செயல்படலை. 283 00:21:53,313 --> 00:21:54,398 கொஞ்சம் காத்தாடிட்டு வருவோம். 284 00:21:54,898 --> 00:21:56,233 வானிலை கொஞ்சம் தெளிஞ்சதுக்குப் பின், 285 00:21:57,776 --> 00:22:00,070 நானும் நீயும் தப்பிக்க முயற்சி செய்தா என்ன? 286 00:22:00,070 --> 00:22:01,780 நான் சொல்றதை நீ கவனிக்கலையா? 287 00:22:02,406 --> 00:22:04,658 இங்கிருந்து உயிருடன், காயம்படாமல் தப்பிக்கறதுக்கு சாத்தியக்கூறு... 288 00:22:04,658 --> 00:22:06,702 முப்பதுல ஒண்ணா, நாற்பதுல ஒண்ணா, இல்ல ஐம்பதுல ஒண்ணா? 289 00:22:07,286 --> 00:22:08,996 - சரி. - என்னிடம் எந்தத் திட்டமும் இதுவரை இல்ல, 290 00:22:08,996 --> 00:22:11,623 ஆனால் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன். 291 00:22:12,249 --> 00:22:14,918 வந்து, நீ இன்னும் நல்ல வாய்ப்பு உள்ள ஒரு திட்டத்தைத் தீட்டணும். 292 00:22:14,918 --> 00:22:16,753 சரி, அப்படி ஒன்றை நான் கண்டுபிடிக்கும்போது, நீ என்னுடன் வருவாயா? 293 00:22:17,421 --> 00:22:19,548 நான் அடிபடாமல், உயிருடன் மார்ஜிடம் திரும்பிப் போவதுதான் என் திட்டம். 294 00:22:19,548 --> 00:22:20,632 சரி, நீ அடிபடாமல், 295 00:22:22,384 --> 00:22:23,427 வியாதியால் 296 00:22:24,636 --> 00:22:25,637 இங்கேயே இறக்கலாம்... 297 00:22:28,599 --> 00:22:30,517 அந்த பென்ஸுக்கு ரொம்ப கிட்ட நடந்ததால் கொல்லப்படலாம். 298 00:22:32,519 --> 00:22:34,646 உருளைக்கிழங்குகளைத் தவிர வேறு எதையும் நீ சாப்பிட விரும்பலையா? 299 00:22:36,315 --> 00:22:39,109 அதாவது, நாம எதுவும் செய்யாம இங்கேயோ காத்துட்டு இருக்கலாம். 300 00:22:41,320 --> 00:22:42,321 அதைத்தான் நீ செய்ய விரும்பறயா? 301 00:22:43,572 --> 00:22:45,908 இல்லை. உன்னைப் போலவே என்னால இந்த இடத்தை சகித்துக்கொள்ள முடியவில்லைதான். 302 00:22:56,793 --> 00:22:59,671 {\an8}மார்ச் 8, 1944 303 00:23:11,058 --> 00:23:12,809 ஆ-டென்-ஹட்! 304 00:23:14,019 --> 00:23:15,020 உட்காருங்க. 305 00:23:23,862 --> 00:23:27,366 இப்போ, தெரியாதவங்களுக்கு, நான்தான் லெப்டினன்ட் கர்னல் பென்னட், 306 00:23:27,366 --> 00:23:29,493 நான்தான் 349-வது அணியின் புதிய சீஓ. 307 00:23:30,577 --> 00:23:33,372 இன்று காலை கர்னல் ஹார்டிங் லண்டனுக்குப் போக வேண்டியிருந்ததால், 308 00:23:33,372 --> 00:23:37,376 அவருக்கு பதிலாக தற்காலிமாக 100-வது வெடிகுண்டு அணியின் மொத்த பொறுப்பையும் எடுத்துள்ளேன். 309 00:23:40,170 --> 00:23:41,755 உங்களுக்கான இன்றைய இலக்கு... 310 00:23:43,048 --> 00:23:44,258 பெர்லின், 311 00:23:45,133 --> 00:23:47,302 குறிப்பாக எர்க்னர் பால் பேரிங் தொழிற்சாலை. 312 00:23:47,302 --> 00:23:49,763 கடவுளே. திங்கட்கிழமை போன அதே ரூட்தான் அது. 313 00:23:53,058 --> 00:23:54,309 யார் அப்படிச் சொன்னது? 314 00:23:56,186 --> 00:23:58,272 மேஜர் ஷோன்ஸ், நீங்கள் மிகவும் சரிதான் சொல்கிறீர்கள். 315 00:23:59,648 --> 00:24:03,819 ஆனால் நானே போகாத ஒரு மிஷனில் என் வீரர்கள் போகணும்னு எதிர்பார்க்கிறவன் இல்லை நான், 316 00:24:05,112 --> 00:24:07,531 எனவே விங் முழுவதிற்கும் நான்தான் கமாண்ட் பைலட்டாக இருப்பேன். 317 00:24:10,784 --> 00:24:11,785 மேஜர் பௌமன்? 318 00:24:19,501 --> 00:24:24,214 நீங்கள் தாக்க வேண்டிய இடத்தின் மைய புள்ளி இதோ இங்கே, பெர்லினின் நடுவுல இருக்கு. 319 00:24:35,517 --> 00:24:37,978 எங்களிடம் மேலே அனுப்ப 15 விமானங்கள்தான் மீதம் இருந்தது. 320 00:24:38,770 --> 00:24:41,648 இரண்டு நாட்களுக்கு முன் ஜெர்மானியர்கள் சுட்டு வீழ்த்திய அதே எண். 321 00:24:43,025 --> 00:24:44,693 ரோஸீயும் அவருடைய அணியினரும் தங்களது 25-வது மிஷனிலிருந்து வெற்றிகரமாக 322 00:24:44,693 --> 00:24:47,446 திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என்று புரிந்துகொள்ள 323 00:24:47,446 --> 00:24:48,906 பெரிய கணக்குகள் எதுவும் தேவைப்படவில்லை. 324 00:24:49,698 --> 00:24:50,991 கென், நான் எனக்குத் தெரிய வேண்டியது எதுவும் உள்ளதா? 325 00:24:51,491 --> 00:24:52,492 முதல் தரமான விமானம், சார். ஏ1. 326 00:24:53,493 --> 00:24:55,829 அதே மாதிரி நீங்க அதை என்னிடம் திரும்பிக் கொண்டுவருவீர்கள் என்று நான் நம்புகிறேன். 327 00:25:00,584 --> 00:25:01,835 அப்போ சரி, மக்களே. சேர்ந்து வாங்க. 328 00:25:11,053 --> 00:25:12,304 ரோஸீஸ் ரிவர்டர்ஸ் 329 00:25:12,304 --> 00:25:13,555 உங்க அனைவருக்கும் என்ன பண்ணனும்னு தெரியும். 330 00:25:14,932 --> 00:25:17,434 நீங்க துப்பாக்கிகளை சிறப்பாக உபயோகிப்பதை கவனியுங்க, நான் விமானத்தைப் பார்த்துக்கறேன். 331 00:25:18,560 --> 00:25:20,270 - சரியா? - சரி, சார். 332 00:25:22,689 --> 00:25:23,690 அப்போ பெர்லினுக்குப் போவோம். 333 00:25:48,715 --> 00:25:52,010 நாங்கள் பாவிகள், இப்போதும் நாங்கள் இறக்கும் தருணத்திலும் எங்களுக்காகப் பிரார்த்திக்கவும். 334 00:25:52,010 --> 00:25:53,679 மேரிக்குத் துதியாகட்டும், அருள் நிறைந்தவர். 335 00:25:55,180 --> 00:25:57,432 லுஃப்ட்வாஃபை தோற்கடிக்க எங்களுக்கான வாய்ப்புகள் 336 00:25:57,432 --> 00:26:01,019 பி-51 விமானங்களின் அறிமுகப்படுத்தியதும், பன்மடங்காக உயர்ந்தன. 337 00:26:02,646 --> 00:26:05,774 சந்தேகமேயில்லாமல் போரில் அதுவே மிகச் சிறப்பான ஃபைட்டர் விமானம். 338 00:26:08,318 --> 00:26:10,654 அந்த மிஷன் முழுவதிலும் எங்களுக்கு முஸ்டாங்குகள் துணையாக வந்தார்கள், 339 00:26:11,405 --> 00:26:13,907 ஆகையால் வெற்றிக்கான வாய்ப்புகள் எங்களுக்குச் சாதகமாகத் திரும்பின. 340 00:26:29,047 --> 00:26:31,383 2:00 லெவலில் நிறைய ஃபைட்டர்கள் உள்ளனர். 341 00:26:31,383 --> 00:26:34,136 - அவை நட்பு படையினரா? - சொல்ல முடியவில்லை. 342 00:26:36,305 --> 00:26:38,724 யாராவது இந்த ஃபைட்டர்களை அடையாளம் காண முடியுமா? ஓவர். 343 00:26:40,017 --> 00:26:42,603 அவங்க கிரௌட்கள்! அவங்க கிரௌட்கள்! 344 00:26:43,812 --> 00:26:47,065 என்னால அவங்கள சுட முடியலை. அவங்க 45-அணியை நோக்கிப் போறாங்க! 345 00:26:51,945 --> 00:26:54,865 ரோஜர். பி-51 விமானங்கள் உதவிக்கு வருவதைக் காண்கிறேன். 346 00:26:59,369 --> 00:27:00,454 பைலட்டுக்கு பால் டர்ரெட் கூறுவது. 347 00:27:00,454 --> 00:27:03,415 கர்னல் பென்னட்டின் விமானத்திலிருந்து முன்னேறும்படி பச்சை-பச்சை ஃபிளேர்கள் வருவதைப் பார்க்கிறேன். 348 00:27:06,585 --> 00:27:08,545 பைலட்டுக்கு நாவிகேட்டர் கூறுவது. நாம் பெர்லினின் மேல் இருக்கிறோம், 349 00:27:08,545 --> 00:27:10,297 ஆனால் முதல் பாயிண்ட்டிற்கான நமது வாய்ப்பைத் தவறவிட்டோம் என நினைக்கிறேன். 350 00:27:10,297 --> 00:27:12,758 ரோஜர், நாவிகேட்டர். அடுத்ததாக எந்த திசை இப்போது? ஓவர். 351 00:27:12,758 --> 00:27:16,553 நாம் திசை 253-ல் போக வேண்டும். மீண்டும் சொல்கிறேன், 253. 352 00:27:16,553 --> 00:27:19,223 ரோஜர். திசை 253-ஐ நோக்கிப் போகிறோம். ஓவர். 353 00:27:19,223 --> 00:27:22,434 கிரௌட் ஃபைட்டர்கள் உள்ளார்களா என கவனிக்கவும். நாம் எங்கே போகிறோம் என அவர்கள் அறிவார்கள். 354 00:27:22,434 --> 00:27:25,938 முதல் பாயிண்ட் திருப்பத்தை 45-வது விங் தவறவிட்டது என்பதை லாகில் பதிவு செய்யவும். 355 00:27:25,938 --> 00:27:29,149 நாம் கர்னல் பென்னட்டின் கமாண்டின் கீழ் உள்ளோம், அவருடன் இலக்கை நோக்கி திரும்புகிறோம். ஓவர். 356 00:27:29,149 --> 00:27:30,234 புரிகிறது. 357 00:27:37,866 --> 00:27:40,536 பைலட்டிற்கு குண்டுவீச்சாளர் கூறுவது. ஃபைட்டர்கள் வருகிறார்கள் 11:00-ல். 358 00:27:41,245 --> 00:27:44,122 ரோஜர். பி-51 விமானங்கள் வேகமாக வருகிறார்கள். 359 00:27:44,706 --> 00:27:45,958 தயாராகுங்கள், வீரர்களே. 360 00:27:47,793 --> 00:27:48,627 அடடே! 361 00:27:56,760 --> 00:27:58,971 நம் ஃபைட்டர்கள் நமக்கான பாதையை கிளியர் செய்வார்கள். 362 00:28:13,694 --> 00:28:15,445 இலக்கிற்கு முப்பது வினாடிகள். 363 00:28:15,445 --> 00:28:16,530 ரோஜர். 364 00:28:16,530 --> 00:28:18,657 குண்டுவீச்சாளருக்கு பைலட். நீங்க குண்டைப் போடத் தயாரா இருக்கீங்களா? 365 00:28:18,657 --> 00:28:20,242 பைலட்டுக்கு குண்டுவீச்சாளர் கூறுவது. ரோஜர். 366 00:28:20,784 --> 00:28:22,244 சரி. விமானம் உங்கள் பிடியில். 367 00:28:22,244 --> 00:28:24,079 புரிகிறது. என் விமானம். 368 00:28:28,000 --> 00:28:29,501 குண்டுகள் போடுகிறோம். 369 00:29:01,742 --> 00:29:03,619 அதோ! கிழக்கே தென்கிழக்கு திசையில்! 370 00:29:04,286 --> 00:29:05,287 பதினான்கு! ஒன்று கீழே! 371 00:29:05,287 --> 00:29:06,997 யார் கீழேன்னு யாருக்காவது தெரிகிறதா? 372 00:29:06,997 --> 00:29:08,582 அல்லது ரோஸீயைப் பார்த்தீர்களா? 373 00:29:11,919 --> 00:29:13,045 நீ என்ன சொல்கிறாய், பேப்பி? 374 00:29:13,045 --> 00:29:15,589 நீங்க சாதிச்சுட்டீங்க, ரோஸீ. நாம செய்துட்டோம். 375 00:29:15,589 --> 00:29:17,925 இருபத்து-ஐந்து. நாம வீடு திரும்புறோம். 376 00:29:35,400 --> 00:29:36,401 கேடுகெட்டவன்! 377 00:29:39,238 --> 00:29:41,240 டவரை ஒட்டிச் செல்ல இதுவே கடைசி வாய்ப்பு. 378 00:29:41,823 --> 00:29:43,784 ரோஸீ! சரி, சரி, சரி! 379 00:29:43,784 --> 00:29:44,868 கமான்! 380 00:29:45,536 --> 00:29:47,829 - மீண்டும் வருகிறது! - அவர் நம்மை அதிரச் செய்யப் போகிறார்! 381 00:29:51,959 --> 00:29:53,085 முட்டாள்! 382 00:29:53,585 --> 00:29:55,587 ஹே, அது எப்படி இருந்தது! 383 00:29:56,672 --> 00:29:57,965 சரி! 384 00:29:58,757 --> 00:30:00,342 ஆம்! ரோஸீ! 385 00:30:12,479 --> 00:30:16,191 ரோஸீ! ரோஸீ! ரோஸீ! ரோஸீ! 386 00:30:30,205 --> 00:30:31,748 பொறு. நான் அவளிடம் சொன்னேன்... 387 00:30:31,748 --> 00:30:33,500 - நான், "ஹே, பெட்டி"... - அதோ ஆரம்பிச்சுட்டான். 388 00:30:33,500 --> 00:30:35,878 "நீ உனக்குப் பிடிச்ச நிறத்துல சீலிங்கை வர்ணம் பூசலாம், 389 00:30:35,878 --> 00:30:38,380 ஏன்னா, நான் வீடு திரும்பியது நீ அவற்றை நிறைய பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறாய்." 390 00:30:39,089 --> 00:30:40,090 அவள் என்ன சொன்னாள்? 391 00:30:40,090 --> 00:30:42,926 வந்து, அவள் எதுவும் சொல்லை, ஏன்னா அவளுடைய தாயாரும் அந்த ஃபோன் பேசிட்டு இருந்தாங்க. 392 00:30:45,554 --> 00:30:46,930 நான் போய் இன்னொரு டிரிங்கை கொண்டு வரேன். 393 00:30:49,933 --> 00:30:51,310 ஜாக், ஏன் இவ்வளவு சோகம், ஹம்? 394 00:30:52,978 --> 00:30:54,521 என்ன, எங்களை அவ்வளவு மிஸ் பண்ணப் போறயா? 395 00:30:56,982 --> 00:30:57,983 ஜாக், உனக்கு ஒண்ணும் இல்லயே? 396 00:31:00,360 --> 00:31:02,446 மேல் அதிகாரிகள், என்ட்-ஆஃப்-டூர் தகுதிகளை 397 00:31:02,446 --> 00:31:03,906 இருபத்து-ஐந்திலிருந்து 30-ஆக மாற்றிவிட்டாங்க. 398 00:31:04,698 --> 00:31:06,116 - நீ நிஜமாத்தான் சொல்றயா? - என்ன? 399 00:31:08,952 --> 00:31:11,288 அடுத்த வாரத்துக்குப் பிறகு வரும் புதிய மாற்று குழுக்குளுக்குத்தான் இது பொருந்தும். 400 00:31:12,372 --> 00:31:14,208 அதற்கு இடையே, எந்த குழுவும் 28 மிஷன்களை முடித்திருக்க வேண்டும். 401 00:31:15,209 --> 00:31:17,252 நீங்களும் உங்க வீரர்களும் இதிலிருந்து தப்பிச்சுட்டீங்க, ரோஸீ. 402 00:31:17,252 --> 00:31:18,504 இருபத்து-எட்டா? 403 00:31:19,505 --> 00:31:23,717 கடவுளே, ஜாக். எங்களுக்கு இன்னும் பத்து மிஷன்களுக்கும் மேல இருக்கா? 404 00:31:24,635 --> 00:31:26,637 ஹெல்மிக்கிற்கு ஐந்துக்கு பதிலாக இன்னும் எட்டு. 405 00:31:33,727 --> 00:31:36,230 சரி, நல்வாழ்த்துகள், ரோஸீ. 406 00:31:38,565 --> 00:31:40,943 குறைந்தபட்சம், நீங்களாவது இந்த போரிலிருந்து உயிருடன் தப்புவீர்களே. 407 00:31:42,945 --> 00:31:45,239 என்ன, இது போல திடீர்னு விதிகளை மாத்தினால் எப்படி? 408 00:31:46,031 --> 00:31:47,407 அதெல்லாம் மகா மட்டம், ஜாக். 409 00:31:49,117 --> 00:31:53,664 நாம அனைவரும் அங்கே மேலே சாகணும், ஆனாலும் யாருக்கும் கவலை இல்லை. 410 00:31:54,998 --> 00:31:55,999 ஒருவரும் கவலைப்பட மாட்டாங்க! 411 00:31:58,627 --> 00:32:00,921 ஓ, நண்பா. இதைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? 412 00:32:03,131 --> 00:32:04,341 இல்லை, அது... 413 00:32:05,259 --> 00:32:06,552 உங்களை மீண்டும் சந்திப்பது நன்றாக உள்ளது. 414 00:32:07,261 --> 00:32:08,262 எனக்கும்தான். 415 00:32:09,263 --> 00:32:10,305 கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது. 416 00:32:10,305 --> 00:32:12,182 ஆம், நீங்க பிசியாக இருந்தீங்க. 417 00:32:13,809 --> 00:32:16,645 - நான் உங்களைச் சொன்னேன். - ஆம். நானும் பிசியாக இருந்தேன். 418 00:32:18,522 --> 00:32:23,193 தெரியுமா, கடந்த சில வாரங்களா, நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். 419 00:32:25,779 --> 00:32:28,156 நீங்க எங்கே போயிருந்தீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பினேன். 420 00:32:31,493 --> 00:32:33,078 நான் எங்கே போயிருந்தேன்னு தெரிஞ்சுக்கணுமா? 421 00:32:34,288 --> 00:32:38,417 இல்ல நான் அடுத்த 20 நிமிடங்கள்ல எங்கே இருக்கப் போறேன்னு தெரியணுமா? 422 00:32:43,297 --> 00:32:44,298 இருபது நிமிடங்களா? 423 00:33:07,196 --> 00:33:08,280 டைமண்டுல ஆறு. 424 00:33:08,906 --> 00:33:09,907 டைமண்டுல ராணி. 425 00:33:10,699 --> 00:33:11,700 டைமண்டுல பத்து. 426 00:33:12,326 --> 00:33:13,744 டம்மி நமக்குக் கொடுப்பது டைமண்டுல இரண்டு. 427 00:33:16,622 --> 00:33:17,623 பக்? 428 00:33:18,790 --> 00:33:21,043 நான்... கிளப்ஸ்ல எட்டு. 429 00:33:22,419 --> 00:33:23,670 கிளப்ஸ்ல பத்து. 430 00:33:24,338 --> 00:33:25,339 கிராங்க்? 431 00:33:28,383 --> 00:33:29,384 இது கண்டக்ஷன். 432 00:33:30,177 --> 00:33:34,681 ஒருவேளே அதுல பசையின் மீதியோ, எண்ணெயோ, அழுக்கோ இல்ல வேற ஏதோ 433 00:33:34,681 --> 00:33:37,100 மின்சாரம் பாய்வதற்கு தடையா இருக்கலாம். 434 00:33:55,911 --> 00:33:56,912 நான் நினைக்கிறேன்... 435 00:33:58,872 --> 00:34:00,415 ஆம், ஆம், ஏதோ வருகிறது. 436 00:34:03,585 --> 00:34:04,586 ஜெர்மன் பேசுகிறார்கள். 437 00:34:07,422 --> 00:34:08,507 அது இசை. 438 00:34:13,344 --> 00:34:14,346 பொறு. 439 00:34:16,556 --> 00:34:19,016 ஆம். ஆம், சரி, இது பிபிசி. 440 00:34:19,518 --> 00:34:20,518 கொஞ்சம் பேப்பர் கொடு. 441 00:34:23,688 --> 00:34:26,440 சோவியட் படைகள் ஃபீல்ட் மார்ஷல் மான்ஸ்டீனை 50 மைல்கள் துரத்தில் விரட்டியடித்து... 442 00:34:26,440 --> 00:34:29,360 போரில் மிகவும் பலத்த வெடிகுண்டு தாக்குதலை நேற்று பெர்லின் எதிர்கொண்டது. 443 00:34:29,945 --> 00:34:30,946 அப்புறம் இதைக் கேளுங்க: 444 00:34:30,946 --> 00:34:35,993 அங்கிள் ஜோவின் ரஸ்கீக்கள் மோஹிலிவ் போடில்ஸ்கீ என்ற இடத்தில் ஒரு பிரிட்ஜ்ஹெட்டை கைப்பற்றினார்கள், 445 00:34:35,993 --> 00:34:37,744 அது கிரௌட் ராணுவத்தை இரண்டாக பிளவுபடுத்தியது. 446 00:34:48,045 --> 00:34:51,592 மீண்டும் மீண்டும் பெர்லின் மீது நடத்திய தாக்குதல்களால 100-வது அணி பாதிக்கப்பட்டது. 447 00:34:52,759 --> 00:34:53,760 இனி இலக்குகள் மீது வெடிகுண்டுகளை 448 00:34:53,760 --> 00:34:57,181 போடுவதற்கு இயலாது என்று தெளிவானது. 449 00:34:57,681 --> 00:35:00,934 நாங்கள் ஜெர்மானிய லுஃப்ட்வாஃபை முற்றிலுமாக அழிக்க வேண்டியிருந்தது. 450 00:35:01,602 --> 00:35:03,604 {\an8}ஆம்புலன்ஸ் 451 00:35:08,650 --> 00:35:11,570 என் நண்பரான ரோஸீ இதை நன்கு அறிந்திருந்தார். 452 00:35:12,404 --> 00:35:14,740 ஆனால் அவர் தனது 25-வது மிஷனை முடித்து இருந்தார். 453 00:35:17,618 --> 00:35:19,453 அவர் தனது கடமையை முடித்திருந்தார். 454 00:35:19,453 --> 00:35:21,914 இப்போது அவர் வீடு திரும்ப முடியும். 455 00:35:35,761 --> 00:35:40,057 {\an8}மார்ச் 24, 1944 456 00:35:42,059 --> 00:35:43,393 கடவுளே. 457 00:35:46,146 --> 00:35:47,356 அவங்க எல்லோரும் எங்கே போகிறார்கள்? 458 00:35:59,952 --> 00:36:01,578 செய்தி உள்ளது, மக்களே. 459 00:36:02,079 --> 00:36:05,582 வடக்கு காம்பவுண்டில் பிரிட்டிஷ்காரர்கள் மூன்று சுரங்கப்பாதைகளைத் தோண்டி இருக்கிறார்கள். 460 00:36:05,582 --> 00:36:09,002 மூன்றா? கடவுளே, எப்படி? 461 00:36:09,002 --> 00:36:10,838 அவங்க ஒரு வருடத்துக்கும் மேலாக அதைத் தோண்டிட்டு இருந்திருக்காங்க. 462 00:36:11,964 --> 00:36:14,883 போலீஸின் சீஸ்மோகிராஃப்புகள், அவர்களை அறியக்கூடாது என்று முப்பதடி ஆழத்துல செய்திருக்காங்க. 463 00:36:16,093 --> 00:36:18,011 எழுபது, ஏன் எண்பது ஆட்கள் கூட தப்பிச்சிருக்கலாம். 464 00:36:18,011 --> 00:36:19,137 எண்பதா? 465 00:36:19,721 --> 00:36:21,682 இதுபோல எப்பவும் நடந்ததேயில்லை. 466 00:36:21,682 --> 00:36:24,685 இதற்காக பலத்த பழிவாங்கல்கள் இருக்கும்னு கர்னல் எதிர்பார்க்கிறார், 467 00:36:24,685 --> 00:36:28,146 ஏனெனில் விரைவில் பல எஸ்எஸ் மற்றும் கிஸ்டாப்போ மேலதிகாரிகளுக்கு 468 00:36:28,146 --> 00:36:30,566 இந்த தப்பியோடலின் முக்கியத்துவம் தெரியக்கூடும். 469 00:36:35,946 --> 00:36:36,947 நீங்க சரியாகத்தான் சொல்றீங்க. 470 00:36:36,947 --> 00:36:39,449 அவங்க பிரிட்டிஷ்காரர்களை துரத்திகிட்டு இருந்தபோதே நாம தப்பியோடும் முயற்சியை செய்திருக்கணும். 471 00:36:39,449 --> 00:36:43,495 இருக்கலாம், ஆனால் நீ சொன்னது சரின்னு தோணுது. பாதுகாப்பா இருப்பது மேல். 472 00:36:43,495 --> 00:36:45,581 நான் ஏன் வீட்டுக்குப் போக இவ்வளவு அவசரப்படணும்? 473 00:36:45,581 --> 00:36:48,959 மற்ற வீரர்களுக்கு கடிதங்கள் வருகின்றன. உங்களுக்கு வருகின்றன. 474 00:36:50,460 --> 00:36:52,963 ஒரு கடிதம் கிடைக்க, அதை அனுப்பறவங்க இருக்கணும் இல்லையா. 475 00:36:55,674 --> 00:36:57,551 அந்த விஷயத்தை நான் அக்கறையில்லாம விட்டுட்டேன்னு நினைக்கிறேன். 476 00:37:00,220 --> 00:37:01,763 இந்த இடத்துல இருப்பதால நீ அப்படி பேசுற. 477 00:37:02,514 --> 00:37:03,599 நீ களைச்சு போய் இருக்க. 478 00:37:03,599 --> 00:37:04,683 நான் களைச்சுதான் போய் இருக்கேன். 479 00:37:06,185 --> 00:37:09,021 ஆம், சரி, இங்கிருந்து வெளியே போன பிறகு, அதை கவனிக்க உனக்கு நிறைய நேரம் இருக்கும். 480 00:37:10,230 --> 00:37:11,815 அடுத்த முறை நீ எல்லாத்தையும் சரியாக்கிடுவ. 481 00:37:13,275 --> 00:37:16,987 இந்த இளைஞனைதான் அவங்க பார்ப்பாங்க. வயதான என்னைப் பார்க்க மாட்டாங்க. 482 00:37:18,197 --> 00:37:19,573 நான் இங்கே வருவதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன்னும் பார்க்க முடியாது. 483 00:37:21,867 --> 00:37:23,535 அதெல்லாம் நாம வெளியே போனால்தானே. 484 00:37:23,535 --> 00:37:27,497 நாம வெளியே போவோம். இப்போ இருக்கும் உன் இயல்புதான் அப்போது கைகொடுக்கும். 485 00:37:27,497 --> 00:37:28,874 ஹே, மேஜர்களே! 486 00:37:30,209 --> 00:37:32,794 - சிமோலெட், அலுவலகத்துக்கு உங்களை அழைக்கிறார். - எங்களை மட்டுமா? 487 00:37:32,794 --> 00:37:34,421 ஆமாம். உங்களையும் கர்னலையும். 488 00:37:36,131 --> 00:37:38,550 இந்த பெரும் தப்பியோடல் சம்பவத்தால, 489 00:37:39,218 --> 00:37:42,221 கமோடான்ட் வொன் லின்டைனர் அவருடைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். 490 00:37:43,180 --> 00:37:45,390 தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்களை திரும்பவும் பிடிச்சுட்டாங்க. 491 00:37:46,642 --> 00:37:48,101 ஆனால், சொல்லவே வருத்தமா இருக்கு, 492 00:37:49,603 --> 00:37:51,104 இதைச் சொல்ல ரொம்ப சங்கடமா இருக்கு, 493 00:37:51,605 --> 00:37:55,234 அப்படி திரும்பி பிடிபட்டவர்களில் ஐம்பது பேரை கொன்னுட்டாங்க. 494 00:37:56,485 --> 00:37:57,569 கொன்னுட்டாங்களா? 495 00:37:57,569 --> 00:38:01,823 எந்த விதத்திலும் ஆணைகளை மீறுவது, இல்ல எந்த வகையிலும் தப்பியோட முயற்சிப்பது 496 00:38:01,823 --> 00:38:04,535 அதுக்கு பதிலடியா எதிர்காலத்துல எதையும் செய்ய வேண்டாம்னு... 497 00:38:05,494 --> 00:38:07,621 உங்க ஆட்களிடம் சொல்லி வைக்க நான் வலியுறுத்துறேன். 498 00:38:08,830 --> 00:38:10,999 மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்ட்ல உள்ள யூத கைதிகளின் விவரங்களை 499 00:38:10,999 --> 00:38:14,253 தெரிவிக்கும்படி எனக்கு ஆணைகள் வந்துள்ளன. 500 00:38:17,256 --> 00:38:20,217 மேஜர் சிமோலெட், மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்ட்டில் அமெரிக்கர்கள் மட்டும்தான் உள்ளார்கள். 501 00:38:21,635 --> 00:38:22,761 அமெரிக்கர்கள் மட்டும். 502 00:38:29,977 --> 00:38:33,355 ஆம், சரி, லுஃப்ட்வாஃப்பிலிருந்து, எஸ்எஸ் மற்றும் கிஸ்டாப்போவிற்கு 503 00:38:33,355 --> 00:38:35,816 அனைத்து ஸ்டாலாக்குகளையும் ரேயிக்கிற்கு இடமாற்றம் செய்யும்படி, 504 00:38:36,316 --> 00:38:40,112 பெர்லினில் பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 505 00:38:42,030 --> 00:38:45,284 நாம் அனைவருமே அது போன்ற ஒரு விளைவை தவிர்க்க விரும்புகிறோம், இல்லையா? 506 00:38:47,870 --> 00:38:50,539 உங்களுடைய நன்னடத்தை, மிகவும் வரவேற்கப்படும். 507 00:38:54,376 --> 00:38:56,128 எனவே, இப்போது வாய்ப்புகள் எப்படி இருக்குன்னு நினைக்கிறாய்? 508 00:38:56,128 --> 00:39:00,507 நாம உயிருடன் வீடு திரும்புவதற்கா? சாத்தியம் குறைவு. ரொம்ப, ரொம்ப குறைவுதான். 509 00:39:15,856 --> 00:39:16,899 நீங்க மீண்டும் மிஷனில் போக விரும்புறீங்களா? 510 00:39:19,109 --> 00:39:22,738 கேப்டன், மிஷன்களின் எண்ணிக்கை 30-ஆக மாறியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. 511 00:39:23,488 --> 00:39:24,573 ஆம், சார், தெரியும். 512 00:39:36,543 --> 00:39:38,003 இப்போது, என்னால் உங்களைத் தடுக்க முடியாது, கேப்டன். 513 00:39:39,713 --> 00:39:41,048 ஆனால் நீங்க வீட்டிற்கு போக விரும்பலையா? 514 00:39:42,466 --> 00:39:46,094 கடவுளே, நீங்கதான் இப்போது புளோரிடாவிற்குப் போக மிக தகுதியானவர். 515 00:39:48,263 --> 00:39:49,389 சரி, சார். 516 00:39:53,769 --> 00:39:54,853 நான் நினைக்கிறேன் நான்... 517 00:39:59,066 --> 00:40:00,150 ஷோன்ஸும் ஹெல்மிக்கும். 518 00:40:04,071 --> 00:40:06,281 அவங்களுக்கான மிஷன்களின் எண்ணிக்கையை மேலதிகாரிகள் டூர்ல இருக்கும்போதே அதிகப்படுத்திட்டாங்க 519 00:40:06,281 --> 00:40:08,492 என தெரிந்த பிறகு, நான் எப்படி வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்க முடியும்? 520 00:40:11,620 --> 00:40:13,038 அதுக்கு அப்புறம் நான்... 521 00:40:14,122 --> 00:40:17,042 அதோட முன் அனுபவம் இல்லாத ஒருவர் என் இடத்தில் வருவதை என்னால ஏற்க முடியலை. 522 00:40:18,961 --> 00:40:21,880 அவரையும் அவருடைய குழுவையும் முதல் மிஷனிலேயே மரணத்தை நோக்கிக் கொண்டு போறதை ஏற்க முடியாது. 523 00:40:25,384 --> 00:40:27,344 அதன் பின், அவருக்கு மாற்றாக இன்னொருவர், 524 00:40:27,344 --> 00:40:29,096 அப்படி மீண்டும் மீண்டும் இதே நடக்கும். 525 00:40:33,809 --> 00:40:35,060 முடியாது, சார். 526 00:40:38,689 --> 00:40:39,731 என்னால வீடு திரும்ப முடியாது. 527 00:40:42,609 --> 00:40:43,610 இப்போதைக்கு முடியாது. 528 00:40:45,988 --> 00:40:47,489 வேலை முடியும் வரை இருக்க வேண்டும். 529 00:40:50,117 --> 00:40:51,118 எப்படியோ இருக்க வேண்டும். 530 00:40:58,250 --> 00:40:59,251 புரிகிறது. 531 00:41:02,421 --> 00:41:06,508 சரி, குறைந்தது, உங்க தீர்மானம் இப்போது நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் 532 00:41:06,508 --> 00:41:08,760 அனைத்தையும் அறிந்துகொண்டு எடுத்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 533 00:41:10,762 --> 00:41:14,183 ஜெனரல் டூலிட்டில் விமானப் படையின் தாக்குதல் அணுகுமுறையையே முற்றிலும் மாத்த ஆணையிட்டுள்ளார். 534 00:41:15,601 --> 00:41:20,189 லுஃப்ட்வாஃப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையும், நமக்கு விமானப் படையின் மேலாண்மை 535 00:41:21,064 --> 00:41:23,150 முழுவதும் கிடைக்கும் வரையும், படையெடுப்பு நடைபெறாது, நடக்கக் கூடாது என்கிறார். 536 00:41:24,359 --> 00:41:27,237 எந்த லுஃப்ட்வாஃப் விமானத்தையும்விட அதிக அற்றலும், அதிக திறனும் உடைய 537 00:41:27,237 --> 00:41:31,408 புதிதாக வந்துள்ள பி-51 விமானங்கள் இருப்பதால், நாம் அதை இப்போதுதான் செய்ய முடியும். 538 00:41:34,620 --> 00:41:38,498 ஆனால் அவர்களைச் சுட்டு வீழ்த்த, அவர்களை நாம் வானத்தில் பறக்கச் செய்ய வேண்டும். 539 00:41:40,584 --> 00:41:41,877 அவர்களை தூண்டிலாக இழுக்கத்தான் குண்டுவீச்சாளர்கள். 540 00:41:44,630 --> 00:41:45,631 நம் குண்டுவீச்சாளர்கள். 541 00:41:48,550 --> 00:41:49,635 எனவே இதுதான் போர் உத்தி. 542 00:41:50,719 --> 00:41:53,305 அதுதான் மிஷன். தூண்டில் போட்டு இழுப்பது. 543 00:41:57,267 --> 00:41:58,268 எனக்குப் புரிகிறது. 544 00:42:05,901 --> 00:42:06,902 அப்போது சாி. 545 00:42:08,529 --> 00:42:09,530 மறுபடியும் பணியில் தொடர விண்ணப்பம். 546 00:42:09,530 --> 00:42:12,491 ஆர். ரோஸென்தால் 547 00:42:12,491 --> 00:42:18,664 எங்களுக்கு 350-வது அணியில் ஒரு புதிய கமாண்டிங் அதிகாரி தேவை. 548 00:42:22,125 --> 00:42:23,126 நீங்க அதை எடுத்துக்கொள்வீர்களா? 549 00:42:24,419 --> 00:42:25,712 ஆம், எடுத்துக்கொள்ளத் தயார். 550 00:42:26,505 --> 00:42:27,548 அப்போது சரி. 551 00:42:33,178 --> 00:42:34,429 மிக்க நன்றி, கர்னல். 552 00:42:42,145 --> 00:42:43,480 Masters of the Air-ல் அடுத்து வருவது 553 00:42:45,524 --> 00:42:46,817 நாம் எதற்காக இன்னும் காத்திருக்கோம்? 554 00:42:46,817 --> 00:42:48,694 நாம் இப்போதே தயார் ஆகணும். 555 00:42:49,820 --> 00:42:52,489 உனக்கான பணியைப் பற்றி ஜீன் சொல்வார். நீ நாளைக்கே கிளம்பணும். 556 00:42:52,489 --> 00:42:54,157 நான் கட்டடம் முழுவதையும் பார்த்துட்டேன். 557 00:42:55,200 --> 00:42:57,160 {\an8}இதைவிட இன்னும் தீவிர தாக்குதலில் நாம் எப்போது ஈடுபடப்போகிறோம்? 558 00:42:57,160 --> 00:42:58,620 திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 559 00:43:00,914 --> 00:43:03,417 ஐரோப்பாவை படையெடுக்க இன்னும் சில மணிநேரம்தான் உள்ளன. 560 00:43:04,585 --> 00:43:06,211 உங்களுக்கான மிஷன்தான் அதை சாத்தியமாக்குகிறது. 561 00:43:07,838 --> 00:43:09,590 நாங்க டஸ்கேஜீ வீரர்களா என்ன? 562 00:43:09,590 --> 00:43:10,757 சார், சரி, சார்! 563 00:43:10,757 --> 00:43:13,051 அவரைத் தொடர்புகொள்ள, சபால்டர்ன் வெஸ்கேட் இந்த எண்ணை என்னிடம் கொடுத்தார். 564 00:43:14,428 --> 00:43:16,597 இதைவிட சிறந்த எந்த நாட்டையும் உனக்குத் தெரியுமா? 565 00:43:16,597 --> 00:43:20,017 அது இருக்க வேண்டிய நிலையில் இருக்க, அது மிகவும் கடினமாக முயற்சிக்கிறது என்று எனக்குத் தெரியும். 566 00:43:20,017 --> 00:43:22,769 நிபுணர்களாகிய நீங்கள் எல்லாம் கடினமாக உழைப்பதைப் பார்த்தால், இது ஏதோ வொர்க் முகாம் போலுள்ளது. 567 00:43:22,769 --> 00:43:25,272 நீங்கதான் முகாமின் புதிய அரசர், நான் அதற்கு தடங்கலாக இருக்கிறேனா? 568 00:43:25,814 --> 00:43:27,566 என்ன, உன்னால சமாளிக்க முடியாதா... 569 00:43:27,566 --> 00:43:29,985 நூற்றுக்கணக்கான விமானங்கள். ஆயிரக்கணக்கான வீரர்கள். 570 00:43:31,069 --> 00:43:32,821 அதுபோல ஒன்றை பார்த்திருக்க சாத்தியமே இல்லை. 571 00:48:59,606 --> 00:49:01,608 தமிழாக்கம் அகிலா குமார்