1 00:00:19,520 --> 00:00:21,188 ஹோவர்ட் 2 00:00:21,271 --> 00:00:22,940 லிண்டன் 3 00:01:02,312 --> 00:01:04,272 அம்மா, இசையின் ஒலியை குறைக்க முடியுமா? 4 00:01:04,690 --> 00:01:06,775 அம்மா, ஒலியை குறையுங்கள். 5 00:01:06,859 --> 00:01:08,443 நீ எப்போது உள்ளே வந்தாய்? 6 00:01:09,027 --> 00:01:10,028 என் வீட்டில் என்ன செய்கிறீர்கள்? 7 00:01:10,112 --> 00:01:12,447 மீண்டும் என் கட்டிடத்தில் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். 8 00:01:12,531 --> 00:01:14,116 நிகழ்ச்சிக்கு முன் குளிக்க வேண்டியிருந்தது. 9 00:01:15,242 --> 00:01:17,786 அதோடு, நீ இன்னும் கொஞ்சம் கண்டிஷனர் வாங்க வேண்டும். 10 00:01:17,870 --> 00:01:19,746 டோக்கியோவை நடக்க அழைத்துச் செல்லவில்லை, இல்லையா? 11 00:01:19,830 --> 00:01:21,748 இல்லை. ஆனால் உணவளித்தேன். 12 00:01:22,958 --> 00:01:24,543 அம்மா, நாய்க்கு பீட்சா கொடுக்கக் கூடாது. 13 00:01:24,626 --> 00:01:26,420 ஏன்? அதற்கு பிடித்திருக்கிறது. 14 00:01:26,503 --> 00:01:29,131 சரி. பீட்சா கூடாது. கோபப்படாதே. நான் கிளம்புகிறேன். 15 00:01:29,214 --> 00:01:32,176 ஸ்டீவ் ஒலியை சரிபார்த்துக் கொண்டிருக்கிறான். உள்ளீடுகளை கெடுப்பதற்கு முன் போக வேண்டும். 16 00:01:32,259 --> 00:01:33,802 இதை மட்டும் சரி செய்து விடுகிறேன். 17 00:01:34,303 --> 00:01:37,347 இதை ஒருபோதும் சரியாக செய்ய மாட்டீர்கள். சரி. 18 00:01:37,431 --> 00:01:38,599 நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். 19 00:01:39,725 --> 00:01:44,062 ஆம், ஏன் தெரியுமா? இன்று முதல் முறையாக செய்தியோடு என் பெயரும் வந்திருக்கிறது. 20 00:01:45,731 --> 00:01:47,983 அதற்கு என்ன அர்த்தம்? பதவி உயர்வா? 21 00:01:48,066 --> 00:01:49,193 இன்னும் இல்லை. சீக்கிரம் கிடைக்கலாம். 22 00:01:49,818 --> 00:01:50,819 ஒரு விசாரணை பற்றி எழுதுகிறேன். 23 00:01:50,903 --> 00:01:53,822 நிறைய லஞ்சம் வாங்கிய ஒரு நீதிபதி இருக்கிறார். 24 00:01:53,906 --> 00:01:56,074 -நான் ஒரு முழு தொடரையும் எழுதப் போகிறேன். -அது மிகவும் அருமை. 25 00:01:56,158 --> 00:01:57,618 -அதைத்தான் நீ விரும்பினாய், இல்லையா? -ஆம். 26 00:01:57,701 --> 00:01:58,911 ஆம். 27 00:01:58,994 --> 00:02:01,455 -வாழ்த்துக்கள். -நன்றி, அம்மா. 28 00:02:01,538 --> 00:02:02,831 -பிறகு வா, சரியா? -சரி. 29 00:02:02,915 --> 00:02:04,124 -கொண்டாடுவோம். -சரி. 30 00:02:05,000 --> 00:02:07,336 -சரி, என்னை வாழ்த்து! -நன்றாக பாட வாழ்த்துக்கள்! 31 00:02:40,369 --> 00:02:42,621 விளையாட வேண்டும்? என்ன? நீ இதை எடுத்து வருகிறாயா? 32 00:02:43,539 --> 00:02:44,540 போய் எடுத்து வா. 33 00:02:57,803 --> 00:02:59,888 நகராதே, வேசி. 34 00:03:20,158 --> 00:03:22,870 அங்கேதான் கிடந்தேன், தரையில். 35 00:03:22,953 --> 00:03:26,498 என்னால் பார்க்க முடிந்தது. மணலும் சிகரெட் துண்டுகளையும். 36 00:03:27,082 --> 00:03:29,084 நான் கடைசியாகப் பார்ப்பது அதுவாக இருக்க நான் விரும்பவில்லை, 37 00:03:29,168 --> 00:03:30,377 எனவே நகர்ந்து கொண்டே இருந்தேன். 38 00:03:30,961 --> 00:03:33,797 குப்பையைப் பார்த்துக்கொண்டே சாகாத அளவுக்கு தூரம் செல்ல விரும்பினேன். 39 00:03:33,881 --> 00:03:35,757 பிறகு யாரோ ஒருவர் என்னைக் கண்டுபிடித்தார். 40 00:03:37,217 --> 00:03:38,510 வேறு யாராவது அவனைப் பார்த்தார்களா? 41 00:03:38,594 --> 00:03:40,095 இல்லை. எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. 42 00:03:40,179 --> 00:03:42,139 நான் சென்றபோது நிறைய பேர் இருந்தார்கள். 43 00:03:42,222 --> 00:03:43,390 பிறகு யாரையும் காணவில்லை. 44 00:03:43,974 --> 00:03:45,601 -எனவே, உன்னைப் பின்தொடர்ந்தானா? -இல்லை. 45 00:03:45,684 --> 00:03:47,811 அவன் எனக்குப் பின்னால் இல்லை. எனக்கு முன்பே அங்கிருந்திருக்கிறான். 46 00:03:49,062 --> 00:03:50,314 நேற்றும் அப்படித்தான் நடந்தது. 47 00:03:51,064 --> 00:03:53,150 எனவே அவன் உன்னை போக முடியாதபடி நிறுத்தினான், பிறகு என்ன? 48 00:03:53,233 --> 00:03:55,277 அவனிடம் ஆயுதம் இருந்ததா? உன் மீது கை வைத்தானா? 49 00:03:55,360 --> 00:03:59,865 இல்லை அவன் என்னை தொடவில்லை. அவன் எனக்காக அங்கு இல்லை. 50 00:04:01,617 --> 00:04:06,205 அவன் ஏதாவது உணரும்போது அது உனக்கு தெரியும் என்று உன்னிடம் சொல்ல சொன்னான். 51 00:04:08,040 --> 00:04:09,249 அப்போது என்ன நேரம்? 52 00:04:09,333 --> 00:04:10,876 சுமார் 8:30 மணி இருக்கும். 53 00:04:10,959 --> 00:04:14,671 உங்கள் கார். அவன் இவளை தேடி வந்ததும், அது மாறியது. 54 00:04:15,756 --> 00:04:17,089 திரும்பி வருவேன் என்றான். 55 00:04:19,718 --> 00:04:20,761 உன் சாவி கொத்து. 56 00:04:24,097 --> 00:04:26,725 உன்னுடைய பழையதை எடுத்து வேறொரு பெண்ணுக்குள் வைத்திருக்கிறான். 57 00:04:27,351 --> 00:04:31,522 அப்படியென்றால்? என்னைக் கொல்லப் போகிறானா? 58 00:04:32,105 --> 00:04:35,192 ஏற்கனவே செய்துவிட்டான். இன்னும் இல்லை. 59 00:05:03,011 --> 00:05:05,138 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 60 00:05:12,187 --> 00:05:13,313 சரி, நீ தயாரா? 61 00:05:14,064 --> 00:05:15,065 சரி, தொடங்கு. 62 00:05:18,610 --> 00:05:22,906 டீனிஸில் செய்வது போல. நீ நீயாக இரு. பிரெஞ்சு வேண்டாம். 63 00:05:23,866 --> 00:05:25,951 "டீனிஸ்." அவள் பெயர் கிறிஸ்டினாவாக இருக்கலாம். 64 00:05:26,451 --> 00:05:27,911 ஒருவேளை அவள் குள்ளமாக இருக்கலாம். 65 00:05:27,995 --> 00:05:30,789 அல்லது அவள் உயரமாக இருப்பதால் வைத்த பட்டப்பெயராக இருக்கலாம். 66 00:05:30,873 --> 00:05:33,166 டீனிஸ் ஒரு நபராக இல்லாமல் இருக்கலாம். அது ஒரு இடமாக இருக்கலாம். 67 00:05:33,250 --> 00:05:35,210 அவள் எங்கோ வேலை செய்கிறாள். பார்… 68 00:05:35,294 --> 00:05:36,670 இல்லை, அப்படியிருந்தால் என் அப்பாவுக்குத் தெரியும். 69 00:05:42,968 --> 00:05:46,263 சரி, நாம் போக வேண்டும். டீனிஸின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம். 70 00:05:53,812 --> 00:05:57,274 நீ மார்கஸை அழைக்க வேண்டுமா? அவனுக்கு தெரிவித்துவிடு. சில மணி நேரங்கள் ஆகும். 71 00:05:58,317 --> 00:06:01,069 அவன் கப்ஸ் விளையாட்டு பற்றி செய்தி சேகரிக்கிறான். அலுவலகத்தில் இருப்பான். 72 00:06:01,653 --> 00:06:02,988 நீ அதற்காக சந்தோஷப்படுவது போல தெரிகிறது. 73 00:06:03,739 --> 00:06:05,991 -நான் சந்தோஷப்படக் கூடாதா? -எனக்கு தெரியாது. 74 00:06:06,074 --> 00:06:09,912 நீ அவனை திருமணம் செய்யவில்லை, நீ வீட்டிற்கு வந்தபோது அவன் அங்கேயே இருந்ததாக சொன்னாய். 75 00:06:09,995 --> 00:06:11,413 அதனால் அவன் ஒரு அந்நியன். 76 00:06:11,496 --> 00:06:12,998 அவன் எனக்கு உண்மையில் தெரிந்தவன் இல்லை. 77 00:06:13,624 --> 00:06:17,085 ஆனால், நீங்கள் சொன்னது போல, கணவனாகப் போகிறவனாக இருக்கலாம். 78 00:06:17,169 --> 00:06:19,254 ஒருவேளை அவன் தேர்வு செய்யப்போவது நானாக இருக்கலாம். 79 00:06:19,796 --> 00:06:23,842 நீ அவனிடம் சொல்ல வேண்டும். என்ன நினைக்கிறான் என்று பார். 80 00:06:25,511 --> 00:06:26,762 சரி. 81 00:06:37,314 --> 00:06:38,357 ஆட்லர் கோளரங்கம் 82 00:06:44,154 --> 00:06:45,656 நேற்று என்ன நடந்தது? 83 00:06:47,199 --> 00:06:49,660 இங்கே யாராவது பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தாயா என்று பாதுகாவலர் என்னிடம் கேட்டார். 84 00:06:50,744 --> 00:06:53,038 -நீ பார்த்தாயா? -நமக்குத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. 85 00:06:54,122 --> 00:06:55,958 உன்னைப் பற்றியும் கேட்டார்கள். 86 00:06:57,084 --> 00:06:58,085 நீ என்ன சொன்னாய்? 87 00:06:58,168 --> 00:07:00,003 நீ பல வருட ஆராய்ச்சியை வழங்குவதற்கு இன்னும் 88 00:07:00,087 --> 00:07:02,089 இரண்டு நாட்களே இருப்பதால் நீ நெருக்கடியில் இருப்பதாக சொன்னேன். 89 00:07:02,172 --> 00:07:04,132 ஆனால், அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். 90 00:07:08,554 --> 00:07:14,434 நேற்று நான் மேலே சென்றபோது கூரையில் ஒருவன் இருந்தான். 91 00:07:14,518 --> 00:07:17,229 நிஜமாகவா? என்ன நடந்தது? 92 00:07:17,312 --> 00:07:19,690 அவன் உன்னை ஏதாவது செய்தானா? அல்லது… 93 00:07:21,859 --> 00:07:24,987 நான் இதை முடிக்க வேண்டும். இதை கம்ப்ரஸ் செய்ய இரவு முழுவதும் எடுக்கும். 94 00:07:25,946 --> 00:07:27,573 டாக்டர் கேரி ஹெக்லேண்ட் 95 00:07:32,995 --> 00:07:33,996 மதிய உணவு சாப்பிடுகிறாயா? 96 00:07:36,248 --> 00:07:37,541 உன் கிராஃபிக்ஸ் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. 97 00:07:37,624 --> 00:07:39,042 அதற்கு அதிக நேரம் ஆகாது. 98 00:07:40,627 --> 00:07:43,630 சரி. எனக்கு ஒரு நிமிடம் கொடு. 99 00:07:52,556 --> 00:07:54,099 முதல் முறையாக… 100 00:07:54,183 --> 00:07:56,101 ஹேய், நட்சத்திர ஆய்வகங்களைப் பற்றிய 101 00:07:56,185 --> 00:07:58,395 புதுப்பிப்பை செய்யலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 102 00:07:58,478 --> 00:08:01,148 நீ விரும்பினால் அதைக் கவனித்துக்கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை… 103 00:08:01,231 --> 00:08:03,233 ஆம், அது பரவாயில்லை. 104 00:08:03,942 --> 00:08:07,946 பில்லியன் கணக்கான ஆண்டு அண்ட பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம். 105 00:08:08,030 --> 00:08:10,157 விண்மீன் மோதல்கள் தலைமை உரை டாக்டர் ஜின்-சூக் குவான்சுன் 106 00:08:10,240 --> 00:08:12,576 நமது பிரபஞ்சம் வாயு மற்றும் தூசியின் பரந்த விரிவாக்கம், 107 00:08:12,659 --> 00:08:15,746 தொடர்ந்து மோதுகிறது, உருவாகிறது, விரிவடைகிறது. 108 00:08:16,246 --> 00:08:18,624 கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொட்டில் இது. 109 00:08:19,249 --> 00:08:23,337 ஆனால் ஒரு விண் மண்டல போக்கை மாற்றுவதற்கு ஒரு நட்சத்திரம் போதும், 110 00:08:23,420 --> 00:08:26,298 ஒரு பில்லியன் ஆண்டுகள் எதிர்காலத்தில் எடுத்துச்செல்ல. 111 00:08:34,890 --> 00:08:38,477 உங்கள் தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்வதை நினைவில் கொள்ளுங்கள், 112 00:08:38,559 --> 00:08:40,562 அதோடு விரைவில் மீண்டும் நட்சத்திரங்களைப் பார்வையிடுங்கள். 113 00:08:59,998 --> 00:09:03,752 டைட்டன் டவர். டவர் ஹாபீஸ். 114 00:09:03,836 --> 00:09:05,212 டீனிஸ் என்று எதுவும் இல்லை. 115 00:09:05,838 --> 00:09:07,548 அல்லது அவர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். 116 00:09:08,215 --> 00:09:09,967 ஆம், இதிலும் அது இல்லை. 117 00:09:10,551 --> 00:09:12,135 நகர பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும். 118 00:09:14,304 --> 00:09:16,515 எண் என் மேஜை மேல் உள்ளது. நீங்கள் அவர்களை அழைக்கிறீர்களா? 119 00:09:17,015 --> 00:09:18,016 சரி. 120 00:09:23,730 --> 00:09:24,731 ஹேய். 121 00:09:26,191 --> 00:09:27,860 -விளையாட்டு எப்படி சென்றது? -நன்றாக. 122 00:09:28,735 --> 00:09:30,571 நீ இன்று வரமாட்டாய் என்று நினைத்தேன். 123 00:09:31,154 --> 00:09:32,823 அவனை தெரிந்த ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தோம். 124 00:09:35,200 --> 00:09:36,201 அவளைக் தேட முயற்சிக்கிறோம். 125 00:09:36,285 --> 00:09:38,537 -செய்தி பதிவுகளில் இல்லையா? -அவள் பெயர் எங்களுக்குத் தெரியாது. 126 00:09:38,620 --> 00:09:41,331 எங்கிருந்து வருகிறாள் என்று தெரியும். டீனிஸ். 127 00:09:41,415 --> 00:09:44,835 -ஆர்ச்சர் ஹைட்ஸில் உள்ள இறைச்சி ஆலை? -இருக்கலாம். அதை உனக்கு எப்படி தெரியும்? 128 00:09:44,918 --> 00:09:48,463 சில ஆண்டுகளுக்கு முன்பு UFCW தங்கள் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்ய முயற்சித்தது. 129 00:09:48,547 --> 00:09:49,715 அவர்கள் அதை நிராகரித்தனர். 130 00:09:49,798 --> 00:09:51,758 நான் அதை படமெடுத்தேன். டேன் கட்டுரை எழுதினார். 131 00:09:52,759 --> 00:09:54,469 நான் அப்படி நினைக்கவில்லை. அவருக்கு அது தெரியவில்லை. 132 00:09:54,553 --> 00:09:55,929 இல்லை, அவருக்கு அது நினைவில்லை. 133 00:09:57,848 --> 00:10:00,559 இதற்கு நீங்கள் வேறு சிலரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் அங்கே கொண்டுபோய் விடுகிறேன். 134 00:10:00,642 --> 00:10:01,643 பரவாயில்லை. 135 00:10:05,522 --> 00:10:06,690 இங்கே வா. 136 00:10:18,535 --> 00:10:20,913 கடந்த வாரம் வரை... 137 00:10:24,833 --> 00:10:26,835 நிஜமாக உன்னை எனக்குத் தெரியாது. 138 00:10:28,670 --> 00:10:32,424 நீ எனக்குக் காட்டிய அந்த புகைப்படங்கள், அவற்றில் எதையும் நான் அடையாளம் காணவில்லை. 139 00:10:33,425 --> 00:10:37,930 எனக்குப் புரியவில்லை. உனக்கு நினைவுவைத்துக்கொள்வதில் சிக்கலா? 140 00:10:38,514 --> 00:10:42,518 இல்லை. நான் ஒருபோதும் அங்கு இருந்ததில்லை. 141 00:10:45,062 --> 00:10:46,396 அந்த புகைப்படங்கள்... 142 00:10:46,480 --> 00:10:47,481 அது நான் இல்லை. 143 00:10:49,441 --> 00:10:50,776 அது அப்போது யார் என்று நினைக்கிறாய்? 144 00:10:52,069 --> 00:10:53,070 அது நான்தான். 145 00:10:54,112 --> 00:10:59,368 ஆனால் நான் இன்னும் வாழாத என் வாழ்க்கையின் ஒரு பகுதி. 146 00:11:00,786 --> 00:11:03,413 அப்படியா? அப்படியா நீ நினைக்கிறாய்? 147 00:11:04,498 --> 00:11:07,167 -ஆம். -சரி. 148 00:11:07,251 --> 00:11:11,129 -எவ்வளவு காலமாக இப்படி இருக்கிறது? -உன் பிறந்தநாளிலிருந்து. 149 00:11:13,090 --> 00:11:16,927 கிர்பி, நீ தொடர்ந்து இந்த செய்தியில் வேலைசெய்யக் கூடாது. 150 00:11:18,512 --> 00:11:20,430 நீ நலமாக இருக்கமாட்டாய். 151 00:11:22,474 --> 00:11:24,184 உன்னை எனக்குத் தெரியாது, 152 00:11:25,811 --> 00:11:32,150 ஆனால் நாம் ஒன்றாக இருக்கிறோம், ஏனென்றால் ஒரு நாள்… நாம் ஒன்றாக இருக்கலாம். 153 00:11:35,612 --> 00:11:38,532 டேன் என்ன சொல்கிறார்? 154 00:11:56,008 --> 00:11:57,009 டீனிஸ் பேக்கிங் நிறுவனம் 155 00:12:10,397 --> 00:12:11,815 நான் மேலாளரை தேடுகிறேன். 156 00:12:52,773 --> 00:12:54,358 அலுவலகங்கள் அந்த பக்கம் இருக்கின்றன. 157 00:12:54,441 --> 00:12:55,442 பாருங்கள். 158 00:12:57,528 --> 00:13:00,656 வெட்டின் துல்லியம். இங்கு வேலை செய்திருக்கிறான். 159 00:13:03,075 --> 00:13:06,370 அங்கு என்ன செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு உதவட்டுமா? 160 00:13:09,665 --> 00:13:12,167 இல்லை, அந்தக் காலணிகளுடன் நீங்கள் இங்கே இருக்கக்கூடாது. 161 00:13:12,251 --> 00:13:14,253 இந்த தளத்தில் உள்ள எல்லாமே உங்களை காயப்படுத்தக்கூடியவை. 162 00:13:14,336 --> 00:13:17,297 நான் கிர்பி மஸ்ராச்சி. இவர் டேன் வெலாஸ்குவெஸ். நாங்கள் சன்-டைம்ஸில் இருந்து வருகிறோம். 163 00:13:17,381 --> 00:13:19,842 முன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பாம் உடன் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். 164 00:13:19,925 --> 00:13:20,926 நீங்கள் இந்த தளத்தின் மேலாளரா? 165 00:13:21,009 --> 00:13:22,886 இல்லை, இது என் சகோதரனின் நிறுவனம். 166 00:13:22,970 --> 00:13:25,472 அவருடைய பணியாளர் ஒருவரை தேடி வருகிறோம். அவள் பெயர் கிளாரா. 167 00:13:25,556 --> 00:13:28,600 பொன் நிற முடி. வயது 20 களில் இருக்கலாம். அதிக உயரம் இல்லை. 168 00:13:29,184 --> 00:13:30,185 அவள் ஒரு நடனக் கலைஞர். 169 00:13:30,686 --> 00:13:33,689 ஆம், நடனக் கலைஞர். எனக்கு அவளை தெரியும். 170 00:13:33,772 --> 00:13:35,774 இங்கே கொல்லப்பட்ட பாவப்பட்ட பெண். 171 00:13:37,818 --> 00:13:38,944 வாருங்கள். என்னைப் பின்தொடருங்கள். 172 00:13:42,239 --> 00:13:43,991 இங்கே பார்த்து வாருங்கள். கவனமாக. 173 00:13:44,700 --> 00:13:45,701 கொஞ்சம் மெதுவாக. 174 00:13:46,451 --> 00:13:47,744 ஹேய், விளக்குகளுக்கு மன்னிக்கவும். 175 00:13:47,828 --> 00:13:50,289 சில முட்டாள்கள் இங்கு வந்து அவற்றை அடித்து நொறுக்கிவிட்டார்கள். 176 00:13:50,372 --> 00:13:51,373 அது இங்கு நிறைய நடக்கும். 177 00:13:51,456 --> 00:13:54,126 கிளாராவை இங்கு கண்டுபிடித்தது மக்களுக்குத் தெரியும், அதை பார்க்க விரும்புகிறார்கள். 178 00:13:54,209 --> 00:13:55,627 பெரும்பாலும் போதைப்பொருள் உட்கொண்டவர்கள். 179 00:13:56,670 --> 00:13:58,338 இந்தப் பகுதியைப் பயன்படுத்துவதை எப்போது நிறுத்தினீர்கள்? 180 00:13:59,047 --> 00:14:00,174 சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு. 181 00:14:00,716 --> 00:14:02,843 அப்போதுதான் குளிரூட்டப்பட்ட லாரிகள் கிடைத்தன. 182 00:14:03,385 --> 00:14:07,181 அது அரோராவில் உள்ள பன்றிகளை கொல்லும் மிகவும் சுகாதாரமான முறை என்று கருதப்பட்டது. 183 00:14:08,223 --> 00:14:10,767 இருந்தாலும் அதை வேண்டிய இடத்தில் செய்து வந்தோம். அங்கே இருப்பதை வைத்து. 184 00:14:11,435 --> 00:14:14,730 பன்றிகளை வரிசையாக உயர்த்துவோம். அவற்றை ஸ்டிக்கருக்கு அனுப்பவும். 185 00:14:15,230 --> 00:14:17,566 அது இரத்தத்தை கசிய விட்டு அதை தொட்டியில் பிடிக்கும். 186 00:14:18,609 --> 00:14:19,943 அங்குதான் கிளாரா கிடந்தாள். 187 00:14:21,820 --> 00:14:23,071 அவர்களால் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. 188 00:14:23,739 --> 00:14:25,991 அவள் அங்கே மிகவும் பிரகாசமாக கிடந்ததாக கேள்விப்பட்டேன். 189 00:14:29,203 --> 00:14:30,204 என்ன சொல்கிறீர்கள்? 190 00:14:31,288 --> 00:14:32,664 ரேடியத்தால். 191 00:14:32,748 --> 00:14:36,543 அவள் மீது அது பூசப்பட்டிருந்தது. அதன் அரை ஆயுள் 1,600 ஆண்டுகள். 192 00:14:38,879 --> 00:14:40,339 இறுதியாக பழைய தொட்டியை அகற்றப் போகிறோம். 193 00:14:40,422 --> 00:14:42,716 இந்த முழு இடத்தையும் குளிர்பதனக் கிடங்காக மாற்றுகிறோம். 194 00:14:43,383 --> 00:14:47,804 நீங்கள் இதை மூடிய பிறகு, உங்கள் பணியாளர்கள் இங்கே இரகசியமாக வர முடியுமா? 195 00:14:47,888 --> 00:14:49,723 இங்கு வருவதற்கு நிஜ காரணம் எதுவும் இல்லை. 196 00:14:50,224 --> 00:14:51,642 சடலத்தை இங்கே போடுவதைத் தவிர. 197 00:14:52,309 --> 00:14:54,811 ஆனால் அவர்கள் அவளைக் கண்டுபிடித்தபோது இந்தப் பகுதி முழுவதும் இயங்கிக்கொண்டிருந்தது. 198 00:14:56,063 --> 00:14:58,732 பத்து வருடங்களுக்கு முன்பே இதை விட்டதாக சொன்னீர்கள். 199 00:14:59,316 --> 00:15:02,236 செய்தோம். அவர்கள் அவளை 1920 இல் கண்டுபிடித்தனர். 200 00:15:07,282 --> 00:15:09,076 நான் சொன்னது போல், நீண்ட காலத்துக்கு முன்பு. 201 00:15:09,576 --> 00:15:11,578 இங்கு பணிபுரிந்த முதல் பெண்களில் அவளும் ஒருவள். 202 00:15:12,412 --> 00:15:14,831 நான் டெலிவரி வேலையை கவனிக்க வேண்டும். 203 00:15:15,749 --> 00:15:18,210 என் சகோதரன் இன்று வந்திருக்கிறான். அவன் உங்களிடம் பேசலாம். 204 00:15:20,504 --> 00:15:22,172 அது நீண்ட காலத்துக்கு முன்பு. 205 00:15:22,756 --> 00:15:24,466 இவள் அதே பெண்ணாக இருக்க முடியாது. 206 00:15:30,639 --> 00:15:32,724 என்ன? அது என்ன? 207 00:15:52,911 --> 00:15:59,835 இரத்தத்தோடும் மலத்தோடும் அவள் உடலை இந்த தொட்டியில் வீசியிருக்கிறான். 208 00:16:00,711 --> 00:16:02,504 -அவள் உடலை மறைக்க முயன்றிருக்கிறான். -இல்லை. 209 00:16:03,213 --> 00:16:04,798 அவளை தண்டிக்க முயன்றிருக்கிறான். 210 00:16:08,302 --> 00:16:10,721 -ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு... -எண்ணுங்கள். 211 00:16:11,263 --> 00:16:12,556 ஐந்து. ஆறு. 212 00:16:12,639 --> 00:16:14,725 அது. அதுதான். அதுதான் உங்களுக்கான குறிப்பு. 213 00:16:20,689 --> 00:16:24,568 எங்கள் ஆன்-சைட் அபெர்ச்சர் தொலைநோக்கி இந்தப் படத்தைப் பிடித்தது. 214 00:16:25,903 --> 00:16:30,407 நமது விண்மீன் மண்டலத்தின் விளிம்பில் ஒரு நட்சத்திரக் கூட்டத்தை காண்பீர்கள். 215 00:16:31,158 --> 00:16:33,076 ஒமேகா சென்டாரி. 216 00:16:34,870 --> 00:16:38,665 இப்போது, இவை மற்ற நட்சத்திரங்களைப் போல் தோன்றலாம், ஆனால் அவை இங்கு இல்லை. 217 00:16:39,875 --> 00:16:43,670 பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நாம் மற்றொரு விண்மீன் மண்டலம் மீது மோதினோம். 218 00:16:45,214 --> 00:16:48,300 அந்த நட்சத்திரங்கள், அதில் எஞ்சியிருப்பது அவைதான். 219 00:16:49,676 --> 00:16:54,723 இப்போது, இன்னொரு விண்மீன் மண்டலம் நம்மை நோக்கி வருகிறது. 220 00:16:58,685 --> 00:16:59,686 ஆண்ட்ரோமெடா. 221 00:17:02,147 --> 00:17:08,737 எதிர்காலத்தில் நான்கு பில்லியன் ஆண்டுகளில், மீளமுடியாத மோதல் ஏற்படும்... 222 00:17:10,864 --> 00:17:11,865 என் மைக் வேலை செய்யவில்லை. 223 00:17:12,782 --> 00:17:17,663 ஹேய், தியோ. தியோ, என் மைக் செயலிழந்ததுவிட்டது. இன்னொரு ஒலி சரிபார்ப்பு செய்வோமா? 224 00:17:19,373 --> 00:17:20,624 என் மைக் வேலை செய்யவில்லை. 225 00:17:23,669 --> 00:17:24,877 ஹேய், தியோ? 226 00:17:28,048 --> 00:17:29,049 இது என்ன? 227 00:17:30,801 --> 00:17:31,927 எதை ஒலிக்க விடுகிறாய்? 228 00:17:51,530 --> 00:17:53,657 அடக் கடவுளே. 229 00:17:55,534 --> 00:17:56,869 இல்லை! 230 00:17:59,788 --> 00:18:00,831 வேண்டாம்! 231 00:18:03,417 --> 00:18:04,501 வேண்டாம்! 232 00:18:10,257 --> 00:18:11,258 அதற்கு மன்னிக்கவும். 233 00:18:11,341 --> 00:18:15,220 நான் கழிவறைக்குச் சென்றேன், எப்படியோ கதவு வெளியே பூட்டிக்கொண்டது. 234 00:18:16,096 --> 00:18:17,097 நீங்கள் நலமா? 235 00:18:20,893 --> 00:18:23,187 அவர்களிடம் வேலைவாய்ப்புப் பதிவுகள், கூட்டுறவு சங்க அட்டைகள் இருக்கலாம். 236 00:18:23,937 --> 00:18:25,272 இந்த இடம் இங்கு இருந்ததிலிருந்து 237 00:18:25,355 --> 00:18:27,191 UFCW இயங்குகிறது, எனவே… 238 00:18:30,235 --> 00:18:31,403 கிர்பி? 239 00:18:32,154 --> 00:18:33,363 ஹேய், நீ நலமா? 240 00:18:44,291 --> 00:18:45,292 இழு 241 00:18:49,546 --> 00:18:52,090 ஹேய், உன் தொலைபேசி இடைவிடாமல் மணியடிக்கிறது. 242 00:18:52,674 --> 00:18:54,218 யாரோ கிர்பியாம். 243 00:18:54,718 --> 00:18:56,970 நீ அவளை திரும்ப அழைப்பாய் என்று சொன்னேன், ஆனால் அவள் தொடர்ந்து அழைக்கிறாள். 244 00:18:57,054 --> 00:18:58,055 தொழில்நுட்ப ஒத்திகை எப்படி போனது? 245 00:18:59,389 --> 00:19:03,393 -ஹலோ? -ஜின்னி? நீ நலமா? அவன் அங்கு இருந்தானா? 246 00:19:04,186 --> 00:19:06,980 என் அப்பா இந்த இடத்தை நடத்தினார், தினமும் சுற்றிக்காட்டுவார். 247 00:19:07,064 --> 00:19:09,733 நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்க்க விரும்பினர். 248 00:19:10,317 --> 00:19:13,237 நான் சொல்கிறேன், ஒரு உண்மையான அற்புதமான துல்லியமான கசாப்புக்காரர். 249 00:19:13,320 --> 00:19:15,489 பன்றியை எப்படி தயார் செய்வது என்பது அவருக்குத் தெரியும். 250 00:19:15,572 --> 00:19:17,574 நாள் முழுவதும் எடுத்துக்கொள்வார், இப்போது அவர்கள்... 251 00:19:17,658 --> 00:19:21,495 அங்கேயே இரு. சரியா, நான் வருகிறேன். பை. 252 00:19:23,038 --> 00:19:25,332 -என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோதும்... -மன்னிக்கவும். 253 00:19:25,415 --> 00:19:27,000 -நிச்சயமாக. -என்ன விஷயம்? 254 00:19:27,084 --> 00:19:29,837 -அவன் அங்கே இருந்ததாக அவள் நினைக்கிறாள். -அவள் நலமா? 255 00:19:29,920 --> 00:19:33,215 ஆம், அவளை வீட்டிற்குப் போகச் சொன்னேன், ஆனால் இன்றிரவு முக்கியமாக உரையாடுகிறாளாம். 256 00:19:34,508 --> 00:19:37,219 எங்களிடம் உள்ள அப்போதைய கூட்டுறவு சங்க அட்டைகள் இவை மட்டுமே. 257 00:19:42,266 --> 00:19:43,559 என்னிடம் கொடு. 258 00:19:43,642 --> 00:19:44,726 மத்திய மேற்கு கசாப்புக்காரர் மற்றும் இறைச்சி வெட்டுபவர்களின் கூட்டுறவு சங்கம் 259 00:19:44,810 --> 00:19:46,562 மேற்கு ஆடம்ஸில் உள்ள மண்டபத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கலாம். 260 00:19:46,645 --> 00:19:49,273 -அவர்கள் எல்லோரும் குழந்தைகள். -அப்போதெல்லாம் அப்படித்தான். 261 00:19:49,815 --> 00:19:52,234 அவர்கள் 11 அல்லது 12 வயதில் தொடங்கியிருப்பார்கள். 262 00:19:53,610 --> 00:19:55,070 இதில் சில ஜான் ஸ்மித்கள் இருக்கிறார்கள். 263 00:19:55,904 --> 00:19:57,906 -வயது குறைந்தவர்களாகத் தெரிகிறார்கள். -ஆம். 264 00:19:57,990 --> 00:20:00,826 -வேறு பிரச்சினையை தவிர்க்க இருக்கலாம் தானே? -ஆம், சரி. 265 00:20:01,743 --> 00:20:04,746 நிலுவைத் தொகையை செலுத்தும் வரை, அவர்கள் நம்மை வேலையில் வைப்பார்கள். 266 00:20:04,830 --> 00:20:05,831 கிளாரா மீசர் இறைச்சி வெட்டுபவர் 267 00:20:05,914 --> 00:20:08,292 இது அவள்தான். இது கிளாரா தான். 268 00:20:09,501 --> 00:20:11,920 அவளைப் பற்றி வேறு ஏதாவது இருக்கிறதா? ஒருவேளை முகவரி? 269 00:20:12,004 --> 00:20:13,714 அவளுடைய குடும்பம் இன்னும் இருக்கலாம், இல்லையா? 270 00:20:13,797 --> 00:20:15,716 எங்களிடம் இருப்பது இதுதான் என்று நினைக்கிறேன். 271 00:20:18,218 --> 00:20:21,346 -இளையவர்கள் என்ன செய்வார்கள்? -கால்நடை பராமரிப்பு. 272 00:20:21,430 --> 00:20:24,516 இளம் காளைகளை கசாப்பு தளம் வரை ஓட்டிவருவார்கள். 273 00:20:24,600 --> 00:20:26,518 கடைசியாக அவற்றை உயிருடன் பார்ப்பவர்கள் அவர்கள்தான். 274 00:20:27,728 --> 00:20:29,146 நான் அப்படித்தான் வேலையை தொடங்கினேன். 275 00:20:29,897 --> 00:20:33,400 மிகவும் பெரியவராக இருந்தால், காளைக்கும் தடுப்புக்கும் இடையில் சிக்கிக் கொள்வீர்கள். 276 00:20:33,483 --> 00:20:35,444 நான் வேகமாக நகரக் கற்றுக்கொண்டேன். 277 00:20:35,527 --> 00:20:36,612 டேன். 278 00:20:40,824 --> 00:20:42,659 ஜான் ஸ்மித் 2300 மேற்கு பேக்கர்ஸ் அவென்யு 279 00:20:42,743 --> 00:20:44,494 அமெரிக்க கசாப்பு தொழில் பழகுநர் 280 00:21:05,015 --> 00:21:07,017 "என் பெயர் கிர்பி மஸ்ராச்சி. 281 00:21:07,100 --> 00:21:11,313 நான் சிகாகோ சன்-டைம்ஸில் வேலை செய்கிறேன். எனது மேஜை தென்கிழக்கு மூலையில் உள்ளது. 282 00:21:11,396 --> 00:21:14,733 நீல கத்தரிக்கோல். சூசன் எனக்கு இடது பக்கம் அமருவார்." 283 00:21:16,610 --> 00:21:17,986 இது என்னவென்று புரியவில்லை. 284 00:21:18,070 --> 00:21:20,906 அவள் எண்ணங்களைத் தெளிவுபடுத்தப் பயன்படுத்திய ஒன்று என்று நான் நினைத்தேன், ஆனால்… 285 00:21:23,450 --> 00:21:25,077 இப்போது அவள் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று சொல்கிறாள். 286 00:21:25,827 --> 00:21:26,828 எது மாதிரி? 287 00:21:26,912 --> 00:21:29,289 அவள் யார். அவள் அமர்ந்திருக்கும் இடம். 288 00:21:29,373 --> 00:21:31,416 யாரிடம் பேசுகிறாள். நீங்கள் படித்த எல்லாமே. 289 00:21:32,668 --> 00:21:35,546 இந்த செய்தி பற்றி விசாரிக்க அவளை துரத்திக்கொண்டே இருந்தீர்கள். 290 00:21:36,046 --> 00:21:38,507 -அவனைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதற்காகத்... -இல்லை. 291 00:21:38,590 --> 00:21:40,717 …அவளே செய்தித்தாளில் இடம்பெற அவளுக்கு அழுத்தம் கொடுத்தீர்கள்! 292 00:21:40,801 --> 00:21:41,969 அவள்தான் அதை செய்ய விரும்பினாள். 293 00:21:42,052 --> 00:21:44,805 -நீங்களும் டேனும் அவளுக்கு ஊக்கமளித்தீர்கள். -ஆம். நீ ஏன் செய்யவில்லை? 294 00:21:44,888 --> 00:21:47,975 ஏனென்றால் அவள் யார் என்பதை நினைவில் கொள்ள அவள் பெயரை எழுதிவைக்க வேண்டும். 295 00:21:48,517 --> 00:21:52,312 நீ உன் மனைவியுடன் பேச வேண்டும். இது என்னவாக இருந்தாலும் நான் பார்த்திருக்கக் கூடாது. 296 00:21:58,110 --> 00:22:02,865 நான் ஒருபோதும். யாரும் என்னை அதிகமாகப் புகைப்படம் எடுக்க விடமாட்டேன். 297 00:22:04,199 --> 00:22:07,619 எனக்கு அவை தேவை என்று நான் ஒருபோதும் உணரவில்லை. நானே பார்க்கிறேன். 298 00:22:08,328 --> 00:22:13,876 நான் பிரச்சினை செய்வதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை. சண்டை போடுவதில்லை. 299 00:22:14,793 --> 00:22:21,758 ஆனால் தனக்கு என்ன நடந்தது என்று என் மனைவி என்னிடம் சொன்னபோது… 300 00:22:23,760 --> 00:22:25,512 அவனைக் கண்டுபிடித்து கொல்ல விரும்பினேன். 301 00:22:26,346 --> 00:22:28,724 அந்த வன்முறையை இதுவரை நான் உணர்ந்ததில்லை. 302 00:22:30,142 --> 00:22:31,393 அது என்னிடமிருந்து யோசித்து செய்வதை பறித்துவிட்டது. 303 00:22:33,562 --> 00:22:37,024 அது என்னை அடையாளம் தெரியாத ஒருவனாக மாற்றியது. 304 00:22:39,359 --> 00:22:44,573 அவள் இப்போது என்ன அனுபவிக்கிறாள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. 305 00:22:47,492 --> 00:22:49,453 உண்மையில் அவள் யாரென்று அவளுக்கே நினைவில்லை. 306 00:22:50,287 --> 00:22:52,289 அவளுக்கு அது நடப்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 307 00:22:55,334 --> 00:22:57,294 நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால், 308 00:22:57,377 --> 00:23:01,715 பிறகு நான் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. 309 00:23:04,092 --> 00:23:05,427 நான் யாரிடம் சொல்வது? 310 00:23:07,679 --> 00:23:11,266 இவன் அவனுடைய மகனாகவோ அல்லது பேரனாகவோ இருக்கலாம். 311 00:23:13,185 --> 00:23:16,396 -ஆண்கள் தங்கள் அப்பா போல இருப்பார்கள். -நீங்கள் அவனைப் பார்த்தீர்கள். அவன்தான். 312 00:23:19,233 --> 00:23:20,943 இதை எப்படி யாரிடமாவது சொல்வது? 313 00:23:22,027 --> 00:23:25,239 ஒருவேளை புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு மீதியை விட்டுவிடலாமா? 314 00:23:26,114 --> 00:23:30,244 எங்கிருந்து கிடைத்தது என்பதை ஆபி அறிய விரும்புவாள். அவளிடம் நாம் என்ன சொல்வது? 315 00:23:31,078 --> 00:23:33,247 அவர் என் பேச்சைக் கேட்க மாட்டார், ஆனால் உங்களை அவருக்கு தெரியும். 316 00:23:33,789 --> 00:23:34,790 அவளுக்கு என்னைத் தெரியும். 317 00:23:36,375 --> 00:23:38,752 -இருவரும் நெருக்கமானவர்கள் என நினைத்தேன். -இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள். 318 00:23:42,172 --> 00:23:43,549 நாங்கள் நல்ல நண்பர்கள். 319 00:23:47,177 --> 00:23:48,929 நான் ஒரு ஞாயிறு தொடர் எழுதிக்கொண்டிருந்தேன். 320 00:23:50,889 --> 00:23:55,060 ஆபி, அவள் என் நேரத்தை எடுத்துக்கொள்வாள். 321 00:23:55,769 --> 00:23:57,813 ஆனால் உங்களை அதிலிருந்து விலக்கினார். 322 00:23:58,981 --> 00:24:02,067 க்ளைபோர்னில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் இருந்து போலீசார் என்னை தூக்கிச் சென்றனர். 323 00:24:03,694 --> 00:24:05,654 நான் வாரக்கணக்கில் அங்கு கிடந்தேன். 324 00:24:05,737 --> 00:24:09,408 எனக்குத் தெரியாது, நான் என்னைக் கைது செய்தபோது நிறைய குடித்திருந்தேன். 325 00:24:11,368 --> 00:24:13,245 சன்-டைம்ஸில் வேலை செய்கிறேன், நான் ஒரு செய்திக்கட்டுரைக்காக 326 00:24:13,328 --> 00:24:16,498 வேலை செய்து கொண்டிருந்தேன் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தது நினைவிருக்கிறது… 327 00:24:22,296 --> 00:24:23,797 ஆனால் ஆபி என்னை ஜாமீனில் எடுத்தபோது, 328 00:24:24,798 --> 00:24:28,260 நான் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று கூட எனக்கு நினைவில்லை. 329 00:24:31,597 --> 00:24:35,350 நான் யாரைப்பற்றி எழுதுகிறேனோ, அவர்களுக்கெல்லாம் ஏதாவது நடக்கிறது. 330 00:24:39,938 --> 00:24:42,107 அவர்களின் வாழ்வின் விளிம்பில் அவர்களை சந்திக்கிறேன். 331 00:24:42,191 --> 00:24:43,775 நான் அவர்களுடன் இருக்க வேண்டியிருக்கிறது, 332 00:24:44,651 --> 00:24:47,738 அவர்கள் வீழும் தருணத்தில், அவர்களுடன் நான் இருக்கிறேன். 333 00:24:48,947 --> 00:24:51,700 என் மூளை வேலை செய்வதில்லை. 334 00:24:53,869 --> 00:24:55,370 நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். 335 00:24:57,080 --> 00:25:01,502 அதுதான் எனக்கு நடக்குமா? நாம் இங்கே இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்காதா? 336 00:25:03,337 --> 00:25:04,379 அப்பா! 337 00:25:07,132 --> 00:25:09,968 ஃப்ரெட்டியிடம் போக வேண்டும். அவனையும் நம்மோடு அழைத்து வருகிறேன். 338 00:25:11,053 --> 00:25:12,095 அப்பா! 339 00:25:17,559 --> 00:25:22,147 ஹேய், ஃப்ரெட்டி. வா. போகலாம். மீண்டும் அலுவலகம் போக வேண்டும். 340 00:25:38,830 --> 00:25:41,458 அவள் பெயரை அங்கு தட்டச்சு செய். "கிளாரா மீசர்." 341 00:25:41,542 --> 00:25:43,961 பிறகு அதை பார். 342 00:25:49,299 --> 00:25:50,300 ஹேய். 343 00:25:50,384 --> 00:25:54,471 ஹேய், தீர்க்கப்படாத கொலைக்கான கோப்பை எடுக்க CPD இல் உங்கள் தொடர்பு தேவை. 344 00:25:54,555 --> 00:25:56,598 கிளாரா மீசர், இறைச்சிக் கூடத்தில் கொல்லப்பட்டாள், 345 00:25:56,682 --> 00:25:58,433 -1920 இல். -நிச்சயமாக, ஆனால்... கிர்பி... 346 00:25:58,517 --> 00:26:00,435 -அவர்களை ஒரு ஃபேக்ஸ் அனுப்பச்சொல்ல முடியுமா? -ஆம். 347 00:26:00,519 --> 00:26:02,104 ஆபி உன்னைத் தேடுகிறார். 348 00:26:02,187 --> 00:26:03,188 சரி. 349 00:26:08,235 --> 00:26:09,236 ஹேய். 350 00:26:09,820 --> 00:26:11,029 உட்காருகிறாயா? 351 00:26:12,406 --> 00:26:13,574 எல்லாம் சரிதானே? 352 00:26:17,369 --> 00:26:20,789 நான் சொல்லப்போகும் எதுவும், செய்தித்தாளுக்கான உன் பங்களிப்பின் பிரதிபலிப்பல்ல. 353 00:26:21,540 --> 00:26:23,250 இது ஆதாரக் கிடங்கைப் பற்றியதா? 354 00:26:24,168 --> 00:26:27,796 நான் சில கடினமான உரையாடல்களை நடத்த வேண்டியிருந்தது. 355 00:26:29,006 --> 00:26:31,049 -யாருடன்? -இவை எல்லாமே நமக்குள் நடக்கிறது. 356 00:26:32,176 --> 00:26:33,844 நீ விடுமுறை எடுக்க வேண்டும். 357 00:26:35,095 --> 00:26:38,223 ஓரிரு மாதங்களில் இங்கு உன் வேலையை மதிப்பாய்வு செய்வோம். 358 00:26:39,766 --> 00:26:40,934 என்னை பணிநீக்கம் செய்கிறீர்களா? 359 00:26:41,602 --> 00:26:43,353 கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள். உன்னை நீயே கவனித்துக்கொள். 360 00:26:43,437 --> 00:26:46,440 பிறகு இங்கே உனக்கு என்ன வேலை கொடுப்பது என்பதை நாங்கள் பார்ப்போம். 361 00:26:47,024 --> 00:26:48,483 -என்ன நடக்கிறது? -டேன், எனக்கு ஒரு நிமிடம் கொடு. 362 00:26:48,567 --> 00:26:49,776 ஆபி, இது என்ன? 363 00:26:49,860 --> 00:26:51,236 என்னை பணிநீக்கம் செய்கிறார். 364 00:26:51,320 --> 00:26:52,487 இது ஒரு விடுப்பு. 365 00:26:52,571 --> 00:26:54,114 என் செய்திக்கட்டுரை என்னவாகும்? 366 00:26:55,365 --> 00:26:56,617 நாங்கள் அதை தொடர்ந்து விசாரிப்போம். 367 00:26:58,160 --> 00:26:59,578 ஆனால் நான் இல்லாமல். 368 00:26:59,661 --> 00:27:02,873 சரி. சரி... இதைப் பேசி தீர்ப்போம். 369 00:27:02,956 --> 00:27:06,502 நாங்கள் பேசினோம். உன் இறுதிக் காசோலையைப் பெற, நீ சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். 370 00:27:07,503 --> 00:27:10,255 இல்லை சரி, போகாதே. சரியா? எனக்கு ஒரு நிமிடம் கொடு. 371 00:27:12,466 --> 00:27:15,385 இது கிறுக்குத்தனம். அவள் உண்மையைச் சொல்கிறாள். 372 00:27:15,469 --> 00:27:18,222 பரவாயில்லை, அதைத்தான் நாம் பிரசுரித்தோம். ஆனால் அவள் நலமாக இல்லை. 373 00:27:33,070 --> 00:27:34,530 அவள் அவனைக் கண்டுபிடித்துவிட்டாள். 374 00:27:35,113 --> 00:27:36,198 நிஜமாகவா? 375 00:27:37,199 --> 00:27:39,034 இப்போதைக்கு இங்கு இருக்கிறோம். 376 00:27:40,494 --> 00:27:42,412 இது 1916 ஆம் ஆண்டுடையது. 377 00:27:42,496 --> 00:27:44,665 இரண்டு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளனர். 378 00:27:44,748 --> 00:27:47,417 -இவருக்கு நூறு வயது இருக்கும். -ஆம், ஆனால் அப்படி நடக்கவில்லை. 379 00:27:48,001 --> 00:27:49,044 ஏனென்றால் நானே அவனைப் பார்த்திருக்கிறேன். 380 00:27:49,795 --> 00:27:51,421 என்ன அபத்தமாக பேசுகிறாய்? 381 00:27:51,505 --> 00:27:56,009 அது வேறு யாரோ அல்ல, ஆபி, அது இவன்தான். அது இவன்தான். 382 00:27:56,093 --> 00:27:58,345 அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை, ஆனால் இது அவன்தான். 383 00:27:58,846 --> 00:28:02,432 கேள், இந்த ஓவியத்தை நாம் வெளியிட வேண்டும். அதை நாம் குடும்பங்களுக்குக் காட்ட வேண்டும். 384 00:28:02,516 --> 00:28:04,601 -இல்லை. அதெல்லாம் நடக்காது. -அது இவன்தான். 385 00:28:04,685 --> 00:28:05,686 -அது இவன்தான். -நாம்... 386 00:28:05,769 --> 00:28:08,105 -அது இவன்தான்! -நாம் அது எதையும் செய்யப்போவதில்லை! 387 00:28:11,859 --> 00:28:15,904 வீட்டிற்குச் செல். உன் குழந்தையுடன் நேரத்தைப் போக்கு. 388 00:28:38,802 --> 00:28:39,928 நீ நலமா? 389 00:28:44,433 --> 00:28:46,351 ஏன் என் பொருட்களையெல்லாம் வைத்திருக்கிறாய்? 390 00:28:46,435 --> 00:28:47,603 இங்கிருந்து போவோம். 391 00:28:49,688 --> 00:28:51,231 வா, இதைப் பற்றி வீட்டில் பேசுவோம். 392 00:29:00,115 --> 00:29:01,158 உனக்கு எப்படித் தெரியும்? 393 00:29:12,211 --> 00:29:14,213 என்னை ஞாபகம் இல்லை என்று சொன்னாய். 394 00:29:16,173 --> 00:29:18,258 நான் அதை நிராகரித்தால் அது அலட்சியமாகும். 395 00:29:19,927 --> 00:29:21,178 அப்படியென்றால் என்னை நீக்க நீதான் காரணமா? 396 00:29:21,762 --> 00:29:25,849 இல்லை, நான் உனக்கு விடுப்பு வாங்கிக்கொடுத்தேன். இதற்கு தீர்வு கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும். 397 00:29:27,351 --> 00:29:28,477 அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். 398 00:29:29,228 --> 00:29:32,189 இது நன்றாக போகவில்லை. நான் கண்ணோட்டத்தில் இருந்து. 399 00:29:34,358 --> 00:29:35,359 வா, நாம் போக வேண்டும். 400 00:29:36,860 --> 00:29:37,986 எங்கே? 401 00:29:39,947 --> 00:29:41,323 நான் எங்கே போகிறேன்? 402 00:29:47,788 --> 00:29:49,998 நான் இனி இங்கு வேலை செய்யவில்லை என்பதால் 403 00:29:50,082 --> 00:29:52,251 நான் அவனைத் தேடுவதை நிறுத்திவிடுவேன் என்று அர்த்தமல்ல. 404 00:29:54,378 --> 00:29:58,215 எனவே நீ எல்லாவற்றையும் புறக்கணிக்கப் போகிறாயா? 405 00:30:02,511 --> 00:30:03,679 நமக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது. 406 00:30:04,179 --> 00:30:05,264 அது என்னுடையது அல்ல. 407 00:30:22,155 --> 00:30:26,451 நான் உன் வீட்டுக்குச் சென்று எனது பொருட்களை எடுத்துக்கொள்கிறேன். 408 00:30:27,870 --> 00:30:29,246 எனக்கு இரண்டு மணிநேரம் கொடு. 409 00:30:31,456 --> 00:30:32,457 சரி. 410 00:30:35,627 --> 00:30:37,754 எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள். 411 00:31:01,653 --> 00:31:03,155 ஹேய். எனக்கு சில நிமிடங்கள் தேவை. 412 00:31:05,032 --> 00:31:06,992 வண்டியை சாலையில் நிறுத்தியிருக்கிறேன். நான் எதை எடுக்க வேண்டும்? 413 00:31:08,035 --> 00:31:09,578 தெரியவில்லை, என்னுடையது போல தோன்றும் எதையும். 414 00:31:19,671 --> 00:31:21,673 சரி, அம்மா, இவற்றில் சில நிச்சயமாக மார்கஸுடையது. 415 00:31:21,757 --> 00:31:24,843 அவனை விட்டுத்தள்ளு. உன் வேலையை பறித்துவிட்டான். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 416 00:31:26,303 --> 00:31:27,429 பொறுமை. 417 00:31:27,513 --> 00:31:30,098 இது என்ன? இதை பணம் கொடுத்து வாங்கினாயா? 418 00:31:30,641 --> 00:31:32,726 -அப்படித்தான் நினைக்கிறேன். -இதை எடுத்துப்போகப் போவதில்லை. 419 00:31:33,602 --> 00:31:35,979 இங்கே எதை பேக் செய்வது என்று தெரியவில்லை. இவை எதுவும் உன்னுடையது போல தோன்றவில்லை. 420 00:31:36,063 --> 00:31:37,314 அலமாரியைப் பாருங்கள். 421 00:31:40,817 --> 00:31:42,069 இதற்கு நன்றி. 422 00:31:42,152 --> 00:31:45,739 ஆம், பரவாயில்லை. தேவாலயத்தில் வேறு யாரும் வேனைப் பயன்படுத்தவில்லை. 423 00:31:51,286 --> 00:31:54,373 சரி, இன்று உன்னால் தெளிவாக செயல்பட முடியவில்லை, இல்லையா? 424 00:31:56,250 --> 00:31:57,584 என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள், சரியா? 425 00:31:58,919 --> 00:32:00,128 நான் கவலைப்படவில்லை. 426 00:32:01,588 --> 00:32:03,215 நீ நன்றாக இருப்பாய் என்று எனக்குத் தெரியும். 427 00:32:04,800 --> 00:32:08,679 நீ ட்ரிப்யூனில் நல்ல வேலையில் இருந்தாய் இதெல்லாம் நடப்பதற்கு முன்பு. 428 00:32:09,638 --> 00:32:14,852 லஞ்சம் வாங்கும் நீதிபதியைப் பற்றிய கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தாய் என்பதை நினைவில் கொள். 429 00:32:14,935 --> 00:32:19,940 நீ சொந்தமாகவே எல்லாவற்றையும் பற்றி எழுதப் போகிறாய். 430 00:32:20,023 --> 00:32:21,024 பொறுங்கள், என்ன? 431 00:32:22,109 --> 00:32:23,777 எனக்கு அவனுடைய பெயர் நினைவில்லை. 432 00:32:23,861 --> 00:32:26,196 அதைப் பற்றி என்னிடம் சொன்னாய். அது தொடர் கட்டுரைகளாக இருக்கும் என்று. 433 00:32:30,826 --> 00:32:31,994 அன்றிரவுதான். 434 00:32:34,037 --> 00:32:36,164 எனது முதல் கட்டுரை என் பெயரோடு வெளிவரப்போகும் அந்த இரவு. 435 00:32:37,875 --> 00:32:38,876 ஆம், எனக்குத் தெரியும். 436 00:32:40,836 --> 00:32:42,921 நீ நன்றாக வேலை செய்துகொண்டிருந்தாய். நீ மீண்டும் அந்த நிலைக்கு வருவாய். 437 00:32:46,258 --> 00:32:47,259 அது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. 438 00:32:49,845 --> 00:32:51,013 அது அவனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கிறது. 439 00:32:55,142 --> 00:32:56,310 நான் போக வேண்டும். 440 00:32:56,393 --> 00:32:59,396 -பொருட்களை உங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள். -நான் எங்கே இருப்பேன் என்று உனக்கு தெரியும். 441 00:33:08,488 --> 00:33:09,865 அவள் ஒருவேளை தூங்கிக்கொண்டிருக்கலாம். 442 00:33:12,159 --> 00:33:14,703 நாம் அவள் வீட்டிற்குப் போகலாம். வழியில் கொஞ்சம் சாப்பிடலாம். 443 00:33:14,786 --> 00:33:16,663 ஆம், அதை செய்வோம். 444 00:33:18,624 --> 00:33:21,168 பெர்ட்டியிடம் இதை கிர்பி கேட்டிருக்கிறாள். அவள் எங்கே என்று தெரியுமா? 445 00:33:21,251 --> 00:33:22,252 அது என்ன? 446 00:33:22,336 --> 00:33:24,505 இது காவல்துறை அறிக்கை. ஏதோ பழையது. 447 00:33:24,588 --> 00:33:27,382 -கிளாரா மீசர். என்னிடம் கொடு. நன்றி. -சரி. 448 00:33:27,466 --> 00:33:28,717 ஆதாரங்களின் பட்டியலை படி. 449 00:33:32,137 --> 00:33:33,138 குக் கவுன்டி கரோனரின் அலுவலகம் 450 00:33:33,222 --> 00:33:36,058 "ஒரு சணல் பை. காகிதம். 451 00:33:36,141 --> 00:33:39,478 ஒரு தோல் அங்கி, கஷ்கொட்டை பழுப்பு. முத்து காதணிகள்." 452 00:33:39,561 --> 00:33:41,188 திரும்பப் படி. காகிதம். 453 00:33:42,689 --> 00:33:44,024 அதில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா? 454 00:33:46,944 --> 00:33:47,945 இது ஒரு முகவரி. 455 00:33:49,446 --> 00:33:51,907 "4232 கிளிஃப்டன் தெரு." 456 00:33:51,990 --> 00:33:54,952 நிறைய எண்கள் உள்ளன. அதற்கு அவர்களுக்கு அர்த்தம் தெரியாது என்று நினைக்கிறேன். 457 00:33:55,994 --> 00:33:58,163 இது ஒரு தேதி. பார்த்தாயா? 458 00:33:59,831 --> 00:34:03,210 ஏப்ரல் 15, 1981. 459 00:34:04,837 --> 00:34:05,879 இது ஒரு ரசீது. 460 00:34:06,922 --> 00:34:08,465 1981 ஐ சேர்ந்ததா? 461 00:34:10,092 --> 00:34:11,635 அது எப்படி அவளிடம் இருக்க முடியும்? 462 00:34:12,928 --> 00:34:14,388 இது மிகவும் பழையது அல்லவா? 463 00:34:16,806 --> 00:34:17,808 சரி. போகலாம். 464 00:34:19,434 --> 00:34:20,686 போகலாம். 465 00:34:50,424 --> 00:34:53,427 இது பிடித்திருக்கிறது. நீ ஒரு சீரற்ற விண்மீன் மண்டலம் போல இருக்கிறாய். 466 00:34:54,844 --> 00:34:56,304 அதைத்தான் நானும் வெளிப்படுத்த நினைத்தேன். 467 00:34:58,348 --> 00:34:59,725 ஜின்னி, போய் மக்களிடம் பேசு. 468 00:35:01,393 --> 00:35:03,520 இதெல்லாம் உனக்காகத்தான். நீ இதை அனுபவிக்க வேண்டும். 469 00:35:05,063 --> 00:35:06,064 செய்வேன். 470 00:35:07,649 --> 00:35:09,401 சரி. சரி, உள்ளே சந்திப்போம். 471 00:35:15,490 --> 00:35:20,787 ஹேய், நாம் மாட்டிக்கொண்டோம். ஆக்டன் நேரலையை பதிவு செய்ய என்னால் முடியவில்லை. 472 00:35:21,830 --> 00:35:23,457 இன்று மதியம் அதை வேலை செய்யவைத்தேன். அது சரியாக இருக்க வேண்டும். 473 00:35:23,540 --> 00:35:25,375 எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் முயற்சித்தேன். அது காட்டவில்லை. 474 00:36:22,808 --> 00:36:23,809 ஜின்னி? 475 00:36:26,395 --> 00:36:28,230 நான் இங்கே இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். 476 00:36:33,151 --> 00:36:34,236 அவன் எங்கே? 477 00:36:38,699 --> 00:36:41,493 இதுதான் இடமா? இங்கே உணவு இருக்கலாம். 478 00:36:46,957 --> 00:36:48,959 ஆம், இரசீது இந்த இடத்துடையதுதான். 479 00:36:50,002 --> 00:36:52,337 ஒருவேளை விற்பனை இயந்திரங்கள் அல்லது ஏதாவது இருக்கலாம். 480 00:36:52,421 --> 00:36:54,047 அவர்கள் உன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். 481 00:36:55,924 --> 00:36:58,427 நான் சீக்கிரம் வந்துவிடுவேன். சரியா? 482 00:37:48,227 --> 00:37:50,270 ஷாரன் போய்விட்டாள் புகை போல 483 00:37:53,815 --> 00:37:55,817 அவன் ஏன் இங்கு இல்லை என்று எனக்குப் புரியவில்லை. 484 00:37:55,901 --> 00:37:57,402 எனக்கு இப்படித்தான் இருந்தது. 485 00:37:58,028 --> 00:37:59,821 இது உங்கள் இரவு. நீ விரும்பியது இதுதான். 486 00:37:59,905 --> 00:38:01,365 இதற்காகத்தான் நீ உழைத்தாய். 487 00:38:01,949 --> 00:38:06,453 அது அவனுக்குத் தெரியும். அவன் இங்கே இருந்திருக்க வேண்டும். அவன் எங்கே? அவன் ஏன் இங்கே இல்லை? 488 00:38:07,454 --> 00:38:10,374 எனக்குக் கவலை இல்லை. தாமதமாகிவிட்டது. நான் என் குறிப்புகளைப் பெற வேண்டும். 489 00:38:28,809 --> 00:38:30,602 தி க்ளாஷ் 490 00:38:35,524 --> 00:38:36,859 மட்டி வாட்டர்ஸ் 491 00:38:39,236 --> 00:38:41,113 சிகாகோ ட்ரான்சிட் அதாரிட்டி 492 00:38:42,281 --> 00:38:43,282 சிட்னிஸ் ஷோ பார் 493 00:38:43,365 --> 00:38:45,784 கிளாரா லே ஃபியூ செப்டம்பர் முதல் நவம்பர் 1920 வரை 494 00:39:00,632 --> 00:39:02,134 அவளை எப்படி கண்டுபிடித்தாய்? 495 00:39:46,720 --> 00:39:47,721 நன்றி, நண்பா. 496 00:40:06,740 --> 00:40:09,201 மன்னிக்கவும், உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. விரிவுரை தொடங்க உள்ளது. 497 00:40:09,701 --> 00:40:11,745 நான் இல்லாமல் நடக்காது. நான் டாக்டர் குவான்சன். 498 00:40:13,705 --> 00:40:16,959 சரி. நான் லேக் வியூவிலிருந்து மைக். 499 00:40:17,042 --> 00:40:19,586 நான்தான் தலைமை உரை பேச்சாளர். பாருங்கள். 500 00:40:19,670 --> 00:40:21,922 விண்மீன் மண்டலங்கள் மோதும்போது தலைமை உரை டாக்டர் கேரி ஹெக்லேண்ட் 501 00:40:22,714 --> 00:40:25,676 அதை மாற்றியது யார்? அது ஏன் அங்கே இருக்கிறது? 502 00:40:35,435 --> 00:40:38,063 மைக்? இங்கே என்ன நடக்கிறது? நாம் தொடங்க வேண்டும். 503 00:40:39,231 --> 00:40:43,318 ஹாய், நாங்கள் தொடங்கப்போகிறோம், உங்கள் இருக்கையை தேடி அமருங்கள். 504 00:40:43,402 --> 00:40:44,403 நீ என்ன பேசுகிறாய்? 505 00:40:45,070 --> 00:40:46,071 நான் உரையாற்றப் போகிறேன். 506 00:40:46,655 --> 00:40:48,407 போதும் நிறுத்து. நீ விசித்திரமாக இருக்கிறாய்! 507 00:40:48,490 --> 00:40:49,658 பொறுங்கள்... மன்னிக்கவும், நீங்கள் யார்? 508 00:40:49,741 --> 00:40:52,077 மேடம், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. 509 00:40:52,160 --> 00:40:54,496 பொதுமக்களுக்காக திறந்திருக்கும் போது நீங்கள் திரும்பி வாருங்கள். 510 00:40:55,873 --> 00:40:59,001 நான் சொல்வது கேட்கிறதா? நீங்கள் இப்போது வெளியேற வேண்டும், சரியா? 511 00:41:42,419 --> 00:41:43,629 நமக்கு என்ன ஆனது? 512 00:41:50,928 --> 00:41:52,513 ஹேய். 513 00:41:53,555 --> 00:41:54,806 நீ என் அப்பாவின் நண்பர், இல்லையா? 514 00:41:57,226 --> 00:42:00,270 ஹேய், ஃப்ரெட்டி! எப்படி இருக்கிறாய்? 515 00:42:01,980 --> 00:42:04,608 நீ என் அப்பாவுடன் இருந்தாயா? அவர் எப்போது வெளியே வருவார்? 516 00:42:06,527 --> 00:42:08,320 இல்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. 517 00:42:09,571 --> 00:42:13,116 அவர் பாரில் இருந்தார். அங்கே. நீ அங்கிருந்துதான் வெளியே வந்தாய். 518 00:42:13,200 --> 00:42:14,826 உனக்குத் தெரியுமா, அது ஒரு பெரிய இடம். 519 00:42:14,910 --> 00:42:17,704 சத்தமாக இருக்கிறது, எனவே அவரை தவறவிட்டிருப்பேன். 520 00:42:21,291 --> 00:42:23,752 இது அவருடைய ஜாக்கெட். நீ ஏன் அணிந்திருக்கிறாய்? 521 00:42:26,129 --> 00:42:28,298 -இது என் அப்பாவின் ஜாக்கெட். -நான் அப்படி நினைக்கவில்லை. 522 00:42:30,759 --> 00:42:32,845 நீ கவனமாக இரு, ஃப்ரெட்டி. சரியா? 523 00:44:04,186 --> 00:44:06,188 வசனத் தமிழாக்கம் அருண்குமார்