1 00:00:05,047 --> 00:00:07,383 முன்னதாக தி எக்ஸ்பான்ஸில் 2 00:00:08,884 --> 00:00:11,345 சாக விரும்பினாங்க. சின்னை கொன்றிருக்க கூடாது. 3 00:00:11,429 --> 00:00:13,764 அவ கொல்லல, நீ கொன்ன. 4 00:00:13,848 --> 00:00:15,349 வின்னிபெஸாக்கி தீவு தெரியுமா? 5 00:00:15,391 --> 00:00:17,685 பணக்காரங்களுக்கு தீவில் தனி புகலிடம். 6 00:00:17,768 --> 00:00:21,230 -ஒவ்வொன்றிலும் சுற்றுப்பாதை விமானம். -அதில லூனா போலாம். 7 00:00:21,313 --> 00:00:23,649 சமமான பதிலடி தாக்குதல்களை திட்டமிட்டோம். 8 00:00:23,733 --> 00:00:26,527 நாம கவனிக்க வேண்டியது பாலஸ் ஸ்டேஷன்னு தோணுது. 9 00:00:26,610 --> 00:00:31,073 அப்பாவி பெல்ட்டர்களை நாம் கொல்ல தொடங்கினா, முழு பெல்ட்டையும் எதிர்க்கணும். 10 00:00:31,157 --> 00:00:33,409 -சொல்லுங்க. -பாலஸ் ஸ்டேஷனை சிதறடிக்கணும். 11 00:00:33,492 --> 00:00:37,663 என் பெயர் நயோமி நகாட்டா, சரக்கு விண்கலம் செட்ஸெமோகாவில் உள்ளேன். 12 00:00:37,747 --> 00:00:42,960 என் குரலில் தானியங்கி ஆபத்து அழைப்பு இந்த கலத்திலிருந்து ஒலிபரப்பாகிறது. 13 00:00:43,043 --> 00:00:45,129 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 14 00:00:45,212 --> 00:00:48,799 அது ஒரு பொய், த ரோசினான்ட்டேவை பொறிக்குள் ஈர்க்க செய்த மாயை. 15 00:00:48,883 --> 00:00:50,843 த செட்ஸெமோகா ஒரு வெடிகுண்டு. 16 00:00:50,926 --> 00:00:54,513 த பெல்ட்டுக்கு நயோமி நகாட்டா துரோகி, அது உண்மை. செத்துட்டா. 17 00:00:55,473 --> 00:00:57,850 கமினா! ப்ளீஸ். 18 00:00:57,933 --> 00:01:02,188 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். ஜேம்ஸ்... 19 00:01:02,271 --> 00:01:04,023 ஹோல்டெனிடம் சொல்லவும் நான்... 20 00:01:04,815 --> 00:01:06,066 கட்டுப்பாட்டில். 21 00:01:06,150 --> 00:01:09,737 ஏன் தகவல் மாறியது? யாரோ விண்கலத்தில் இருக்காங்களோ? 22 00:01:09,820 --> 00:01:10,905 நயோமியா இருக்குமோ? 23 00:01:10,988 --> 00:01:12,364 அது சாத்தியமில்ல. 24 00:01:14,116 --> 00:01:15,075 அவ செத்துட்டா. 25 00:01:21,290 --> 00:01:23,042 ஐந்து கோல்டன் போ ரெய்டர்ஸ் தாக்க 26 00:01:23,125 --> 00:01:26,754 இரண்டு யூஎன்என் கலங்களையும், ஒரு கனரக எம்சிஆர்என் போர்க்கலமும். 27 00:01:26,837 --> 00:01:30,758 நாலு கோல்டென் போ சாவு, ஒரு யூஎன்என் கலம் அழிவு, ஒண்ணு பின்வாங்கல். 28 00:01:30,841 --> 00:01:32,885 மார்ஷியன் போர்க் கலம் இழந்ததாம். 29 00:01:32,968 --> 00:01:36,764 வீர செயல் புரிந்த கூட்டாளிகளுக்கு சுதந்திர கடற்படையின் அஞ்சலி. 30 00:01:38,265 --> 00:01:40,017 ஆனா இழந்தது மதிப்பானது. 31 00:01:44,855 --> 00:01:49,235 கேப்டன், டைட்பீம் வந்திருக்கு, டுவால்ட்டிலிருந்து. 32 00:01:49,318 --> 00:01:50,694 அதை இங்கே அனுப்பு. 33 00:01:51,904 --> 00:01:56,659 தலைவரே, உங்க உத்தரவுபடி, த செட்ஸெமோகாவை நாங்க கண்காணிக்கிறோம். 34 00:01:56,742 --> 00:01:59,453 இப்போ பிரச்சனை இருக்கக்கூடும். 35 00:01:59,537 --> 00:02:02,164 நீங்க உருவாக்கின ஆபத்து அழைப்பு நின்றது. 36 00:02:02,248 --> 00:02:06,210 அது நிற்கும் முன், மாறிடுச்சு. இப்படி... 37 00:02:06,293 --> 00:02:08,212 நான் நயோமி நகாட்டா- 38 00:02:10,005 --> 00:02:11,715 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 39 00:02:11,799 --> 00:02:13,801 நான் நயோமி நகாட்டா- 40 00:02:15,678 --> 00:02:17,471 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 41 00:02:19,014 --> 00:02:20,432 நான் கட்டுப்பாட்டில். 42 00:02:20,975 --> 00:02:22,768 நான் நயோமி நகாட்டா- 43 00:02:23,936 --> 00:02:25,396 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக 44 00:02:26,438 --> 00:02:28,357 நான் நயோமி நகாட்டா- 45 00:02:30,067 --> 00:02:31,735 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 46 00:02:31,777 --> 00:02:33,654 அப்போ, இதை முதலில் கேட்டப்போ, 47 00:02:33,696 --> 00:02:36,615 செலுத்தல் கட்டுப்பாடில்லன்னு அழைப்பு சொன்னது. 48 00:02:36,699 --> 00:02:39,910 இப்போ தகவல் தொடர்பு கோளாறு அதை மாற்றின விதம் 49 00:02:39,994 --> 00:02:42,580 "நான் கட்டுப்பாட்டில்" தொடர்ந்து நாலு முறை? 50 00:02:44,248 --> 00:02:46,083 அது உனக்கு தற்செயலா தெரியுதா? 51 00:02:46,208 --> 00:02:47,501 நான் நயோமி நகாட்டா... 52 00:02:50,004 --> 00:02:51,797 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 53 00:02:54,133 --> 00:02:55,426 நான் கட்டுப்பாட்டில். 54 00:02:55,885 --> 00:02:57,720 கோளாறா இருக்கலாம். 55 00:02:57,803 --> 00:03:00,890 தகவல் தொடர்பு செயலிழக்கும், ட்ரான்ஸ்மிட்டர் நழுவும். 56 00:03:00,973 --> 00:03:03,100 கடைசியில எல்லாம் செத்துடும். 57 00:03:04,351 --> 00:03:06,937 சாரி. அப்படி சொல்லியிருக்க கூடாது. 58 00:03:07,021 --> 00:03:09,732 அவ பேசற நிலையில இல்லையோ என்னமோ. 59 00:03:09,815 --> 00:03:12,401 இல்ல, அடிபட்டிருப்பா, மைக்குக்கு வரமுடியாம. 60 00:03:12,484 --> 00:03:15,112 இல்ல, தகவல் தொடர்புக்கு முழு அனுமதியில்ல. 61 00:03:15,195 --> 00:03:17,990 அங்கே போகிற வரை நமக்கு தெரிய வழியில்ல. 62 00:03:18,073 --> 00:03:22,328 த ரோசியை விட நெருக்கமா இருக்கோம். முதலில் அங்கே போவோம். 63 00:03:22,411 --> 00:03:24,788 வேணும்னே செஞ்சிருந்தா, ஏன் ரகசியம்? 64 00:03:24,872 --> 00:03:26,874 என்ன நடக்குதுன்னு சொல்லலாமே? 65 00:03:26,957 --> 00:03:29,168 நம்மால் முடிஞ்ச அளவு வேகமா போவோம். 66 00:03:29,251 --> 00:03:31,420 வீணாக்க எரிபொருள் நம்மிடம் இல்ல. 67 00:03:33,964 --> 00:03:36,467 ஆனா வேகத்தை அதிகரிக்கலாமானு பார்க்கிறேன். 68 00:03:43,515 --> 00:03:45,976 நான் நயோமி நகாட்டா- 69 00:03:47,561 --> 00:03:49,647 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 70 00:03:50,648 --> 00:03:51,899 நான் கட்டுப்பாட்டில். 71 00:06:14,166 --> 00:06:18,170 தி எக்ஸ்பான்ஸ் 72 00:06:29,431 --> 00:06:35,395 வின்னிபெஸாக்கி ஏரி "தி எஸ்டேட்ஸ்" 73 00:08:06,445 --> 00:08:08,238 எப்படி ஹாங்கரில் நுழையறது? 74 00:08:09,198 --> 00:08:11,909 எனக்கு தெரியுதுன்னு தோணுது. என் பின் இருங்க. 75 00:09:18,392 --> 00:09:20,435 இதை செலுத்த தெரியுமா? 76 00:09:20,519 --> 00:09:21,603 தெரியும். 77 00:09:31,238 --> 00:09:32,239 சுடாதீங்க! 78 00:09:32,990 --> 00:09:34,116 சுடாதீங்க. 79 00:09:34,992 --> 00:09:36,910 மதிப்புள்ளது எல்லாம் வீட்டில். 80 00:09:36,994 --> 00:09:38,662 -வேண்டியதை எடுங்க. -நன்றி. 81 00:09:38,745 --> 00:09:41,665 -இங்கே தங்கறீங்களா? -ஆமா, அதாவது, வீட்டில். 82 00:09:41,748 --> 00:09:44,501 -நாங்க குளிர்கால பணியாளர்கள். -ஏன் ஒளியணும்? 83 00:09:44,584 --> 00:09:47,462 -உங்க ஹெலிகாப்டர் பார்த்தோம். -யூஎன் சின்னமில்ல. 84 00:09:47,546 --> 00:09:50,299 திருடணும்னா, வீட்டுக்கு போவீங்கன்னு தோணிச்சு. 85 00:09:50,382 --> 00:09:52,217 நாங்க திருட வந்ததை பொறுத்தது. 86 00:09:52,301 --> 00:09:55,846 நான் க்ளரிஸ்ஸா. தீவின் மறுபக்கம் என் குடும்ப வீடு இருந்தது. 87 00:09:55,929 --> 00:09:59,391 க்ளரிஸ்ஸா மாவோ? உன் குடும்பம் நன்றி விழாவுக்கு வந்தது. 88 00:09:59,474 --> 00:10:00,767 சரிதான்! 89 00:10:00,851 --> 00:10:03,145 நீயும் உன் தங்கையும் சண்டை போட்டீங்க. 90 00:10:03,228 --> 00:10:04,479 எங்கம்மா செஞ்சாங்க... 91 00:10:04,563 --> 00:10:05,897 ஹேய்! எவனுக்கு கவலை? 92 00:10:05,981 --> 00:10:08,984 முதல்ல வேலை. அப்புறமா கொஞ்சிக்கோங்க. 93 00:10:09,067 --> 00:10:12,070 -இங்கிருந்த குடும்பம் எங்கே? -சில மாசம் முன் போனாங்க. 94 00:10:12,154 --> 00:10:14,531 விண்கலம் எப்படி? லூனாவுக்கு போகுமா? 95 00:10:14,614 --> 00:10:16,450 ஆமா. ஆனா அது சில காலம் பறக்கலை. 96 00:10:16,533 --> 00:10:18,660 என் இரண்டு வருஷ பணிக்காலத்தில் பறக்கலை. 97 00:10:18,744 --> 00:10:20,787 உலையில் ஏதோ பிரச்சனை. 98 00:10:20,871 --> 00:10:21,913 அய்யோ! 99 00:10:22,748 --> 00:10:24,041 இவங்களை கண்காணி. 100 00:10:39,181 --> 00:10:40,307 அருமை! 101 00:10:43,352 --> 00:10:45,103 பேட்டரிகள் வேலை செய்யுது. 102 00:10:45,187 --> 00:10:47,272 பேட்டரிகள் சுற்றுப்பாதைக்கு ஏற்றாது. 103 00:11:32,275 --> 00:11:35,654 யுனைட்டெட் நேஷன்ஸ் பதிலடி தந்தது 104 00:11:41,493 --> 00:11:43,370 அடப்பாவி. 105 00:11:44,955 --> 00:11:46,706 உங்களை பார்க்க மகிழ்ச்சி. 106 00:11:47,958 --> 00:11:49,626 எனக்கு தெரியாம செஞ்சீங்க. 107 00:11:49,709 --> 00:11:53,463 செக்ரட்டரி ஜெனரல் என் செயல்முறை கருத்தை கேட்டார். 108 00:11:53,547 --> 00:11:54,548 நான் அதை சொன்னேன். 109 00:11:54,631 --> 00:11:57,134 காலிஸ்டோ ஆயுதத்துடன் இனாரோஸுக்கு தொடர்பு. 110 00:11:57,217 --> 00:11:59,386 அதையும் நாம விவாதிப்பது நல்லது. 111 00:11:59,469 --> 00:12:01,054 காலிஸ்டோ மார்ஷியன் தளம். 112 00:12:01,138 --> 00:12:02,180 அதனால என்ன? 113 00:12:02,264 --> 00:12:04,975 டைக்கோவின் பெல்ட்டர்கள் இனாரோஸுடன் இணைந்தால், 114 00:12:05,058 --> 00:12:08,520 அதையும் சரியான இலக்கு என்பேன். எர்த்துடையதோ இல்லையோ. 115 00:12:08,603 --> 00:12:09,688 எதற்கான இலக்கு? 116 00:12:09,771 --> 00:12:12,983 தொடரும் தாக்குதலுக்கு. பாலஸ் செயலை விரிவாக்குகிறேன். 117 00:12:13,066 --> 00:12:15,861 இந்த தாக்குதலை கட்டுப்பட்ட இராணுவ நோக்காக எப்படி 118 00:12:15,944 --> 00:12:18,155 காட்டுவது என்பதையும், நாம் பெல்ட்டுடன் 119 00:12:18,238 --> 00:12:21,450 போர் செய்யலன்னு தெளிவாக்கவும் விவாதிக்கணும். 120 00:12:21,533 --> 00:12:23,285 நாம த பெல்ட்டுடன் போரிடறோம். 121 00:12:23,368 --> 00:12:25,412 உங்க எதிர்ப்பை மதிக்கிறேன், ஆனா... 122 00:12:25,495 --> 00:12:29,040 இனாரோஸ் ஒரு தீவிரவாதி, பயங்கரவாதி, 123 00:12:29,124 --> 00:12:33,128 நமக்கு எத்தனை ஆபத்தோ அந்தளவு தன் மக்களுக்கே ஆபத்தானவன். 124 00:12:33,211 --> 00:12:35,297 அவன் பெல்ட்டர்கள் மீது பாறை வீசல... 125 00:12:35,380 --> 00:12:38,133 அதை அவன் வேறு விதமா திருக்க விட முடியாது. 126 00:12:38,216 --> 00:12:41,970 உங்க வருத்தம் எனக்கு புரியுது. உங்களிடம் சொல்லியிருக்கணும். 127 00:12:42,053 --> 00:12:44,848 பொதுமக்கள் இலக்குகளை நாம் தொடர்ந்து தாக்கினா... 128 00:12:44,931 --> 00:12:46,099 இனாரோஸ் போலவா? 129 00:12:46,183 --> 00:12:48,477 அவன் இப்போ நம்ம ஆதர்சமா? 130 00:12:49,603 --> 00:12:52,314 மார்கோ இனாரோஸ் என்ன சொன்னாலும். 131 00:12:52,397 --> 00:12:55,567 த பெல்ட்டர்கள் ஒரே நாடு கிடையாது. 132 00:12:55,650 --> 00:12:57,486 அதை நாம சாதகமாக்கலாம். 133 00:12:57,569 --> 00:12:59,779 சில பிரிவுகளோடு இணையலாம், 134 00:12:59,863 --> 00:13:01,615 ஒரே நோக்கத்துக்காக நியமிக்கலாம். 135 00:13:01,698 --> 00:13:04,910 அது போன்ற இராஜ தந்திரத்துக்கு ரொம்ப தாமதமாகும். 136 00:13:05,452 --> 00:13:09,456 நம்ம வேலை, என் வேலை, நம் மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, 137 00:13:09,539 --> 00:13:12,834 நம்மை தாக்க வரும் எதிரியின் திறனை விரைவில் முறியடிப்பது. 138 00:13:12,918 --> 00:13:16,296 இந்த போரை தொடங்கின கேடுகெட்டவங்களையும், அவங்களை 139 00:13:16,379 --> 00:13:18,215 ஆதரிக்கிறவங்களையும் தாக்கணும். 140 00:13:18,298 --> 00:13:19,966 அதை நானும் விரும்ப மாட்டேனா? 141 00:13:21,343 --> 00:13:23,762 மார்கோ இனாரோஸை நெருக்கி, 142 00:13:23,845 --> 00:13:27,766 அவன் காற்றுக்காக தவிக்கிறதை பார்த்து 143 00:13:27,849 --> 00:13:30,268 அவன் கடைசி மூச்சை இழுப்பதை அவன் பிள்ளைங்க 144 00:13:30,352 --> 00:13:34,189 பார்க்க வைக்கணும்னு நான் தினமும் இரவு கனவு காணறேன், தெரியுமா, 145 00:13:34,272 --> 00:13:36,900 ஏன்னா அவன் என் கணவரை கொன்றானே? 146 00:13:43,031 --> 00:13:44,866 என் அர்ஜுன் இறந்துட்டார். 147 00:13:45,825 --> 00:13:49,037 அவனை திரும்ப கொண்டு வர எல்லாத்தையும் தியாகம் செய்வேன். 148 00:13:49,746 --> 00:13:54,167 இப்போ, பாலஸில் நேசிப்பவர்களை இழந்த எல்லாரும் 149 00:13:54,251 --> 00:13:56,378 நான் உணர்வதை உணர்றாங்க. 150 00:13:58,004 --> 00:13:59,923 நாம கொன்ற ஒவ்வொரு எதிரிக்கும், 151 00:14:00,006 --> 00:14:01,800 பத்து எதிரிகளை உருவாக்கினோம். 152 00:14:08,098 --> 00:14:11,643 மேடம், உங்க இழப்புக்கு வருந்தறேன். 153 00:14:12,352 --> 00:14:14,980 ஆனா முடிவுகளை உணர்வுசார்ந்து எடுக்க முடியாது. 154 00:14:15,063 --> 00:14:17,524 நாம பகுத்தறிவோட, நடுநிலையோட இருக்கணும். 155 00:14:18,149 --> 00:14:21,861 நாம சீரீஸ் ஸ்டேஷனை தாக்கணும். அது பெல்ட்டின் பெரிய துறைமுகம். 156 00:14:21,945 --> 00:14:23,697 டாவ்ஸ் நம் நட்புனு நினைச்சேன். 157 00:14:23,780 --> 00:14:26,283 நெருக்கடி தந்தா அவன் இனாரோஸோட சேர்வான். 158 00:14:26,366 --> 00:14:27,909 சீரீஸும் பாலஸும் இல்லைன்னு 159 00:14:27,993 --> 00:14:30,954 பொருள் நிறப்ப, வெளிகிரகங்களுக்கு இனாரோஸ் தள்ளப்படுவான். 160 00:14:31,663 --> 00:14:33,498 அவங்களை அது பலவீனமாக்கும். 161 00:14:33,582 --> 00:14:34,624 தைரியமான செயல். 162 00:14:34,708 --> 00:14:37,085 சீரீஸில் பல லட்சம் பேர் இருக்காங்க. 163 00:14:37,168 --> 00:14:40,130 பல லட்சம் குழந்தைகள் இருக்காங்க. 164 00:14:40,213 --> 00:14:43,258 முழு வீச்சான தாக்குதலுக்கு என்ன திட்டம்? 165 00:14:43,341 --> 00:14:45,844 நோக்கம் செயலிழக்க வைப்பதா ஆக்கிரமிப்பதா? 166 00:14:45,927 --> 00:14:48,054 இதில் நான் அங்கம் வகிக்க மாட்டேன். 167 00:14:50,181 --> 00:14:51,266 ராஜினாமா செய்றீங்களா? 168 00:14:51,349 --> 00:14:52,434 ஆமா, சார். 169 00:14:53,226 --> 00:14:55,478 சரி. உங்க ராஜினாமாவை ஏத்துக்கறேன். 170 00:14:55,562 --> 00:14:56,855 நீங்க போகலாம். 171 00:15:00,984 --> 00:15:04,779 -எனது ராஜினாமாவையும் நீங்க ஏற்கணும். -கடவுளே. டஹேன்! 172 00:15:06,281 --> 00:15:07,324 என்னோடதும். 173 00:15:07,407 --> 00:15:09,743 இதைவிட நல்லவங்களா நடந்துருக்கணும். 174 00:15:23,465 --> 00:15:24,466 கிளம்பு. 175 00:15:27,302 --> 00:15:28,553 பிரச்சனையா, என்ன? 176 00:15:28,637 --> 00:15:31,514 இல்ல, எங்களுக்கு தனிமை தேவை. 177 00:15:49,991 --> 00:15:52,285 த செட்ஸெமோகா பாதை மாறல. 178 00:15:52,369 --> 00:15:56,748 நயோமி உயிரோட இருந்தாலும், அவகிட்ட கலத்தின் கட்டுப்பாடில்ல. 179 00:15:56,831 --> 00:15:58,458 அது நீண்ட காலம் நிலைக்காது. 180 00:15:59,459 --> 00:16:02,420 தனக்கு தெரிஞ்ச மேதை நயோமி தான்னு ட்ரம்மர் சொன்னா. 181 00:16:04,130 --> 00:16:07,133 நாமளே போய் பார்க்கணும்னு ட்ரம்மர் வலியுறுத்துவா. 182 00:16:07,217 --> 00:16:09,135 அவளிடம் அதை சொல்ல மாட்டோம். 183 00:16:11,638 --> 00:16:14,933 அவள் என் நேசத்துக்குரியவ. அவளிடம் இதை மறைக்க முடியாது. 184 00:16:15,016 --> 00:16:17,310 இங்கே நீ நேசிப்பது அவளை மட்டுமில்ல. 185 00:16:19,604 --> 00:16:22,190 மார்கோவுக்கு சூழ்நிலை தெரியும். 186 00:16:22,273 --> 00:16:24,609 நமக்கு உத்தரவு அனுப்புவான். 187 00:16:24,693 --> 00:16:28,530 அவன் அனுப்பினா, நீயும் உன் குழுவும் அதை பின்பற்றணும். 188 00:16:28,613 --> 00:16:30,281 வேற விதமா நடந்தா, 189 00:16:31,157 --> 00:16:33,243 அதன் விளைவு உன் தவறா இருக்கும். 190 00:16:34,369 --> 00:16:38,581 அதனால நீ எதுவும் சொல்லக் கூடாது. புரிஞ்சுதா? 191 00:16:38,665 --> 00:16:39,666 புரிஞ்சுது. 192 00:16:54,556 --> 00:16:57,559 இந்த மிருகங்கள் முடிக்கும் முன் நீயும் சாப்பிடு. 193 00:16:57,642 --> 00:16:59,102 பணக்காரங்க உணவு அருமை. 194 00:16:59,185 --> 00:17:02,272 ஆடம்பரமில்ல. வீட்டில் அதிகம் மிச்சமில்ல. 195 00:17:02,355 --> 00:17:04,607 உபசரிப்பை பாராட்டறோம். 196 00:17:05,108 --> 00:17:06,192 அதிர்ஷ்டமுண்டா? 197 00:17:06,276 --> 00:17:07,527 உலை இயங்கறதில்ல. 198 00:17:07,610 --> 00:17:08,862 போதிய எரிபொருள் இருக்கு, 199 00:17:08,945 --> 00:17:11,948 ஆனா பாட்டிலை முடுக்கினா ஏதோ தடுக்குது. 200 00:17:12,031 --> 00:17:14,701 வீட்டு பேட்டரிகள் செயலிழந்தன, ஜெனரேட்டர் இல்ல. 201 00:17:14,784 --> 00:17:17,787 மின்சாரம் இல்லாம, தீவில் ரொம்ப குளிரடிக்கும். 202 00:17:17,871 --> 00:17:20,999 இங்கிருக்கும் உணவும் அதிக நாள் தாங்காது. 203 00:17:24,043 --> 00:17:27,922 நீங்க நிச்சயமா விரும்பின அளவு சாப்பிடலாம். 204 00:17:28,757 --> 00:17:31,176 எரிபொருள் தீரும் முன் ஹெலிகாப்டர் 205 00:17:31,259 --> 00:17:32,969 எவ்ளோ தூரம் போகும்னு பார்ப்போமா? 206 00:17:33,052 --> 00:17:34,012 இன்னும் இல்லை. 207 00:17:34,095 --> 00:17:36,264 உலை செயலிழப்புக்கு காரணமானது, 208 00:17:36,347 --> 00:17:39,267 இயந்திரம், மின்சாரம், மென்பொருளா இருக்கலாம். 209 00:17:39,350 --> 00:17:41,770 எதுவாவும் இருக்கலாம். 210 00:17:41,853 --> 00:17:45,482 பீச்சஸும் நானும் இயந்திரம், மின் வேலை செய்வோம், கணினி தெரியாது. 211 00:17:45,565 --> 00:17:47,525 கணினியா இருந்தா, உதவி தேவை. 212 00:17:47,609 --> 00:17:51,362 பாதுகாப்பு நெறிமுறையா இருக்கும். தவறவிட்ட விசை போல. 213 00:17:51,446 --> 00:17:55,450 விண்கலத்துக்கு உரிமையாளர் போல காட்டினா, அது உதவிகரமா இருக்கும். 214 00:17:55,533 --> 00:17:57,202 ஆம். சரி. 215 00:17:57,702 --> 00:17:59,496 போலி அடையாளம் செய்வியா? 216 00:18:08,254 --> 00:18:09,088 அய்யோ. 217 00:18:15,678 --> 00:18:16,888 அங்கேயே நில்லுங்க. 218 00:18:18,014 --> 00:18:20,475 -நிவாரண பணியாளர்களா? -இல்ல. 219 00:18:20,558 --> 00:18:21,935 உங்க ஹெலிகாப்டர் கண்டோம். 220 00:18:22,018 --> 00:18:24,604 பல வாரங்களா வெளியேற காத்திருக்கோம். 221 00:18:24,687 --> 00:18:26,272 பொருட்கள் குறைவா இருக்கு. 222 00:18:26,356 --> 00:18:30,026 உங்களை வெளியேத்தவோ பொருள் கொடுக்கவோ வரலை, போய்த் தொலைங்க. 223 00:18:30,109 --> 00:18:32,111 நீங்க எங்களுக்கு உதவணும். ப்ளீஸ். 224 00:18:32,195 --> 00:18:34,405 அவங்க குளிர்கால பணியாட்கள். அபாயமில்ல. 225 00:18:34,489 --> 00:18:37,075 பாறைகள் தாக்கின பின் தகவல் தொடர்பு இல்லை. 226 00:18:37,158 --> 00:18:40,245 எந்த வீடுகளிலும் மின்சாரம் இல்லை. உணவு தேவை... 227 00:18:40,328 --> 00:18:41,996 அது நம்ம பிரச்சனை இல்ல. 228 00:18:42,080 --> 00:18:45,250 நாங்க நிவாரண உதவி செய்யல. சாரி. 229 00:18:45,959 --> 00:18:48,545 -அப்போ இங்கே என்ன செய்றீங்க? -ப்ளீஸ். 230 00:18:48,628 --> 00:18:52,715 ஹாங்கரில் இருக்கும் விண்கலத்தை சரி செய்து லூனாவுக்கு போறோம். 231 00:18:53,591 --> 00:18:55,134 நீங்க விரும்பினா வரலாம். 232 00:18:56,052 --> 00:18:57,554 என்ன நாசம்? 233 00:18:59,055 --> 00:19:00,265 அது சின்ன விண்கலம். 234 00:19:00,348 --> 00:19:02,809 அசௌகரியம் ஆனா விரைவான பயணம். 235 00:19:02,892 --> 00:19:06,354 யாரும் இவங்களுக்கு உதவல. இந்த வீட்டு உரிமையாளர்களும். 236 00:19:06,437 --> 00:19:09,607 நம்ம திட்டங்களை தீவில் எல்லாரிடமும் சொல்வோமா? 237 00:19:09,691 --> 00:19:13,069 சரியா சொல்றான். இந்த விஷயத்தை பரப்ப கூடாது. 238 00:19:13,152 --> 00:19:15,405 விண்கலத்தை சரிசெய்ய நான் உதவணும்னா, 239 00:19:15,488 --> 00:19:18,491 வர விரும்பறவங்க யாரையும் விட்டு போக கூடாது. 240 00:19:18,575 --> 00:19:20,994 சரி. நாங்களே செஞ்சுக்கறோம். 241 00:19:21,077 --> 00:19:22,871 நீ வேணா இங்கேயே இரு, இளவரசி. 242 00:19:26,833 --> 00:19:30,336 கிளம்ப விருப்பம்னா விண்கலம் தயாராவதற்குள் இங்கே வாங்க. 243 00:19:30,420 --> 00:19:32,422 நாங்க காத்திருக்க மாட்டோம். 244 00:19:32,505 --> 00:19:33,923 புரிஞ்சதா? 245 00:19:35,925 --> 00:19:37,135 -என் பின் வாங்க. -பேசாதே. 246 00:19:37,218 --> 00:19:38,386 உள்ளே போவோம். 247 00:19:43,266 --> 00:19:46,686 உங்க விண்கலங்கள், த செர்ரியோ மால், த கோடோவை சந்திக்கும், 248 00:19:46,769 --> 00:19:50,064 ஒன்றிணைந்து நீங்க த ரோசினான்ட்டேவை மறித்து தாக்கணும். 249 00:19:50,148 --> 00:19:54,903 அதை அழிப்பது தான் உங்க முதலும் முடிவுமான ஒரே குறிக்கோள். 250 00:19:54,986 --> 00:19:56,863 அதை உறுதிபட செய்யுங்க. 251 00:19:58,156 --> 00:19:59,324 நல்ல வேட்டையாகட்டும். 252 00:20:09,626 --> 00:20:10,919 உத்தரவுகள் வந்தாச்சு. 253 00:20:13,046 --> 00:20:15,673 -அர்த்தமில்லாதவை. -அதை நீ சொல்லக்கூடாது. 254 00:20:15,757 --> 00:20:18,968 த ரோசினான்ட்டே ஒரு பொறியை நோக்கி போறதா சொன்னே. 255 00:20:19,052 --> 00:20:22,305 அது உண்மைன்னா, ஏன் மோதணும்? 256 00:20:23,389 --> 00:20:25,725 ஒருங்கிணைப்பு மற்றும் சமரசத்தின் 257 00:20:25,808 --> 00:20:28,978 சின்னத்தை கொன்றதா சுதந்திர கடற்படை காட்டிக்கொள்ள. 258 00:20:29,062 --> 00:20:33,024 பல தலைமுறைகளா இன்னர்கள் பெல்ட்டர்களை அடிமைப்படுத்தனது காரணம். 259 00:20:33,107 --> 00:20:35,443 ஒரு முட்டாள் தான் அதை நம்புவான். 260 00:20:36,319 --> 00:20:39,197 உனக்கு பல விஷயங்கள் தெரியும், ஆனா நீ முட்டாளில்ல. 261 00:20:42,116 --> 00:20:47,997 உன் விசுவாசத்தையும் உன் பிரிவின் உயிர்களையும் மார்கோவிடம் ஒப்படைச்சே. 262 00:20:48,081 --> 00:20:50,500 அதை பின்வாங்கறியா, என்ன? 263 00:20:56,839 --> 00:20:57,924 இல்ல. 264 00:20:59,008 --> 00:21:01,761 செய்தாகணும்னா, அதை செய்வோம். 265 00:21:06,516 --> 00:21:07,892 நீங்க செஞ்சாகணும். 266 00:21:09,936 --> 00:21:11,354 டுவால்டை தயார் செய். 267 00:21:12,814 --> 00:21:16,818 செர்ரியோ மாலுக்கும் கோடோவுக்கும் டைட்பீம் வேணும். 268 00:21:22,657 --> 00:21:23,866 உன் துப்பாக்கியை கொடு. 269 00:21:26,703 --> 00:21:28,621 -ஏன்? -ஏன்னு தெரிஞ்சிருக்கும். 270 00:21:31,833 --> 00:21:32,834 தேவையில்ல. 271 00:21:33,918 --> 00:21:36,004 அப்போ கொடுப்பதில் என்ன ஆட்சேபணை. 272 00:21:38,256 --> 00:21:41,592 கமினா, ப்ளீஸ். இதை எனக்காக செய். 273 00:22:25,511 --> 00:22:27,096 அர்ஜுன் ஆவசராலா-ராவ் அன்பு கணவர் 274 00:22:27,180 --> 00:22:29,849 மரணத்தை தாண்டிய வாழ்வுண்டு என்றால், அங்கே உன்னை தேடுவேன். 275 00:22:58,086 --> 00:22:59,754 என் ஆழ்ந்த அனுதாபங்கள். 276 00:22:59,837 --> 00:23:00,963 நன்றி. 277 00:23:03,049 --> 00:23:05,968 இங்கே ஏதோ சொல்ல வந்தீங்க. அதனால், சொல்லுங்க. 278 00:23:06,052 --> 00:23:08,304 இன்னும் மூணு அமைச்சர்கள் பதவி விலகினர். 279 00:23:08,387 --> 00:23:10,807 நாளைக்கு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு. 280 00:23:10,890 --> 00:23:12,308 பாஸ்டர் தோற்கப்போகிறார். 281 00:23:12,391 --> 00:23:13,684 அப்போ, உடனடி தேர்தல். 282 00:23:13,768 --> 00:23:15,853 ஆமா, ஆனா அவை கணிக்க முடியாதவை. 283 00:23:15,937 --> 00:23:18,898 இந்த நேரத்தில் ஆபத்தானதுன்னு பலர் நினைக்கிறாங்க. 284 00:23:18,981 --> 00:23:21,150 -ஆட்சிக் கவிழ்ப்புன்றீங்க. -என்ன? 285 00:23:21,234 --> 00:23:22,318 அது தேசத் துரோகம். 286 00:23:22,401 --> 00:23:23,402 இல்ல, மேடம். 287 00:23:23,486 --> 00:23:26,906 நான் கேட்டா நடுநிலையா இருக்கும்னு அமைச்சர்கள் நினைச்சாங்க. 288 00:23:28,032 --> 00:23:31,786 மேடம் ஆவசராலா, எங்களை வழிநடத்த நீங்க தேர்ந்தெடுக்கப்பட்டால், 289 00:23:31,869 --> 00:23:33,287 மீண்டும் தலைவராவீங்களா? 290 00:23:45,174 --> 00:23:48,010 ஓ, கடவுளே. உங்களை தேர்ந்தெடுத்தாங்க. 291 00:23:48,094 --> 00:23:51,347 பெயர் புகழுக்குன்னு நினைக்கிறேன். 292 00:23:52,348 --> 00:23:54,350 முன்னாள் மற்றும் எதிர்கால ராணி. 293 00:23:55,810 --> 00:23:57,186 வாழ்த்துக்கள். 294 00:23:57,270 --> 00:23:59,355 என் அமைச்சரவையில் நீங்க இருக்கணும். 295 00:24:02,650 --> 00:24:04,569 நிஜமா சொல்றேன். 296 00:24:04,652 --> 00:24:06,904 உங்கள நம்பறேன், நீங்க எனக்கு பயப்படல. 297 00:24:09,907 --> 00:24:11,659 தாக்குதல் குழுவுக்கு போறேன். 298 00:24:12,326 --> 00:24:14,871 இனாரோஸையே கொல்லக்கூடிய குழுவா இருக்கணும். 299 00:24:14,954 --> 00:24:18,916 ஃபீலிக்ஸ், நீங்க போர்க் கலத்தில் பணி செய்து 20 ஆண்டுகளாச்சு. 300 00:24:19,000 --> 00:24:22,170 இராணுவத்தினரை நீங்க துரத்தறது வழக்கம். 301 00:24:22,253 --> 00:24:23,588 இனாரோஸிடம் விண்கலங்கள். 302 00:24:23,671 --> 00:24:25,965 அவன் வீச லட்சக் கணக்கான பாறைகள். 303 00:24:26,048 --> 00:24:28,301 அவனிடம் ப்ரோட்டோமாலிக்யூல் இருக்கு. 304 00:24:28,384 --> 00:24:31,888 அவனோட மோதினா, நாம தோற்க வாய்ப்பிருக்கு. 305 00:24:31,971 --> 00:24:33,431 உங்க உதவி தேவை. 306 00:24:35,016 --> 00:24:37,226 யாரோ மார்கோ இனாரோஸை கொல்வாங்க, 307 00:24:38,311 --> 00:24:40,438 அது நானா இருக்க விரும்பறேன். 308 00:24:50,823 --> 00:24:55,494 ஒரு பெல்டர், மார்ஷியன், எர்த்தர் மதுவிடுதிக்கு போறாங்க. 309 00:24:56,871 --> 00:25:01,751 பெல்ட்டர் சொல்றான், "உங்க சிறந்த" மார்ஷியன் விஸ்கி கொடுங்க. 310 00:25:01,834 --> 00:25:05,671 "என் எதிரி போல குடித்தால், அவனைப் போல யோசிப்பேன்." 311 00:25:05,755 --> 00:25:10,468 மார்ஷியன் சொல்றான், "உங்க சிறந்த" எர்த் டெக்கீலாவை கொடுங்க. 312 00:25:10,551 --> 00:25:15,723 "என் எதிரி போல குடித்தால், என் எதிரி போல நினைப்பேன்." 313 00:25:17,016 --> 00:25:18,684 அதை நீங்க சொல்லி முடிக்கல. 314 00:25:20,269 --> 00:25:25,483 எர்த்தர் சொல்றான், "உங்க சிறந்த" பெல்ட்டர் மது தாங்க. 315 00:25:25,566 --> 00:25:27,568 "த பெல்ட்டிலுள்ள சிறந்தது." 316 00:25:27,652 --> 00:25:30,905 மதுசிப்பந்தி சொல்றான், "உன் எதிரி போல நினைக்க வைக்குமா?" 317 00:25:30,988 --> 00:25:33,908 எர்த்தர் சொல்றான், "இல்ல, நான் குடியை குறைக்கணும்". 318 00:25:33,991 --> 00:25:36,244 "பெல்ட்டில் சிறந்தது மிக மோசமானது." 319 00:25:42,333 --> 00:25:43,876 ஒரு காலத்தில் சிரிச்சோம். 320 00:26:04,272 --> 00:26:05,731 இது எப்படி இருக்கு? 321 00:26:05,815 --> 00:26:08,734 இங்கே பச்சையா இருக்கு. போன தடவை போல. 322 00:26:08,818 --> 00:26:11,028 சரி, மீண்டும் முயற்சிப்போம். 323 00:26:11,112 --> 00:26:13,281 எரிக், காந்த பாட்டில் சோதனை செய். 324 00:26:17,660 --> 00:26:19,328 பீச்சஸ், அங்கே தூங்கறானா? 325 00:26:19,412 --> 00:26:21,372 இங்கே இல்ல. வெளியே போனான். 326 00:26:21,455 --> 00:26:22,665 அடச்சே. 327 00:26:23,207 --> 00:26:24,292 அய்யோ. 328 00:26:30,172 --> 00:26:32,466 டிம்மி, உடனே வெளியே வா. பிரச்சனை. 329 00:26:34,719 --> 00:26:36,137 ரொம்ப குளிருது இல்ல. 330 00:26:36,220 --> 00:26:38,389 தீவு முழுக்க மின்சார கட்டம் சேதம். 331 00:26:39,557 --> 00:26:42,435 சில நாட்களில் இயங்க தொடங்கும்னு நம்பறோம். 332 00:26:42,518 --> 00:26:45,563 வின்னிபெஸாக்கி தீவில் நான் தனியார் காவல் தலைவர். 333 00:26:45,646 --> 00:26:46,564 வாடகை போலீஸ். 334 00:26:48,065 --> 00:26:51,110 நிலப்பரப்போட தகவல் தொடர்பு சீக்கிரம் திரும்பும்னு 335 00:26:51,193 --> 00:26:53,154 உங்க நண்பர்களிடம் சொன்னேன். 336 00:26:53,237 --> 00:26:54,572 நம்ம உணவை கேட்கிறாங்க. 337 00:26:54,655 --> 00:26:58,200 இதற்கிடையில், உணவையும் மற்ற பொருட்களையும் திறம்பட 338 00:26:58,284 --> 00:27:01,579 வினியோகிக்க, மைய இடத்தில் வைச்சா நல்லது. 339 00:27:02,204 --> 00:27:05,291 -சரி. அதை இங்கே கொண்டு வா. -நாங்க கண்காணிப்போம். 340 00:27:05,374 --> 00:27:08,544 ஒரு வீட்டில் தற்காலிக செயல் மையம் ஏற்படுத்தினோம். 341 00:27:08,627 --> 00:27:11,922 முக்கிய பொருட்களை பாதுக்காக்க அது நல்ல இடம்னு நம்பறோம். 342 00:27:12,006 --> 00:27:13,716 யாரோட வீட்டையோ எடுத்தீங்க, 343 00:27:13,799 --> 00:27:15,551 இப்ப எல்லாரோட உணவும் வேணுமா? 344 00:27:15,634 --> 00:27:18,512 இதென்ன மகா முட்டாள்தனமான பகல் கொள்ளை. 345 00:27:19,430 --> 00:27:20,973 இதில் நீ புதிய ஆள் போல. 346 00:27:24,018 --> 00:27:26,604 ஹெலிகாப்டரில் வந்தீங்களாமே. 347 00:27:26,687 --> 00:27:28,981 என் குழுவுக்கு அதுவும் வேணும். 348 00:27:29,065 --> 00:27:32,943 அதைவிட நல்ல யோசனை சொல்றேன். என்னை ஏன் அடிக்க கூடாது, வாடகை ஆளே? 349 00:27:33,027 --> 00:27:35,446 இங்கே யாரும் உனக்கு எதையும் கொடுக்கல. 350 00:27:35,529 --> 00:27:39,283 நான் நியாயமில்லாதவன்னு நினைச்சா, அதிகாரிகளிடம் புகார் கொடு. 351 00:27:40,493 --> 00:27:43,537 ஆமா. இப்போ அதிகாரிகள் இல்லை. என்னை தவிர. 352 00:27:43,621 --> 00:27:47,625 அதனால நீ வாயை மூடிக்கிட்டு நான் சொல்றதை கேளேன்? 353 00:27:48,167 --> 00:27:49,251 கேட்பேன்னு தோணலை. 354 00:27:53,339 --> 00:27:56,967 அதுக்காக தான் இங்கே இருக்கியா? அந்த பழைய விண்கலத்துக்காக. 355 00:27:57,051 --> 00:27:58,969 அது வேலை செய்யலன்னு சொன்னாங்க. 356 00:28:03,140 --> 00:28:04,266 நிறுத்துங்க! 357 00:28:05,017 --> 00:28:06,936 வழியிலிருந்து நகரு! 358 00:28:07,686 --> 00:28:10,940 நாம இதை செய்ய வேண்டாம். பால்டிமோரில் இருந்தோம். 359 00:28:11,023 --> 00:28:13,943 சாலையோரமா மக்களை சவக்குழிகளில் புதைக்கிறாங்க. 360 00:28:14,026 --> 00:28:17,113 ப்ளீஸ், உங்க துப்பாக்கிகளை கீழே போடுங்க. 361 00:28:24,787 --> 00:28:25,955 போயிடுங்க. 362 00:28:30,084 --> 00:28:33,504 போயிடுங்க. 363 00:28:54,817 --> 00:28:57,069 திரும்பி வருவாங்க, தெரியுமில்ல? 364 00:28:58,446 --> 00:29:00,239 மக்கள் காரணமின்றி இறந்தாங்க. 365 00:29:00,322 --> 00:29:02,658 அவங்க காரணம் தர ஏன் காத்திருக்கோம்? 366 00:29:02,741 --> 00:29:04,535 முட்டாள்தனமான தந்திரம். 367 00:29:04,618 --> 00:29:08,497 சரி. வேலைக்கு திரும்புவோம், அவங்க வரும் முன் கிளம்பலாம். 368 00:29:27,057 --> 00:29:30,019 நாம இந்த ஆபத்தை செய்ய மார்கோ விரும்பறது புரியல. 369 00:29:30,853 --> 00:29:33,856 அஞ்சு விண்கலத்துக்கு எதிரா ஒன்று. தோற்க மாட்டோம். 370 00:29:35,399 --> 00:29:38,194 இப்போ, எங்கிட்டேர்ந்து உன்னை மறைக்க வைக்கிறான். 371 00:29:39,111 --> 00:29:40,362 உனக்கு ஏதோ தெரியும். 372 00:29:42,198 --> 00:29:44,033 பொய் சொல்லாதே. 373 00:29:44,116 --> 00:29:45,743 நீ நல்லா சொல்றதில்ல. 374 00:29:45,826 --> 00:29:47,578 நான் எதையோ மறைக்கிறேன்னா, 375 00:29:47,661 --> 00:29:50,122 அதுக்கு நல்ல காரணமிருக்கும்னு தெரியாதா? 376 00:29:50,206 --> 00:29:53,459 என்னை குழந்தை மாதிரி நடத்தாதே. உண்மையை ஈட்டியிருக்கேன். 377 00:29:54,418 --> 00:29:56,504 க்ளேஸ் ஆஷ்ஃபோர்டை மார்கோ கொன்றான், 378 00:29:56,587 --> 00:29:59,006 என்னை கட்டுப் படுத்தி, அவனோட நட்பானேன், 379 00:29:59,089 --> 00:30:00,883 நீ பத்திரமா இருக்கணும்னு. 380 00:30:00,966 --> 00:30:02,801 நான் நேசிச்ச பெண்ணை கொன்றான், 381 00:30:02,885 --> 00:30:06,013 அவ நண்பர்களை நானும் என் குழுவும் கொல்லணும்னு சொல்றான், 382 00:30:06,096 --> 00:30:08,098 அதற்கும் உடன்படறேன். 383 00:30:08,182 --> 00:30:12,353 இன்னும் நான் எவ்ளோ அவமானப்படணும், நீ என்னை மதிச்சு நடக்க? 384 00:30:26,909 --> 00:30:28,160 எங்களையும் நேசிக்கிறியா? 385 00:30:30,955 --> 00:30:31,956 என்ன? 386 00:30:33,999 --> 00:30:35,876 நீ நயோமியை நேசிச்சே. 387 00:30:36,919 --> 00:30:38,504 எங்களையும் நேசிக்கிறியா? 388 00:30:39,338 --> 00:30:40,381 நிச்சயமா. 389 00:30:42,049 --> 00:30:44,677 அவ அளவுக்கு நாங்க உனக்கு முக்கியமா? 390 00:30:47,596 --> 00:30:49,932 அதை நீ சொல்றதை கேட்கணும். 391 00:30:52,935 --> 00:30:53,936 ஆமா. 392 00:31:01,860 --> 00:31:06,198 நயோமி அந்த விண்கலத்தில் உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு. 393 00:31:07,741 --> 00:31:13,080 அவளுக்கு த ரோசினான்ட்டே உதவும் முன் அவங்களை கொல்ல சொல்றான் மார்கோ. 394 00:31:13,914 --> 00:31:15,040 அவளை காப்பாத்தாதே. 395 00:31:16,667 --> 00:31:19,837 மார்கோவுக்கு எதிரா செயல்பட்டா என்னாகும் தெரியும்ல. 396 00:31:20,588 --> 00:31:23,924 இப்போ நாம துரோகம் செஞ்சா, கொல்லப் படுவோம். 397 00:31:24,008 --> 00:31:27,720 நீ மட்டுமில்ல, நான் மட்டுமில்ல, நாம எல்லோரும். 398 00:31:33,058 --> 00:31:34,977 அதை நீ மதிக்கணும்னு கெஞ்சறேன். 399 00:32:03,255 --> 00:32:04,340 எல்லாம் முடிஞ்சதா? 400 00:32:05,090 --> 00:32:06,967 எனக்கு தெரிஞ்ச வரை. 401 00:32:07,801 --> 00:32:11,055 மின் அமைப்பு சரியா இருக்கு, எப்படியோ. நீ? 402 00:32:11,138 --> 00:32:13,140 இப்போ பதிவான உரிமையாளர் டிம்மி. 403 00:32:13,223 --> 00:32:15,768 இயக்கத்தில் மறைவான விசைகள் இல்ல. 404 00:32:16,393 --> 00:32:18,854 இந்த இயக்க அமைப்பு பழையது, 405 00:32:19,396 --> 00:32:20,648 ஆனால் செயல்படுது. 406 00:32:20,731 --> 00:32:24,318 -விண்கலம் இயங்க தொடங்கினால் நல்லது. -ஆமா. அது நல்லது. 407 00:32:29,365 --> 00:32:31,283 உன்னை பீச்சஸ்னு கூப்பிடறான். 408 00:32:31,367 --> 00:32:32,660 ஆமா. 409 00:32:32,743 --> 00:32:34,244 -ஏன்? -தெரியல. 410 00:32:36,455 --> 00:32:38,290 அவனை ஏன் டிம்மின்னு கூப்பிடறே. 411 00:32:38,374 --> 00:32:40,084 ஏன்னா அது அவனோட பெயர். 412 00:32:42,920 --> 00:32:43,754 ஏன்னு கேட்கணுமா? 413 00:32:46,006 --> 00:32:47,007 நான் மாட்டேன். 414 00:32:57,267 --> 00:33:00,479 இன்னொரு மின் சுழற்சி செய்யணும்னா நான் தயார். 415 00:33:00,562 --> 00:33:02,231 நான் இடைவேளை எடுக்கிறேன். 416 00:33:08,654 --> 00:33:09,947 நல்லா போகலையா? 417 00:33:11,407 --> 00:33:13,158 யாரும் காவல் காக்கறதா தெரியல. 418 00:33:13,242 --> 00:33:15,285 அமைதியா இருக்கு. நிதானி. 419 00:33:16,787 --> 00:33:17,788 நீ. 420 00:33:17,871 --> 00:33:20,207 சும்மா சுத்தாம, கூரை மேல ஏறு. 421 00:33:20,290 --> 00:33:22,126 மர கோட்டை கண்காணி. 422 00:33:22,209 --> 00:33:24,545 எனக்கு உத்தரவு போட நீ யாரு? 423 00:33:24,628 --> 00:33:25,754 வாயை மூடிட்டு செய். 424 00:33:26,964 --> 00:33:28,465 அப்புறமா உங்கிட்ட வர்றேன். 425 00:33:28,549 --> 00:33:32,428 ஹேய்! உள்ளே போ. பத்திரமானதும் சொல்வோம். 426 00:33:32,511 --> 00:33:34,221 நீ இவளோட அப்பாவா என்ன? 427 00:33:34,304 --> 00:33:35,681 அவனை திசைதிருப்பறா. 428 00:33:35,764 --> 00:33:37,683 அவங்கூட அப்புறம் கொஞ்சலாம். 429 00:33:37,766 --> 00:33:41,228 நீ நெருக்கினா, என் ஆளுங்க நெருக்குவாங்க. அவங்களை சொல்லாதே. 430 00:33:41,311 --> 00:33:43,814 இந்த கிரகத்தை விட்டு போனதும், நட்பாவோம். 431 00:33:43,897 --> 00:33:44,732 சரி. 432 00:33:47,234 --> 00:33:48,777 மது பெட்டியை திறந்தேன். 433 00:33:50,612 --> 00:33:51,572 கல்லை வைத்து. 434 00:33:53,407 --> 00:33:54,241 நன்றி. 435 00:34:02,583 --> 00:34:05,419 நீ போன தடவை கிளம்பினப்போ, மகிழ்ச்சியா போனே. 436 00:34:07,004 --> 00:34:08,464 முதலில் அப்படியில்ல. 437 00:34:08,547 --> 00:34:09,631 என்ன மாறியது? 438 00:34:11,675 --> 00:34:13,093 என் இடம் தெரிஞ்சது. 439 00:34:14,970 --> 00:34:15,971 அருமை. 440 00:34:22,436 --> 00:34:25,898 பால்டிமோரில் பிழைக்க கற்பதில் என் வாழ்க்கை முழுக்க போனது. 441 00:34:27,316 --> 00:34:29,485 நான் தெரு பொறுக்கின்னு நினைக்கிறேன். 442 00:34:29,568 --> 00:34:30,986 ஆனா புரிஞ்சுகிட்டேன். 443 00:34:32,196 --> 00:34:33,405 இப்ப எல்லாம் போச்சு. 444 00:34:35,365 --> 00:34:36,950 அந்த சிந்தனை நினைவிருக்கு. 445 00:34:39,953 --> 00:34:43,749 எல்லாத்தையும் விட்டு மீண்டும் தொடங்க இஷ்டமில்லை. 446 00:34:45,959 --> 00:34:47,753 நானும் சிந்திச்ச நினைவிருக்கு. 447 00:34:49,129 --> 00:34:51,673 திரும்பின எனக்கு பால்டிமோரின் பாடம் தெரியுமா? 448 00:34:51,757 --> 00:34:52,758 என்ன? 449 00:34:52,883 --> 00:34:54,718 யாரும் மீண்டும் தொடங்கறதில்ல. 450 00:34:55,761 --> 00:34:58,388 ஏன்னா யாரும் எதையும் விட்டு போறதில்ல. 451 00:35:08,982 --> 00:35:10,275 அய்யோ! 452 00:35:11,777 --> 00:35:13,362 மின்சார இணைப்பு தான். 453 00:35:15,989 --> 00:35:16,990 என்ன? 454 00:35:19,117 --> 00:35:21,328 முழு நேரமும் என் முன்னால் இருந்தது. 455 00:35:21,411 --> 00:35:25,332 ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க அதை நினைப்பதை நிறுத்தணும். 456 00:35:25,833 --> 00:35:29,878 எல்லாத்தையும் நாம் இயக்கினாலும், இந்த தீவில் உள்ல எல்லாரையும் 457 00:35:29,962 --> 00:35:33,215 சுமந்து மேலேற இந்த கலத்தில் வேகம் இருக்குமா தெரியல. 458 00:35:33,298 --> 00:35:35,717 ட்ரைபை வளர்க்கிறோம். 459 00:35:35,801 --> 00:35:36,718 என்ன? 460 00:35:36,802 --> 00:35:38,804 மனிதர்களை ட்ரைப்கள் என்பான் ஏமஸ். 461 00:35:38,887 --> 00:35:41,473 கேடுகாலத்தில், ட்ரைப்கள் சுருங்கும். 462 00:35:41,557 --> 00:35:45,310 அப்படித்தான் அது நடக்கும். அவன் சொல்றதை கேள். 463 00:35:45,394 --> 00:35:47,521 கேட்டேன். அவன் சரியா சொல்றான், 464 00:35:48,647 --> 00:35:49,857 ஆனா தப்பா சொல்றான். 465 00:35:49,940 --> 00:35:52,526 வழியில் சொன்னான், நானும் அவனும் இருநபர் ட்ரைப். 466 00:35:53,193 --> 00:35:56,071 ஆனால் உங்களோட இணையலன்னா, செத்திருப்போம். 467 00:35:56,154 --> 00:35:59,283 ட்ரைப் கூடியதால் பலசாலிகள் ஆனோம். 468 00:35:59,366 --> 00:36:03,704 பணிப்பெண், சிப்பந்திகள் சேர்ந்தா குழுவுக்கு என்ன நன்மைன்னு தெரியல. 469 00:36:04,162 --> 00:36:05,539 அது முக்கியமா? 470 00:36:05,622 --> 00:36:08,876 உதவி தேவைப்படற மக்களா இருந்தா போதும். 471 00:36:08,959 --> 00:36:12,254 நம் ட்ரைபில் எல்லாரையும் சேர்க்க முடிவெடுத்தா 472 00:36:12,337 --> 00:36:15,215 நமக்கு அவங்க அவசியம்னு நிரூபிக்க கேட்காம இருந்தோம்னா, 473 00:36:15,299 --> 00:36:19,428 நம் மேல மக்கள் கல் எறிஞ்சிருக்க மாட்டாங்க. 474 00:36:19,511 --> 00:36:23,348 கடவுளே. டிம்மி உன்னை எங்கே கண்டுபிடிச்சான்? 475 00:36:25,517 --> 00:36:28,645 பல கொலைகளுக்கு ஆயுள் தண்டனை அனுபவிச்சுட்டு இருந்தேன். 476 00:36:31,565 --> 00:36:35,611 புரிஞ்சது. மின்சாரத்தை எல்லாம் மோசமான மின் இணைப்பு நிறுத்தியது. 477 00:36:35,694 --> 00:36:37,446 இழுத்து பக்கவாட்டில் விட்டேன். 478 00:36:37,529 --> 00:36:40,407 அதிகப்படியான எடை விண்கலத்தை எரிக்காம இருக்கணும். 479 00:36:40,490 --> 00:36:42,242 இரு. அதை பரிசோதிக்கறேன். 480 00:36:46,830 --> 00:36:48,457 வேலை செஞ்சது. 481 00:36:48,540 --> 00:36:51,335 இங்கே சரிபார்க்கிறேன். மேலேற தயாராகுங்க. 482 00:36:51,418 --> 00:36:53,420 இங்கிருந்து வெளியேறுவோம். 483 00:36:53,503 --> 00:36:57,424 15 நிமிஷத்தில் கிளம்புவோம். விண்கலத்தில் இல்லாதவங்க வர முடியாது. 484 00:37:08,727 --> 00:37:10,938 வா, வா. போலாம். 485 00:37:13,690 --> 00:37:15,817 ஏன் தாமதம்? போலாம். 486 00:37:15,901 --> 00:37:19,154 பிரச்சனை வந்தது. தியோ, தெரியுதா? 487 00:37:19,237 --> 00:37:22,616 மரங்களில் நடமாட்டம் உறுதியா இருக்கு. தெளிவா தெரியல... 488 00:37:24,034 --> 00:37:24,868 மறைமுக சுடுபவன்! 489 00:37:24,952 --> 00:37:27,371 -பாதுகாப்பா இருங்க! -அங்கே! திரும்ப சுடு! 490 00:37:27,454 --> 00:37:28,872 படுத்து தொலை! 491 00:37:42,469 --> 00:37:43,345 அய்யோ! 492 00:37:53,480 --> 00:37:55,607 எல்லாரும் உட்காருங்க. பெல்ட் போடு. 493 00:37:55,691 --> 00:37:58,402 எல்லாரையும் விண்கலத்தில் ஏத்து. வாங்க, போலாம். 494 00:38:06,535 --> 00:38:07,369 நன்றி. 495 00:38:07,828 --> 00:38:12,457 அவசியம்னா தரையில் படுங்க. மேலேறும் போது மயக்கமாவீங்க. 496 00:38:15,252 --> 00:38:18,296 விளக்குகளை அணை, தாக்கும் யாரையும் சுடு. 497 00:38:20,674 --> 00:38:22,300 இப்போ போறோம்! 498 00:38:26,346 --> 00:38:28,056 போ! போ, போ! 499 00:38:35,397 --> 00:38:36,773 வா! 500 00:38:37,899 --> 00:38:39,192 போ, போ! 501 00:38:40,360 --> 00:38:42,279 -போ! -அவனை விடு! செத்தான்! 502 00:39:02,049 --> 00:39:02,883 அவ்ளோ தான். 503 00:39:10,265 --> 00:39:12,392 பின்னாடி போ! பின்னாடி போ! 504 00:39:12,476 --> 00:39:13,310 போ! 505 00:39:18,648 --> 00:39:20,525 இரு பக்கத்திலும் சூழ்ந்தாங்க! 506 00:39:27,365 --> 00:39:28,325 உன்னை பிடிச்சேன்! 507 00:39:35,499 --> 00:39:37,793 -நலமா? -நலம் தான். போ, போ! 508 00:39:53,100 --> 00:39:55,185 எரிக், போ! 509 00:40:02,776 --> 00:40:04,945 எல்லாரையும் கொன்னாளா? வெறும் கையால? 510 00:40:05,028 --> 00:40:07,614 இனிமே அவ கிட்ட பண்பா நடந்துப்பேன். 511 00:40:08,156 --> 00:40:08,990 தடையில்ல! 512 00:40:13,036 --> 00:40:15,038 இவளை உள்ளே கூட்டிப் போ! பறக்க தயாராகு. 513 00:40:16,748 --> 00:40:18,625 உன்னை விட்டு போக மாட்டேன். 514 00:40:36,935 --> 00:40:38,478 அவங்க நெருங்கறாங்க! 515 00:40:41,982 --> 00:40:43,400 வா, போலாம்! 516 00:40:45,694 --> 00:40:46,862 நாம போகணும்! 517 00:41:02,210 --> 00:41:03,211 ஏமஸ்! 518 00:41:23,940 --> 00:41:24,900 மேலேறு! 519 00:41:32,407 --> 00:41:36,161 செலுத்தல் தொடக்கம். ஹாங்கர் கதவுகள் திறக்கும் வரை பொறுக்கவும். 520 00:41:36,244 --> 00:41:37,078 ஒழியட்டும்! 521 00:41:37,162 --> 00:41:37,996 எச்சரிக்கை இணவு ட்ரைவ் இயக்கம் 522 00:43:48,752 --> 00:43:50,003 நான் உள்ளே வரலாமா? 523 00:43:51,671 --> 00:43:52,672 நிச்சயமா. 524 00:44:06,770 --> 00:44:09,147 நீ தனிமையாவே இருக்கே. 525 00:44:09,230 --> 00:44:11,441 நீங்க பார்க்க விரும்பலனு நினைச்சேன். 526 00:44:12,942 --> 00:44:14,736 உண்மையை சொன்னா, 527 00:44:17,030 --> 00:44:18,198 நான் விரும்பல. 528 00:44:25,789 --> 00:44:27,123 -சாரி. -நானும் சாரி. 529 00:44:30,960 --> 00:44:32,796 நீங்க சாரி சொல்ல அவசியமில்ல. 530 00:44:33,171 --> 00:44:34,547 அது பொய்னு தெரியும். 531 00:44:34,631 --> 00:44:38,009 இல்ல! நான் நயோமியை கூட்டி வந்தேன், 532 00:44:38,927 --> 00:44:41,096 ஏன்னா நான் நினைச்சேன்... 533 00:44:44,307 --> 00:44:45,725 இப்போ அவங்க இறந்தாங்க. 534 00:44:50,814 --> 00:44:52,524 சின் இறந்துட்டார். 535 00:44:54,943 --> 00:44:55,985 எல்லாம் என்னால. 536 00:44:56,069 --> 00:44:57,278 உயிரோட இருக்கா. 537 00:45:01,116 --> 00:45:02,117 என்னது? 538 00:45:03,284 --> 00:45:05,286 உன் அம்மா உயிரோட இருக்கா. 539 00:45:08,164 --> 00:45:11,418 ஆனா அவங்களை பார்த்தேனே. 540 00:45:11,501 --> 00:45:13,461 வெளியே சீருடை இல்லாம. 541 00:45:13,545 --> 00:45:17,924 எப்படியோ த செட்ஸெமோகாவுக்கு ஹார்ட் வேக்யும் பாதையில் போனாள் 542 00:45:18,007 --> 00:45:20,176 அது கிளம்பும் முன். 543 00:45:20,969 --> 00:45:22,720 இப்போ அதில் இருக்காள். 544 00:45:23,888 --> 00:45:29,602 அவ சோகத்தினாலோ துயரத்தினாலோ ஏர் லாக்குக்குள் நடக்கலை. 545 00:45:30,520 --> 00:45:32,355 குற்ற உணர்வுமில்லை. 546 00:45:34,524 --> 00:45:37,193 அவ தற்கொலை செய்ய நினைக்கல. 547 00:45:38,361 --> 00:45:41,364 தப்பிக்க பார்த்தாள். 548 00:45:58,006 --> 00:45:59,424 நம்மை விட்டுப் போனாள். 549 00:46:07,015 --> 00:46:09,434 நம்ம இருவரையும் விட்டு போனாள். 550 00:46:11,478 --> 00:46:12,479 மறுபடியும். 551 00:46:15,148 --> 00:46:18,234 இல்ல! இல்ல! 552 00:51:37,303 --> 00:51:39,305 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 553 00:51:39,388 --> 00:51:41,390 படைப்பு மேற்பார்வையாளர்: பி. கே. சுந்தர்.