1 00:00:14,348 --> 00:00:17,976 நியூ ஆர்லியன்ஸ் நகரம் மிகவும் சேதமடைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. 2 00:00:18,060 --> 00:00:22,022 சந்தேகமே இல்லை. கத்ரீனா புயல் நியூ ஆர்லியன்ஸை கடுமையாக புரட்டிப்போட்டிருக்கிறது. 3 00:00:22,105 --> 00:00:23,106 ஆனால் அது... 4 00:00:23,190 --> 00:00:26,568 கத்ரீனா புயல் கரையைக் கடப்பதற்கு சற்று முன்பு கிழக்கு நோக்கி நகர்ந்தது, 5 00:00:26,652 --> 00:00:28,153 அதனால் நியூ ஆர்லியன்ஸ் தப்பித்தது. 6 00:00:28,237 --> 00:00:32,616 இது பலரும் பயந்த பேரழிவை உண்டாக்கும் புயல் அல்ல. 7 00:00:35,410 --> 00:00:38,455 முதல் நாளுக்குப் பிறகு நிலைமை என்னவாக இருந்தது? 8 00:00:38,539 --> 00:00:42,501 நிலைமையா? நிலைமை நன்றாக இருந்தது. 9 00:00:42,584 --> 00:00:45,295 புயலின் பெரும்பகுதி, மிக மோசமான புயல் நகரத்தைத் தாக்கவில்லை, 10 00:00:45,379 --> 00:00:48,465 அதோடு நாங்கள் உயிருடன் இருந்தோம். 11 00:00:48,549 --> 00:00:51,718 மருத்துவமனையில் இருந்தபோதான மனநிலையை உங்களால் கற்பனை செய்ய முடியாது. 12 00:00:51,802 --> 00:00:55,222 நள்ளிரவில், ஜன்னல்கள் உடைகின்றன, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. 13 00:00:57,140 --> 00:01:00,143 பிறகு அடுத்த நாள், ஜெனரேட்டர்கள் இயங்க தொடங்கின, 14 00:01:00,227 --> 00:01:01,895 வானம் தெளிவாக இருந்தது. 15 00:01:01,979 --> 00:01:03,105 வெயில் பிரகாசமாக இருந்தது. 16 00:01:03,188 --> 00:01:04,313 எல்லோரும்... 17 00:01:05,941 --> 00:01:10,696 அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் நன்றியுடனும் இருந்தனர். 18 00:01:12,364 --> 00:01:14,324 கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது. 19 00:01:14,408 --> 00:01:18,537 -எதற்காக சங்கடம்? -பலர் மிகைப்படுத்தி பேசினார்கள். 20 00:01:19,454 --> 00:01:21,081 எங்களில் சிலர் கத்ரீனா புயல் மிகவும் அரிதாக 21 00:01:21,164 --> 00:01:25,043 நடக்கும் ஒரு பேரழிவாக இருக்கப் போகிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம், 22 00:01:25,127 --> 00:01:26,837 அது அப்படி நடக்கவில்லை. 23 00:01:28,046 --> 00:01:29,256 புயல் தாக்கவில்லை. 24 00:01:31,341 --> 00:01:33,552 டாக்டர் பௌ இரண்டாம் நாள் எப்படி இருந்தார்? 25 00:01:34,636 --> 00:01:36,388 டாக்டர் பௌ நன்றாக இருந்தார். 26 00:01:37,055 --> 00:01:39,892 மிகைப்படுத்தினார்கள் என்று நீங்கள் சொன்னதால், 27 00:01:39,975 --> 00:01:43,395 மக்கள் எப்படி பட்டவர்கள் என்பது பற்றி நீங்கள் இருவரும் ஏதாவது பேசினீர்களா... 28 00:01:43,478 --> 00:01:46,106 -எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியும். -இல்லை. நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 29 00:01:46,190 --> 00:01:48,233 மக்கள் மிகைப்படுத்தி இருந்தால், 30 00:01:48,317 --> 00:01:50,569 மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பது பற்றி 31 00:01:50,652 --> 00:01:53,488 நீங்களும் டாக்டர் பௌவும் என்ன பேசியிருப்பீர்கள்? 32 00:01:53,572 --> 00:01:56,575 டாக்டர் பௌவிடம் பேசினீர்களா? 33 00:02:02,122 --> 00:02:04,249 இதை உங்களிடம் சொல்கிறேன். 34 00:02:04,333 --> 00:02:06,543 இரண்டாம் நாள் நிலைமை மிகவும் அமைதியாக இருந்தபோது, 35 00:02:06,627 --> 00:02:09,045 டாக்டர் பௌ மருத்துவமனையைவிட்டு போயிருக்கலாம். 36 00:02:09,128 --> 00:02:12,966 அவர் தங்க விரும்பியதால் இருந்தார். அவரது நோயாளிகளுக்காக அவர் தங்க விரும்பினார். 37 00:02:15,719 --> 00:02:19,723 அவரது மனநிலையைப் பொறுத்த வரையில், எங்கள் மனநிலையைப் பொறுத்த வரையில், 38 00:02:21,308 --> 00:02:25,521 புயலில் உயிர் தப்பிய பிறகு, எங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்று நினைத்தோம். 39 00:02:27,356 --> 00:02:28,524 நாங்கள் நினைத்தது தவறு. 40 00:02:29,942 --> 00:02:31,151 கடவுளே, நாங்கள் நினைத்தது தவறு. 41 00:02:58,428 --> 00:03:03,600 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 42 00:03:05,018 --> 00:03:10,065 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 43 00:03:11,149 --> 00:03:15,946 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 44 00:03:16,029 --> 00:03:21,243 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 45 00:03:21,326 --> 00:03:25,914 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 46 00:03:25,998 --> 00:03:31,295 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 47 00:03:31,378 --> 00:03:35,382 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 48 00:03:36,341 --> 00:03:41,263 மனிதன் தண்ணீரில் இறங்கினான், கடவுளே 49 00:03:41,346 --> 00:03:45,517 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 50 00:03:46,351 --> 00:03:50,022 பிரார்த்தனை செய்ய இறங்கிச் சென்றான் 51 00:03:51,648 --> 00:03:55,485 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 52 00:03:56,737 --> 00:04:01,575 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 53 00:04:01,658 --> 00:04:03,076 ஷெரி ஃபின்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 54 00:04:03,160 --> 00:04:05,537 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 55 00:04:06,246 --> 00:04:11,251 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 56 00:04:16,380 --> 00:04:22,387 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 57 00:04:27,559 --> 00:04:30,020 நாள் இரண்டு 58 00:04:37,361 --> 00:04:38,820 தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது, 59 00:04:38,904 --> 00:04:40,697 ஆனால் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 60 00:04:42,866 --> 00:04:48,247 சில ஜன்னல்கள் உடைந்துவிட்டன, ஆனால் உடைந்த கண்ணாடிகள் இருப்பதால் கவனமாக இருங்கள். 61 00:04:48,330 --> 00:04:51,083 ஆனால் அதை தவிர, கட்டிடத்துக்கு பெரிய சேதாரம் எதுவுமில்லை. 62 00:04:51,166 --> 00:04:54,586 நீங்கள் ஒவ்வொருவரும் அபாரமான வேலையை செய்திருக்கிறீர்கள். 63 00:04:54,670 --> 00:04:56,463 -நன்றி. -அருமை. 64 00:04:58,131 --> 00:05:01,468 சூசன்? வெளியில் உள்ள தண்ணீர்? 65 00:05:01,552 --> 00:05:03,887 அது 18-அங்குல அளவை தாண்டி கீழே சென்றுவிட்டது. 66 00:05:03,971 --> 00:05:06,348 எனவே, விரைவில் வெள்ளம் வடிய தொடங்கும். 67 00:05:06,431 --> 00:05:09,393 அதோடு, நமது தொலைபேசி இணைப்புகளில் இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன, 68 00:05:09,476 --> 00:05:11,019 ஆனால் அது சேவை வழங்கும் நிறுவனத்தின் பிரச்சினை. 69 00:05:11,103 --> 00:05:14,398 எனவே, தொலைபேசி நிறுவனம் பழுதை சரிசெய்ய தொடங்கும் வரை... 70 00:05:14,481 --> 00:05:16,024 குளிர்சாதன அமைப்பு என்ன ஆனது? 71 00:05:16,108 --> 00:05:17,192 அது எங்கள் கையில் இல்லை. 72 00:05:17,276 --> 00:05:20,279 குளிர்சாதன அமைப்பு நகர மின்சாரத்தில் இயங்கியது, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 73 00:05:20,362 --> 00:05:22,447 இப்போது பேக்கப் ஜெனரேட்டர்கள் உதவியுடன் இயங்குகிறது, 74 00:05:22,531 --> 00:05:25,367 ஆனால் நகர மின்சாரம் மீண்டும் வரும்வரை தாக்குப்பிடிக்க வேண்டும். 75 00:05:25,450 --> 00:05:28,954 வெப்பமாக இருப்பது தெரியும், அது இன்னும் அதிகரிக்கப் போகிறது. 76 00:05:29,037 --> 00:05:32,124 எனவே நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள். 77 00:05:32,207 --> 00:05:35,085 நோயாளிகளுக்கும், குடும்பங்களுக்கும், தங்கியவர்களுக்கும் அதேதான். 78 00:05:35,169 --> 00:05:37,963 எல்லோருக்கும் தண்ணீர் கொடுங்கள். சரியா? 79 00:05:38,046 --> 00:05:39,047 சரி. 80 00:05:39,631 --> 00:05:41,884 சரி. அவ்வளவுதான். 81 00:05:41,967 --> 00:05:43,343 மீண்டும் நன்றி. 82 00:05:43,427 --> 00:05:44,636 நன்றி. 83 00:05:49,725 --> 00:05:52,144 உங்களில் பலர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியும், 84 00:05:52,227 --> 00:05:54,313 எனவே வீட்டை சென்று பார்க்க விரும்பினால், 85 00:05:54,396 --> 00:05:58,025 நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதை அனுமதி பிரிவில் மறக்காமல் சொல்லுங்கள். 86 00:05:58,108 --> 00:06:00,235 முதலில் நோயாளிகளை சென்று பாருங்கள், சரியா? 87 00:06:03,780 --> 00:06:05,157 கடவுளே. கதவை மூட வேண்டாம். 88 00:06:05,782 --> 00:06:06,783 கொஞ்சம் பொறு. 89 00:06:07,618 --> 00:06:08,744 நல்ல அபாரமான பேச்சு. 90 00:06:09,536 --> 00:06:12,456 நிஜமாகத்தான் சொன்னேன். அவர்கள் புயலிலிருந்து தப்பித்திருக்கிறார்கள். 91 00:06:12,539 --> 00:06:15,042 எந்த நோயாளியும் இறக்கவில்லை. அவர்கள் பெருமைப்பட வேண்டும். 92 00:06:15,959 --> 00:06:17,794 இப்போது புயல் முடிந்துவிட்டதால், 93 00:06:17,878 --> 00:06:21,215 கட்டிடத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி யாராவது பேசினார்களா? 94 00:06:21,298 --> 00:06:24,510 இங்கு தங்கிய மக்கள், மருத்துவ உதவி தேவைப்படாத நோயாளிகளின் எண்ணிக்கையா? 95 00:06:25,761 --> 00:06:30,224 நகர மின்சாரம் இன்னும் வரவில்லை என்றால், யாரும் வெளியேற விரும்பமாட்டார்கள். 96 00:06:30,307 --> 00:06:31,767 அவர்களுக்கு எந்த போக்கிடமும் இல்லாமல் இருக்கலாம். 97 00:06:31,850 --> 00:06:34,394 கட்டிடத்திற்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்பதால், இங்கே... 98 00:06:34,478 --> 00:06:36,688 வெளியே என்ன நடக்கிறது என்று தெளிவான தகவல் கிடைக்கும் வரை, 99 00:06:36,772 --> 00:06:42,027 கட்டாய வெளியேற்றம் என்ற கருத்தை, ம், மற்றவர்கள் முன்பு பேசாமல் இருப்போம். 100 00:06:42,736 --> 00:06:44,196 மக்கள் கவலையில் உள்ளனர். 101 00:06:44,821 --> 00:06:45,948 சரி. 102 00:06:50,536 --> 00:06:51,745 இப்போது கதவை திறக்கலாமா? 103 00:06:53,789 --> 00:06:55,749 புயல் தாக்குவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே 104 00:06:55,832 --> 00:06:58,961 பெரும்பாலான நியூ ஆர்லியன்ஸ் மக்கள் மேடான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 105 00:06:59,044 --> 00:07:03,257 அது ஏனென்றால் பெரும்பான்மையான நியூ ஆர்லியன்ஸ் நகரில் எளிதாக வெள்ளம் சூழ்ந்துவிட்டது. 106 00:07:03,340 --> 00:07:04,758 மிகவும் பாதிப்படையக்கூடிய நிலையில் இருந்திருக்கிறது. 107 00:07:04,842 --> 00:07:06,510 பேரழிவு உண்டாக்கும் காற்றோடு சேர்ந்து, 108 00:07:06,593 --> 00:07:09,304 அது பரவலான சேதத்தை உருவாக்கிவிட்டது. 109 00:07:11,974 --> 00:07:13,225 என்ன செய்கிறீர்கள்? 110 00:07:15,227 --> 00:07:18,605 ஒரு வதந்தியை கேள்விப்பட்டேன். 111 00:07:21,066 --> 00:07:24,027 என் முன்னால் காதலன், மயக்க மருந்து நிபுணர் இங்கே பணியாற்ற தொடங்கிவிட்டான் என்று. 112 00:07:24,778 --> 00:07:26,530 அவன் இந்த கோலத்தில் என்னைப் பார்த்தால் என் துரதிர்ஷ்டம் தான். 113 00:07:26,613 --> 00:07:29,575 புயலடித்தது. அவர் நல்ல நிலைமையில் இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். 114 00:07:30,450 --> 00:07:31,910 அவனுடைய தோற்றம் பற்றி எனக்குக் கவலையில்லை. 115 00:07:31,994 --> 00:07:34,663 நான் எப்படி இருக்கிறேன் என்பதுதான் என் கவலை. அதோடு நான் அசிங்கமாக இருக்க மாட்டேன். 116 00:07:39,209 --> 00:07:42,713 நம்ப முடிகிறதா? மேக்கப் போடுகிறார், ஏனென்றால் இவரது முன்னால் காதலர் இங்கே வேலை செய்கிறாராம். 117 00:07:43,547 --> 00:07:45,340 இவர் ஏன் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை. 118 00:07:45,924 --> 00:07:49,344 அந்த நபர் நான் நினைப்பவராக இருந்தால், இவர் தோற்றத்தைப் பார்த்து காதலிப்பவர் அல்ல. 119 00:07:49,428 --> 00:07:51,805 அப்படியா? இவரது கணவர் எப்படி இருப்பார் என்பதை பார்க்க விரும்புகிறேன். 120 00:07:52,264 --> 00:07:54,600 நேற்றைய நிகழ்வுக்குப் பிறகு, கொஞ்சம் சிரிப்பது நல்லதுதான். 121 00:08:13,452 --> 00:08:16,622 நீங்கள் கேரியை அழைத்திருக்கிறீர்கள். விரைவில் உங்களை திரும்ப அழைக்கிறேன். 122 00:08:18,248 --> 00:08:21,251 எம்மெட். இன்று காலை எப்படி இருக்கிறீர்கள்? 123 00:08:23,128 --> 00:08:24,630 நன்றாக இருக்கிறேன். 124 00:08:26,381 --> 00:08:27,674 நிஜமாகவா? 125 00:08:27,758 --> 00:08:32,095 ஆம். என் மனைவியை அழைக்க முயற்சிக்கிறேன். 126 00:08:32,179 --> 00:08:33,472 அவளை தொடர்புகொள்ள முடியவில்லை. 127 00:08:34,264 --> 00:08:36,975 சரி, வெளியே இன்னும் நிலைமை சீரடையவில்லை. 128 00:08:37,058 --> 00:08:38,393 எனவே எங்களுக்கு விவரம் தெரியும்வரை... 129 00:08:38,477 --> 00:08:42,648 எங்களை மீண்டும் ஷால்மெட்டிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள் தானே? 130 00:08:43,690 --> 00:08:46,902 ஆம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. 131 00:08:46,985 --> 00:08:49,905 அந்த குழப்பத்தில் என் மனைவி என்னை தொடர்புகொள்ள முடியாததை விரும்பவில்லை. 132 00:08:51,949 --> 00:08:55,494 எம்மெட், உங்கள் மனைவி என் மீது கோபப்பட வைக்க முயற்சிக்கவில்லை. 133 00:08:57,287 --> 00:09:00,666 நாம் இங்கிருந்து கிளம்பியதும் தனிப்பட்ட முறையில் கேரியை அழைத்து விஷயத்தைச் சொல்கிறேன். 134 00:09:01,708 --> 00:09:02,709 நன்றி. 135 00:09:05,045 --> 00:09:06,046 நீங்கள் நன்றாக இருங்கள். 136 00:09:14,638 --> 00:09:15,889 எப்படி இருக்கிறாய்? 137 00:09:15,973 --> 00:09:17,432 நான் என் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். 138 00:09:17,516 --> 00:09:20,727 தண்ணீர் அந்த தடுப்புக்கு மேல் வருமா வராதா என்று எனக்குத் தெரியவில்லை. 139 00:09:20,811 --> 00:09:22,563 தெரியவில்லை... வராது என்று சொன்னார்கள். 140 00:09:23,063 --> 00:09:25,065 புயல் நம்மைத் தாக்கவில்லை. 141 00:09:25,148 --> 00:09:27,651 -நீ சொல்வது கேட்கவில்லை. -கிழக்கு நோக்கி போய்விட்டது. 142 00:09:28,652 --> 00:09:30,112 எனவே ஏரியின் தடுப்பைத் 143 00:09:30,195 --> 00:09:31,738 தாண்டி தண்ணீர் வரும் தகவல் உனக்குத் தெரியாதா? 144 00:09:31,822 --> 00:09:33,407 தெரியாது. நான் சென்று பார்க்கிறேன். 145 00:09:33,490 --> 00:09:36,201 என் இரண்டு மாடி வீட்டில் தண்ணீரின் அளவு உயரத் தொடங்கியதால், 146 00:09:36,285 --> 00:09:37,286 நான் வெளியேற வேண்டும், நண்பா. 147 00:09:37,369 --> 00:09:39,663 -அது எங்கே இருக்கிறது? -அங்கே... 148 00:09:39,746 --> 00:09:41,373 லைஃப்கேர் மருத்துவமனை 149 00:09:42,499 --> 00:09:46,211 தரையில் பார்த்து வா. தண்ணீர் இன்னும் வந்துகொண்டிருக்கிறது. 150 00:09:47,462 --> 00:09:49,214 யாரையாவது இங்கு அனுப்புகிறார்களா? 151 00:09:49,298 --> 00:09:50,674 யார் யாரை அனுப்புகிறார்கள்? 152 00:09:51,675 --> 00:09:54,386 மெமோரியல். தண்ணீரையும் மற்றவற்றையும் கவனிக்கவா? 153 00:09:54,469 --> 00:09:56,346 ஷால்மெட்டில் எப்படி இயங்குகிறீர்கள் என்று தெரியவில்லை, 154 00:09:56,430 --> 00:09:59,516 ஆனால் இங்கே, ஒரே கட்டிடத்தில் இரண்டு மருத்துவமனைகள். 155 00:09:59,600 --> 00:10:01,560 லைஃப்கேர், நாங்கள் தனிப்பட்ட முறையில் இயங்குகிறோம். 156 00:10:01,643 --> 00:10:05,189 நேற்று இரவு ஒருவர் கூட மெமோரியலிலிருந்து எங்களைப் பார்க்க வரவில்லை. 157 00:10:08,025 --> 00:10:09,484 மனிதநேயமற்ற செயல். 158 00:10:09,568 --> 00:10:11,653 எப்போதாவது ஷால்மெட்டிற்கு இடமாற்ற விரும்பினால், சொல்லுங்கள். 159 00:10:12,446 --> 00:10:14,281 எப்போது இடமாற்றம் செய்கிறீர்கள் என்ற தகவலை தெரியப்படுத்துங்கள். 160 00:10:14,364 --> 00:10:16,074 எங்களிடம் அன்பாக நடந்துகொள்கிறீர்கள், அதை வரவேற்கிறேன். 161 00:10:17,034 --> 00:10:19,119 அடுத்த புயலின் போது, விடுமுறை எடுத்துக்கொள்வேன். 162 00:10:19,203 --> 00:10:20,120 சரியா? 163 00:10:20,621 --> 00:10:22,247 நாம் பார்ப்பது என்ன? 164 00:10:23,457 --> 00:10:24,458 -நன்றி. -சரி. 165 00:10:24,541 --> 00:10:28,128 ...திருட்டு பற்றிய புகார்கள். ஒருவர் வெஸ்ட்பேங்க்கிலிருந்து அழைத்து 166 00:10:28,212 --> 00:10:32,716 மக்கள் உள்ளே நுழைந்து தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியே ஓடுகிறார்கள் என்றார். 167 00:10:32,799 --> 00:10:35,427 சுற்றித்திரிந்து எதையாவது பார்க்க வாய்ப்பு கிடைத்த யாராவது, 168 00:10:35,511 --> 00:10:38,555 நீங்கள் எல்லோரும் சிபிடி-க்கு வந்து பார்த்தால்... 169 00:10:38,639 --> 00:10:40,140 அதாவது, இந்த இடம் பெய்ரூட் போல காட்சியளிக்கிறது. 170 00:10:40,224 --> 00:10:42,684 தண்ணீரில் மூழ்கிய பெய்ரூட் போல காட்சியளிக்கிறது. 171 00:10:42,768 --> 00:10:45,103 எனவே, இராணுவத்தினர், 172 00:10:45,187 --> 00:10:47,814 முழு இராணுவ உடையில், ப்பாக்கிகளுடன் தயாராக, 173 00:10:47,898 --> 00:10:49,816 வலம் வருகிறார்கள் என்பது 174 00:10:49,900 --> 00:10:52,361 இந்த நிலையில் விரும்பத்தகாத ஒன்றுதான். 175 00:10:52,444 --> 00:10:53,779 ஆனால் அதுவும்தான் இருக்கப் போகிறது. 176 00:10:59,493 --> 00:11:00,661 சரி, இதோ. 177 00:11:04,915 --> 00:11:08,252 எப்படி இருக்கிறது? நன்றாகவா? இன்னும் கொஞ்சம் கொடுக்கிறேன், சரியா? 178 00:11:08,877 --> 00:11:10,003 இதோ. 179 00:11:10,838 --> 00:11:13,173 சரி. 180 00:11:15,342 --> 00:11:16,927 ஏஞ்சலா, நன்றாக இருக்கிறீர்களா? 181 00:11:17,886 --> 00:11:21,056 நன்றாக இருக்கிறோம். குளிரூட்டிக்கு ஏதாவது ஏற்பாடு செய்கிறார்களா? 182 00:11:22,182 --> 00:11:23,392 நகர மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 183 00:11:24,852 --> 00:11:29,273 உன் அம்மா சௌகரியமாக இல்லை என்று தெரியும், ஆனால் இவர் போராடக்கூடியவர். 184 00:11:30,065 --> 00:11:31,149 ஆம். 185 00:11:32,025 --> 00:11:35,737 தொடர்ந்து தண்ணீர் கொடு. தேவைப்பட்டால் ஈரத் துண்டைப் பயன்படுத்து. 186 00:11:35,821 --> 00:11:36,864 செய்துகொண்டு தான் இருந்தேன். 187 00:11:37,614 --> 00:11:39,908 விரைவில் குளிரூட்டியை சரிசெய்து விடுவார்கள். 188 00:11:39,992 --> 00:11:40,993 சரி. 189 00:11:44,037 --> 00:11:45,539 -நன்றி, டயன். -சரி. 190 00:11:52,129 --> 00:11:55,215 எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். 191 00:11:55,299 --> 00:11:56,300 எல்லாம் நன்றாக இருக்கிறது. 192 00:11:56,383 --> 00:12:00,262 நீ துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்ததாக யாரோ என்னிடம் சொன்னார்கள். 193 00:12:00,345 --> 00:12:02,514 -நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன். -அது அவர்களை அசௌகரியப்படுத்துகிறது. 194 00:12:02,598 --> 00:12:05,559 துப்பாக்கி வைத்திருக்க என்னிடம் உரிமம் இருக்கிறது. அது எனது உரிமை. 195 00:12:05,642 --> 00:12:09,104 இவ்வுலகில் உன்னை நீ தற்காத்துக்கொள்ள எல்லா உரிமையும் இருக்கிறது. 196 00:12:09,188 --> 00:12:12,024 ஆனால் இது ஒரு செயல்பாடும் மருத்துவமனை. 197 00:12:12,107 --> 00:12:16,695 நீ அவர்களுக்கு என்ன மாதிரி எடுத்துக்காட்டாக இருப்பாய் என்பதை யோசித்து பார். 198 00:12:18,614 --> 00:12:19,740 கண்டிப்பாக. சரி. 199 00:12:20,866 --> 00:12:22,075 நன்றி, விங். 200 00:12:28,373 --> 00:12:29,291 டாக்டர்? 201 00:12:29,374 --> 00:12:31,001 -மன்னிக்கவும்? -என்ன? 202 00:12:31,084 --> 00:12:33,212 எங்களை வெளியே அனுப்புகிறீர்களா? 203 00:12:33,295 --> 00:12:34,463 என்ன செய்கிறோம்? 204 00:12:34,546 --> 00:12:36,757 நீங்கள் நோயாளிகளை வெளியே அனுப்பப் போவதாக ஒருவர் சொன்னார். 205 00:12:36,840 --> 00:12:38,175 நீ நோயாளியா? 206 00:12:38,258 --> 00:12:42,429 என் அப்பா. அவரது காலை சரிசெய்ய வேண்டும், ஆனால் எங்கள் வீடு கொஞ்சம் சேதமடைந்திருக்கிறது. 207 00:12:42,513 --> 00:12:44,181 என்னால் அவரை அங்கே அழைத்துப்போக முடியாது. 208 00:12:44,264 --> 00:12:47,518 போவதற்கு இடமில்லாதவர்கள் யாரையும் டிஸ்சார்ஜ் செய்யமாட்டார்கள். 209 00:12:47,601 --> 00:12:48,602 அவருக்கு இன்னும் வலி இருக்கிறது... 210 00:12:48,685 --> 00:12:51,980 யாரையும் வலுகட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய மாட்டார்கள். 211 00:12:52,064 --> 00:12:53,982 என் பெயர் டாக்டர் ஹோரஸ் பால்ட்ஸ். 212 00:12:54,066 --> 00:12:57,945 உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால், என்னை பார்க்க வேண்டும் என்று சொல். சரியா? 213 00:12:58,737 --> 00:12:59,947 -நன்றி. -சரி. 214 00:13:01,990 --> 00:13:04,076 கத்ரீனா புயலின் மையப்பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்ததால், 215 00:13:04,159 --> 00:13:06,620 நியூ ஆர்லியன்ஸ் நேரடியாக தாக்கப்படவில்லை, இருந்தாலும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறது. 216 00:13:06,703 --> 00:13:07,746 டல்லாஸ் 217 00:13:08,956 --> 00:13:11,750 லூசியானா கவர்னர் கேத்லீன் பிளாங்கோ டிவியில் தோன்றி 218 00:13:11,834 --> 00:13:14,920 நகரத்தை விட்டு வெளியேறியவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கிறார். 219 00:13:15,003 --> 00:13:18,632 இது எல்லாவற்றையும் போலவே, பெரிய அளவிலான பொருளாதாரங்களைப் பற்றியது. 220 00:13:18,715 --> 00:13:20,968 டெனெட் ஹெல்த்கேர், எங்களிடம் மருத்துவமனைகள் மட்டும் அல்ல. 221 00:13:21,051 --> 00:13:24,888 அறுவை சிகிச்சை மையங்கள், நடமாடும் அறுவை சிகிச்சை மையங்கள், அவசர சிகிச்சை மையங்கள்... 222 00:13:24,972 --> 00:13:27,599 -எனவே எல்லா சேவைகளையும் அளிக்கிறீர்களா? -சரியாக சொன்னீர்கள். 223 00:13:27,683 --> 00:13:29,434 வருவாய் வளர்ச்சிக்கு உதவும் பெருநிறுவன 224 00:13:29,518 --> 00:13:32,855 மேம்பாட்டு வளங்களைக் கொண்ட உள்ளூர் மருத்துவமனைகளை நாங்கள் ஆதரிக்கிறோம், 225 00:13:32,938 --> 00:13:35,649 எனவே வளைகுடா கடற்கரைப் பகுதி முழுவதும் சந்தை பொருளாதாரமும் 226 00:13:35,732 --> 00:13:37,359 மருத்துவர் உறவுகளும் அதிகரிக்கின்றன. 227 00:13:37,442 --> 00:13:40,487 மன்னிக்கவும், சார். இதோ. எடுத்துக்கொள்ளுங்கள். 228 00:13:40,571 --> 00:13:43,365 ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதில் கொஞ்சம் தீவிரமாக இருக்கிறேன். 229 00:13:44,700 --> 00:13:48,620 லூசியானாவில் கத்ரீனா புயல் போன்ற ஒன்று வர்த்தகத்துக்கு நல்லதா? 230 00:13:48,704 --> 00:13:53,792 நியூ ஆர்லியன்ஸை சுற்றிலும் மருத்துவமனைகள் உள்ளன, ஆனால் அது உங்களுக்கு நல்ல விஷயமாக தெரிகிறதா? 231 00:13:53,876 --> 00:13:55,836 -அடக் கடவுளே. -இல்லை, ஆனால்... 232 00:13:56,295 --> 00:13:57,754 நேரடியான நிதியியல் கண்ணோட்டத்திலிருந்து? 233 00:13:57,838 --> 00:13:59,131 இவர் இன்னும் முதல் பீரிலேயே இருக்கிறார். 234 00:13:59,840 --> 00:14:03,218 இது போன்ற ஒரு சம்பவத்துக்குப் பிறகு, உங்களிடம் அதிக நோயாளிகள் வருவார்கள், இல்லையா? 235 00:14:04,720 --> 00:14:06,346 காப்பீட்டு கோரிக்கைகளும், ஆவணப்படுத்தும் வேலையும் அதிகரிக்கும். 236 00:14:10,726 --> 00:14:12,644 அது உங்கள் லாபத்தை அதிகரிக்கும், சரியா? 237 00:14:18,775 --> 00:14:19,943 பேரழிவுக்கு பிந்தைய நடவடிக்கை, லாப நஷ்ட கணக்குகளை 238 00:14:20,027 --> 00:14:24,114 கவனிப்பது, எந்த துறையின் பொறுப்பு என்று சரியாகத் தெரியவில்லை. 239 00:14:25,574 --> 00:14:28,285 நான் வளைகுடா கடற்கரை வணிக மேம்பாட்டுப் பொறுப்பில் இருக்கிறேன், எனவே... 240 00:14:29,912 --> 00:14:31,121 சும்மா கேட்டேன். 241 00:14:33,790 --> 00:14:34,875 நிஜமாகவே சொல்ல முடியவில்லை. 242 00:14:36,168 --> 00:14:37,711 நாம் அளவு பற்றி பேசினோம் தானே? 243 00:14:37,794 --> 00:14:39,046 நாம் அளவு பற்றி பேசினோம். 244 00:14:39,129 --> 00:14:42,508 டெனெட் ஹெல்த்கேர் இருப்பது வளைகுடா பகுதியில். 245 00:15:08,784 --> 00:15:10,702 ஹேய். அங்கே கவனமாக இருங்கள். 246 00:15:10,786 --> 00:15:13,539 சிறுவர்கள் சிலர் செவிலியர் ஒருவர் தனது நாயை வெளியே கொண்டு வந்த போது பின்தொடர்வதைப் பார்த்தேன். 247 00:15:13,622 --> 00:15:16,959 -நிஜமாகவா? -பிரச்சினையில்லை, ஆனால் கவனமாக இருங்கள். 248 00:15:17,042 --> 00:15:18,627 எல்லோரும் வெளியே சென்றால் கவனமாக இருங்கள். 249 00:15:18,710 --> 00:15:21,088 செவிலியர்களில் ஒருவரை சிறுவர்கள் சிலர் தொந்தரவு செய்திருக்கிறார்கள். 250 00:15:21,171 --> 00:15:23,006 -தொந்தரவா? -பாதுகாவலர் அப்படித்தான் சொன்னார். 251 00:15:23,882 --> 00:15:25,217 வெளிப்படையாக, செவிலியர் ஒருவர் 252 00:15:25,300 --> 00:15:27,803 வெளியே சென்றபோது சிறுவர்கள் சிலரால் தாக்கப்பட்டிருக்கிறாள். 253 00:15:28,345 --> 00:15:29,930 -மருத்துவமனைக்கு வெளியேவா? -ஆம். 254 00:15:30,514 --> 00:15:33,141 -எத்தனை சிறுவர்கள்? -அவள் தாக்கப்பட்டது மட்டும்தான் எனக்குத் தெரியும். 255 00:15:33,225 --> 00:15:35,644 எனக்கு என்ன சொன்னார்கள் என்றால், அவள் வெளியே சென்றதாகவும், 256 00:15:35,727 --> 00:15:37,187 சிறுவர்கள் சிலர் அவளை தாக்கி... 257 00:15:37,271 --> 00:15:39,106 -என்ன? இது எங்கே நடந்தது? - ...வன்புணர்வு செய்ததாக சொன்னார்கள். 258 00:15:39,189 --> 00:15:40,566 மருத்துவமனைக்கு வெளியே. 259 00:15:40,649 --> 00:15:42,484 -தாக்கப்பட்டாது யார்? -செவிலியர் ஒருவர். 260 00:15:42,568 --> 00:15:44,027 -ஆனால் யாரது? -பெயர் தெரியவில்லை. 261 00:15:45,487 --> 00:15:48,073 மருத்துவமனைக்கு வெளியே ஒரு செவிலியர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டிருந்தால், 262 00:15:48,156 --> 00:15:49,783 நாம் அவளுக்கு சிகிச்சை அளித்திருப்போம். 263 00:15:49,867 --> 00:15:52,786 -அப்படி எதுவும் நான் கேள்விப்படவில்லையே... -எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். 264 00:15:52,870 --> 00:15:53,871 யார்... 265 00:15:53,954 --> 00:15:55,998 நம் பணியாளர்களே நம் மருத்துவமனையில் பாதுகாப்பாக இல்லையென்றால், 266 00:15:56,081 --> 00:15:58,166 அது நமக்கு பெரிய பிரச்சினை ஆகிவிடும். 267 00:15:58,250 --> 00:15:59,918 அது பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்? 268 00:16:00,919 --> 00:16:04,006 -அவளை வன்புணர்வு செய்திருக்கிறார்களா? -ஒரு சில நபர்களால். 269 00:16:04,089 --> 00:16:05,090 பாதுகாவலர் 270 00:16:05,174 --> 00:16:06,884 அது பற்றி எந்த தகவலும் வரவில்லை. 271 00:16:06,967 --> 00:16:08,760 அப்படியென்றால் இந்த செய்தி உங்களிடமிருந்து வரவில்லையா? 272 00:16:08,844 --> 00:16:10,679 திருச்சபையில் சில இடங்களில் பிரச்சினை என்று கேள்விப்பட்டோம், 273 00:16:10,762 --> 00:16:13,724 ஆனால் மருத்துவமனைக்கு வெளியே ஒரு செவிலியர் தாக்கப்பட்டாரா? இல்லை. 274 00:16:13,807 --> 00:16:16,685 -சரி. அதை வரவேற்கிறேன். நன்றி. -சரி. 275 00:16:24,735 --> 00:16:27,529 நியூ ஆர்லியன்ஸில் தொடர்ந்து தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், 276 00:16:27,613 --> 00:16:30,866 மக்கள் தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் சுற்றுப்புறங்களை விட்டும், 277 00:16:30,949 --> 00:16:32,910 தங்கள் குடும்பங்களின் நலனுக்காக வெளியேற்றப்படுகிறார்கள். 278 00:16:33,410 --> 00:16:35,245 உங்கள் குடும்ப பலசரக்கு கடை 279 00:16:36,830 --> 00:16:38,415 ஹேய். சீக்கிரம். 280 00:16:40,751 --> 00:16:42,419 உடைத்துவிட்டேன். 281 00:16:50,427 --> 00:16:54,264 -அதைப் பார். -கடவுளே. ஆரம்பித்துவிட்டார்கள். 282 00:16:54,348 --> 00:16:55,349 ஆச்சரியமில்லை. 283 00:16:58,143 --> 00:17:00,521 இரண்டு செவிலியர்கள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். 284 00:17:20,123 --> 00:17:21,834 நல்ல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. 285 00:17:24,962 --> 00:17:27,297 -என்ன கிடைத்திருக்கிறது? -கவலைப்படாதே. உனக்கும் கிடைத்திருக்கிறது. 286 00:17:27,381 --> 00:17:29,758 ஹேய். இவை எங்கிருந்து உனக்குக் கிடைத்தது? 287 00:17:31,677 --> 00:17:34,054 எங்களுக்கு கிடைத்தது. அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். 288 00:17:34,763 --> 00:17:35,889 இது எங்கிருந்து கிடைத்தது? 289 00:17:37,057 --> 00:17:39,309 -கடையிலிருந்து. -கடை திறக்கவில்லையே. 290 00:17:40,060 --> 00:17:41,186 நாங்கள் தான் திறந்தோம். 291 00:17:42,771 --> 00:17:44,648 உங்கள் அம்மா உங்களுக்குத் திருடத்தான் கற்றுக்கொடுத்தாரா? 292 00:17:44,731 --> 00:17:46,066 நாங்கள் திருடர்கள் இல்லை. 293 00:17:46,149 --> 00:17:47,317 நீங்கள் திருடியிருக்கிறீர்கள். 294 00:17:50,404 --> 00:17:52,197 நாங்கள் எடுத்ததெல்லாம், 295 00:17:52,281 --> 00:17:55,367 என் தங்கைக்கு டயப்பர்களும், என் அம்மாவிற்கு கொஞ்சம் உணவும் தான். 296 00:17:56,243 --> 00:17:57,452 நகரம் சீர்குலைந்திருக்கிறது. 297 00:17:58,704 --> 00:18:00,247 எங்களை இங்கிருந்து வெளியேற்ற தயாராகிறீர்கள். 298 00:18:00,330 --> 00:18:01,582 யார் உங்களை வெளியேற்றுகிறார்? 299 00:18:02,708 --> 00:18:05,711 அதாவது, கேள்விப்பட்டோம். அவர்கள் மக்களை வெளியேற்றுகிறார்கள். 300 00:18:07,129 --> 00:18:09,798 முதலில் எங்களைத் தான் வெளியேற்றுவார்கள். 301 00:18:09,882 --> 00:18:13,260 எங்களை வலுக்கட்டாயமாக நீங்கள் துரத்திய பிறகு என் அம்மாவிற்கு இந்த பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும்? 302 00:18:14,094 --> 00:18:16,722 இவை எல்லாமே, உயிர் வாழ்வதற்காக. 303 00:18:17,723 --> 00:18:18,974 உயிர் பிழைப்பதற்காக. 304 00:18:23,395 --> 00:18:27,858 கட்டிடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏதாவது சேதம் இருந்தால் அதை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துங்கள். 305 00:18:27,941 --> 00:18:29,193 -சூசன். -எதுவும்... 306 00:18:29,276 --> 00:18:30,652 கொஞ்சம் பொறு. 307 00:18:30,736 --> 00:18:32,529 குறிப்பிடும்படியான எந்த விஷயமும் மேலிடம் வரை போக வேண்டும் 308 00:18:32,613 --> 00:18:33,906 சரி, அந்த வேலையை தொடங்குகிறேன். 309 00:18:33,989 --> 00:18:35,073 உனக்கு என்ன உதவி வேண்டும்? 310 00:18:35,157 --> 00:18:37,701 மோசமான வதந்திகளைப் பற்றி பேச வந்திருக்கிறேன். 311 00:18:37,784 --> 00:18:41,371 கேள்விப்பட்டேன். மக்களிடம் சொல்லுங்கள், நமக்குத் தெரிந்தவரை, யாரும் வன்புணர்வு செய்யப்படவில்லை. 312 00:18:41,455 --> 00:18:42,998 யாரும் தாக்கப்படவில்லை என்று. 313 00:18:43,081 --> 00:18:44,499 பொறுங்கள். என்ன? 314 00:18:45,083 --> 00:18:46,668 நமக்குத் தெரிந்தவரை, கட்டிடத்துக்கு 315 00:18:46,752 --> 00:18:49,671 வெளியே ஒரு செவிலியர் தாக்கப்பட்டதை உறுதிபடுத்த முடியவில்லை. 316 00:18:49,755 --> 00:18:52,090 நான் அதைப் பற்றி பேசவில்லை. நாம் மக்களை தெருக்களுக்கு 317 00:18:52,174 --> 00:18:54,009 துரத்தப்போவதாக வந்த வதந்திகளைப் பற்றி பேசுகிறேன். 318 00:18:54,092 --> 00:18:57,137 நாம் மக்களை வெளியேற்றப்போவதில்லை. 319 00:18:57,221 --> 00:19:00,849 ஆனால் முடிந்தவரை சீக்கிரத்தில், நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பரிசீலிப்போம். 320 00:19:00,933 --> 00:19:04,144 அவர்களே எங்கே டிஸ்சார்ஜ் செய்வீர்கள், சூசன்? மக்களால் எங்கு போக முடியும்? 321 00:19:04,228 --> 00:19:06,980 நம்மிடம் நகர மின்சாரம் இல்லை. மருந்துகள் குறைந்துகொண்டே வருகின்றன. 322 00:19:07,064 --> 00:19:09,983 எனவே மருத்துவமனையின் சுமையைக் குறைக்கும் வழிகளைக் கருத்தில் கொள்வது 323 00:19:10,067 --> 00:19:12,778 -எல்லோருக்கும் நல்லது. -எல்லோரும் எங்கோ போக வழியில்லை. 324 00:19:16,073 --> 00:19:18,367 நீங்கள் மக்களை வெளியேற்றுவது பற்றி பேசத் தொடங்கும் போது, 325 00:19:18,450 --> 00:19:21,787 இந்த சமூகத்தில் உள்ள பலர், அதை வேறு மாதிரி எடுத்துக்கொள்வார்கள். 326 00:19:21,870 --> 00:19:23,121 நீங்கள் அவர்களை கைவிடுவது போல. 327 00:19:23,205 --> 00:19:26,041 டாக்டர் கிங், எல்லோரும் என்னிடம் கோபப்படுகிறீர்கள். 328 00:19:26,124 --> 00:19:28,544 நீங்கள் இந்த மருத்துவமனையில் சில மாதங்களாகத்தான் இருக்கிறீர்கள், 329 00:19:28,627 --> 00:19:31,296 எனவே இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன், 330 00:19:31,380 --> 00:19:34,466 ஆனால் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது நான்தான். 331 00:19:34,550 --> 00:19:37,427 மக்கள் போக இடமில்லை என்றால், நாம் அதற்கு தீர்வு கண்டுபிடிப்போம். 332 00:19:37,511 --> 00:19:40,138 இல்லையென்றால், தண்ணீர் குறையத் தொடங்கும் போது, 333 00:19:40,222 --> 00:19:42,599 நாம் டிஸ்சார்ஜ் செய்ய தொடங்க வேண்டும்... 334 00:19:42,683 --> 00:19:44,518 நோயாளிகளை. 335 00:19:44,601 --> 00:19:47,646 நீங்கள் போகும்போது மக்கள் தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டிருந்தால், அவர்களை 336 00:19:47,729 --> 00:19:49,857 தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு இருக்குபடி சொல்கிறீர்களா? 337 00:19:54,987 --> 00:19:56,196 ஹேய், வின்ஸ் பேசுகிறேன். 338 00:19:56,280 --> 00:19:58,824 ஆனாவோ நானோ பதிலளிக்க முடியவில்லை. செய்தியை பதிவிடுங்கள். 339 00:20:01,118 --> 00:20:02,786 நான்தான். மீண்டும் முயற்சிக்கிறேன். 340 00:20:06,874 --> 00:20:11,670 குளிரூட்டி இன்னும் வேலை செய்யவில்லை, அதைத் தவிர நாங்கள் நன்றாக இருக்கிறோம். 341 00:20:14,590 --> 00:20:15,883 நாங்கள் நன்றாக இருக்கிறோம். 342 00:20:18,260 --> 00:20:22,639 எனவே, இந்த செய்தியைப் பெற்றவுடன், அழை, சரியா? 343 00:20:24,391 --> 00:20:25,976 என் செல்ஃபோன் சிக்னல் குறைவாக இருக்கிறது, 344 00:20:26,059 --> 00:20:28,103 எனவே நான் எடுக்கவில்லை என்றால், செய்தியை பதிவிடு. 345 00:20:28,187 --> 00:20:30,689 நான் உன்னை திரும்ப அழைக்கிறேன். சரி. 346 00:20:33,358 --> 00:20:35,736 நீ கூப்பிடும்போது பேசுகிறேன். சரி, பை. 347 00:20:58,759 --> 00:20:59,927 ஹேய், வின்ஸ் பேசுகிறேன். 348 00:21:00,010 --> 00:21:02,638 ஆனாவோ நானோ பதிலளிக்க முடியவில்லை. செய்தியை பதிவிடுங்கள். 349 00:21:04,515 --> 00:21:06,350 நான் உன்னை நேசிக்கிறேன், சரியா? 350 00:21:07,684 --> 00:21:09,520 உன்னை மிஸ் செய்வதோடு உன்னை நேசிக்கிறேன். 351 00:21:17,694 --> 00:21:19,613 ஆம்புலன்ஸ் அவசரம் 352 00:21:19,696 --> 00:21:20,697 ஃப்ரெடி! 353 00:21:21,615 --> 00:21:22,908 எப்படி போகிறது? 354 00:21:22,991 --> 00:21:24,368 இன்னும் 18 அங்குலத்தில் இருக்கிறது. 355 00:21:25,369 --> 00:21:26,578 அது குறையவே இல்லையா? 356 00:21:27,371 --> 00:21:28,413 இல்லை. 357 00:21:29,623 --> 00:21:31,124 நகர பம்ப் வேலை செய்ய வேண்டும். 358 00:21:32,960 --> 00:21:34,920 -சரி. அதன் மீது ஒரு கண் இருக்கட்டும், சரியா? -சரி. 359 00:21:35,003 --> 00:21:36,004 சரி. 360 00:21:44,263 --> 00:21:47,850 இங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. உன் அம்மா நன்றாக இருக்கிறார். 361 00:21:48,642 --> 00:21:50,477 வெறும் வெப்பம், அவ்வளவுதான். 362 00:21:50,561 --> 00:21:51,812 என்ன நடக்கிறது என்று சொல்கிறார்கள்? 363 00:21:53,564 --> 00:21:57,150 அவர்கள் சொல்வதெல்லாம் நகரத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதனால் குளிரூட்டி 364 00:21:57,234 --> 00:21:58,569 வேலை செய்யாது என்பதுதான். 365 00:21:59,111 --> 00:22:02,406 -குளிர்ச்சியாக இருக்க வழியில்லையா? -மின்விசிறி கிடைக்குமா என்று பார்க்கிறேன். 366 00:22:02,489 --> 00:22:06,326 ஆனால் தண்ணீர் இருக்கிறது, உன் அம்மா கொஞ்சம் சாப்பிட்டார். நான் இங்கே இருக்கிறேன். 367 00:22:06,410 --> 00:22:09,830 மின்சாரம் மீண்டும் எப்போது திரும்ப வரும் என்று அவர்கள் ஏதாவது சொன்னார்களா? 368 00:22:09,913 --> 00:22:12,332 -இதுவரை இல்லை. -அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்றால், 369 00:22:12,416 --> 00:22:14,209 நீ யாரையாவது கண்டுபிடித்து அவர்களிடம் கேட்க முயற்சி செய், சரியா? 370 00:22:14,293 --> 00:22:15,502 -சரி. -அதோடு எங்களுக்குத் தெரியப்படுத்து. 371 00:22:15,586 --> 00:22:17,921 -செய்கிறேன். இவர் நன்றாக இருப்பார். -ஆம். சரி. 372 00:22:18,005 --> 00:22:19,798 ஏதாவது தெரிந்தால் உடனே அழைக்கிறேன். 373 00:22:19,882 --> 00:22:21,508 சரி. அப்போது நீ பார்த்துக்கொள். 374 00:22:21,592 --> 00:22:22,885 -சரி. -சரி. பை. 375 00:22:33,562 --> 00:22:34,605 ஹேய். 376 00:22:35,564 --> 00:22:36,732 எவ்வளவு மோசமாக இருக்கிறது? 377 00:22:38,108 --> 00:22:39,401 படகுத்துறை சிதைந்துவிட்டது. 378 00:22:39,484 --> 00:22:42,362 கீழே விழுந்த மரங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இது இன்னும் மோசமாக இருந்திருக்கும். 379 00:22:43,322 --> 00:22:44,323 உன் அம்மா எப்படி இருக்கிறார்? 380 00:22:45,073 --> 00:22:47,034 மருத்துவமனை ஜெனரேட்டர்களில் இயங்குவதாக ஜில் சொன்னாள். 381 00:22:47,618 --> 00:22:48,994 குளிர்சாதன வசதி இல்லையாம். 382 00:22:49,828 --> 00:22:51,747 அவர்கள் அவளிடம் எதுவும் சொல்வதில்லையாம். 383 00:22:51,830 --> 00:22:53,415 ஆனால் உன் அம்மா நலம் தானே? 384 00:22:56,168 --> 00:22:57,544 அப்படித்தான் நினைக்கிறேன். நான்... 385 00:22:59,755 --> 00:23:01,173 என்ன? 386 00:23:04,384 --> 00:23:07,054 உன் அம்மா நலமாக இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்ள ஜில் இருக்கிறாள். 387 00:23:08,013 --> 00:23:10,849 அவர் இங்கே இருப்பதை விட அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். 388 00:23:24,154 --> 00:23:25,405 நியூ ஆர்லியன்ஸ் 1வது மாவட்ட காவல்துறை 389 00:23:25,489 --> 00:23:29,618 இந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, அதுவும் புயலுக்குப் பிறகு. 390 00:23:29,701 --> 00:23:30,702 நாங்கள் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறோம், 391 00:23:30,786 --> 00:23:33,163 -தண்ணீரின் அளவு உயர்வதை பார்த்துக்கொண்டு. -எவ்வளவு ஆழம்? 392 00:23:33,247 --> 00:23:36,124 4 அடி வரை வருகிறது. இவ்வளவு ஆழமான வெள்ளம் இதுவரை வந்ததில்லை. 393 00:23:36,208 --> 00:23:39,795 கார்கள் முழுவதுமாக நீருக்கு அடியில் மூழ்கிவிட்டன. பாம்புகள் வேலை செய்கின்றனவா? 394 00:23:39,878 --> 00:23:42,673 பம்ப்கள் வேலை செய்கின்றன, ஆனால் அந்த பகுதி 395 00:23:42,756 --> 00:23:45,342 -மார்கோனி பம்ப். -அம்மா, குடிக்க ஏதாவது வேண்டுமா? 396 00:23:45,926 --> 00:23:48,637 -வெள்ளம் புகுந்ததை கேள்விப்பட்டாயா? -வெள்ளமா? 397 00:23:48,720 --> 00:23:50,681 நீர் சேர்கிறது. 398 00:23:52,015 --> 00:23:54,268 அப்படித்தான் வானொலியில் சொல்கிறார்கள். 399 00:23:54,351 --> 00:23:56,103 தயவு செய்து, அம்மா. 400 00:23:56,186 --> 00:23:59,439 -என்ன நடக்கிறது என்பதை கேட்க விரும்புகிறேன். -என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. 401 00:23:59,523 --> 00:24:00,607 அதுதான் பிரச்சினை. 402 00:24:01,525 --> 00:24:03,610 அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. 403 00:24:04,695 --> 00:24:06,864 கொஞ்சம் தெரிந்தவர்கள்தான் அதிகம் பேசுவார்கள். 404 00:24:18,792 --> 00:24:19,918 அம்மா, வேண்டாம். 405 00:24:24,339 --> 00:24:25,883 -அம்மா. -இல்லை, அது பரவாயில்லை. 406 00:24:25,966 --> 00:24:27,509 இது சரியில்லை. 407 00:24:37,603 --> 00:24:39,438 எல்லோரும் வதந்திகளைப் பரப்புகிறார்கள். 408 00:24:41,773 --> 00:24:43,317 இல்லாத விஷயங்களுக்கு பயப்படுகிறார்கள். 409 00:24:47,571 --> 00:24:51,825 இந்த மருத்துவமனையில் 2,000 பேர் உள்ளனர், அவர்கள் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். 410 00:24:54,411 --> 00:24:55,787 அவர்கள் ஒவ்வொருவரையும். 411 00:24:59,458 --> 00:25:01,376 நீ அவர்களை கவனித்துக்கொள்கிறாய். 412 00:25:02,794 --> 00:25:06,924 புயலில் இருந்து 2,000 பேரை காப்பாற்றியிருக்கிறாய். 413 00:25:07,716 --> 00:25:10,260 உண்மை வேண்டுமென்றால், அதுதான் உண்மை. 414 00:25:10,969 --> 00:25:12,429 நீ அதைச் செய்தாய். 415 00:25:14,848 --> 00:25:16,058 நீ அதைச் செய்தாய். 416 00:25:57,724 --> 00:25:59,643 -ஆம், நான் பார்த்துக்கொள்கிறேன். -கவனமாக. 417 00:26:20,330 --> 00:26:21,748 நான் மிகவும் கவலைப்பட்டேன். 418 00:26:22,708 --> 00:26:25,002 -அப்படியா? -ஆம். நிச்சயமாக. 419 00:26:26,003 --> 00:26:27,171 இங்கே எப்படி இருந்தது? 420 00:26:34,261 --> 00:26:38,473 நியூ ஆர்லியன்ஸின் WWVV வுக்காக நான் ஆரோன் நெவில். 421 00:26:38,557 --> 00:26:42,186 பல தசாப்தங்களாக சிறந்த இசையை வழங்குகிறோம். இப்போது ஃபாரினர் இசை குழுவின் பாடல். 422 00:26:44,062 --> 00:26:45,898 ஆஹா. சரியா? இது, நம் பாடல். 423 00:26:47,107 --> 00:26:49,943 -நம் பாடலா? -ஆம். 424 00:26:50,027 --> 00:26:52,654 -இது மிகவும் உணர்வுப்பூர்வமான பாடல். -ஆம். 425 00:26:52,738 --> 00:26:55,157 ஆனால் நாம் இதை நம் முதல் டேட்டில் கேட்டோம், நினைவிருக்கிறதா? 426 00:26:55,991 --> 00:26:57,367 அந்த பன்றி ரோஸ்ட் கடையில். 427 00:26:57,451 --> 00:26:59,119 நான் ஒருபோதும் பன்றி ரோஸ்ட் கடைக்கு போனதில்லை. 428 00:26:59,203 --> 00:27:00,746 -நீ... என்ன? -இல்லை. 429 00:27:00,829 --> 00:27:03,123 பன்றி ரோஸ்ட் கடையில் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாய். 430 00:27:03,207 --> 00:27:05,334 -நான் பன்றி ரோஸ்ட் கடைக்கு போனதே இல்லை. -பொறு. 431 00:27:05,417 --> 00:27:06,793 உனக்கு நிஜமாகவே நினைவில்லையா? 432 00:27:07,586 --> 00:27:10,088 அதாவது, அது முதல் டேட்டாக இருக்கலாம். 433 00:27:10,172 --> 00:27:11,798 அது நம்முடைய முதல் டேட் என்று நான் நினைக்கவில்லை. 434 00:27:13,467 --> 00:27:15,385 ஆம். நான் உறுதியாக சொல்கிறேன். 435 00:27:17,596 --> 00:27:19,264 -இல்லை. தவறு. -இல்லை. பொறு. 436 00:27:19,348 --> 00:27:24,478 ஒருவேளை நான் ஒரு கண் வைத்திருந்த பொன்னிற முடி கொண்ட, அழகான, எதிர்கால ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட்டாக 437 00:27:24,561 --> 00:27:26,396 இருக்கலாம். அவளாகத்தான் இருக்கும். 438 00:27:26,480 --> 00:27:28,065 -ஒருவேளை அது... -நீ ஒரு கண் வைத்திருந்தாயா? 439 00:27:33,111 --> 00:27:35,280 நான் குளிக்க வேண்டும். துர்நாற்றம் வீசுகிறது. 440 00:27:35,364 --> 00:27:36,657 நீ நன்றாக மணக்கிறாய். 441 00:27:42,746 --> 00:27:44,206 உன் மீது அற்புதமான வாசனை வீசுகிறது. 442 00:28:10,065 --> 00:28:12,067 நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். 443 00:28:13,944 --> 00:28:19,449 என்னால் ஓட முடிந்தால் நான் இப்போதே உன்னிடம் ஓடி வந்துவிடுவேன். 444 00:28:23,120 --> 00:28:27,207 ஆனால் என்னால் முடியாது. என்னால் இப்போது அங்கு இருக்க முடியவில்லை. 445 00:28:28,458 --> 00:28:30,544 ஆனால் என் அன்பு அங்கே இருக்கிறது. 446 00:28:31,712 --> 00:28:35,465 என் அன்பு எப்போதும் உன்னுடன் இருக்கிறது. 447 00:28:37,676 --> 00:28:38,969 நானும் உன்னை நேசிக்கிறேன். 448 00:28:55,152 --> 00:28:56,361 கேரென்? 449 00:28:58,030 --> 00:28:59,239 கேரென்? 450 00:29:00,407 --> 00:29:01,700 நான் இங்கே இருக்கிறேன். 451 00:29:01,783 --> 00:29:03,076 அவசர சிகிச்சை பிரிவுக்கு வரவும். 452 00:29:31,271 --> 00:29:32,356 மருத்துவர் வருகிறார். 453 00:29:32,439 --> 00:29:34,566 சரியாகிவிட்டதா என்று பார்க்கிறேன். டாக்டர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் மேடம். 454 00:29:34,650 --> 00:29:36,401 மேடம் நான் சொல்வது கேட்கிறதா? 455 00:29:36,485 --> 00:29:37,945 அவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். 456 00:29:38,028 --> 00:29:39,821 -அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். -குறைந்தது இரண்டு லிட்டர். 457 00:29:39,905 --> 00:29:41,156 சுவாசியுங்கள். 458 00:29:42,407 --> 00:29:43,450 சரி. 459 00:29:44,243 --> 00:29:46,453 உங்கள் பெயர் என்ன? உங்கள் பெயரைச் சொல்ல முடியுமா? 460 00:29:46,537 --> 00:29:47,579 ஜோலீன். 461 00:29:47,663 --> 00:29:49,706 -என்ன நடந்தது? -அவரை கத்தியால் குத்திவிட்டார்கள். 462 00:29:49,790 --> 00:29:51,959 -நீ அங்கு இருந்தாயா? எத்தனை முறை? -ஆம். ஒரு முறை. 463 00:29:52,042 --> 00:29:55,254 சரி. செல்வி ஜோலீன், நீங்கள் கத்தியால் குத்தப்பட்டதாக உங்கள் மகன் சொல்கிறார்... 464 00:29:55,337 --> 00:29:57,047 -பேரன். -அது சரியா? 465 00:29:57,130 --> 00:29:58,507 ஒரே காயம்தானா? 466 00:29:58,590 --> 00:30:00,467 -வேறு எங்காவது வலிக்கிறதா? -யார் அது? 467 00:30:00,551 --> 00:30:02,886 பெண். வயது 50களின் பிற்பகுதி. மார்பில் குத்தப்பட்ட காயம். 468 00:30:02,970 --> 00:30:05,013 -சுவாசிக்க சிரமப்படுகிறார். -துடிப்பு இல்லை. இரத்த அழுத்தம் குறைகிறது. 469 00:30:05,097 --> 00:30:06,849 -இரத்த வகை என்ன என்று கண்டுபிடிப்போம். -அவர் நலமா? 470 00:30:06,932 --> 00:30:08,559 -இரத்த வங்கி திறந்திருக்குமா? -எனக்குத் தெரியாது. 471 00:30:08,642 --> 00:30:09,935 -விசாரிக்கிறேன். -சரி. இப்போதைக்கு திரவங்களை கொடு. 472 00:30:10,018 --> 00:30:12,896 -ஹேய்! இங்கே என்ன நடக்கிறது? -டாக்டர். பால்ட்ஸ், நீங்கள் இவனை... 473 00:30:12,980 --> 00:30:14,565 ஆம். என்னோடு வா. 474 00:30:14,648 --> 00:30:16,650 -நான் அவருடன் இருக்கிறேன். -டாக்டரோடு போ. 475 00:30:16,733 --> 00:30:20,779 வா. பரவாயில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். 476 00:30:20,863 --> 00:30:25,075 அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். இப்போது, நீ என்னுடன் வா, சரியா? வா. 477 00:30:25,158 --> 00:30:27,286 ஆக்ஸிஜன் கொடு. நாங்கள் உங்களை கவனித்துக்கொள்வோம். 478 00:30:27,369 --> 00:30:28,954 சரி. அங்கே. 479 00:30:32,916 --> 00:30:35,419 இப்போது, நீ நன்றாக இருக்கிறாயா? 480 00:30:36,086 --> 00:30:37,713 உனக்கு ஏதாவது நடந்ததா? 481 00:30:39,131 --> 00:30:40,883 சரி. உன் பெயர் என்ன? 482 00:30:42,593 --> 00:30:43,635 டெய்லர். 483 00:30:44,553 --> 00:30:45,596 டெய்லரா? 484 00:30:49,016 --> 00:30:51,310 நான் உனக்கு ஒன்றை விளக்க வேண்டும். 485 00:30:54,229 --> 00:30:57,441 அது ஒரு வன்முறைத் தாக்குதல். 486 00:30:58,901 --> 00:31:02,112 இது குறித்து போலீசார் புகார் பதிவு செய்வார்கள். 487 00:31:03,238 --> 00:31:04,448 அவர்கள் செய்ய வேண்டும். 488 00:31:05,407 --> 00:31:10,412 இப்போது, நீ விரும்பினால், நான் உனக்கு உதவ முடியும். சரியா? 489 00:31:12,706 --> 00:31:13,707 சரி. 490 00:31:14,917 --> 00:31:16,126 என்ன நடந்தது? 491 00:31:19,254 --> 00:31:22,549 இதைச் செய்தவரைப் பாதுகாக்கப் பார்க்கிறாயா? 492 00:31:26,094 --> 00:31:27,262 சரி. 493 00:31:27,346 --> 00:31:29,389 என்ன நடந்தது? நீ என்னிடம் சொல்லலாம். 494 00:31:30,516 --> 00:31:31,517 சொல். 495 00:31:36,939 --> 00:31:39,733 புயல், அதோடு மற்ற எல்லாம் நடந்துகொண்டிருந்தது, சரியா? 496 00:31:40,817 --> 00:31:42,402 புயல் கடந்துவிட்டது... 497 00:31:43,529 --> 00:31:46,198 பாட்டி, மகிழ்ச்சியாக இருந்தார், ஏனென்றால் அவர் நினைத்தார்... 498 00:31:47,574 --> 00:31:50,619 நாங்கள் எல்லோரும் இது மிகவும் மோசமாக இருக்கும் என்று நினைத்தோம். 499 00:31:51,370 --> 00:31:53,080 ஆனால் மின்சாரம் இல்லை. 500 00:31:54,206 --> 00:31:56,124 எதுவும் செய்ய முடியாது, ஆனாலும் ஏதாவது செய்யலாம், இல்லையா? 501 00:31:56,208 --> 00:31:59,586 எனவே, பாட்டி மற்றவர்களையும் அழைத்தார், சரியா? 502 00:31:59,670 --> 00:32:02,297 பார்ட்டி நடத்துவது. குடிப்பது. 503 00:32:03,215 --> 00:32:04,633 அதிகமாக குடிப்பது. 504 00:32:06,134 --> 00:32:07,261 ஒரு சண்டை தொடங்கியது. 505 00:32:09,721 --> 00:32:11,723 அடுத்தது, அவர்கள் சமையலறை கத்தியை எடுத்துக்கொண்டார்கள். 506 00:32:11,807 --> 00:32:15,978 -கத்தியை எடுத்தது யார்? -விஷயம் பரபரப்பானது. அவரை குத்திவிட்டார்கள். 507 00:32:16,061 --> 00:32:17,855 அவரை குத்தியது யார்? 508 00:32:20,566 --> 00:32:22,025 -என் அம்மா. -உன் அம்மாவா? 509 00:32:24,570 --> 00:32:25,654 உன் அம்மாவா? 510 00:32:31,243 --> 00:32:34,288 உன்னுடைய அம்மா அவருடைய அம்மாவை குத்தினாரா? 511 00:32:40,711 --> 00:32:41,920 நீ போலீஸில் மாட்டிவிட போகிறாயா? 512 00:32:43,922 --> 00:32:45,716 என் அம்மாவை சிறைக்கு அனுப்பப் போகிறீர்களா? 513 00:32:50,387 --> 00:32:51,555 பரவாயில்லை, மகனே. 514 00:32:53,140 --> 00:32:54,349 என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். 515 00:33:00,397 --> 00:33:03,358 அர்த்தமில்லை. அது ஏன் என்றே புரியவில்லை. 516 00:33:03,442 --> 00:33:04,443 நீ சொன்னது எனக்குக் கேட்டது. 517 00:33:06,320 --> 00:33:08,614 -நீ பதில் சொல்லவில்லை, எனவே... -நான் என்ன சொல்ல விரும்புகிறாய்? 518 00:33:08,697 --> 00:33:09,907 என்னால் போக முடியாது. 519 00:33:11,617 --> 00:33:14,953 மருத்துவமனை டாக்டர்களால் நிரம்பி இருக்கிறது. 520 00:33:15,662 --> 00:33:17,956 உன்னுடைய மேலதிகாரி சொன்னார், 521 00:33:18,040 --> 00:33:20,042 புயலுக்கு முன் உன் நோயாளிகளை வெளியேற்றிவிட்டு நகரத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று. 522 00:33:20,125 --> 00:33:22,503 சரி, நாங்கள் அவசரகால சூழ்நிலையில் இருக்கிறோம். 523 00:33:22,586 --> 00:33:25,130 -ஆம், புயல் முடிந்துவிட்டது. -எல்லோரும் தேவைதான். 524 00:33:25,214 --> 00:33:28,967 இன்னும் நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். நகரில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 525 00:33:29,051 --> 00:33:30,719 -எதுவும் நடக்கவில்லை. -மக்கள் கலவரம் செய்கிறார்கள் என்று 526 00:33:30,802 --> 00:33:32,012 -செய்தியில் கேள்விப்பட்டேன். -செய்தி... அட. 527 00:33:32,095 --> 00:33:33,263 செய்தி வெறும்... 528 00:33:33,972 --> 00:33:37,226 மக்கள் சுத்தம் செய்ய முயற்சி செய்கிறார்கள். அவ்வளவுதான். 529 00:33:37,309 --> 00:33:38,310 எனவே நீ இங்கே தங்கலாம். 530 00:33:39,269 --> 00:33:40,395 நான் இங்கே என்ன செய்யப் போகிறேன்? 531 00:33:40,479 --> 00:33:42,731 -நீ அங்கே என்ன செய்யப் போகிறாய்? -நம் வீட்டைப் பார்த்துக்கொள்வேன். 532 00:33:42,814 --> 00:33:44,191 சரி, வீடு நன்றாகத்தான் இருக்கும். 533 00:33:44,274 --> 00:33:47,778 அது நன்றாக இருக்கும், ஆனால் யாராவது அதில் இருக்க வேண்டும். 534 00:33:52,658 --> 00:33:53,700 சரி, பார். 535 00:33:55,494 --> 00:33:57,246 நான் வீட்டைப் பார்க்கப் போகிறேன். 536 00:33:57,329 --> 00:33:59,915 கொஞ்சம் உணவு எடுத்துக்கொள்கிறேன். நான் திரும்பி வருகிறேன். சரியா? 537 00:34:00,791 --> 00:34:02,459 -சரி. -நாம் இன்னொரு முறை முகாமிடலாம். 538 00:34:03,502 --> 00:34:06,004 இன்னும் சில மோசமான 80 களின் காதல் பாடல்களைக் கேட்கலாம். 539 00:34:07,756 --> 00:34:08,882 இந்த யோசனை எப்படி? 540 00:34:09,842 --> 00:34:11,885 -ஆம். -சரி. 541 00:34:18,934 --> 00:34:22,228 கேட்கும் விஷயங்களைப் பற்றி பேசும்போது, 542 00:34:23,397 --> 00:34:27,275 உன் முன்னால் காதலர் ஒருவர் இங்கு வேலை செய்ய ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன். 543 00:34:29,069 --> 00:34:30,279 எனக்குத் தெரியாதே. 544 00:34:34,032 --> 00:34:36,368 -உன்னை நேசிக்கிறேன், ஆனா. -நானும்தான். 545 00:34:37,077 --> 00:34:38,328 நான் உன்னை நேசிக்கிறேன். 546 00:34:51,925 --> 00:34:56,221 ...பொதுவாக பெருநகரப் பகுதி, பெரும்பான்மையான பகுதிகளில்... 547 00:34:56,304 --> 00:34:57,556 தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்! 548 00:34:57,639 --> 00:35:01,018 ...அது உயரவே இல்லை. அதே நிலைதான். 549 00:35:01,602 --> 00:35:05,522 நியூ ஆர்லியன்ஸின் சில பகுதிகளில், 17வது தெருவின் தடுப்பு உடைந்ததன் காரணமாக, 550 00:35:05,606 --> 00:35:06,899 நீர் உயரலாம். 551 00:35:06,982 --> 00:35:09,943 டவுன்டவுனின் சில பகுதிகளில் அதே நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. 552 00:35:10,027 --> 00:35:12,321 ஆனால் நியூ ஆர்லியன்ஸ் ஒரு கிண்ணம் போல நிரம்பி வருகிறது என்று 553 00:35:12,404 --> 00:35:15,073 நான் எல்லோரையும் எச்சரிக்க விரும்பவில்லை. அது நடக்கவில்லை. 554 00:35:15,157 --> 00:35:17,284 அது லூசியானா செனட்டர் டேவிட் விட்டரின் அறிக்கை. 555 00:35:17,367 --> 00:35:18,911 லூசியானாவில் இல்லாது இருப்பது நல்லது. 556 00:35:19,578 --> 00:35:22,039 எப்போதும் லூசியானாவில் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. 557 00:35:24,750 --> 00:35:26,502 வர்த்தகத்துக்கு இது போன்றவை நல்லதா? 558 00:35:27,252 --> 00:35:28,253 என்ன? 559 00:35:28,795 --> 00:35:32,132 இது போன்ற ஏதாவது வர்த்தகத்துக்கு நல்லதா என்று என்னிடம் ஒரு வாடிக்கையாளர் கேட்டார். 560 00:35:33,634 --> 00:35:34,718 நிஜமாகவா? 561 00:35:35,385 --> 00:35:36,386 ஆம். 562 00:35:38,764 --> 00:35:40,307 நிச்சயமாக இது வர்த்தகத்துக்கு நல்லது. 563 00:35:42,559 --> 00:35:44,019 இப்படி கேட்பது கேவலமான விஷயம். 564 00:35:44,728 --> 00:35:45,812 எனக்குத் தெரியும், சரியா? 565 00:35:50,901 --> 00:35:52,110 என்ன தெரிகிறது? 566 00:35:53,070 --> 00:35:55,072 கட்டிடத்தின் பெரும்பகுதியின் மேல் பூச்சு போய்விட்டது. 567 00:35:55,155 --> 00:35:56,657 மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னல் 568 00:35:56,740 --> 00:35:57,991 -உடைந்திருக்கிறது. -புரிந்தது. 569 00:35:58,075 --> 00:36:01,495 ஐந்தாவது மாடியில் நிறைய. குளிர்சாதன அமைப்பு இங்கே சேதமடைந்திருக்கிறது. 570 00:36:01,578 --> 00:36:04,039 ஹேய்! யார் இங்கே பொறுப்பாளர்? 571 00:36:05,958 --> 00:36:07,668 சில மதகுகள் உடைந்துவிட்டன. 572 00:36:07,751 --> 00:36:10,671 இந்த வழியாக சுமார் 15 அடி தண்ணீர் வருவதால் தயாராகுங்கள். 573 00:36:11,547 --> 00:36:13,006 ஆம், சரி. 574 00:36:13,090 --> 00:36:14,591 ஹேய். நான் சொல்வது கேட்கிறதா? 575 00:36:15,217 --> 00:36:18,428 15 அடி தண்ணீர் வருகிறது. உங்களுக்கு அதிக நேரம் இல்லை. 576 00:36:19,930 --> 00:36:21,974 தண்ணீர் வருகிறது. எக்கச்சக்கமான தண்ணீர். 577 00:36:22,057 --> 00:36:23,267 எக்கச்சக்கம் என்றால் எவ்வளவு? 578 00:36:23,350 --> 00:36:26,103 சூறாவளியால் ஏற்பட்ட புயல் 17 வது தெரு கால்வாய் கரை ஆர்லியன்ஸ் பக்கத்தில் 579 00:36:26,186 --> 00:36:27,688 இடிந்து விழ செய்தது. 580 00:36:27,771 --> 00:36:30,107 பான்ட்சார்ட்ரெய்ன் ஏரியில் இருந்து நகருக்குள் தண்ணீர் நுழைகிறது. 581 00:36:30,190 --> 00:36:31,817 -இது நேற்று முதல் நடக்கிறது. -நேற்றா? 582 00:36:31,900 --> 00:36:33,735 நேற்று முதல் நகருக்குள் தண்ணீர் நுழைகிறதா? 583 00:36:33,819 --> 00:36:35,529 இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? 584 00:36:35,612 --> 00:36:36,613 சூசன், நான் நினைக்கிறேன்... 585 00:36:36,697 --> 00:36:39,783 இல்லை. வதந்திகளை கேட்டுக்கொண்டே ஒரு இரவும் பகலும் கழித்திருக்கிறேன். 586 00:36:39,867 --> 00:36:41,618 இப்போது இப்படி சொல்கிறீர்கள். அதன்... 587 00:36:41,702 --> 00:36:45,622 -கரை இடிந்தது எப்படி தெரியாமல் போனது? -வெளியே பெரும் குழப்ப சூழ்நிலை. 588 00:36:45,706 --> 00:36:48,208 யாரும் பொறுப்பில் இல்லை. என்ன செய்கிறோம் என்று யாருக்கும் தெரியவில்லை. 589 00:36:48,292 --> 00:36:50,502 அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக காத்திருந்தால், அது வராது. 590 00:36:50,586 --> 00:36:52,379 -நாம் என்ன செய்வது? -மக்களை வெளியேற்றுங்கள். 591 00:36:52,462 --> 00:36:54,298 உங்கள் வெளியேற்ற திட்டத்தை செயல்படுத்துங்கள். 592 00:36:56,091 --> 00:36:58,927 வெள்ளத்தின் போது வெளியேற்றும் திட்டம் எங்களிடம் இல்லை. 593 00:37:01,096 --> 00:37:02,306 கடவுளே. 594 00:37:03,682 --> 00:37:05,642 நாங்கள் இங்கு ஆட்களை நிறுத்தியிருக்கிறோம். 595 00:37:05,726 --> 00:37:09,354 எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். 596 00:37:10,731 --> 00:37:11,899 கடவுளே. 597 00:37:11,982 --> 00:37:14,151 நாம் பெரிய பிரச்சினையில் சிக்க எவ்வளவு தண்ணீர் தேங்க வேண்டும்? 598 00:37:15,110 --> 00:37:16,987 நான்கு அடி நீரில் மின்சார சுவிட்சுகள் மூழ்கிவிடும். 599 00:37:17,070 --> 00:37:18,780 பிறகு எஞ்சியிருக்கும் மின்சாரத்தையும் இழப்போம். 600 00:37:18,864 --> 00:37:20,908 -உணவு, பொருட்கள், அவசர அறை... -நாம் யாரையாவது அழைக்க வேண்டும். 601 00:37:20,991 --> 00:37:22,242 -நாம் அழைக்க வேண்டும்... -யாரையாவது அழைக்கவா? 602 00:37:22,326 --> 00:37:25,120 -நகரத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். -ஆம், ஆனால் அவன் சொன்னதை கேட்டீர்களா? 603 00:37:25,204 --> 00:37:26,872 நகரத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 604 00:37:26,955 --> 00:37:28,707 நோயாளிகளை நகர்த்த முயற்சித்தால்... 605 00:37:29,208 --> 00:37:30,792 அவன் சொன்னது தவறாக இருந்தால்? தண்ணீர் இல்லை என்றால் என்ன? 606 00:37:30,876 --> 00:37:34,630 எரிக், வெளியே கண்காணிக்க சிலரை போடு. தண்ணீர் வரும்போது எனக்குத் தெரிய வேண்டும். 607 00:37:34,713 --> 00:37:36,590 -எவ்வளவு வேகம், எவ்வளவு உயரம் என்று. -சரி. 608 00:37:36,673 --> 00:37:39,468 எனக்கு எண்ணிக்கை வேண்டும். எத்தனை நோயாளிகள் எஞ்சியிருக்கிறார்கள் என்று. 609 00:37:39,551 --> 00:37:42,304 எத்தனை ஊழியர்கள்? டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது யார்? எத்தனைப் பேர் மிச்சம்? 610 00:37:42,387 --> 00:37:44,556 இந்த மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவரையும் எனக்குத் தெரிய வேண்டும். 611 00:37:49,645 --> 00:37:51,104 கடவுளே. எனக்கு உதவுங்கள். 612 00:37:54,858 --> 00:37:57,277 டாக்டர் பௌ, உங்கள் கணவர் எங்கே? 613 00:37:57,361 --> 00:37:59,571 வின்ஸ் போய்விட்டார். அவர் வீட்டைப் பார்க்கப் போய்விட்டார். 614 00:37:59,655 --> 00:38:01,782 நீ அவரை அழைத்து வர வேண்டும். வெளியே பாருங்கள். 615 00:38:04,451 --> 00:38:07,246 இல்லை, அதைப் பார்த்தீர்களா? எவ்வளவு வேகமாக வருகிறது என்று பாருங்கள். 616 00:38:19,383 --> 00:38:23,720 ஏதோ ஒரு இடத்தில் மதகுகள் உடைந்துவிட்டதாக சொல்கிறார்கள், அதோடு… 617 00:38:27,850 --> 00:38:28,934 ஹேய், நான் வின்ஸ். 618 00:38:29,017 --> 00:38:31,520 ஆனாவோ நானோ பதிலளிக்க முடியவில்லை. செய்தியை பதிவிடுங்கள். 619 00:38:33,397 --> 00:38:35,607 வின்ஸ், ஆனா பேசுகிறேன். நீ அங்கு இருந்தால், பதிலளி. 620 00:38:39,236 --> 00:38:40,654 வின்ஸ், நீ அங்கே இருக்கிறாயா? 621 00:38:43,365 --> 00:38:46,285 வின்ஸ்? வின்ஸ், போனை எடு. 622 00:38:48,912 --> 00:38:49,913 வின்ஸ். 623 00:39:40,839 --> 00:39:42,841 வசனத் தமிழாக்கம் அருண்குமார்