1 00:00:12,262 --> 00:00:15,015 இன்று, நகரத்தில் சிக்கியவர்களின் நிலைமை மோசமடைந்து வரும் 2 00:00:15,098 --> 00:00:17,768 -செய்தியைப் பார்க்கிறோம். -புயலுக்கு மூன்று நாட்களுக்குப் பின், 3 00:00:17,851 --> 00:00:19,937 நியூ ஆர்லியன்ஸ் நகரம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தது? 4 00:00:20,562 --> 00:00:22,606 இயற்கை அழிக்காததை. கொள்ளையர்கள் அழிக்கிறார்கள். 5 00:00:22,689 --> 00:00:25,317 வெள்ளம் சூழ்ந்த தெருக்களில், கலவரமும் கொள்ளையும் நிகழ்கிறது. 6 00:00:25,400 --> 00:00:26,568 -நிறுத்து! -...மக்கள் தங்கள் வாழ்க்கையை 7 00:00:26,652 --> 00:00:28,862 -மீட்க போராடுகிறார்கள். -என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. 8 00:00:28,946 --> 00:00:30,322 ...இது அழிவுகரமானது. 9 00:00:30,405 --> 00:00:31,782 ...குழப்பமான சூழ்நிலையில் 10 00:00:31,865 --> 00:00:33,951 நியூ ஆர்லியன்ஸ் காவல்துறை ஆள்பற்றாகுறையை கண்டறிந்துள்ளது... 11 00:00:34,034 --> 00:00:35,953 அரசு எங்களுக்கு எதுவும் அனுப்பவில்லை. 12 00:00:36,036 --> 00:00:38,747 திருடர்கள் திருடாமல் விட்டதை கண்டுபிடிப்பதைத்தான் காவலர்கள் சாப்பிடுகின்றனர். 13 00:00:38,830 --> 00:00:40,916 எங்களுக்கு உணவளிப்பதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். 14 00:00:40,999 --> 00:00:43,669 விரக்தியில் இருக்கிறேனா? கண்டிப்பாக. நாம் எல்லோரும் விரக்தியில் இருக்கிறோம். 15 00:00:43,752 --> 00:00:45,712 உதவி! 16 00:00:45,796 --> 00:00:48,048 மீண்டும் இயல்பு நிலை திரும்ப மக்கள் விரும்புவதை முழுமையாக புரிந்துகொள்கிறேன். 17 00:00:48,131 --> 00:00:49,091 முக்கிய செயல்பாடு 18 00:00:49,174 --> 00:00:52,469 சரியான முறையில் கையாளப்படாமல் இருக்கும் போது எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. 19 00:00:52,553 --> 00:00:53,971 அரசு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. 20 00:00:54,054 --> 00:00:57,641 உன்னைத்தான் குறை சொல்வேன், ரே நாகின், இங்குள்ள மக்களுக்கு நீ தேவைப்படுவதால். 21 00:00:57,724 --> 00:01:01,103 தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் ஏழை மற்றும் மிகவும் தேவைப்படும் 22 00:01:01,186 --> 00:01:04,897 பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஏமாற்றமடைய செய்தன என்பதற்கு மிகவும் தெளிவான எடுத்துக்காட்டு 23 00:01:04,982 --> 00:01:06,191 என்று இதை நினைவில் கொள்ளலாம்... 24 00:01:06,275 --> 00:01:07,818 அரசுக்கு இன்று வரை 25 00:01:07,901 --> 00:01:09,736 நிவாரண மையங்களில் உள்ள மக்களைப் பற்றி தெரியாது. 26 00:01:09,820 --> 00:01:13,657 எங்களிடம் குழந்தை இருக்கிறது, அதற்கு பாலும், தண்ணீரும் இல்லை. 27 00:01:13,740 --> 00:01:15,450 தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் எங்கே? அரசு எங்கே? 28 00:01:16,994 --> 00:01:19,162 இங்கே யார் பொறுப்பில் இருக்கிறார்கள்? 29 00:01:19,246 --> 00:01:20,914 அதிகாரிகள் நீங்கள் தான். 30 00:01:20,998 --> 00:01:21,832 அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை 31 00:01:23,584 --> 00:01:25,961 எனவே, மெமோரியலில் நான்காவது நாள் பற்றி பேசலாம். 32 00:01:26,044 --> 00:01:26,879 மெமோரியல் மருத்துவ மையம் 33 00:01:26,962 --> 00:01:29,339 நான்காவது நாளில், 34 00:01:29,423 --> 00:01:32,926 மருத்துவமனையில் உள்ள அவசர வழிப்பாதை வரை தண்ணீர் தேங்கியிருந்தது. 35 00:01:33,010 --> 00:01:38,390 கட்டிடத்தில் மின்சாரத்தை முழுதாக இழந்துவிட்டோம். எல்லா உபகரணங்களும் வேலை செய்யவில்லை. 36 00:01:38,473 --> 00:01:40,434 நோயாளிகளுக்கு உதவி செய்ய தேவையான எல்லாமே. 37 00:01:41,768 --> 00:01:42,936 நோயாளிகள், இறக்கத் தொடங்கினார்கள், 38 00:01:43,020 --> 00:01:48,650 அவர்களுக்கு உதவ எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 39 00:01:51,486 --> 00:01:53,947 எனவே, எந்த கட்டத்தில் மக்கள் பீதியடைய தொடங்கினார்கள்? 40 00:01:55,073 --> 00:01:56,283 நாங்கள் பீதியடையவில்லை. 41 00:01:57,451 --> 00:01:59,328 என்ன, நீங்கள் பயப்படவில்லையா? 42 00:02:05,959 --> 00:02:11,131 மதகுகள் உடைந்த பிறகு, ஒரு நாள்... ஒரு முழு நாள் கழியும் வரை 43 00:02:11,757 --> 00:02:14,968 நகர அளவிலோ தேசிய அளவிலோ ஒருவர் கூட எந்த விதமான 44 00:02:15,052 --> 00:02:17,679 அவசர பிரகடனத்தையும் செய்யவில்லை. 45 00:02:17,763 --> 00:02:21,016 எங்களை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது, யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை. 46 00:02:23,727 --> 00:02:25,103 ஆம், நாங்கள் பயப்பட்டிருக்க வேண்டும். 47 00:02:25,187 --> 00:02:29,149 நோயாளிகளைக் காப்பாற்ற நாங்கள் போராட ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் செய்யவில்லை. 48 00:02:29,233 --> 00:02:30,609 நாங்கள் பீதியடைந்தோம் என்பதால் அல்ல, 49 00:02:30,692 --> 00:02:33,111 ஆனால் போதுமான அளவு பீதியடையத் தெரியாததால். 50 00:02:33,820 --> 00:02:36,281 மருத்துவமனையில் 45 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 51 00:02:37,282 --> 00:02:38,951 அந்த நோயாளிகளில் யாராவது கொல்லப்பட்டார்களா? 52 00:02:42,621 --> 00:02:44,998 நீங்கள் மருத்துவமனையின் நெறிமுறைக் குழுவின் தலைவராக இருந்தீர்கள். 53 00:02:45,082 --> 00:02:47,125 -அவர்களில் சிலர் வேண்டுமென்றே... -என்னைக் கேட்டால்... 54 00:02:47,209 --> 00:02:49,962 ...கொல்லப்பட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்க யாரையும் விட நீங்கள் தான் பொருத்தமானவர். 55 00:02:58,053 --> 00:02:59,596 நெறிமுறைகள்... 56 00:03:04,184 --> 00:03:05,519 நான் என்ன சொல்ல முடியும் என்றால்... 57 00:03:05,602 --> 00:03:08,355 நோயாளிகள் அவதிப்படும் அளவைக் 58 00:03:09,648 --> 00:03:12,901 குறைக்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி 59 00:03:14,236 --> 00:03:19,700 நடந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். 60 00:03:21,827 --> 00:03:24,913 மெமோரியலில் அந்த இறுதி நாட்களில்... 61 00:03:28,959 --> 00:03:30,586 இருந்ததெல்லாம் துயரம் தான். 62 00:03:34,173 --> 00:03:38,260 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 63 00:03:41,054 --> 00:03:45,809 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 64 00:03:46,894 --> 00:03:51,690 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 65 00:03:51,773 --> 00:03:56,987 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 66 00:03:57,070 --> 00:04:01,658 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 67 00:04:01,742 --> 00:04:07,039 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 68 00:04:07,122 --> 00:04:11,126 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 69 00:04:12,085 --> 00:04:17,007 மனிதன் தண்ணீரில் இறங்கினான், கடவுளே 70 00:04:17,089 --> 00:04:21,261 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 71 00:04:22,095 --> 00:04:25,766 பிரார்த்தனை செய்ய இறங்கிச் சென்றான் 72 00:04:27,392 --> 00:04:31,230 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 73 00:04:32,481 --> 00:04:37,319 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 74 00:04:37,402 --> 00:04:38,820 ஷெரி ஃபின்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 75 00:04:38,904 --> 00:04:41,281 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 76 00:04:41,990 --> 00:04:46,995 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 77 00:04:52,125 --> 00:04:58,131 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 78 00:05:01,969 --> 00:05:04,429 நாள் நான்கு 79 00:05:20,612 --> 00:05:22,906 ரிச்சர்ட்? ஏதாவது கிடைத்ததா? 80 00:05:22,990 --> 00:05:25,450 எதுவுமில்லை. எந்தவொரு ஹெலிகாப்டரும் தரையிறங்கவில்லை. 81 00:05:25,534 --> 00:05:28,704 சரி. உனக்கு ஏதாவது தெரிந்தால் உடனடியாக சொல். 82 00:05:29,663 --> 00:05:30,664 சொல்கிறேன். 83 00:05:45,721 --> 00:05:47,848 -இவை எங்கே கிடைத்தன? -பையிலிருந்து கையை எடு. 84 00:05:47,931 --> 00:05:49,892 -இவற்றை எடுத்துக்கொள்கிறேன். -யார் சொன்னது? 85 00:05:50,976 --> 00:05:52,102 பதில் சொல். 86 00:05:52,186 --> 00:05:54,313 -எனக்கு இவை தேவை. -யார் உனக்கு அனுமதி கொடுத்தது? 87 00:05:54,396 --> 00:05:56,106 உன் அனுமதி எனக்கு தேவையில்லை. 88 00:05:56,190 --> 00:05:58,775 -இவற்றை நோயாளிகளுக்கு எடுத்துப் போகிறேன். -நாம் கூடாது... 89 00:05:58,859 --> 00:06:01,069 -இங்கே என்ன நடக்கிறது? -இவன் தண்ணீரை திருடுகிறான். 90 00:06:01,153 --> 00:06:03,822 -நான் எதையும் திருடவில்லை... -பிறகு அதெல்லாம் என்ன? 91 00:06:03,906 --> 00:06:05,449 இது மருத்துவமனையுடையது. உன்னுடையது அல்ல. 92 00:06:05,532 --> 00:06:07,075 உன்னை இந்த பிரிவில் வேலை செய்ய சொன்னார்களா? 93 00:06:08,660 --> 00:06:10,370 -இல்லை. -இங்கிருந்து கிளம்பு. 94 00:06:12,080 --> 00:06:13,081 போ! 95 00:06:19,004 --> 00:06:20,297 சரி, வா... 96 00:06:22,758 --> 00:06:24,760 இதை எடுத்து வைக்கலாம். 97 00:06:24,843 --> 00:06:27,930 -சரி. -நோயாளிக்கு ஒன்று கொடுங்கள். 98 00:06:44,571 --> 00:06:48,325 ஒரு ஹெலிகாப்டர் வருகிறது. வந்துவிட்டார்கள்! போகலாம்! 99 00:06:51,161 --> 00:06:54,748 சூசன்! ஒரு ஹெலிகாப்டர் வந்திருக்கிறது. நோயாளிகளை மேலே அனுப்பத் தொடங்குங்கள். 100 00:06:54,831 --> 00:06:55,958 கடவுளே. நன்றி. 101 00:06:56,041 --> 00:06:58,252 உயிருக்கு போராடும் நோயாளிகளை அனுப்பத் தொடங்குகிறோம். 102 00:06:58,335 --> 00:07:01,004 -கேரென், கேட்கிறதா? -சூசன்? 103 00:07:01,088 --> 00:07:04,466 ஒரு ஹெலிகாப்டர் இருக்கிறது. உன் நோயாளிகளை அனுப்பத் தொடங்கு. 104 00:07:04,550 --> 00:07:06,301 சரி, புரிந்தது. அவர்களை அனுப்பத் தொடங்குகிறேன். 105 00:07:06,385 --> 00:07:09,221 சரி, வாருங்கள். நாம் அவர்களை கீழே இறக்கப் போகிறோம். 106 00:07:09,304 --> 00:07:12,099 சரி, நம் நோயாளிகளை இறங்குதளத்துக்கு கொண்டு போகப் போகிறோம். வாருங்கள். போகலாம். 107 00:07:12,182 --> 00:07:14,476 கேரென். கேரென், லிஃப்டுகள் இயங்கவில்லை. 108 00:07:15,185 --> 00:07:16,353 ஓ, ச்சே. 109 00:07:18,230 --> 00:07:19,231 சரி. 110 00:07:25,571 --> 00:07:27,573 சரி, பேட்டரி விளக்கை கொண்டுவா. 111 00:07:27,656 --> 00:07:31,535 வேலை செய்ய முடிந்த எல்லோரும் தயவுசெய்து இங்கே வாருங்கள். 112 00:07:31,618 --> 00:07:34,538 சரி. நீ, இங்கே வா. சரி. 113 00:07:35,914 --> 00:07:37,332 -எல்லோரும், பாருங்கள். -சரி. 114 00:07:37,416 --> 00:07:40,752 துணியின் பக்கங்களை பிடியுங்கள். சரி, இறுக்கமாக பிடிக்க வேண்டும். 115 00:07:40,836 --> 00:07:43,755 யாரும் அசட்டையாக இருக்க வேண்டாம். நான் சொல்லும் வரை நகராதீர்கள். 116 00:07:43,839 --> 00:07:45,215 நாம் இப்படியே நோயாளிகளை இறங்குதளம் வரை 117 00:07:45,299 --> 00:07:48,468 கொண்டு போகப்போகிறோம். புரிகிறதா? 118 00:07:49,052 --> 00:07:53,473 சரி. எல்லோரும், கவனமாக இருங்கள். கவனமாக செயல்படுங்கள். கவனமாக இருங்கள். 119 00:07:53,557 --> 00:07:56,435 -இங்கே இன்னும் சூடாக இருக்கிறது. -கவனமாக வாருங்கள். 120 00:07:56,518 --> 00:07:57,728 கொஞ்சம் உயரமாக தூக்குங்கள். 121 00:07:57,811 --> 00:07:59,354 சரி. மெதுவாக. 122 00:07:59,438 --> 00:08:01,398 கவனமாக வாருங்கள். சரி. 123 00:08:03,192 --> 00:08:04,443 மூலையைச் சுற்றிச் செல்லுங்கள். 124 00:08:05,694 --> 00:08:06,904 ஓய்வு தேவைப்பட்டால் சொல்லுங்கள். 125 00:08:06,987 --> 00:08:09,573 -சரி, கவனமாக வாருங்கள். இன்னொரு மூலை. -மெதுவாக. 126 00:08:09,656 --> 00:08:10,490 சரி. 127 00:08:10,574 --> 00:08:12,826 நாடித்துடிப்பு நன்றாக இருக்கிறது. கொண்டுபோக தயாராக இருக்கிறார். 128 00:08:12,910 --> 00:08:15,871 ஹேய், பொறு! இந்த பக்கம். 129 00:08:15,954 --> 00:08:17,247 முதலில் கவலைக்கிடமான நோயாளிகளை கொண்டு போகிறோம், 130 00:08:17,331 --> 00:08:19,166 -இறங்கு தளத்திற்குச் செல்ல ஏறிப்போக வேண்டும். -சரி. 131 00:08:19,249 --> 00:08:21,376 இந்த தளத்தைத் தாண்டி வேறொரு நடைபாதைக்கு சென்று, 132 00:08:21,460 --> 00:08:22,794 மீண்டும் வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றி வந்து, 133 00:08:22,878 --> 00:08:25,339 -சாய்வு தளம் வழியாக இறங்குதளம் போக வேண்டும். -பொறு, இதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? 134 00:08:26,006 --> 00:08:28,300 -சுமார் 40 நிமிடங்கள் ஆகும். -நாற்பது நிமிடங்களா? 135 00:08:28,383 --> 00:08:30,385 -ஒவ்வொரு நோயாளிக்குமா? இந்த சூட்டிலா? -ஆம். 136 00:08:30,469 --> 00:08:32,261 வாகன நிறுத்துமிடத்தில் உள்ள லிஃப்ட்டுகள் இயங்கவில்லை. 137 00:08:32,346 --> 00:08:34,056 மேலே போக எந்த நல்ல வழியும் இல்லை. சரியா? 138 00:08:34,139 --> 00:08:35,599 -சரி. -சரி. 139 00:08:35,682 --> 00:08:37,726 சரி. ஹேய், வாருங்கள்! அவரை இங்கே கொண்டு வாருங்கள். 140 00:08:37,808 --> 00:08:40,270 -லோரி, தொடர்ந்து நோயாளிகளை கொண்டு வாருங்கள். -புரிந்தது. 141 00:08:40,354 --> 00:08:42,606 சரி, வாருங்கள். சரி, போகலாம். 142 00:08:43,315 --> 00:08:44,483 போகலாம். 143 00:08:44,566 --> 00:08:45,984 -வாருங்கள். -செல்லுங்கள். 144 00:08:55,702 --> 00:08:56,703 அமெரிக்கா கடலோர காவல்படை 145 00:09:08,632 --> 00:09:10,008 என்ன நடந்தது? 146 00:09:10,092 --> 00:09:13,011 இவரால் பேச முடியவில்லை. இவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. 147 00:09:17,391 --> 00:09:19,601 -ஆம், இது வெப்ப பக்கவாதம். -இவர் வலியால் துடிக்கிறார். 148 00:09:19,685 --> 00:09:22,020 -இவருக்கு கொடுக்க ஏதாவது இருக்கிறதா? -போதுமான நேரம் இல்லை. 149 00:09:22,104 --> 00:09:23,313 -போதுமான நேரம் இல்லையா? -ஆம். 150 00:09:23,397 --> 00:09:25,440 -நோயாளிகளை நகர்த்த நான் தயாராக வேண்டும். -இவர் வலியால் துடிக்கிறார். 151 00:09:26,900 --> 00:09:28,068 ஈரமான துண்டை கொண்டு வந்து, 152 00:09:28,151 --> 00:09:29,903 -இவரை குளிர்ச்சியாக வைத்திரு... -இவரை அப்படியே அவதிப்பட விட்டுவிடுவீர்களா? 153 00:09:30,612 --> 00:09:31,655 ஆனா. 154 00:09:52,009 --> 00:09:55,596 கென், நோயாளியின் வலியை போக்க ஏதாவது வேண்டும். 155 00:09:55,679 --> 00:09:58,348 -அசௌகரியமா? -வலி. வலி! 156 00:09:58,432 --> 00:09:59,641 மார்பின் இருக்கிறது. 157 00:10:00,184 --> 00:10:01,351 ஐந்து மில்லிகிராம் வேண்டும். 158 00:10:01,435 --> 00:10:03,187 நீங்கள் மருந்துச் சீட்டை நிரப்ப வேண்டும். 159 00:10:03,687 --> 00:10:05,022 என்ன விளையாடுகிறாயா? 160 00:10:05,105 --> 00:10:08,150 நாங்கள் பதிவு செய்ய வேண்டும். இவ்வளவு நடந்ததற்கு பிறகும் கூட, 161 00:10:08,233 --> 00:10:10,485 நாங்கள் நடத்தை விதியை பின்பற்ற வேண்டும். 162 00:10:21,830 --> 00:10:23,165 சீக்கிரம் தர முடியுமா? 163 00:10:30,797 --> 00:10:32,299 சீக்கிரம் தர முடியுமா? 164 00:11:06,166 --> 00:11:07,960 -ஆனா. -இவரை வலியால் துடிக்க விடமாட்டேன். 165 00:11:18,011 --> 00:11:21,682 சரி, நாம் இவரை இங்கிருந்து வெளியேற்றும் வரை இவர் நன்றாக இருப்பார். 166 00:11:23,517 --> 00:11:24,518 ஆனா. 167 00:11:26,061 --> 00:11:28,772 சில ஊழியர்கள், அவர்கள் தங்கள் கார்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். 168 00:11:28,856 --> 00:11:32,276 AC ஓடவிட்டு, கொஞ்சம் இசையை ரசிக்கிறார்கள். 169 00:11:32,359 --> 00:11:36,697 ஹோரஸ். நான் நன்றாக இருக்கிறேன். பரவாயில்லை. 170 00:11:40,367 --> 00:11:43,287 நோயாளிகளை இறங்குதளத்திற்கு வேகமாக கொண்டு போக ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். 171 00:11:43,370 --> 00:11:45,539 -உன்னால் முடிந்த ஏதோவொரு வழியில். -சரி. புரிகிறது. 172 00:11:46,456 --> 00:11:47,374 என்ன இது? 173 00:11:47,457 --> 00:11:49,126 எங்கள் லைஃப்கேர் நோயாளிகளின் பட்டியலை கேட்டீர்கள். 174 00:11:49,209 --> 00:11:51,086 -சரி. நன்றி. -ஏற்கனவே மருத்துவமனையில் இருந்த 175 00:11:51,170 --> 00:11:53,297 நோயாளிகள், அதோடு இங்கே மாற்றப்பட்ட நோயாளிகள் உட்பட 176 00:11:53,380 --> 00:11:55,632 -மொத்தம் 53 பேர். இருவர் இறந்துவிட்டனர். -சரி. 177 00:11:55,716 --> 00:11:57,593 -சூசன். மன்னிக்கவும். -எங்களிடம் இன்னொரு ஏழு... 178 00:11:57,676 --> 00:12:00,971 -மன்னிக்கவும். இதோ வருகிறேன். -குளுக்கோஸ் போன்றவற்றை இடைநிறுத்த வேண்டும். 179 00:12:01,054 --> 00:12:04,391 தேர்ந்தெடுத்தவர்களில் ஆபத்து அதிகம், வெளியேற்றுவதற்காக... 180 00:12:04,474 --> 00:12:05,851 மன்னிக்கவும். 181 00:12:06,810 --> 00:12:07,811 பட்டியல். 182 00:12:07,895 --> 00:12:09,146 அது சாண்ட்ராவிடம் இருக்கிறது. 183 00:12:09,229 --> 00:12:11,106 அவர் என்ன... என்ன... மன்னிக்கவும். 184 00:12:11,815 --> 00:12:13,859 -அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? -நான்... 185 00:12:13,942 --> 00:12:16,570 எங்களால் முடிந்ததை செய்கிறோம், 186 00:12:16,653 --> 00:12:18,572 அதோடு எங்களுக்கு தெரிய வருவதை உனக்கு தெரிவிப்போம். 187 00:12:18,655 --> 00:12:20,199 என்ன தெரிய வேண்டும்? 188 00:12:21,074 --> 00:12:25,579 எங்களிடம் வெளியேற்ற வேண்டிய 54... 53 நோயாளிகள் இருக்கிறார்கள். 189 00:12:25,662 --> 00:12:29,208 நாங்கள் தேசிய காவல்படை வண்டிகளுக்காக காத்திருக்கிறோம், அது இன்னும் வரவில்லை. 190 00:12:30,042 --> 00:12:34,588 வராத ஹெலிகாப்டர்களுக்காக காத்திருந்தோம். உன் பாட்டியல் எங்களிடம் இருக்கிறது. 191 00:12:34,671 --> 00:12:39,510 சுழற்சி முறையில் உன் நோயாளிகளையும் வெளியேற்ற முயற்சிக்கிறோம். 192 00:12:39,593 --> 00:12:43,347 இப்போது, நீ திரும்பிச் சென்று உன் நோயாளிகளுடன் இருக்க வேண்டும். 193 00:12:43,972 --> 00:12:47,684 நீ பிரிவு மேலாளர்களிடம் பேச வேண்டும். 194 00:12:47,768 --> 00:12:50,229 உணவையும் தண்ணீரையும் சேமிக்கத் தொடங்க வேண்டும். 195 00:12:50,896 --> 00:12:52,648 மிகக் குறைந்த அளவுக்கு போக வேண்டும். 196 00:12:52,731 --> 00:12:53,982 ஆரோக்கியமான நோயாளிகள்... 197 00:13:01,823 --> 00:13:02,824 அமெரிக்க கடலோர காவல்படை 198 00:13:09,206 --> 00:13:11,250 உதவி! எங்களுக்கு உதவி வேண்டும்! 199 00:13:12,376 --> 00:13:15,212 இல்லை, தயவுசெய்து. எங்களுக்கு உதவுங்கள், தயவுசெய்து! 200 00:13:17,130 --> 00:13:19,591 எங்களுக்கு உதவி தேவை, சரியா? செய்யுங்கள். 201 00:13:20,425 --> 00:13:22,135 உதவுங்கள். எங்களுக்கு உதவி தேவை. 202 00:13:22,219 --> 00:13:25,889 உள்ளே வாருங்கள். நான் பிடிக்கிறேன். உள்ளே வாருங்கள். 203 00:13:25,973 --> 00:13:26,807 நன்றி. 204 00:13:26,890 --> 00:13:28,517 -தொடர்ந்து வாருங்கள். -ஒன்றுமில்லை, அம்மா. 205 00:13:28,600 --> 00:13:31,270 இறங்குதளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் பறப்பதை மக்கள் பார்க்கிறார்கள். 206 00:13:32,062 --> 00:13:33,772 அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உதவுவோம் என்று நினைக்கிறார்கள். 207 00:13:35,566 --> 00:13:37,693 இந்த நிலையில் மக்கள் தஞ்சம் அடையும் இடமாக மருத்துவமனை தோன்றுகிறது. 208 00:13:38,902 --> 00:13:40,529 அவர்கள் நம்மிடம் வருகிறார்கள். 209 00:13:42,030 --> 00:13:43,323 எத்தனை பேர்? 210 00:13:43,407 --> 00:13:44,867 இதுவரை சுமார் பத்து பேர். 211 00:13:46,076 --> 00:13:49,413 -நம்மால் மேலும் மக்களை அனுமதிக்க முடியாது. -இது ஒரு மருத்துவமனை. 212 00:13:49,496 --> 00:13:52,833 நாம் வெளியேற்றும் பணியில் இருக்கிறோம். இங்கிருப்பவர்களை நம்மால் கவனித்துக்கொள்ள முடியாது. 213 00:13:52,916 --> 00:13:54,585 மற்றவர்களை நாம் எப்படி கவனித்துக் கொள்ள முடியும்? 214 00:13:54,668 --> 00:13:58,297 எப்படி மக்கள் இங்கே வருவதை தடுப்பது? காவல்துறையை அழைத்தா? 215 00:13:59,715 --> 00:14:03,677 நாம் அழைத்தாலும் கூட, காவல்துறைக்கு நம்மீது எந்த அக்கறையும் இருக்காது. 216 00:14:04,803 --> 00:14:06,638 எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? 217 00:14:08,348 --> 00:14:12,144 மக்களை சுட்டுத்தள்ள வேண்டுமா? அதைப் பற்றியா பேசுகிறோம்? 218 00:14:20,527 --> 00:14:23,322 எது தேவையோ அதை செய்வது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். 219 00:14:37,419 --> 00:14:40,255 சூப்பர்டோம், புயலால் பாதித்த 20,000 மக்களின் இருப்பிடம், 220 00:14:40,339 --> 00:14:41,924 தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. 221 00:14:42,007 --> 00:14:44,885 உள்ளே, கழிவறைகளும், குளிர் சாதன அமைப்பும் உடைந்திருக்கிறது. 222 00:14:44,968 --> 00:14:49,640 இன்று எங்களுக்கு சாத்தியமான எல்லா வளங்களையும் வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளேன். 223 00:14:49,723 --> 00:14:50,641 மைக்கேல். 224 00:14:51,225 --> 00:14:53,310 கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் லைஃப்கேர் மருத்துவமனை 225 00:14:53,393 --> 00:14:56,647 நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றப் போவதில்லை என்று எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். 226 00:14:56,730 --> 00:14:57,564 என்ன? 227 00:14:57,648 --> 00:15:01,109 லைஃப்கேர் நோயாளிகள் சில பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். 228 00:15:01,193 --> 00:15:04,821 அவர்கள் பெயர்களை அனுப்பியிருக்கிறார்கள். மொத்தம் 53 நோயாளிகள். 229 00:15:04,905 --> 00:15:08,325 கடலோர காவல்படைக்கு டெனெட் அனுப்பிய பட்டியலில் அந்த நோயாளிகளின் பெயர்கள் இல்லை. 230 00:15:08,408 --> 00:15:09,993 நான் காவலர் ஒருவரோடு தொடர்பில் இருக்கிறேன். நாம் அவர்களுக்கு சொல்லலாம்... 231 00:15:10,077 --> 00:15:12,204 -மைக்கேல். -53 நோயாளிகள். 232 00:15:12,287 --> 00:15:16,083 கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் மெமோரியல் மருத்துவமனை நோயாளிகளுக்கானது மட்டும் தான். 233 00:15:24,383 --> 00:15:25,717 அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்? 234 00:15:25,801 --> 00:15:28,804 அவர்கள் கடலோர காவல்படையை... தொடர்பு கொண்டதாக ஏதோ சொன்னார்கள். 235 00:15:28,887 --> 00:15:30,764 நம் நோயாளிகள் யாரையும் அழைத்துச் செல்ல முடியாதாம். 236 00:15:31,723 --> 00:15:36,353 "தண்ணீர் பாட்டில்கள் 10 பெட்டி. கையடக்க O2 கலன்கள். 20Dக்கள். 12Eக்கள். அறுபது..." 237 00:15:36,436 --> 00:15:39,523 சூசன். என் ஊழியர்களிடம் என்ன சொன்னீர்கள்? 238 00:15:40,774 --> 00:15:43,277 என்னிடம் தெரிவிக்கப்பட்டதை அவளிடம் சொன்னேன். 239 00:15:43,360 --> 00:15:45,153 நீங்கள் எங்கள் நோயாளிகளுக்கு உதவப் போவதில்லை என்றா? 240 00:15:46,363 --> 00:15:48,949 எங்கள் நிறுவனம் எங்கள் நோயாளிகளுக்கான வாகனங்களை பெற்றுவிட்டார்கள்... 241 00:15:49,032 --> 00:15:51,410 அவை கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள். 242 00:15:51,493 --> 00:15:53,704 கடலோர காவல்படை உங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. 243 00:15:54,413 --> 00:15:56,874 உங்களிடம் ஒரு பெயர் பட்டியலை கொடுத்தேன். 244 00:15:56,957 --> 00:15:58,876 எதற்காக எல்லோருடனும் சேர்த்து எங்களை வெளியேற்றவில்லை... 245 00:15:58,959 --> 00:16:02,838 எனக்கு பதில் தெரிந்தால், சொல்லியிருப்பேன். என்னால் முடியாது. 246 00:16:08,218 --> 00:16:09,761 நீங்கள் உங்கள் மக்களை வெளியேற்றுகிறீர்கள்... 247 00:16:11,763 --> 00:16:12,764 அதோடு... 248 00:16:15,100 --> 00:16:16,935 எங்களை சாக விடுகிறீர்களா? 249 00:16:39,082 --> 00:16:44,880 "அறுபத்தைந்து இன்சுலின் டோஸ்கள். பதினான்கு D50 பைகள் இருக்கின்றன." 250 00:16:45,881 --> 00:16:50,677 NSAIDகள், ஆண்டிபயாடிக்குகள், குமட்டல் எதிர்ப்பு மருந்து, வலி மருந்துகள் குறைவாக உள்ளன. 251 00:17:06,276 --> 00:17:08,153 அவனை சுட்டுவிட்டார்கள். அவர்கள்... 252 00:17:08,737 --> 00:17:12,491 -அந்த கறுப்பினத்தவன் திருடினானா? -டயப்பர்களை எடுத்தான். 253 00:17:12,574 --> 00:17:13,951 காவலர்கள் வந்து அவனை சுட்டார்கள். 254 00:17:14,492 --> 00:17:16,411 அவனை முதுகில் சுட்டுவிட்டு, அப்படியே விட்டுச் சென்றனர். 255 00:17:17,287 --> 00:17:19,957 வெள்ளத்தில் மூழ்குவது நாங்கள்தான், அதோடு அவர்கள் எங்களை சுடுகிறார்களா? 256 00:17:20,665 --> 00:17:23,001 அதாவது, நாங்கள்... 257 00:17:23,544 --> 00:17:25,921 எங்களை மனிதர்கள் கூட மதிக்காமல். 258 00:17:26,880 --> 00:17:27,923 அதாவது, எங்களுக்கு உதவி தேவை. 259 00:17:28,924 --> 00:17:31,260 எங்களுக்கு உதவி தேவை, எங்களை கொல்கிறார்கள். 260 00:17:31,885 --> 00:17:34,513 எங்களை நாய் போல கொல்கிறார்கள். 261 00:17:35,347 --> 00:17:39,184 நாங்கள் அவர்களுக்கு அப்படித்தான். நாங்கள் மக்கள் அல்ல, நாங்கள் மனிதர்கள் அல்ல. 262 00:17:40,102 --> 00:17:41,770 நாங்கள் அவர்களுக்கு வெறும் நாய்கள் தான். 263 00:17:42,604 --> 00:17:45,107 நாங்கள் நாய்கள், அவர்கள் எங்களை கொல்கிறார்கள். 264 00:17:49,027 --> 00:17:51,572 மன்னிக்கவும், சார். இதற்கு மேல் ஏற்ற முடியாது. 265 00:17:51,655 --> 00:17:55,325 நான் சொல்கிறேன், அவ்வளவுதான். இதற்கு மேல் மக்களை ஏற்ற முடியாது. 266 00:17:55,409 --> 00:17:57,452 நீங்கள் இவர்களை அழைத்துப் போக வில்லையென்றால் இவர்கள் இறந்துவிடுவார்கள். 267 00:17:57,536 --> 00:17:59,913 பாரம்! முழு பாரத்தை அடைந்துவிட்டது! 268 00:18:01,498 --> 00:18:03,041 முழு பாரத்தை அடைந்துவிட்டது! 269 00:18:03,125 --> 00:18:06,378 -வெளியேற்ற வேண்டிய 200 பேர் இருக்கிறார்கள்! -ஹேய். ஹேய்! 270 00:18:10,257 --> 00:18:12,467 வாதாடுவதை நிறுத்து, சரியா? ஹெலிகாப்டரைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். 271 00:18:12,551 --> 00:18:15,554 நீ அவர்களின் வேகத்தை குறைக்கிறாய். இவர்கள் எல்லாம் யார்? 272 00:18:16,430 --> 00:18:18,849 -அவர்கள் நோயாளிகளை மேலே கொண்டு வந்தவர்கள். -அவர்கள் இன்னும் இங்கே என்ன செய்கிறார்கள்? 273 00:18:18,932 --> 00:18:21,977 -இது ஆபத்தானது. எல்லோரையும் போக சொல்... -ஹேய்! நான்தான் இங்கே பொறுப்பு. 274 00:18:22,060 --> 00:18:25,230 அப்படியா? நான் விமானப் படையில் இருந்திருக்கிறேன். ஒரு கேப்டனாக. 275 00:18:26,023 --> 00:18:27,608 நான் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றிருக்கிறேன். நீ? 276 00:18:31,904 --> 00:18:34,656 -நான் என்ன செய்ய வேண்டும்? -இவர்களை கீழே இறக்கி விட்டுவிட்டு, 277 00:18:34,740 --> 00:18:35,991 நோயாளிகளை அனுப்ப தயார்படுத்து. 278 00:18:36,617 --> 00:18:39,536 சரி. கவனியுங்கள், நோயாளியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள் யார்? யார்... 279 00:18:39,620 --> 00:18:40,913 யார் இங்கே இருக்க வேண்டியதில்லை? 280 00:18:40,996 --> 00:18:43,707 நீங்கள் இங்கே இருக்க வேண்டியதில்லை என்றால், இறங்கு தளத்தை விட்டு கிளம்புங்கள். 281 00:18:49,588 --> 00:18:52,424 வழி பெரியதாக இல்லை, மூன்றுக்கு மூனே முக்கால் அடி இருக்கலாம், 282 00:18:52,508 --> 00:18:54,718 ஆனால் இது நேரடியாக கட்டிடத்திலிருந்து வாகன நிறுத்துமிடத்துக்குப் போகிறது. 283 00:18:54,801 --> 00:18:57,304 -அதன் வழியே நோயாளிகளை கொண்டு போக முடியுமா? -முடிய வேண்டும். 284 00:18:57,387 --> 00:19:01,642 நம்மால் முடிந்தால், இறங்கு தளம் வரையிலான பயணத்தை 15 அல்லது 20 நிமிடங்களை குறைக்கலாம். 285 00:19:01,725 --> 00:19:03,268 கேரெனை கண்டுபிடி. அவளுக்கு வழி காட்டு. 286 00:19:03,352 --> 00:19:04,561 சரி, செய்கிறேன். 287 00:19:07,314 --> 00:19:11,193 எங்களால் உங்களுக்கு உதவ முடியாது! இது... இது தனியார் இடம். 288 00:19:11,276 --> 00:19:12,569 மன்னிக்கவும். வழிவிடுங்கள். 289 00:19:12,653 --> 00:19:15,072 இது தனியார் இடம்! வேறு எங்காவது செல்லுங்கள்! 290 00:19:15,155 --> 00:19:16,740 என்ன செய்கிறாய்? நீ ஏன் உதவவில்லை? 291 00:19:16,823 --> 00:19:18,867 -உதவுங்கள்! நீங்கள் உதவ வேண்டும்! -பின்னால் போ! 292 00:19:18,951 --> 00:19:20,285 குழந்தைகளுக்கு இடம் கொடுப்பது எப்படி? 293 00:19:20,369 --> 00:19:21,453 குழந்தைகளை வாங்கிக்கொள்ளுங்கள். 294 00:19:21,537 --> 00:19:22,579 -தயவுசெய்து. -அவனிடம் குழந்தைகள் உள்ளனர்! 295 00:19:22,663 --> 00:19:24,915 தம்பி, நான் சொல்கிறேன். பின்னால் போ! 296 00:19:24,998 --> 00:19:26,875 -அட, தயவுசெய்து! -நாம் சுடப்போகிறோமா? 297 00:19:26,959 --> 00:19:28,418 -தம்பி. -உதவுங்கள். 298 00:19:28,502 --> 00:19:30,170 சார்லஸ், இதைப் பற்றி யோசி. அட! 299 00:19:30,254 --> 00:19:31,505 -சுடப்போகிறோமா? -தயவுசெய்து உதவுங்கள். 300 00:19:31,588 --> 00:19:33,340 -அங்கேயே இரு! நான் சொல்கிறேன். -தயவுசெய்து! 301 00:19:33,423 --> 00:19:34,424 பின்னால் போ! 302 00:19:56,947 --> 00:19:59,992 அவர்கள் நமக்கு உதவமாட்டார்கள். வா. நாம் போகலாம். 303 00:20:17,593 --> 00:20:18,594 பொறு. 304 00:20:19,595 --> 00:20:23,182 சார்லஸ். சார்லஸ், நில். ஹேய்! நீ என்ன செய்யப் போகிறாய்? 305 00:20:23,265 --> 00:20:25,100 நீ அவனை சுட்டிருப்பாயா? அவனுடைய குழந்தைகளை? 306 00:20:25,184 --> 00:20:26,602 நீ என்ன செய்தாய்? 307 00:20:28,854 --> 00:20:30,063 என்னிடம் சொன்னதை செய்தேன். 308 00:21:01,303 --> 00:21:04,264 மொபைல் கால்வுன் அங்கே எப்படி இருக்கிறது? 309 00:21:04,348 --> 00:21:07,726 நீ நலமா? நிச்சயமாக தெரியவில்லை 310 00:21:34,169 --> 00:21:35,254 என்ன ஆனது? 311 00:21:40,551 --> 00:21:42,344 அவர்கள் அனைவரும் எங்கே போகிறார்கள்? 312 00:21:57,901 --> 00:21:59,236 அடச்சே. 313 00:22:02,197 --> 00:22:05,242 ஜனாதிபதி புஷ்ஷுடன் ஏர்ஃபோர்ஸ் ஒன்னை நேரலையில் 314 00:22:05,325 --> 00:22:09,037 நீங்கள் பார்க்கும் இதை நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் மேலே 315 00:22:09,121 --> 00:22:11,748 பறக்கிறது என்று மட்டுமே விவரிக்க முடியும். 316 00:22:12,374 --> 00:22:15,544 ஜனாதிபதி புஷ் டெக்சாஸில் இருந்து வாஷிங்டன் DCக்கு பயணிக்கிறார், 317 00:22:15,627 --> 00:22:17,087 ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 318 00:22:17,171 --> 00:22:19,423 பார்வையிட ஜனாதிபதி செல்வாரா என்பதை வெள்ளை மாளிகை இன்னும் 319 00:22:19,506 --> 00:22:21,550 உறுதிப்படுத்தவில்லை, நகரம் மக்களை மீட்க போராடுகிறது. 320 00:22:21,633 --> 00:22:23,051 அவர் தரையிறங்கக் கூட மாட்டாரா? 321 00:22:26,013 --> 00:22:27,639 அவர் ஒன்றும் செய்ய மாட்டார்? 322 00:22:56,502 --> 00:22:57,669 இதோ. பொறுமையாக. 323 00:22:59,296 --> 00:23:00,464 சரி, அவ்வளவுதான். 324 00:23:00,547 --> 00:23:01,548 நோயாளியின் உடைமைகள் 325 00:23:03,300 --> 00:23:05,594 சரி, நல்லது. சரி, போகலாம். 326 00:23:18,482 --> 00:23:19,483 வா. 327 00:23:26,365 --> 00:23:27,616 ஒருவர் பாக்கியிருக்கிறார். 328 00:23:27,699 --> 00:23:31,078 திரு. ஸ்காட், நான் சூசன் முல்டெரிக். எப்படி இருக்கிறீர்கள்? 329 00:23:31,703 --> 00:23:32,871 நரகத்தைப் போல வெப்பத்தில். 330 00:23:32,955 --> 00:23:37,084 ஆம், சரி, எங்களிடம் இருப்பதைக் கொண்டு எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம். 331 00:23:37,167 --> 00:23:40,879 கேரென் சொன்னாளா எல்லாரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுகிறோம் என்று? 332 00:23:40,963 --> 00:23:42,130 ஆம், மேடம். 333 00:23:42,214 --> 00:23:44,675 இப்போது, எங்களால் முடிந்தவரை சீக்கிரம், உங்களை நகர்த்தப் போகிறோம். 334 00:23:45,467 --> 00:23:49,346 உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சரியா? 335 00:23:49,429 --> 00:23:51,473 நான் இங்கேயே இருப்பேன். அது நிச்சயம். 336 00:23:51,974 --> 00:23:52,975 சரி. 337 00:23:56,687 --> 00:23:59,231 கேரேஜில் உள்ள அந்த நுழைவு வழியாக அவரை நுழைக்க முடியுமா? 338 00:23:59,314 --> 00:24:03,277 தெரியவில்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 339 00:24:04,444 --> 00:24:06,697 ஆனால் முயற்சி செய்வதை மெதுவாக்க முடியாது. 340 00:24:07,281 --> 00:24:10,951 லைஃப்கேரில் இன்னொரு நோயாளி இருக்கிறார். இதே பிரச்சினை. உடல்பருமன். 341 00:24:11,034 --> 00:24:12,786 சுமார் 136 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்கலாம். 342 00:24:13,287 --> 00:24:15,789 அவர்கள் கடைசியாக போக வேண்டும். இருவரும். 343 00:24:16,582 --> 00:24:19,209 ஆனால் அவர்களையும் வெளியேற்றுகிறோம், இல்லையா? சூசன்? 344 00:24:20,919 --> 00:24:23,255 நான் வெளியேறுகிறேனா என்றே எனக்குத் தெரியாது. 345 00:24:33,056 --> 00:24:35,767 ஹேய், வின்ஸ் பேசுகிறேன். நானும் ஆனாவும் அழைப்பை ஏற்க முடியவில்லை. 346 00:24:35,851 --> 00:24:36,852 செய்தியை பதிவிடுங்கள். 347 00:24:37,895 --> 00:24:41,440 வின்ஸ், இந்தச் செய்திகளை நீ பெறுவாயா என்று எனக்குத் தெரியவில்லை, 348 00:24:41,523 --> 00:24:44,026 ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 349 00:24:48,238 --> 00:24:51,241 இன்னும் மின்சாரம் வரவில்லை. 350 00:24:53,076 --> 00:24:56,163 எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. யாரும் இல்லை... 351 00:24:56,663 --> 00:24:59,708 யாரும் பொறுப்பில் இல்லை என்பது போல. மருத்துவமனையில் இல்லை. 352 00:24:59,791 --> 00:25:02,044 நகரத்திலோ அல்லது மாநிலத்திலோ யாரும் பொறுப்பில் இல்லை. 353 00:25:03,837 --> 00:25:07,382 அதோடு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 354 00:25:08,258 --> 00:25:10,260 ஒரு நோயாளி இறப்பதை நான் நேரில் பார்த்தேன். 355 00:25:13,597 --> 00:25:17,017 அதாவது, அவர் மிகவும் கஷ்டப்பட்டார், அதோடு அவருக்கு எங்களால் உதவ முடியவில்லை. 356 00:25:34,743 --> 00:25:39,164 வின்ஸ், என் பேட்டரி கிட்டத்தட்ட தீர்ந்து விட்டது. நான்... எனவே என் செல்ஃபோனை அணைக்கப் போகிறேன். 357 00:25:42,960 --> 00:25:45,212 இதை கேட்டவுடன் எனக்கு ஒரு செய்தியை அனுப்புவாயா? 358 00:25:47,005 --> 00:25:48,215 சரி, உன்னை நேசிக்கிறேன். 359 00:26:31,175 --> 00:26:32,176 ஆம். 360 00:26:33,343 --> 00:26:35,137 சரி, சரி... நேராக. 361 00:26:37,139 --> 00:26:39,057 சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் துறை 362 00:26:39,766 --> 00:26:41,018 சூசன். 363 00:26:42,019 --> 00:26:43,478 நீங்கள் இவரிடம் பேச வேண்டும். 364 00:26:45,647 --> 00:26:49,151 ஹாய், நான் மைக் பவுல்ஸ். நான் மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் துறையைச் சேர்ந்தவன். 365 00:26:49,776 --> 00:26:51,528 உங்கள் எல்லோரையும் இங்கிருந்து வெளியேற்றுவோம். 366 00:26:51,612 --> 00:26:56,200 எங்களின் நோயாளிகளின் எண்ணிக்கை 187ல் இருந்து சுமார் 130 ஆகக் குறைந்துவிட்டது. 367 00:26:56,283 --> 00:27:00,120 எங்களின் பொதுவான எண்ணிக்கை 460 மெமோரியல் பணியாளர்கள், 368 00:27:00,204 --> 00:27:05,459 447 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கே தங்க வந்தவர்கள். 369 00:27:05,542 --> 00:27:12,257 53 லைஃப்கேர் ஊழியர்களும் அதே எண்ணிக்கையிலான லைஃப்கேர் நோயாளிகளும் இருக்கிறார்கள். 370 00:27:12,341 --> 00:27:13,550 அவர்கள் எங்கள் நோயாளிகள் அல்ல. 371 00:27:15,928 --> 00:27:18,430 அவர்கள் நம் நோயாளிகள் அல்ல என்பதை ஒரு தகவலுக்காக சொல்கிறேன். 372 00:27:18,514 --> 00:27:19,723 உணவு இல்லாமல் தவிக்கிறோம். 373 00:27:19,806 --> 00:27:22,392 நாளை குடிநீர் தீர்ந்துவிடும். 374 00:27:22,476 --> 00:27:24,394 சரி, நீங்கள் செல்லும் விகிதத்தில், யதார்த்தமாக, 375 00:27:24,478 --> 00:27:26,438 நீங்கள் எல்லோரையும் வெளியேற்றுவது நடக்காத காரியம். 376 00:27:26,522 --> 00:27:28,982 உங்கள் வெளியேற்ற திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். 377 00:27:29,942 --> 00:27:31,527 எப்படி மாற்றியமைப்பது? 378 00:27:31,610 --> 00:27:34,112 இப்போது மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள். 379 00:27:34,196 --> 00:27:35,280 அவர்களுக்கு அதிகம் உதவி தேவை. 380 00:27:35,364 --> 00:27:38,242 அவர்களால் நடமாட முடியாது. அவர்களை நகர்த்துவதற்கு அதிக நேரம் எடுக்கும். 381 00:27:38,325 --> 00:27:41,078 வெளியேறக் கூடிய நோயாளிகள், வெளியேறும் திறன் கொண்டவர்கள், 382 00:27:41,161 --> 00:27:43,038 அவர்களைத்தான் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும். 383 00:27:43,121 --> 00:27:44,915 உங்களிடம் கைப்பட்டைகள் இருக்கின்றனவா? 384 00:27:47,334 --> 00:27:48,418 எங்கோ, ஆம். 385 00:27:48,502 --> 00:27:50,963 அது படிநிலை பட்டைகளாக இருக்க வேண்டும். பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு. 386 00:27:51,713 --> 00:27:54,466 டாக்டர்கள் பட்டைகளை விநியோகிக்க வேண்டும். 387 00:27:54,550 --> 00:27:58,303 தாங்களாகவே நடக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும் நோயாளிகளுக்கு பச்சை பட்டைகள் கொடுங்கள். 388 00:27:58,387 --> 00:28:00,305 உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மஞ்சள் பட்டைகள். 389 00:28:00,389 --> 00:28:03,475 முழுதாக கவனிப்பை சார்ந்திருப்பவர்களுக்கு சிவப்பு பட்டைகள். 390 00:28:04,810 --> 00:28:06,228 கருப்பு பட்டைகள்? 391 00:28:07,271 --> 00:28:09,189 நீங்கள் காப்பாற்ற முடியாது என்று நினைப்பவர்களுக்கு. 392 00:28:10,774 --> 00:28:13,861 இப்போது, இந்த இன்னொரு மருத்துவமனை, லைஃப்கேர். 393 00:28:13,944 --> 00:28:16,238 உங்கள் வெளியேற்றத்தில் எல்லோரும் ஒன்றாக வேலை செய்தால், 394 00:28:16,321 --> 00:28:18,198 நிலையான நடைமுறையை பின்பற்ற வேண்டும். 395 00:28:18,282 --> 00:28:21,827 காப்பாற்ற முடியாது என்று நினைக்கும் நோயாளிகளுக்கு கருப்பு பட்டைகளை கொடுங்கள். 396 00:28:25,497 --> 00:28:29,376 மீண்டும் உயிர்ப்பிக்க தேவையில்லாத நோயாளிகளை கடைசியாக வெளியேறும் 397 00:28:29,459 --> 00:28:31,587 குழுவில் இருக்க நாங்கள் பரிசீலித்தோம். 398 00:28:32,379 --> 00:28:35,757 அப்படி நீங்கள் முடிவு செய்திருந்தால், அவர்களுக்கு கருப்பு பட்டைகளை கொடுங்கள். 399 00:28:36,717 --> 00:28:40,053 எனவே, அப்படிதான் யார் வாழ்வார்கள், யார் சாவார்கள் என்பதை தீர்மானிக்கப் போகிறோம்? 400 00:28:40,137 --> 00:28:41,722 வண்ணக் கைப்பட்டைகளை வைத்து? 401 00:28:41,805 --> 00:28:45,309 உங்கள் நோயாளிகள் எல்லோரையும் காப்பாற்ற முயல்வது என்பது வெளியேறக் கூடிய சிலர் 402 00:28:45,392 --> 00:28:46,560 இறக்க நேரிடும் என்பதுதான். 403 00:28:48,854 --> 00:28:50,272 நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? 404 00:28:50,355 --> 00:28:52,149 -அது... -சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் துறை. 405 00:28:52,232 --> 00:28:54,318 இல்லை, இதுதான் நாங்கள் பயன்படுத்த வேண்டிய 406 00:28:54,401 --> 00:28:56,069 நெறிமுறை என்று யார் சொன்னார்கள்? 407 00:28:56,153 --> 00:28:58,363 மக்கள் ஒன்று சொல்கிறார்கள், இவர் ஒன்று சொல்கிறார், 408 00:28:58,447 --> 00:29:00,949 தேசிய காவல்படை ஒன்று சொல்கிறது, ஆனால் யார் பொறுப்பு என்று எங்களுக்குத் தெரியவில்லை. 409 00:29:01,033 --> 00:29:04,119 யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா? யாரும் இல்லை. 410 00:29:09,291 --> 00:29:12,211 எனவே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். 411 00:29:13,670 --> 00:29:16,590 இப்போது, எங்களால் முடிந்த விரை சீக்கிரம் படகுகளை கொண்டு வரத் தொடங்குவோம். 412 00:29:17,299 --> 00:29:19,134 காலைக்குள் முடியாது. 413 00:29:20,010 --> 00:29:22,346 நடக்கக்கூடியவர்களை, செல்லத் தயாராக வையுங்கள். 414 00:29:37,819 --> 00:29:39,488 அடச்சே. கடவுளே. 415 00:29:42,199 --> 00:29:43,992 என்ன நடந்தது? எல்லோரும் நலமா? 416 00:29:44,076 --> 00:29:46,912 எங்கே போகிறேன் என்று பார்க்க முடியவில்லை. கீழே விழுந்திருப்பேன். 417 00:29:46,995 --> 00:29:48,413 நீங்கள் நலமா? 418 00:29:48,497 --> 00:29:49,498 ஆம். 419 00:29:50,958 --> 00:29:52,918 சரி. நலமாக இருக்கிறீர்கள். 420 00:29:55,003 --> 00:29:56,672 மக்கள் சோர்வடைந்துவிட்டனர். 421 00:29:57,339 --> 00:29:58,757 கவனக்குறைவாக நடக்க தொடங்குகிறார்கள். 422 00:30:00,175 --> 00:30:01,510 அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். 423 00:30:03,345 --> 00:30:06,765 இரவு வெளியேற்றுவதை இடைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். 424 00:30:09,685 --> 00:30:11,228 நிறுத்த விரும்புகிறீர்களா? 425 00:30:11,311 --> 00:30:13,021 இன்றிரவு வேறு என்ன நடக்கப் போகிறது? 426 00:30:13,105 --> 00:30:15,649 நாம் இந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறுவோம் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். 427 00:30:16,400 --> 00:30:18,068 இனி எந்த டிரக்குகளும் வராது. 428 00:30:18,569 --> 00:30:20,112 அந்த சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர், 429 00:30:20,195 --> 00:30:22,990 நாளை காலை வரை படகுகளை கொண்டுவர மாட்டார். 430 00:30:23,073 --> 00:30:24,783 வராத ஹெலிகாப்டர்களுக்காக 431 00:30:24,867 --> 00:30:27,369 இறங்கு தளத்தில் காத்திருந்த ஒருவர் கீழே விழுந்திருப்பார். 432 00:30:28,829 --> 00:30:30,998 நாம் தொடர்ந்தால் யாராவது இறக்கலாம். 433 00:30:31,081 --> 00:30:33,959 நோயாளிகள் ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறார்கள். 434 00:30:34,042 --> 00:30:37,588 சோர்வடைந்த ஊழியர்களுடன் இதை இரவு முழுவதும் செய்ய முயற்சிப்பது... 435 00:30:37,671 --> 00:30:39,339 அது அவர்களுக்கு நல்லதா கேட்டதா? 436 00:30:41,633 --> 00:30:45,804 பாருங்கள், சில மணி நேரம் பற்றி மட்டுமே பேசுகிறேன். சூரிய உதயம் வரை. 437 00:30:51,393 --> 00:30:55,814 நீங்கள் எல்லோரும் நீண்ட நேரமாக, மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். 438 00:30:56,356 --> 00:30:58,525 ஆனால் அதைத் தொடர முடியாது. 439 00:30:59,484 --> 00:31:05,365 இருட்டில் நோயாளிகளை இறங்கு தளத்துக்கு கூட்டிச் செல்ல முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. 440 00:31:05,449 --> 00:31:09,119 எனவே இரவு முழுவதும் வெளியேற்றும் பணியை நிறுத்தி வைக்கிறோம். 441 00:31:09,203 --> 00:31:10,537 இல்லை. அட. 442 00:31:10,621 --> 00:31:14,041 நீங்கள் உங்கள் மக்களிடம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்... 443 00:31:14,124 --> 00:31:16,960 சூசன், கடலோர காவல்படை இரவில் பறக்கமாட்டார்களா? 444 00:31:17,044 --> 00:31:20,881 ஆம், அவர்கள் செய்வார்கள். ஆனால் இது நமக்கு மிகவும் ஆபத்தானது. 445 00:31:20,964 --> 00:31:23,926 தவறுகள் நடக்கின்றன, அதோடு விபத்துகளும் நடக்கின்றன. 446 00:31:24,009 --> 00:31:25,886 எனவே நாம் தொடர்ந்து செய்ய முடியாது. 447 00:31:25,969 --> 00:31:27,804 -நீங்கள் எல்லோரும்... -யாரும் வெளியேறப்போவதில்லை. 448 00:31:27,888 --> 00:31:30,098 -வெளிச்சம் வந்தவுடன்... -எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. 449 00:31:30,182 --> 00:31:31,975 …நாம் வேலையை மீண்டும் தொடங்குவோம். 450 00:31:32,059 --> 00:31:34,561 -வெளிச்சம் வந்ததும்... -பாருங்கள், யாரும் வெளியேறப்போவதில்லை. 451 00:31:34,645 --> 00:31:36,355 …நாளை படகுகளைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். 452 00:31:36,438 --> 00:31:37,814 மூன்று நாட்களாக இங்கே இருக்கிறேன். 453 00:31:37,898 --> 00:31:43,695 எனவே வெளிச்சம் வந்ததும், வேலையை தொடங்குவோம். சரியா? 454 00:31:43,779 --> 00:31:46,240 கார்சன். கார்சன், பரவாயில்லை. 455 00:31:46,323 --> 00:31:49,576 -எனவே எல்லோரும் ஓய்வெடுங்கள்… -நாம் இங்கிருந்து வெளியேறப் போகிறோம். வா. 456 00:31:50,911 --> 00:31:53,038 சூரிய உதயத்தின் போது மீண்டும் சந்திப்போம். 457 00:32:01,755 --> 00:32:03,257 போய் ஓய்வெடுங்கள். 458 00:32:24,027 --> 00:32:25,112 அம்மா. 459 00:32:26,572 --> 00:32:27,573 அம்மா. 460 00:32:28,490 --> 00:32:30,784 காலையில் படகுகள் வருகின்றன. 461 00:32:31,368 --> 00:32:32,995 அவற்றில் ஒன்றில் உங்களை ஏற்றிவிடப் போகிறேன். 462 00:32:33,078 --> 00:32:36,456 -நாம் புறப்படுகிறோமா? -உங்களை ஒரு படகில் ஏற்றிவிடப் போகிறேன். 463 00:32:36,540 --> 00:32:38,458 மாட்டேன். இல்லை! 464 00:32:38,959 --> 00:32:41,795 -நீ வரவில்லை என்றால் நான் போக மாட்டேன். -இதைப் பற்றி நாம் பேசக் கூடாது. 465 00:32:41,879 --> 00:32:45,340 நாம் வாதிடப் போவதில்லை. நீங்கள் படகில் ஏறுகிறீர்கள். 466 00:32:45,424 --> 00:32:46,717 நீங்கள் போகிறீர்கள். 467 00:33:09,948 --> 00:33:13,452 படகுகள் வருகின்றன. எல்லோரும், கீழே வாருங்கள், இப்போதே! 468 00:33:14,411 --> 00:33:15,662 படகுகள் வருகின்றன! 469 00:33:15,746 --> 00:33:18,957 எல்லோரும், இப்போது கீழே வாருங்கள்! 470 00:33:19,458 --> 00:33:24,713 எல்லோரும், கீழே வாருங்கள்! எழுந்திருங்கள்! எல்லோரும், கீழே வாருங்கள்! 471 00:33:24,796 --> 00:33:27,508 வாருங்கள். எழுந்திருங்கள். எல்லோரும், எழுந்திருங்கள்! படகுகள் வருகின்றன! 472 00:33:28,509 --> 00:33:34,556 கீழே வாருங்கள்! ஒரு பையை எடுத்துக்கொள்ளுங்கள்! விலங்குகள் கூடாது! கீழே வாருங்கள்! 473 00:33:34,640 --> 00:33:36,850 ஒரு பை மட்டும்தான். விலங்குகள் கூடாது! 474 00:33:36,934 --> 00:33:38,227 நாம் போக வேண்டும். 475 00:33:38,727 --> 00:33:40,979 -ரோல்ஃபியை என்ன செய்வது? -அது வெறும் பைதான். 476 00:33:41,063 --> 00:33:43,148 ஒரு பை. அவ்வளவுதான். 477 00:33:47,569 --> 00:33:48,946 நாம் போக வேண்டும். 478 00:33:58,288 --> 00:34:00,499 ஒரு பை மட்டும்தான்! விலங்குகள் கூடாது! 479 00:34:02,501 --> 00:34:03,794 எல்லோரும், எழுந்திருங்கள்! 480 00:34:21,687 --> 00:34:23,522 அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் தெரியவில்லை. 481 00:34:24,523 --> 00:34:26,817 -நகரம் அழிந்து வருகிறது -ஹோரஸ். 482 00:34:27,484 --> 00:34:29,235 -ஆம். -ஹோரஸ், என்ன நடக்கிறது? 483 00:34:29,735 --> 00:34:30,737 எனக்குத் தெரியாது. 484 00:34:30,821 --> 00:34:33,447 -சரி, படகுகள் எங்கே? -எனக்குத் தெரியாது. 485 00:35:10,652 --> 00:35:12,696 மேடம், நீங்கள் உள்ளே போக வேண்டும். 486 00:35:15,032 --> 00:35:16,033 மேடம்! 487 00:35:39,014 --> 00:35:40,516 ஆனா, என்ன நடக்கிறது? 488 00:35:40,599 --> 00:35:41,934 படகுகள் வரவில்லை. 489 00:35:42,017 --> 00:35:44,144 -அனுப்பப் போவதாகச் சொன்னார்கள்... -படகுகள் இல்லை. 490 00:35:47,606 --> 00:35:49,149 எல்லோரும், கேளுங்கள். 491 00:35:49,233 --> 00:35:50,234 அமைதி. 492 00:35:50,943 --> 00:35:53,278 -படகுகள் இல்லை. -என்ன? 493 00:35:53,362 --> 00:35:54,863 படகுகள் எதுவும் வரவில்லை. 494 00:35:54,947 --> 00:35:58,700 நீங்கள் நிஜமாகவா? அடடா… 495 00:36:31,358 --> 00:36:33,026 நாம் இதை விட்டுச் செல்ல இருந்தோம். 496 00:36:39,658 --> 00:36:42,327 விங். உங்கள் பொருட்கள் எல்லாம் இங்கே இருக்கிறதா? 497 00:36:43,161 --> 00:36:45,205 -என்ன? -உங்கள் உடமைகள். இங்கே இருக்கிறதா? 498 00:36:49,126 --> 00:36:50,252 மின்னி? 499 00:36:50,335 --> 00:36:52,045 -அப்படிதான் நினைக்கிறேன். -ஆம். 500 00:36:52,921 --> 00:36:56,258 சில ஊழியர்கள், அவர்களின் பொருட்களை காணவில்லை. யாரோ எடுத்திருக்கிறார்கள். 501 00:36:57,176 --> 00:36:58,468 எப்போது எடுத்தார்கள்? 502 00:36:58,552 --> 00:37:02,306 நாங்கள் கீழே இருந்தபோது. இல்லாத படகுகளுக்காக நாம் காத்திருந்தபோது. 503 00:37:07,561 --> 00:37:09,479 கடவுளே. இது நிஜமா? 504 00:37:10,272 --> 00:37:13,692 இவை சேகரித்த துப்பாக்கிகள். இவற்றை வீட்டில் விட்டுவிட்டு வர விரும்பவில்லை. 505 00:37:14,985 --> 00:37:16,987 இவை வேலை செய்யும். அதுதான் முக்கியம். 506 00:37:17,070 --> 00:37:19,031 பாருங்கள், இது தேவையா? பாதுகாப்பு காவலர்கள் இருக்கிறார்கள். 507 00:37:19,114 --> 00:37:23,493 அவர்கள் வேலையைச் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் நம் நோயாளிகள், நம் குடும்பங்கள். 508 00:37:23,577 --> 00:37:24,912 அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். 509 00:37:31,168 --> 00:37:36,215 சூடாக இருக்கிறது. இங்கு எப்போதும் சூடாக இருக்கிறது. 510 00:37:36,965 --> 00:37:39,468 எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. 511 00:37:40,677 --> 00:37:45,766 எங்கள் உணவும் தண்ணீரும் தீர்கிறது. மருந்து இல்லை. 512 00:37:47,601 --> 00:37:49,895 நோயாளிகள் புலம்பி அழுகிறார்கள். 513 00:37:50,687 --> 00:37:53,607 இங்கே துக்க சத்தம் தொடர்ந்து கேட்கிறது. 514 00:37:54,900 --> 00:37:57,319 கழிவறைகள் செயல்படாமல் இருக்கின்றன. 515 00:37:57,402 --> 00:38:02,491 எங்கும் கழிவுநீர் இருக்கிறது. கழிவுகள் மற்றும் மல நாற்றம் வீசுகிறது. 516 00:38:02,574 --> 00:38:06,245 மக்கள் அதனால் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு மக்கள் இறக்கின்றனர். 517 00:38:07,579 --> 00:38:09,456 அவர்கள் ஏற்கனவே இறக்கத் தொடங்கிவிட்டார்கள். 518 00:38:11,959 --> 00:38:13,961 எங்களால் இதை நீண்ட நேரம் தாங்க முடியாது. 519 00:38:15,003 --> 00:38:19,508 எங்களுக்கு உதவி தேவை. மார்க், உன் அம்மாவுக்கு உதவி தேவை. 520 00:38:21,093 --> 00:38:22,719 நீ எங்களுக்கு உதவ வேண்டும். 521 00:38:23,679 --> 00:38:28,642 நீ ஏதாவது செய். தயவுசெய்து ஏதாவது செய். 522 00:38:32,479 --> 00:38:34,898 அவள் பேசியதை கேட்டீர்களா? அவர்களுக்கு உதவி தேவை. 523 00:38:34,982 --> 00:38:39,236 மெமோரியல் மருத்துவமனைக்கு உதவி தேவை, இப்போது தேவை. 524 00:38:40,737 --> 00:38:41,947 கேட்கிறீர்களா? 525 00:38:42,030 --> 00:38:44,616 இந்த நேரத்தில் மெமோரியலில் எல்லா மீட்பு நடவடிக்கைகளுக்கும் 526 00:38:44,700 --> 00:38:47,703 -இரண்டாம் நிலை முன்னுரிமை உள்ளது. -அவள் சொன்னதைக் கேட்டீர்களா? 527 00:38:47,786 --> 00:38:49,329 மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 528 00:38:49,413 --> 00:38:53,125 மெமோரியல் மருத்துவமனைக்கு இரண்டாம் நிலை முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 529 00:38:53,208 --> 00:38:55,878 மக்கள் இங்கு சும்மா நின்றுகொண்டிருக்கிறார்கள். 530 00:38:55,961 --> 00:38:58,881 யாரும் எதுவும் செய்யவில்லை, நீங்கள் எங்களை உதவ அனுமதிக்கமாட்டீர்கள். 531 00:38:59,756 --> 00:39:04,303 ஏதாவது செய்யுங்கள்! 532 00:39:04,386 --> 00:39:07,139 நீங்கள் இந்த இணைப்பிலிருந்து வெளியேற வேண்டும். இப்போதே வெளியேறுங்கள். 533 00:39:18,734 --> 00:39:22,863 நீங்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டீர்களா? முயற்சி கூட செய்ய மாட்டீர்களா? 534 00:39:26,158 --> 00:39:29,786 மார்க். மார்க்! 535 00:39:31,538 --> 00:39:32,539 மார்க். 536 00:39:32,623 --> 00:39:34,458 நடந்தே மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கலாம். 537 00:39:34,541 --> 00:39:37,252 ஆனால் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. நீந்துவதற்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது. 538 00:39:37,336 --> 00:39:39,338 நம்மால் முடிந்தவரை நெருங்கி சென்று, பிறகு... 539 00:39:39,421 --> 00:39:44,426 ஹேய். நீங்கள் மருத்துவமனைக்கு போக வேண்டுமா? நாங்கள் உங்களை அங்கு அழைத்துப் போகிறோம். 540 00:39:46,011 --> 00:39:47,763 -எப்படி? -எங்களிடம் சில படகுகள் உள்ளன. 541 00:39:48,263 --> 00:39:51,225 மக்களுக்கு உதவ வந்தோம். அவர்கள் எங்களை எதுவும் செய்ய விடவில்லை. 542 00:39:51,934 --> 00:39:54,603 தண்ணீரில் இறங்க இடம் கிடைத்தால், உங்களால் மருத்துவமனையைக் கண்டுபிடிக்க முடியுமா? 543 00:39:55,229 --> 00:39:56,563 அதன் இடம் எனக்கு சரியாகத் தெரியும். 544 00:39:56,647 --> 00:39:59,483 -அங்குதான் பிறந்தேன். -வெளிச்சம் வந்தவுடன், போவோம். 545 00:39:59,566 --> 00:40:01,693 இல்லை, இப்போதே போகலாம். மார்க்கால் அதை அடையாளம் காண முடியும். 546 00:40:01,777 --> 00:40:04,738 இல்லை. நகரத்தைச் சுற்றி ஸ்னைப்பர்கள் நகரும் எதையும் சுடுகிறார்கள். 547 00:40:05,364 --> 00:40:08,408 நாங்கள் உதவ விரும்புகிறோம், ஆனால் அதைச் செய்து சாகப் போவதில்லை. 548 00:40:08,492 --> 00:40:12,538 -அது சரிதான். -வெளிச்சம் வந்தவுடன், போவோம். சரியா? 549 00:40:14,498 --> 00:40:15,624 சரி. 550 00:40:28,720 --> 00:40:32,683 இதோ. பரவாயில்லை. கொஞ்சம் கொண்டு வருகிறேன். 551 00:40:35,602 --> 00:40:38,438 சரி, நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுவேன். சரியா? 552 00:41:30,657 --> 00:41:32,326 -ஹேய். -ஹேய். 553 00:41:33,869 --> 00:41:36,413 -பார்ப்போம். -அடக் கடவுளே. நெருப்பாய் கொதிக்கிறது. 554 00:41:36,496 --> 00:41:37,706 எல்லோருக்கும்தான். 555 00:41:37,789 --> 00:41:39,166 இங்கே 105 டிகிரியாக இருக்க வேண்டும். 556 00:41:50,052 --> 00:41:51,720 உன் கணவரை தொடர்புகொள்ள முடிந்ததா? 557 00:41:57,392 --> 00:41:58,519 உன் குடும்பம் எப்படி இருக்கிறது? 558 00:41:59,102 --> 00:42:03,857 நலமாக இருக்கிறார்கள். என் மகள், அவள் சாகச விரும்பி, எனவே… 559 00:42:09,112 --> 00:42:10,822 நீ கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். 560 00:42:10,906 --> 00:42:12,366 நானும் உன்னிடம் அதையே சொல்ல முடியும். 561 00:42:13,450 --> 00:42:15,536 ஆனா, உனக்கு ஓய்வு தேவை. 562 00:42:20,457 --> 00:42:21,583 இதைப் பார். 563 00:42:24,503 --> 00:42:25,712 இது எப்படி... 564 00:42:28,924 --> 00:42:33,136 இப்படி ஒரு மூன்றாம் உலக நாட்டில் நடக்கலாம், இங்கு இல்லை. 565 00:42:33,887 --> 00:42:36,056 எப்படி மக்கள் இங்கு இப்படி நடக்க விட்டார்கள்? 566 00:42:49,194 --> 00:42:52,322 -ஏதாவது நடந்ததா? -ஆம். ஏதோ தீவிரமானதாக தெரிகிறது. 567 00:42:58,328 --> 00:43:00,247 என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? என்ன செய்கிறார்கள் தெரியுமா? 568 00:43:01,039 --> 00:43:02,291 நான் நோயாளிகளைக் கவனிக்க முயற்சிக்கிறேன். 569 00:43:02,374 --> 00:43:06,044 ஹேய்! பொறு. கேரென், நம்மிடம் குடும்பங்கள் உள்ளன, எல்லோரும் உதவிக்காக நம்மிடம் வருகிறார்கள், 570 00:43:06,128 --> 00:43:08,088 ஆனால் அவர்கள் செய்வது எல்லாம் அவர்களை துரத்துவதுதான். 571 00:43:08,589 --> 00:43:09,756 ஏன் என்று உனக்கே தெரியும். 572 00:43:12,217 --> 00:43:15,512 அவர்கள் பயப்படுகிறார்கள். துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். 573 00:43:16,388 --> 00:43:17,806 இது நம்மை பற்றியது அல்ல. 574 00:43:17,890 --> 00:43:20,392 நீ செய்திகளைக் கேட்பதில்லையா? 575 00:43:21,143 --> 00:43:23,896 அவர்கள் நம்மை சுடுகிறார்கள், கேரென். நம்மை பின்னால் சுடுகிறார்கள். 576 00:43:23,979 --> 00:43:27,232 இங்குள்ள மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் அதிக பேரை சேர்த்துகொள்ள விரும்புகிறாயா? 577 00:43:28,108 --> 00:43:29,109 உனக்கு நிஜமாகவே நம் மீது அக்கறை இருந்தால், 578 00:43:29,193 --> 00:43:31,278 நீ யாரையும் இந்த இடத்திற்குள் அனுமதிக்க மாட்டாய். 579 00:43:31,361 --> 00:43:32,654 ஒருவரைக்கூட. 580 00:44:04,186 --> 00:44:05,854 இப்போது காத்திருக்க வேண்டும். 581 00:44:06,647 --> 00:44:08,148 என்னால் முடியவில்லை. 582 00:44:13,445 --> 00:44:14,988 இது குளிர்விக்க உதவும். 583 00:45:23,891 --> 00:45:26,768 ...புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 584 00:45:26,852 --> 00:45:29,313 சில வாரங்கள் கிடைக்கும் என்று... 585 00:45:29,396 --> 00:45:32,065 …நகரம் முழுவதும் ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 586 00:45:32,566 --> 00:45:33,817 நிறைய சேதம். 587 00:45:34,610 --> 00:45:37,112 -...இராணுவச் சட்டம் அமலானது. -...சேதம். 588 00:45:37,196 --> 00:45:40,032 சூப்பர்டோமின் முழு மேற்கூரையையும் புயல் அடித்துச் சென்றுவிட்டது. 589 00:45:40,115 --> 00:45:42,451 இது உண்மையில் வெள்ளம் புகுந்த பெய்ரூட் நகரம் போல இருக்கிறது. 590 00:45:42,534 --> 00:45:44,161 அப்படித்தான் தெரிகிறது... 591 00:46:24,368 --> 00:46:29,164 இங்கே நடப்பது சரியல்ல. மோசமானவர்கள். 592 00:46:29,248 --> 00:46:32,459 தீய சக்திகள் அதிகாரத்தை எடுத்துக்கொண்டன 593 00:47:43,071 --> 00:47:45,073 வசனத் தமிழாக்கம் அருண்குமார்