1 00:01:23,542 --> 00:01:26,629 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 2 00:01:37,848 --> 00:01:42,102 மெக்டில் படை விமானத்தளம் டாம்பா, ஃப்ளோரிடா 3 00:02:51,881 --> 00:02:54,550 நதி வேலைக்கு சாக்-ஆர் இதைக் காட்டிலும் சிறப்பான படகாயிருக்கும். 4 00:02:56,886 --> 00:02:57,970 என்ன படகு? 5 00:02:58,637 --> 00:03:00,014 நாம் அங்கு போவதாகக் கூட இல்லையே. 6 00:03:02,766 --> 00:03:04,685 எங்கு போகிறோம், மத்திய அமெரிக்காவா தென் அமெரிக்காவா? 7 00:03:06,854 --> 00:03:08,439 நாம் போகுமிடம் பற்றி யார் சொன்னாங்க? 8 00:03:09,440 --> 00:03:10,816 என் ஸ்பானிஷ் பற்றி கேட்டியே, நினைவிருக்கா? 9 00:03:11,650 --> 00:03:13,986 நாம் தற்போது மெக்ஸிகோவை கைப்பற்றுவதாக இல்லைனு நினைக்கிறேன். 10 00:03:22,745 --> 00:03:24,121 பைஷையை பேசி ரொம்ப நாள் ஆச்சு. 11 00:03:25,623 --> 00:03:26,707 சமாளிப்பேன். 12 00:03:29,793 --> 00:03:31,921 சீக்கிரமா விமானத்தில் ஏறு, 13 00:03:32,338 --> 00:03:33,881 ஜன்னலோர இருக்கை வேணும்னா. 14 00:03:46,393 --> 00:03:50,731 யுஎஸ்ஏஎஃப் விமானப் படை 15 00:03:51,106 --> 00:03:52,107 உன் பெயர் என்ன? 16 00:03:53,067 --> 00:03:54,109 மார்கஸ். 17 00:03:55,069 --> 00:03:56,528 இல்லை, உன்னை அழைக்கும் குறிப்பு சொல். 18 00:03:56,612 --> 00:03:57,863 என் பெயர் கயோட்டி. 19 00:03:57,947 --> 00:04:00,115 அங்கிருக்கும் வீனா போனவனின் பெயர் டிஸ்கோ. 20 00:04:02,242 --> 00:04:03,494 பிளாக் மம்பா. 21 00:04:03,577 --> 00:04:05,162 கில் பில் உமா தர்மனை போல. 22 00:04:05,579 --> 00:04:06,789 இல்லை, கோபியை போல. 23 00:04:06,872 --> 00:04:08,082 அப்படியா, சொதப்பல். 24 00:04:08,165 --> 00:04:10,584 அது எடுபடப் போவதில்லை, நீ படகோட்டி தானே? 25 00:04:10,668 --> 00:04:11,710 ஆமா, எஸ்டபுள்யுசிசி. 26 00:04:11,794 --> 00:04:14,463 - சரி, நீ ஓட்டுனரா? - ஆமா. 27 00:04:16,173 --> 00:04:17,883 ஊபர். அதான் உன் பெயர். 28 00:04:18,550 --> 00:04:20,594 ஊபரா? வேண்டாம். பிளாக் மம்பா தான். 29 00:04:20,678 --> 00:04:22,721 மன்னிச்சுக்கோ ஊபர், ஆனா உன் பெயர் ஊபர் தான். 30 00:04:22,805 --> 00:04:23,639 இரண்டு நிமிடங்கள். 31 00:04:29,186 --> 00:04:30,688 குதிக்கும் இடத்திலிருந்து இது10 கிலோமீட்டர். 32 00:04:30,771 --> 00:04:31,939 புரிந்தது. 33 00:04:32,022 --> 00:04:35,025 ஹே, எதற்கு பதட்டம்? இதை நீ ஏற்கனவே செய்தது தானே. 34 00:04:36,652 --> 00:04:38,028 ஆமா, எப்போதுமே. 35 00:04:38,821 --> 00:04:40,114 எல்லாம் சரியா போகும். 36 00:04:40,447 --> 00:04:41,907 - பைக் ஓட்டுவதை போல. - ஆஹா, அப்படியா? 37 00:04:41,991 --> 00:04:44,994 அப்படியில்லை. ஆனா அது உன் ஊக்கத்தை உந்த உபயோகப்படும்னு நினைத்தேன். 38 00:04:46,370 --> 00:04:48,247 எங்கிருந்து அந்த நகையை வாங்கினே? 39 00:04:48,330 --> 00:04:50,082 என் தந்தையுடையது. கடற்படை அகாடமி. 40 00:04:50,165 --> 00:04:52,626 பத்திரமா வைச்சுக்கோ. கைக்கு உபயோகமா இருக்கும், 41 00:04:52,710 --> 00:04:54,712 ஒருவேளை, ஏதாவது மொள்ளமாரியை குத்த கித்த வேண்டியிருந்தால். 42 00:05:05,806 --> 00:05:07,057 குதிக்கும் இடம் நெருங்கியது. 43 00:05:07,141 --> 00:05:08,559 போகலாம், வாங்கடா! 44 00:05:08,642 --> 00:05:09,518 ஆமா! 45 00:05:10,936 --> 00:05:11,979 ஆமா, போவோம்! 46 00:05:15,733 --> 00:05:19,069 வெனிசுயலா கரைக்கு அருகே கரீபியன் கடல் 47 00:05:39,465 --> 00:05:40,758 போவோம், பொட்டை நாய்களே! 48 00:05:40,841 --> 00:05:41,925 ஓஹோ! 49 00:05:44,803 --> 00:05:47,765 சீக்கிரம், இல்லை நீண்ட நீச்சலடிக்க வேண்டியிருக்கும்! 50 00:05:48,849 --> 00:05:51,143 ஹூவா, வரேண்டா! 51 00:06:44,154 --> 00:06:45,239 சே. 52 00:06:49,493 --> 00:06:50,577 பிடிச்சுகிட்டேன், பாஸ். 53 00:07:19,356 --> 00:07:20,440 ஹே, புது பயலே. 54 00:07:21,066 --> 00:07:22,234 படகில் ஓட்டை இருக்கு. 55 00:07:22,901 --> 00:07:24,069 அவன் பெயர் ஊபர். 56 00:07:24,486 --> 00:07:25,487 இல்லை, அதுவல்ல. 57 00:07:26,155 --> 00:07:27,281 ஊபர், எனக்கு அது பிடிச்சிருக்கு. 58 00:07:27,698 --> 00:07:28,699 நன்றி. 59 00:07:29,366 --> 00:07:31,410 அடச் சே! எலெக்ட்ரானிக்குகள் நனைந்து விட்டது. 60 00:07:32,077 --> 00:07:34,538 கரையிலிருந்து 20 கிலோமீட்டருக்கு மேல் இருப்போம். 61 00:07:35,038 --> 00:07:36,331 நீச்சலுக்கு அது மிகவும் நீண்ட தூரம். 62 00:07:37,249 --> 00:07:39,960 கண்ணாடி இழையில் வெடிப்பு. என்னால் அதை சரி செய்ய முடியும். 63 00:07:40,460 --> 00:07:42,129 இதை சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? 64 00:07:44,089 --> 00:07:45,549 அனைவரும் படகை விட்டு அகலுங்கள். 65 00:07:47,509 --> 00:07:48,677 இது உங்களுக்கு மூழ்கணுமா? 66 00:07:48,760 --> 00:07:50,804 அனைவரும் முதலில் படகை விட்டு அகலுங்கள். 67 00:07:51,471 --> 00:07:53,348 போவோம். படகை விட்டு அகல்வோம். 68 00:07:54,349 --> 00:07:58,353 அமெரிக்க தூதரகம் கராகஸ், வெனிசுயலா 69 00:07:58,729 --> 00:08:03,275 நமது மதிப்பிற்குரிய போலீஸ் படையின் அயராத முயற்சியால், 70 00:08:03,650 --> 00:08:05,527 மகிழ்வோடு அறிவிக்கிறேன் 71 00:08:05,611 --> 00:08:07,738 அமெரிக்க செனட்டர் ஜேமி மொரேனோவை கொன்ற கொடுங் கொலைகாரர்கள்... 72 00:08:07,821 --> 00:08:11,074 ஏசு கிறிஸ்துவே. இதை யாரும் நம்புவாங்கனு என்னால் ஒத்துக்க முடியலை. 73 00:08:11,158 --> 00:08:12,534 ...பிடிபட்டனர். 74 00:08:12,618 --> 00:08:14,036 விசாரணை எப்படி வந்துகிட்டிருக்கு? 75 00:08:14,119 --> 00:08:17,247 கட்டிடத்தில் 50க்கும் மேற்பட்ட உள்ளூரார் பணியிலுள்ளனர். அனைவரையும் விசாரிக்கிறோம். 76 00:08:17,331 --> 00:08:19,583 அதில் யாரும் ரேயஸின் ஒற்றர்கள் இல்லை என்று சொல்ல விரும்புவேன், 77 00:08:19,666 --> 00:08:20,626 ஆனா, வழக்கு அதுவல்ல. 78 00:08:20,709 --> 00:08:23,045 வெகு சிறப்பாக உங்க முன்னாள் நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார். 79 00:08:23,337 --> 00:08:24,463 ஆமா. 80 00:08:25,172 --> 00:08:26,632 தன் வேலையை வெகு சிறப்பாக செய்வாள். 81 00:08:26,715 --> 00:08:27,799 உன் முதுகு எப்படியிருக்கு? 82 00:08:28,675 --> 00:08:29,593 நல்லாயிடுவேன். 83 00:08:29,676 --> 00:08:32,596 எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அடிபட்ட இடது கண் நபரை தேட சொல்லியிருக்கேன். 84 00:08:34,014 --> 00:08:35,015 ஜிம், எப்படியிருக்கே? 85 00:08:35,098 --> 00:08:36,391 நான் நல்லா இருக்கேன். 86 00:08:36,475 --> 00:08:38,227 நான் போகும் முன் தப்பித்து விட்டனர். 87 00:08:38,894 --> 00:08:40,771 - ரயன் தான் மிகவும் பாதிக்கப்பட்டான். - சரி. 88 00:08:40,854 --> 00:08:42,397 இருவரும், என்னோடு வாங்க. 89 00:08:43,899 --> 00:08:45,859 இது சுத்தப் பொய்னு உங்களுக்கே தெரியும். 90 00:08:45,943 --> 00:08:48,695 எஃப்ஏஎல் ஒரு சிறுபான்மை இடதுசாரி போராளிகள். 91 00:08:48,779 --> 00:08:51,073 அமெரிக்கர்களுக்கு எதிர் என்பது அவர்கள் அகராதியிலும் இல்லாதது. 92 00:08:51,156 --> 00:08:52,157 நான் ஒத்துக்கறேன். 93 00:08:52,532 --> 00:08:54,618 அமெரிக்க செனட்டர்களை கராகஸ் நகரத்தில் கொலை செய்வது 94 00:08:54,701 --> 00:08:56,328 அவர்களது பாணியோ, திறன் தொகுப்போ இல்லை. 95 00:08:56,828 --> 00:08:58,747 அதனால் தான் தலைமையகத்தில் இருந்து, 96 00:08:58,830 --> 00:09:01,625 நம்மை தளரச் சொல்லும் செய்தியை இன்னும் நான் பார்க்கவில்லை. 97 00:09:03,502 --> 00:09:05,087 - ஹோஸேவை சந்தித்தீர்களா? - சார். 98 00:09:05,170 --> 00:09:06,171 இது நவாரோ. 99 00:09:06,630 --> 00:09:08,507 நம்மோடு நதிக்கரைக்கு வரப்போறாங்க. 100 00:09:08,840 --> 00:09:09,800 நதிக்கரைக்கா? 101 00:09:10,634 --> 00:09:11,760 சரக்கு துறைமுகத்துக்கு சென்று, 102 00:09:11,843 --> 00:09:13,595 எவனோ தென் ஆப்பிரிக்க கேடியை சந்தித்து, 103 00:09:13,679 --> 00:09:16,306 அவனோட மோதி, திடீரென சாக வேண்டுமா? 104 00:09:16,390 --> 00:09:18,600 அதை நாம் சோதிக்க வேண்டுமென தோணுது. 105 00:09:31,196 --> 00:09:32,406 எஸ்பரான்ஸா, 106 00:09:32,698 --> 00:09:34,783 குழந்தைகளுக்கு ஜூஸ் குடுக்க எனக்கு உதவுவாயா? 107 00:09:37,494 --> 00:09:39,037 அம்மா, திரும்பவும் ஹாமா? 108 00:09:39,121 --> 00:09:41,331 - எனக்கு சலித்து போனது. - உனக்கு ஹாம் ரொம்ப பிடிக்குமே. 109 00:09:41,415 --> 00:09:43,667 நேற்று தானே கேட்டே. 110 00:09:43,750 --> 00:09:45,210 அது நேற்று. 111 00:09:45,294 --> 00:09:47,170 நேற்றுக்கும் இன்றுக்கும் இடையில் என்ன நடந்தது? 112 00:09:47,254 --> 00:09:49,047 இன்று எனக்கு வேண்டாம். 113 00:09:49,131 --> 00:09:52,968 ஈலி, நன்றியோடு இரு. ஹாம் கிடைக்க நாம் அதிர்ஷ்டசாலிகள். 114 00:09:53,051 --> 00:09:55,721 இதுவும் கிடைக்காதவர்கள் இந்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க. 115 00:09:56,513 --> 00:09:59,057 - அவர்களை ஹாம் உண்ண வைப்பது தானே. - போதும். 116 00:09:59,641 --> 00:10:01,768 இன்று ஹாம் சாப்பிடு. நாளை உனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம். 117 00:10:02,311 --> 00:10:04,438 நாங்க தயார், திருமதி பொனால்டே. 118 00:10:04,813 --> 00:10:06,648 ஜூஸ் குடிக்க மறக்காதே. 119 00:10:08,692 --> 00:10:09,776 போகலாம். 120 00:10:14,448 --> 00:10:16,742 ஹே, ஈலி. இங்கு வா, என் கண்ணே. 121 00:10:17,826 --> 00:10:19,286 உன்னை நேசிக்கிறேன். நல்ல நாளாகட்டும். 122 00:10:19,369 --> 00:10:21,621 - நல்ல நாளாகட்டும். - கார்லோஸ்! இங்கே வா. 123 00:10:21,705 --> 00:10:23,957 அம்மாவுக்கு பை சொல்லாமல் போகிறாயா? 124 00:10:24,791 --> 00:10:26,001 உன்னை நேசிக்கிறேன். 125 00:10:26,335 --> 00:10:27,961 - நல்லா படி. - நிச்சயமா. 126 00:10:28,045 --> 00:10:29,588 பை, அம்மா. 127 00:10:30,047 --> 00:10:31,048 காலை வணக்கம், ஆல்பர்டோ. 128 00:10:31,131 --> 00:10:32,883 அனைவருக்கும் சேன்ட்விச் கிடைக்குமாறு பார்த்துக்கோ. 129 00:10:34,885 --> 00:10:36,636 - வணக்கம், ரோட்ரிகோ. - காலை வணக்கம், திருமதி பொனால்டே. 130 00:10:37,262 --> 00:10:38,638 எனக்கு ஹாம் மிகவும் பிடிக்கும்! 131 00:10:38,972 --> 00:10:40,515 உனக்கு பிடித்துத்தான் ஆகவேண்டும். 132 00:10:42,267 --> 00:10:44,269 - எப்படி இருக்கோம்? - வியத்தகு வகையில். 133 00:10:44,353 --> 00:10:46,271 ரேயஸின் எண்ணிக்கை விழுந்துகிட்டிருக்கு 134 00:10:46,897 --> 00:10:49,483 போன வாரத்திலிருந்து நாம் நாலு புள்ளிகள் ஏறியிருக்கோம். 135 00:10:49,941 --> 00:10:52,319 நீங்க வெற்றி பெறக்கூடும் என சில நாளிதழ்கள் சொல்கிறது. 136 00:10:52,402 --> 00:10:54,196 இந்த நாட்டில் இருக்காது. 137 00:10:54,279 --> 00:10:56,698 வெனிசுயலாவில் அல்ல, ஆனா பெரு, 138 00:10:56,782 --> 00:10:58,408 கொலம்பியா, அர்ஜென்டினா நாளிதழ்களில். 139 00:11:01,995 --> 00:11:03,372 நான் சொன்னது கேட்டதா? 140 00:11:03,914 --> 00:11:05,290 நமக்கு வாய்ப்புள்ளது. 141 00:11:22,599 --> 00:11:24,601 பாதுகாப்பு அங்கியும் பேட்ஜும் அணிய வேண்டும் என்கிறான். 142 00:11:26,144 --> 00:11:27,479 "மார்ட்டன் ஹௌக்லன்ட்"? 143 00:11:28,480 --> 00:11:30,107 அது சரி, பொருத்தமா இருக்கு. 144 00:12:07,644 --> 00:12:10,355 இங்கே நிறுத்துங்க. சின்கோபாமாஸ் அங்கே தான் இருக்கு. 145 00:12:22,325 --> 00:12:23,326 ஹே. 146 00:12:25,120 --> 00:12:26,371 அவன் எப்படி இருக்கான்? 147 00:12:26,455 --> 00:12:28,206 ரயனா? அதற்கு என்ன அர்த்தம்? 148 00:12:28,290 --> 00:12:31,334 அவனும் செனட்டரும் நெருக்கமானவர்கள். தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டானா? 149 00:12:31,418 --> 00:12:32,669 இல்லை, அவனால் சமாளிக்க முடியும். 150 00:12:32,752 --> 00:12:34,671 நாங்க இருவரும் சுலைமான் சிறப்புப் படையில் இருந்தோம். 151 00:12:34,754 --> 00:12:35,797 பின்? 152 00:12:36,131 --> 00:12:38,258 அவன் தான் சுலைமானை துரத்தி பிடித்தான், மெட்ரோ நிலையத்தில். 153 00:12:39,050 --> 00:12:41,052 அவனை சுட்டு, சாகடித்தான். 154 00:13:03,200 --> 00:13:05,619 யாராக இருப்பினும், மிகவும் நேர்த்தியாக வேலை செய்பவர்கள். 155 00:13:07,204 --> 00:13:08,747 தரையை கூட சுத்தப்படுத்தி இருக்கின்றனர். 156 00:13:09,206 --> 00:13:11,124 சரி, இங்கிருந்து கிளம்புவோம். 157 00:13:15,712 --> 00:13:17,255 அவர்கள் நதி வழியே சென்றது நமக்கு தெரியுமே. 158 00:13:18,089 --> 00:13:20,717 என் எஸ்ஏடி ஆட்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பரப்புக்குள் வந்தாயிற்று. 159 00:13:20,800 --> 00:13:23,011 ஓரினோகோ நதிமுகத்தில் காத்திருக்கின்றனர். 160 00:13:23,094 --> 00:13:24,471 இருங்க, உங்களிடம் படகு இருக்கா? 161 00:13:24,554 --> 00:13:26,306 ஆமா, நான்கு ஆட்களோடு. 162 00:13:26,389 --> 00:13:28,517 - நீங்க எதுவும் சொல்லலையே. - நீ எதுவும் கேட்கலையே. 163 00:13:28,892 --> 00:13:31,770 காட்டில் ஒரு அணிவகுப்பு புள்ளிக்கு எட்டு- இலக்க கட்டத்தை கொடுத்துள்ளனர். 164 00:13:31,853 --> 00:13:34,397 அவர்களை சந்தித்து அப்படியே நதி வழியே சரக்கு டிப்போவிற்கு செல்லப் போகிறேன். 165 00:13:34,481 --> 00:13:36,024 சரி, அப்போ நானும் உங்களோடு வருகிறேன். 166 00:13:36,525 --> 00:13:37,484 மைக், 167 00:13:38,777 --> 00:13:40,028 நீங்க நிலையத் தலைவர். 168 00:13:42,697 --> 00:13:44,908 ஆமா. கூடுதல் ஆள் வசதி பாதிக்காது. 169 00:13:44,991 --> 00:13:47,244 குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையாவாது அறிக்கை தேவை. 170 00:13:47,327 --> 00:13:48,370 நிச்சயமாக. 171 00:13:48,870 --> 00:13:49,913 நான் ஓட்டறேன். 172 00:13:51,414 --> 00:13:53,166 நீ இல்லாததை எவ்வளவு உணர்ந்தேன்னு சொன்னேனா? 173 00:13:53,250 --> 00:13:54,376 இன்னும் இல்லை. 174 00:14:11,017 --> 00:14:12,894 இப்போ, நான் பிளாக் மம்பா ஆகலாமா? 175 00:14:14,229 --> 00:14:16,022 உன்னை ஊபர் செலக்ட்டாக மேம்படுத்தறோம். 176 00:14:27,617 --> 00:14:31,580 மீராஃப்ளோரஸ் கராகஸ், வெனிசுயலா 177 00:14:44,050 --> 00:14:45,719 பிறந்த நாள் விழாவை ரசிச்சியா? 178 00:14:46,678 --> 00:14:48,221 குறிப்பிடத்தக்க விருந்தாக அமைந்திருந்தது. 179 00:14:49,097 --> 00:14:50,390 இஸ்மெரால்டாவின் கருத்து என்ன? 180 00:14:51,057 --> 00:14:52,058 அவளுக்கு மிகவும் பிடித்தது. 181 00:14:53,018 --> 00:14:54,978 அதை விட முக்கியமா, கிளாடியாவுக்கு மிகவும் சந்தோஷம். 182 00:14:58,273 --> 00:14:59,566 நான் கண்காணிக்கப் படுவதா யார் சொன்னது? 183 00:15:01,568 --> 00:15:02,485 பாஸ்டோஸ். 184 00:15:03,236 --> 00:15:04,613 அவனுக்கு எப்படித் தெரியுமாம்? 185 00:15:05,488 --> 00:15:06,781 அவனை குறைவாக மதிப்பிடறே. 186 00:15:07,032 --> 00:15:08,074 இல்லை. 187 00:15:08,825 --> 00:15:10,744 அவனை எப்படி மதிப்பிடணுமோ அப்படி சரியாக மதிப்பிடுகிறேன். 188 00:15:14,623 --> 00:15:16,958 என்னிடம் ஏன் அமெரிக்க செனட்டர் பற்றி சொல்லவில்லை. 189 00:15:19,586 --> 00:15:20,670 என்ன சொல்லணும்? 190 00:15:21,630 --> 00:15:22,505 நான் அவனை கொல்லலை. 191 00:15:22,881 --> 00:15:25,133 பின் ஏன் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்கள்? 192 00:15:28,345 --> 00:15:31,681 ஒருவேளை என் வேலையை நீ சிறப்பாக செய்வாயோ? 193 00:15:33,558 --> 00:15:35,560 அதைத் தானே நீயும் கஸான்ட்ராவும் சொன்னீர்கள்? 194 00:15:37,437 --> 00:15:38,480 அட. 195 00:15:40,982 --> 00:15:42,984 - நீ சொன்னாயா? - இல்லை, நான் அப்படி சொல்லலை! 196 00:15:43,068 --> 00:15:44,486 நான் கோபமா இருந்தேன். 197 00:15:48,990 --> 00:15:50,909 நீங்க எப்போதும் என் அறிவுரைக்கு மதிப்பளிப்பீங்க. 198 00:15:52,077 --> 00:15:53,119 ஆமா. 199 00:15:54,913 --> 00:15:56,206 ஆனா உன்னைப் போலன்றி, 200 00:15:57,290 --> 00:16:01,252 சுய நீதிமானாக இருக்கும் ஆடம்பரம் எனக்கில்லை. 201 00:16:07,967 --> 00:16:10,136 பரவாயில்லை. உங்களுக்கு ஏகப்பட்ட அழுத்தம் இருப்பது எனக்கு தெரியும். 202 00:16:11,930 --> 00:16:12,972 எனக்குத் தெரியும். 203 00:16:15,975 --> 00:16:19,396 காத்தியாவில் நாம் குழந்தைகளாக இருந்த போது ஞாகபகமிருக்கா? 204 00:16:19,771 --> 00:16:21,398 ஞாயிறுதோறும் கூட்டு பிரார்த்தனைக்கு போக வேண்டும். 205 00:16:22,357 --> 00:16:24,442 நம்மை ஜெபிக்க கட்டாயப்படுத்துவர். அது எப்படி போகும்? 206 00:16:27,612 --> 00:16:30,573 கொரமோதோவின் மிக புனித கன்னியே... 207 00:16:30,907 --> 00:16:32,492 கருணைத் தாயே... 208 00:16:32,575 --> 00:16:35,078 நேசத்திற்குரிய எமது வெனிசுயலா நாட்டை உம்மிடம் ஒப்படைக்கிறோம். 209 00:16:35,912 --> 00:16:41,084 கூட்டு பிரார்தனைக்குப் பின், வீட்டின் வெளியே பிரசாதங்களை வைப்பர். 210 00:16:41,835 --> 00:16:45,463 அவர்களால் முடிந்த பழமோ, உணவோ வைப்பர். 211 00:16:45,547 --> 00:16:46,965 ரம் கூட. 212 00:16:49,008 --> 00:16:50,343 ஒரு நாள், 213 00:16:50,927 --> 00:16:53,304 நான் பிரசாதம் திருடுவதை கண்டுபிடித்தீர். 214 00:16:55,265 --> 00:16:56,683 நீ பட்டினியோடு இருந்தாய். 215 00:16:57,267 --> 00:16:58,393 நாம் இருவருமே. 216 00:17:01,396 --> 00:17:03,440 ஆனாலும், அதை பற்றி நீங்க கவலைப்படலை. 217 00:17:04,107 --> 00:17:07,110 அத்தனையும் வீடு வீடாக திரும்ப தரச் செய்தீர். 218 00:17:10,113 --> 00:17:11,448 அன்று சொன்னீர், 219 00:17:12,115 --> 00:17:14,325 "வெனிசுயலா நம் குடும்பம், மிஹைல்." 220 00:17:15,660 --> 00:17:16,745 ஞாபகமிருக்கா? 221 00:17:20,248 --> 00:17:21,374 நிகோலஸ்... 222 00:17:24,169 --> 00:17:25,670 குழந்தையில் கூட 223 00:17:26,504 --> 00:17:29,549 வெனிசுயலாவை நினைத்து பொறுப்பாக இருந்திருக்கிறீர். 224 00:17:31,551 --> 00:17:33,052 அதை நான் தொடர்ந்து செய்வேன். 225 00:17:34,804 --> 00:17:35,889 எப்போதும். 226 00:17:39,184 --> 00:17:40,185 சரி. 227 00:17:40,935 --> 00:17:41,978 எனக்குத் தெரியும். 228 00:17:51,613 --> 00:17:52,697 நாம் வந்தாச்சு. 229 00:17:52,781 --> 00:17:53,990 நன்றி ரோட்ரிகோ. 230 00:17:56,910 --> 00:17:58,870 காலை வணக்கம். எப்படி இருக்கீங்க? 231 00:17:58,953 --> 00:18:01,331 இங்கு இருப்பதற்காக மிக்க நன்றி. 232 00:18:03,416 --> 00:18:04,959 காலை வணக்கம், நண்பர்களே. 233 00:18:05,043 --> 00:18:06,669 உங்களை இங்கு பார்க்க மிகவும் சந்தோஷம். 234 00:18:07,921 --> 00:18:10,006 வெனிசுயலா உங்களோடு இருப்பதை நீங்க தெரிஞ்சுக்கணும். 235 00:18:10,089 --> 00:18:12,425 மிக்க நன்றி, மற்றும் இங்கு வந்ததுக்கு மிகவும் நன்றி. 236 00:18:18,264 --> 00:18:20,099 உங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர், க்ளோரியா. 237 00:18:26,397 --> 00:18:27,857 இங்கு இருப்பதற்கு நன்றி. 238 00:18:29,526 --> 00:18:31,903 - என்னோடு ஒரு புகைப்படம் எடுப்பீங்களா? - நிச்சயமா. 239 00:18:34,239 --> 00:18:36,157 - நன்றி. - மன்னிக்கணும், தாமதமானது. 240 00:18:40,370 --> 00:18:41,871 காலை வணக்கம். எப்படி இருக்கீங்க? 241 00:18:47,418 --> 00:18:48,878 அனைவருக்கும் ஹாய். 242 00:18:49,462 --> 00:18:51,047 இங்கு வந்ததற்கு மிக்க நன்றி. 243 00:18:51,464 --> 00:18:53,091 இங்கு இருப்பதற்காக நன்றி. 244 00:18:57,053 --> 00:18:59,597 தயாரா? நேரா அங்கே தான் போகப் போறீங்க. 245 00:18:59,681 --> 00:19:00,807 என்னை என்ன செய்யச் சொல்லறே? 246 00:19:00,890 --> 00:19:03,101 கூட்டத்தை மகிழ்விக்க ஏதாவது மாய வித்தை காட்டவா? 247 00:19:10,900 --> 00:19:11,985 அடக் கடவுளே. 248 00:19:12,443 --> 00:19:13,945 இப்போதாவது என்னை நம்பறீங்களா? 249 00:19:14,028 --> 00:19:15,530 உங்களுக்காக தான் அவர்கள் இங்கிருக்கின்றனர். 250 00:19:26,124 --> 00:19:28,543 சொன்னேனே, நம்மால் வெற்றி பெற முடியும். 251 00:19:33,339 --> 00:19:34,883 சரி, நான் இப்போ போகிறேன். நன்றி. 252 00:19:59,824 --> 00:20:00,909 என் மக்களே... 253 00:20:02,452 --> 00:20:06,080 நான் ஜனாதிபதியாக போட்டியிட முடிவு செய்தபோது, 254 00:20:07,874 --> 00:20:09,500 அதை ஒரு போராட்டமாக செய்தேன். 255 00:20:10,460 --> 00:20:11,753 எனக்காகவும் 256 00:20:12,754 --> 00:20:14,964 என் கணவர், சர்ஹியோவின் நினைவாகவும் செய்தேன், 257 00:20:15,882 --> 00:20:18,468 திடீரென ஓரிரவு காணாமல் போனவரை 258 00:20:19,010 --> 00:20:21,721 ஒரு வருடமாகியும் நான் பார்க்கவில்லை. 259 00:20:23,556 --> 00:20:26,476 அதனால், நீங்க அனைவரும் இங்கிருப்பதற்காக மிக்க நன்றி. 260 00:20:27,894 --> 00:20:30,855 அதிபர் ரேயஸ் மாற்றத்தைப் பற்றியும், 261 00:20:31,981 --> 00:20:33,566 புரட்சியை பற்றியும் பேசுகிறார், 262 00:20:35,485 --> 00:20:37,946 ஆனால், உண்மையில் அவருக்கு புரட்சியில் விருப்பமில்லை. 263 00:20:40,615 --> 00:20:43,326 அதிபர் ரேயஸுக்கு, அமைதியாய் இருக்க மறுக்கும் 264 00:20:43,409 --> 00:20:47,288 பல தேச பக்தர்கள் 265 00:20:47,372 --> 00:20:49,374 சர்ஹியோ போல், 266 00:20:49,457 --> 00:20:52,627 காணாமல் போவதை நீங்க கவனிப்பதில் விருப்பமில்லை. 267 00:20:53,962 --> 00:20:58,132 வெனிசுயலாவில் பசி, 268 00:20:59,592 --> 00:21:01,094 நோய்கள் மற்றும் 269 00:21:01,761 --> 00:21:04,472 ஊழல்களால் நாம் உணரும் வேதனைக்கு செவிசாய்க்க மறுக்கிறார்! 270 00:21:16,275 --> 00:21:18,611 ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார். 271 00:21:19,445 --> 00:21:20,655 நம் வரலாறு. 272 00:21:22,365 --> 00:21:23,992 சிமோன் பொலிவர் ஒருமுறை சொன்னார். 273 00:21:24,867 --> 00:21:27,578 "சுதந்திரத்தை விரும்பும் மக்கள் 274 00:21:28,579 --> 00:21:30,873 இறுதியில் சுதந்திரமாக தான் இருப்பார்கள்!" 275 00:21:34,335 --> 00:21:35,503 பின் இது... 276 00:21:36,838 --> 00:21:39,549 நம் நாடு, 277 00:21:39,632 --> 00:21:41,050 இதை மீண்டும் பெறுவோம்! 278 00:21:47,557 --> 00:21:50,977 ஒன்றுபட்ட மக்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள்! 279 00:22:04,866 --> 00:22:06,242 அப்போ, எப்படி இருக்கீங்க? 280 00:22:06,826 --> 00:22:07,827 நலமா இருக்கேன். 281 00:22:09,537 --> 00:22:11,205 என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா? 282 00:22:13,666 --> 00:22:14,751 இல்லை. 283 00:22:20,214 --> 00:22:21,799 இதோ, இதை கீழே போட்டுடீங்கனு நினைக்கிறேன். 284 00:22:31,350 --> 00:22:33,311 உனக்கு ஏதாவது தெரியணும்னு நினைச்சா, 285 00:22:34,395 --> 00:22:35,605 நான் சொல்வேன். 286 00:22:39,025 --> 00:22:43,696 ஓரினோகோ நதி தென்மேற்கு வெனிசுயலா 287 00:23:23,277 --> 00:23:24,570 சரி, போவோம். 288 00:23:43,923 --> 00:23:45,424 இந்த பாழும் கொசுக்கள். 289 00:23:46,759 --> 00:23:48,219 உங்களை தொட கூட மாட்டேங்குது. 290 00:23:48,928 --> 00:23:50,471 நான் லூசியானா பயல். 291 00:23:50,847 --> 00:23:52,765 துருக்கியில் நீங்க சின்சினாட்டியை சேர்ந்தவர்னு சொன்னீங்க. 292 00:23:52,849 --> 00:23:55,226 நீ இவ்வளவு ஏமாந்தவனா, புத்திசாலிப் பயலே? 293 00:23:55,309 --> 00:23:57,520 நியூ ஆர்லியன்ஸுக்கு சற்று வெளியே உள்ள பெல் சேஸை சேர்ந்தவன். 294 00:23:57,603 --> 00:23:59,105 சதுப்பு சிறுகுடா என் ரத்தநாளத்தில் இருக்கு. 295 00:23:59,188 --> 00:24:00,231 அது பெரிய விஷயமல்ல, 296 00:24:00,314 --> 00:24:02,108 ஏனெனில் கொசுக்கள் கரிவளிக்கு ஈர்க்கப்படுமே தவிர, 297 00:24:02,191 --> 00:24:03,609 சொந்த ஊரை பார்த்து அல்ல. 298 00:24:03,693 --> 00:24:07,530 சரி, மக்கள் கருத்துக்கு மாறாக, கொசுக்களுக்கு மிகக்கூரிய பார்வை உள்ளது. 299 00:24:07,613 --> 00:24:09,365 - அவைகளுக்கு வண்ணங்கள் பிடிக்கும். - உண்மையா? 300 00:24:09,448 --> 00:24:12,160 என்னை பற்றிய உண்மை தெரிந்ததால் என்னிடம் வாலாட்டுவதில்லை. 301 00:24:13,828 --> 00:24:15,079 என்ன உண்மை? 302 00:24:15,663 --> 00:24:16,706 நான் திரும்ப கடிப்பேன். 303 00:24:17,832 --> 00:24:19,125 இதோ வந்தாச்சு. 304 00:24:20,960 --> 00:24:22,837 தலைவர் ஏற்கனவே இருக்கார். 305 00:24:23,337 --> 00:24:25,673 சரி ஊபர், நாம் இப்படி சுற்றி நிறுத்துவோமா? 306 00:24:34,557 --> 00:24:37,476 உங்களை மீண்டும் பார்க்கக் கூடாதுனு மனதார நினைத்திருந்தேன். 307 00:24:37,560 --> 00:24:39,020 ஆமா, இங்கும் அப்படித்தான். 308 00:24:40,396 --> 00:24:42,982 பொருளாதாரத்தில் டாக்டர், 309 00:24:43,357 --> 00:24:45,359 எனக்கு பங்கு சந்தையை பற்றி ஒரு குறிப்பு அனுப்பலை. 310 00:24:45,818 --> 00:24:49,280 ரகசியம் என்னவென்றால் ஒரு நல்ல எஸ்&பி 500 குறியீட்டு நிதியை வாங்குவது தான். 311 00:24:49,363 --> 00:24:51,741 மெனக்கெட்டு இந்த நதியில் இவ்வளவு தூரம் இழுத்துட்டு வந்தது 312 00:24:51,824 --> 00:24:54,410 குறியீட்டு நிதியை நான் வாங்கணும்னு சொல்லத் தானா? 313 00:24:55,703 --> 00:24:58,289 நாசமா போக! அனைத்துக்கும் மேலாக, பூச்சி தெளிப்பானை வேறு எடுத்துட்டு வரலை. 314 00:24:58,372 --> 00:25:00,333 - இதோ, என்னுதை எடுத்துக்கோ. - நன்றி. 315 00:25:00,708 --> 00:25:02,043 திரும்ப கடிப்பீங்களோ? 316 00:25:02,543 --> 00:25:05,338 குஷியான இந்த குட்டியின் பெயர் கயோட்டி. 317 00:25:05,421 --> 00:25:07,757 அந்த வீராங்கனை இளவரசியின் பெயர் டிஸ்கோ. 318 00:25:07,840 --> 00:25:09,550 நம்மிடம் இங்கிருப்பவன் ஊபர் சூப்பர். 319 00:25:09,634 --> 00:25:11,093 நம்மை வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வான். 320 00:25:11,177 --> 00:25:13,221 - சரி தானே, ஊபர்? - என்ன சொன்னாலும் சரிதான். 321 00:25:13,304 --> 00:25:15,097 சரி, தெளிவாக இருப்போம். 322 00:25:15,848 --> 00:25:18,768 இது வெறும் புலனாய்வு. தனிப்பட்ட நடவடிக்கைக்கு இடம் இல்லை. 323 00:25:19,685 --> 00:25:22,813 நம்மை சுட்டால் தவிர நாம் துப்பாக்கி சூடு நடத்த முடியாது. புரிஞ்சுதா? 324 00:25:22,897 --> 00:25:24,565 எப்போதும் போல் வழக்கமான செயல்முறை தான். 325 00:25:25,107 --> 00:25:27,652 உள்ளே சென்றதும், இரண்டு கன்டெய்னர்களை திறந்து, 326 00:25:27,735 --> 00:25:29,403 சட்டவிரோத ஆயுத சரக்கை தேடுவோம். 327 00:25:29,487 --> 00:25:31,072 ரயன், இங்கு, கதிர்வீச்சு அளவை சோதிப்பான். 328 00:25:31,447 --> 00:25:33,991 நான் சில புகைப்படங்களை எடுப்பேன். மற்றவர்கள் சுற்றுவட்ட பாதுகாப்பு. 329 00:25:34,825 --> 00:25:36,285 முடிந்த பின் திரும்புவோம். 330 00:25:36,619 --> 00:25:38,663 நாம் இங்கிருந்தது கூட யாருக்கும் தெரியவராது. 331 00:25:39,372 --> 00:25:40,331 கேள்விகள் ஏதாவது? 332 00:25:43,376 --> 00:25:44,502 உங்க அனைவருக்கும் தெரிந்தது போல், 333 00:25:44,961 --> 00:25:46,337 நமக்கு வான் வழி ஆதரவு இல்லை. 334 00:25:46,420 --> 00:25:48,631 அதாவது படகு மட்டுமே இந்த காட்டிற்கு உள்ளும் வெளியும் செல்லும் வழி 335 00:25:49,048 --> 00:25:51,509 இங்கு சொதப்பலுக்கு இடமில்லை என்று என் தொனி குறிப்பிடுகிறது, சிறுவர்களே. 336 00:25:52,134 --> 00:25:54,470 வாங்க, புரப்படலாம் 337 00:26:19,495 --> 00:26:22,248 வேலை இரவில் உன்னோடு இப்படி இருப்பது நல்லாயிருக்கு. 338 00:26:27,712 --> 00:26:29,005 ஏதாவது பிரச்சனையா, மிஹைல்? 339 00:26:40,433 --> 00:26:41,726 நம் வீடு கண்காணிக்கப் படுகிறது. 340 00:26:43,811 --> 00:26:45,521 நாம் பேசுவதை கவனிக்கின்றனர். 341 00:26:49,025 --> 00:26:50,151 யார் கவனிப்பது? 342 00:26:51,027 --> 00:26:52,069 எனக்கு தெரியலை. 343 00:26:52,570 --> 00:26:54,280 அமெரிக்கர்கள் என்று நிகோலஸ் சொல்கிறான். 344 00:26:56,198 --> 00:26:57,658 எதை நம்புவதுனு தெரியலை. 345 00:27:02,747 --> 00:27:04,081 அப்போ, என்ன செய்வது? 346 00:27:04,999 --> 00:27:06,500 மரியாவிடம் சொல்லணுமா? 347 00:27:09,086 --> 00:27:11,339 இயல்பாக உள்ளது போல் நாம் செயல்படணும், 348 00:27:12,214 --> 00:27:15,426 ஆனா, குறிப்பா நிகோலஸ் பற்றி அவள் பேசுவதை கவனிக்கணும். 349 00:27:17,845 --> 00:27:19,555 அவளும், இலக்காவது எனக்கு விருப்பமில்லை. 350 00:27:20,890 --> 00:27:22,683 அவள் ஏன் இலக்காவாள்? 351 00:27:25,644 --> 00:27:27,021 நிகோலஸ் அவள் மாமா. 352 00:27:27,104 --> 00:27:29,482 மரியாவுக்கு எந்த தீங்கும் நேர அவர் விடமாட்டார். 353 00:27:45,623 --> 00:27:48,501 நம் உரிமைகளை மாநிலத்துக்கு கொடுப்பது, 354 00:27:48,584 --> 00:27:50,002 அது நம்மை காக்கும் என்பதால். 355 00:27:50,086 --> 00:27:51,962 ஆனா அதுவல்ல விஷயம். 356 00:27:52,046 --> 00:27:56,217 கேள்வி, மக்களுக்கு ஏன் மாநிலத்தை பிடிக்கிறது? 357 00:27:56,759 --> 00:27:57,885 பாரு? 358 00:27:57,968 --> 00:28:00,179 - எதை ஆரம்பித்தாய் பாரு? - அதனால என்ன? 359 00:28:00,262 --> 00:28:02,723 தெளிவாக இருப்போம். உலகம் கொடுமையானது. 360 00:28:03,015 --> 00:28:07,520 மக்களுக்கு யாரோ தம்மை காப்பாற்றுவர் என்ற உணர்வு அவசியம்னு நினைக்கிறேன். 361 00:28:09,021 --> 00:28:10,815 - மேக்ஸ் வெபர். - மேக்ஸ் வெபர். 362 00:28:12,650 --> 00:28:15,069 மாநிலத்தை பற்றிய அவரது வரைமுறை உங்களுக்கு தெரியும், இல்லையா? 363 00:28:16,070 --> 00:28:19,907 உபயோகிக்க, அச்சுறுத்த, குடிமக்கள் மீது அதிகாரத்தை செலுத்த, 364 00:28:19,990 --> 00:28:22,785 தனிப்பட்ட உரிமையும் அங்கீகாரமும் பெற்ற ஒரு அமைப்பு. 365 00:28:22,868 --> 00:28:28,791 அந்த ஏகபோகம் அதன் அதிகாரத்தை தீர்மானிக்கிறது. 366 00:28:29,625 --> 00:28:31,210 யாராவது, இந்த மனிதருக்கு இன்னும் வைன் தாங்களேன். 367 00:28:31,293 --> 00:28:34,046 வேண்டாம், அதிகமா கொடுத்தால், அதிகமா பேசுவார்! 368 00:28:34,130 --> 00:28:35,172 இதோ இங்கே! 369 00:28:36,424 --> 00:28:37,258 சியர்ஸ், நண்பர்களே! 370 00:29:55,127 --> 00:29:56,253 சரி, மேல வாங்க. 371 00:30:01,759 --> 00:30:04,512 பெரும்பாலான கன்டெய்னர்களை உயர்ந்த நிலப்பரப்புக்கு இடம் பெயர்த்திருக்கணும். 372 00:30:06,055 --> 00:30:08,015 ஆற்றின் இந்த பகுதியில் உள்ள நீர் கணிக்க முடியாதது, 373 00:30:08,098 --> 00:30:09,892 எனவே உள்நாட்டிற்கு நகர்த்த காரணம் உள்ளது. 374 00:30:10,518 --> 00:30:11,727 எஸ்ஏடி புகைப்படங்களின்படி, 375 00:30:11,810 --> 00:30:14,104 முக்கிய முகாம் இங்கிருந்து 400 மீட்டர் வடமேற்கில் உள்ளது. 376 00:30:16,649 --> 00:30:18,192 சரி, ஊபர், திரும்புவோம். 377 00:30:18,275 --> 00:30:19,944 எங்களை 500 மீட்டர் தெற்கில் இறக்கிவிடு. 378 00:30:37,461 --> 00:30:38,963 என்னிடம் ஒரு மோசமான செய்தி உள்ளது. 379 00:30:39,046 --> 00:30:40,881 குதித்ததில் ரேடியோ பழுதடைந்தது. 380 00:30:41,465 --> 00:30:43,842 - அதனால், தொடர்பு கருவிகள் கிடையாது. - புரிந்தது. 381 00:30:44,176 --> 00:30:46,387 பிரிய நேரிட்டால், இருக்கும் இடத்திலேயே இருக்கவும். 382 00:30:47,012 --> 00:30:49,390 இந்த இன்ஃப்ரா ரெட் ஒளிக்கதிர்கள் சரியாக நம்மிடத்திற்கு அழைத்து வரும். 383 00:30:49,974 --> 00:30:51,141 சரி. 384 00:30:56,981 --> 00:30:58,899 ஹே, நம்மிடம் தொடர்பு கருவிகள் இல்லாததால், 385 00:30:59,692 --> 00:31:01,610 நாங்க வருவதை பார்த்தவுடன், நீ கிளம்பத் தயாரா இருக்கணும். 386 00:31:01,694 --> 00:31:03,153 - புரிந்ததா? - புரிந்தது. 387 00:31:03,737 --> 00:31:04,905 நல்லது. 388 00:31:53,912 --> 00:31:56,707 அயல்நாட்டு படை வளாகம் 389 00:31:59,168 --> 00:32:02,171 சரி, முகாமின் மூலையில் கன்டெய்னர்கள் தெரியுதா? 390 00:32:03,339 --> 00:32:04,632 அதன் உள்ளே போய் வரலாம். 391 00:32:30,574 --> 00:32:31,575 நகருங்க. 392 00:33:16,870 --> 00:33:18,163 கைகர் கருவி என்ன சொல்லுது? 393 00:33:18,997 --> 00:33:20,082 ஒன்றுமில்லை. 394 00:33:27,756 --> 00:33:29,425 என்ன கண்ராவி? 395 00:33:40,227 --> 00:33:41,353 யாரோ வர்றாங்க? 396 00:33:42,646 --> 00:33:43,897 டாக்டர், நாம் போகணும், இப்போதே! 397 00:33:46,483 --> 00:33:47,526 சே! 398 00:33:53,907 --> 00:33:54,992 வா. 399 00:33:55,200 --> 00:33:56,243 பொறு. 400 00:33:56,827 --> 00:33:57,911 நிறைய கன்டெய்னர்கள் இருக்கே. 401 00:33:57,995 --> 00:33:59,246 ஆனா, ஆயுதங்கள் இல்லை டாக்டர். 402 00:33:59,329 --> 00:34:01,457 தவறான முடிவை எடுத்திருக்கீங்க. போக நேரமாச்சு. 403 00:34:09,798 --> 00:34:11,341 எங்கே போய் தொலையறான்? 404 00:34:12,593 --> 00:34:13,427 ரயன்! 405 00:34:30,402 --> 00:34:31,528 அம்மோனியம் நைட்ரேட்டா? 406 00:34:48,420 --> 00:34:49,546 இங்கே வா. 407 00:35:00,933 --> 00:35:02,017 நீயா? 408 00:35:03,727 --> 00:35:05,229 கைகளை தலையில் வை. 409 00:35:08,440 --> 00:35:10,275 இன்னும் காபிக் கொட்டைகளைத் தான் தேடறயா? 410 00:35:15,656 --> 00:35:17,407 - தனியாவா வந்தே? - இல்லை. 411 00:35:18,826 --> 00:35:19,993 துப்பாக்கியை கீழே போடு. 412 00:35:20,494 --> 00:35:21,537 மெதுவா. 413 00:35:22,621 --> 00:35:24,873 டாக்டர், இந்த பன்னாடையை நீ பார்த்துக்குறயா? 414 00:35:32,881 --> 00:35:34,174 நாங்க என்ன கொண்டு வந்தோம்னு பாருங்க. 415 00:35:34,258 --> 00:35:35,509 இவனை கட்டுங்க. 416 00:35:37,511 --> 00:35:38,554 யார் நீ? 417 00:35:40,430 --> 00:35:41,557 சொல்வதை கவனமா கேளு. 418 00:35:41,640 --> 00:35:43,267 காட்டில் ரேயஸ் என்ன செய்கிறான்? 419 00:35:44,268 --> 00:35:46,603 இந்த பன்னாடையை கொன்று விட்டு கிளம்புவோம். 420 00:35:46,687 --> 00:35:48,856 அவன் ஆயுதமில்லாத வீரன். அவனை நாம் கொல்ல மாட்டோம். 421 00:35:48,939 --> 00:35:50,649 நிச்சயம் நாம் இவனை கொண்டு செல்ல போவதில்லை. 422 00:35:50,732 --> 00:35:52,234 இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை. 423 00:35:52,860 --> 00:35:55,279 என் நண்பன் சொல்வதை கேட்டாயே, காட்டில் என்ன செய்கிறாய்? 424 00:35:57,155 --> 00:35:58,991 - போய் முட்டிக்கோ. - சரி. 425 00:35:59,074 --> 00:36:00,951 முட்டுவதா? எந்த கையால் சுடுவாய்? 426 00:36:03,871 --> 00:36:07,207 - அட கடவுளே! - சத்தம் போட்டால் இன்னொன்றை எடுப்பேன். 427 00:36:08,959 --> 00:36:10,586 அவன் யார்னு உனக்கு தெரியணும், இல்லையா? 428 00:36:11,211 --> 00:36:12,254 டிஎன்ஏ. 429 00:36:12,963 --> 00:36:13,922 மண்டியிடு. 430 00:36:14,006 --> 00:36:14,923 போவோம். 431 00:36:46,371 --> 00:36:47,372 சே! 432 00:37:08,769 --> 00:37:10,729 - நீங்க நலமா? - நலம் தான். படகில் ஏறு. 433 00:37:10,812 --> 00:37:12,230 - வாங்க. போயாகணும். - சொன்னனே. நான் நலம்! 434 00:37:12,314 --> 00:37:14,107 நானும் சொன்னேன், நான் உங்களுக்கு வேலை செய்யலை. போவோம். 435 00:37:34,711 --> 00:37:36,421 அவங்களை நதிக்கு போக விட வேண்டாம்! 436 00:37:37,047 --> 00:37:37,965 போங்க! 437 00:38:23,969 --> 00:38:25,012 சுடுங்க! 438 00:38:25,887 --> 00:38:27,139 தாக்குதல் பின்னாலிருந்து! 439 00:38:30,600 --> 00:38:32,602 சுவரை ஒட்டியிருங்க. ஒட்டியேயிருங்க. 440 00:38:35,313 --> 00:38:36,690 நகருங்க, நகருங்க! தாண்டி ஓடுங்க. 441 00:38:39,860 --> 00:38:40,944 போங்க! 442 00:38:43,572 --> 00:38:44,614 சே! 443 00:38:45,365 --> 00:38:46,491 அட. 444 00:38:49,911 --> 00:38:50,912 வா. 445 00:38:56,334 --> 00:38:58,128 ஊபர், அந்த நாசமா போன என்ஜினை எழுப்பு! 446 00:38:59,421 --> 00:39:00,547 ஊபர்? 447 00:39:03,425 --> 00:39:04,634 எங்கே போய் தொலைஞ்சான்? 448 00:39:10,307 --> 00:39:12,517 - எங்கே போய் தொலைஞ்சான், ஊபர்? - அவனுக்காக திரும்ப வருவோம். 449 00:40:04,486 --> 00:40:07,155 நான் கேள்விப்பட்ட வரை, க்ளோரியா பொனால்டேவுக்கு 450 00:40:07,572 --> 00:40:09,116 மக்கள் ஆதரவு இருக்கு. 451 00:40:09,533 --> 00:40:13,328 தேர்வில் அவள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாய் சில வாக்குப்பதிவுகள் சொல்கிறது. 452 00:40:17,374 --> 00:40:19,126 நன்றி மெட்டையோ. நீ போகலாம். 453 00:40:20,335 --> 00:40:21,419 ஆகட்டும், அதிபர் அவர்களே. 454 00:40:28,051 --> 00:40:29,136 என்ன விஷயமாம்? 455 00:40:31,263 --> 00:40:32,264 மிஹைல், 456 00:40:33,765 --> 00:40:35,016 உண்மையைச் சொல். 457 00:40:36,268 --> 00:40:38,186 க்ளோரியா பொனால்டே, 458 00:40:40,021 --> 00:40:42,440 இந்த தேர்தலில் அவளுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? 459 00:41:14,514 --> 00:41:17,392 உன்னையும் ரயனையும் இறக்கி விட்டுட்டு ஊபருக்காக திரும்ப போகிறோம். 460 00:41:18,310 --> 00:41:19,394 நல்ல யோசனை. 461 00:41:42,167 --> 00:41:45,128 - அங்கே ஆனது பற்றி... - நாம் கன்டெய்னர்களை தேடவே இங்கு வந்தோம், 462 00:41:46,046 --> 00:41:47,380 அதைத் தான் செய்தேன். 463 00:41:50,467 --> 00:41:52,052 எனக்கு இதய பாதிப்பு உள்ளது. 464 00:41:55,096 --> 00:41:57,015 சோதனை நல்ல சேதியை சொல்லலை. 465 00:42:01,311 --> 00:42:03,146 அதனால் தான் மாஸ்கோவை விட்டு வந்தேன். 466 00:42:09,319 --> 00:42:10,445 யாருக்கெல்லாம் தெரியும்? 467 00:42:12,739 --> 00:42:15,784 மாஸ்கோ நிலையத் தலைவருக்கும் உனக்கும். 468 00:42:22,874 --> 00:42:24,376 மேலிடத்திற்கு இது பற்றி தெரிந்தால், 469 00:42:24,459 --> 00:42:27,212 மேஜை வேலையை கொடுப்பார்கள் அல்லது ஓய்வெடுக்க வற்புறுத்துவர். 470 00:42:31,091 --> 00:42:32,425 என்ன செய்யப் போறீங்க? 471 00:42:37,264 --> 00:42:38,473 எனக்கு தெரியலை.