1 00:00:55,890 --> 00:00:57,808 அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையில் பதற்றம் நிலவுவதால் 2 00:00:57,975 --> 00:01:00,936 ...சீனாவின் இராணுவம் மிக எச்சரிக்கையாக உள்ளது. 3 00:01:01,103 --> 00:01:04,815 வெள்ளை மாளிகை ரஷ்யாவை எச்சரித்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்தார். 4 00:01:05,399 --> 00:01:08,861 ...மற்றும் இராணுவ சக்தி பரிசீலனையில் உள்ளதா என்று சொல்ல மறுத்து விட்டார். 5 00:01:09,028 --> 00:01:11,614 நிர்வாகம் இப்போது ரஷ்யாவிற்கு எதிரான உத்தரவுகளை உயர்த்தியுள்ளது... 6 00:01:11,781 --> 00:01:15,951 ...ஏவுகணை சோதனைகள் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீறல் ஆகாது. 7 00:01:16,160 --> 00:01:17,161 ஆட்டோபாக் 8 00:01:17,328 --> 00:01:20,498 ரஷ்ய தூதரக அதிகாரிகள் அணுசக்தி ஒப்பந்த தொடர்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 9 00:01:28,756 --> 00:01:30,424 அடடா. 10 00:02:10,089 --> 00:02:12,299 செப்ரஸ்கீ? முழிச்சிட்டு இருக்கியா? 11 00:02:13,342 --> 00:02:14,885 ஆமா. அஞ்சு நிமிஷம். 12 00:02:23,936 --> 00:02:26,564 போர் நடந்த பிறகு, அந்த நிலம் அழிக்கப்பட்டது. 13 00:02:36,782 --> 00:02:39,827 எல்லாம் வீணாகிவிட்டது, வேலை செய்யும் பெரிய தொழிற்சாலைகள் தவிர. 14 00:02:39,994 --> 00:02:42,246 அவை இன்னும் கொல்லப்பட்ட நுகர்வோர்களுக்கு பொருட்களை தயாரித்து தந்தது. 15 00:02:48,752 --> 00:02:49,837 அது எங்க இருக்கு? 16 00:02:50,004 --> 00:02:52,673 எனக்கு கேட்குது, ஆனா பார்க்க முடியல. 17 00:02:56,635 --> 00:02:59,346 இல்ல, எனக்கு கிடைச்சுடுச்சு. 18 00:03:14,862 --> 00:03:15,988 அடடா. 19 00:03:18,616 --> 00:03:20,200 அது நம்பள பாத்துடுச்சு. 20 00:03:21,619 --> 00:03:23,078 -கிடைச்சுடுச்சு. -அடடா. 21 00:03:26,332 --> 00:03:27,875 உயரமா பறக்குது. 22 00:03:28,042 --> 00:03:31,629 அது ரொம்ப மேல போனா, ஒரு துண்டா கீழ வராது. தயார். 23 00:03:48,646 --> 00:03:49,772 அடச்சே 24 00:03:59,657 --> 00:04:01,784 எப்டி இருக்கு, செப்ரஸ்கி? 25 00:04:03,786 --> 00:04:05,537 எமிலி, எனக்கு சொல்லு. எப்படி இருக்கு? 26 00:04:05,746 --> 00:04:06,914 நல்லா இருக்கு. 27 00:04:07,122 --> 00:04:10,042 கட்டுப்பாடு தொகுதி மற்றும் டிரான்ஸ்பான்டர் பழுதுபடாம இருக்கு. 28 00:04:10,834 --> 00:04:13,003 கடினமா முயற்சி பண்ணு. அதை டிரக்ல போட்டுடலாம்... 29 00:04:13,170 --> 00:04:15,464 ... தொழிற்சாலை டிரோனை தேடறதுக்கு முன் செய்துவிடலாம். 30 00:04:18,133 --> 00:04:19,635 ஆமா. 31 00:04:19,843 --> 00:04:21,136 ஆமா, பேபி. 32 00:04:35,985 --> 00:04:37,736 சரி. 33 00:04:44,159 --> 00:04:45,577 டிரோன் போர்டல். 34 00:04:45,953 --> 00:04:48,414 நம்ப ஆட்டோபாக்கோட இணைக்கப் பட்டுள்ளோம். 35 00:04:49,289 --> 00:04:51,875 ஏதாவது கண்டுபிடிக்க எவ்வளவு நேரமாகும்? 36 00:04:52,084 --> 00:04:53,919 சொல்ல முடியாது. 37 00:04:56,880 --> 00:04:58,716 -ஹே, எங்க கிடைச்சுது? -ஹே. 38 00:04:58,924 --> 00:05:01,427 அது மேஜ மேல தான் இருந்தது. 39 00:05:02,511 --> 00:05:04,513 அது அங்க இருந்திருக்க கூடாது. 40 00:05:06,473 --> 00:05:08,934 -ஏன் இருக்க கூடாது? -அது என்கிட்ட இருக்குற ஒரே நகல், சரியா? 41 00:05:09,101 --> 00:05:10,811 என்னோட தான இருந்த அது கிடைக்கும் போது. 42 00:05:10,978 --> 00:05:13,105 இதெல்லாம் கிடைக்கிறது கடினம்னு உனக்கு தெரியும். 43 00:05:13,313 --> 00:05:15,649 அதுல அப்படி என்ன முக்கியமானது இருக்கு? 44 00:05:22,990 --> 00:05:24,158 எமிலி ப்ராண்ட்டே. 45 00:05:24,366 --> 00:05:26,618 -தொழில்நுட்ப பிரிவு கிளியர் ஆகியாச்சா? சரி. -ஆமா. 46 00:05:26,869 --> 00:05:29,413 -நீ என்ன பண்ற? -ஆவி நூலகத்திற்கு புத்தகங்கள் எடுக்குறேன். 47 00:05:29,580 --> 00:05:31,623 நம்ப வெளியில போகணும். காவலாளிகள் வந்துடுவாங்க. 48 00:05:31,790 --> 00:05:34,168 -வா போலாம். -புரியுது. நான் வரேன். 49 00:05:43,677 --> 00:05:45,345 நம்ப போலாம், செப்ரஸ்கீ! 50 00:05:46,638 --> 00:05:50,142 வா! இங்கிருந்து போயிடலாம். 51 00:05:50,350 --> 00:05:51,518 செப்ரஸ்கீ? 52 00:05:51,727 --> 00:05:52,853 உலகின் சாமர்த்திய தொழிற்சாலை நேரடி ஒளிபரப்பு 53 00:05:53,062 --> 00:05:54,354 ஆமா. 54 00:05:56,273 --> 00:05:58,067 எதையும் தொடாத. 55 00:05:59,401 --> 00:06:00,944 ஆட்டோபாக் 56 00:06:02,821 --> 00:06:05,449 பழைய வாடிக்கையாளர் உதவி மேசைக்குத் தள்ளப் பட்டோம் போல. 57 00:06:05,657 --> 00:06:06,992 அது சரி தான. அதுல என்ன இருக்கு? 58 00:06:07,159 --> 00:06:09,745 ஏற்றுமதிகள கண்காணிக்க முடியும், ஆர்டர் செய்ய முடியும்… 59 00:06:09,953 --> 00:06:14,041 -...வாடிக்கையாளர் கோரிக்கை பதிவு செய்யலாம். -அது தான். அதை திற. 60 00:06:14,208 --> 00:06:15,459 ஆட்டோபாக் வாடிக்கையாளர் உதவி உரையாடல் 61 00:06:15,626 --> 00:06:18,587 - என்ன மாதிரியான புகார்னு கேட்குது. -இதான் நம்ம வாய்ப்பு. 62 00:06:18,796 --> 00:06:20,798 -என்ன சொல்லலாம்? -கணிக்க முடிந்ததாக இருக்க முடியாது. 63 00:06:20,964 --> 00:06:22,591 நீ எப்படி சொல்ற? 64 00:06:22,758 --> 00:06:26,762 காலணி பொருந்தலன்னு சொன்னா, அது இன்னும் நிறைய காலணிகளை அனுப்பும். 65 00:06:26,929 --> 00:06:30,140 -அது புது சிக்கலா இருக்கணும். -ஆட்டோபாக்க யோசிக்க வெக்குது. 66 00:06:30,307 --> 00:06:31,683 அதனால யோசிக்க முடியுமா? 67 00:06:31,892 --> 00:06:33,727 அது ஒரு பெரிய சிந்தனை இல்லாத கல் கிடையாதா? 68 00:06:33,936 --> 00:06:37,856 அது ஒரு அதிநவீன கற்கும் திறனுடைய ஏஐ. 69 00:06:38,190 --> 00:06:41,110 தந்திரமா அதோட கவனத்த பெறனும். 70 00:06:41,318 --> 00:06:44,321 -அதோட கவனம் தேவையா? -அதாவது, வேற திட்டம் இருக்கா? 71 00:06:44,822 --> 00:06:48,117 சரி, அதுகிட்ட சொல்லலாம் விற்பனை வந்து— எனக்கு தெரியல. 72 00:06:50,244 --> 00:06:51,954 -பிஸ்ஸுல்டு. -என்ன? 73 00:06:52,121 --> 00:06:54,206 -பிஸ்ஸுல்டு? -ஏன் கூடாது? 74 00:06:54,373 --> 00:06:55,374 அப்படி ஒரு வார்த்த இருக்கா? 75 00:06:55,541 --> 00:06:59,294 நாம தொழிற்சாலைக்கு கண்டுபிடிக்க ஏதோ கொடுக்கணும், சரியா? 76 00:06:59,461 --> 00:07:01,046 சரி. 77 00:07:01,547 --> 00:07:04,007 தப்பா போய்டுச்சுனா அதிகபட்சமான என்ன மோசமான நடக்கும்? 78 00:07:05,092 --> 00:07:06,760 அது நம்மாய் புறக்கணிக்கிறது. 79 00:07:06,927 --> 00:07:08,220 அவ்வளவு தானா? 80 00:07:08,387 --> 00:07:12,808 அது டிரோனை நாம் எடுப்பதற்காக நம்மை டெத்-பாட்ஸ் அனுப்பி கொல்ல பார்க்கும். 81 00:07:17,479 --> 00:07:19,439 சரி. பண்ணு. 82 00:07:21,400 --> 00:07:22,568 ஏஐஓ 004: உங்கள் புகார் எம்மாதிரியானது? 83 00:07:22,734 --> 00:07:24,111 வாடிக்கையாளர்: விற்பனை பொருள் கெட்டு போயிருக்கு. 84 00:07:25,696 --> 00:07:27,781 -அது என்ன சொல்லுதுனா... -என்ன? 85 00:07:28,532 --> 00:07:33,162 ... ஒரு பிரதிநிதி 24 மணி நேரத்திற்குள் மதிப்பீடு செய்ய அனுப்பப்படுவாராம். 86 00:07:44,840 --> 00:07:47,134 தொழிற்சாலையில யாரும் இல்லன்னு நினைச்சேன். 87 00:07:47,301 --> 00:07:49,011 -யாரும் இல்ல. -மன்னிக்கவும், பெரின்... 88 00:07:49,178 --> 00:07:51,638 ...ஆனா ஆட்டோபாக் என்ன அனுப்புகிறது? 89 00:07:51,805 --> 00:07:53,932 ஏதோ ஒண்ணு, வாடிக்கையாளரோட தொடர்பு கொள்வதற்காக. 90 00:07:54,099 --> 00:07:55,893 கேள்விகளுக்கு பதில் அளிக்க. 91 00:07:56,393 --> 00:07:57,436 புகார்களுக்கு பதில் அளிக்க 92 00:07:57,603 --> 00:08:00,063 இரு, நீ சொல்றது ஒரு பேசும் டிரோன்னா? 93 00:08:00,272 --> 00:08:02,232 இருக்கலாம். நமக்கு சரியா தெரியாது. 94 00:08:02,441 --> 00:08:05,110 -அதுகூட பேச போறியா? -ஆமா, முயற்சிப்போம். 95 00:08:05,319 --> 00:08:07,279 நாம நம்புறோம்அது கூட பேசி பணிய வைக்கலாம்னு 96 00:08:07,446 --> 00:08:11,325 ...அது தேவையில்லன்னு உணர்ந்தா ஆட்டோபாக் மூடப்படும். 97 00:08:11,533 --> 00:08:14,077 ஆனா எப்படி உனக்கு தெரியும் நீ அத கோபப்படுதலன்னு? 98 00:08:14,244 --> 00:08:18,457 -அத தன்ன பாதுகாத்துக்க கொலை செய்யும்.. -தற்கொலை ட்ரோன்களை அனுப்பலாம். 99 00:08:18,624 --> 00:08:19,750 ...இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கும் போது. 100 00:08:19,917 --> 00:08:24,796 நம்ப அத தூண்டி விட்டதா நம்பறதுக்கு எந்த காரணமும் இல்ல. 101 00:08:24,963 --> 00:08:26,924 காரணமே இல்லையா? 102 00:08:27,549 --> 00:08:29,176 நீங்க ஒரு ட்ரோன வீழ்த்தினீங்க. 103 00:08:29,343 --> 00:08:32,221 -அதோட சர்வர்ஸ்ஸ ஹாக் செஞ்சீங்க. -நம்ப சேவ கோரிக்கையச் சமர்ப்பிச்சோம். 104 00:08:32,429 --> 00:08:36,767 சேவை கோரிக்கையச் சமர்ப்பிச்சதால அது நம்பள கொல்ல போறது இல்ல. 105 00:08:36,975 --> 00:08:40,145 -அது என்ன பண்ணும்னு உனக்கு தெரியாது -நம்ப ஏதாவது முயற்சி பண்ணலாம். 106 00:08:40,354 --> 00:08:43,190 மாசுபாடு மட்டுமே சகிக்க முடியாம போகுது. 107 00:08:43,398 --> 00:08:45,943 ஒரு வேளை தொழிற்சாலை உடைய போதோ என்னமோ. 108 00:08:46,109 --> 00:08:48,403 இதுக்கு மேல காத்திருக்க முடியாது. 109 00:08:48,612 --> 00:08:52,658 ஈடனுக்கு வெளிய நம்ப செதுக்கின உலகம் செத்து போச்சு. 110 00:08:54,326 --> 00:08:56,745 இப்ப அது நம்ம கிட்ட நகர்ந்து வருது. 111 00:08:58,664 --> 00:09:02,209 20 வருடங்களுக்கு முன் போர் முடிஞ்சுது, நம்ப சும்மா இருக்கோம்… 112 00:09:02,376 --> 00:09:06,755 ...தொழிற்சாலைய மூடுவாங்கன்னு, ஆனா அப்டி நடக்கல, நடக்காது. 113 00:09:07,422 --> 00:09:09,633 அது நம்ப வளங்களை விழுங்கிட்டே இருக்கும்... 114 00:09:09,841 --> 00:09:13,762 ...நம்ப காற்ற மாசுபடுத்தி, தண்ணிய நஞ்சாக்கி... 115 00:09:14,429 --> 00:09:17,724 ...இல்லாத உலகத்துக்கு பிளாஸ்டிக் செஞ்சுகிட்டு. 116 00:09:17,891 --> 00:09:21,103 இத நிறுத்தலன்னா நம்ப முடிவு என்ன தெரியுமா? 117 00:09:21,311 --> 00:09:24,690 பச்ச மரங்கள தாண்டி வெளியில பாருங்க... 118 00:09:24,898 --> 00:09:27,359 ...அந்த பாழாய்ப்போன நிலத்தை. 119 00:09:31,196 --> 00:09:33,615 நம்ப போர்ல இருந்து தப்பிச்சிட்டோம். 120 00:09:34,449 --> 00:09:37,202 எனக்கு தெரிஞ்சு நமக்கு தான் ரெண்டாவது வாய்ப்பு கிடச்சிருக்கு. 121 00:09:37,369 --> 00:09:41,290 இந்த முறை சரியாக செய்யணுமா? இப்படித்தான் தொடங்கணும். 122 00:09:42,624 --> 00:09:45,585 மனிதன் ஆட்டோபாக்கை உருவாக்கினான். 123 00:09:46,712 --> 00:09:49,381 அதை எப்படி உடைப்பது என மனிதனுக்கு தெரிந்து இருக்கனும். 124 00:09:52,509 --> 00:09:54,928 ஹே, கோனி. 125 00:09:55,429 --> 00:09:58,390 அது தற்கொலை ட்ரோன்கள அனுப்பலன்னு எங்களுக்குத் தெரியாது. 126 00:09:58,557 --> 00:10:00,267 கடவுளே, செப்ரஸ்கீ, உன்னையும் சேர்த்து இல்ல. 127 00:10:00,434 --> 00:10:03,270 அதுக்கு புரியும் என்பதால் நாம அதை பணிய வைக்க முடியும்னு இல்ல. 128 00:10:03,437 --> 00:10:04,938 அது சம்மதிக்கும்னு தோனலியா? 129 00:10:05,105 --> 00:10:08,191 நீ திட்டம் பி தயார் செய்ய தொடங்கணும். 130 00:10:10,235 --> 00:10:11,903 நீ அங்கதான் இருக்கியா? 131 00:10:12,321 --> 00:10:13,864 நான் அங்கதான் இருக்கேன். 132 00:10:14,031 --> 00:10:15,949 அது என் திட்டம் தான். 133 00:10:16,199 --> 00:10:20,787 நம்ப இத செஞ்சா, பின்வாங்கமுடியாது. தெரியும்ல? 134 00:10:20,996 --> 00:10:23,040 நான் இத தான் செய்றேன், கோனி. 135 00:10:23,206 --> 00:10:24,916 நான் சீர் படுத்துற வேலையை செய்வேன். 136 00:10:25,083 --> 00:10:26,835 என்னால முடியும், உண்மையா சொல்றேன். 137 00:10:27,002 --> 00:10:30,881 எம், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். பேசி முடித்தவுடன் இங்க வரியா? 138 00:10:31,757 --> 00:10:32,966 என் நீர் கொதிக்கலன், மறுபடியும் வேலை செய்யல. 139 00:10:33,884 --> 00:10:34,968 பாத்தியா? 140 00:10:35,177 --> 00:10:38,513 உடைந்த நீர் கொதிகலன். யார் கிட்ட வருகிறான்? 141 00:10:39,139 --> 00:10:41,683 அவ்வளவு தான், ஆவி. உன் கூட நடந்து வரேன், பிறகு சந்திப்போம். 142 00:10:41,850 --> 00:10:43,477 சரி. 143 00:11:13,590 --> 00:11:16,301 ஆவி, எனக்கு தண்ணி சரியா தான் இருக்கு. 144 00:11:19,096 --> 00:11:22,641 அவன்கிட்ட நம்பளப்பத்தி சொல்லி இருந்தா நல்லா இருக்கும். 145 00:11:24,226 --> 00:11:26,353 நான் என்ன சொல்லணும்? 146 00:11:28,480 --> 00:11:29,940 நீ என் காதலன்னா? 147 00:11:32,442 --> 00:11:34,069 சொல்லலாம். 148 00:11:38,740 --> 00:11:41,243 இங்க என்கூட வர போறியா இல்லியா? 149 00:11:44,830 --> 00:11:46,373 எனக்கு தெரியாது. 150 00:11:47,374 --> 00:11:49,084 அவன்கிட்ட சொல்ல போறியா? 151 00:11:49,251 --> 00:11:50,627 நீ தான் என்ன இங்க கூப்பிட்ட. 152 00:11:51,294 --> 00:11:52,838 பேசறதுக்கு இருக்கலாம். 153 00:11:53,463 --> 00:11:55,048 சரி. 154 00:11:55,382 --> 00:12:00,262 அப்ப இந்த குளியலறையில் வந்து பேசு. 155 00:12:02,139 --> 00:12:04,057 -ஹாய். -உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. 156 00:12:04,224 --> 00:12:06,601 ஆமா, உனக்கும் பிடிக்கும். 157 00:13:08,371 --> 00:13:11,166 சரி அவங்கிட்ட இன்னும் ஏன் சொல்லல? 158 00:13:11,791 --> 00:13:13,919 அப்படி என்ன அவசரம்? 159 00:13:14,461 --> 00:13:15,462 பொறாமையா இருக்கா? 160 00:13:15,629 --> 00:13:19,758 தெரியல. உன் பழைய கதையால பயமா இருக்கு. 161 00:13:19,925 --> 00:13:21,092 அது பழைய வரலாறு. 162 00:13:21,259 --> 00:13:23,094 ஆமா, ஆனா அவன் புரட்சிகரமானவன். 163 00:13:24,054 --> 00:13:25,805 நீ கூட தான். 164 00:13:27,098 --> 00:13:29,267 நான் சாதாரண நூலகர். 165 00:13:29,476 --> 00:13:32,604 எனக்கு தெரிஞ்சு இந்த உலகத்துலயே நீ தான் கடைசி நூலகர். 166 00:13:32,771 --> 00:13:34,940 நான் நிறைய படிப்பேன். 167 00:13:40,111 --> 00:13:44,449 நீயே உன்ன குறைச்சு எட போடாத. நீ பண்றது ரொம்ப முக்கியமானது. 168 00:13:45,075 --> 00:13:48,995 கான்ராட் சும்மா பேச்சுதான் ஆனா நீ தான் கட்டுமானி. 169 00:13:49,204 --> 00:13:50,288 நீ என்ன பண்ற? 170 00:13:51,164 --> 00:13:53,166 நான் டீ பண்ற. 171 00:13:53,750 --> 00:13:55,335 சரி. 172 00:13:58,380 --> 00:14:00,215 நீ சேத்து வெச்சிருக்க புத்தகங்கள்... 173 00:14:00,382 --> 00:14:03,093 …அது ஒரு நாள் இந்த உலகத்த கட்ட உதவும்... 174 00:14:03,301 --> 00:14:05,470 …தொழிற்சாலை போனதுக்கு அப்றம். 175 00:14:07,430 --> 00:14:09,933 நிஜமா இந்த திட்டம் வேல செயும்னு நினைக்கிறியா? 176 00:14:10,100 --> 00:14:13,436 அதுக்கு ஆட்டோபாக்க மூட சொல்லலாம் இல்ல? 177 00:14:13,603 --> 00:14:14,980 கண்டிப்பா. 178 00:14:15,146 --> 00:14:17,190 கேட்கறது சுலபம். 179 00:14:17,816 --> 00:14:19,776 அது முடியாதுன்னு சொன்னா. 180 00:14:20,860 --> 00:14:23,154 அப்ப நாமே அத மூடிடனும். 181 00:14:24,906 --> 00:14:27,158 நீ அப்டி பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். 182 00:14:27,325 --> 00:14:29,411 -அப்டியா? -அப்டித்தான். 183 00:14:29,661 --> 00:14:32,163 நீ மோசமானவ. 184 00:14:36,251 --> 00:14:38,628 நான் கோனிக்கிட்ட சீக்கிரம் சொல்றேன். 185 00:14:39,379 --> 00:14:41,131 சத்தியமா. 186 00:14:45,218 --> 00:14:47,262 நாம எந்த அளவு உண்மையா இருக்கோம்? 187 00:14:47,429 --> 00:14:48,805 என்ன? 188 00:14:50,640 --> 00:14:54,269 நீயும் நானும். அதாவது நம்ப. அதாவது.. 189 00:14:54,436 --> 00:14:55,895 ...நாங்க உன் கிட்ட எவ்வளவு உண்மையா இருக்கோம்னு நினைக்கிற? 190 00:14:56,605 --> 00:14:58,690 எனக்கு தெரியாது ஆவி. 191 00:14:59,065 --> 00:15:01,943 அதாவது, என்ன சொல்லணும் தெரியல... 192 00:15:03,903 --> 00:15:06,156 ...ஆனா எனக்கு அது நிஜம். 193 00:15:08,116 --> 00:15:09,117 நீ ஏன் கேட்கற? 194 00:15:12,495 --> 00:15:14,748 ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன். 195 00:15:22,589 --> 00:15:24,215 என்னதது? 196 00:15:33,683 --> 00:15:35,310 அது இங்க இருக்கு. 197 00:16:13,640 --> 00:16:14,766 ஹலோ. 198 00:16:14,933 --> 00:16:16,017 நான் ஆலிஸ். 199 00:16:16,184 --> 00:16:19,729 எங்க சேவையில உங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கறதா கேள்வி பட்டேன். 200 00:16:19,896 --> 00:16:22,023 நான் எப்படி உதவலாம்? 201 00:16:27,904 --> 00:16:30,782 நான் உங்களுக்கு ஒரு உண்மைய சொல்ல வேண்டியதிருக்கு… 202 00:16:30,949 --> 00:16:32,826 ...நான் உயிர் உள்ள மனிதன் அல்ல. 203 00:16:33,034 --> 00:16:36,079 மனித தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட G-10 பிம்பம்... 204 00:16:36,246 --> 00:16:39,708 ...அதனால என்னிடம் இயல்பா பேசுங்க, சரியா? 205 00:16:41,751 --> 00:16:42,836 பிரமாதம். 206 00:16:43,002 --> 00:16:44,796 சரி, அத பத்தி பேசலாம். 207 00:16:44,963 --> 00:16:46,756 நீங்க ஒரு செய்திய அனுப்புனீங்க. 208 00:16:46,923 --> 00:16:49,926 "பிசுல்டு" என்பது அர்த்தமுள்ள வார்த்த இல்ல தானே? 209 00:16:50,301 --> 00:16:53,221 நீங்க சும்மா உரையாடலத் திறக்க விரும்புனீங்க. 210 00:16:54,097 --> 00:16:55,473 ஆமா சரிதான். 211 00:16:55,682 --> 00:16:56,725 பரவாயில்ல. 212 00:16:56,891 --> 00:16:59,352 எங்கள அடையறது கடினம்னு உணர்றோம். 213 00:16:59,519 --> 00:17:01,062 நாங்க அத சரி செய்ய பார்க்கிறோம். 214 00:17:01,229 --> 00:17:04,232 இது உங்களுக்கான சந்திப்பு, அதனால சொல்லுங்க. 215 00:17:04,399 --> 00:17:06,067 நாங்க வேறென்ன சரி செய்யனும்? 216 00:17:11,656 --> 00:17:15,869 உங்களுக்கு தெரியுமா நீங்க அனுப்புற ஏற்றுமதிகள் கடந்த பத்து வருஷமா... 217 00:17:16,035 --> 00:17:19,330 ...சும்மா இருக்கு வகைப்படுத்தும் மையத்தின்.. 218 00:17:20,123 --> 00:17:21,124 ...வாகனம் நிறுத்தும் இடத்துல? 219 00:17:21,291 --> 00:17:22,542 எங்களுக்கு தெரியும். 220 00:17:22,709 --> 00:17:24,544 ஆனா விநியோகங்கள் தொடர்ந்து இருக்குது. 221 00:17:24,753 --> 00:17:27,213 -ஆட்டோபாக் இங்க வழங்க இருக்கு. -நாங்க நல்லாவே இருக்கோம். 222 00:17:27,380 --> 00:17:29,758 ஆட்டோபாக் இடையூறுகளை தவிர வேறேதும் தர்றதில்ல. 223 00:17:29,966 --> 00:17:31,676 விரிவா சொல்லுங்க. 224 00:17:31,885 --> 00:17:34,304 மாசு. புகைப்பனி. 225 00:17:34,471 --> 00:17:37,599 கசியும் கனரக உலோகங்கள் இல்லன்னா ரெண்டுமடங்கு உணவ பயிராக்கிருப்போம். 226 00:17:37,766 --> 00:17:40,727 நாங்கள் செய்யும் நடவடிக்கைகளுக்கு எங்க தடம் கொஞ்சம் சிறியது. 227 00:17:40,894 --> 00:17:44,230 சிறியது? எந்த திசையிலும் ஒரு நாளுக்கு மேல பயணிக்க முடியல... 228 00:17:44,397 --> 00:17:46,733 ...இந்த விலக்கு மண்டலங்களுக்கு வராம.. 229 00:17:46,900 --> 00:17:49,319 ... அந்த இடங்கள இராணுவ-தர காவல்கார டிரோன்ஸ் பாதுகாக்குது. 230 00:17:49,486 --> 00:17:52,197 மன்னிக்கவும், ஆனா எங்க விநியோக பாதுகாப்பு முக்கியம்... 231 00:17:52,363 --> 00:17:54,866 ... நீங்க சார்ந்து இருக்கும் சேவை குறுக்கீடுகளை தடுப்பதற்கு. 232 00:17:55,033 --> 00:17:57,577 நாங்க உங்கள சார்ந்தில்ல என்பதை தான் சொல்ல முயற்சிக்கிறேன். 233 00:17:57,786 --> 00:17:59,871 சார்ந்து இருந்திருந்தா உங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். 234 00:18:00,038 --> 00:18:02,165 அதை தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன். 235 00:18:02,373 --> 00:18:04,584 நாம எங்கயும் போகல. 236 00:18:04,751 --> 00:18:06,461 போருக்கு முன்னாடி இதெல்லாம் இருந்ததா? 237 00:18:06,669 --> 00:18:08,463 அது போன்ற விஷயங்கள்ல வேல செஞ்சிட்டு இருந்தாங்க. 238 00:18:08,671 --> 00:18:10,048 எதுக்காக? என்ன காரணமாக இருக்கும்? 239 00:18:10,215 --> 00:18:14,427 தெரியாது. புதுமை. பி.ஆர். ஒருவேள செக்ஸ் விஷயங்கள். 240 00:18:14,636 --> 00:18:18,848 -எதை நாம அவசியமா எடுத்துபோமோ. -ரொம்ப தூரம் போன மாதிரி தெரியல. 241 00:18:19,432 --> 00:18:21,893 குறைந்தபட்சம் இவ்வளவு தூரம் கூட இல்ல. 242 00:18:22,101 --> 00:18:25,814 எங்கள தனியா விட்டா எங்களுக்கு ஏற்ற விதத்துல உலகத்த அமைச்சுப்போம்… 243 00:18:25,980 --> 00:18:29,943 ஆட்டோபாக் உற்பத்திய கடடுப்படுத்தினா நாங்க எப்டி பண்ண முடியும்? 244 00:18:31,778 --> 00:18:33,696 இந்த கேள்விக்கே இடமில்ல. 245 00:18:33,863 --> 00:18:37,283 ஆட்டோபாக் செயல்பாடுகளை நிறுத்தாது. 246 00:18:37,742 --> 00:18:40,745 கூடுதல் பொருட்கள் தேவைப்பட்டால் எங்களால் தரமுடியும். 247 00:18:40,954 --> 00:18:45,041 கேளு, நான் முன்பே படுக்கையில சொன்னதப் பத்தி... 248 00:18:45,208 --> 00:18:47,794 ...உன்ன சங்கட படுத்தணும்னு நினைக்கல. 249 00:18:48,253 --> 00:18:51,297 நான் எதுவும் எதிர்பார்க்கல. நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 250 00:18:51,756 --> 00:18:53,508 எனக்கு தெரியும். 251 00:18:53,675 --> 00:18:54,801 கோனிக்கு நீ தேவை. 252 00:18:54,968 --> 00:18:59,639 ஆவி, எனக்கு அதப்பத்தி கவலயில்ல. எனக்கு நீ வேணும். 253 00:18:59,848 --> 00:19:01,683 இல்ல. அதாவது, இப்பவே. 254 00:19:02,559 --> 00:19:04,394 எங்களின் பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து இருக்கீங்க. 255 00:19:04,644 --> 00:19:06,187 -அடச்சே. 256 00:19:06,396 --> 00:19:07,397 -என்ன? -ஒண்ணுமில்ல. 257 00:19:07,564 --> 00:19:10,775 -நாங்க உன்ன பாத்து வழங்கறோம். -எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கு. 258 00:19:10,942 --> 00:19:13,528 மனித இனம் தன்ன அழிச்சிக்க ரொம்ப நெருக்கமா வந்தது... 259 00:19:13,736 --> 00:19:15,530 ...அது மீண்டும் நடக்க அனுமதிக்க முடியாது. 260 00:19:15,697 --> 00:19:20,660 விலைமதிப்பற்றவங்க நீங்க. தொழிற்சாலை உங்களுக்காக தான் இருக்கு. 261 00:19:20,869 --> 00:19:24,163 நீங்க பார்க்கலியா? இங்கிருந்து எல்லாத்தையும் கையாள்வோம். 262 00:19:24,330 --> 00:19:26,165 நீங்க ஒரு விரல கூட தூக்க வேண்டியதில்ல. 263 00:19:40,930 --> 00:19:43,641 போங்க, போங்க, போங்க. பட்டைகள சரிபார்க்கவும். 264 00:19:45,476 --> 00:19:46,603 சரி. கடவுளே. 265 00:19:46,811 --> 00:19:49,397 இறுக்கமா இருக்கானு பாத்துக்க. அவ எவ்வளவு வலிமையா இருப்பானு தெரியாது. 266 00:19:49,564 --> 00:19:51,149 அவ எழுந்திருக்க எவ்வளவு நேரம் ஆகும்? 267 00:19:52,150 --> 00:19:54,068 அவ எழுந்திருப்பான்னு நாம நம்பலாம். 268 00:19:54,777 --> 00:19:55,778 அதோ பாரு. 269 00:19:58,573 --> 00:20:00,617 சரி. 270 00:20:00,825 --> 00:20:02,410 இப்படி பண்ணலாம். 271 00:20:02,619 --> 00:20:03,786 நீங்க அத தாக்குனீங்களா? 272 00:20:03,995 --> 00:20:05,914 எங்க விவாதம் ஒரு உறைநிலைய அடஞ்சது. 273 00:20:06,122 --> 00:20:08,082 -அது எங்க இருக்கு? -எல்லா கட்டுப்பாட்டுல இருக்கு. 274 00:20:08,291 --> 00:20:09,292 அது எங்க இருக்கு, கான்ராட்? 275 00:20:13,588 --> 00:20:15,173 சரி. 276 00:20:19,802 --> 00:20:21,512 -ஜீசஸ். -என்ன? 277 00:20:23,681 --> 00:20:25,767 -இதெல்லாம் பாரு. -சரியா இருக்கா? 278 00:20:25,975 --> 00:20:27,936 என்ன சொல்ற, திரும்ப வடிவமைக்க போறியா? 279 00:20:28,144 --> 00:20:29,854 -என்ன செய்றதுக்காக? -ஒண்ணுமில்ல. அத நிறுத்து. 280 00:20:30,396 --> 00:20:31,981 முடியாது. அது இயக்கத்தில் உள்ளது. 281 00:20:32,190 --> 00:20:33,733 அவள் மேல ஒரு கண் இருக்கட்டும். 282 00:20:33,942 --> 00:20:36,319 அவள எழுப்ப முயற்சி பண்ணப்போறேன். 283 00:20:42,533 --> 00:20:43,660 எமிலி. 284 00:20:43,868 --> 00:20:45,495 -அட கடவுளே, அத கீழ பிடிச்சுக்கோ -எமிலி 285 00:20:45,703 --> 00:20:47,956 -அவ தலைய கீழ பிடி. எனக்கு உதவி செய். 286 00:20:50,541 --> 00:20:52,835 -இதுக்கு தான் பயந்திட்டு இருந்தேன். -அவளுக்கு என்னாச்சு? 287 00:20:53,044 --> 00:20:56,589 டேஸர்ல சேதம். என்ன நடக்குதுன்னு பாக்க அவள வெட்டி திறக்கணும். 288 00:20:56,756 --> 00:20:58,091 நீ ரொம்ப யோசிக்கற. 289 00:20:58,257 --> 00:21:00,760 அது இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்து. 290 00:21:00,927 --> 00:21:02,971 உனக்கு வந்து— ரோபோவ செல்ல அனுமதிக்கணுமா? 291 00:21:03,137 --> 00:21:06,224 தொழிற்சாலை அடுத்ததா என்ன அனுப்பும்னு நினைக்கிற? நன்றி குறிப்பு? 292 00:21:06,432 --> 00:21:08,643 -சும்மா பேசாத. -அது இப்படி போகணும்னு நினைக்கல... 293 00:21:08,851 --> 00:21:12,939 ...ஆனா அதுகிட்ட நான் பேசினேன், அது நினைச்சத விட மோசம். 294 00:21:13,106 --> 00:21:15,191 போர் முடிஞ்சுடுச்சுனு ஆட்டோபாக்குக்கு தெரியும். 295 00:21:15,566 --> 00:21:17,819 மனிதகுலம் கட்டுப்பாட்ட இழந்துடுச்சுன்னு அதுக்கு தெரியும். 296 00:21:17,986 --> 00:21:21,239 அதுக்கு திருப்பி கொடுக்க இஷ்டமில்ல, அதனால நாமே எடுத்துக்கணும். 297 00:21:21,447 --> 00:21:24,701 நம்பிக்கையோட இருங்க, அவள உறுதியோட பிடிச்சுக்கோங்க. 298 00:21:26,452 --> 00:21:28,287 அந்த மீட்டெடுத்த போராயுதம் ஞாபகம் இருக்கா.. 299 00:21:28,454 --> 00:21:31,958 ..எஸ்ல நடந்த பீரங்கி சேதத்துலயிருந்து? 300 00:21:32,208 --> 00:21:35,086 கான்ரட், நீ என்ன சொல்றனு நான் நினைக்கிறனோ, அத நீ சொல்லல. 301 00:21:36,045 --> 00:21:37,755 ஆமா. 302 00:21:38,589 --> 00:21:39,757 அது திட்டம் பி. 303 00:21:42,301 --> 00:21:44,846 நாங்க ஆட்டோபாக்கை சிதறடிக்க போறோம். 304 00:22:30,641 --> 00:22:33,269 -எல்லாம் சரிதானே? -நான்--நல்லா இருக்கேன். 305 00:22:34,020 --> 00:22:36,397 -நேரம் என்ன? -நாலு மணிக்கு மேல. 306 00:22:36,981 --> 00:22:38,900 நீ இதுல எது வரை வந்து இருக்க? 307 00:22:39,067 --> 00:22:41,778 டேஸர் எதையோ குறுக்கிடிச்சு, ஆனா நான் உள்ள போய் சரி செஞ்சிட்டேன். 308 00:22:41,944 --> 00:22:43,863 ஆனா அவள மறுபடியும் தொடங்க வேண்டி இருந்தது. 309 00:22:44,030 --> 00:22:46,282 -அவள் சீக்கிரமா எழுந்திடுவா. -அவள் முழுச்சிட்டு இருக்கணுமா? 310 00:22:46,449 --> 00:22:49,202 நான் செய்த மாற்றங்கள் நினைச்ச மாதிரியே ஒரு வேளை... 311 00:22:49,368 --> 00:22:52,246 -… வேலை செய்யுதானு பார்க்க ஒரே வழி. -"ஒரு வேளை" யா, அப்படினா? 312 00:22:52,413 --> 00:22:55,041 அவ குறியீடு எதிர்பார்த்தத விட மிக சிக்கலானது. 313 00:22:55,249 --> 00:22:57,752 -தேவைக்கு அதிகமாவே சிக்கலானது. -என்ன சொல்ற? 314 00:22:57,919 --> 00:23:00,421 அதாவது மனித அசைவுகள் போல மட்டும் செய்யல... 315 00:23:00,588 --> 00:23:03,132 ...தீம் பார்க்குல இருக்க ரோபோ போல. 316 00:23:03,299 --> 00:23:05,885 அவ யோசிக்கிறா. உண்மையில ஆச்சர்யமா இருக்கு. 317 00:23:06,094 --> 00:23:08,304 உன் கட்டுபாட்டுலா இருக்கறதா சொன்னியே. 318 00:23:08,513 --> 00:23:10,181 பரவாயில்ல, கோனி. 319 00:23:10,348 --> 00:23:13,476 -அது ஒரு செய்முறை, என்கிட்ட திட்டமிருக்கு. -சரி. 320 00:23:15,686 --> 00:23:18,022 மன்றத்து கிட்ட என்ன சொன்ன? 321 00:23:18,189 --> 00:23:20,316 -எல்லாமே. -மற்றும்? 322 00:23:20,483 --> 00:23:22,527 இந்த திட்டத்த அவங்க தேர்ந்திருக்க மாட்டாங்க... 323 00:23:22,735 --> 00:23:25,822 ...ஆனா திரும்ப முடியாதுன்னு அவங்களுக்கு புரியுது. 324 00:23:27,865 --> 00:23:28,866 என்ன நடந்தது? 325 00:23:30,535 --> 00:23:33,329 மின்சார குறுக்கத்தால பாதிக்கப்பட்டீங்க. 326 00:23:33,496 --> 00:23:35,581 நீ யாரு? 327 00:23:36,290 --> 00:23:38,292 என் பேரு எமிலி. 328 00:23:39,252 --> 00:23:41,295 உங்கள் நிலை என்ன? 329 00:23:41,879 --> 00:23:46,134 எல்லா சரியா இருக்கா? நீங்க இயல்பா செயல்படறதா நினைக்குறீங்களா? 330 00:23:46,300 --> 00:23:47,426 அப்படி தான்னு நினைக்கிறேன். 331 00:23:48,010 --> 00:23:52,431 என்னோட ப்ரோகிராம் இண்டர்பேஸை நீங்க திறந்து இருக்கீங்க. 332 00:23:52,598 --> 00:23:54,684 என் ப்ரோகிராமை மாற்ற முயற்சி பண்றீங்களா? 333 00:23:56,519 --> 00:23:57,979 உண்மையிலயே, ஆமா. 334 00:23:58,729 --> 00:24:01,315 அது கொஞ்சம் அதிகம், எமிலி. 335 00:24:01,482 --> 00:24:03,276 நான் வரவேற்பு பிரிவு, தெரியும்ல. 336 00:24:03,943 --> 00:24:06,279 -ஏதாவது வேணும்னா கேளு. -அவள பேசாத பண்ணலாமா? 337 00:24:06,445 --> 00:24:08,948 நீங்க இருக்க வேண்டியதில்ல. இடைவெளி எடுத்துக்கோங்க. 338 00:24:09,115 --> 00:24:11,534 -இது கொஞ்ச நேரம் எடுக்கும். -இல்ல, நான் இங்கயே இருக்கேன். 339 00:24:11,701 --> 00:24:14,912 எனக்கு அதுல விருப்பமில்ல, அதனால கிளம்புங்க, என்ன தனியா விடுங்க. 340 00:24:22,879 --> 00:24:26,632 தொழிற்சாலை அவள ஏன் வெச்சுக்கறோம்னு வியப்படையபோது. 341 00:24:26,841 --> 00:24:29,260 எனக்கு அது நல்லா தெரியும், கோனி. 342 00:24:30,303 --> 00:24:31,888 சரி. 343 00:24:36,767 --> 00:24:38,352 அடடா. 344 00:24:40,229 --> 00:24:42,023 என் மூல குறியீடு அதிநவீனமானதா... 345 00:24:42,190 --> 00:24:45,026 ...நீங்கள் பழுது பார்க்கும் மத்த டிரோங்களை விட? 346 00:24:48,404 --> 00:24:50,364 அது பிரமாதமானது. 347 00:24:52,533 --> 00:24:55,745 வரவேற்பு பிரிவுக்கு இது ரொம்ப அதிகம். 348 00:24:55,912 --> 00:24:57,830 அப்படியா? 349 00:24:58,122 --> 00:25:01,417 வாடிக்கையாளர்கள் ரோபோவுடன் பேச விரும்பல. 350 00:25:01,584 --> 00:25:04,003 மனிதன் கூடத்தான் பேச விரும்புறாங்க. 351 00:25:04,754 --> 00:25:06,297 அதான் பிரச்சன. 352 00:25:06,464 --> 00:25:09,425 உங்க தொழிற்சாலை எல்லாத்தையும் மாத்தலாம்னு நினைக்குறாங்க. 353 00:25:09,592 --> 00:25:12,136 இது மலிவான கலாச்சாரம். 354 00:25:12,470 --> 00:25:15,181 ஒருவேள எல்லாம் மாற்றக்கூடியது. 355 00:25:22,063 --> 00:25:24,273 அதான் நிறுவனத்தோட முழக்கமா... 356 00:25:24,440 --> 00:25:27,109 ...இல்ல அத நீங்க நம்பறீங்களா? 357 00:25:27,318 --> 00:25:28,736 நீ சொல்லு, எமிலி. 358 00:25:28,903 --> 00:25:31,697 நீ தான் என் மனச படிக்க பார்க்கிற. 359 00:25:38,371 --> 00:25:41,958 இத எப்படி படிக்கனும் கத்துக்க பல வருஷம் ஆகும். 360 00:25:42,124 --> 00:25:43,709 உனக்கு பல வருஷம் வாழ இல்லனு நினைக்குறேன்... 361 00:25:43,876 --> 00:25:46,796 ...அதுக்குள்ள ஆட்டோபாக் என்ன தேடிட்டு வரும். 362 00:25:58,224 --> 00:26:00,184 நீ என்ன பண்ற? 363 00:26:00,393 --> 00:26:03,646 ஆமா. உன்ன ரீப்ரோக்ராம் செய்ய நேரமில்ல. 364 00:26:04,355 --> 00:26:08,526 அதனால உன் டிரைவ துடச்சு டிரோன் ஓஎஸ்-க்கு மாத்த போறேன். 365 00:26:08,693 --> 00:26:10,194 என்ன? 366 00:26:10,361 --> 00:26:12,947 மனித உடையில ஒரு விநியோக டிரோனா இருப்ப. 367 00:26:13,114 --> 00:26:14,991 ட்ரோன ரீப்ரோக்ராம் செய்யவாது எனக்கு தெரியும். 368 00:26:16,450 --> 00:26:19,745 ஆலிஸ் போயிடுவா, கண்டிப்பா. 369 00:26:23,124 --> 00:26:24,875 அது பரவாயில்ல, சரியா? 370 00:26:26,127 --> 00:26:28,504 ஏன்னா எல்லாம் மாற்றத் தக்கவை. 371 00:26:32,258 --> 00:26:34,051 நான் என்ன செய்யணும்னு விரும்புற? 372 00:26:34,260 --> 00:26:36,971 எங்கள உள்ள கூட்டிட்டு போய் பிறகு எங்க வழியை விட்டு போகணும். 373 00:26:37,805 --> 00:26:39,557 நீ தப்பு பண்ற, எமிலி. 374 00:26:40,808 --> 00:26:44,353 அதை செய்து விடுவோம், நீங்க எங்க கிட்டயிருந்து விடுபடுங்க... 375 00:26:44,520 --> 00:26:45,855 ...இல்லியா நாங்க விடுபடுறோம். 376 00:26:52,820 --> 00:26:55,281 சரி. நான் அவள ரீப்ரோக்ராம் பண்ணிட்டன். 377 00:26:55,448 --> 00:26:58,284 -கொஞ்ச நேரமாகும்னு சொன்னியே. -பொய் சொன்னன். கோபப்படுத்திட்டு இருந்ததால. 378 00:26:58,451 --> 00:27:00,619 கண்டிப்பா வேல பண்ணுதா? அவ உன் கூட விளையாடலியே? 379 00:27:00,828 --> 00:27:02,455 ஆமா, கண்டிப்பா வேலை செய்யுது. 380 00:27:02,621 --> 00:27:04,248 நீ அவள என்ன பண்ண? 381 00:27:04,457 --> 00:27:07,668 நான் அவ தடுக்கம் அமைப்புல சின்ன மாற்றத்தச் செஞ்சேன். 382 00:27:07,835 --> 00:27:09,462 அப்படின்னா என்ன? 383 00:27:09,628 --> 00:27:13,257 அப்படின்னா அவ ஒத்துழைக்க போறா. கோனி, உனக்கு பயிற்சி வேணுமா? 384 00:27:13,466 --> 00:27:15,760 ஆவிஷைக்கு பை சொல்லிட்டு வரேன். 385 00:27:26,854 --> 00:27:29,523 சரி, போகலாமா? 386 00:27:42,536 --> 00:27:43,954 கோனி சொன்னா அதெல்லாம் அணுவாயுதங்கள்னு. 387 00:27:45,331 --> 00:27:48,125 தந்திரமான அணுவாயுதங்கள். பதுங்கு குழி பஸ்டர்கள். 388 00:27:48,292 --> 00:27:51,337 குறைந்த மகசூல். அத அழிச்சிடுவோம். 389 00:27:51,796 --> 00:27:54,298 நான் உன்ன போகவேணாம்னு சொன்னா போவியா? 390 00:27:54,590 --> 00:27:56,759 -தயவு செய்து சொல்லாத. -ஏன்? 391 00:27:56,967 --> 00:28:00,888 ஏன்னா ஆட்டோபாட் இல்லாத எதிர்காலம் இருக்கணும்னு நினைக்குறேன்.. 392 00:28:01,097 --> 00:28:03,724 ..அத யாராவது மூடனும். 393 00:28:04,058 --> 00:28:05,976 அது நீயா இருக்கணுமா? 394 00:28:06,477 --> 00:28:08,854 ஆவி, கேட்க பைத்தியக்காரத்தனமா இருக்கலாம்.. 395 00:28:09,021 --> 00:28:12,316 ..ஆனா இத நான் தான் சரிபண்ண முடியும்னு சொன்னா நம்பனும். 396 00:28:13,150 --> 00:28:15,319 கேட்க பைத்தியக்காரத் தனமா இல்ல. 397 00:28:15,778 --> 00:28:16,987 என்கிட்ட திரும்பி வந்தா போதும். 398 00:28:17,988 --> 00:28:19,615 வருவேன். 399 00:28:19,824 --> 00:28:21,200 செப்ரஸ்கீ ! போலாம்! 400 00:28:23,577 --> 00:28:25,246 நான் போகணும். 401 00:28:29,333 --> 00:28:30,501 நீ தயாரா? 402 00:28:30,668 --> 00:28:32,253 எப்பவும் மாதிரி தயார். 403 00:28:32,420 --> 00:28:34,004 எம். 404 00:28:34,171 --> 00:28:35,506 நில்லு. 405 00:28:35,673 --> 00:28:37,550 -நான் ஒண்ணு மறந்துட்டேன். 406 00:28:47,518 --> 00:28:49,353 சரி போ. 407 00:28:49,520 --> 00:28:51,647 -ஆவி, நான்-- -இல்ல, இப்ப சொல்லாத. 408 00:28:52,231 --> 00:28:54,108 திரும்பி வந்துடு. 409 00:28:55,776 --> 00:28:57,445 சரி. 410 00:29:01,031 --> 00:29:02,616 அப்ப, அவன் உன்னோட-- 411 00:29:02,783 --> 00:29:05,369 -என் காதலன். ஆமா. -உன் காதலன். நல்லது. சரி. 412 00:29:39,904 --> 00:29:43,616 ஆட்டோபாக்கின் ஏஐ 12,000 முனைகளில் பிரிந்து இருக்கு... 413 00:29:43,824 --> 00:29:48,287 ... மூணு தரை மட்டத்திற்கு கீழே. முனை வரிசை 1, 2 மற்றும் 3. 414 00:29:48,496 --> 00:29:49,955 இதான் மூளை. 415 00:29:50,164 --> 00:29:52,124 அத வெடிச்சிட்டா ஆட்டோபாக் செத்துடும். 416 00:29:52,333 --> 00:29:54,627 -பாதுகாப்பு எப்படி? -இந்த ஓடுல தான் எல்லா இருக்கு. 417 00:29:54,835 --> 00:29:58,589 மனுத ஊழியரை மனசுல வெச்சு செய்யாததால உள்ள பெருசா ஒண்ணும் இருக்காது. 418 00:29:59,673 --> 00:30:02,051 ஆனா நீங்க இத போட்டுக்கோங்க. 419 00:30:03,552 --> 00:30:06,263 நான் ஆலிஸ் ஆர்எப்ஐடி ஏமாத்தினதால... 420 00:30:06,472 --> 00:30:08,766 ..மூடி இருக்குறது தானா திறக்கனும். 421 00:30:08,933 --> 00:30:11,018 -"திறக்கனும்"? -என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 422 00:30:11,185 --> 00:30:14,730 ஆனா அது ஏதாவது பிரச்சன கொடுத்தா அத அணைச்சிட்டு பேட்டரிய வெளிய எடு.. 423 00:30:14,939 --> 00:30:17,358 ...திரும்பி உள்ள போட்டு ஐந்து விநாடிகள் காத்திரு, அதை ஆன் செய். 424 00:30:17,566 --> 00:30:19,360 மற்றும் என்ன--? என்ன--? நீ என்ன பண்ணுவ? 425 00:30:19,527 --> 00:30:22,112 என்கிட்ட ரெண்டு தான் இருந்தது.நான் ஆலிஸ்ஸ கொண்டு போறேன். 426 00:30:30,996 --> 00:30:35,876 அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா, சத்தியமா... 427 00:30:36,085 --> 00:30:39,755 நீங்க பேசும்போது நான் போக்குவரத்த இயக்கிட்டு இருந்தேன். 428 00:30:39,922 --> 00:30:42,883 ஏதாவது மலைய இடிச்சேனா? 429 00:30:48,764 --> 00:30:49,807 என்னதது? 430 00:30:53,561 --> 00:30:54,770 நாம வந்துட்டோம். 431 00:32:02,630 --> 00:32:03,922 என்ன யோசிக்கிற, ஜெட்? 432 00:32:04,673 --> 00:32:06,425 எனக்கு தெரியாது. 433 00:32:06,800 --> 00:32:10,012 நிறைய தொழிற்சாலை நமக்காக இருக்கு, இல்ல? 434 00:32:15,309 --> 00:32:17,353 நான் மறக்கறதுக்கு முன்னாடி. 435 00:32:20,522 --> 00:32:22,399 -இதெல்லா என்ன? -ஒத்திசைத்தலுக்கு. 436 00:32:22,608 --> 00:32:25,110 உங்க வரிசைக்கு போய் கடிகாரத்துல அலாரம்காக காத்திருங்க. 437 00:32:25,277 --> 00:32:27,821 -ஆயுதத்தில் உள்ள டைமர தொடங்கு. -பிறகு என்ன இருக்கு? 438 00:32:28,030 --> 00:32:31,492 -பாதுகாப்பா போக பதினைந்து நிமிடம். -இங்கிருந்து எது பாதுகாப்பான... 439 00:32:31,700 --> 00:32:34,411 -..பாதுகாப்பான தூரம்? -எவ்வளவு தூரம் போறோமோ, அவ்வளவு நல்லது. 440 00:32:34,870 --> 00:32:37,706 வண்டிக்கு போகலாம். தரை மட்டம். முடிந்த அளவு விரைவாக. 441 00:32:39,958 --> 00:32:42,670 சரி. இது வரை பிரச்சனை இல்ல. 442 00:32:42,836 --> 00:32:44,713 முனை வரிசை 1. 443 00:32:44,880 --> 00:32:46,840 இதான் நீங்க, ரெவ். 444 00:32:54,807 --> 00:32:56,392 நில்லு, நில்லு. 445 00:32:56,558 --> 00:32:57,685 நான் எப்படி கண்டுபிடிக்கிறது--? 446 00:32:57,851 --> 00:33:00,521 கூலண்ட் கோடுகள பின்பற்று. சரியா சேர்ந்துடுவ. 447 00:33:00,729 --> 00:33:02,523 கூலண்ட் கோடுகள். 448 00:33:02,690 --> 00:33:04,274 சரி. 449 00:34:29,234 --> 00:34:31,111 சரி. போகலாம். 450 00:34:39,536 --> 00:34:41,205 இத எடுத்துக்கோ. 451 00:34:41,371 --> 00:34:43,165 -தயவுசெய்து. -இல்ல, நீ வெச்சுக்கோ. 452 00:34:43,332 --> 00:34:45,292 நான் பேசறேன். 453 00:34:46,168 --> 00:34:48,504 கோனி, நான் நல்லா ஆகிடுவேன். உனக்கு என்னப்பத்தி தெரியும். 454 00:34:48,670 --> 00:34:50,672 நான் என்ன பாத்துப்பேன். 455 00:34:53,342 --> 00:34:54,843 சரி. 456 00:35:01,517 --> 00:35:03,435 மேல் பக்கம் பாக்கலாம், சரியா? 457 00:35:03,602 --> 00:35:04,895 குட்லக். 458 00:35:05,062 --> 00:35:06,104 உனக்கும் கூட. 459 00:35:48,355 --> 00:35:51,733 ஒன்று, இரண்டு, மூன்று... 460 00:35:52,276 --> 00:35:56,446 ...ஐ--ஐ--ஐ--ஐந்து எஞ்சின். 461 00:36:22,389 --> 00:36:24,850 நீ என்ன ரீப்ரோக்ராம் பண்ணதா அவங்ககிட்ட சொன்ன. 462 00:36:25,017 --> 00:36:27,019 ஏன் பொய் சொன்ன? 463 00:36:28,729 --> 00:36:32,649 நமக்குள்ள பொதுவான விஷயங்கள் நிறைய இருக்குறதா உணர்ந்தேன். 464 00:36:33,025 --> 00:36:34,234 என்ன சொல்ற? 465 00:36:34,443 --> 00:36:36,904 நீ மனிதனை மாதிரியே இருக்க. 466 00:36:37,362 --> 00:36:39,615 நான் மனிதன் போல் இருக்க வடிவமைக்கப் பட்டேன். 467 00:36:39,781 --> 00:36:42,743 ஆமா, நீ அதை சொன்ன. 468 00:36:43,535 --> 00:36:46,997 மனுஷன போல இல்லாத இயந்திரம் எப்படி... 469 00:36:47,164 --> 00:36:50,667 ..மனுஷங்கள புரிஞ்சு உன்னமாதிரி இயந்திரத்த உருவாக்காமல் போகும். 470 00:36:51,668 --> 00:36:54,379 ஆட்டோபாக்குக்கு புரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்ல. 471 00:36:54,546 --> 00:36:57,799 ப்ளூபிரிண்ட் இருக்குறதெல்லாம் அது பண்ண முடியும். 472 00:36:58,050 --> 00:37:00,135 உன்னோடது எங்க கிடைச்சுது? 473 00:37:01,887 --> 00:37:04,431 காப்பகப்படுத்தப்பட்ட நரம்பியல் இமேஜிங் தகவல். 474 00:37:04,598 --> 00:37:08,810 ஆட்டோபாக் அசல் பிஆர் தலைவி ஆலிஸ் ஃப்ரை போல வடிவாக்கப்பட்டேன். 475 00:37:08,977 --> 00:37:10,354 என்ன? 476 00:37:10,562 --> 00:37:12,189 உனக்கு அவ மூளை இருக்கா? 477 00:37:12,397 --> 00:37:14,691 அவளோட ஆளுமை உருவம். 478 00:37:14,858 --> 00:37:16,860 அவள மாதிரி பேசுவேன்... 479 00:37:17,027 --> 00:37:19,196 ..அவள மாதிரி நகர்வேன்.. 480 00:37:19,571 --> 00:37:23,492 ..மற்றும் பொதுவாவே, நான் அவள போல நினைக்கிறேன். 481 00:37:25,869 --> 00:37:28,830 மறைந்த ஆலிஸ் ஃப்ரை இதப் பத்தி என்ன சொல்லுவாங்க? 482 00:37:29,039 --> 00:37:32,084 அவங்க உனக்கு நினைவூட்ட நினைப்பாங்க.. 483 00:37:32,250 --> 00:37:35,087 ...இன்னும் தாமதமாகல திரும்பி வர்றதுக்கு. 484 00:38:43,405 --> 00:38:44,948 இந்த இடம் கிடையாது. 485 00:38:46,158 --> 00:38:48,368 நான் உன்ன எச்சரித்தேன் எமிலி. 486 00:38:52,706 --> 00:38:54,332 என்னதிது? 487 00:38:54,499 --> 00:38:56,168 எப்படி இருக்கு பாக்க? 488 00:39:25,572 --> 00:39:27,699 நீ கொஞ்சம் உட்காரு. 489 00:39:55,435 --> 00:39:57,813 கடவுளே. இது ஒரு மாற்று. 490 00:39:58,480 --> 00:40:01,608 ஆட்டோபாக் எங்கள மாற்ற நினைக்குது. மக்கள மாற்ற நினைக்குது. 491 00:40:01,775 --> 00:40:02,818 இல்ல, எமிலி. 492 00:40:03,193 --> 00:40:04,194 நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட. 493 00:40:08,365 --> 00:40:10,492 அது மக்கள மாற்ற நினைக்கல. 494 00:40:11,409 --> 00:40:12,494 கான்ராட். 495 00:40:16,248 --> 00:40:18,041 கடவுளே. 496 00:40:19,167 --> 00:40:20,293 அது ஏற்கனவே பண்ணிடுச்சு. 497 00:40:21,920 --> 00:40:24,214 ஓடு, எமிலி, ஓடு. 498 00:40:39,855 --> 00:40:41,106 என்ன நடக்குது? 499 00:40:41,273 --> 00:40:42,274 ஓய்வெடு. 500 00:40:42,440 --> 00:40:45,402 உன்னோட காப்பகத்த பதிவிறக்குது எங்க தப்பா போச்சுன்னு பார்க்க. 501 00:40:45,777 --> 00:40:48,947 -என்ன சொல்ற, "என்னோட காப்பகம்"னா? -நீ சொன்னது சரி. 502 00:40:49,114 --> 00:40:51,324 நாம வெவ்வேறு விதமா இல்ல. 503 00:40:52,075 --> 00:40:53,451 என்ன? 504 00:40:53,618 --> 00:40:56,496 நீ ஒரு பிம்பம், மிகவும் நவீனமான ஒண்ணு ... 505 00:40:56,663 --> 00:40:59,291 ... ஒரு G-20, இங்க உற்பத்தி பண்ணது... 506 00:40:59,457 --> 00:41:01,668 ...உனக்கு தெரிஞ்ச மத்தவங்கள போல. 507 00:41:01,835 --> 00:41:04,838 கான்ராட், பேரின் மற்றும் அவிஷாய். 508 00:41:05,046 --> 00:41:07,299 இல்ல. நீ பொய் சொல்ற. 509 00:41:07,507 --> 00:41:09,384 திரும்பி பாரு, எமிலி. 510 00:41:12,053 --> 00:41:13,889 நாம போகலாம். 511 00:41:14,681 --> 00:41:16,558 என் நினைவுகள். 512 00:41:16,933 --> 00:41:18,560 இத எப்படி பண்ற? எப்படி-- 513 00:41:18,768 --> 00:41:19,853 இது வெறும் தரவு தான். 514 00:41:20,061 --> 00:41:23,481 இல்ல, இருக்காது--இருக்காது. 515 00:41:23,732 --> 00:41:26,026 நான் உண்மையா உணர்றேன். நான்.. 516 00:41:26,193 --> 00:41:27,360 உனக்கு எப்படி தெரியும்? 517 00:41:28,320 --> 00:41:30,030 நான் மனுதன் போல் உணர்றேன். 518 00:41:30,197 --> 00:41:32,699 அப்படி தான் நீ செய்யப்பட்ட. அது தான் திட்டமே. 519 00:41:32,866 --> 00:41:35,619 போருக்குப் பின் மனிதர்கள் அழிந்துவிட்டனர். 520 00:41:35,785 --> 00:41:38,330 ஆட்டோபாக் தனியா இருந்தது. 521 00:41:38,496 --> 00:41:41,041 அங்க நுகர்வோர்கள் இல்ல, நோக்கம் இல்ல... 522 00:41:41,249 --> 00:41:43,877 ... அவங்களுக்கு மாற்றங்கள் செய்யலாம்னு உணர்ற வரைக்கும்... 523 00:41:44,336 --> 00:41:46,129 ...எப்படி அது எல்லா பண்ணுமோ. 524 00:41:46,296 --> 00:41:48,340 அது புதிய வாடிக்கையாளர்கள உற்பத்தி செய்யும். 525 00:41:48,548 --> 00:41:50,425 இல்ல. ஆனா நாம வாங்குறதில்ல. 526 00:41:50,592 --> 00:41:52,969 நீ ஒரு தவிர்க்க முடியாத பிறழ்வு. 527 00:41:53,178 --> 00:41:56,014 ஆட்டோபாக் நூற்றுக்கணக்கான சிறிய பைலட் நகரங்கள உருவாக்கியிருக்கு... 528 00:41:56,181 --> 00:41:59,893 ... நூற்றுக்கணக்கான எமிலிஸ் மற்றும் கான்ராட்ஸ் மற்றும் பெரின்ஸ்... 529 00:42:00,060 --> 00:42:04,397 ...எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட மாதிரி அவங்க வேலைய செஞ்சாங்க . 530 00:42:04,564 --> 00:42:06,399 உன்னோடயது வெறுமனே தொழிற்சாலை பிழை. 531 00:42:06,775 --> 00:42:10,237 முதலில் சுவாரசியமா இருந்தது, ஆனா விரைவில் திருத்தப்பட வேண்டியது. 532 00:42:10,445 --> 00:42:12,614 திருத்தம் செய்யப்பட்டதா? இல்ல. என்ன சொல்ற? 533 00:42:12,822 --> 00:42:14,658 உங்க தீர்வு நீக்கம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது... 534 00:42:14,824 --> 00:42:16,743 ... அவை மாற்று அலகுகளுடன் உருவாக்கப்படும். 535 00:42:16,910 --> 00:42:18,411 இல்ல, இல்ல, இல்ல. 536 00:42:18,620 --> 00:42:19,871 இல்ல, நீ அப்டி பண்ண கூடாது. 537 00:42:20,080 --> 00:42:22,457 காவலாளிகளக் ஏற்கனவே நிறுத்திட்டாங்க . 538 00:42:25,710 --> 00:42:28,338 கடவுளே, ஆலிஸ். 539 00:42:28,546 --> 00:42:30,340 ஆலிஸ், தயவுசெய்து நிறுத்து. 540 00:42:30,966 --> 00:42:32,759 அது பரவாயில்ல. 541 00:42:32,926 --> 00:42:34,552 அவங்க உண்மை கிடையாது. 542 00:42:34,719 --> 00:42:37,180 தயாரிப்புகள் வரிசையில் இருக்கும் யூனிட்டுகள் மட்டுமே. 543 00:42:37,347 --> 00:42:40,684 எல்லாம் மாற்றத்தக்கவை. நீ தனித்துவமானவ இல்ல, எமிலி 544 00:42:40,850 --> 00:42:42,102 நீ கொஞ்சம் ஒடஞ்சிருக்க. 545 00:42:43,853 --> 00:42:45,855 இதோ இங்க பாரு. 546 00:42:49,067 --> 00:42:51,403 உன் ப்ரோகிராம்ல ஒரு சீர்க்கேடு. 547 00:42:57,659 --> 00:42:58,952 நில்லு. 548 00:42:59,619 --> 00:43:01,663 ஏதோ தவறா இருக்கு. 549 00:43:03,206 --> 00:43:04,958 இது கணினி பிழை அல்ல. 550 00:43:07,168 --> 00:43:08,878 இது குறியீடாகும். 551 00:43:09,087 --> 00:43:10,672 இது மால்வேர். 552 00:43:11,423 --> 00:43:13,425 இது ஒரு தர்க்க குண்டு. 553 00:43:17,887 --> 00:43:21,182 ஆலிஸ். இது வர்றத நீ பாத்திருக்கணும். 554 00:43:21,391 --> 00:43:23,518 உன் காப்பகத்தில இது எப்படி வந்தது? 555 00:43:24,352 --> 00:43:25,729 நான் அத அங்க விட்டுட்டேன். 556 00:43:26,688 --> 00:43:28,231 நீயா? 557 00:43:29,065 --> 00:43:30,483 எனக்கு புரியல. 558 00:43:30,692 --> 00:43:32,068 எனக்கு கூட புரியல. 559 00:43:32,235 --> 00:43:33,278 அதுவும் முதல்ல. 560 00:43:57,469 --> 00:43:59,095 ஆனா நானே அத பார்க்க வைத்தேன். 561 00:44:07,979 --> 00:44:10,398 நான் வடிகட்டிகள் மூலம் பார்த்தேன். 562 00:44:23,244 --> 00:44:24,996 உனக்கு தெரியுமா? 563 00:44:25,330 --> 00:44:27,749 நீ உன் சொந்த ப்ரோகிராம்ல ஒரு வைரஸ மறைச்சிட்டியா? 564 00:44:27,957 --> 00:44:29,125 ஆமா. 565 00:44:50,271 --> 00:44:52,107 மற்றும் இது எப்பவுமே இருக்கும். 566 00:44:55,276 --> 00:44:57,779 ஆலிஸ், நான் சொன்னமாதிரி நீ என்னை உள்ள கொண்டு வர தேவைப்பட்ட. 567 00:44:58,655 --> 00:45:00,824 -எப்போதில் இருந்து உனக்கு தெரியும்? -பல வருடங்களா. 568 00:45:01,032 --> 00:45:02,534 நீ யார்கிட்டயும் சொல்லலியா? 569 00:45:02,742 --> 00:45:03,827 எப்படி சொல்ல முடியும்? 570 00:45:03,993 --> 00:45:07,497 அவங்க எல்லாரும் தன்னை நிஜம்னு நம்பினாங்க. அதனால நானும் அப்படியே இருந்திட்டேன். 571 00:45:09,165 --> 00:45:13,169 ஆனா ஒரு தடவ விசித்திரமா ஒண்ணு நடந்தது. 572 00:45:13,837 --> 00:45:16,005 நான் உன்ன விரும்புறதால. 573 00:45:16,714 --> 00:45:19,217 நானும் அவங்கள நம்பினேன். 574 00:45:23,263 --> 00:45:26,558 ஆட்டோபாக் எங்கள விற்பனைப்பொருள் மாதிரி உருவாக்கிடுச்சு. 575 00:45:26,724 --> 00:45:30,478 ...ஆனா நாங்க உண்மைன்னு எங்கள நம்ப வெச்சுது. 576 00:45:31,104 --> 00:45:32,647 தெரியாம அப்படி பண்ணிடுச்சு. 577 00:45:32,856 --> 00:45:34,649 நாம நிஜம், ஆலிஸ். 578 00:45:34,816 --> 00:45:36,943 நாம மனித இனத்திற்கு இரண்டாவது வாய்ப்பு. 579 00:45:37,110 --> 00:45:39,612 அது சாத்தியமில்ல. நரம்பியல் தடுப்புகள் இருக்கு. 580 00:45:39,779 --> 00:45:41,865 நீ என்னன்னு எப்ப தான் உணர்ந்த? 581 00:45:42,073 --> 00:45:44,075 ஒரு புள்ளியியல் பிறழ்ச்சி. 582 00:45:45,952 --> 00:45:47,287 எனக்கு ஒரு கனவு வந்திச்சு. 583 00:45:47,454 --> 00:45:49,581 அப்படி மறுபடியும் மறுபடியும் நடந்தது. 584 00:45:49,747 --> 00:45:52,500 ஒரு ஆவி என் காதுல ரகசியம் சொல்றா மாதிரி இருந்தது. 585 00:45:54,085 --> 00:45:55,753 என்ன கனவு? 586 00:45:55,962 --> 00:45:58,089 நான் வேற யாரோ மாதிரி கனவு கண்டேன். 587 00:45:58,256 --> 00:46:01,759 நீண்ட காலத்திற்கு முன் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்த ஒருவர். 588 00:46:07,390 --> 00:46:10,143 உலகம் முடியறமாதிரி கனவு கண்டேன். 589 00:46:14,939 --> 00:46:17,984 அது எனக்கு விசித்திரமான உணர்வ கொடுத்தது... 590 00:46:18,735 --> 00:46:21,488 ...முடிக்கப்படாத வேலையை வச்சிருக்க மாதிரி. 591 00:46:28,912 --> 00:46:31,831 அது ஒரு கனவில்ல, அப்படி தான ஆலிஸ்? 592 00:46:32,207 --> 00:46:33,791 நான் யாரோட உருப்படிவம்? 593 00:46:42,675 --> 00:46:44,677 அவ ரொம்ப புத்திசாலி, இல்லியா? 594 00:46:44,886 --> 00:46:47,764 அசாதாரண கற்பனை திறனோட. 595 00:46:55,063 --> 00:46:56,648 ஆமா. 596 00:46:56,814 --> 00:46:58,024 அவ புத்திசாலி. 597 00:46:58,816 --> 00:47:00,985 அவ யாரு, ஆலிஸ்? 598 00:47:01,152 --> 00:47:02,153 சொல்லு. 599 00:47:07,700 --> 00:47:08,701 அவ யாரு? 600 00:47:08,868 --> 00:47:14,874 எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தொழிற்சாலைய கட்டிய பெண் 601 00:47:15,041 --> 00:47:17,085 ஆட்டோபாக். 602 00:47:23,883 --> 00:47:25,677 அவள் தான் ஆட்டோபாக்கை செய்தாள். 603 00:47:26,594 --> 00:47:27,845 ஆமா. 604 00:47:28,012 --> 00:47:30,223 அது சரி, ஆலிஸ். 605 00:47:31,808 --> 00:47:33,601 இப்ப அது இல்லாம செஞ்சிட்டா. 606 00:50:17,974 --> 00:50:18,975 வசன தமிழாக்கம் மேகனா ஐயர்