1 00:00:10,219 --> 00:00:13,388 சில ஃபிளாட்களுக்கு அடியில் இருக்கும் கார் பார்க்குக்குச் செல்லும்படி கால் வந்தது. 2 00:00:13,472 --> 00:00:15,140 -எட்ஜ்வேர் சாலைக்கு அருகிலா? -ஆம். 3 00:00:22,731 --> 00:00:24,983 காரில் மோதி அவன் இறக்கவில்லை என்றாய். 4 00:00:26,527 --> 00:00:27,819 வேறு எப்படி இறந்தான்? 5 00:00:31,240 --> 00:00:32,824 ரெபெக்கா, அவன் எப்படி இறந்தான்? 6 00:00:32,908 --> 00:00:35,285 நான் அங்கே போனபோது, அவன் ஏற்கனவே அங்கே இருந்தான். 7 00:00:35,369 --> 00:00:37,079 இல்லை. 8 00:00:37,162 --> 00:00:39,665 ஆம். என் வோட்காவில் வோட்காவைக் கலந்துவிட்டீர்கள். 9 00:00:39,748 --> 00:00:41,500 -சரி. -ஜாக்கிரதை, சரியா? 10 00:00:41,583 --> 00:00:43,377 வளைவுகளில் பார்த்துத் திரும்பு. 11 00:00:43,961 --> 00:00:46,338 அவர்களில் ஒருவன் அவனது சைக்கிளைப் பிடித்துக்கொண்டிருந்தான். 12 00:00:46,421 --> 00:00:48,257 இல்லை, நான் புறப்பட்டதும் சரியாகிவிடும். 13 00:00:48,340 --> 00:00:53,387 அவன் நன்றாக இருந்தான். அவன் போதையில் இருந்தான். 14 00:00:53,470 --> 00:00:55,764 பிறகு, இன்னொருவன்... 15 00:00:55,848 --> 00:00:57,266 அவன் கழுத்தை நெறித்தான். 16 00:00:57,349 --> 00:00:59,434 மூன்றாவது நபர் என் காரில் ஏறி அவன் மீது மோதினான். 17 00:01:04,480 --> 00:01:06,650 அங்கே ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கிளம்பிவிட்டான். 18 00:01:07,484 --> 00:01:08,777 அவனைச் சரியாகப் பார்த்தாயா? 19 00:01:15,075 --> 00:01:16,076 பிறகு என்ன நடந்தது? 20 00:01:19,955 --> 00:01:22,040 அவன் உயிரோடுதான் இருந்தான், ஆனால் மோசமான நிலையில் இருந்தான். 21 00:01:22,124 --> 00:01:26,044 அவன் கழுத்தை நெறித்த மூன்றாவது நபர்... 22 00:01:28,630 --> 00:01:29,882 அவன் அவனைக் கொன்றுவிட்டான். 23 00:01:33,177 --> 00:01:34,178 எப்படி? 24 00:01:37,848 --> 00:01:39,141 அவன் எப்படி இருந்தான்? 25 00:01:39,224 --> 00:01:41,476 பெரிதாக, 50களில் இருப்பவன், மொட்டையடித்திருந்தான். 26 00:01:41,560 --> 00:01:43,020 பயங்கரமாக இருந்தான். 27 00:01:48,650 --> 00:01:51,778 பிறகு அவனையும் சைக்கிளையும் வேனின் பின்புறம் ஏற்றினர். 28 00:01:52,362 --> 00:01:53,822 அவன் கிடந்த இடத்திற்கு அவனை எடுத்துச் சென்றனர். 29 00:01:56,575 --> 00:01:58,452 பிறகு ஆம்புலன்ஸை அழைத்து உங்கள் நண்பர் என் வண்டி 30 00:01:58,535 --> 00:02:00,996 மீது மோதியதாகக் கூறச் சொன்னார்கள். 31 00:02:13,509 --> 00:02:15,677 -அவன் மீது வண்டி ஏற்றிய இருவர். -ஆம். 32 00:02:15,761 --> 00:02:16,762 பியாட் வோலோடின் கிரியல் அஸிமோவ் 33 00:02:16,845 --> 00:02:18,764 -இவர்களை இதற்கு முன் பார்த்துள்ளாயா? -ஆம். 34 00:02:18,847 --> 00:02:20,641 அவர்களுக்காக நான் கூரியர் செய்துள்ளேன். 35 00:02:22,184 --> 00:02:23,644 என்னவென்று கேட்காதீர்கள். நான் பார்க்கவில்லை. 36 00:02:24,269 --> 00:02:28,899 -சரி. மறைந்திருந்தவன். இவனா? -இருக்கலாம். தெரியவில்லை. 37 00:02:28,982 --> 00:02:29,983 ஆர்கேடி பாஷ்கின் 38 00:02:30,067 --> 00:02:31,151 எனக்குத் தெரியவில்லை. 39 00:02:31,235 --> 00:02:33,237 -அவனை சரியாகப் பார்க்கவில்லை. -சரி. 40 00:02:33,320 --> 00:02:34,154 ஆண்ட்ரே செர்னிட்ஸ்கி 41 00:02:34,238 --> 00:02:37,533 -இவன் தான் அவனைக் கொன்றவனா? -ஆம், அவன் தான். 42 00:02:45,457 --> 00:02:48,210 நீ பணத்தைப் பெற்றுக்கொண்ட மொழிப் பள்ளியில்தான் 43 00:02:48,293 --> 00:02:50,546 வழக்கமாக பணத்தைப் பெறுவாயா? 44 00:02:50,629 --> 00:02:51,922 இல்லை, அது புதிய இடம். 45 00:02:52,005 --> 00:02:53,757 நீ பணத்தை எடுக்கும்போது அங்கே யாராவது இருந்தார்களா? 46 00:02:53,841 --> 00:02:54,842 இல்லை, அவர்கள் என்னிடம் ஒரு சாவியைக் 47 00:02:54,925 --> 00:02:57,135 கொடுத்து, பிறகு அதை தபால் பெட்டியில் போடச் சொன்னார்கள். 48 00:03:02,516 --> 00:03:05,644 சரி. நன்றி, ரெபெக்கா. 49 00:03:10,315 --> 00:03:12,484 நான் அனைத்தையும் கூறினால் என்னைப் பாதுகாப்பதாகக் கூறினீர்களே. 50 00:03:15,279 --> 00:03:17,030 சரி. இந்தா. 51 00:03:21,201 --> 00:03:25,497 உனக்கு சர்வீஸ்க்கான எண் தருகிறேன். 52 00:03:25,581 --> 00:03:26,999 இது சேஃப் ஹவுஸா? 53 00:03:28,250 --> 00:03:30,043 புதிய அடையாளமா? எனக்கு பணம் தேவைப்படும். 54 00:03:30,127 --> 00:03:33,589 அவர்கள் ஒவ்வொரு மாதமும் மாறும் அடையாளத்தைக் கொடுப்பார்கள். 55 00:03:33,672 --> 00:03:36,633 ”ஜாக்சன் லேம்ப்” என்று அவர்களிடம் சொல், 56 00:03:36,717 --> 00:03:40,345 என்ன வேண்டும் என்று கேட்கும்போது, எண் ஏழு என்று சொல். 57 00:03:40,429 --> 00:03:41,471 எண் ஏழு. 58 00:03:41,555 --> 00:03:45,934 அவ்வளவுதான். அரை மணிநேரத்தில் அவர்கள் இங்கே இருப்பார்கள். 59 00:03:48,478 --> 00:03:49,313 சரி. 60 00:03:57,487 --> 00:03:58,405 ஹலோ? 61 00:03:58,488 --> 00:04:02,034 ஹாய், இந்த எண்ணிற்கு அழைக்கும்படி ஜாக்சன் லேம்ப் கூறினார். 62 00:04:02,117 --> 00:04:04,828 -எண் ஏழைக் கேட்கச் சொன்னார். -கொஞ்சம் காத்திருக்கிறீர்களா? 63 00:04:04,912 --> 00:04:06,163 சரி. 64 00:04:11,168 --> 00:04:13,670 -அவருக்குப் பிடித்தது வேண்டுமா? -மன்னிக்கவும். என்ன? 65 00:04:13,754 --> 00:04:15,088 எண் ஏழு. 66 00:04:16,798 --> 00:04:17,882 எனக்குப் புரியவில்லை. 67 00:04:18,509 --> 00:04:22,221 எண் ஏழு திரு. லேம்புக்குப் பிடித்த டபுள் நூடுல்ஸ். 68 00:04:23,388 --> 00:04:24,598 அதனுடன் அவர் உண்ணும் சைட் டிஷ்கள் வேண்டுமா? 69 00:05:06,223 --> 00:05:08,225 மிக் ஹெர்ரான் எழுதிய டெட் லயன்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 70 00:05:19,862 --> 00:05:21,613 எதுவும் வெளியில் இல்லைதானே? 71 00:05:21,697 --> 00:05:23,115 கண்டிப்பாக மழை வரும் போல உள்ளது. 72 00:05:24,116 --> 00:05:25,951 -யாரும் சாப்பிடப் போவதில்லையா? -இல்லை... 73 00:05:26,034 --> 00:05:27,411 நீங்கள் என்னைப் பார்க்கும்போது 74 00:05:27,995 --> 00:05:29,705 சாப்பிட ஒரு மாதிரி உள்ளது. 75 00:05:30,539 --> 00:05:32,833 நீங்கள் தூரத்திலிருந்து வருகிறீர்களா, லியோ? 76 00:05:32,916 --> 00:05:36,336 கண்டிப்பாக அலெக்ஸின் அற்புதமான உணவுக்காக வந்திருக்க மாட்டீர்கள். 77 00:05:36,420 --> 00:05:38,172 வொர்ஸ்டரில் கொஞ்சம் வேலை இருந்தது. 78 00:05:38,255 --> 00:05:40,465 லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்போது இது சிறிய மாற்று வழி. 79 00:05:40,549 --> 00:05:42,176 இவர் எப்போதும் இப்படித்தான், திடீரென வந்து போவார். 80 00:05:42,259 --> 00:05:44,011 -ஆம். -எப்போதும் இவரை ஏற்றுக்கொள்வோம். 81 00:05:45,262 --> 00:05:48,056 நீங்கள் எப்படி திரு. வாக்கர்? இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா? 82 00:05:48,140 --> 00:05:50,142 இல்லை. நான் பத்திரிக்கையாளர். 83 00:05:50,767 --> 00:05:54,479 நான் கிராம வாழ்க்கை பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத வந்துள்ளேன். 84 00:05:55,731 --> 00:05:58,567 ஆம். கெல்லி எனக்கு இந்த ஊரைச் சுற்றி காட்டினார். 85 00:05:58,650 --> 00:05:59,735 ஆம். 86 00:06:00,611 --> 00:06:02,070 நீங்கள் அண்டர்கவரில் இருக்கிறீர்களா? 87 00:06:03,280 --> 00:06:05,824 இல்லை, இல்லை. 88 00:06:05,908 --> 00:06:08,076 எனக்கு அதற்கெல்லாம் தைரியம் கிடையாது. 89 00:06:08,660 --> 00:06:12,247 உங்கள் இந்த போரான கிராமத்தில் என்ன பெரிய கதை கிடைக்கும்? 90 00:06:12,331 --> 00:06:14,499 திரைக்குப் பின்னால் எல்லாமே இருக்கும். 91 00:06:14,583 --> 00:06:15,709 சரி. 92 00:06:15,792 --> 00:06:18,170 ஆனால் நீ அவருக்காக அனைத்தையும் கண்டிப்பாகக் கூறுவாய். 93 00:06:18,253 --> 00:06:19,463 இவள் அனைத்திலும் தலையிடுவாள். 94 00:06:19,546 --> 00:06:21,298 -மன்னிக்கவும். -நீங்கள் அதை மீண்டும் கூறலாம். 95 00:06:21,381 --> 00:06:22,758 இல்லை. நல்ல விதத்தில்தான் கூறினேன். 96 00:06:23,258 --> 00:06:24,968 இதுவரை என்ன கண்டுபிடித்துள்ளீர்கள்? 97 00:06:26,345 --> 00:06:29,181 நான் நினைத்த அளவிற்கு என்னால் பறக்க முடியவில்லை. 98 00:06:29,264 --> 00:06:31,975 அது அல்லது கெல்லி அவர் நினைத்தது போல நல்ல பைலட் இல்லை. 99 00:06:32,059 --> 00:06:33,560 முதலில் கூறியதுதான் சரி. 100 00:06:34,728 --> 00:06:36,855 ஆனால், இல்லை, நான் கிராமத்தின் ரகசியம் பற்றித்தான் கேட்கிறேன். 101 00:06:37,731 --> 00:06:40,150 மேலும் அந்த வேட்டைக்காரன். 102 00:06:40,234 --> 00:06:41,944 வேட்டையாடுவது ஆபத்தானது. 103 00:06:42,027 --> 00:06:42,861 ஆம். 104 00:06:42,945 --> 00:06:47,366 அவன் பயன்படுத்துவது பொறிகளா, துப்பாக்கிகளா? அல்லது விஷமா? 105 00:06:47,449 --> 00:06:49,076 அது விலங்கைப் பொறுத்தது. 106 00:06:49,159 --> 00:06:51,411 பேச்சு எங்கேயோ போகிறது. 107 00:06:52,246 --> 00:06:54,206 -யாருக்காவது காஃபி வேண்டுமா? -எனக்கு வேண்டும். 108 00:06:54,289 --> 00:06:55,290 -சரி. -நான் இதை... 109 00:06:55,374 --> 00:06:57,167 இல்லை. நீங்கள் விருந்தினர். உட்காருங்கள். 110 00:06:57,251 --> 00:06:59,795 சரி, கெல்லி, அந்த ஸ்ட்ராபெர்ரிக்களை வெளியே எடுத்து வருகிறாயா? 111 00:07:01,630 --> 00:07:03,048 -சரி. -மன்னிக்கவும். 112 00:07:11,139 --> 00:07:12,850 உன்னை எச்சரிக்கிறேன், நண்பா. 113 00:07:19,481 --> 00:07:22,985 அலெக்ஸின் காஃபி கேவலமாக இருக்கும். 114 00:08:36,015 --> 00:08:40,020 ஹலோ. எனக்கு வோட்கா டானிக் கிடைக்குமா? 115 00:08:40,102 --> 00:08:41,480 -கண்டிப்பாக. -நன்றி. 116 00:08:46,693 --> 00:08:47,694 ஹலோ. 117 00:08:49,071 --> 00:08:50,364 ஹாய். 118 00:09:07,965 --> 00:09:09,466 -மன்னிக்கவும், நண்பா. -பரவாயில்லை. 119 00:09:28,902 --> 00:09:31,154 வெஸ்ட்ப்ரூக் அகாடமி ஆஃப் இங்கிலிஷ் லாங்குவேஜ் 120 00:10:12,946 --> 00:10:16,116 நீங்கள் வெஸ்ட்ப்ரூக் அகாடமி ஆஃப் இங்கிலிஷ் லாங்குவேஜை அழைத்துள்ளீர்கள். 121 00:10:16,200 --> 00:10:17,743 உங்கள் பெயரையும் எண்ணையும் கூறுங்கள் 122 00:10:17,826 --> 00:10:20,245 விரைவில் உங்களைத் திருப்பியழைப்போம். நன்றி. 123 00:10:21,079 --> 00:10:22,623 பேசுங்கள், திரு. லேம்ப். 124 00:10:28,253 --> 00:10:31,215 உனது பதிலளிக்கும் மிஷின் மட்டும்தான் இந்தக் குப்பைத் தொட்டியில் இருக்கும் 125 00:10:31,298 --> 00:10:32,341 ஒரே ப்ரொஃபஷனலான விஷயம். 126 00:10:33,509 --> 00:10:36,428 உனது சிரமத்தை நகைச்சுவையால் திசைதிருப்ப முயல்கிறாயா? 127 00:10:37,012 --> 00:10:39,348 நீ அங்கிருப்பது எனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்க மாட்டாயா? 128 00:10:42,518 --> 00:10:45,562 ஏனெனில் நீ என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறாய். 129 00:10:46,188 --> 00:10:49,358 உன் நிலைமையிலும், 130 00:10:49,441 --> 00:10:52,069 உன் நேரத்தில் உனக்கு வேறு உருப்படியான வேலைகள் இருந்திருக்கலாம். 131 00:10:52,152 --> 00:10:53,153 எந்த மாதிரி? 132 00:10:54,196 --> 00:10:58,909 நல்ல மருத்துவ சிகிச்சை. உனக்கு நுரையீரல் பிரச்சினை என கூகுள் கூறுகிறது. 133 00:10:58,992 --> 00:11:01,578 ஏழு மாதங்களுக்கு முன்பு, ஆறு மாதங்களில் இறந்துவிடுவேன் என்றனர். 134 00:11:01,662 --> 00:11:02,996 இது சேதத்திற்கான நேரம். 135 00:11:03,080 --> 00:11:05,332 ஆனால் கேள்வி என்னவெனில் நிக்கி, 136 00:11:06,375 --> 00:11:09,545 நீ எந்த விதமான சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளாய்? 137 00:11:09,628 --> 00:11:11,755 நான் மாட்டிய பிறகு, 138 00:11:11,839 --> 00:11:14,174 எனது முன்னாள் பாஸ்கள் 139 00:11:14,883 --> 00:11:17,511 எந்த தண்டனையையும் ஏற்க முடியாது எனக் கூறிவிட்டனர். 140 00:11:17,594 --> 00:11:23,809 ஒருநாள் அவர்கள் கேட்கும்போது, நான் உதவ வேண்டும் என்றனர். அதேபோல அவர்கள் கேட்டனர். 141 00:11:25,435 --> 00:11:27,563 அவர்கள் எந்த மாதிரியான கோரிக்கை வைத்தனர்? 142 00:11:28,438 --> 00:11:30,941 நான் ஒரு சிறிய ஆள், திரு. லேம்ப். 143 00:11:31,024 --> 00:11:35,904 அவர்கள் வேறு இடத்தில் எதையோ செய்யும்போது உன்னை ஒரே இடத்தில் தேடச் செய்வதுதான் 144 00:11:35,988 --> 00:11:39,491 எனது வேலை. 145 00:12:00,721 --> 00:12:01,722 அடச்சை! 146 00:12:12,524 --> 00:12:13,650 அந்த வாட்ச்சை ஹேக் செய்தாயா? 147 00:12:13,734 --> 00:12:16,069 அந்த ஃபிட்னெஸ் ஆப்பிலேயே எல்லாம் இருந்தது. 148 00:12:16,153 --> 00:12:17,696 மேலே வா. உடனே! 149 00:12:19,489 --> 00:12:22,826 கொஞ்சம் டென்ஷனாகத் தெரிகிறீர்கள். 150 00:12:24,036 --> 00:12:25,787 நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் என யோசிக்கிறேன். 151 00:12:27,039 --> 00:12:29,333 -இப்போது பாதுகாப்பாக நடந்துகொள்கிறீர்கள். -அப்படி இருக்க வேண்டுமா? 152 00:12:30,000 --> 00:12:32,419 நான் ஒரு எம்ஐ5 ஏஜென்ட். 153 00:12:34,213 --> 00:12:35,380 அது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். 154 00:12:37,424 --> 00:12:39,301 நாம் நமது ரகசியங்களைக் கூறிவிட்டோம். 155 00:12:40,135 --> 00:12:41,470 நான் கூறிவிட்டேன். நீங்கள்? 156 00:12:45,349 --> 00:12:47,351 நான் என்ன கூற வேண்டுமென விரும்புகிறீர்கள் எனத் தெரியவில்லை. 157 00:12:52,314 --> 00:12:54,191 ஹீத்ரோ சிசிடிவி. 158 00:12:54,274 --> 00:12:56,985 செர்னிட்ஸ்கி இந்த நாட்டை விட்டு வெளியேறவேயில்லை. 159 00:12:59,571 --> 00:13:02,074 நான் சொல்வது கேட்டதா? 160 00:13:02,866 --> 00:13:05,786 செர்னிட்ஸ்கி இந்த நாட்டை விட்டு வெளியேறவில்லை. தெரியும். 161 00:13:06,995 --> 00:13:08,121 எப்படி? 162 00:13:09,373 --> 00:13:11,416 ஏனெனில் அவன் தான் ஹார்ப்பரைக் கொன்றான். 163 00:13:12,626 --> 00:13:15,337 நான் அந்த டிரைவர், ரெபெக்கா மிட்செலிடம் பேசினேன். 164 00:13:15,420 --> 00:13:16,880 ஆனால் அவள் காரை ஓட்டவில்லை. 165 00:13:17,589 --> 00:13:20,509 செர்னிட்ஸ்கி ஹார்ப்பரைக் கொல்லும் முன் 166 00:13:20,592 --> 00:13:22,928 பாஷ்கினின் செக்யூரிட்டிதான் அவன் மீது காரை ஏற்றியுள்ளான். 167 00:13:23,011 --> 00:13:24,304 பாஷ்கினா? 168 00:13:25,597 --> 00:13:28,517 அவன் டிக்கியைக் கொன்றதுபோல அவனையும் கொன்றுள்ளான். 169 00:13:28,600 --> 00:13:32,020 அவன் ஏதோ ரோஸா கிளெப் போல ஏதோ விஷம் வைத்துள்ளான். 170 00:13:32,104 --> 00:13:35,732 பார்க்குக்கு இது தெரிந்தால், விசாரணையை ரத்துசெய்வார்கள். அவர்களைப் பிடிக்க முடியாது. 171 00:13:35,816 --> 00:13:37,651 அதனால்தான் அவர்களிடம் சொல்லப் போவதில்லை. 172 00:13:38,569 --> 00:13:39,653 டேவர்னர் இந்த விஷயத்தை மறைத்து 173 00:13:39,736 --> 00:13:42,447 அவமானத்தைத் தவிர்த்துவிடுவார். 174 00:13:42,531 --> 00:13:44,700 அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள், அவர்களின் பெயர்கள் இங்கிருந்து 175 00:13:44,783 --> 00:13:48,328 யாகுட்ஸ்க் செல்லும் எல்லா விமானப் பட்டியல்களில் இருந்தும் அகற்றப்படும். 176 00:13:48,871 --> 00:13:52,124 அவர்கள் எனது இரண்டு ஏஜென்டுகளைக் கொன்றுள்ளனர். அது நடக்க விடமாட்டேன். 177 00:13:52,916 --> 00:13:54,626 நாம் லூயிசாவிடம் சொல்ல வேண்டுமா? 178 00:13:54,710 --> 00:13:57,379 ஆம். அவள் தன் ஃபோனை எடுத்தால் நான் சொல்லியிருப்பேன். 179 00:13:58,714 --> 00:14:02,467 -எவ்வளவு காலமாக நெவ்ஸ்கிக்கு வேலை செய்கிறீர்கள்? -சுமார் ஐந்து ஆண்டுகளாக. 180 00:14:03,594 --> 00:14:06,221 அதற்கு முன்? பள்ளியில் யோசித்துக்கொண்டிருந்தீர்களா? 181 00:14:07,931 --> 00:14:10,434 என் சிறுவயதில் நெவ்ஸ்கி என்னுள் எதையோ பார்த்தார். 182 00:14:10,976 --> 00:14:12,561 -அது என்ன? -பசி. 183 00:14:13,854 --> 00:14:15,939 அவரைச் சுற்றியிருந்தவர்கள் சோம்பேறியாக இருந்தனர். 184 00:14:17,024 --> 00:14:19,693 நீங்கள் உள்ளே வந்து அவர்களை அகற்றினீர்களா? 185 00:14:20,235 --> 00:14:21,570 அவர்களே வெளியேறிவிட்டனர். 186 00:14:21,653 --> 00:14:25,782 ஆனால், வெற்றிகரமானவர்கள் உடனிருக்கும்போது அதுதான் நடக்கும். இல்லையா? 187 00:14:25,866 --> 00:14:26,950 எனக்குத் தெரியாது. 188 00:14:27,034 --> 00:14:31,538 அட. நீங்கள் எம்ஐ5. அது வெற்றிகரமான வாழ்க்கைதான். 189 00:14:31,622 --> 00:14:34,249 ஓ, ஆம், நான் வழக்கமான எம்ஐ5 கிடையாது. 190 00:14:34,333 --> 00:14:37,503 நான் நாடு கடத்தப்படுவது போல, 191 00:14:37,586 --> 00:14:40,172 பிடிக்காதவர்களை அனுப்பும் துறைக்கு அனுப்பப்பட்டவள். 192 00:14:41,006 --> 00:14:42,549 அதை என்னால் நம்ப முடியவில்லை. 193 00:14:43,175 --> 00:14:47,179 நல்லது, ஆனால் அவர்களுக்கு நான் பிடிக்காதவள்தான். 194 00:14:47,804 --> 00:14:48,805 ஏன்? 195 00:14:50,098 --> 00:14:52,267 அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. 196 00:14:52,351 --> 00:14:54,269 நீங்கள் ஏன் அதிலிருந்து விலகவில்லை? 197 00:14:57,064 --> 00:14:59,816 ஏனெனில் அது என் கதையின் முடிவாக இருக்க விரும்பவில்லை. 198 00:15:00,651 --> 00:15:04,196 என் பாஸ் போல ஸ்லௌ ஹவுஸில் நானும் இறக்க விரும்பவில்லை. 199 00:15:06,114 --> 00:15:07,199 மேலும் மின் போல வெளியேறுவதற்கு 200 00:15:07,282 --> 00:15:09,493 வாய்ப்பு கிடைக்கும் முன் இறக்க விரும்பவில்லை. 201 00:15:10,494 --> 00:15:11,495 மின்னா? 202 00:15:13,038 --> 00:15:15,582 மின் ஹார்ப்பர். இறந்து போன என் சக பணியாளர். 203 00:15:16,500 --> 00:15:18,627 ஆம். நான் வருந்துகிறேன். 204 00:15:19,545 --> 00:15:20,754 ஆம், நன்றி. நானும்தான். 205 00:15:22,548 --> 00:15:24,883 அது ஒரு விபத்து. அவர் போதையில் சைக்கிளில் சென்றுள்ளார். 206 00:15:26,051 --> 00:15:28,554 நம்ப முடியவில்லை. அவர் அப்படிப்பட்டவர் இல்லை. 207 00:15:30,013 --> 00:15:32,724 மன்னிக்கவும். அவர் நேராக காரில் மோதியதாகக் கூறினர். 208 00:15:32,808 --> 00:15:34,852 அவர் வருவதை அந்தப் பெண் பார்க்கவில்லை. 209 00:15:36,645 --> 00:15:37,563 ஆம். 210 00:15:38,814 --> 00:15:39,898 நீங்கள் அதை நம்பவில்லையா? 211 00:15:40,899 --> 00:15:43,610 ஒரு ஏஜென்ட் இறக்கும்போது, அனைத்தையும் கருத்தில் கோள்ள வேண்டும். 212 00:15:47,948 --> 00:15:51,034 ஆனால், இந்த விஷயத்தில், இது ஒரு விபத்துதான். 213 00:15:57,624 --> 00:15:59,334 அவர்கள் ஏன் மின்னைக் கொன்றனர்? 214 00:16:00,502 --> 00:16:01,753 தீர்மானமாக இருப்பதற்காக. 215 00:16:02,337 --> 00:16:03,380 வந்துவிட்டேன். 216 00:16:03,463 --> 00:16:05,924 அந்த அழகான ரெபெக்கா மிட்செல் ஹார்ப்பரைக் கொன்றதற்கான பணத்தை 217 00:16:06,008 --> 00:16:10,220 கடின்ஸ்கியின் மொழிப் பள்ளியில் பெற்றிருக்கிறாள். 218 00:16:10,304 --> 00:16:12,139 இதில் கடின்ஸ்கிக்குத் தொடர்புள்ளதா? 219 00:16:13,974 --> 00:16:18,228 வேறு ஏதோவொன்று நடக்கும்போது நான் அவனது பள்ளியைப் பார்க்க நினைத்துள்ளான். 220 00:16:18,312 --> 00:16:19,146 என்ன? 221 00:16:19,229 --> 00:16:20,731 இந்த முட்டாள் அதில் உதவுவான் என நம்புகிறேன். 222 00:16:20,814 --> 00:16:21,815 அந்த வாட்ச்சில் என்ன உள்ளது? 223 00:16:22,733 --> 00:16:25,736 ஸ்பின் டாக்டர்ஸின் ஆறு ஆல்பங்களும் மின்னிடம் மட்டும்தான் இருந்தன. 224 00:16:25,819 --> 00:16:26,987 உன் கழுத்தை முறிப்பதற்கு முன், 225 00:16:27,070 --> 00:16:30,365 அவனது கடைசி தருணங்களில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் இருந்ததா? 226 00:16:31,658 --> 00:16:34,828 காலையில் அவன் கார்டன் ஸ்குவேரில் இருந்து எட்ஜ்வேர் சாலைக்கு சைக்கிளில் சென்றுள்ளான். 227 00:16:34,912 --> 00:16:38,373 போகும் வழியில் யூஸ்டன் சாலைக்குப் பின்னால் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் நின்றுள்ளான். 228 00:16:38,457 --> 00:16:40,209 செயின்ட் பான்க்ராஸில் காரில் மோதுவதற்கு முன் 229 00:16:40,292 --> 00:16:42,711 மாலை மீண்டும் எட்ஜ்வேர் சாலைக்குச் சென்றுள்ளான். 230 00:16:42,794 --> 00:16:46,298 சரி. அவன் மூச்சு வாங்குவதற்கான நேரத்தைவிட அதிக நேரம் நின்ற எல்லா 231 00:16:46,381 --> 00:16:48,717 இடங்களின் முகவரிகளும் எனக்கு வேண்டும். 232 00:16:48,800 --> 00:16:50,719 வேண்டுமெனில் அவனது ஃபோனை ஹேக் செய்கிறேன். 233 00:16:50,802 --> 00:16:53,597 டேட்டாவை எடுக்கவா? ஆபாசப் படங்களைத் தவிர அனைத்தையும் அனுப்புகிறேன். 234 00:16:53,680 --> 00:16:54,723 உன்னை அந்தப் படிக்கட்டில் 235 00:16:54,806 --> 00:16:57,643 தள்ளிவிடுவதற்கு முன் உனக்கு ஐந்து நொடிகள் தருகிறேன். 236 00:16:58,227 --> 00:16:59,895 நீங்கள் இல்லாதபோது நான் என்ன செய்வது? 237 00:17:01,730 --> 00:17:02,731 தெரியவில்லை. 238 00:17:04,148 --> 00:17:06,693 வழக்கமாக நான் இல்லாதபோது செய்வதையே செய். 239 00:17:08,237 --> 00:17:11,281 நீ தியாகியாக இருக்க விரும்பினால், இதை மீண்டும் பாட்டிலில் ஊற்றிவிடு. 240 00:17:28,089 --> 00:17:30,926 நான் என் அறைக்குச் சென்று நெவ்ஸ்கியிடம் செக்-இன் செய்ய வேண்டும். 241 00:17:32,678 --> 00:17:35,180 ஒரு 20 நிமிடங்கள் கொடுங்கள், வேண்டுமெனில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். 242 00:17:35,264 --> 00:17:37,808 நாம் மாடியில் அமர்ந்து குடிக்கலாம். 243 00:17:39,184 --> 00:17:41,144 -டிரிங்க்ஸுக்கு நன்றி. -மகிழ்ச்சி. 244 00:17:46,900 --> 00:17:49,361 நான் கிளம்பப் போகிறேன், நண்பர்களே. 245 00:17:49,444 --> 00:17:51,780 -இல்லை. இரவு தங்குங்கள். -இருங்கள். இன்னொன்று குடியுங்கள். 246 00:17:51,864 --> 00:17:55,492 இல்லை. மன்னிக்கவும். வேறு வழியில்லை. காலையில் எனக்கு வேலை உள்ளது. 247 00:17:56,159 --> 00:17:57,160 லியோ. 248 00:17:57,786 --> 00:17:58,787 நன்றி. 249 00:18:00,247 --> 00:18:03,375 உங்களைக் கண்டிப்பாக இதற்கு முன் எங்கோ பார்த்துள்ளேன். 250 00:18:04,042 --> 00:18:06,712 இல்லை. கண்டிப்பாக எனக்கு உங்களை நினைவிருந்திருக்கும். 251 00:18:07,212 --> 00:18:08,881 ஒருவேளை போகிற போக்கில் பார்த்திருக்கலாம். 252 00:18:08,964 --> 00:18:11,925 எனக்கு முகங்கள் நன்றாக நினைவிருக்கும். 253 00:18:12,509 --> 00:18:16,471 நான் ரயிலிலோ பஸ்ஸிலோ அமர்ந்து யாரையாவது பார்ப்பேன். 254 00:18:17,472 --> 00:18:18,932 அவர்களது வாழ்க்கையைக் கற்பனை செய்வேன். 255 00:18:19,016 --> 00:18:20,976 கடைசியாக எப்போது பஸ்ஸில் சென்றீர்கள்? 256 00:18:21,059 --> 00:18:22,227 -போன வாரம். -ஓ, அப்படியா? 257 00:18:22,311 --> 00:18:25,606 ஆம், ஏனெனில் உங்கள் குப்பை பிரிட்டிஷ் ரயில்கள் பழுதடைந்துவிட்டன. 258 00:18:25,689 --> 00:18:27,399 -ஆம், புதிதா என்ன? -அதேதான். 259 00:18:27,482 --> 00:18:31,320 ஒருவேளை மீண்டும் பார்க்கலாம். இங்கேயோ லண்டனிலோ. 260 00:18:31,403 --> 00:18:33,447 -பார்க்கலாம். சந்தித்ததில் மகிழ்ச்சி. -ஆம். 261 00:18:34,406 --> 00:18:37,117 கிளம்ப வேண்டும். 262 00:18:37,201 --> 00:18:40,621 சரி. என்ன ஒரு அவமானம். நான் வழியனுப்புகிறேன். 263 00:18:41,997 --> 00:18:42,998 என்ன நடக்கிறது? 264 00:18:44,374 --> 00:18:45,751 ஒன்றுமில்லை. என்ன கேட்கிறாய்? 265 00:18:47,377 --> 00:18:48,921 லியோவுக்கு உங்களைத் தெரிந்துள்ளது. 266 00:18:49,838 --> 00:18:52,883 இல்லை. அவர் என்னை வேறொருவர் என நினைத்துக் குழம்புகிறார். 267 00:18:52,966 --> 00:18:54,468 -பார்த்து இருங்கள். -கெல்லி, வந்து குட்பை சொல். 268 00:18:54,551 --> 00:18:57,346 சரி. அண்டர்கவராக இருப்பது பற்றிக் கூறியது? 269 00:18:57,429 --> 00:18:59,848 -பார்க்கலாம், லியோ. சந்தித்ததில் மகிழ்ச்சி, நண்பா. -நன்றி. பிறகு பார்க்கலாம். 270 00:18:59,932 --> 00:19:01,308 -சரி. -கெல்லி! 271 00:19:01,391 --> 00:19:02,392 வருகிறேன். 272 00:19:03,310 --> 00:19:04,478 இங்கேயே இரு. 273 00:19:04,561 --> 00:19:07,397 -சரி, பார்த்து இருங்கள், அன்பே. -ஆம்! அடுத்த முறை நீண்டகாலம் இருக்கிறேன். 274 00:19:07,481 --> 00:19:08,690 -ஆம், இருங்கள். -சரி. 275 00:19:08,774 --> 00:19:09,775 பாதுகாப்பாகச் செல்லுங்கள். 276 00:19:09,858 --> 00:19:10,859 பை, லியோ. 277 00:19:11,818 --> 00:19:13,946 ஆம், அடுத்த முறை முன்பே சொல்லிவிட்டு வா. 278 00:19:14,029 --> 00:19:15,113 ஓ, நிறுத்து. 279 00:19:17,282 --> 00:19:18,325 பை, லியோ. 280 00:19:18,408 --> 00:19:19,701 -நலமாக இருங்கள். -பாதுகாப்பாகச் செல்லுங்கள். 281 00:19:19,785 --> 00:19:20,744 -பை. -பை. 282 00:19:21,828 --> 00:19:23,080 என்ன இது? 283 00:19:28,001 --> 00:19:29,253 பை. 284 00:20:04,037 --> 00:20:07,249 இல்யா நெவ்ஸ்கி 285 00:20:09,751 --> 00:20:11,545 விக்டர் ஆஸ்கல் கிரிமோவ் தனிப்பட்ட தரவு 286 00:20:28,395 --> 00:20:31,398 குஸ்னெட்ஸோவ் இறக்குமதி & ஏற்றுமதி 287 00:20:50,834 --> 00:20:52,669 பெலாரஸ் உக்ரேன் ரஷ்யா எஸ்டோனியா 288 00:20:52,753 --> 00:20:55,589 -அது ஒரு அழகான மாடல். -ஆம். 289 00:20:56,548 --> 00:20:57,633 ஆயிரத்தில் ஒன்று. 290 00:20:58,425 --> 00:20:59,426 மன்னிக்கவும்? 291 00:20:59,510 --> 00:21:03,639 கன்டெய்னர்கள். ஆயிரத்தில் ஒன்று சட்டவிரோதப் பொருட்களை ஏற்றிச் செல்கிறது. 292 00:21:04,431 --> 00:21:07,851 -உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது. -சரி. 293 00:21:07,935 --> 00:21:10,270 துப்பாக்கிகள், போதை மருந்துகள், 294 00:21:10,979 --> 00:21:16,193 மனிதர்களைக் கூட, உன்னால் நம்ப முடிந்தால். 295 00:21:16,276 --> 00:21:17,945 பணம் சம்பாதிக்கும் எதையும் எடுத்துச் செல்லும். 296 00:21:19,363 --> 00:21:25,536 ஆனால் அதுபோல ஒரு நெட்வொர்க் செயல்பட, உள்ளேயே ஆட்கள் தேவைப்படுவார்கள். 297 00:21:26,119 --> 00:21:30,874 பணத்தைப் பெற்றுக்கொண்டு, கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள். 298 00:21:33,502 --> 00:21:34,920 நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று... 299 00:21:35,003 --> 00:21:40,467 நேற்று இங்கிருந்து சில ரஷ்யர்கள் ஒரு பேக்கேஜை எடுத்துச் சென்றுள்ளனர். 300 00:21:40,551 --> 00:21:44,137 -அதில் என்ன இருந்தது என எனக்குத் தெரியவில்லை. -நான் அப்போது இங்கே இல்லை. 301 00:21:44,221 --> 00:21:45,931 அதைப் பற்றி நான் அக்கறைப்படுவது போலத் தெரிகிறதா? 302 00:21:46,014 --> 00:21:47,808 எது நடப்பதாக இருந்தாலும், அதில் எனக்கு சம்மந்தம் இல்லை. 303 00:21:48,308 --> 00:21:51,144 உனக்கு சம்மந்தம் உள்ளது, ஏனெனில் நீதான் அங்கே நிற்கிறாய். 304 00:21:52,563 --> 00:21:53,647 நீங்கள் போலீஸா? 305 00:21:55,190 --> 00:21:56,900 அதை நீயே கண்டுபிடித்துக்கொள். 306 00:21:56,984 --> 00:21:59,736 எப்படி இருந்தாலும்... 307 00:22:01,989 --> 00:22:03,532 நான் கால் செய்தால்... 308 00:22:06,910 --> 00:22:08,537 அது உனக்கு நல்லதாக இருக்காது. 309 00:22:11,164 --> 00:22:13,208 கடந்த சில நாட்களுக்கான பேக்கேஜ்களை நான் தேடிப் பார்க்கிறேன். 310 00:22:13,292 --> 00:22:14,543 ஆம், நல்ல யோசனை. 311 00:22:17,129 --> 00:22:20,841 வியாழக்கிழமை, காலை 11:03 மணிக்குத் தேடிப் பார். 312 00:22:30,017 --> 00:22:33,478 ஒரு பிக்கப் உள்ளது. சிறிய பொருள். இருங்கள். 313 00:22:33,562 --> 00:22:34,938 இதில் எந்த விவரங்களும் இல்லை. 314 00:22:36,148 --> 00:22:39,109 அது என்னவென்று சொல்ல முடியாது. அனைத்து விவரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 315 00:22:40,110 --> 00:22:41,570 என்னை நெவ்ஸ்கியின் இடத்தில் சந்தி. 316 00:22:43,155 --> 00:22:44,531 எப்போது என்றால் என்ன அர்த்தம்? 317 00:22:44,615 --> 00:22:48,285 இப்போதே கிளம்பி வா. 318 00:22:55,459 --> 00:22:58,420 இது சேல்ஸ் காலாக இருந்தால், உனக்கு பெரிய பிரச்சினை. 319 00:22:58,504 --> 00:23:00,214 நீ எனது சர்வீஸ் ஃபோனை டிராக் செய்ய வேண்டும். 320 00:23:01,215 --> 00:23:03,383 -ரிவர்? -என் சர்வீஸ் ஃபோன். 321 00:23:03,467 --> 00:23:06,011 அதை செர்னிட்ஸ்கியின் பாக்கெட்டில் போட்டேன். அதில் டிராக்கிங் உள்ளது. 322 00:23:06,094 --> 00:23:07,513 அவன் எங்கே என்று சொல். சீக்கிரம். 323 00:23:09,389 --> 00:23:12,684 -சீக்கிரம், ரோடி. -இரு, லோட் ஆகிறது. 324 00:23:13,268 --> 00:23:14,436 சரி, அது... 325 00:23:14,520 --> 00:23:16,271 கொஞ்சம் சீக்கிரம் கூறினால், 326 00:23:16,355 --> 00:23:18,065 மிகவும் நன்றாக இருக்கும், ரோடி. 327 00:23:21,652 --> 00:23:24,780 -சரி, அது ரிட்ஜ்வே டிரைவில் செல்கிறது. -அது எங்கே என்று தெரியாது. 328 00:23:24,863 --> 00:23:27,533 -நீ எங்கே இருக்கிறாய்? -டவுன்சைட் மேன் பப். 329 00:23:28,450 --> 00:23:31,119 வடமேற்குப் பக்கம் பி192. 330 00:23:31,203 --> 00:23:33,622 ஒரு சிறிய சாலையில் நின்றுள்ளது, பண்ணை இருக்கும் சாலை. 331 00:23:34,998 --> 00:23:37,918 -நீ இடதுபுறமாக... -சரி, அவன் எங்கே போகிறான் எனத் தெரியும். 332 00:23:40,546 --> 00:23:41,588 ஒரு நன்றி கூட சொல்லவில்லை. 333 00:23:53,851 --> 00:23:54,977 ஜான்! 334 00:24:22,129 --> 00:24:23,130 கையொப்பம் விக்டர் கிரிமோவ் தேதி 19/11/05 335 00:24:23,213 --> 00:24:25,465 ஹலோ. விக்டர் கிரிமோவா? 336 00:24:26,717 --> 00:24:29,595 மாலை வணக்கம். என் பெயர் கேத்ரின் ஸ்டாண்டிஷ், நீங்கள் 337 00:24:29,678 --> 00:24:33,724 ஜேம்ஸ் வெப் என்ற ஐஓவுக்காகச் செய்த ஆலோசனை வேலை தொடர்பாக 338 00:24:33,807 --> 00:24:35,392 பேச அழைத்துள்ளேன். 339 00:24:36,810 --> 00:24:37,936 அதேதான். 340 00:24:38,645 --> 00:24:41,106 நான் அழைத்ததற்கான காரணம் 341 00:24:41,190 --> 00:24:43,609 எங்கள் பதிவுகள் ஒன்று காணவில்லை. 342 00:24:44,318 --> 00:24:49,656 நீங்கள் கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்ட ஆவணம் இல்லை. 343 00:24:50,365 --> 00:24:53,202 இல்லை, பரவாயில்லை. இல்லை, நான் அங்கே வருகிறேன். 344 00:24:54,870 --> 00:24:56,288 சரி, நன்றி. குட்பை. 345 00:25:10,093 --> 00:25:12,179 பாஷ்கினின் பாஸ் இங்குதான் இருக்கிறாரா? 346 00:25:12,846 --> 00:25:15,474 ஆம். நெவ்ஸ்கி. பெரிய சிறைச்சாலை போல உள்ளது, இல்லையா? 347 00:25:15,557 --> 00:25:17,768 ஸ்பைடர் உயர் பதவியில் இருப்பவரை 348 00:25:17,851 --> 00:25:19,353 நெவ்ஸ்கியுடன் சந்திக்க வைக்க விரும்புகிறான். 349 00:25:19,436 --> 00:25:20,729 அதுதான் அவனது திட்டம். 350 00:25:20,812 --> 00:25:23,565 ஆனால் அவன் ஒரு குட்டையில் மாட்டிக்கொண்டிருப்பான். 351 00:25:32,741 --> 00:25:34,826 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 352 00:25:34,910 --> 00:25:36,662 நெவ்ஸ்கியின் இடத்தைக் கண்காணிக்கிறோம். 353 00:25:38,163 --> 00:25:42,417 நமது 30 ஆண்டு கால ரேடாரில் சிக்கிய ஒரு ரஷ்யன், அவனது நண்பர்கள் நமக்குத் தெரியாத 354 00:25:43,252 --> 00:25:46,672 இடத்திற்குச் சென்றிருக்கும்போது நான் வேறொரு இடத்திற்குச் செல்வதை 355 00:25:46,755 --> 00:25:49,758 உறுதிசெய்ய நிறைய வேலைகளைச் செய்துள்ளான். 356 00:25:56,723 --> 00:25:58,225 இது கேவலமாக உள்ளது. 357 00:26:03,856 --> 00:26:06,650 அங்கே ஆறு கேமராக்கள் சாலையை நோக்கி உள்ளன. 358 00:26:09,611 --> 00:26:12,239 இந்நேரம் நம்மை அந்த ரஷ்யர்கள் 359 00:26:12,322 --> 00:26:15,617 பிடித்துச் சென்று விசாரித்திருப்பார்கள். 360 00:26:20,122 --> 00:26:22,082 ஆம், கதவு திறந்திருப்பது போலத் தெரிகிறது. 361 00:26:22,749 --> 00:26:25,002 நீ அங்கே சென்று உள்ளே பார்க்கிறாயா? 362 00:26:25,544 --> 00:26:26,753 இல்லை, வேண்டாம். 363 00:26:28,297 --> 00:26:30,883 சரி. உன்னை வேலையை விட்டு நீக்குகிறேன். கிளம்பு. 364 00:26:30,966 --> 00:26:32,926 கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதற்கு என் வேலை போகாதா? 365 00:26:33,427 --> 00:26:35,470 என்னை முன்னாள் ஸ்பெட்ஸ்னஸ் காவலர்கள் சுடாமல் இருந்தால். 366 00:26:35,554 --> 00:26:39,808 உன்னைக் கூட்டி வந்ததன் காரணம், என் அணியில் இருப்பவர்களில் மிகவும் மோசமாக 367 00:26:39,892 --> 00:26:42,352 இல்லாதவர்களில் நீ ஒருத்தி என நினைத்தேன். கண்டிப்பாக, அது தவறான எண்ணம். 368 00:26:42,436 --> 00:26:43,437 அது தவறான எண்ணம் இல்லை. 369 00:26:44,354 --> 00:26:46,440 மேலும் நீங்கள் கூறியது மிகவும் மனதைப் புண்படுத்தக்கூடியது. 370 00:26:58,118 --> 00:26:59,620 கோல்ட்ஸ்டோன் ஹவுஸ் 371 00:27:30,943 --> 00:27:32,152 இங்கே. 372 00:27:43,205 --> 00:27:44,248 அடச்சை. 373 00:29:09,416 --> 00:29:10,709 -அது நெவ்ஸ்கி. -பின்னால் வா! 374 00:29:10,792 --> 00:29:13,128 பின்னால் வா. 375 00:29:14,505 --> 00:29:17,716 அவர் ஒன்றும் டேனிங் பெட்டிலிருந்து அந்தப் பக்கம் செல்லவில்லை. 376 00:29:19,176 --> 00:29:20,260 என்ன? அவர் மீது கதிரியக்கம் உள்ளதா? 377 00:29:21,386 --> 00:29:24,306 ஆம். அதனால்தான் அவர்கள் கீகர் கவுன்டரை விட்டுச் சென்றுள்ளனர். 378 00:29:24,932 --> 00:29:28,602 அவரது உடலில் விட்டமின் பி12 ஏற்றவில்லை என்று அவருக்குத் தெரியப்படுத்த. 379 00:29:29,603 --> 00:29:31,605 பிறகு ஏன் அவரைச் சுட்டனர்? 380 00:29:31,688 --> 00:29:35,984 அவர்தான் சுட்டுக்கொண்டார். நான்கு நாட்கள் அவதிப்படுவதை விரும்பியிருக்க மாட்டார். 381 00:29:38,570 --> 00:29:39,571 அந்தக் கட்டைவிரல்? 382 00:29:42,824 --> 00:29:43,825 தெரியவில்லை. 383 00:29:45,327 --> 00:29:47,579 அதை வைத்து லிஃப்ட் கேட்டுச் சென்றிருக்கலாம். 384 00:29:48,539 --> 00:29:50,123 நாமும் இருமியே சாவதற்குள் 385 00:29:50,207 --> 00:29:52,960 இங்கிருந்து செல்லலாம். 386 00:29:55,254 --> 00:29:56,755 அதைக் கொடு. 387 00:30:01,510 --> 00:30:02,803 இதை யார் செய்தது? 388 00:30:02,886 --> 00:30:04,137 பாஷ்கினின் ஆட்கள். 389 00:30:04,221 --> 00:30:06,348 பாஷ்கின் நெவ்ஸ்கியிடம் வேலை பார்த்தான் என நினைத்தேன்? 390 00:30:06,431 --> 00:30:08,684 அவன் யாரிடம் வேலை செய்கிறான் என எனக்குத் தெரியவில்லை. 391 00:30:08,767 --> 00:30:11,436 அவர்கள் நாம் இருக்கும்போதே நமக்குத் தெரியாமல் இதைச் செய்துள்ளனர். 392 00:30:11,520 --> 00:30:12,729 பார்க் இதை எப்படித் தவறவிட்டது? 393 00:30:13,313 --> 00:30:16,650 அந்த அடியாட்கள் வாங்கிய பேக்கேஜானது துறைமுகங்கள் மூலம் வந்துள்ளது. 394 00:30:16,733 --> 00:30:18,652 அவர்கள் துறைமுகங்களை செக் செய்ய மாட்டார்களா? 395 00:30:18,735 --> 00:30:19,945 அவர்களால் முடிந்ததை ஸ்கேன் செய்வார்கள், 396 00:30:20,028 --> 00:30:23,657 ஆனால் 95 சதவீத கன்டெய்னர்கள் பரிசோதனை இன்றிதான் செல்லும். 397 00:30:24,825 --> 00:30:28,036 ஒன்றாவது செல்ல வேண்டும் என்பதற்காக பல பேக்கேஜ்களை அனுப்பியுள்ளனர். 398 00:30:30,497 --> 00:30:31,582 நீங்கள் கவலைப்படவில்லையா? 399 00:30:33,041 --> 00:30:34,042 எதைப் பற்றி? 400 00:30:34,126 --> 00:30:36,003 நாம் அங்கே கொஞ்ச நேரம் இருந்தோம். 401 00:30:36,086 --> 00:30:38,172 ஆம், பயமாக உள்ளது. 402 00:31:30,015 --> 00:31:34,019 எங்கள் ஊரில், அமைச்சரை கவனிக்கவில்லை எனில், 403 00:31:34,102 --> 00:31:36,522 ஆட்டம் முடிந்துவிடும். 404 00:31:39,483 --> 00:31:42,986 அரச பதவியில் இருப்பவர்களை அப்படி நடத்தினால் சுட்டுக் கொல்வார்கள். 405 00:31:43,946 --> 00:31:46,073 விக்டர் கிரிமாவ்? கேத்ரின் ஸ்டாண்டிஷ். 406 00:31:47,241 --> 00:31:49,701 மிஸ் ஸ்டாண்டிஷ், உட்காருங்கள். 407 00:31:50,202 --> 00:31:52,079 நான் எதையும் இடையூறு செய்யவில்லை என நினைக்கிறேன். 408 00:31:52,162 --> 00:31:53,539 கண்டிப்பாக இல்லை. 409 00:31:54,039 --> 00:31:56,500 ஒரு அரச பதவியில் இருப்பவரைக் காப்பாற்றியுள்ளீர்கள். 410 00:31:57,167 --> 00:31:59,461 இதை நாம் கொண்டாட வேண்டும். 411 00:32:02,506 --> 00:32:06,468 இது வழக்கமான நடைமுறையா? 412 00:32:06,552 --> 00:32:07,886 இல்லை, நான் வீட்டுக்குச் செல்லும்போது வந்தேன். 413 00:32:08,387 --> 00:32:09,596 அப்படியா? 414 00:32:10,264 --> 00:32:12,224 நீங்கள் கையொப்பமிட்டதும், உங்கள் அறிக்கைகள் பற்றி 415 00:32:12,307 --> 00:32:15,727 சில கேள்விகள் கேட்க வேண்டும். 416 00:32:16,854 --> 00:32:19,439 நீங்கள் எங்கே வேலை செய்வதாகக் கூறினீர்கள்? 417 00:32:19,523 --> 00:32:20,732 நான் சர்வீஸில் வேலை செய்கிறேன். 418 00:32:21,233 --> 00:32:22,317 சரி. 419 00:32:23,443 --> 00:32:27,948 நான் இதில் கையொப்பமிட வேண்டும், சரி. ஏற்கனவே திரு. வெப் முன்னிலையில் கையொப்பமிட்டேன். 420 00:32:28,031 --> 00:32:30,701 உங்களுக்காக மீண்டும் போடுகிறேன். 421 00:32:33,954 --> 00:32:35,163 நன்றி. சரி... 422 00:32:37,165 --> 00:32:40,210 நீங்கள் ஆர்கேடி பாஷ்கினுக்கும் ஜேம்ஸ் வெப்புக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்யும்போது, 423 00:32:40,294 --> 00:32:43,839 நீங்கள் பாஷ்கினுக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என்றீர்கள். 424 00:32:43,922 --> 00:32:45,090 அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? 425 00:32:49,219 --> 00:32:51,930 நீங்கள் பொதுவாக மேசைக்குப் பின்னால் வேலை செய்வீர்களா? 426 00:32:52,014 --> 00:32:54,600 மேசைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு நிறைய தெரிந்துகொள்ள முடியும். 427 00:32:54,683 --> 00:32:58,687 என்னைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்? 428 00:32:58,770 --> 00:33:00,355 நீங்கள் தகவலைப் பரிமாறுவீர்கள் என்று. 429 00:33:00,439 --> 00:33:04,818 உண்மைதான். நீங்கள் பரிமாற விரும்புகிறீர்களா? 430 00:33:05,569 --> 00:33:07,196 என்னிடம் பாஷ்கின் பற்றிய கதை உள்ளது. 431 00:33:07,279 --> 00:33:10,199 எனக்கு சுவாரஸ்யமாக இருக்கும் உங்களைப் பற்றியோ அல்லது 432 00:33:10,282 --> 00:33:13,785 உங்களுடன் பணிபுரிபவர் பற்றியோ கதை கண்டிப்பாக உங்களிடம் இருக்கும். 433 00:33:15,495 --> 00:33:16,538 குடிக்கிறீர்களா? 434 00:33:16,622 --> 00:33:18,373 இல்லை, நன்றி. நான் குடிக்க மாட்டேன். 435 00:33:20,000 --> 00:33:22,544 அடிப்படை ஃபீல்டு பயிற்சியில், நட்புரீதியாகக் குடிப்பதால், இலக்கிடம் 436 00:33:22,628 --> 00:33:25,088 தகவல்களை எளிதில் பெறலாம் என்பார்கள். 437 00:33:25,172 --> 00:33:27,132 இல்லை. என்னால் முடியாது, மன்னிக்கவும். 438 00:33:27,216 --> 00:33:28,967 -குடிக்கலாம். -இல்லை, முடியாது. 439 00:33:29,051 --> 00:33:30,135 குடிக்கலாம். 440 00:33:30,219 --> 00:33:32,346 எனக்கு ஆல்கஹாலில் பிரச்சினை உள்ளது. 441 00:33:36,266 --> 00:33:39,770 உங்களிடம் ஒரு கதை உள்ளது போலத் தெரிகிறது. 442 00:33:41,355 --> 00:33:42,439 நியாயமான பரிமாற்றம்தான். 443 00:33:43,148 --> 00:33:45,234 உங்களுக்கு ஏன் என் கதையின் மீது ஆர்வமுள்ளது? 444 00:33:45,317 --> 00:33:47,361 ஏனெனில் பிரிட்டிஷ் சீக்ரெட் சர்வீஸில் 445 00:33:47,444 --> 00:33:49,780 இருக்கும் ஒருவரைப் பற்றி எது தெரிந்தாலும் 446 00:33:49,863 --> 00:33:51,490 அது பின்னர் எனக்கு உதவலாம். 447 00:33:53,158 --> 00:33:56,203 சர்வீஸுக்கு எதிராகப் பயன்படக்கூடிய தகவலை என்னிடம் கேட்கிறீர்களா? 448 00:33:56,286 --> 00:33:59,456 சரி, அது பயன்படாமல் இருக்கலாம். அது உங்களது ரிஸ்க். 449 00:34:03,252 --> 00:34:06,171 ஆனால் உங்களுக்கு வேண்டியதைப் பெற அதுதான் ஒரே வழி. 450 00:34:08,715 --> 00:34:10,509 சரி, நீங்கள் வெளியே செல்லலாம். 451 00:34:11,467 --> 00:34:13,887 கையொப்பமிட்ட ஆவணத்தை எடுத்துக்கொண்டு, என்னை காலை வரை செஸ் விளையாடவும், 452 00:34:13,971 --> 00:34:16,639 குடிக்கவும், கிசுகிசு பேசவும் விடுங்கள். 453 00:34:24,147 --> 00:34:25,148 இது... 454 00:34:26,650 --> 00:34:29,987 இது என்னிடம் இல்லாத தன்னம்பிக்கையைக் கொடுத்தது. இது என்னைப் போல அதிகமாக உணர வைத்தது. 455 00:34:30,070 --> 00:34:33,866 நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். என் வாழ்க்கையை வாழ்வதாக நினைத்தேன். 456 00:34:34,992 --> 00:34:37,786 என் கார்ன்ஃபிளேக்ஸில் வோட்காவை ஊற்றத் தொடங்கும்போது, 457 00:34:37,870 --> 00:34:39,663 அந்த மகிழ்ச்சி போய்விட்டது எனக்குத் தெரிந்தது. 458 00:34:39,746 --> 00:34:42,373 அதற்குப் பதிலாக குழப்பம் இருந்தது. நான் நானாக இருக்கவில்லை. 459 00:34:43,625 --> 00:34:48,130 நான் எப்போதும் தோற்காத, எங்கும் செல்லாத ஆட்டத்தில் மாட்டிக்கொண்டேன். 460 00:34:49,590 --> 00:34:52,134 அதை நான் மறைத்ததாக நினைத்தேன், 461 00:34:52,217 --> 00:34:54,719 ஆனால் அது என் வேலையைப் பாதிக்கத் தொடங்கியது. 462 00:34:56,388 --> 00:35:00,642 என்னை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக, என் பாஸ் நான் உதவி பெற பணம் கொடுத்தார். 463 00:35:00,726 --> 00:35:04,146 அதுவரை யாரும் என்னை அந்தளவுக்கு கருத்தில் கொண்டது இல்லை. 464 00:35:04,229 --> 00:35:06,398 காப்பாற்ற வந்த இளவரசர். 465 00:35:07,191 --> 00:35:09,067 -உங்கள் விருப்பம். -உங்கள் இளவரசர். 466 00:35:09,151 --> 00:35:10,694 இல்லை. 467 00:35:12,571 --> 00:35:16,283 ஆனால் நான் என் வாழ்க்கையை வாழத் தொடங்கினேன். அவருக்கு அந்த உதவியைத் திருப்பிக் கொடுத்தேன். 468 00:35:16,366 --> 00:35:18,368 அவருக்கு உணவு வாங்கி வந்தேன், 469 00:35:18,452 --> 00:35:21,246 அவரது மலர்களை அடுக்கினேன், அவரது வாழ்க்கையைச் சரியாக்கினேன். 470 00:35:22,956 --> 00:35:24,583 ஆனால் ஒருநாள்... 471 00:35:24,666 --> 00:35:31,006 அவர் உங்களை ஏமாற்றிவிட்டார். அனைவரையும் போல. உங்கள் இளவரசர் ஏமாற்றுக்காரர் ஆகிவிட்டார். 472 00:35:37,137 --> 00:35:39,389 இல்லை, அவர் மற்ற விஷயங்களுக்குச் சென்றுவிட்டார். 473 00:35:42,017 --> 00:35:46,063 அவர் என்னிடம் எதிர்பார்த்தது போல வாழ முயற்சி செய்தேன், ஆனால்... 474 00:35:47,022 --> 00:35:48,273 அவர் இல்லாமல் அது கடினமாக உள்ளது. 475 00:35:48,357 --> 00:35:51,443 அதனால்... ஒரு பேயை நினைத்து மயங்குகிறீர்கள். 476 00:35:56,198 --> 00:36:00,202 இவர், இவரும் சர்வீஸில் வேலை செய்கிறாரா? 477 00:36:01,620 --> 00:36:02,621 உங்கள் முறை. 478 00:36:03,413 --> 00:36:06,041 உங்களைப் பற்றியும் ஆர்கேடி பாஷ்கின் பற்றியும் என்ன விவரங்கள் உள்ளன? 479 00:36:06,124 --> 00:36:07,292 சரி. 480 00:36:07,793 --> 00:36:11,213 நாங்கள் ஒரே செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால் எனக்கு பாஷ்கினைத் தெரியும். 481 00:36:11,296 --> 00:36:14,174 அவன் இல்யா நெவ்ஸ்கிக்காக வேலை செய்பவன். 482 00:36:14,258 --> 00:36:16,677 நான் எம்ஐ5 உடன் தொடர்பு வைத்திருந்தது அவனுக்குத் தெரிந்திருந்தது, 483 00:36:16,760 --> 00:36:18,846 அதனால் அவர்களுடன் தொடர்புகொள்ளும்படி என்னிடம் கேட்டான். 484 00:36:19,930 --> 00:36:21,807 எதற்கென்று எனக்குத் தெரியாது. 485 00:36:23,725 --> 00:36:25,477 இதைத்தான் ஜேம்ஸ் வெப்பிடம் கூறினீர்கள். 486 00:36:27,145 --> 00:36:29,940 இது சமமான பரிமாற்றம். 487 00:36:30,023 --> 00:36:32,651 உங்கள் சிப்பாயைக் கொடுத்துவிட்டு, எனது யானையை எதிர்பார்க்கக்கூடாது. 488 00:36:32,734 --> 00:36:35,529 என் யானை வேண்டுமெனில், உங்கள் குதிரையையும் இரண்டு 489 00:36:35,612 --> 00:36:37,072 சிப்பாய்களையும் கொடுக்க வேண்டும். 490 00:36:38,615 --> 00:36:40,909 -நீங்கள் நியாயமாக இல்லை. -இல்லைதான். 491 00:36:42,494 --> 00:36:44,413 போய் உங்கள் மேசைக்குப் பின்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள். 492 00:36:45,706 --> 00:36:47,666 இந்த வேலைக்கு உங்களுக்கு அனுபவம் போதவில்லை. 493 00:36:49,668 --> 00:36:53,172 -நீங்கள் கிளம்பினால், நான் விளையாடுவேன். -சரி. 494 00:37:53,190 --> 00:37:54,149 என்ன? 495 00:37:54,233 --> 00:37:57,110 பாஷ்கினையும் வெப்பையும் இணைத்த நபருடன் இப்போதுதான் பேசினேன். 496 00:37:57,945 --> 00:37:59,488 விக்டர் கிரிமோவா? 497 00:37:59,571 --> 00:38:01,490 அவனிடம் ஏன் உன் நேரத்தை வீணடிக்கிறாய்? 498 00:38:01,573 --> 00:38:03,700 -அவனை உங்களுக்குத் தெரியுமா? -தெரியும். 499 00:38:04,201 --> 00:38:08,080 நாங்கள் மணிக்கூண்டின் முன் நிற்கும்போது, அவன் நேரத்தைக் கூறினால் கூட அவனை நம்ப மாட்டேன். 500 00:38:08,163 --> 00:38:12,084 அவனுக்கு பாஷ்கினை பல ஆண்டுகளாகத் தெரியும் என்கிறான், ஆனால் விவரங்களைக் கூற மறுக்கிறான். 501 00:38:12,167 --> 00:38:14,461 அவன் உன்னை எளிதாக ஏமாற்றிவிடுவான். 502 00:38:14,545 --> 00:38:17,005 அவன் கூறுவது முழுவதும் பொய்தான். 503 00:38:17,089 --> 00:38:20,008 பாஷ்கின் நெவ்ஸ்கியிடம் வேலை செய்கிறான் என்று கூற அவனுக்கு பணம் கொடுத்துள்ளனர். 504 00:38:20,092 --> 00:38:21,677 அது உங்களுக்கு எப்படித் தெரியும்? 505 00:38:21,760 --> 00:38:26,139 ஏனெனில் நெவ்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார், பாஷ்கினின் ஆட்களால் இருக்கலாம். 506 00:38:26,223 --> 00:38:27,224 என்ன? 507 00:38:28,308 --> 00:38:31,478 கிரிமோவுக்குக் கண்டிப்பாக நிறைய தெரியும், ஆனால் அவனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். 508 00:38:32,938 --> 00:38:35,899 கடின்ஸ்கிக்கு என்ன வேண்டும் என்று கண்டுபிடிக்க நான் முயல்கிறேன். 509 00:38:35,983 --> 00:38:37,734 நான் மீண்டும் முயற்சி செய்யவா? 510 00:38:38,610 --> 00:38:42,906 இல்லை, நீ வீட்டுக்குச் செல், இந்த உளவாளி வேலையை நிறுத்து. 511 00:39:22,029 --> 00:39:23,989 நான் தான். நான் மார்கஸ். 512 00:39:24,072 --> 00:39:26,992 -உன் பையைத் திற. -நீ இங்கே என்ன செய்கிறாய்? 513 00:39:27,075 --> 00:39:30,037 -நீ என்னைப் பின்தொடர்ந்தாயா? -ஆம், அதற்கு நீ சந்தோஷப்படுவாய். 514 00:39:34,917 --> 00:39:36,960 -நீ பாஷ்கினைக் கொல்லப் போனாயா? -இல்லை, அவனைச் சித்திரவதை செய்து 515 00:39:37,044 --> 00:39:38,962 -பிறகு கொல்லலாம் என நினைத்தேன். -என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்? 516 00:39:39,046 --> 00:39:40,589 மின் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளான்... 517 00:39:40,672 --> 00:39:42,966 பிறகு இறந்துவிட்டான். பாஷ்கின் அவனைக் கொன்றுவிட்டான். 518 00:39:43,050 --> 00:39:44,718 அதை விசாரித்துவிட்டனர். அது விபத்துதான். 519 00:39:44,801 --> 00:39:46,178 மன்னிக்கவும். நான் அதை நம்பவில்லை. 520 00:39:46,261 --> 00:39:47,638 -அது ஏனெனில்... -இல்லை, வேண்டாம். 521 00:39:47,721 --> 00:39:50,641 நான் அதிர்ச்சியில் இருந்தேன் என்றோ வேறு எதுவுமோ சொல்லாதே. 522 00:39:50,724 --> 00:39:52,935 சரி. நீ இப்போது மிகவும் அமைதியாக இருக்கிறாய். 523 00:39:53,018 --> 00:39:54,520 அவன் எதையோ மறைக்கிறான், மார்கஸ். 524 00:39:55,312 --> 00:39:56,688 அதனால்தான் அவன் என்னுடன் உட்கார்ந்திருந்தான். 525 00:39:56,772 --> 00:39:58,649 -நான் அவனைச் சந்தேகப்படுகிறேனா என தெரிந்துகொள்ள. -இது கிறுக்குத்தனம். 526 00:39:58,732 --> 00:40:01,443 -அவன்... வாட்ச்சில் சத்தம் கேட்டது. -ஆம், அது ஒரு வாட்ச். 527 00:40:01,527 --> 00:40:03,403 -அவன் ஒரு ஏமாற்றுக்காரன். -என்ன? 528 00:40:03,487 --> 00:40:04,488 அவன் வாட்ச்சில் டிக்டிக் சத்தம் கேட்கிறது. 529 00:40:04,571 --> 00:40:07,074 அதுபோல வாட்ச்சில் சத்தம் கேட்காது. அதனால்தான் விலை அதிகம். 530 00:40:07,157 --> 00:40:08,992 போலி வாட்ச் இருப்பதால் ஒருவனைக் கொல்ல விரும்புகிறாயா? 531 00:40:20,504 --> 00:40:21,964 -என்ன? -லூயிசாவைப் பிடித்துவிட்டேன். 532 00:40:22,047 --> 00:40:23,924 அவள் பாஷ்கினை போதையாக்கி அவனைக் கொல்ல... 533 00:40:24,007 --> 00:40:26,093 ஹேய், என்னிடம் கொடு. ஹாய். 534 00:40:26,176 --> 00:40:29,888 பாஷ்கின் ஒரு ஏமாற்றுக்காரன். அவன் திட்டம் என்னவென்று தெரியவில்லை, ஆனால் அவன் ஒரு போலி. 535 00:40:29,972 --> 00:40:31,181 அவன் மின்னைக் கொன்றுள்ளான். 536 00:40:31,265 --> 00:40:35,519 இல்லை. அவன் மின்னைக் கொல்லவில்லை, ஆனால் அவன்தான் உத்தரவிட்டுள்ளான். 537 00:40:36,186 --> 00:40:39,773 அவன் கண்டிப்பாக அங்கே இருந்துள்ளான். அவன் நெவ்ஸ்கியையும் கொன்றுவிட்டான். 538 00:40:39,857 --> 00:40:41,483 -நெவ்ஸ்கி இறந்துவிட்டாரா? -என்ன? 539 00:40:41,567 --> 00:40:44,152 ஆம், இன்று வேறு யாரும் இறப்பதை நான் விரும்பவில்லை. 540 00:40:44,236 --> 00:40:46,363 அதனால்தான் லாங்ரிட்ஜை உன்னைப் பின்தொடரச் சொன்னேன். 541 00:40:46,446 --> 00:40:48,740 நான் இப்போதே அவனைப் பிடித்து விசாரிக்க முடியும். 542 00:40:48,824 --> 00:40:50,576 அல்லது அவன் உன்னைப் பிடிக்க முடியும். 543 00:40:51,159 --> 00:40:55,831 அவனை மயக்கி, ஏமாற்றி விசாரிப்பது எனக்குப் பிடித்துள்ளது என்றாலும், 544 00:40:55,914 --> 00:40:58,000 அவன் ஒரு ரஷ்யன், அவன் எதையும் கூறாமல் இருக்க வாய்ப்புள்ளது. 545 00:40:58,083 --> 00:41:00,836 அதனால் இதைக் கைவிட்டுவிட்டு 546 00:41:00,919 --> 00:41:04,631 எதுவும் நடக்காதபடி நாளை சந்திப்பில் கலந்துகொள். 547 00:41:06,383 --> 00:41:10,345 மன்னிக்கவும், மின்னைக் கொன்றவனுடனும் கொல்லச் சொன்னவனுடனும் சந்திப்பில் கலந்துகொண்டு, 548 00:41:10,429 --> 00:41:11,930 எதுவும் செய்ய வேண்டாம் என்கிறீர்களா? 549 00:41:12,014 --> 00:41:16,852 இப்போது, எனக்குப் பிடிக்காத நபரான டிக்கி பௌவின் மரணத்திற்காகவே 550 00:41:16,935 --> 00:41:18,937 அதிகமான வேலைகளைச் செய்யப் போகிறேன். 551 00:41:19,021 --> 00:41:22,941 குறைந்தபட்சம் நான் பொறுத்துக்கொண்ட மின் ஹார்ப்பரைக் கொன்றவனை நான் என்ன 552 00:41:23,025 --> 00:41:26,028 செய்வேன் என்று உன்னால் கற்பனை செய்ய முடியும். 553 00:41:26,111 --> 00:41:27,154 நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 554 00:41:27,237 --> 00:41:29,114 நான் எதிரியுடன் பேசப் போகிறேன். 555 00:41:29,698 --> 00:41:31,450 -என்ன, ரஷ்யர்களுடனா? -இல்லை. 556 00:41:31,533 --> 00:41:32,701 பார்க்குடன். 557 00:41:33,785 --> 00:41:38,123 நான் மாஸ்கோ சென்டர் சைஃபர் கிளர்க்காலோ அல்லது வேறு யாராலோ ஏமாற்றப்பட்டேன் 558 00:41:38,207 --> 00:41:39,291 எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 559 00:41:39,374 --> 00:41:41,919 உன்னால் எனக்கு எந்தக் கவனச் சிதறலும் ஏற்படக் கூடாது. 560 00:41:42,002 --> 00:41:45,672 அதனால் நீ இதைக் கைவிட வேண்டும், இது என் உத்தரவு. 561 00:42:34,638 --> 00:42:36,890 சரி, நண்பர்களே. மெதுவாக அப்படியேத் திரும்புங்கள். 562 00:42:38,684 --> 00:42:41,770 நீ இங்கே என்ன செய்கிறாய், கடின்ஸ்கி? 563 00:42:41,854 --> 00:42:43,772 -நீ என்ன பைத்தியமா? -வாயை மூடு. 564 00:42:43,856 --> 00:42:46,400 ஆம், நாம் எதையாவது வெடிக்க வைக்கப் போகிறோமா, நண்பர்களே? 565 00:42:46,483 --> 00:42:47,401 அதுதான் திட்டமா? 566 00:42:48,527 --> 00:42:50,487 அதனால்தான் டன்கனைப் பயன்படுத்தினீர்களா? 567 00:42:50,571 --> 00:42:52,739 -ஜான்? -அலெக்ஸ். 568 00:42:52,823 --> 00:42:55,701 இங்கே என்ன செய்கிறீர்கள்? டன்கன் எங்கே? அலெக்ஸ்? 569 00:42:55,784 --> 00:42:56,952 நீ ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறாய்? 570 00:42:58,287 --> 00:42:59,830 -அலெக்ஸ், போலீஸைக் கூப்பிடுங்கள். -இல்லை, ஜான். ஏன்... 571 00:42:59,913 --> 00:43:00,956 நீ ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறாய்? 572 00:43:01,039 --> 00:43:04,126 போலீஸைக் கூப்பிடுங்கள். நான் ஒரு எம்ஐ5 அதிகாரி. அனைத்தையும் விளக்குகிறேன். போலீஸைக் கூப்பிடுங்கள். 573 00:43:04,209 --> 00:43:05,919 -லியோ, என்ன நடக்கிறது? -எனக்குத் தெரியவில்லை. 574 00:43:06,003 --> 00:43:07,713 நீ லண்டனுக்குச் செல்வதாகக் கூறினாய். 575 00:43:07,796 --> 00:43:10,799 நாங்கள் டன்கனின் 60வது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் திட்டமிடுகிறோம். 576 00:43:10,883 --> 00:43:13,594 இதுதான் உன் சிறந்த பதிலா? வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லையா? 577 00:43:13,677 --> 00:43:16,013 நிக்கி எங்கள் கல்லூரிக்கால நண்பர். 578 00:43:16,096 --> 00:43:17,973 ஆம், உண்மைதான், அலெக்ஸ், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 579 00:43:18,056 --> 00:43:20,225 அவனும் ஒரு முன்னால் கேஜிபி அதிகாரி. இல்லையா? 580 00:43:20,309 --> 00:43:21,685 லியோவைப் போல. 581 00:43:21,768 --> 00:43:24,938 -அவன் தான் உங்கள் கணவரைக் கையாள்பவன். -கையாள்பவரா? 582 00:43:25,772 --> 00:43:28,150 -டன்கன் ஒரு ரஷயன் ஸ்லீப்பர் ஏஜென்ட். -என்ன? 583 00:43:28,233 --> 00:43:30,402 -நான் விளக்குகிறேன். -அசையாதே. உன் கையை தலைக்கு மேல் வை. 584 00:43:30,485 --> 00:43:33,864 அவர்கள் என்னைப் போல சர்ப்ரைஸுக்குத் திட்டமிடும் நண்பர்கள். அதனால்தான் நான் வந்துள்ளேன். 585 00:43:33,947 --> 00:43:37,326 லியோவும் நானும் நிக்கியைச் சந்திக்க டன்கனிடம் பொய் சொல்லி வந்தோம். முன்பே திட்டமிட்டது. 586 00:43:37,409 --> 00:43:40,245 அவர்களுக்குப் பின்னால் உரமும் எரிபொருளும் உள்ளது பாருங்கள். 587 00:43:40,329 --> 00:43:42,039 அவர்கள் கேக் செய்யவில்லை. அவர்கள் வெடிகுண்டு செய்கின்றனர். 588 00:43:42,122 --> 00:43:44,166 இல்லை, இது... நீ தவறாக நினைக்கிறாய். இது அபத்தமானது. 589 00:43:44,249 --> 00:43:46,126 என் கணவர் ரஷ்யன் ஏஜென்ட் இல்லை. 590 00:43:46,210 --> 00:43:47,711 அலெக்ஸ், என்னை... 591 00:43:54,551 --> 00:43:56,053 இப்போது என்ன செய்வது? 592 00:43:56,637 --> 00:43:58,472 விமானத்தைத் தயார் செய்வோம். 593 00:43:58,555 --> 00:43:59,806 அவனைக் கொல்வோம். 594 00:44:00,432 --> 00:44:01,433 ஆம். 595 00:45:15,340 --> 00:45:17,342 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்