1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:55,222 --> 00:00:58,225 அறிவும் அமைதியும் கொண்டவரே 4 00:01:06,233 --> 00:01:07,442 உங்களுக்கு நினைவிருக்கிறதா... 5 00:01:11,738 --> 00:01:13,448 நம்மிடம் எல்லாம் இருந்தபோது? 6 00:01:18,662 --> 00:01:19,746 நீங்கள் கனவு கண்டீர்களா... 7 00:01:22,583 --> 00:01:24,126 அதையெல்லாம் விட்டுச் செல்வோம் என்று? 8 00:01:52,112 --> 00:01:53,405 நீங்கள் அழைத்துச் சென்றீர்கள்... 9 00:01:58,869 --> 00:02:00,913 அது எப்படி ஆரம்பித்தது. 10 00:02:04,458 --> 00:02:07,794 சிவிடெல் எஜியோஃபோர் என்பவரால் சொல்லப்பட்டது 11 00:02:10,964 --> 00:02:15,969 அத்தினா : யானைகளின் ராணி 12 00:03:37,509 --> 00:03:42,764 புயலால் நிரப்பப்பட்ட ஒரு நீர்ச்சுனையின் அருகில் நம்முடைய கதை ஆரம்பிக்கிறது 13 00:03:52,316 --> 00:03:56,778 இங்குள்ள கூட்டங்களில் உலகின் கடைசி மிகப்பெரிய கொம்பர்கள் கூட்டமும் உள்ளது. 14 00:03:59,406 --> 00:04:04,036 ஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருந்த ஒரு மகத்தான பரம்பரையில் வந்தவர்கள். 15 00:04:19,927 --> 00:04:22,513 அவர்களின் இராணிதான் அத்தீனா. 16 00:04:32,940 --> 00:04:37,611 அவள் 50 வயதான இராணி அவளுடைய மொத்தக் குடும்பத்தின் தலைவி. 17 00:04:40,614 --> 00:04:43,033 நம்மைப் போலவே அவளுக்கும் அக்கம்பக்கத்தினர் இருந்தனர். 18 00:04:44,034 --> 00:04:45,661 மேலும் இது அவர்களின் கதையும்கூட. 19 00:04:51,041 --> 00:04:55,087 அவளுடைய குடும்பத்தில் பெண் உறவினர்களும் அவர்களுடைய குட்டிகளும் இருந்தன. 20 00:05:08,809 --> 00:05:13,897 அந்த குட்டிகள் சகோதர, சகோதரிகள் போல நெருங்கிப் பழகினார்கள். 21 00:05:21,613 --> 00:05:25,492 அத்தீனாவின் குடும்பம், அவளுடைய அனுபவம் மற்றும் அறிவையே நம்பி இருந்தார்கள், 22 00:05:26,076 --> 00:05:29,496 அவர்கள் உயிர்வாழத் தேவையான முடிவுகளை அவள் எடுப்பாள். 23 00:05:32,499 --> 00:05:36,170 அவளுடைய சமீபத்திய மகள், பிரின்ஸெஸுக்கு ஒரு வயது ஆகிறது. 24 00:05:36,670 --> 00:05:38,589 அவள் அம்மாவைப்போலவே அமைதியானவள். 25 00:05:43,844 --> 00:05:45,387 அப்புறம், வேவே இருக்கிறான், 26 00:05:46,096 --> 00:05:47,514 அந்தக் கூட்டத்தின் வால் பையன். 27 00:05:59,359 --> 00:06:01,653 அவன் எப்போதும் பிரின்ஸெசுடன் நட்புடன் இருக்க முயலுகிறான். 28 00:06:02,613 --> 00:06:07,075 ஆனால் கடும் முயற்சி செய்தாலும் அடிக்கடி வம்பில் மாட்டிக்கொள்கிறான். 29 00:06:19,713 --> 00:06:23,258 ஒரு பையன் என்பதால், பதின்ம வயது வரும்வரை வேவே அந்தக் குடும்பத்துடன் இருப்பான். 30 00:06:24,343 --> 00:06:27,179 அதன்பின், ஆண்கள் மட்டுமே உள்ள கூட்டத்துடன் சேர்ந்து விடுவான். 31 00:06:30,057 --> 00:06:32,768 அந்தக் குடும்பத்தின் புதிய குழந்தை மிமி. 32 00:06:33,393 --> 00:06:34,937 புயலின்போது அவள் பிறந்தாள். 33 00:06:38,065 --> 00:06:41,401 வாழ்நாள் பூராவும் கற்றுக்கொள்வதில், அது அவளுக்கு முதல்நாள். 34 00:06:51,036 --> 00:06:54,831 அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும். 35 00:07:00,087 --> 00:07:04,216 அவள் தாய் மாலா, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் குட்டி போடுவாள் என்பதால், 36 00:07:04,842 --> 00:07:07,094 ஒவ்வொரு குட்டியும் மிக அருமையானதாகிறது. 37 00:07:12,850 --> 00:07:15,060 மாலாதான் அவளுக்கு பாலூட்டுகிறாள் என்றாலும், 38 00:07:15,769 --> 00:07:17,855 மிமி எல்லோராலும் போற்றப்படுகிறாள், 39 00:07:18,397 --> 00:07:21,066 ஏனெனில், ஒரு யானைக் குட்டியை வளர்க்க ஒரு கூட்டமே செயல்பட வேண்டும். 40 00:07:36,790 --> 00:07:39,251 இது அத்தீனாவின் சாம்ராஜ்யம். 41 00:07:39,877 --> 00:07:42,504 இப்போதைக்கு அவர்களுக்குத் தேவையானது எல்லாமே உள்ளது. 42 00:07:46,466 --> 00:07:49,511 தினமும் அவளுடைய குடும்பத்தைப் பிரதான நீர்ச்சுனைக்கு கூட்டி வருவாள், 43 00:07:51,305 --> 00:07:53,307 அக்கம்பக்கத்தாருக்கு அது கொஞ்சம் தொந்திரவுதான். 44 00:07:56,768 --> 00:07:58,145 ஆனால் அவர்களுக்கு யானைகள் வேண்டும் 45 00:07:59,897 --> 00:08:03,650 ஏனெனில் அவர்கள்தான் சுனையை உருவாக்கி, இப்போது திறந்து வைத்திருக்கிறார்கள். 46 00:08:12,993 --> 00:08:17,664 ஆனால் தவளைகளுக்கு நீர்ச்சுனை கட்டுவது முடியவே முடியாதது போல் உள்ளது. 47 00:08:32,346 --> 00:08:36,058 அந்தக் குடும்பத்தின் அக்கம்பக்கத்தார் யானையின் நக உயரத்தில் உள்ளனர். 48 00:08:39,811 --> 00:08:45,025 ஏதோ ஒரு வழியில் அவர்கள் அந்த பிரம்மாண்ட நண்பர்களைச் சார்ந்து உள்ளார்கள். 49 00:08:55,953 --> 00:08:58,664 நீர்ச்சுனைதான் அவர்கள் எல்லோருக்கும் வீடுபோல. 50 00:08:59,706 --> 00:09:01,583 ஆனால் சூரியன் உதயமான தருணத்திலிருந்து, 51 00:09:02,960 --> 00:09:04,169 அது சுருங்க ஆரம்பிக்கிறது. 52 00:09:04,795 --> 00:09:07,256 ஆகையால், குடும்பத்தை வளர்க்க போட்டி ஆரம்பிக்கிறது. 53 00:09:10,050 --> 00:09:12,261 பெரிய தவளைதான் உடனடியாக வேலையில் இறங்குகிறது 54 00:09:13,220 --> 00:09:15,305 விரைவிலேயே தவளைக் குஞ்சுகள் உருவாகும். 55 00:09:20,394 --> 00:09:23,897 கீழே உள்ள கில்லி மீன்களுக்குத் தெரியாது, 56 00:09:23,981 --> 00:09:27,150 அத்தீனாவின் குடும்பம் அவர்களுக்கு எப்படி அல்லது எப்போது உதவி செய்வார்களென்று. 57 00:09:28,193 --> 00:09:31,154 இப்போதைக்கு அவர்கள் காதலிப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். 58 00:09:36,326 --> 00:09:40,038 ஒவ்வொரு முறையும் ஆண், பெண்ணைக் கட்டிப் பிடிக்கும்போதும், அவள் முட்டையிடுவாள்... 59 00:09:42,082 --> 00:09:43,125 பின்னர் புதைத்து வைப்பாள். 60 00:10:02,269 --> 00:10:05,981 இரவு வந்துவிட்டால், மிகவும் எச்சரிக்கை வேண்டுமென்று அத்தீனாவுக்குத் தெரியும். 61 00:10:06,773 --> 00:10:11,195 வேவேயையும் மிமியையும் நன்கு பாதுகாக்க அவளுடைய குடும்பம் நின்றபடி தூங்குவார்கள். 62 00:10:22,706 --> 00:10:24,041 ஆனால் அக்கம்பக்கத்தார் சிலருக்கு, 63 00:10:26,627 --> 00:10:28,670 கேளிக்கை இப்போதுதான் ஆரம்பம். 64 00:10:45,312 --> 00:10:50,192 ஒரு நுரைத் தவளையாக இருந்தால், ஒரே ஒரு துணை போதவே போதாது. 65 00:10:50,943 --> 00:10:53,904 அவள் பெரிய கூட்டத்தையே நுரை விருந்துக்கு அழைப்பாள். 66 00:10:58,992 --> 00:11:02,329 அத்தீனாவின் நீர்ச்சுனையில், அந்தப் பருவத்தின் முதல் நிகழ்வு அதுதான். 67 00:11:06,416 --> 00:11:09,253 ஆண்கள் கிளப்பும் நுரையில் அவள் முட்டையிடுவாள், 68 00:11:10,295 --> 00:11:12,256 அவை, உள்ளே பாதுகாப்பாக வளரும். 69 00:11:21,974 --> 00:11:25,269 மேலே, எகிப்திய வாத்து ஒரு படி முன்னே போய்விட்டது. 70 00:11:28,522 --> 00:11:30,691 சில வாரங்களுக்கு முன்பே அவள் முட்டையிட்டுவிட்டாள். 71 00:11:36,196 --> 00:11:39,074 அவளுடைய குஞ்சுகள் பறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். 72 00:11:41,368 --> 00:11:44,663 அதுவரை நீர்ச்சுனைதான் அவர்களுடைய வீடு. 73 00:12:02,723 --> 00:12:06,310 மிமி ரொம்பவும் குட்டியாக இருப்பதால், அத்தீனா நீரைவிட்டுத் தள்ளி செல்லமாட்டாள். 74 00:12:07,477 --> 00:12:12,232 புதிய குட்டி, எடையைக்கூட்டி, உறுதியாக வளரும்வரை அவள் எச்சரிக்கையாக இருப்பாள். 75 00:12:15,986 --> 00:12:18,488 வேவே, அவனைவிட சிறிய குட்டியை அப்போதுதான் முதலில் பார்க்கிறான், 76 00:12:19,406 --> 00:12:21,533 நட்போடு பழக மிகவும் முயற்சி செய்கிறான். 77 00:12:44,598 --> 00:12:46,850 சில பறவைகள் கூடுகள் கட்ட ஆரம்பிக்கும்போது, 78 00:12:47,434 --> 00:12:48,977 ஒரு சில முடிக்கும் தறுவாயில் உள்ளன. 79 00:12:50,187 --> 00:12:52,189 நுரைத் தவளைகளுக்கு அது ஒரு நீண்ட இரவு, 80 00:12:53,398 --> 00:12:54,858 அவர்கள் களைப்படையத் தொடங்குகிறார்கள். 81 00:12:59,947 --> 00:13:03,075 ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் ஓசி சவாரி கிடைக்கிறது. 82 00:13:18,131 --> 00:13:21,218 சில சமயம் ஒரு நுரைத் தவளை ஏமாந்தும் விடுகிறது, 83 00:13:21,718 --> 00:13:22,970 அதற்குப் பிடித்ததோ இல்லையோ. 84 00:13:49,246 --> 00:13:51,498 நுரைத் தவளை வெயிலில் சந்தோஷமாக உட்கார்ந்திருக்கிறது. 85 00:13:54,001 --> 00:13:55,794 ஆனால் வெயிலால் குட்டிகளின் தோல் பாதிக்கப்படும் 86 00:13:56,503 --> 00:13:59,673 என்பதால், வேவே, மிமிக்கு நல்ல நிழலைக் காண்பிக்கிறான். 87 00:14:13,687 --> 00:14:15,272 வாழ்க்கை எளிதாக இருக்கும் வேளையில், 88 00:14:15,355 --> 00:14:18,817 அத்தீனா, தானும் ஓய்வெடுத்துக் கொண்டு, குட்டிகளையும் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. 89 00:14:22,279 --> 00:14:24,865 ஆனால், வேவேயால் வெகு நேரம் சும்மா இருக்க முடியவில்லை. 90 00:14:25,866 --> 00:14:27,826 மிமி பிறந்ததிலிருந்தே உற்சாகமாக உள்ளான் 91 00:14:28,285 --> 00:14:30,746 அதனால் தன் புதிய தோழியை விளையாட எழுப்ப முயற்சிக்கிறான். 92 00:14:38,462 --> 00:14:40,214 மிமி முடியும்போது ஓய்வு எடுக்க வேண்டும். 93 00:14:41,715 --> 00:14:45,260 அவளுடைய குடும்பத்தோடு ஈடு கொடுக்க அவள் இன்னும் திடமாக வேண்டும். 94 00:14:54,478 --> 00:14:58,190 தாய் வாத்து தனது குஞ்சுகளை நீர்ச்சுனைக்கு அருகில் கொண்டு செல்ல விரும்புகிறது. 95 00:15:00,734 --> 00:15:02,319 அவைகளுக்கும் அதுதான் முதல் நாள். 96 00:15:02,736 --> 00:15:06,073 மிகவும் களைப்பான இரவுக்குப்பின் அவைகளும் அவசரப்படவில்லை. 97 00:15:10,202 --> 00:15:15,249 மேலும், அவள் கூட்டிபோவது, நம்பிக்கையோடு குதிப்பதற்கு. 98 00:15:26,760 --> 00:15:28,512 அவைகளுக்கு மனம் அலைபாய்கிறது 99 00:15:28,595 --> 00:15:32,057 ஒன்றாகச் சேர்ந்து இருப்பதா அல்லது பெற்றோர்களுடன் சேருவதா என்று. 100 00:16:13,724 --> 00:16:15,809 ஒரு குஞ்சு குதித்தால் மற்றவைகளுக்கும் புரிந்து விடும் 101 00:16:16,476 --> 00:16:20,898 அதாவது பெற்றோர்களுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பது. 102 00:16:27,946 --> 00:16:31,491 எல்லாக் குடும்பத்திலும் ஒருவர் எப்போதும் கடைசியாகவும் தாமதமாகவும் இருப்பார். 103 00:16:32,409 --> 00:16:33,619 அவனை நாம் ஸ்டீஃபென் என்போம். 104 00:16:35,495 --> 00:16:37,998 பெற்றோர்கள், குஞ்சுகள் தங்களுடன் வருவார்கள் என்று நம்புவார்கள், 105 00:16:38,498 --> 00:16:41,001 அதனால், ஸ்டீஃபென் பின்னால் தங்கி விட்டது அவைகளுக்குத் தெரியாது. 106 00:17:45,232 --> 00:17:49,319 சில சமயம் தாமதமாக வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 107 00:17:57,911 --> 00:17:59,830 ராஜ்ஜீயத்தைப் பற்றிய அத்தீனாவின் அறிவு 108 00:17:59,913 --> 00:18:03,500 பல நூற்றாண்டுகளாக தாயிடமிருந்து மகளுக்கு வருவது. 109 00:18:05,836 --> 00:18:08,422 ஒரு தலைவியாக அவளுடைய தந்தங்கள் மிகப் பெரியவை. 110 00:18:14,595 --> 00:18:17,890 அதில் உள்ள வெட்டுக்குறி புல், கொடிகளை பல ஆண்டுகளாக வெட்டியதால் வந்தவை. 111 00:18:26,940 --> 00:18:31,111 அவளுக்கு மிகவும் பிடித்த கொடிகள் ஒவ்வொரு வருடமும் சில நாட்களுக்குத்தான் பூக்கும். 112 00:18:31,778 --> 00:18:33,572 அவைகள் எங்கே உள்ளன என்று அவளுக்குத் தெரியும். 113 00:18:36,533 --> 00:18:39,536 ஒரு விருந்து உண்ணப்போகிறோம் என்ற உணர்வில் அவர்கள் செல்லும்போது 114 00:18:39,620 --> 00:18:41,538 கீழே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது, 115 00:18:42,539 --> 00:18:44,958 அதனால், அக்கம்பக்கத்தார்கள் தாங்களாகவே ஒதுங்க வேண்டும். 116 00:18:57,221 --> 00:19:00,307 பச்சோந்திகள் தங்களுடைய உருமாறும் தன்மையைத்தான் பாதுகாப்பிற்கு நம்புகின்றன. 117 00:19:12,819 --> 00:19:15,781 ஆனால் சில சமயம் அசையாமல் இருந்து பின்புலத்தோடு ஒட்டி இருப்பது கூட 118 00:19:16,657 --> 00:19:18,408 மிக மோசமான முடிவாக இருக்கலாம். 119 00:19:29,336 --> 00:19:30,963 அவள் மிகவும் பயந்து விட்டாள் 120 00:19:33,507 --> 00:19:35,217 எப்போதாவது ஒரு பச்சோந்தி பயப்படுவதுபோல. 121 00:20:04,872 --> 00:20:06,290 அத்தீனாவின் குடும்பத்திற்கு, 122 00:20:06,373 --> 00:20:09,877 பசுமைப் பருவத்தில் அமையும் வாழ்க்கை ஒரு மிருதுவான வாழ்வலையாக உள்ளது. 123 00:20:11,545 --> 00:20:13,505 சூடு ஏறும் வரை அவர்கள் உணவருந்த அவள் அனுமதிப்பாள் 124 00:20:14,047 --> 00:20:15,924 பின்னர் நீர் அருந்த அழைத்துச் செல்வாள். 125 00:20:21,972 --> 00:20:24,141 புயலடித்து நான்கு நாட்கள்தான் ஆகின்றன, 126 00:20:25,475 --> 00:20:28,187 அதற்குள் நுரைத் தவளைகளின் கூடுகள் சூரிய வெப்பத்தில் கெட்டியாகி விட்டன. 127 00:20:29,146 --> 00:20:30,105 அவைகள் தயாராகிவிட்டன. 128 00:20:49,499 --> 00:20:54,254 அடுத்த சில வாரங்களுக்கு தவளையின் குஞ்சுகளுக்கு நீர்ச்சுனை தான் வீடாகும். 129 00:20:59,259 --> 00:21:02,596 அவைகளின் வளர்ச்சியைப் பற்றி அத்தீனாவின் குடும்பத்திற்குத் தெரியாது, 130 00:21:05,265 --> 00:21:06,517 ஆனால் தெரியாமல் இருக்காது 131 00:21:06,600 --> 00:21:09,353 கீழே உள்ள கில்லி மீன் மற்றும் உணவு ஆமைகளுக்குத் தெரியும். 132 00:21:23,784 --> 00:21:25,619 மிகப்பெரிய ஆமையால்தான் அதைத் தொட முடியும். 133 00:21:35,712 --> 00:21:40,467 அதனுடைய பரிசு, மிருதுவான குஞ்சுகளை உள்ளடக்கிய கேக் ஆகும். 134 00:22:11,665 --> 00:22:13,584 மிமி தண்ணீருக்குள் போவது அதுவே முதல் தடவை. 135 00:22:14,418 --> 00:22:16,086 அதனால், குறைந்த ஆழத்தில் தொடங்குகிறாள் 136 00:22:16,920 --> 00:22:18,881 யாரும் அவளை ஊக்குவிக்கத் தேவையில்லை. 137 00:22:27,598 --> 00:22:31,101 அத்தீனாவின் குடும்பத்திற்கு இது சொர்க்கம். 138 00:22:36,690 --> 00:22:41,069 ஆனால், மழை பெய்தாலொழிய, சில வாரங்களிலேயே நீர்ச்சுனைகள் வற்றி விடும் 139 00:22:45,324 --> 00:22:49,161 அப்படி நடந்தால், அந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமென்று அத்தீனாவுக்குத் தெரியும். 140 00:22:50,579 --> 00:22:53,332 ஆகையால், நிறைய இருக்கும்போதே அனுபவிக்க வேண்டும். 141 00:23:02,674 --> 00:23:05,469 பிரின்ஸெஸ் தாயைப் பார்த்து என்ன உண்ண வேண்டும் என்று கற்றுக்கொள்கிறாள். 142 00:23:06,887 --> 00:23:08,639 ஆனால் குட்டிகள் பால்தான் குடிக்கிறார்கள், 143 00:23:09,389 --> 00:23:13,227 வேவே, கால்களையும் தும்பிக்கையையும் உபயோகிக்க கற்றுக்கொள்கிறது. 144 00:23:19,650 --> 00:23:23,153 அந்தக் கட்டுப்பாட்டை அடைய அதற்கு பல மாதங்கள் ஆகும். 145 00:23:32,371 --> 00:23:35,040 ஒரு வறண்ட பருவம் வரப்போகிறது என்று அத்தீனாவுக்குத் தெரியும். 146 00:23:35,999 --> 00:23:38,710 அதற்குத் தயாராக ஒரே வழி எடையைக் கூட்டிக்கொள்வதுதான். 147 00:23:39,837 --> 00:23:41,713 அதாவது நிறைய உணவருந்த வேண்டும். 148 00:23:47,261 --> 00:23:50,180 ஆனால், உள்ளே செல்வது... வெளியே வந்துதான் ஆக வேண்டும். 149 00:23:54,101 --> 00:23:57,396 சாணி வண்டுகளுக்கு அது கடவுளின் வரப்பிரசாதம். 150 00:24:45,485 --> 00:24:47,779 செய்தி பல இடங்களில் பரவிவிட்டது. 151 00:24:48,488 --> 00:24:49,865 மற்றவர்களும் அங்கே வருவார்கள், 152 00:24:50,824 --> 00:24:52,993 அதனால் சாவகாசமாக உண்ண முடியாது. 153 00:24:54,244 --> 00:24:57,789 சாணியை பந்துபோல் உருட்டி அதை சீக்கிரமாக உருட்டிச் சென்றுவிடவேண்டும் 154 00:24:58,665 --> 00:25:00,459 ஏனெனில் கொள்ளைக்காரர்கள் வந்துவிடுவார்கள். 155 00:25:58,976 --> 00:26:03,021 வெற்றியாளன் இப்போது அவனுடைய உருண்டையை புதைக்க மிருதுவான தரையைக் காணவேண்டும். 156 00:26:03,647 --> 00:26:05,524 அதன்பின் அமைதியாக உண்ணலாம். 157 00:26:13,657 --> 00:26:15,242 சாணி வண்டுகளுக்கு உணவளிப்பதோடு, 158 00:26:15,993 --> 00:26:19,371 அந்தப் பகுதியில் அத்தீனாவின் குடும்பம் இலவசமாக தோட்ட வேலை செய்கிறது. 159 00:26:23,000 --> 00:26:26,128 அவர்கள் உண்ணும் விதைகள் பெரும்பாலும் செரிமானம் ஆகாமலேயே வெளி வந்துவிடுகின்றன, 160 00:26:27,087 --> 00:26:30,632 அவைகள் போகுமிடமெல்லாம் உருண்டை உரத்துடன் தெளித்து விட்டுப் போகின்றன. 161 00:26:39,892 --> 00:26:41,768 ஆமை யாருக்கோ காத்திருக்கிறது 162 00:26:43,687 --> 00:26:48,400 அது மனதில் நினைப்பது நடக்க இப்போது முடிந்தவரை உணவு உண்ண வேண்டும். 163 00:26:56,283 --> 00:27:01,830 மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் சூடேறுவதால் எல்லோருக்கும் எரிச்சல். 164 00:27:10,214 --> 00:27:13,217 யானைகள் உள்ளே வரும்போது, இங்கே ஒரு இளம் குடும்பம், 165 00:27:14,927 --> 00:27:17,012 வாத்துக்கள் பாதுகாப்பான தூரத்திற்கு செல்ல வேண்டும். 166 00:27:18,555 --> 00:27:22,184 தண்ணீரின் அளவு குறைவதோடு தாகத்துடன் யானைக் கூட்டம் வருவதால், 167 00:27:22,267 --> 00:27:23,644 அது கொஞ்சம் கடினம்தான். 168 00:27:38,033 --> 00:27:40,661 முரட்டு ஆளோடு சண்டைபோடக் கூடாது என்று அவைகளுக்குத் தெரியும். 169 00:27:47,835 --> 00:27:52,047 அதனால் பெருமையாக இருக்க ஒரு புறாவோடு சண்டை போடுகிறது. 170 00:28:24,746 --> 00:28:27,916 மீண்டும் ஸ்டீஃபென் தாமதமாகக் கிளம்புகிறது. 171 00:28:28,542 --> 00:28:29,793 அதை விட்டுப் போய்விட்டார்கள். 172 00:28:55,986 --> 00:28:58,322 இப்போது அதற்கு வழி தெரியவில்லை. 173 00:29:08,207 --> 00:29:10,375 ஆமைக்கு நல்ல காலம். 174 00:29:11,084 --> 00:29:13,212 ஒரு பெண் ஆமை நீர் அருந்த வந்து கொண்டிருக்கிறது. 175 00:29:14,129 --> 00:29:16,673 அந்தப் பெண்ணை எளிதாக மடக்கலாம். 176 00:29:17,216 --> 00:29:21,386 ஆனால் அவளை ஈர்க்க, அவளுக்கு இணையாகத் தனக்கு சக்தி உள்ளதை நிரூபிக்க வேண்டும். 177 00:29:24,056 --> 00:29:25,682 அதற்கு நடக்க வேண்டும். 178 00:29:28,352 --> 00:29:30,062 நீண்ட நடை பயணம். 179 00:29:39,821 --> 00:29:42,783 ஸ்டீஃபென் இம்மாதிரி விலங்குகளைப் பார்த்ததேயில்லை. 180 00:29:49,581 --> 00:29:51,750 ஆனால் அவன் இதையெல்லாம் கற்றுக்கொள்வான் 181 00:29:51,834 --> 00:29:55,170 அவனது குடும்பத்தோடு மீண்டும் இணைய வேண்டும் என்றால். 182 00:30:44,136 --> 00:30:45,929 கடைசியாகவும் தாமதமாகவும் இருந்ததிலிருந்து, 183 00:30:46,388 --> 00:30:49,224 ஸ்டீஃபென் இப்போது தொலைந்து போனாலும் அதிர்ஷ்டக்காரனாக முன்னேறி விட்டான். 184 00:31:08,911 --> 00:31:13,040 புல்வெளிகள் காய்ந்து போகத் தொடங்கும்போது சில அக்கம்பக்கத்தார் வருவார்கள் 185 00:31:13,498 --> 00:31:14,666 உணவு கிடைக்குமே. 186 00:31:17,586 --> 00:31:20,881 வண்டுண்ணிகள் சில நாட்களுக்கு அத்தீனா குடும்பத்தோடு இணைகிறார்கள் 187 00:31:21,673 --> 00:31:24,593 அந்தப் பகுதியின் வெட்டுக்கிளிகள் சுவையாக இருக்கும்போது. 188 00:31:26,261 --> 00:31:28,597 அந்தக் குடும்பம் அவைகளை வெளிக் கொண்டுவருவதை நம்புகிறார்கள். 189 00:31:52,955 --> 00:31:57,251 வெட்டுக்கிளிகள் இருக்கும் வரை இந்த நட்பு தொடரும். 190 00:32:01,797 --> 00:32:04,758 எல்லாம் உண்டு முடித்தபின் பறவைகள் சென்றுவிடும். 191 00:32:11,139 --> 00:32:14,601 வெட்டுக்கிளிகளைப் பார்த்து ஸ்டீஃபெனுக்கு ஒரே பரவசம். 192 00:32:18,897 --> 00:32:22,734 அவனுக்கு முடியாமல் இருக்கலாம், ஆனால் ஆசை இருக்கிறது. 193 00:32:29,408 --> 00:32:33,245 கீழே தரை மட்டத்தில் சாணி வண்டு இன்னும் தன்னுடைய வேலையில் இருக்கிறது. 194 00:32:34,580 --> 00:32:37,332 அவன் உருண்டையை முன்னால் தள்ளுவதுபோல் தோன்றினாலும், 195 00:32:37,416 --> 00:32:41,086 உண்மையில் தலைகீழாக தொங்கிக்கொண்டு, பின்னோக்கித்தான் தள்ளுகிறான். 196 00:32:43,338 --> 00:32:46,466 எங்கே போகிறோம் என்று தெரியாது, ஆனால் அதைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. 197 00:32:48,177 --> 00:32:52,014 அவனுடைய உறுதி அவனைக் காட்டிலும் பெரிது. 198 00:32:53,765 --> 00:32:57,144 உருண்டை தன்னிடம் இருக்கும்போது அதை விட்டுக் கொடுக்க மாட்டான்... 199 00:33:00,105 --> 00:33:02,608 எதிரிகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும். 200 00:33:49,821 --> 00:33:51,823 அத்தீனாக் குழு ஒன்றும் செய்யவில்லை, 201 00:33:51,907 --> 00:33:53,784 ஆனால் அவனுடைய பந்தைத் தள்ளி விட்டார்கள், 202 00:33:54,493 --> 00:33:57,788 அதனால், சாணி வண்டு அதை மீண்டும் பிடித்துவிட்டது. 203 00:34:12,177 --> 00:34:15,304 மிக அரிதாக அத்தீனா குடும்பம் சில அக்கம்பக்கத்தாரை சந்திக்கிறது. 204 00:34:18,976 --> 00:34:22,603 உணவு ஆமைகள் அவர்கள் வருவதைப் பார்த்து ஓடி ஒளிகின்றன. 205 00:34:42,875 --> 00:34:44,501 பல வாரங்களுக்கு முன் புயல் வந்தது 206 00:34:45,460 --> 00:34:49,547 இப்போது நீரின் ஆழம் வெகுவாகக் குறைந்ததால் ஒளிவதற்குக்கூட இடமில்லை. 207 00:35:03,645 --> 00:35:06,273 கில்லி மீன் கூட தவிக்கிறது. 208 00:35:08,400 --> 00:35:10,694 நீர்ச்சுனைதான் அதன் உலகமாக இருந்தது. 209 00:35:11,570 --> 00:35:15,824 ஆனால் இப்போது நீரின் அளவு குறைந்து விட்டதால், அதன் வாழ்க்கை முடிந்து விடும். 210 00:35:24,917 --> 00:35:26,710 யானைகூட்டம் முரட்டுத்தனமாக இருப்பதால், 211 00:35:27,836 --> 00:35:29,338 அவை நசுக்கப்படலாம். 212 00:35:33,008 --> 00:35:35,636 வெளியே செல்ல முடிபவர்கள் அவசரமாக வெளியேறுகின்றனர். 213 00:35:43,268 --> 00:35:45,479 அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. 214 00:36:09,795 --> 00:36:11,672 யானைகள் தொடு உணர்ச்சியால் வாழுகின்றன. 215 00:36:12,965 --> 00:36:16,927 அவைகளின் உணர்ச்சி மிக்க தும்பிக்கைகளாலும் கால்களாலும் புதியனவற்றை ஆராய்கின்றன. 216 00:36:18,554 --> 00:36:21,932 அங்கே எந்த வன்மமும் இல்லை, வெறும் ஆர்வம்தான். 217 00:36:36,405 --> 00:36:39,449 யானைகள் உலகில் வலுச்சண்டை மிக அரிது. 218 00:36:42,911 --> 00:36:44,413 காளைகளுக்கு இடையில் கூட 219 00:36:44,496 --> 00:36:47,624 ராஜ்ஜியத்தின் உப்பு நக்கும் இடத்திற்கு அவைகள் வரும்போது. 220 00:36:51,253 --> 00:36:54,173 மாறாக ஒருவருக்கொருவர் வணக்கம் செய்கிறார்கள், 221 00:36:54,256 --> 00:36:56,300 அவரவர் அந்தஸ்தின் அங்கீகாரம்... 222 00:36:58,135 --> 00:36:59,303 பின்னர் பகிர்ந்து கொள்ளல். 223 00:37:24,703 --> 00:37:27,789 உப்புச் சத்து நிறைந்த மண்ணைத் தோண்டுவதற்கு நிறைய பயிற்சி வேண்டும். 224 00:37:28,832 --> 00:37:32,961 காலுக்கும் தும்பிக்கைக்கும் இடையே ஒருங்கிணைப்பும் மூச்சுக் கட்டுப்பாடும். 225 00:37:40,636 --> 00:37:42,638 வேவேக்கு அது பெரிய சவால். 226 00:37:44,556 --> 00:37:48,185 மிக வேகமாக மூச்சை உள்ளே இழுத்தால், தூசி மூக்குக்குள் போய்விடும். 227 00:37:49,895 --> 00:37:52,648 தும்மல் வராமலிருக்க அவன் பாடு பட்டுக்கொண்டிருக்கிறான். 228 00:38:08,205 --> 00:38:13,168 அதிலேயே கவனம் செலுத்துவதால், அவனுடைய நண்பனை மறந்து விடுகிறான். 229 00:38:30,769 --> 00:38:32,521 மிமிக்கு எப்போதும் பசிக்கிறது, 230 00:38:33,564 --> 00:38:35,107 ஆனால் நீண்ட நேரம் பால் குடிப்பதில்லை. 231 00:38:41,113 --> 00:38:43,782 அப்போதுதான் அதனுடைய பெரிய சகோதரி, மில்லி, உதவிக்கு வருவாள் 232 00:38:45,033 --> 00:38:46,994 வேவேயை தள்ளி நிறுத்தி வைப்பாள். 233 00:38:51,957 --> 00:38:53,917 மாலாவுக்குத் தேவையான பால் சுரப்பதில்லை 234 00:38:56,795 --> 00:38:58,964 மிமிக்கு எல்லாப் பாலும் வேண்டும். 235 00:39:15,147 --> 00:39:18,275 நாளின் இறுதியில் எல்லோரும் களைப்படைந்து விட்டார்கள். 236 00:39:25,407 --> 00:39:29,244 ஸ்டீஃபென் காணவில்லை என்று தாய் வாத்துக்கு இன்னும் தெரியாது. 237 00:40:01,443 --> 00:40:05,280 அந்தப் பகுதி முழுவதும் எல்லா நீர்ச்சுனைகளும் அநேகமாக வறண்டு விட்டன, 238 00:40:06,031 --> 00:40:08,075 அத்தீனா பதட்டப்படுகிறாள். 239 00:40:09,368 --> 00:40:11,537 இப்போது அவர்கள் கிளம்ப வேண்டுமென்று அவளுக்குத் தெரியும், 240 00:40:12,371 --> 00:40:16,458 ஆனால் பயணத்திற்கு தேவையான சக்தி மிமிக்கு இல்லை என்பதே அவளுடைய கவலை. 241 00:40:19,628 --> 00:40:21,964 அவளுக்குத் தெரியும், சில சூழ்நிலைகளில் மிமி சோர்ந்து விடும் 242 00:40:22,047 --> 00:40:24,341 எல்லாக் குட்டிகளும் எப்படியோ நடக்கும் போது. 243 00:40:36,895 --> 00:40:40,816 அவளுடைய நண்பர்களுக்குத் தெரியாது அவள் பிரச்சினையில் இருக்கிறாளா 244 00:40:40,899 --> 00:40:42,484 அல்லது களைப்பாய் இருக்கிறாளா என்று. 245 00:40:52,995 --> 00:40:55,247 ஆனால் அத்தீனா "மேலே நடக்கலாம்" என்று உறுமினால், 246 00:40:55,831 --> 00:40:57,666 எல்லோரும் கேட்க வேண்டும். 247 00:41:01,753 --> 00:41:04,631 குட்டி யானைக்கு இது மிகவும் பயங்கரமானது 248 00:41:04,715 --> 00:41:07,176 நம்மை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயத்தைவிட. 249 00:41:18,770 --> 00:41:22,816 பருவ மாறுதல் வருவதை அத்தீனா மட்டும் உணர்ந்தாள் என்பதல்ல. 250 00:41:28,363 --> 00:41:32,034 பெரிய தவளையின் புதிய குஞ்சுகளுக்கு கால்கள் முளைத்துவிட்டன 251 00:41:33,285 --> 00:41:36,747 இப்போது தண்ணீரை விட்டுச் சென்று நிலத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். 252 00:41:43,545 --> 00:41:47,674 அதிர்ஷ்டவசமாக, அவைகளின் எலும்புகள் இன்னும் மிருதுவாகவே உள்ளன. 253 00:42:14,076 --> 00:42:17,538 ஆனாலும் மூன்று டன் எடையுள்ள யானையோடு மோத அவைகள் தயாராக இல்லை. 254 00:42:49,361 --> 00:42:52,739 அத்தீனா இன்னும் வறண்ட பருவ சரணாலயத்திற்கு போகத் தொடங்கவில்லை 255 00:42:53,699 --> 00:42:55,701 ஏனெனில் மிமி இன்னும் சிரமப்படுகிறாள். 256 00:43:02,708 --> 00:43:04,543 அவளுக்கு அவளது அம்மாவின் ஊக்கம் தேவை. 257 00:43:29,985 --> 00:43:33,363 ஆனால் வறண்ட பருவம் வரப்போவதால் ஒன்றும் செய்ய முடியாது. 258 00:43:35,407 --> 00:43:38,535 சில நேரங்களில் இயற்கையும் கருணை காட்டும் 259 00:43:38,994 --> 00:43:41,038 தான் எடுத்துக்கொண்டதை திருப்பிக் கொடுக்கும். 260 00:44:11,443 --> 00:44:14,029 ஸ்டீஃபென் தனியாக இரவைக் கழித்ததால் 261 00:44:14,112 --> 00:44:17,324 அவன் குடும்பத்தோடு சேர்வது எவ்வளவு அவசியம் என்று புரிந்து கொண்டான். 262 00:44:25,707 --> 00:44:28,126 கடைசி தவளைக் குஞ்சுகள் நிலத்திற்கு வரத் தயாராக உள்ளன. 263 00:44:29,711 --> 00:44:32,464 முதலில் வந்தவை பெரியவை. 264 00:44:33,632 --> 00:44:34,633 அவைகள் காத்திருக்கின்றன. 265 00:44:59,950 --> 00:45:02,202 பெரிய ஆமைகள் வாழ்க்கையை நன்றாகத் தொடங்க, 266 00:45:03,620 --> 00:45:07,249 பெரிய வாயும் சிறிய உறவினர்களும் இருப்பதும் சௌகரியம்தான். 267 00:45:22,514 --> 00:45:25,684 அந்த ராஜ்ஜியத்தில் பல வாரங்கள் மழை இல்லாததால் பல உயிர்கள் மடிந்தன. 268 00:45:26,351 --> 00:45:28,812 என்ன வரப்போகிறது என்று அத்தீனாவுக்கு சந்தேகம் இருந்தால், 269 00:45:29,271 --> 00:45:31,940 பறவைக்கூட்டங்களின் வருகை அதை உறுதிப்படுத்தியது. 270 00:45:53,212 --> 00:45:57,549 சுற்றியுள்ள நிலங்கள் வறண்டு போகும்போது கிவிலாப் பறவைகள் புலம் பெயர்கின்றன. 271 00:46:17,694 --> 00:46:20,822 அவைகளுடைய வருகை பிரமிக்கத் தக்கதாக இருக்கும். 272 00:46:28,830 --> 00:46:33,001 அத்தீனா குடும்பம் ஒரு வாரத்தில் குடிக்கும் நீரைப் பறவைகள் ஒரே நாளில் குடித்து விடும். 273 00:47:02,614 --> 00:47:06,201 அவைகள் புறப்பட்டுச் செல்லும்போது நீர்ச்சுனை வற்றியிருக்கும். 274 00:47:18,380 --> 00:47:20,966 அத்தீனா குடும்பம் சேற்றை சூட்டிலிருந்து காக்க பயன்படுத்துவார்கள் 275 00:47:22,092 --> 00:47:24,011 கில்லி மீனுக்கு இது மிக முக்கியம், 276 00:47:24,887 --> 00:47:27,306 ஏனெனில், அவை தங்கள் முட்டைகளை சேற்றில் புதைத்து வைத்துவிட்டன. 277 00:47:31,143 --> 00:47:33,979 முட்டைகள் குஞ்சு மீன்களாக மாறினாலும் இன்னும் முழுவதும் வளரவில்லை. 278 00:47:35,480 --> 00:47:37,733 நீருக்கு வெளியே பல வாரங்கள் அவை உயிர் வாழ முடியும். 279 00:47:38,984 --> 00:47:41,069 ஆகையால், அத்தீனா குடும்பம் பயணத்தைத் தொடரும்போது, 280 00:47:41,486 --> 00:47:43,780 அவர்கள் குட்டிப் பிரயாணிகளை சுமந்து செல்வார்கள். 281 00:47:48,410 --> 00:47:52,539 இப்படித்தான் கில்லி மீன் நீர்ச்சுனைகளுக்கு இடையே பயணம் செய்யும் 282 00:47:53,165 --> 00:47:54,499 யானைகளின் மேல் சவாரி செய்து. 283 00:48:14,770 --> 00:48:16,855 முன்பே போயிருக்க வேண்டும் என அத்தீனாவுக்குத் தெரியும், 284 00:48:17,523 --> 00:48:21,360 அடுத்த நிலையான நீர்ச்சுனை சுமார் 100 மைல் தூரத்தில் உள்ளது. 285 00:48:23,362 --> 00:48:27,366 மிமி இன்னும் கொஞ்சம் திடமாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் அத்தீனா தாமதித்தாள். 286 00:48:32,955 --> 00:48:37,084 மாலா தன் குட்டியை மிகப் பாதுகாப்பாக வைத்து, வேவேயைக்கூட நெருங்க விடவில்லை. 287 00:48:43,382 --> 00:48:46,134 மிமியின் அக்கா மில்லியும் ஆறுதல் அளிக்கிறாள் 288 00:48:46,218 --> 00:48:49,137 ஆனால் அவசியம் தேவைப்படும் பாலை அவளால் கொடுக்க முடியாது. 289 00:48:52,516 --> 00:48:56,103 தாமதப்படுத்த எடுத்த அத்தீனாவின் முடிவு சரியானதா என்று காலம்தான் சொல்லும். 290 00:48:59,231 --> 00:49:00,649 இப்போது அவளுக்கு வேறு வழி இல்லை. 291 00:49:01,900 --> 00:49:03,360 ராஜ்ஜியத்தில் தண்ணீரே இல்லை 292 00:49:04,653 --> 00:49:06,655 முன்னால் உள்ள சுனைகளும் வற்றத் தொடங்கிவிட்டன. 293 00:49:08,240 --> 00:49:10,450 அவர்கள் நீரை நோக்கி போயே ஆக வேண்டும். 294 00:49:48,697 --> 00:49:51,575 இப்போது மாலாவும் மில்லியும் இணைந்து செயல்படுகிறார்கள். 295 00:50:36,828 --> 00:50:38,580 எவ்வளவுதான் அத்தீனா விரும்பினாலும், 296 00:50:39,164 --> 00:50:43,961 ஒரு தலைவியாக, குடும்பத் தேவைகளுக்கு மேல் மிமியை முக்கியப் படுத்த முடியாது. 297 00:51:18,620 --> 00:51:20,956 மாலாவும் மிமியும் நீருக்கு செல்லும்போது, 298 00:51:21,790 --> 00:51:23,959 அத்தீனா மற்றவர்களை உணவுக்கு அழைத்துச் செல்வாள், 299 00:51:24,543 --> 00:51:27,045 ஏனெனில், அவள் எல்லோருடைய தேவைகளையும் சரிசமமாக பாவிக்க வேண்டும். 300 00:52:21,266 --> 00:52:26,021 மிமிக்கு அதிக நீர் தேவைப்படுவது, மாலாவுக்குப் பால் வற்றியதைக் காட்டுகிறது. 301 00:52:27,606 --> 00:52:28,774 ஆனால், மாலாவுக்கு தெரியாது. 302 00:52:29,942 --> 00:52:33,445 ஒரு பலவீனமான குட்டி எளிதாக சேற்றில் மாட்டிக்கொண்டு விடும் என்று தெரியும். 303 00:52:34,279 --> 00:52:37,824 அதனால் மிமியை சேற்றில் இருந்து பாதுகாக்க அவள் உள்ளுணர்வு சொல்கிறது. 304 00:53:24,329 --> 00:53:25,956 மிமி இன்னும் பால் குடியை நிறுத்தவில்லை. 305 00:53:26,498 --> 00:53:28,500 அதனால், அவளுக்கு போதிய பால் கிடைக்கவில்லை என்றால், 306 00:53:29,168 --> 00:53:30,752 அவளுக்கு உணவே கிடைக்கவில்லை. 307 00:54:03,285 --> 00:54:06,413 பல நேரங்களில் தாய்க்கு மகளின் ஆதரவு தேவைப்படும். 308 00:54:19,510 --> 00:54:21,136 குடும்பம் இருப்பதே அதற்குத்தானே. 309 00:55:04,680 --> 00:55:06,473 மறுநாள் இன்னும் சூடு அதிகமாகிவிட்டது 310 00:55:07,015 --> 00:55:09,601 மற்றும் அத்தீனாவின் இக்கட்டான நிலை மோசமானது. 311 00:55:13,939 --> 00:55:16,149 மிமியை விட்டு விட்டுப் போக அவளுக்கு விருப்பமில்லை, 312 00:55:16,233 --> 00:55:19,069 ஆனால் அதற்காக மொத்த குடும்பத்தையும் ஆபத்தில் மாட்ட விடக்கூடாது. 313 00:55:30,789 --> 00:55:33,041 கடைசி சுனை வந்துவிட்டது என்று அத்தீனாவுக்குத் தெரியும். 314 00:55:34,126 --> 00:55:36,170 இன்றைக்கு அதுவும் வற்றி விடும். 315 00:55:39,798 --> 00:55:44,303 உணவு ஆமை அதை உணர்ந்து சேற்றுக்குள் தன்னை ஆழமாக புதைத்துக் கொள்கிறது. 316 00:55:46,221 --> 00:55:50,309 தன்மேல் யாராவது ஏறினாலும் பரவாயில்லை ஆனால் வறண்ட பருவத்தில் மாட்டக்கூடாது. 317 00:56:03,238 --> 00:56:05,365 மாலா கைவிடுவதாக இல்லை. 318 00:56:41,610 --> 00:56:46,573 ஆனால் கடைசியில் மிமியின் சிறு இதயத்தால் தாங்க முடியவில்லை 319 00:59:35,617 --> 00:59:38,412 ஒரு தாயாருக்கு இதைவிடப் பெரிய கொடுமை இல்லை. 320 01:00:00,559 --> 01:00:04,897 சில சமயம், எவ்வளவு துக்கமாக இருந்தாலும், மரணம் ஒருவித விடுதலையாகும். 321 01:00:21,496 --> 01:00:25,667 ஆனால் வேவேக்கு தோழியின் இழப்பு மிகக் கடினமாக இருந்தது. 322 01:00:38,931 --> 01:00:41,558 இனியும் தாமதிக்கக்கூடாது என்று அத்தீனாவுக்குத் தெரியும். 323 01:00:42,601 --> 01:00:45,687 வறண்ட பருவ சரணாலயம் செல்ல மூன்று நாட்கள் ஆகும். 324 01:00:46,605 --> 01:00:48,106 ஏற்கனவே கிளம்ப தாமதம் ஆகிவிட்டது. 325 01:00:49,107 --> 01:00:51,527 இனிமேல் வழியில் எங்குமே குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. 326 01:01:10,879 --> 01:01:13,674 சற்று நிறுத்தி வேவேயை சமாதானப்படுத்த நேரம் இல்லை. 327 01:01:36,822 --> 01:01:38,991 பின்னால், நீர்ச்சுனை இருந்த இடத்தில், 328 01:01:39,491 --> 01:01:42,536 இப்போது நிலம் மிருதுவாக உள்ளது, சாணி வண்டு தேடியதைப்போல. 329 01:01:49,918 --> 01:01:52,129 கில்லி மீன் அவ்வளவுதான், இனி இல்லை. 330 01:01:58,093 --> 01:02:02,598 பெரிய தவளை பூமிக்குள் வெகு ஆழமாக அடுத்த சில மாதங்களுக்கு புதைத்துக் கொள்ளும். 331 01:02:08,187 --> 01:02:10,522 ஸ்டீஃபென் பொரிந்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகின்றது. 332 01:02:11,190 --> 01:02:13,525 இளம் வத்துக்கள் இப்போது முழுவதும் வளர்ந்து விட்டன. 333 01:02:27,039 --> 01:02:29,249 அவைகளும் சரணாலயத்தை நோக்கிப் பயணிக்கும். 334 01:02:40,219 --> 01:02:43,263 யானைகள் போகும் பாதையிலேயே அவைகளும் பின்தொடரும். 335 01:02:47,809 --> 01:02:51,563 ஒவ்வொரு நாளும் உணவருந்த அத்தீனா சிறிது நேரம் நிறுத்துவாள். 336 01:02:55,984 --> 01:02:57,528 இப்போது வேவேயிடம் அன்பாக உள்ளனர். 337 01:02:58,487 --> 01:03:00,280 பிரின்ஸெஸ் கூட ஒன்றும் சொல்வதில்லை. 338 01:03:15,587 --> 01:03:17,506 மில்லியிடம் கொடுக்கப் பால் இல்லை, 339 01:03:18,173 --> 01:03:20,759 ஆனாலும் வேவே உறிஞ்சினால் இருவருக்கும் சுகமாக இருக்கும். 340 01:03:38,777 --> 01:03:43,031 ராஜ்ஜியத்தை விட்டு வெளியே அத்தீனா செல்லும் வழி, மனதில் உள்ள வரைப்படம் 341 01:03:43,824 --> 01:03:47,286 அவளது தாயாரிடமிருந்து அவள் கற்றது மேலும் அவள் மறக்காதது. 342 01:03:53,834 --> 01:03:55,711 சில மோசமான இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். 343 01:05:02,986 --> 01:05:04,446 ஆனால் தனியாக நடக்க மாட்டார்கள். 344 01:05:05,906 --> 01:05:08,325 எல்லோரும் சரணாலயத்தைத் தேடிப் போகிறார்கள். 345 01:05:35,018 --> 01:05:38,063 சரணாலயம் என்பது நிலத்தடி நீரால் நிரப்பப்படும் ஒரு நீர்ச்சுனை. 346 01:05:39,189 --> 01:05:42,860 மிகவும் வறண்ட பருவத்தில்கூட அங்கே எல்லோருக்கும் தண்ணீர் இருக்கும். 347 01:06:18,061 --> 01:06:21,648 யானைகளுடன் ஸ்டீஃபென் குடும்பமும் அங்கே சரணடைவார்கள். 348 01:06:23,233 --> 01:06:26,403 மழைக்காலம் வரும் வரை காத்திருந்து பின்னர் எல்லோரும் வீடு திரும்புவார்கள். 349 01:07:13,867 --> 01:07:16,578 மிகவும் வறண்ட வருடங்களில் மட்டும்தான் அத்தீனா இங்கு வருகிறாள். 350 01:07:18,205 --> 01:07:22,042 அந்த ஒரு சமயத்தில்தான் ராணியாக உள்ள அவளின் அந்தஸ்துக்கு இணையானவரைக் காணலாம். 351 01:07:56,994 --> 01:08:01,206 எல்லோருக்கும் ராஜாவான சடாவோ தான் அவர். 352 01:08:03,083 --> 01:08:05,586 மிகப்பெரிய உருவம் கொண்ட கொம்பன் யானை. 353 01:08:14,845 --> 01:08:17,305 ஆனால் அமைதியான மிகப்பெரிய உருவம் கொண்டவர் 354 01:08:19,057 --> 01:08:20,975 அனைவராலும் மதிக்கப்படுபவர். 355 01:09:15,738 --> 01:09:17,866 வருடம் பூராவும் அவர் காடுகளில் திரிந்தார் 356 01:09:18,825 --> 01:09:22,203 அதனால் இந்த சமயத்தில் பருவம் அடைந்த பெண் யானையைத் தேடுவார், 357 01:09:34,508 --> 01:09:37,135 நூஸு என்னும் பெண் யானைதான் அத்தீனா குடும்பத்தின் இளம்பெண். 358 01:09:38,428 --> 01:09:39,763 ஆனால் அவள் கருவுற்றிருக்கிறாள். 359 01:10:01,201 --> 01:10:04,955 மிமியின் இறப்புக்குப்பின் முதன்முறையாக வேவே உற்சாகமாக விளையாடுகிறான். 360 01:10:08,166 --> 01:10:10,836 மற்ற குடும்பங்களிலிருந்து வரும் குட்டிகளைக் காண அது ஒரு வாய்ப்பு. 361 01:10:18,969 --> 01:10:23,056 அவன் விளையாடிக் களைத்து விட்டால், அவனது குடும்பம் உதவி செய்வார்கள். 362 01:10:41,992 --> 01:10:46,413 வறண்ட பருவம் தொடரத் தொடர, சரணாலயத்தில் உள்ள உணவு குறைய ஆரம்பிக்கிறது. 363 01:10:52,669 --> 01:10:56,507 எனவே, ஒவ்வொரு நாள் மாலையிலும் அத்தீனா குடும்பம் உணவுக்காக தூரமாக செல்ல வேண்டும். 364 01:11:20,030 --> 01:11:23,909 ஆனால் எப்போதும் தண்ணீருக்காகத் திரும்பி வரவேண்டும். 365 01:11:38,465 --> 01:11:39,675 அதுவே அவர்களது உயிர்காப்பான். 366 01:11:40,717 --> 01:11:43,136 சரணாலயத்தோடு அது அவர்களைக் கட்டிப் போடுகிறது. 367 01:11:43,220 --> 01:11:45,347 மெல்ல மெல்ல பிடி இறுகுகிறது. 368 01:11:55,148 --> 01:11:58,902 எல்லா உணவையும் அருந்திவிட்டதால் அவர்களுக்கு சக்தியே இல்லை. 369 01:12:01,572 --> 01:12:05,909 சரணாலயமாக ஆரம்பித்த இடம் இப்போது சிறைச்சாலை மாதிரி ஆகிவிட்டது. 370 01:12:17,629 --> 01:12:19,173 மழை வரவில்லையென்றால், 371 01:12:19,756 --> 01:12:22,968 வறண்ட பருவமாகத் தொடங்கியது பஞ்ச பூமியாக மாறிவிட்டது. 372 01:12:23,760 --> 01:12:27,639 அதனுடைய பின்விளைவுகளும் உயிர்ச்சேதங்களும் தொடங்குகின்றன. 373 01:12:55,042 --> 01:12:56,543 அங்கிருந்து கிளம்ப அத்தீனாவுக்கு பயம், 374 01:12:57,211 --> 01:13:00,130 ஏனெனில் நடக்கும் தூரத்தில் தண்ணீரே இல்லை. 375 01:13:17,981 --> 01:13:23,028 பஞ்சம் தலைவிரித்தாடும்போது உயிரைக் கொல்வது தாகம் அல்ல, பட்டினிதான். 376 01:13:27,324 --> 01:13:31,036 எல்லோருக்குமே சில நாட்கள் தான். 377 01:14:07,531 --> 01:14:12,244 அத்தீனாவின் 50 வருடங்களில் இப்படிப்பட்ட மோசமான பஞ்சத்தை அவள் அனுபவித்ததில்லை. 378 01:14:17,541 --> 01:14:21,420 இப்போது அவள் எடுக்கும் முடிவுதான் மிக முக்கியமானது. 379 01:14:31,471 --> 01:14:34,975 இந்த முறை, அவளது மொத்தக் குடும்பத்தின் உயிரே பணயத்தில் உள்ளது. 380 01:14:36,643 --> 01:14:39,271 அவள் அங்கே தங்கினால், அவர்கள் பட்டினி கிடக்க வேண்டும். 381 01:14:40,647 --> 01:14:42,608 ஆனால் கிளம்பிச் சென்றால், நேரம் சரியில்லை என்றால், 382 01:14:43,567 --> 01:14:44,985 எல்லோரும் தாகத்தால் இறப்பார்கள். 383 01:14:49,573 --> 01:14:54,369 எப்படி ஆயினும் பொறுப்பு அவளுடையது மட்டுமே. 384 01:15:13,096 --> 01:15:14,598 அவள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, 385 01:15:15,516 --> 01:15:19,811 எப்படியெனில், அவள் ராஜ்ஜியத்திற்குத் திரும்ப முடிவெடுத்தால், தயங்கமாட்டார்கள். 386 01:15:25,943 --> 01:15:27,986 ஏனெனில், அவள்தான் அவர்களது தலைவி. 387 01:15:29,613 --> 01:15:31,281 அவளை எல்லா இடத்திற்கும் பின் தொடர்வார்கள். 388 01:16:21,498 --> 01:16:24,543 அவளுடைய ராஜ்ஜியத்தில், நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. 389 01:16:54,531 --> 01:17:00,704 நீர்ச்சுனை இருந்த இடத்தில் ஆழமாகப் புதைந்தவர்கள் உயிரோடு சமாதியாய் உள்ளனர். 390 01:17:04,458 --> 01:17:07,294 ஜடம்போல் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 391 01:17:19,640 --> 01:17:22,476 அவர்கள் பழைய நிலையை அடைய, 392 01:17:23,602 --> 01:17:24,686 மழை பெய்ய வேண்டும். 393 01:17:43,497 --> 01:17:44,873 மோசமான நிலங்களில், 394 01:17:45,499 --> 01:17:48,335 வேவேயை வெயிலிலிருந்து பாதுகாக்க குடும்பம் எல்லாம் செய்கிறார்கள். 395 01:18:03,642 --> 01:18:06,395 ஆனால், அவர்களுடைய ஒரு அடிக்கு இணையாக அவன் இரண்டடி வைக்க வேண்டும். 396 01:18:12,526 --> 01:18:14,444 அது அவனை களைப்படைய வைக்கிறது. 397 01:18:53,567 --> 01:18:55,444 அத்தீனா கடைசியில் நிறுத்துவது, 398 01:18:56,361 --> 01:19:01,074 உணவுக்காக அல்ல, ஆனால் அவர்களில் ஒருவரை நினைவு கூரத்தான். 399 01:19:27,935 --> 01:19:30,771 சில நிமிடங்கள் பஞ்சம் மறக்கப்படுகிறது 400 01:19:31,522 --> 01:19:34,441 எதற்காக, என்னவென்ற புரிதலோடு இணைகிறார்கள். 401 01:19:35,734 --> 01:19:38,570 அவர்களைப்போல் இருப்பது என்னவென்று தெரிந்து கொள்கிறார்கள். 402 01:20:12,646 --> 01:20:15,691 அவர்கள் போகும் இடத்தில் இன்னும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 403 01:21:08,285 --> 01:21:10,704 ராஜ்ஜியத்தை அடைய இன்னும் ஒருநாள் நடை பயணம் இருக்கும்போது, 404 01:21:11,538 --> 01:21:15,042 ஒரே ஒரு விஷயம்தான் அத்தீனாவை நிறுத்த முடியும். 405 01:21:24,843 --> 01:21:27,471 தன்னுடைய குட்டியை இரண்டு வருடங்களாக சுமந்தபின், 406 01:21:29,056 --> 01:21:30,724 நூசு குட்டியை பெற்றெடுத்தாள். 407 01:21:35,646 --> 01:21:37,314 அது ஒரு பெண் குட்டி. 408 01:21:45,239 --> 01:21:47,491 எந்தச் சூழ்நிலையில் பிறந்தோம் என்று கூட அதற்குத் தெரியாது. 409 01:21:50,536 --> 01:21:53,163 பால் குடிப்பதுதான் அதன் முதல் வேலை. 410 01:22:03,006 --> 01:22:06,218 எப்போதும்போல், நட்பு பாராட்ட வேவே ஆசையோடு உள்ளான். 411 01:22:44,715 --> 01:22:47,342 குட்டி பிறக்க மோசமான சமயம்போல் தோன்றலாம். 412 01:22:52,639 --> 01:22:54,349 ஆனால் அத்தீனாவுக்கு வேறுவிதமாகத் தெரியும். 413 01:22:57,269 --> 01:23:01,190 ஆயிரக்கணக்கான வருடங்களாக யானைகளால் மழையை வரவழைக்க முடியும் எனக் கருதப்பட்டது. 414 01:23:03,483 --> 01:23:07,237 உண்மை என்னவெனில் மழை வருவதை அவளால் உணரமுடிகிறது 415 01:23:07,321 --> 01:23:09,406 அது 100 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும். 416 01:23:39,686 --> 01:23:43,065 ராஜ்ஜியத்தை மீண்டும் சரிசெய்ய அது ஒன்றுதான் வழி. 417 01:24:37,369 --> 01:24:39,538 அவர்கள் தண்ணீர் ஓடுவதைப் பார்த்து ஒரு வருடமாகிறது, 418 01:24:40,038 --> 01:24:41,415 அது அதிர்ச்சியாக இருக்கிறது. 419 01:25:05,189 --> 01:25:09,735 ஆப்பிரிக்காவில், மழையின் ஆரம்பத்தில் பிறந்தால் அது அதிர்ஷ்டமாக கருதப்பட்டது. 420 01:25:12,696 --> 01:25:14,990 மழை என்றாலே கொண்டாட்டம்தான். 421 01:25:57,241 --> 01:26:01,912 யானை வழித்தடங்கள், நீர்ச்சுனைகளுக்கு மீண்டும் நீரை அனுப்புகின்றன. 422 01:26:17,177 --> 01:26:19,972 பூமிக்குக் கீழே, மழை எல்லோரையும் எழுப்புகிறது. 423 01:28:03,617 --> 01:28:06,703 எப்படி ஒருவர் முகத்தில் புன்னகை தடம் பதிக்கிறதோ, 424 01:28:07,704 --> 01:28:11,124 அப்படி ஒவ்வொரு பயணமும் இந்த கண்டத்தில் தடம் பதிக்கிறது. 425 01:28:18,131 --> 01:28:20,259 இளம் வாத்துக்கள் இன்னும் ஒன்றாகவே இருக்கின்றன 426 01:28:21,301 --> 01:28:24,513 ஆனால் கூடிய விரைவில் அவைகள் தங்கள் துணைகளைத் தேடிக்கொள்ளும். 427 01:28:38,402 --> 01:28:42,739 வழக்கம்போல், ஸ்டீஃபென் கடைசியாகவும் தாமதமாகவும் இருக்கிறான். 428 01:29:04,303 --> 01:29:07,097 ஆமையின் காதல் மெதுவாகவும் நிலையானதாகவும் உள்ளது, 429 01:29:08,348 --> 01:29:10,267 கடைசியில், அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டான். 430 01:29:37,794 --> 01:29:41,632 மீண்டும் அந்த நீர்ச்சுனைதான் அவர்கள் எல்லோருக்கும் உயிர் காப்பானாக விளங்கும். 431 01:30:00,484 --> 01:30:03,779 வேவேவுக்கு சொந்த வீடுதான் சொர்க்கம். 432 01:30:07,407 --> 01:30:10,953 புதிய நண்பனோடு இருப்பதே தனி சுகம். 433 01:30:25,759 --> 01:30:28,762 மிகப்பெரும் பஞ்சங்கள் பெரிய மழையைக் கொண்டுவருகின்றன. 434 01:30:30,264 --> 01:30:34,309 ராஜ்ஜியத்தின் புதிய வளமான செழுமை மற்றவர்களையும் ஈர்க்கின்றது 435 01:30:34,393 --> 01:30:36,854 பல ஆண்டுகளாக நடக்காத ஒன்று. 436 01:30:53,954 --> 01:30:58,625 சில நாட்களுக்கு அவை 1000 பேர் கொண்ட மிகப்பெரும் கூட்டமாக இருக்கிறார்கள். 437 01:30:59,418 --> 01:31:02,713 இந்த உலகில் அவ்வகை யானைகளின் மிகப்பெரிய கூட்டம். 438 01:31:32,326 --> 01:31:35,454 பயணம், வேவேயையும் பிரின்ஸெஸையும் ஒன்று சேர்த்து விட்டது 439 01:31:36,455 --> 01:31:39,166 அறிவை பெற்றுக்கொள்வதில் அதுவே முதல் படி 440 01:31:39,249 --> 01:31:41,251 அதுவே அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும். 441 01:31:44,296 --> 01:31:46,465 இன்னும் பல பஞ்சங்களை சந்திக்க நேரிடும், 442 01:31:47,591 --> 01:31:51,803 ஆனால் அத்தீனாவின் குடும்பம் அதன் அசாதாரணமானத் தலைவியை ஒருபோதும் மறக்காது 443 01:31:52,471 --> 01:31:54,264 அவள்தானே அவர்களை வெளியே கொண்டு சென்றாள்... 444 01:31:54,348 --> 01:31:55,641 மீண்டும் அழைத்து வந்தாள். 445 01:32:20,958 --> 01:32:24,127 இதுமாதிரி பெரிய கொம்பன் யானைகள் மிகச் சிலதே உள்ளன. 446 01:32:29,883 --> 01:32:34,596 இன்றைக்கு, இந்த கண்டத்தின் ஒரு சிறிய மூலை அவர்களுக்குச் சொந்தமாகிறது. 447 01:32:39,226 --> 01:32:42,354 அது நமக்கு நினைவுறுத்துகிறது... 448 01:32:45,148 --> 01:32:48,193 எப்படி ஒரு காலத்தில் மொத்த ஆப்பிரிக்காவே அவர்களுக்கு சொந்தமாக இருந்தது என்று. 449 01:33:06,920 --> 01:33:13,010 சடாவோ மற்றும் அத்தீனாவின் நினைவாக 450 01:33:13,760 --> 01:33:15,262 சடாவோ 451 01:33:15,345 --> 01:33:18,515 இந்தப் படம் எடுக்கப்படும்போதே வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டான் 452 01:33:18,599 --> 01:33:21,602 அவன் தான் உலகின் மிகப்பெரிய கொம்பனாக இருந்தான் 453 01:33:22,352 --> 01:33:25,606 அத்தீனா 454 01:33:25,689 --> 01:33:31,069 கடைசியாக கூட்டத்தை ராஜ்ஜியத்திலிருந்து வெளியே நடத்திச் சென்றதாக பார்க்கப்பட்டாள். 455 01:33:32,946 --> 01:33:38,785 யானைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு நீங்கள் அவைகளுக்கு உதவப் பாருங்கள் 456 01:35:48,165 --> 01:35:54,171 எங்கள் நண்பரும் வழிகாட்டியுமான ஆலன் ரூட் அவர்களுக்கு சமர்ப்பணம் 457 01:36:05,390 --> 01:36:07,392 தமிழாக்கம் - இராமச்சந்திரன் நடராஜன்