1 00:00:06,041 --> 00:00:08,291 முன்னதாக 2 00:00:08,791 --> 00:00:11,125 ஹார்ஃபுட்ஸ், எங்கே அவர்கள்? 3 00:00:13,416 --> 00:00:15,166 என் நண்பர்களை பாப்பேன்னு நினைத்தேன் 4 00:00:15,250 --> 00:00:17,333 நீங்க தேடறது ஒன்று இருக்கு, 5 00:00:17,375 --> 00:00:19,625 கண்டுபிடிக்கிறது ஒன்று இருக்குல்ல? 6 00:00:21,666 --> 00:00:23,291 இது... மந்திரம். 7 00:00:23,375 --> 00:00:27,750 எப்படி கோலை செலுத்துவது என சொல்லித் தர முடியுமா? 8 00:00:27,833 --> 00:00:32,041 அதற்கு தகுதியானவன் என நிரூபித்தால், அதை நீ செலுத்தலாம். 9 00:00:32,750 --> 00:00:34,500 வலாண்டில் சொல்கிறார், பழைய இடத்தில் 10 00:00:34,541 --> 00:00:37,166 நாள் முழுக்க உங்களுக்காக பிரார்த்தனையாம். 11 00:00:37,250 --> 00:00:40,666 விசுவாசிகள் வழிக்கு என் மனதை மீண்டும் திறந்தது நீங்கதான். 12 00:00:40,750 --> 00:00:42,666 ஆனால் சேர்ந்து போராடலாம். 13 00:00:42,750 --> 00:00:45,333 ஒவ்வொரு போரும் வெற்றி பெற போராட வேண்டியதில்லை. 14 00:00:48,583 --> 00:00:52,583 சிறைச்சாலை காப்பானிடம் தெரிவி இவன்தான் புரட்சியை தொடங்கியதென. 15 00:00:53,125 --> 00:00:55,958 கற்பாடகர்கள் மலை சொல்வதை கேட்பதாக சொல்கின்றனர். 16 00:00:56,041 --> 00:00:58,666 இந்த மோதிரத்துடன், அதை பார்க்க முடியும். 17 00:00:58,750 --> 00:01:03,458 மலையின் செல்வக்கடலிலிருந்து கடுகு அளவுகூட நாம் எடுக்கவில்லை. 18 00:01:04,125 --> 00:01:05,458 அவர் மாறிட்டார். 19 00:01:05,500 --> 00:01:08,500 பேராசை அவர் வழியல்ல. எப்போதும் இருந்ததில்லை. 20 00:01:08,583 --> 00:01:12,291 சாத்தியமா, அவர் அணிந்திருக்கும் மோதிரம்... 21 00:01:12,375 --> 00:01:16,083 இல்லை. உங்க மோதிரங்களில் எந்த தவறும் இருக்க முடியாது. 22 00:01:16,166 --> 00:01:18,750 ஒருவேளை, தவறு மோதிரம் செய்தவரிடத்தில் இருக்கலாம். 23 00:01:18,833 --> 00:01:22,625 இந்த அன்னத்தார் பற்றி உங்களுக்கு நிஜமாக எவ்வளவு தெரியும்? 24 00:01:23,666 --> 00:01:26,500 நீ ட்வார்வென் மோதிரங்களை மாற்றினாயா இல்லையா? 25 00:01:27,541 --> 00:01:28,541 இல்லை. 26 00:01:28,625 --> 00:01:29,666 நாம் மாற்றினோம். 27 00:01:34,916 --> 00:01:39,083 ஒன்றாய் மோதிரங்களை முடித்து நம் தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்யணும். 28 00:01:39,166 --> 00:01:42,500 ஒன்பது ஏழினை மீட்டெடுக்கணும். 29 00:01:42,583 --> 00:01:44,625 அவை நம்மனைவரையும் மீட்கணும். 30 00:01:45,166 --> 00:01:46,541 ஆர்க்ஸ் மோர்டாரில் இல்லை. 31 00:01:46,625 --> 00:01:48,875 அவர்களின் ஒரு படை எரேகியான் செல்கிறது. 32 00:01:49,375 --> 00:01:53,375 கலாட்ரியல் சொன்னது சரி. படையை இந்த கணமே எரேகியானுக்கு அனுப்ப வேண்டும்! 33 00:01:58,041 --> 00:01:59,708 உன்னை இங்கே கூட்டி வந்தேன் 34 00:01:59,791 --> 00:02:01,166 கைதியாக அல்ல... 35 00:02:01,250 --> 00:02:02,666 ஆனால் சாத்தியமான கூட்டாளியாக. 36 00:02:02,750 --> 00:02:04,666 ஏனெனில் நமக்கு இருப்பது பொதுவான எதிரி. 37 00:03:21,000 --> 00:03:27,000 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 38 00:04:08,000 --> 00:04:09,000 நீ வாயை மூடு. 39 00:04:09,083 --> 00:04:10,541 நம்மை கைவிடுவோர் என்பர். 40 00:04:14,000 --> 00:04:15,666 நம்மை அழைப்பதுபற்றி கவலை இல்லை. 41 00:04:15,750 --> 00:04:18,958 அடார் பேயை துரத்த உதவி இறப்பதை காட்டிலும் எதுவும் பரவாயில்லை. 42 00:05:16,375 --> 00:05:20,583 மனிதர்களின் மோதிரங்களே, ஏன் இன்னும் என்னை எதிர்க்கிறீர்கள்? 43 00:05:22,166 --> 00:05:25,458 வாழாது, சுவாசிக்காது இருக்கும் உங்களுக்கு 44 00:05:25,541 --> 00:05:28,541 மனமோ, விருப்பமோ இல்லாமல்? 45 00:05:28,625 --> 00:05:31,958 உங்கள் உள்மனதில் என்ன பெருமை நெய்யப்பட்டுள்ளது, 46 00:05:33,625 --> 00:05:35,375 என் ஆளுமையை எதிர்க்கிறீர்கள்? 47 00:05:39,208 --> 00:05:40,208 மீண்டும். 48 00:05:41,125 --> 00:05:42,458 அதிகமா வெள்ளி. 49 00:05:43,375 --> 00:05:44,458 இன்னும் மித்ரில். 50 00:05:45,000 --> 00:05:46,583 இனி மித்ரில் இல்லை. 51 00:05:46,666 --> 00:05:49,125 ட்வார்ஃப்ஸ் விநியோகத்தை தாமதிக்கின்றனர். 52 00:05:50,666 --> 00:05:52,000 அப்ப அவர்களை துரத்துங்கள். 53 00:05:52,083 --> 00:05:55,458 முயற்சித்தோம், பிரபு. எங்கள் செய்திகளுக்கு பதிலே இல்லை. 54 00:05:55,541 --> 00:05:56,958 நானே எல்லாம் செய்யணுமா? 55 00:05:57,041 --> 00:05:59,041 முடிந்தவரை கடினமாக உழைக்கிறோம். 56 00:06:02,583 --> 00:06:04,958 எங்களில் சிலர் கவனித்தோம், நீங்கள்... 57 00:06:05,833 --> 00:06:08,666 சமீபமாக கோபப்படுகிறீர்கள், அரசே. 58 00:06:26,416 --> 00:06:28,250 உங்கள் பெயரென்ன, கொல்லரே? 59 00:06:30,208 --> 00:06:32,708 உங்களுக்கு நினைவில்லையா? 60 00:06:32,791 --> 00:06:34,083 நிச்சயமாக நினைவிருக்கு. 61 00:06:35,625 --> 00:06:38,000 அது, சும்மா... ஒரு நொடி கொடுங்கள். 62 00:06:38,083 --> 00:06:40,333 -கெலெப்ரிம்போர் பிரபு. -ஒரு நொடி, என்றேன்! 63 00:06:42,625 --> 00:06:44,375 எல்லாரும் சிறிது ஓய்வெடுங்கள். 64 00:06:54,166 --> 00:06:57,291 மிர்டானியா. அவள் பெயர் மிர்டானியா. 65 00:06:59,500 --> 00:07:01,750 எல்லாமே நினைவிலிருக்கும் எதிர்பார்ப்பு கூடாது. 66 00:07:04,583 --> 00:07:08,958 இல்லை, வெறும், எளிமையான விஷயங்களும் கூட. 67 00:07:09,916 --> 00:07:15,208 முன்பு, நான் என் க்ரீசிங் சுத்தியலை இங்கே விட்டேன் என சத்தியம் செய்வேன், மேலும்... 68 00:07:16,416 --> 00:07:17,625 அந்த சுத்தியலா? 69 00:07:28,333 --> 00:07:29,333 ஆமாம். 70 00:07:40,458 --> 00:07:42,541 என் மூளை செயலிழக்கிறது போல. 71 00:07:43,458 --> 00:07:45,541 அல்லது அதன் ஆழத்திற்கு போனதால், 72 00:07:46,166 --> 00:07:48,583 மீண்டும் வெளிவருவது பெரிய சுமையாக இருக்கிறது. 73 00:07:50,458 --> 00:07:52,833 ரொம்ப ஆழமாக. 74 00:07:53,791 --> 00:07:56,416 சில சமயம் ஆசையாக இருக்கலாம் 75 00:07:57,666 --> 00:07:59,541 அங்கேயே இருக்கலாம் என, 76 00:08:00,416 --> 00:08:01,833 சிறிது தெளிவைப் பெற. 77 00:08:06,500 --> 00:08:07,708 நான் நலம்தான். 78 00:08:10,375 --> 00:08:12,416 சிறிது சோர்வாக இருக்கிறேன். 79 00:08:12,916 --> 00:08:15,750 அப்ப என் செய்தி உங்களுக்கு பிடிக்காதிருக்கலாம். 80 00:08:17,750 --> 00:08:19,500 உங்க மக்கள் சந்திக்கணுமாம். 81 00:08:20,083 --> 00:08:21,333 இல்லை, இல்லை. 82 00:08:22,791 --> 00:08:26,125 நீங்கள் எரேகியானின் பிரபு. உங்களுக்கு பொறுப்புகளுண்டு. 83 00:08:26,208 --> 00:08:30,000 ஆமாம், என் மிகப்பெரிய பொறுப்பு மோதிரங்களுக்குத்தான். 84 00:08:30,750 --> 00:08:35,125 ஒன்பது மோதிரங்களும் முடிவடையும் வரை, வேறேதும் முக்கியமில்லை. 85 00:08:37,750 --> 00:08:38,750 மிக நன்று. 86 00:08:39,958 --> 00:08:41,083 உங்க விருப்பம். 87 00:08:42,583 --> 00:08:44,166 இன்னும் இருக்கிறது. 88 00:08:45,708 --> 00:08:48,833 ட்வார்ஃப்ஸ் நம் மித்ரிலை தாமதமாக்குகின்றனர். 89 00:08:51,541 --> 00:08:53,583 அதை பார்த்து கொள்கிறாயா? 90 00:08:53,666 --> 00:08:55,083 உடனே. 91 00:09:16,125 --> 00:09:19,041 எல்வன் கொல்லர்களில் சிறந்தவர் வேலையில் ஆழ்ந்துள்ளார். 92 00:09:20,291 --> 00:09:24,208 எல்லா விஷயங்களையும் அவருக்கு பதிலாக நான் கவனிக்கும்படி கேட்டார். 93 00:09:25,666 --> 00:09:27,250 இப்ப, என்ன பிரச்சினை? 94 00:09:31,333 --> 00:09:32,375 அவரிடம் காட்டு. 95 00:09:33,791 --> 00:09:34,791 என்ன காட்டணும்? 96 00:09:35,666 --> 00:09:39,000 நுழைவாயில் சப்தமாக இருந்தது, கைவினைஞர்களும் வணிகர்களும் 97 00:09:39,083 --> 00:09:40,333 நகருக்குள் வருபவர்களால். 98 00:09:40,416 --> 00:09:42,416 ஆனால் நேற்று மாலை வினோதமாக நின்றது. 99 00:09:42,500 --> 00:09:44,125 ஆற்றைத் தாண்டி தேடும் அணியை 100 00:09:44,208 --> 00:09:46,583 அனுப்பினோம் சாலையில் தடை உள்ளதா என பார்க்க. 101 00:09:46,666 --> 00:09:48,666 ஆனால் ஒரு வீரன் மட்டுமே திரும்பினான். 102 00:09:48,750 --> 00:09:49,750 அவன் எங்கே? 103 00:09:53,666 --> 00:09:58,083 காலையில் கரை சேர்ந்தான். ஏதோ செய்தி வைத்திருந்தது போலிருந்தது. 104 00:10:05,750 --> 00:10:07,000 அவனை அடக்கம் செய். 105 00:10:10,416 --> 00:10:11,708 இதை யாரிடமும் காட்டாதே. 106 00:10:18,958 --> 00:10:20,916 கெலெப்ரிம்போர் பிரபுவுக்கு தெரிவிக்கவா? 107 00:10:21,000 --> 00:10:22,083 வேண்டாம். 108 00:10:22,916 --> 00:10:26,333 யாரும் அவரை தொந்தரவு செய்ய அனுமதிக்க கூடாதென என்னிடம் கூறினார். 109 00:10:27,833 --> 00:10:29,125 கொல்லர்கள் கூட. 110 00:10:30,125 --> 00:10:31,875 கடமைகளிலிருந்து எங்களை நீக்கினாரா? 111 00:10:33,750 --> 00:10:34,958 ஆமாம், அப்படித்தான். 112 00:10:36,916 --> 00:10:39,583 அவர் என் பெயரை மறந்த விஷயமா? 113 00:10:39,666 --> 00:10:41,250 அவரிடம் கடுமையாக இருந்தேன்... 114 00:10:41,750 --> 00:10:44,250 அவர் அவராகவே இல்லை, மிர்டானியா. 115 00:10:46,541 --> 00:10:49,208 இப்போதைக்கு, நாம் அவரை தனிமையில் விடவே முடியும். 116 00:10:49,958 --> 00:10:52,916 அவருக்கு நேரம் கொடு. பிரார்த்தனை செய். 117 00:10:54,166 --> 00:10:56,916 வேலை அவரை முடிக்கும் முன், அவர் வேலையை முடிக்கட்டும். 118 00:11:09,708 --> 00:11:11,416 உன்னை நம்பலாமா... 119 00:11:12,250 --> 00:11:15,083 மற்றவர்களும் அவர் விருப்பங்களை மதிப்பதை உறுதி செய்ய? 120 00:11:16,625 --> 00:11:18,458 நிச்சயமா, பிரபு. 121 00:11:27,000 --> 00:11:30,208 பிரபு, செதுக்கல். உடலில். 122 00:11:31,083 --> 00:11:32,541 அது என்ன சொன்னது? 123 00:11:39,125 --> 00:11:40,458 "அவன் எங்கே?" 124 00:12:27,291 --> 00:12:30,791 உன் கைதில் நானிருந்த குறுகிய காலத்தில், 125 00:12:32,166 --> 00:12:34,583 நீ சௌரானை தேடுவதில் குறியாக இருந்தாய். 126 00:12:35,375 --> 00:12:38,916 அதனால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகக் கூட சொல்லலாம், 127 00:12:40,416 --> 00:12:41,958 ஒருவர் எப்போதும் இருப்பது போல, 128 00:12:42,041 --> 00:12:44,833 அவன் மனதுக்குள் புகுந்து வந்தவுடன். 129 00:12:45,541 --> 00:12:47,333 உனக்கு என்னை பற்றி ஏதும் தெரியாது. 130 00:12:49,833 --> 00:12:51,166 நீ அவனுக்கு அடிபணிந்தாய். 131 00:12:51,958 --> 00:12:53,291 நான் எதிர்த்தேன். 132 00:12:53,791 --> 00:12:55,583 சிறிது நேரம் வரை, ஒருவேளை. 133 00:12:58,416 --> 00:13:00,791 ஆனால் விரைவிலேயே, அவன் உன்னை காண்பான். 134 00:13:02,916 --> 00:13:07,083 நீ யார் என்பது மட்டுமல்ல, நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்றும். 135 00:13:07,833 --> 00:13:11,875 அவன் கண்கள் துளையிடும், அவனுடைய மீதம் உள்ளே நுழையும். 136 00:13:14,333 --> 00:13:20,000 கொஞ்ச காலத்துக்கு, அவனுடைய சக்தி உனதானது போல நம்பவும் வைப்பான். 137 00:13:22,291 --> 00:13:23,875 தடுக்க முடியாத சக்தி... 138 00:13:24,791 --> 00:13:28,416 ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவதை தவிர்க்க முடியாததாக்குகிறது. 139 00:13:29,208 --> 00:13:30,750 வண்ணக்கடல், 140 00:13:32,083 --> 00:13:35,458 அதற்கு எதிராக மற்ற அனைத்தும் நிரந்தரமாக தோன்றும்... 141 00:13:35,541 --> 00:13:38,291 ஒரு மந்த சாம்பல் நிறமாக. 142 00:13:45,583 --> 00:13:47,083 அவன் என்ன உறுதியளித்தான்? 143 00:13:49,041 --> 00:13:50,250 ஒரு படை. 144 00:13:51,833 --> 00:13:53,666 எனக்கு என்ன உறுதி தந்தான் தெரியணுமா? 145 00:13:55,208 --> 00:13:56,208 எனக்கு கவலை இல்லை. 146 00:13:58,291 --> 00:13:59,291 பிள்ளைகள். 147 00:14:00,166 --> 00:14:03,791 நாம் இஎஉவ்ரும் விரும்பியதையே உறுதியளித்திருக்கிறான் போலும். 148 00:14:04,291 --> 00:14:05,625 பாரு, 149 00:14:07,125 --> 00:14:09,916 அழிக்கப்பட வேண்டியவை அவனது பொய்கள் அல்ல. 150 00:14:11,666 --> 00:14:12,958 அவனேத்தான். 151 00:14:14,833 --> 00:14:16,666 அதை செய்ய நான் உதவ முடியும். 152 00:14:18,625 --> 00:14:20,500 சௌரானை அழிக்க நான் உதவ முடியும். 153 00:14:20,583 --> 00:14:23,708 நீ என்ன உதவி வழங்க முடியும், ஆர்க்? 154 00:14:39,583 --> 00:14:42,041 மோர்காத்தின் கிரீடம். என்னிடம் கூறினர்... 155 00:14:42,125 --> 00:14:44,166 நடந்ததை பற்றி பல கதைகள் உண்டு, 156 00:14:44,250 --> 00:14:46,875 சில்மரில்ஸ், அதன் அமைப்புகளிலிருந்து பிரித்த பிறகு. 157 00:14:47,625 --> 00:14:50,833 அதனில் பொருத்த சௌரானே தீமூட்டிய போது நானிருந்தேன். 158 00:14:52,166 --> 00:14:54,541 அவன் முடிசூட்டப்பட முழங்காலிட்டபோது இருந்தேன். 159 00:14:56,750 --> 00:15:02,166 அதன் சக்தியை உபயோகித்தது நான்தான், அவனைக் கொல்ல. 160 00:15:04,500 --> 00:15:06,208 நீ சொல்வது உண்மை எனில், 161 00:15:08,416 --> 00:15:09,541 ஏன் திரும்பினான்? 162 00:15:09,625 --> 00:15:11,916 ஏனெனில் நான் உன்னை கண்டிருக்கவில்லை. 163 00:15:13,125 --> 00:15:14,833 இதில் என் பங்கு என்ன? 164 00:15:14,916 --> 00:15:18,416 மூன்று எல்வன் மோதிரங்கள், உங்க இனம் அழியாமல் காப்பாற்றியதாமே. 165 00:15:19,875 --> 00:15:21,041 அது உண்மையா? 166 00:15:23,375 --> 00:15:28,000 அப்படியெனில், அப்போது ஒருவேளை ஒன்றாக, 167 00:15:28,083 --> 00:15:30,666 இக்கிரீடமும் மோதிரங்களும் சக்திவாய்ந்ததா இருக்கும், 168 00:15:30,750 --> 00:15:33,250 உண்மையாக சௌரானை நிரந்தரமாக அழிக்க. 169 00:15:35,708 --> 00:15:38,708 இன்னும் என்னிடம் சிக்க மாட்டானென ஏமாற்றுக்காரன் நம்பறான். 170 00:15:40,458 --> 00:15:42,666 அவன் எரேகியானில் ஒளிந்திருப்பது தெரியும். 171 00:15:44,583 --> 00:15:48,375 உனக்கு தெரியுமென எனக்கு சந்தேகம்... 172 00:15:55,541 --> 00:15:57,916 ஹால்பிராண்ட்தான் சௌரானென. 173 00:15:59,333 --> 00:16:00,416 அப்படித்தானே? 174 00:16:05,500 --> 00:16:07,666 அந்த நகரின் விதி 175 00:16:08,416 --> 00:16:11,666 இப்போது உன் அகந்தையை நீ ஒதுக்கும் திறனைப் பொறுத்தது. 176 00:16:14,333 --> 00:16:16,750 நீ அதை செய்யும் உறுதியைத் தேடு. 177 00:16:17,958 --> 00:16:19,166 உன்னால் முடிந்தால். 178 00:16:34,708 --> 00:16:36,041 நாம் மீண்டும் பேசுவோம். 179 00:16:51,458 --> 00:16:52,625 சட்டவிரோதமானது. 180 00:16:54,750 --> 00:17:00,416 வன்முறையான புரட்சியை தூண்டி உயிரிழப்புக்கு காரணமாச்சு. 181 00:17:01,458 --> 00:17:05,375 இறுதியில், ஆனால் மிக அருவருப்பாக, 182 00:17:06,500 --> 00:17:08,500 துரோகக் குற்றம். 183 00:17:09,875 --> 00:17:15,708 மொத்தத்தில், இந்த கொடூரமான சட்டமீறல்களுக்கு மரணம்தான் தண்டனை. 184 00:17:15,791 --> 00:17:17,958 -ஆமாம்! -அதுதான் அதன் முடிவு. 185 00:17:21,333 --> 00:17:23,583 -அவர் சாகத் தகுதியில்லாதவர். -இருக்கலாம். 186 00:17:24,416 --> 00:17:25,416 எனினும், 187 00:17:27,166 --> 00:17:30,625 நம் ராஜ்ஜியத்திற்கு அவர் விசுவாசமாக செய்த பல வருட சேவையினால், 188 00:17:31,750 --> 00:17:35,458 குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தீர்ப்பு. 189 00:17:43,833 --> 00:17:45,291 விடுவிக்கப்பட வேண்டும்... 190 00:17:48,666 --> 00:17:54,291 விடுவிக்கப்படணும், அதுவும், நிச்சயமாக, தன் குற்றங்களை கைவிட்டு 191 00:17:55,958 --> 00:17:59,291 தன் விசுவாசத்தை நியூமெனாரின் உண்மையான அரசருக்கு அளிக்கணும். 192 00:18:05,625 --> 00:18:10,166 எலெண்டில், அமாண்டிலின் மகனே, உன் குற்றங்களை கைவிடுகிறாயா? 193 00:18:23,375 --> 00:18:24,375 கைவிடுகிறேன். 194 00:18:27,541 --> 00:18:32,333 அர்-ஃபரஸான், நியூமெனாரின் உண்மையான அரசராக ஏற்கிறாயா? 195 00:18:43,083 --> 00:18:44,291 ஏற்கவில்லை. 196 00:18:45,791 --> 00:18:47,458 உரக்க பேசு, எலெண்டில், 197 00:18:48,416 --> 00:18:50,958 கூடியுள்ளோருக்கு நீ பேசுவது தெளிவாக கேட்கட்டும். 198 00:18:55,541 --> 00:18:56,791 நான் ஏற்கவில்லை! 199 00:18:59,125 --> 00:19:05,000 நியூமெனார் உடைய உண்மையான அரசர் இப்போது, தன் வாழ்நாள் வரை, 200 00:19:05,083 --> 00:19:08,750 ராணி மிரியெல், டார்- பலான்டிர் மகள்! 201 00:19:11,083 --> 00:19:15,541 இங்குள்ள ஒரே துரோகி நீங்கள்தான்! 202 00:19:34,000 --> 00:19:35,750 இப்ப இவனை வைத்து என்ன செய்வது? 203 00:19:36,416 --> 00:19:38,458 நீ நிறையவே செய்துட்டே, சிறுவனே. 204 00:19:42,875 --> 00:19:45,833 ஒருவேளை நாம் வேலாரை அவன் விதியை நிர்ணயிக்க விடலாம். 205 00:19:47,458 --> 00:19:50,666 விசுவாசிகள் பழைய மரபுகள்படி வாழ விரும்பினால், 206 00:19:50,750 --> 00:19:52,208 அதன்படி இறக்கவும் வேண்டும். 207 00:20:05,666 --> 00:20:06,750 நோரி. 208 00:20:08,250 --> 00:20:10,041 குறட்டையா? யார் குறட்டை விடுவது? 209 00:20:12,125 --> 00:20:13,500 யாருமில்லை. 210 00:20:13,583 --> 00:20:16,583 நான்... நான் ஏதோ பார்த்தேன். 211 00:20:17,583 --> 00:20:21,250 இரகசியத் தீ நம்மிடம் கிசுகிசுக்கும், நாம் அதை கேட்கத் தயாரெனில். 212 00:20:22,333 --> 00:20:24,666 விஷயங்களை சொல்லும். விஷயங்களை காட்டும். 213 00:20:25,541 --> 00:20:30,208 வரக்கூடிய விஷயங்களை காட்டுமா? அல்லது நிச்சயமான விஷயங்களை மட்டுமே காட்டுமா? 214 00:20:31,125 --> 00:20:34,791 நாளைய மேகங்களை நேற்றைய சூரிய ஒளி போல் தெளிவாகக் காட்டும். 215 00:20:36,500 --> 00:20:40,666 அதன் சக்தியை எப்படி நான் கட்டுப்படுத்த கற்பது? இருளை எதிர்த்து போராட? 216 00:20:40,750 --> 00:20:43,291 உன்னை எஜமானனாக்கி இரகசியத் தீக்கு என்ன வேண்டும்? 217 00:20:43,375 --> 00:20:46,208 அதை கட்டுப்படுத்த முடியாவிடில், எப்படி உபயோகிப்பது? 218 00:20:49,583 --> 00:20:54,541 இதுவரை நீ சந்தித்த சோதனையிலெல்லாம் நீ தோற்றாய். 219 00:20:55,541 --> 00:20:57,666 இப்போது உன் சோதனையில் தோற்றால், 220 00:20:59,166 --> 00:21:00,958 வேறொன்று இனி இருக்காது. 221 00:21:02,083 --> 00:21:03,791 நான் என்ன செய்வதென சொல். 222 00:21:06,625 --> 00:21:09,708 பழைய டாமை தொடர்ந்திடு. அவன் காட்டுவான். 223 00:21:17,291 --> 00:21:18,750 நீ ஏன் போய்விடக் கூடாது? 224 00:21:19,333 --> 00:21:21,458 அவர்களை விட்டுவிடு. ஓடிவிடு. 225 00:21:21,541 --> 00:21:23,000 நாம் எங்கேதான் போவோம்? 226 00:21:23,083 --> 00:21:25,458 ஏன்... நீ எங்கு விரும்பினாலும். 227 00:21:26,666 --> 00:21:30,291 ஹார்ஃபுட்ஸ் ஒவ்வொரு மாதமும் வாழ புது இடம் கண்டுபிடிப்பர். 228 00:21:34,375 --> 00:21:39,583 இந்த ஸ்மியல், என் தாயும் அவள் மக்களும் எனக்காக தோண்டினர். 229 00:21:39,666 --> 00:21:41,166 நான் அதில்தான் பிறந்தேன். 230 00:21:44,875 --> 00:21:49,041 மண்வெட்டியை பிடிக்க தெரிந்த நாளிலிருந்து அந்த மரத்தை கவனித்து கொள்கிறேன். 231 00:21:52,041 --> 00:21:55,166 அதன் நிழலில் என் ப்ராம்கரை மணந்தேன். 232 00:21:58,541 --> 00:22:02,666 போன வசந்த காலத்தில், அவர் இறந்த போது, 233 00:22:05,166 --> 00:22:06,583 அதன் கீழே அடக்கம் செய்தேன். 234 00:22:11,041 --> 00:22:13,041 ஒரு நாள், அவர் அருகே நான் அடக்கமாவேன். 235 00:22:21,500 --> 00:22:24,291 இந்த ஸ்மியல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி ஒரு கதை உண்டு. 236 00:22:30,791 --> 00:22:35,000 பாரு, இந்த இடம், இது நாங்கள் வாழும் இடம் மட்டுமல்ல. 237 00:22:37,041 --> 00:22:38,208 இது எங்கள் வீடு. 238 00:22:39,541 --> 00:22:40,958 இது நான். 239 00:22:42,250 --> 00:22:44,333 -நோரி- -நான் உன்னை இதில் இழுத்து விட்டேன். 240 00:22:45,416 --> 00:22:48,291 உன்னை காப்பாற்றுவது என் கையில் இருக்கலாம். 241 00:22:49,125 --> 00:22:50,708 இப்போது நான் சரணடைந்தால், 242 00:22:50,791 --> 00:22:53,250 பாப்பியையும் வெளியேற்ற வாய்ப்பிருக்கும். 243 00:22:56,958 --> 00:23:00,833 உன்னை கேட்க நினைத்தேன், ஏன் உன்னை நோபடி என்று அழைக்கின்றனர்? 244 00:23:01,458 --> 00:23:05,541 என் பெற்றோர் தீர்க்கமானவர்கள் இல்லை. பெயரை தீர்மானிக்க நீண்ட காலமானது. 245 00:23:05,625 --> 00:23:06,833 எவ்வளவு காலம்? 246 00:23:06,916 --> 00:23:08,416 அது, ஓரிரண்டு ஆண்டுகள். 247 00:23:08,500 --> 00:23:09,625 அது அவ்வளவு காலமல்ல. 248 00:23:10,166 --> 00:23:11,625 ஓரிரண்டு ஆண்டுகள் முன்வரை. 249 00:23:12,958 --> 00:23:14,666 அதற்குள், நோபடி நிலைத்தது. 250 00:23:23,416 --> 00:23:24,958 என்னை ஏன் அப்படி பார்க்கிறாய்? 251 00:23:25,583 --> 00:23:27,833 நான்... நான் கேட்க நினைத்தேன், 252 00:23:27,916 --> 00:23:30,291 நாங்க எல்லாம் கொலை செய்யப் படலாம், 253 00:23:30,375 --> 00:23:31,541 நீ போக விரும்பினால்... 254 00:23:31,625 --> 00:23:33,041 பேசுவதை நிறுத்து. 255 00:23:53,541 --> 00:23:55,333 -மெரிமாக். -பாப்பி. 256 00:23:57,041 --> 00:23:59,041 இரவு உணவுக்கு பல்லி உண்டாயா? 257 00:23:59,791 --> 00:24:00,916 ஏன் கேட்கிறாய்? 258 00:24:06,500 --> 00:24:07,708 அவ சொல்வது சரி, நோர். 259 00:24:08,458 --> 00:24:11,125 பெரிய மனிதர்கள் நம்மை இந்த அந்நியனுக்காக துரத்தறாங்க. 260 00:24:11,833 --> 00:24:15,041 நீ சரணடை, முழு உலகையும் நீ ஆபத்திலிடலாம். 261 00:24:15,125 --> 00:24:17,750 ஸ்டூர்கள் மட்டுமல்ல, ஹார்ஃபுட்ஸ் கூட. 262 00:24:17,833 --> 00:24:19,875 உன் தாயும் தந்தையும். டில்லி. 263 00:24:22,583 --> 00:24:24,708 அவர் முக்கியமானவரென எத்தனை முறை சொன்னாய்? 264 00:24:27,375 --> 00:24:29,500 நிறைய முறை, என நினைக்கிறேன். 265 00:24:33,041 --> 00:24:37,625 என்ன விஷயம்னா, நோர், விரைவிலேயே, நீ போதுமான அளவு எதையாவது சொன்னால், 266 00:24:40,291 --> 00:24:41,625 உன்னை நம்ப தொடங்கறேன். 267 00:24:49,500 --> 00:24:50,750 நாம் அதற்காக போராடுவோம். 268 00:24:59,041 --> 00:25:01,583 இருண்ட மந்திரவாதிக்கு அவன் தடி கிடைச்சாச்சு. 269 00:25:02,541 --> 00:25:06,250 இப்ப, உன்னோடதை நீ தேடும் நேரம் வந்தாச்சு. 270 00:25:12,750 --> 00:25:14,166 அது எது? 271 00:25:16,166 --> 00:25:20,083 உன் உண்மையான கோல் கிடைக்கும் உன் மனதின் நோக்கம், 272 00:25:20,166 --> 00:25:23,041 ரகசிய தீ சேவைக்கு மட்டுமே எனும் போது . 273 00:25:23,541 --> 00:25:24,833 ஆனால் பல இருக்கின்றனவே. 274 00:25:25,583 --> 00:25:27,541 அதைத் தேடி பல மாதங்கள் செலவிடலாம். 275 00:25:28,375 --> 00:25:30,125 உனக்கு தேவையான நேரம் உள்ளது. 276 00:25:31,208 --> 00:25:33,833 நீ வேறு எங்கேனும் இருக்க விரும்பினாலே ஒழிய. 277 00:25:36,208 --> 00:25:39,166 நான் அவளை பார்த்தேன். நோரி. 278 00:25:40,125 --> 00:25:41,500 அவள்... 279 00:25:41,583 --> 00:25:45,916 எப்படியோ, அவளை விரைவில் நான் காணாதவரை, இறப்பாளென தெரியும். 280 00:25:46,000 --> 00:25:47,208 இருவரும் இறப்பார்கள். 281 00:25:48,291 --> 00:25:50,208 இறக்கும் பலர் வாழத் தகுந்தவர்கள். 282 00:25:51,125 --> 00:25:52,958 வாழும் சிலர் இறக்க தகுந்தவர்கள். 283 00:25:54,083 --> 00:25:55,666 அதை அவர்களுக்குத் தர நீ யார்? 284 00:25:56,541 --> 00:25:59,458 அவள் பாதுகாப்பாக இருப்பது தெரிந்ததும், திரும்புவேன். 285 00:25:59,541 --> 00:26:02,250 இல்லை. உன்னால் முடியாது. 286 00:26:04,125 --> 00:26:09,000 ஒரு பாதை இரண்டாகும் நேரங்கள் உண்டு, நீ தேர்வு செய்தாக வேண்டும். 287 00:26:10,750 --> 00:26:14,833 இப்போது விலகினால், இந்த பாதைக்கு நீ திரும்பவே முடியாது. 288 00:26:15,916 --> 00:26:17,291 வேறு வழியே இல்லையா? 289 00:26:18,750 --> 00:26:20,875 சௌரான் மேற்கில் எழுகிறான். 290 00:26:21,375 --> 00:26:23,291 கிழக்கில் ஒரு இருள் மந்திரவாதி. 291 00:26:23,375 --> 00:26:25,875 மத்திய பூமியிலுள்ள அனைவரும் ஆபத்திலுள்ளனர். 292 00:26:26,625 --> 00:26:28,833 அவர்கள் விதிக்கு அவர்களை கைவிடுவாயா? 293 00:26:31,333 --> 00:26:32,791 அவள் என் தோழி. 294 00:26:34,166 --> 00:26:37,291 உன் தோழியா அல்லது உன் விதியா? 295 00:26:39,791 --> 00:26:41,125 தேர்வு உன்னுடையது. 296 00:27:06,458 --> 00:27:09,291 ஆகட்டும், உழைப்பை அதில் போடு. 297 00:27:38,750 --> 00:27:39,750 அரசே. 298 00:28:05,583 --> 00:28:07,166 என்னை அழைத்தீர்களா, அப்பா? 299 00:28:09,375 --> 00:28:10,375 இல்லை. 300 00:28:11,916 --> 00:28:13,000 அழைத்தார். 301 00:28:16,958 --> 00:28:20,375 ஏழு மோதிரங்கள் நன்றாக சேவை செய்வதை காண்கிறேன், இளவரசர் ட்யுரின். 302 00:28:22,791 --> 00:28:26,375 யாருக்கோ நன்றாக சேவை செய்கின்றன. அது நிச்சயம். 303 00:28:26,458 --> 00:28:28,166 சூழ்நிலைகள் மாறிவிட்டன. 304 00:28:28,250 --> 00:28:31,541 எரேகியானுக்கு படையெடுப்பு அச்சுறுத்தலென இப்போதுதான் அறிந்தேன். 305 00:28:32,250 --> 00:28:35,875 மித்ரில் இல்லாமல், மீதி சக்தி மோதிரங்கள் முழுமை ஆகாதிருக்கலாம். 306 00:28:36,708 --> 00:28:38,041 இன்னும் வேண்டும். 307 00:28:39,250 --> 00:28:40,791 அதுவும் உடனே. 308 00:28:41,541 --> 00:28:43,125 நான் எவ்வளவு வழங்கணும்? 309 00:28:43,208 --> 00:28:44,583 உங்களால் எதுவும் செய்ய... 310 00:28:44,666 --> 00:28:46,750 எது எவ்வளவு? 311 00:28:48,125 --> 00:28:51,000 உங்கள் சுரங்க நடவடிக்கைகளை விரிவாக்குகிறீர்கள் என அறிவேன் 312 00:28:52,583 --> 00:28:55,791 நாங்கள் நிலையான மர விநியோகம் செய்ய முடியும் 313 00:28:55,875 --> 00:28:59,541 தளங்கள், சுரங்க கம்பங்கள் கட்ட உதவ. 314 00:29:01,041 --> 00:29:04,208 அல்லது கஸாத் டூமுக்கு விருப்பமா... 315 00:29:05,875 --> 00:29:07,333 விலைமதிப்பற்ற ஏதேனும்? 316 00:29:10,958 --> 00:29:16,500 அப்பா, முதலில் இதை தனியாக விவாதிப்பது விவேகமில்லையா? 317 00:29:17,291 --> 00:29:18,750 விவாதிக்க ஏதுமில்லை. 318 00:29:20,333 --> 00:29:21,958 நான் ஏற்கனவே முடிவு செய்தாச்சு. 319 00:29:25,291 --> 00:29:26,291 அப்புறம்? 320 00:29:27,625 --> 00:29:29,000 இல்லையென்பதே பதில். 321 00:29:30,875 --> 00:29:34,750 கெலெப்ரிம்போர் பிரபுவிடம் என் வருத்தங்களை தெரிவியுங்கள். 322 00:29:44,250 --> 00:29:45,250 அரசர் ட்யுரின். 323 00:29:46,833 --> 00:29:48,750 இளவரசே. வருகிறேன். 324 00:30:00,333 --> 00:30:01,541 அவூலேவுக்கு நன்றி. 325 00:30:03,416 --> 00:30:07,583 ஒரு நொடி, உங்க மனநிலையயை இழந்துட்டீங்களோ என பயந்தேன். 326 00:30:09,000 --> 00:30:10,000 அதற்கு மாறாக. 327 00:30:15,833 --> 00:30:17,750 இதைவிட நல்ல மனநிலையில் இருந்ததில்லை. 328 00:30:18,416 --> 00:30:20,000 ஆனால் கவலை படாதே, மகனே. 329 00:30:21,875 --> 00:30:22,833 அவர்கள் திரும்புவர் 330 00:30:23,458 --> 00:30:24,458 திரும்புவரா? 331 00:30:26,458 --> 00:30:27,458 சொன்னது கேட்டிலே. 332 00:30:29,041 --> 00:30:30,791 மத்திய பூமி இல் போர் வருகிறது. 333 00:30:31,958 --> 00:30:37,041 மித்ரில் ஆயுதங்களையும் கவசங்களையும் ஏந்தும் படையை 334 00:30:37,125 --> 00:30:39,083 வெல்லவே முடியாது. 335 00:30:39,166 --> 00:30:41,125 நம் விலையை சொல்லலாம். 336 00:30:42,375 --> 00:30:43,750 உங்களுக்கு பைத்தியமா? 337 00:30:44,833 --> 00:30:47,375 முழு உலகமே பைத்தியமானது, மகனே. 338 00:30:49,833 --> 00:30:53,833 ஆனால் அதன் கட்டுப்பாட்டை எடுப்பது நம் கைகளில் உள்ளது. 339 00:30:55,166 --> 00:30:59,750 தன் பணிக்குழுக்களை இரட்டிக்க நார்வியிடம் சொல். நாம் தோண்டுவதை விரிவாக்கறோம். 340 00:31:00,583 --> 00:31:01,583 அப்பா. 341 00:31:03,833 --> 00:31:05,166 மோதிரம், அதை கழற்றுங்கள். 342 00:31:06,166 --> 00:31:07,375 மாட்டேன். 343 00:31:10,208 --> 00:31:11,291 அது என்னுடையது. 344 00:31:13,000 --> 00:31:14,125 எனக்கு சொந்தமானது. 345 00:31:15,375 --> 00:31:16,375 மாட்டேன். 346 00:31:18,083 --> 00:31:19,916 நீங்கள் அதற்கு சொந்தம். 347 00:31:22,125 --> 00:31:26,708 வேறு மாதிரியாக இருந்தால், தயவுசெய்து, நிரூபித்து காட்டுங்கள். 348 00:31:31,416 --> 00:31:32,583 அதை கழற்றுங்கள். 349 00:31:42,666 --> 00:31:46,291 உன்னிடம் நான் எதுவும் நிரூபிக்க அவசியமில்லை, பையா. 350 00:32:07,291 --> 00:32:09,500 அப்போது அவர் நமக்கு வேறு வழி விடவில்லை. 351 00:32:11,000 --> 00:32:14,500 தேவைப்பட்டால் அந்த சுரங்கத்திற்கு முன்பு படுத்துக் கொள்வோம். 352 00:32:16,125 --> 00:32:18,208 முழு படையையும் நமக்கெதிராக அழைப்பார். 353 00:32:18,708 --> 00:32:20,000 செய்யட்டும்! 354 00:32:20,541 --> 00:32:24,333 தன் மகன்மீது படையை ஏவுமளவு அம்மோதிரத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், 355 00:32:24,416 --> 00:32:28,375 கஸாத் டூமில் ஒவ்வொரு ட்வார்ஃபுக்கும் தெரியும், அவர் ஆளத் தகுதியற்றவர் என. 356 00:32:28,458 --> 00:32:29,625 கிரீடத்தை பறிப்பார்கள். 357 00:32:32,791 --> 00:32:35,083 எப்படி அவரைப்பற்றி இப்படி பேச முடியும்? 358 00:32:36,250 --> 00:32:37,500 ட்யுரின். 359 00:32:37,583 --> 00:32:39,833 அவரை அவமானப்படுத்துவது பற்றி பேசுகிறாய். 360 00:32:41,208 --> 00:32:42,541 அவரை அழிப்பது பற்றி. 361 00:32:42,625 --> 00:32:46,541 உன் அளவு நானும் அவரை நேசிக்கிறேன். 362 00:32:47,125 --> 00:32:50,875 அவூலேக்கு தெரியும், என் தந்தையை விட இருமடங்கு அவர் சிறந்தவர். 363 00:32:52,208 --> 00:32:55,333 ஆனால் அந்த அரியணையிலுள்ள ட்வார்ஃப் உன் தந்தை இல்லை. 364 00:32:55,958 --> 00:33:00,875 அவர் அந்த மோதிரத்தை அணிந்திருக்கும்வரை, மற்ற குரல்கள் கேட்காது, நமதும்கூட. 365 00:33:00,958 --> 00:33:03,666 இந்த மலையிலுள்ள ஒவ்வொரு ட்வார்ஃபுக்கும் ஆபத்து! 366 00:33:05,125 --> 00:33:06,208 ட்யுரின்! 367 00:33:08,000 --> 00:33:09,083 ட்யுரின்? 368 00:33:13,083 --> 00:33:14,833 ட்யுரின், நீ... 369 00:33:15,333 --> 00:33:17,000 என்னால் செய்ய முடியாது. 370 00:33:18,791 --> 00:33:20,958 என்னால் அதை செய்ய முடியாது, டீஸா. 371 00:33:24,250 --> 00:33:28,583 அவரை பார்க்கிறேன், அவரின் கண்களில், நான்... 372 00:33:32,583 --> 00:33:34,250 என் தந்தையை இன்னும் பார்க்கிறேன். 373 00:33:36,833 --> 00:33:40,500 தொலைந்து, தொலைவில், ஆம், ஆனால் அவர் இன்னும் உள்ளே இருக்கிறார். 374 00:33:44,375 --> 00:33:48,250 எப்போதும் குகை முடிவில் ஒளியைப் பார்த்தாயே, அன்பே. 375 00:33:49,750 --> 00:33:50,750 வா. 376 00:33:56,666 --> 00:34:00,916 நாம் இப்போது செயல்படவில்லை எனில், அதை அடையவே மாட்டோம். 377 00:34:02,708 --> 00:34:06,958 தன்னையும் அழித்துக்கொண்டு, ராஜ்ஜியத்தையும் அழித்து விடுவார். 378 00:34:24,166 --> 00:34:29,750 விடியற்காலையில், நீ கடலில் தள்ளப்படுவாய், புயல் சோதனை எதிர்கொள்ள. 379 00:34:32,416 --> 00:34:34,583 நாம் பேசுகையில் கடல் புழு அழைக்கப்படுது. 380 00:34:38,583 --> 00:34:39,958 அர்-ஃபரஸான் இடம் பேசினேன். 381 00:34:40,875 --> 00:34:43,291 விசுவாசிகளை இன்னும் எதிர்க்க அவர் விரும்பலை. 382 00:34:44,166 --> 00:34:47,833 கருணை காட்ட அவர் இன்னும் தயார், நீ உறுதியளித்தால்... 383 00:34:47,916 --> 00:34:49,583 அவருக்கு விசுவாசம் காட்டினாலா? 384 00:34:53,333 --> 00:34:58,083 ஒருவனின் நேர்மையை கைவிடக் கேட்பது, கருணை என்றாகாது. 385 00:35:03,166 --> 00:35:06,958 இந்த குடும்பம் இழந்த அனைத்திற்கும் பிறகு, உன்னையும் இழக்க முடியாது. 386 00:35:08,791 --> 00:35:10,250 தயவு செய்து, அப்பா. 387 00:35:13,791 --> 00:35:14,958 தயவு செய்து. 388 00:35:20,750 --> 00:35:22,458 பெருமையை விடுங்கள். 389 00:35:24,791 --> 00:35:27,750 இது எல்லாத்திற்கும் பிறகு, நீ காண்பது பெருமையெனில்... 390 00:35:33,625 --> 00:35:36,041 நாம் பேச எதுவுமே இல்லை. 391 00:35:48,916 --> 00:35:50,541 இப்படி சொல்வீர்களென்றார் அரசர். 392 00:35:52,666 --> 00:35:56,666 அவர் மீதான உங்கள் வெறுப்பு என் மீதான வெறுப்பானதாம், 393 00:35:58,083 --> 00:36:00,375 நிரந்தரமாக என் குரல் கேட்காது போனதாம். 394 00:36:03,333 --> 00:36:05,875 அதனால் அவர் முன்பு மண்டியிட்டு, 395 00:36:07,666 --> 00:36:08,916 கெஞ்சினேன், 396 00:36:09,000 --> 00:36:12,083 தலையை தரையிலிட்டு வணங்கி, அவளிடம் செல்லும் வாய்ப்புக்கு. 397 00:36:28,708 --> 00:36:30,208 நான் தவறில்லை என நம்புகிறேன். 398 00:36:31,916 --> 00:36:33,458 நீங்கள் இங்கிருக்க கூடாது. 399 00:36:33,541 --> 00:36:34,750 ஃபரஸானுக்கு தலை வணங்கு. 400 00:36:36,125 --> 00:36:37,375 கட்டளை இடுகிறேன். 401 00:36:38,708 --> 00:36:41,583 நியூமெனார் நீடிக்க வேண்டுமெனில், உன் போல மனிதர்கள் தேவை. 402 00:36:42,750 --> 00:36:46,000 விலைமதிப்பற்ற அனைத்திற்காகவும் போராடுவோர். விசுவாசமானோர். 403 00:36:47,291 --> 00:36:50,125 விசுவாசத்தை வாழவில்லை எனில் அது விசுவாசமே இல்லை. 404 00:36:52,083 --> 00:36:56,666 என் மனதில், நீங்கள்தான் இந்த ராஜ்ஜியத்தின் உண்மை வாரிசு என தெரியும். 405 00:36:58,166 --> 00:37:00,000 அந்த விஷயத்தை மறுக்க முடியாது. 406 00:37:01,291 --> 00:37:04,375 செய்தால், நீங்கள் காப்பாற்ற விரும்பும் மனிதாக இருக்க மாட்டேன். 407 00:37:04,458 --> 00:37:05,791 நீ தவறாக இருந்தால்? 408 00:37:07,291 --> 00:37:09,833 அப்போது முழு மனதோடு இறந்து போவேன், 409 00:37:09,916 --> 00:37:12,000 கோழைத்தனமான இதயத்தோடு வாழ்வதை விட. 410 00:37:15,375 --> 00:37:16,958 என் இதயம் என்னாகும்? 411 00:37:24,125 --> 00:37:28,875 நான் உயிர் பிழைக்க வேண்டும் என்பது வேலார் உடைய விருப்பமாக இருந்தால்... 412 00:37:32,166 --> 00:37:33,583 அப்போது உயிர் பிழைகும். 413 00:37:39,125 --> 00:37:40,541 அப்படி இல்லையெனில்? 414 00:37:50,916 --> 00:37:53,125 "கடல் நியாயமானது." 415 00:38:16,583 --> 00:38:17,583 படி! 416 00:38:28,166 --> 00:38:29,250 டீஸா? 417 00:38:37,875 --> 00:38:41,250 டீஸா, நாங்கள் அரசர் கட்டளையின் பேரில் வந்தோம். 418 00:38:41,333 --> 00:38:42,541 அதனால், தயவுசெய்து நகரு, 419 00:38:43,458 --> 00:38:46,625 இல்லையேல், உன்னை நகர்த்துவதை தவிர வேறு வழியில்லை. 420 00:38:52,833 --> 00:38:53,916 மன்னிச்சிடு. 421 00:39:09,916 --> 00:39:12,166 அது எங்களை பயமுறுத்தி இருக்கணுமா? 422 00:39:13,875 --> 00:39:14,875 இல்லை. 423 00:39:16,041 --> 00:39:17,125 அவை பயப்பட. 424 00:39:47,666 --> 00:39:49,208 உன்னை நேசிக்கிறேன். 425 00:39:50,333 --> 00:39:51,625 என்னை பிறகு நேசி. 426 00:39:54,666 --> 00:39:56,166 இது தொடக்கம்தான். 427 00:39:57,041 --> 00:39:59,916 அவர்கள் திரும்புவர். இன்னும் நிறைய பேர் வருவார்கள். 428 00:40:02,333 --> 00:40:03,666 அப்போது, தயாராக இருப்போம். 429 00:40:35,666 --> 00:40:41,250 பூமிக்குறிய அதிகாரத்தை கைவிட்டு, வேலாரின் தீர்ப்பை ஏற்கிறாயா? 430 00:40:46,500 --> 00:40:48,250 அவர்கள் தீர்ப்பை ஏற்கிறேன். 431 00:40:50,291 --> 00:40:51,458 அவனை உள்ளை வீசுங்கள். 432 00:41:15,125 --> 00:41:16,333 விடுவியுங்கள்! 433 00:41:20,791 --> 00:41:23,375 அவரது குற்றம் என் பெயரால் செய்யப்பட்டதென்பதால், 434 00:41:25,333 --> 00:41:28,541 அவர் இடத்தில் வேலாரின் தீர்ப்பை சந்திக்கும் உரிமை எனது. 435 00:41:33,500 --> 00:41:36,833 -அவனாக இருக்க வேண்டும். பிடியுங்கள். -இல்லை, இல்லை, இல்லை! 436 00:41:38,125 --> 00:41:39,125 மகாராணி? 437 00:41:41,916 --> 00:41:44,750 அவள் சரிதான். எல்லாம் அங்கிருக்கு. நீங்கள் செய்யணும். 438 00:41:45,666 --> 00:41:46,750 இது உண்மையா? 439 00:41:48,125 --> 00:41:49,625 சட்டப்படி, ஆமாம். 440 00:41:51,666 --> 00:41:52,916 அப்படியே ஆகட்டும். 441 00:41:55,083 --> 00:41:56,833 இல்லை, என்னை கூட்டிப் போங்கள். 442 00:41:57,833 --> 00:41:59,208 என்னை கூட்டிப் போங்கள். 443 00:42:01,000 --> 00:42:02,625 மிரியெல், நீங்க... கூடாது... 444 00:42:02,708 --> 00:42:05,541 நாம் விசுவாசிகளை பாதையில் நடக்க வேண்டுமெனில், 445 00:42:07,375 --> 00:42:09,791 நான்தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். 446 00:43:06,750 --> 00:43:09,416 -வந்து விட்டது! பாருங்கள்! -அடிவானமருகே. 447 00:43:09,500 --> 00:43:10,708 ஆமாம், இப்போது வருகிறது. 448 00:44:31,875 --> 00:44:34,666 வேலார் அவளை கருதியுள்ளனர்... 449 00:44:42,750 --> 00:44:44,250 -அதோ அவள்! -நிரபராதி! 450 00:44:46,208 --> 00:44:47,208 என் ராணி. 451 00:44:54,333 --> 00:45:00,083 டார் மிரியல், கடலின் அரசிக்கு வணக்கம்! 452 00:45:00,166 --> 00:45:05,333 ராணி மிரியெல் வாழ்க! ராணி மிரியெல் வாழ்க! 453 00:45:05,416 --> 00:45:09,208 ராணி மிரியெல் வாழ்க! ராணி மிரியெல் வாழ்க! 454 00:45:09,291 --> 00:45:12,666 -ராணி மிரியெல் வாழ்க. -கடலின் அரசி வாழ்க. 455 00:45:13,625 --> 00:45:15,541 ராணி மிரியெல் வாழ்க. 456 00:45:52,791 --> 00:45:55,541 ஆமாம். ஹால்ப்ராண்ட் தான் சௌரான். 457 00:45:55,625 --> 00:45:59,333 எரேகியானில் மோதிரங்கள் செய்ய இருக்கிறான், என் இனம்மீது ஆதிக்கம் செலுத்த. 458 00:46:00,208 --> 00:46:02,625 -உன் இனமும். -மத்திய பூமியில் ஒவ்வொரு இனமும். 459 00:46:02,708 --> 00:46:05,375 ஆனால் பணி முடிவடையும் வரை தப்பிக்க முயல மாட்டான். 460 00:46:06,583 --> 00:46:10,458 அது நமக்கு கண நேர நன்மையைத் தருகிறது. 461 00:46:11,083 --> 00:46:12,000 நமக்கா? 462 00:46:15,250 --> 00:46:16,333 என்னை திறந்து விடு. 463 00:46:37,875 --> 00:46:43,458 நாம் பேசுகையில், எல்ராண்ட் லிண்டானினின்று எல்வ்ஸ் படையுடன் வேகமாக கிளம்புகிறான். 464 00:46:46,083 --> 00:46:49,416 மற்றும் நென்யா, என் மோதிரம். 465 00:46:51,666 --> 00:46:52,666 அப்படியா. 466 00:46:53,250 --> 00:46:56,833 அவன் வந்ததும், அவன் நகரத்தை அடைத்து விடுவான், 467 00:46:56,916 --> 00:47:00,333 கெலெப்ரிம்போரை சௌரானின் பிடியிலிருந்து விடுவித்து, பின் சேர்ந்து, 468 00:47:01,583 --> 00:47:02,500 உரூக், 469 00:47:04,625 --> 00:47:08,083 நீயும் நானும் உலகிலிருந்து சௌரானின் தடயங்களை அழிப்போம். 470 00:47:09,000 --> 00:47:10,375 திரும்பாதிருக்க. 471 00:47:11,083 --> 00:47:12,291 அதன் பிறகென்ன? 472 00:47:13,083 --> 00:47:15,833 அவன் ஸ்பரிசமறிந்த மோதிரங்கள் அழிக்கப்பட வேண்டும். 473 00:47:16,333 --> 00:47:18,625 அதாவது, உரூக்கிற்கு என்ன? 474 00:47:20,208 --> 00:47:23,250 உங்கள் அரசர் எங்களை அமைதியாக வீடு திரும்ப அனுமதிப்பாரா? 475 00:47:24,500 --> 00:47:27,500 அல்லது மோர்டார் மீது படையெடுக்கும் திட்டத்தை தொடருவாரா? 476 00:47:29,375 --> 00:47:33,625 இருள் உங்களை மட்டுமல்லாமல் எல்வன் ராஜ்ஜியத்தையே வென்றுள்ளது. 477 00:47:34,250 --> 00:47:35,250 கடைசியில், 478 00:47:35,333 --> 00:47:39,708 உன் நல்லொழுக்கத்தை நிரூபிக்கும் பிரயத்தனம், சௌரானிற்கு வசதியாகிவிடும். 479 00:47:40,875 --> 00:47:42,291 நீ பொய் சொல்கிறாய். 480 00:47:43,291 --> 00:47:45,083 ஏதோ வெளிப்படுத்துவேன் என நம்பி. 481 00:47:45,750 --> 00:47:47,791 நீ ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டாய் 482 00:47:47,875 --> 00:47:52,000 நீ செய்வாயென நான் நம்பியதையும், அதைவிட அதிகமாகவும். 483 00:48:04,208 --> 00:48:05,458 சரி, சரி. 484 00:48:07,333 --> 00:48:08,750 நேரமாகி விட்டது! 485 00:48:11,333 --> 00:48:14,541 எரேகியான் முழுதுமே இப்போது சௌரான் கட்டுப்பாட்டில் இருக்கும். 486 00:48:16,125 --> 00:48:19,833 உன் பிள்ளைகளின் படைக்கு மேல் தேவைப்படும் அதற்கு முற்றுகை இட. 487 00:48:19,916 --> 00:48:23,958 நான் சௌரானின் சக்திக்கு சவால் விடுவேனென நினைத்தாயா 488 00:48:24,041 --> 00:48:25,583 ஒரு ஒற்றைப் படையுடன்? 489 00:48:45,541 --> 00:48:48,708 சந்தேகமில்லாமல் அவன் யாரென நீ உறுதி செய்தாய், 490 00:48:49,708 --> 00:48:51,708 யார் உன் மோதிரத்தை அணிந்தாரென சொன்னாய், 491 00:48:53,416 --> 00:48:55,125 எரேகியான் வீழும். 492 00:48:56,250 --> 00:48:57,750 அதனுடன் சௌரானும். 493 00:48:58,916 --> 00:48:59,916 இல்லை. 494 00:49:02,833 --> 00:49:04,583 இதுதான் அவனுக்கு தேவையாக இருக்கும். 495 00:49:07,166 --> 00:49:09,291 சௌரானுக்கு சொந்த படை இல்லை, 496 00:49:10,666 --> 00:49:12,875 அதனால் உன் படையை இங்கே ஈர்த்துள்ளான். 497 00:49:14,916 --> 00:49:17,041 நீ எரேகியானை தாக்க அவன் விரும்புகிறான். 498 00:49:17,125 --> 00:49:19,666 அவளை கட்டுங்கள். பிறகு பயனுள்ளவளாக இருப்பாள். 499 00:49:20,750 --> 00:49:24,166 -கெஞ்சி கேட்கிறேன். முட்டாளாக இருக்காதே. -கீழே இறங்கு. 500 00:49:24,250 --> 00:49:26,500 இதை செய்யாதே. அவன் ஈர்ப்புக்கு மயங்காதே. 501 00:49:26,583 --> 00:49:28,166 அவனை மூச்சு திணற செய்வேன். 502 00:49:29,000 --> 00:49:30,000 இல்லை! 503 00:49:31,041 --> 00:49:34,083 நீ செய்யக் கூடாது. இதெல்லாம் அவனது திட்டம்! 504 00:49:35,083 --> 00:49:36,666 இதையே சௌரான் விரும்புகிறான்! 505 00:49:37,500 --> 00:49:39,000 இதுதான் அவனுக்கு தேவை! 506 00:49:39,791 --> 00:49:41,416 இந்த வழி. வா. 507 00:50:12,875 --> 00:50:14,875 தள்ளு! நகரு! 508 00:50:16,416 --> 00:50:17,458 பலமாக! 509 00:50:28,875 --> 00:50:30,125 மணிகளை அடியுங்கள். 510 00:50:31,166 --> 00:50:32,375 தாக்குதலில் உள்ளோம்! 511 00:50:33,166 --> 00:50:36,000 வாயில்களை மூடுங்கள்! பாலத்தை உயர்த்துங்கள்! 512 00:51:18,250 --> 00:51:19,708 எப்படி உன் முன்னேற்றம்? 513 00:51:21,500 --> 00:51:22,833 அது உனக்கு கேட்கலையா? 514 00:51:23,833 --> 00:51:26,500 வெளியே. முற்றுகை மணி போல் ஒலித்தது. 515 00:51:27,291 --> 00:51:30,208 உறுதியளிக்கிறேன், நகர விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. 516 00:51:31,958 --> 00:51:33,791 அதை நானே தீர்மானிக்கிறேன். 517 00:51:36,333 --> 00:51:37,833 நீ இங்கிருக்க வேண்டும், நண்பா. 518 00:51:39,125 --> 00:51:41,833 நான் எங்கிருக்க வேண்டும் என நீ சொன்னது போதும்! 519 00:51:51,625 --> 00:51:54,291 என்னை போக விடு, நண்பா. 520 00:52:00,166 --> 00:52:01,958 கோபுரத்திலிருந்து இப்போது போ, 521 00:52:02,041 --> 00:52:04,375 மத்திய பூமி மனிதர்கள் வீழும் போது, உறுதியாக, 522 00:52:04,458 --> 00:52:06,833 பார்த்த அல்லது காணா உலகின் ஒவ்வொரு ஆன்மாவும் 523 00:52:06,916 --> 00:52:10,166 தெரிந்து கொள்வர், நீ தான் அவர்கள் மரணத்திற்கு காரணமென. 524 00:52:10,250 --> 00:52:12,166 இன்னும் ஒன்பது மோதிரங்கள் செய்யணும்! 525 00:52:36,666 --> 00:52:37,791 சிறந்த குதிரை. 526 00:53:07,708 --> 00:53:10,333 -நிச்சயமாக. -இது குதிரைதான். 527 00:53:13,291 --> 00:53:14,625 பல நூற்றாண்டுகளாக, 528 00:53:16,125 --> 00:53:18,833 சக்தி வாய்ந்த பொருட்களை செய்ய முயன்றேன். 529 00:53:21,208 --> 00:53:22,166 ஆனால் தோற்றேன். 530 00:53:22,791 --> 00:53:24,125 அதன் உண்மை என்னவெனில், 531 00:53:25,208 --> 00:53:28,208 நான் எரேகியான் வந்தது வேலாருக்கு நீ தேவை என்பதால் அல்ல, 532 00:53:30,541 --> 00:53:31,708 ஆனால் எனக்கு தேவை. 533 00:53:33,666 --> 00:53:34,666 நான்... 534 00:53:41,750 --> 00:53:44,000 என்னால் இனி மோதிரங்களை செய்ய முடியாது. 535 00:53:47,791 --> 00:53:49,583 மித்ரில் இல்லாமல், நான்... 536 00:53:52,375 --> 00:53:53,625 நிதானித்திடு. 537 00:53:55,125 --> 00:53:56,750 நான் கஸாத் டூமிற்கு போனேன். 538 00:54:01,375 --> 00:54:02,791 மித்ரில் தாது. 539 00:54:04,583 --> 00:54:07,125 நார்வியே அதை தூளாக சுத்திகரித்தார். 540 00:54:09,166 --> 00:54:11,250 சுரங்கத்தில் கிடைத்த தூய தாதுவிலிருந்து. 541 00:54:11,333 --> 00:54:13,666 ஒவ்வொரு மோதிரத்திற்கும் ஒன்பதில் ஒரு பங்கு. 542 00:54:15,041 --> 00:54:16,375 போதுமானதாக இருக்கும். 543 00:54:19,916 --> 00:54:22,291 இப்போது நெருங்கிட்டோம், கெலெப்ரிம்போர். 544 00:54:24,166 --> 00:54:26,375 செய்ய நினைத்த விஷயத்தை அடைய மிக அருகில். 545 00:54:28,125 --> 00:54:31,500 நான் சத்தியம் செய்கிறேன், என் அழியாத உயிர் மீது, 546 00:54:32,250 --> 00:54:35,916 இந்த யுகத்தின் வரலாறு எழுதப்படும் போது, சில்மரில்ஸ், 547 00:54:37,458 --> 00:54:38,458 அது... 548 00:54:42,375 --> 00:54:44,750 அவை வரலாற்றில் பெருசாக எழுதப்படாது. 549 00:54:47,458 --> 00:54:49,166 ஆனால் உன் மோதிரங்கள், 550 00:54:51,166 --> 00:54:52,750 சக்தி மோதிரங்கள், 551 00:54:54,791 --> 00:55:00,500 மத்திய பூமியில் அவைதான் சிறந்த உருவாக்கங்களாக கருதப்படும். 552 00:55:01,750 --> 00:55:02,958 ஆமாம். 553 00:55:03,041 --> 00:55:07,375 இப்போது கைவிடாதே, நீ வெற்றியை அடையப் போகும் இந்த தருணத்தில். 554 00:55:12,541 --> 00:55:15,291 அதை உபயோகி, நண்பா. 555 00:55:17,416 --> 00:55:18,416 அருமையான ஃபியனோர். 556 00:55:20,458 --> 00:55:21,458 நீயும் அருமை.. 557 00:55:26,333 --> 00:55:31,375 கடைசியாக ஒரு முறை. 558 00:55:59,166 --> 00:56:01,041 ஒரு கவிதை எழுதினேன், ஆனால் உன் அழகு 559 00:56:01,125 --> 00:56:03,958 நான் எழுதக்கூடிய எதையும் மறைக்குமென பயம். 560 00:56:22,500 --> 00:56:23,583 வாங்க, குழந்தைகளே! 561 00:57:30,500 --> 00:57:31,750 ஆமாம்! 562 00:57:36,166 --> 00:57:40,083 அங்கே நகருங்கள். ஆகட்டும்! ஆகட்டும்! 563 00:57:57,416 --> 00:57:58,416 விடுவியுங்கள்! 564 01:00:13,541 --> 01:00:15,541 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 565 01:00:15,625 --> 01:00:17,625 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்