1 00:00:00,041 --> 00:00:01,375 {\an8}முன்னதாக 2 00:00:03,208 --> 00:00:04,333 உன் பெயர் என்ன? 3 00:00:04,416 --> 00:00:05,625 கெலெபார்ன். 4 00:00:07,125 --> 00:00:11,500 என் கணவருக்கு உன் பித்தலாட்டம் தெரியாமல் போகலாம். நான் நம்பமாட்டேன். 5 00:00:11,583 --> 00:00:13,375 உண்மையில் இங்கு என்ன செய்கிறாய்? 6 00:00:13,458 --> 00:00:16,666 என் பழைய காதலைப் பார்க்க வரும் ஒரு காரணம் போதாதா? 7 00:00:16,750 --> 00:00:17,583 அம்மா? 8 00:00:18,250 --> 00:00:22,833 வாக்குத் தவறியவர்களை இருள் அரசன் சகித்துக் கொள்ள மாட்டார். 9 00:00:22,916 --> 00:00:25,625 வலை விரித்து விட்டேன், ட்யுரின் விழுந்தால் போதும். 10 00:00:30,541 --> 00:00:32,250 - இவனை இழுத்து செல்லுங்கள்! - தந்தையே! 11 00:00:35,416 --> 00:00:37,333 அவர்களெல்லாம் இறந்ததாக சௌரான் நினைக்குறான், 12 00:00:37,416 --> 00:00:39,958 - யாரது? - மைதாலே என்று பெயர். 13 00:00:41,375 --> 00:00:43,333 எல்வென் கொல்லர்களில் எஞ்சியிருப்பவள். 14 00:00:43,416 --> 00:00:45,291 என்னோடு வா, எல்ஃப் பெண்ணே. 15 00:00:45,375 --> 00:00:50,875 நீயும் நானும் ஒன்றிணைந்து மோதிரத்தை சௌரான் உருவாக்காமல் பார்த்துக் கொள்வோம். 16 00:00:50,958 --> 00:00:52,583 அவர்களை வடக்கே அழைத்து செல்கிறான். 17 00:00:52,666 --> 00:00:55,958 எரேகியான் வீழ்ந்த பின் ஒரு எல்வென் கொல்லன் தப்பிப் பிழைத்திருப்பதாகத் தெரிகிறது. 18 00:00:56,041 --> 00:00:58,000 எல்ஃப்களுக்கு முன்பாக அவளை நாம் அடைய வேண்டும். 19 00:01:11,291 --> 00:01:14,750 அந்த மிருகத்துக்குக் கடிவாளமிட முடியாது, பிரபு. 20 00:01:14,833 --> 00:01:16,916 ஆனால், சில குதிரைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். 21 00:01:17,000 --> 00:01:21,166 சில வாரங்களில் உங்களை குண்டபேடில் கொண்டுபோய் விட்டுவிடும். 22 00:01:21,833 --> 00:01:23,625 அதிகபட்சம், ஒரு மாதம். 23 00:01:33,666 --> 00:01:35,666 அவை ஒரு காலத்தில் கழுகுகளாக இருந்தன. 24 00:01:39,541 --> 00:01:42,958 மோர்காத் தொட்டு அவற்றுக்கு அருளும் வரை. 25 00:01:45,000 --> 00:01:47,041 தன் சாட்டையடிக்கு ஏங்கும்படி, 26 00:01:50,333 --> 00:01:53,916 கெட்டுப்போன இறைச்சியை உண்டு மட்டுமே உயிர்வாழ அவற்றைப் பழக்கினான். 27 00:01:54,000 --> 00:01:55,666 அதற்கு அழுகிய இறைச்சியைத் தருகிறோம். 28 00:02:04,500 --> 00:02:06,166 அங்குதான் தவறு செய்கிறாய். 29 00:02:08,666 --> 00:02:14,041 அத்தகைய கொடிய மிருகங்கள் உயிருள்ள சதையை மட்டுமே உண்ணும். 30 00:02:32,208 --> 00:02:33,416 அதற்குச் சேணமிடு. 31 00:03:35,791 --> 00:03:37,208 கதவைத் திறங்கள்! 32 00:03:39,750 --> 00:03:44,000 புதிய கைதிகளை நாங்கள்... எதிர்பார்க்கவில்லை. 33 00:03:44,083 --> 00:03:45,916 இவர்கள் உனக்குத் தேவைப்படுவார்கள். 34 00:03:47,500 --> 00:03:48,791 என்னை நம்பு. 35 00:04:12,833 --> 00:04:14,708 எதற்குக் காத்திருக்கிறாய்? 36 00:04:14,791 --> 00:04:16,000 அதை நகர்த்து! 37 00:04:29,125 --> 00:04:30,708 பெயரும் பதவியும் சொல். 38 00:04:30,791 --> 00:04:32,166 மார்னூக். 39 00:04:33,666 --> 00:04:35,000 ஜெனரெல். 40 00:04:36,041 --> 00:04:39,000 73வது படைப்பிரிவின் கமாண்டர். 41 00:04:40,166 --> 00:04:41,333 ஜெனரெலா? 42 00:04:42,083 --> 00:04:45,625 உன்போல் உயர் பதவியில் இருப்பவனுக்கு இத்தனை தொலைவிலுள்ள குண்டபேடில் என்ன வேலை? 43 00:04:46,375 --> 00:04:49,375 மதிப்புக்குரிய விருந்தினர்கள் வருவதாக செய்தி ஏதும் எங்களுக்கு வரவில்லை. 44 00:04:49,458 --> 00:04:51,083 எதுவும் அனுப்பப்படவில்லை. 45 00:04:53,916 --> 00:04:56,000 நான் தனியாகச் செயல்படுகிறேன். 46 00:04:58,916 --> 00:05:01,208 அழகிய பரிசைக் கண்டடைந்தேன். 47 00:05:04,875 --> 00:05:07,333 இது சௌரான் பிரபுக்குரியது! 48 00:05:09,250 --> 00:05:11,625 என் பங்கைச் சரியாகச் செய்திருந்தால், 49 00:05:12,708 --> 00:05:16,500 அவர் இப்போது வந்து கொண்டிருப்பார்! 50 00:05:20,166 --> 00:05:22,375 இவளை நாம் சேர்ந்தே அவரிடம் ஒப்படைப்போம். 51 00:05:24,375 --> 00:05:30,291 நம் எஞ்சிய காலத்தை, செழிப்பான வீட்டில் பன்றிகளைப் போல வாழ்ந்து கழிப்போம். 52 00:05:31,041 --> 00:05:31,875 புரிந்ததா? 53 00:05:31,958 --> 00:05:33,333 ஆம்! 54 00:05:34,208 --> 00:05:36,000 துரோகக் கழிசடையே! 55 00:05:38,875 --> 00:05:40,166 அவளைக் கீழே கொண்டு செல்லுங்கள்! 56 00:05:40,250 --> 00:05:42,583 - என்னைத் தொடாதே! - வேண்டாம்! அவளைப் போக விடு! 57 00:05:43,416 --> 00:05:44,291 அரோண்டீர்! 58 00:05:44,375 --> 00:05:46,083 உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி, சீமாட்டி. 59 00:05:46,166 --> 00:05:48,375 வேண்டாம்! அவளைப் போக விடு! 60 00:05:49,583 --> 00:05:51,000 கலாட்ரியல்! 61 00:05:54,458 --> 00:05:56,250 இவனை என்ன செய்ய? 62 00:05:57,166 --> 00:06:01,583 இவனை நாம்... சித்திரவதைக் கூண்டில் வைத்தால் என்ன? 63 00:06:01,666 --> 00:06:02,875 ஆம்! 64 00:06:03,875 --> 00:06:06,875 ரிவெண்டெலின் தற்காப்புகளைப் பற்றி 65 00:06:08,458 --> 00:06:10,958 இதமாகப் பேசி மகிழுங்கள். 66 00:06:11,750 --> 00:06:13,833 இந்த வழி, ஜெனரெல். 67 00:06:16,125 --> 00:06:17,166 இல்லை. 68 00:07:23,083 --> 00:07:26,416 ஜே. ஆர். ஆர். டோல்கியனின் 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' & பிற்சேர்க்கைககளை தழுவியது 69 00:07:30,166 --> 00:07:37,166 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் தி ரிங்ஸ் ஆஃப் பவர் 70 00:07:52,916 --> 00:07:55,916 இவ்வளவு காலமும், போரிலிருந்து விலகி இருந்துவிட்டோம்... 71 00:07:56,500 --> 00:08:00,333 - இப்போது இருள் அரசனை பகைத்துக் கொண்டோம். - ஆம்! 72 00:08:00,416 --> 00:08:02,791 எல்ஃப்களுக்கு நீ உதவ விரும்பியதால், 73 00:08:02,875 --> 00:08:05,583 எத்தனை ட்வார்ஃப்கள் சாகப் போகின்றனர்? 74 00:08:05,666 --> 00:08:07,416 சௌரானுக்கு உதவியிருக்க வேண்டுமென்கிறாயா? 75 00:08:07,500 --> 00:08:10,375 அந்த ஆர்க்கை பார்த்த இடத்திலேயே நீ விட்டு வந்திருக்க வேண்டுமென்கிறோம்! 76 00:08:10,458 --> 00:08:11,291 - ஆம்! - ஆம்! 77 00:08:11,375 --> 00:08:14,500 மோர்டாரிலிருந்து நம் எல்லைகள் ஒவ்வொன்றையும் நோக்கி 78 00:08:14,583 --> 00:08:16,666 படைகள் திரண்டு வருவதாகச் செய்தி வந்துள்ளது. 79 00:08:16,750 --> 00:08:20,333 இப்போது, மோதிரங்கள் மீது வெறும் விருப்பம் மட்டுமல்ல. அவை எங்களுக்குத் தேவையும்கூட. 80 00:08:20,416 --> 00:08:21,583 - ஆம்! - ஆம்! 81 00:08:21,666 --> 00:08:22,708 மோதிரங்கள் கிடையாது. 82 00:08:23,708 --> 00:08:25,458 இப்போதுமில்லை. எப்போதுமில்லை. 83 00:08:26,416 --> 00:08:27,750 த்ரேயின், அவர்களுக்குச் சொல். 84 00:08:29,083 --> 00:08:31,083 இந்த விஷயத்தில் நான் பிரபுக்களின் தரப்புதான். 85 00:08:33,833 --> 00:08:35,208 சொல்வதைக் கேள், சகோதரா. 86 00:08:35,958 --> 00:08:39,166 சௌரானின் சக்தியோடு பொருந்தும் ஒரு சக்தியைப் பற்றிப் பேசுகிறோம். 87 00:08:39,791 --> 00:08:42,666 நீ எல்ஃப்களுக்கு உதவவும் உன் இனத்தைக் காக்கவும் விரும்புகிறாயா? 88 00:08:43,291 --> 00:08:45,291 அந்த மோதிரங்களே நம் சிறந்த நம்பிக்கை. 89 00:08:46,333 --> 00:08:48,583 அந்த மோதிரங்கள் என் தந்தையைப் பைத்தியம் பிடிக்கச் செய்தன. 90 00:08:52,375 --> 00:08:57,250 ஒரு மோதிரமே அவரை தன் மகனுக்கு எதிராகத் திருப்பப் போதுமானதாய் இருந்தது. 91 00:08:57,916 --> 00:09:01,500 உங்களுக்கு புரியவில்லையா? அதனால்தான் நாம் அவற்றை அணிவதை சௌரான் விரும்புகிறான். 92 00:09:02,291 --> 00:09:05,666 நம்மை ஒருவருக்கொருவர் எதிராகப் பிளவுபடுத்தவே. 93 00:09:06,250 --> 00:09:08,041 ஆனால் நாம் ட்வார்ஃப்கள். 94 00:09:09,708 --> 00:09:12,875 சௌரானை வீழ்த்த நமக்கு மோதிரங்கள் தேவையில்லை. 95 00:09:14,750 --> 00:09:17,000 நாம் யாரென்பதை நினைவுபடுத்திக் கொண்டாலே போதும். 96 00:09:24,875 --> 00:09:27,208 அந்த மோதிரத்தை அவர் எப்போது அணிந்தார்? 97 00:09:28,750 --> 00:09:29,833 நம் தந்தை? 98 00:09:32,041 --> 00:09:37,000 அது உன்னை தனது வாரிசாக அவர் அறிவித்ததற்கு 99 00:09:37,083 --> 00:09:39,041 முன்னதாகவா... அல்லது பின்பா...? 100 00:09:40,375 --> 00:09:41,958 அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 101 00:09:42,041 --> 00:09:43,708 நமது இராஜ்ஜியச் சட்டங்களின்படி, 102 00:09:43,791 --> 00:09:47,458 மனநிலை பிறழ்ந்த அரசன் பிறப்பித்த எந்த ஆணையும் 103 00:09:47,541 --> 00:09:48,875 இரத்து செய்யப்படும். 104 00:09:49,958 --> 00:09:51,083 அது உண்மையா? 105 00:09:51,958 --> 00:09:53,375 அது... 106 00:09:53,458 --> 00:09:56,208 - இதில் முக்கியமான விஷயம், நாம்... - நார்வி. 107 00:10:00,541 --> 00:10:02,500 அது சரிதான், பிரபு. ஆனால் நமக்கு... 108 00:10:02,583 --> 00:10:04,125 அவ்வாறெனில், திரும்பவும் கேட்கிறேன். 109 00:10:05,208 --> 00:10:10,833 நம் தந்தை உன்னை தன் வாரிசாக ஆக்கியபோது, மோதிரத்தை அவர் அணிந்திருந்தாரா, இல்லையா? 110 00:10:14,750 --> 00:10:15,583 ட்யுரின். 111 00:10:16,166 --> 00:10:18,333 அவர் துரும்பளவும் உனக்குக் கடமைப்பட்டவரில்லை. 112 00:10:19,375 --> 00:10:22,125 இந்த மலைக்கு உரிமையுள்ள அரசர், ட்யுரினே. 113 00:10:23,250 --> 00:10:24,666 ஆம். 114 00:10:25,416 --> 00:10:32,375 எனக்கு அதில் இப்போது உறுதியில்லை. 115 00:10:39,375 --> 00:10:41,583 நான் உன்னை மீண்டும் உள்ளே அனுமதித்திருக்கவே கூடாது. 116 00:10:41,666 --> 00:10:46,750 அவர் அந்த மோதிரத்தை அணிந்திருந்தாரா, இல்லையா? 117 00:10:57,291 --> 00:10:58,333 அவர் அணிந்திருந்தார். 118 00:11:01,333 --> 00:11:05,375 மன்னித்துவிடு, ட்யுரின். டீஸா, என்னை மன்னித்துவிடு. ஆனால் அவர் அணிந்திருந்தார். 119 00:11:08,375 --> 00:11:09,458 அவர் அணிந்திருந்தார். 120 00:11:09,541 --> 00:11:11,416 ஆனால், இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? 121 00:11:11,500 --> 00:11:12,833 இதன் அர்த்தம்... 122 00:11:14,125 --> 00:11:16,333 என் தந்தையின் வாரிசுரிமை சர்ச்சையில் உள்ளது. 123 00:11:17,583 --> 00:11:22,833 எனவே, இது அவூலேவின் விருப்பப்படி தீர்மானிக்கப்பட வேண்டும். 124 00:11:22,916 --> 00:11:25,041 அவூலேவின் விருப்பமா? எப்படி? 125 00:11:26,458 --> 00:11:28,250 ஒற்றைக்கு ஒற்றை போரிட்டு தீர்வு காண்பது. 126 00:11:40,708 --> 00:11:42,250 நாம் பதிலளிக்க வேண்டும், மன்னா. 127 00:11:42,958 --> 00:11:45,541 த்ரேயினின் சவால், இந்த இராஜ்ஜியம் முழுக்க 128 00:11:45,625 --> 00:11:47,500 மிக விரைவாகப் பரவி வருகிறது. 129 00:11:49,250 --> 00:11:50,583 அப்படியானால், வேறு வழியில்லை. 130 00:11:50,666 --> 00:11:54,791 இல்லை. அரியணைக்கே என்றாலும், உன்னால் அவனுடன் போரிட இயலாது, ட்யுரின். 131 00:11:54,875 --> 00:11:56,666 அந்த ஆபத்தை மேற்கொள்ளாதே. 132 00:11:56,750 --> 00:12:00,333 எந்த ட்வார்வென் அரசனும் சவாலை நிராகரித்ததில்லை, டீஸா. 133 00:12:01,000 --> 00:12:04,416 நான் த்ரேயினை எதிர்கொள்ளாவிட்டால், என்னைக் கோழை என்பார்கள். 134 00:12:04,500 --> 00:12:07,666 தவறுதலாக எனக்கு இந்த அரியணை கிடைத்ததென்பார்கள். 135 00:12:07,750 --> 00:12:09,333 அப்படி நினைத்தால், அது நியாயம்தான். 136 00:12:10,291 --> 00:12:12,416 பிறகு, நான் எப்படி சௌரானை எதிர்த்து நிற்பேன்? 137 00:12:12,500 --> 00:12:16,166 குகைக்களச் சண்டைகள், கை பலம் சோதித்தல், பாறை எறிதல்... 138 00:12:16,250 --> 00:12:19,541 த்ரேயினை நீ எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் இதேதான் நடக்கிறது. 139 00:12:20,291 --> 00:12:22,208 உன்னைச் சினமூட்ட ஒரு வழியைக் கண்டுபிடிப்பான், 140 00:12:22,291 --> 00:12:25,875 நீ கோபப்பட்டு யோசிக்காமல் செயல்படுவாய், முடிவில் அவன் வென்றுவிடுவான். 141 00:12:25,958 --> 00:12:27,791 டீஸா, நான் சண்டையிட மறுத்தால்... 142 00:12:30,041 --> 00:12:31,666 த்ரேயின் ஏற்கெனவே வென்றதாகிவிடும். 143 00:12:34,291 --> 00:12:37,333 மன்னா, உன் தோழனாக, 144 00:12:38,375 --> 00:12:41,416 நான் எப்போதும் உனக்குச் சேவை புரியவே விரும்புவேன். 145 00:12:41,500 --> 00:12:45,125 ஆனால், ஒரு டெல்வ் தலைவனாக, என் கடமை இந்த மலைக்குத்தான், 146 00:12:45,208 --> 00:12:46,625 எந்த ஒரு தனி அரசனுக்குமல்ல. 147 00:12:47,791 --> 00:12:50,083 த்ரேயினை நீ எதிர்கொண்டு, அதில் அவன் வென்றால்... 148 00:12:50,166 --> 00:12:53,000 அவன் வெல்லப் போவதில்லை. 149 00:12:57,125 --> 00:13:00,750 அவன் சினமூட்டினால் மூர்க்கமடையும் பழைய ட்வார்ஃப் அல்ல நான். 150 00:13:05,041 --> 00:13:08,666 அவன் என்ன சொன்னாலும் நான் சினம் கொள்ள மாட்டேன். 151 00:13:20,875 --> 00:13:21,958 நீ சொல்வது சரி. 152 00:13:23,916 --> 00:13:25,333 நீ பால்ரோக்கை எதிர்கொண்டாய். 153 00:13:27,916 --> 00:13:29,458 உன்னால் த்ரேயினைச் சமாளிக்க முடியும். 154 00:13:31,333 --> 00:13:32,750 நான் சமாளிப்பேன். 155 00:13:53,541 --> 00:13:55,041 இன்னொரு வெற்றி. 156 00:13:56,916 --> 00:13:59,083 இதை வெற்றி என்று அழைப்பதற்கு... 157 00:14:00,583 --> 00:14:04,375 இதற்கு நாம் தந்த விலையை நினைத்தால், இது ஏதோ ஏளனம் போலிருக்கிறது. 158 00:14:04,458 --> 00:14:07,833 எதைக் காக்க விலை தரப்பட்டதோ, அந்த விலையே அதைப் புனிதமாக்குகிறது. 159 00:14:08,708 --> 00:14:11,541 சௌரானின் விதியிலிருந்து விடுதலையான லிண்டான். 160 00:14:13,333 --> 00:14:15,166 ஆனால் எவ்வளவு காலத்திற்கு? 161 00:14:15,250 --> 00:14:16,333 இன்றைய தினத்திற்கு. 162 00:14:18,041 --> 00:14:19,875 நம்புவதற்கு அது ஒன்றே போதுமானது. 163 00:14:21,375 --> 00:14:23,208 எப்போதும் நம்பிக்கையை நம்பி வந்திருக்கிறேன். 164 00:14:24,833 --> 00:14:27,625 நமது வீரர்கள் இப்போது அதைத்தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள், 165 00:14:27,708 --> 00:14:31,666 விடியலுக்கான ஏதோ ஒரு இரகசிய வழி 166 00:14:31,750 --> 00:14:34,333 தங்கள் மன்னனுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையை. 167 00:14:35,708 --> 00:14:37,791 அவர்களுக்கு அதைத் தர, எதை வேண்டுமானாலும் தருவேன். 168 00:14:38,875 --> 00:14:41,583 ஆனால் நம்பிக்கையைத் தொலைத்துவிட்டு, நான் என்னதான் செய்வது? 169 00:14:41,666 --> 00:14:45,708 இந்த உலகில் உண்மையாகவே தொலைந்துபோகக் கூடிய விஷயங்கள் எதுவென்றால்... 170 00:14:47,250 --> 00:14:49,875 நாம் தேடலை நிறுத்திவிட்ட விஷயங்களேயாகும். 171 00:14:51,583 --> 00:14:54,333 கில்-கலாட் அரசரே. கிரிட்டான் குருவே. 172 00:14:55,750 --> 00:14:57,416 நீங்கள் ஒருவரைக் காண வேண்டும். 173 00:14:57,500 --> 00:15:00,541 இங்கு வருவதற்காக அவன் எதிரிப் படைகளைச் சுற்றிவர முயன்றிருக்க வேண்டும். 174 00:15:00,625 --> 00:15:03,000 பட்ட காயத்திற்கு ஈடாக எதிரிக்கும் கொடுத்திருக்கிறான். 175 00:15:03,083 --> 00:15:05,333 அவனைச் சுற்றிலும் பல ஆர்க்குகள் செத்துக் கிடந்தனர். 176 00:15:05,416 --> 00:15:06,833 நன்றி, வேலார். உயிரோடிருக்கிறான். 177 00:15:06,916 --> 00:15:09,958 ஈயாரெண்டிலின் மகனே, பேசு. இம்லாத்ரிஸிலிருந்து என்ன செய்தி? 178 00:15:11,041 --> 00:15:12,041 பதினாறு. 179 00:15:14,125 --> 00:15:15,875 நான் 16 ஆர்க்குகளுடன் போரிட்டேன். 180 00:15:20,458 --> 00:15:24,833 நாம் ஊகித்தது போலத்தான். சொல்லப்போனால் அதைவிடக் கொடூரமாக. 181 00:15:24,916 --> 00:15:26,208 எல்லோரும் தோற்றுவிடவில்லை. 182 00:15:26,833 --> 00:15:30,833 ரூனின் படையைக் காட்டிலும் பலம் பொருந்திய ஒரு படை இன்னமும் அங்கே உள்ளது. 183 00:15:32,708 --> 00:15:35,083 மனிதர்கள் மீதான உன் அவநம்பிக்கை நியாயமானதே. 184 00:15:35,166 --> 00:15:38,041 இவ்வுலகம் இதுவரை காணாத நன்மைக்கான சக்தியாக நியூமெனார் இருக்கக்கூடுமென்று 185 00:15:38,125 --> 00:15:41,708 நம்பியதால்தான், என் சகோதரன் அழியக்கூடிய வாழ்வைத் தேர்வு செய்தான். 186 00:15:41,791 --> 00:15:42,916 - எல்ராண்ட் ... - எல்ஃப்கள் 187 00:15:43,000 --> 00:15:45,833 மற்றும் மனிதர்களின் மேன்மை அடங்கிய ஒரே குலத்தைக் கொண்டதொரு இராஜ்ஜியம். 188 00:15:46,833 --> 00:15:48,541 நாம் நியூமெனாரிடம் உதவி கோர வேண்டும். 189 00:15:48,625 --> 00:15:49,875 ஏற்கெனவே கேட்டுவிட்டோம். 190 00:15:50,666 --> 00:15:52,875 ஃபரஸான் இதை அனுப்பியிருக்கிறான். 191 00:15:59,958 --> 00:16:02,250 "நியூமெனாருக்கென விவகாரங்கள் உள்ளதால் வருந்துகிறேன்." 192 00:16:06,333 --> 00:16:08,541 அவர் சொன்னதை அப்படியே நீங்கள் நம்பப் போவதில்லை, இல்லையா? 193 00:16:10,791 --> 00:16:12,875 போரில் இணையும்படி கெஞ்சாத குறையாகக் கேட்கிறார். 194 00:16:14,833 --> 00:16:18,166 கொடுக்கும் உணவை மறுத்து பிச்சையெடுக்கும் விநோதப் பிச்சைக்காரன். 195 00:16:18,250 --> 00:16:21,166 மனிதர்களுக்கு செருக்கு உண்டு, கிரிட்டான் குருவே. 196 00:16:21,250 --> 00:16:23,333 கீர்த்திக்கும் துதிக்குமான தாகம். 197 00:16:23,416 --> 00:16:25,791 ஒரு கடிதம் மட்டும் ஃபரஸானின் பசியைத் தணித்துவிடாது. 198 00:16:27,583 --> 00:16:28,666 இல்லை. 199 00:16:30,666 --> 00:16:33,250 நீங்கள் நியூமெனார் செல்ல வேண்டும், பேரரசே. 200 00:16:33,333 --> 00:16:34,875 அவரை நேரடியாகச் சந்தியுங்கள். 201 00:16:35,916 --> 00:16:37,250 அரசருக்கு அரசர். 202 00:16:37,333 --> 00:16:40,458 என் கிரீடத்தின் கண்ணியத்தைக் குறைக்கச் சொல்கிறாய். அதனால் என்ன பலன்? 203 00:16:40,541 --> 00:16:44,458 உன் மக்களுக்கு நம்பிக்கையளிக்க நீ பணிந்து போகும்படி எல்ராண்ட் பிரபு சொல்கிறார். 204 00:16:45,833 --> 00:16:50,000 அந்த நம்பிக்கையை அளிக்க நீ எதையும் செய்வாய் என்று நம்புகிறேன். 205 00:16:50,750 --> 00:16:53,375 மனிதர்களின் உள்ளங்களை நன்கு புரிந்துகொண்ட ஒரு தூதர், 206 00:16:53,458 --> 00:16:55,291 அதுவும் நியூமெனாரை நிறுவியவரின் 207 00:16:55,375 --> 00:16:57,541 தோற்றம் கொண்டவர் உங்களுடன் இணைந்தால், 208 00:16:57,625 --> 00:17:02,166 உங்கள் வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கும் என நினைக்கிறேன். 209 00:17:03,833 --> 00:17:06,208 நீ இதை ஏற்கிறாயா, எல்ராஸின் சகோதரனே? 210 00:17:21,250 --> 00:17:23,583 உங்களுக்கு என் தாயைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். 211 00:17:25,500 --> 00:17:27,083 வதந்திகளை அறிவேன். 212 00:17:28,458 --> 00:17:30,958 இரவில் தன் உடலை வைத்துத் தொழில் செய்தாள். 213 00:17:32,875 --> 00:17:35,708 பல ஆண்டுகளாக, என் தந்தையிடமிருந்து என் பிறப்பு உண்மையை மறைத்திருந்தாள். 214 00:17:36,958 --> 00:17:39,458 தொட்டிலிலேயே என்னைக் கொன்று விடுவாரென என் தாய் பயந்திருக்கலாம். 215 00:17:42,458 --> 00:17:45,875 மாறாக, தன்னிடம் பொய்யுரைத்ததை அறிந்ததும், அவளைக் கொன்றுவிட்டு 216 00:17:45,958 --> 00:17:47,458 என்னை தன்னோடு சேர்த்துக் கொண்டார். 217 00:17:49,666 --> 00:17:52,958 அதிலிருந்து, அந்தக் கருணைக்கு ஏதோவொரு வழியில் கைம்மாறு செய்ய 218 00:17:53,041 --> 00:17:55,125 முயன்று வருகிறேன். 219 00:17:58,666 --> 00:18:03,458 இதற்குமுன் இத்தனை நெருக்கமாக அவரிடம் இருந்ததில்லை என நினைக்கிறேன். 220 00:18:05,083 --> 00:18:06,250 பரிதாபம். 221 00:18:09,500 --> 00:18:10,958 அவர் கொல்லாமல் விட்டதா? 222 00:18:11,041 --> 00:18:13,916 நீ பிறந்த இடத்துக்குத் தப்பிச் செல்ல உனக்கு அவர் வாய்ப்பளித்தார். 223 00:18:15,625 --> 00:18:19,583 ஆனால் நீயோ, வாழ்க்கை முழுவதும் அவரது பேரிருள் உணர்வுகளுக்குத் தீனிபோடுவதில், 224 00:18:19,666 --> 00:18:21,166 அவர் ஒப்புதலை பெறுவதில் செலவிட்டாய். 225 00:18:22,083 --> 00:18:24,416 என்னை அவமதிப்பது உன் கழுத்தைக் காப்பாற்றுமென நினைக்குறாயா? 226 00:18:24,500 --> 00:18:26,000 உன்னை அவமதிக்கவில்லையப்பா. 227 00:18:26,916 --> 00:18:28,208 இது விநோதமாகத் தோன்றலாம், 228 00:18:28,291 --> 00:18:30,833 உன் ஆன்மாவின் மீது ஒரு தந்தையைப் போல அக்கறை கொண்டிருந்தேன். 229 00:18:38,000 --> 00:18:39,708 ஆத்மா முட்டாள்களுக்கும் சிறார்களுக்குமானது. 230 00:18:39,791 --> 00:18:41,833 இருப்பினும், உன் ஆன்மா விடுதலையடையும்போது... 231 00:18:42,583 --> 00:18:44,458 எந்தத் தளையும் உன்னைக் கட்டுப்படுத்தாது. 232 00:18:46,000 --> 00:18:48,333 உன்னைப் போன்ற ஒருவன் உண்மையான சுதந்திரத்தை அறிந்தால் 233 00:18:49,250 --> 00:18:51,083 என்ன செய்வானென எண்ணி வியக்குறேன். 234 00:18:55,541 --> 00:18:57,166 உன்னோடு இணையும்படி கேட்குறாயா? 235 00:18:57,250 --> 00:19:01,541 ஃபரஸானின் தயவை நாடிச் சென்றுதான் உன் தாய் கொடூர முடிவை எய்தினாள். 236 00:19:03,791 --> 00:19:06,125 அதையே நீயும் செய்ய வேண்டியதில்லை, கெமென். 237 00:19:16,041 --> 00:19:16,958 நிறுத்துங்கள்! 238 00:19:25,750 --> 00:19:27,333 எதற்காகவும் நிற்கக்கூடாதென்று சொன்னேன். 239 00:19:27,416 --> 00:19:28,625 இது நமது படைதான், பிரபு. 240 00:19:29,333 --> 00:19:31,791 உங்கள் தந்தையிடமிருந்து அவசரச் செய்தி வந்திருக்கிறதாம். 241 00:19:38,958 --> 00:19:40,500 சரி, என்ன செய்தி? 242 00:20:09,000 --> 00:20:10,208 நில்! 243 00:20:11,916 --> 00:20:13,708 இவன் வாழத் தகுதியற்றவன். 244 00:20:13,791 --> 00:20:16,916 யார் வாழத் தகுதியானவர் என்பதை வேலார் தெய்வங்கள் முடிவு செய்யட்டும். 245 00:20:17,000 --> 00:20:20,208 இவன் உயிருடன் இருப்பதே நமக்கு அதிக பலனளிப்பது. 246 00:20:50,958 --> 00:20:53,250 நகர்ந்து செல்லடா, பன்றியே! 247 00:20:55,416 --> 00:20:57,583 இப்போதெல்லாம் யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. 248 00:20:58,541 --> 00:21:01,458 இதில் உன் சித்திரவதையைக் காண ஆவலோடு இருக்கிறேன். 249 00:21:01,541 --> 00:21:03,666 மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் என்று சொல்லலாம். 250 00:21:04,791 --> 00:21:06,333 வேகமாய் நட, எல்ஃப்! 251 00:21:07,166 --> 00:21:08,416 இரவு முழுக்க இருக்க முடியாது. 252 00:21:09,208 --> 00:21:13,791 இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நல்ல கேலியைப் பாராட்டத் தெரிவதில்லை. 253 00:21:13,875 --> 00:21:15,875 நான் எப்போதும் சொல்வேன், அது ஒரு சாகும் கலை. 254 00:21:53,250 --> 00:21:56,458 அருமையாகச் செய்தாய், எல்ஃப். நம்பும்படி இருந்தது. 255 00:22:00,541 --> 00:22:03,708 கொஞ்சம் எல்லை மீறிவிட்டது, ஜெனரெல். 256 00:22:03,791 --> 00:22:05,833 பொறுமையாயிரு, எல்ஃப். 257 00:22:06,708 --> 00:22:11,125 நாம் ஒப்புக்கொண்டபடி, என் பங்கைச் செய்துவிட்டேன். 258 00:22:12,416 --> 00:22:14,375 இப்போது பெண்-எல்ஃப் தன் பங்கைச் செய்கிறாள். 259 00:22:15,541 --> 00:22:19,083 என்னை இரவு முழுக்க அடித்துக் கொண்டு நிற்கப் போகிறாயா? 260 00:22:19,875 --> 00:22:26,458 அல்லது நாம் கொல்லரையும் கலாட்ரியலையும் கூட்டிக் கொண்டு இங்கிருந்து கிளம்பலாமா? 261 00:22:28,708 --> 00:22:30,083 நான் யோசிக்கிறேன். 262 00:22:43,833 --> 00:22:45,125 மைதாலே. 263 00:22:57,041 --> 00:22:58,708 மைதாலே? 264 00:23:07,541 --> 00:23:08,750 இறந்துவிட்டாள். 265 00:23:10,666 --> 00:23:11,875 பல மாதங்களிருக்கும். 266 00:23:13,833 --> 00:23:16,291 இல்லை. சில வாரங்கள் என்று நினைக்கிறேன். 267 00:23:21,166 --> 00:23:23,000 நாம் இங்கு வந்திருக்கவே கூடாது. 268 00:23:23,916 --> 00:23:28,000 குறைந்தது, சௌரானுக்கு இரகசியங்களைக் கூறிவிடுவாளென நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 269 00:23:31,125 --> 00:23:34,916 "பெண்-எல்ஃப்" என்று நீ அழைப்பவளுக்கு இதே இரகசியங்கள் தெரியும். 270 00:23:35,000 --> 00:23:37,791 மற்ற காவலர்களின் கவனத்தைத் திருப்ப அவளைப் பயன்படுத்தினோம். 271 00:23:37,875 --> 00:23:39,416 அந்தப் பகுதி அவளது யோசனைதான். 272 00:23:39,500 --> 00:23:42,083 அது யாருடைய யோசனையாகவும் இருந்திருக்கக் கூடாது. 273 00:23:42,166 --> 00:23:44,416 ரிவெண்டெலில் இருந்து நாம் கிளம்பியிருக்கவே கூடாது. 274 00:23:50,625 --> 00:23:51,958 நடுச்சாமக் காவல் சுற்று. 275 00:23:53,041 --> 00:23:54,791 அவர்கள் கீழே வர எவ்வளவு நேரமாகும்? 276 00:23:57,750 --> 00:23:59,625 இந்த இடம் உனக்குத் தெரியுமென்று நினைத்தேன். 277 00:23:59,708 --> 00:24:01,458 யாருக்கும் அந்தளவு தெரியாது. 278 00:24:01,541 --> 00:24:03,583 துல்லியமாக, ஏழு நிமிடங்கள். 279 00:24:03,666 --> 00:24:06,875 படிக்கட்டுக்கு நான்கு, தாழ்வாரத்துக்கு இரண்டு, 280 00:24:06,958 --> 00:24:09,875 நீ அடித்துப் போட்ட மூன்று ஆர்க்குகளைக் கண்டுபிடித்து, 281 00:24:09,958 --> 00:24:11,583 இந்த இடத்தைப் பூட்ட மேலும் ஒரு நிமிடம். 282 00:24:12,333 --> 00:24:13,458 நீ யார்? 283 00:24:13,541 --> 00:24:15,875 இங்கே வெகுகாலமாக இருக்கிறேன், 284 00:24:16,958 --> 00:24:18,625 எனக்கே சரியாக நினைவுகூர முடியவில்லை. 285 00:24:20,833 --> 00:24:22,458 ஆனால், ஒரு காலத்தில்... 286 00:24:24,000 --> 00:24:25,458 மக்கள் என்னை அழைத்தனர்... 287 00:24:26,458 --> 00:24:27,875 கெலெபார்ன் என்று. 288 00:24:33,708 --> 00:24:34,791 யார்? 289 00:24:35,583 --> 00:24:39,458 டோரியாத் இராணுவம். திங்கோல் மன்னரின் கீழ் போரிட்டோம். 290 00:24:41,166 --> 00:24:42,875 ஒருவேளை, கேப்டன் எரெஸ்டோரைத் தெரியுமா? 291 00:24:45,583 --> 00:24:46,625 அல்லது என் மனைவியை? 292 00:24:46,708 --> 00:24:49,625 உங்க குடும்பக் கதையைக் கேட்க நமக்கு நேரமில்லை. 293 00:24:49,708 --> 00:24:51,375 நாம் செல்ல வேண்டும். 294 00:24:51,458 --> 00:24:54,041 என்னை உங்களோடு கூட்டிச் செல்லுங்கள். 295 00:24:54,125 --> 00:24:55,583 அவர்கள் படிக்கட்டுகளில் உள்ளனர். 296 00:24:58,083 --> 00:25:00,583 - இதைச் சொல்ல வேதனையாயுள்ளது, கெலெபிரன்... - கெலெபார்ன். 297 00:25:01,375 --> 00:25:02,791 ஆனால், ஆர்க் சொல்வது சரி. 298 00:25:05,708 --> 00:25:07,500 எந்த வழியில் இவனைக் கூட்டிப் போகிறாய், ஆர்க்? 299 00:25:08,166 --> 00:25:10,333 கிழக்குப் பாதை. குறைவான காவலர்கள். 300 00:25:10,416 --> 00:25:13,291 மொத்தமாகப் பூட்டும்போது, கிழக்கு பாதையைத்தான் முதலில் மூடுவார்கள். 301 00:25:13,375 --> 00:25:14,958 அப்படியானால், சிறைக்காவலர் உணவகம். 302 00:25:15,041 --> 00:25:18,000 - வார்க்குகளை வைத்திருக்குமிடம். - வார்க்குகள் ஏதுமில்லை. 303 00:25:18,083 --> 00:25:20,666 கானக எல்ஃப், இந்தச் சிறையின் மூலை முடுக்கெல்லாம் அறிவேன். 304 00:25:20,750 --> 00:25:22,625 சித்திரவதையாளர்கள் காலணிகளை கழுவும் கழிப்பறைவரை 305 00:25:22,708 --> 00:25:25,541 ஒவ்வொரு செங்கல்லையும் தப்பிக்கும் எல்லா வழியையும் அறிவேன். 306 00:25:26,750 --> 00:25:29,541 நீ கேட்டதால் சொல்கிறேன். தெற்குக் கோபுரம். 307 00:25:29,625 --> 00:25:30,875 நான் கேட்கவில்லை. 308 00:25:30,958 --> 00:25:34,666 ஆனால், இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்தால், இந்தக் கோட்டையிலிருந்து 309 00:25:34,750 --> 00:25:37,750 உங்களை உயிரோடு வெளியில் கொண்டு வருவேன். இது சத்தியம். 310 00:25:55,291 --> 00:25:57,000 என்னை ஏன் இங்கே வரவழைத்தாய்? 311 00:25:58,166 --> 00:26:00,041 என்னைப் போலவே உனக்கும் தெரியும். 312 00:26:00,125 --> 00:26:02,750 என் சகோதரனுடன் போட்டியிட்டு நான் ஒருபோதும் 313 00:26:02,833 --> 00:26:04,166 வெல்லாமல் இருந்ததில்லை. 314 00:26:04,250 --> 00:26:07,041 இந்தமுறையும் நான் வெல்வேன். அப்படி வெல்லும்போது, 315 00:26:07,125 --> 00:26:10,625 அந்த ஏழு மோதிரங்களைக் கண்டறிய என் அரச அதிகாரங்கள் அனைத்தையும் உபயோகிப்பேன். 316 00:26:10,708 --> 00:26:12,083 அவர் அவற்றைக் கைவிடவே மாட்டார். 317 00:26:12,166 --> 00:26:13,500 அது அவனைப் பொறுத்ததாய் இராது. 318 00:26:13,583 --> 00:26:14,958 நான் ஒரு வழியைக் கண்டறிவேன். 319 00:26:16,166 --> 00:26:17,333 அது... 320 00:26:18,791 --> 00:26:21,666 அவற்றை முதலில் ஒப்படைக்க நீ அவனைச் சம்மதிக்க வைக்காவிட்டால். 321 00:26:21,750 --> 00:26:23,291 நான் எதற்கு அதைச் செய்ய வேண்டும்? 322 00:26:23,375 --> 00:26:25,333 ஏனெனில், அவன் என்னிடம் ஏழு மோதிரங்களைத் தந்தால், 323 00:26:26,291 --> 00:26:28,666 மணிமுடி மீதான என் உரிமையை விலக்கிக் கொள்வேன். 324 00:26:29,541 --> 00:26:32,208 இந்த மலையை விட்டுச் சென்றுவிடுவேன், ஒருபோதும் திரும்ப மாட்டேன். 325 00:26:34,541 --> 00:26:37,708 என்னைக் கேட்டால், இது நியாயமான பேரம். 326 00:26:39,000 --> 00:26:41,916 மோதிரங்களைத் தரச் சொல்லி அவனிடம் சொல், அவன் செய்வான். 327 00:26:43,125 --> 00:26:45,041 செய்வானில்லையா, டிடி? 328 00:26:48,458 --> 00:26:50,166 என்னை அப்படிக் கூப்பிடாதே என்று சொன்னேன். 329 00:26:50,833 --> 00:26:52,625 ஊறிப்போன பழக்கங்களை முறிப்பது கடினம். 330 00:26:53,541 --> 00:26:55,041 இரு கைகளைப் பயன்படுத்த முயன்று பார். 331 00:27:01,000 --> 00:27:03,250 - நீ ஒன்றை மறந்துவிட்டாய். - எந்த ஒன்று? 332 00:27:03,333 --> 00:27:07,291 ஒருமுறை உன் சகோதரனுடன் போட்டியிட முயன்று தோற்றுவிட்டாய். 333 00:27:08,958 --> 00:27:12,291 அந்த ஒரு சமயத்தைப் பற்றி அவரிடம் நான் கூறினால்... 334 00:27:15,125 --> 00:27:17,541 அந்த மோதிரங்கள் என்னை மௌனமாக வைத்திருக்கும், தெரிந்துகொள். 335 00:27:19,500 --> 00:27:23,750 பல பத்தாண்டுகளுக்கு முன் நான் செய்த பிழை ட்யுரினை ஒருபோதும் அச்சுறுத்தப் போவதில்லை. 336 00:27:26,458 --> 00:27:28,583 அப்படியெனில் அவனிடம் ஏன் நீ இன்னும் சொல்லவில்லை? 337 00:27:43,625 --> 00:27:45,250 அவனுக்கு மோதிரங்கள் வேண்டும், இல்லையா? 338 00:27:48,250 --> 00:27:49,458 எனக்குத் தெரியும். 339 00:27:51,375 --> 00:27:53,291 அவனுக்குப் பின்னால் நிச்சயம் சௌரான் இருக்கிறான். 340 00:27:54,833 --> 00:27:57,541 அந்த மலம் தின்னும் இழிபிறவியை... 341 00:27:57,625 --> 00:27:59,041 ட்யுரின், தயவு செய்து உட்கார். 342 00:28:21,833 --> 00:28:23,750 நான் ஒரு தவறு செய்துவிட்டேன். 343 00:28:26,916 --> 00:28:28,416 நீயும் நானும் பிரிந்திருந்தோம். 344 00:28:29,958 --> 00:28:31,333 நாம் சண்டை போட்டிருந்தோம். 345 00:28:32,666 --> 00:28:34,416 அப்படியான ஓரிரவில்... 346 00:28:36,333 --> 00:28:39,333 மறுநாள் சூரியன் எழுந்ததும் நடந்ததை மீட்க முடியாதா என பெரிதும் வருந்தினேன். 347 00:28:49,375 --> 00:28:50,791 த்ரேயின்? 348 00:28:54,833 --> 00:28:56,791 சில நாட்களுக்குப் பின், நீ திரும்பி வந்தாய்... 349 00:28:57,958 --> 00:28:59,625 திருமணத்துக்கு முன்மொழிந்தாய். 350 00:29:01,125 --> 00:29:03,333 என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ந்தது அப்போதுதான். 351 00:29:05,625 --> 00:29:06,875 உண்மையாகவே, அதுதான். 352 00:29:08,875 --> 00:29:11,041 சரியான தருணத்துக்காக நான் காத்திருந்தேன், 353 00:29:12,375 --> 00:29:14,083 ஆனால் உன் தந்தை... 354 00:29:15,625 --> 00:29:17,791 திருமணச் சடங்குகளில் மும்முரமாயிருந்தார். 355 00:29:17,875 --> 00:29:19,916 பிறகு, கெர்டா, 356 00:29:20,916 --> 00:29:24,416 மேலும் மேலும் என, அது எப்படி இருந்ததென்றால்... 357 00:29:25,541 --> 00:29:28,041 அதைப் பற்றிப் பேசி நம் குகையை நஞ்சாக்குவதென்பது 358 00:29:28,125 --> 00:29:30,750 அது எனக்குச் செய்ததைக் காட்டிலும் அதிகமாகத் தோன்றியது. 359 00:29:34,375 --> 00:29:35,708 அதனால், அதைப் புதைத்துவிட்டேன். 360 00:29:38,416 --> 00:29:42,333 இப்போது பூமி அதைத் திரும்ப உமிழ்ந்திருக்கிறது, 361 00:29:43,541 --> 00:29:47,500 ஏனென்றால், அதைப் பயன்படுத்தி உன் சகோதரன் நம்மைப் பிரிக்க நினைக்கிறான், 362 00:29:47,583 --> 00:29:49,791 அவனுடையது அல்லாததைக் கவர முயல்கிறான். 363 00:29:53,583 --> 00:29:57,083 நம் திருமண பந்தம் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காது என்று அவனிடம் கூறினேன். 364 00:29:58,583 --> 00:30:03,583 அத்தனை உறுதியான ஒன்றுக்கு இடையே இத்தனை அற்பமான ஒன்று வரமுடியாது என்றேன். 365 00:30:07,916 --> 00:30:09,250 தயவு செய்து, ட்யுரின். 366 00:30:11,416 --> 00:30:12,833 நான் சொன்னது சரியென்று சொல். 367 00:30:28,708 --> 00:30:31,041 - நம் திருமணத்துக்கு முன்பா? - நம் திருமணத்துக்கு முன்புதான். 368 00:30:31,125 --> 00:30:32,333 அந்தச் சண்டை வந்து... 369 00:30:32,416 --> 00:30:34,583 அந்த மதுக்கடைக்காரன் மகளைப் பற்றிய சண்டை. ஆம். 370 00:30:35,291 --> 00:30:36,208 ஆம். 371 00:30:38,541 --> 00:30:40,208 அதைப் பற்றி எனக்கும் வருத்தங்கள் உண்டு. 372 00:30:54,416 --> 00:30:55,583 ஒரு தடவையா? 373 00:30:56,416 --> 00:30:57,416 ஒரேயொரு தடவை. 374 00:30:57,500 --> 00:30:59,041 அதன்பின் ஏதுமில்லையே? 375 00:30:59,125 --> 00:31:01,666 இல்லை. அதன்பின் எதுவுமில்லை. 376 00:31:02,416 --> 00:31:05,833 - இப்போது எதுவும் இல்லையா? - அவூலே சம்மட்டியே! இல்லை. 377 00:31:10,291 --> 00:31:12,750 - எதுவுமில்லையா? - இப்போது எதுவுமில்லை. 378 00:31:12,833 --> 00:31:14,125 வேறு எதுவும் இல்லை. 379 00:31:14,916 --> 00:31:17,958 உன்னைத் தவிர வேறு எதுவும் இல்லை, அன்பே. 380 00:31:20,041 --> 00:31:21,125 எதுவுமில்லை. 381 00:31:35,041 --> 00:31:36,125 நீ சொன்னது சரி. 382 00:31:43,375 --> 00:31:46,541 ட்யுரின், நான் எந்தளவு வருந்துகிறேன் என்பதை விவரிக்கவே முடியாது... 383 00:31:46,625 --> 00:31:48,208 அதைப் பற்றி இனி பேச வேண்டாம். 384 00:31:50,000 --> 00:31:51,416 இனி ஒரு வார்த்தை பேசாதே. 385 00:31:53,583 --> 00:31:57,791 தற்போதைக்கு, நாம் ஒரு விஷயத்தில்தான் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும். 386 00:32:01,333 --> 00:32:03,791 அந்தக் கேடுகெட்ட நாயை நாம் எப்படி வீழ்த்துவது. 387 00:32:09,375 --> 00:32:10,541 நாம் இல்லை. 388 00:32:12,166 --> 00:32:13,166 நீதான். 389 00:32:14,791 --> 00:32:16,000 ஏனென்றால், நீ சொன்னது சரி. 390 00:32:18,333 --> 00:32:21,833 ஏனென்றால் இப்போது நீ எளிதில் கோபம் கொள்ளும் குட்டித் தம்பி இல்லை. 391 00:32:23,833 --> 00:32:25,791 நீ இந்த மலைக்கு வேந்தன். 392 00:32:32,750 --> 00:32:35,125 அழிவில்லா மூதாதை ட்யுரினைப் போன்றவன், 393 00:32:36,500 --> 00:32:39,833 அவரது பெயருக்கு நீ தகுதியுடையவன் என உன் தந்தை அறிந்திருந்தார். 394 00:32:40,708 --> 00:32:44,375 ஏனென்றால் உன் இதயம் மிக வலிமையானது என அவருக்குத் தெரியும். 395 00:32:45,333 --> 00:32:47,416 ஒரு சிங்கத்தின் இதயம். 396 00:32:48,791 --> 00:32:51,041 ஓர் அரசனின் இதயம். 397 00:32:52,333 --> 00:32:54,750 ஒரு ட்யுரினின் இதயம். 398 00:33:00,708 --> 00:33:04,333 ட்யுரின்! ட்யுரின்! ட்யுரின்! ட்யுரின்! 399 00:33:27,791 --> 00:33:29,291 சண்டை! சண்டை! சண்டை! 400 00:33:29,375 --> 00:33:31,333 வாருங்கள், ட்யுரின்! வாருங்கள்! 401 00:33:34,166 --> 00:33:35,333 - நார்வி! - வாருங்கள்! 402 00:33:35,416 --> 00:33:36,500 வாருங்கள், த்ரேயின்! 403 00:33:37,166 --> 00:33:41,958 நம் முன்னோர்கள் இம்மண்ணிலிருந்து வெளிவந்த நாள் முதலாக, 404 00:33:42,041 --> 00:33:47,083 ஒற்றைக்கொற்றை போரே பூசல்களைத் தீர்க்கும் வழியாக விளங்குகின்றது! 405 00:33:47,166 --> 00:33:48,000 - ஆம்! - ஆம்! 406 00:33:48,083 --> 00:33:51,958 மூன்றாம் டியூரின் மன்னரின் மகன்களான ட்யுரின், த்ரேயின், 407 00:33:53,500 --> 00:33:57,083 அவூலே உலைக்கள நெருப்பையும் 408 00:33:57,166 --> 00:34:00,416 வெற்றியோ தோல்வியோ, அவரது தீர்ப்பையும் ஏற்கிறீர்களா? 409 00:34:00,500 --> 00:34:01,791 நான் ஏற்கிறேன். 410 00:34:01,875 --> 00:34:03,041 ஆம்! 411 00:34:03,958 --> 00:34:05,041 ஆம். 412 00:34:07,166 --> 00:34:08,666 சண்டையைக் காண வேண்டும், அவ்வளவுதான். 413 00:34:21,291 --> 00:34:23,666 - நெருப்பு மெய்யாகவே எரிகிறது. - நெருப்பு மெய்யாகவே எரிகிறது. 414 00:34:23,750 --> 00:34:24,958 - ஆம். - ஆம். 415 00:34:31,541 --> 00:34:33,000 மணி ஒலிக்கும்போது, 416 00:34:33,875 --> 00:34:36,958 போட்டியாளர்கள் தங்கள் ஆயுதங்களைச் செப்பனிடத் தொடங்கலாம். 417 00:34:39,208 --> 00:34:40,541 ஆனால் நன்றாகச் சீரமையுங்கள், 418 00:34:41,208 --> 00:34:44,458 ஏனெனில் கடைசிவரை நிற்கும் ட்வார்ஃப்தான் அரியணையைக் கைப்பற்றுவார். 419 00:34:44,541 --> 00:34:45,750 ஆம்! 420 00:34:47,291 --> 00:34:50,583 போட்டியாளர்களே, உங்கள் கோடாரிகளைத் தேர்ந்தெடுங்கள்! 421 00:35:03,416 --> 00:35:04,583 வாருங்கள்! 422 00:35:17,166 --> 00:35:18,583 அவன் வயிற்றில் குத்தி இறக்குங்கள். 423 00:35:20,041 --> 00:35:21,583 கூடாது, மகனே. 424 00:35:22,666 --> 00:35:25,958 இராஜ்ஜியம் அபாயத்தில் இருக்கையில் கோபத்தால் அறிவை இழக்கக் கூடாது. 425 00:35:26,041 --> 00:35:27,250 அதை நினைவில் கொள். 426 00:35:28,416 --> 00:35:31,541 நான் செய்ய வேண்டியதெல்லாம் அவனை அடித்து மயக்கமுறச் செய்வதுதான். 427 00:35:31,625 --> 00:35:34,250 என்னிடம் நீங்கள் பொய் சொல்ல வேண்டியதில்லை, தந்தையே. 428 00:35:35,083 --> 00:35:36,916 இது உண்மையில் எதைப் பற்றியது என்று அறிவேன். 429 00:35:38,041 --> 00:35:39,375 அவர்களை ஒன்றாகப் பார்த்தேன். 430 00:35:41,500 --> 00:35:43,083 யாரை ஒன்றாகப் பார்த்தாய்? 431 00:35:44,708 --> 00:35:45,958 தாயையும் த்ரேயினையும். 432 00:35:53,875 --> 00:35:56,583 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 433 00:35:56,666 --> 00:35:59,250 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 434 00:35:59,333 --> 00:36:01,833 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 435 00:36:01,916 --> 00:36:03,875 - த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! 436 00:36:03,958 --> 00:36:08,000 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 437 00:36:08,083 --> 00:36:09,125 நன்றி, மகனே. 438 00:36:13,583 --> 00:36:15,750 வேண்டாம். ட்யுரின். 439 00:36:15,833 --> 00:36:17,125 ட்யுரின், வேண்டாம்! 440 00:36:20,916 --> 00:36:22,250 தந்தையே! 441 00:36:24,125 --> 00:36:26,375 தாக்கு! தாக்கு! தாக்கு! 442 00:36:43,375 --> 00:36:46,541 உன்னை நம்புவதா, ஹா? உன்னையா நம்புவதாவது! 443 00:36:50,250 --> 00:36:51,291 அவனைப் பிடித்துவிட்டார்! 444 00:37:06,041 --> 00:37:07,041 இல்லை! 445 00:37:12,916 --> 00:37:14,083 எழுந்திருங்கள், தந்தையே. 446 00:37:14,708 --> 00:37:15,708 எழுந்திருங்கள்! 447 00:37:15,791 --> 00:37:18,041 - த்ரேயின்! - த்ரேயின்! 448 00:37:18,125 --> 00:37:19,083 த்ரேயின்! 449 00:37:19,166 --> 00:37:20,875 - த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! 450 00:37:20,958 --> 00:37:23,208 இல்லை! இல்லை! 451 00:37:24,291 --> 00:37:26,791 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 452 00:37:26,875 --> 00:37:29,416 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 453 00:37:45,375 --> 00:37:49,416 கஸாத் டூம் மன்னர் நீடூழி வாழ்க! 454 00:37:50,333 --> 00:37:52,750 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 455 00:37:52,833 --> 00:37:55,333 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 456 00:37:55,416 --> 00:37:57,916 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 457 00:37:58,000 --> 00:38:00,625 - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! - த்ரேயின்! த்ரேயின்! த்ரேயின்! 458 00:38:27,916 --> 00:38:30,375 அடுத்த சந்திப்பில் ஒரு காவலனை வீழ்த்த வேண்டும். 459 00:38:30,458 --> 00:38:31,541 என் சமிக்ஞைக்குக் காத்திரு. 460 00:38:50,458 --> 00:38:51,958 முதல் இருவரும் வெறும் சிப்பாய்களே. 461 00:38:53,000 --> 00:38:54,541 இவன் காவற்படைத் தலைவன். 462 00:39:16,208 --> 00:39:18,833 அடுத்த தளத்துக்கான திறவுகோல் இவனிடமே உள்ளது. 463 00:39:18,916 --> 00:39:21,291 நீ ஏன் இதற்குமுன் தப்பிச் செல்லவில்லை? 464 00:39:21,375 --> 00:39:23,708 செய்திருக்கிறேன். சிக்கல் என்னவென்றால்... 465 00:39:25,833 --> 00:39:27,458 மறுபடியும் இங்கே அடைத்து விடுவார்கள். 466 00:39:34,041 --> 00:39:35,541 மேலே கழிப்பறை உள்ளது. 467 00:39:35,625 --> 00:39:37,875 நாற்றம் குடலைப் புரட்டும், ஆனால் அது ஒரு தப்பிக்கும் வழி. 468 00:39:37,958 --> 00:39:41,375 பொறு! நாங்கள் மூவர். எங்களுடன் வந்தவரை காவலர்கள் கீழே கூட்டிச் சென்றனர். 469 00:39:42,000 --> 00:39:43,000 கீழேயா? 470 00:39:44,166 --> 00:39:45,708 என்ன அது? 471 00:39:45,791 --> 00:39:47,458 - கீழே என்ன உள்ளது? - ஒன்றுமில்லை. 472 00:39:47,541 --> 00:39:49,875 கீழே இதமான சூழல்தான், உன் நண்பருக்கு ஒன்றும் ஆகாது. 473 00:39:49,958 --> 00:39:52,166 - போகலாம். - அவள் இல்லாமல் நான் போகமாட்டேன். 474 00:39:53,541 --> 00:39:55,166 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 475 00:39:56,958 --> 00:39:59,291 அவனோடு செல், ஆர்க். உன்னைக் காப்பாற்றிக் கொள். 476 00:40:00,208 --> 00:40:01,125 இல்லை. 477 00:40:02,125 --> 00:40:04,250 கலாட்ரியல் இல்லாமல் நானும் செல்ல மாட்டேன். 478 00:40:06,583 --> 00:40:07,833 இந்தப் பக்கம். 479 00:41:29,375 --> 00:41:30,458 கெலெபார்ன். 480 00:41:33,125 --> 00:41:34,125 நான்... 481 00:41:38,458 --> 00:41:39,458 என்னைப் பின் தொடர்க. 482 00:41:57,333 --> 00:41:59,291 சௌரான் வாழ்க! 483 00:41:59,375 --> 00:42:02,833 - சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! - சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! 484 00:42:02,916 --> 00:42:08,166 - சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! - சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! சௌரான் வாழ்க! 485 00:42:08,250 --> 00:42:10,708 எனக்கு கலாட்ரியலும் மார்னூக்கும் உயிருடன் வேண்டும். 486 00:42:12,541 --> 00:42:13,708 மற்றவர்களைக் கொன்றுவிடுங்கள். 487 00:42:24,083 --> 00:42:26,333 இது பொது எச்சரிக்கை. இனி கழிப்பறை வழியே செல்ல முடியாது. 488 00:42:26,416 --> 00:42:29,041 - வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். - உன் நண்பன் என்னவானான்? 489 00:42:29,125 --> 00:42:30,833 மேலிருந்து அவனை அழைக்க வேண்டும். 490 00:42:30,916 --> 00:42:33,041 - அந்தக் கொல்லர் எங்கே? - அவள் இறந்துவிட்டாள். 491 00:42:33,125 --> 00:42:34,208 படிக்கட்டு இந்தப் பக்கம். 492 00:42:57,458 --> 00:43:00,458 சரி. நான் சரணடைகிறேன். 493 00:43:01,166 --> 00:43:03,000 இது முதலிலிருந்தே ஒரு கேலிக்கூத்துதான். 494 00:43:03,791 --> 00:43:05,291 நான் உங்களில் ஒருவன். 495 00:44:05,958 --> 00:44:06,791 இந்தப் பக்கம்! 496 00:44:15,125 --> 00:44:16,041 போய்விடு! 497 00:44:33,625 --> 00:44:35,000 அவள் அருகிலிருந்தவனைப் பற்றி சொல். 498 00:44:36,083 --> 00:44:37,666 கெலெபார்ன் என்றழைத்தனர். 499 00:44:37,750 --> 00:44:40,000 ஏன்? யாரவன்? 500 00:44:40,083 --> 00:44:41,708 அவர்கள் கூரையை நோக்கிச் சென்றனர்! 501 00:45:28,125 --> 00:45:29,625 நமக்குப் பின்னால் வருகிறார்கள்! 502 00:45:30,375 --> 00:45:31,458 பின்னால் செல்லுங்கள்! 503 00:45:43,000 --> 00:45:45,083 கலாட்ரியல் சீமாட்டி, நீங்கள் கிளம்பியாக வேண்டும்! 504 00:45:56,166 --> 00:45:57,500 லேண்ட்ரோவல். 505 00:45:58,541 --> 00:46:00,166 கழுகுகளின் இளவரசன். 506 00:47:11,541 --> 00:47:12,375 அரோண்டீர்! 507 00:47:28,083 --> 00:47:29,625 நீ எங்களுடன் வருகிறாய். 508 00:47:36,041 --> 00:47:38,833 ஓடு, அரோண்டீர்! ஓடு! 509 00:47:40,416 --> 00:47:42,583 இருளிலிருந்து ஓடிச் செல்ல மாட்டேன். 510 00:47:44,750 --> 00:47:46,750 நீ அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். 511 00:47:50,583 --> 00:47:52,500 கிளம்பு! இப்போதே! 512 00:48:27,583 --> 00:48:30,791 அவருக்குத் தேவை அவர்கள்தான். விலகிச் செல்லுங்கள். 513 00:48:39,625 --> 00:48:41,125 முட்டாளாக நடந்து கொள்ளாதீர்கள். 514 00:48:41,208 --> 00:48:43,875 ஏதோவொரு வழியில், அவர்களைப் பிடித்து விடுவேன். 515 00:48:45,250 --> 00:48:46,250 இல்லை. 516 00:48:48,375 --> 00:48:49,750 நான் உன்னைக் கூட்டிச் செல்கிறேன். 517 00:48:53,083 --> 00:48:55,708 - இங்கிருந்து நாம் ஒன்றாகச் செல்வோம். - போய் விடு என்றேன்! 518 00:49:05,666 --> 00:49:06,916 அந்த மோதிரத்தைக் கழற்று. 519 00:49:07,000 --> 00:49:08,208 அவர் வருகிறார். 520 00:49:09,708 --> 00:49:11,791 முன்பு ஒருமுறை உன்னை விட்டுச் சென்றேன், தியோ. 521 00:49:14,208 --> 00:49:15,833 அதைத் திரும்பவும் செய்ய மாட்டேன். 522 00:49:21,000 --> 00:49:22,083 இந்த முறை... 523 00:49:24,208 --> 00:49:25,666 உனக்கு உதவ அனுமதி. 524 00:49:54,291 --> 00:49:55,291 அவனைக் கொல். 525 00:49:57,541 --> 00:49:58,791 இல்லை! 526 00:50:10,083 --> 00:50:11,166 வேண்டாம்! 527 00:51:20,458 --> 00:51:21,458 அவனை விட்டுச் செல். 528 00:54:15,958 --> 00:54:17,958 வசனங்கள் மொழிபெயர்ப்பு பாலா கருப்பசாமி 529 00:54:18,041 --> 00:54:20,041 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்