1 00:00:22,713 --> 00:00:24,713 தொடக்கத்தில் எதுவும் தீமை இல்லை. 2 00:00:24,796 --> 00:00:26,505 இங்கே! 3 00:00:29,838 --> 00:00:33,921 ஒரு காலகட்டத்தில், உலகமே இளமையாக இருக்கையில், 4 00:00:34,046 --> 00:00:37,046 சூரிய உதயமே ஆகியிருக்கவில்லை. 5 00:00:37,130 --> 00:00:41,421 ஆனால் அப்போதும்கூட வெளிச்சம் இருந்தது. 6 00:01:03,380 --> 00:01:06,255 சரி, அது முடிஞ்சுதா? 7 00:01:17,671 --> 00:01:21,213 அந்த பழைய குப்பை மிதக்கும்னு நீ கூட நம்பியிருக்க மாட்டே. 8 00:01:22,671 --> 00:01:24,213 அது மிதக்காது. 9 00:01:25,963 --> 00:01:29,005 அது பயணிக்கும். 10 00:01:48,671 --> 00:01:49,755 நிறுத்துங்க! 11 00:01:50,338 --> 00:01:51,171 வேண்டாம்! 12 00:01:52,505 --> 00:01:54,046 நிறுத்து, உடைச்சிடாதே! 13 00:01:54,130 --> 00:01:56,088 நிறுத்து! வேண்டாம்! 14 00:01:56,171 --> 00:01:58,505 -அட. -நிறுத்து, உடைச்சிடாதே! நிறுத்து! 15 00:02:02,213 --> 00:02:04,005 அது மிதக்காதுன்னு சொன்னேனே. 16 00:02:07,713 --> 00:02:09,171 என்னை விடு! 17 00:02:09,296 --> 00:02:11,546 மீண்டும் தடுமாற்றமா, கலாட்ரியல்? 18 00:02:19,630 --> 00:02:21,838 அது ஒரு நல்ல கப்பல், சகோதரி. 19 00:02:21,921 --> 00:02:23,838 நீங்க சொல்லி தந்தது போல செய்தேன். 20 00:02:25,213 --> 00:02:29,796 ஏன் கப்பல் மிதக்கிறது, கல்லால் முடியவில்லை என தெரியுமா? 21 00:02:31,046 --> 00:02:35,421 ஏனெனில் கல் கீழ்நோக்கி தான் பார்க்கும். 22 00:02:36,588 --> 00:02:40,255 நீரின் இருள் அகண்டது, எதிர்க்க முடியாதது. 23 00:02:41,713 --> 00:02:43,755 கப்பலும் அந்த இருளை உணரும், 24 00:02:43,838 --> 00:02:47,671 இருள் ஒவ்வொரு தருணமும் அதனை மடக்கி, கீழே இழுக்க முயற்சிக்கும். 25 00:02:49,463 --> 00:02:51,755 ஆனால் கப்பலிடம் ஒரு ரகசியமுண்டு. 26 00:02:53,380 --> 00:02:57,296 கல்லைப் போல் அல்லாது, அதன் பார்வை கீழ்நோக்காது, மேல்நோக்கும். 27 00:02:58,671 --> 00:03:00,880 அதனை வழிநடத்தும் ஒளிமீது நிலைத்திருக்கும், 28 00:03:01,755 --> 00:03:04,838 இருளுக்கு தெரியாத பல பெரிய விஷயங்களை கிசுகிசுக்கும். 29 00:03:06,963 --> 00:03:10,505 ஆனால் சில சமயம் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் 30 00:03:10,588 --> 00:03:13,255 நீரில் பிரதிபலித்தபடி, வானில் இருப்பது போலவே. 31 00:03:13,338 --> 00:03:16,546 எந்த பக்கம் மேலே, எது கீழே என்று சொல்வது கடினம். 32 00:03:18,338 --> 00:03:20,880 எந்த ஒளியை தொடர்வதென எப்படி தெரியும்? 33 00:03:33,380 --> 00:03:34,880 ஆனால் அது சுலபமாக தெரியுதே. 34 00:03:34,963 --> 00:03:37,171 முக்கிய உண்மைகள் பெரும்பாலும் அப்படி. 35 00:03:38,046 --> 00:03:40,463 ஆனால் அவற்றை அறிந்து கொள்ள நீ கற்கணும். 36 00:03:40,546 --> 00:03:43,380 எப்போதும் அவற்றை பற்றி சொல்ல நான் இருக்க மாட்டேன். 37 00:03:43,463 --> 00:03:44,880 இருக்க மாட்டீங்களா? 38 00:03:46,255 --> 00:03:48,755 கூட வா. அம்மா, அப்பா காத்திருக்காங்க. 39 00:03:59,338 --> 00:04:01,463 மரணத்துக்கு வார்த்தையே இல்லை. 40 00:04:02,588 --> 00:04:05,546 எங்கள் மகிழ்ச்சி முடிவடையாது என்றெண்ணினோம். 41 00:04:20,838 --> 00:04:23,838 எங்கள் வெளிச்சம் மங்காது என நினைத்தோம். 42 00:04:28,671 --> 00:04:31,796 அதனால் பெரும் எதிரி, மோர்கோத், 43 00:04:31,880 --> 00:04:34,921 எங்கள் வீட்டின் வெளிச்சத்தை அழித்த போது... 44 00:04:37,963 --> 00:04:39,796 நாங்கள் எதிர்த்தோம். 45 00:04:43,588 --> 00:04:47,255 எல்வ்ஸின் படை ஒன்று போருக்கு போனது. 46 00:04:51,921 --> 00:04:52,921 வாலினார் 47 00:04:53,005 --> 00:04:58,713 எங்கள் வீடு வாலினாரை விட்டு வந்தோம், தூர தேசத்திற்கு பயணித்தோம். 48 00:04:58,796 --> 00:04:59,838 தி சண்டரிங் சீஸ் 49 00:04:59,921 --> 00:05:05,255 சொல்லப்படாத தீங்குகள் மற்றும் எண்ணிலடங்கா விசித்திர உயிரினங்களால் நிரம்பினது ஒன்று. 50 00:05:05,880 --> 00:05:09,380 மிட்டில் எர்த் எனப்படும் இடம். 51 00:05:32,296 --> 00:05:34,880 வாலரோன் காலனேன்! 52 00:05:34,963 --> 00:05:40,338 ஃபிருவான்டே! 53 00:05:44,088 --> 00:05:46,505 அது சீக்கிரம் முடியும் என்றனர், 54 00:05:48,046 --> 00:05:52,463 ஆனால் போர் மிட்டில் எர்தை அழிவில் விட்டது. 55 00:05:55,671 --> 00:05:59,255 மற்றும் அது நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும். 56 00:06:20,088 --> 00:06:23,671 இப்போது, மரணத்திற்கு பல வார்த்தைகள் கற்றோம். 57 00:06:28,921 --> 00:06:31,880 கடைசியில், மோர்கோத் தோற்கடிக்கப்படும். 58 00:06:32,880 --> 00:06:35,630 ஆனால் துயரச் சம்பவங்களுக்கு பிறகு தான். 59 00:06:38,130 --> 00:06:42,838 அவனுடைய ஆர்க்குகள் மிட்டில் எர்த்தின் மூலைகளுக்கெல்லாம் பரவி, 60 00:06:44,130 --> 00:06:46,588 புதிய தலைவரின் கட்டளையின்கீழ், 61 00:06:46,671 --> 00:06:50,171 அவனுடைய உண்மையான சேவகன், 62 00:06:50,255 --> 00:06:54,088 ஒரு கொடூரமான மற்றும் தந்திரமான மந்திரவாதி. 63 00:06:54,171 --> 00:06:57,005 அவனை சாரான் என்றனர். 64 00:06:58,713 --> 00:07:02,296 என் சகோதரன் அவனை தேடி அழிக்க முற்பட்டான். 65 00:07:05,005 --> 00:07:07,213 ஆனால் சாரான் அவனை முதலில் கண்டுபிடித்து 66 00:07:09,296 --> 00:07:11,630 அவன் சதையை சின்னத்தால் குறித்தான். 67 00:07:14,421 --> 00:07:17,880 அதன் பொருளை எங்கள் முதியோரால் கூட புரிந்து கொள்ள முடியலை. 68 00:07:22,380 --> 00:07:25,213 அங்கே, இருளில், 69 00:07:25,880 --> 00:07:29,046 அவனுடைய சபதம் என்னுடையதானது. 70 00:07:31,088 --> 00:07:33,630 அதனால், நாங்க வேட்டையாடினோம். 71 00:07:35,880 --> 00:07:38,755 பூமியின் எல்லைகள் வரை, சாரானை வேட்டையாடினோம். 72 00:07:41,296 --> 00:07:43,838 ஆனால் தடயங்கள் குறைந்துகொண்டே வந்தது. 73 00:07:46,421 --> 00:07:48,213 ஆண்டுகள் பலவாயின. 74 00:07:48,963 --> 00:07:51,171 நூற்றாண்டுகள் பலவாயின. 75 00:07:51,713 --> 00:07:55,380 பல எல்வ்ஸுக்கு, அந்நாட்களின் வலி 76 00:07:55,463 --> 00:07:58,463 எண்ணத்திலிருந்தும், மனதிலிருந்தும் வெளியேறியது. 77 00:07:59,505 --> 00:08:02,005 எங்க மக்களில் பலர் 78 00:08:02,088 --> 00:08:05,130 சாரான் வெறும் நினைவென நம்பத் தொடங்கினர். 79 00:08:05,213 --> 00:08:06,671 ஃபோரோட்வெய்த் தி நார்தர்ன்மோஸ்ட் வேஸ்ட் 80 00:08:06,755 --> 00:08:10,755 கடைசியாக அச்சுறுத்தல் முடிந்தது. 81 00:08:14,421 --> 00:08:16,755 நான் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆசை. 82 00:09:13,338 --> 00:09:14,838 கமாண்டர் கலாட்ரியல். 83 00:09:16,921 --> 00:09:20,005 இந்த படை உங்களை உலகின் எல்லைவரை தொடர்ந்திருக்கு. 84 00:09:20,088 --> 00:09:22,880 ஆனால் இந்த கடைசி கோட்டையை தேடிய யாரும் 85 00:09:22,963 --> 00:09:24,380 எதையும் கண்டுபிடித்ததில்லை. 86 00:09:25,921 --> 00:09:28,921 கடைசி ஆர்கை பார்த்து பல வருடங்களானது. 87 00:09:29,755 --> 00:09:34,255 மற்ற கமாண்டர்கள் சொல்வது போல, நம் எதிரி உயிரோடு இல்லையென்பது சாத்தியமில்லையா? 88 00:09:34,338 --> 00:09:35,546 இரவு சூழ்கிறது. 89 00:09:36,296 --> 00:09:40,296 சூரிய ஒளி வர பயப்படும் இடத்தை நம்மளோட உடல் எவ்வளவு காலம் தாங்கும்? 90 00:09:44,921 --> 00:09:47,255 இங்கே நாம் முகாமிடுவது நல்லது. 91 00:09:48,046 --> 00:09:50,255 நாளை, வீட்டுக்கு பயணத்தை தொடங்குவோம். 92 00:09:54,755 --> 00:09:56,171 வெளிச்சம் குறைகிறது. 93 00:10:11,005 --> 00:10:12,296 கமாண்டர், இருங்க! 94 00:10:12,380 --> 00:10:14,880 இல்லை. போயிட்டே இருப்போம். 95 00:10:14,963 --> 00:10:16,421 கலாட்ரியல், நில்லு! 96 00:10:39,005 --> 00:10:42,421 இங்கே எதுவுமில்லை. நாம இப்ப அங்கே இருந்திருக்கணும். 97 00:10:50,671 --> 00:10:51,880 நாம அங்கே வந்தாச்சு. 98 00:11:13,338 --> 00:11:14,755 இது தான். 99 00:11:14,838 --> 00:11:18,046 மோர்கோத்தின் வீழ்ச்சிக்கு பிறகு ஆர்க்ஸ் இங்கேதான் கூடினாங்க. 100 00:11:19,130 --> 00:11:22,046 கற்பனை செய்ததைவிட இன்னும் பலர் தப்பிச்சிருப்பாங்க. 101 00:11:23,005 --> 00:11:25,421 என் கை மரத்துப் போச்சு. 102 00:11:27,463 --> 00:11:28,546 இல்லை. 103 00:11:30,088 --> 00:11:33,505 இவ்விடம் தீமை மிக்கது, நம் தீப்பந்தங்களில் வெதுவெதுப்பில்லை. 104 00:11:34,255 --> 00:11:35,421 இந்த வழி. 105 00:11:36,005 --> 00:11:37,505 எப்படி உறுதியா சொல்றீங்க? 106 00:11:38,046 --> 00:11:39,671 மத்த இடங்களைவிட குளிரா இருக்கு. 107 00:12:09,296 --> 00:12:10,880 இங்கே ஒரு கதவு போடப்பட்டது. 108 00:12:12,088 --> 00:12:13,088 அதை உடைங்க. 109 00:12:48,838 --> 00:12:50,630 என்ன பில்லி சூனியம் இது? 110 00:12:53,380 --> 00:12:56,921 காணப்படாத உலகின் சக்திகளோடு இந்த ஆர்க்குகள் விளையாடினாங்க. 111 00:12:57,671 --> 00:12:59,588 ஏதோ பழங்கால பில்லி சூனியம். 112 00:13:03,838 --> 00:13:05,463 ஆனால் அவங்க நோக்கம் என்ன? 113 00:13:06,421 --> 00:13:09,255 நிச்சயமா, ரொம்ப காலமாகிடுச்சு. 114 00:13:09,338 --> 00:13:11,505 இங்கே நடந்தது நீண்ட காலம் முன்பு. 115 00:13:19,130 --> 00:13:20,213 நீர். 116 00:13:30,296 --> 00:13:32,296 தீராத தீயின் தாகத்தை உடையவரின் 117 00:13:32,380 --> 00:13:34,963 குறியீட்டை கல்லால் கூட மறைக்க முடியாது. 118 00:13:42,713 --> 00:13:43,796 இங்கு வந்திருக்கான். 119 00:13:44,921 --> 00:13:46,671 சாரான் இங்கே வந்திருக்கான். 120 00:13:47,130 --> 00:13:49,463 முடிந்த போது மற்றவர்களை ஓய்வெடுக்கச் சொல். 121 00:13:49,546 --> 00:13:52,755 சூரிய உதயத்தில் கிளம்புவோம். இன்னும் வடக்கில் தேடுவோம். 122 00:13:52,838 --> 00:13:53,921 இன்னும் வடக்கிலா? 123 00:13:54,005 --> 00:13:56,921 ஆர்க்குகள் தொடர்வதற்காக இக்குறி துப்பாக விடப்பட்டது. 124 00:13:57,838 --> 00:14:00,338 போன முறை அதை என் சகோதரனின் மீது பார்த்தேன். 125 00:14:00,921 --> 00:14:02,046 அதை நாம தொடரணும். 126 00:14:02,546 --> 00:14:04,588 குறியீடு நூற்றாண்டுகள் பழையது. 127 00:14:04,671 --> 00:14:06,505 அதை விட்டவர் இறந்திருக்கலாம். 128 00:14:06,588 --> 00:14:08,463 அல்லது காத்திருக்கலாம், தன்னிடம் 129 00:14:08,546 --> 00:14:10,880 நழுவிய இருண்ட கலையை பயின்று சக்தி சேகரித்தபடி. 130 00:14:10,963 --> 00:14:12,963 நம் கட்டளைகளை மாதங்கள் முன்பே மீறினோம். 131 00:14:13,046 --> 00:14:17,088 நிச்சயமாக நாம் வீடு திரும்பி உயர் அரசரிடம் ஆலோசனை கேட்கணும். 132 00:14:17,588 --> 00:14:20,671 நம்ம படையில் வீடு திரும்ப அதிகமாக ஏங்கும் ஆன்மா 133 00:14:21,796 --> 00:14:23,713 சத்தியமாக என்னைவிட யாருமில்லை. 134 00:14:25,796 --> 00:14:28,796 இன்னமும் மரங்களின் ஒளியை என் முகத்தில் உணர்கிறேன். 135 00:14:30,796 --> 00:14:32,213 இன்னும் பார்க்க முடிகிறது. 136 00:14:34,213 --> 00:14:36,380 நம் எதிரி அடியோடு அழிந்துவிட்டான் 137 00:14:36,880 --> 00:14:40,463 என்று உறுதியாக நமக்கு தெரியும்வரை... 138 00:14:42,963 --> 00:14:44,463 என்னால் திரும்ப முடியாது. 139 00:15:17,588 --> 00:15:19,546 பனி பூதம்! 140 00:16:35,921 --> 00:16:37,380 நாம இங்கே வந்திருக்க கூடாது. 141 00:16:37,463 --> 00:16:38,796 நாம சீக்கிரம் கிளம்புவோம். 142 00:16:40,421 --> 00:16:41,880 உத்தரவு கொடுத்தாச்சு. 143 00:16:41,963 --> 00:16:43,463 விடிந்ததும் கிளம்புவோம். 144 00:16:50,755 --> 00:16:52,505 அப்ப நீ தனியா தான் போகணும். 145 00:17:27,963 --> 00:17:33,963 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 146 00:17:40,796 --> 00:17:45,088 ரோவனியன் அன்டுயினுக்கு கிழக்கே காட்டுப்பகுதி 147 00:17:55,671 --> 00:17:57,880 இங்கே ஏதோ தப்பா இருக்கு. வேட்டையாட ஏதுமில்லை. 148 00:17:57,963 --> 00:17:59,796 ஒவ்வொரு புதரிலும் ஓநாய்கள். 149 00:18:00,171 --> 00:18:02,546 அது விசித்திரமா இருக்கிறதா தோணலையா? 150 00:18:02,630 --> 00:18:04,380 உலகமே விசித்திரமானது. 151 00:18:04,713 --> 00:18:06,421 அதை நினைத்து குழம்பி போனா, 152 00:18:06,505 --> 00:18:08,796 இருக்கும் இடத்திலிருந்து எழ முடியாது. 153 00:18:09,338 --> 00:18:10,171 ஓய்! 154 00:18:13,255 --> 00:18:14,838 நடந்துட்டே இரு. 155 00:18:14,921 --> 00:18:16,005 ஏன்? 156 00:18:17,463 --> 00:18:20,046 பேட்ஜர் போலிருந்தது. நரியா இருக்கலாம். 157 00:18:20,421 --> 00:18:21,755 பெரும்பாலும் ஹார்ஃபுட். 158 00:18:21,838 --> 00:18:23,088 ஹார்ஃபுட்டா? 159 00:18:23,171 --> 00:18:25,005 எதுவும் இல்லைன்னா கவலை இல்லை, 160 00:18:25,088 --> 00:18:28,130 ஆனால் அதை பார்த்தா, கவனமா இரு. 161 00:18:28,213 --> 00:18:30,546 அவை ஆபத்தான உயரினங்கள். 162 00:18:31,963 --> 00:18:32,963 கதை விடாதே. 163 00:18:35,255 --> 00:18:37,380 ஆகட்டும். வேகமாக நட! 164 00:18:38,088 --> 00:18:41,255 சூரிய அஸ்தமனத்துக்கு முன் ஏரிக்கு போயிடலாம். 165 00:19:09,546 --> 00:19:11,213 தெளிவா இருக்கு. 166 00:19:25,796 --> 00:19:26,796 நோரி! 167 00:19:28,296 --> 00:19:29,380 நோரி! 168 00:19:30,505 --> 00:19:31,671 நோரி! 169 00:19:37,171 --> 00:19:38,338 நோரி! 170 00:19:57,796 --> 00:20:00,421 பயணிகளா? ஆண்டின் இந்நேரத்திலா? 171 00:20:00,505 --> 00:20:03,380 இது ஒரு சகுனம், உறுதியா சொல்றேன். அதுவும் கெட்டது. 172 00:20:03,463 --> 00:20:05,463 -வரவர கெட்டதுதான். -நிதானி, மால்வா. 173 00:20:05,546 --> 00:20:08,796 இவ்வளவு சீக்கிரம் பயணிகள் வந்த கடைசி முறை, அது பெரும் பனி. 174 00:20:08,880 --> 00:20:12,255 அந்த பருவம் எவ்வளவு இருண்டது என்பதை மறந்திடவே கூடாது. 175 00:20:12,338 --> 00:20:15,838 வழி தவறி வந்திருப்பாங்க, அவ்வளவுதான். அதுதான் காரணமா இருக்கும். 176 00:20:15,921 --> 00:20:17,255 இரவு உணவை கெடுக்க போறே. 177 00:20:17,338 --> 00:20:19,213 கீழே, மேலே, கீழே கண்டேன். 178 00:20:19,296 --> 00:20:20,963 குழந்தைங்க இன்னும் இருக்காங்க. 179 00:20:21,046 --> 00:20:23,588 நல்லா இருப்பாங்க, கோல்டி. 180 00:20:23,671 --> 00:20:26,380 நோரி அவங்க கூட இருக்கா. நோரியை உனக்கு தெரியுமே. 181 00:20:26,463 --> 00:20:28,296 ஆமாம். தெரியும். 182 00:20:30,713 --> 00:20:32,296 இப்ப நாம திரும்பலாமா? 183 00:20:32,380 --> 00:20:34,880 நம்மை கொல்லக்கூடிய 110 விஷயங்கள் இங்க இருக்கு. 184 00:20:34,963 --> 00:20:38,255 நீ கவலைப்படுவதை சேர்த்தா நூற்றி பதினொன்று. 185 00:20:38,338 --> 00:20:40,838 நாம இவ்வளவு தூரம் வரக்கூடாதென தெரியுமே. 186 00:20:40,921 --> 00:20:43,546 நாம செய்யக்கூடாததை செய்யலைன்னா, 187 00:20:43,630 --> 00:20:45,255 நாம எதையுமே செய்ய மாட்டோம். 188 00:20:45,380 --> 00:20:46,213 முதலில் நான்! 189 00:20:48,713 --> 00:20:50,921 போங்க, இப்போ. குட்டையை கவனி. 190 00:20:51,880 --> 00:20:53,380 உன் தலையை கவனி. 191 00:20:55,296 --> 00:20:56,130 இந்தப் பக்கம்! 192 00:20:56,630 --> 00:20:57,755 நோரி! 193 00:20:58,630 --> 00:20:59,921 பிடிச்சுட்டேன். 194 00:21:00,338 --> 00:21:01,171 அது... 195 00:21:01,630 --> 00:21:02,713 நோரி! 196 00:21:07,921 --> 00:21:09,005 மயக்குது. 197 00:21:11,880 --> 00:21:13,130 வா. 198 00:21:13,213 --> 00:21:14,963 நாம இப்ப திரும்பலாமா? 199 00:21:15,046 --> 00:21:17,755 -ஆனால் நீ இன்னும் அதை பார்க்கலை. -எதை பார்க்கலை? 200 00:21:17,838 --> 00:21:20,755 என்னை கேட்டா, ஒரு மலை பூதம் ஒளிய நல்ல இடம். 201 00:21:21,921 --> 00:21:23,546 சிறந்த மகிமை, அற்புதம். 202 00:21:33,755 --> 00:21:34,921 நோரி! 203 00:21:55,005 --> 00:21:56,171 நோரி! 204 00:21:57,380 --> 00:21:58,546 எதையோ கண்டேன். 205 00:22:00,005 --> 00:22:01,713 சேற்றில் ஏதோ இருக்கு. 206 00:22:02,588 --> 00:22:03,755 என்ன அது? 207 00:22:05,838 --> 00:22:07,255 காலடி தடம் போலிருக்கு. 208 00:22:09,505 --> 00:22:10,546 ஒரு நாய். 209 00:22:11,255 --> 00:22:14,171 நாய் தான். நாய்களுக்கு பெர்ரிகள் பிடிக்குமே. 210 00:22:20,921 --> 00:22:23,005 அது நம் பெர்ரிகளை தின்னுமா? 211 00:22:23,088 --> 00:22:25,171 அது நம்மை பார்க்கலைன்னா, தின்னாது. 212 00:22:25,921 --> 00:22:29,255 ஹேய். இரண்டு இரண்டு பேரா, கைபிடிங்க. போகும் நேரமாச்சு. 213 00:22:29,338 --> 00:22:31,796 -என்ன பெரிய அவசரம்? -ஓநாய். 214 00:22:34,130 --> 00:22:35,880 உன் சகோதரி சொன்னாளே. நேரமாச்சு. 215 00:22:35,963 --> 00:22:37,796 போ, இப்ப. ஆகட்டும். 216 00:22:37,880 --> 00:22:40,755 முகாமுக்கு முதலில் போனா அறுவடை விழாவில் முதல் பை. 217 00:22:40,838 --> 00:22:43,046 போகலாம். நாம வேலி வரைக்கும் போகலாம். 218 00:22:43,130 --> 00:22:47,338 நினைவிருக்கட்டும், யாராவது கேட்டா, நாம நத்தைகளை தோண்டி எடுத்தோம். 219 00:22:57,130 --> 00:23:01,088 "தூர மேற்கு... அழிவில்லா சாம்ராஜ்ஜியங்கள்... 220 00:23:01,171 --> 00:23:02,921 "கடைசியா, அவங்க போறாங்க... 221 00:23:03,880 --> 00:23:05,088 "வீட்டுக்கு. 222 00:23:07,630 --> 00:23:11,463 "நூற்றாண்டுகளாக, ஒவ்வொரு சந்து பொந்தையும் தேடியிருக்காங்க, 223 00:23:11,546 --> 00:23:14,171 "நம் எதிரியின் கடைசி எச்சக்கூறுகளை தள்ளியபடி. 224 00:23:14,755 --> 00:23:17,421 "வசந்த கால மழை போல, ஒரு இறந்த விலங்கின்... 225 00:23:18,380 --> 00:23:19,463 "எலும்புகள் மீது." 226 00:23:21,588 --> 00:23:24,921 "வசந்த கால மழை போல, ஒரு இறந்த விலங்கின்..." 227 00:23:26,713 --> 00:23:28,046 ஹெரால்ட் எல்ராண்ட். 228 00:23:30,505 --> 00:23:31,671 கடைசியில். 229 00:23:32,838 --> 00:23:35,671 ஆமாம். நான் கண்டுபிடிக்கப்பட விரும்பாதது போலிருந்தது. 230 00:23:35,963 --> 00:23:37,255 என்ன செய்தி? 231 00:23:37,338 --> 00:23:39,088 நீங்க அடுத்த பருவத்தில் கலந்துகொள்ள 232 00:23:39,171 --> 00:23:41,755 அனுமதி கிடையாதென தெரிவிக்க கவுன்சில் வருந்துகிறது. 233 00:23:44,005 --> 00:23:45,380 எல்ஃப்-லார்ட்ஸ் மட்டுமே. 234 00:23:48,380 --> 00:23:49,796 வேறு ஏதாவது? 235 00:23:49,880 --> 00:23:52,005 ஆமாம். உங்க தோழி வந்துட்டாங்க. 236 00:23:52,921 --> 00:23:55,338 வந்துட்டாளா? ஏன் சொல்லலை? 237 00:24:02,255 --> 00:24:03,463 விழாவிற்கு. 238 00:24:05,505 --> 00:24:11,505 லிண்டன் ஹை எல்வ்ஸின் தலைநகரம் 239 00:24:21,505 --> 00:24:22,671 கலாட்ரியல். 240 00:24:24,671 --> 00:24:25,630 எல்ராண்ட். 241 00:24:27,046 --> 00:24:29,046 லிண்டன் உன்னை அருளோடு வரவேற்கிறது. 242 00:24:29,130 --> 00:24:30,796 அருளோடு, வரவேற்கப்பட்டேன். 243 00:24:36,296 --> 00:24:40,213 கடக்கும் போது, ஒரு பாடல் கேட்கும் என்று நான் கேள்விப்பட்டேன். 244 00:24:40,296 --> 00:24:42,421 அதன் நினைவை நாம் அனைவரும் சுமக்கிறோம். 245 00:24:43,630 --> 00:24:45,088 மிடில் எர்த்திலுள்ள 246 00:24:45,171 --> 00:24:48,880 எந்த உணர்வையும்விட போதையூட்டும் வெளிச்சத்தில் மூழ்கியிருக்கிறாய். 247 00:24:48,963 --> 00:24:53,213 நான் குழந்தையாக இருந்தபோது, எனக்கு அந்த உணர்வு மட்டுமே தெரியும். 248 00:24:53,296 --> 00:24:55,005 இப்போது உன்னை பார். 249 00:24:55,088 --> 00:24:58,088 வடக்கு படைகளின் கமாண்டர். வேஸ்ட்லேண்ட்ஸின் போராளி. 250 00:24:58,755 --> 00:25:03,046 நீ அழுக்கும் சேறும் படிந்து வருவாயென பாதி எதிர்பார்த்தேன். 251 00:25:03,130 --> 00:25:06,171 இந்த முறை, பனியினால் தோலுறைவும், பூத ரத்தமும். 252 00:25:07,171 --> 00:25:08,255 படையும் இல்லை. 253 00:25:09,380 --> 00:25:10,796 எல்லாத்தையும் சொல். 254 00:25:11,463 --> 00:25:14,796 இந்த குறி இருப்பதே, சாரான் தப்பித்தானென நிரூபிக்குது. 255 00:25:14,880 --> 00:25:16,130 அவன் இன்னும் இருக்கான். 256 00:25:16,546 --> 00:25:18,171 ஆனால் இப்ப கேள்வி, எங்கே? 257 00:25:19,255 --> 00:25:22,130 அரசரிடம் ஒரு புது படை கேட்கப் போறேன். 258 00:25:22,213 --> 00:25:25,213 -அவர் போதுமானதை தந்தால்... -இப்பத்தான் வந்திருக்கே. 259 00:25:25,296 --> 00:25:27,505 இவ்வளவு சீக்கிரமா போவது பற்றி பேசணுமா? 260 00:25:27,588 --> 00:25:29,421 ஏன்னு உனக்கு நல்லா தெரியும். 261 00:25:30,255 --> 00:25:33,671 அதிகாரப்பூர்வ விஷயங்களை விவாதிக்க பிறகு போதிய நேரமிருக்கும். 262 00:25:34,713 --> 00:25:36,296 உன்னைப்பற்றி கேட்கணும். 263 00:25:37,713 --> 00:25:39,296 உன் பயங்கரமான பயணம். 264 00:25:40,005 --> 00:25:41,088 ஏன், எல்ராண்ட். 265 00:25:41,171 --> 00:25:43,296 நீ நிஜமா அரசியல்வாதியாயிட்டே. 266 00:25:43,380 --> 00:25:45,130 அது கெட்டது மாதிரியே சொல்லுற. 267 00:25:45,213 --> 00:25:48,546 முகஸ்துதியால் சமாதானமாகும் அரசவை ஆளில்லை நான். 268 00:25:49,880 --> 00:25:52,296 நான் நேரடியாக அரசரிடம் பேசக் கோருகிறேன். 269 00:25:54,713 --> 00:25:56,421 நீ அதை தெளிவாக்கிட்டே. 270 00:25:57,755 --> 00:25:59,713 அதனால் நானும் அதுபோல தெளிவா இருக்கேன். 271 00:26:02,755 --> 00:26:05,588 அங்கு உன்னை மீறியது உன் படை அல்ல, 272 00:26:06,088 --> 00:26:08,421 ஆனால் நீதான் அரசரை மீறினாய், 273 00:26:09,296 --> 00:26:12,046 உனக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை மறுத்ததன் மூலம். 274 00:26:13,755 --> 00:26:15,338 பெருந்தன்மையோடு, 275 00:26:15,421 --> 00:26:18,130 உன் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த தேர்வு செய்தார்... 276 00:26:18,963 --> 00:26:21,296 உன் அவமதிப்பை பற்றி யோசிப்பதை விட. 277 00:26:23,755 --> 00:26:25,421 மீண்டும் அவரை சோதித்தால், 278 00:26:25,505 --> 00:26:28,921 நீ நம்பியதை விட அவர் வரவேற்காது போகலாம். 279 00:26:35,421 --> 00:26:38,463 சந்திப்பை ஏற்பாடு செய்வீர்களா இல்லையா? 280 00:26:40,588 --> 00:26:43,546 விழாவிற்கு பிறகும் அதுவே உன் ஆசையெனில், 281 00:26:43,630 --> 00:26:45,046 அது கிடைக்கும். 282 00:26:57,338 --> 00:26:58,838 அவ திரும்பிட்டா. 283 00:26:58,921 --> 00:27:01,505 -எப்படி இருக்கே? -நல்லா இருக்கேன், அப்பா. 284 00:27:01,588 --> 00:27:03,046 அவளை பாரு! 285 00:27:03,130 --> 00:27:06,130 அதையெல்லாம் ஆற்றங்கரையில் கண்டியா என்ன? 286 00:27:06,963 --> 00:27:08,921 பயணிகளை பற்றி கேள்விப்பட்டியா? 287 00:27:09,005 --> 00:27:11,421 -பயணிகளா? -வேட்டைக்காரர்கள். 288 00:27:12,005 --> 00:27:13,338 இரண்டு பேர். 289 00:27:13,421 --> 00:27:15,505 கற்பாறைகள் போல பெரிசா. 290 00:27:15,588 --> 00:27:17,046 அந்த மேட்டின் மீது. 291 00:27:17,130 --> 00:27:18,630 தவற விட்டதை நம்ப முடியலை. 292 00:27:18,713 --> 00:27:22,380 நீ வீட்டிற்கு அருகே இருந்தால், எதையும் தவற விட மாட்டாய். 293 00:27:31,213 --> 00:27:33,421 மீண்டும் பழைய பண்ணைக்கு போயிருக்கே. 294 00:27:34,130 --> 00:27:35,296 இல்லையா? 295 00:27:36,421 --> 00:27:37,421 கவனமா இருந்தேன். 296 00:27:37,505 --> 00:27:39,421 ஆனால் பசங்க இருக்க மாட்டாங்க. 297 00:27:39,505 --> 00:27:41,088 மன்னி, எனக்கு தெரியாது. 298 00:27:41,171 --> 00:27:43,755 அறுவடைக்கு முன் வேட்டைக்காரர்கள் வர மாட்டாங்க. 299 00:27:44,421 --> 00:27:45,630 அல்லது ஓநாய்கள். 300 00:27:48,505 --> 00:27:51,046 தெற்கில் ஏதாவது பிரச்சினையோன்னு தோணுது. 301 00:27:51,130 --> 00:27:54,213 உனக்கு அதைப்பற்றி என்ன கவலை, எலனார் ப்ராண்டிஃபுட்? 302 00:27:58,671 --> 00:28:00,380 நீங்க யோசிச்சதே இல்லையா... 303 00:28:01,421 --> 00:28:02,921 அங்கே வேறு என்ன இருக்கிறது? 304 00:28:03,546 --> 00:28:04,880 ஆறு எவ்வளவு தூரம் பாயுது 305 00:28:04,963 --> 00:28:08,588 அல்லது வசந்தத்தில் குருவிகள் பாடும் புதிய பாடல்களை எங்கே கற்கின்றன? 306 00:28:09,171 --> 00:28:13,338 இந்த உலகில் அதிசயங்கள் இருக்கிறதாக நான் உணர்கிறேன். 307 00:28:13,880 --> 00:28:15,505 நாம் திரிவதற்கு அப்பால். 308 00:28:16,463 --> 00:28:18,005 நான் சொல்லியிருக்கேன். 309 00:28:18,755 --> 00:28:20,588 எண்ணற்ற முறை. 310 00:28:22,505 --> 00:28:24,921 எல்வ்ஸ் காடுகளை காக்கணும். 311 00:28:25,005 --> 00:28:28,255 ட்வார்வ்ஸ், தங்கள் சுரங்கங்களை. மனிதர்கள், தங்கள் வயல்களை. 312 00:28:29,171 --> 00:28:32,838 மரங்கள்கூட வேரின்கீழ் உள்ள மண்ணை பற்றி கவலை படணும். 313 00:28:33,463 --> 00:28:37,296 ஆனால் ஹார்ஃபுட்ஸ் நமக்கு, உலகை பற்றிய கவலைகள் கிடையாது. 314 00:28:37,380 --> 00:28:41,130 நாம் நீண்ட ஓடையில் வெறும் சிற்றலைகள். 315 00:28:41,546 --> 00:28:43,963 கடக்கும் பருவங்கள் நம் பாதையை அமைக்கிறது. 316 00:28:44,838 --> 00:28:47,713 யாரும் தடம்புரள மாட்டாங்க, தனித்து போக மாட்டாங்க. 317 00:28:49,713 --> 00:28:52,421 ஒருவருக்கு ஒருவர் இருக்கோம். பாதுகாப்பா. 318 00:28:53,880 --> 00:28:55,380 அப்படியே உயிர் வாழ்வோம். 319 00:28:58,755 --> 00:29:00,880 ஆகட்டும். அப்பாவுக்கு உதவு. 320 00:29:03,588 --> 00:29:07,005 அது உங்க பிரச்சினை. பாருங்க, சக்கரம் வட்டமாக இருக்கணும். 321 00:29:40,713 --> 00:29:44,671 வீரமிக்க போராளிகள் 322 00:29:44,755 --> 00:29:49,296 நம் முன் முழங்காலிடுகின்றனர், வெற்றியுடன். 323 00:29:50,963 --> 00:29:53,713 ஒரு காலம் முன்பு மோர்கோத் வீழ்ந்திருந்தாலும், 324 00:29:54,421 --> 00:29:58,213 அவன் நிழலிலிருந்து புதிய தீமை எழுமென சிலர் பயந்தனர். 325 00:29:58,296 --> 00:30:00,130 அதனால் பல நூற்றாண்டுகளாக, 326 00:30:00,213 --> 00:30:04,296 இந்த வீரர்கள், சந்து பொந்தெல்லாம் தேடியுள்ளனர், 327 00:30:04,380 --> 00:30:07,630 நம் எதிரியின் கடைசி எச்சக்கூறுகளை துடைத்தபடி, 328 00:30:07,713 --> 00:30:11,421 பாழான சடல எலும்புகள் மீது வசந்தகால மழை போல. 329 00:30:14,130 --> 00:30:15,463 இப்ப, இறுதியாக, 330 00:30:16,671 --> 00:30:20,046 வெற்றியோடு நம்மிடம் திரும்பியுள்ளனர், 331 00:30:20,130 --> 00:30:23,255 எந்த சந்தேகமும் இன்றி நிரூபித்துள்ளனர் 332 00:30:23,338 --> 00:30:27,463 போருக்கான நம் நாட்கள் முடிந்தன என்று. 333 00:30:29,796 --> 00:30:30,880 இன்று... 334 00:30:32,713 --> 00:30:35,546 அமைத்திக்கான நாட்கள் நமக்கு தொடங்குகின்றன. 335 00:31:01,546 --> 00:31:04,963 நம் நன்றியுணர்வின் அளவாக, 336 00:31:06,046 --> 00:31:08,588 இந்த ஹீரோக்களுக்கு மரியாதை வழங்கப்படும் 337 00:31:08,671 --> 00:31:11,421 நம் கதைகளில் செய்யாதபடி. 338 00:31:11,505 --> 00:31:14,796 தி கிரே ஹேவன்ஸுக்கு பாதுகாப்பாக கூட்டிச் செல்லப்படுவர், 339 00:31:14,880 --> 00:31:19,213 மற்றும் கடலைத் தாண்டி ப்லெஸ்ட் ரியலமில், தூர மேற்கில் 340 00:31:20,296 --> 00:31:24,005 நிரந்தரமாக வாழ அனுமதி வழங்கப்படும். 341 00:31:24,088 --> 00:31:27,255 வாலினாரின் அழிவில்லா சாம்ராஜ்ஜியங்கள். 342 00:31:28,088 --> 00:31:31,921 கடைசியில், அவங்க வீட்டுக்கு போறாங்க. 343 00:32:34,046 --> 00:32:37,380 நீ அங்கேயே நிற்க போறியா, ஆர்க் போல சுவாசித்தபடி? 344 00:32:40,588 --> 00:32:44,005 வீழ்த்த நினைப்போரை வீழ்த்தினால் 345 00:32:44,088 --> 00:32:46,671 வெற்றி மிக சுவையாக இருக்கும் என்பார்கள். 346 00:32:47,421 --> 00:32:49,255 நான் வெற்றிகரமா உணரலை. 347 00:32:49,338 --> 00:32:52,380 இன்றைய மரியாதைக்கு நீ தகுதியானவ. 348 00:32:53,255 --> 00:32:54,921 உன் சகோதரன் பெருமைப்படுவான். 349 00:33:01,213 --> 00:33:03,963 இவற்றை முதலில் செதுக்கியது நினைவிருக்கு. 350 00:33:05,296 --> 00:33:08,713 உயிர் வாழும் ஒன்றின் மீது, இறந்ததை பாதுகாப்பது போல. 351 00:33:08,796 --> 00:33:12,546 என் ஓய்வு இங்கு அவர்களுடன்தான் இருக்குமென என்னில் ஒரு பங்கு 352 00:33:12,630 --> 00:33:13,921 எப்போதும் நம்பியது. 353 00:33:14,963 --> 00:33:16,880 ஆனால், அவர்களை விட்டு போகணும். 354 00:33:18,463 --> 00:33:22,463 இது உன் அரசரின் பரிசு. 355 00:33:26,005 --> 00:33:28,005 நான் மறுக்க முடிவு செய்துள்ள பரிசு. 356 00:33:29,130 --> 00:33:30,130 கலாட்ரியல், நீ... 357 00:33:30,213 --> 00:33:32,921 சாரானை வேட்டையாடி என் சகோதரன் உயிரை கொடுத்தான். 358 00:33:34,421 --> 00:33:36,421 அவன் பணி இப்போது என்னுடையது. 359 00:33:39,255 --> 00:33:42,463 வடக்கில் நம்மிடமிருந்து தப்பித்த எதிரியை தேடிப் போகிறேன். 360 00:33:44,088 --> 00:33:46,130 தேவைப்பட்டால், தனியாக. 361 00:33:48,296 --> 00:33:51,296 ஆமாம். உன் மர்ம முத்திரை. 362 00:33:51,380 --> 00:33:53,213 உயர் அரசரோடு அதை பகிர்ந்தேன். 363 00:33:53,296 --> 00:33:55,088 -அப்ப ஏன்... -முத்திரையை பார்ப்பது 364 00:33:55,171 --> 00:33:57,713 சாரானை தேடுவதை நீ நெருங்கிவிட்டதாக அர்த்தமில்லை. 365 00:33:57,796 --> 00:34:01,171 முடிந்தது. தீமை போய்விட்டது. 366 00:34:01,255 --> 00:34:03,630 அப்ப இங்கிருந்து அது ஏன் போகலை? 367 00:34:05,046 --> 00:34:07,046 நீ கடந்த எல்லாத்துக்கும் பிறகு... 368 00:34:08,421 --> 00:34:10,671 முரண்பாடாக உணர்வது இயற்கைதான். 369 00:34:11,671 --> 00:34:13,130 முரண்பாடாகவா? 370 00:34:16,755 --> 00:34:19,671 நான் அறிந்தவாறு தீமையை நீ அறியாததுக்கு நன்றி. 371 00:34:20,880 --> 00:34:23,130 ஆனால் நான் பார்த்ததை நீ பார்த்ததில்லை. 372 00:34:23,213 --> 00:34:24,255 பார்த்திருக்கேன். 373 00:34:24,338 --> 00:34:27,963 நான் பார்த்த விஷயங்களை நீ பார்த்ததில்லை. 374 00:34:28,796 --> 00:34:30,921 தீய சக்தி தூங்காது, எல்ராண்ட். 375 00:34:32,255 --> 00:34:33,463 அது காத்திருக்கும். 376 00:34:34,130 --> 00:34:36,963 நாம் மெத்தனமாக இருக்கும் தருணத்தில், 377 00:34:37,046 --> 00:34:38,463 நம்மை குருடாக்கும். 378 00:34:40,421 --> 00:34:43,046 நீ பயப்படுவது போலத்தான் என வைத்துக் கொள்வோம், 379 00:34:43,130 --> 00:34:46,463 எதிரி எங்கோ காத்திருக்கிறான் என்று. 380 00:34:47,213 --> 00:34:50,296 அவனை தேடுவது உனக்கு திருப்தியாக இருக்குமென நம்பறியா? 381 00:34:50,380 --> 00:34:54,046 உன் வாளின் முனையில் இன்னொரு ஆர்க், உனக்கு அமைதி தருமா? 382 00:34:54,130 --> 00:34:56,046 -நீ தவறா இருந்தா... -நான் தவறில்லை. 383 00:34:56,130 --> 00:34:57,588 நீ தவறா இருந்தா, 384 00:34:58,463 --> 00:35:01,630 தூரதேசங்களில் இன்னும் பல எல்வ்ஸை இறக்க வழிநடுத்துவியா? 385 00:35:03,463 --> 00:35:05,588 நீ போதுமானதை செய்ததாக நம்புவதற்கு 386 00:35:05,671 --> 00:35:08,505 இந்த வழியில் இன்னும் எத்தனை சிலைகளை சேர்ப்பாய்? 387 00:35:09,338 --> 00:35:11,963 இந்த அழைப்பை வரலாற்றில் யாரும் மறுத்ததில்லை. 388 00:35:12,796 --> 00:35:14,880 இப்ப செய்தா, மீண்டும் வராது போகலாம். 389 00:35:15,755 --> 00:35:18,755 நீ இங்கே சுற்றுவாய், புறக்கணிக்கப்பட்டு, 390 00:35:18,838 --> 00:35:21,088 இருண்ட கிசுகிசுப்புகள், கனவுகளில் விஷமேறி. 391 00:35:21,171 --> 00:35:24,338 மேற்கில், என் விதி நன்றாக இருக்குமென நினைக்கிறியா? 392 00:35:25,463 --> 00:35:28,921 என் காதில் போர்க்குரலை பாடல் கிண்டல் செய்யுமா? 393 00:35:30,921 --> 00:35:34,838 மிடில் எர்த்தின் அனைத்து பயங்கரங்களையும் நான் வென்றதாக சொல்கிறாய். 394 00:35:36,380 --> 00:35:38,588 இருந்தும் அவற்றை என்னில் உயிரோடு விடுவாயா? 395 00:35:39,671 --> 00:35:41,005 என்னுடன் எடுத்துப்போக? 396 00:35:42,005 --> 00:35:45,921 அழியாது, மாறாது, உடையாது, 397 00:35:46,963 --> 00:35:49,338 குளிரில்லா வசந்த நிலத்திற்குள்? 398 00:35:49,421 --> 00:35:51,838 ப்லெஸ்ட் ரியல்மில் மட்டும்தான் 399 00:35:51,921 --> 00:35:54,421 உன்னுள் உடைந்தது குணமாகும். 400 00:35:55,255 --> 00:35:56,338 அங்கே போ. 401 00:35:56,838 --> 00:35:58,630 போ, நான் உறுதியளிக்கிறேன்... 402 00:35:59,338 --> 00:36:03,255 நீ நினைக்கும் அச்சுறுத்தலின் வதந்தி ஒரு துளியும் உண்மையாக இருந்தால், 403 00:36:03,755 --> 00:36:06,130 அதை சரி செய்யும் வரை நான் ஒய மாட்டேன். 404 00:36:08,005 --> 00:36:10,421 நீண்ட காலம் போராடினாய், கலாட்ரியல். 405 00:36:13,005 --> 00:36:14,546 வாளை கீழே வை. 406 00:36:15,296 --> 00:36:17,213 அது இல்லாமல், நான் என்னவாவேன்? 407 00:36:17,296 --> 00:36:18,921 நீ எப்போதும் இருந்தபடி. 408 00:36:21,880 --> 00:36:23,130 என் தோழியாக. 409 00:36:27,046 --> 00:36:30,046 லிண்டன் 410 00:36:42,088 --> 00:36:43,546 தி சவுத்லாண்ட்ஸ் மனிதர்களின் ராஜ்ஜியங்கள் 411 00:37:20,296 --> 00:37:21,713 மாலை வணக்கம். 412 00:37:21,796 --> 00:37:23,338 மூன்று நகர்வுகளில் கேரேஸ். 413 00:37:28,171 --> 00:37:29,630 விஷம்தான் வைத்திருக்காங்க. 414 00:37:29,713 --> 00:37:31,630 விஷமா? யார்? 415 00:37:32,171 --> 00:37:35,255 தெரிந்தவரை, கண்ணீர் நிரம்பிய குள்ளனே செஞ்சிருப்பான். 416 00:37:47,380 --> 00:37:48,588 அரோண்டீர். 417 00:37:49,921 --> 00:37:52,255 ஏற்கனவே பதினைந்து நாட்கள் ஆயிடுச்சா? 418 00:37:53,463 --> 00:37:54,588 ஆமாம். 419 00:37:56,421 --> 00:38:00,088 இந்த முறை சொல்ல கொஞ்சம்தான், மன்னிக்கணும். 420 00:38:00,171 --> 00:38:03,588 சில மோசமான மோதல்கள், கொஞ்சம் ஏமாற்றுதல்கள். 421 00:38:04,171 --> 00:38:06,296 மேலும்... ஆமாம்! 422 00:38:06,380 --> 00:38:08,838 போன ட்ரூஸ்டே, கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. 423 00:38:08,921 --> 00:38:10,838 ஒரு பெண்ணுக்காக சண்டை. 424 00:38:11,255 --> 00:38:14,671 அவனுக்கு கவனமில்லை, அவளோ அதிக கவனம், புரியுதா. 425 00:38:16,880 --> 00:38:19,005 ஒரு பானம் வேணுமா, வீரனே? 426 00:38:19,088 --> 00:38:21,296 எப்போதும் போல என் கிணறு உன்னுடையது. 427 00:38:21,380 --> 00:38:22,880 அப்ப விஷம்? 428 00:38:23,380 --> 00:38:24,421 என்ன விஷம்? 429 00:38:24,505 --> 00:38:26,296 நீங்க இப்ப விவாதிச்சீங்களே அது. 430 00:38:26,380 --> 00:38:27,505 இல்லை... 431 00:38:27,588 --> 00:38:30,630 விஷத்தன்மையான புல் பற்றி இவன் பேசிட்டு இருந்தான். 432 00:38:32,130 --> 00:38:34,963 கடந்து போன ஒருவன், அவனோட வயல் அழுகியது என்றான். 433 00:38:35,046 --> 00:38:37,213 களைகள் மட்டுமே வளருதாம். 434 00:38:37,296 --> 00:38:40,005 இந்த ஆள், எங்கிருந்து வந்தான்? 435 00:38:40,505 --> 00:38:42,005 சொல்லலை. கிழக்குன்னு தோணுது. 436 00:38:42,755 --> 00:38:44,171 அவன் என்று இங்கே வந்தான்? 437 00:38:44,630 --> 00:38:47,296 விடுப்பா, கத்தி-காது. 438 00:38:48,213 --> 00:38:50,255 அது மோசமான புல்வெளி. 439 00:38:51,338 --> 00:38:55,630 நீங்க எங்களை இணைத்து பேசறவங்க ஆயிரம் வருஷம் முன்ன இறந்துட்டாங்க. 440 00:38:55,713 --> 00:38:58,546 எப்ப நீங்க கடந்தகாலத்தை விடப் போறீங்க? 441 00:39:02,421 --> 00:39:05,963 பிடிக்குதோ, இல்லையோ, கடந்தகாலம் எல்லாரோடும் இருக்கு. 442 00:39:06,838 --> 00:39:10,838 ஒரு நாள், எங்க உண்மையான ராஜா திரும்புவார். 443 00:39:11,963 --> 00:39:16,463 உங்க கூரான பூட்ஸுக்கு கீழிருந்து எங்களை வெளியே எடுப்பார். 444 00:39:16,546 --> 00:39:18,213 நிதானிப்பா. இப்ப அமைதியாகு. 445 00:39:31,088 --> 00:39:31,921 நீ வா, தம்பி. 446 00:39:35,213 --> 00:39:37,213 வேறு ஏதாவது இருக்கா? 447 00:40:00,796 --> 00:40:02,213 உன் கையை கொடு. 448 00:40:20,838 --> 00:40:22,005 ஆல்ஃபிரின் விதைகள். 449 00:40:25,005 --> 00:40:27,671 இந்த மலரை சிறு வயதிலிருந்து பார்க்கலை. 450 00:40:28,421 --> 00:40:29,921 இதை எங்கே கண்டே? 451 00:40:30,588 --> 00:40:34,046 கடந்து போகும் மற்றொரு சிகிச்சையாளரோட வர்த்தம் செய்தேன். 452 00:40:34,130 --> 00:40:36,255 இதழ்களை நசுக்கி ஒரு எண்ணெய் எடுப்போம். 453 00:40:36,338 --> 00:40:37,963 அதை நசுக்குவீங்களா? 454 00:40:38,046 --> 00:40:39,505 மென்மையாக. 455 00:40:42,963 --> 00:40:44,963 உங்க வகையில் சிகிச்சையாளர்கள் உண்டா? 456 00:40:45,046 --> 00:40:46,421 இருக்காங்க. 457 00:40:46,505 --> 00:40:48,338 ஆனால் அவர்களை கைவினைஞர்கள் என்போம். 458 00:40:49,296 --> 00:40:53,338 பெரும்பாலான உடற்புண்கள் தானாகவே குணமாகும், 459 00:40:53,421 --> 00:40:57,838 அதனால, மறைந்த உண்மைகளை அழகு படைப்புகளாக தருவதுதான் அவர்கள் வேலை. 460 00:40:58,796 --> 00:41:01,463 அழகிற்கு ஆன்மாவை குணமாக்கும் சிறந்த சக்தியுண்டு. 461 00:41:03,755 --> 00:41:06,463 உனக்கு ஆல்ஃபிரின் மலர்கள் அழகாக இருக்குமென நம்பறேன். 462 00:41:13,755 --> 00:41:15,421 அடுத்த முறை சந்திக்கும்வரை. 463 00:41:15,505 --> 00:41:16,588 வீரனே. 464 00:41:27,296 --> 00:41:28,921 தெரிவிக்க ஏதும் உண்டா? 465 00:41:30,213 --> 00:41:31,880 வழக்கத்திற்கு மாறாக ஏதுமில்லை. 466 00:41:34,463 --> 00:41:35,671 அந்த கிணறு... 467 00:41:37,088 --> 00:41:38,338 எப்படி இருந்தது? 468 00:41:39,880 --> 00:41:41,296 தண்ணீர் இரைத்து வந்தாயா? 469 00:41:42,213 --> 00:41:43,963 ஆஸ்டிரித்தில் எதிர்பார்க்கிறாங்க. 470 00:41:46,088 --> 00:41:48,921 நீ செய்வது வாட்ச்வார்டனுக்கு தெரிஞ்சா, நான் என்ன 471 00:41:49,005 --> 00:41:51,921 விளைவுகளை சந்திக்க நேரிடும்னு யோசிச்சியா? 472 00:41:52,005 --> 00:41:53,671 நீங்க சொல்றது புரியலை. 473 00:41:53,755 --> 00:41:55,255 அவங்களை கவனிப்பது கஷ்டம் 474 00:41:55,338 --> 00:41:57,421 உன்மேல ஒரு கண் வைக்காம. 475 00:41:57,505 --> 00:41:58,755 அல்லது நான் குருடா? 476 00:41:58,838 --> 00:42:02,005 இல்லை. நீ நிறைய பேசறேன்னு நினைக்கிறேன். 477 00:42:02,713 --> 00:42:04,630 உன்னிடம் அழுகிய இலை நாற்றம் வருது. 478 00:42:04,713 --> 00:42:06,213 இல்லை, வரலை. 479 00:42:06,296 --> 00:42:07,463 ஆமாம், வருது. 480 00:42:15,296 --> 00:42:18,296 என் கருத்து இது. வரலாற்றில் தெரிந்தவரை, இருமுறைதான் 481 00:42:18,380 --> 00:42:21,505 எல்வ்ஸ், மனிதர்களுக்கு இடையே ஜோடி சேர முயற்சி நடந்தது. 482 00:42:21,588 --> 00:42:24,088 ஒவ்வொரு முறையும், சோகத்தில் முடிந்தது. 483 00:42:24,171 --> 00:42:25,255 மரணத்தில் முடிந்தது. 484 00:42:25,338 --> 00:42:27,255 நீ நினைவூட்ட வேண்டாம். 485 00:42:28,838 --> 00:42:30,421 அப்ப ஏன் நீடிக்கிறே? 486 00:42:31,213 --> 00:42:32,921 ஒரு காரணம் சொல்லு. ஒன்று. 487 00:42:33,005 --> 00:42:34,838 அரோண்டீர்! மேதோர்! 488 00:42:36,296 --> 00:42:39,213 போருக்கான நாட்கள் முடிந்ததாக அரசர் அறிவித்தார். 489 00:42:40,671 --> 00:42:43,088 தூரமான சாவடிகள் கலைக்கப்படுகின்றன. 490 00:42:44,546 --> 00:42:45,630 நாம கிளம்பறோம். 491 00:43:12,796 --> 00:43:14,380 கடைசி பார்வையா? 492 00:43:16,505 --> 00:43:19,005 இங்கே எழுபத்து ஒன்பது ஆண்டுகளா இருக்கேன். 493 00:43:21,130 --> 00:43:23,796 இது பழகிப் போச்சுன்னு நினைக்கிறேன். 494 00:43:25,463 --> 00:43:29,005 இந்த இடம் ஒரு காலத்தில் வெறும் கல் என்று நம்ப முடியுதா? 495 00:43:29,088 --> 00:43:31,088 நிறைய மாறிடுச்சு, வாட்ச்வார்டென். 496 00:43:31,963 --> 00:43:34,046 ஆனால் இங்கு வாழும் மக்கள் மாறவில்லை. 497 00:43:34,546 --> 00:43:38,546 மோர்கோத்துடன் நின்றவர்களின் ரத்தம் இன்னும் அவர்களுக்குள் ஓடுது. 498 00:43:40,963 --> 00:43:42,838 நீண்ட காலமாச்சு, வாட்ச்வார்டென். 499 00:43:47,838 --> 00:43:49,546 போருக்கு முன் நீ என்ன பண்ண? 500 00:43:50,463 --> 00:43:51,588 விளைப்பவன். 501 00:43:51,671 --> 00:43:55,338 அப்ப நீ திரும்பும்போது, விட்டு வந்ததை விட நிறையவே இருக்கும். 502 00:43:55,421 --> 00:43:58,213 மரியாதை, பெயர். 503 00:43:59,505 --> 00:44:01,171 உன் வாழ்க்கை புதுசா தொடங்கும். 504 00:44:02,171 --> 00:44:04,213 ஆனால் குறிச்சுக்கோ, அரோண்டீர், 505 00:44:04,838 --> 00:44:08,421 டிர்ஹராத் மக்களை நீ கவனிச்சிருக்கே, அதுவும் 79 வருடங்களாக, 506 00:44:08,505 --> 00:44:11,421 அவங்க மூதாதையர்கள் செய்ததால இல்லை... 507 00:44:12,880 --> 00:44:14,880 இப்பவும் யாராக இருக்காங்களோ அதனால. 508 00:44:20,421 --> 00:44:21,630 நன்றியோட இரு. 509 00:44:23,171 --> 00:44:25,338 மீண்டும் அவங்களை பார்க்க வேண்டாமென. 510 00:45:03,713 --> 00:45:06,921 கவனமா. அது ஃபயர்-ரூட் தூள். அதை மெதுவா செய்யணும். 511 00:45:07,255 --> 00:45:09,338 மெதுவா செய்தா இங்கயே இருக்கணும். 512 00:45:09,421 --> 00:45:11,296 இன்று காலை வெறுப்போட இருக்கே. 513 00:45:11,380 --> 00:45:14,005 தூங்கவே இல்லை. தரைப்பலகைகளில் 514 00:45:14,088 --> 00:45:16,130 -எலிகள் ஆடுது. -மீண்டுமா? 515 00:45:16,213 --> 00:45:18,921 கடந்து மூன்று இரவுகளாக. கீறிகிட்டு, சுரண்டிக்கிட்டு. 516 00:45:22,421 --> 00:45:24,255 அதில் ஒன்று இங்கே என்ன செய்யுது? 517 00:45:35,255 --> 00:45:36,755 நீங்க போறதா கேள்விப்பட்டேன். 518 00:45:37,796 --> 00:45:38,963 போறோம். 519 00:45:41,171 --> 00:45:43,171 உங்க மீதி படை எங்கே? 520 00:45:44,463 --> 00:45:48,005 பெரும்பாலும் இந்த கணத்தில் என்னை அவங்க தேடிட்டு இருப்பாங்க. 521 00:45:48,713 --> 00:45:50,380 அப்ப ஏன் என் வீட்டுக்கு வந்தீங்க? 522 00:46:03,755 --> 00:46:05,588 சொல்ல விரும்பறதை சொல்லு. 523 00:46:05,671 --> 00:46:07,171 ஏற்கனவே சொல்லியாச்சு. 524 00:46:08,046 --> 00:46:11,588 நூறு முறை, வார்த்தைகளை தவிற எல்லா வழியிலும். 525 00:46:13,588 --> 00:46:14,713 அம்மா. 526 00:46:16,255 --> 00:46:17,921 ஒரு மனிதன் தேடி வந்திருக்கார். 527 00:46:26,880 --> 00:46:27,963 அம்மா. 528 00:46:31,296 --> 00:46:33,130 விலங்குகளையும் குணமாக்குவீங்களா? 529 00:46:35,588 --> 00:46:37,588 ஒரு முறை பாருங்களேன். 530 00:46:38,505 --> 00:46:41,546 ஏதோ நோய் இருக்கு. 531 00:46:42,296 --> 00:46:43,713 எந்த மாதிரியான நோய்? 532 00:46:51,046 --> 00:46:52,546 காய்ச்சல் இல்லை. 533 00:46:54,546 --> 00:46:57,171 எந்த விதமான புண்களும் இல்லை. 534 00:46:58,380 --> 00:47:00,005 எங்கே மேய்ஞ்சுது? 535 00:47:00,088 --> 00:47:01,838 சில நாட்கள் முன் கிழக்கால போச்சு. 536 00:47:03,130 --> 00:47:04,421 எதையோ சாப்பிட்டாலோ? 537 00:47:09,213 --> 00:47:12,046 என்ன அது, அவளுக்குள்ளேந்து வெளிய வருது? 538 00:47:13,338 --> 00:47:14,921 கிழக்கில் எவ்வளவு தூரம்? 539 00:47:15,005 --> 00:47:17,380 ஹோர்டென் வரை போயிருக்கலாம். 540 00:47:24,630 --> 00:47:25,838 எங்கே போறீங்க? 541 00:47:25,921 --> 00:47:29,171 ஹோர்டெனுக்கு ஒரு நாள் பயணம். அந்தி சாயும் போது போயிடுவேன். 542 00:47:29,255 --> 00:47:30,588 நானும் உங்களுடன் வர்றேன். 543 00:47:43,088 --> 00:47:44,838 வேகமாக செய். 544 00:47:44,921 --> 00:47:47,671 நம்மை இங்கே பார்த்தா, பல்லை உடைப்பான். 545 00:47:50,880 --> 00:47:53,005 தவறுதலாக தான் அதை பார்த்தேன். 546 00:47:53,088 --> 00:47:54,380 பலகையில் நின்றேன். 547 00:47:56,921 --> 00:47:58,088 அப்ப, சொல்லு, 548 00:47:59,088 --> 00:48:01,630 உண்மையா? உங்க அம்மா பற்றி? 549 00:48:02,588 --> 00:48:04,005 என்ன உண்மையா? 550 00:48:04,713 --> 00:48:08,505 வால்ட்ரெக் அவங்களையும் ஒரு எல்ஃபையும் கிணற்றுக்கு 551 00:48:08,630 --> 00:48:11,130 பின்னால பிடிச்சார்னு கேள்விப்பட்டேன். 552 00:48:11,213 --> 00:48:12,338 உனக்கு யார் சொன்னது? 553 00:48:12,421 --> 00:48:13,671 எல்லாரும். 554 00:48:14,130 --> 00:48:15,296 அது ஒரு பொய். 555 00:48:15,838 --> 00:48:18,380 அதனால் தான் உங்க அப்பா ஓடிப் போயிட்டார் போல. 556 00:48:18,463 --> 00:48:19,796 எங்க அப்பா ஓடிப் போகலை. 557 00:48:19,880 --> 00:48:21,713 அப்ப அவருக்கு என்ன ஆச்சு? 558 00:48:21,796 --> 00:48:23,463 உனக்கு தெரியவே தெரியாதுல்ல? 559 00:48:27,005 --> 00:48:29,838 கிறுக்கன் அரசரோட சொத்தை வெச்சிருக்கான். 560 00:48:31,421 --> 00:48:32,921 இதுதான் நிஜமான சொத்து. 561 00:48:53,130 --> 00:48:54,130 கவனமா! 562 00:48:56,630 --> 00:48:57,713 போ, சீக்கிரமா. 563 00:49:36,546 --> 00:49:38,546 என் பார்வைக்கு அப்பால் போயிட்டா. 564 00:49:39,755 --> 00:49:42,838 அவ தேடுதல் தொடரணும்னு கலாட்ரியல் உறுதியா இருந்தா. 565 00:49:44,088 --> 00:49:47,088 அது தொடர்ந்திருந்தா, அவ அழிக்க நினைச்ச 566 00:49:47,171 --> 00:49:52,546 தீமையை கவனக்குறைவால் உயிரோட வெச்சிருப்பான்னு தீர்க்க தரிசனம் செய்தோம். 567 00:49:54,588 --> 00:49:57,671 தீயை அணைக்க முற்படும் காற்றே 568 00:49:57,755 --> 00:50:00,171 அது பரவ காரணாக இருக்கலாம். 569 00:50:02,005 --> 00:50:03,755 பிறகு அவள் தேடிய நிழல்... 570 00:50:06,588 --> 00:50:08,171 அது இருப்பதாக நம்பறீங்களா? 571 00:50:08,796 --> 00:50:11,421 அதைப்பற்றி மனசை அமைதிப்படுத்து. 572 00:50:12,755 --> 00:50:14,963 நீங்க செய்தது சரி. 573 00:50:15,046 --> 00:50:18,338 கலாட்ரியலுக்கும் மிட்டில் எர்த்துக்கும். 574 00:50:20,296 --> 00:50:22,296 எது சரி என புரிவது கடினமா இருக்கு... 575 00:50:24,213 --> 00:50:26,421 நட்பும் கடமையும் கலக்கப்படும் போது. 576 00:50:28,421 --> 00:50:31,088 அப்படி வழிநடத்துபவரின் சுமை இது, 577 00:50:32,005 --> 00:50:34,213 செய்ய நினைப்பவருக்கும். 578 00:50:35,963 --> 00:50:38,255 கலாட்ரியல் மேற்கு நோக்கி பயணிக்கிறாள். 579 00:50:38,338 --> 00:50:43,171 நீயும் நானும் புதிய விடியலை பார்க்கணும். 580 00:50:45,296 --> 00:50:46,463 அதுக்கான ஒரு படி, 581 00:50:48,046 --> 00:50:51,630 செலப்ரிம்போர் பிரபுவின் வேலை உனக்கு பரிச்சயமா? 582 00:50:52,671 --> 00:50:55,088 மிகச்சிறந்த எல்வென் கொல்லர்கள், நிச்சயமா. 583 00:50:55,505 --> 00:50:59,171 சிறு வயதிலிருந்து அவரது கலைத்திறனை ரசித்தேன். ஏன் கேட்கறீங்க? 584 00:50:59,255 --> 00:51:04,005 அவர் புதிய திட்டத்தை தொடங்க போறார். ஒரே முக்கியத்துவத்துடனானது. 585 00:51:05,088 --> 00:51:08,213 நீ அவரோடு வேலை செய்யணுமென நாங்க முடிவு செய்தோம். 586 00:51:11,171 --> 00:51:14,671 ஆனால் நீங்க விவரங்களை விளக்குங்க, செலப்ரிம்போர் பிரபு. 587 00:51:30,255 --> 00:51:33,296 முதலில் பெரிய மக்கள், இப்ப விண்மீன்கள். 588 00:51:35,005 --> 00:51:37,338 தூங்க வேண்டிய நேரத்தில் கண்கள் திறந்து. 589 00:51:41,296 --> 00:51:42,588 கிட்டத்தட்ட... 590 00:51:44,213 --> 00:51:46,380 கிட்டத்தட்ட எதையோ பார்ப்பது போல. 591 00:51:46,880 --> 00:51:47,963 எதை பார்க்கிறது? 592 00:51:48,880 --> 00:51:51,838 ஒரு திட்டு, இப்ப உன் வேலையை நீ பார்க்கலைன்னா. 593 00:51:51,921 --> 00:51:53,755 அது என்ன? மேலே என்ன தெரிகிறது? 594 00:51:53,838 --> 00:51:56,046 எலனார் ப்ராண்டிஃபுட், அப்பாவோட மூக்கோட, 595 00:51:56,130 --> 00:51:57,963 பிரச்சினையில் நுழைச்சிக்கிட்டு, 596 00:51:58,046 --> 00:52:02,255 ஹார்ஃபுட்டாக பிறந்ததற்கு உனக்கு இருக்கும் ஆர்வமும், குறுக்கீடும் அதிகம். 597 00:52:02,338 --> 00:52:05,046 நீங்க பாதி அணில் இல்லை என்பது உறுதியா? 598 00:52:06,463 --> 00:52:09,213 சாடோக். சாடோக், தயவுசெய்து. 599 00:52:10,005 --> 00:52:11,213 சொல்லுங்க. 600 00:52:13,963 --> 00:52:16,546 வானம் விசித்திரமா இருக்கு. 601 00:52:19,005 --> 00:52:20,213 விசித்திரமா... 602 00:52:20,296 --> 00:52:21,380 எப்படி விசித்திரமா? 603 00:52:21,463 --> 00:52:23,338 நோரி! க்ரீஸ் இருக்கா? 604 00:52:23,421 --> 00:52:24,671 இதோ வர்றேன். 605 00:52:33,421 --> 00:52:35,963 ஹோர்டென் மக்களை எவ்வளவு தெரியும்? 606 00:52:36,046 --> 00:52:38,880 நிறையன்னு நம்பறேன். நான் அங்கேதான் பிறந்தேன். 607 00:52:40,880 --> 00:52:42,046 ஏன்? 608 00:52:42,130 --> 00:52:45,588 ஹோர்டென் மக்கள் மோர்கோத்துக்கு விசுவாசமா இருந்தாங்க, 609 00:52:45,671 --> 00:52:47,338 குறிப்பா தீவிரமா. 610 00:52:48,463 --> 00:52:49,880 நீ இப்ப என்ன சொன்ன? 611 00:52:53,921 --> 00:52:55,171 உண்மை. 612 00:52:56,421 --> 00:52:58,421 என் நண்பர்களை பற்றி பேசற. 613 00:52:58,505 --> 00:53:01,088 நெருங்கினவர்களை தெரியும். நல்லவங்க. 614 00:53:05,255 --> 00:53:07,046 அதனால்தான் நான் வந்திருக்கேன். 615 00:53:09,505 --> 00:53:11,130 வாட்ச்வார்டெனுக்கு பதிலாக. 616 00:53:12,171 --> 00:53:13,421 ப்ரான்வின். 617 00:53:20,130 --> 00:53:24,046 இந்த நிலத்தில் எனக்கு தெரிந்து நீ மட்டும்தான் கருணைமிக்கவன். 618 00:53:40,713 --> 00:53:41,963 ஹோர்டென். 619 00:53:46,755 --> 00:53:47,838 தி சவுத்லாண்ட்ஸ் 620 00:53:51,088 --> 00:53:52,713 மிடில்-எர்த் 621 00:53:52,796 --> 00:53:54,796 தி சண்டரிங் சீஸ் 622 00:56:11,255 --> 00:56:16,921 ஏன் கப்பல் மிதக்கிறது, கல்லால் முடியவில்லை என தெரியுமா? 623 00:56:51,963 --> 00:56:53,130 கலாட்ரியல். 624 00:57:09,046 --> 00:57:10,463 உன் கையை கொடு. 625 00:57:23,213 --> 00:57:26,213 ஆனால் சில சமயம் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் 626 00:57:26,296 --> 00:57:28,963 நீரில் பிரதிபலித்தபடி, வானில் இருப்பது போலவே. 627 00:57:30,671 --> 00:57:33,088 எந்த ஒளியை தொடர்வதென எப்படி தெரியும்? 628 00:57:34,755 --> 00:57:36,755 சில சமயம் நமக்கு புரியாது 629 00:57:38,505 --> 00:57:40,505 இருளை தொடும்வரை. 630 00:57:52,130 --> 00:57:53,213 கலாட்ரியல்! 631 01:02:39,671 --> 01:02:41,671 தமிழாக்கம் ஹேமலதா ராமச்சந்திரன் 632 01:02:41,755 --> 01:02:43,755 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா