1 00:00:06,546 --> 00:00:08,838 -கோபுரம்? -வசந்த காலத்திற்குள் முடியணும். 2 00:00:09,255 --> 00:00:13,505 நம் இனத்திற்கு அப்பால் துணைகளை தேட யோசித்தது உண்டா? 3 00:00:13,588 --> 00:00:15,088 உன் திட்டத்தை பற்றி சொல் 4 00:00:15,171 --> 00:00:17,505 என் தந்தையிடம் நான் அதை சொல்ல. 5 00:00:17,630 --> 00:00:19,713 அவன் ஏதாவது மறைச்சா தெரியும். 6 00:00:19,755 --> 00:00:23,088 நீதான் எதையோ மறைக்கிறேன்னு அவனுக்கு புரிஞ்சிருக்கலாம். 7 00:00:23,755 --> 00:00:24,921 இது என்ன இடம்? 8 00:00:25,005 --> 00:00:28,588 நியூமெனார் தீவு ராஜ்ஜியம். 9 00:00:29,588 --> 00:00:31,130 ஒத்தி வைக்கலாம்னு யோசிச்சேன். 10 00:00:31,213 --> 00:00:34,796 கடல் சோதனை தொடங்கி, கப்பல் கிளம்புகையில், நீ அதில் இருப்பாய். 11 00:00:35,046 --> 00:00:36,546 பிரச்சினை வேண்டாம். 12 00:00:41,338 --> 00:00:44,046 இது தி சவுத்லேண்ட்ஸின் ஒரு வரைபடம். 13 00:00:44,130 --> 00:00:46,380 ஒரு இடம் மட்டுமில்லை, திட்டம் பற்றி சொல்லுது 14 00:00:46,463 --> 00:00:48,130 அவர்களின் ரெல்மை ஏற்படுத்த. 15 00:00:48,213 --> 00:00:50,171 தி சவுத்லேண்ட்ஸ் பெரும் ஆபத்திலுள்ளது. 16 00:00:50,255 --> 00:00:54,255 சாரான் உண்மையில் திரும்பியிருந்தால், தி சவுத்லேண்ட்ல் தொடக்கம்தான். 17 00:00:55,088 --> 00:00:57,880 வாழ விரும்பும் யாராவது இங்கிருந்தா... 18 00:00:58,505 --> 00:01:01,296 காலை விடிந்ததும் எல்வன் கோபுரத்துக்கு போவோம். 19 00:01:05,130 --> 00:01:06,838 அவனை அடாரிடம் கூட்டி வாங்க. 20 00:01:07,963 --> 00:01:10,546 பழங்காலத்தில் சாரானுக்கு பல பெயர்கள் இருந்தனவாம். 21 00:01:10,630 --> 00:01:12,338 இது அதில் ஒன்றாக இருக்கலாம். 22 00:01:13,130 --> 00:01:17,296 உன் மக்களுக்கு அரசனில்லை, ஏனெனில் நீதான் அரசன். 23 00:01:17,380 --> 00:01:19,046 என்னுடன் மிட்டில் எர்த் வா. 24 00:01:19,130 --> 00:01:20,546 உன்னிடம் படையும் இல்லை. 25 00:01:20,630 --> 00:01:23,213 அதெல்லாம் மாறப் போகிறது. 26 00:02:37,588 --> 00:02:43,588 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 27 00:03:00,005 --> 00:03:05,088 இந்த அரசவையில், தினமும் கூடி இந்த தீவின் எதிர்காலத்திற்காக உழைப்போம். 28 00:03:05,671 --> 00:03:08,421 ஆனால் பிள்ளைகள் ஆசீர்வாத விழாவில், 29 00:03:09,213 --> 00:03:13,296 அந்த எதிர்காலத்தில் வாழப் போகிறவர்களை வரவேற்க கூடுவோம். 30 00:03:16,755 --> 00:03:20,546 அலைபாயும் கடலின் மீது எல்லையற்ற சூரிய ஒளி போல. 31 00:03:26,088 --> 00:03:28,338 அவளுக்கு என்ன பெயர் தேர்ந்தெடுத்தாய்? 32 00:03:28,921 --> 00:03:30,130 ஆலினெல். 33 00:03:31,380 --> 00:03:32,588 ஆலினெல். 34 00:03:33,255 --> 00:03:37,046 நியூமெனாரின் சக்தி உன்னுள் எழட்டும். 35 00:03:38,463 --> 00:03:41,421 அதன் ஞானம் வழிநடத்தட்டும்... 36 00:03:46,838 --> 00:03:49,505 சில சமயம் நம் தீவும் சோம்பல் முறிக்கணும். 37 00:03:50,588 --> 00:03:51,838 உன்னைப் போலவே. 38 00:04:34,630 --> 00:04:37,671 இது கச்சிதமான நாள், இளவரசி. 39 00:04:39,630 --> 00:04:41,963 எந்த வேலையை தொடங்குவீங்க? 40 00:04:44,671 --> 00:04:46,505 எல்ஃபை அரசவைக்கு அழைச்சிருக்காங்க. 41 00:04:47,088 --> 00:04:48,838 இன்று காலையில். 42 00:04:49,213 --> 00:04:53,755 எல்ஃபின் நண்பன் நான்கு கில்ட்ஸ்மென்னை தாக்க, மிரியெல் இவளை தேநீருக்கு அழைத்தாளா? 43 00:04:53,838 --> 00:04:56,005 எல்ஃபுக்கு தண்டனை அளிக்கலாம். 44 00:04:56,088 --> 00:04:57,713 அல்லது உத்தரவு கேட்கலாம். 45 00:04:59,588 --> 00:05:03,421 எல்ஃப் நம் ராணியின் காதில் விஷத்தை பாய்ச்சுகையில், 46 00:05:03,505 --> 00:05:05,296 நமக்காக யார் பேசுவது? 47 00:05:12,130 --> 00:05:14,255 சான்செலர்! சொன்செலர்! 48 00:05:14,338 --> 00:05:17,380 நான் விசாரிச்சதா தெரிவிங்க, சரியா? மெதுவாக பேசு. 49 00:05:17,463 --> 00:05:19,838 உங்களுக்கு ஒன்று வேணுமா, சார்? வாங்க, சார். 50 00:05:19,921 --> 00:05:22,630 நீங்க முக்கியமா ஏதோ செய்ததை நான் உணரலை. 51 00:05:22,713 --> 00:05:23,588 சான்செலர்! 52 00:05:23,671 --> 00:05:27,505 ராஜதந்திரம் என்பது சின்ன விஷயங்களை கவனிப்பது, பெரியவற்றை 53 00:05:27,588 --> 00:05:29,546 அக்கறையுடன் கவனிப்பது போலவே. 54 00:05:30,171 --> 00:05:32,463 அதை இப்போது கற்றிருப்பாயென நினைக்கிறேன். 55 00:05:32,546 --> 00:05:34,296 புத்திசாலியாக இருக்க முயற்சித்தேன். 56 00:05:34,380 --> 00:05:38,130 புத்திசாலித்தனம் சின்ன லட்சியம் உடையவர்களுக்கு. 57 00:05:38,880 --> 00:05:41,921 நீ அறிவாளியாள இருப்பதே மேல், மகனே. 58 00:05:43,755 --> 00:05:46,088 இப்ப, என்ன பிரச்சினை? 59 00:05:46,588 --> 00:05:49,421 நமக்கு பிரச்சினை இருக்கலாம். 60 00:05:49,505 --> 00:05:51,588 நம் கரையில் எல்ஃப் கப்பல்களா? 61 00:05:52,213 --> 00:05:55,380 எல்ஃப் தொழிலாளிகள் உங்க வேலைகளை பறிக்கிறாங்களா? 62 00:05:56,963 --> 00:05:58,963 தூங்காத, களைத்துப் போகாத, 63 00:06:00,130 --> 00:06:03,130 வயதாகாத தொழிலாளர்கள். 64 00:06:03,588 --> 00:06:04,838 இல்லை! 65 00:06:06,421 --> 00:06:10,171 நான் சொல்றேன், ஒன்று ராணிக்கு கண்ணு தெரியலை அல்லது 66 00:06:10,255 --> 00:06:12,088 அவங்க ஒரு எல்ஃப் விரும்பி. 67 00:06:12,171 --> 00:06:14,380 அவங்க அப்பாவை போலவே. 68 00:06:14,463 --> 00:06:16,838 -எல்ஃப் விரும்பி! -எல்ஃப் விரும்பி! 69 00:06:16,921 --> 00:06:18,713 -எல்ஃப் விரும்பி! -எல்ஃப் விரும்பி! 70 00:06:18,796 --> 00:06:20,588 எல்ஃப் விரும்பி! எல்ஃப் விரும்பி! 71 00:06:20,671 --> 00:06:24,046 எல்ஃப் இப்ப இங்கே இருந்தா, அவ என்ன பார்ப்பா? 72 00:06:24,713 --> 00:06:26,338 நியூமெனாரின் ஆண்களா, 73 00:06:27,630 --> 00:06:29,880 அல்லது அழும் குழந்தைகளின் கூட்டமா? 74 00:06:31,463 --> 00:06:34,213 நாம எடாய்னின் பிள்ளைகள். 75 00:06:35,296 --> 00:06:39,671 எல்ராஸ் டார் மின்யாடுரிலிருந்து, அவரின் புரவலர் மோர்காத்தையே வென்றார். 76 00:06:40,588 --> 00:06:44,213 ஆனால் இப்ப ஒரு ஒதுக்கப்பட்ட எல்ஃப், நம்மை மிரட்டுவதா? 77 00:06:45,255 --> 00:06:48,338 பாருங்க, நீங்க அணிந்திருக்கும் கில்ட் க்ரெஸ்டை. 78 00:06:48,421 --> 00:06:50,713 வலிய கைகளின் மரபு. 79 00:06:52,088 --> 00:06:54,463 கடல் சுவரை கட்டிய ஆண்களினது. 80 00:06:56,046 --> 00:07:00,880 ஆர்மேனெலாஸை எழுப்பியவர்கள், நம் நாகரிகத்தின் வெற்றி. 81 00:07:01,380 --> 00:07:05,005 ஆனால் இப்ப ஒரு எல்ஃப் நம்மை மிரட்டுவதா? 82 00:07:17,838 --> 00:07:18,921 நண்பர்களே... 83 00:07:21,171 --> 00:07:22,255 என்னை நம்புங்கள். 84 00:07:23,921 --> 00:07:26,463 என் கைகள் காய்த்து போனதின் மீதாக, 85 00:07:26,546 --> 00:07:30,838 எல்வென் கைகள் நியூமெனாரின் தலைமைக்கு வரவே வராது என்பது சத்தியம். 86 00:07:32,755 --> 00:07:37,088 எப்போதும் மனிதர்களின் ராஜ்ஜியமாகவே இருக்கும். 87 00:07:44,421 --> 00:07:45,630 எல்லாருக்கும் பானங்கள்! 88 00:08:15,463 --> 00:08:18,213 அவருக்கு தெரியாத பெயரே நகரத்தில் இல்லை, 89 00:08:18,296 --> 00:08:21,005 மாற்ற முடியாத கும்பல் இல்லை, கடன்படாதோர் இல்லை... 90 00:08:22,463 --> 00:08:23,713 அது பிரமாதம். 91 00:08:24,546 --> 00:08:26,546 "கோபமூட்டுது" என்று சொல்ல இருந்தேன். 92 00:08:29,380 --> 00:08:31,713 மெனெல்டார்மா திராட்சை தோட்டங்களிலிருந்து. 93 00:08:31,796 --> 00:08:34,671 உங்க பிரச்சினைகளை மறக்க வைக்கும்னு சொல்றாங்க. 94 00:08:35,880 --> 00:08:37,671 என் பிரச்சினைகளை கடினமாக வென்றேன். 95 00:08:40,880 --> 00:08:42,463 நீ புது பயிலாளர். 96 00:08:43,130 --> 00:08:45,421 நான் கெமென். உன் பெயர்... 97 00:08:45,505 --> 00:08:48,088 இயாரியென். திட்டங்கள், இப்போது. 98 00:09:01,088 --> 00:09:02,755 என்னை வெறுப்பேத்தறே, எல்ஃப். 99 00:09:03,463 --> 00:09:05,296 உன்னை விருந்தினராக வரவேற்கிறேன், 100 00:09:05,380 --> 00:09:09,130 எங்க கிராமப்புறத்திற்கு போறே, பழைய சுருள்களை திருடறே, 101 00:09:09,213 --> 00:09:12,588 உன் சவுத்லேண்டர் நண்பன், எங்க குடிமக்களை தாக்கறான். 102 00:09:12,671 --> 00:09:16,088 அவனுக்கு கோபம் வருவது புரியுது. அவன் மக்கள் சாகறாங்க. 103 00:09:16,171 --> 00:09:17,713 "அவன் மக்களா?" 104 00:09:17,796 --> 00:09:21,380 உங்க டன்ஜனில் பிடிச்சு வெச்சிருக்கிற ஆள் சாதாரண சண்டைக்காரனில்லை, 105 00:09:21,463 --> 00:09:25,463 சவுத்லேண்ட்ஸின் அரியணையில் அமர வேண்டிய காணாமல் போன வாரிசு. 106 00:09:25,963 --> 00:09:28,880 அப்ப, இதோ எலெண்டில் ரூனிக் பேரரசன். 107 00:09:30,046 --> 00:09:31,880 சின்ன பிரபு, உண்மையில். 108 00:09:33,671 --> 00:09:36,463 அவன் மக்கள் சிதறியிருக்காங்க. தலைவன் இல்லாம. 109 00:09:37,463 --> 00:09:41,546 ஆனால் உங்க ஆதரவோட, அவன் கொடிக்கு பின்னால் ஒன்று சேரலாம். சண்டையிடலாம். 110 00:09:41,630 --> 00:09:43,213 "ஆதரவுக்கு" என்ன அர்த்தம்? 111 00:09:43,296 --> 00:09:48,338 சாரான் ஒருகாலத்தில் உங்க மக்களின் எதிரி, எனக்கும்தான். 112 00:09:49,296 --> 00:09:52,046 முடிக்கப்படாத பணியை முடிக்க உங்களை அழைக்கிறேன். 113 00:09:52,130 --> 00:09:55,130 நியூமெனார் மற்றும் எல்வ்ஸின் கூட்டணியை மீண்டும் அமைக்க... 114 00:09:56,088 --> 00:09:59,463 என்னுடன் சண்டையிடுங்கள், சவுத்லேண்ட்ஸின் மக்களை காப்பாற்ற, 115 00:09:59,546 --> 00:10:02,213 சாரான் அவர்கள் நிலங்களை தனக்கென எடுக்கும் முன். 116 00:10:07,588 --> 00:10:10,088 இந்த சபையில் பல திட்டங்களை கேட்கிறோம். 117 00:10:10,171 --> 00:10:13,421 உன்னுடையதுதான் மிக ஆச்சரியமான, லட்சியம் நிறைந்ததாக கேட்டேன். 118 00:10:16,755 --> 00:10:20,338 ஆயினும்கூட, நியூமெனார் வேறு வழியை தேர்ந்தெடுத்துள்ளது. 119 00:10:22,630 --> 00:10:24,130 நியூமெனார் முழுதுமில்லை. 120 00:10:24,671 --> 00:10:28,296 அரசனோ, தச்சனோ, சவுத்லேண்டர் தீர்ப்பை எதிர்கொள்வான். 121 00:10:28,380 --> 00:10:29,838 இந்த சபை கலைந்தது. 122 00:10:44,463 --> 00:10:47,546 அப்போ எனக்கு வேறு வழியில்லை, இன்னொன்று கேட்பதை தவிர. 123 00:10:47,630 --> 00:10:50,046 நியூமெனாரின் உண்மையான அரசருடன். 124 00:10:50,130 --> 00:10:51,963 உங்க அப்பா, அரசர். 125 00:10:53,380 --> 00:10:56,046 உனக்கு புரியாத விஷயங்களை நீ பேசக் கூடாது, 126 00:10:56,130 --> 00:10:57,838 கலாட்ரியல், ஃபினார்ஃபினின் மகளே. 127 00:10:57,921 --> 00:10:59,088 நீ ஒதுங்கி நிற்கணும், 128 00:10:59,171 --> 00:11:02,130 அதற்கு பதில் சொல்லக் கூடியவரிடம் நான் அதை சொல்லிட. 129 00:11:02,213 --> 00:11:03,588 கலாட்ரியல், அது கொஞ்சம்... 130 00:11:03,671 --> 00:11:06,671 நீ என்ன அதிகாரத்தோடு பேசுகிறாய், எல்ஃப்? 131 00:11:06,755 --> 00:11:08,255 உன் மக்களின் அதிகாரமா? 132 00:11:08,796 --> 00:11:12,296 அல்லது நீ ஒதுக்கப்பட்டவளா, புயலில் பிடிமானத்தை தேடுகிறாயா? 133 00:11:12,380 --> 00:11:14,380 எனக்குள்ளே புயல் இருக்கிறது. 134 00:11:15,255 --> 00:11:18,255 என்னை இந்த தீவுக்கு ஒரு காரணமாக தள்ளியது. 135 00:11:18,338 --> 00:11:21,671 அதை நீங்க அடக்க முடியாது, இளவரசி. 136 00:11:29,463 --> 00:11:30,463 என்னிடம் சொல்லாதே. 137 00:11:32,046 --> 00:11:33,296 விடுதி தகறாரா? 138 00:11:34,130 --> 00:11:35,296 ராஜதுரோகம். 139 00:11:44,838 --> 00:11:46,546 கிட்டத்தட்ட செய்துட்டீங்க! 140 00:11:47,255 --> 00:11:48,671 இன்னும் சில நாட்களில், 141 00:11:48,755 --> 00:11:53,005 உங்களை கப்பல் சகாக்கள் என்று சொல்லும் மகிழ்ச்சி இருக்கும். 142 00:11:53,088 --> 00:11:57,546 இப்ப இழுங்க, கேடட்ஸ்! இழுங்க! 143 00:12:02,838 --> 00:12:05,630 இசில்டுர்... 144 00:12:18,463 --> 00:12:20,963 இப்ப இழுங்க, கேடட்ஸ்! 145 00:12:22,338 --> 00:12:23,171 இழுங்க! 146 00:12:30,880 --> 00:12:31,713 கயிறு! 147 00:12:36,921 --> 00:12:38,171 விளக்கம் கொடுங்க. 148 00:12:39,255 --> 00:12:40,880 சார், ஒரு தவறு இருக்கு. 149 00:12:40,963 --> 00:12:42,838 அது என் தவறு, கடல் மாஸ்டர். 150 00:12:43,671 --> 00:12:44,671 நழுவ விட்டுட்டேன். 151 00:12:45,880 --> 00:12:48,921 கயிறை நீ சரியா தளர வைப்பதை நூறு முறை பார்த்திருக்கேன். 152 00:12:49,880 --> 00:12:51,296 அது வேண்டுமென்றே செய்தது. 153 00:12:53,213 --> 00:12:54,796 கடல் படையிலிருந்து நீங்குங்க! 154 00:12:55,838 --> 00:12:57,005 மூன்று பேருமே! 155 00:13:00,671 --> 00:13:04,213 "மேற்கா"? "உண்மையான நியூமெனாரா"? 156 00:13:04,630 --> 00:13:07,255 உன் சகோதரன் பேசும் அந்த அபத்தம், மீண்டும்! 157 00:13:09,005 --> 00:13:11,505 மாஸ்டர் என்னை மட்டும் நீக்குவார்னு நினைச்சேன். 158 00:13:13,255 --> 00:13:14,421 எனக்கு வருத்தம். 159 00:13:14,921 --> 00:13:16,255 உனக்கு வருத்தமா? 160 00:13:16,838 --> 00:13:20,088 உனக்கு வருத்தமா? எங்க வாழ்க்கையை பாழாக்கிட்டே! 161 00:13:20,963 --> 00:13:23,588 அந்த சேம்பர் பாட் எங்கே? எனக்கு வாந்தி வருது. 162 00:13:23,671 --> 00:13:24,921 என் அப்பாவிடம் பேசறேன். 163 00:13:25,005 --> 00:13:26,671 -இருவரையும் சேர்க்கிறேன். -வேணாம். 164 00:13:26,755 --> 00:13:29,088 பெறாத வேலையிலிருந்து வெளியேறுவது 165 00:13:29,171 --> 00:13:30,963 உன்னால்தான் முடியும். 166 00:13:31,046 --> 00:13:32,380 -வலாண்டில்... -இல்லை. 167 00:13:33,671 --> 00:13:37,130 துடுப்பை பிடிக்குமளவு பெரியவனான நாளிலிருந்து, படகிலிருக்க ஆசை. 168 00:13:38,338 --> 00:13:41,880 அதை பெற, செய்ய வேண்டியதெல்லாம் செய்தேன். நீ என்ன செய்தாய்? 169 00:13:43,046 --> 00:13:46,546 செத்து போன உங்க அம்மாவை பற்றி புலம்புவது தவிர வேறு என்ன செஞ்சே? 170 00:13:46,630 --> 00:13:49,046 நிறுத்துங்க! போதும்! 171 00:13:51,880 --> 00:13:53,880 ஆமாம், பழையபடி இசில் போயிட்டான். 172 00:13:53,963 --> 00:13:56,171 இசில்! எங்கே போகிறாய்? 173 00:13:56,255 --> 00:13:58,171 போவது, இருப்பது, அது முக்கியமா? 174 00:13:59,005 --> 00:14:02,838 நிஜ பிரச்சினை இவன்தான். அது எங்கேயும் போகாது. 175 00:14:23,671 --> 00:14:25,046 மாக்ராட்! 176 00:14:27,546 --> 00:14:28,796 அடார்... 177 00:15:20,463 --> 00:15:22,296 அடார்... 178 00:16:15,505 --> 00:16:17,880 வலிமையா இறந்திடு. 179 00:16:27,713 --> 00:16:30,671 வலிமையா இறந்திடு. 180 00:16:42,588 --> 00:16:45,671 நீ எங்கே பிறந்தாய்... 181 00:16:48,130 --> 00:16:49,380 சிப்பாயே? 182 00:16:52,838 --> 00:16:54,255 பெலேரியாண்ட். 183 00:16:56,213 --> 00:16:58,046 ஆற்றின் தொடக்கத்திலா? 184 00:17:01,463 --> 00:17:02,838 நீ யார்? 185 00:17:08,005 --> 00:17:10,046 ஒருமுறை அந்த ஆற்றை கடந்தேன்... 186 00:17:12,255 --> 00:17:13,755 சிறுவயதில். 187 00:17:17,921 --> 00:17:19,338 எனக்கு நினைவிருக்கு... 188 00:17:21,463 --> 00:17:23,963 அந்த கரைகளில் அழிஞ்சில் பூத்திருந்தது. 189 00:17:28,005 --> 00:17:29,463 மைல்கணக்கில். 190 00:17:32,130 --> 00:17:34,338 ஆர்க்ஸ் ஏன் உங்களை தந்தை என்கின்றனர்? 191 00:17:51,171 --> 00:17:53,921 உன்னிடம் பல பொய்கள் சொல்லப்பட்டுள்ளன. 192 00:17:56,005 --> 00:17:57,921 சில எவ்வளவு ஆழமெனில், 193 00:17:59,088 --> 00:18:03,671 பாறைகளும், வேர்களுமே இப்போது அதை நம்புகின்றன. 194 00:18:04,380 --> 00:18:06,213 அதையெல்லாம் அவிழ்த்திட... 195 00:18:08,546 --> 00:18:11,796 புது உலகை அமைத்தே ஆக வேண்டும். 196 00:18:14,880 --> 00:18:17,588 ஆனால் அதை கடவுளால்தான் செய்ய முடியும். 197 00:18:17,671 --> 00:18:21,505 நான் கடவுள் இல்லை. குறைந்தது... 198 00:18:26,255 --> 00:18:27,130 இன்னும் இல்லை. 199 00:18:31,213 --> 00:18:32,838 நீ என்ன? 200 00:18:36,338 --> 00:18:39,880 பழைய காவல்கோபுரத்தில் அகதிகளாக இருக்கும் மனிதர்களிடம் போ. 201 00:18:42,546 --> 00:18:44,088 அவங்களிடம் ஒரு செய்தியை சொல். 202 00:18:50,671 --> 00:18:51,755 என்ன செய்தி? 203 00:19:14,755 --> 00:19:18,588 முகாமெல்லாம் நிரம்பியிருக்கு. முடிந்த இடத்தில் முகாம் அமைங்க. 204 00:19:20,088 --> 00:19:22,463 -இவங்க எங்கிருந்து வர்றாங்க? -இயோர்பாத். 205 00:19:23,213 --> 00:19:25,963 அப்ப இங்கிருந்து ஓரோட்ருயின்வரை ஒவ்வொரு கிராமமும். 206 00:19:33,796 --> 00:19:34,880 மீதம் எங்கே? 207 00:19:35,880 --> 00:19:37,380 அவைதான் மீதம். 208 00:19:37,880 --> 00:19:39,505 மீண்டும் ரேஷனை குறைக்கணும். 209 00:19:39,588 --> 00:19:41,130 நீ ரேஷனை குறைக்க கூடாது. 210 00:19:41,213 --> 00:19:43,671 யார் உனக்கு முடிவு செய்யும் உரிமையை தந்தது? 211 00:19:43,755 --> 00:19:46,588 இங்கே வந்த ஒவ்வொருவரும், வால்ட்ரெக். நீ உட்பட. 212 00:19:46,671 --> 00:19:47,755 என்ன சாப்பிடுவோம்? 213 00:19:48,546 --> 00:19:50,088 -ஒரு வழி காணுவோம். -எப்படி? 214 00:19:50,171 --> 00:19:52,796 -எனக்கு தெரியாது. -அது தெளிவாக தெரியுது. 215 00:19:54,213 --> 00:19:55,921 வால்ட்ரெக்கின் பாதாள அறை? 216 00:19:56,755 --> 00:19:58,713 ஊருக்குள் சின்ன குழுவை அனுப்புவோம். 217 00:19:58,796 --> 00:20:02,921 பகலில், ஆர்க்ஸ் சிலரே இருக்கையில், சீக்கிரமா, அமைதியா, முடிந்ததை எடுப்போம். 218 00:20:03,005 --> 00:20:05,088 வந்ததே அவங்களுக்கு தெரியாது. 219 00:20:05,171 --> 00:20:07,088 எந்த பாவப்பட்டவரை அதில் சேர்ப்பாய்? 220 00:20:07,921 --> 00:20:10,213 யாரும் செய்யலைன்னா, நான் செய்யறேன். 221 00:20:10,296 --> 00:20:11,963 நீ அங்கே போகக் கூடாது. 222 00:20:12,755 --> 00:20:16,171 முதலில் குன்றுகளில் சூறையாடுவோம். வேட்டைக்காரர்களை சேகரி. 223 00:20:16,963 --> 00:20:19,380 அவங்க எதை வேட்டையாடுவாங்க? சில முயல்களையா? 224 00:20:19,463 --> 00:20:20,630 அது ஒரு நாள் உணவு. 225 00:20:20,713 --> 00:20:23,463 அப்ப ஒரு நாள். அதுக்கு நாம நன்றியோடு இருப்போம். 226 00:20:23,546 --> 00:20:24,630 எல்லாம் பாழாகையில், 227 00:20:24,713 --> 00:20:27,838 எதுவும் செய்யாமல் இருப்பது சோர்வா, சலிச்சு போயிடுச்சு... 228 00:20:27,921 --> 00:20:30,255 -முடிந்ததை செய்யறோம். -நான் இல்லை! 229 00:20:30,338 --> 00:20:31,713 தியோ. தியோ! 230 00:20:32,255 --> 00:20:34,880 எனக்கு உதவலாம் அல்லது இன்னும் கடினமாக்கலாம். 231 00:20:55,421 --> 00:20:57,796 நீ சொல்லி இதற்கு வந்திருக்கவே கூடாது. 232 00:21:00,380 --> 00:21:01,630 நான் திரும்ப போறேன். 233 00:21:03,380 --> 00:21:05,338 இவ்வளவு கோழையா இருக்காதே. 234 00:21:06,338 --> 00:21:07,421 அட வா. 235 00:21:29,505 --> 00:21:31,421 ரோவன், விடுதி. 236 00:21:31,505 --> 00:21:32,963 நான் அங்கே போக மாட்டேன். 237 00:21:33,338 --> 00:21:34,838 இன்னும் உணவு இருக்கலாம். 238 00:21:34,921 --> 00:21:36,880 அட வா, இந்த இடம் காலியா இருக்கு. 239 00:21:40,213 --> 00:21:41,630 சரி. நான் போறேன். 240 00:22:37,671 --> 00:22:38,755 ரோவன்? 241 00:23:15,588 --> 00:23:16,713 இள ரத்தம். 242 00:23:22,505 --> 00:23:23,588 அது எங்கே கிடைத்தது? 243 00:23:34,088 --> 00:23:35,255 இங்கே கொடு. 244 00:23:46,213 --> 00:23:48,005 ஓய்! கண்டுபிடிச்சுட்டேன்! 245 00:23:48,088 --> 00:23:51,963 கண்டுபிடிச்சுட்டேன்! ஒரு பையன்! அவனிடம் கைப்பிடி இருக்கு! 246 00:23:52,046 --> 00:23:53,713 பையனா? அவன் எங்கே? 247 00:23:53,796 --> 00:23:55,505 இங்கே எங்கேயோ ஒளிஞ்சிருக்கான். 248 00:23:56,338 --> 00:23:58,671 நீ! தந்தை-பிரபுவிடம் சொல். 249 00:24:00,046 --> 00:24:01,921 மத்தவங்க, தேடுங்க. 250 00:24:03,130 --> 00:24:05,588 அவனை கண்டுபிடிக்கும் வரை யாரும் தூங்க கூடாது. 251 00:24:29,505 --> 00:24:30,588 பிடிச்சுட்டேன்! 252 00:24:51,213 --> 00:24:54,505 எல்வ்ஸும் ட்வார்வ்ஸும் சேர்ந்து பணி புரியறாங்க. பிரமாதம். 253 00:24:56,046 --> 00:24:58,296 நீங்க சொன்னது போலவே இருக்கு. 254 00:25:03,713 --> 00:25:04,546 என்ன? 255 00:25:05,005 --> 00:25:06,255 ஒன்றுமில்லை. வந்து... 256 00:25:06,338 --> 00:25:10,338 ஒரு நொடி, அங்கே நின்றபடி, நீ உன் தந்தை போலவே இருந்தே. 257 00:25:12,088 --> 00:25:15,671 -நீங்க அவரை சந்தித்தது தெரியாது. -நிச்சயமா, பல முறை. 258 00:25:15,755 --> 00:25:19,005 அவருக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. 259 00:25:20,171 --> 00:25:22,338 நினைவிருக்கு, ஒருமுறை அவர் சொன்னார், 260 00:25:24,546 --> 00:25:29,755 ஒரு நாள், என் எதிர்காலம் அவர் மகனின் கைகளிலிருக்கும் என. 261 00:25:32,421 --> 00:25:36,421 சாதாரணமாக சொன்னார், நாளைய மழையைப் பற்றி பேசுவது போல. 262 00:25:36,796 --> 00:25:38,338 அப்புறம் நானும்... 263 00:25:38,421 --> 00:25:42,255 அதை மறந்துட்டேன்... இந்த கணம் வரை. 264 00:25:44,421 --> 00:25:45,671 அது வினோதமாக இல்லையா? 265 00:25:48,380 --> 00:25:50,963 இன்று பதட்டமாக தெரிகிறீர்கள், பிரபு. 266 00:25:51,880 --> 00:25:53,088 என்ன பிரச்சினை? 267 00:25:54,255 --> 00:25:57,880 இல்லை, சொல்ல மாட்டேனென நானே சத்தியம் செய்தேன். அவன் உன் நண்பன். 268 00:25:57,963 --> 00:25:59,088 ட்யுரின். 269 00:26:00,505 --> 00:26:05,005 ஒன்று அவன் என்னை தவிர்க்கிறான் அல்லது எதையோ மறைக்கிறான். 270 00:26:16,380 --> 00:26:18,421 அவன் பணி அணிகளை கேட்டு பார்த்தியா? 271 00:26:18,505 --> 00:26:22,380 பத்தொன்பது பேரையும். அவங்க ஏதோ சாக்கு சொல்றாங்க. 272 00:26:22,463 --> 00:26:24,671 அது சந்தேகமாகவே இருக்கு. 273 00:26:25,546 --> 00:26:28,796 ட்யுரினுக்கு சின்ன காதலி கிடைச்சிட்டான்னு சொல்றியா? 274 00:26:28,880 --> 00:26:31,921 -உங்களை தவிர யாருமில்லை, பெண்மணி. -தெரியும். 275 00:26:32,005 --> 00:26:33,255 யார் அவனை ஏற்பாங்க? 276 00:26:35,380 --> 00:26:38,671 பணக்கார கிழவி, கல்லை முத்தமிடு மணிகளை, தங்கத்தை மெருகேற்று 277 00:26:39,088 --> 00:26:39,921 ஐயோ! நிறுத்து! 278 00:26:40,046 --> 00:26:41,755 கெர்டா, உன் சகோதரனை அடிக்காதே! 279 00:26:41,838 --> 00:26:45,213 -அடித்து ஆடும் ஆட்டம் ஆடறோம். -ஆடினது போதும். 280 00:26:46,588 --> 00:26:49,255 தங்கப் படிகளை முயற்சி செய்தியா? 281 00:26:49,338 --> 00:26:51,088 அல்லது த்ரீ டோர் கார்ட்? 282 00:26:55,296 --> 00:26:56,588 நான் மறந்துட்டேன். 283 00:26:56,671 --> 00:26:59,921 பசங்க எனக்கு மறக்கடிக்கிறாங்க. 284 00:27:00,005 --> 00:27:02,880 இன்று க்வார்ட்ஸ் காசம் தோண்ட போயிருந்தான். 285 00:27:04,921 --> 00:27:08,838 தெரியுமா, டீஸா, எந்த ரகசியத்தையும் ஏமாற்றி மறைப்பதில் அர்த்தமில்லை. 286 00:27:10,380 --> 00:27:13,338 ட்வார்ஃபை அவ வீட்டிலேயே நேர்மையற்றவள் என்கிறாயா? 287 00:27:14,088 --> 00:27:16,088 அது பிரச்சினையை கிளப்பும். 288 00:27:18,505 --> 00:27:20,088 க்வார்ட்ஸ் தோண்டணும்னா, 289 00:27:20,171 --> 00:27:22,921 ஏன் ட்யுரின் கோடாரியை எடுத்துக்கலை? 290 00:27:23,005 --> 00:27:25,338 நீ ஏன் அவனுக்கு பிடித்த உணவை சமைத்திருக்கே, 291 00:27:25,421 --> 00:27:28,838 இறங்கவே இரண்டு நாட்கள் ஆகக்கூடிய காசமிற்கு அவன் போயிருந்தா? 292 00:27:28,921 --> 00:27:31,463 கல்லை முத்தமிடு மணிகளை, தங்கத்தை மெருகேற்று 293 00:27:31,546 --> 00:27:33,296 கெர்டா, நான் எச்சரிக்கிறேன்! 294 00:27:39,130 --> 00:27:40,921 ட்யுரின் அவன் கோடாரியை கொண்டு 295 00:27:41,671 --> 00:27:45,338 போகலை ஏன்னா அவன் தோண்டும் க்வார்ட்ஸை கொத்தக் கூடாது. துருவணும். 296 00:27:46,171 --> 00:27:47,713 நான் துன்னெலி-வால் குழம்பு 297 00:27:47,796 --> 00:27:50,880 செய்யறேன், அவன் வர்றதுக்கு முன்னே அது தயாராக நேரமாகும். 298 00:27:51,630 --> 00:27:55,630 உன்னைப் போன்ற வெளியாளுக்கு பல நாட்கள் ஆனாலும், 299 00:27:55,713 --> 00:27:57,671 என் கணவன் போன்ற ட்வார்வன் ஏறுவோர் 300 00:27:57,755 --> 00:28:01,088 க்வார்ட்ஸ் காசத்திற்குள் சில மணி நேரங்களில் இறங்குவர். 301 00:28:02,463 --> 00:28:05,296 வேறு ஏதாவது கேட்க இருந்ததா, அன்பே? 302 00:28:07,380 --> 00:28:08,546 இல்லை. 303 00:28:09,713 --> 00:28:10,880 நன்றி. 304 00:28:20,046 --> 00:28:23,671 க்வார்ட்ஸ் காசம். மோசமில்லை. மோசமில்லை. 305 00:28:23,755 --> 00:28:27,255 என்னை நம்பினார்னு நினைக்கிறேன். சுலபமா நம்புவதில்லை, அந்த எல்ஃப். 306 00:28:27,338 --> 00:28:28,755 நிச்சயமா இல்லை. 307 00:28:29,796 --> 00:28:34,046 என் எதிர்கால அரசி, நீரெலியை கோட் போட சம்மதிக்க வைச்சது அதிர்ஷ்டம். 308 00:28:34,130 --> 00:28:39,505 நான் மார்க்ரிட் ரஸ்ட்போரினை மணக்காது உன்னை மணந்தது என் அதிர்ஷ்டம், 309 00:28:39,588 --> 00:28:41,421 வேறு என்ன காரணங்களிருக்கு? 310 00:28:42,005 --> 00:28:43,546 அப்புறம் சொல்றேன். 311 00:28:43,630 --> 00:28:46,546 இப்ப போதும். நாம சத்தம் போடாம இருப்போம். 312 00:28:49,088 --> 00:28:51,588 பழைய சுரங்கத்தில் நல்ல முன்னேற்றம். 313 00:28:52,255 --> 00:28:54,880 அவனை பத்திரமாக வெளியே விட உறுதி செய்தேன்... 314 00:29:04,671 --> 00:29:08,088 மீரோர்மியர் கீழுளுள்ள பழைய சுரங்கம். 315 00:29:10,005 --> 00:29:11,421 தொலைஞ்சிட்டியா, எல்ஃப்? 316 00:29:14,088 --> 00:29:16,755 இல்லை. நான் எங்கே போறேன்னு தெரியும். 317 00:29:19,088 --> 00:29:20,255 நன்னாளாகட்டும். 318 00:30:15,963 --> 00:30:19,296 பணக்கார கிழவி, கல்லை முத்தமிடு மணிகளை, தங்கத்தை மெருகேற்று 319 00:31:02,088 --> 00:31:03,088 எனக்கு தெரியும்! 320 00:31:04,130 --> 00:31:05,171 ட்யுரின்? 321 00:31:05,255 --> 00:31:07,046 என்னை உளவு பார்க்க வந்தியா, எல்ஃப்? 322 00:31:07,130 --> 00:31:09,130 இல்லையே. இது எந்த இடம்? 323 00:31:09,213 --> 00:31:12,130 உனக்கு தெரியாதென நம்ப சொல்றியா? 324 00:31:12,213 --> 00:31:16,046 அவர் உன்னை அனுப்ப இது உண்மை காரணமில்லை என்பதை? 325 00:31:17,213 --> 00:31:19,088 உங்களுக்கு வேணும். 326 00:31:19,171 --> 00:31:20,755 ட்யுரின், என்ன வேணும்? 327 00:31:22,421 --> 00:31:25,671 அந்த அறையிலிருப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. 328 00:31:25,755 --> 00:31:29,213 உன்னை பற்றி அக்கறை உண்டு, இந்த நட்பை பற்றி. 329 00:31:30,421 --> 00:31:32,130 ரகசியங்கள் அப்படி ஆகாது. 330 00:31:35,130 --> 00:31:37,130 இதுக்கு என்ன அர்த்தம்? 331 00:31:41,338 --> 00:31:43,005 உன் உறுதி வேணும். 332 00:31:50,505 --> 00:31:52,088 கை மலையை நோக்கி, 333 00:31:52,171 --> 00:31:55,005 நான் இப்ப உன்னிடம் சொல்லப் போறதை 334 00:31:55,088 --> 00:31:58,296 நீ யாரிடமும் மூச்சே விடக் கூடாது. 335 00:31:59,546 --> 00:32:02,130 ட்வார்வென் கோபம் எல்வென் நினைவைத் தாண்டி வாழும். 336 00:32:02,213 --> 00:32:03,796 உன் சத்தியத்தை மீறினா, 337 00:32:04,713 --> 00:32:08,463 இந்த கல்லின் சக்தி, உன்னையும் உன் உறவையும் துக்கத்தில் ஆழ்த்தும், 338 00:32:08,546 --> 00:32:11,338 மிட்டில் எர்தில் உன் கடைசி தினம்வரை. 339 00:32:13,046 --> 00:32:14,838 சத்தியம் செய்யறியா, எல்ராண்ட்? 340 00:32:27,588 --> 00:32:31,338 என் தந்தை, இயரென்டில் த மரினரின் நினைவின் மீது சத்தியம். 341 00:32:36,171 --> 00:32:39,630 நீ இங்கே சொல்வது எதுவாயினும் என் காதுகளில் முடியும். 342 00:32:45,630 --> 00:32:49,421 வழக்கமாக தங்கம் தேடும் போது டீஸா அதை கண்டுபிடித்தாள். 343 00:32:52,755 --> 00:32:54,505 புதிய தாது. 344 00:32:57,296 --> 00:33:00,505 பட்டை விட மென்மையானது, இரும்பை விட கடினமானது, 345 00:33:00,588 --> 00:33:03,755 ஆயுதங்களாக, அவை நம் பெருமைமிக்க வாள்களா இருக்கும். 346 00:33:04,671 --> 00:33:09,671 ஒரு தாதுவாக, தங்கத்தை விட அரிதானது. 347 00:33:10,713 --> 00:33:13,130 அது வெளிச்சத்தை பிடிப்பது விசித்திரமானது. 348 00:33:13,963 --> 00:33:15,713 உள்ளிருந்தே ஒளிர்வது போல. 349 00:33:15,796 --> 00:33:20,213 நான் சொல்றேன், எங்க மக்களுக்கு இது ஒரு புது யுகத்தின் தொடக்கமாக இருக்கலாம். 350 00:33:21,005 --> 00:33:22,671 வலிமை, செழிப்பு... 351 00:33:22,755 --> 00:33:25,546 அப்ப ஏன் இந்த ரகசியம்? 352 00:33:26,130 --> 00:33:27,546 ஏன் இதை கொண்டாடக் கூடாது? 353 00:33:31,046 --> 00:33:32,546 அதை தோண்டுவது ஆபத்தானது. 354 00:33:33,588 --> 00:33:37,921 என் தந்தை நம் அனைத்து முயற்சிகளையும் எச்சரிக்கையின் பேரில் 355 00:33:38,005 --> 00:33:39,880 கட்டுப்படுத்தியிருக்கார். 356 00:33:42,546 --> 00:33:43,630 நான் பார்க்கலாமா? 357 00:33:51,338 --> 00:33:53,921 இந்த அதிசய தாதுவின் பெயர் என்ன? 358 00:33:55,296 --> 00:33:57,296 எங்க மொழியில், "க்ரே க்ளிட்டர்." 359 00:33:57,380 --> 00:33:59,921 உங்களோடதில், மித்-ராட்னு ஏதோ. 360 00:34:01,671 --> 00:34:06,380 இல்லை, இல்லை. அதன் பெயர் மித்ரில். 361 00:34:08,546 --> 00:34:12,505 அப்ப இவ்வளவு தூரம் எரெகியானுக்காகத்தான் வந்தியா? 362 00:34:13,046 --> 00:34:16,130 20 வருடம் தள்ளி இருப்பது ரொம்ப அதிகம் என்பதால் வந்தேன். 363 00:34:19,005 --> 00:34:20,296 ஒரு எல்ஃபுக்கு கூட. 364 00:34:27,671 --> 00:34:28,963 வெச்சுக்கோ. 365 00:34:31,546 --> 00:34:33,171 நம் நட்பின் அடையாளம். 366 00:34:37,255 --> 00:34:38,255 அப்ப சரி. 367 00:34:48,463 --> 00:34:51,505 ட்யுரின்! ட்யுரின்! ட்யுரின், வேண்டாம்! 368 00:34:51,963 --> 00:34:53,880 அங்கே நான்கு ட்வார்வஸ் இருக்காங்க! 369 00:34:55,671 --> 00:34:56,755 ட்யுரின்! 370 00:35:14,338 --> 00:35:16,838 இயாரியன், தரைகளும், குவளைகளும். 371 00:35:21,671 --> 00:35:22,796 மன்னிக்கணும். 372 00:35:22,880 --> 00:35:26,380 பரவாயில்லை, பரவாயில்லை. பரவாயல்லை, நிஜமா. 373 00:35:27,005 --> 00:35:29,338 உன் திறமைகள் ஆவணங்கள் என நினைத்தேன். 374 00:35:29,838 --> 00:35:32,088 ஸ்க்ரப் செய்வது கைத்திறமைக்கு நல்லது. 375 00:35:32,713 --> 00:35:34,380 கில்ட் மாஸ்டர் அப்படி சொல்கிறார். 376 00:35:35,755 --> 00:35:38,713 அப்ப, இது எப்படி? நான் தரைகளை துடைக்கறேன், நீ குவளைகளை. 377 00:35:38,796 --> 00:35:40,671 கடைசியாக முடிப்பவர் உணவு வாங்கணும். 378 00:35:40,755 --> 00:35:42,755 விசித்திர இளைஞர்களோடு போவதில்லை. 379 00:35:42,838 --> 00:35:45,755 நல்லது. யாரையும் பார்த்தால், முதலில் தெரிவிக்கிறேன். 380 00:36:12,255 --> 00:36:15,921 உன் வழியில் வரும் தடைகளை நீ எதிர்ப்பது பிடிச்சிருந்தாலும், 381 00:36:16,005 --> 00:36:18,296 வேகமாக ஓடும் குட்டி குதிரையைப் போல... 382 00:36:19,588 --> 00:36:23,838 நீ போரிடுவது ட்ரோல்களையோ ஆர்க்ஸையோ அல்ல, 383 00:36:23,921 --> 00:36:24,880 ஆனால் மனிதர்களென? 384 00:36:25,380 --> 00:36:28,046 போர்க்கலை பற்றி எனக்கு நீ ஆலோசனை சொல்லப் போறியா? 385 00:36:28,130 --> 00:36:29,630 இல்லை. இல்லை, நான்... 386 00:36:30,671 --> 00:36:33,880 அதற்கு தைரியமில்லை. ஆனால்... 387 00:36:34,796 --> 00:36:39,421 ராணியின் அரசவை உங்க வழக்கமான போர்க்களம் இல்லையே? 388 00:36:42,088 --> 00:36:43,255 மேலே சொல்லு. 389 00:36:44,671 --> 00:36:47,671 இது போன்ற சூழ்நிலையில், எனக்கு தோன்றுவது, 390 00:36:47,755 --> 00:36:52,171 உங்க எதிராளி எதற்கு பயப்படறாங்க என்று அடையாளம் காண்பது நல்லது. 391 00:36:52,755 --> 00:36:54,546 -அதை பயன்படுத்தணுமா? -இல்லை. 392 00:36:56,088 --> 00:36:58,671 அதில் வல்லுநராக வாய்ப்பு தர வேண்டும். 393 00:36:59,796 --> 00:37:02,380 அப்ப அதில் தேர்ச்சி பெறலாம். 394 00:37:02,463 --> 00:37:04,588 உன் தரப்படி, இந்த செல்லில் இருப்பது, 395 00:37:04,671 --> 00:37:07,130 ராணி பயப்படுவதை இன்னும் அடையாளம் காணாததாலா? 396 00:37:07,213 --> 00:37:08,880 என் குறைந்த தரங்கள். ஆமாம். 397 00:37:08,963 --> 00:37:11,671 நீ செய்துட்டியா, சில நொடிகளே அவளை சந்தித்ததும்? 398 00:37:11,755 --> 00:37:16,505 அதன் போது ஒரு கப்பலை வாங்கி, அவ மக்களை அவமானப்படுத்தி, அவ ஆணைகளை மதிக்கலை, 399 00:37:16,588 --> 00:37:18,296 அது அவளை கோவப்படுத்தவில்லை. 400 00:37:19,338 --> 00:37:22,171 இப்ப, திடீரென, உன்னை செல்லுக்குள் அடைக்கிறாள். 401 00:37:24,130 --> 00:37:24,963 ஏன்? 402 00:37:25,338 --> 00:37:27,546 உன் மக்களுக்காக அவளை போரிட கேட்டேன். 403 00:37:27,630 --> 00:37:30,796 ஆனால் அது அவ கோபத்தை தூண்டலை, இல்லையா? 404 00:37:33,338 --> 00:37:35,505 அவ அப்பாவிடம் பேசக் கேட்டேன். 405 00:37:37,005 --> 00:37:41,005 கோபுரத்திலிருக்கும் அரசன், யாருமே பல வருடங்களில் பார்க்காதவரை. 406 00:37:43,880 --> 00:37:48,463 நீ ஓடுவதை நிறுத்திட்டு ஒரு நொடி யோசித்தால் என்ன ஆகும் பார்த்தியா? 407 00:37:48,546 --> 00:37:50,171 என்னை குதிரையோடு ஒப்பிடாதே. 408 00:37:50,255 --> 00:37:53,130 என்னை போக சமாதானப்படுத்தாதே, ஒப்பந்தம் இருக்கு. 409 00:37:53,213 --> 00:37:54,630 வணக்கம், எல்ஃப். 410 00:37:54,713 --> 00:37:57,421 இளவரசி அவங்க தீர்ப்பை சொல்லிட்டாங்க. 411 00:37:58,380 --> 00:38:02,796 நீ எல்வ்ஸிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும், பாதுகாப்புடன். இன்றிரவு. 412 00:38:16,588 --> 00:38:18,005 முன்னால் வா. 413 00:38:32,921 --> 00:38:36,005 -அப்படி சொல்ல மாட்டேன். -அவளை போக விட முடியாது. 414 00:38:36,088 --> 00:38:38,880 நீ செய்யலாம். அவ போகிற இடம் சரியா தெரிஞ்சிருந்தா. 415 00:39:00,838 --> 00:39:02,505 நீ இங்கே என்ன செய்கிறாய்? 416 00:39:03,588 --> 00:39:05,005 இரவு உணவு இருந்தது. 417 00:39:08,755 --> 00:39:10,005 அவன் யார்? 418 00:39:11,005 --> 00:39:12,296 உன் சீருடை எங்கே? 419 00:39:15,296 --> 00:39:17,505 கேடட்ஸிலிருந்து விலகிட்டியா? 420 00:39:18,338 --> 00:39:19,755 இல்லை, மோசம். 421 00:39:19,838 --> 00:39:21,338 உன்னை நீக்கிட்டாங்களா? 422 00:39:22,421 --> 00:39:23,755 எல்லாரையும் நீக்கிட்டாங்க. 423 00:39:23,838 --> 00:39:25,088 இசில்... 424 00:39:28,796 --> 00:39:32,463 சரி, நீ ஜெயிச்சுட்டே. இப்ப நீ மேற்கே போகலாம். 425 00:39:35,421 --> 00:39:37,380 என் நண்பர்களின் வாழ்வை பாழாக்கிட்டேன், 426 00:39:38,921 --> 00:39:40,505 நம் குடும்ப பெயரை கெடுத்தேன். 427 00:39:42,296 --> 00:39:43,963 எனக்கு மேற்கே போக தகுதி இல்லை. 428 00:39:47,671 --> 00:39:49,880 பெரெக்கை கூட்டிப் போக அப்பா விட மாட்டார். 429 00:39:56,046 --> 00:39:57,755 அது எல்ஃப்! அவ தப்பிச்சிட்டா. 430 00:39:58,255 --> 00:39:59,588 ஒவ்வொரு சந்திலும் தேடு. 431 00:40:19,338 --> 00:40:22,505 மன்னிக்கணும், அரசே, குறுக்கீடுக்கு. ஆனால்... 432 00:40:22,588 --> 00:40:24,296 இனி அதற்கு பதில் சொல்ல மாட்டார். 433 00:40:32,046 --> 00:40:33,880 இங்கே வருவேனென எப்படி தெரியும்? 434 00:40:33,963 --> 00:40:37,630 உன்னை உன் கப்பலுக்கு கூட்டி போக பல படைகள் வெளியே காத்திருக்கு. 435 00:40:38,838 --> 00:40:40,921 நீயாக போனால் நல்லது. 436 00:40:42,421 --> 00:40:43,505 மிரியெல். 437 00:40:50,005 --> 00:40:51,213 மிரியெல். 438 00:41:00,755 --> 00:41:01,755 நான்... நான்... 439 00:41:01,838 --> 00:41:04,421 பரவாயில்லை, அப்பா. நான் வந்துட்டேன். 440 00:41:08,088 --> 00:41:09,338 என்னை மன்னிச்சிடுங்க. 441 00:41:11,046 --> 00:41:12,380 எனக்கு தெரியாது. 442 00:41:13,463 --> 00:41:15,880 சிலருக்கே அவர் வீழ்ச்சியின் கதை தெரியும். 443 00:41:18,130 --> 00:41:20,130 அதை அப்படியே வெச்சிருக்கணும். 444 00:41:20,796 --> 00:41:23,213 அப்ப நமக்குள்ளே உண்மைக்கான நேரமிது. 445 00:41:26,005 --> 00:41:28,671 உங்கப்பா எல்விஷ் வழிகளுக்கு விசுவாசமா இருந்தார். 446 00:41:29,630 --> 00:41:31,046 நீங்க ஏன் இல்லை? 447 00:41:32,213 --> 00:41:33,546 சொல்லுங்க. 448 00:41:35,880 --> 00:41:37,130 தயவு செய்து. 449 00:41:39,463 --> 00:41:42,171 என் தந்தை தன் நம்பிக்கைக்கு கட்டுப்பட்டவர். 450 00:41:43,255 --> 00:41:46,130 ஆனால் அவர் முடிசூட்டிய பிறகு, ஏதோ மாறியது. 451 00:41:48,255 --> 00:41:50,380 அவர் கடுமையாக ஆனார், 452 00:41:50,463 --> 00:41:54,130 வேலாரின் கோபத்தை நாங்க தூண்டினதாக அறிவித்தார், 453 00:41:54,213 --> 00:41:57,880 நாங்க மனம் திருந்தி, பழைய வழிக்கே திரும்பணும் என்றார். 454 00:41:59,505 --> 00:42:01,130 அமைதியற்ற நிலை இருந்தது. 455 00:42:02,171 --> 00:42:05,880 எல்வ்ஸுடன் உறவுகளை புதுப்பிக்கும் திட்டங்களை அவர் அறிவித்ததும்... 456 00:42:05,963 --> 00:42:07,380 மக்கள் புரட்சி செய்தனர். 457 00:42:10,130 --> 00:42:11,588 நிறைய இழப்பானது. 458 00:42:14,713 --> 00:42:17,046 அவருக்கு பதிலாக என்னை ஆட்சியில் வைத்தனர், 459 00:42:18,213 --> 00:42:20,255 புரட்சியை அடக்கும் உறுதியோடு. 460 00:42:21,713 --> 00:42:25,838 ஆனால் அந்த முதல் இரவு, நியூமெனார் தூங்கிய போது, 461 00:42:25,921 --> 00:42:27,588 என்னை இங்கே கூட்டி வந்தார். 462 00:42:32,963 --> 00:42:34,213 பலான்டிர். 463 00:42:35,213 --> 00:42:37,671 ஏழு பார்க்கும் கற்கள் இருந்தன, ஒரு காலத்தில். 464 00:42:38,338 --> 00:42:40,921 மற்ற ஆறு தொலைந்தோ மறைந்தோ இருக்கின்றன. 465 00:42:41,921 --> 00:42:43,963 இது என் அப்பாவிற்கு தரப்பட்டது. 466 00:42:44,796 --> 00:42:46,671 அதனோடு, ஒரு ரகசியமும். 467 00:42:49,588 --> 00:42:51,213 உன் கையை இதன் மேல் வை. 468 00:42:54,588 --> 00:42:57,671 -நான் எச்சரிக்கணும்... -பலான்டிரியை முன்பு தொட்டிருக்கேன். 469 00:42:57,755 --> 00:42:59,755 ஆனால் இதை முன்னால் தொட்டதில்லை. 470 00:43:28,880 --> 00:43:30,713 நீ கண்டது நியூமெனார் எதிர்காலத்தை. 471 00:43:34,838 --> 00:43:36,838 பலான்டிரி பல காட்சிகளை காட்டும். 472 00:43:37,755 --> 00:43:39,755 அவற்றில் சில நடக்காமலும் இருக்கலாம். 473 00:43:39,838 --> 00:43:41,630 ஏற்கனவே நடந்திருக்கு. 474 00:43:42,505 --> 00:43:44,671 காட்சி நீ வருவதிலிருந்து தொடங்குகிறது. 475 00:43:45,338 --> 00:43:48,338 நான் நியூமெனாரை வீழ வைப்பேன்னு நம்பறீங்களா? 476 00:43:48,421 --> 00:43:51,005 நியூமெனார் தானேதான் வீழும். 477 00:43:52,255 --> 00:43:55,088 வாளர் இந்த தீவை பரிசளித்தது நற்குண தினத்தில். 478 00:43:55,171 --> 00:43:58,796 நாங்க இருண்ட வழிக்கு போனால் அவர்கள் அதை எடுத்துக்கலாம். 479 00:43:58,880 --> 00:44:02,838 நீங்க சொல்லும் நற்குணம் எல்வ்ஸுக்கு உங்க மூதாதையரின் விசுவாசம். 480 00:44:02,921 --> 00:44:04,921 எங்கப்பா அதை நம்பினார். 481 00:44:05,921 --> 00:44:07,921 அவர் வழி கிட்டத்தட்ட எங்களை அழித்தது. 482 00:44:09,505 --> 00:44:13,005 அதனால்தான், நாளை, நீ போயாச்சென அறிவிப்பேன். 483 00:44:13,796 --> 00:44:15,213 இந்த நெருக்கடி முடிந்தது. 484 00:44:18,213 --> 00:44:21,171 மிட்டில் எர்தில் எழும் தீமையை கட்டுப்படுத்தலைன்னா, 485 00:44:21,255 --> 00:44:23,921 அது பரவி நம்மை அழிக்கும். 486 00:44:24,421 --> 00:44:27,838 இந்த போரை தவிர்ப்பதுதான் உன் அழிவுக்கான வழியாக இருக்கும். 487 00:44:27,921 --> 00:44:31,088 நான் கடவுளை சந்தேகப்பட மாட்டேன். என் தீர்ப்பு இறுதியானது. 488 00:44:31,171 --> 00:44:32,963 பயத்தின் அடிப்படையில் தீர்ப்பு. 489 00:44:34,796 --> 00:44:38,338 ஒரே ஆளாக இருப்பது எப்படியென தெரியும், 490 00:44:40,380 --> 00:44:42,213 பார்க்கக் கூடிய ஒரே ஆளாக, 491 00:44:42,963 --> 00:44:44,796 தெரிந்த ஒரே ஆளாக. 492 00:44:46,046 --> 00:44:49,796 ஒருவேளை நாம் இருவருமே இனி அந்த சுமையை தனியாக சுமக்க வேண்டாம். 493 00:44:50,255 --> 00:44:54,588 கெஞ்சி கேட்கிறேன், மிரியெல், பயத்தின் வழியை தேர்ந்தெடுக்காதீங்க, 494 00:44:54,671 --> 00:44:56,255 ஆனால் நம்பிக்கையின் வழியை. 495 00:44:56,880 --> 00:44:58,380 என்னுடன் நில்லுங்க. 496 00:44:59,130 --> 00:45:02,088 நியூமெனார் மீண்டும் எல்வ்ஸுடன் சண்டையிடட்டும். 497 00:45:11,963 --> 00:45:15,380 நம்பிக்கை ஒரு இதயத்தை இணைக்கும், கலாட்ரியல். 498 00:45:16,171 --> 00:45:19,505 ஆனால் ஒரு ராஜ்ஜியத்தை தொங்க விட அது மெலிதான கயிறு. 499 00:45:22,255 --> 00:45:23,463 மன்னிக்கணும். 500 00:45:30,171 --> 00:45:34,088 காடுகள் காலியாகி விட்டன. விலங்குகள் எல்லாம் ஓடியாச்சு. 501 00:45:34,171 --> 00:45:36,921 நாம அனுமதிச்சதை விட உன் மகனுக்கு நிறைய புத்தி. 502 00:45:38,838 --> 00:45:40,588 வாயிலில் யாரோ இருக்காங்க! 503 00:45:45,505 --> 00:45:46,755 பின்வாங்குங்க. 504 00:45:46,838 --> 00:45:49,546 -விலகுங்க. பின்வாங்குங்க! -பையனை வரவிடுங்க! 505 00:45:51,380 --> 00:45:53,130 நிறைய இருக்கு. நிதானிங்க! 506 00:45:53,213 --> 00:45:55,588 ரோவன்! தியோ எங்கே? 507 00:45:57,546 --> 00:45:59,130 என் பின்னால் வருவதாக சொன்னான். 508 00:45:59,213 --> 00:46:00,463 -பசிக்குது! -தள்ளாதே! 509 00:46:00,546 --> 00:46:01,755 அவ என்னை தள்ளினா! 510 00:46:04,380 --> 00:46:08,255 நாங்க எல்லாம் செய்து பார்த்துட்டோம். அவன் திரும்ப வரலை. 511 00:46:08,338 --> 00:46:09,505 அட வா. 512 00:46:14,713 --> 00:46:15,796 அவன் எங்கே? 513 00:46:18,463 --> 00:46:19,755 அவன் இங்கே வரலை! 514 00:46:23,546 --> 00:46:24,380 நாம போகலாம். 515 00:46:27,296 --> 00:46:29,546 எல்லா இடத்திலும் தேடுங்க. 516 00:46:32,671 --> 00:46:35,296 அவனை கண்டுபிடிக்கலைன்னா முதலாளி தோலை உரிப்பார். 517 00:46:35,380 --> 00:46:38,171 முதலாளிதான் முதலில் அவனை தொலைத்தது. 518 00:46:38,255 --> 00:46:40,713 அவன் வாசம் வருது... 519 00:46:43,463 --> 00:46:44,755 அட வாங்க! 520 00:46:48,505 --> 00:46:50,880 தேடுங்க. 521 00:47:04,296 --> 00:47:05,755 தேடுங்க. 522 00:47:11,338 --> 00:47:12,421 அவனை கண்டுபிடிங்க! 523 00:47:23,005 --> 00:47:24,296 இங்கே ஏதுமில்லை. 524 00:47:35,921 --> 00:47:38,088 அங்கே! பாரு! 525 00:48:00,171 --> 00:48:03,088 இள ரத்தமே, எங்கேயாவது போறோமா? 526 00:48:03,171 --> 00:48:04,255 எங்கே அது? 527 00:48:04,338 --> 00:48:05,338 இல்லை! 528 00:48:05,421 --> 00:48:07,505 அதை எங்கே வைத்திருக்க? 529 00:48:08,671 --> 00:48:12,546 கை போனா, நீ பேசுவேன்னு நினைக்கிறேன். 530 00:48:24,046 --> 00:48:25,130 சீக்கிரமா, பையா. 531 00:48:27,005 --> 00:48:28,338 அவங்க வர்றாங்க. 532 00:48:53,338 --> 00:48:54,338 போயிட்டே இரு. 533 00:49:20,796 --> 00:49:21,796 ஓடு! 534 00:49:36,296 --> 00:49:37,463 அம்மா? 535 00:49:38,963 --> 00:49:40,130 ப்ரான்வின். 536 00:49:43,838 --> 00:49:45,713 ஓடு! நிலத்துக்கு போ! 537 00:52:12,130 --> 00:52:14,338 அது என்னது? 538 00:52:14,880 --> 00:52:17,505 அது பாறைகளிடம் மனு, 539 00:52:17,588 --> 00:52:21,505 உள்ளே உயிருடன் இருப்பவரின் உடல்களை வெளியே விட. 540 00:52:23,005 --> 00:52:25,963 நீ அங்கே போயிருக்காமல் இருந்தா, ட்யுரின் அந்த 541 00:52:27,130 --> 00:52:29,796 தண்டில் இருந்திருப்பானென யோசிக்காம இருக்க... 542 00:52:31,380 --> 00:52:32,463 மன்னிச்சிடு. 543 00:52:33,171 --> 00:52:34,671 பொய் சொன்னதுக்கு மன்னிக்கணும். 544 00:52:34,755 --> 00:52:38,338 என் நண்பனிடம் விசுவாசமா இருந்தே. அது நினைவிருந்தா போதும். 545 00:52:40,546 --> 00:52:42,588 கடைசி ஆளை வெளியே இழுத்தாங்க. 546 00:52:44,421 --> 00:52:47,380 உயிருடன். எல்லாரும் உயிருடன். 547 00:52:48,338 --> 00:52:50,255 உங்கப்பாவுக்கு நிம்மதியா இருக்கும். 548 00:52:50,338 --> 00:52:51,755 அவர்தான் மூடிட்டார். 549 00:52:53,213 --> 00:52:56,130 முழு ஆதாரத்தையும் அடைக்கணும். 550 00:52:56,213 --> 00:52:58,130 -முழு ஆதாரமுமா? -எல்லாமே. 551 00:52:59,046 --> 00:53:00,505 அவருக்கு நேரம் கொடு. 552 00:53:01,505 --> 00:53:04,005 சூடான கரி கூட குளிர்ந்து போகும். 553 00:53:04,088 --> 00:53:06,505 ஆமாம், சில நேரம் ஆகாம இருக்கலாமேன்னு தோணும். 554 00:53:07,755 --> 00:53:11,380 சில சமயம், அவரை பற்றி என்ன நினைக்கிறேன்னு சொல்ல ஆசை, 555 00:53:12,380 --> 00:53:16,963 கிழவரிடம் பேசவே கூடாதுன்னு தோணுது! 556 00:53:41,255 --> 00:53:44,046 என் தந்தை தனியா வாலினார் போனார், 557 00:53:45,255 --> 00:53:49,880 வாளரை போரில் சேர்ந்து மோர்காத்தை அழிக்க, சம்மதிக்க வைத்தார். 558 00:53:51,171 --> 00:53:53,213 அவரின் செயல்கள் சிறப்பானவை, 559 00:53:53,296 --> 00:53:56,796 வாளர் அவரை இவ்வுலகின் எல்லைகளிலிருந்து மேலே தூக்கினர்... 560 00:53:57,630 --> 00:54:00,338 எப்போதும் ஈவ்னிங் ஸ்டாரை வானில் சுமக்கும்படி. 561 00:54:03,671 --> 00:54:06,838 பல வருடங்கள், நாளின் இறுதியில், நான் அதை பார்ப்பேன்... 562 00:54:08,171 --> 00:54:13,213 அவர் என்னை பார்த்தால் என்ன நினைப்பாரென யோசிப்பேன். 563 00:54:15,130 --> 00:54:18,630 அவர் மரபை வைத்து நான் சாதித்ததில் அவர் பெருமைப்படுவாரா? 564 00:54:20,713 --> 00:54:26,296 அல்லது நான் அதற்கு ஏற்றார்போல் வாழலைன்னு ஏமாற்றம் அடைவாரா? 565 00:54:31,255 --> 00:54:34,046 ஆனால், ஒரு இரவு, எனக்கு தோன்றியது 566 00:54:34,130 --> 00:54:37,088 எந்த தீர்ப்பையும் கேட்க மகிழ்ச்சியாக இருப்பேனென, 567 00:54:37,171 --> 00:54:39,421 அது என் தந்தையோடு உரையாட 568 00:54:39,505 --> 00:54:42,505 எனக்கு வாய்ப்பை அளிக்கும் வரை. 569 00:54:43,838 --> 00:54:47,838 உன் தந்தையோடு இருக்கும் நேரத்தை வீணடிக்காதே. 570 00:54:57,671 --> 00:55:01,880 எல்ராண்ட், நீ எதையாவது சரி பண்ணுவேன்னு நம்பிட்டு இருந்தேன். 571 00:55:02,671 --> 00:55:05,171 எப்படி நீயும் என் கணவனும் சந்திச்சீங்க? 572 00:55:05,255 --> 00:55:07,838 சொன்னேனே, மலை-ட்ராலிடமிருந்து அவனை காப்பாற்றினேன். 573 00:55:07,921 --> 00:55:10,255 -இரண்டு. -இரண்டு. ஆமாம், தெரியும். 574 00:55:11,796 --> 00:55:13,338 நான் எல்ராண்டை கேட்டேன். 575 00:55:13,755 --> 00:55:17,755 ஆனால் உன் கணவன் சொல்வதை நான் மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை. 576 00:55:17,838 --> 00:55:20,588 மூன்று ட்ரால்கள் இருந்தன. நான் அவனை காப்பாற்றினேன். 577 00:55:20,671 --> 00:55:24,088 நீ கண்ணாடியில் பார்த்தால் உன் முகமே நினைவிருக்காது. 578 00:55:24,171 --> 00:55:25,921 நான் காட்டில் அவனை பார்த்த போது, 579 00:55:26,005 --> 00:55:28,463 சம்மட்டி அடியிலிருந்து தப்பிப்பதில் இருந்தான். 580 00:55:28,546 --> 00:55:30,171 புலம்புவது, கத்துவது போன்று. 581 00:55:30,296 --> 00:55:31,505 அது போர் முழக்கம். 582 00:55:31,588 --> 00:55:35,255 அலறல் சத்தமா இருந்தது, குழந்தைன்னு நினைத்தேன். என் வில்லை எடுத்து... 583 00:55:35,338 --> 00:55:36,838 -அது வாள். -அது வில். 584 00:55:36,963 --> 00:55:38,713 -இல்லை. அது வாள்! -எப்படியும்... 585 00:55:45,505 --> 00:55:46,755 மன்னிக்கணும், அப்பா. 586 00:55:47,546 --> 00:55:52,088 நான் பெருமையா, பிடிவாதமா, தப்பா இருந்தேன். 587 00:55:57,671 --> 00:55:59,463 என்னை பார்க்க கூட மாட்டீங்களா? 588 00:56:11,213 --> 00:56:13,213 நம் மக்கள் நம்பறாங்க... 589 00:56:14,713 --> 00:56:17,421 ட்வார்ஃப்-அரசன் முடிசூட்டப்படும் போது, 590 00:56:18,671 --> 00:56:22,046 அவரது மூதாதையர்களின் குரல்களும் அவனுள் பாயும், 591 00:56:24,421 --> 00:56:26,671 அவர்கள் ஆலோசனையும் ஞானத்தையும் 592 00:56:27,588 --> 00:56:29,005 அவனுடன் பகிர்வரென. 593 00:56:30,755 --> 00:56:32,380 அவர்களின் தவறுகளையும். 594 00:56:39,088 --> 00:56:40,505 ஆனால் நீ... 595 00:56:42,588 --> 00:56:45,838 என் குரலை கேட்க அன்று வரை காத்திருக்க வேண்டாம். 596 00:56:50,588 --> 00:56:55,171 ஏன்னா, நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன், மகனே. 597 00:56:58,838 --> 00:57:00,088 கோபத்திலும்கூட. 598 00:57:01,880 --> 00:57:03,963 சில சமயம், பெரும்பாலும் கோபத்தில். 599 00:57:08,463 --> 00:57:10,463 மன்னிக்க எதுவுமே இல்லை. 600 00:57:26,505 --> 00:57:31,255 எல்ராண்ட் நாளை அவனுடன் லிண்டன் போக என்னை அழைச்சிருக்கான். 601 00:57:36,296 --> 00:57:37,630 நான் ஏற்கவா? 602 00:57:39,546 --> 00:57:42,380 எல்ராண்ட் உறுதியாக உத்தரவாதம் அளிச்சிருக்கான், 603 00:57:42,463 --> 00:57:45,796 கில் கலாட் எந்த காரணத்துக்காகவும் அவனை இங்கே அனுப்பலை என்று. 604 00:57:45,880 --> 00:57:49,171 ஆமாம். செய்தான். 605 00:57:50,296 --> 00:57:52,546 ஆனால் உள்ளுணர்வு சக்திவாய்ந்த டானிக். 606 00:57:54,046 --> 00:57:55,546 உன்னுடையது என்ன சொல்கிறது? 607 00:57:56,796 --> 00:57:58,838 இன்னும் ஏதோ இருக்கு. 608 00:57:58,921 --> 00:58:00,005 நல்லது, மகனே. 609 00:58:01,046 --> 00:58:02,213 நல்லது. 610 00:58:04,046 --> 00:58:05,380 லிண்டனுக்கு போ. 611 00:58:06,796 --> 00:58:08,130 என்னன்னு கண்டுபிடி. 612 00:58:24,921 --> 00:58:26,088 நன்றி. 613 00:58:34,005 --> 00:58:36,421 என்ன அது? என்ன பிரச்சினை? 614 00:58:38,963 --> 00:58:43,296 ஒரு செய்தி இருக்கு. நம் எதிரிக்கு ஆணையிடுபவரிடமிருந்து. 615 00:58:46,088 --> 00:58:50,088 உங்க மக்கள் வாழலாம், இந்நிலங்களை கைவிட்டு... 616 00:58:51,671 --> 00:58:53,088 அவருக்கு விசுவாசமாருக்கணும். 617 00:58:55,505 --> 00:58:56,921 நாங்க மறுத்தால்? 618 00:58:58,421 --> 00:58:59,921 அவர் ஆஸ்டிரித்துக்கு வர்றார். 619 00:59:39,046 --> 00:59:40,296 வா. 620 00:59:45,880 --> 00:59:49,463 என்னை கேட்டால், நீ செய்ததுக்கு பிறகு உனக்கு ஒரு பானம் தேவை. 621 00:59:50,505 --> 00:59:52,005 ஆகட்டும், எடுத்துக்கோ. 622 00:59:52,588 --> 00:59:56,671 என் கொட்டகையிலிருந்து அந்த கைப்பிடியை எடுத்தது போல. 623 00:59:57,255 --> 00:59:58,463 எனக்கு தெரியாது... 624 00:59:58,546 --> 01:00:00,046 நிறுத்து, பையா. 625 01:00:00,755 --> 01:00:02,588 என்ன சொல்றேன்னு உனக்கு தெரியும். 626 01:00:14,088 --> 01:00:17,546 என்னன்னு தெரியுமா? அது வாள் இல்லை. 627 01:00:18,171 --> 01:00:19,421 அது ஒரு சக்தி. 628 01:00:20,296 --> 01:00:24,796 நம் மூதாதையருக்கு, மாஸ்டர் தானே வடிவமைத்தது. 629 01:00:25,296 --> 01:00:27,838 அழகிய வேலைக்காரன். 630 01:00:27,921 --> 01:00:31,505 தொலைந்தவன், ஆனால் திரும்புவான். 631 01:00:33,046 --> 01:00:34,796 அவர்பற்றி கேள்விப்பட்டியா, பையா? 632 01:00:35,755 --> 01:00:37,255 சாரானை பற்றி கேள்விப்பட்டியா? 633 01:00:41,921 --> 01:00:44,796 அதை வானத்தில் பார்த்திருப்பாய். 634 01:00:44,880 --> 01:00:46,463 சில வாரங்களுக்கு முன்பு. 635 01:00:47,546 --> 01:00:48,796 நட்சத்திர வீழ்ச்சி. 636 01:00:48,880 --> 01:00:50,713 அவர் நேரம் நெருங்கியாச்சு. 637 01:00:51,838 --> 01:00:55,671 நீயும் நானும் தயாரா இருக்கணும், பையா. 638 01:00:55,755 --> 01:00:57,130 எதுக்கு தயாரா? 639 01:00:57,213 --> 01:00:59,505 இப்ப அமைதியாக இரு, பையா. 640 01:01:00,421 --> 01:01:02,255 உன் சக்தியை சேமி. 641 01:01:03,588 --> 01:01:05,005 உனக்கு தேவைப்படும். 642 01:01:06,630 --> 01:01:08,046 வரப்போவதற்கு. 643 01:01:22,838 --> 01:01:24,421 பிரபு-தந்தையே... 644 01:01:26,130 --> 01:01:27,630 கண்டுபிடிச்சிட்டோம். 645 01:01:29,380 --> 01:01:31,213 அது கோபுரத்தில் இருக்கு. 646 01:01:56,463 --> 01:01:58,255 அமைதியா போங்க. 647 01:02:41,796 --> 01:02:44,005 உங்க மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். 648 01:02:44,380 --> 01:02:46,463 சீக்கிரம் அரசவையில் சேருவாங்க, 649 01:02:46,546 --> 01:02:48,713 பிறகு மையத்திலும், உங்க அறிவிப்பை கேட்க. 650 01:02:52,213 --> 01:02:54,046 அப்ப அவங்களை நிறுத்த கூடாது. 651 01:04:05,796 --> 01:04:09,130 விசுவாசிகள் நம்புகின்றனர், வெள்ளை மரத்தின் இதழ்கள் 652 01:04:09,213 --> 01:04:11,005 விழுந்தால், சாதாரண விஷயமில்லை, 653 01:04:11,088 --> 01:04:13,963 ஆனால் வேலாரின் கண்ணீரே என, அவர்களின் பார்வையும் 654 01:04:14,380 --> 01:04:19,255 அவர்களின் தீர்ப்பும் நம்மீது எப்போதும் இருப்பதற்கான நினைவூட்டல். 655 01:04:20,463 --> 01:04:23,880 மனிதர்களின் விதியில் ஒரு மணிநேரம் இருக்கும். 656 01:04:24,546 --> 01:04:25,796 ஒரு மணி நேர தீர்ப்பு 657 01:04:27,005 --> 01:04:31,171 அதில் நம் ஒவ்வொருவரும், 658 01:04:32,005 --> 01:04:35,255 நாம் யாராக இருப்போமென தீர்மானிக்க வேண்டும். 659 01:04:36,213 --> 01:04:40,505 நம் தீவை சுற்றியுள்ள சிலைகள் போலாகி விட்டனவா நம் இதயங்கள்? 660 01:04:40,963 --> 01:04:44,838 அல்லது அவற்றை செதுக்கிய ஹீரோக்களின் ரத்தத்தோடு இன்னும் துடிக்கின்றனவா? 661 01:04:48,171 --> 01:04:51,380 நம் வீரம் கல்லறைகளில் உறங்கும் நம் மூதாதையர்கள் வரைதானா? 662 01:04:53,505 --> 01:04:54,880 அல்லது இங்கிருக்கிறதா, 663 01:04:56,796 --> 01:04:58,588 இப்போதும் நம் மத்தியில்... 664 01:05:06,005 --> 01:05:08,421 உதய சூரியனைப்போல முன்னேறக் காத்திருக்கிறதா? 665 01:05:11,463 --> 01:05:16,755 நான் ஆணையிடவோ, அழைக்கவோ மாட்டேன், நானே எதிர்கொள்ளாத ஆபத்திற்கு. 666 01:05:17,546 --> 01:05:22,171 அதனால், நானே எல்ஃபை மிட்டில் எர்த்துக்கு கூட்டிப் போக தீர்மானித்தேன். 667 01:05:29,630 --> 01:05:35,088 சவுத்லேண்ட்ஸில் மாட்டியிருக்கும் இறக்கக்கூடிய சகோதரர்களுக்கு உதவ. 668 01:05:35,171 --> 01:05:37,213 உங்க அரசி நோக்கத்தை வெளியிட்டாங்க. 669 01:05:37,296 --> 01:05:39,505 நம் கப்பல்கள் பத்து நாட்களில் கிளம்பும். 670 01:05:40,713 --> 01:05:45,255 தைரியமான மகன்கள், மகள்களுடன் இந்த விரைவுப்படை கிளம்பும், 671 01:05:45,338 --> 01:05:47,546 நியாயமான நியூமெனாரிலிருந்து. 672 01:05:48,380 --> 01:05:52,880 இளவரசியின் பாதுகாப்பிற்கு யார் தங்களை அர்ப்பணிக்க தயார்? 673 01:05:58,838 --> 01:06:01,671 முன்னே வந்து தெரியப்படுத்துங்க. 674 01:06:04,171 --> 01:06:05,463 நான் சேவை செய்வேன். 675 01:06:09,921 --> 01:06:11,213 நான் சேவை செய்வேன். 676 01:06:14,130 --> 01:06:15,546 நான் சேவை செய்வேன். 677 01:06:22,671 --> 01:06:23,505 சேவை செய்வேன்! 678 01:06:25,921 --> 01:06:26,755 சேவை செய்வேன்! 679 01:08:37,921 --> 01:08:39,921 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 680 01:08:40,005 --> 01:08:42,005 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா