1 00:00:01,126 --> 00:00:02,377 மாக்ரா! 2 00:00:03,754 --> 00:00:04,838 அம்மாவை கண்டுபிடித்தாயா? 3 00:00:04,922 --> 00:00:06,715 அம்மாவை அவர்களின் தலைவர் முன் கொண்டு சென்றார்கள். 4 00:00:08,717 --> 00:00:09,843 அவர் இறப்பதை பார்த்தேன். 5 00:00:09,927 --> 00:00:11,094 நானும் சென்று பார்த்தேன். 6 00:00:11,845 --> 00:00:13,639 எனக்கு இது கிடைத்தது. நாம் போக வேண்டும். 7 00:00:13,972 --> 00:00:15,933 பாதுகாப்பாக ஒளிந்துகொள்ள எனக்கு ஒரு இடம் தெரியும். என்னை பின்தொடருங்கள். 8 00:00:16,015 --> 00:00:19,520 யாரும் இங்கே நம்மை கண்டுபிடிக்க முடியாது. இது ஒரு குகை, நன்கு மறைந்துள்ளது. 9 00:00:19,603 --> 00:00:20,604 நாம் வந்துவிட்டோம். 10 00:00:21,021 --> 00:00:22,731 - பூட்ஸ்! - இந்த கதவை திற! 11 00:00:23,357 --> 00:00:24,650 இந்த கதவை திற! 12 00:00:29,071 --> 00:00:29,947 வேண்டாம்! 13 00:00:30,030 --> 00:00:34,076 நான் கேள்விப்பட்டேன் ஒரு பயான் மன்னர் அரியணையில் ஏறும் போது, 14 00:00:34,952 --> 00:00:38,038 அவர் இதயத்திற்கு சற்று மேலே ஒரு தாயத்து பதிக்கப்படும் என்று. 15 00:00:38,330 --> 00:00:39,998 எப்படி யாரோ ஒருவர் ராணியை கடத்தியிருக்க முடியும்? 16 00:00:40,582 --> 00:00:43,293 நான் மட்டுமே இங்கு உங்களுக்கு உதவ முடியும். 17 00:00:44,253 --> 00:00:45,712 உங்கள் சகோதரி யாரிடம் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். 18 00:01:44,104 --> 00:01:45,105 ச்செட்-ச்செட்! 19 00:01:52,196 --> 00:01:53,280 ச்செட்-ச்செட்-ச்செட்! 20 00:02:50,880 --> 00:02:53,007 டோரியன், மூதாதையர் ஒருமுறை சொன்னார்... 21 00:02:54,174 --> 00:02:57,970 "மனித அனுபவத்தில், மிகவும் அமைதியற்ற ஒலி... 22 00:02:58,846 --> 00:03:01,181 இயற்கையாக அழ வேண்டிய நேரத்தில் நிசப்தம்தான்." 23 00:03:01,891 --> 00:03:08,480 பிறப்பின்போதான நிசப்தம், மனம் உடையும் அந்த கணத்தில் தோன்றும் நிசப்தம். 24 00:03:08,564 --> 00:03:13,152 அத்தகைய தீவிர வலியை ஏற்படுத்தும்போது தோன்றும் நிசப்தம். 25 00:03:21,243 --> 00:03:22,828 நீயே உனக்கு பெருமை செய்துள்ளாய். 26 00:03:24,455 --> 00:03:26,665 உன்னுடைய எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. 27 00:03:28,417 --> 00:03:31,754 எனது நிலையில் உள்ள சில ஆண்கள் அதனால் பாதிக்கப்படலாம்... 28 00:03:33,005 --> 00:03:37,968 பரிதாபம் தோன்றுவதை திடீரென எதிர்ப்பது, அவர்களின் தீர்மானம் பலவீனமடைவது... 29 00:03:39,595 --> 00:03:41,180 இன்னும் எத்தனை எத்தனையோ. 30 00:03:42,014 --> 00:03:45,017 தெளிவாக சொன்னால், அவர்கள் கோழைகள். 31 00:03:47,102 --> 00:03:50,022 நான் இந்த நிலையிலும், அவர்கள் அப்படி இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இருக்கிறது. 32 00:03:51,649 --> 00:03:53,651 அடுத்து மீதமுள்ள எட்டு விரல்களை வெட்டிய பிறகு... 33 00:03:54,818 --> 00:03:57,530 நாம் கால்விரல்களில் தொடங்குவோம். 34 00:04:02,076 --> 00:04:07,206 என் ராணி எங்கே என்று நீ சொல்லும் வரை நான் இதை நாட்கணக்கில் செய்வேன். 35 00:04:28,644 --> 00:04:32,106 ராணியை பிடித்துவைத்திருக்கும் இடம் எனக்கு தெரியும். 36 00:04:32,565 --> 00:04:34,358 அவர்கள் நம்மை எதிர்பார்க்க மாட்டார்கள். 37 00:04:34,441 --> 00:04:36,485 வேகமாக நகர்ந்தால் இங்கிருந்து சில நாட்கள்தான். 38 00:04:36,902 --> 00:04:39,238 இராணுவம் ஏற்கனவே புறப்பட தயாராகி வருகிறது. 39 00:04:39,697 --> 00:04:42,700 அதற்கு முன்னர் நாம் தீர்க்க வேண்டிய சில விஷயங்கள் மட்டுமே உள்ளன. 40 00:04:42,783 --> 00:04:43,784 "தீர்க்க வேண்டியவையா"? 41 00:04:43,868 --> 00:04:46,662 முதலில், இந்த பையன். 42 00:04:47,997 --> 00:04:51,584 இரண்டு நிழல்களையும் பிடிக்க அவன் உதவியதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 43 00:04:53,127 --> 00:04:54,253 இப்போது... 44 00:04:56,171 --> 00:04:59,425 அவன் அதை எப்படி செய்தான் என்று அறிய விரும்புகிறேன். 45 00:05:02,052 --> 00:05:03,888 இவன் உங்கள் மகன் அல்ல. 46 00:05:03,971 --> 00:05:07,183 இவன் உங்களிடம் கொண்டுவரப்பட்ட தருணமே அது தெளிவானது. 47 00:05:08,976 --> 00:05:12,313 ஆனால் இவனுக்கும் பார்வை உண்டு, இல்லையா? 48 00:05:15,316 --> 00:05:16,317 ஆம். 49 00:05:18,736 --> 00:05:21,155 ஜெர்லாமரெலின் மற்றொரு குழந்தை... 50 00:05:24,867 --> 00:05:26,327 மற்றொரு பெண்ணுடன். 51 00:05:29,955 --> 00:05:31,957 நீங்கள் அதைவிட தகுதியானவர். 52 00:05:32,374 --> 00:05:35,711 அது எதுவுமே சிறுவனின் தவறு அல்ல, அவன் இல்லாமல் ஒன்றும் செய்திக்க முடியாது. 53 00:05:35,794 --> 00:05:39,632 நான் விட்ச்ஃபைண்டர், மாக்ரா, என் கூடாரத்திலேயே ஒருவன் அமர்ந்திருக்கிறான்! 54 00:05:39,715 --> 00:05:42,718 இதில் தவறு ஒரு விஷயம் அல்ல. அவன் யார் என்பதை என்னால் புறக்கணிக்க முடியாது. 55 00:05:42,801 --> 00:05:44,136 கண்டிப்பாக உன்னால் முடியும்! 56 00:05:45,429 --> 00:05:46,680 அவன் என்னுடன் இருப்பவன். 57 00:05:47,264 --> 00:05:50,768 அவனுக்கு என் பாதுகாப்பு உண்டு. நான் ராஜாவின் மகள். 58 00:05:52,311 --> 00:05:54,021 வேறு எதை தீர்க்க வேண்டும்? 59 00:05:55,731 --> 00:05:57,525 அவன் நம்முடன் வருகிறானா என்பதை. 60 00:05:58,025 --> 00:05:59,401 "நம்முடன் வருகிறானா"? 61 00:05:59,485 --> 00:06:01,904 நான் இராணுவத்தை நகர்த்துகிறேன். உங்களை விட்டு செல்ல முடியாது. 62 00:06:01,987 --> 00:06:05,115 முடியவே முடியாது. எனது குடும்பத்தை கண்டுபிடிக்கும் வரை நான் வரமாட்டேன். 63 00:06:05,199 --> 00:06:07,284 நாட்கள் ஆகியும் என் ஆட்கள் அவர்களின் எந்த அறிகுறிகளையும் காணவில்லை. 64 00:06:07,368 --> 00:06:09,787 - நீ எனக்கு வாக்குறுதி அளித்தாய்! - தேடுவதாக உறுதியளித்தேன். 65 00:06:09,870 --> 00:06:11,830 மேலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. 66 00:06:11,914 --> 00:06:14,166 உன் ஆட்களில் சிலரை விட்டுச்செல். நான் தொடர்ந்து தேடுகிறேன். 67 00:06:14,250 --> 00:06:17,044 இந்த விஷயத்தில் எனக்கு வேறு வழியில்லை, உங்களுக்கும்தான். 68 00:06:18,963 --> 00:06:20,047 சிறுவனே... 69 00:06:23,634 --> 00:06:28,347 கொலை செய்வதில் உன்னை விட எனக்கு அனுபவம் ஏராளம். 70 00:06:29,265 --> 00:06:33,811 பார்வை இருப்பதால் எனக்கு இணையாக உன்னை நீ நினைத்துக்கொண்டால்... 71 00:06:35,604 --> 00:06:36,814 மீண்டும் யோசி. 72 00:06:43,153 --> 00:06:44,363 ஒன்றுமில்லை. 73 00:06:48,492 --> 00:06:51,704 இந்த இடம் மக்கள் வசிக்காதது. இங்கே ஆபத்து கொஞ்சம்தான். 74 00:06:51,787 --> 00:06:53,831 சில ஆட்களே எனது பாதுகாப்புக்கு போதும். 75 00:06:54,164 --> 00:06:58,460 மாக்ரா, ராணி கடத்தப்பட்டிருக்கிறார். 76 00:06:58,544 --> 00:07:01,797 அவர் வலுவிழந்து இருக்கலாம். இறந்திருக்கலாம். 77 00:07:02,214 --> 00:07:04,258 யார் ராஜ்ஜியத்தை ஆளுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 78 00:07:04,341 --> 00:07:07,052 யாராவது ராஜ்ஜியத்தை ஆளுகிறார்களா என்பதே தெரியாது. 79 00:07:07,636 --> 00:07:11,223 உங்கள் குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த குழப்பம் பயங்கரமானது. 80 00:07:12,266 --> 00:07:15,394 எண்ணற்ற எதிரிகள், குறைகள் மற்றும் பகைகள். 81 00:07:15,477 --> 00:07:19,315 ஆட்சி செய்ய அரியணையில் ஒரு கேன் இல்லை என்றால் அவர்கள் மீண்டும் தலையிடுவார்கள். 82 00:07:19,398 --> 00:07:23,694 மரபுரிமையின் வரிசையில் நீங்கள்தான் அடுத்த கேன். 83 00:07:27,031 --> 00:07:30,659 உங்கள் குடும்பத்தைத் தொடர்ந்து தேடுவதற்கு நான் ஒரு குழுவை விட்டுச் செல்கிறேன். 84 00:07:32,369 --> 00:07:34,121 ஆனால் நீங்கள் எங்கே இருப்பது என்பது... 85 00:07:36,248 --> 00:07:38,751 இது நம் இருவருக்குமே ஒரு தேர்வு அல்ல. 86 00:07:54,183 --> 00:07:56,101 நீதான் விட்டுச் செல்லும் ஆட்களுக்கு பொறுப்பா? 87 00:07:56,185 --> 00:07:58,270 ஆம், இளவரசியாரே. எனக்கு கீழ் நான்கு ஆட்கள். 88 00:07:59,146 --> 00:08:00,481 எட்டு பேர் இருந்தால் சிறப்பாக இருக்கும். 89 00:08:01,398 --> 00:08:02,441 அப்படியே செய். 90 00:08:04,902 --> 00:08:07,530 இங்கே உன்னுடைய பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்று புரிகிறதா? 91 00:08:07,613 --> 00:08:09,114 ஆம், நிச்சயமாக. 92 00:08:10,574 --> 00:08:11,742 அவர்கள்தான் என் உயிர். 93 00:08:12,159 --> 00:08:13,327 சரி, தலைவி. 94 00:09:11,719 --> 00:09:14,180 நீ உன் அப்பாவிடம் பேச வேண்டும். 95 00:09:14,263 --> 00:09:16,849 அவர் நான் சொல்லும் எதையும் கேட்க விரும்பவில்லை. 96 00:09:16,932 --> 00:09:19,018 அதனால்தான் நீ அவருடன் பேச வேண்டும். 97 00:09:22,229 --> 00:09:23,355 நான் ஏன்? 98 00:09:23,439 --> 00:09:27,860 ஹனிவா, யார் முதலில் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. 99 00:09:27,943 --> 00:09:29,778 அதுதான் முன்னோக்கி செல்லும் பாதை. 100 00:09:32,615 --> 00:09:34,158 அது எளிது என்று நினைக்கிறீர்கள். 101 00:09:35,159 --> 00:09:36,285 எளிதுதான். 102 00:09:37,161 --> 00:09:39,288 உன்னால் முடியும்போதே இந்த மௌனத்தை உடை. 103 00:09:48,005 --> 00:09:49,465 நாம் ஏன் நிற்கிறோம்? 104 00:09:50,466 --> 00:09:54,970 இரவு இங்கு முகாமிடுவோம். உன் தந்தை உளவு பார்க்கச் சென்றிருக்கிறார். 105 00:09:59,892 --> 00:10:01,268 எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 106 00:10:02,019 --> 00:10:03,395 எது எவ்வளவு தூரம்? 107 00:10:05,481 --> 00:10:06,649 ஓ, அருமை. 108 00:10:17,952 --> 00:10:21,705 சொல்ல முடியவில்லை நிம்மதி அடைந்தேனா அல்லது கண்டுபிடிக்கமாட்டோம் என நம்பினேனா என்று. 109 00:10:26,794 --> 00:10:28,170 சென்று மற்றவர்களிடம் சொல்கிறேன். 110 00:10:39,181 --> 00:10:40,349 வீடு. 111 00:10:54,154 --> 00:10:56,866 ஒருபோதும் தனது அரண்மனையை விட்டு வெளியேறாத ஒரு ராணி 112 00:10:57,366 --> 00:11:01,120 வேலைக்காரியையும் ஓட்டுநரையும் தவிர யாருமன்றி எப்படி சாலை ஓரத்தில் கிடைத்தாள்? 113 00:11:01,996 --> 00:11:04,331 யாராவது அவளை ஆட்சியை விட்டு அகற்ற முயற்சித்ததாக நினைக்கிறாயா? 114 00:11:06,375 --> 00:11:08,460 என்னால் பல விஷயங்களை கற்பனை செய்ய முடிகிறது. 115 00:11:10,087 --> 00:11:11,505 ஆனால் யோசிக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். 116 00:11:12,840 --> 00:11:14,174 அவளுக்கு எதிரிகள் இருந்தார்கள். 117 00:11:14,800 --> 00:11:16,218 ராணி என்றால் நடப்பதுதானே. 118 00:11:17,469 --> 00:11:18,762 மற்றவர்களை விட சிலருக்கு அதிகமாகவே. 119 00:11:20,764 --> 00:11:22,766 அவள் என் அம்மா. உனக்குத் தெரியும், இல்லையா? 120 00:11:25,102 --> 00:11:29,356 அவர்களின் முகங்கள், குரல்கள், அவர்கள் சுவாசித்த விதம் கூட. 121 00:11:32,359 --> 00:11:35,404 என் அம்மா இறந்தபோது சிறுமி நான், ஆனால் அப்போதே எனக்கு தெரியும். 122 00:11:37,281 --> 00:11:39,074 அவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருந்தனர். 123 00:11:41,827 --> 00:11:43,245 எனவே அவர் இறந்தபோது, 124 00:11:43,329 --> 00:11:48,709 ஒவ்வொரு முறையும் என் சகோதரி அருகில் இருப்பது மிகவும் கொடூரமானது... 125 00:11:49,877 --> 00:11:54,298 அவளைக் கேட்க, அவளை நுகர, அவளைத் தொட... 126 00:11:57,176 --> 00:11:59,887 திடீரென்று, நான் மீண்டும் என் அம்மாவை நினைத்து வருந்துவேன். 127 00:12:02,973 --> 00:12:05,142 என் தந்தைக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன். 128 00:12:05,226 --> 00:12:09,522 அதனால்தான் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் பொக்கிஷமாக நினைத்த ஒன்றை பறிக்க 129 00:12:09,605 --> 00:12:12,233 ஒருபோதும் அவரால் முடியவில்லை என்று நினைக்கிறேன்: 130 00:12:17,196 --> 00:12:18,739 அவளது பிறப்புரிமையை. 131 00:12:45,599 --> 00:12:47,893 நீங்கள் சொன்னபடி அவருக்கு உணவைக் கொண்டு வந்திருக்கிறேன். 132 00:12:48,727 --> 00:12:54,233 அவள் என்னவோ அவ்வாறே நீ அழைக்கலாம். அதில் எந்த சக்தியோ மந்திரமோ இல்லை. 133 00:12:55,109 --> 00:12:58,320 நீங்கள் சொன்னபடி நான் ராணிக்கு உணவைக் கொண்டு வந்திருக்கிறேன். 134 00:12:58,404 --> 00:12:59,446 மிக நன்றாக. 135 00:13:11,917 --> 00:13:14,670 இன்னும் உன் தரத்திற்கு ஏற்றதாக இல்லையா? 136 00:13:16,881 --> 00:13:22,011 உன் பிடிவாதம் பற்றிய கதைகளை கேள்விப்பட்டேன், உன் சுய அழிவை பற்றி கூட. 137 00:13:23,345 --> 00:13:27,057 நான் முதலில் அவற்றைக் கேட்டபோது, அவை நம்பத்தகாதவைகளாக எனக்கு தோன்றின. 138 00:13:27,141 --> 00:13:28,309 ஆனால் இப்போது... 139 00:13:29,935 --> 00:13:34,732 அவற்றில் சிலவற்றை நீ எனக்காக உறுதிப்படுத்தலாம் அல்லது மறுக்கலாம். 140 00:13:35,441 --> 00:13:39,486 தூக்கத்தில் குறட்டை விட்டதற்காக நீ காதலர்களைக் கொன்றதாக கேள்விப்பட்டேன். 141 00:13:39,570 --> 00:13:43,032 சேவகர்கள், அவர்களின் வாசனை உனக்கு பிடிக்காததால். 142 00:13:44,116 --> 00:13:46,702 இளம் வேலைக்கார பெண்களின் நாக்குகளை நீ துண்டித்திருக்கிறாய் 143 00:13:47,036 --> 00:13:52,166 அவர்கள் உன்னை விரைவாக மகிழ்விக்கவில்லை என்பதற்காக. 144 00:13:52,583 --> 00:13:58,589 இவற்றில் எதற்காகவது நீ மறுப்பு சொல்கிறாயா அல்லது ஒருவேளை பெருமை கொள்கிறாயா? 145 00:14:12,853 --> 00:14:14,563 உனக்கே விதிகள் தெரியும். 146 00:14:15,773 --> 00:14:19,109 மணி ஒலிக்கிறது, நீ தப்பிக்க முயற்சிக்கவில்லை என்று எப்படித் தெரியும்? 147 00:14:20,319 --> 00:14:22,238 மணி ஒலித்தால், நாங்கள் பதிலளிக்க வேண்டும். 148 00:14:22,321 --> 00:14:26,408 மணி ஒலித்தால், அதற்காக நீ வருந்துவாய். 149 00:14:28,244 --> 00:14:30,287 உன்னை மீட்கும் தொகை செலுத்தப்படும் வரை, 150 00:14:30,871 --> 00:14:34,625 மிகவும் கவனமாக நான் பார்த்துக்கொள்ளும் ஒரு சொத்து நீ. 151 00:14:38,420 --> 00:14:41,298 எனவே நீ ஏன் ஓய்வெடுக்கக்கூடாது? 152 00:14:43,050 --> 00:14:45,886 நம் உரையாடலைத் தொடரலாமா? 153 00:14:47,721 --> 00:14:53,477 தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள், அந்தக் கதைகளை நான் சுவாரஸ்யமாக கேட்டபோதே... 154 00:14:55,062 --> 00:15:00,067 எனக்கு மிகவும் ஆர்வமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட காதலனை பற்றியது... 155 00:15:01,443 --> 00:15:04,446 உன் இதயத்தை நொறுக்கிவிட்டு உன்னை விட்டு விலகியவன். 156 00:17:05,442 --> 00:17:06,610 ஹனிவா. 157 00:17:08,529 --> 00:17:10,030 நான் முன்பு சொன்னது... 158 00:17:10,114 --> 00:17:11,407 எனக்குத் தெரியும். 159 00:17:11,490 --> 00:17:13,534 - அதற்கு காரணம்... - பரவாயில்லை. 160 00:17:14,034 --> 00:17:15,953 - குகையில்... - எனக்கு புரிகிறது. 161 00:17:17,413 --> 00:17:18,414 நிச்சயமாகவா? 162 00:17:35,639 --> 00:17:36,640 ஆம். 163 00:17:48,194 --> 00:17:50,196 எதை நோக்கி செல்கிறோம் என்று நீ நினைக்கிறாய்? 164 00:17:53,824 --> 00:17:57,286 நிஜமாக, உன் எதிர்பார்ப்புகளை நீ குறைத்துக்கொள்ள வேண்டும். 165 00:17:58,912 --> 00:18:02,041 அவரைப் பற்றி நமக்குத் தெரிந்ததை ஒதுக்கி வைக்க, சரியா? 166 00:18:02,123 --> 00:18:04,459 தனது குழந்தை ஒரு அரக்கனாக மாற்றும் கொடுமையில் விட்டு 167 00:18:04,543 --> 00:18:05,710 சென்றார் என்பதை ஒதுக்கி வை. 168 00:18:05,794 --> 00:18:08,546 - நடந்தது என்னவென்று நமக்குத் தெரியாது... - அம்மா இதை விரும்பவில்லை. 169 00:18:12,092 --> 00:18:15,554 சோகம் இல்லாமல் அம்மா அவரைப் பற்றி பேசியதாக எனக்கு நினைவில்லை. 170 00:18:16,555 --> 00:18:20,517 இதைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்யாமல் அவர் அதைப் பற்றி பேசியதாக நினைவில்லை. 171 00:18:23,395 --> 00:18:26,315 அதாவது, அது ஒரு காரணத்திற்காக இருந்திருக்க வேண்டும், ஹனிவா. 172 00:18:31,320 --> 00:18:37,785 அந்தக் காரணம் என்னவென்று அவர் ஒருபோதும் சொல்லாதது விந்தை என்று நீ நினைக்கவில்லையா? 173 00:18:42,957 --> 00:18:44,166 எனக்கு தெரியாது... 174 00:18:45,334 --> 00:18:48,671 என்ன... அம்மாவின் மனதில் இருந்தது என்று. 175 00:18:49,505 --> 00:18:55,302 ஆனால் அம்மா அவரை நேசித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். 176 00:18:58,305 --> 00:19:00,474 அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். 177 00:19:22,705 --> 00:19:24,456 உன் தூக்கத்தில் அதை கேட்டாய். 178 00:19:26,709 --> 00:19:27,918 அது ஒரு ஆந்தையா? 179 00:19:29,211 --> 00:19:32,923 ஆந்தை அல்ல. அது ஒரு ஆண். 180 00:19:34,300 --> 00:19:37,845 நாம் மோசமான இடத்தில் இருக்கிறோம் பாபா. சட்டங்கள் அற்ற நிலத்தில். 181 00:19:38,470 --> 00:19:40,723 நீ நலமாக இல்லை. 182 00:19:41,974 --> 00:19:43,100 நான் நன்றாக இருக்கிறேன். 183 00:19:43,976 --> 00:19:45,603 குழந்தைகளுக்குத் தெரியுமா? 184 00:19:46,645 --> 00:19:48,230 அவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. 185 00:19:49,648 --> 00:19:51,775 நீ நினைப்பதை விட அவர்களுக்கு அதிகம் தெரியும். 186 00:20:00,284 --> 00:20:01,702 ஹனிவா உன்னுடன் பேசினாளா? 187 00:20:02,578 --> 00:20:03,662 எதற்கு? 188 00:20:04,872 --> 00:20:06,624 அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள்... 189 00:20:07,583 --> 00:20:09,960 அவளால் விவரிக்க முடியாத ஒன்றை... 190 00:20:10,711 --> 00:20:12,338 அது அவளை பயமுறுத்துகிறது. 191 00:20:14,798 --> 00:20:15,799 அவள் துக்கப்படுகிறாள். 192 00:20:15,883 --> 00:20:17,927 கோஃபூனும் தான். 193 00:20:18,469 --> 00:20:22,139 ஆனால் அவள் அந்த துயரத்தில் இல்லை. 194 00:20:24,183 --> 00:20:28,562 அவர்கள் வித்தியாசமானவர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் தேவை. 195 00:20:28,979 --> 00:20:32,107 அவளுக்கு என்ன தேவை என்று உங்களுக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன். 196 00:20:32,191 --> 00:20:33,400 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 197 00:20:37,905 --> 00:20:39,740 நான் முதலில் உங்களிடம் வந்தது நினைவிருக்கிறதா? 198 00:20:41,033 --> 00:20:43,994 ஆத்திரம், நான் எவ்வளவு பயங்கரமானவன் என்பது? 199 00:20:45,788 --> 00:20:47,206 ஏனென்றால் நான் பயத்தில் இருந்தேன். 200 00:20:48,832 --> 00:20:50,251 உன்னை நம்ப பயப்பட்டேன்... 201 00:20:51,377 --> 00:20:55,214 நான் உண்மையிலேயே தப்பித்துவிட்டேன், அது உண்மை தான் என்று நம்ப பயப்பட்டேன். 202 00:20:56,215 --> 00:20:58,926 அப்போது நீ என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா? 203 00:21:00,094 --> 00:21:03,681 மீண்டும் எனது பொருட்களை நீ உடைத்தால், உன் தூக்கத்திலேயே 204 00:21:03,764 --> 00:21:05,766 நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றேன். 205 00:21:06,392 --> 00:21:07,977 ஆம். ஆனால் அதன் பிறகு... 206 00:21:09,353 --> 00:21:11,230 நீ செய்தது நினைவிருக்கிறதா? 207 00:21:13,899 --> 00:21:19,321 நான் ஆசுவாசமடையும் வரை என்னுடன் உட்கார்ந்து இருந்தாய். 208 00:21:21,574 --> 00:21:25,286 நான் தனியாக இல்லை என்று எனக்குத் புரியும் வரை என்னுடன் இருந்தாய். 209 00:21:28,706 --> 00:21:30,124 ஹனிவா குழப்பத்தில் இருக்கிறாள். 210 00:21:31,625 --> 00:21:33,878 அவள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறாள்... 211 00:21:35,004 --> 00:21:38,424 தாயின் இழப்பு மற்றும் ஒரு புதிய தந்தையை. 212 00:21:42,011 --> 00:21:43,888 ஆனால் அவளுக்குத் தேவையான நேரத்தை கொடுப்பேன். 213 00:21:43,971 --> 00:21:47,099 உன்னைப் போலவே, அவள் தனியாக இல்லை என்று அவள் தெரிந்துகொள்வதை உறுதி செய்வேன். 214 00:22:10,414 --> 00:22:12,124 பாரிஸ், என்ன ஆயிற்று? 215 00:22:17,171 --> 00:22:18,797 லாவெண்டர் வாசனை போய்விட்டது. 216 00:22:20,549 --> 00:22:22,092 நான் மரணத்தை உணர்கிறேன். 217 00:22:37,316 --> 00:22:40,152 நாட்கள், வாரங்கள் கூட இருக்கலாம். 218 00:22:42,404 --> 00:22:43,739 அது மனிதன், இல்லையா? 219 00:23:19,108 --> 00:23:21,569 "ஒரு புதிய உலகம் இதற்கு அப்பால் உள்ளது. 220 00:23:23,654 --> 00:23:27,074 அதில் ஒரு புதிய கடவுள் இருக்கிறார். 221 00:23:33,080 --> 00:23:34,790 நுழையுங்கள், பார்க்கப்படுவீர்கள். 222 00:23:36,083 --> 00:23:37,877 நுழையுங்கள், மதிப்பிடப்படுவீர்கள். 223 00:23:40,045 --> 00:23:41,881 நுழையுங்கள், மரணத்தைக் காண்பீர்கள். 224 00:23:44,300 --> 00:23:45,801 நுழையுங்கள், பார்க்கப்படுவீர்கள்." 225 00:23:48,012 --> 00:23:49,013 ஜெர்லாமரெல். 226 00:23:50,806 --> 00:23:53,058 அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. 227 00:23:53,475 --> 00:23:54,727 அப்படி இருக்காது. 228 00:23:55,561 --> 00:23:57,980 ஒருவேளை... ஒருவேளை இதுதான் நடக்கும் 229 00:23:58,063 --> 00:24:01,692 உன் பணி முக்கியமானது மற்றும் பார்வையாளர்களை நீ விரும்பவில்லை என்றால். 230 00:24:01,775 --> 00:24:02,943 பாரிஸ், எனக்குத் தெரியாது. 231 00:24:03,027 --> 00:24:08,407 இந்த உலகில் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போது அறிந்து கொள்ளுங்கள். 232 00:24:08,490 --> 00:24:12,453 தீங்கு நடப்பதை தவிர்க்க ஒருவர் கடுமையாக சிலவற்றை செய்ய வேண்டும். 233 00:24:12,536 --> 00:24:14,121 நான் பாரிஸுடன் உடன்படுகிறேன். 234 00:24:17,708 --> 00:24:21,253 இதுபோன்ற ஏதோவொன்றினை பார்த்துவிட்டு திரும்ப நாம் இங்கே வரவில்லை. 235 00:24:21,879 --> 00:24:25,132 நாம் எதை தெரிந்துகொள்ள கிளம்பினோம் என்று இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 236 00:24:25,216 --> 00:24:27,885 நாம் அனைவரும் எதற்காக இவ்வளவு தியாகம் செய்தோம் என்று அறிய விரும்புகிறேன். 237 00:24:30,721 --> 00:24:32,973 நான் என் மனைவியை எதற்கு தியாகம் செய்தேன் என்று அறிய விரும்புகிறேன். 238 00:24:34,600 --> 00:24:35,976 எனக்கு அது தெரிய வேண்டும். 239 00:24:39,146 --> 00:24:40,147 வாருங்கள். 240 00:24:42,066 --> 00:24:44,109 குறைந்தபட்சம் சரியான வழியில் செல்கிறோம் என்பதாவது உறுதி. 241 00:24:47,613 --> 00:24:48,822 கோஃபூன். 242 00:24:54,411 --> 00:24:55,746 நாம் முன்னேறுவோம். 243 00:25:44,336 --> 00:25:46,046 நான்கு காவலர்களைப் பார்த்தேன். 244 00:25:46,672 --> 00:25:50,259 இங்கே ஒருவர், நுழைவாயிலில். 245 00:25:51,093 --> 00:25:52,219 இன்னும் இரண்டு பேர்... 246 00:25:53,470 --> 00:25:55,764 பட்டுத் தொழிலாளர்களுக்கு இடையே ரோந்து செல்கிறார்கள். 247 00:25:56,348 --> 00:25:58,267 மற்றொருவர் இரண்டாவது ஜன்னலுக்கு அருகில். 248 00:25:58,350 --> 00:26:02,563 தொழிலாளர்கள் நிலையாக இருக்கிறார்கள் தானே? காவலர்கள் மட்டுமே நடக்கிறார்களா? 249 00:26:02,646 --> 00:26:06,233 ஆம். அவர்கள் தங்கள் இருப்பை தெரிவிக்க தடிகளை தட்டுகிறார்கள். 250 00:26:06,859 --> 00:26:08,944 காவலர்கள் எந்த வகையான காலணிகளை அணிந்திருக்கிறார்கள்? 251 00:26:10,404 --> 00:26:13,157 என்ன வகையான காலணிகள்? தோலால் ஆனதா? மரத்தால் ஆனதா? 252 00:26:13,240 --> 00:26:15,117 தோல் என்றுதான் நினைக்கிறேன். 253 00:26:16,160 --> 00:26:18,329 ராணி எங்கே? அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா? 254 00:26:19,622 --> 00:26:22,291 ராணி எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. 255 00:26:22,791 --> 00:26:26,420 இங்கே இரத்த காயங்களோடு ஒரு பெண் இருந்தாள், பின்னால். 256 00:26:26,503 --> 00:26:28,339 இரத்த காயங்களோடா? உயிருடன் இருந்தாரா? 257 00:26:28,422 --> 00:26:29,423 எனக்குத் தெரியாது. 258 00:26:30,507 --> 00:26:33,969 எனவே, உறுதியாக சொல்கிறாயா? நான்கு காவலர்களும் அவர்களுக்கு இடையில் இடமும்? 259 00:26:34,053 --> 00:26:35,304 அதைத்தான் நான் பார்த்தேன். 260 00:26:35,804 --> 00:26:37,306 அதைத்தான் நீ பார்த்தாயா. 261 00:26:37,389 --> 00:26:39,475 நீ சரியாக பார்த்தாய் என்று பார்வை உத்திரவாதம் அளிக்கிறது போல. 262 00:26:39,558 --> 00:26:41,560 அவர்களை சமாளிக்க உன்னிடம் போதுமான ஆட்கள் இருக்கிறார்கள், இல்லையா? 263 00:26:41,644 --> 00:26:44,939 அவர்கள் நம் சத்தத்தை கேட்கும் தருணம், அவர்கள் நம்மை உணரும் தருணம், 264 00:26:45,022 --> 00:26:47,191 எச்சரிக்கை கொடுக்கப்பட்ட தருணமே, இது முடிந்துவிடும். 265 00:26:47,274 --> 00:26:48,651 அவரை உயிருடன் அடைய ஒரே வழி 266 00:26:48,734 --> 00:26:51,111 நாம் இங்கே இருக்கிறோம் என அவர்கள் அறியும் தருணம் எந்த காவலர்களும் இருக்கக்கூடாது. 267 00:26:51,195 --> 00:26:53,239 ஒருவர் மட்டும் அதைச் செய்ய வேண்டும், ஒவ்வொருவராக. 268 00:26:53,322 --> 00:26:55,991 நான் செய்கிறேன். என்னால் எல்லோரையும் கொல்ல முடியும். 269 00:26:56,075 --> 00:26:59,370 நான் உன் கண்களை கேட்டதாக ஞாபகம், சூனியக்காரா, உன் கருத்தை அல்ல. 270 00:26:59,787 --> 00:27:02,373 ராஜ்ஜியத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. 271 00:27:02,456 --> 00:27:04,875 நான் விரும்பும் வரைதான் உன்னை நம்புவேன். 272 00:27:04,959 --> 00:27:07,461 இல்லையென்றால், மாக்ரா, இவனை நம்புகிறாயா. 273 00:27:10,005 --> 00:27:11,465 சரி, அதை விடுங்கள். 274 00:27:12,049 --> 00:27:15,970 முன்னால் செல்லும் வீரர்களின் படையை ஏற்பாடு செய்யுங்கள், வார்த்தை சமிக்ஞை கூடாது. 275 00:27:16,470 --> 00:27:19,807 உங்களை உள்ளே அழைக்கத் தயாராக இருக்கும்போது பேசுவது நானாக இருப்பேன். 276 00:27:19,890 --> 00:27:21,058 நீங்கள் சமிக்ஞை தரவில்லை என்றால்? 277 00:27:21,141 --> 00:27:22,810 பின்னர் நான் தோல்வியடைந்திருப்பேன், ராணி இறந்திருப்பார். 278 00:27:22,893 --> 00:27:24,228 நீங்கள் எல்லாவற்றையும் எரித்து மண்ணோடு மண் ஆக்கிவிட்டு 279 00:27:24,311 --> 00:27:27,231 இளவரசியை கான்ஸுஅவிற்கு கொண்டு சென்று அரியணையில் அமரவையுங்கள். 280 00:27:27,314 --> 00:27:29,108 நான் அதற்கு சம்மதிக்கவில்லை. 281 00:27:29,191 --> 00:27:31,610 அந்த நிலை ஏற்பட்டால் உங்கள் சம்மதம் தேவைப்படாது. 282 00:27:31,694 --> 00:27:33,529 அந்த நிலை ஏற்படப்போகிறதா? 283 00:27:33,612 --> 00:27:34,613 இல்லை. 284 00:28:31,837 --> 00:28:34,006 கட்டர்! இங்கே வா! 285 00:28:34,089 --> 00:28:35,090 பாதுகாவலர்களே. 286 00:28:35,174 --> 00:28:38,093 ஒருவன் ஊடுருவிவிட்டான்! யாரோ ஒருவன் இங்கே இருக்கிறான்! 287 00:28:38,969 --> 00:28:40,179 எழுந்திரு, கேடுகெட்டவளே. 288 00:28:48,604 --> 00:28:50,356 என் கத்தி. 289 00:28:59,156 --> 00:29:03,661 எந்த திட்டமும் இல்லாமல் நான் யார் என்று அவளிடம் சொல்வேன் என்று நினைத்தாயா? 290 00:29:21,679 --> 00:29:22,888 ராணியாரே? 291 00:29:22,972 --> 00:29:24,348 ராணி இங்கிருக்கிறார். 292 00:29:27,768 --> 00:29:29,353 ஏன் அவர் பேசவில்லை? 293 00:29:30,396 --> 00:29:32,314 நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். 294 00:29:33,774 --> 00:29:37,278 ஒன்றுமில்லை. நீங்கள் பத்திரமாக உள்ளீர்கள். 295 00:29:50,791 --> 00:29:52,126 இது எப்படி நடந்தது? 296 00:29:53,836 --> 00:29:55,170 அவர்கள் எப்படி உங்களை பிடித்தார்கள்? 297 00:29:56,881 --> 00:29:58,173 நான் வெளியேறும் நிலை ஏற்பட்டது. 298 00:29:59,717 --> 00:30:01,802 யாராவது உங்களுக்கு எதிராக நடந்திருக்கிறார்கள். யார் அது? 299 00:30:03,679 --> 00:30:04,805 நிறைய பேர். 300 00:30:06,515 --> 00:30:11,145 நீங்கள் விரைவில் குணமடைவீர்கள், நாம் கான்ஸுஅ திரும்புவோம். 301 00:30:12,479 --> 00:30:15,149 ஆனால் முதலில், மருத்துவர் வருகிறார். 302 00:30:29,079 --> 00:30:30,206 அவர் இங்கிருக்கிறார். 303 00:31:04,114 --> 00:31:06,075 - பத்திரம். - நிச்சயமாக. 304 00:31:29,014 --> 00:31:30,099 நாம் சந்தித்திருக்கிறோமா? 305 00:31:54,039 --> 00:31:55,708 உனக்கு இப்படி நடந்ததற்கு வருந்துகிறேன். 306 00:31:59,879 --> 00:32:02,506 நீ போகக்கூடாது, மாக்ரா. 307 00:32:08,846 --> 00:32:10,723 நீ அந்த செய்தியை கேட்கும்வரையிலாவது. 308 00:32:13,601 --> 00:32:16,020 என்ன செய்தி, ராணியாரே? 309 00:32:18,480 --> 00:32:20,107 அவர்கள் அனைவரும் என்னை எதிர்த்தார்கள். 310 00:32:22,943 --> 00:32:24,945 கடவுள்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக சொன்னார்கள். 311 00:32:25,905 --> 00:32:30,242 அவர்கள் தோல்வியடைந்தபோது, எனக்கு ஒரே வழிதான் இருந்தது: 312 00:32:32,912 --> 00:32:34,872 இந்த நம்பிக்கையை எதிர்க்காமல் இருப்பது... 313 00:32:36,498 --> 00:32:38,667 அல்லது என் வழியில் அதை எதிர்கொள்வது. 314 00:32:40,211 --> 00:32:41,879 அதற்கு என்ன அர்த்தம்? 315 00:32:42,296 --> 00:32:44,298 நீ என்னை கன்ஸுஅவிற்கு திருப்ப அழைத்துப்போக விரும்புகிறாயா? 316 00:32:46,675 --> 00:32:47,718 கன்ஸுஅ இல்லை. 317 00:32:50,054 --> 00:32:55,351 பல வருடமாக, இயந்திரங்கள் நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சக்தியை பெற்றோம். 318 00:32:56,352 --> 00:33:00,022 இயந்திரங்களின் செயல்களை கணிக்க முடியாதபோது, நாங்கள் போற்றப்பட்டோம். 319 00:33:01,815 --> 00:33:03,442 இயந்திரங்களால் முடியாதபோது, நாங்கள் போற்றப்படவில்லை. 320 00:33:06,237 --> 00:33:10,115 இயந்திரங்கள் வேலை செய்வதால் நான் ராணியாக இருக்க விரும்பவில்லை. 321 00:33:13,118 --> 00:33:16,038 நான் தகுதியுடையவள் என்பதாலேயே ராணியாக இருக்க விரும்புகிறேன். 322 00:33:19,208 --> 00:33:22,336 எனவே, இப்போது கதை இதுதான்: 323 00:33:26,048 --> 00:33:28,968 கடவுள்கள் அணையை எடுத்துக்கொண்டார்கள். 324 00:33:31,136 --> 00:33:33,931 ஆத்திரத்தில் அவர்கள் அதை அழித்து 325 00:33:34,723 --> 00:33:38,227 உண்மையான மத துவேஷகர்களை கொன்றுவிட்டனர். 326 00:33:39,478 --> 00:33:43,023 பலவீனமானவர்களை, சுயநலவாதிகளை, பின்தங்கியவர்களை. 327 00:33:46,277 --> 00:33:47,778 ஆனால் என்னை விட்டுவிட்டனர். 328 00:33:49,613 --> 00:33:50,823 என்னை மட்டும். 329 00:33:53,993 --> 00:33:57,079 நீங்கள் அதை அழித்துவிட்டீர்கள். 330 00:34:02,084 --> 00:34:05,004 அங்கிருக்கும் வீரர்களை... 331 00:34:06,881 --> 00:34:12,887 இருபது ஆண்டுகளாக, ஒரு நாள், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு, அவர்களது குடும்பங்களுக்குத் 332 00:34:12,970 --> 00:34:16,765 திரும்புவார்கள் என்ற உங்கள் வாக்குறுதியின் பேரில் அவர்கள் உழைத்தனர். 333 00:34:18,601 --> 00:34:20,603 எண்ணற்ற போர்கள்... 334 00:34:21,687 --> 00:34:25,149 துன்பங்கள் மற்றும் கொடூரமான சூழ்நிலைகளில், 335 00:34:25,983 --> 00:34:28,652 அதுவே அவர்களைத் இங்கு இருக்க வைத்தது. 336 00:34:28,736 --> 00:34:31,155 நீங்கள் அனைத்தையும் நாசமாக்கிவிட்டீர்கள். 337 00:34:32,740 --> 00:34:34,575 என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். 338 00:34:35,784 --> 00:34:37,536 எங்கள் வம்சத்தை காப்பாற்றியிருக்கிறேன். 339 00:34:39,288 --> 00:34:41,790 நான் சென்று என் ஆட்களிடம் உங்கள் வம்சத்தை காக்க அவர்களின் குடும்பங்கள் 340 00:34:41,874 --> 00:34:47,671 அழிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வேன், மேலும் நான் சொன்னதும் அவர்கள் 341 00:34:47,755 --> 00:34:51,050 எங்கு போக சொன்னாலும் செல்வார்கள் என நினைக்கிறீர்களா? 342 00:34:52,218 --> 00:34:53,469 உன் ஆட்களா? 343 00:34:54,762 --> 00:34:56,055 அவர்கள் என் ஆட்கள். 344 00:35:03,895 --> 00:35:07,274 நான் சொல்வது போல் அவர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்... 345 00:35:08,275 --> 00:35:10,194 ஏனெனில் நான்தான் அவர்களது ராணி. 346 00:35:15,406 --> 00:35:19,828 நான் நினைக்கிறேன், நீண்ட காலத்தில் முதல் முறையாக... 347 00:35:21,497 --> 00:35:23,749 அதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று. 348 00:35:45,855 --> 00:35:47,314 ஊ. 349 00:35:47,397 --> 00:35:48,399 என்ன? 350 00:35:48,899 --> 00:35:50,067 நாம் ஏன் நின்றுவிட்டோம்? 351 00:35:50,568 --> 00:35:52,278 ஏதோ ஒன்று சரியாக படவில்லை. 352 00:35:53,487 --> 00:35:56,156 - முன்னே என்ன இருக்கிறது? - ஒரு மலைப்பாதை. 353 00:35:56,907 --> 00:35:59,994 - சுற்றி போக வேறு வழி இருக்கிறதா? - இல்லை, என் பார்வைக்கு படவில்லை. 354 00:36:00,953 --> 00:36:02,204 பாரிஸ். 355 00:36:02,288 --> 00:36:04,331 முரண்பாடான விஷயங்களை உணர்கிறேன். 356 00:36:05,082 --> 00:36:06,375 ஆபத்தை உணர்கிறேன். 357 00:36:07,126 --> 00:36:09,336 ஆனால் ஆபத்து எங்கிருக்கிறது என உறுதியாக தெரியவில்லை. 358 00:36:09,420 --> 00:36:11,380 ஒருவேளை எதுவும் இல்லாததால் இருக்கலாம். 359 00:36:11,463 --> 00:36:13,048 சுற்றி போக வேறு வழியை கண்டுபிடிப்போம். 360 00:36:13,632 --> 00:36:14,633 நாம் பல நாட்களை இழப்போம். 361 00:36:14,717 --> 00:36:17,052 - வேறொரு வழியை கண்டுபிடிப்போம் என்றேன். - இங்கு எதுவும் இல்லை. 362 00:36:17,136 --> 00:36:18,971 கோஃபூன், அவரிடம் இங்கு எதுவுமில்லை என்று சொல். 363 00:36:19,054 --> 00:36:20,723 அப்பா, நான் எதையும் பார்க்கவில்லை. 364 00:36:23,434 --> 00:36:25,060 - நான் போகிறேன். - ஹேய். 365 00:36:26,270 --> 00:36:28,606 கோஃபூன், வானத்தில் கடவுள் சுடர் எங்குள்ளது? 366 00:36:28,689 --> 00:36:30,149 அது ஏற்கனவே மலைகளுக்கு பின்னால் சென்றுவிட்டது. 367 00:36:30,232 --> 00:36:31,817 எதற்காக சூரியன் உங்களுக்கு முக்கியம்? 368 00:36:31,901 --> 00:36:34,320 முக்கியமில்லை. எவ்வளவு விரைவில் இருட்டாகும் என்பதைக் 369 00:36:34,403 --> 00:36:37,323 தெரிந்துகொள்ள முயல்கிறேன், மேலும் உங்களால் பார்க்க முடியாது. 370 00:36:37,406 --> 00:36:38,449 பாபா. 371 00:37:18,239 --> 00:37:19,532 ஒலி கண்ணி. 372 00:37:26,664 --> 00:37:27,915 அவர்களை சுட்டிக்காட்டு. 373 00:37:56,443 --> 00:37:57,444 சரி. 374 00:37:58,195 --> 00:37:59,238 போ. 375 00:38:22,511 --> 00:38:24,138 நகர வேண்டாம். 376 00:38:26,098 --> 00:38:28,893 வில் அம்பு அங்கிருக்கிறது. நமக்கு அது தேவை. 377 00:38:35,191 --> 00:38:36,734 நீ என்ன செய்கிறாய்? 378 00:38:41,071 --> 00:38:43,782 என்னால் சத்தமில்லாமல் நகர முடியும். உன்னால் முடியாது. 379 00:39:58,649 --> 00:40:00,860 - ஹனிவா, வேண்டாம்! - சுடுவதை நிறுத்து! 380 00:40:04,905 --> 00:40:06,031 நீ தான் ஹனிவாவா? 381 00:40:06,574 --> 00:40:07,575 ஆம். 382 00:40:10,119 --> 00:40:11,787 கூச்சலிட்டவன்... 383 00:40:13,539 --> 00:40:14,582 உன் பெயர் என்ன? 384 00:40:16,083 --> 00:40:17,084 கோஃபூன். 385 00:40:17,626 --> 00:40:19,044 ஜெர்லாமரெலின் குழந்தைகளே, 386 00:40:19,712 --> 00:40:22,423 இந்த மரங்களுக்கு அப்பால் ஒரு பாலம் உள்ளது. 387 00:40:23,716 --> 00:40:26,760 நீங்கள் அந்த பாலத்தின் வழியாக அறிவொளி மாளிகைக்குள் செல்லலாம். 388 00:40:27,636 --> 00:40:31,265 அறிவொளி மாளிகையில் மருத்துவர் இருக்கிறாரா? 389 00:40:31,348 --> 00:40:33,017 உங்களால் போக முடியாது. 390 00:40:33,100 --> 00:40:35,227 நாங்கள் போக முடியுமென்று இப்போதுதான் கூறினாய். 391 00:40:35,311 --> 00:40:39,273 ஜெர்லாமரெலின் குழந்தைகள் மட்டுமே அறிவொளி மாளிகைக்குள் போக முடியும். 392 00:40:40,065 --> 00:40:42,610 ஒரே ஒரு விதி மட்டுமே உள்ளது, அது இதுதான். 393 00:40:43,027 --> 00:40:46,739 நாங்கள் வந்திருக்கிறோமென்று ஜெர்லாமரெலிடம் கூறு. அவர் புரிந்துகொள்வார். 394 00:40:47,948 --> 00:40:50,242 கோஃபூன் மற்றும் ஹனிவா மட்டுமே செல்ல வேண்டும். 395 00:40:50,326 --> 00:40:51,327 நான் சொல்வதை கேள்... 396 00:40:51,410 --> 00:40:52,703 மகனே. 397 00:40:53,954 --> 00:40:57,124 ஒரே ஒரு விதி மட்டுமே உள்ளது, அது இதுதான். 398 00:40:58,459 --> 00:41:01,462 ஜெர்லாமரேலிடம் அவரது மகனும் மகளும் திரும்பி போவதற்காக ஏன் இவ்வளவு தூரம் 399 00:41:01,545 --> 00:41:02,755 வந்தார்கள் என்று நீ சொல்லலாம்! 400 00:41:02,838 --> 00:41:04,340 நாம் திரும்பப்போவதில்லை. 401 00:41:05,758 --> 00:41:07,509 நீ என்ன பேசுகிறாய்? நாம் திரும்பி போக வேண்டும். 402 00:41:07,593 --> 00:41:10,095 - அவளுக்கு மருத்துவம் தேவை. - இல்லை. அப்பாவும் பாரிஸும் இருக்கிறார்கள். 403 00:41:10,179 --> 00:41:11,680 அப்பா அவளை வேறொரு குழுவுக்கு அழைத்துப்போவார். 404 00:41:11,764 --> 00:41:13,224 என்ன சொல்கிறாய்? நாம் அவளை இங்கே விட்டுவிடக்கூடாது, ஹனிவா. 405 00:41:13,307 --> 00:41:15,100 அவளுக்கு நம் அனைவரும் தேவையில்லை. 406 00:41:15,184 --> 00:41:16,519 - நாம் ஒன்றாக இருப்போம். - கோஃபூன். 407 00:41:16,602 --> 00:41:17,686 - போதும். - இது பைத்தியக்காரத்தனம். 408 00:41:17,770 --> 00:41:18,771 நிறுத்துங்கள். 409 00:41:18,854 --> 00:41:20,856 நான் சொல்வதை கேளுங்கள். 410 00:41:23,484 --> 00:41:25,027 ஹனிவா, கோஃபூன், 411 00:41:25,444 --> 00:41:29,698 திரும்பி செல்வதற்காக கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் பயணம் செய்யவில்லை. 412 00:41:31,492 --> 00:41:33,869 இதைப் பற்றி நான் நீண்ட காலமாக யோசித்தேன். 413 00:41:34,453 --> 00:41:37,873 நான் அதை ஒருபோதும் நம்பவில்லை, ஆனால் பாரிஸ் சொல்வது சரிதான். 414 00:41:39,291 --> 00:41:44,255 ஒவ்வொரு குழந்தைக்கும் இறுதியில் தனியாக செயல்படும் காலம் ஒன்று வரும். 415 00:41:44,338 --> 00:41:46,215 நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்கள்? 416 00:41:47,716 --> 00:41:51,262 நீங்கள் பிறந்த அன்று, உங்களைப் பாதுகாக்க நான் ஒரு சுவரில் போராடினேன், 417 00:41:51,345 --> 00:41:53,347 அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அதையே செய்கிறேன். 418 00:41:54,640 --> 00:41:57,101 ஒரு தந்தை தன் குழந்தைகளை பாதுகாக்க இதைத்தான் செய்வார். 419 00:41:58,644 --> 00:42:02,565 ஆனால் ஒரு தந்தைக்கு தன் குழந்தைகளை எப்போது தனியாக விடவேண்டும் என்பதும் தெரிய வேண்டும் 420 00:42:02,648 --> 00:42:04,650 ஆகவே அவர்கள் தங்கள் பாதையை கண்டுபிடிப்பார்கள். 421 00:42:07,695 --> 00:42:09,905 - அந்த நேரம் இதுதான். - இல்லை, அது உன்மையில்லை. 422 00:42:10,906 --> 00:42:13,909 அது உண்மையில்லை. அது உண்மையில்லை என்று சொல், ஹனிவா. 423 00:42:13,993 --> 00:42:15,452 அது உண்மைதான், கோஃபூன். 424 00:42:16,120 --> 00:42:18,914 நீயும் நானும் இவரை விட வேறொரு உலகத்தில் வாழ்கிறோம். 425 00:42:19,498 --> 00:42:20,958 எப்போதுமே. 426 00:42:22,209 --> 00:42:24,628 நாம் உண்மையில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள மாட்டோம். 427 00:42:25,129 --> 00:42:26,881 இதை அறிந்துதான் நம்மை இங்கு அழைத்து வந்துள்ளார். 428 00:42:26,964 --> 00:42:28,924 நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள்? 429 00:42:33,679 --> 00:42:35,347 ஏனென்றால் நான் உங்கள் தந்தை. 430 00:42:35,431 --> 00:42:36,765 அப்பா. 431 00:42:37,349 --> 00:42:38,684 என் அருமை மகளே. 432 00:42:40,102 --> 00:42:41,312 நீ நினைப்பது தவறு. 433 00:42:43,522 --> 00:42:45,149 நாம் வெவ்வேறு உலகத்தில் வாழவில்லை. 434 00:42:46,275 --> 00:42:47,860 நீயும் உன் சகோதரனும் 435 00:42:47,943 --> 00:42:51,030 பிறந்தது முதல் நீங்கள் தான் என் உலகம், அதில் தான் நான் வாழ்ந்தேன். 436 00:42:52,740 --> 00:42:55,910 என் குழந்தைகளே, நானும் மற்றவர்களை போல பார்வையற்றவன் தான். 437 00:42:57,953 --> 00:42:59,413 ஆனாலும் என்னால் உங்களை பார்க்க முடியும். 438 00:43:00,831 --> 00:43:02,708 நான் உங்களை பார்ப்பதை நிறுத்தவே மாட்டேன். 439 00:43:03,918 --> 00:43:05,377 ஆனால் நான் நினைத்தது சரிதான். 440 00:43:06,879 --> 00:43:09,673 இந்த நாள் வரும், நீங்கள் உங்கள் தந்தையை சந்திப்பீர்கள் என்று. 441 00:43:09,757 --> 00:43:11,508 அப்பா, நீங்கள் தான் என் தந்தை. 442 00:43:19,099 --> 00:43:20,309 நான் உன்னை நேசிக்கிறேன், மகனே. 443 00:43:26,941 --> 00:43:28,567 நாங்கள் உங்களை மீண்டும் காண்போமா? 444 00:43:32,780 --> 00:43:33,822 ஆம். 445 00:43:37,117 --> 00:43:38,118 பௌ லயன். 446 00:43:43,082 --> 00:43:45,543 இது உனக்கு பூச்சிக்கடி போல இருக்கும். 447 00:43:47,002 --> 00:43:48,003 சரி. 448 00:43:50,047 --> 00:43:51,048 நல்லது. 449 00:44:01,225 --> 00:44:02,560 உங்கள் அம்மாவை எப்போதும் நினையுங்கள். 450 00:44:03,602 --> 00:44:05,521 எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 451 00:44:08,190 --> 00:44:10,776 - அப்பா. - கோஃபூன், வேண்டாம். நில். 452 00:44:11,318 --> 00:44:12,611 அவர் தனியாக இருப்பார். 453 00:44:14,154 --> 00:44:17,366 அவரோடு எப்போதும் மாக்ரா இருப்பாள். 454 00:44:19,827 --> 00:44:23,038 இப்போது, நீங்கள் இருவரும் அவரோடு இருப்பீர்கள். 455 00:44:25,457 --> 00:44:26,917 நான் அவரோடு இருப்பேன். 456 00:44:30,629 --> 00:44:32,047 உன் சகோதரியை பார்த்துக்கொள். 457 00:44:33,299 --> 00:44:34,633 அவளுக்கு தெரியும். 458 00:44:38,220 --> 00:44:39,221 இப்போது... 459 00:44:40,681 --> 00:44:43,684 இருவரும் கவனமாக கேளுங்கள். 460 00:44:44,935 --> 00:44:48,647 பார்வை என்ற பரிசு கண்களை மறைப்பதாக இருக்கலாம். 461 00:44:51,025 --> 00:44:55,279 ஜெர்லாமரெல்... உங்கள் தந்தை, 462 00:44:56,322 --> 00:44:58,032 அவருக்கும் பார்வை உண்டு. 463 00:44:59,033 --> 00:45:02,703 ஆனால் அவர் கடவுள் இல்லை, நீங்களும் தான். 464 00:45:04,872 --> 00:45:07,041 இந்த உலகத்தை நீங்கள் உருவாக்கினால்... 465 00:45:09,335 --> 00:45:10,836 உங்கள் அம்மாவை நினைத்துக்கொள்ளுங்கள். 466 00:45:11,921 --> 00:45:16,091 உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தந்த பாபா வாஸையும் நினைத்துக்கொள்ளுங்கள். 467 00:45:16,175 --> 00:45:21,597 மேலும் இந்த உலகத்தை பார்வையுள்ள மற்றும் பார்வையற்றவர்களுக்காக உருவாக்குங்கள். 468 00:45:22,473 --> 00:45:25,392 கடவுள்கள் இல்லாமல்! உங்களுக்கு புரிந்ததா? 469 00:45:26,393 --> 00:45:28,854 - நான் கூறியதை புரிந்துகொண்டீர்களா? - ஆம். 470 00:45:28,938 --> 00:45:30,231 - ஆம். - சரி. 471 00:45:30,773 --> 00:45:32,024 என் குழந்தைகளே. 472 00:45:34,818 --> 00:45:37,655 எனக்காக புத்தகங்களை படியுங்கள். 473 00:45:42,868 --> 00:45:44,620 இளைஞனே. 474 00:45:48,123 --> 00:45:49,250 என் தடி. 475 00:45:53,087 --> 00:45:55,130 சரி, கிளம்புங்கள். 476 00:45:55,214 --> 00:45:58,926 நீங்கள் பார்க்க முடியாத அளவுக்கு இருட்டாகும் முன் செல்லுங்கள். 477 00:46:06,517 --> 00:46:08,561 அவர் விட்டு சென்றார் என்று என்னால் நம்பமுடியவில்லை. 478 00:46:10,145 --> 00:46:12,147 நாம்தான் விட்டு வந்திருக்கிறோம். 479 00:46:21,615 --> 00:46:22,616 சரி. 480 00:46:24,076 --> 00:46:26,161 நாங்கள் இருவரும் வருகிறோம். 481 00:46:26,871 --> 00:46:28,539 ஹனிவா மற்றும் கோஃபூன். 482 00:46:41,468 --> 00:46:43,512 நீயும் நானும் ஒன்றாக, என் சகோதரா. 483 00:46:47,016 --> 00:46:48,976 எப்பொழுதும், என் சகோதரி. 484 00:46:50,895 --> 00:46:52,021 நீ தயாரா? 485 00:46:53,314 --> 00:46:54,356 இல்லை. 486 00:46:54,440 --> 00:46:55,691 நானும்தான். 487 00:47:01,113 --> 00:47:02,198 சரி போகலாம். 488 00:47:16,337 --> 00:47:17,963 நீ அவர்களை தனியாக அனுப்பிவிட்டாய். 489 00:47:20,424 --> 00:47:23,010 சில நேரங்களில் உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, 490 00:47:23,093 --> 00:47:25,304 நீங்கள் இல்லை என்று அவர்களை நம்பவைப்பது. 491 00:47:26,680 --> 00:47:28,390 இதை மாக்ரா உன்னிடம் சொன்னாளா? 492 00:47:29,892 --> 00:47:31,101 ஆம். 493 00:47:33,604 --> 00:47:35,648 எனக்கு இருக்கும் ஒரே வீடு அந்த குழந்தைகள் தான். 494 00:47:37,066 --> 00:47:38,526 எனக்கு போக வேறு இடமில்லை. 495 00:47:39,693 --> 00:47:40,778 உனக்கு? 496 00:47:43,489 --> 00:47:44,907 எனவே நாம் ஒன்றாக இருப்போமா? 497 00:47:45,574 --> 00:47:46,659 சரி. 498 00:47:47,826 --> 00:47:49,495 ஒன்றாக இருப்போம். 499 00:48:31,954 --> 00:48:33,080 இப்போது என்ன? 500 00:48:34,582 --> 00:48:35,666 எனக்கு தெரியவில்லை. 501 00:48:36,584 --> 00:48:38,127 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. 502 00:49:46,904 --> 00:49:48,906 வசன தமிழாக்கம் அருண்குமார்