1 00:00:46,421 --> 00:00:48,090 அவரை மட்டும் அங்கே தனியாக அனுப்ப முடியாது. 2 00:00:48,173 --> 00:00:50,884 மிகவும் தாமதமாகிவிட்டது. இப்போது, அவர் உள்ளே இருப்பார். 3 00:00:51,385 --> 00:00:54,054 நாம் பின்தொடரலாம். கோஃபூனும், ரென்னும், நானும் அவரைப் பிடிக்க முடியும். 4 00:00:54,137 --> 00:00:56,974 சிபெத்தை அவர் கொன்றாலும் கூட, அவரால் வெளியேற முடியும் என்று எப்படி நினைக்கிறார். 5 00:00:58,809 --> 00:01:00,644 அவரால் வெளியேற முடியும் என்று அவர் நினைக்கவில்லை. 6 00:01:04,565 --> 00:01:06,942 -நாம் போக வேண்டும். -ஆம். 7 00:01:07,025 --> 00:01:08,360 இல்லை. 8 00:01:08,443 --> 00:01:11,822 பென்சாவின் மொத்த மக்களும் இந்த சுரங்கத்திற்குள் இருக்கிறார்கள், 9 00:01:12,739 --> 00:01:15,367 நாம் இன்னும் இதன் முடிவை நெருங்கவில்லை. 10 00:01:16,243 --> 00:01:18,871 அவள் மீண்டும் வெடிகுண்டு வீசத் தொடங்கினால், 11 00:01:18,954 --> 00:01:21,582 இந்த இடம் மொத்தமாக ஒரு கல்லறையாக மாறிவிடும். 12 00:01:22,416 --> 00:01:25,669 சண்டையிட ஒரு காலம் இருந்தது, அந்தக் காலம் கடந்துவிட்டது. 13 00:01:26,670 --> 00:01:28,380 ஆனால் என் அப்பா சண்டையிடுகிறார். 14 00:01:29,298 --> 00:01:33,135 அப்படியென்றால் அதை அவர் அமைதியாக செய்வார் என நம்புவோம். 15 00:01:34,595 --> 00:01:35,804 உனக்கு ஒன்று வேண்டுமா? 16 00:01:35,888 --> 00:01:37,806 இல்லை, வேண்டாம். 17 00:01:38,515 --> 00:01:39,808 என்னிடம் நிறைய இருக்கிறது. 18 00:02:01,205 --> 00:02:04,416 எனவே, நம்மிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? 19 00:02:05,626 --> 00:02:07,419 ராணியைக் கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும். 20 00:02:10,339 --> 00:02:12,508 இது திட்டம் என்பதை விட லட்சியமாகத் தெரிகிறது. 21 00:03:39,928 --> 00:03:42,055 அதை வைத்து மக்களை பயமுறுத்தப்போகிறீர்கள். 22 00:03:43,682 --> 00:03:46,602 ஏற்கனவே என்னைப் பார்த்து மக்கள் பயப்படுகின்றனர். 23 00:03:47,477 --> 00:03:49,146 ஆம், பயப்படுகிறார்கள். 24 00:03:49,229 --> 00:03:51,940 -ஆனால் நீ பயப்படவில்லை. -தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். 25 00:03:52,024 --> 00:03:54,985 மற்றவர்கள் பயப்படுவது போல நான் பயப்படமாட்டேன். 26 00:03:56,862 --> 00:03:58,030 ஏன் அப்படி? 27 00:03:59,489 --> 00:04:01,325 நீ ஒன்றும் வலிமையானவன் அல்ல. 28 00:04:01,867 --> 00:04:04,995 இல்லை. நிஜமாக, நான்தான் படையிலேயே பலவீனமாக இருந்தேன். 29 00:04:06,121 --> 00:04:08,040 ஆனால் நான் மற்ற எல்லோரையும் விட புத்திசாலியாக இருந்தேன். 30 00:04:08,540 --> 00:04:11,126 அதிகாரத்தைக் கைப்பற்ற வேறு வழிகள் இருப்பதை அறியும் அளவுக்கு புத்திசாலி. 31 00:04:12,836 --> 00:04:16,005 ஈடோ வாஸ் மிகவும் வலிமையானவர், 32 00:04:16,089 --> 00:04:18,759 ஆனால் அதனால்தான், அவர் அறிவுப்பூர்வமாக யோசிக்கவில்லை. 33 00:04:20,594 --> 00:04:23,263 அவர் தனது படைகளுக்கு வழிகாட்ட பார்வையுள்ளவர்களை பயன்படுத்த விரும்பினார். 34 00:04:24,389 --> 00:04:25,557 அவர்களால் நம் முன்னோர்களின் 35 00:04:25,641 --> 00:04:28,185 புத்தகங்களைப் படிக்க முடியும் என்ற யோசனை கூட அவருக்குத் தோன்றவில்லை. 36 00:04:28,268 --> 00:04:32,231 போரின் தன்மையை மாற்றக்கூடிய அறிவை அடைய வேண்டும் என்று. 37 00:04:35,108 --> 00:04:38,695 உங்கள் வாளை எவ்வளவு கடினமாக சுழற்றினாலும் பெற முடியாத 38 00:04:38,779 --> 00:04:42,533 ஒரு சக்தியைத் தேடி என் வாழ்நாள் முழுவதையும் கழித்தேன். 39 00:04:44,159 --> 00:04:48,330 இப்போது இங்கே, உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். 40 00:04:49,498 --> 00:04:53,168 இராணுவமே இல்லாமல் மொத்த நகரங்களையும் அழிக்கும் வல்லமையோடு. 41 00:04:54,711 --> 00:04:56,964 இப்படியொன்றை ஈடோ ஒருபோதும் கனவில் கூட நினைத்ததில்லை. 42 00:04:59,675 --> 00:05:01,552 இது எனக்கு நினைவூட்டுகிறது. 43 00:05:02,970 --> 00:05:05,514 நமக்கு இந்நேரம் மாக்ராவிடமிருந்து தகவல் வந்திருக்க வேண்டுமே. 44 00:05:06,139 --> 00:05:09,810 அவளிடம் வேறு திட்டங்கள் இருப்பதை எந்த கட்டத்தில் உணரப் போகிறோம்? 45 00:05:10,477 --> 00:05:12,729 மாக்ரா எதையும் விரைவாக முடிவெடுக்கமாட்டாள். 46 00:05:14,064 --> 00:05:15,941 அவளுடைய குடும்பம் அவளைச் சண்டையிடச் சம்மதிக்க வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 47 00:05:16,024 --> 00:05:19,611 ஆனால் அவளது நல்லொழுக்கத்தால் தன் மக்களுக்காக 48 00:05:19,695 --> 00:05:23,740 தன் உயிரையே தியாகம் செய்யும் எண்ணத்தை மாற்ற முடியாது. 49 00:05:24,741 --> 00:05:25,951 எனக்கு நம்பிக்கையில்லை. 50 00:05:28,245 --> 00:05:29,454 டொர்மாடா. 51 00:05:29,955 --> 00:05:31,206 சொல்லுங்கள். 52 00:05:32,583 --> 00:05:34,543 உன் வெடிகுண்டுகளைத் தயாராக வை, ஒருவேளை தேவைப்படலாம். 53 00:05:35,335 --> 00:05:36,920 அவை எப்போதும் தயாராக இருக்கின்றன, ராணியரே. 54 00:05:40,090 --> 00:05:42,050 அவளை எதிர்கொள்ள வேண்டியது நான்தான், அவரல்ல. 55 00:05:42,551 --> 00:05:44,511 உங்கள் தியாகத்தால் எந்த பயனும் இல்லாமல் 56 00:05:45,012 --> 00:05:46,889 உங்கள் மக்கள் ராணியை இழந்துவிடுவார்கள். 57 00:05:47,389 --> 00:05:49,016 எனவே, நான் என் கணவரை சரணடையவைக்க வேண்டுமா? 58 00:05:49,600 --> 00:05:52,227 அப்படித்தான் செய்ய வேண்டும் என்றால். ஆம். 59 00:05:52,311 --> 00:05:53,312 முடியாது. 60 00:05:55,314 --> 00:05:58,942 மாக்ரா. தொடர்ந்து செல்லுங்கள். 61 00:06:00,444 --> 00:06:02,654 இங்கே இந்த தருணம், 62 00:06:04,031 --> 00:06:07,117 இந்த தருணத்திற்காகவே நீங்கள் பிறந்திருக்கலாம். 63 00:06:31,850 --> 00:06:36,522 நதி தொடர்ந்து பாயட்டும் 64 00:06:37,439 --> 00:06:41,068 கனவைக் கொண்ட எல்லோரும் 65 00:06:41,151 --> 00:06:44,154 தேசத்தைக் கட்டியெழுப்புங்கள் 66 00:06:45,113 --> 00:06:46,949 வாருங்கள் 67 00:06:47,032 --> 00:06:52,955 புதிய ஜெருசலேமை உருவாக்கலாம் 68 00:06:54,122 --> 00:06:59,294 வெள்ளி நகரங்கள் எழும்பட்டும் 69 00:06:59,878 --> 00:07:03,215 காலை வெளிச்சம் 70 00:07:03,298 --> 00:07:06,969 அவர்களை வழிநடத்தும் தெருக்கள் 71 00:07:07,678 --> 00:07:12,683 தொடர்ந்து அவர்களை எழுப்பும் 72 00:07:13,433 --> 00:07:16,436 ஒரு பாடலுடன் 73 00:07:18,146 --> 00:07:21,233 கேட்டது 74 00:07:21,316 --> 00:07:25,362 கிடைக்கும் 75 00:07:25,445 --> 00:07:31,285 தடுமாற்றத்தோடு, நடுக்கத்தோடு 76 00:07:32,202 --> 00:07:34,288 ஓ 77 00:07:34,371 --> 00:07:38,917 என் இதயம் வலிக்கிறது 78 00:07:39,001 --> 00:07:40,794 நாங்கள் எல்லைக்கு வருகிறோம் 79 00:07:40,878 --> 00:07:42,713 தண்ணீரில் ஓடுகிறோம் 80 00:07:42,796 --> 00:07:44,131 மூடுபனி வழியாக வருகிறோம் 81 00:07:44,214 --> 00:07:46,216 மகன்களே மகள்களே 82 00:07:46,300 --> 00:07:50,721 நதி தொடர்ந்து பாயட்டும் 83 00:07:52,097 --> 00:07:56,143 கனவைக் கொண்ட எல்லோரும் 84 00:07:56,226 --> 00:07:59,730 தேசத்தைக் கட்டியெழுப்புங்கள் 85 00:08:00,522 --> 00:08:01,648 வாருங்கள் 86 00:08:02,941 --> 00:08:09,198 புதிய ஜெருசலேமை உருவாக்கலாம் 87 00:08:19,833 --> 00:08:21,668 இதுதான் அவளது கூடாரம். அவளது வாசனையை நுகர முடிகிறது. 88 00:08:23,587 --> 00:08:24,755 அப்படியென்றால் எங்கே அவள்? 89 00:08:26,298 --> 00:08:28,133 -என் ராணியாரே. -என்னை அழைத்தாயா? 90 00:08:28,217 --> 00:08:30,052 ஆயுரா, நீ கேட்டதை அவரிடம் சொல். 91 00:08:31,470 --> 00:08:32,804 ஒன்றுமில்லை. 92 00:08:33,847 --> 00:08:34,890 ஒன்றுமில்லையா? 93 00:08:35,390 --> 00:08:38,184 எந்த குரல்களும் இல்லை. எந்த ஆயுதங்களும் இல்லை. 94 00:08:38,684 --> 00:08:41,730 பாத்திரங்களில் வறுக்கும் ஒலியோ அடுப்பில் நெருப்பின் ஒலியோ இல்லை. 95 00:08:42,313 --> 00:08:44,149 எந்த குழந்தைகளும் அழவில்லை. 96 00:08:44,232 --> 00:08:46,944 வெறும் பலர் நடக்கும் மங்கிய ஒலிதான். 97 00:08:47,486 --> 00:08:48,654 மங்கிய ஒலியா? 98 00:08:49,238 --> 00:08:50,405 நிலத்தால் மட்டுப்படுத்தப்பட்ட ஒலி. 99 00:08:50,989 --> 00:08:52,366 அவர்கள் நிலத்திற்கடியில் இருக்கிறார்கள். 100 00:08:52,866 --> 00:08:54,034 ஒளிந்திருக்கிறார்கள். 101 00:08:54,117 --> 00:08:55,327 இல்லை. அவர்கள் நடக்கிறார்கள். 102 00:08:55,410 --> 00:08:56,578 சுரங்கப்பாதை. 103 00:08:57,079 --> 00:08:58,372 வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். 104 00:08:59,456 --> 00:09:00,541 அவற்றைத் தயாராக வைத்திருக்கிறாயா? 105 00:09:00,624 --> 00:09:02,334 ஆம், ராணியாரே. 106 00:09:02,417 --> 00:09:03,418 அவர்கள் மீது குண்டுகளை வீசு. 107 00:09:04,837 --> 00:09:07,589 -அவர்களைக் கொல்லுங்கள்! -தாக்குங்கள்! 108 00:09:11,885 --> 00:09:13,303 தாக்குங்கள்! 109 00:09:27,734 --> 00:09:28,986 ஓ, இல்லை. 110 00:09:29,945 --> 00:09:31,154 அடச்சே. 111 00:09:31,238 --> 00:09:32,239 வா. 112 00:09:45,127 --> 00:09:47,254 -அவளுக்குத் தெரிந்துவிட்டது. -ஆம். 113 00:09:47,337 --> 00:09:48,630 நடந்துகொண்டே இருங்கள்! 114 00:09:52,509 --> 00:09:54,595 நடந்துகொண்டே இருங்கள் என்றேன்! 115 00:10:00,350 --> 00:10:01,685 ஏதாவது? 116 00:10:02,394 --> 00:10:03,395 இல்லை. 117 00:10:04,146 --> 00:10:05,189 நிறுத்த வேண்டாம். 118 00:10:08,442 --> 00:10:09,860 தாக்குங்கள்! 119 00:10:12,404 --> 00:10:15,574 பத்து டிகிரி திரும்புங்கள்! அதே தூரம்! 120 00:10:17,075 --> 00:10:18,452 சொல்லுங்கள்! 121 00:10:19,536 --> 00:10:21,288 -தயார்! -தயார்! 122 00:10:21,997 --> 00:10:23,123 தாக்குங்கள்! 123 00:10:36,094 --> 00:10:37,387 நில்லுங்கள்! 124 00:10:43,227 --> 00:10:44,645 -கோஃபூன்? -இங்கேயே இருங்கள். 125 00:11:14,258 --> 00:11:15,300 கோஃபூன். 126 00:11:16,301 --> 00:11:17,469 நாம் அவர்களை நிறுத்திவிட்டோம். 127 00:11:18,262 --> 00:11:19,388 அற்புதம். 128 00:11:19,888 --> 00:11:21,014 மீண்டும் குண்டு வீசுங்கள். 129 00:11:31,358 --> 00:11:32,609 கோஃபூன்? 130 00:11:33,569 --> 00:11:34,778 என்ன? 131 00:11:36,488 --> 00:11:39,157 ஓடு! 132 00:11:45,038 --> 00:11:46,373 கோஃபூன்! 133 00:11:53,714 --> 00:11:54,965 கோஃபூன்! 134 00:12:07,436 --> 00:12:09,229 யாருக்காவது சத்தம் கேட்டிருக்கும் என்று நினைக்கிறாயா, பாபா? 135 00:12:12,107 --> 00:12:14,234 -யார் அது? -படைத்தலைவரே? 136 00:12:14,860 --> 00:12:15,944 அவர்கள் நமக்கு மத்தியில்தான் இருக்கிறார்கள்! 137 00:12:16,028 --> 00:12:17,404 -புதிய திட்டமா? -புதிய திட்டம்தான். 138 00:12:17,487 --> 00:12:19,239 சண்டையிடு! 139 00:12:20,199 --> 00:12:21,325 கோஃபூன்! 140 00:12:26,830 --> 00:12:27,831 கோஃபூன்! 141 00:12:31,043 --> 00:12:32,252 கோஃபூன். 142 00:12:36,757 --> 00:12:37,799 நீ நலமா? 143 00:12:38,592 --> 00:12:39,843 நன்றாக இருக்கிறேன். எதுவும் உடையவில்லை. 144 00:12:39,927 --> 00:12:41,303 -நிச்சயமாகவா? -வுல்ஃபி நலமா? 145 00:12:41,386 --> 00:12:42,387 ஆம். 146 00:12:45,474 --> 00:12:46,725 நம்மால் மேலும் போக முடியாது. 147 00:12:47,392 --> 00:12:50,771 நாம் இங்கேயே இருக்க முடியாது. நாம் உயிரோடு புதைந்துவிடுவோம். 148 00:12:51,438 --> 00:12:53,607 அவளது வெடிகுண்டுகள் தொடர்ந்து மேலே விழுந்துகொண்டிருக்கிறது. 149 00:12:59,196 --> 00:13:02,616 எப்படி மரணிப்பது என்று தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால், 150 00:13:04,034 --> 00:13:07,788 நம் நிலத்திற்கு அடியில் ஒளிந்து கொள்வதை விட, அதற்காக போராடி இறப்பதையே விரும்புகிறேன். 151 00:13:08,914 --> 00:13:09,957 ஒப்புக்கொள்கிறேன். 152 00:13:11,792 --> 00:13:13,210 ஒப்புக்கொள்கிறேன். 153 00:13:14,628 --> 00:13:15,629 நானும்தான். 154 00:13:20,843 --> 00:13:22,511 -தளபதி. -என்ன அது? 155 00:13:23,595 --> 00:13:26,431 -சண்டைபோடுகிறார்கள். முகாமுக்குள். -விட்ச்ஃபைண்டர்களா? 156 00:13:26,515 --> 00:13:29,518 விட்ச்ஃபைண்டர்களும் இல்லை ட்ரிவான்டியன்களும் இல்லை. 157 00:13:30,018 --> 00:13:33,605 இருவர். அதில் ஒருவன் ஆஜானுபாகுவானவன். 158 00:13:34,439 --> 00:13:35,524 பாபா வாஸ். 159 00:13:35,607 --> 00:13:37,150 அவர்கள் முகாமுக்குள் நுழைந்துவிட்டார்கள். 160 00:13:37,943 --> 00:13:41,029 எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுங்கள்! முகாமில் ஊடுருவி விட்டார்கள்! 161 00:13:42,072 --> 00:13:46,827 முகாமில் ஊடுருவி விட்டார்கள்! 162 00:13:50,330 --> 00:13:53,917 ஊடுருவி விட்டார்கள்! முகாமில் ஊடுருவி விட்டார்கள்! 163 00:13:59,256 --> 00:14:02,426 அடச்சே. ஒரு கட்டத்தில் இது கண்டிப்பாக நடக்கும். 164 00:14:14,688 --> 00:14:17,774 அவர்கள் இந்த வழியாக வந்திருக்கிறார்கள். போகலாம். 165 00:14:30,037 --> 00:14:32,581 பாபா, இறந்துவிட்டாயா? 166 00:14:33,081 --> 00:14:34,208 இல்லை. 167 00:14:34,291 --> 00:14:36,710 -நானும்தான். -வெடிகுண்டுகளை நோக்கி போகலாம். 168 00:16:02,796 --> 00:16:04,047 நீ எழுந்திருக்கிறாயா? 169 00:16:05,549 --> 00:16:08,594 ஒரு நிமிடம் கொடு. அவன் மிகவும் கனமாக இருக்கிறான். 170 00:16:42,794 --> 00:16:44,171 மாக்ரா. 171 00:16:45,297 --> 00:16:47,508 -இப்போது ஏன் அவள் வருகிறாள்? -தாக்குதலை நிறுத்து. 172 00:16:48,425 --> 00:16:50,093 அவள் உங்கள் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை. 173 00:16:50,177 --> 00:16:53,096 என் சகோதரி கணிக்கக்கூடிய அளவுக்கு எளிமையானவள். 174 00:16:54,014 --> 00:16:55,682 அவள் தன் மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டாள். 175 00:16:55,766 --> 00:16:59,102 இப்போது எஞ்சியிருப்பவர்களைக் காப்பாற்ற அவள் தன்னைத் தியாகம் செய்வாள். 176 00:16:59,186 --> 00:17:02,231 நாம் தாக்குதலை தொடர வேண்டும். அவர்களிடம் இன்னமும் ஒரு படை இருக்கிறது. 177 00:17:03,273 --> 00:17:06,859 இன்னும் சில நிமிடங்களில், நம் இராணுவம் மட்டுமே அதிகாரத்தில் இருக்கும். 178 00:17:06,944 --> 00:17:08,862 -எப்படி அதை நம்புகிறீர்கள்... -டொர்மாடா. 179 00:17:09,404 --> 00:17:12,406 நீ என்னுடன் உடலுறவு கொண்டாய், ஒரு நகரத்தை குண்டுவீசி தகர்ந்துவிட்டாய். 180 00:17:12,491 --> 00:17:15,243 இன்று உனக்கு நல்ல நாள். அதை கெடுத்துக்கொள்ளாதே. 181 00:17:17,204 --> 00:17:18,329 நிறுத்துங்கள்! 182 00:17:22,251 --> 00:17:23,252 லெப்டினன்ட் மாஸ்! 183 00:17:23,335 --> 00:17:28,048 மீதமுள்ள ஒவ்வொரு சிப்பாயும் ஊடுருவல்காரர்களை முகாமில் தேடுங்கள்! 184 00:17:28,131 --> 00:17:29,466 சரி, சார். 185 00:17:29,967 --> 00:17:31,385 அவர் சொன்னது கேட்டதுதானே. பிரிந்து செல்லுங்கள். 186 00:17:34,429 --> 00:17:35,681 மாக்ரா. 187 00:17:39,893 --> 00:17:42,729 என் அழைப்பை ஏற்க நீ முடிவு செய்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 188 00:17:43,522 --> 00:17:46,441 இந்த நிலைமைக்கு தள்ளியதற்கு மன்னித்துவிடு. 189 00:17:47,025 --> 00:17:48,110 அப்படியா? 190 00:17:50,195 --> 00:17:54,491 நான் மோசமானவள் என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும், ஆனால் உன்னைப் போலவே, 191 00:17:55,492 --> 00:17:58,537 எனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவே முயற்சிக்கிறேன். 192 00:17:58,620 --> 00:18:00,372 அப்பாவி குடிமக்களைக் கொன்றா? 193 00:18:00,956 --> 00:18:03,709 உன் நேர்மை உனக்கே சலிப்பாக இல்லையா? 194 00:18:04,293 --> 00:18:06,545 -நான் உன்னை பாதுகாத்தேன். -நீ எனக்கு துரோகம் செய்தாய். 195 00:18:06,628 --> 00:18:08,714 அது மற்ற எல்லோரையும் பாதுகாப்பதற்காக செய்தேன். 196 00:18:09,464 --> 00:18:13,468 ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்ப பேசுகிறோம். 197 00:18:14,303 --> 00:18:15,470 சிபெத். 198 00:18:22,394 --> 00:18:25,981 உன் சிறுவயதில் நீ என்னை தூக்கியெறிய முயற்சித்ததை நான் உனக்கு நினைவூட்டுகிறேன். 199 00:18:26,064 --> 00:18:27,566 இப்போது மீண்டும் முயற்சித்திருக்கிறாய். 200 00:18:28,066 --> 00:18:29,234 இரண்டிலுமே, 201 00:18:29,318 --> 00:18:31,195 நீ காட்டும் எதிர்ப்புகளின் மோசமான விளைவுகள் எப்படியோ 202 00:18:31,278 --> 00:18:32,988 உன்னை ஆச்சரியப்படுத்துகின்றன. 203 00:18:36,283 --> 00:18:39,369 நீ ஒருபோதும் ராணியாக இருக்கப்போவதில்லை என்பதை நீ புரிந்துகொள்ள 204 00:18:40,537 --> 00:18:43,123 உனக்கு என்னதான் நடக்கவேண்டும் என்று வியக்கிறேன். 205 00:18:43,207 --> 00:18:45,209 நான் ஒருபோதும் ராணியாக விரும்பியதில்லை. 206 00:18:45,834 --> 00:18:48,462 அதை நாம் இருவருமே நம்புகிறோம் என்று நினைக்கவில்லை. 207 00:18:53,467 --> 00:18:56,345 நீ பிடித்த குழந்தையாக இருந்தது மட்டும் உனக்குப் போதவில்லை. 208 00:18:57,971 --> 00:19:00,432 என்னுடையதாக இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள விரும்பினாய். 209 00:19:00,516 --> 00:19:01,517 இது நம்மைப் பற்றியது அல்ல. 210 00:19:02,100 --> 00:19:03,602 -இல்லையா? -சிபெத். 211 00:19:04,311 --> 00:19:05,812 நம்மால் இதை சரிசெய்ய முடியும். 212 00:19:06,313 --> 00:19:10,817 எல்லோருக்கும் அவர்கள் விரும்பியதை பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. 213 00:19:13,362 --> 00:19:15,030 எனக்குத் தேவையானது ஏற்கனவே என்னிடம் இருக்கிறது. 214 00:19:16,782 --> 00:19:18,075 நீ என்னைக் கொல்லமாட்டாய். 215 00:19:20,202 --> 00:19:23,747 நீ என்னை வெறுக்கலாம், ஆனால் நீ என்னை நேசிப்பது எனக்குத் தெரியும். 216 00:19:30,796 --> 00:19:34,174 நீ ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. 217 00:19:36,051 --> 00:19:39,513 நீ இன்னமும் என் வாழ்நாள் முழுவதும் நான் நேசிக்கும் சகோதரிதான். 218 00:19:42,057 --> 00:19:43,892 என் தலைமுடியைப் பின்னியவள். 219 00:19:45,143 --> 00:19:47,020 எனக்கு பொம்மைகள் செய்து கொடுத்தவள். 220 00:19:48,564 --> 00:19:51,525 இடி இடிக்கும் போது பக்கத்தில் என்னை படுக்க வைத்துக்கொண்டவள். 221 00:19:57,865 --> 00:19:59,449 என் சகோதரி. 222 00:20:02,119 --> 00:20:05,247 அம்மா இறந்த இரவு எனக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்தவள். 223 00:20:06,915 --> 00:20:09,168 ஒருபோதும் பொறுமையை இழக்காதவள். 224 00:20:10,252 --> 00:20:12,880 ஒருபோதும் என்னை தவிக்கவிட்டதில்லை. 225 00:20:22,514 --> 00:20:27,144 உனக்கு மேலே நட்சத்திரங்கள் மின்னுகின்றன 226 00:20:29,688 --> 00:20:33,358 இரவின் தென்றல் கிசுகிசுக்கிறது 227 00:20:33,442 --> 00:20:35,652 நான் உன்னை நேசிக்கிறேன் 228 00:20:37,321 --> 00:20:42,409 பறவைகள் அத்திமரத்தில் பாடுகின்றன 229 00:20:44,161 --> 00:20:48,832 என்னைப் பற்றி கொஞ்சம் கனவு காண் 230 00:21:25,661 --> 00:21:27,329 நான் உன்னைக் கொல்லத்தான் வேண்டும். 231 00:21:29,748 --> 00:21:31,291 எனக்கு வேறு வழி இல்லை. 232 00:21:33,919 --> 00:21:35,420 எனக்குத் தெரியும். 233 00:23:23,195 --> 00:23:24,821 முடிந்ததா, ராணியாரே? 234 00:23:28,617 --> 00:23:31,245 நான் உன் ராணி அல்ல! 235 00:23:33,830 --> 00:23:34,998 அவளைக் கொல்லுங்கள். 236 00:23:44,132 --> 00:23:45,175 -மாக்ரா! -டமாக்டி. 237 00:23:45,259 --> 00:23:46,552 தயாராக நில்லுங்கள்! 238 00:23:55,853 --> 00:23:57,813 -டமாக்டி. -உங்களுக்கு அருகில் இருக்கிறேன். 239 00:24:01,108 --> 00:24:02,484 தயார்! தாக்குவோம்! 240 00:24:02,568 --> 00:24:05,445 -நீ சண்டையை விரும்பினாய். -ஆம். 241 00:24:06,113 --> 00:24:07,573 -கோஃபூன்! -இங்கே. 242 00:24:13,287 --> 00:24:14,705 நகருங்கள்! 243 00:24:21,545 --> 00:24:23,297 தாக்குதலை மீண்டும் தொடங்குங்கள்! 244 00:25:33,450 --> 00:25:37,120 அந்த குண்டுகளை எறியுங்கள்! நகரத்தைத் தரைமட்டமாக்குங்கள்! 245 00:25:37,704 --> 00:25:39,248 டொர்மாடா. 246 00:25:39,331 --> 00:25:41,708 -டொர்மாடா! -பாபா வாஸ்! 247 00:25:44,711 --> 00:25:46,129 உன்னைச் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன். 248 00:25:55,264 --> 00:25:56,849 அப்பா! 249 00:26:05,107 --> 00:26:06,275 அவர்களை நிறுத்துங்கள்! 250 00:26:26,712 --> 00:26:29,965 பாபா வாஸ்! நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா? 251 00:26:31,717 --> 00:26:34,720 -நான் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்ய மாட்டேன். -டொர்மாடா! 252 00:26:37,472 --> 00:26:40,684 இல்லை! 253 00:26:57,075 --> 00:26:59,119 கடவுளே! 254 00:26:59,661 --> 00:27:01,205 ச்சே! 255 00:28:17,948 --> 00:28:18,949 அப்பா! 256 00:28:23,078 --> 00:28:24,830 எப்படி காயமடைந்தீர்கள்? 257 00:28:26,707 --> 00:28:28,166 எனக்கு ஒன்றுமில்லை. 258 00:28:29,209 --> 00:28:30,836 என்னைப் பின்தொடராதே. 259 00:28:30,919 --> 00:28:33,839 -எங்கே போகிறீர்கள்? -இதை முடிக்க. 260 00:28:33,922 --> 00:28:36,800 அப்பா, உங்களால் முடியாது. மிகவும் மோசமாக காயமடைந்திருக்கிறீர்கள். 261 00:28:36,884 --> 00:28:38,177 என்னைப் பின்தொடராதே. 262 00:28:38,886 --> 00:28:40,220 நான் உங்களோடு இருப்பேன். 263 00:28:40,304 --> 00:28:42,556 இல்லை. நீ இங்கேயே இருக்க வேண்டும். 264 00:28:43,265 --> 00:28:46,310 எப்போதும் போல உன் அம்புகளால் என்னை பாதுகாக்க வேண்டும். 265 00:28:53,483 --> 00:28:54,484 ஹனிவா. 266 00:28:56,028 --> 00:28:57,112 நான் உன்னை நேசிக்கிறேன். 267 00:28:57,613 --> 00:29:02,242 என்னைப் பார். நான் உன்னை நேசிக்கிறேன். 268 00:29:03,493 --> 00:29:05,871 நான் உனக்கு கற்றுக் கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொள். 269 00:29:51,250 --> 00:29:52,835 நான் பாபா வாஸ். 270 00:32:40,294 --> 00:32:41,461 மாக்ரா. 271 00:32:45,674 --> 00:32:46,675 பாபா. 272 00:32:49,887 --> 00:32:51,388 நான் உன்னைப் பார்க்கிறேன். 273 00:33:01,481 --> 00:33:02,733 அப்பா! 274 00:33:03,609 --> 00:33:05,027 அப்பா. 275 00:34:17,391 --> 00:34:23,480 நான் இப்போதெல்லாம், தினமும் காலையில், கடைகளையும் வீடுகளையும் கடந்து போகிறேன். 276 00:34:26,650 --> 00:34:28,735 உள்ளே இருக்கும் குடும்பங்களின் சத்தம் கேட்கிறது... 277 00:34:29,862 --> 00:34:32,531 பேசுவது. தூங்குவது. 278 00:34:33,114 --> 00:34:35,993 சிரிப்பது. அழுவது. 279 00:34:41,248 --> 00:34:42,416 நான் அவற்றை கேட்கும்போது, 280 00:34:42,498 --> 00:34:48,130 தன் குழந்தை சுவாசிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இரவில் விழிக்கும் அப்பாவைப் போல உணர்கிறேன். 281 00:34:51,675 --> 00:34:54,178 அவற்றைக் கேட்க நான் வெளியில் இல்லை என்பது தெரியும். 282 00:34:56,929 --> 00:34:59,516 உன்னைத்தான் நான் தேடுகிறேன். 283 00:35:00,559 --> 00:35:06,273 உன்னுடைய சில கடைசி எதிரொலி இன்னும் மலைகளுக்கு இடையே எதிரொலிக்கிறதா என்று. 284 00:35:09,443 --> 00:35:12,404 நீ ஒரு பெரிய வெறுமையை விட்டுவிட்டு போய்விட்டாய், 285 00:35:13,697 --> 00:35:17,034 அது தினமும் காலையில் என்னை எழுப்பி வெளியே வரச் செய்கிறது. 286 00:35:20,370 --> 00:35:22,206 நீ இது எதையும் ஒருபோதும் விரும்பவில்லை. 287 00:35:23,749 --> 00:35:24,958 அது எனக்குத் தெரியும். 288 00:35:28,086 --> 00:35:31,256 ஒவ்வொரு நாளும், உன்னிடமிருந்து பறிக்கப்பட்டதைப் பற்றி யோசிக்கிறேன். 289 00:35:31,340 --> 00:35:32,841 நான் உன்னிடம் இருந்து பறித்ததை... 290 00:35:34,259 --> 00:35:38,096 இந்த அரச பதவிக்கு நான் தகுதியானவளா என்று கூட தெரியாத அதன் சேவைக்காக. 291 00:35:43,143 --> 00:35:46,855 நீ இல்லாததை உன் பிள்ளைகளும் என்னைப் போலவே ஒவ்வொரு முறையும் உணர்கிறார்கள். 292 00:35:50,901 --> 00:35:54,863 ஆனால் அவர்களின் எதிர்காலம், எதை உறுதி செய்வதற்காக உன் உயிரைக் கொடுத்தாயோ, 293 00:35:54,947 --> 00:35:58,116 அது எல்லையற்ற சாத்தியங்களுடன் அவர்கள் முன் நீள்கிறது. 294 00:36:01,119 --> 00:36:03,497 உன் மகள் தன் அம்மாவைப் போலவே 295 00:36:03,580 --> 00:36:05,541 ஒரு ட்ரிவான்டியனை மணந்துகொண்டாள். 296 00:36:06,458 --> 00:36:10,170 இரண்டு பார்வையுள்ள பெண்கள் இந்த உலகில் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். 297 00:36:12,714 --> 00:36:15,634 அது எளிதானதாக இருக்காது, நான் அவர்களுக்குப் பயப்படுகிறேன். 298 00:36:17,678 --> 00:36:20,722 ஆனால் அவர்கள் பேசும்போது அவர்களின் குரலில் உள்ள அன்பு எனக்குக் கேட்கிறது. 299 00:36:21,765 --> 00:36:25,853 நம் ஹனிவா இப்படியொரு அன்பைக் கண்டுபிடித்தது எனக்கு நிம்மதியை தருகிறது. 300 00:36:29,147 --> 00:36:31,733 கோஃபூன் அப்பாவாக இருக்க பழகுகிறான். 301 00:36:34,444 --> 00:36:38,073 எனக்குத் தெரியும் ஒரு மகனை வைத்திருந்தால் அவன் தன் அப்பாவை நினைக்காத 302 00:36:38,156 --> 00:36:40,242 ஒரு நாள் கூட போகாது என்று. 303 00:36:46,874 --> 00:36:50,711 இந்த பயங்கரமான இடம் என்னை இழுக்கிறது… 304 00:36:52,921 --> 00:36:58,343 என் சகோதரி, என் கணவர், இருவரின் எச்சங்களையும் வைத்திருக்கும் எரிந்த மண். 305 00:37:00,179 --> 00:37:04,933 இந்த எரிந்த, பாழடைந்த நிலத்தில் எப்படி ஏதாவது மீண்டும் வளரும் என்று எனக்கு 306 00:37:05,017 --> 00:37:06,018 ஆச்சரியமாக இருக்கிறது. 307 00:37:13,817 --> 00:37:16,445 இறந்தால் நாம் எங்கு செல்வோம் என்று தெரியவில்லை. 308 00:37:18,113 --> 00:37:19,615 ஆனால் நீ எங்கிருந்தாலும், 309 00:37:20,616 --> 00:37:22,201 வாழ்க்கையில் நீ கடினமாக 310 00:37:22,284 --> 00:37:26,455 முயற்சி செய்து தேடிய அமைதியை நீ இறுதியாக கண்டுபிடித்திருப்பாய் என்று நம்புகிறேன். 311 00:37:28,373 --> 00:37:31,460 உனக்காகவும், எங்கள் எல்லோருக்காகவும். 312 00:37:32,753 --> 00:37:34,838 அதோடு நீ என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன். 313 00:38:01,740 --> 00:38:03,867 டொர்மாடாவை தோற்கடித்து அவனது ஆயுதங்களை அழித்ததற்காக 314 00:38:03,951 --> 00:38:06,954 பயாவிற்கு நாங்கள் கடன்பட்டிருப்பதை யாரும் மறுக்கவில்லை. 315 00:38:07,579 --> 00:38:11,208 எங்கள் சொந்த அரசாங்கத்தின் மீதான அவனது தாக்குதலில் இருந்து நானே தப்பித்தேன். 316 00:38:12,209 --> 00:38:15,587 இருந்தாலும், பார்வையுள்ளவர்களுக்கு இடமளிக்க அனுமதிக்கும் ஒரு தேசத்துடன் நாங்கள் 317 00:38:15,671 --> 00:38:19,049 கையெழுத்திடவோ அல்லது ஒப்பந்தம் செய்துகொள்ளவோ முடியாது. 318 00:38:19,675 --> 00:38:23,345 பார்வையின் அழிவு சக்திக்கு நாம் எல்லோருமே சாட்சியாக இருந்தோம். 319 00:38:24,179 --> 00:38:26,515 பார்வை நம் எல்லோருக்குமே பெரும் ஆபத்தை 320 00:38:27,099 --> 00:38:31,645 விளைவிக்கும் என்பதுதான் ட்ரிவான்டியன் மக்களின் நிலைப்பாடு. 321 00:38:31,728 --> 00:38:33,939 உங்கள் நிலைப்பாடு எனக்குப் புரிகிறது. 322 00:38:34,648 --> 00:38:37,860 ஆனால் டொர்மாடாவின் குண்டுகளை உருவாக்கியது பார்வை அல்ல, 323 00:38:37,943 --> 00:38:41,405 பார்வையற்ற குழந்தைகளை டொர்மாடா கொடூரமாக பயன்படுத்தியதுதான் 324 00:38:41,488 --> 00:38:43,657 முன்னோர்களின் அறிவை அணுகச்செய்தது. 325 00:38:44,241 --> 00:38:48,120 பார்வை அல்ல, அந்த அழிவுகரமான அறிவுதான் 326 00:38:48,662 --> 00:38:50,372 சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். 327 00:38:51,248 --> 00:38:56,211 பார்வையுடையவர்கள் எப்போதும் இந்த அறிவைப் பெறுவதற்கான வழியாக இருப்பார்கள். 328 00:38:56,295 --> 00:38:58,922 அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் டொர்மாடா போன்றவர்கள் 329 00:38:59,006 --> 00:39:00,966 எப்போதும் இருப்பார்கள். 330 00:39:01,633 --> 00:39:04,553 நாம் மூன்று பார்வையுள்ளவர்களுடன் நிற்கிறோம், 331 00:39:05,179 --> 00:39:08,765 இவர்கள் எல்லோருமே டொர்மாடாவை தோற்கடித்ததிலும் அவனுடைய குண்டுகளை அழித்ததிலும் 332 00:39:08,849 --> 00:39:11,143 -முக்கிய பங்கு வகித்தவர்கள் -ஆம். 333 00:39:11,226 --> 00:39:14,271 முன்பே கூறியது போல் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவோம். 334 00:39:14,354 --> 00:39:16,064 எங்களுக்கு ஏன் பொதுமன்னிப்பு தேவை? 335 00:39:16,899 --> 00:39:18,400 நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. 336 00:39:19,109 --> 00:39:21,028 உண்மையில், நாங்கள் இல்லாவிட்டால், 337 00:39:21,111 --> 00:39:23,655 டொர்மாடாவும் அவனுடைய குண்டுகளும் இப்போது உங்கள் நகரத்தை அழித்திருக்கும். 338 00:39:23,739 --> 00:39:26,074 ஹனிவா, இதற்கான நேரம் இது இல்லை. 339 00:39:26,158 --> 00:39:28,619 -அப்படியா? எது சரியான நேரம்? -இளவரசி! 340 00:39:28,702 --> 00:39:30,996 நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களோ என்று பயப்படுகிறேன். 341 00:39:31,079 --> 00:39:32,623 நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். 342 00:39:32,706 --> 00:39:34,291 தூதரே, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... 343 00:39:34,791 --> 00:39:39,004 பார்வை திரும்பி வரவில்லை! அது ஏற்கனவே வந்துவிட்டது. 344 00:39:39,838 --> 00:39:40,839 நான் நீங்களாக இருந்தால், 345 00:39:40,923 --> 00:39:43,008 நாங்கள் உங்களுக்கு அமைதியைக் கொடுப்பதற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன், 346 00:39:43,091 --> 00:39:45,802 ஏனென்றால் என்னை நம்புங்கள், நீங்கள் எங்களை எதிரியாக்கிக்கொள்ள வேண்டாம். 347 00:39:48,305 --> 00:39:51,183 -மிரட்டுகிறீர்களா? -நிச்சயமாக இல்லை... 348 00:39:51,266 --> 00:39:54,061 தூதரே, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், 349 00:39:54,144 --> 00:39:57,523 நாங்கள் எப்படி பிறந்தோம் என்ற காரணமாக நானும் என் சகோதரியும் எங்கள் 350 00:39:58,482 --> 00:40:00,484 வாழ்நாள் முழுவதும் வேட்டையாடப்பட்டிருக்கிறோம். 351 00:40:01,527 --> 00:40:05,113 நான் அல்லது என்னைப் போன்றவர்கள் பார்வையற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என்ற 352 00:40:05,197 --> 00:40:08,367 எண்ணம் வெறுமனே மூடநம்பிக்கை மற்றும் பயத்தின் அடிப்படையிலானது, 353 00:40:08,450 --> 00:40:10,452 நான் யார் என்ற யதார்த்தம் அல்ல. 354 00:40:10,994 --> 00:40:15,415 ஏனென்றால் நான் யார் என்பதற்கும் என்னால் பார்க்க முடிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 355 00:40:18,293 --> 00:40:19,545 நான் ஒரு மகன். 356 00:40:20,462 --> 00:40:21,713 நான் ஒரு அப்பா. 357 00:40:22,506 --> 00:40:23,799 நான் ஒரு பயான் வாசி. 358 00:40:26,176 --> 00:40:29,471 ஆனால் மிக முக்கியமாக, அமைதியின் நான் உங்கள் கூட்டாளி. 359 00:40:31,723 --> 00:40:35,602 எனவே, தயவுசெய்து. தொடரலாமா? 360 00:40:44,152 --> 00:40:45,153 தாராளமாக. 361 00:40:52,661 --> 00:40:53,662 ஹனிவா. 362 00:40:53,745 --> 00:40:55,163 டாக். 363 00:40:55,247 --> 00:40:56,582 டாக். 364 00:40:57,124 --> 00:40:58,333 அவர் ஏற்றுக்கொண்டாரா? 365 00:41:00,627 --> 00:41:02,629 காலப்போக்கில் அதைப் பற்றி மேலும் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். 366 00:41:03,172 --> 00:41:04,464 ஆனால் இப்போதைக்கு? 367 00:41:05,966 --> 00:41:07,301 அவருக்கு வேறு வழியில்லை. 368 00:41:08,051 --> 00:41:10,888 அவர் இராஜ்ஜியத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இன்னொரு போரை நம்மால் தாங்க முடியாது. 369 00:41:10,971 --> 00:41:12,639 அவர் நம்மை பாதுகாப்பதாக உறுதியளித்தார். 370 00:41:12,723 --> 00:41:14,683 அவர் பாதுகாக்க ஒரு முழு இராஜ்ஜியம் இருக்கிறது. 371 00:41:14,766 --> 00:41:16,852 இளவரசன், இளவரசியாக, நமக்கும்தான். 372 00:41:19,188 --> 00:41:21,732 நீ இங்கே ராஜாவாகப் போகிறாய் என்று உண்மையில் நினைக்கவில்லை, இல்லையா? 373 00:41:23,025 --> 00:41:24,526 நம்மில் ஒருவர் அம்மாவுக்குப் பிறகு பொறுப்பேற்க வேண்டும். 374 00:41:24,610 --> 00:41:27,196 பயாவின் மக்கள் பார்வையுள்ள ராஜாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். 375 00:41:27,738 --> 00:41:30,365 அவர்கள் செய்தாலும் ட்ரிவான்டியன்கள் அனுமதிக்க மாட்டார்கள். 376 00:41:31,074 --> 00:41:33,035 அங்கே அவர்கள் சொன்னதைக் கேட்டாய். 377 00:41:34,286 --> 00:41:37,623 ராஜாவாகவோ ராணியாவோ ஆவதை மறந்துவிடு, கோஃபூன். நாம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை! 378 00:41:37,706 --> 00:41:39,875 -நீ ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்? -உனக்கு ஏன் கோபம் வரவில்லை? 379 00:41:40,959 --> 00:41:42,794 ஒருபோதும் இந்த இடத்தை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டோம். 380 00:41:43,795 --> 00:41:45,380 இது நம் உலகம் அல்ல. 381 00:41:46,673 --> 00:41:48,175 இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. 382 00:41:50,761 --> 00:41:52,387 இங்குதான் என் மகனை வளர்ப்பேன். 383 00:41:56,225 --> 00:41:58,602 உன் மகன் எப்போதும் உன்னை விட வேறு உலகத்தில் வாழ்வான். 384 00:42:22,417 --> 00:42:24,461 என் பிள்ளைகள் என்னை மன்னிக்க மாட்டார்கள். 385 00:42:25,838 --> 00:42:28,674 அவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினீர்கள். 386 00:42:29,883 --> 00:42:33,762 நீங்கள் ட்ரிவான்டிஸுடனான உண்மையான மாற்றத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்கினீர்கள். 387 00:42:35,556 --> 00:42:37,683 ஆனால் பார்வை மீண்டும் தடைசெய்யப்பட்டுள்ளது. 388 00:42:39,601 --> 00:42:43,480 என் இளம் வயதில், என் அப்பா சால்மன் மீன்களை பிடிப்பார். 389 00:42:44,857 --> 00:42:46,775 ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும், என்னை ஆற்றுக்குக் கூட்டிப்போவார், 390 00:42:46,859 --> 00:42:48,068 நாங்கள் மீன் பிடிப்போம். 391 00:42:49,194 --> 00:42:52,114 முதல் சில நாட்களுக்கு, பொதுவாக எங்களுக்கு எதுவும் கிடைக்காது. 392 00:42:53,532 --> 00:42:56,451 பிறகு ஒரு நாள், ஒன்றைப் பிடிப்போம். 393 00:42:57,828 --> 00:42:58,954 இரண்டு. 394 00:42:59,454 --> 00:43:01,498 வீட்டுக்குப் போதுமான அளவுக்கு இருக்காது. 395 00:43:02,165 --> 00:43:05,002 ஆனால் அடுத்த நாள் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று தெரியும் அளவுக்கு. 396 00:43:06,128 --> 00:43:08,714 ஐந்து சால்மன், பத்து சால்மன். 397 00:43:09,506 --> 00:43:13,010 விரைவில் நதி முழுவதும் சால்மன் மீன்கள் நிறைந்திருக்கும். 398 00:43:15,470 --> 00:43:17,514 பார்வை மீண்டும் வருகிறது. 399 00:43:18,765 --> 00:43:21,977 நீங்களும் நானும் முதல் சிலரை நேரடியாக சந்தித்தோம். 400 00:43:23,270 --> 00:43:24,563 இன்னும் பலர் வருவார்கள். 401 00:43:25,355 --> 00:43:27,357 சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்கனவே சிலர் இங்கே இருக்கிறார்கள். 402 00:43:28,233 --> 00:43:29,610 மற்றவர்களும் பின்தொடர்வார்கள். 403 00:43:31,486 --> 00:43:35,532 எந்த சட்டமும், எந்த மதமும் அதை தடுக்க முடியாது. 404 00:43:38,785 --> 00:43:43,248 நமது எல்லைக்குள் அதை எப்படி கையாள்வது என்பது நம் வேலை. 405 00:43:43,832 --> 00:43:46,627 ட்ரிவான்டியன்கள் அவர்களுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். 406 00:43:46,710 --> 00:43:50,297 அரசியல்வாதிகள் தங்களுக்குத் தெரியாத சட்டங்களை பின்பற்றுகிறார்கள். 407 00:43:51,089 --> 00:43:53,717 பார்வை மீதான போர் நடத்தப்படும், 408 00:43:53,800 --> 00:43:58,472 பயாவிற்கும் ட்ரிவான்டிஸுக்கும் இடையில் அல்ல, ஆனால் நகரங்களுக்குள். 409 00:44:00,057 --> 00:44:01,350 குடும்பங்களுக்குள். 410 00:44:03,060 --> 00:44:04,436 நம் இதயங்களுக்குள். 411 00:44:06,188 --> 00:44:08,690 எப்படியிருந்தாலும், இயற்கை அதன் வழியில் தொடரும். 412 00:44:09,900 --> 00:44:11,193 அது எப்போதும் அப்படித்தான். 413 00:44:14,821 --> 00:44:16,031 சரி… 414 00:44:17,449 --> 00:44:19,785 நீ அதை ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. 415 00:44:20,827 --> 00:44:23,747 என் வாழ்க்கையில் நான் இருந்தது போலவே மிகவும் தவறாக இருப்பதன் 416 00:44:23,830 --> 00:44:29,211 ஒரே நன்மை என்னவென்றால், புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வது எளிது. 417 00:44:34,258 --> 00:44:36,176 மரணத்தின் வாசனை. 418 00:44:46,979 --> 00:44:49,481 பாபா எப்போதுமே போரில் இறப்பார் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 419 00:44:50,899 --> 00:44:51,900 அவர் ஒருமுறை சொன்னார், 420 00:44:52,401 --> 00:44:56,196 வாழ்க்கையைப் போலவே மரணமும் சம்பாதிக்கப்பட வேண்டும் என்று. 421 00:44:57,739 --> 00:45:01,076 தனது கடைசி முயற்சியில், அவர் ஒரு முழு இராணுவத்தையும் தோற்கடித்தார். 422 00:45:01,577 --> 00:45:04,454 அப்படி செய்து, நம் எல்லோரையும் காப்பாற்றினார். 423 00:45:05,747 --> 00:45:07,541 அவரது மரணம் வெற்றிகரமானது என்று நினைக்கிறேன். 424 00:45:09,168 --> 00:45:10,836 நீ கொஞ்சம் பொறாமைப்படுவது போல தெரிகிறது. 425 00:45:12,212 --> 00:45:13,255 இருக்கலாம். 426 00:45:14,923 --> 00:45:18,260 ஆனால் நான் இன்னும் இந்த பூமியில் உயிருடன் இருக்கும் வரை, 427 00:45:18,760 --> 00:45:21,471 உங்களை சிக்கலில் இருந்து காப்பாற்ற நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். 428 00:45:30,522 --> 00:45:32,774 நீ இல்லாமல் நான் தொலைந்து போவேன், டமாக்டி. 429 00:45:33,650 --> 00:45:35,736 அது நம் இருவருக்குமே சோகமான விஷயம். 430 00:45:45,704 --> 00:45:48,123 நான் அவரை மிஸ் செய்கிறேன், ரேஞ்சர். 431 00:45:50,667 --> 00:45:52,794 பாபா ஆஜானுபாகுவானவன், 432 00:45:53,504 --> 00:45:56,381 எனவே ஒரு பெரிய அளவிலான இடம் காலியாக இருப்பதை 433 00:45:56,465 --> 00:45:58,258 புரிந்துகொள்ள முடிகிறது. 434 00:46:02,596 --> 00:46:04,598 உனக்குத் தெரியுமா, பாபா உனக்காக உயிரை விட்டான். 435 00:46:05,516 --> 00:46:06,767 நம் எல்லோருக்காகவும். 436 00:46:09,353 --> 00:46:12,272 ஆனால் அவன் உனக்காக உயிர்விட்டான் என்பதை விட, உனக்காக வாழ்ந்தான் என்பதை 437 00:46:13,273 --> 00:46:14,900 நினைவில் கொள்வது அவசியம். 438 00:46:16,485 --> 00:46:18,320 ஒருவேளை அவன் இங்கிருந்தால் அப்படித்தான் சொல்வான். 439 00:46:25,118 --> 00:46:26,453 லூ வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். 440 00:46:27,120 --> 00:46:28,205 ஆம். 441 00:46:30,541 --> 00:46:32,292 ஆம், நாங்கள் நாளை வீடு திரும்புகிறோம். 442 00:46:32,960 --> 00:46:34,378 நீங்கள் தாராளமாக இங்கேயே தங்கலாம். 443 00:46:36,713 --> 00:46:41,176 நன்றி, ஆனால் லூவும் நானும், 444 00:46:41,260 --> 00:46:46,890 எங்களுக்கு கூட்டத்தையோ மக்களையோ பிடிக்காது, மக்கள் கூட்டத்தை. 445 00:46:48,559 --> 00:46:50,352 சரி, நான் உனக்கு ஒரு குதிரையை கொடுக்க முடியும். 446 00:46:52,646 --> 00:46:53,730 வேண்டாம். 447 00:46:55,232 --> 00:46:56,900 ஓநாய்கள் அதை சாப்பிட்டுவிடும். 448 00:47:08,620 --> 00:47:09,830 ஹனிவா! 449 00:47:11,707 --> 00:47:12,958 சார்லட்? 450 00:47:16,461 --> 00:47:17,629 ஹனிவா! 451 00:47:17,713 --> 00:47:19,006 சார்லட்! 452 00:47:23,093 --> 00:47:24,094 ஹேய். 453 00:47:25,137 --> 00:47:27,055 நீ திரும்பி வருவாயா என்று எனக்குத் தெரியவில்லை. 454 00:47:27,139 --> 00:47:29,600 இல்லை, நான் திரும்பி வரவில்லை. அவ்வளவு தூரம் வரமாட்டேன். 455 00:47:30,601 --> 00:47:32,269 நீ நன்றாக இருக்கிறாயா என்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. 456 00:47:34,521 --> 00:47:36,231 பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்துகிறேன். 457 00:47:37,482 --> 00:47:39,151 பிறகு உனக்கும் ரென்னுக்கும் திருமணம் நடந்தது என்று கேள்விப்பட்டேன், 458 00:47:39,234 --> 00:47:40,819 அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 459 00:47:40,903 --> 00:47:43,697 இப்போது நான் சோகமான விஷயத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு மகிழ்ச்சியானது பற்றி 460 00:47:43,780 --> 00:47:46,575 பேச வேண்டுமா என்று தெரியவில்லை? அல்லது முதலில் மகிழ்ச்சியானதா, 461 00:47:46,658 --> 00:47:48,243 அல்லது உனக்கு அதைப் பற்றி பேசவே விருப்பமில்லாமல் இருக்கலாம். 462 00:47:50,287 --> 00:47:54,875 திசைகாட்டி என்ன சொன்னது? ஷேவாவும் குழந்தைகளும் எப்படி இருக்கிறார்கள்? 463 00:47:54,958 --> 00:47:56,168 சிறியவர்கள் அருமையாக இருக்கிறார்கள். 464 00:47:56,668 --> 00:47:58,128 ஷேவாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். 465 00:47:58,212 --> 00:48:00,672 ஆனால் எனக்கு அவளைப் பிடிக்கவில்லை, அதனால், அது வேலை செய்யும். 466 00:48:02,466 --> 00:48:05,427 இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னாள். 467 00:48:07,429 --> 00:48:08,972 இது என்னவென்று உனக்குத் தெரியும் என்றாள். 468 00:48:36,124 --> 00:48:38,126 உன்னுடைய பாதுகாப்பான பயணத்துக்கு வாழ்த்து சொன்னாள். 469 00:48:39,127 --> 00:48:43,757 எனவே... நீ எங்கோ போகிறாயா என்று எடுத்துக்கொள்ளட்டுமா? 470 00:48:46,552 --> 00:48:48,053 நீ எங்களுடன் வருவாயா? 471 00:48:50,639 --> 00:48:52,099 இந்த முறை இல்லை. 472 00:48:53,892 --> 00:48:55,769 ஆனால் கேட்டதற்கு மகிழ்ச்சி. 473 00:48:57,980 --> 00:48:59,565 என்னை யார் பாதுகாப்பார்கள்? 474 00:49:01,942 --> 00:49:03,694 இப்போது உனக்கு ரென் இருக்கிறாள். 475 00:49:04,611 --> 00:49:06,029 அவளுக்கு நீ இருக்கிறாய். 476 00:49:06,822 --> 00:49:09,116 நான் திசைகாட்டிக்குத் தேவைப்படுகிறேன். 477 00:49:10,075 --> 00:49:12,703 ஜெர்லாமரெலின் குழந்தைகள் எங்களை பிஸியாக வைத்திருப்பார்கள்… 478 00:49:13,453 --> 00:49:15,372 இன்னும் அதிகமானவர்கள் வருவார்கள் என்று தோன்றுகிறது. 479 00:49:16,707 --> 00:49:17,708 அவர்களுக்கு நீ கிடைத்தது அதிர்ஷ்டம். 480 00:49:18,292 --> 00:49:20,127 அதை அவர்களிடம் சொல். 481 00:49:20,210 --> 00:49:21,378 குட்டிச்சாத்தான்கள். 482 00:49:28,594 --> 00:49:30,345 நீ கவனமாக இரு. 483 00:49:31,805 --> 00:49:33,098 நீயும்தான். 484 00:49:43,233 --> 00:49:44,735 நன்றி. 485 00:49:47,029 --> 00:49:48,614 பரவாயில்லை. 486 00:49:49,698 --> 00:49:51,033 நான் அழவில்லை. 487 00:49:53,785 --> 00:49:55,370 என்னைத் தேடி கண்டுபிடிப்பாயா? 488 00:49:59,416 --> 00:50:00,918 நீதான் பார்வை கொண்டவள். 489 00:50:02,377 --> 00:50:03,712 நீ என்னைத் தேடி வா. 490 00:50:22,022 --> 00:50:23,732 நீ நிச்சயமாக விடைபெற விரும்பவில்லையா? 491 00:50:26,193 --> 00:50:27,778 அது நன்றாக நடக்காது. 492 00:50:33,992 --> 00:50:35,285 நான் அவர்களை மீண்டும் பார்ப்பேன். 493 00:51:05,148 --> 00:51:06,817 குளிர்கிறது. 494 00:51:08,110 --> 00:51:09,611 குளிர்காலம் விரைவில் வரும். 495 00:51:13,824 --> 00:51:16,535 கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் இன்னும் ஹனிவாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. 496 00:51:17,870 --> 00:51:19,997 அவளிடம் இருந்து தகவல் வர இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். 497 00:51:21,123 --> 00:51:23,041 நீ எப்போதாவது அல்கெனி பற்றி யோசித்திருக்கிறாயா? 498 00:51:24,209 --> 00:51:25,419 தினமும். 499 00:51:26,170 --> 00:51:28,297 நாம் நால்வர் மட்டும், எப்போதும் ஒன்றாக இருப்போம். 500 00:51:29,423 --> 00:51:34,344 சில நேரங்களில் குளிரில் இருந்தோம், ஆனால் என் நினைவுகளில் அது எப்போதும் பசுமையாக இருக்கும். 501 00:51:37,723 --> 00:51:41,393 நான் ராணி ஆனபோது நினைத்தேன், 502 00:51:42,352 --> 00:51:44,313 நான் அதே மாதிரி இருக்க முடியும் என்று. 503 00:51:45,480 --> 00:51:47,816 ஆனால் லாவெண்டர் சாலையைக் கண்டுபிடிக்க நாம் புறப்பட்டவுடன், 504 00:51:48,734 --> 00:51:51,153 இனி நாம் அந்தக் குடும்பமாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தது. 505 00:51:52,029 --> 00:51:53,322 இல்லை. 506 00:51:53,989 --> 00:51:57,201 ஆனால் நாம் இன்னும் ஒரு குடும்பம்தான். 507 00:52:02,748 --> 00:52:04,791 சபையை நீ நன்றாகக் கையாளுகிறாய். 508 00:52:05,792 --> 00:52:07,377 நீ அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டாய். 509 00:52:09,546 --> 00:52:13,509 ஒருவேளை... இதைச் செய்யவே நீ பிறந்திருக்கலாம். 510 00:52:13,592 --> 00:52:16,845 இராஜ்ஜியம் ஒரு பார்வையுள்ள ராஜாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஹனிவா சொன்னாள். 511 00:52:18,430 --> 00:52:19,848 நீ என்ன சொல்கிறாய்? 512 00:52:23,018 --> 00:52:26,647 அப்பா என்ன சொல்வார் என்று எனக்குத் தெரியும். அவர், 513 00:52:27,189 --> 00:52:29,858 "குருடனைப் போல யோசி. உன் கண்கள் துரோகம் செய்கின்றன" என்பார். 514 00:52:36,907 --> 00:52:38,909 என் கண்கள் எனக்கு தூரோகம் செய்ததாக நினைக்கிறேன். 515 00:52:41,453 --> 00:52:42,871 அவை மீண்டும் செய்யும். 516 00:52:46,083 --> 00:52:47,501 என்ன சொல்கிறாய்? 517 00:52:50,462 --> 00:52:52,130 என் அம்மா ராணி. 518 00:52:53,215 --> 00:52:55,634 இந்த இராஜ்ஜியத்தைக் காப்பாற்றும் முயற்சியில் என் அப்பா இறந்தார். 519 00:52:55,717 --> 00:52:58,262 அவர்கள் முன்பு என் மக்கள் இல்லை என்றாலும், இப்போது என் மக்கள்தான். 520 00:52:59,721 --> 00:53:02,766 உலகத்தைப் பற்றிய என்னுடைய உணர்வு மக்களிடம் இருந்தோ அல்லது என் மகனிடம் இருந்தோ 521 00:53:02,850 --> 00:53:04,977 வேறுபட்டால் என்னால் முழுமையாக அவர்களுக்கு சேவை செய்ய முடியாது. 522 00:53:09,940 --> 00:53:15,279 நான் சொல்கிறேன், நான் போதுமானதை பார்த்ததுவிட்டேன் என்று நினைக்கிறேன். 523 00:53:22,661 --> 00:53:25,914 என் மகனைப் போலவே நானும் அதே உலகில் வாழ விரும்புகிறேன். 524 00:53:29,626 --> 00:53:35,048 அவன் செய்வதை நான் கேட்க, உணர, நுகர நினைக்கிறேன். 525 00:53:48,312 --> 00:53:49,313 கோஃபூன். 526 00:53:51,481 --> 00:53:53,150 நடந்ததை மாற்ற முடியாது. 527 00:53:55,652 --> 00:53:58,113 நீ முற்றிலும் உறுதியாக இருக்க வேண்டும். 528 00:54:03,452 --> 00:54:04,828 உறுதியாக இருக்கிறேன். 529 00:56:22,758 --> 00:56:23,759 நீங்கள் வந்துவிட்டீர்கள். 530 00:56:29,723 --> 00:56:30,724 எங்களைத் தெரியுமா? 531 00:56:31,558 --> 00:56:34,436 இல்லை. இதுவரை இல்லை. 532 00:56:36,522 --> 00:56:39,608 ஆனால் நீங்கள் எங்களைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. 533 00:56:40,400 --> 00:56:42,653 இங்குள்ள எல்லோரும் உங்களைப் போலவே 534 00:56:43,570 --> 00:56:47,115 ஒரு பயணத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறேன். 535 00:56:50,869 --> 00:56:54,039 நான் மிக்கேலா. நீங்கள்? 536 00:56:56,416 --> 00:56:57,584 ஹனிவா. 537 00:57:02,923 --> 00:57:03,924 ரென். 538 00:57:05,425 --> 00:57:08,720 வரவேற்கிறோம், ஹனிவா மற்றும் ரென். 539 00:57:11,056 --> 00:57:15,644 அங்கேயே நிற்காதீர்கள். கீழே வந்து எல்லோரையும் சந்தியுங்கள். 540 00:57:50,470 --> 00:57:51,471 வரவேற்கிறேன். 541 00:57:53,307 --> 00:57:54,600 ஹாய். 542 00:58:00,480 --> 00:58:02,232 ஹாய். உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 543 00:58:12,910 --> 00:58:13,911 ஹாய். 544 00:59:57,472 --> 00:59:59,474 வசனத் தமிழாக்கம் அருண்குமார்