1 00:00:01,127 --> 00:00:02,921 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:03,004 --> 00:00:04,965 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:19,831 --> 00:01:21,833 இப்போது ஒளிபரப்பாவது “மிஸ்டர் சாங்” 4 00:01:23,460 --> 00:01:27,589 உண்மை கதையை தழுவியது 5 00:01:33,261 --> 00:01:34,471 ஆமாம். 6 00:01:34,554 --> 00:01:37,557 இதுவரை நீங்கள் கேட்டது, மரியாதைக்குரிய டிமோதி ரைட் எழுதிய “ஐ வில் பி எ விட்னஸ்” பாடல். 7 00:01:37,641 --> 00:01:42,229 அடுத்து வருவது, “த மைட்டி இன்டியானா டிராவலர்ஸின்”, “ஐ வில் பி சாட்டிஸ்ஃபைட்”. 8 00:01:42,312 --> 00:01:47,192 இந்த உலகில் பெண்கள் மதிக்கப்படும் போது தான் நான் திருப்தியடைவேன். 9 00:01:47,275 --> 00:01:50,987 WQHG ரேடியோவிலிருந்து, நான் தான் உங்கள் ராணி மார்த்தா ஜீன். 10 00:01:51,571 --> 00:01:55,075 மீண்டும் முகங்களை வரைகிறாயா? கூடாது என்று சொன்னேனே. அவற்றை அழித்து விடு. 11 00:01:55,158 --> 00:01:56,993 என்ன? நீங்கள் பேசுவது கேட்கவில்லை. 12 00:01:57,452 --> 00:01:58,453 ரேடியோவை ஆஃப் பண்ணு! 13 00:02:00,622 --> 00:02:02,749 ஜன்னலைக் கழுவச் சொன்னேன். 14 00:02:02,832 --> 00:02:03,959 கழுவி விட்டேன்! 15 00:02:04,459 --> 00:02:05,669 கழுவியது போலத் தோன்றவில்லையே. 16 00:02:07,087 --> 00:02:09,421 நீ எனக்கு அதிக வேலை வைக்கிறாய். அவற்றைச் சுத்தம் செய். 17 00:02:12,884 --> 00:02:15,679 லூக் 18 00:02:17,097 --> 00:02:18,515 வட்டமாக! 19 00:02:19,891 --> 00:02:21,268 நேராக துடைக்காதே. 20 00:02:26,523 --> 00:02:28,608 இதற்கு, நீல நிறமா அல்லது... 21 00:02:29,484 --> 00:02:32,112 அல்லது பச்சையா? 22 00:02:33,029 --> 00:02:33,863 நீலம். 23 00:02:35,657 --> 00:02:36,658 நல்லது. 24 00:02:39,077 --> 00:02:40,287 சரி, வெளியே போய் விளையாடு! 25 00:02:40,870 --> 00:02:42,372 -குறைந்தபட்சம் ஒரு மணி நேரம்! -சரி. 26 00:02:53,425 --> 00:02:56,803 இளைஞனே, அது “ஐ வில் பி எ விட்னஸ்” இசையா? 27 00:02:56,887 --> 00:02:57,929 ஆமாம், மேடம். 28 00:02:58,972 --> 00:03:00,849 இன்று காலை தான் என் ரேடியோ நிகழ்ச்சியில் அதைப் போட்டேன். 29 00:03:00,932 --> 00:03:01,933 கொஞ்சம் இருங்கள்... 30 00:03:02,017 --> 00:03:03,518 ராணி மார்த்தா ஜீன் நீங்கள் தானா? 31 00:03:04,102 --> 00:03:06,187 -ஆமாம். -நீங்கள் பிரபலமானவர். 32 00:03:06,688 --> 00:03:09,691 என் அம்மா ரேடியோவை ஆஃப் செய்யும் வரை, காலை நேரங்களில் உங்கள் நிகழ்ச்சியைக் கேட்பேன். 33 00:03:09,774 --> 00:03:12,193 இங்கிருப்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கே. உன் பெயர் என்ன? 34 00:03:12,777 --> 00:03:16,740 லூக் சாங், “மிஸ்டர் சாங்” கடையின் உரிமையாளர் ஜின்-ஹோ சாங்கின் மகன். 35 00:03:16,823 --> 00:03:19,659 அனைத்து வகைத் தொப்பிகளும் அணிகலன்களும் கிடைக்கும் கடை. 36 00:03:20,285 --> 00:03:23,204 நீங்கள் உள்ளே வந்து எங்களிடம் இருக்கும் அழகான பொருட்களை ஒருமுறை பார்க்க வேண்டும். 37 00:03:23,705 --> 00:03:26,917 நல்லது, மிஸ்டர் லூக் சாங். நீ இவ்வளவு மரியாதையோடு அழைக்கும் போது நான் எப்படி மறுக்க முடியும்? 38 00:03:29,502 --> 00:03:31,338 இதை நான் சமீபத்தில் உருவாக்கினேன். 39 00:03:31,421 --> 00:03:33,256 இது உங்களுக்கு கச்சிதமாக இருக்கு. 40 00:03:34,549 --> 00:03:39,804 இது என் தோள்கள் அளவுக்கு அகலமில்லை. நன்றாக இருக்கு. இதை அணிய சில விதிமுறைகள் இருக்கே. 41 00:03:39,888 --> 00:03:41,097 சரி. 42 00:03:41,181 --> 00:03:44,684 இது எப்படி இருக்கு? 43 00:03:44,768 --> 00:03:48,855 உங்கள் முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லை. உங்கள் முகம் வட்டமாக இருக்கிறது. 44 00:03:49,814 --> 00:03:51,524 பெரிய நிலவு மாதிரியான வடிவம். 45 00:03:51,608 --> 00:03:55,862 -மன்னிக்கவும். “நிலவு வடிவமா”? -ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. 46 00:03:55,946 --> 00:03:57,405 இல்லை, அவள் ஆங்கிலம் நன்றாகத் தான் இருக்கிறது. 47 00:03:57,489 --> 00:03:59,908 ஒளிவுமறைவில்லாமல் தன் கருத்தை சொல்லும் விற்பனையாளரை எனக்குப் பிடிக்கும். 48 00:04:01,451 --> 00:04:06,331 என் முகம் நிலவு மாதிரி தான். பெரிய தலையும்கூட. என்னுடைய பெரிய மூளைக்கு அது எனக்குத் தேவை. 49 00:04:09,709 --> 00:04:10,794 இது எப்படி இருக்கு? 50 00:04:11,503 --> 00:04:12,963 இது இன்னும் கொஞ்சம் பரவாயில்லை. 51 00:04:13,588 --> 00:04:15,257 பார்க்கலாம். 52 00:04:15,340 --> 00:04:16,341 இதில் ஏதோ குறைகிறது. 53 00:04:16,423 --> 00:04:19,469 -ஆமாம், இதில் ஏதோ குறைகிறது தான். -சரி. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வடிவமைப்பீர்களா? 54 00:04:19,553 --> 00:04:22,472 -ஆமாம். -அப்படியென்றால் நல்லது. 55 00:04:22,556 --> 00:04:24,683 சர்ச்சுக்கு ஒரே மாதிரியாக அணிந்து கொண்டு செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். 56 00:04:25,600 --> 00:04:27,727 கொஞ்சம் பொறுங்கள். ஐடியா. 57 00:04:27,811 --> 00:04:28,812 என்ன? 58 00:04:29,312 --> 00:04:31,147 லூக், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான சர்ச்சுக்கு போயிருக்கிறாயா? 59 00:04:31,773 --> 00:04:33,149 கொரியன் மெதடிஸ்ட் சர்ச்சுக்கு போயிருக்கிறேன். 60 00:04:34,025 --> 00:04:35,569 அது ரொம்பவே போரடிக்கும். 61 00:04:36,611 --> 00:04:37,946 கறுப்பினத்தவர்களின் சர்ச்சும் போரடிக்குமா? 62 00:04:38,029 --> 00:04:39,030 இல்லை. 63 00:04:40,740 --> 00:04:42,158 ஆம். 64 00:04:42,909 --> 00:04:45,245 அவர் இறகுகளை வைத்திருக்கிறார். 65 00:04:45,328 --> 00:04:47,372 -சரி. -எங்கிருந்து டெட்ராய்டுக்கு வந்திருக்கிறீர்கள்? 66 00:04:48,123 --> 00:04:49,624 ஸோல், தென் கொரியா. 67 00:04:49,708 --> 00:04:50,709 எப்போதும் நன்றாக இருக்கும். 68 00:04:50,792 --> 00:04:53,169 வெளியேறுவதை விட, அங்கிருக்க விரும்புகிறார்கள் என்பது கேட்க நன்றாக இருக்கும். 69 00:04:54,004 --> 00:04:56,214 வியாபாரங்கள் அவ்வளவு நன்றாக நடக்கவில்லை. 70 00:04:56,298 --> 00:04:58,592 கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், அவர்களாகவே உங்களைத் தேடி வருவார்கள். 71 00:04:59,301 --> 00:05:01,386 இந்த ஊரைப் பேய் நகரம் என்று அழைப்பதைக் கேட்டு அலுத்து விட்டது. 72 00:05:01,469 --> 00:05:02,846 செலவழிக்கப் பணம் கூட இருக்கிறது. 73 00:05:04,431 --> 00:05:06,600 ஓ. பாருங்கள், பிடித்திருக்கிறதா? 74 00:05:13,440 --> 00:05:15,650 கொரிய மொழியில் “தொப்பி” என்பதை எப்படிச் சொல்வாய்? 75 00:05:15,734 --> 00:05:16,943 மோஜா. 76 00:05:17,027 --> 00:05:18,194 மோஜா? இப்படியா? 77 00:05:18,278 --> 00:05:22,032 -ஆமாம். -ஆமாம். அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. 78 00:05:22,115 --> 00:05:26,786 அதற்கு “தொப்பி” என்றும், “அம்மாவும் மகனும்” என்றும் அர்த்தம். 79 00:05:31,166 --> 00:05:32,417 சரி. 80 00:05:32,500 --> 00:05:35,003 மோஜா... மற்றும் மோஜா. 81 00:05:36,004 --> 00:05:39,299 அடடா. இப்போது, ரொம்ப அழகாக இருக்கிறது, இல்லையா? 82 00:05:39,925 --> 00:05:41,885 நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து சொல். 83 00:05:41,968 --> 00:05:46,056 அறிவியல் முறைகள் என்னென்ன? விஞ்ஞானிகள் இயற்கை உலகத்தைப் பார்க்கும்போது, 84 00:05:46,139 --> 00:05:48,558 அவர்கள் அடிக்கடி கேள்வியையோ அல்லது சிக்கலையோ பற்றி யோசிக்கின்றனர். 85 00:05:48,642 --> 00:05:50,644 ஆனால், விஞ்ஞானிகள் அதற்கான பதிலை யூகிப்பதில்லை. 86 00:05:50,727 --> 00:05:53,438 விஞ்ஞானப்பூர்வமான முறைகளைக் கையாண்டு, தொடர்ச்சியான வழிமுறைகளை உபயோகிக்கின்றனர். 87 00:05:53,521 --> 00:05:55,440 படம் 2-ல் மிக முக்கியமான வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன. 88 00:05:56,608 --> 00:05:57,609 டோர்க். 89 00:05:58,902 --> 00:06:00,779 ஹே! டோர்க் மருத்துவ கல்லூரியில் படித்து, 90 00:06:00,862 --> 00:06:02,781 அவன் டாக்டர் ஆனதும் உங்கள் எல்லோருக்கும் பதில் சொல்லுவான்! 91 00:06:02,864 --> 00:06:08,161 யாரும் இதை செய்ய மாட்டார்கள், அம்மா! புத்தகத்தில் உள்ளதைப் படிக்கிறார்கள். மனப்பாடம் செய்வதில்லை. 92 00:06:08,453 --> 00:06:09,287 குறை சொல்லாதே! 93 00:06:09,621 --> 00:06:12,582 கொரியாவில் இருந்தால், க்ராம் ஸ்கூலில் தினமும் இரவு 10 மணி வரை படிக்க வேண்டும். 94 00:06:13,250 --> 00:06:15,460 கொரியா அவ்வளவு சிறந்த ஊராக இருந்தால், நாம் ஏன் இங்கே குடிபெயர்ந்தோம்? 95 00:06:16,211 --> 00:06:18,129 உன் அப்பாவின் வியாபார கூட்டாளிகள் இங்கே இருப்பதால். 96 00:06:18,213 --> 00:06:19,714 ஆனால் அவர் அடிக்கடி அங்கேயே போகிறார். 97 00:06:19,798 --> 00:06:23,051 ஸோல், அப்புறம் நியூ யார்க்குக்கு போனேன், அதுவும் வெறும் இரண்டு வாரங்கள் மட்டும் தான். 98 00:06:23,134 --> 00:06:25,053 என்னுடைய செல்லோ ஒப்பித்தல் நிகழ்ச்சி என்ன ஆச்சு? 99 00:06:25,136 --> 00:06:26,930 அடக் கடவுளே! 100 00:06:27,013 --> 00:06:32,519 ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறாய், சரியாகச் சாப்பிடுவதில்லை, அதனால்தான் ஒல்லியாக இருக்கிறாய். 101 00:06:33,395 --> 00:06:36,565 சிரிக்காதீர்கள்! நீங்களும் சாப்பிடுங்கள். 102 00:06:37,440 --> 00:06:39,276 நீங்கள் எல்லோருமே ரொம்ப ஒல்லி தான். 103 00:06:40,443 --> 00:06:41,444 டோர்க்குகள். 104 00:06:56,126 --> 00:06:58,044 அப்பா? 105 00:07:01,089 --> 00:07:02,257 அப்பா! 106 00:07:07,470 --> 00:07:11,016 உங்களோடு நானும் நியூ யார்க்கிற்கு வரட்டுமா? 107 00:07:11,433 --> 00:07:13,268 நான் வியாபார விஷயமாகப் போகிறேன். 108 00:07:38,376 --> 00:07:40,170 -ஆமாம். -ஆமாம். 109 00:07:40,253 --> 00:07:42,380 நான் தான் உங்கள் ராணி மார்த்தா ஜீன் பேசுகிறேன். 110 00:07:42,464 --> 00:07:45,592 சரி, இன்றைய காலைப் பொழுதில், இது ரேடியோவாக இல்லாமல் 111 00:07:45,675 --> 00:07:48,303 டிவியாக இருந்திருக்கக் கூடாதா என்று நீங்கள் அனைவரும் ஆசைப்படப் போகிறீர்கள், 112 00:07:48,386 --> 00:07:52,140 ஏனென்றால், நான் இப்போது அட்டகாசமாக இருக்கிறேன். 113 00:07:52,224 --> 00:07:57,187 ஏன் தெரியுமா? “மிஸ்டர் சாங்” கடையில் இருந்து ஒரு புதிய தொப்பியை வாங்கியிருக்கிறன். 114 00:07:57,270 --> 00:08:00,315 அம்மா! அம்மா! 115 00:08:00,982 --> 00:08:02,442 என்ன ஆச்சு? 116 00:08:02,859 --> 00:08:05,070 -வந்து கேளுங்கள்! -புறநகர் கடைக்காரர்கள் அனைவரும் 117 00:08:05,153 --> 00:08:11,243 “மிஸ்டர் சாங்” கடையைப் பற்றித் தெரிந்துகொள்ளணும். உலகத் தர சேவை மற்றும் கவர்ச்சியான தொப்பிகள். 118 00:08:12,077 --> 00:08:14,496 அடுத்த வார இறுதியில் மீண்டும் அந்தக் கடைக்குச் செல்லலாம் என இருக்கிறேன். 119 00:08:14,913 --> 00:08:16,414 நாம் பிரபலமாகிவிட்டோம்! 120 00:08:20,085 --> 00:08:21,086 திறந்திருக்கிறது உள்ளே வாருங்கள் 121 00:08:27,509 --> 00:08:31,304 நான் ஆடம்பரமாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. 122 00:08:31,388 --> 00:08:36,183 ஆனால் கடவுளை ஈர்க்க வேண்டும், அப்போதுதான் நம் கோரிக்கைகளை அவர் கேட்பார், சரியா? 123 00:08:36,268 --> 00:08:37,851 அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. 124 00:08:37,936 --> 00:08:41,188 கடவுள் அவங்களின் தொப்பியைக் கவனிக்க வேண்டுமென நினைக்குறாங்க. 125 00:08:41,856 --> 00:08:44,526 -இது அவங்க முகத்திற்கு நன்றாக இருக்கிறதென சொல். -மன்னிக்கவும். 126 00:08:45,318 --> 00:08:46,903 உங்களிடம் அலங்காரத் தொப்பி இருக்கிறதா? 127 00:08:46,987 --> 00:08:48,113 இருக்கிறது. 128 00:08:48,655 --> 00:08:52,450 அலங்கார தொப்பியென்றால் என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும், அம்மா. 129 00:08:52,784 --> 00:08:54,828 திருமதி. எல்லிஸை தொலைபேசியில் அழைத்துப் பேசு. 130 00:08:55,620 --> 00:08:57,622 ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இன்று போனஸ் வழங்கும் நாள். 131 00:08:57,706 --> 00:09:01,001 -சத்தத்தை அதிகரி, அன்பே. -சரிதான், இன்று போனஸ் வழங்கும் நாள். 132 00:09:01,084 --> 00:09:04,546 நீங்கள் அனைவரும் உங்கள் கணவர்களைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுங்கள். 133 00:09:04,629 --> 00:09:08,425 கேட்டாயா, ஆஷ்லி? இன்று போனஸ் தரும் நாள் என மார்த்தா ஜீன் சொல்கிறார். 134 00:09:08,508 --> 00:09:10,176 நீ அந்த ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கே சென்றுவிடு. 135 00:09:10,260 --> 00:09:12,137 இதோ கிளம்பிவிட்டேன். 136 00:09:12,804 --> 00:09:14,097 நான் எவ்வளவு தர வேண்டும்? 137 00:09:14,180 --> 00:09:15,599 இது எவ்வளவு, அம்மா? 138 00:09:15,932 --> 00:09:17,183 அந்த அட்டையைப் பார். 139 00:09:18,476 --> 00:09:19,936 25 டாலர் தாருங்கள். 140 00:09:22,606 --> 00:09:24,649 -அம்மா. -நன்றி. 141 00:09:54,596 --> 00:09:55,597 ஹலோ? 142 00:09:56,097 --> 00:09:57,098 மார்த்தா ஜீன்! 143 00:09:58,016 --> 00:09:59,601 அவரை உள்ளே அழைத்து வா, மகனே. 144 00:09:59,684 --> 00:10:00,685 சரி. 145 00:10:03,605 --> 00:10:05,357 ஹலோ. உன் அம்மா இங்கு இருக்கிறாரா? 146 00:10:05,440 --> 00:10:07,150 -என்னுடன் வாருங்கள். -நன்றி. 147 00:10:07,234 --> 00:10:09,236 உள்ளே வாருங்கள். அவருக்கு நாற்காலி போடு. 148 00:10:10,946 --> 00:10:12,656 -உட்காருங்கள். சரி. -நன்றி. 149 00:10:12,739 --> 00:10:14,032 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 150 00:10:14,115 --> 00:10:16,701 வானொலி நிலையத்திற்கு நீங்கள் அழைத்ததாகச் சொன்னார்கள், அதுதான் பார்க்கலாமென வந்தேன். 151 00:10:17,494 --> 00:10:19,371 -ஒன்றும் பிரச்சினையில்லை. -சரி. 152 00:10:19,454 --> 00:10:20,830 ஆம். 153 00:10:22,832 --> 00:10:24,501 நீ நன்றாக வரைகிறாய். நான் பார்க்கலாமா? 154 00:10:24,960 --> 00:10:26,419 சரி. கண்டிப்பாக. 155 00:10:28,129 --> 00:10:32,592 ரொம்ப நன்றாக இருக்கிறது. ரொம்ப வசீகரமாக இருக்கிறது. 156 00:10:33,385 --> 00:10:35,095 நாங்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்? 157 00:10:36,012 --> 00:10:37,013 எனக்கா? 158 00:10:38,098 --> 00:10:41,476 வானொலியில் விளம்பரம் செய்ததற்காக. 159 00:10:42,060 --> 00:10:44,771 விளம்பரம் செய்ததற்காக அம்மா உங்களுக்கு பணம் தருகிறேன் என்கிறார். 160 00:10:45,981 --> 00:10:48,692 நான் விளம்பரம் செய்வதில்லை. தொப்பி பிடித்திருந்ததால் உங்களைப் பற்றி பேசினேன். 161 00:10:49,568 --> 00:10:51,444 நல்ல விஷயத்தை என்னுடனே வைத்துக்கொள்ள மாட்டேன். 162 00:10:51,945 --> 00:10:53,822 அவருக்குப் பணம் வேண்டாமாம். 163 00:10:57,534 --> 00:10:58,535 நன்றி. 164 00:10:58,618 --> 00:11:00,620 நான் 30 வருடங்களாக வானொலியில் வேலை பார்க்கிறேன், 165 00:11:00,704 --> 00:11:02,747 இங்கு எல்லாமே வாய் வழியான பேச்சு தான், எனவே... 166 00:11:02,831 --> 00:11:08,587 ஸோலிலும் அப்படித்தான். ஆனால் இங்கு, யாரையும் எங்களுக்குத் தெரியாது. 167 00:11:09,212 --> 00:11:10,672 இப்போது என்னைத் தெரியுமே. 168 00:11:14,342 --> 00:11:16,678 உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தத் தொப்பியைத் தருகிறேன். 169 00:11:17,178 --> 00:11:19,222 என் நண்பருக்கு நான் தரும் பரிசு. 170 00:11:19,848 --> 00:11:22,559 அந்தப் பெரிய நிலவு போன்ற முகத்திற்கு நான் தரும் பரிசு. 171 00:11:27,063 --> 00:11:29,399 நன்றி, ஆனால் நான் உங்கள் தொப்பிகளை வாங்க விரும்புகிறேன். 172 00:11:29,941 --> 00:11:33,403 அதோடு, லூக், உனக்குப் பிரச்சினையில்லை என்றால், அந்த ஓவியத்தையும் வாங்கிக் கொள்கிறேன். 173 00:11:33,904 --> 00:11:36,323 வாங்குகிறீர்களா? உண்மையாகவா? எதை? 174 00:11:37,365 --> 00:11:38,783 -இதோ இதை. -சரி. 175 00:11:39,701 --> 00:11:41,661 நீ அதில் கையெழுத்திட்டால் தான் வாங்குவேன். 176 00:11:41,745 --> 00:11:42,954 சரி. 177 00:11:43,538 --> 00:11:45,081 ஒருநாள் இது விலை உயர்ந்ததாக இருக்கும். 178 00:11:45,165 --> 00:11:48,460 இல்லை, இது வெறும் பொழுதுபோக்குத் தான். நான் மருத்துவராகப் போகிறேன். 179 00:11:50,837 --> 00:11:54,049 ஒரு மூலக்கூறு முனைவுள்ளதா அல்லது முனைவற்றதா என்பதைத் தெரிந்துகொள்ள 180 00:11:54,132 --> 00:11:57,427 அதன் லூயிஸ் அமைப்புகளைப் பார்க்க வேண்டும். 181 00:11:58,011 --> 00:12:00,096 முனைவற்ற சேர்மங்கள் ஒத்த தன்மையுடையவை. 182 00:12:00,180 --> 00:12:03,683 மைய அணுவை சுற்றிய எல்லா பக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். 183 00:12:04,601 --> 00:12:08,104 மீத்தேனை எடுத்துக் கொண்டால், அதன் மைய கார்பன் அணுவை சுற்றி 184 00:12:08,188 --> 00:12:11,524 எல்லா பக்கங்களிலும் ஹைட்ரஜன் அணு சூழ்ந்திருக்கும். 185 00:12:11,608 --> 00:12:13,777 முனைவுற்ற சேர்மங்கள் ஒத்த தன்மையுடையதாய் இருக்காது. 186 00:12:21,785 --> 00:12:23,286 இன்றைக்கு அவ்வளவுதான். 187 00:12:24,329 --> 00:12:28,583 உங்கள் விடைத்தாள்கள் என்னிடம் இருக்கின்றன. போகும் போது வாங்கிகொள்ளுங்கள். 188 00:12:31,419 --> 00:12:32,462 நன்றி. 189 00:12:36,299 --> 00:12:37,592 -ஆலென். பரவாயில்லை. -நன்றி. 190 00:12:40,720 --> 00:12:43,390 -உன்னிடம் நிறைய எதிர்பார்த்தேன், லீ. -நன்றி, பேராசிரியரே. 191 00:12:43,473 --> 00:12:44,849 -ஆர்த்தர். -வாழ்த்துக்கள். 192 00:12:47,477 --> 00:12:48,728 திரு. சாங்? 193 00:12:51,606 --> 00:12:52,607 மன்னியுங்கள். 194 00:12:56,361 --> 00:12:58,446 எப்போதும் போல. அசத்திவிட்டாய். 195 00:12:59,030 --> 00:13:00,782 உனக்கு இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. 196 00:13:13,211 --> 00:13:14,921 அதோ வருகிறான்! 197 00:13:15,005 --> 00:13:18,341 மருத்துவராகப் போகும் என் மகன் வந்துவிட்டான்! 198 00:13:19,968 --> 00:13:23,722 -இளைத்துவிட்டாயே. சாப்பிடுகிறாயா? -நன்றாகச் சாப்பிடுகிறேன். 199 00:13:24,139 --> 00:13:25,932 வாடிக்கையாளர்களை கவனித்துவிட்டு வருகிறேன். 200 00:13:26,016 --> 00:13:27,225 போதகர்களின் மனைவிகளெல்லாம் வருகிறார்கள். 201 00:13:28,643 --> 00:13:30,770 மார்த்தா ஜீன்! லூக் வந்திருக்கிறான்! 202 00:13:32,022 --> 00:13:34,691 ஹாய், லூக். 203 00:13:35,275 --> 00:13:37,402 -ஹாய். -விடுமுறையில் வீட்டிற்கு வந்திருக்கிறாயா? உட்கார். 204 00:13:37,485 --> 00:13:39,696 எனக்கு இந்தத் தொப்பி வேண்டும். 205 00:13:39,779 --> 00:13:42,949 என் கணவர் “நான் வேண்டுமா இல்லை அந்தத் தொப்பிகளா” எனக் கேட்டார். 206 00:13:43,033 --> 00:13:45,118 நீங்கள் எதைத் தேர்வுசெய்வீர்களென தெரியும். 207 00:13:47,287 --> 00:13:50,165 சனிக்கிழமைகளில் “மிஸ்டர் சாங்” கடையில் தான் கூட்டம் வழியும். 208 00:13:51,416 --> 00:13:53,335 இது அழகாக இருக்கிறது. 209 00:13:53,418 --> 00:13:54,836 இந்தத் தேவாலய பெண்களை உங்களுக்குத் தெரியுமா? 210 00:13:55,337 --> 00:13:58,215 கிட்டத்தட்ட. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும். 211 00:13:59,341 --> 00:14:02,052 நான் வானொலியில் இருப்பதால் சிலர் முகத்துக்கு முன் புகழ்வர். 212 00:14:02,135 --> 00:14:04,346 ஆனால் என் முதுகுக்குப் பின், வேறுமாதிரி நடந்துகொள்வர். 213 00:14:04,846 --> 00:14:05,847 அப்படியா? 214 00:14:06,640 --> 00:14:08,475 பெண்கள் பிரசங்கம் செய்வது மதகுருக்கு பிடிக்காது. 215 00:14:09,059 --> 00:14:12,062 மத உணர்வை விட, சுய அதிகாரம் தான் அதிகமாக இருக்கிறது. 216 00:14:13,230 --> 00:14:16,107 இப்போது அந்த சுய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன். 217 00:14:16,983 --> 00:14:19,319 அடடா. நீ ஒரு பெரிய, நவீன மருத்துவராகப் போகிறாய். 218 00:14:21,154 --> 00:14:22,155 மருத்துவராகவில்லை என்றால்? 219 00:14:24,199 --> 00:14:25,325 எனக்கு அதில் ஆச்சரியம் இல்லை. 220 00:14:26,243 --> 00:14:27,452 உண்மையாகவா? 221 00:14:28,328 --> 00:14:29,579 கார் வரை என்னுடன் வா. 222 00:14:31,122 --> 00:14:32,707 நீ மருத்துவராவாய் என நான் நினைக்கவே இல்லை. 223 00:14:33,541 --> 00:14:35,794 நீ ஒரு பிரபல ஓவியராவாய் என நினைத்தேன். 224 00:14:35,877 --> 00:14:37,420 நான் அதை பணம் கொடுத்து வாங்கினேன். ஞாபகமிருக்கிறதா? 225 00:14:37,504 --> 00:14:39,589 அந்தப் பணத்தை வீணடித்துவிட்டீர்கள். 226 00:14:40,715 --> 00:14:42,467 நாம் என்ன ஆவோம் என நமக்கே தெரியாது. 227 00:14:43,885 --> 00:14:45,637 நான் நர்சிங் படித்தேன். 228 00:14:47,347 --> 00:14:48,473 ஆனால் இப்போது என்னைப் பார். 229 00:14:49,516 --> 00:14:50,976 நீங்கள் ராணி மார்த்தா ஜீன் ஆகிவிட்டீர்கள். 230 00:14:51,851 --> 00:14:54,396 நீ என்னவாக விரும்புகிறாய் என உனக்குத்தான் தெரியும், திரு. சாங். 231 00:14:59,943 --> 00:15:00,944 லூக் சாங் 232 00:15:27,637 --> 00:15:32,183 யூசி டேவிஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்ததை கான்ஸ்டன்ஸ் உன்னிடம் சொன்னாளா? 233 00:15:33,226 --> 00:15:35,395 இல்லை. அற்புதமான விஷயம். 234 00:15:36,771 --> 00:15:42,777 என் மகன் மருத்துவரென்றும், என் மகள் வழக்கறிஞரென்றும் அத்தையிடம் சொன்னேன். 235 00:15:42,861 --> 00:15:44,821 அவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. 236 00:15:46,114 --> 00:15:49,868 அவரது மகன், பியாங்-ஹோ, வகுப்பில் 28வது இடத்தில் இருக்கிறான். 237 00:15:49,951 --> 00:15:51,912 அவன் நன்றாகப் படிப்பதில்லை. 238 00:16:00,670 --> 00:16:02,130 நான் படிப்பை நிறுத்தப் போகிறேன். 239 00:16:05,342 --> 00:16:06,343 என்ன? 240 00:16:07,510 --> 00:16:08,803 மீண்டும் கல்லூரிக்குப் போக மாட்டேன். 241 00:16:11,598 --> 00:16:12,933 விளையாடாதே. 242 00:16:13,683 --> 00:16:14,851 நிஜமாகத்தான் சொல்கிறேன். முடிவெடுத்துவிட்டேன். 243 00:16:16,019 --> 00:16:17,854 நீதான் படிப்பை முடிக்கவே போகிறாயே. 244 00:16:18,939 --> 00:16:20,357 இன்னும் ஒரே ஒரு செமஸ்டர் தான் இருக்கிறது. 245 00:16:20,440 --> 00:16:22,567 இந்தக் கோடை விடுமுறையை என் திறமையை வளர்ப்பதற்காக செலவழிக்கப் போகிறேன், 246 00:16:22,776 --> 00:16:24,486 நான் கலைக் கல்லூரியில் சேரப் போகிறேன். 247 00:16:27,489 --> 00:16:30,450 கலைக் கல்லூரியா! பைத்தியக்காரத்தனம். 248 00:16:32,577 --> 00:16:33,787 நான் ஓவியராகப் போகிறேன். 249 00:16:36,915 --> 00:16:38,083 நாங்கள்... 250 00:16:39,251 --> 00:16:41,503 உனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தோம். 251 00:16:43,880 --> 00:16:45,840 உனக்கு ஒரு வாய்ப்பைத் தருவதற்காக இங்கு குடிபெயர்ந்தோம். 252 00:16:46,883 --> 00:16:50,428 அதையெல்லாம் நீ தூக்கி எறிகிறாய். 253 00:16:52,681 --> 00:16:54,015 உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாயா? 254 00:16:55,725 --> 00:16:56,851 என்ன? 255 00:17:06,902 --> 00:17:07,904 அம்மா. 256 00:17:09,030 --> 00:17:10,657 எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. 257 00:17:10,739 --> 00:17:11,908 அதனால் என்ன? 258 00:17:13,200 --> 00:17:16,912 உன் அப்பா ஓபரா பாடகராக ஆசைப்பட்டார்! 259 00:17:17,289 --> 00:17:21,501 ஆனால் அவர் சகோதரர்கள் போரில் இறந்ததும் அந்த ஆசையை விட்டுவிட்டார். 260 00:17:21,584 --> 00:17:22,710 சரி! 261 00:17:23,587 --> 00:17:26,339 அவர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்! 262 00:17:27,340 --> 00:17:29,509 எல்லோரை விடவும் அதிகமாக, அவருக்கு தான் இது புரிந்திருக்க வேண்டும்! 263 00:17:29,593 --> 00:17:31,803 அவரது பொறுப்புகள் என்னவென்று அவருக்குத் தெரியும்! 264 00:17:32,095 --> 00:17:33,597 அவர் குடும்பத்தின் மீது அக்கறை காட்டினார். 265 00:17:33,889 --> 00:17:35,348 எனக்கும் அக்கறை இருக்கிறது! 266 00:17:36,141 --> 00:17:38,810 -ஆனால் நான் கஷ்டப்பட முடியாது... -கஷ்டப்படுகிறாயா? 267 00:17:39,144 --> 00:17:40,854 கஷ்டமென்றால் என்னவென்று கூட உனக்குத் தெரியாது. 268 00:17:40,937 --> 00:17:42,689 என்னிடம் திறமை இருப்பதாக மார்த்தா ஜீன் சொல்கிறார். 269 00:17:43,648 --> 00:17:44,608 என்ன? 270 00:17:45,066 --> 00:17:47,360 நான் சரியான முடிவெடுத்திருப்பதாக அவர் நினைக்கிறார். 271 00:17:48,737 --> 00:17:50,488 நாம் ஏன் இப்போது மார்த்தா ஜீனைப் பற்றி பேசுகிறோம்? 272 00:17:52,782 --> 00:17:54,117 மார்த்தா ஜீன் தான் உன் அம்மாவா? 273 00:17:57,787 --> 00:17:59,539 இது முட்டாள்தனம். 274 00:18:03,752 --> 00:18:05,754 நான் அவனது படிப்பை நிறுத்தச் சொன்னதில்லையே. 275 00:18:05,837 --> 00:18:07,589 நீங்கள் தான் இந்த எண்ணத்தை அவனுக்குள் விதைத்திருக்கிறீர்காள். 276 00:18:07,672 --> 00:18:09,174 நான் அவனை ஊக்குவிக்க முயற்சித்தேன். 277 00:18:09,257 --> 00:18:11,593 அவன் சந்தோஷமில்லாமல் இருந்தான். படைப்பாற்றல் மிக்கவனாக இருந்தான். 278 00:18:11,676 --> 00:18:12,928 அவனுக்கு இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கிறது! 279 00:18:13,011 --> 00:18:15,889 அவன் படிப்பை முடித்துவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும். 280 00:18:15,972 --> 00:18:17,390 அது வீணாய் போவதற்கு அனுமதிக்க முடியுமா. 281 00:18:17,933 --> 00:18:22,395 நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது என நான் உறுதியாக இருக்கிறேன். 282 00:18:22,979 --> 00:18:25,982 என் வாழ்க்கை முழுவதும் போரிலேயே கழிந்தது. நீங்கள் போரின் சூழலில் வாழ்ந்திருக்கிறீர்களா? 283 00:18:26,066 --> 00:18:29,319 1967ல் நடைபெற்ற டெட்ராய்ட் போராட்டத்தின் போது, இங்கு ஒரு கருப்பின பெண்ணாக வாழ்ந்தேன். 284 00:18:29,402 --> 00:18:30,654 அவன் என்னுடைய மகன்! 285 00:18:31,196 --> 00:18:35,325 நீங்கள் வானொலியில் வேலை பார்ப்பதால், நீங்கள் சொல்வதையெல்லாம் நாங்கள் கேட்க வேண்டுமா? 286 00:18:35,909 --> 00:18:37,369 நீங்கள் ஒரு வாடிக்கையாளர், அவ்வளவுதான். 287 00:18:39,537 --> 00:18:40,705 நீங்கள் சொல்வது சரிதான். 288 00:18:41,331 --> 00:18:44,167 நீதான் அவனது அம்மா. நான் வெறும் வாடிக்கையாளர் தான். 289 00:18:45,502 --> 00:18:48,880 இப்படியே நடந்து கொண்டால், நீ அவனை இழந்துவிடுவாய். 290 00:19:26,793 --> 00:19:28,211 அப்பா... 291 00:19:34,259 --> 00:19:38,388 எனக்கு பார்சன்ஸ் கலை கல்லூரியில் ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்திருக்கிறது. 292 00:19:39,556 --> 00:19:41,600 நான் உங்களிடம் எதுவுமே கேட்கவில்லை. 293 00:19:47,689 --> 00:19:49,858 இந்த ஓபரா எதைப் பற்றியது தெரியுமா? 294 00:19:51,318 --> 00:19:55,780 ஒரே நாளில் தன் வாழ்க்கையை 295 00:19:56,615 --> 00:19:58,074 அழித்துக்கொள்ளும் ஒரு இளைஞனின் கதை. 296 00:20:11,004 --> 00:20:14,466 நீங்கள் ஆசைப்பட்டது உங்களுக்குக் கிடைக்காததற்காக வருந்துகிறேன். 297 00:20:17,219 --> 00:20:21,514 எட்டு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன், எல்லாவற்றிலுமே இடம் கிடைத்துள்ளது. 298 00:20:24,559 --> 00:20:26,353 எனக்கு இதில் திறமையிருக்கிறது. 299 00:20:38,073 --> 00:20:43,245 பார்சன்ஸ் 300 00:21:11,106 --> 00:21:16,653 கலையைப் பற்றி பேசினால், அது பார்க்கப்படும் விதத்தைப் பற்றியும் பேசணும், இல்லையா? 301 00:21:17,237 --> 00:21:19,489 இது ஒரு திறனாய்வு வகுப்பு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், 302 00:21:19,573 --> 00:21:23,910 உங்கள் ஓவியத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நடுவே ஒரு உரையாடல் இருக்க வேண்டும். 303 00:21:31,585 --> 00:21:32,752 ஏன் நிலையான பொருள்களை வரைந்திருக்கிறாய்? 304 00:21:33,962 --> 00:21:36,423 டச்சு ஓவியர்களின் கைவண்ணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 305 00:21:37,090 --> 00:21:38,383 அதன் நுட்பம் ரொம்ப பிடிக்கும். 306 00:21:40,677 --> 00:21:42,846 தனிப்பட்ட முறையில் உனக்கும் பெர்சிமோன் பழத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? 307 00:21:44,431 --> 00:21:47,893 இல்லை. அதன் வடிவமும், வண்ணமும் பிடிக்கும். 308 00:21:49,144 --> 00:21:51,062 இது எதனுடன் தொடர்புடையது? 309 00:21:54,566 --> 00:21:57,402 நீ வரைந்ததன் கருத்தை அறிய முயல்கிறேன். 310 00:21:57,485 --> 00:21:58,486 இது அழகாக இருக்கிறது. 311 00:22:00,697 --> 00:22:01,948 அவ்வளவுதான். இதைத்தான் சொல்கிறேன். 312 00:22:04,284 --> 00:22:05,285 சரி. 313 00:22:06,202 --> 00:22:07,203 அடுத்து போகலாம். 314 00:22:08,038 --> 00:22:10,749 காவின், இதில் சொல்லப்படும் செய்தி என்ன? 315 00:22:11,875 --> 00:22:13,919 கண்டிப்பாக, இது சூழ்நிலைக்கு ஏற்றது. 316 00:22:14,502 --> 00:22:17,964 கை டிபோர்டின் “த சொசைட்டி ஆஃப் த ஸ்பெக்டக்கல்” எனக்கு ரொம்ப பிடிக்கும். 317 00:22:18,048 --> 00:22:21,301 இது ஒரு முதலாளித்துவத்தைப் பற்றிய வர்ணனை. 318 00:22:22,010 --> 00:22:24,930 1960களின் காட்சிகளைத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? 319 00:22:52,165 --> 00:22:55,502 வருடம் முழுக்க இதைப் பற்றி தான் பேசியிருக்கிறோம். 320 00:22:56,044 --> 00:22:58,129 அது உங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தத்தை கொடுக்க வேண்டும். 321 00:22:58,213 --> 00:23:01,007 அதாவது, உன் தேர்வுகளை நீயே பார். 322 00:23:01,091 --> 00:23:04,135 லூக், உன் ஓவியத்தைப் பற்றி உன்னால் விவரிக்க முடிய வேண்டும். 323 00:23:04,219 --> 00:23:06,513 நான் விவரிக்க விரும்பவில்லை, சரியா? 324 00:23:06,596 --> 00:23:09,015 மக்கள் கலைக்கூடத்திற்கு வந்து, என் ஓவியங்களின் 325 00:23:09,099 --> 00:23:11,476 வடிவங்களினாலும் வண்ணங்களினாலும் ஈர்க்கப்பட வேண்டும். 326 00:23:11,560 --> 00:23:13,603 இல்லை. இது வெறும் காட்சிகளைப் பற்றியது மட்டுமல்ல. 327 00:23:13,687 --> 00:23:16,064 ஓவியருக்கும் பார்வையாளருக்கும் இடையே ஒரு உரையாடல் இருக்க வேண்டும்... 328 00:23:16,147 --> 00:23:18,233 எதற்காக? அது ரொம்ப அலுப்பை ஏற்படுத்தும், சரியா? 329 00:23:18,316 --> 00:23:21,987 கருத்தியல் கலை முட்டாள்தனமானது. நுட்பமாக இல்லாததற்கு அது ஒரு சாக்கு. 330 00:23:24,030 --> 00:23:29,369 லூக், உன்னிடம்... நான் எதிர்பார்த்தது வித்தியாசமான சிந்தனையை தான். 331 00:23:30,537 --> 00:23:33,540 அவ்வளவுதான். இது வெறும் கல்லூரி தான். 332 00:23:35,625 --> 00:23:37,294 உங்களிடம் பாடத்திட்டம் கூட கிடையாது. 333 00:23:51,766 --> 00:23:53,435 இது ஒன்றும் சத்திரம் இல்லை. 334 00:23:54,936 --> 00:23:58,023 வீட்டில் இருந்தால், நீ வேலை செய்ய வேண்டும். கடைக்கு வந்து உதவ வேண்டும். 335 00:23:58,440 --> 00:23:59,482 வாரத்தில் ஆறு நாட்கள். 336 00:24:00,775 --> 00:24:02,277 மகிழ்ச்சியாக இருப்பதற்கு வரவேற்கிறேன். 337 00:24:03,486 --> 00:24:05,071 மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்பவில்லை. 338 00:24:10,410 --> 00:24:11,786 நான் இன்னும் கோபமாகத் தான் இருக்கிறேன். 339 00:24:20,837 --> 00:24:22,130 ஒலிபரப்பாகிறது 340 00:24:22,214 --> 00:24:24,132 நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமென்றால், 341 00:24:24,216 --> 00:24:28,511 இந்த உலகம் சொல்வதை கருத்தில் கொள்ளாதீர்கள். 342 00:24:29,095 --> 00:24:33,141 நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, WQHG ரேடியோவிலிருந்து, நான் உங்கள் ராணி மார்த்தா ஜீன். 343 00:24:42,984 --> 00:24:44,152 -ஹே. -ஹாய். 344 00:24:45,237 --> 00:24:46,571 இந்தப் பாடல் முடியும் வரை தான் அவகாசம் இருக்கிறது. 345 00:24:46,655 --> 00:24:48,823 எனவே மூன்று நிமிடத்திற்குள், எல்லாவற்றையும் சொல். நியூ யார்க் எப்படியிருக்கு? 346 00:24:51,409 --> 00:24:52,410 ஏதோ இருக்கிறது. 347 00:24:53,745 --> 00:24:55,330 -நாற்காலியை எடுத்து போட்டு உட்காரு. -சரி. 348 00:25:00,752 --> 00:25:03,838 வந்து, இரண்டாவது முறையாக படிப்பை நிறுத்திவிட்டேன். 349 00:25:05,215 --> 00:25:08,718 இது எனக்கு சரிவராது. என்னால் முடியாதென நினைக்கிறேன். 350 00:25:09,594 --> 00:25:14,140 நியூ யார்க்கில் இருப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் டெட்ராய்ட்டில் சிறந்த கலை நுட்பம் இருக்கிறது. 351 00:25:14,224 --> 00:25:16,142 புகழ்பெற்ற ஓவியர்கள் டெட்ராய்ட்டைச் சேர்ந்தவர்கள். 352 00:25:16,226 --> 00:25:17,727 நான் ஓவியனே இல்லை என நினைக்கிறேன். 353 00:25:17,811 --> 00:25:20,021 -கண்டிப்பாக நீ ஒரு ஓவியன் தான். -வேண்டாம், அப்படி சொல்லாதீர்கள். 354 00:25:20,772 --> 00:25:23,858 சரி, இப்படித்தான் முன்பும் சொன்னீர்கள், நான் உங்கள் பேச்சைக் கேட்டிருக்கக் கூடாது. 355 00:25:23,942 --> 00:25:27,028 -நானா? நான் என்ன செய்தேன்? -நீங்கள் தானே இதைச் செய்ய சொன்னீர்கள். 356 00:25:27,112 --> 00:25:31,199 சரி, நான் சொல்வது எல்லாமே, சரியென்றாகிவிடாது. என் குழந்தைகள் போல நீயும் என்னைப் புறக்கணித்துவிடு. 357 00:25:32,534 --> 00:25:34,202 ஓ, வேண்டாம். 358 00:25:34,286 --> 00:25:38,373 இது இப்படியிருக்க கூடாது. நான் உன்னுடைய பாஸ் இல்லை. 359 00:25:38,456 --> 00:25:40,875 நீ ஆசைப்பட்டதெல்லாமே கிடைக்காது. 360 00:25:41,459 --> 00:25:46,840 உன்னையே நீ வருத்திக் கொள்வது, எந்த விதத்திலும் உனக்கு உதவாது. 361 00:25:46,923 --> 00:25:49,175 நீ உன் அம்மாவின் மகன். 362 00:25:51,219 --> 00:25:54,848 இன்னமும் அவள் என்மீது கோபமாக இருக்கிறாள், தெரியுமா? நான் இன்னும் கடைக்குப் போகவே இல்லை. 363 00:25:56,391 --> 00:25:59,603 சாங் குடும்பம், டிராமா செய்கிறீர்கள். 364 00:26:01,438 --> 00:26:02,731 வெளியே போ. 365 00:26:06,943 --> 00:26:08,361 லூக் 366 00:26:08,945 --> 00:26:10,488 நீங்கள் இன்னமும் இதை வைத்திருக்கிறீர்களா? 367 00:26:11,072 --> 00:26:12,741 ஆமாம். தூக்கிப் போடலாம் என்றிருக்கிறேன், 368 00:26:12,824 --> 00:26:15,243 ஏனென்றால் இதற்கு எந்த மதிப்பும் இல்லை எனச் சொல்லிவிட்டாயே. 369 00:26:15,785 --> 00:26:17,370 நான் அதிலிருந்து பின்வாங்கி கொள்ளவிருந்தேன். 370 00:26:19,247 --> 00:26:20,415 வெளியே போ. 371 00:26:46,858 --> 00:26:47,859 மார்த்தா ஜீன். 372 00:26:49,945 --> 00:26:51,029 உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். 373 00:26:52,989 --> 00:26:53,990 புது தொப்பி வேண்டுமா? 374 00:26:56,243 --> 00:26:58,286 ரொம்ப அழகாகவும், அற்புதமாகவும் இருக்க வேண்டும். 375 00:26:58,370 --> 00:27:01,998 ரொம்ப உயரமாக, நெஃபர்டிட்டி ராணி அணிந்த தொப்பி போல இருக்க வேண்டும். 376 00:27:03,124 --> 00:27:04,668 -ஆறு அடி போதுமா? -பன்னிரண்டு அடி. 377 00:27:04,751 --> 00:27:06,044 -சரி. -அது இப்போது ஃபேஷன் இல்லை. 378 00:27:06,127 --> 00:27:07,379 நான் அணிந்தால், ஃபேஷனாகிவிடும். 379 00:27:07,921 --> 00:27:11,591 ரொம்ப உயரமாக இருக்கும். இது சரிவராது. உருகிய கேக் போல கீழே நழுவி விடும். 380 00:27:11,675 --> 00:27:13,927 -இது மாதிரியா? -வரைபடத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. 381 00:27:14,010 --> 00:27:16,596 லூக்கிற்கு புரிந்துவிட்டது. ஆம், எனக்கு அது பிடித்திருக்கிறது! 382 00:27:16,680 --> 00:27:18,682 ரொம்ப உயரமாக இருக்கிறது, செய்ய முடியாது. 383 00:27:18,765 --> 00:27:20,976 -இதைப் பெரிதாகச் செய்யலாம். -வடிவத்திற்கு எதைப் பயன்படுத்துவாய்? 384 00:27:21,059 --> 00:27:23,395 -கம்பிகள். -கம்பிகள் கீழே விழுந்துவிடும். 385 00:27:23,478 --> 00:27:26,064 -சேர்த்துக் கட்டிவிடலாம்... -அது சரிவராது. முடியவே முடியாது. 386 00:27:26,147 --> 00:27:28,692 நீங்கள் இருவருமே முடிவு செய்யுங்கள். 387 00:27:28,775 --> 00:27:30,068 இல்லை, பாருங்கள். 388 00:27:30,151 --> 00:27:31,570 -முடியாது. -இதைப் பாருங்கள். 389 00:27:31,987 --> 00:27:33,822 இல்லை. போய் மார்த்தா ஜீனோடு சேர்ந்து உருவாக்கு. 390 00:27:33,905 --> 00:27:35,699 இது நன்றாக இருக்கிறதே. 391 00:27:37,367 --> 00:27:38,785 இதை எங்களால் செய்ய முடியும். 392 00:28:35,342 --> 00:28:36,843 இரண்டு அச்சுகளையும் சேரு. 393 00:28:37,886 --> 00:28:39,221 அப்போது தான் உயரம் கிடைக்கும். 394 00:28:40,180 --> 00:28:41,765 சில பொருட்களைப் பக்கபலமாகக் கொடுத்தால்தான் 395 00:28:42,307 --> 00:28:43,808 கீழே விழாமல் இருக்கும். 396 00:28:45,143 --> 00:28:46,144 சரி. 397 00:28:47,312 --> 00:28:49,105 சுற்றிலும், இது மாதிரி செய். 398 00:29:18,718 --> 00:29:21,012 -நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா? ஆம். -சரி. 399 00:29:34,150 --> 00:29:36,027 அதோ வருகிறது. 400 00:29:37,779 --> 00:29:39,281 நெஃபெர்டிட்டியின் தொப்பி போன்றே இருக்கு. 401 00:29:40,448 --> 00:29:42,367 இந்த முறை, ஒருவரை ஒருவர் மிஞ்சிவிட்டீர்கள். 402 00:29:42,450 --> 00:29:43,493 நன்றி. 403 00:29:43,994 --> 00:29:45,120 நான் பார்க்கலாமா? 404 00:29:48,248 --> 00:29:51,585 ஆம். என்னை இந்தத் தொப்பியுடனே புதைக்கப் போகிறார்கள். 405 00:29:51,668 --> 00:29:53,044 இறப்பைப் பற்றி பேசாதீர்கள். 406 00:29:53,753 --> 00:29:55,171 ஓ, பாராட்டை ஏற்றுக்கொள். 407 00:29:56,214 --> 00:29:58,341 இருவரும் சர்ச்சுக்கு வந்து, இந்தத் தொப்பியை பொதுவில் அணிந்திருப்பதைப் பார்க்க வேண்டும். 408 00:29:58,425 --> 00:30:00,051 அட, வேண்டாம். நான் வேறு மதத்தைச் சேர்ந்தவன். 409 00:30:00,135 --> 00:30:02,137 -வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் இருக்கு. -நான் அவனை அழைத்து வருகிறேன். 410 00:30:02,679 --> 00:30:05,599 இறுதியாக, “மிஸ்டர் சாங்” கடைக்கு மிஸ்டர் சாங் கிடைத்துவிட்டார். 411 00:30:14,691 --> 00:30:16,776 கொடு, அடிப்பாகத்தை எப்படி செய்திருக்கிறாய் எனப் பார்ப்போம். 412 00:30:22,449 --> 00:30:23,533 சரி. 413 00:30:28,246 --> 00:30:29,122 ஆஹா... 414 00:30:29,873 --> 00:30:34,252 இந்த வடிவம் மனித தலைக்குப் பொருந்தும் என நான் நினைத்திருக்கவே மாட்டேன். 415 00:30:35,378 --> 00:30:38,506 பார்த்தீர்களா, அந்த அனாடமி வகுப்புகள் நேரத்திற்கு கைகொடுக்கின்றன. 416 00:30:43,178 --> 00:30:45,639 இதை நான் “பறவைக்கூடு” எனச் சொல்வேன். 417 00:30:49,976 --> 00:30:52,854 இதையெல்லாம் நான் உங்களால் தான் செய்கிறேன், தெரியுமா? 418 00:30:53,730 --> 00:30:56,608 நான் சிறுவனாக இருக்கும்போது உங்களைக் கவனிப்பேன். 419 00:30:57,108 --> 00:31:00,654 நீங்கள் யோசிப்பதை அப்படியே உருவாக்கி விடுவீர்கள். 420 00:31:01,905 --> 00:31:03,406 நான் தைக்கிறேன் அவ்வளவுதான். 421 00:31:05,533 --> 00:31:06,910 நீங்கள் ஒரு கலைஞர், அம்மா. 422 00:31:07,410 --> 00:31:08,411 இல்லை. 423 00:31:09,621 --> 00:31:12,332 ஆம், நீங்கள் ஒரு கலைஞர். 424 00:31:16,086 --> 00:31:20,048 இவ்வளவு நாளாக நான் என்னவாக வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன்... 425 00:31:22,384 --> 00:31:23,385 அம்மா... 426 00:31:24,511 --> 00:31:26,721 நான் உங்களைப் போல ஆக வேண்டும் என நினைக்கிறேன். 427 00:31:37,941 --> 00:31:39,776 உங்களையெல்லாம் பார்க்கும்போது, 428 00:31:39,859 --> 00:31:42,696 சிலருக்கு இங்கு வந்ததில் இஷ்டமில்லை எனத் தெரிகிறது. 429 00:31:43,738 --> 00:31:48,451 யாரோ ஒருவர் எதிர்மறையான எண்ணத்துடன் காலையில் எழுந்திருத்திருக்கிறீர்கள். 430 00:31:49,369 --> 00:31:54,541 வாழ்க்கையில் நம்பிக்கையற்று இருந்தாலும், இங்கு வந்திருக்கிறீர்கள். 431 00:31:55,750 --> 00:31:58,628 நீங்கள் ஆண்டவரின் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 432 00:31:58,712 --> 00:32:02,215 நீங்கள் சுவாசிக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். ஆமென்? 433 00:32:02,299 --> 00:32:04,009 ஆமென். 434 00:32:04,092 --> 00:32:07,345 “என்னால் யாருக்காவது உதவ முடியுமென்றால்... 435 00:32:08,555 --> 00:32:11,933 என் பாடலினாலோ, வார்த்தையினாலோ ஒருவரை சந்தோஷப்படுத்த முடியுமென்றால், 436 00:32:13,018 --> 00:32:16,813 ஒருவர் தவறான பாதையில் பயணிக்கிறார் என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியுமென்றால், 437 00:32:17,480 --> 00:32:20,400 என் வாழ்க்கை வீணாகிவிடவில்லை.” 438 00:32:20,483 --> 00:32:21,776 -ஆமென். -ஆமென். 439 00:32:21,860 --> 00:32:25,906 என் வாழ்க்கை வீணாகிவிடவில்லை எனச் சொன்னேன். ஆமென்? 440 00:32:26,531 --> 00:32:28,742 ஆண்டவரே, உங்களுக்கு நன்றி சொல்கிறோம். நாங்கள் உன் இடத்தில் இருக்கிறோம்... 441 00:32:29,910 --> 00:32:31,369 -ஆமென்! -ஓ, ஆமாம். 442 00:32:31,453 --> 00:32:35,582 ஓ, நான் உழைத்தால் 443 00:32:35,665 --> 00:32:36,958 கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 444 00:32:37,042 --> 00:32:39,461 ஓ, நான் உழைத்தால் 445 00:32:39,544 --> 00:32:41,963 ஓ, கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 446 00:32:42,047 --> 00:32:44,966 ஓ, நான் உழைத்தால் 447 00:32:45,050 --> 00:32:46,635 கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 448 00:32:46,718 --> 00:32:47,719 அவர் என்னிடம் சொன்னார் 449 00:32:47,802 --> 00:32:51,473 திராட்சை தோட்டத்தில் வேலை செய்தால் கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 450 00:32:51,556 --> 00:32:54,517 ஆண்டவர் சொல்லவில்லையா... 451 00:32:56,353 --> 00:33:00,232 ஆண்டவர் சொல்லவில்லையா 452 00:33:00,982 --> 00:33:03,818 ஆண்டவர் சொல்லவில்லையா 453 00:33:05,278 --> 00:33:08,823 எனக்கு வேலை இருக்கிறது, நிச்சயம் இருக்கிறது 454 00:33:09,574 --> 00:33:14,454 அவர் எனக்கு கிரீடம் தருவார், மக்களே அவர் எனக்கு கிரீடம் தருவார் 455 00:33:14,537 --> 00:33:19,167 அவர் உங்களுக்கும் ஒன்று தருவார் 456 00:33:19,251 --> 00:33:24,130 உங்களுக்கும் தருவார், அவர் தருவேன் என சொன்னதால், நான் அவரை நம்புகிறேன் 457 00:33:24,214 --> 00:33:26,258 ஓ 458 00:33:26,341 --> 00:33:28,885 கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 459 00:33:28,969 --> 00:33:31,179 கடவுள் எனக்கு கிரீடம் தருவார், மக்களே 460 00:33:35,809 --> 00:33:38,812 டெட்ராய்டில் “மிஸ்டர் சாங்” தொப்பி கடை மிகப்பிரபலமான கடையாகிவிட்டது. 461 00:33:39,563 --> 00:33:42,357 ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவில் அரிதா ஃபிராங்கிளின் அணிந்திருந்த 462 00:33:42,440 --> 00:33:44,276 தொப்பியை லூக் தான் வடிவமைத்தார். 463 00:33:45,026 --> 00:33:47,904 மார்த்தா ஜீனும், லூக்கும் வாழ்க்கை முழுவதும் 464 00:33:47,988 --> 00:33:49,781 நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 465 00:33:50,615 --> 00:33:53,910 அவர் தனது நெஃபெர்டிட்டி தொப்பியுடன் புதைக்கப்பட்டார். 466 00:33:53,994 --> 00:33:58,665 கடவுள் எனக்கு கிரீடம் தருவார் 467 00:34:08,967 --> 00:34:12,887 உங்களுக்கும் ஒன்று தருவார் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 468 00:34:12,971 --> 00:34:17,767 நீங்கள் ஒழுங்காக வாழ வேண்டும் உங்கள் குடும்பத்தை நன்றாக நடத்த வேண்டும் 469 00:34:17,851 --> 00:34:22,396 அவரைப் பார்க்க காத்திருந்தது போதும், அவரைப் பார்க்க இவ்வளவு நாள் காத்திருந்தது போதும் 470 00:34:22,480 --> 00:34:24,983 எனக்கான பரிசிற்காக நான் ஆவலாக இருக்கிறேன் 471 00:34:25,066 --> 00:34:29,945 அது உங்களுக்கும் கிடைக்கும் 472 00:34:42,208 --> 00:34:43,960 அவர் உங்களுக்கும் தருவார் 473 00:34:44,044 --> 00:34:46,421 அவர் எனக்கும் தருவார் 474 00:34:46,503 --> 00:34:48,923 ஓ, நாம் மேலே போகிறோம் 475 00:34:49,007 --> 00:34:50,258 அங்கு போவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் 476 00:34:50,342 --> 00:34:51,927 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிகைத் தொடரைத் தழுவியது 477 00:34:52,010 --> 00:34:54,012 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்