1 00:00:01,336 --> 00:00:02,963 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:03,046 --> 00:00:04,965 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:09,654 --> 00:01:12,908 இப்போது ஒளிபரப்பாவது “உள்ளாடை வல்லுநர்” 4 00:01:12,991 --> 00:01:17,621 உண்மை கதையை தழுவியது 5 00:01:32,677 --> 00:01:36,640 இனஸ் 6 00:01:55,825 --> 00:01:58,119 த நியூ யார்க் டைம்ஸ் 7 00:01:58,203 --> 00:01:59,788 பிஸினஸ் டே 8 00:01:59,871 --> 00:02:00,872 புரூக்ளினின் உள்ளாடை வல்லுநர் 9 00:02:00,956 --> 00:02:02,082 இனஸ் பிரவுன் தனது கடையில் பெண்கள் நடனமாடும்படி விரும்புகிறார் 10 00:02:02,165 --> 00:02:03,166 அடச்சே. 11 00:02:13,051 --> 00:02:15,262 -இனஸ், ஒரு வாடிக்கையாளர் காத்திருக்கிறார். -காலை வணக்கம், சையிங். 12 00:02:15,345 --> 00:02:17,889 மற்றும் திருமண காலம் வருகிறது. அதை வைக்க என்னிடம் இடம் இல்லை. 13 00:02:17,973 --> 00:02:20,600 -எனக்கு பின்புறத்தில் அதிக இடம் தேவை. -சரி, என் பெட்டிகள் சிலவற்றை எடுத்துவிடுகிறேன். 14 00:02:20,684 --> 00:02:21,685 -தியா! -ஹாய். 15 00:02:22,269 --> 00:02:23,645 நீங்கள் குழந்தையை அழைத்து வரவில்லையா? 16 00:02:23,728 --> 00:02:24,938 இல்லை, குழந்தையிடமிருந்து தப்பிக்கிறேன். 17 00:02:25,021 --> 00:02:26,565 நான் குழந்தையைப் பார்க்க வேண்டும். 18 00:02:26,648 --> 00:02:28,525 ஆம், என் முலைக்காம்புகள் காயப்பட்டுவிட்டன. 19 00:02:28,608 --> 00:02:31,861 சரி. வாருங்கள், உங்கள் சட்டையை கழட்டுங்கள். என்ன பிரச்சினை என பார்ப்போம். 20 00:02:32,153 --> 00:02:33,905 குழந்தைக்கு நிறைய பால் கொடுத்துவிட்டேன். 21 00:02:34,364 --> 00:02:37,158 முன்பெல்லாம் கோபுரம் போல இருக்கும், ஆனால், இப்போதோ... 22 00:02:37,242 --> 00:02:39,244 தொங்கும் காதுகள் கொண்ட அந்த நாய் பெயர் என்ன? 23 00:02:39,327 --> 00:02:40,829 -டாக்ஷ்ஹண்டா? -ஆம், எனக்கு டாக்ஷ்ஹண்ட் மார்பாகிவிட்டது. 24 00:02:40,912 --> 00:02:42,372 ஐயோ! சரி. 25 00:02:42,455 --> 00:02:45,542 சரி, முதலில் மார்புகள் மாற்றமடைந்தால், பழைய உள்ளாடைகளை பயன்படுத்தக் கூடாது. 26 00:02:45,625 --> 00:02:48,211 அதை தூர எறியுங்கள். நிஜமாகத் தான், அந்த முட்டாள் தனத்தை தூக்கி எறியுங்கள். 27 00:02:48,295 --> 00:02:50,839 -சரி. -உங்களுக்கு புஷ்-அப் உள்ளாடை தேவை. அளவு 34 ஈ. 28 00:02:50,922 --> 00:02:53,550 ஈயா? அது உண்மையான அளவு இல்லையே. நீங்கள் மிகைப்படுத்துகிறீர்கள். 29 00:02:54,092 --> 00:02:57,345 என் அளவு எப்போதுமே டி தான், இப்போது என் மார்புகள் சுருங்கிவிட்டன, எப்படி பெரிய அளவை சொல்கிறீர்கள்? 30 00:02:57,429 --> 00:03:00,849 கேளுங்கள், அளவுகள் அப்படி எல்லாம் இருக்காது. என் வேலையை எனக்கு கற்றுத் தராதீர்கள். 31 00:03:01,182 --> 00:03:03,184 த நியூ யார்க் டைம்ஸ் பொறுத்தவரை, 32 00:03:03,268 --> 00:03:05,020 உள்ளாடை வல்லுநர், அன்பே! 33 00:03:05,103 --> 00:03:07,105 -நிறுத்து. உஷ். -“இனஸ் பிரவுனுக்கு...” 34 00:03:07,188 --> 00:03:08,565 எல்லோருக்கும் தெரிவதை நான் விரும்பவில்லை. 35 00:03:08,648 --> 00:03:11,067 சரி, இது ரகசியம் அல்ல, அம்மா. இது நியூ யார்க் டைம்ஸில் உள்ளது. 36 00:03:11,151 --> 00:03:13,403 உன் நண்பர் ஒரு சிறிய கட்டுரை எழுதப் போவதாகத் தானே சொன்னாய். 37 00:03:13,486 --> 00:03:15,280 முழு பக்க கட்டுரை என நீ என்னிடம் சொல்லவில்லையே. 38 00:03:15,363 --> 00:03:19,284 எனக்குத் தெரியாது. உங்களோடு நன்றாக பேசி பழகியதால் அவள் அதையெல்லாம் எழுதியிருப்பாள். 39 00:03:19,367 --> 00:03:22,454 சரி, எனக்கு அதெல்லாம் பிடிக்காது. அப்புறம் ஒரு வாடிக்கையாளர் காத்திருக்கிறார். 40 00:03:23,663 --> 00:03:24,497 தியா. 41 00:03:24,581 --> 00:03:26,166 -இதோ, டி-ஷர்ட் உள்ளாடை கொண்டு வருகிறேன். -சரி. 42 00:03:26,249 --> 00:03:28,168 உங்களுக்கு இன்னும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், அம்மா. 43 00:03:28,251 --> 00:03:31,755 வெளியே வைக்க உங்களுக்கு விளம்பர பலகை தேவைப்படும். சொந்தமாக ஒரு கடை தேவைப்படும். 44 00:03:31,838 --> 00:03:35,800 அதாவது, இது முக்கியமான விஷயம். நீங்கள் பிரபலமாகப் போகிறீர்கள். 45 00:03:35,884 --> 00:03:37,552 என்னை பிரபலமாக்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. 46 00:03:38,511 --> 00:03:41,932 சரிதான். நீங்கள் பாதி கட்டுரைக்கு ஹானாவைப் பற்றியே பேசியுள்ளீர்கள். 47 00:03:42,015 --> 00:03:45,060 ஹானா மட்டும் இல்லாவிட்டால் நான் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். 48 00:03:47,562 --> 00:03:49,814 -அவர் பார்த்திருப்பாரா? -பார்த்திருப்பார் என நினைக்கிறேன். 49 00:04:06,498 --> 00:04:08,833 நீதான் இனஸா? 7:00 மணிக்கே இங்கு வந்திருக்க வேண்டுமே. 50 00:04:08,917 --> 00:04:10,293 மன்னிக்கவும், திருமதி. ஷனோவிட்ஸ். 51 00:04:10,377 --> 00:04:12,712 சுரங்கப்பாதையில் பிரச்சினை இருந்தது, நான் இந்த இடத்திற்கு புதிது... 52 00:04:12,796 --> 00:04:13,797 ஜமைக்காவா? 53 00:04:13,880 --> 00:04:14,965 இல்லை, பெலிஸ். 54 00:04:15,048 --> 00:04:16,966 நான் உதவி கேட்டுப் பார்த்தேன், ஆனால் நான் கேட்ட மனிதரோ... 55 00:04:17,050 --> 00:04:18,552 பெண்கள் ஆண்களிடம் பேச மாட்டார்கள். 56 00:04:18,634 --> 00:04:20,554 சீக்கிரம் எங்கள் விதிகளை கற்றுக்கொள், இல்லையென்றால் இங்கு வாழ்வது கஷ்டம். 57 00:04:20,637 --> 00:04:21,638 இவன் பெயர் டோவிட். 58 00:04:22,347 --> 00:04:24,224 உள்ளே வா. உன்னால் எனக்கும் தாமதமாகிவிடும். 59 00:04:24,307 --> 00:04:26,810 இப்போது எனக்கும் தாமதமாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த கீழ்த்தளத்தில் வேலை செய்வேன், 60 00:04:26,893 --> 00:04:29,354 ஆனால் நீ மேலே தான் இருப்பாய். ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். 61 00:04:29,437 --> 00:04:30,855 இவள் தான் ஷீரா, என் மூத்த மகள்... 62 00:04:30,939 --> 00:04:31,940 மற்றும் எல்கி. 63 00:04:32,023 --> 00:04:34,442 பள்ளி முடிந்தவுடன் இவர்கள் வந்து உதவுவார்கள். 64 00:04:34,526 --> 00:04:37,237 -அவள் கிலா. என் போல அல்ல, தொல்லை பிடித்தவள். -பை. 65 00:04:38,446 --> 00:04:40,031 இங்கு அனைவரின் குடும்பத்தையும் நீ காண முடியும். 66 00:04:40,115 --> 00:04:42,659 -குடும்பத்துடன் இங்கு வந்துள்ளாயா? -இல்லை. நான் மட்டும் தான். 67 00:04:44,119 --> 00:04:46,371 இது தான் பிரதான படுக்கை அறை. கதவு மூடி இருந்தால், உள்ளே போகாதே. 68 00:04:46,454 --> 00:04:49,541 -நானும் என் கணவரும் உள்ளே இருக்கக்கூடும்... -நாம் ஆண்களுடன் பேசக் கூடாது. 69 00:04:49,624 --> 00:04:50,959 அது சிக்கலானது தான். 70 00:04:51,042 --> 00:04:53,461 இந்த வீட்டில் வெளி உணவு கிடையாது. நாங்கள் யூத விதிகளை கடைபிடிப்போம். 71 00:04:53,545 --> 00:04:56,214 மில்சிக் மற்றும் ஃப்லேசிங்... பால் மற்றும் கறி. தனித்தனியாகத் தான் சமைக்க வேண்டும். 72 00:04:56,298 --> 00:04:59,384 ஒரே பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது. பிங்க் என்றால் கறிக்கு. நீலம் அல்லது பச்சை பால் சார்ந்ததற்கு. 73 00:04:59,467 --> 00:05:01,636 என் கணவர் ஒரு நிறக்குருடு. அது ஒரு பிரச்சினை தான். 74 00:05:01,720 --> 00:05:03,179 தனித்தனி சிங்க்கில் கழுவ வேண்டும். 75 00:05:03,263 --> 00:05:05,765 நீ என் மதிய உணவு சமைத்து, எல்கிக்கு இரவு உணவு சமைப்பதில் உதவ வேண்டும். 76 00:05:06,266 --> 00:05:08,393 டோவிடுக்கு முட்டை ஒத்துக்கொள்ளாது. அவனுக்கு தடிப்புகள் ஏற்படும். 77 00:05:08,476 --> 00:05:10,604 உணவு வழிமுறைகளை கவுண்டரில் வைத்துள்ளேன். 78 00:05:11,563 --> 00:05:12,647 அடுப்பை பற்ற வைக்காதே. 79 00:05:12,731 --> 00:05:15,442 மகள்கள் யாரையாவது செய்ய சொல். மைக்ரோவேவையே உபயோகப்படுத்து. 80 00:05:16,484 --> 00:05:19,571 -நீ ருசியானவன்! 5:00 மணிக்கு உன்னை சந்திக்கவா? -சரி, மேடம். 81 00:05:20,322 --> 00:05:21,698 அட, என்னை ஹானா என்றே கூப்பிடு. 82 00:05:21,781 --> 00:05:23,241 சரி, ஹானா. 83 00:05:27,829 --> 00:05:28,830 ஹேய். 84 00:05:30,790 --> 00:05:33,293 சரி, கேளுங்கள். நான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன். சரியா? 85 00:05:34,669 --> 00:05:36,087 இது சரியாக இருக்கும் தானே? 86 00:05:37,005 --> 00:05:38,340 -இதோ வந்துவிடுகிறேன். -சரி. 87 00:05:38,840 --> 00:05:41,092 சரி. என்ன பிரச்சினை என பார்ப்போம். 88 00:05:43,470 --> 00:05:46,806 நான் என் சட்டையை கழட்ட வேண்டுமா? இப்படியே என்னை அளக்க முடியுமா? 89 00:05:46,890 --> 00:05:50,602 வந்து, நான் அளக்க மாட்டேன். என் கண்களே போதும். அது எளிதானது. கொஞ்சம் தூக்குங்கள், நான் உதவுகிறேன். 90 00:05:50,685 --> 00:05:52,729 பாருங்கள், எனக்கு ஏன் என்று கூட... 91 00:05:52,812 --> 00:05:56,399 பாருங்கள், என் உடல்வாகு சரியாக இல்லை, நான் யாரையும் டேட்டிங்கும் செய்யவில்லை. 92 00:05:56,483 --> 00:06:00,070 கேளுங்கள், உங்களுக்குத் தான் அழகான உள்ளாடை தேவை, வேறு யாருக்கோ அல்ல. 93 00:06:00,904 --> 00:06:01,905 தூக்குங்கள். 94 00:06:04,241 --> 00:06:07,619 செல்லமே, நான் நாள் முழுதும் பல விதமான உடல்களைப் பார்க்கிறேன். கழட்டுங்கள். 95 00:06:07,702 --> 00:06:10,956 -எந்த பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பான இடம் தான். -எனக்கு பின்சதை அதிகம். 96 00:06:11,831 --> 00:06:13,500 அதெல்லாம் பிரச்சினையே இல்லை, அன்பே. 97 00:06:14,918 --> 00:06:16,253 உங்களுக்கு முதுகு வலி இருக்கா? 98 00:06:16,336 --> 00:06:18,171 ஆம். இந்த இடத்தில் தான் தொங்குகிறது. 99 00:06:18,255 --> 00:06:22,092 ஆம், இந்த ஸ்டிராப் கொஞ்சம் பெரிதாக இருக்கு அதனால் தான். அது தாங்கிப் பிடிக்கவில்லை. 100 00:06:22,175 --> 00:06:24,135 அதனால் தான் கீழே தொங்குகிறது, நான் சொல்வது புரிகிறதா? 101 00:06:24,219 --> 00:06:27,180 ஆம். அது தொங்கும் போது, அது ஒரு வட்டம் போல தோன்றுகிறது. 102 00:06:27,264 --> 00:06:28,473 ஏதோ எனக்கு உடலமைப்பு இல்லாதது போல. 103 00:06:29,266 --> 00:06:32,852 வா. உங்கள் எடை உங்களுடையது, தோழியே. 104 00:06:32,936 --> 00:06:35,981 அது ஒரு பிரச்சினையே இல்லை. உள்ளாடை தான் பிரச்சினை. 105 00:06:38,858 --> 00:06:40,235 வெட்கப்படுவதில் எந்த பயனும் இல்லை. 106 00:06:41,528 --> 00:06:44,197 நீங்கள் நன்றாக உணர வேண்டும். 107 00:06:45,782 --> 00:06:48,827 மூச்சை இழுங்கள். பத்து வரை எண்ணுங்கள். 108 00:06:50,870 --> 00:06:54,165 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. 109 00:06:55,208 --> 00:07:00,255 ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து! 110 00:07:01,923 --> 00:07:05,427 பாட்டில் வேண்டாம், இப்போது தான் ஃப்லேசிங் சாப்பிட்டாய். 111 00:07:06,219 --> 00:07:07,929 நன்றாக நடந்துகொள்கிறாய்! 112 00:07:09,180 --> 00:07:12,642 அம்மா மதிய உணவை மறந்துவிட்டார். நாம் அதை அவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். 113 00:07:23,987 --> 00:07:26,072 இது சரிப்பட்டு வராது, ஜூடித். 114 00:07:26,156 --> 00:07:30,577 இந்த உள்ளாடை உங்களுக்கு சின்னது என சொல்லிக் கொண்டே இருக்கிறேன், கண்ணுபடப் போகுது. 115 00:07:30,660 --> 00:07:33,204 எனில், தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு எனக்கு ஏதாவது கொடுங்கள். 116 00:07:33,288 --> 00:07:37,500 எனக்கு பிடித்த மருமகனே. அந்த முகத்தைப் பாருங்கள். 117 00:07:38,209 --> 00:07:39,878 இனஸ், உனக்கு ஏதாவது வேண்டுமா? 118 00:07:40,837 --> 00:07:44,049 குறுக்கிடுவதற்கு மணிக்கவும். உங்கள் உணவைக் கொண்டு வந்துள்ளேன். 119 00:07:45,175 --> 00:07:47,844 நன்றி. அங்கே வை. நீ உயிர்காக்கும் தோழி. 120 00:07:49,512 --> 00:07:53,475 இனஸ், ஜூடித்தின் மார்புக்கு, அந்த உள்ளாடை மிகச் சிறியது என அவரிடம் சொல்வாயா? 121 00:07:54,559 --> 00:07:56,019 அட, சொல். அவரிடம் உண்மையைச் சொல். 122 00:07:57,229 --> 00:07:58,855 அவர் சொல்வது சரிதான். 123 00:07:59,773 --> 00:08:01,358 நான் என் அப்பாவின் வம்சத்தைச் சேர்ந்தவள். 124 00:08:04,861 --> 00:08:08,156 இது உள்ளாடையே அல்ல. இது தான் புரூக்ளின் தொங்கு பாலம். 125 00:08:10,116 --> 00:08:11,284 மறைத்துக் கொள்ளுங்கள். 126 00:08:11,368 --> 00:08:13,411 இவங்க ஒரு நச்சரிப்பு. 127 00:08:13,495 --> 00:08:15,163 கிழக்கு நதி அளவுக்கு இருக்கிறதே! 128 00:08:15,247 --> 00:08:17,791 சரி, அவர் டபுள் டி அணிந்திருந்தார். அவரது அளவு 38 எஃப். 129 00:08:17,874 --> 00:08:20,544 -இது எஃப் வரை இருக்கிறதா? -எம் வரை இருக்கிறது. 130 00:08:20,627 --> 00:08:22,754 இது பொறியியலின் சாதனை. 131 00:08:22,837 --> 00:08:25,632 இதை உருவாக்க 14 ஆண்டுகள் மற்றும் 600 ஆண்கள் தேவைப்பட்டனர். 132 00:08:29,427 --> 00:08:33,974 ஹானா அதை எப்படி செய்கிறார் என தெரியவில்லை. எல்லோரும் அவரிடம் செல்கிறார்கள். 133 00:08:34,558 --> 00:08:37,101 போபோவ், ஜெர், சாத்மார். 134 00:08:37,185 --> 00:08:39,980 நான் அவரிடம் வாங்குகிறேன், நான் விஷ்னிட்ஸ். 135 00:08:40,480 --> 00:08:45,402 அவர் பாவாடை விற்காதது என் அதிர்ஷ்டம். அல்லது என் தொழில் படுத்திருக்கும். 136 00:08:46,069 --> 00:08:47,279 நான் இதை எடுத்துக்கொள்கிறேன். 137 00:08:47,362 --> 00:08:48,989 அற்புதமான தேர்வு. 138 00:08:52,492 --> 00:08:54,869 -நான் அதைப் பார்க்கலாமா? ஆம், அதுதான். -சரி. 139 00:08:55,954 --> 00:08:57,372 இதுவா? 140 00:08:58,665 --> 00:08:59,666 அது தான். 141 00:09:03,086 --> 00:09:04,087 சரி. 142 00:09:05,463 --> 00:09:06,673 இதையும் எடுத்துக்கொள்கிறேன். 143 00:09:07,215 --> 00:09:08,216 நல்லது. 144 00:09:10,886 --> 00:09:15,432 சரி, சாராவிடம் நாளை என்னை வந்து பார்க்க வேண்டாமென சொல். ஒரு நாளாவது விடுமுறை வேண்டும். 145 00:09:16,850 --> 00:09:19,644 என்னால் அவர்களை இங்கிருந்து வெளியேற்ற முடியாது. டோவிட் எங்கே? 146 00:09:19,728 --> 00:09:20,729 தூங்குகிறான். 147 00:09:20,979 --> 00:09:23,481 எல்கி அவனுடன் இருக்கிறாள். உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன். 148 00:09:24,357 --> 00:09:25,358 நன்றி. 149 00:09:26,151 --> 00:09:28,820 இவ்வளவு காலம் கணவருடன் இருந்து என்ன பயன், எனக்கு ஒரு மனைவி தான் தேவை போல. 150 00:09:30,155 --> 00:09:32,449 இதோ, இங்கே. நான் செய்கிறேன், நீங்கள் சாப்பிடுங்கள். 151 00:09:33,617 --> 00:09:34,910 -சரி. -நன்றி. 152 00:09:42,167 --> 00:09:43,168 உனக்கு பாவாடை நன்றாக இருக்கிறது. 153 00:09:43,251 --> 00:09:44,336 நன்றி. 154 00:09:44,419 --> 00:09:47,088 ஆனால் உள்ளாடை மோசமாக இருக்கிறது. சட்டை வழியே உள்ளாடை தெரிகிறது. 155 00:09:47,881 --> 00:09:51,843 இது பழையது. என் உள்ளாடைகளுக்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 156 00:09:51,927 --> 00:09:54,638 ஆனால், நீ கொடுக்க வேண்டும். வா. நாம் சரிசெய்வோம். 157 00:09:55,138 --> 00:09:56,139 வேண்டாம். 158 00:09:56,223 --> 00:09:59,059 என்னிடம் வேலை பார்த்துக்கொண்டு மோசமான உள்ளாடையை அணியக்கூடாது. 159 00:09:59,142 --> 00:10:00,810 இந்தக் கடையின் முக்கிய பொருளே அதுதான். 160 00:10:00,894 --> 00:10:01,937 -நன்றி. -அது சரியில்லை என்றால், 161 00:10:02,020 --> 00:10:04,189 -அதன்மேல் எதை அணிந்தாலும் நன்றாக இருக்காது. -இல்லை. கொஞ்சம் பொறுங்கள்! 162 00:10:04,272 --> 00:10:07,108 வா. ஒரு நொடி தான் ஆகும். 163 00:10:07,192 --> 00:10:09,402 வா என்ன அளவு எனப் பார்ப்போம். 164 00:10:10,070 --> 00:10:13,073 -சரி, உன் அளவு 36ஈ. -ஆனால் நீங்கள் அளக்கவே இல்லையே. 165 00:10:13,156 --> 00:10:15,116 நான் கண்களாலேயே அளந்துவிடுவேன். 166 00:10:16,952 --> 00:10:21,039 என் அளவு சி தான், ஆனால், இப்போது கொஞ்சம் எடை போட்டுவிட்டேன். 167 00:10:21,122 --> 00:10:24,251 அது சகஜம் தான். உடல்கள் மாறும். அனைவரும் அதை ஒத்துக்கொள்ள மறுப்பார்கள். 168 00:10:24,334 --> 00:10:26,419 அது குறித்து நமக்கு பலவிதமான எண்ணங்கள் உண்டு. 169 00:10:26,503 --> 00:10:30,006 முதலில் நான் ஆரம்பிக்கும்போது, பெண்களுக்கு உள்ளாடை மட்டும் தான் தேவை என நினைத்தேன். 170 00:10:30,507 --> 00:10:33,552 ஆனால் அவர்களுக்கு... நமக்கு நிறைய, நிறைய தேவைப்படுகிறது. 171 00:10:34,553 --> 00:10:37,681 யாரும் கடந்தகாலத்தை மறக்கத் தயாராகயில்லை, ஆனால் உடல்கள் மாறிக்கொண்டே இருக்கும். 172 00:10:38,265 --> 00:10:41,560 அது இயற்கை தானே? குறிப்பாக குழந்தைகள் பிறந்த பிறகு. 173 00:10:41,643 --> 00:10:44,020 எனக்குப் பெண் குழந்தைகள் பிறந்ததும், அவர்களே போதும் என நினைத்தேன். 174 00:10:44,104 --> 00:10:47,440 ஆனால், எதிர்பாராதவிதமாக, டோவிட் பிறந்துவிட்டான். என் உடல் மீண்டும் பாழாகிவிட்டது. 175 00:10:48,024 --> 00:10:49,442 குழந்தைகள் பிறந்ததும் உனக்கே புரியும். 176 00:10:50,235 --> 00:10:53,613 உனக்கும் ஒருநாள் பிறக்கும். நீ டோவிடுடன் நன்றாகப் பழகுகிறாய். உண்மையான அம்மா மாதிரி. 177 00:10:55,365 --> 00:10:56,449 எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது. 178 00:11:00,245 --> 00:11:04,374 அவளுக்கு இரண்டு வயது, அவள் என் அம்மாவுடன் பெலிஸில் இருக்கிறாள். 179 00:11:05,959 --> 00:11:07,252 அவள் பெயர் என்ன? 180 00:11:07,794 --> 00:11:08,879 பிரிஸில்லா. 181 00:11:12,424 --> 00:11:13,466 கொஞ்சம் சிக்கலான விஷயம். 182 00:11:15,677 --> 00:11:16,928 அப்பாவுடனா? 183 00:11:18,680 --> 00:11:21,433 நான் இங்கு கொஞ்ச நாள் தனியாக இருந்துவிட்டு 184 00:11:21,516 --> 00:11:24,394 மீண்டும் அங்கு போவது நல்லது என என் அம்மா நினைத்தார். 185 00:11:26,813 --> 00:11:28,899 அவள் என்னை மறந்துவிடுவாளோ என கவலையாக இருக்கிறது. 186 00:11:29,983 --> 00:11:34,321 நீ சரியானதும் அவளை இங்கு அழைத்து வந்துவிடு. 187 00:11:36,781 --> 00:11:39,159 உனக்கும், உன் மகளுக்கும் ஏற்ற காலம் வரும். 188 00:11:43,622 --> 00:11:46,041 இதை முயற்சி செய். இது கண்டிப்பாக நன்றாக இருக்கும். 189 00:11:47,042 --> 00:11:48,043 இதுவா? 190 00:11:48,835 --> 00:11:50,003 சரி. 191 00:11:50,086 --> 00:11:52,380 இது உங்களுக்குப் பிடிக்கும் எனத் தெரியும். ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் 192 00:11:54,925 --> 00:11:55,926 இனஸ் உள்ளாடைகள். 193 00:11:56,593 --> 00:11:58,803 இல்லை, இன்று எனக்கு எந்த சந்திப்புகளும் இல்லை. புதன்கிழமை பரவாயில்லையா? 194 00:11:58,887 --> 00:12:01,014 -எண்களை குறித்துக்கொள்ளவா? -வேண்டாம், அடுத்தது யாரென தெரியும். 195 00:12:01,097 --> 00:12:02,599 -இன்று மதியம் மீண்டும் அழைக்கிறீர்களா? -இனஸ். 196 00:12:02,682 --> 00:12:04,517 -சரி, நிச்சயமாக. சரி. -இனஸ்! 197 00:12:04,601 --> 00:12:06,394 வாருங்கள், அடுத்து நீங்கள் தான். சரி, உங்களோடு தான் இருப்பேன். 198 00:12:06,478 --> 00:12:07,479 அடுத்து நீங்கள் தான், சரியா? 199 00:12:07,562 --> 00:12:08,772 வருகிறேன், வருகிறேன். வழிவிடுங்கள். 200 00:12:08,855 --> 00:12:11,858 என் உடைகள் மீது அவர்களின் உள்ளாடைகளைத் தொங்கவிட்டிருக்கின்றனர். 201 00:12:11,942 --> 00:12:12,984 மன்னித்துவிடுங்கள். 202 00:12:13,068 --> 00:12:15,195 உன்னைப் பற்றி செய்தித்தாளில் வந்ததை என்னிடம் சொல்லவே இல்லை. 203 00:12:15,278 --> 00:12:16,529 சொல்ல வேண்டும் என நினைத்தேன். 204 00:12:16,613 --> 00:12:19,491 சரி, என் கதவை அடைக்கக்கூடாது என அவர்களிடம் சொல். தீ அபாயம் இருக்கிறது. 205 00:12:19,574 --> 00:12:23,119 அவர்கள் உள்ளாடை வாங்கினால், திருமண உடைகளும் வாங்கவேண்டும் என சொல். 206 00:12:23,203 --> 00:12:24,246 சரி, சொல்கிறேன். 207 00:12:24,329 --> 00:12:27,332 எல்லோரும் இந்தப் பக்கம் வரிசையில் நில்லுங்கள். நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன். 208 00:12:27,415 --> 00:12:28,917 நான் ஒருத்தி தான் இருக்கிறேன். பொறுமையாக இருங்கள். 209 00:12:29,000 --> 00:12:31,878 இது உங்களுக்கு சரிவராது. கொஞ்சம் தூக்கினாற் போல் இருந்தால் தான் சரிவரும். 210 00:12:34,756 --> 00:12:36,466 இது நன்றாகத் தூக்கியிருக்கிறது. 211 00:12:49,145 --> 00:12:53,525 ரொம்ப அழகாக இருக்கிறது, பெண்ணே. நீ உயிர்ப்புடனும், துடிப்புடனும் இருக்க வேண்டும். 212 00:12:54,067 --> 00:12:56,278 அருமையாக இருக்கிறது. அழகான உள்ளாடைகள். 213 00:12:56,820 --> 00:12:58,530 சரி, உங்கள் கைகளை தூக்குங்கள். 214 00:13:00,198 --> 00:13:01,199 சரி! 215 00:13:23,972 --> 00:13:25,181 அழகாக இருக்கிறது. 216 00:13:35,442 --> 00:13:36,443 அழகாக இருக்கிறது. 217 00:13:37,652 --> 00:13:38,904 நல்லது. 218 00:13:38,987 --> 00:13:40,822 இங்கு வந்ததற்கு ரொம்ப நன்றி, சரியா? 219 00:13:40,906 --> 00:13:43,366 அடுத்த முறை மேடிசனையும் அழைத்து வாருங்கள். சரி, உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். 220 00:13:43,950 --> 00:13:44,951 சரி. 221 00:13:46,161 --> 00:13:47,162 கடவுளே. 222 00:13:53,418 --> 00:13:54,419 கடவுளே. 223 00:13:59,007 --> 00:14:02,385 அம்மா, உங்கள் ஃபோனை மாற்றுங்கள். உங்களிடம் பணம் இருக்கிறது தானே, மாற்றுங்கள். 224 00:14:02,469 --> 00:14:06,264 ஒரு மாதத்திற்கு 15.99 தான் செலவழிப்பேன், என் கடைசி காலம் வரை அதுதான். 225 00:14:06,348 --> 00:14:10,518 ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக்கொள்ளுங்கள். ஸ்கொயர் செயலியைப் பயன்படுத்தலாம், 226 00:14:10,602 --> 00:14:15,607 வாடிக்கையாளர்களிடம் பேசலாம்... உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். 227 00:14:15,690 --> 00:14:18,610 ஹே, வேண்டாம், அதைத் தொடாதே. அவை இந்த பண்டிகைக்கான குக்கீகள். 228 00:14:18,693 --> 00:14:19,945 ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவா? 229 00:14:20,028 --> 00:14:23,365 இல்லை. அது ஹானாவிற்காக. அதைப் பிரிக்காதே. 230 00:14:24,950 --> 00:14:26,743 வேண்டாம், வாய்ஸ் மெயிலுக்கு போகட்டும். 231 00:14:26,826 --> 00:14:28,161 வாடிக்கையாளராகத்தான் இருக்கும். 232 00:14:28,245 --> 00:14:29,454 அப்படியென்றால் பேச வேண்டியதுதானே. 233 00:14:29,537 --> 00:14:31,790 இல்லை, நிறைய அழைப்புகள்... வருகின்றன. தொல்லை செய்கின்றனர். 234 00:14:31,873 --> 00:14:32,958 யாரையாவது வேலைக்கு வைத்துக்கொள்ளலாமே. 235 00:14:33,041 --> 00:14:35,085 கிங்ஸ்பரோவில் இன்டர்ன்ஷிப் ஏற்பாடு செய்கிறேன். 236 00:14:35,168 --> 00:14:36,711 அதைவிடு. 237 00:14:41,216 --> 00:14:42,801 அம்மா, உங்களுக்கு உண்மையான பெயர்ப்பலகை கூட இல்லை. 238 00:14:43,635 --> 00:14:45,011 தேவையில்லாத வாடிக்கையாளர்களை நீக்கிவிடும். 239 00:14:46,137 --> 00:14:47,973 உங்களுக்கென்று தனியாக இடம் வேண்டும். 240 00:14:48,056 --> 00:14:50,433 நான் வீட்டுமனை முகவரிடம் பேசினேன். 241 00:14:52,102 --> 00:14:53,895 ஆம், அவர் அட்லாண்டிக்கில் ஒரு கடையை பார்த்துக்கொள்கிறார். 242 00:14:53,979 --> 00:14:57,148 எதற்காக? அது ஒரு சின்ன வேலை. 243 00:14:57,232 --> 00:15:00,485 இவ்வூரிலேயே ஹானாவின் கடை தான் சிறந்த கடை, ஆனால் அவள் சின்னதாகத்தான் ஆரம்பித்தாள். 244 00:15:00,569 --> 00:15:03,029 -ஹானாவின் நிழலில் வாழ்வதை நிறுத்துங்கள். -நான் ஒன்றும் ஹானாவின் நிழலில் வாழவில்லை. 245 00:15:03,113 --> 00:15:05,365 அப்படியா? ஊரு விட்டு ஊரு போய் 246 00:15:05,448 --> 00:15:08,034 அவருக்கு இந்த ரொட்டிகளைக் கொடுக்கிறீர்கள். 247 00:15:09,578 --> 00:15:15,625 அவள் என் தோழி. இது நம் பழக்கம். இந்த வருடம் நீயும் என்னுடன் வருகிறாய். 248 00:15:15,709 --> 00:15:16,793 -இல்லை. -ஆம், வருகிறாய். 249 00:15:16,877 --> 00:15:19,963 அடம் பிடிக்காதே. அவள் ஒவ்வொரு முறையும் உன்னைக் கேட்கிறாள். இதை சுவைத்துப் பார். 250 00:15:20,630 --> 00:15:22,215 -வேண்டாம். -அட, சுவைத்துப் பார். 251 00:15:27,554 --> 00:15:28,555 சரி, சுவையாக இருக்கிறது. 252 00:15:31,892 --> 00:15:32,976 ஒரு குக்கீ எடுத்துக்கொள்ளவா? 253 00:15:39,441 --> 00:15:42,944 சரி, அவ்வளவுதான். 254 00:15:44,446 --> 00:15:47,949 சின்னது தான், ஆனால் இதுவே போதும். 255 00:15:51,036 --> 00:15:52,662 இது ரொம்ப நேர பயணம் தான் இல்லையா? 256 00:15:57,709 --> 00:15:58,919 உனக்கு பசிக்கிறதா? 257 00:16:00,921 --> 00:16:02,005 சோர்வாக இருக்கிறதா? 258 00:16:05,759 --> 00:16:08,136 உன் படுக்கையறையை காண்பிக்கிறேன். சரியா? வா. 259 00:16:13,892 --> 00:16:16,603 இந்த அலமாரியிலிருந்து என் உடைகளை எல்லாம் எடுத்துவிட்டேன் 260 00:16:17,437 --> 00:16:19,272 நீ உன் உடைகளை இங்கு வைத்துக்கொள்ளலாம். 261 00:16:19,356 --> 00:16:22,609 நீ அந்த மெத்தையை எடுத்துக்கொள், நான் இங்கே படுத்துக்கொள்கிறேன், 262 00:16:22,692 --> 00:16:24,527 ஆக, உனக்கு அறை தயாராகிவிட்டது. 263 00:16:26,780 --> 00:16:29,532 உனக்குப் புதிய பைஜாமா வாங்கினேன், அதோ அங்கிருக்கிறது. 264 00:16:30,158 --> 00:16:32,244 இரவு உடைகளை வீட்டிலிருந்தே எடுத்து வந்துவிட்டேன். 265 00:16:38,291 --> 00:16:39,292 பிரிஸில்லா? 266 00:16:41,211 --> 00:16:42,712 நீ இங்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். 267 00:16:47,968 --> 00:16:49,511 நீ உடை மாற்ற உதவா? 268 00:16:50,637 --> 00:16:51,680 நானே மாற்றிக்கொள்வேன். 269 00:16:56,601 --> 00:16:58,979 அடுத்த பெசாக் வரும்வரை கெஃபில்ட் மீன் போல வாசனை வரப்போகிறது. 270 00:16:59,604 --> 00:17:00,605 எல்லாருக்குமே தான். 271 00:17:01,606 --> 00:17:05,651 பிரிஸில்லா, நீ எனக்கு உதவுகிறாயா? வா. அது ஜாலியாக இருக்கும். 272 00:17:08,154 --> 00:17:10,657 கடந்த ஆண்டு, 50 பவுண்டுகள் உருளைக்கிழங்கு போதும் என நினைத்தேன்... 273 00:17:10,739 --> 00:17:12,742 -ஹேய். சரி, வா. -இந்த ஆண்டு 60 பவுண்டு வாங்கியுள்ளேன். 274 00:17:12,825 --> 00:17:14,285 -சரி, இதை உன் கையில் பிடி. -டோவிட், 275 00:17:14,369 --> 00:17:16,036 -நீ நல்லவற்றை வரிசைப்படுத்தலாமே? -மிருதுவாக இருக்கா? 276 00:17:16,454 --> 00:17:17,664 அதை சுற்றி உருட்டு. 277 00:17:19,498 --> 00:17:20,708 பானையில் போடு. 278 00:17:21,293 --> 00:17:23,712 -இது மிருதுவாக இருக்கு. -இங்கு வா. 279 00:17:23,795 --> 00:17:25,045 ஆம். அதை ஒன்றாக உருட்டு. 280 00:17:29,676 --> 00:17:32,429 -இவை மிகவும் சிறியதாக உள்ளன! -இல்லை... மன்னிக்கவும். 281 00:17:32,512 --> 00:17:35,432 அவளது வேலையை எளிதாக்கப் பார்த்தேன், 282 00:17:35,515 --> 00:17:37,517 ஆனால் நாங்கள் அதை சரிசெய்வோம். சரிசெய்து விடுவோம். 283 00:17:37,767 --> 00:17:40,937 பரவாயில்லை. அதை இப்படியே விட்டு விடு. 284 00:17:41,021 --> 00:17:43,231 எனக்கே பெரிய மாட்ஸோ உருண்டைகளை மெல்லுவது பிடிக்காது. 285 00:17:46,401 --> 00:17:47,485 இன்னும் கொஞ்சம் செய்வோமா? 286 00:17:47,569 --> 00:17:49,154 நான் மீண்டும் சென்று வண்ணம் தீட்டுகிறேன். 287 00:17:49,738 --> 00:17:51,072 சரி. சரி, போ. 288 00:17:51,156 --> 00:17:53,408 சரி, வா. கையைத் துடை. 289 00:17:58,455 --> 00:18:02,459 -சரி, இனஸ். உன் உதவிக்கு நன்றி. -பரவாயில்லை. 290 00:18:07,214 --> 00:18:08,215 உனக்கு ஏதும் பிரச்சினையில்லையே? 291 00:18:08,298 --> 00:18:10,342 எனக்கு பாட்டியின் சங்கு சூப் வேண்டும். 292 00:18:10,425 --> 00:18:13,094 ஓ, இல்லை, சுவைத்துப் பார். நன்றாக இருக்கிறது. நான்தான் இதை செய்தேன். 293 00:18:18,850 --> 00:18:21,561 சரி, நாளைக்கு சங்கு சூப் சாப்பிடுவோம். 294 00:18:27,108 --> 00:18:28,818 ஆண்டவரே, 295 00:18:28,902 --> 00:18:31,988 இந்த பிரபஞ்சத்தின் ராஜாவே, 296 00:18:32,072 --> 00:18:33,865 உம் நாமம் மகிமைப்படுவதாக. 297 00:18:34,574 --> 00:18:36,409 -ஆமென். -ஏன் அதை செய்கிறீர்கள்? 298 00:18:38,370 --> 00:18:39,454 இது ஒரு ஜெபம். 299 00:18:40,455 --> 00:18:42,415 உன் தாத்தா சொல்வது போல. 300 00:19:05,564 --> 00:19:06,690 ரொம்ப வெளிச்சமாக இருக்கு. 301 00:19:08,191 --> 00:19:11,069 ஓரமான இடம், நிறைய ஜன்னல்கள். 302 00:19:11,152 --> 00:19:13,196 சுற்றுப்புறம் முற்றிலும் மாறிக் கொண்டிருக்கிறது, 303 00:19:13,280 --> 00:19:15,699 மற்றும் வீட்டின் உரிமையாளர் தரைகளை புதுப்பிக்க ஒப்புக்கொண்டார். 304 00:19:15,782 --> 00:19:19,035 இது போன்ற இன்னொரு இடம் உங்கள் கிடைக்காது. இது கச்சிதமாக உள்ளது. 305 00:19:19,828 --> 00:19:22,038 இந்த இடத்தில் நான் என்ன செய்வேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. 306 00:19:22,122 --> 00:19:24,791 அம்மா. நீங்கள்... உங்களின் புதிய வாடிக்கையாளர்களை வைத்து நிரப்புங்கள். 307 00:19:26,543 --> 00:19:27,836 நாங்கள் கொஞ்சம் தனியாக பேசலாமா? 308 00:19:31,590 --> 00:19:33,633 அம்மா, இது கச்சிதமாக உள்ளது. 309 00:19:33,717 --> 00:19:35,176 இப்போது இருக்கும் இடமே எனக்கு சந்தோஷம் தான். 310 00:19:35,927 --> 00:19:37,721 நான் விக்டோரியா’ஸ் சீக்ரெட்டாக மாறத் தேவையில்லை. 311 00:19:37,804 --> 00:19:42,350 சரி, விக்டோரியா’ஸ் சீக்ரெட் மற்றும் ஸ்டோரேஜ் அலமாரிக்கு இடையில் இருப்பது பரவாயில்லையா? 312 00:19:43,685 --> 00:19:46,688 பாருங்கள்... அதாவது, யோசியுங்கள். இது தான் லட்சியமே, அம்மா. 313 00:19:46,771 --> 00:19:48,231 அதாவது, யாரோ ஒருவரின் இடத்தில் 314 00:19:48,315 --> 00:19:51,276 என்னை முடங்கிக் கிடக்கச் சொல்கிறீர்களா? 315 00:19:53,486 --> 00:19:56,615 கேளு, பண்டிகைக்காக நான் சென்று சுத்தம் செய்து முடிக்க வேண்டும். 316 00:19:58,366 --> 00:20:01,161 -நன்றி. நாங்கள் இதைப் பற்றி யோசிக்கிறோம். -நன்றி. எங்களுக்கு விருப்பமில்லை. 317 00:20:01,244 --> 00:20:02,245 அம்மா. 318 00:20:08,376 --> 00:20:10,545 நான் பிரிஸில்லாவை இறக்கிவிட்டேன், டோவிட்டை இறக்கிவிட்டேன், 319 00:20:10,629 --> 00:20:13,131 ஒரு மூட்டை துணி துவைத்தேன், ஓவனில் ஒரு ப்ரிஸ்கெட் உள்ளது, 320 00:20:13,215 --> 00:20:14,883 3:00 மணி வரை எனக்கு வேலை இல்லை. நான் என்ன செய்வது? 321 00:20:14,966 --> 00:20:18,470 சரி, என் மகளுக்கு அவளுடைய திருமண இரவு பற்றி கேட்க விரும்பவில்லை. 322 00:20:18,553 --> 00:20:19,971 அவளுக்கு லேஸ் வைத்த நைட்டி வேண்டுமாம். 323 00:20:20,055 --> 00:20:21,598 ஷீராவிடம் இருந்த அதே ஆடை. 324 00:20:21,681 --> 00:20:22,682 ஓய், நிறுத்து… 325 00:20:23,433 --> 00:20:25,852 நான் உன் அம்மா தான். வாழ்வாதாரத்திற்காக இதைச் செய்கிறேன். 326 00:20:25,936 --> 00:20:28,480 சில நெக்லிஜிகளை விசேஷமாக ஆர்டர் செய்துள்ளேன். மொய்ஷீக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். 327 00:20:28,730 --> 00:20:30,357 -கோல்டே மற்றும் நயோமிக்கு உதவ முடியுமா? -நிச்சயம். 328 00:20:33,026 --> 00:20:34,110 ஹலோ. 329 00:20:34,194 --> 00:20:35,820 இனஸ், இப்போது இங்கு வேலை செய்கிறாயா? 330 00:20:36,446 --> 00:20:38,156 ஹானா சொல்லும் இடத்திற்கு நான் செல்வேன். 331 00:20:38,240 --> 00:20:41,493 அவள் தன்னடக்கத்தோடு பேசுகிறாள். மக்கள் வந்து அவளிடம் வேண்டுகிறார்கள். 332 00:20:42,661 --> 00:20:45,413 சரி, நயோமியின் மார்புகள் வளரத் தொடங்கிவிட்டன. 333 00:20:45,497 --> 00:20:47,123 -அவளுக்கு உதவி வேண்டும். -நிறுத்துங்கள்! 334 00:20:47,207 --> 00:20:48,500 இது தான் உன் முதல் உள்ளாடையா? 335 00:20:50,085 --> 00:20:52,879 முதன்முதலில், என் மார்பகங்கள் வளர்ந்த போது நானும் அதை வெறுத்தேன். 336 00:20:53,421 --> 00:20:55,131 வேறு ஒருவரின் உடல் போல தோன்றியது. 337 00:20:55,674 --> 00:21:00,303 ஆனால், உனக்குப் பழகிவிடும், நான் உனக்கு ஏற்ற ஒன்றைக் கொண்டு வருகிறேன். 338 00:21:00,387 --> 00:21:01,388 சரியா? 339 00:21:01,930 --> 00:21:04,641 -சரி. -கிலா சீக்வின்ஸ் அணிந்திருப்பதாக சொன்னாள். 340 00:21:04,724 --> 00:21:06,268 இனஸ், கல்யாணத்திற்கு என்ன அணியப் போகிறீர்கள்? 341 00:21:08,270 --> 00:21:09,646 வருகிறீர்கள் தானே? 342 00:21:11,064 --> 00:21:12,148 அது வந்து... 343 00:21:12,774 --> 00:21:14,025 நிச்சயமாக அவள் வருவாள். 344 00:21:39,426 --> 00:21:41,845 என்ன நடக்கிறது? நீ இன்று என்னுடன் நடனமாடப் போவதில்லையா? 345 00:21:41,928 --> 00:21:45,932 ஏன்? இன்றிரவு உன்னுடன் நடனமாட விரும்புகிறேன்! 346 00:21:46,016 --> 00:21:47,851 -சரி. -வா, இது ஜாலியாக இருக்கப் போகிறது. 347 00:21:58,737 --> 00:21:59,738 வாருங்கள்! 348 00:22:25,722 --> 00:22:27,724 நீ இப்போது உண்மையான ஷனோவிட்ஸாகி விட்டாய். 349 00:22:40,237 --> 00:22:41,238 அம்மா? 350 00:22:43,198 --> 00:22:44,741 தூங்குவது போல நீ நடிக்கிறாய். 351 00:22:44,824 --> 00:22:47,619 நீ தூங்கவில்லையா? அம்மாவை ஏமாற்றப் பார்க்கிறாயா? 352 00:22:47,702 --> 00:22:48,745 ஆம். 353 00:22:49,663 --> 00:22:52,207 சரி, அது வேலை செய்தது. இன்றிரவு சந்தோஷமாக இருந்தாயா? 354 00:22:53,083 --> 00:22:55,835 எல்கியுடனும் மற்ற பெண்களுடனும் நடனமாடி... 355 00:22:56,419 --> 00:22:59,548 அப்புறம் பெரிய கப் சண்டே சாப்பிட்டது? 356 00:23:00,131 --> 00:23:02,050 நீ எத்தனை செர்ரி பழங்களை சாப்பிட்டாய் என நான் பார்த்தேன். 357 00:23:02,133 --> 00:23:05,345 -நான் அவ்வளவு சாப்பிடவில்லை. நான் சாப்பிடவில்லை. -நீ நிறைய சாப்பிட்டாய். 358 00:23:06,596 --> 00:23:08,390 நீ சந்தோஷமாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 359 00:23:09,641 --> 00:23:11,226 எவ்வளவு நாட்கள் இங்கு தங்கப் போகிறோம்? 360 00:23:12,352 --> 00:23:13,603 என்ன சொல்கிறாய்? 361 00:23:14,437 --> 00:23:16,398 எவ்வளவு நாட்கள் அவர்களோடு இங்கு தங்கப் போகிறோம்? 362 00:23:17,190 --> 00:23:18,608 ஓ, அன்பே. 363 00:23:21,027 --> 00:23:23,071 நான் அவருடைய கடையில் வேலை செய்ய வேண்டும் என ஹானா விரும்புகிறார். 364 00:23:25,699 --> 00:23:29,202 பெண்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு என்றார். அதோடு எனக்கும் இது பிடிச்சிருக்கு. 365 00:23:31,246 --> 00:23:36,209 நான் இந்த ஆயா வேலையை நிறுத்தி விட்டு, ஒருநாள் அவளுடைய கூட்டாளியாக மாறப் போகிறேன். 366 00:23:37,544 --> 00:23:38,962 இப்போது இதுதான் நம் குடும்பம். 367 00:23:41,548 --> 00:23:42,966 இப்போது இதுதான் நம் வாழ்க்கை. 368 00:23:46,177 --> 00:23:51,057 மற்றும் அது நன்றாக இருக்கும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 369 00:23:54,019 --> 00:23:56,229 -சரியா? -சரி. 370 00:23:56,313 --> 00:23:57,689 -சரி. -சரி. 371 00:23:57,772 --> 00:24:00,901 -சரி. சரியா? சரியா? -சரி. சரி சரி. 372 00:24:01,401 --> 00:24:02,485 சரி, போ. தூங்கும் நேரமாகிவிட்டது. 373 00:24:02,569 --> 00:24:06,781 நீ சொன்னது சரிதான். யாருக்குத் தெரியும்? மின்னல் வேகத்தில் விற்கிறது. 374 00:24:06,865 --> 00:24:08,825 அது தான் இப்போது பிரபலம் என உங்களிடம் சொன்னேனே. 375 00:24:09,159 --> 00:24:11,828 எனக்காக இல்லை, ஆனால் எதுவானாலும் வீட்டிற்கு நல்லது என்றாலே போதும். 376 00:24:11,912 --> 00:24:14,039 -ஹலோ? -ஓ, லிபா. 377 00:24:14,623 --> 00:24:17,167 படியில் பெட்டிகள் இருக்கின்றன. அதை உள்ளே எடுத்து வரவா? 378 00:24:17,250 --> 00:24:19,419 இனஸ், லிபாவை ஞாபகமிருக்கிறதா? என் சகோதரனின் மனைவி. 379 00:24:19,502 --> 00:24:20,503 கண்டிப்பாக. 380 00:24:20,587 --> 00:24:21,922 -ஹலோ. -உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 381 00:24:22,005 --> 00:24:23,423 இன்று இனஸ் உனக்கு பயிற்சி தருவாள். 382 00:24:23,506 --> 00:24:24,716 எதற்கு? 383 00:24:25,133 --> 00:24:28,470 லிபாவின் கடைக்குட்டி பள்ளிக்கு சென்றுவிட்டதால் என்னிடம் முழுநேர ஆளாக வேலைக்கு சேர்கிறாள். 384 00:24:29,304 --> 00:24:30,513 இங்கு வேலை பார்க்கவா? 385 00:24:30,597 --> 00:24:31,848 ஆமாம். 386 00:24:33,683 --> 00:24:34,768 நாங்கள் இருவருமா? 387 00:24:36,478 --> 00:24:40,774 வந்து, இது சின்ன கடை. ஒரு ஆள் வேலை பார்த்தாலே போதும். 388 00:24:44,486 --> 00:24:45,612 நான் பெட்டிகளை எடுத்து வருகிறேன். 389 00:24:49,532 --> 00:24:52,994 லிபாவின் குடும்ப சூழ்நிலை சரியில்லை, அவளுக்கு இந்த வேலை வேண்டும். 390 00:24:53,078 --> 00:24:56,373 இது எளிதாகப் பொருந்திவிடும். அவள் எங்கள் சமூகத்தின் அங்கம். 391 00:24:59,167 --> 00:25:02,712 கவலைப்படாதே. எல்கி கூடிய சீக்கிரமே நல்ல செய்தி சொல்வாள். 392 00:25:03,296 --> 00:25:07,175 குழந்தை பராமரிக்க ஆள் தேவைப்படும். இன்னும் பல வருடங்களுக்கு எங்களோடு வேலை பார்ப்பாய். 393 00:25:13,473 --> 00:25:16,309 வா, லிபா. இனஸ் உனக்குப் பதிவேடுகளைக் காண்பிப்பாள். 394 00:25:32,367 --> 00:25:35,203 விற்பனையை ஆரம்பிக்க, இந்தப் பொத்தானை அழுத்தி 395 00:25:36,746 --> 00:25:39,666 இந்தச் சாவியை திருப்பு, இந்த அலமாரி திறக்கும். 396 00:25:48,091 --> 00:25:49,092 உன்னை மூடிக்கொள். 397 00:25:52,888 --> 00:25:53,972 நல்லது, இது நன்றாகப் பொருந்துகிறது. 398 00:25:58,476 --> 00:25:59,477 என் செல்லமே. 399 00:25:59,561 --> 00:26:00,562 தோழியே. 400 00:26:01,730 --> 00:26:03,398 ராஸ்பெர்ரி கொண்டுவந்திருக்கிறாய் தானே. 401 00:26:03,481 --> 00:26:04,941 அது இல்லாமல் பெசாக் நடக்காது. 402 00:26:05,442 --> 00:26:06,276 கண்டிப்பாக. 403 00:26:06,359 --> 00:26:09,738 பிரிஸில்லா, நீ நன்றாக வளர்ந்துவிட்டாய். உனக்குத் திருமணமாகிவிட்டதா? 404 00:26:09,821 --> 00:26:12,115 -இனஸ், அவளுக்கு மணமாகிவிட்டதா? -சீக்கிரமே நடக்கும். 405 00:26:12,198 --> 00:26:14,200 என் வீட்டிற்கு ஹாமெட்ஸ் கொண்டு வரவில்லையே. 406 00:26:14,284 --> 00:26:15,285 இல்லை. 407 00:26:15,368 --> 00:26:18,204 உள்ளே வா, உள்ளே வா. நாம்... 408 00:26:19,414 --> 00:26:22,208 பிரிஸில்லா உனக்குப் பிடித்த டீ போட்டுத் தரவா? 409 00:26:22,292 --> 00:26:23,418 நாங்கள் ரொம்ப நேரம் இருக்க மாட்டோம். 410 00:26:23,501 --> 00:26:26,796 முட்டாள். நான் டீ போடுகிறேன், இருவரும் என்னுடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான். 411 00:26:31,551 --> 00:26:35,430 சரி, சொல்லுங்கள், டோவிட் எப்படி இருக்கிறான்? அவன் ஞாபகமாகவே இருந்தது. 412 00:26:36,056 --> 00:26:39,601 வந்து, அவன் கண்ணாடிக் கடையை விற்க வேண்டியதாயிற்று. 413 00:26:39,684 --> 00:26:43,521 -அவனால் குத்தகை பணத்தைக் கொடுக்க முடியவில்லை. -ஹானா, நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 414 00:26:43,605 --> 00:26:45,440 எதற்கு? இது எல்லா இடத்திலுமே நடக்கிற விஷயம் தான். 415 00:26:45,523 --> 00:26:49,319 டோவிட் விற்பதை விட, ஆன்லைனில் கம்மியாகக் கிடைக்கிறது. 416 00:26:49,903 --> 00:26:51,279 இது எனக்கும் ஆபத்துதான், தெரியுமா? 417 00:26:51,363 --> 00:26:55,158 என் வாடிக்கையாளர்கள் எல்லாருமே உள்ளாடைகளை அமேசானில் வாங்குகின்றனர். 418 00:26:56,368 --> 00:26:59,996 கண்டிப்பாக உனக்கும் இதே பிரச்சினை இருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் உனக்கும் பிரச்சினையாக இருக்கா? 419 00:27:02,874 --> 00:27:04,918 இது வித்தியாசமாக இருக்கிறது, 420 00:27:06,253 --> 00:27:08,880 அது வந்து... 421 00:27:11,591 --> 00:27:13,385 இது எளிதில்லை. 422 00:27:14,761 --> 00:27:17,430 தொழிலதிபரின் வாழ்வு எளிதானதில்லை, சரிதானே? 423 00:27:20,058 --> 00:27:21,935 இனஸ், அந்தப் பாத்திரத்தை ஊற வைக்கிறாயா? 424 00:27:22,018 --> 00:27:24,771 போன தடவை கழுவிய போது அடியில் கொஞ்சம் கழுவாமல் விட்டுவிட்டாய். 425 00:27:27,190 --> 00:27:29,734 சமைக்கும் இடத்திற்கு அடியில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வைக்கும்படி ரூவனிடம் சொல்கிறேன். 426 00:27:29,818 --> 00:27:31,945 நாம் காலை உணவை முடிக்கும் போது, 427 00:27:32,028 --> 00:27:33,530 மதிய உணவிற்கான நேரம் வந்துவிடுகிறது. 428 00:27:35,532 --> 00:27:36,533 நன்றி. 429 00:27:50,797 --> 00:27:52,507 இரண்டு வாரத்தில் வேலையை விட்டு நிற்கிறேன். 430 00:27:53,133 --> 00:27:54,134 பொறு, என்ன? 431 00:27:55,302 --> 00:27:56,303 ஏன்? 432 00:27:59,973 --> 00:28:00,974 நான்... 433 00:28:03,143 --> 00:28:04,269 நான் போக வேண்டும். 434 00:28:04,352 --> 00:28:07,147 இனஸ், நீ எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. நாம் இதை சரிசெய்து கொள்ளலாம். 435 00:28:07,230 --> 00:28:08,231 நான் போக வேண்டும். 436 00:28:11,526 --> 00:28:12,819 நீங்கள் செய்த எல்லாவற்றிற்குமே நன்றி. 437 00:29:03,203 --> 00:29:06,331 -அற்புதம். ரொம்ப அற்புதம். -அவர் அதைத் திறக்க... இது, சரியா? 438 00:29:06,414 --> 00:29:08,250 இனஸ்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 439 00:29:09,125 --> 00:29:12,504 உன்னிடம், என்னுடன் சேர்ந்து வேலை பார்க்கிறாயா, 440 00:29:12,587 --> 00:29:15,131 தொழிலை மீண்டும் ஆரம்பிக்கலாமா எனக் கேட்கலாம் என்று நினைத்தேன். 441 00:29:15,215 --> 00:29:16,591 ஓ, இல்லை. முடியாது. 442 00:29:18,051 --> 00:29:21,346 ஆனால் நிலைமை சரியில்லை என எனக்குத் தெரியும். 443 00:29:22,764 --> 00:29:23,765 எனவே... 444 00:29:24,849 --> 00:29:28,478 டோவிடிற்கும், இந்தக் குடும்பத்திற்கும் உதவியாக இதை வைத்துக்கொள்ளுங்கள். 445 00:29:29,437 --> 00:29:30,772 நான் இதை வாங்கமாட்டேன். 446 00:29:31,773 --> 00:29:34,484 இது ரொம்ப அதிகம். இனஸ், நீ என்ன செய்வாய்? நீ வைத்துக்கொள். 447 00:29:34,568 --> 00:29:36,361 இது என்னுடைய சிறு அன்பளிப்பு, ஹானா. 448 00:29:38,071 --> 00:29:39,656 சரி, இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 449 00:29:41,533 --> 00:29:44,244 நன்றி. இங்கு வந்ததற்கு நன்றி. 450 00:29:45,870 --> 00:29:48,582 நீ, நல்ல செய்தி சொல்லணும், சரியா? 451 00:29:52,085 --> 00:29:53,503 உன் நாளிதழ். அதை மறந்துவிட்டாய். 452 00:29:53,587 --> 00:29:55,171 இல்லை, அது உங்களுக்கு தான். வைத்துக்கொள்ளுங்கள். 453 00:30:02,637 --> 00:30:04,639 ஏன் அவரிடம் அதைக் காட்டினாய்? 454 00:30:04,723 --> 00:30:07,183 நீங்கள் ஒரு வெற்றியாளர் என அவர் தெரிந்துகொள்ள வேண்டும். 455 00:30:07,267 --> 00:30:09,185 ஏன் அவருக்கு காசோலை கொடுத்தீர்கள்? 456 00:30:09,269 --> 00:30:11,187 -நீ அவரை ரொம்ப வெறுக்கிறாய். -நான் வெறுக்கவில்லை... 457 00:30:11,271 --> 00:30:13,899 கேள், இந்த நாட்டில் நான் தனியாக இருந்தபோது ஹானா தான் எனக்கு ஒரு குடும்பத்தைக் கொடுத்தார், 458 00:30:13,982 --> 00:30:16,234 -அவர்தான் தொழிலைக் கற்றுக்கொடுத்தார்... -அவர் ஒன்றும் உங்களைக் காப்பாற்றவில்லை. 459 00:30:17,193 --> 00:30:18,486 ஒவ்வொரு ஆண்டும் உணவு கொண்டு வருகிறீர்கள், 460 00:30:18,570 --> 00:30:20,322 உங்களை என்றைக்காவது மேஜையில் உட்காரச் சொல்லி இருக்கிறாரா? 461 00:30:22,324 --> 00:30:24,868 எப்போதுமே, நீங்கள் அவருக்குக் கீழே என்று தான் நினைக்கிறீர்கள். 462 00:30:24,951 --> 00:30:27,412 அவரைத் தூக்கி வைத்துக்கொள்கிறீர்கள். 463 00:30:27,495 --> 00:30:29,497 ஏன் பெலிஸை விட்டு வந்தீர்கள்? 464 00:30:30,332 --> 00:30:31,625 ஏன் உங்கள் குழந்தையை விட்டு வந்தீர்கள், 465 00:30:31,708 --> 00:30:33,835 இங்கு வந்து வேலைக்காரியாக இருப்பதற்காகவா? 466 00:30:37,130 --> 00:30:38,340 ஏன் விட்டு வந்தீர்கள்? 467 00:30:39,299 --> 00:30:40,342 அம்மா வரச் சொன்னார். 468 00:30:40,425 --> 00:30:41,718 ஆனால், நீங்களும் தான் விரும்பினீர்கள், 469 00:30:41,801 --> 00:30:44,054 -இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்கள். -எனக்குப் பயமாக இருந்தது அதான் வந்தேன். 470 00:30:44,930 --> 00:30:46,932 எனக்கு அம்மாவாக இருக்கத் தெரியவில்லை, மேலும்... 471 00:30:47,891 --> 00:30:49,226 நான் மறுபடியும் தொடங்க வேண்டியிருந்தது. 472 00:30:49,309 --> 00:30:51,144 எனக்குத் தெரியும், அம்மா. 473 00:30:51,853 --> 00:30:53,855 நான் இங்கு வந்து உங்களைச் சந்தித்தபோதே எல்லாம் புரிந்துவிட்டது. 474 00:30:55,690 --> 00:30:56,900 அதனால் தான் இப்போது எனக்கு கோபம் வரவில்லை. 475 00:30:56,983 --> 00:30:58,193 என் கோபமே, நீங்கள் இங்கு வந்து 476 00:30:58,276 --> 00:31:01,029 உங்கள் திறமைக்கேற்ற வாழ்க்கையை நீங்கள் உருவாக்காததால் தான். 477 00:31:04,658 --> 00:31:07,661 இது என்னவென்றாலும்... அதாவது, தவறோ அல்லது பிராயச்சித்தமோ. 478 00:31:08,161 --> 00:31:09,079 நிறுத்துங்கள். 479 00:31:11,998 --> 00:31:13,458 ஏதாவது செய்யுங்கள். 480 00:31:18,004 --> 00:31:19,005 அம்மா. 481 00:31:20,632 --> 00:31:22,926 இந்தப் பெண்களெல்லாம் உங்கள் கடைக்கு வருகின்றனர், 482 00:31:23,009 --> 00:31:25,804 அவர்கள் தங்களைச் சிறப்பாக உணரும்படி நீங்கள் செய்கிறீர்கள். 483 00:31:25,887 --> 00:31:29,891 அவர்களின் தன்னம்பிக்கையை குறைய விடமாட்டீர்கள். அதை ஏன் உங்களுக்கு நீங்கள் செய்துகொள்ளவில்லை? 484 00:32:11,266 --> 00:32:16,813 விடுமுறைக்காக மூடப்படுகிறது 485 00:32:49,512 --> 00:32:51,264 அந்த வீட்டுமனைத் தரகரின் பெயரென்ன? 486 00:32:52,474 --> 00:32:56,686 -அடக் கடவுளே. -பிரிஸில்லா, நான் அவரிடம் பேச வேண்டும். 487 00:32:56,770 --> 00:32:58,521 இல்லை, நீங்கள் இதைச் செய்வீர்கள். நிச்சயம் செய்வீர்கள். 488 00:32:59,147 --> 00:33:00,148 நாம் எதில் நிறுத்தினோம்? 489 00:33:00,232 --> 00:33:03,193 அம்மா, உபாதைகள் பகுதிக்கு சென்றுவிடுவோமா? எனக்கு ரொம்ப பசிக்கிறது. 490 00:33:04,736 --> 00:33:05,946 சரி. 491 00:33:08,031 --> 00:33:09,032 அட. 492 00:33:10,450 --> 00:33:11,451 தவளைகள். 493 00:33:13,036 --> 00:33:14,037 பேன்கள். 494 00:33:14,120 --> 00:33:17,123 ஆலங்கட்டி மழை, வெட்டுக்கிளிகள், முதல் குழந்தையைக் கொல்லுதல். 495 00:33:20,418 --> 00:33:21,419 என்ன? 496 00:33:21,503 --> 00:33:24,047 சரி, எல்லா முக்கிய பெயர்களையும் சொல்லிவிட்டோம். 497 00:33:24,548 --> 00:33:25,549 சாப்பிடலாம். 498 00:33:48,029 --> 00:33:49,906 இனஸ் மூன்று முழுநேர வேலையாட்களைப் பணியமர்த்தி உள்ளார். 499 00:33:49,990 --> 00:33:51,658 அவரே தன் சொந்த உள்ளாடைகளை வடிவமைக்கிறார். 500 00:33:51,741 --> 00:33:54,786 ஐரிஸ் உள்ளாடைகள் சிறந்த உள்ளாடை தயாரிப்பாளர் 501 00:33:54,869 --> 00:33:56,246 அவரும் ஹானாவும் இன்னும் நண்பர்களாக உள்ளனர். 502 00:33:56,329 --> 00:33:57,914 பரிசைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைத் தொடர்கின்றனர். 503 00:34:54,804 --> 00:34:55,889 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிகைத் தொடரைத் தழுவியது 504 00:34:55,972 --> 00:34:57,974 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்