1 00:00:01,086 --> 00:00:02,879 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:02,963 --> 00:00:04,923 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:10,113 --> 00:01:12,949 இப்போது ஒளிபரப்பாவது: “ஒன்பதாவது அழைப்பாளர்” 4 00:01:13,033 --> 00:01:17,037 உண்மை கதையை தழுவியது 5 00:01:31,134 --> 00:01:32,344 ஆஸ்டின் ஹூஸ்டன் 6 00:01:36,014 --> 00:01:37,515 இது கேக்யூஎம்யூ. 7 00:01:37,599 --> 00:01:40,560 நான் தான் வெய்ன் தி பிரைன், நீங்கள் ஒன்பதாவது அழைப்பாளர். 8 00:01:40,644 --> 00:01:42,771 -யார் பேசுவது? -அடக் கடவுளே. என்ன? 9 00:01:42,854 --> 00:01:45,023 -அடக் கடவுளே. ஆமாம். -என்ன? நான் ஒன்பதாவது அழைப்பாளரா? 10 00:01:45,106 --> 00:01:46,650 ஆமாம். அப்படித்தான் சொன்னேன், பெண்ணே. 11 00:01:46,733 --> 00:01:49,653 உண்மையாகவா? அடக் கடவுளே, கடவுளே! ஓ, கடவுளே! உண்மையாகவா? 12 00:01:49,736 --> 00:01:50,737 ஓ, கடவுளே, உண்மை தான். 13 00:01:50,820 --> 00:01:52,656 வாழ்த்துக்கள், பெண்ணே. 14 00:01:53,156 --> 00:01:56,493 சச்சினி 15 00:01:56,576 --> 00:02:00,121 ஹாய், நான் தான் ஒன்பதாவது அழைப்பாளர். போட்டியில் ஒரு கார் வென்றேன். 16 00:02:00,205 --> 00:02:03,208 சிறப்பு. எங்களது எல்லா ஒன்பதாவது அழைப்பாளர்களும் அங்கே ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறார்கள். 17 00:02:03,291 --> 00:02:05,418 ஓ, இல்லை. என்னை... மன்னிக்கவும், தெளிவாக சொல்லவில்லை. 18 00:02:05,502 --> 00:02:08,712 நான்தான் ஒன்பதாவது அழைப்பாளர். அந்த காரை வென்றேன். 19 00:02:09,548 --> 00:02:10,924 இல்லை, இன்னும் வெல்லவில்லை. 20 00:02:12,926 --> 00:02:15,345 அந்த காரின் மீது உங்கள் உதடுகளை குவித்து முத்தமிடுவது போல செய்யுங்கள் 21 00:02:15,428 --> 00:02:20,308 ஏனென்றால் நாம் இப்போது மாஸ் மோட்டார்ஸின் காரை முத்தமிடு போட்டியை நேரலையில் காட்டுகிறோம்! 22 00:02:20,392 --> 00:02:21,601 நீதிபதி 23 00:02:22,852 --> 00:02:24,396 நன்றாக உற்சாகப்படுத்துங்கள்! 24 00:02:24,479 --> 00:02:29,943 நான் உங்கள், வெய்ன் தி பிரைன், கேக்யூஎம்யூ ஆஸ்டினில் நேரலையில் இருக்கிறேன். 25 00:02:30,026 --> 00:02:33,488 பாருங்கள், போட்டி விதிகள் சுலபமானவை. 26 00:02:33,572 --> 00:02:37,701 யார் அதிக நேரம் காரை முத்தமிடுகிறார்களோ அவர்களுக்குத்தான் கார் கிடைக்கும். 27 00:02:37,784 --> 00:02:41,413 எந்த காரணத்திற்காகவும், காரில் இருந்து உங்கள் வாயை எடுக்கக் கூடாது. 28 00:02:41,496 --> 00:02:44,124 ஏமாற்றக்கூடாது, ஏனென்றால் இங்கே இருக்கும் திறமையான நீதிபதிகள் 29 00:02:44,207 --> 00:02:47,127 உங்களைக் கழுகு போல கவனிப்பார்கள். அவரைப் பாருங்கள். சீரியஸாக இருக்கிறார். 30 00:02:47,210 --> 00:02:51,047 சட்டப்படி, ஒவ்வொரு மணி நேரமும், உங்களுக்கு பத்து நிமிட இடைவேளை கிடைக்கும். 31 00:02:51,131 --> 00:02:53,216 அது ஜெனிவா விதிமுறைகளில் இருக்கிறது. 32 00:02:53,300 --> 00:02:54,509 இடைவேளையின் முடிவில், 33 00:02:54,593 --> 00:02:57,846 “சிக்ஸ்பென்ஸ் நன் தி ரிச்சர்” இசைக்குழுவின் “கிஸ் மீ” பாடல் இங்கே ஒலிக்கும். 34 00:02:57,929 --> 00:02:59,097 உங்களுக்கு அந்த பாடல் நினைவிருக்கா? 35 00:02:59,180 --> 00:03:00,807 அந்த பாடல் முடிவதற்குள், 36 00:03:00,891 --> 00:03:04,603 உங்கள் உதடுகள் மறுபடியும் காரில் இல்லை என்றால், அப்போது நீங்கள்... 37 00:03:07,856 --> 00:03:08,982 இங்கிருந்து வெளியேற வேண்டும். 38 00:03:09,065 --> 00:03:10,734 அது தான் உங்களது முடிவு. 39 00:03:10,817 --> 00:03:11,818 விதிகள் பற்றி சொன்னது போதும். 40 00:03:11,902 --> 00:03:14,279 இப்போது மாஸ் மோட்டார்ஸ், ஆஸ்டினில் மகிழ்ச்சியாக கொண்டாடலாம். 41 00:03:15,864 --> 00:03:17,532 சரி, நண்பர்களே. ஆரம்பிக்கலாம். 42 00:03:20,285 --> 00:03:23,538 முதல் மணி நேரம் 43 00:03:35,508 --> 00:03:37,510 சரி. 30 நிமிடங்கள் ஆகிவிட்டன. 44 00:03:37,594 --> 00:03:38,720 மக்கள் அசௌகரியமாக இருக்கிறார்கள். 45 00:03:39,638 --> 00:03:41,431 அதற்குள்ளாக. ஏன் அசௌகரியமாக இருக்கிறீர்கள் என புரியவில்லை. 46 00:03:41,514 --> 00:03:43,600 இந்த காருக்கு உணவு கூட வாங்கித் தர தேவையில்லையே. 47 00:03:43,683 --> 00:03:45,310 இலவசமாக அதை முத்தமிட்டால் போதும். 48 00:03:46,436 --> 00:03:49,064 விலகுகிறாயா? நண்பா, முடித்துவிட்டாயா? 49 00:03:49,564 --> 00:03:50,565 யாரும் இப்போது விலகவில்லை. 50 00:03:50,649 --> 00:03:54,736 பத்து பேர் இருக்கிறார்கள். பத்து பேர்கள், காரை முத்தமிடுகிறார்கள். 51 00:04:26,601 --> 00:04:28,478 ஒரு மணி நேரம் முடிந்தது! 52 00:04:28,562 --> 00:04:31,398 இடைவேளை. கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். 53 00:04:33,483 --> 00:04:35,527 சரி. உங்களைப் பார்த்ததே எனக்கு சோர்வாக இருக்கிறது. 54 00:04:36,027 --> 00:04:37,279 நான் எந்த வேலையும் செய்யவில்லை. 55 00:04:40,282 --> 00:04:41,324 நீ என்ன செய்ய வேண்டுமாம்? 56 00:04:41,408 --> 00:04:43,159 நீ வென்றுவிட்டாய் என நினைத்தேன். நீதானே ஒன்பதாவது அழைப்பாளர். 57 00:04:43,243 --> 00:04:46,705 ஆமாம், இல்லை, எல்லோரும் ஒன்பதாவது அழைப்பாளர்கள் தான். நான்... அடக் கடவுளே, பெரிய முட்டாள். 58 00:04:46,788 --> 00:04:48,623 ஹே, நீ முட்டாள் இல்லை. 59 00:04:48,707 --> 00:04:50,792 இரு, நீ எவ்வளவு நேரம் அதை முத்தமிட வேண்டும்? 60 00:04:50,875 --> 00:04:52,419 எனக்குத் தெரியாது. 61 00:04:53,336 --> 00:04:55,297 எல்லோரும் இவ்வளவு நேரம் இருந்தார்கள் என்று நம்ப முடியவில்லை. 62 00:04:55,380 --> 00:04:57,215 என் வாழ்க்கையின் மிக நீண்ட மணி நேரம் அது தான். 63 00:04:58,091 --> 00:04:59,676 அடச்சே. இரு, ஒரு நொடி. 64 00:05:00,302 --> 00:05:02,053 தாத்தி ஃபேஸ்டைம் வீடியோ 65 00:05:02,888 --> 00:05:03,889 தாத்தி அழைக்கிறார். 66 00:05:03,972 --> 00:05:07,559 உன் அப்பாவா? அவர் எதற்காக அழைக்கிறார்? நீங்கள் பேசுவதில்லையே. 67 00:05:07,642 --> 00:05:09,644 நான்... அழைப்பை எடுக்க வேண்டுமா? 68 00:05:09,728 --> 00:05:11,062 கண்டிப்பாக? 69 00:05:11,146 --> 00:05:12,522 சரி. என்ன தெரியுமா? இந்த அழைப்பை எடுத்து, 70 00:05:12,606 --> 00:05:14,774 முதல் முறையாக நான் சரியான ஒன்றை செய்கிறேன் என அவரிடம் சொல்கிறேன். 71 00:05:14,858 --> 00:05:16,693 -ஆனால், அது உண்மை இல்லை. -சரி. 72 00:05:17,152 --> 00:05:18,236 சரி. நான் திரும்ப அழைக்கிறேன். 73 00:05:18,320 --> 00:05:20,780 -கிளம்புகிறேன். சரி, பை. -சரி. சரி, வாழ்த்துக்கள். 74 00:05:21,531 --> 00:05:22,866 தாத்தி, ஹலோ? 75 00:05:24,868 --> 00:05:26,161 ஹலோ... தாத்தி? 76 00:05:27,037 --> 00:05:29,122 சச்சினி, என்னை அழைத்தாயா? 77 00:05:29,205 --> 00:05:30,540 இல்லை, தாத்தி, நீங்கள் தான் அழைத்தீர்கள். 78 00:05:31,666 --> 00:05:34,377 இல்லவே இல்லை. நான் உன்னை அழைப்பதில்லை. 79 00:05:34,878 --> 00:05:36,713 சத்தமாக இருக்கிறது. எங்கே இருக்கிறாய்? 80 00:05:36,796 --> 00:05:38,757 நான், காரை-முத்தமிடும் ஒரு போட்டியில் இருக்கிறேன். 81 00:05:40,342 --> 00:05:41,968 இந்த முட்டாள்தனத்துக்கு உனக்கு நேரம் இருக்கிறது. 82 00:05:44,054 --> 00:05:45,388 தாத்தி ஃபேஸ்டைம் முடிந்தது 83 00:05:46,223 --> 00:05:47,557 அடக் கடவுளே. 84 00:05:54,064 --> 00:05:55,982 -ஹாய். -எப்படி நடந்தது? 85 00:05:56,942 --> 00:05:59,236 தெரியாமல் வந்த அழைப்பு. 86 00:05:59,861 --> 00:06:00,946 இப்போது புரிகிறது. 87 00:06:01,029 --> 00:06:02,781 சரி, உன் திட்டம் என்ன? 88 00:06:02,864 --> 00:06:05,075 முதலில் வெளியேறினாலும் பரவாயில்லை தானே? 89 00:06:05,158 --> 00:06:06,952 நீ இரண்டாவதாக வெளியேறுவாய். 90 00:06:08,119 --> 00:06:09,579 உன்னிடம் பதற்றத்திற்கான மாத்திரை இருக்கிறதா? 91 00:06:10,372 --> 00:06:11,373 இருக்கிறது. 92 00:06:11,456 --> 00:06:13,166 இன்று வேறு எங்கேயும் நான் போக வேண்டியதில்லை. 93 00:06:13,250 --> 00:06:14,501 சரி, உன்னை நேசிக்கிறேன். போகணும். பை. 94 00:06:14,834 --> 00:06:16,461 இங்கே டேவ் மறைத்துக் கொண்டு நிற்கிறான். 95 00:06:16,545 --> 00:06:18,380 நாம் மறைவில் இருக்கிறோம். 96 00:06:18,463 --> 00:06:20,632 சரி. இங்கே ஒரு பெண் இருக்கிறாள். அவள் நீக்கப்படப் போகிறாள். 97 00:06:20,715 --> 00:06:22,175 நீதிபதிகளே, அவளை கவனமாகப் பாருங்கள். 98 00:06:22,676 --> 00:06:24,594 மேலே இருக்கும் கடிகாரத்தை கவனி, டிஜே. 99 00:06:25,095 --> 00:06:26,930 நாம் எங்கே இருக்கிறோம்? பாடல் முடியப்போகிறது... 100 00:06:27,597 --> 00:06:29,391 அவள் செய்துவிட்டாளா? செய்துவிட்டாள். 101 00:06:29,474 --> 00:06:30,850 அவள் முயற்சிக்கிறாள். ஜெயித்து விட்டாள். 102 00:06:36,314 --> 00:06:41,027 ஸ்ரீலங்காவின் மிகச்சிறந்த நண்டு கறி. ரோட்டின் கடைசி வரைக்கும் வாசனை வருகிறது. 103 00:06:42,070 --> 00:06:44,614 ஹஷான், இதை சாப்பிட்டு பாருங்கள். 104 00:06:46,533 --> 00:06:49,911 -ஒவ்வொரு முறையும் நன்றாக இருக்கிறது. -சுவையாக இருக்கிறதா? 105 00:06:49,995 --> 00:06:51,746 இது ஒரு அற்புதம். 106 00:06:53,582 --> 00:06:54,791 என் செல்ல சச்சினி. 107 00:06:56,293 --> 00:06:58,920 எனக்கு ரொம்ப பசிக்கிறது, செல்லமே. நீ சாப்பிட்ட பிறகு படிக்கலாம், இல்லையா? 108 00:07:02,173 --> 00:07:04,217 பாரு, நீ பதட்டப்படுகிறாய். 109 00:07:05,051 --> 00:07:06,261 மகளே, தெரியுமா... 110 00:07:06,344 --> 00:07:09,055 தன் பல்கலைக்கழக தேர்வுகளுக்கு முன்னால் தாத்தி வாந்தி எடுப்பார். 111 00:07:09,556 --> 00:07:11,850 இரண்டு முறை தான் வாந்தி எடுத்தேன். 112 00:07:11,933 --> 00:07:17,022 மாலிக்குலர் மற்றும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி. பிறகு, ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன். 113 00:07:17,105 --> 00:07:18,106 என்ன செய்தீர்கள்? 114 00:07:19,107 --> 00:07:21,234 சரி. எழுந்து நில். 115 00:07:22,068 --> 00:07:23,069 சீக்கிரமாக. 116 00:07:25,614 --> 00:07:28,116 முடிந்த அளவு நீ பதட்டமாக இருக்க வேண்டும். 117 00:07:28,199 --> 00:07:29,200 சரியா? இப்படி வைத்துக்கொள். 118 00:07:29,284 --> 00:07:31,328 நீ பதட்டமாக இருக்கும் போது. பாரு. உன்னை... 119 00:07:31,411 --> 00:07:34,164 உள்ளே தோன்றும் உணர்ச்சியை உன் உடம்பிற்கு உணர்த்து. 120 00:07:37,083 --> 00:07:40,587 இப்போது எல்லாத்தையும் விடு. 121 00:07:46,343 --> 00:07:47,844 சரி. இது இடைவேளைக்கான நேரம். 122 00:07:48,553 --> 00:07:50,055 நீங்கள் இரண்டு மணி நேரமாக, அந்த காரை 123 00:07:50,138 --> 00:07:53,391 முத்தமிட்டு கொண்டிருக்கிறீர்கள், எந்த உறவிலும் நான் அவ்வளவு நேரம் நீடித்ததில்லை. 124 00:07:53,475 --> 00:07:54,559 நான் சொல்வது புரிகிறதா? 125 00:07:59,689 --> 00:08:02,359 சரி. நாம் போய் இங்கே இருப்பவர்களிடம் கொஞ்சம் பேசலாம். 126 00:08:02,442 --> 00:08:04,486 எப்படி இருக்கிறார்கள், எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள் என்று. 127 00:08:04,569 --> 00:08:08,823 ஹே, செல்லம். கேக்யூஎம்யூ நேரலையில் இருக்கிறாய். இன்று உன்னுடைய கார்-முத்தமிடுதல் எப்படி போகிறது? 128 00:08:08,907 --> 00:08:11,868 என் மகனை பார்த்துக்கொள்ள என் முன்னாள் கணவர் இங்கே வரவேண்டும், ஆனால்... 129 00:08:11,952 --> 00:08:13,203 பேட்டரி குறைவு 20% பேட்டரி மீதம் 130 00:08:13,954 --> 00:08:15,247 ஓ-ஹோ, சங்கடம். 131 00:08:15,330 --> 00:08:18,583 உனக்கு எப்படி? உன் அம்மா உனக்காக ஒரு கார் பரிசு பெற விரும்புவது நல்லது தானே? 132 00:08:19,167 --> 00:08:21,503 -எனக்கு போர் அடிக்கிறது. -இப்போதே போர் அடிக்கிறது. 133 00:08:21,586 --> 00:08:23,547 40வது மணி நேரம் வரை காத்திரு. நான் சொல்வது புரிகிறதா? 134 00:08:23,922 --> 00:08:26,174 சரி. அவன் மிகச் செல்லம். கடவுள் காப்பாற்றட்டும். 135 00:08:26,258 --> 00:08:27,259 -சரி. உங்கள் கருத்து என்ன? -ஹே. 136 00:08:27,342 --> 00:08:28,468 -எப்படி நடக்கிறது? -வெய்ன், எனக்கு ஆர்வமாக... 137 00:08:28,552 --> 00:08:29,594 சற்று அப்படியே இருங்கள். 138 00:08:29,678 --> 00:08:31,346 மன்னிக்கவும். அடக் கடவுளே. இங்கே வாருங்கள். 139 00:08:31,429 --> 00:08:34,808 தான் ஏற்கனவே காரை வென்றதாக நினைத்த அந்தப் பெண் இவர் தான். 140 00:08:34,890 --> 00:08:38,520 நான் உங்களிடம் கேட்க வேண்டும். முகத்தில் முட்டையோடு காரை முத்தமிடுவது கஷ்டமானதா? 141 00:08:40,397 --> 00:08:41,438 நான் சும்மா விளையாடுகிறேன். 142 00:08:41,523 --> 00:08:44,025 நான் வெய்ன் தி பிரைன், இங்கே என்னோடு இருப்பவர்... உங்கள் பெயர் என்ன? 143 00:08:44,401 --> 00:08:47,028 -சச்சினி. -சச்சினி. நல்ல பெயர். மகிழ்ச்சி. 144 00:08:47,112 --> 00:08:49,656 அது ஒரு ஜாலியான பெயர். மகிழ்ச்சி. “சச்சினி.” 145 00:08:49,739 --> 00:08:52,951 அதைக் கேட்கும்போது, “எனக்கு ஒரு... கிளாஸ் சச்சினி கொடுங்கள்” என்று கேட்கிறது. 146 00:08:53,034 --> 00:08:55,120 நான் சொல்வது புரிகிறதா? எங்கிருந்து வருகிறீர்கள்? 147 00:08:55,203 --> 00:08:56,204 ஆஸ்டின். 148 00:08:56,288 --> 00:08:58,164 ஆஸ்டின், சரி. உண்மையில் எங்கிருந்து வருகிறீர்கள்? 149 00:08:58,665 --> 00:09:00,542 -ஆஸ்டினுக்கு சற்று வெளியே இருந்து. -சரி. 150 00:09:00,625 --> 00:09:03,086 இன்று இந்த காரை வெல்ல, உங்களுக்கு எவ்வளவு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? 151 00:09:03,336 --> 00:09:06,047 நான் வெல்வேன் என்று நினைக்கவில்லை. நடுவில் இருக்க விரும்புகிறேன். 152 00:09:06,381 --> 00:09:07,632 இவர் நடுவில் இருக்க விரும்புகிறார். 153 00:09:07,716 --> 00:09:10,677 அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையுடன், உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைவது, உங்களுக்கு 154 00:09:10,760 --> 00:09:11,928 பிரச்சினையாக இருக்காது, சரி. 155 00:09:12,012 --> 00:09:15,098 எல்லோரும், ஷார்டனேக்காக கை தட்டுங்கள். ஆமாம். அவள் ஜாலியானவள். 156 00:09:15,181 --> 00:09:17,142 “தயவு செய்து, எனக்கு இன்னும் ஒரு பாட்டில் சச்சினி வேண்டும்.” 157 00:09:17,559 --> 00:09:20,437 இவன் இந்த விஷயத்தை ரொம்பவும் சங்கடம் ஆக்குகிறான். 158 00:09:20,520 --> 00:09:22,314 ...எனக்கு பிடித்த டிஜே. 159 00:09:22,397 --> 00:09:24,441 உங்கள் மகன் இங்கே இருப்பது கஷ்டமாக இருக்கும் தானே? 160 00:09:24,524 --> 00:09:25,567 அது மிக கொடுமை. 161 00:09:25,650 --> 00:09:27,277 அவனிடம் ஐபேடைக் கொடுத்து மூலையில் உட்கார வைத்து, 162 00:09:27,360 --> 00:09:29,738 “செல்லம், இன்னும் அதிக நேரம் ஆகாது” என்று சொல்லி இருக்கிறேன். 163 00:09:31,740 --> 00:09:34,075 இரு, இது உண்மையிலேயே 40 மணி நேரங்கள் நடக்குமா? 164 00:09:34,993 --> 00:09:36,036 எனக்கு தெரியவில்லை. 165 00:09:36,119 --> 00:09:38,997 நாளை மதியம் முடிந்து விட வேண்டும், ஏனென்றால் எனக்கு வேலை இருக்கிறது. 166 00:09:39,581 --> 00:09:43,043 முதல் முறையாக, வேலையில்லாத நபராக இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். 167 00:09:43,126 --> 00:09:45,003 உங்களுக்கு எப்படி, பெரியவரே? இதில் வெற்றி பெற வேண்டுமா, 168 00:09:45,086 --> 00:09:48,215 -அல்லது ”நடுவில் இருக்க வேண்டுமா?” -வெய்ன், சப்வே இதை வெல்ல விரும்புகிறான். 169 00:09:48,465 --> 00:09:50,300 இருந்தாலும், எனக்கு உங்கள் உதவி தேவை. 170 00:09:50,383 --> 00:09:51,635 ஹே. எல்லோரும் கேளுங்கள்! 171 00:09:52,260 --> 00:09:53,678 சரி, என் பெயர் ஜெர்ரி, 172 00:09:53,762 --> 00:09:56,139 -ஆனால், மக்கள் என்னை சப்வே என்பார்கள். -சப்வே! 173 00:09:56,598 --> 00:09:59,601 உங்கள் பலருக்கும் தெரிந்தது போல, 2009-ல் நான் டொயோட்டா கேம்ரி வென்றேன் 174 00:09:59,684 --> 00:10:01,811 மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏமாற்றப்பட்ட, 175 00:10:01,895 --> 00:10:04,439 மோசமான ஒரு செவ்வி கார் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். 176 00:10:05,315 --> 00:10:09,778 நமக்கு மரத்துப் போகாமல் இருப்பதற்காக நாம் எல்லோரும் நமது இடங்களை 177 00:10:09,861 --> 00:10:11,238 மாற்றிக் கொள்ளலாமா? 178 00:10:11,321 --> 00:10:13,990 சரி. நண்பர்களே, சப்வே ஒரு சிறிய யோசனை சொல்கிறார். 179 00:10:14,074 --> 00:10:17,994 நமக்குள் ஒருத்தர் இதை வெல்லப் போகிறார்கள். நீ ஏன் வெல்லக் கூடாது? 180 00:10:20,372 --> 00:10:21,373 அடச்சே. 181 00:10:21,456 --> 00:10:23,583 எல்லோரும் காருக்கு அருகில் வாருங்கள்! காரை முத்தமிடுங்கள்! 182 00:10:23,667 --> 00:10:27,671 காரின் மீது உதடுகள். காரின் மீது உதடுகள். 183 00:10:30,382 --> 00:10:33,552 மூன்றாவது மணி நேரம் 184 00:10:36,763 --> 00:10:40,433 நான்காவது மணி நேரம் 185 00:10:52,529 --> 00:10:55,782 நீங்கள் யாருமே இதை விடப் போவதில்லையா? அது சரி. 186 00:10:55,865 --> 00:10:56,700 ஐந்தாவது மணி நேரம் 187 00:10:56,783 --> 00:10:58,785 தங்களுக்குத் தேவையானதை பெற எதை வேண்டுமானாலும் செய்யத் தயார். 188 00:10:58,868 --> 00:11:01,580 என் முன்னாள் மனைவி போல, நான் சொல்வது புரிகிறதா? ஆமாம். 189 00:11:01,663 --> 00:11:03,582 என் இணையதளம் எப்படி இருக்கு, டிஜே? 190 00:11:03,665 --> 00:11:04,916 சில செய்திகளைப் பார்க்கலாம். 191 00:11:05,000 --> 00:11:06,793 ஆமாம். உங்களுக்கு சில ரசிகர்கள் உள்ளனர். 192 00:11:06,877 --> 00:11:10,005 ஸ்டார்கேர்ள்44 சொல்கிறாள்... இல்லை, என்னால் அதை படிக்க முடியாது. 193 00:11:13,383 --> 00:11:15,051 ஆறாவது மணி நேரம் 194 00:11:15,135 --> 00:11:16,428 நான் வீட்டிற்கு போக வேண்டும்! 195 00:11:16,511 --> 00:11:20,015 சரி, பீட்டி, இது எவ்வளவு போர் அடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆமாம், என்னை நம்பு. 196 00:11:20,098 --> 00:11:22,309 ஆனால், உனக்காக தான் இதைச் செய்கிறேன், சரியா? 197 00:11:22,893 --> 00:11:26,646 உனக்காக தான் இந்த கார். உனக்காக தான், என் செல்லமே. 198 00:12:03,808 --> 00:12:05,685 நான் வரமாட்டேன். 199 00:12:06,603 --> 00:12:09,564 ஏன் முட்டாள்தனமாக “வரமாட்டேன்” என்று சொல்கிறாய்? 200 00:12:12,275 --> 00:12:14,069 சச்சினி, நம் வீட்டை விற்று விட்டேன். 201 00:12:15,654 --> 00:12:21,201 எனக்குப் பிடித்த வேலையை விடுகிறேன். என் குடும்பம் மற்றும் நண்பர்களை இழக்கிறேன். 202 00:12:21,284 --> 00:12:23,536 மேலும், எதற்காக செய்கிறேன், தெரியுமா? 203 00:12:25,372 --> 00:12:26,831 உனக்காகத் தான் செய்கிறேன். 204 00:12:27,791 --> 00:12:31,294 நீ டெக்ஸாசில் நலமாக இருப்பாய். 205 00:12:31,836 --> 00:12:35,590 நீ... அமெரிக்க மாணவர்களோடு சேர்ந்து சிறப்பாக படிப்பாய். 206 00:12:36,466 --> 00:12:39,344 நீ வெற்றி பெறுவது எனக்கு மிகவும் முக்கியம். 207 00:12:51,398 --> 00:12:54,025 அது என்ன? இவர் தும்முகிறார். 208 00:12:55,151 --> 00:12:58,321 ஓ-ஹோ, நண்பா. அடடா. 209 00:12:58,405 --> 00:13:00,574 டேவ், நீங்கள் விலகிவிட்டீர்கள். வருந்துகிறேன், நண்பா. 210 00:13:00,657 --> 00:13:02,409 அடக் கடவுளே. இன்னொரு டேவ். 211 00:13:03,785 --> 00:13:05,495 நீங்கள் இடம் மாறினீர்களா? 212 00:13:06,079 --> 00:13:07,789 “பேரன்ட் ட்ராப் அஸ்” படம் போல ஏமாற்றப் பார்க்கிறீர்களா? 213 00:13:07,872 --> 00:13:09,708 பரவாயில்லை. இருவரும் வெளியே போங்கள். 214 00:13:09,791 --> 00:13:11,751 மீதி ஒன்பது பேர் இருக்கிறார்கள். 215 00:13:12,627 --> 00:13:15,213 இது அமெரிக்க பொறியியல். 216 00:13:15,297 --> 00:13:17,215 இங்கே நீ இதை கவனிக்கலாம். 217 00:13:17,299 --> 00:13:20,343 இது கிட்டத்தட்ட ஒரு மூலக்கூறு அமைப்பு போல காட்சியளிக்கிறது. 218 00:13:22,470 --> 00:13:25,640 அங்கே இருப்பது, வந்து... எதிர் கோணங்களைச் சேர்க்கிறது. 219 00:13:25,724 --> 00:13:28,435 அதுதான் பிளேட் கிர்டர். 220 00:13:47,996 --> 00:13:48,997 ஹஷான்? 221 00:13:49,956 --> 00:13:52,167 ஹஷான், நேர்காணல் எப்படி இருந்தது? 222 00:13:52,250 --> 00:13:53,418 எப்படி நடந்தது? 223 00:13:56,087 --> 00:13:58,673 ஒரு கெமிக்கல் எஞ்சினியராக இருந்தும் 224 00:13:58,757 --> 00:14:03,386 கிரேசி ஜெர்ரி'ஸ் எலக்ட்ரானிக்சில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. 225 00:14:03,470 --> 00:14:05,764 நமக்கு விரைவில் நல்லது நடக்கும். 226 00:14:05,847 --> 00:14:07,307 நாம் பொறுமையாக இருக்க வேண்டும். 227 00:14:08,225 --> 00:14:12,729 ஹஷான், நான் நண்டு கறி சமைத்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமே. 228 00:14:12,812 --> 00:14:14,022 இது முட்டாள்தனம். 229 00:14:16,191 --> 00:14:18,401 நம்மால் நண்டு கறி வாங்க முடியாது என்று உனக்கே தெரியும். 230 00:14:21,238 --> 00:14:22,822 உன்னுடைய ஜாமெட்ரி குவிஸ் என்ன ஆனது? 231 00:14:23,448 --> 00:14:26,409 எனக்கு பி-மைனஸ் கிடைத்தது. 232 00:14:27,869 --> 00:14:28,870 பி-மைனஸ்? 233 00:14:28,954 --> 00:14:33,124 அவர்கள் கணக்கு கற்பிக்கும் முறை குழப்பமானது. கடினமானது. 234 00:14:33,208 --> 00:14:34,709 அப்போது இன்னும் கடினமாக முயற்சி செய்! 235 00:14:34,793 --> 00:14:37,379 -உன் அலிகேட்டர் கிடைத்ததா? உன்னை நேசிக்கிறேன். -நல்ல செய்தி இருக்கு. 236 00:14:37,462 --> 00:14:39,339 -என் பாஸ் சொன்னார் நீங்கள் யாருமே... -சரி, பை. 237 00:14:39,422 --> 00:14:40,840 -...கை வீசிப் போகப் போவதில்லை. -லவ் யூ. 238 00:14:40,924 --> 00:14:44,678 பங்கு பெற்ற எல்லோரும் ஒரு கேக்யூஎம்யூ வெய்ன் தி பிரைன் பம்பர் ஸ்டிக்கர் பெறுவீர்கள். 239 00:14:44,761 --> 00:14:45,762 எட்டாவது மணி நேரம் 240 00:14:46,346 --> 00:14:47,430 நோட்டுப் புத்தகங்கள், பைகள் மற்றும் 241 00:14:47,514 --> 00:14:50,141 -பிறவற்றின் மீது நன்றாக இருக்கும். -ஹே, சச்சினி. 242 00:14:50,225 --> 00:14:52,727 -அடக் கடவுளே. ஹாய், செல்லம்! -ஹே. கடவுளே, நான் கவலையாக இருந்தேன். 243 00:14:52,811 --> 00:14:56,648 -மெசேஜுகளுக்கு நீ பதிலளிக்கவில்லை. -என் போன், இரண்டு மணி நேரத்திற்கு முன் ஆஃப் ஆனது. 244 00:14:57,482 --> 00:14:59,484 ஹே. இது உனக்கு. 245 00:14:59,985 --> 00:15:02,904 -இது அதிர்ஷ்ட பொருள். ஆமாம். -இது மிக அழகாக இருக்கு. 246 00:15:03,572 --> 00:15:05,699 செல்லம், உன்னைப் பார்! இங்கே இன்னும் இருக்கிறாய்! 247 00:15:05,782 --> 00:15:07,826 எனக்கே ஏன் இப்படி செய்கிறேன் என்று புரியவில்லை. 248 00:15:07,909 --> 00:15:09,452 கூட்டம் இருப்பது வெறுப்பாக இருக்கிறது, 249 00:15:09,536 --> 00:15:12,038 மேலும் ஒரு மிருகக்காட்சி சாலை மிருகம் போல என்னைப் பார்க்கிறார்கள். 250 00:15:12,122 --> 00:15:13,498 என் மீது பந்தயம் கட்டுவது போல தெரிகிறது. 251 00:15:13,582 --> 00:15:16,376 வீட்டு செருப்பு அணிந்த முட்டாள் நான் என்று என்னை கேலி செய்யக்கூடும். 252 00:15:16,459 --> 00:15:17,460 ஹே. 253 00:15:18,253 --> 00:15:20,630 பாரு, நீ இதை செய்ய வேண்டியதில்லை. 254 00:15:21,631 --> 00:15:23,091 நாம் இப்போதே வீட்டிற்கு திரும்பலாம். 255 00:15:23,675 --> 00:15:24,676 எனக்கு... 256 00:15:26,052 --> 00:15:29,973 ஆனால், வேண்டாம், வீட்டிற்கு போக வேண்டாம். எனக்கு... எதையும் விட்டு விலக ஆசை இல்லை. 257 00:15:30,682 --> 00:15:31,683 எனவே, இப்போது... 258 00:15:32,684 --> 00:15:33,852 இங்கேயே இருக்க விரும்புகிறாயா? 259 00:15:37,856 --> 00:15:38,899 சரி. 260 00:15:38,982 --> 00:15:40,358 சரி, நான் வீட்டிற்குப் போகிறேன். 261 00:15:40,942 --> 00:15:43,820 உனக்கு உணவு தயாரிக்கிறேன். உனக்கு தலையணை கொண்டு வருகிறேன். 262 00:15:44,154 --> 00:15:45,196 கடோரேட் கூட. 263 00:15:45,280 --> 00:15:48,700 -உனக்கு எந்த காலணிகள் வேண்டும்? -என் நைக்ஸ். 264 00:15:48,783 --> 00:15:52,913 -அப்படியா? ஹே, உன்னை நேசிக்கிறேன். -ஆமாம், நானும் தான். 265 00:15:52,996 --> 00:15:54,497 -நாம் இதை செய்து முடிப்போம். -நாம் இதை செய்து முடிப்போம். 266 00:15:54,581 --> 00:15:56,374 உனக்கு கார் வாங்குகிறேன், சரியா? 267 00:16:00,086 --> 00:16:04,132 -அது மிகவும் பொருத்தமான பாடல். -ஆமாம். நானும் அப்படித்தான் நினைத்தேன். 268 00:16:07,719 --> 00:16:09,304 தேர்வு இரண்டு பகுதிகளாக இருக்கிறது. 269 00:16:09,387 --> 00:16:12,891 முதல் பகுதி, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக, அதைத்தொடர்ந்து பயிற்சி லேப் அறிக்கை. 270 00:16:12,974 --> 00:16:14,643 நீ செய்ததைக் காண்பி, சரியா? 271 00:16:15,101 --> 00:16:17,854 அது முக்கியம். அடுத்த வருடம் கல்லூரியில் 272 00:16:17,938 --> 00:16:19,814 நீங்கள் இதே மாதிரியான தேர்வுகளைத் தான் எழுதுவீர்கள். 273 00:16:19,898 --> 00:16:20,899 சச்சினி, 274 00:16:21,483 --> 00:16:23,318 உன் அப்பாவை இங்கே பார்ப்பது எனக்கு பழக்கமாகவே இல்லை. 275 00:16:23,401 --> 00:16:25,320 ஆமாம். அது சற்று விசித்திரமானது தான். 276 00:16:25,946 --> 00:16:29,199 உயிர் வேதியியல் மற்றும் கணிப்பொறி அறிவியலில் இரண்டு பிஹெச்டி பெற்றிருக்கிறார். 277 00:16:29,783 --> 00:16:31,451 இல்லை, அதாவது, அது சிறப்பான விஷயம் தான். 278 00:16:31,534 --> 00:16:34,246 நடுநிலை பள்ளியில் என் அத்தை நர்ஸாக இருந்தார். 279 00:16:35,872 --> 00:16:38,833 மேலும், என்னைக் கண்காணிக்க அவர் இந்த வேலையில் சேர்ந்திருக்கலாம். 280 00:17:07,529 --> 00:17:10,364 நீங்கள் இதை எப்படி செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. 281 00:17:10,448 --> 00:17:14,077 உண்மையில், எல்லோருமே பார்க்க சோர்வாக இருக்கிறீர்கள். 282 00:17:14,160 --> 00:17:15,160 என் அப்பா எப்போதும் சொன்னது போல, 283 00:17:15,245 --> 00:17:16,912 “விலகிப் போவதில் அவமானம் இல்லை.” 284 00:17:16,997 --> 00:17:18,415 செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். 285 00:17:18,497 --> 00:17:20,500 என்னால் முடியலை. என் முதுகு வலிக்கிறது. 286 00:17:20,583 --> 00:17:21,418 10வது மணி நேரம் 287 00:17:21,501 --> 00:17:22,919 ஐயோ! 288 00:17:23,003 --> 00:17:24,504 சரி. 289 00:17:24,795 --> 00:17:27,632 அது மிகவும் மோசம் நண்பா, ஏனென்றால் இப்போது நேரம், என்ன? 290 00:17:27,716 --> 00:17:30,677 மூன்று, இரண்டு, ஒன்று. இடைவேளை. 291 00:17:52,991 --> 00:17:54,034 நீ நலமா? 292 00:17:54,784 --> 00:17:57,704 -உனக்கு ஓகெம் இடைத்தேர்வு என்று நினைத்தேன். -நான் கிளம்ப வேண்டி இருந்தது. 293 00:17:58,496 --> 00:17:59,497 நீ வெளியேறினாயா? 294 00:18:00,081 --> 00:18:04,044 நான்... எனக்கு... கொஞ்சம் ஆசுவாசம் தேவை. 295 00:18:04,127 --> 00:18:06,922 உன் பேராசிரியரிடம் பேசு. தேர்வின் போது வெளியேறக் கூடாது. 296 00:18:25,357 --> 00:18:28,443 -மக்கள் வெளியே காத்திருக்கிறார்கள். -வா. 297 00:18:31,988 --> 00:18:33,657 அவள் தாக்குப்பிடிக்கிறாள். 298 00:18:33,740 --> 00:18:35,033 நம்மை ஏமாற்றப் போகிறாள். 299 00:18:35,116 --> 00:18:37,535 -நம்மை ஏமாற்றப் போகிறாள். -பதட்டப்படாதே, நண்பா, சரியா? 300 00:18:37,619 --> 00:18:39,913 மன்னிக்கவும். நேரம் போனதே தெரியவில்லை. 301 00:18:39,996 --> 00:18:41,289 நீ நலமா, செல்லமே? 302 00:18:42,165 --> 00:18:43,458 என்ன... 303 00:18:43,541 --> 00:18:46,211 12வது மணி நேரம் 304 00:18:50,715 --> 00:18:51,716 இல்லை. 305 00:18:53,843 --> 00:18:55,345 ஹே, அவள் என்னை தள்ளிவிட்டாள்! 306 00:18:55,428 --> 00:18:57,013 -இல்லவே இல்லை! -நீ என்னை தள்ளிவிட்டாய். 307 00:18:57,097 --> 00:18:58,557 -ஆமாம், தள்ளிவிட்டாய். -நீயாகவே தான் விழுந்தாய்! 308 00:18:58,640 --> 00:19:01,351 -என் மீது சாய்ந்து இருந்தாய்... -இல்லை, நான்... ஹே! 309 00:19:01,434 --> 00:19:02,769 -என்னை அடிக்காதே. -போதும், நிறுத்து. 310 00:19:02,852 --> 00:19:04,479 -நான் அடித்தால், பிரச்சினையாகிவிடும். -இருவரும் வெளியே போங்கள். 311 00:19:04,563 --> 00:19:05,981 -நான் கடினமாக உழைத்தேன்! -நான் வெளியேற மாட்டேன். 312 00:19:06,064 --> 00:19:07,148 -வா. -நீ... 313 00:19:07,232 --> 00:19:08,275 -நான் நம்பகமான வாடிக்கையா... -வாருங்கள். 314 00:19:08,358 --> 00:19:09,359 என் கழுத்து தலையணை கிடைக்குமா? 315 00:19:09,442 --> 00:19:12,862 -நான் எதுவும் செய்யப் போவதில்லை, சரியா? -நான் அவர்களை வெளியேற்றி விட்டேன். 316 00:19:12,946 --> 00:19:14,614 இல்லை, நான் கடினமாக உழைத்தேன். 317 00:19:20,328 --> 00:19:25,375 ...குயின் மேரியில் ஏறினேன். கலிஃபோர்னியா, லாங் பீச்சில் 318 00:19:25,458 --> 00:19:28,086 அது இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. 319 00:19:29,087 --> 00:19:33,800 உண்மையில், அவனும் அவனது ஏழு குழந்தைகளும் குயின் மேரியில் ஏறி வந்து... 320 00:19:35,302 --> 00:19:37,679 ஐயோ, சச். உனக்கு என்ன பிரச்சினை? 321 00:19:37,762 --> 00:19:40,807 என் பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். நான் ஹூஸ்டனில் கல்லூரியில் இருப்பதாக நினைக்கிறார்கள். 322 00:19:40,891 --> 00:19:43,476 -நீ படிப்பை நிறுத்தியது அவர்களுக்குத் தெரியாதா? -இல்லை, இன்னும் தெரியாது. 323 00:19:47,647 --> 00:19:50,233 உங்கள் இடம் தயாராக இருக்கிறது, என் பின்னே வாருங்கள். 324 00:20:12,130 --> 00:20:13,882 நான் படிப்பை நிறுத்திவிட்டேன். 325 00:20:17,969 --> 00:20:19,638 இதற்காகவா? 326 00:20:22,098 --> 00:20:26,019 -மன்னியுங்கள். -மன்னிப்பு கேட்கிறாயா? 327 00:20:33,568 --> 00:20:35,487 -வா. -என்ன நடக்கிறது? 328 00:20:36,821 --> 00:20:38,490 எல்லோருக்கும் பத்து நிமிட இடைவேளை. 329 00:20:39,449 --> 00:20:42,202 பத்து நிமிடங்கள். இரண்டு முடிந்தன. 330 00:20:49,626 --> 00:20:53,296 அந்த பிரட்டை பார்த்தால் நல்ல மெத்தை போலத் தோன்றுகிறது. 331 00:20:56,341 --> 00:20:57,509 நான் மேலிருந்து கொஞ்சம் 332 00:20:57,592 --> 00:21:00,262 -எடுத்துக் கொள்கிறேன். போதும். -இல்லை. தயவுசெய்து எடுத்து... சரி. 333 00:21:02,430 --> 00:21:04,599 நீ இந்த விஷயங்களை அடிக்கடி செய்வாயா? 334 00:21:05,183 --> 00:21:09,354 ஆமாம். நான் அழைப்புகள் மேற்கொண்டு, ராஃபில் செய்து, ரேடியோ போட்டியில் கலந்துகொள்வேன். 335 00:21:09,437 --> 00:21:11,523 அழைப்புகள். அது வித்தியாசமான மனநிலை. 336 00:21:12,148 --> 00:21:13,525 வித்தியாசமான மனிதர்கள். 337 00:21:13,608 --> 00:21:16,319 ஒன்று, மக்கள் அழைப்பார்கள் அல்லது பொறுமையாக இருப்பார்கள். 338 00:21:16,403 --> 00:21:18,655 நானா? பொறுமையாக இருப்பவன். 339 00:21:18,738 --> 00:21:22,367 காரை முத்தமிடுவது, நடனம் ஆடுவது, ஒரு காலில் நிற்பது. 340 00:21:22,867 --> 00:21:25,912 ஒரு சமயம் நிறைய தண்ணீர் குடித்து என் கழிவை அடக்க வேண்டி கூட இருந்தது. 341 00:21:26,246 --> 00:21:28,415 அழைப்பாளர்கள் என்றால் யார்? 342 00:21:28,498 --> 00:21:31,459 அவர்களுக்கு குறுக்குவழி தேவை, ஆனால் அவர்கள் நேரில் வர வேண்டியதில்லை. 343 00:21:32,377 --> 00:21:35,547 வெற்றி பெற்றால், அதைப்பற்றிய உறுதி வேண்டும், 344 00:21:35,630 --> 00:21:38,675 ஆனால் தோற்றுவிட்டால், அது வெறும் துரதிஷ்டம் தான். உங்கள் தவறு இல்லை. 345 00:21:40,260 --> 00:21:43,763 அழைப்பாளர்கள் பெரும்பாலும் குறைந்த தன்னம்பிக்கை உடையவர்கள். 346 00:21:47,559 --> 00:21:51,313 நாம் வந்து நேரம்... தெரியவில்லை. மிக தாமதமாகிவிட்டது. 347 00:22:06,453 --> 00:22:09,581 மாஸ் மோட்டார்ஸ் 348 00:22:18,215 --> 00:22:20,091 ஓ-ஹோ, ஒருவர் தூங்குகிறார். ஒருவர் தூங்குகிறார். 349 00:22:22,427 --> 00:22:24,304 ஒரு ஹீரோ விழுந்துவிட்டார். 350 00:22:24,387 --> 00:22:27,432 20 டாலர் இழந்துவிட்டேன். சப்வே, நண்பா. 351 00:22:27,515 --> 00:22:30,810 அதிலிருந்து வெகு சுலபமாக நீ சறுக்கிவிட்டாய், சகோதரா. 352 00:22:30,894 --> 00:22:32,854 சரி, தைரியமாக இரு, நண்பா. 353 00:22:33,230 --> 00:22:37,317 நீ வேலை செய்வதை பார்த்தது, மகிழ்ச்சியாக இருந்தது, நண்பா. 354 00:22:37,400 --> 00:22:39,402 மன்னிக்கவும். இது முடிந்துவிட்டது. 355 00:22:39,486 --> 00:22:40,487 23வது மணி நேரம் 356 00:22:40,570 --> 00:22:45,283 இப்போது நான்கு பேர்கள் மட்டும் தான் உள்ளனர். 357 00:22:46,117 --> 00:22:48,161 கடைசி நான்கு பெயர்கள். வெற்றிக்கான நேரம். 358 00:22:50,580 --> 00:22:52,707 வந்து... கொஞ்சம் அவகாசம் வேண்டுமா, சகோதரா? 359 00:22:52,791 --> 00:22:56,044 நீங்கள் நலமா? ஆமாம். 360 00:23:03,385 --> 00:23:07,013 27வது மணி நேரம் 361 00:23:08,807 --> 00:23:09,808 ஹே. 362 00:23:12,394 --> 00:23:13,562 சச்சினி. 363 00:23:15,188 --> 00:23:16,648 -நான் தோற்றுவிட்டேனா? -இல்லை, இல்லை. 364 00:23:16,731 --> 00:23:19,234 -இன்னும் சில நிமிடங்கள் இருக்கிறது. -கடவுளே, அந்தப் பாடல் கேட்கிறது. 365 00:23:19,317 --> 00:23:20,318 ஹே, பாரு. 366 00:23:20,402 --> 00:23:21,403 ஸ்ரீலங்கா 367 00:23:23,113 --> 00:23:24,197 உன் பெருமையை நினைவுப்படுத்தத்தான். 368 00:23:24,281 --> 00:23:25,574 நீ மிக அழகாக இருக்கிறாய். 369 00:23:25,657 --> 00:23:28,368 -உனக்கு ஊக்கம் அழிப்பதற்காக. -எல்லாவற்றையும் காட்டு. 370 00:23:28,868 --> 00:23:31,913 பாரு, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்... 371 00:23:32,497 --> 00:23:35,458 -சாப்பிட போகலாமா? -இல்லை, இது சீக்கிரம். 372 00:23:35,542 --> 00:23:36,751 என்னால் சாப்பிட முடியாது. 373 00:23:42,257 --> 00:23:44,593 அங்கே தாத்தி இருப்பது போலத் தோன்றுகிறது. 374 00:23:49,598 --> 00:23:52,601 சரி, ஹே, நாம் வீட்டிற்குப் போகலாமா? 375 00:23:52,684 --> 00:23:57,355 சரி. சரி, வீட்டிற்கு போகலாம். என்னால் இனி இதைத் தொடர முடியாது. 376 00:23:57,439 --> 00:23:58,940 சரி. ஹேய். 377 00:23:59,733 --> 00:24:02,652 -நீ சிறப்பாகச் செய்தாய். -நன்றி. 378 00:24:02,736 --> 00:24:06,948 என்ன தெரியுமா? ஒரு பரிசாக, நமக்கு லிஃப்ட் வாங்கப் போகிறேன். 379 00:24:07,032 --> 00:24:08,408 அடக் கடவுளே. 380 00:24:08,992 --> 00:24:10,410 ஒரு காரையேவா? 381 00:24:11,202 --> 00:24:12,203 ஆஹா. 382 00:24:20,921 --> 00:24:23,965 ஷெனேரி ஒரு வெள்ளைக்காரனை காதலித்ததால் அங்கிள் லாசான்த்திற்கு 383 00:24:24,049 --> 00:24:25,425 மாரடைப்பு வரவில்லை. 384 00:24:30,639 --> 00:24:32,307 ஒவ்வொரு நாளும் ஃபில்டர் இல்லாத சிகரெட் புடித்து 385 00:24:32,390 --> 00:24:34,768 வறுத்த சிக்கன் மற்றும் 386 00:24:34,851 --> 00:24:37,687 கொழுப்பு சத்து மிக்க ரொட்டி மற்றும் பட்டு மோஜு சாப்பிடுவதால் தான் 387 00:24:37,771 --> 00:24:39,856 அங்கிள் லாசான்த்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. 388 00:24:41,024 --> 00:24:43,818 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அவர்கள் குழந்தைகளின் 389 00:24:43,902 --> 00:24:45,528 மோசமான நடத்தையால் அல்ல, தங்கள் உடல் நிலைமையினால். 390 00:24:46,279 --> 00:24:47,656 -ஓ, அப்படியா? -அது மோசம். 391 00:24:51,076 --> 00:24:52,327 நான் தொடரப் போகிறேன். 392 00:24:55,538 --> 00:24:56,623 ஆமாம், தொடரப் போகிறேன். 393 00:25:01,336 --> 00:25:02,712 சரி, இது அதிகாரப்பூர்வமான தகவல். 394 00:25:02,796 --> 00:25:06,216 நாம் இதை ஆரம்பித்து 31 மணி நேரமாகிறது. 395 00:25:06,925 --> 00:25:08,677 இது அதிகபடியான நேரம். 396 00:25:09,302 --> 00:25:13,181 யாரும் காரை வாங்கவில்லை, இது குறித்து திரு. மாஸ் கவலைப்படுவார். 397 00:25:17,978 --> 00:25:20,772 இடைவேளை வந்துவிட்டது. இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்... 398 00:25:25,652 --> 00:25:26,653 நன்றி. 399 00:25:36,621 --> 00:25:37,622 உன்னை நேசிக்கிறோம்... 400 00:25:38,498 --> 00:25:41,293 நானும், தாத்தியும் நேரலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். 401 00:25:42,127 --> 00:25:43,670 கணினியைத் தொலைக்காட்சியுடன் இணைத்து 402 00:25:43,753 --> 00:25:46,590 நேரலையைப் பார்ப்பதற்கு, 403 00:25:46,673 --> 00:25:49,259 “பெஸ்ட் பை” கடைக்குச் சென்று ஹெச்.டி.எம்.ஐ கேபிளை வாங்கி வந்திருக்கிறார். 404 00:25:50,218 --> 00:25:53,847 அந்த “கிஸ் மீ” பாடலில் “பெர்டெட் பார்லி” என்றால் என்ன அர்த்தமென்று சொல். 405 00:25:58,310 --> 00:25:59,477 ரஷன் குமாரா உன்னால் முடியும் சச்சினி! 406 00:25:59,561 --> 00:26:01,730 அவளின் மனஉறுதி பிடிச்சிருக்கு. உன்னால் முடியும் சச்சினி. உனக்கு ஆதரவளிக்கிறோம். 407 00:26:05,942 --> 00:26:07,527 நம் ஊர் பெண் வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறாள்! 408 00:26:07,611 --> 00:26:09,571 ஹஷான் சந்திரசேகரா 409 00:26:13,491 --> 00:26:15,952 என் அற்புதமான மகள் சச்சினி காரை வெல்லப் போகிறாள். 410 00:26:16,036 --> 00:26:17,579 கடவாதா கல்வி நிறுவனம் இலங்கை 411 00:26:19,748 --> 00:26:21,666 அற்புதமான வீட்டு நினைவுகள். 412 00:26:21,750 --> 00:26:23,501 என் வாழ்வின் சந்தோஷம். 413 00:26:27,797 --> 00:26:28,965 உனக்கு ஒன்றுமில்லையே? 414 00:26:29,049 --> 00:26:30,050 ஆம்... 415 00:26:32,302 --> 00:26:35,639 அப்பா அவரது முதல் ப்ரொஃபைலை உருவாக்கி, என்னைப் பின்தொடர்கிறார். 416 00:26:37,057 --> 00:26:38,725 அவரின் லேப் கோட் அழகாக இருக்கிறது. 417 00:26:38,808 --> 00:26:41,353 ரொம்ப அழகாக இருக்கிறது. அவர் மருத்துவரா? 418 00:26:42,020 --> 00:26:44,564 அவர்... வேதியியல் பொறியாளர். 419 00:26:44,648 --> 00:26:47,817 அவர் கோவலன்ட் பிணைப்புகளைப் பற்றி பல நாட்களுக்குப் பேசுவார். 420 00:26:49,819 --> 00:26:51,488 அவருக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்துவிட்டால் 421 00:26:51,571 --> 00:26:54,699 தன் மகளுக்கு வேலையிருக்காது, அவள் கார் போட்டியில் கலந்துகொள்வாள் என நினைத்தார். 422 00:26:56,159 --> 00:26:57,160 அதைத்தான் நாம் செய்கிறோம். 423 00:27:12,634 --> 00:27:15,971 38 மணி நேரம் 424 00:27:19,766 --> 00:27:21,226 10 நிமிட இடைவேளை. 425 00:27:57,137 --> 00:28:01,766 பெர்டெட் பார்லிகளுக்கு நடுவே என்னை முத்தமிடு 426 00:28:01,850 --> 00:28:06,771 இரவில் பச்சை பசேல் என்ற வயலின் பக்கத்தில் 427 00:28:06,855 --> 00:28:10,901 ஆடு, ஆடு ஊஞ்சல் சுழலும்படி ஆடு 428 00:28:10,984 --> 00:28:15,405 நீ இந்த காலணியைப் போட்டுக்கொள் நான் அந்த உடையை அணிந்துகொள்கிறேன், ஓ 429 00:28:22,913 --> 00:28:27,709 நிலவின் வெளிச்சத்தில் உன் வெற்று கைகளை உயர்த்து 430 00:28:29,961 --> 00:28:31,963 நிலவின் வெளிச்சத்தில் மின்மினி பூச்சிகள் நடனமாடும் 431 00:28:51,107 --> 00:28:56,321 அந்திமாலை நிலவொளியில் என்னை அழைத்துச் செல் 432 00:28:59,074 --> 00:29:02,202 மேளத்தை அடித்து மின்மினி பூச்சிகளை நடனமாடச் செய் 433 00:29:02,285 --> 00:29:03,912 வெண்ணிலவு ஜொலிக்கிறது 434 00:29:13,004 --> 00:29:14,256 ஹே. 435 00:29:15,173 --> 00:29:16,174 ஹே. 436 00:29:17,592 --> 00:29:18,885 தொடருங்கள், தொடருங்கள். 437 00:29:21,304 --> 00:29:24,099 வெல்வோம் அல்லது தோற்போம். இனியாவது தீவிரமாக இருப்போம். 438 00:29:25,642 --> 00:29:29,563 49வது மணி நேரம் 439 00:29:38,029 --> 00:29:39,698 ஹேய், ஹேய்! 440 00:29:40,865 --> 00:29:42,117 ஹெதர். 441 00:29:50,667 --> 00:29:51,668 அவள் வெளியேறிவிட்டாள். 442 00:29:52,168 --> 00:29:53,169 மிகவும் வருந்துகிறேன். 443 00:29:53,879 --> 00:29:55,714 நாம் மூன்றுக்கு வந்துவிட்டோம். 444 00:30:08,518 --> 00:30:09,728 நீ வெற்றி பெற விரும்புகிறேன். 445 00:31:30,267 --> 00:31:31,851 இடைவேளைக்கான நேரம். 446 00:31:31,935 --> 00:31:33,645 இதோ பார், பையா. உன்னால் முடியும். 447 00:31:34,312 --> 00:31:35,355 ஹலோ. ஹாய்... 448 00:31:38,900 --> 00:31:40,235 எல்லோரும் இங்கு கொஞ்சம் கவனியுங்கள். 449 00:31:41,695 --> 00:31:44,906 முதலில், ஆஸ்டினின் மாஸ் மோட்டார்ஸ்ஸுக்கு வந்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 450 00:31:45,615 --> 00:31:47,075 என் பெயர் டெட் மாஸ். 451 00:31:47,158 --> 00:31:48,159 நன்றி. 452 00:31:48,660 --> 00:31:50,453 ஒரு முக்கிய விஷயத்தை அறிவிக்கவுள்ளேன். 453 00:31:50,537 --> 00:31:52,998 சரி... இந்தப் போட்டி முடிவடைய வேண்டும். 454 00:31:53,081 --> 00:31:54,624 என்ன சொல்கிறீர்கள்? 455 00:31:54,708 --> 00:31:57,335 வந்து, இது இவ்வளவு நேரம் போகும் என எங்களுக்குத் தெரியாது. 456 00:31:57,419 --> 00:31:59,546 ஆம், ஆனால் இதுதான் விஷயம், நண்பர்களே. 457 00:32:00,338 --> 00:32:03,925 திரு. மாஸ் மற்றும், கேக்யூஎம்யூ நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் 458 00:32:04,009 --> 00:32:05,427 கலந்தாலோசித்து ஒரு முடிவெடுத்துள்ளோம், 459 00:32:05,510 --> 00:32:07,888 அது என்னவென்றால், உங்கள் அனைவரின் பெயரையும் ஒரு தொப்பியில் போட்டு, 460 00:32:07,971 --> 00:32:09,055 அடக் கடவுளே. 461 00:32:09,139 --> 00:32:10,724 வெற்றியாளரை பழங்கால முறையில், தேர்ந்தெடுக்கப் போகிறோம். 462 00:32:10,807 --> 00:32:11,641 -அதிர்ஷ்டத்தை பொறுத்தது. -ஆம். 463 00:32:13,268 --> 00:32:16,438 -இது என்ன முட்டாள்தனம். -இப்படி செய்யாதீர்கள். 464 00:32:32,203 --> 00:32:33,204 கிரேக் நாவர். 465 00:32:34,289 --> 00:32:35,749 நம்ப முடியலை... 466 00:32:36,207 --> 00:32:40,670 இல்லை, மன்னித்துவிடுங்கள். மன்னித்துவிடுங்கள். நீங்கள் காரை ஜெயிக்கவில்லை. 467 00:32:41,421 --> 00:32:43,381 ஆனால் புருனோ மார்ஸுக்கு செல்லும் டிக்கெட்டை வென்றுள்ளீர்கள். 468 00:32:45,842 --> 00:32:48,678 ஆம். மன்னித்துவிடுங்கள். நாங்கள்... இதை உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். 469 00:32:48,762 --> 00:32:52,057 நாங்கள்... ரகசியத்தைப் பாதுகாக்க நினைத்தோம். ஆனால்... 470 00:32:52,766 --> 00:32:59,189 லொரைன் டில்லன், நீங்கள் அங்கிருக்கும் கிரில் அடுப்பை வென்றுள்ளீர்கள். 471 00:32:59,272 --> 00:33:01,691 நீங்கள் அதற்கு முத்தம் கூட கொடுக்க வேண்டாம். அதை வென்றுவிட்டீர்கள். 472 00:33:01,775 --> 00:33:03,235 ஓ, கடவுளே. 473 00:33:03,318 --> 00:33:06,738 அப்படியென்றால், சச்சினி, நீங்கள் தான் காரை வென்றுள்ளீர்கள். 474 00:33:06,821 --> 00:33:09,074 நீங்கள் வென்றுவிட்டீர்கள்! சாதித்து விட்டீர்கள். 475 00:33:10,242 --> 00:33:12,661 முடிந்துவிட்டது. நாம் வீட்டுக்குப் போகலாம். 476 00:33:13,662 --> 00:33:15,497 எல்லாம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். 477 00:33:16,248 --> 00:33:18,083 ஓ, கடவுளே. 478 00:33:25,090 --> 00:33:26,675 வந்து காரைப் பாருங்கள். 479 00:33:27,759 --> 00:33:29,052 ஆஹா! 480 00:33:29,135 --> 00:33:30,220 இந்தக் கார். 481 00:33:31,555 --> 00:33:32,973 தாத்தியை ஒரு ரவுண்ட் கூடிட்டுப் போ. 482 00:33:34,933 --> 00:33:36,268 பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறீர்களே. 483 00:33:36,351 --> 00:33:39,354 அது எல்லாம் பரவாயில்லை. ஒன்றும் பிரச்சினை இல்லை. சரி. 484 00:33:39,437 --> 00:33:42,732 ஹஷான், தயவுசெய்து வாருங்கள். 485 00:33:45,652 --> 00:33:47,279 அம்மா, காரில் ஏறுங்கள். 486 00:33:47,362 --> 00:33:49,322 இல்லை, அப்பாவை அழைத்துச் செல். 487 00:33:50,073 --> 00:33:51,116 அப்பாவை அழைத்துச் செல். 488 00:33:51,199 --> 00:33:53,451 அதற்குப் பிறகு, நான் இதை ஓட்டலாம் தானே? 489 00:33:54,452 --> 00:33:55,453 கண்டிப்பாக ஓட்டலாம். 490 00:34:19,184 --> 00:34:20,186 ஞாபகம் இருக்கிறதா? 491 00:34:24,231 --> 00:34:25,483 வீட்டிற்குப் போக வேண்டுமா? 492 00:34:28,653 --> 00:34:30,195 இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும். 493 00:34:53,094 --> 00:34:55,512 சச்சினி மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டாள். 494 00:34:55,597 --> 00:34:58,892 அவள் படிப்புக்காகக் காரை விற்க நினைத்தாள். 495 00:34:59,601 --> 00:35:01,853 அவளது அப்பா, “இது அதிர்ஷ்டமான கார்” எனச் சொல்லி, 496 00:35:01,937 --> 00:35:03,396 அவளிடமிருந்து அதை வாங்கிவிட்டார். 497 00:35:04,022 --> 00:35:07,901 அவள் நர்சிங் துறையில் பட்டம் பெற்றாள். 498 00:36:02,872 --> 00:36:04,874 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 499 00:36:04,958 --> 00:36:06,459 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிக்கைத் தொடரைத் தழுவியது