1 00:00:01,043 --> 00:00:02,921 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:03,004 --> 00:00:05,006 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:09,738 --> 00:01:12,908 “குச்சியில் ஒட்டகம்” 4 00:01:12,991 --> 00:01:17,329 உண்மை கதையைத் தழுவியது 5 00:01:26,046 --> 00:01:27,047 ட்வின் சிட்டிஸ் நியூஸ் சேனல் 6 00:01:27,130 --> 00:01:28,590 ஹலோ, ட்வின் சிட்டிஸ். 7 00:01:28,673 --> 00:01:30,508 நாம் எதிர்பார்த்த நாட்கள் மீண்டும் வந்துவிட்டன, 8 00:01:30,592 --> 00:01:34,888 24 மணி நேரத்திற்குள் 151வது வருடாந்திர மினசோட்டா மாநில கண்காட்சி 9 00:01:34,971 --> 00:01:38,600 நடைபெறும் இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறோம். 10 00:01:38,683 --> 00:01:39,684 மினசோட்டா மாநில கண்காட்சி 11 00:01:39,768 --> 00:01:42,187 இந்த வருடம் உணவு கண்காட்சி நடைபெற்றால், 12 00:01:42,270 --> 00:01:43,647 நமக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது. 13 00:01:43,730 --> 00:01:49,694 சாக்லட் சிப் குக்கி பியர், பீச்சஸ் மற்றும் க்ரீம் நாச்சோஸ், நன்கு பொறிக்கப்பட்ட டில்லி டாக், 14 00:01:49,778 --> 00:01:53,406 நான் நினைப்பது சரியென்றால், அது ஊறுகாயின் உள்ளே கறித்துண்டை வைத்து 15 00:01:53,490 --> 00:01:54,532 நன்கு பொறிக்கப்பட்ட உணவு. 16 00:01:54,616 --> 00:01:58,620 2010-ஆம் ஆண்டு கண்காட்சியின் பிரபலமான, ஜிப்ரில் ஹாடியைச் சந்திக்கப் போகிறோம். 17 00:01:58,703 --> 00:02:01,623 ஊர் முழுவதிலும் உள்ள விளம்பர பலகைகளில் இவரது முகத்தைப் பார்த்திருப்பீர்கள். 18 00:02:01,706 --> 00:02:04,167 இவர் லிட்டில் மொகடிஷுவில் ஒரு உணவு விடுதியை நடத்தி வருகிறார்... 19 00:02:04,251 --> 00:02:05,252 ஜிப்ரில் 20 00:02:05,335 --> 00:02:07,337 ...ஆனால் கண்காட்சியில் ஒரு கடை வைக்கவேண்டும் என்பது இவரது கனவு. 21 00:02:07,420 --> 00:02:09,463 ஏற்கனவே ஐந்து முறை வைக்க முயன்றிருக்கிறார், 22 00:02:09,548 --> 00:02:11,800 ஆனால் இந்த வருடம் வித்தியாசமான ஒன்றை கொடுத்து 23 00:02:11,883 --> 00:02:14,344 -தேர்வுக்குழுவின் ஒப்புதலைப் பெற்றுவிட்டார். -காத்திருங்கள், 24 00:02:14,427 --> 00:02:16,721 ஏனென்றால் அவர் சமைக்கும் உணவு முற்றிலும் வித்தியாசமானது. 25 00:02:16,805 --> 00:02:18,807 -இனி நேரடி ஒளிபரப்பு இல்லை. -பபுள் கம் மெல்வதை நிறுத்து. 26 00:02:21,059 --> 00:02:23,103 -நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம், ஜிப்ரில். -நன்றி, சந்தோஷம். 27 00:02:24,104 --> 00:02:26,022 சரி, ஜிப்ரில், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என சொல்லுங்கள். 28 00:02:27,440 --> 00:02:29,693 குச்சியில் ஒட்டகக்கறி. 29 00:02:31,278 --> 00:02:34,739 இதுவரை, ஒட்டகக் கறி சாப்பிட்டதேயில்லை எனச் சொல்லிவிடாதீர்கள். 30 00:02:34,823 --> 00:02:36,533 -சாப்பிட்டதில்லை. -இல்லை. 31 00:02:36,616 --> 00:02:38,493 இல்லையா? நீங்கள் இதை சாப்பிடாமல் இருக்கக் கூடாது, சரியா? 32 00:02:38,577 --> 00:02:40,620 இது ரொம்ப சுவையாக இருக்கும். சரியா? 33 00:02:40,704 --> 00:02:43,707 கண்காட்சியில் நான் உங்களுக்கு ஒட்டகக்கறி தருகிறேன். 34 00:02:43,790 --> 00:02:45,333 -கண்காட்சி பற்றி பேசுகையில்... -ஆம். 35 00:02:45,417 --> 00:02:48,086 ...ஒவ்வொரு வருடமும் இருபதாயிரம் மக்கள் வருகிறார்கள். 36 00:02:48,169 --> 00:02:51,756 எனவே இவர்கள் அனைவருக்கும் சமைக்க எவ்வளவு ஒட்டகக்கறி வாங்க வேண்டும்? 37 00:02:52,382 --> 00:02:56,511 அதிகமில்லை. வெறும் 8,000 பவுண்டுகள். 38 00:02:57,512 --> 00:02:59,639 -எட்டாயிரம் பவுண்டு ஒட்டகக்கறியா? -ஆமாம். 39 00:02:59,723 --> 00:03:01,725 கொவால்ஸ்கி சந்தையில் அவ்வளவு கறி கிடைக்காது. 40 00:03:01,808 --> 00:03:03,685 இங்கு எங்களுடன் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? 41 00:03:03,768 --> 00:03:05,645 -நீங்கள் சமைக்க வேண்டாமா? -சரிதான். 42 00:03:05,729 --> 00:03:07,480 -இங்கிருந்து கிளம்புங்கள். -கிளம்புகிறேன். 43 00:03:07,564 --> 00:03:08,565 அம்மா, உங்களை நேசிக்கிறேன். 44 00:03:09,190 --> 00:03:12,193 “KNOW” 91 எஃப்எம் இலிருந்து நான் உங்கள் ரேண்டி ஸிம்மர். 45 00:03:12,277 --> 00:03:13,945 மீண்டும் வருக. இது “KAXD” எஃப்எம். 46 00:03:14,029 --> 00:03:17,324 இன்று “KQYP”யில் நம்மோடு ஒட்டகக்கறி சமைக்கும் ஜிப்ரில் ஹாடி இணைகிறார். 47 00:03:17,407 --> 00:03:18,992 ஹே. நன்றி. இங்கு வந்ததில் சந்தோஷம். 48 00:03:19,075 --> 00:03:20,702 விளம்பரங்கள், தொலைக்காட்சி. 49 00:03:20,785 --> 00:03:23,288 இவ்வருட கண்காட்சியின் பிரபலமாகிவிட்டீர்கள். 50 00:03:23,371 --> 00:03:26,166 முட்டாள்தனமான கேள்விதான். ஒட்டகக்கறியை எங்கு வாங்குனீர்கள்? 51 00:03:26,249 --> 00:03:28,001 நம்பமாட்டீர்கள், ஆஸ்திரேலியா. 52 00:03:28,084 --> 00:03:29,169 ஆஸ்திரேலியாவா? 53 00:03:29,252 --> 00:03:31,004 அங்குதான் சிறந்த ஒட்டகங்கள் கிடைக்கும். 54 00:03:31,087 --> 00:03:32,422 இதை எதிர்பார்க்கவில்லை. 55 00:03:32,505 --> 00:03:34,507 இதை 24 மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டுமா? 56 00:03:34,591 --> 00:03:35,592 ஆமாம், சரிதான். 57 00:03:35,675 --> 00:03:37,177 நாளை நிறைய வேலை காத்திருக்கிறது. 58 00:03:37,761 --> 00:03:39,221 இது பெரும் சவாலான விஷயம் போல. 59 00:03:39,304 --> 00:03:41,264 -வாழ்த்துக்கள். -நன்றி. 60 00:03:41,348 --> 00:03:43,516 -ஜிப்ரில் பேசுகிறேன். -ஹாய், “ஸ்டார் ட்ரிபியூனில்” இருந்து பேம். 61 00:03:43,975 --> 00:03:46,895 கொஞ்ச நேரம் தான் இருக்கிறது, எனவே நான் ஆரம்பிக்கிறேன். 62 00:03:46,978 --> 00:03:48,855 குச்சியில் ஒட்டகக்கறி என்ற யோசனை எப்படி வந்தது? 63 00:03:48,939 --> 00:03:51,566 அதாவது, நம் கலாச்சாரத்தில் ஒட்டகங்கள் மிக முக்கியமான விலங்கு, இல்லையா? 64 00:03:51,650 --> 00:03:53,610 அவை ரொம்ப கடினமானவை, தொல்லை தரக்கூடியவை. 65 00:03:54,236 --> 00:03:55,278 என்னை மாதிரி. 66 00:03:55,362 --> 00:03:56,738 -ஹே, ஜிப்ரில்! -நல்லா இருக்கு. 67 00:03:56,821 --> 00:03:58,198 ஹே! 68 00:03:58,281 --> 00:03:59,324 ஜிப்ரில்! 69 00:03:59,407 --> 00:04:00,617 -ஜிப்ரில்! -மன்னிக்கவும். 70 00:04:00,700 --> 00:04:02,118 -கொஞ்ச நேரம் பொறுங்கள். -ஹே! 71 00:04:02,786 --> 00:04:04,829 முகமது, நான் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரியவில்லையா? 72 00:04:05,580 --> 00:04:06,957 உன் புது பெயர்ப் பலகையில், கொடி உள்ளதே. 73 00:04:08,500 --> 00:04:09,793 சொமாலி உணவு எங்களை கண்காட்சியில் சந்தியுங்கள் 74 00:04:10,710 --> 00:04:12,254 -அதனால் என்ன? -அதனால் என்னவா? 75 00:04:12,337 --> 00:04:14,381 என் பெயர்ப் பலகையை காப்பி அடித்திருக்கிறாய்! 76 00:04:14,464 --> 00:04:15,549 ரெட் சாண்ட் உண்மையான சொமாலி உணவு 77 00:04:16,132 --> 00:04:17,132 அருமை. 78 00:04:17,216 --> 00:04:20,136 சிக்கன் ஃபென்டாஸ்டிக் உணவின் செயல்முறையை திருடியது யார்? 79 00:04:20,220 --> 00:04:23,014 யார்? சொமாலி உணவு காவலர். இங்கிருந்து போய்விடு! 80 00:04:23,098 --> 00:04:27,185 யார் குச்சியில் ஒட்டகக்கறியை விற்பது? 81 00:04:27,269 --> 00:04:29,604 நீ ஒட்டகக்கறியை அவமதிக்கிறாய். 82 00:04:29,688 --> 00:04:30,564 ஹே, நண்பா. 83 00:04:30,647 --> 00:04:32,315 கேள். 84 00:04:32,399 --> 00:04:36,361 சரி, நான் பிரபலமடைந்து, பணக்காரனான பிறகு உன்னை மறக்க மாட்டேன். 85 00:04:37,070 --> 00:04:39,281 “பிரபலமடைந்த, பணக்காரனா”? நம்மிடம் என்ன இருக்கிறது? 86 00:04:39,364 --> 00:04:41,157 நீ விசித்திரமானவன், போய்விடு. 87 00:04:41,241 --> 00:04:43,285 -இங்கு முஸ்லிம் இருக்கிறீர்களா? -ஏதும் பிரச்சினையா? 88 00:04:43,368 --> 00:04:46,371 உனக்கு குரானை ஓதிக்காட்ட அறிஞர்கள் தேவை. 89 00:04:46,454 --> 00:04:47,455 ஒட்டகங்கள். ஆமாம். 90 00:04:47,539 --> 00:04:49,749 ஒரு அழகான பெண்ணால் நூறு ஒட்டகங்களுக்கு 91 00:04:49,833 --> 00:04:51,543 கட்டளையிட முடியும் என உங்களுக்குத் தெரியுமா? 92 00:04:51,626 --> 00:04:53,044 தெரியாது. 93 00:04:53,128 --> 00:04:55,922 சொமாலி சமூகத்தினர் இது குறித்து சந்தோஷப்படுவார்கள். 94 00:04:56,006 --> 00:04:56,965 யாரென சொல்லுங்கள் பார்ப்போம்? 95 00:04:57,048 --> 00:04:59,551 -டென்ஸெல் வாஷிங்டன்! -ஃபோன் பேசுகிறேன். 96 00:04:59,634 --> 00:05:02,888 இந்த கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு பல வருடங்களாக முயன்றீர்களா? 97 00:05:02,971 --> 00:05:05,015 மூன்று வருடங்களுக்கு முன்பு, 98 00:05:05,098 --> 00:05:07,475 ஸுகார் மற்றும் சப்பாத்தி சமைத்து இந்த கண்காட்சிக்கு விண்ணப்பித்தேன். 99 00:05:07,559 --> 00:05:10,353 ஆனால் நடுவர்கள், “இது வெறும் மாட்டுக்கறி மற்றும் பிரட் தானே?” எனச் சொல்லிவிட்டார்கள். 100 00:05:10,437 --> 00:05:13,481 -இந்த யோசனை எப்படி வந்தது? -ஹே, ஜிப்ரில். உன்னிடம் பேசணும். 101 00:05:13,565 --> 00:05:17,319 குச்சியில் எதை செய்தாலும் பிரபலமாகிவிடும், எனவே “குச்சியில் மாங்காய் செய்யலாம்” என நினைத்தேன். 102 00:05:17,402 --> 00:05:20,196 -எனக்கு மாங்காய் பிடிக்கும். -அமெரிக்கர்களுக்கு அது ரொம்ப காரமாக இருக்கும். 103 00:05:20,280 --> 00:05:22,824 சொமாலி உணவில் என்னால் காரம் கம்மியாக சேர்க்க முடியாது. 104 00:05:22,908 --> 00:05:24,409 இது பிஸ்பாஸ், சாலட் இல்லை. 105 00:05:24,492 --> 00:05:25,869 பிறகு என்ன செய்ய நினைத்தீர்கள்? 106 00:05:25,952 --> 00:05:29,414 “எல்லோரும் கோழிக்கறியை தான் செய்வார்கள். அது சலிப்பை ஏற்படுத்தும்” என நினைத்தேன். 107 00:05:29,497 --> 00:05:31,541 எனவே, “எது சுவையாக இருக்கும்? 108 00:05:31,625 --> 00:05:33,835 எது சலிப்பை ஏற்படுத்தாது? குச்சியில் எதைச் செய்யலாம்?” என யோசித்தேன். 109 00:05:38,465 --> 00:05:40,675 -ஒட்டகம் என்ற யோசனை வந்தது. -அநேக மக்கள் ஒட்டகக்கறி சாப்பிட்டிருக்க மாட்டார்கள். 110 00:05:40,759 --> 00:05:42,886 -ஆம், நறுமணம் வருகிறது. -நன்றாக இருக்கிறதா? 111 00:05:42,969 --> 00:05:45,639 என்ன? சுவை எப்படி இருக்கு? அற்புதமாக இருக்கிறது. 112 00:05:46,223 --> 00:05:47,849 உண்மையில்... அதைச் சுவைக்க ஆர்வமாக இருக்கிறேன். 113 00:05:47,933 --> 00:05:49,059 நினைத்ததை விட நன்றாக இருக்கு. 114 00:05:49,142 --> 00:05:51,811 இருபதாயிரம் மக்களுக்கு உணவு தரணுமே என நினைத்து பதட்டப்படுகிறீர்களா? 115 00:05:51,895 --> 00:05:54,606 பதட்டமா? பதட்டப்படுவதற்கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது? 116 00:05:54,689 --> 00:05:57,776 நீங்கள் கண்டிப்பாக பதட்டப்பட கூடாது. நிறைய சமைக்க வேண்டும். 117 00:05:57,859 --> 00:05:59,069 நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 118 00:05:59,152 --> 00:06:00,362 என்னை அழகாகக் காட்டுங்கள். 119 00:06:00,445 --> 00:06:02,989 -அது ஒன்றும் பிரச்சினையில்லை. -சரி. பை. 120 00:06:03,073 --> 00:06:05,075 பத்து மணிநேரமாக அவனிடமிருந்து தகவல் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? 121 00:06:05,158 --> 00:06:08,286 ஜிப்ரில். என் கசினிடம் பேசினேன். 122 00:06:08,370 --> 00:06:10,580 சீக்கிரம் மாமிசத்துடன் வந்துவிடுவான். 123 00:06:10,664 --> 00:06:13,917 -ரிலாக்ஸ், சகோ. கவலைப்படாதே. -கவலைப்படாமல் ரிலாக்ஸாக இருக்க வேண்டுமா? 124 00:06:14,626 --> 00:06:16,294 நேற்றே மாமிசம் இங்கு வந்திருக்கணும்! 125 00:06:16,378 --> 00:06:19,506 24 மணி நேரத்திற்குள் 8000 பவுண்டு ஒட்டகக்கறியைச் சமைக்க வேண்டும், 126 00:06:19,589 --> 00:06:21,258 நீ என்னை கவலைப்படாமல் இருக்க சொல்கிறாயா? 127 00:06:21,341 --> 00:06:23,301 வண்டி எங்கிருக்கிறதெனத் தெரிந்துகொண்டு என்னைத் திரும்ப கூப்பிடு. 128 00:06:25,220 --> 00:06:26,680 பெஸ்ட்வாலு கடை 129 00:06:34,604 --> 00:06:35,438 மயோனைஸ் 130 00:06:37,357 --> 00:06:39,317 இன்னும் கறி இங்கு வரவில்லை. 131 00:06:42,487 --> 00:06:43,488 வந்துவிடும். 132 00:06:45,782 --> 00:06:47,284 இதெல்லாம் என்ன? 133 00:06:47,784 --> 00:06:49,494 ராஞ்ச் சாஸிற்குத் தேவையானவை. 134 00:06:50,078 --> 00:06:54,291 முதலில் குச்சியில் ஒட்டகக்கறி, இப்போது ராஞ்ச் சாஸா? 135 00:06:54,374 --> 00:06:55,875 ராஞ்ச் சாஸ். 136 00:06:57,294 --> 00:06:59,838 சீன உணவு விடுதியில் ஃபார்ச்சூன் குக்கீஸ் செய்கிறார்களா? 137 00:07:01,590 --> 00:07:04,426 இல்லை, ஆனால் செய்ய வேண்டும். 138 00:07:04,509 --> 00:07:07,596 மோ ஃபாரா மாதிரி இருக்காதே! 139 00:07:07,679 --> 00:07:08,805 மோ ஃபாராவா? 140 00:07:08,889 --> 00:07:10,223 இவன் ஒன்றும் மோ ஃபாரா இல்லை. 141 00:07:10,307 --> 00:07:13,685 பொறு. மோ ஃபாரா உலகிலேயே மிக வேகமான ஓட்டக்காரர். 142 00:07:13,768 --> 00:07:15,270 சாதனையாளர்! 143 00:07:16,396 --> 00:07:17,647 இவன் மோ ஃபாராவாக இல்லாமல் இருக்கலாம், 144 00:07:17,731 --> 00:07:19,149 ஆனால் மினியாபொலிஸின் சமையல் கலைஞன். 145 00:07:19,232 --> 00:07:21,151 பிரபலமான சமையல் கலைஞன். 146 00:07:21,234 --> 00:07:22,402 மோ ஃபாரா என்பவர் யார்? 147 00:07:22,485 --> 00:07:24,404 யூகேவிற்காக ஓடும் சோமாலிய ஓட்டக்காரர். 148 00:07:25,947 --> 00:07:27,657 உன்னை ஏமாற்றுக்காரன் எனச் சொல்கிறார்கள். 149 00:07:28,450 --> 00:07:31,077 நீ ஏமாற்றுக்காரன் இல்லை, செஃப். பணம் சம்பாதிக்கிறாய். 150 00:07:31,828 --> 00:07:33,163 மக்களே, 151 00:07:33,246 --> 00:07:37,125 நம்மிடமே சாஸ்ஸிற்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. 152 00:07:38,001 --> 00:07:41,463 ஒட்டகக்கறியுடன் ராஞ்சை பரிமாற முடியாது. அது மாமிசத்தின் மீது கெட்சப்பை ஊற்றியது போல் இருக்கும். 153 00:07:42,339 --> 00:07:45,217 அமெரிக்கர்களுக்கும், சோமாலியர்களுக்கும் ராஞ்ச் பிடிக்கும். 154 00:07:45,884 --> 00:07:47,344 இந்தியர்களுக்கும் ராஞ்ச் பிடிக்கும். 155 00:07:50,222 --> 00:07:52,849 -விராஜ், இதை என் இடத்திலிருந்து எடு. -கண்டிப்பாக. 156 00:07:52,933 --> 00:07:53,892 சாமி, என்ன ஆச்சு? 157 00:07:54,726 --> 00:07:57,562 ஜிப்ரில், என் கசின் வேறொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறான். 158 00:07:57,646 --> 00:07:59,147 கான்ஃபரென்ஸ் காலில் அழைக்கிறேன். 159 00:07:59,231 --> 00:08:01,107 ஹே, ஜிப்ரிலும் லைனில் இருக்கிறான். 160 00:08:01,191 --> 00:08:02,609 சத்தியமாக, இது என் தவறில்லை. 161 00:08:02,692 --> 00:08:04,194 எது உன் தவறில்லை? 162 00:08:04,277 --> 00:08:07,739 ஜிப்ரில், பெரிய விஷயமில்லை, வண்டி பழுதாகிவிட்டது. 163 00:08:07,822 --> 00:08:09,699 என்ன? என் மாமிசம் எங்கே? என் மாமிசத்திற்கு என்ன ஆச்சு? 164 00:08:09,783 --> 00:08:10,659 பரவாயில்லை, நண்பா. 165 00:08:10,742 --> 00:08:13,995 வண்டியை குளிர்சாதன கிடங்கில் வைத்திருக்கிறேன். 166 00:08:14,079 --> 00:08:16,456 -ஹே, நாம் எங்கிருக்கிறோம்? -மூர்ஹெட். 167 00:08:16,539 --> 00:08:18,416 மூர்ஹெட். மூர்ஹெட் எங்கிருக்கிறது? 168 00:08:18,500 --> 00:08:20,544 -மூர்ஹெட்டா? -பரவாயில்லை, நண்பா. 169 00:08:20,627 --> 00:08:22,879 புது வண்டி வந்து கொண்டிருக்கிறது. 170 00:08:22,963 --> 00:08:24,381 நல்ல ஒப்பந்தம் சொல்கிறேன், சரியா? 171 00:08:24,464 --> 00:08:26,925 வண்டி வந்த பிறகே பணம் கொடு. 172 00:08:27,008 --> 00:08:28,385 சாமி... 173 00:08:29,010 --> 00:08:32,097 உன் வண்டிதானே பழுதானது. நீதான் பணம் கொடுக்க வேண்டும். 174 00:08:32,597 --> 00:08:34,599 என்னிடம் 1,800 டாலர் இருக்கிறதா என்ன? 175 00:08:35,517 --> 00:08:36,851 உனக்கு மாமிசம் வேண்டும் தானே? 176 00:08:37,601 --> 00:08:38,895 அப்படியென்றால் பணம் கொடு. 177 00:08:38,979 --> 00:08:41,856 மூன்று மாதத்தில் “அயூட்டா” சேமிப்பு பணம் வந்துவிடும், அதன் பிறகு தருகிறேன். 178 00:08:57,998 --> 00:08:59,541 ஹாய். கெஸி, எப்படியிருக்கிறாய், நண்பா? 179 00:09:00,041 --> 00:09:03,211 நான் உனக்கு மூன்று முறை அழைத்தேன், நண்பா. 180 00:09:03,295 --> 00:09:05,380 இன்றிரவு வருகிறாயா, இல்லையா? 181 00:09:05,463 --> 00:09:06,673 எதற்கு? 182 00:09:06,756 --> 00:09:08,675 எதற்கா? அரையிறுதி போட்டிக்கு. 183 00:09:08,758 --> 00:09:11,094 நான் மட்டும்தான் இந்த கால்பந்தாட்ட அணியை பற்றிக் கவலைப்படுகிறேனா? 184 00:09:11,177 --> 00:09:13,221 நான் தயாராக வேண்டும், சரியா? 185 00:09:13,305 --> 00:09:14,389 எதற்கு? 186 00:09:14,472 --> 00:09:17,183 கண்காட்சிக்கு. நீ வேலை பார்க்கிறாயே அதற்கு? 187 00:09:17,267 --> 00:09:20,228 என்னிடம் மாமிசமும் இல்லை. சாஸும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. 188 00:09:20,312 --> 00:09:21,730 யார் ஸ்ட்ரைகராக விளையாடுவது? 189 00:09:22,397 --> 00:09:23,398 ஃபாரா. 190 00:09:23,481 --> 00:09:26,776 ஃபாராவா? ஃபாரா. அற்புதம். 191 00:09:26,860 --> 00:09:28,486 யார் டிஃபென்ட் செய்யப் போகிறார்கள்? 192 00:09:28,987 --> 00:09:30,614 பொறு, இந்த அழைப்பை பேசிவிட்டு வருகிறேன். 193 00:09:31,239 --> 00:09:32,240 ஹலோ? 194 00:09:33,825 --> 00:09:36,202 ஹாய். நான் வண்டி ஓட்டுனரிடம் பேசினேன். 195 00:09:36,286 --> 00:09:38,538 அந்த முட்டாள் ஃபோன் சார்ஜரை காதலியின் வீட்டில் மறந்து வைத்துவிட்டான். 196 00:09:38,622 --> 00:09:41,207 சாமி, என்ன சொல்ல வருகிறாய்? ஏதாவது தகவல் கிடைத்ததா? 197 00:09:41,291 --> 00:09:44,336 பிஸ்மார்க்கை தாண்டிவிட்டான், இன்னும் ஆறு மணி நேரத்தில் அங்கிருப்பான். 198 00:09:44,419 --> 00:09:46,254 -பை. -பரவாயில்லை என சொன்னேனே, நண்பா. 199 00:09:46,338 --> 00:09:47,505 -புரிகிறது. -பை. 200 00:09:49,174 --> 00:09:50,967 -ஹலோ? -கெஸி தான். 201 00:09:51,051 --> 00:09:53,220 காவிலை முன்புறமாக நிறுத்தினால் என்ன? 202 00:09:53,720 --> 00:09:56,306 -காவிலை முன்புறத்தில் நிறுத்தினால்... -கெஸி, நான் போக வேண்டும். 203 00:09:56,389 --> 00:09:58,892 -என் சகோதரனிடம் பேச வேண்டும். -பொறு... 204 00:09:59,935 --> 00:10:03,396 ஹே, பெரியவனே. நீ இம்மாதம் “அயூட்டா” சேமிப்பிற்காக 500 டாலர் தர வேண்டும். 205 00:10:04,022 --> 00:10:05,023 அப்படியா? 206 00:10:06,983 --> 00:10:08,526 சரி, கொஞ்ச நாள் அவகாசம் கொடு, சரியா? 207 00:10:08,610 --> 00:10:10,195 என் சகோதரன் “அயூட்டா” மீது ஆர்வமாக இருக்கிறானோ? 208 00:10:10,278 --> 00:10:12,572 இது சொமாலிய முறையில் பணத்தைச் சேகரிக்கும் வழி. 209 00:10:13,573 --> 00:10:14,991 “அயூட்டா” சேமிப்பு எளிமையானது. 210 00:10:15,075 --> 00:10:17,953 ஆனால் மக்கள் தங்களின் முறை வரும்போது பணத்தைக் கட்ட வேண்டும். 211 00:10:18,036 --> 00:10:20,997 நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வரிசை முறையை மாற்ற முடியாது. யாரும் விதிவிலக்கில்லை. 212 00:10:21,790 --> 00:10:22,791 தெரியும். 213 00:10:22,874 --> 00:10:25,126 எல்லோரும் பணம் கட்டினால் தான் “அயூட்டா” இயங்கும். 214 00:10:25,210 --> 00:10:27,212 பார், கெஸிக்கு இம்மாத பணம் வேண்டுமாம். 215 00:10:27,295 --> 00:10:28,755 பணம் கட்டவில்லை என்றால்... 216 00:10:28,838 --> 00:10:30,882 சமுதாயத்தில் நமக்கு மரியாதை இருக்காது. 217 00:10:30,966 --> 00:10:33,760 எல்லா பணமும் கண்காட்சிக்குச் செலவாகிவிட்டது. 218 00:10:33,843 --> 00:10:35,220 ஒட்டகக்கறிக்கு இருபத்து-ஏழாயிரம் டாலர், 219 00:10:35,303 --> 00:10:37,013 குளிர்சாதன பெட்டிக்கும் இதரப் பொருட்களுக்கும் இரண்டாயிரம் டாலர். 220 00:10:37,097 --> 00:10:39,432 -இதில் நான் என்ன கொடுக்க முடியும்? -ஆசுவாசப்படுத்திக்கொள், சகோ. 221 00:10:39,516 --> 00:10:41,393 நீ வேகமாக பேசுகிறாய். 222 00:10:41,476 --> 00:10:42,477 நான் நலம் தான். 223 00:10:45,188 --> 00:10:46,856 இதை ஏன் செய்ய வேண்டும்? 224 00:10:48,900 --> 00:10:49,901 உன்னிடம் பல பேர் வேலை பார்க்கிறார்கள், 225 00:10:49,985 --> 00:10:52,445 உன்னைச் சார்ந்து ஒரு குடும்பம் இருக்கிறது. 226 00:10:52,529 --> 00:10:56,199 சூதாட்டம் தடை செய்யப்பட்டதெனத் தெரிந்தும் ஏன் சூதாட வேண்டும்? 227 00:10:56,283 --> 00:10:58,743 நிச்சயம் பயனளிக்கும் என தெரிந்தால், அது சூதாட்டமாகாது. 228 00:10:58,827 --> 00:11:00,662 அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். 229 00:11:02,914 --> 00:11:06,501 நான் என் நிறுவனமான “போக்கோர் எக்ஸ்ப்ரெஸ்ஸில்” முதலீடு செய்ய விரும்புகிறேன். 230 00:11:06,585 --> 00:11:07,586 போக்கோர் உணவு விடுதி 231 00:11:07,669 --> 00:11:09,004 யோசித்துப் பார். 232 00:11:12,883 --> 00:11:17,053 சில சமயங்களில், நீ அமெரிக்கரைப் போல நிறைய கனவு காண்கிறாய். 233 00:11:18,221 --> 00:11:20,056 நீ ஒரு சோமாலியன். 234 00:11:20,140 --> 00:11:23,476 உன் வெற்றியோ தோல்வியோ நம் அனைவரையுமே பாதிக்கும். 235 00:11:23,977 --> 00:11:25,979 அது எனக்குத் தெரியாதா என்ன, இட்ரிஸ்? 236 00:11:29,274 --> 00:11:30,775 கேள். 237 00:11:30,859 --> 00:11:33,904 உன் “அயூட்டா” சேமிப்பிற்கு நான் பணம் தருவதை யாரிடமும் சொல்ல மாட்டேன். 238 00:11:37,908 --> 00:11:39,117 உன் சட்டையை மாற்று. 239 00:11:40,660 --> 00:11:42,037 ஒட்டகம் மாதிரி நாறுகிறாய். 240 00:11:46,583 --> 00:11:49,002 உன்னை ஒருநாள் பெருமைப்படுத்துவேன், இட்ரிஸ். 241 00:11:59,512 --> 00:12:01,348 நாங்கள் உன்னை டிவியில் பார்த்தோம். 242 00:12:01,431 --> 00:12:02,766 சரி, எப்படி இருந்தது? 243 00:12:02,849 --> 00:12:05,143 ஜிப்ரில், உன் கைகளை பயன்படுத்தி செம்மையாக வேலை செய்கிறாய். 244 00:12:05,227 --> 00:12:07,145 சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாய். 245 00:12:07,229 --> 00:12:08,855 இங்கே வா. 246 00:12:08,939 --> 00:12:11,775 உன் அப்பாவை போல அழகாக இருக்கிறாய். 247 00:12:11,858 --> 00:12:13,318 கடவுளின் விருப்பப்படி, கண்காட்சியில் வெல்வாய். 248 00:12:13,401 --> 00:12:14,653 எனக்குத் தெரியும். 249 00:12:14,736 --> 00:12:16,238 கடவுளின் விருப்பம். 250 00:12:16,321 --> 00:12:17,614 சரி. 251 00:12:17,697 --> 00:12:21,409 வெற்றியோ தோல்வியோ முக்கியமில்லை. 252 00:12:21,493 --> 00:12:22,494 இதில் பங்கேற்பதே சந்தோஷம் தான். 253 00:12:23,203 --> 00:12:24,454 ரொம்ப தன்னடக்கமானவன். 254 00:12:24,537 --> 00:12:27,290 ஓ, ஜிப்ரில், நீ இங்கிருந்ததே எனக்குத் தெரியாது. 255 00:12:27,374 --> 00:12:31,044 உன் உணவகத்திலிருக்கும் துணிகளின் மீது தூங்கியிருப்பாய் என நினைத்தேன். 256 00:12:31,127 --> 00:12:37,175 மேசை துணிகளைப் போர்வையாக பயன்படுத்தியிருப்பேன். 257 00:12:40,136 --> 00:12:41,555 டிரையர் மறுபடியும் உடைந்துவிட்டதா? 258 00:12:42,222 --> 00:12:43,640 நான் ரையனை அழைக்கிறேன். 259 00:12:43,723 --> 00:12:45,559 நான் கால்பந்தாட்டத்தில் விளையாட வேண்டும். 260 00:12:52,607 --> 00:12:54,401 ஏன் கவலையாக இருக்கிறாய்? 261 00:12:54,901 --> 00:12:56,027 ஒன்றுமில்லை. 262 00:12:56,111 --> 00:12:59,155 இதெல்லாம் முக்கியஸ்தராக இருப்பதால் வரும் தீமைகள். இல்லையா? 263 00:13:00,490 --> 00:13:04,619 நான் போக வேண்டும். ஒட்டகக்கறியைப் பெற கெஸி எனக்கு உதவுகிறான். 264 00:13:05,787 --> 00:13:08,248 உன் பேண்ட்டை மேலே உயர்த்து. உள்ளாடை தெரிகிறது! 265 00:13:08,331 --> 00:13:10,834 பொது இடத்தில் இப்படி அணியக் கூடாது. 266 00:13:11,543 --> 00:13:13,628 -இது வெறும் கால்பந்தாட்டம் தான். -அங்கிருப்பவர்கள் எல்லாம் குருடா? 267 00:13:13,712 --> 00:13:14,921 என்னை கேலி செய்துகொண்டே இருங்கள். 268 00:13:16,548 --> 00:13:17,757 சரி, பார்க்கலாம். 269 00:13:20,385 --> 00:13:22,429 -உனக்கு டிஃபென்ட் செய்ய தெரியவில்லை. -அது உன் பக்கம். 270 00:13:22,512 --> 00:13:25,098 உன் பக்கத்திலிருந்து தான் எங்களைத் தாக்குகின்றனர். 271 00:13:25,181 --> 00:13:26,474 வெளியே போ. 272 00:13:26,558 --> 00:13:28,059 இப்போது பந்தை எடு. 273 00:13:30,520 --> 00:13:33,023 இங்கே! இங்கே! 274 00:14:01,927 --> 00:14:04,262 சாமி? ஹே, சாம், என்ன ஆச்சு? என்ன நடக்கிறது? 275 00:14:04,346 --> 00:14:06,723 ஒரு மணி நேரத்தில் வண்டி அங்கிருக்கும். 276 00:14:06,806 --> 00:14:07,933 அது... ஒன்றும் பிரச்சினையில்லை, நண்பா. 277 00:14:08,016 --> 00:14:10,060 -ஓட்டுனருக்குக் கொடுக்க பணம் இருக்கிறதா? -ஹே! 278 00:14:10,143 --> 00:14:11,937 கெஸியிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன். 279 00:14:12,687 --> 00:14:15,273 என் “அயூட்டா” பணம் வேண்டுமென்றால், நீ விளையாட வேண்டும்! 280 00:14:15,357 --> 00:14:16,942 வா, நண்பா! 281 00:14:17,734 --> 00:14:18,735 வருகிறேன். 282 00:14:28,078 --> 00:14:29,120 ஓ, நீ பணக்காரன். 283 00:14:29,871 --> 00:14:31,831 சரி. இதைச் செய்யலாம். 284 00:14:40,006 --> 00:14:42,133 இந்தக் கறி எல்லாவற்றையும் நாளைக்குள் சமைக்க வேண்டுமா? 285 00:14:42,217 --> 00:14:43,260 கண்டிப்பாக. 286 00:14:44,469 --> 00:14:45,887 -உதவி வேண்டுமா? -நன்றி, நோவா. சரி. 287 00:14:45,971 --> 00:14:47,013 சரி. 288 00:14:47,097 --> 00:14:48,181 நீ விசித்திரமானவன். 289 00:14:50,225 --> 00:14:53,103 ஆம், எரிவாயுவிற்கும், ஸ்நாக்ஸுக்கும் 36 டாலர் தேவை. 290 00:14:58,024 --> 00:15:00,527 இசை தட்டை நாம் மதிக்கவில்லை என்றால், அராஜகம் செய்வோம். 291 00:15:00,610 --> 00:15:01,987 சக்கரத்தை சுற்று. யார் வருகிறீர்கள்? 292 00:15:02,070 --> 00:15:03,071 டிஜே யார்? 293 00:15:04,197 --> 00:15:06,575 ஹானி - ஜிப்ரில் - நோவா விராஜ் - சுனு - இட்ரிஸ் 294 00:15:07,492 --> 00:15:09,035 நோவா! 295 00:15:09,119 --> 00:15:11,329 வா, நோவா. நீ என்ன செய்கிறாய் எனப் பார்ப்போம். 296 00:15:11,413 --> 00:15:12,747 இதுதான். 297 00:15:14,124 --> 00:15:15,125 போ. 298 00:15:18,295 --> 00:15:20,255 இதை செய்து முடித்துவிடுவோம். சரியா, நண்பர்களே? 299 00:15:24,467 --> 00:15:25,510 சரி. 300 00:15:27,345 --> 00:15:28,346 சரி. வாருங்கள். 301 00:17:05,651 --> 00:17:08,112 எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும். மயங்கி விழுந்துவிடுவேன் போல. 302 00:17:08,196 --> 00:17:09,406 இல்லை, நிறுத்தக் கூடாது. 303 00:17:09,488 --> 00:17:11,699 இரவு முழுவதும் சமைக்காவிட்டால், இதைச் செய்து முடிக்க முடியாது, சரியா? 304 00:17:11,783 --> 00:17:13,368 ஜிப்ரில், என்னால் நேராக பார்க்கக்கூட முடியவில்லை. 305 00:17:13,450 --> 00:17:15,453 நேற்றிலிருந்து நாம் தொடர்ந்து வேலை செய்கிறோம். 306 00:17:15,536 --> 00:17:18,915 நாம் கஷ்டப்பட்டு முடிக்க வேண்டும். இது வெறும் முதல் பகுதி தான். 307 00:17:22,835 --> 00:17:23,920 இல்லை. 308 00:17:25,130 --> 00:17:26,381 என் ஒட்டகக்கறி. 309 00:17:26,464 --> 00:17:27,882 -கதவைத் திற! -வெளியே எடு! 310 00:17:27,966 --> 00:17:29,843 -ஆற வை! -ஹானி, அதை எடு... 311 00:17:29,926 --> 00:17:31,011 ஐயோ! 312 00:17:31,511 --> 00:17:32,637 ஜிப்ரில், நீர் தெளிக்கும் கருவியை ஆஃப் செய்! 313 00:17:34,222 --> 00:17:35,223 போ, போ, போ. 314 00:17:35,307 --> 00:17:36,933 ஐயோ. ஆஃப் செய்தாயா? 315 00:17:37,434 --> 00:17:40,270 ஐயோ! என் மாமிசத்தை மூடு! 316 00:17:40,854 --> 00:17:43,106 நீர் தெளிக்கும் கருவியை நான் ஆஃப் செய்கிறேன். 317 00:17:43,189 --> 00:17:44,858 -மாமிசத்தை மூடு! -கொஞ்சம் எடு. 318 00:17:44,941 --> 00:17:46,526 -எல்லாவற்றையுமே! -போர்வை இருக்கிறது. 319 00:17:46,610 --> 00:17:48,194 இந்தப் பக்கத்தை மூடிவிட்டேன்! 320 00:17:48,278 --> 00:17:49,696 நோவா, அதைத் திறந்து வை! 321 00:17:49,779 --> 00:17:51,698 நீர் தெளிக்கும் கருவியை நிறுத்து! 322 00:17:51,781 --> 00:17:52,949 இதை எப்படி நிறுத்துவது? 323 00:17:53,575 --> 00:17:55,827 -கடவுளே! -மாமிசத்தை வீணடிக்கப் போகிறேன். 324 00:18:03,168 --> 00:18:04,544 ஜிப்ரில். 325 00:18:04,628 --> 00:18:05,712 உனக்கு ஒன்றுமில்லையே? 326 00:18:06,713 --> 00:18:08,381 -அடக் கடவுளே. -முதலில் மாமிசத்தை மூடு. 327 00:18:08,465 --> 00:18:09,925 சரி. 328 00:18:10,508 --> 00:18:11,718 வாருங்கள், இதை மூடலாம்! 329 00:18:11,801 --> 00:18:14,638 -மாமிசத்தை வெளியே எடுக்க உதவு. -துணியை எடுத்து இதை மூடுங்கள்! 330 00:18:14,721 --> 00:18:16,097 நீங்கள் அந்தப் பக்கம் மூடுங்கள். 331 00:18:38,703 --> 00:18:40,080 கிட்டத்தட்ட எல்லா மாமிசத்தையும் காப்பாற்றிவிட்டோம். 332 00:18:42,791 --> 00:18:44,125 அதுவரை சமையலறையைச் சுத்தம் செய்வோம்... 333 00:18:46,253 --> 00:18:47,337 அது ஒன்றும் முக்கியமில்லை. 334 00:18:48,380 --> 00:18:49,506 முடிந்துவிட்டது. 335 00:18:49,589 --> 00:18:52,968 கொஞ்சம் ஓய்வெடு. நீ ஓய்வெடுப்பதே இல்லை. 336 00:18:55,220 --> 00:18:56,429 நான் கடைசியாக தூங்கியது... 337 00:18:58,932 --> 00:18:59,975 எப்போது தூங்கினேன் என்றே ஞாபகமில்லை. 338 00:19:01,851 --> 00:19:02,852 எப்போது சாப்பிட்டேன் என்றும். 339 00:19:51,818 --> 00:19:53,486 என்ன ஆச்சு? 340 00:19:55,864 --> 00:19:58,575 குச்சியில் ஒட்டகக்கறி என்ற உன் உணவு தீய்ந்துவிட்டதா? 341 00:20:00,827 --> 00:20:01,828 என்... 342 00:20:02,871 --> 00:20:05,498 என் சமையலறை தண்ணீராகிவிட்டது. 343 00:20:06,499 --> 00:20:08,460 எனவே அங்கு வேலை செய்ய முடியாது. 344 00:20:08,543 --> 00:20:10,962 என்ன சொல்ல வேண்டுமோ சொல். 345 00:20:11,880 --> 00:20:14,591 அடடா, வருந்துகிறேன், நண்பா. 346 00:20:14,674 --> 00:20:18,845 உனக்கு இலவசமாக சம்புசா கொண்டு வருகிறேன். 347 00:20:27,020 --> 00:20:29,189 இஸ்குதே கரிஸ் சாப்பிடுகிறேன். 348 00:20:30,106 --> 00:20:31,107 இஸ்குதே கரிஸ். 349 00:20:31,191 --> 00:20:32,859 எல்லோரும் அதைப் பற்றி தான் பேசுகிறார்கள். 350 00:20:32,943 --> 00:20:34,277 மற்றும் மாம்பழ ஜூஸ். 351 00:20:34,861 --> 00:20:35,987 சரி. 352 00:20:36,071 --> 00:20:37,364 சீக்கிரம் கொண்டு வா. 353 00:20:39,699 --> 00:20:42,786 நண்பா, கெஸி தான் பேசுகிறேன். ஃபோனை எடு! என்னை நிராகரிக்கிறாயா? 354 00:20:42,869 --> 00:20:44,496 நான் சாம்பியன்ஷிப் போட்டி பற்றி யோசித்தேன். 355 00:20:44,579 --> 00:20:47,249 யாஸ்ஸினை வலபுற மிட்ஃபீல்டராக போடலாமா? 356 00:20:47,332 --> 00:20:49,376 அதைப் பற்றி யோசி. அந்த வேகம்? 357 00:20:50,043 --> 00:20:51,419 ஆப்டி பைல் மாதிரி. 358 00:20:52,087 --> 00:20:53,088 என்னை திரும்ப அழை. 359 00:21:00,345 --> 00:21:01,346 இந்தா. 360 00:21:02,764 --> 00:21:06,226 உண்மையான சொமாலி உணவு. 361 00:21:06,309 --> 00:21:07,310 நன்றாக சாப்பிடு. 362 00:21:22,242 --> 00:21:23,702 இதை ஒப்புக்கொள்ள வேண்டும். 363 00:21:25,704 --> 00:21:27,914 இது நான் சமைத்ததை விட நன்றாக இருக்கிறது. 364 00:21:27,998 --> 00:21:29,833 இது நீ சமைத்ததை விட நன்றாகத் தான் இருக்கும். 365 00:21:35,547 --> 00:21:38,049 இந்த கண்காட்சிக்காக ஏன் இப்படி பாடுபடுகிறாய்? 366 00:21:39,384 --> 00:21:41,428 உன் தொழில் வெற்றிகரமாக நடக்கிறது. 367 00:21:42,095 --> 00:21:45,599 என்னை மாதிரி இல்லையென்றாலும், உன்னால் முடிந்ததைச் செய்கிறாய். 368 00:21:55,901 --> 00:21:59,821 உள்நாட்டுப் போரின் போது, எனக்கு ஒன்பது வயது, 369 00:21:59,905 --> 00:22:01,323 நான் அப்போது சூரிய குடும்பத்தைப் பற்றி 370 00:22:01,406 --> 00:22:03,116 என் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். 371 00:22:06,202 --> 00:22:08,747 அப்போது திடீரென வெடிச் சத்தம் கேட்டது. 372 00:22:10,248 --> 00:22:14,544 நானும் இட்ரிஸும் ஓட ஆரம்பித்தோம். 373 00:22:15,587 --> 00:22:18,048 முகாம்களை அடைவதற்கு மூன்று நாட்கள் வரை ஓடினோம். 374 00:22:20,091 --> 00:22:24,179 எங்கள் பெற்றோர்கள் எங்கிருந்தனர் என எங்களுக்குத் தெரியாது. 375 00:22:26,473 --> 00:22:29,351 அங்கிருந்து, மேற்கு வெர்ஜினியாவிற்கு ஓடினோம். 376 00:22:29,434 --> 00:22:33,021 அங்கிருந்து இங்கு வந்தோம். 377 00:22:35,982 --> 00:22:39,194 நான் ஓடுவதை நிறுத்தவே இல்லை. 378 00:22:42,322 --> 00:22:44,199 நீதான் இந்த மினசோட்டா மாநில கண்காட்சியில் கிடைத்த 379 00:22:44,282 --> 00:22:46,534 முதல் சோமாலிய சகோதரன். 380 00:22:46,618 --> 00:22:49,037 என்னுடன் நெருக்கமாகிவிட்டாய். 381 00:22:54,251 --> 00:22:56,086 என் சமையலை இங்கு முடித்துக்கொள்கிறேனே. 382 00:22:57,796 --> 00:23:00,715 நீ அகதியான கதையைச் சொல்லி என்னை கவர்ந்துவிட்டாய், 383 00:23:00,799 --> 00:23:02,717 ஆனால் உன்னிடம் உள்நோக்கம் இருக்கிறது! 384 00:23:02,801 --> 00:23:03,802 அப்படியில்லை. 385 00:23:03,885 --> 00:23:06,555 -எல்லோரிடமும் ஒரு உள்நோக்கம் இருக்கும். -என்னிடமில்லை. 386 00:23:07,222 --> 00:23:10,392 உன் சோமாலி சகோதரனுக்காக இதைச் செய். 387 00:23:10,892 --> 00:23:12,352 என்னிடமும் உள்நோக்கம் இருக்கிறது. 388 00:23:13,853 --> 00:23:15,188 அப்படியா? 389 00:23:16,481 --> 00:23:18,483 இந்தக் கண்காட்சியில் உனக்கு கிடைப்பதில் எனக்கும் பங்கு வேண்டும். 390 00:23:18,567 --> 00:23:20,151 -சரி, சம்மதம். -அப்புறம்... 391 00:23:21,027 --> 00:23:22,779 உன் பெயர் பலகையிலுள்ள கொடியை நீக்க வேண்டும். 392 00:23:25,907 --> 00:23:28,243 -கொடியை நீக்க வேண்டும். -சரி. எடுத்துவிடுகிறேன். 393 00:23:34,916 --> 00:23:36,334 என் இஸ்குதே கரிஸ் 394 00:23:36,418 --> 00:23:39,087 உண்மையிலேயே நன்றாக இருந்ததா... 395 00:23:39,170 --> 00:23:40,547 ஹே, உன் கனவில் தான். 396 00:23:41,673 --> 00:23:43,675 உன் கனவில் தான் அது நன்றாக இருக்கும். 397 00:23:44,509 --> 00:23:45,510 சரிதான். 398 00:24:28,428 --> 00:24:30,847 நாம் எதிர்பார்த்த நாள் இன்று தான், மக்களே. 399 00:24:30,931 --> 00:24:33,892 மினசோட்டா மாநில கண்காட்சியில் முதன்முறையாக இந்த உணவு இடம்பெறுகிறது. 400 00:24:33,975 --> 00:24:35,477 குச்சியில் ஒட்டகக்கறி. 401 00:24:36,061 --> 00:24:39,731 இப்போது, நம்மிடையே ஜிப்ரில் ஹாடி இருக்கிறார். 402 00:24:39,814 --> 00:24:43,235 போக்கோர் உணவகத்தின் மூளையாக செயல்படுபவர், இவருடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறோம். 403 00:24:43,318 --> 00:24:44,319 சர்வதேச சந்தை 404 00:24:44,402 --> 00:24:46,404 மினசோட்டா மக்களுக்கு இந்த ஒட்டகக்கறியை 405 00:24:46,488 --> 00:24:49,616 சமைத்துத் தரலாம் என்ற சிறப்பான யோசனையைத் தந்துள்ளனர். 406 00:24:49,699 --> 00:24:50,700 குச்சியில் ஒட்டகக்கறி 407 00:24:50,784 --> 00:24:52,661 மக்களுக்கு இது பிடிக்குமா என்பது தான் கேள்வி. 408 00:24:52,744 --> 00:24:55,121 இது தான் குச்சியில் ஒட்டகக்கறி, 409 00:24:55,205 --> 00:24:59,000 உங்களுக்காக நான் இதை முதன்முறையாக, சுவைத்துப் பார்க்கப் போகிறேன். 410 00:24:59,084 --> 00:25:03,630 நிச்சயமாக, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே உங்களிடம் சொல்லப் போகிறேன். 411 00:25:05,507 --> 00:25:06,925 சரி, சாப்பிடப் போகிறேன். என்னை வாழ்த்துங்கள். 412 00:25:13,640 --> 00:25:14,808 கிட்டத்தட்ட கோழிக்கறி மாதிரி தான் இருக்கிறது. 413 00:25:18,562 --> 00:25:21,189 நன்றாக இருக்கிறது. உள்ளே வாருங்கள், நண்பர்களே. 414 00:25:25,360 --> 00:25:26,987 இது நிச்சயம் பிரபலமாகும். 415 00:25:27,070 --> 00:25:29,614 சரி. உள்ளே வாருங்கள். சாப்பிடலாம். 416 00:25:32,867 --> 00:25:33,910 இதோ வருகிறோம். 417 00:25:33,994 --> 00:25:36,538 நன்றி. ஹாய். இதோ. இன்னொன்று. 418 00:25:40,542 --> 00:25:41,376 நன்றி. 419 00:25:47,382 --> 00:25:50,093 அற்புதம். மிக்க மகிழ்ச்சி. 420 00:25:58,059 --> 00:25:59,060 ஆம். 421 00:26:09,696 --> 00:26:10,697 இதோ. 422 00:26:15,327 --> 00:26:16,912 அற்புதமாக இருக்கிறது, நண்பா. 423 00:26:18,830 --> 00:26:19,664 -உனக்கு ஒன்றுமில்லையே? -ஆம். 424 00:26:19,748 --> 00:26:22,083 -குச்சியில் ஒட்டகக்கறி வருகிறது. -யாருக்கு ஒட்டகக்கறி வேண்டும்? 425 00:26:25,670 --> 00:26:27,047 என்ன நினைக்கிறீர்கள்? 426 00:26:28,298 --> 00:26:29,925 ஆம். அற்புதமாக இருக்கு. 427 00:26:36,389 --> 00:26:39,142 சரி. 428 00:26:50,612 --> 00:26:52,906 என் மகன், பிரபலமாகிவிட்டான். 429 00:27:01,665 --> 00:27:04,042 உன்னால் நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். 430 00:27:13,677 --> 00:27:16,054 உனக்கு இந்த யோசனை பிடிக்கும். 431 00:27:16,137 --> 00:27:18,640 நீ ஃபார்வெர்ட் ஸ்ட்ரைக்கராக விளையாடு. 432 00:27:18,723 --> 00:27:21,810 நான் காவிலின் இடத்தை எடுத்துக்கொள்கிறேன். 433 00:27:22,769 --> 00:27:24,396 காவிலை வலப்புறத்தில் ஆட வைக்கிறேன். 434 00:27:26,523 --> 00:27:28,108 ஃபாரா அவனுடைய இடத்தில் இருக்கட்டும். 435 00:27:30,735 --> 00:27:32,195 யாராலும் நம்மை தடுக்க முடியாது! 436 00:27:42,914 --> 00:27:45,125 ஹே, குடும்பத்திற்கு வரவேற்கிறோம், ஒட்டகக்கறி மனிதரே. 437 00:27:47,627 --> 00:27:48,879 நீ என்ன நினைக்கிறாய்? 438 00:27:48,962 --> 00:27:50,672 ஜிப்ரில், உனக்கு ஒன்றுமில்லையே? 439 00:27:52,883 --> 00:27:54,426 -911க்கு அழை. -ஜிப்ரில்? 440 00:27:54,509 --> 00:27:56,177 -அங்கு விழுந்துவிட்டான். -ஜிப்ரில்! 441 00:27:56,261 --> 00:27:57,178 எழுந்திரு, நண்பா. 442 00:27:57,262 --> 00:28:00,181 ஜிப்ரில்! எழுந்திரு, நண்பா. 443 00:28:00,265 --> 00:28:02,976 ஃபெரிஸ் வீல் அருகே மருத்துவர் தேவை. தகவல் கிடைத்ததா? 444 00:28:03,059 --> 00:28:05,937 -என்ன ஆச்சு? -சிபிஆர் தெரியுமா? 445 00:28:14,362 --> 00:28:15,363 ஜிப்ரில். 446 00:28:16,740 --> 00:28:17,741 ஜிப்ரில். 447 00:28:19,242 --> 00:28:20,243 எழுந்திரு, நண்பா. 448 00:28:21,202 --> 00:28:22,203 ஜிப்ரில். 449 00:28:22,913 --> 00:28:23,914 நான் பேசுவது கேட்கிறதா? 450 00:28:27,208 --> 00:28:28,501 எங்கிருக்கிறீர்கள் என தெரிகிறதா? 451 00:28:30,921 --> 00:28:31,922 ஒன்றுமில்லை. 452 00:28:38,803 --> 00:28:40,263 உங்களுக்கு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். 453 00:28:44,351 --> 00:28:45,518 என் உணவகத்திற்குப் போக வேண்டும். 454 00:28:46,686 --> 00:28:47,687 நான் பார்த்துக்கொள்கிறேன். 455 00:28:49,564 --> 00:28:50,565 நண்பா. 456 00:28:50,649 --> 00:28:52,734 வென்றுவிட்டோம்! எல்லாமே விற்றுவிட்டன. 457 00:28:54,152 --> 00:28:56,279 எல்லோரும் ஒட்டகக்கறியை விரும்புகின்றனர். 458 00:28:57,530 --> 00:28:58,865 நீ சாதித்துவிட்டாய். 459 00:29:20,679 --> 00:29:21,680 நன்றி. 460 00:29:21,763 --> 00:29:23,139 அற்புதம், அற்புதம். 461 00:29:23,223 --> 00:29:25,058 ஆறு பர்கர்கள். ஆறு பர்கர்கள். 462 00:29:25,141 --> 00:29:27,102 -ஆறு பர்கர்கள் கேட்டதா? -ஆறு பர்கர்கள், செஃப். 463 00:29:27,185 --> 00:29:29,020 -வாருங்கள். -மேசை மூன்றுக்கு உணவு தயார்! 464 00:29:29,104 --> 00:29:30,981 -உன் பின்னாடி இருக்கிறது. -சீக்கிரம். 465 00:29:31,064 --> 00:29:33,316 -இல்லை, அதை தயார் செய்யவில்லை. -வருகிறேன். இதோ உங்கள் தட்டுகள். 466 00:29:33,400 --> 00:29:35,068 -சரி. வெளியே எடு. -சரி. 467 00:29:36,027 --> 00:29:37,195 வெயிட்டர் எங்கே? 468 00:29:37,279 --> 00:29:38,530 -மசாலா தயார். -வெயிட்டர்! 469 00:29:38,613 --> 00:29:40,615 -இதைத் தட்டில் அலங்கரிக்கலாம். -அற்புதமாகச் செய்கிறாய். 470 00:29:42,742 --> 00:29:44,703 -யாரிடமாவது ஹெர்ப்ஸ் இருக்கிறதா? -தட்டுகள்! 471 00:29:55,797 --> 00:29:57,424 ஹலோ. வந்ததற்கு நன்றி. 472 00:29:57,507 --> 00:29:59,050 மன்னிக்கவும். 473 00:29:59,134 --> 00:30:01,553 -ஆஹா. -அடடா. நன்றி. 474 00:30:01,636 --> 00:30:02,637 நன்றாகச் சாப்பிடுங்கள். 475 00:30:05,140 --> 00:30:06,641 உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா? 476 00:30:06,725 --> 00:30:08,184 -கண்டிப்பாக. -நான் எடுத்து தருகிறேன். 477 00:30:08,268 --> 00:30:09,102 நன்றி. 478 00:30:09,728 --> 00:30:10,604 வாருங்கள். 479 00:30:14,274 --> 00:30:15,483 அவன் என் தம்பி. 480 00:30:18,153 --> 00:30:19,362 ஹே. 481 00:30:20,113 --> 00:30:21,197 நன்றி. 482 00:30:27,203 --> 00:30:28,204 சகோதரா. 483 00:30:32,834 --> 00:30:34,753 -களைப்பாக இருக்கிறாய். -இல்லை, நன்றாக இருக்கிறேன். 484 00:30:34,836 --> 00:30:37,631 ஒட்டகமாவது தண்ணீர் குடிக்க சற்று ஓய்வெடுக்கும். 485 00:30:38,924 --> 00:30:40,091 நிறைய பேர் இருக்கின்றனர். 486 00:30:40,634 --> 00:30:42,552 நான் முகமதின் கடைக்குப் போகிறேன். 487 00:30:42,636 --> 00:30:44,012 இங்கு ரொம்ப சத்தமாக இருக்கிறது. 488 00:30:52,604 --> 00:30:53,605 முட்டாள். 489 00:30:57,275 --> 00:30:58,318 இதைப் பாரு. 490 00:30:58,401 --> 00:30:59,527 உனக்கு என்ன ஆச்சு? 491 00:30:59,611 --> 00:31:02,155 இது நன்றாகவா இருக்கிறது? 492 00:31:05,909 --> 00:31:07,535 ஹே, பெரியவனே! 493 00:31:07,619 --> 00:31:09,996 அங்கு ரொம்ப போர் அடிக்கிறதா? 494 00:31:10,080 --> 00:31:12,082 என்னை விட சிறியவர்களை நான் மறக்கமாட்டேன். 495 00:31:16,628 --> 00:31:20,632 ஏன் இவர்களுக்கு காலாவதியான வாழைப்பழங்களைத் தருகிறாய், முகமது? 496 00:31:21,466 --> 00:31:23,843 நல்ல வாழைப்பழங்களை நல்ல வாடிக்கையாளர்களுக்காக வைத்திருக்கிறேன். 497 00:31:45,156 --> 00:31:46,783 நீ ஃபைவ் பாடலை இசைத்திருக்கலாம், நண்பா. 498 00:31:47,617 --> 00:31:48,994 அனுபவமற்றவர்களுக்கான நேரம். 499 00:31:49,077 --> 00:31:50,662 என்னை உள்ளே விடு! 500 00:32:00,380 --> 00:32:03,800 ஜிப்ரில் சோமாலிய உணவுகளை தொடர்ந்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார். 501 00:32:04,301 --> 00:32:06,928 நியூ யார்க்கில் முதல் சோமாலிய உணவகத்தை திறக்க உதவினார். 502 00:32:07,012 --> 00:32:09,556 2015 இல் சிறந்த ஆப்பிரிக்க உணவகம் என்ற பெயரை, இவ்வுணவகத்திற்கு 503 00:32:09,639 --> 00:32:11,182 நியூ யார்க் டைம்ஸ் வழங்கியது. 504 00:32:11,683 --> 00:32:15,604 ஒட்டகக்கறி பர்கர் அவரின் பிரத்தியேக உணவாகிவிட்டது. 505 00:33:12,994 --> 00:33:13,912 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிகைத் தொடரைத் தழுவியது 506 00:33:13,995 --> 00:33:15,997 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்