1 00:00:01,127 --> 00:00:02,963 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:03,046 --> 00:00:04,965 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:10,113 --> 00:01:12,782 இப்போது ஒளிபரப்பாவது: “வீட்டிற்குள் அணியும் கை” 4 00:01:13,491 --> 00:01:18,914 உண்மை கதையை தழுவியது 5 00:01:26,755 --> 00:01:29,174 அந்த கொலைகளை சால்வடோரியன்கள் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள். 6 00:01:29,841 --> 00:01:30,926 ஞாயிற்றுக்கிழமை, 7 00:01:31,009 --> 00:01:34,095 அந்த இடத்தில் அமெரிக்கா தலையிட்டதை ஜனாதிபதி ரீகன் நியாயப்படுத்தினார். 8 00:01:34,179 --> 00:01:36,431 லத்தீன் அமெரிக்காவில் கியூபா மட்டும் இருந்தது. 9 00:01:36,514 --> 00:01:39,017 இன்று, நிக்கராகுவா, கிரானாடா இருக்கின்றன, 10 00:01:39,100 --> 00:01:42,354 மற்றும் எல் சால்வடோரில் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. 11 00:01:42,437 --> 00:01:44,314 அவர்களது மேற்கோள்கள் நமக்குத் தேவையில்லை. 12 00:01:44,856 --> 00:01:48,860 மேற்கு அரை கோளத்திற்கு கம்யூனிச புரட்சியை கொண்டு வர விரும்பும் சோவியத்தின் எண்ணத்தை 13 00:01:49,361 --> 00:01:50,987 வெளிப்படுத்தும் ஆயிரக்கணக்கான ஆவணங்களை, 14 00:01:51,071 --> 00:01:54,157 கிரானாடாவை விடுதலை செய்த அமெரிக்க படைகள் கைப்பற்றினர். 15 00:01:55,325 --> 00:01:58,536 எனவே, சாண்டினிஸ்ட்டாஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் எண்ணங்கள் 16 00:01:58,620 --> 00:01:59,996 நமக்கு தெளிவாகப் புரிகிறது. 17 00:02:00,080 --> 00:02:01,498 பயங்கரவாதத்திற்கு அவர்கள் துணை போவதை, 18 00:02:01,581 --> 00:02:03,500 நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 19 00:02:03,583 --> 00:02:06,920 ரெட் பிரிகேட்ஸ் என்று அழைக்கப்படும் இத்தாலிய மோசமான பயங்கரவாதிகளுக்கு, 20 00:02:07,003 --> 00:02:08,087 நிக்கராகுவா அடைக்கலம் கொடுத்துள்ளது. 21 00:02:08,796 --> 00:02:10,298 உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமா? 22 00:02:10,799 --> 00:02:13,093 -...சர்வதேச போதை வியாபாரத்தில். -வேண்டாம். 23 00:02:14,636 --> 00:02:16,596 இங்கே மூன்று மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறீர்கள். 24 00:02:16,680 --> 00:02:19,057 சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யுங்கள், அல்லது கிளம்புங்கள். 25 00:02:20,392 --> 00:02:22,811 ...போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 26 00:02:24,020 --> 00:02:27,566 கம்யூனிச கொரில்லாக்களின் பயமுறுத்தல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டை தைரியத்தோடு எதிர்நோக்கிய 27 00:02:27,649 --> 00:02:30,652 எல் சால்வடோர் மக்களின் மனதிடத்தை வெளிப்படுத்தும் காட்சியை நீங்கள் நினைவு கூர முடியும், 28 00:02:31,736 --> 00:02:34,531 ஹே, என்ன தெரியுமா? ஹே. 29 00:02:40,704 --> 00:02:41,580 ஹாஃப்வே ஹவுஸ் கஃபே 30 00:02:41,663 --> 00:02:46,877 சியாலா 31 00:03:09,608 --> 00:03:11,109 சகோதரி? 32 00:03:15,447 --> 00:03:16,531 அன்பு தங்கையே! 33 00:03:17,616 --> 00:03:18,867 என்னை மன்னிக்கவும்! 34 00:03:18,950 --> 00:03:22,495 இரண்டு மணிநேரம் எடுக்க வேண்டிய பயணம், நான்கு மணிநேரம் எடுத்துவிட்டது. 35 00:03:22,579 --> 00:03:23,622 மன்னிக்கவும். 36 00:03:23,705 --> 00:03:25,373 ஏன் உள்ளே காத்திருக்கவில்லை? 37 00:03:25,457 --> 00:03:27,542 சோடா வாங்க மட்டும் தான் பணம் இருந்தது, 38 00:03:28,084 --> 00:03:30,503 உள்ளே பிரெஞ்சு ப்ரைஸ் வாசனை வந்தது, எனக்குப் பசிக்கிறது. 39 00:03:30,587 --> 00:03:33,131 உலகில் இருக்கும் மொத்த பிரெஞ்சு ப்ரைஸையும் உனக்கு வாங்கி கொடுக்கிறேன். 40 00:03:34,007 --> 00:03:35,050 இரு, உன்னைப் பார்க்கலாம். 41 00:03:35,133 --> 00:03:36,635 வளர்ந்துவிட்டாய்! 42 00:03:39,095 --> 00:03:41,139 உண்மைதான், உன்னை விட நான் உயரம்! 43 00:03:42,974 --> 00:03:44,434 ஆனால் கவலைப்படாதே... 44 00:03:44,517 --> 00:03:46,978 உன் மார்பகங்கள் தான் பெரியவை. 45 00:03:47,062 --> 00:03:49,940 உன்னுடையது என்னுடையதை விட பெரியது! 46 00:03:50,523 --> 00:03:51,483 வா போகலாம்! 47 00:03:51,566 --> 00:03:52,943 போகலாம் வா! 48 00:03:54,778 --> 00:03:55,779 பரவாயில்லை, இல்லையா? 49 00:03:56,613 --> 00:03:58,490 நீ இப்போது பணக்காரி ஆகிவிட்டாயா, அக்கா? 50 00:03:58,573 --> 00:03:59,991 இன்னும் இல்லை. 51 00:04:00,075 --> 00:04:01,785 இது என் பாஸின் கார். 52 00:04:01,868 --> 00:04:03,119 நாம் போகலாம்! 53 00:04:03,620 --> 00:04:04,871 அருமையாக இருக்கு. 54 00:04:04,955 --> 00:04:07,249 வீட்டைப் பார்க்கலாம் இரு! 55 00:04:07,332 --> 00:04:08,792 நீ நம்பமாட்டாய். 56 00:04:10,919 --> 00:04:12,379 போகலாம். 57 00:04:20,595 --> 00:04:22,222 காரில் சாப்பிடலாம் என்று சொன்னேனே தவிர, 58 00:04:22,305 --> 00:04:24,599 எண்ணெய் கைகளை எல்லா இடத்திலும் வைக்கலாம் என்று சொல்லவில்லை! 59 00:04:39,573 --> 00:04:41,366 பெல்-ஏர் 60 00:04:45,203 --> 00:04:46,955 அடக் கடவுளே! 61 00:04:47,038 --> 00:04:49,457 -இது திரைப்படத்தில் வருவது போல இருக்கிறது. -ஆமாம். 62 00:04:50,292 --> 00:04:52,252 இங்கே ராம்போ வாழ்கிறாரா? 63 00:04:52,335 --> 00:04:53,795 எனக்கு அவரைப் பிடிக்கும்! 64 00:05:10,645 --> 00:05:12,647 இங்கே யார் வாழ்கிறார்கள்? 65 00:05:12,731 --> 00:05:14,608 நாம்தான். 66 00:05:19,070 --> 00:05:21,239 மிஸ் டான்ஃபோர்த், நாங்கள் வந்து விட்டோம்! 67 00:05:22,991 --> 00:05:25,911 இவள் தான் சியாலா. 68 00:05:26,578 --> 00:05:29,080 ஓ, என் அன்பே. 69 00:05:29,748 --> 00:05:32,584 உன்னைப் பாரேன், ஐயோ பாவம். 70 00:05:32,667 --> 00:05:34,169 அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. 71 00:05:34,753 --> 00:05:37,505 அவளை நீ என்னவென்று அழைத்தாய், மரியானா? 72 00:05:38,131 --> 00:05:42,761 உன் கன்னுக்குட்டியா? எனக்குத் தெரியும். டார்டியா! 73 00:05:42,844 --> 00:05:44,137 இல்லை, டொரிட்டா. 74 00:05:44,221 --> 00:05:47,432 டொரிட்டா. ஏன் என்று புரிகிறது. 75 00:05:47,515 --> 00:05:50,560 எங்கும், தன் பையைத் தானே சுமக்கிறாள் என்பதால். 76 00:05:50,644 --> 00:05:51,853 மிக அற்புதம். 77 00:05:52,437 --> 00:05:58,568 நீண்ட பயணத்திற்குப் பிறகு என்னிடம் நல்ல உணவு இருக்கிறது. 78 00:06:01,696 --> 00:06:02,697 நன்றி. 79 00:06:02,781 --> 00:06:06,868 நீ வருவதாக என்னிடம் மரியானா சொன்ன போது, 80 00:06:06,952 --> 00:06:10,080 நீ இங்கே தங்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தினேன். 81 00:06:10,664 --> 00:06:13,625 சகோதரிகள் ஒன்றாக இருக்க வேண்டும். 82 00:06:13,708 --> 00:06:16,002 அதை சாப்பிடு! அது ஐஸ் கிரீம். 83 00:06:20,590 --> 00:06:23,301 கொடு, நான் உதவுகிறேன். ஐயோ பாவம். 84 00:06:25,262 --> 00:06:26,763 என்னால் அதைத் திறக்க முடியாது என நினைக்கிறாரா? 85 00:06:27,556 --> 00:06:29,349 -நான் குழந்தை இல்லை. -அவங்களே திறக்கட்டும் விடு. 86 00:06:29,432 --> 00:06:31,351 இந்தா, செனோரீட்டா! 87 00:06:32,352 --> 00:06:36,064 குடும்பத்தார் ஒன்றாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 88 00:06:37,315 --> 00:06:39,943 நீ இங்கே சௌகரியமாக இருந்து கொள். 89 00:06:40,026 --> 00:06:44,155 நான் போய் தபால் பெட்டியிலிருந்து என் தபால்களை எடுத்து வருகிறேன். 90 00:06:47,909 --> 00:06:49,619 இந்த வீடு, ஒரு நிஜ அரண்மனை. 91 00:06:50,328 --> 00:06:52,747 எங்களைத் தவிர இங்கே வேறு யாரும் வாழ்வதில்லை. 92 00:06:53,623 --> 00:06:54,791 எல்லோரும் எங்கே? 93 00:06:54,874 --> 00:06:56,167 அவங்களுடைய பிள்ளைகள் இங்கே வாழவில்லையா? 94 00:06:56,251 --> 00:06:57,711 ஒரு மகன் நியூயார்க்கில் இருக்கிறான். 95 00:06:57,794 --> 00:06:59,588 ஒரே ஒரு முறை அவனை சந்தித்தேன். 96 00:06:59,671 --> 00:07:00,797 ஒரு மகளும் இருக்கிறாள், 97 00:07:00,881 --> 00:07:03,758 ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதில்லை. 98 00:07:05,927 --> 00:07:09,806 இது திருமதி. டான்ஃபோர்த்தின் அறை, நான் அங்கே தூங்குவேன். 99 00:07:12,851 --> 00:07:14,394 அவர் ரானல்ட் ரீகனா? 100 00:07:16,021 --> 00:07:17,397 இவர்களின் குடும்ப நண்பர். 101 00:07:17,480 --> 00:07:19,774 பல வருடங்களாக ஒரே தேவாலயத்திற்குப் போகிறார்கள். 102 00:07:20,609 --> 00:07:22,569 நம் நாட்டை அவர் தான் அழித்தார் என்று அவங்களிடம் சொன்னாயா? 103 00:07:22,652 --> 00:07:24,029 இல்லை, சொல்ல மறந்துவிட்டேன். 104 00:07:24,112 --> 00:07:26,197 அவருடைய படை பெண்களைக் கொல்லும் மற்றும்... 105 00:07:26,281 --> 00:07:27,699 சியாலா! 106 00:07:28,658 --> 00:07:32,287 திருமதி. டான்ஃபோர்த் அன்பானவர் என்றாலும் அவர் என்னுடைய பாஸ். 107 00:07:32,370 --> 00:07:34,122 மரியானா, அன்பே! 108 00:07:34,205 --> 00:07:38,251 இதோ வருகிறேன்! உனக்கு சிறந்த அறை கொடுத்திருக்கிறார், அதோ அங்கே. 109 00:07:38,752 --> 00:07:41,671 உள்ளே கழிவறை இருக்கிறது. சில உடைகள் கொண்டு வந்தேன். 110 00:07:42,255 --> 00:07:44,674 போய் குளி. முட்டாள்தனமாக இருக்காதே. 111 00:07:45,675 --> 00:07:47,719 நாற்றமடிக்கிறாய்! 112 00:07:48,595 --> 00:07:50,805 -மரியானா! -இதோ வருகிறேன். 113 00:09:13,805 --> 00:09:15,223 என்ன செய்கிறாய்? 114 00:09:17,309 --> 00:09:19,728 நான் இங்கே தூங்க வேண்டும். 115 00:09:19,811 --> 00:09:21,855 உனக்கென்று சொந்தமாக ஒரு அறை இருக்கிறதே. 116 00:09:21,938 --> 00:09:24,190 நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. 117 00:09:24,274 --> 00:09:26,401 அது வந்து... 118 00:09:27,652 --> 00:09:32,866 இருமிக் கொண்டே இருந்து திருமதி. டான்ஃபோர்த் என்னை எழுப்பிவிட்டாங்க. 119 00:09:34,576 --> 00:09:36,119 அவங்களுக்கு என்ன பிரச்சினை? 120 00:09:37,495 --> 00:09:39,664 சிறு வயதில் நிறைய புகை பிடிச்சாங்க. 121 00:09:39,748 --> 00:09:44,169 இப்போது அவங்களுக்கு நுரையீரல் நோய். 122 00:09:47,255 --> 00:09:49,591 நீ உன்னுடைய அறைக்குப் போ. 123 00:09:49,674 --> 00:09:50,967 நான் தூங்க வேண்டும். 124 00:09:54,179 --> 00:09:58,308 குழந்தைகளாக நாம் ஒரே படுக்கையில் தூங்கியது நினைவிருக்கிறதா? 125 00:10:02,395 --> 00:10:04,689 உன் கால்களில் முடி இருப்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை! 126 00:10:07,317 --> 00:10:09,486 உன் கால்கள் ஜில்லுன்னு இருக்கு. 127 00:10:09,569 --> 00:10:12,739 உன் கால் நகங்களை வெட்டு, மிருகமே! 128 00:10:15,700 --> 00:10:18,745 இப்போது உன் அறையில் போய் தூங்கு. 129 00:10:18,828 --> 00:10:20,580 நான் சீக்கிரமாக எழுந்துகொள்ள வேண்டும். 130 00:11:28,523 --> 00:11:30,817 அவை எவ்வளவு ருசியாக இருக்கும் என பலருக்கும் தெரியாது. 131 00:11:36,489 --> 00:11:37,657 ஆங்கிலம் தெரியாது. 132 00:11:38,575 --> 00:11:39,826 உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா? 133 00:11:40,827 --> 00:11:41,870 கொஞ்சம் தெரியும். 134 00:11:51,504 --> 00:11:52,923 எல் சால்வடோர். 135 00:11:53,423 --> 00:11:54,674 ஜப்பான். 136 00:12:21,534 --> 00:12:27,040 ஆமாம். இது உள்ளே புதைய வேண்டும். எனவே, தோண்டு, சரியா? ஆமாம். 137 00:12:31,711 --> 00:12:33,088 சியாலா. 138 00:12:33,880 --> 00:12:35,215 ரே. 139 00:12:35,298 --> 00:12:37,217 -ரே? ரே. -ரே. 140 00:12:38,301 --> 00:12:40,554 முழுமையாக ஈடுபடுவதே நமது சர்வதேச மாணவர்களுக்கு 141 00:12:40,637 --> 00:12:44,224 சரியான வழிமுறையாக இருக்கும் என்று நாங்கள் தெரிந்துகொண்டோம். 142 00:12:45,392 --> 00:12:48,270 மதிய வேளையில் அவளுக்கு இஎஸ்எல் வகுப்புகள் இருக்கும். 143 00:12:49,646 --> 00:12:52,065 இதோ மிஸ் டண்ணிங். மிகத் திறமையானவர். 144 00:12:52,566 --> 00:12:54,609 மிஸ் டண்ணிங்? இவள் தான் சியாலா. 145 00:12:54,693 --> 00:12:56,236 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, சியாலா. 146 00:12:57,988 --> 00:13:00,365 வருந்துகிறேன். என்னிடம் சொன்னார்கள். 147 00:13:00,448 --> 00:13:03,952 நான் வந்து... நான் வகுப்புக்குப் போக வேண்டும். 148 00:13:04,035 --> 00:13:06,621 நான் இல்லாமல் தொடங்க முடியாது. எங்களோடு இணைந்ததற்கு நன்றி. 149 00:13:09,749 --> 00:13:14,379 எனவே, நேற்று நாம் அமெரிக்க பிரபுத்துவத்தை 150 00:13:14,462 --> 00:13:17,215 ஜாக்சன் கடுமையாக எதிர்த்தார் என்று கற்றுக் கொண்டோம். 151 00:13:17,299 --> 00:13:19,676 அவர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், 152 00:13:19,759 --> 00:13:23,805 சாதாரண மக்களுக்கான ஜனாதிபதியாக தன்னை காட்டிக் கொண்டார். 153 00:13:25,348 --> 00:13:30,937 இப்போது, நம் புத்தகத்தில் 82வது பக்கத்தை எடுப்போம். எண்பத்தி இரண்டு. 154 00:13:35,358 --> 00:13:37,277 உன்னால் முடிந்தவரை புரிந்துகொள். 155 00:13:38,153 --> 00:13:39,779 -இந்தா. -பாத்ரூம்? 156 00:13:39,863 --> 00:13:40,864 கண்டிப்பாக. 157 00:13:41,448 --> 00:13:45,076 சரி, எல்லோரும் எடுத்துவிட்டீர்களா? யார் இதை உரக்க படிப்பீர்கள்? 158 00:13:45,160 --> 00:13:48,121 மேற்கு பெவெர்லி ஹில்ஸுக்கு வருக 1986-இன் ஹை ஸ்கூல்! 159 00:13:54,294 --> 00:13:55,837 நீ என்ன நினைத்தாய்? 160 00:13:55,921 --> 00:13:58,340 பள்ளியிலிருந்து அப்படியே கிளம்பிவிட்டாய் என்றார்கள். 161 00:13:58,423 --> 00:13:59,549 எங்கே போனாய்? 162 00:13:59,633 --> 00:14:00,884 சற்று தூரம் நடக்க போனேன். 163 00:14:00,967 --> 00:14:02,969 நீ அப்படி செய்ய முடியாது. 164 00:14:03,053 --> 00:14:05,096 யார் சொல்வதும் எனக்குப் புரியவில்லை. 165 00:14:05,180 --> 00:14:06,640 முட்டாள் போல உணர்கிறேன். 166 00:14:07,599 --> 00:14:10,101 நாள் முழுவதும் இந்த மணியை அடிக்கிறார்கள் 167 00:14:10,185 --> 00:14:11,895 நான் பல அறைகளுக்கும் போக வேண்டி இருக்கிறது. 168 00:14:13,313 --> 00:14:15,440 உன்னோடு இங்கேயே இருக்க விரும்புகிறேன். 169 00:14:15,523 --> 00:14:17,859 ஆனால் நான் பிஸியாக இருப்பது தெரியவில்லையா? 170 00:14:17,943 --> 00:14:19,527 என்னால் உன்னைப் பார்த்துக்கொள்ள முடியாது. 171 00:14:19,611 --> 00:14:21,321 நீ கண்டிப்பாக பள்ளிக்குப் போக வேண்டும்! 172 00:14:21,404 --> 00:14:23,281 இந்த முட்டாள்கள் நிறைய விதிகள் வைத்திருக்கிறார்கள். 173 00:14:24,282 --> 00:14:25,992 எல் சால்வடோரில், இதை விட சுதந்திரமாக இருந்தேன். 174 00:14:26,076 --> 00:14:30,163 ஆமாம், ஓசோவாவின் வீரர்களால் மரணம் அடைவதற்காகவா? 175 00:14:32,040 --> 00:14:34,834 இனி நீ தனியாக வீட்டை விட்டுப் போவதை திருமதி. டான்ஃபோர்த் விரும்பவில்லை. 176 00:14:34,918 --> 00:14:36,211 அவங்களிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும். 177 00:14:37,796 --> 00:14:40,131 இந்த சுற்றுப்புறம் ஆபத்தானது என்று அவங்க நினைக்கிறாங்களா? 178 00:14:40,215 --> 00:14:44,052 நான் இங்கே வேலை செய்யும் வரை, நீ அவங்களுடைய விருந்தாளி. 179 00:14:44,135 --> 00:14:46,680 பிரச்சினைகள் ஏற்படுத்தாதே, புரிகிறதா? 180 00:14:48,223 --> 00:14:50,809 நான் திருமதி. டான்ஃபோர்த்திற்கு மருந்து கொடுக்க வேண்டும். 181 00:14:50,892 --> 00:14:53,228 வீட்டை விட்டு போக நினைக்காதே. 182 00:14:55,188 --> 00:14:57,023 ஏர்வுல்ஃப் 183 00:15:02,362 --> 00:15:06,783 சியாலா. இதோ இருக்கிறாய். உள்ளே வா, உள்ளே வா. 184 00:15:07,284 --> 00:15:08,410 ஐயோ பாவம்! 185 00:15:09,744 --> 00:15:11,746 இவற்றை எனக்காக வெட்டினாயா? 186 00:15:11,830 --> 00:15:14,583 நன்றாக இருக்கிறது, நன்றி. 187 00:15:16,626 --> 00:15:20,463 இந்த நிகழ்ச்சி பற்றித் தெரியுமா? ஏர்வுல்ஃப்? 188 00:15:21,047 --> 00:15:23,174 எல் சால்வடோரில் இந்த நிகழ்ச்சி வருமா? 189 00:15:23,258 --> 00:15:25,010 நீ ஆங்கிலம் பேச அது உதவும். 190 00:15:31,141 --> 00:15:35,478 சேனல் நம்பர் ஃபைவ். நானும் அதைத்தான் பயன்படுத்துவேன். 191 00:15:37,522 --> 00:15:42,903 பரவாயில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் சொல்லமாட்டேன். 192 00:15:57,709 --> 00:15:59,669 நீ என்ன வேலை செய்கிறாய்? 193 00:16:01,046 --> 00:16:04,090 என்ன செய்கிறாய்... என் கழுத்தில் துண்டைக் கட்டுகிறாய். 194 00:16:04,174 --> 00:16:05,926 நான் பார்ப்பதற்கு குழந்தை போல இருக்கிறேனா? 195 00:16:06,426 --> 00:16:09,221 என்னை இப்படி நெருங்கி வந்தால் என்னால் மூச்சு விடமுடியாது. 196 00:16:15,227 --> 00:16:18,897 -நீ எங்கே போகிறாய்? -நீச்சல் அடிக்கப் போகிறேன். 197 00:16:18,980 --> 00:16:20,148 நீ இன்று நீச்சல் அடிக்கக்கூடாது. 198 00:16:20,232 --> 00:16:22,817 திருமதி. டான்ஃபோர்த்தின் பிரிட்ஜ் கிளப் நண்பர்கள் இங்கே வரப்போகிறார்கள். 199 00:16:24,152 --> 00:16:26,821 விருப்பம் போல நான் நீச்சலடிக்கலாம் என சொன்னார்கள். 200 00:16:26,905 --> 00:16:29,658 -நீ வேலையை முடித்த பிறகு என்னோடு வந்து நீந்து. -அதெல்லாம் இங்கே நடக்காது. 201 00:16:31,201 --> 00:16:33,286 அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. நாங்கள் தோழிகள். 202 00:16:33,370 --> 00:16:35,789 சியாலா, இந்த நாட்டில், எல்லாவற்றிற்கும் அர்த்தம் உண்டு. 203 00:16:35,872 --> 00:16:37,290 அதை மறக்காதே. 204 00:17:13,785 --> 00:17:16,662 சியாலா! 205 00:17:19,541 --> 00:17:21,751 சியாலா, என் நண்பர்கள் வந்து விட்டார்கள். 206 00:17:21,834 --> 00:17:24,254 நீ நீச்சலடித்து முடித்த பிறகு, வந்து ஹாய் சொல்லு. 207 00:17:24,754 --> 00:17:27,716 நீ செய்வதை பார்த்தால், எனக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருக்கிறது. 208 00:17:28,216 --> 00:17:30,051 ஆழமில்லாத பகுதியில் போய் நீந்து. 209 00:17:32,345 --> 00:17:34,514 அந்த சாண்ட்விச்சுகள் பார்க்க அருமையாக உள்ளன. 210 00:17:34,598 --> 00:17:37,058 -பார்க்க மிக நன்றாக உள்ளன, இல்லையா? -எங்களுக்கு பசிக்கிறது. 211 00:17:37,142 --> 00:17:38,310 அவள் இதோ வருகிறாள். 212 00:17:38,393 --> 00:17:40,145 உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டோம்! 213 00:17:40,228 --> 00:17:42,522 எனக்கு அந்தப் பெயர் பிடிச்சிருக்கு. சியாலா. 214 00:17:42,606 --> 00:17:45,358 சமீபத்தில் தான் எல் சால்வடோரில் இருந்து வந்தாள். 215 00:17:45,442 --> 00:17:48,904 அங்கே மோசமான உள்நாட்டுப் போர் நடப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 216 00:17:48,987 --> 00:17:52,282 ஆமாம், கம்யூனிஸ்டுகள் அரசாங்கத்தை வீழ்த்தப் பார்க்கிறார்கள். 217 00:17:52,365 --> 00:17:54,326 ரானியைத் தான் பாராட்ட வேண்டும். 218 00:17:54,409 --> 00:17:56,536 அதனால் தான், அவளது கை... 219 00:17:56,620 --> 00:17:58,371 நான் அப்படி நினைக்கவில்லை. 220 00:17:58,455 --> 00:18:01,708 அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் போது ஒரு கார் விபத்து நடந்தது. 221 00:18:01,791 --> 00:18:04,169 -அது சரி தானே, மரியானா? -ஆமாம், சரி தான். 222 00:18:06,379 --> 00:18:07,464 -பாவம். -ஆமாம். 223 00:18:07,547 --> 00:18:09,132 ஓ, இங்கே வந்து உட்காரு. 224 00:18:09,216 --> 00:18:12,510 ஜின் ரம்மி எப்படி விளையாடுவது என்று உனக்கு நாங்கள் சொல்லித் தருகிறோம். 225 00:18:14,221 --> 00:18:15,680 கட்! சரி. 226 00:18:19,476 --> 00:18:20,477 நீ நலமா? 227 00:18:23,980 --> 00:18:25,232 ஹலோ. 228 00:18:32,405 --> 00:18:33,490 என்ன? 229 00:18:35,742 --> 00:18:37,202 என் மீது கோபமா? 230 00:18:41,790 --> 00:18:43,708 நான் எதுவும் சிறப்பாக செய்யவில்லை. 231 00:18:45,710 --> 00:18:47,087 அவள் என்னை அப்படி நடத்துகிறாள். 232 00:18:51,299 --> 00:18:53,176 எனக்கு கவலை இல்லை. பரவாயில்லை. 233 00:18:55,595 --> 00:18:58,557 நீ அவங்களுடைய செல்லம், நான் அவங்களுடைய வேலைக்காரி. 234 00:19:11,570 --> 00:19:15,991 சியாலா, செல்லமே! உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கிறது! 235 00:19:16,074 --> 00:19:18,159 உனக்கு ஒரு பரிசு வாங்கி இருக்கிறோம். 236 00:19:20,161 --> 00:19:21,496 வண்டியில் ஏறு. 237 00:19:22,956 --> 00:19:25,375 இது மயோஎலக்ட்ரிக், 238 00:19:25,458 --> 00:19:29,754 அதாவது உன் தசைகள் மூலம் இயற்கையாக உருவாகும் சிக்னல்கள் இதை கட்டுப்படுத்தும். 239 00:19:29,838 --> 00:19:32,048 இது மிகப் புதுமையான தொழில்நுட்பம். 240 00:19:32,132 --> 00:19:35,010 இது மிக உயர்ந்த தொழில்நுட்பம், 241 00:19:35,093 --> 00:19:37,512 மற்றும் தானாக உன் உடல் கொண்டே இதை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறாள். 242 00:19:37,596 --> 00:19:40,140 ஏராளமானோர் உபயோகிக்கும் இவற்றின் விலை 5,000த்தில் இருந்து ஆரம்பிக்கிறது. 243 00:19:40,223 --> 00:19:41,975 ஆனால் முழு கை மற்றும் கையுறை வேண்டும் என்றால், 244 00:19:42,058 --> 00:19:43,810 விலை 15,000 ஆகும். 245 00:19:43,894 --> 00:19:47,188 எங்களது பிரிட்ஜ் கிளப்பின் எல்லா பெண்களும் பணம் கொடுக்க போவதால், 246 00:19:47,272 --> 00:19:48,899 விலை ஒரு பொருட்டல்ல. 247 00:19:48,982 --> 00:19:51,151 அதன் விலை பதினைந்தாயிரம் டாலர்கள் என்று சொல்கிறாள். 248 00:19:51,234 --> 00:19:52,944 அதை வைத்துக்கொண்டு ஒரு வீடு வாங்கலாம். 249 00:19:53,028 --> 00:19:54,321 உங்களுக்கு மிகப் பெரிய மனசு. 250 00:19:55,363 --> 00:19:57,490 யார் பெயருக்கு காசோலை எழுதட்டும்? 251 00:20:22,265 --> 00:20:23,433 பிராஸ்தெட்டிக்ஸ் & ஆர்தோடிக்ஸ் 252 00:20:42,661 --> 00:20:44,412 சீக்கிரம்! பேருந்தை தவற விட்டுவிடுவாய். 253 00:20:46,873 --> 00:20:49,000 சரி, நீ செய்யலாம், ஆனால் சீக்கிரம் செய். 254 00:20:54,130 --> 00:20:55,590 சியாலா, வா போகலாம்! 255 00:20:55,674 --> 00:20:57,592 வா! நாம் போகலாம்! 256 00:22:03,783 --> 00:22:07,412 அது செடியின் கழிவு. குப்பை. 257 00:22:07,495 --> 00:22:09,414 இல்லை, நான் அதை காப்பாற்றப் போகிறேன். 258 00:22:09,497 --> 00:22:11,958 நான் காப்பாற்றுகிறேன். 259 00:22:18,548 --> 00:22:20,467 சரி. 260 00:22:22,886 --> 00:22:25,388 -பிரெட் வேண்டுமா? -ஆமாம், நன்றி. 261 00:22:26,514 --> 00:22:28,350 அது அருமையாக இருக்கு. 262 00:22:30,602 --> 00:22:33,063 சியாலா, அன்பே, உன் புது கை எங்கே? 263 00:22:34,689 --> 00:22:37,067 -உன் கையைப் பற்றி கேட்கிறார். -ஓ, கடவுளே! 264 00:22:37,150 --> 00:22:39,361 -அதை கழற்றினேன், வெளியே இருக்கிறது. -அதை வெளியே வைத்தாயா? 265 00:22:39,986 --> 00:22:43,573 அது நனையக் கூடாது, செல்லமே. அது வீட்டிற்குள் போட வேண்டிய கை! 266 00:22:43,657 --> 00:22:46,076 நீ அவளிடம் சொல்ல வேண்டும், மரியானா. 267 00:22:46,159 --> 00:22:49,120 தண்ணீர் தெளிப்பான்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கும் என்று நம்புவோம். 268 00:22:49,204 --> 00:22:50,205 சரி. 269 00:22:52,040 --> 00:22:54,042 -அஸ்பாரகஸ்? -வேண்டாம். 270 00:22:54,668 --> 00:22:59,798 சரி, நமக்கு ஸ்கங்க்குகளால் பிரச்சினை இருக்கிறது. சொரில்லோஸ். 271 00:23:02,050 --> 00:23:04,094 தனியாக போராட முடியாது. 272 00:23:05,303 --> 00:23:07,764 ஹேய், நான் உன்னிடம் தான் பேசுகிறேன். 273 00:23:11,935 --> 00:23:15,272 இல்லை! அது நனையக் கூடாது. அது உள்ளே அணியும் கை. 274 00:23:18,024 --> 00:23:21,695 அது முட்டாள்தனம். எழுந்து வந்து எனக்கு உதவி செய். 275 00:23:28,118 --> 00:23:29,119 அழுக்கு. 276 00:23:29,202 --> 00:23:30,620 அழுக்கு. 277 00:23:33,373 --> 00:23:34,499 கடவுளே! 278 00:23:34,583 --> 00:23:35,584 சியாலா. 279 00:23:36,293 --> 00:23:38,378 அது காலை விட மாட்டேன் என்கிறது! 280 00:23:38,461 --> 00:23:40,839 -அது விடவில்லை. -இரு. சியாலா. 281 00:23:44,801 --> 00:23:45,802 மெல்லமாக எடு. 282 00:23:46,469 --> 00:23:47,512 ஒன்றும் பிரச்சினை இல்லை. 283 00:23:48,471 --> 00:23:49,472 நல்லது. 284 00:23:55,604 --> 00:23:57,063 ஐயோ. 285 00:23:59,024 --> 00:24:01,526 அது ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. 286 00:24:08,533 --> 00:24:11,077 ரொம்ப நாட்களுக்கு முன்பு, 287 00:24:11,786 --> 00:24:14,205 நான் மேன்சானரில் இருந்தேன். 288 00:24:14,289 --> 00:24:16,166 மேன்சானர் என்றால் என்னவென்று தெரியுமா? 289 00:24:17,918 --> 00:24:23,632 அது ஒரு சிறைச்சாலை மாதிரி, ஜப்பானியர்களையும், ஜப்பானிய-அமெரிக்கர்களையும் 290 00:24:23,715 --> 00:24:26,509 இரண்டாம் உலகப் போரின்போது அங்கு வைத்திருந்தனர். 291 00:24:28,678 --> 00:24:31,890 -புரிகிறதா? -ஏதாவது தவறு செய்தீர்களா? 292 00:24:33,225 --> 00:24:37,062 இல்லை, நான் அப்போது ஒரு குழந்தை. சிறு குழந்தை. 293 00:24:39,105 --> 00:24:41,942 நான் ஜப்பானியன் என்பதால் என்னை அங்கே வைத்திருந்தனர். 294 00:24:42,567 --> 00:24:46,863 பல வருடங்களுக்கு பிறகு. 295 00:24:46,947 --> 00:24:52,452 அரசாங்கம் எனக்கு 20,000 டாலர் மதிப்புள்ள காசோலையைத் தந்தனர். 296 00:24:53,828 --> 00:24:56,289 20,000 டாலர் மதிப்புள்ள காசோலை. 297 00:25:00,502 --> 00:25:02,420 -நீங்கள் பணக்காரரா? -இல்லை. 298 00:25:05,131 --> 00:25:09,052 இல்லை. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 299 00:25:10,804 --> 00:25:12,347 ஏன்? 300 00:25:14,474 --> 00:25:20,146 நமக்கு யாராவது ஏதாவது கொடுத்தால், அதை நாம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லையே. 301 00:25:23,525 --> 00:25:28,405 உனக்கு வேண்டாம் என்றால் வாங்கிகொள்ளாதே. 302 00:25:28,989 --> 00:25:31,533 புரிகிறதா? 303 00:25:35,203 --> 00:25:36,788 காலை வணக்கம், மிஸ் டான்ஃபோர்த். 304 00:25:39,499 --> 00:25:41,960 சியாலா, உன் கை எங்கே, அன்பே? 305 00:25:42,043 --> 00:25:43,378 உன் கை? 306 00:25:43,461 --> 00:25:44,754 இன்று போட வேண்டாமென நினைத்தேன். 307 00:25:46,131 --> 00:25:47,757 அவளுக்கு இப்படி இருப்பது பழகிவிட்டது. 308 00:25:47,841 --> 00:25:50,302 அதில் ஏதாவது பிரச்சினையா? அது தரம் வாய்ந்த... 309 00:25:50,802 --> 00:25:52,304 விலையுயர்ந்த பொருள். 310 00:25:55,932 --> 00:25:57,934 அதில் சின்ன திருத்தம் தான் தேவை. 311 00:25:58,018 --> 00:26:02,981 சரி, நாளை செயற்கை கை பொருத்துபவரை அழைத்து நேரில் வந்து பார்க்க ஏற்பாடு செய். 312 00:26:03,064 --> 00:26:04,941 -செயற்கை கை பொருத்துபவர். -நன்றி. 313 00:26:05,442 --> 00:26:08,278 இப்படித்தான் சொல்வீர்களா? வார்த்தை கடினமாயிருக்கிறது. 314 00:26:14,576 --> 00:26:15,952 ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? 315 00:26:16,995 --> 00:26:18,330 எனக்கு அந்தக் கை பிடிக்கவில்லை. 316 00:26:18,413 --> 00:26:19,414 யார் கவலைப்பட போகிறார்கள்? 317 00:26:20,373 --> 00:26:21,958 நான் கவலைப்படுவேன். 318 00:26:24,836 --> 00:26:26,588 பார்... 319 00:26:26,671 --> 00:26:29,299 எவ்வளவு நல்ல பொருள் உன்னிடமிருக்கிறது என உனக்குத் தெரியவில்லை. 320 00:26:29,382 --> 00:26:30,842 இதையெல்லாம் பார்! 321 00:26:30,926 --> 00:26:33,595 ஐந்து மாதமாக, திரைப்பட நடிகையைப் போல் வாழ்ந்தாய். 322 00:26:34,804 --> 00:26:36,848 இந்த இடம் சிறைச்சாலை போல இருக்கு. 323 00:26:37,641 --> 00:26:39,142 உனக்குப் புரியவில்லையா, மரியானா? 324 00:26:40,101 --> 00:26:41,937 இது எதுவுமே உண்மையில்லை. 325 00:26:42,020 --> 00:26:43,355 இது எதுவுமே நம்முடையதில்லை. 326 00:26:46,358 --> 00:26:47,901 இனிமேல் உன்னைப் பார்ப்பது கடினம். 327 00:26:50,528 --> 00:26:52,197 எல் சால்வடோரில் தனியாக இருந்தது போல உணர்கிறேன். 328 00:26:53,156 --> 00:26:54,532 தனியாகவா? 329 00:26:56,284 --> 00:26:59,537 நான் இங்கு முதன்முதலில் வந்தபோது, முன்பின் தெரியாதவர்களோடு வாழ்ந்தேன், 330 00:27:00,372 --> 00:27:02,958 மூன்று பேருந்துகள் ஏறி வேலைக்குப் போவேன். 331 00:27:04,417 --> 00:27:07,462 என்னால் தான், உனக்கு அந்தச் சிரமம் ஏற்படவில்லை. 332 00:27:07,546 --> 00:27:10,966 ஏனென்றால், நீ நல்ல பள்ளியில் படித்து, நல்ல இடத்தில் வசிக்க வேண்டும் எனக் கவனமாக இருந்தேன். 333 00:27:12,092 --> 00:27:15,303 உன்னை எல் சால்வடோரிலிருந்து மெக்ஸிகோவுக்கு அழைத்து வரவும், 334 00:27:15,387 --> 00:27:18,181 மெக்ஸிகோ எல்லையைக் கடக்கவும் எவ்வளவு கஷ்டப்பட்டேன், தெரியுமா? 335 00:27:18,765 --> 00:27:21,101 ரொம்ப சிரமப்பட்டு உன்னை இங்கே அழைத்து வந்தேன்! 336 00:27:22,018 --> 00:27:24,187 நீ ஒரு தடவை கூட சொல்லாத வார்த்தை எது தெரியுமா? 337 00:27:24,271 --> 00:27:26,147 “நன்றி.” 338 00:27:42,956 --> 00:27:44,291 போட்டுக் கொண்டாயே. 339 00:27:45,500 --> 00:27:46,960 பரவாயில்லையா? 340 00:27:47,586 --> 00:27:48,712 நன்றி, மிஸ் டான்ஃபோர்த். 341 00:28:34,382 --> 00:28:36,551 தினமும் இப்படித்தான் செய்கிறாயா? 342 00:28:44,392 --> 00:28:46,144 உனக்கு இந்தக் கை வேண்டாமா? 343 00:28:50,190 --> 00:28:53,026 நீ இன்னும் சாதாரணமாக வாழ விரும்புவாய் என நினைத்தேன். 344 00:28:55,779 --> 00:28:57,739 எனக்கு என் உடம்பைப் பிடிக்கும். 345 00:29:00,575 --> 00:29:06,081 உங்களுக்கு, என் உடம்பைப் பிடிக்கவில்லை, ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறது. 346 00:29:08,124 --> 00:29:12,712 நீங்கள் ரொம்ப நல்லவர், மிஸ் டான்ஃபோர்த். 347 00:29:12,796 --> 00:29:16,299 ஆனால் நான் இங்கு வந்தது 348 00:29:16,383 --> 00:29:21,096 ஆடம்பரமான பள்ளிக்காகவோ அல்லது புதிய கைக்காகவோ அல்ல. 349 00:29:24,683 --> 00:29:29,813 நான் இங்கு என் அக்காவுடன் தங்க தான் வந்தேன். 350 00:29:42,534 --> 00:29:45,412 திருமதி. டான்ஃபோர்த். 351 00:29:45,996 --> 00:29:47,956 என்ன ஆச்சு? 352 00:29:48,039 --> 00:29:49,708 சும்மா பேசிக் கொண்டிருந்தோம். 353 00:29:49,791 --> 00:29:51,585 போய், பேருந்தில் ஏறு. 354 00:29:52,335 --> 00:29:53,837 -உங்களுக்கு ஒன்றுமில்லையே? -நான் எதுவும் செய்யவில்லை. 355 00:29:53,920 --> 00:29:56,256 போய், பேருந்தில் ஏறுங்கள். 356 00:29:56,339 --> 00:29:59,801 நன்றாக இருக்கிறீர்களா? சரி, சரி. என்னுடன் வாருங்கள். 357 00:30:05,432 --> 00:30:07,809 மிஸ் டான்ஃபோர்த்! 358 00:30:08,685 --> 00:30:10,270 சியாலா! 359 00:30:11,938 --> 00:30:15,775 இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவரை அழைக்கிறேன் என்றேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார். 360 00:30:15,859 --> 00:30:18,028 இது இனிமேல் வேலைக்காகாது. 361 00:30:19,988 --> 00:30:22,115 அவங்களுக்கு எப்படி உதவுவது என்றே தெரியவில்லை. 362 00:30:24,951 --> 00:30:26,411 அவங்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். 363 00:30:30,498 --> 00:30:32,584 அவர் திரும்ப வரவில்லை என்றால்? என்ன செய்வது? 364 00:30:34,961 --> 00:30:36,087 நான் இங்கிருக்கிறேன். 365 00:30:45,138 --> 00:30:47,515 நான் அவசர ஊர்தியை அழைக்கிறேன். நீ அவங்களுடன் இரு. 366 00:31:38,108 --> 00:31:42,320 நீங்கள் செய்த வேலைக்கு ரொம்ப நன்றி. 367 00:31:44,573 --> 00:31:46,491 அவங்க உங்க இருவரிடமும் ரொம்ப நெருக்கமாக இருந்தாங்க. 368 00:31:48,159 --> 00:31:51,580 கடைசியாக நான் ஒரு முறை ஒத்திகை பார்க்க வேண்டும். 369 00:31:52,539 --> 00:31:53,915 நீங்கள் போகும் போது, அந்தப் பெட்டியை 370 00:31:55,000 --> 00:31:57,919 -குப்பைத்தொட்டியில் போட்டு விடுகிறீர்களா? நன்றி. -கண்டிப்பாக. 371 00:32:10,807 --> 00:32:11,933 நம்பர் 5 சேனல் 372 00:32:14,060 --> 00:32:16,271 சரி, எங்கே போகப் போகிறீர்கள்? 373 00:32:17,647 --> 00:32:20,317 ஓ, வான் நய்சில் ஒரு சின்ன அடுக்குமாடி குடியிருப்பைப் பார்த்திருக்கிறேன். 374 00:32:23,695 --> 00:32:26,781 நான் இங்கு 22 வருஷமாக வாழ்ந்திருக்கிறேன். 375 00:32:27,866 --> 00:32:29,784 வேறு எங்குமே இவ்வளவு காலம் வசித்ததில்லை. 376 00:32:31,161 --> 00:32:34,414 யார்... உங்கள் தோட்டத்தை என்ன செய்வீர்கள்? 377 00:32:37,959 --> 00:32:39,169 அது என்னுடையது அல்ல. 378 00:32:41,171 --> 00:32:42,964 அதை யார் பார்த்துக்கொள்வார்கள்? 379 00:32:44,341 --> 00:32:47,594 யாருக்கு தெரியும்? ஸ்கன்க்ஸ். 380 00:32:53,308 --> 00:32:55,435 கலிஃபோர்னியா பாப்பி 381 00:32:55,518 --> 00:32:58,355 உன் அடுத்தத் தோட்டத்திற்கு. 382 00:33:58,623 --> 00:34:00,375 இது தான், 1சி. 383 00:35:09,903 --> 00:35:13,698 சியாலா இப்போது லாஸ் ஏஞ்சலஸில் சமூக தோட்டத்தை நடத்துகிறார். 384 00:35:15,242 --> 00:35:17,994 வாடகைதாரரின் உரிமைகள் மற்றும் மலிவு விலை வீடுக்கு 385 00:35:18,078 --> 00:35:19,496 வழக்கறிஞராக இருக்கிறார். 386 00:35:19,996 --> 00:35:24,834 தன் மகனுக்கு ரே எனப் பெயரிட்டுள்ளார். 387 00:36:21,433 --> 00:36:23,101 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிக்கைத் தொடரைத் தழுவியது 388 00:36:23,184 --> 00:36:25,186 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்