1 00:00:28,278 --> 00:00:29,446 இங்கே வா, மகனே. 2 00:00:32,741 --> 00:00:34,284 இப்போ காலையில அறு மணி ஆகுது, நீ இப்போ முழிச்சுட்டு என்ன செய்ற? 3 00:00:34,368 --> 00:00:38,247 -நீ இப்போ முழிச்சுட்டு என்ன செய்ற? -நான் தயாரகணும்னு நினைச்சேன். உங்களை மாதிரியே. 4 00:00:42,751 --> 00:00:44,878 நாம மத்தவங்கள மாதிரி இந்த உலகத்துல வலம் வரக் கூடாது. 5 00:00:44,962 --> 00:00:47,631 மத்தவங்க உன்னை ஒரு மனிதனா மதிக்கணும் இல்லயா? 6 00:00:48,757 --> 00:00:50,676 யாரும் உன்னை சூட்டும் டையும் இல்லாமலோ, 7 00:00:50,759 --> 00:00:53,846 இல்ல கசங்கிய உடைகளுடனோ உன்னை பார்க்க அனுமதிக்காதே. 8 00:00:53,929 --> 00:00:55,222 ஷூஸ் எல்லாம் பளபளக்கணும். 9 00:00:56,390 --> 00:00:58,100 உன் ஸ்டைலும், நாசூக்கும் பரிமளிக்கும் ஆனால் 10 00:00:58,183 --> 00:01:01,061 உன்னை விட சிறந்தவங்கன்னு யாரும் பெருமை அடிச்சுக்க முடியாது. 11 00:01:01,979 --> 00:01:08,819 நாம எப்போதுமே நம்முடைய சிறந்த முகத்தை தான் வெளியில காட்டணும். உனக்குப் புரியுதா? 12 00:01:11,864 --> 00:01:14,658 நான் இப்போ போகணும். இன்னொரு விஷயம், நாம தாமதமா இருக்கவே கூடாது. 13 00:01:17,286 --> 00:01:18,745 -அப்படிப் போடு, முஸ்டேங்க்ஸ். -நல்ல ஆட்டம். 14 00:01:18,829 --> 00:01:21,707 -நன்றி. இரவை என்ஜாய் பண்ணுங்க, சரியா? -சரி. பை. 15 00:01:22,374 --> 00:01:24,585 -சார். -இன்னிக்கு பயங்கரமான வெற்றி. 16 00:01:25,127 --> 00:01:27,045 நான் மதிக்கிறேன். இனிய இரவாகட்டும். 17 00:01:27,754 --> 00:01:30,883 நல்வாழ்த்துகள். எமரி. ஆரம்பமே அசத்தலான ஆட்டம். 18 00:01:30,966 --> 00:01:33,135 போர்டுல எல்லோருடைய கருத்தும் இது தான்னு நினைக்கிறேன் 19 00:01:33,218 --> 00:01:35,804 அதோட, இன்னும் இந்த சீசன்ல என்னவெல்லாம் வரப் போகுதுன்னு ஆவலா காத்துட்டு இருக்கோம் 20 00:01:35,888 --> 00:01:38,599 மேலும், எப்போதும் அதிகமா எதிர்பார்க்குற நம்முடைய ஏடி என்ன திட்டம் வச்சிருக்காரோ. 21 00:01:38,682 --> 00:01:40,309 தேசிய சாம்பியன்ஷிப்புக்கு கம்மியா எதுவும் இல்லை. 22 00:01:41,351 --> 00:01:46,940 நம் செடர் கோவின் பாணியில் பெருமையை காட்டணும். பசங்களுக்குத் தான், அருமையும், பெருமையும். 23 00:01:47,024 --> 00:01:49,193 அப்புறம் அந்த புது கோச், அசத்திட்டார். 24 00:01:50,194 --> 00:01:51,195 நிச்சயமா. 25 00:01:52,070 --> 00:01:53,655 -இனிய இரவு, ஈவ்லின். -இனிய இரவு. 26 00:01:53,739 --> 00:01:55,657 -ஜோசஃப். -அடுத்த ஆட்டத்தில் சந்திப்போம், எமரி. 27 00:01:55,741 --> 00:01:56,742 நிச்சயமா. 28 00:01:57,993 --> 00:02:01,246 டாக்டர் லாசன், இன்னிக்கு நல்ல ஆட்டம் தான் அது. 29 00:02:01,330 --> 00:02:05,167 கிறிஸ்டா. ஆம், அப்படித் தான் சொல்லணும். உங்களுக்கு எப்படி உதவலாம்? 30 00:02:05,250 --> 00:02:08,252 நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுதறேன், அதைப் பத்தி உங்ககிட்ட இப்பவே பேசணும். 31 00:02:08,336 --> 00:02:09,922 உடனேயா? ஏன் அப்படி? 32 00:02:10,005 --> 00:02:11,965 இன்னும் 12 மணி நேரத்துல ஒரு விஷயத்தை வெளியிடப் போறாங்க. 33 00:02:12,049 --> 00:02:15,302 என் ஆசிரியர் என்னை செடர் கோவின் சிறப்புகள் எப்படி இந்த சீசன்ல 34 00:02:15,385 --> 00:02:18,055 தலைப்புச் செய்திகளா வரப் போகுதுன்னு பேசிகிட்டே இருக்கார். 35 00:02:18,138 --> 00:02:21,433 -கொஞ்சம் பெருமைப் படலாமே. -ஆட்ட வீரர்களுக்குத் தான் எல்லா புகழும். 36 00:02:21,517 --> 00:02:25,938 ஒத்துக்குறேன். சொல்லப்போனா, அவங்களுக்குக் கிடைக்கிறதை விட, அதிகமாவே செய்திருக்காங்க. 37 00:02:26,897 --> 00:02:27,981 பதினைந்து நிமிடங்கள். 38 00:02:28,565 --> 00:02:30,567 மன்னிக்கணும், முன்னரே ஒருவரிடம் சந்திப்பதாக வாக்குக் கொடுத்துட்டேன். 39 00:02:30,651 --> 00:02:33,987 அப்போ நாளைக்கு? காலையிலேயே வச்சுகிட்டா நல்லாயிருக்கும், ஏன்னா எனக்கு காலக் கெடு இருக்கு. 40 00:02:34,071 --> 00:02:36,532 எனக்கு விவரங்களை அனுப்புங்க. நான் பார்க்கிறேன். 41 00:02:37,115 --> 00:02:38,951 -அப்போ சரி. -நல்லது. 42 00:02:39,034 --> 00:02:40,118 இனிய இரவு. 43 00:02:43,121 --> 00:02:44,873 கோச், இந்த வெற்றி உங்களுக்கு தான். 44 00:02:44,957 --> 00:02:47,501 இந்த வெற்றிக்கு அப்புறம் நீங்க தற்காலிகமாக இருக்க வாய்ப்பே இல்லை. 45 00:02:47,584 --> 00:02:49,753 நம்ம அணியில மிக முக்கியமான புதிய நபருக்கு. 46 00:02:56,802 --> 00:02:59,847 பேசுங்க, பேசுங்க. 47 00:02:59,930 --> 00:03:02,891 ஹே. சரி, சரி, சரி, சரி. 48 00:03:03,600 --> 00:03:09,773 ம். நம்ப முடியலை, உங்கள்ல சிலருக்கு இந்த சீசன் தான் ஒரே அணியா உங்களுக்கு கிடைக்கிற கடைசி வெற்றி. 49 00:03:09,857 --> 00:03:13,902 சீக்கிரமே, நீங்க எல்லோரும் கல்லூரிக்கு போய், அவங்க அவங்க வாழ்க்கையைத் தொடர்வீங்க. 50 00:03:15,070 --> 00:03:18,365 ஆகவே, நாம அசத்தலா போகலாம். அப்படிப் புகழுடன் போறதுக்கு, இது முதல் படி. 51 00:03:18,448 --> 00:03:20,534 நண்பா, உங்க... உங்க அனைவரையும் நான் விரும்புறேன். 52 00:03:22,160 --> 00:03:25,289 சரி, சரி, சரி. இதைக் கேளுங்க, கேளுங்க. 53 00:03:25,372 --> 00:03:28,041 உங்க எல்லோருக்கும் பிறந்தநாளைக் கொண்டாட இந்த பையனுடன் பெரும் திட்டம் இருக்கு, தெரியும். 54 00:03:29,042 --> 00:03:31,962 மன்னிக்கணும், பையன் இல்லை, மனிதர். 55 00:03:32,963 --> 00:03:35,465 இப்போ தான் நீங்க அதிகாரப்பூர்வமா வளர்ந்தவர் ஆனதால, 56 00:03:35,549 --> 00:03:38,886 அந்த மாதிரி ஒரு சட்டையை எப்படி போட தீர்மானிச்சீங்கன்னு நான் கேட்க மாட்டேன். 57 00:03:39,720 --> 00:03:41,930 சரி, நீங்க இருட்டுல போட்டுகிட்டீங்களோ? அந்த சட்டை முழுவதும் ஓட்டையா இருக்கு. 58 00:03:42,014 --> 00:03:43,140 உங்களுக்கு என்ன ஆச்சு? 59 00:03:46,810 --> 00:03:49,396 நான் இதை போட்டு நல்லாயிருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் பொறாமை. 60 00:03:51,315 --> 00:03:52,774 எனக்கு எப்படித் தெரியலை. 61 00:03:53,400 --> 00:03:55,986 இருந்தாலும், இருந்தாலும். கோச், நீங்க கொஞ்ச நேரம் வருவீங்களா? 62 00:03:56,069 --> 00:03:59,114 நான் பார்ட்டிக்கு கொஞ்சம் தாமதமா வரலாம். நான் சீக்கிரமா செய்ய வேண்டியது ஒண்ணு இருக்கு. 63 00:03:59,198 --> 00:04:02,868 ஆனால், என்னால வர முடியலைன்னா, உங்களுக்கு நட்புடன் ஞாபகப்படுத்தறேன். 64 00:04:04,328 --> 00:04:05,329 நீங்க செய்யறீங்களா. 65 00:04:06,538 --> 00:04:08,916 நம்ம அடுத்த ஆட்டம் நியூ யார்க்ல, ரோட்ல பயணம். 66 00:04:08,999 --> 00:04:14,296 எனவே, நாம அதுக்கு தயாரா இருக்கணும். நாளைக்கு காலை 9:00 மணிக்கு பஸ் புறப்படும். 67 00:04:14,379 --> 00:04:15,547 என்ன? 68 00:04:15,631 --> 00:04:17,632 இன்னிக்கு வெற்றியை என்ஜாய் பண்ணுங்க. நல்ல குஷியா இருங்க. 69 00:04:18,466 --> 00:04:21,386 நண்பர்களே, பொறுப்பா நடந்துக்கோங்க. சரியா? 70 00:04:22,387 --> 00:04:24,181 -புரியுது. -அப்போ சரி. 71 00:04:24,765 --> 00:04:26,850 நாம இப்போதே போகலாம். 72 00:04:31,563 --> 00:04:33,690 யோ. யோ. யோ. என்ன நடக்குது? என்ன நடக்குது? 73 00:04:33,774 --> 00:04:36,235 -எல்லோரிடமும் அன்பு உள்ளது. -நன்றி, அது அன்பு, எல்லாம் அன்பு தான். 74 00:04:38,445 --> 00:04:39,696 ரொம்ப நன்றி 75 00:04:40,864 --> 00:04:42,741 ஆமாம். சீஸ்... சீஸ் சொல்லுங்க. 76 00:04:42,824 --> 00:04:44,618 சீஸ் சொல்லுங்க. 77 00:04:44,701 --> 00:04:46,578 -உங்க ஆட்டோகிராஃப் கிடைக்குமா? -சரி, பிரச்சினை இல்லை. 78 00:04:46,662 --> 00:04:48,622 இன்னிக்கு ரொம்ப நல்லா விளையாடினீங்க. 79 00:04:48,705 --> 00:04:49,873 நன்றி. 80 00:04:50,707 --> 00:04:51,708 ரொம்ப நன்றி 81 00:04:53,752 --> 00:04:54,753 கிராண்ட் 82 00:04:54,837 --> 00:04:57,005 உன்னைப் பத்தி பெருமிதப்படுகிறேன் மகனே. நீ நல்ல பாதையில் செல்கிறாய். 83 00:05:05,013 --> 00:05:06,139 நன்றி. பாதுகாப்பாகச் செல்லுங்கள், அப்பா. 84 00:05:08,350 --> 00:05:11,728 யோ. வாங்கப்பா. நமக்கு அதிக நேரம் இல்லை. நாம பார்ட்டிக்குப் போகணும். 85 00:05:11,812 --> 00:05:13,438 ஹே. சரி தான். உண்மையா. 86 00:05:13,522 --> 00:05:16,733 ஹே, யோ, சோஃபோமோரா. நீயும் எங்களுடன் பார்ட்டிக்கு வருகிறாயா? 87 00:05:18,735 --> 00:05:20,195 அதாவது உங்களுக்கு அறை இருந்து, வரலாம்னா வரேன். 88 00:05:20,279 --> 00:05:22,573 மகனே, கொஞ்சம் வயசு அதிகான பெண்களை சந்திக்க தயாரா இரு. 89 00:05:22,656 --> 00:05:24,700 -ஜாக்கிரதையா இரு. -இங்கே வா, மகனே. 90 00:05:24,783 --> 00:05:26,159 ஹே, ஹே. 91 00:05:26,243 --> 00:05:27,703 என் கார் முழுக்க ஆள் இருக்காங்க. 92 00:05:27,786 --> 00:05:30,372 நான் லாதீனெக்ஸ் கிளப்பிலிருந்து சில பெண்களைக் கூட்டிட்டுப் போறேன். 93 00:05:30,455 --> 00:05:31,999 -கவலைப் படாதே. -அப்போ சரி. 94 00:05:32,082 --> 00:05:33,750 -உங்களை அங்கே சந்திக்கிறேன். -கண்டிப்பா. 95 00:05:34,251 --> 00:05:36,253 -வா போகலாம், சோஃபோமோர். -ஹே நண்பா, நல்லது தான். ஆரம்பிக்கலாம். 96 00:05:36,336 --> 00:05:39,006 -நாம இங்கிருந்து வெளியே போகலாம், நண்பா. -சரி. நாம கிளம்பலாம், நண்பர்களே. 97 00:05:51,351 --> 00:05:53,604 நிக்குக்கு இந்த சமயத்துல காயப்பட்டிருக்க வேண்டாம். 98 00:05:54,646 --> 00:05:57,941 அவன் என்னவோ சரியா தான் இருக்கான், ஆனால், நான் சொதப்பிட்டேன். 99 00:05:58,942 --> 00:06:02,571 -டாக்டர்கள் என்ன சொல்றாங்க? -பொறுமையா இருக்கச் சொல்றாங்க. 100 00:06:03,238 --> 00:06:04,156 நல்வாழ்த்துகள். 101 00:06:04,239 --> 00:06:07,034 அதே தான். கீழ் முதுகு வலி போனதுக்கு அப்புறம், 102 00:06:07,117 --> 00:06:08,452 மீண்டும் பயிற்சிக்கு வருவான், 103 00:06:08,535 --> 00:06:10,495 ஆனால் அப்பவும் நிதானமா தான். கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கும். 104 00:06:10,579 --> 00:06:12,289 சீக்கிரமே குணமாகிடுவான், பாருங்க. 105 00:06:13,123 --> 00:06:14,499 நீங்க சொல்றபடி நடந்தா நல்லாயிருக்கும். 106 00:06:15,459 --> 00:06:16,293 ஹே. 107 00:06:19,588 --> 00:06:23,884 பிறந்தநாள் மகனே. ஃபோலிஸ் காம்பிளியானோஸ், ஜேஸ். 108 00:06:23,967 --> 00:06:25,594 ரொம்ப நன்றி, மிஸ் மென்டே. 109 00:06:27,346 --> 00:06:28,639 டே வொஸ் குவாப்போ. 110 00:06:29,765 --> 00:06:31,183 அப்படின்னா நீ அசிங்கமா இருக்கன்னு அர்த்தம், சகோ. 111 00:06:31,266 --> 00:06:32,476 -ஹே. -குவா... குவாப்போ? 112 00:06:32,559 --> 00:06:34,978 -அழகா இருக்க. போகலாம். -ஓ, ரொம்ப நன்றி. 113 00:06:35,062 --> 00:06:37,022 உங்களை மீண்டும் சந்திப்போம், இல்லையா? சீயோ, சீயோ. 114 00:06:37,105 --> 00:06:38,649 -சரி. -ஹே. 115 00:06:38,732 --> 00:06:41,485 எனவே, அப்புறம் எவ்வளவு பெற்றோர்கள் ராயலின் வீட்டில் இருக்கப் போறாங்க? 116 00:06:41,568 --> 00:06:43,195 நீ இன்னிக்கு காலையில சொன்னது போல, 117 00:06:43,278 --> 00:06:45,280 -நாம 10:00 மணி வரை தான் இருக்கப் போறோம். -சரி தான். 118 00:06:45,364 --> 00:06:46,865 நீங்க வருவதற்கு முன்னாடியே நாங்க போகலாம். 119 00:06:46,949 --> 00:06:48,492 நல்லது. குறிப்பா உனக்கு. 120 00:06:48,575 --> 00:06:51,036 -ஒரு பரிசு வச்சிருக்கேன். -நான் சும்மா தமாஷ் பண்ணினேன். 121 00:06:52,454 --> 00:06:54,039 -என்ன நடக்குது ஜேக்கி? -ஹே, டிரூ. 122 00:06:55,707 --> 00:06:57,626 நீ அழகா இருக்க. நல்ல வாசனை வருது. 123 00:06:57,709 --> 00:07:00,587 அம்மா, இது தான் நான் வளர்ந்து வரும் காலம். 124 00:07:00,671 --> 00:07:02,464 பிறந்தநாள் நல்வாழ்த்துகள், இளைஞனே. 125 00:07:03,882 --> 00:07:04,883 இதெல்லாம் என்ன? 126 00:07:04,967 --> 00:07:05,926 டிரோஜன் - அல்டிரா ரிப்பட் 127 00:07:06,677 --> 00:07:08,303 -நான் இதை எதிர்பார்க்கலை. -குழந்தைகளை உருவாக்காதே. 128 00:07:08,387 --> 00:07:10,097 நாம இதைப் பத்தி ஏற்கனவே பேசினோம், இல்ல? 129 00:07:10,180 --> 00:07:14,643 நீ குழந்தையா இருந்தபோது இதைப் பத்தி பேசினோம். ஏதோ ஆம்பளை மாதிரி வாசனை வருதுன்ன. 130 00:07:16,395 --> 00:07:17,855 நான் அதைப் பத்தி எல்லாம்... 131 00:07:17,938 --> 00:07:20,440 -உள்ள இருப்பது என்னன்னு பயமா இருக்கே? -திறந்து தான் பாரேன். 132 00:07:25,946 --> 00:07:28,448 இது உங்க தாத்தாவுடையது, அவர் இன்னும் இங்கே உயிருடன் இருந்திருந்தால், 133 00:07:28,532 --> 00:07:30,367 நீச்சயமா உனக்கு இதைக் கொடுக்க ஆசைப்பட்டிருப்பார். 134 00:07:30,450 --> 00:07:32,911 "மகனே, இது தான் உன் நேரம், கவனமா இரு." 135 00:07:34,538 --> 00:07:35,539 அம்மா. 136 00:07:39,543 --> 00:07:42,379 அம்மா, நீங்க எனக்கு எவ்வளவு செய்திருக்கீங்க, எல்லாத்துக்கும் நன்றி. 137 00:07:43,964 --> 00:07:45,090 நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கறேன், 138 00:07:45,174 --> 00:07:47,593 ஒரு நாள் நீங்க பெருமைப்படுற மாதிரி நான் பெயர் எடுத்துக்காட்டுவேன். 139 00:07:48,260 --> 00:07:50,345 நீ எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். 140 00:07:50,429 --> 00:07:53,640 உன் எதிர்காலத்துல நீ முழுமை அடைவதை உறுதி செய்வது அது என் கடமை. 141 00:07:58,478 --> 00:08:00,814 நீ அப்போதும் இன்னும் டாய்லெட் மூடியை மூடாம தான் இருப்ப. 142 00:08:00,898 --> 00:08:04,985 -வாயை மூடு. நான் உன்னை நேசிக்கிறேன், அக்கா. -நானும் தான். வாழ்த்துகள், மனிதா. 143 00:08:07,529 --> 00:08:08,697 சரி தான். 144 00:08:08,780 --> 00:08:10,449 -அப்புறமா பார்ப்போம், அம்மா. -பை. 145 00:08:10,532 --> 00:08:12,993 -எல்லோரும் ரெடியா? -நேரம் என்ன தெரியுமா, பசங்களா. 146 00:08:13,076 --> 00:08:15,204 நீ எல்லாத்தையும் நிதானமா செய்யற. 147 00:08:16,538 --> 00:08:17,915 -ஹே. -வாங்கப்பா, எல்லோரும். 148 00:08:17,998 --> 00:08:19,166 நமக்கு நாளெல்லாம் இல்லை, ஃபில். 149 00:08:19,249 --> 00:08:22,085 உன்னை பார்ப்பது நல்லாயிருக்கு. ரொம்ப நாள் ஆச்சு... 150 00:08:22,169 --> 00:08:25,047 நீங்க வீடு மாறினதுக்கு அப்புறம். உங்க புது மனைப் புகு விழாப் பரிசை இன்னும் வச்சிருக்கேன். 151 00:08:25,130 --> 00:08:26,089 ஒரு வருஷத்துக்கு அப்புறமுமா? 152 00:08:27,883 --> 00:08:29,760 நீ எப்போதாவது வீட்டுக்கு வரணும். 153 00:08:31,261 --> 00:08:34,765 சகோ. எப்படி அதை கேட்டுட்டு, இதை கேட்காம... 154 00:08:36,308 --> 00:08:40,187 ராயல் வீட்டுல பார்ட்டி இருக்குன்னு தெரியும் இல்ல. நீ வருவ இல்லை? 155 00:10:23,332 --> 00:10:25,083 யோ. 156 00:10:28,545 --> 00:10:29,588 அடக் கடவுளே. 157 00:10:30,547 --> 00:10:34,259 யோ, ராயல், இவன் இப்போதான் ஆட்டம் போட முடியும்னு ஆடறான். 158 00:10:34,343 --> 00:10:35,385 நிஜமா தான். 159 00:10:35,469 --> 00:10:36,970 -உண்மைகள், சகோ. -நீ எப்படி, சிஜே? 160 00:10:37,054 --> 00:10:38,347 நீயும் அப்படி தான் இருக்கயா? 161 00:10:38,430 --> 00:10:41,183 ஒரு மாதிரி அப்படி தான், ஆனால் வெள்ளையின குடியிருப்புல. 162 00:10:41,266 --> 00:10:43,185 அடடே, உடனே, உனக்கு கொஞ்சம் கலாச்சாரம் சொல்லித் தரணும். 163 00:10:43,268 --> 00:10:44,520 அது தான் சரி. 164 00:11:13,340 --> 00:11:14,633 உடனே, இப்போதே. 165 00:11:15,384 --> 00:11:18,512 அது என்ன மூணு-ஆடை உள்ள டிராக்சூட்டா? 166 00:11:19,388 --> 00:11:23,725 என்னிடம் ஒரு முக்கியமான பேட்டி கேட்டு வந்த கிறிஸ்டா குக்கை முடியாதுன்னு சொல்லிட்டு 167 00:11:23,809 --> 00:11:24,810 உன்னுடன் விளையாட வந்திருக்கேன். 168 00:11:26,103 --> 00:11:27,896 சரி, கொஞ்சம் பயிற்சி செய்யறதும் நல்லது தான். 169 00:11:29,857 --> 00:11:32,067 நீ அடிக்கடி இப்போதெல்லாம் ஓடியாடி விளையாடுறயா, என்ன? 170 00:11:32,693 --> 00:11:36,196 குழந்தை, வேலை, அப்புறம் அந்த இரவு வகுப்புகள், எல்லாம் சேர்ந்து குறைஞ்சுடுச்சு. 171 00:11:36,280 --> 00:11:38,907 முடிந்தபோதெல்லாம் செய்யறேன். நீங்க எப்படி? 172 00:11:38,991 --> 00:11:42,494 வேலைகள், பத்து வயது மகனின் பாட்டுகளுக்கும் இடையே, ஏதோ செய்யறேன். 173 00:11:43,912 --> 00:11:47,457 ஆனால், எனக்குள்ள இன்னும் அந்த துடிப்பு இருக்கு. 174 00:11:47,541 --> 00:11:48,834 எனக்குப் புரியுது. 175 00:11:50,127 --> 00:11:51,545 டாலியா, பாலைப் போடு! 176 00:11:56,133 --> 00:11:59,219 -அப்படிப் போடு. -அது தான் விஷயமா? 177 00:11:59,303 --> 00:12:00,637 ராசியான ஷாட். 178 00:12:00,721 --> 00:12:03,640 சரி தான், இன்னும் இதை சுவாரசியமாக்குவோம். 11 முதல்ல எடுக்குறவங்களுக்கு தான் வெற்றி. 179 00:12:04,349 --> 00:12:07,853 நான் ஜெயிச்சா, நீங்க ஒரு வாரம் முழுவதும் டை போடாம வரணும். 180 00:12:08,395 --> 00:12:13,025 ரெண்டு பட்டன்களை திறந்து விட்டு, மார்பு தெரிகிற பில்லி டீ வில்லியம்ஸுடன் தானே நான் பேசுறேன். 181 00:12:17,613 --> 00:12:19,698 சரி. அப்போ நான் ஜெய்ச்சா, 182 00:12:19,781 --> 00:12:24,328 விளையாடும் போதும், பயிற்சியின் போதும் கூட, நீ ஒரு டையும், கசங்காத சட்டையும் போடணும். 183 00:12:26,121 --> 00:12:29,625 சரி, பந்தயம். எனக்கு டெரெக்கும், டாலியாவும். 184 00:12:30,918 --> 00:12:31,793 உள்ள வாங்க. 185 00:12:31,877 --> 00:12:32,878 -எமரி. -ஸ்டீவ். 186 00:12:32,961 --> 00:12:33,837 -ஆடுவோம். -ஆமாம். 187 00:12:33,921 --> 00:12:35,923 ஆமாம். அவங்கள தோற்கடிக்கலாம். வாங்க. 188 00:12:36,006 --> 00:12:38,133 இங்கே வந்திருக்கும் அந்த நபர். நீ கூட்டிட்டு வந்தயா? 189 00:12:39,551 --> 00:12:40,761 ரெடியா இருங்க. 190 00:12:40,844 --> 00:12:42,804 சரி தான், மக்களே, நல்லா விளையாடுங்க. 191 00:12:48,352 --> 00:12:50,354 என்ன நடக்குது, நண்பா? நீ எப்படி இருக்க? 192 00:12:54,983 --> 00:12:57,402 யோ, யோ. என்ன நடக்குது? 193 00:12:59,321 --> 00:13:01,281 நண்பா, எப்படி இருக்க? 194 00:13:01,365 --> 00:13:02,908 -ஹே! -யோ! யோ, என் நண்பா. 195 00:13:02,991 --> 00:13:04,535 -இது ரொம்ப பெரிய விஷயம், நண்பா. -தெரியும். 196 00:13:04,618 --> 00:13:06,787 -நன்றி, புரோ. மதிக்கிறேன். -புரியுது. எனக்குப் புரி... 197 00:13:06,870 --> 00:13:09,081 -உன்னை பார்ப்பதுல சந்தோஷம், சகோ. -யோ, 21 சாவேஜ். 198 00:13:09,164 --> 00:13:10,624 என்ன நடக்குது, என் நண்பா? 199 00:13:10,707 --> 00:13:13,335 பொறு. 200 00:13:19,591 --> 00:13:21,134 உங்களுக்கு ஒண்ணு காட்ட விரும்புறேன். 201 00:13:21,218 --> 00:13:22,052 -ஹே -ஹே 202 00:13:22,135 --> 00:13:23,762 ஹே, ஹே, ஹே. 203 00:13:31,687 --> 00:13:35,232 ஹே, மக்களே. நடக்கட்டும். நடக்கட்டும். 204 00:13:35,315 --> 00:13:37,401 இதை கேட்டுப்ப பாருங்க. இது பர்த்டே கிங். 205 00:13:37,484 --> 00:13:39,111 என்ன நடக்குது? ஹே, இந்த உதவி செய்ய முடியுமா? 206 00:13:39,194 --> 00:13:41,071 அரசர்கள் தங்களின் பிறந்தநாள் அன்று, எது வேணும்னாலும் கேட்கலாம், நண்பா. 207 00:13:41,154 --> 00:13:42,072 சரி தான். 208 00:13:45,158 --> 00:13:46,577 எதுவும் பழைய பாடல்களை போட முடியுமா? 209 00:13:47,494 --> 00:13:48,495 புரியுது. 210 00:13:58,130 --> 00:14:00,757 சரியாச் சொன்ன. நான் அதை தான் நினைச்சேன். 211 00:14:01,341 --> 00:14:03,135 நீ என்னுடன் விளையாடுறயா? 212 00:14:03,218 --> 00:14:05,345 வாங்க, அம்மா, எழுந்து இங்கே வாங்க! 213 00:14:05,429 --> 00:14:07,973 என்னை சங்கடப் படுத்த விரும்புறயா? 214 00:14:10,267 --> 00:14:11,727 ஹே, ஹே. வாங்க, ஹே. 215 00:14:11,810 --> 00:14:13,896 வாங்க, அம்மா! என்ன! 216 00:14:13,979 --> 00:14:16,315 ஆடுங்க, ஜென்னா, ஆடுங்க, ஜென்னா, ஆடுங்க, ஜென்னா. 217 00:14:16,398 --> 00:14:18,066 என்ன! 218 00:14:22,112 --> 00:14:23,739 என் மகனின் பிறந்தநாள். 219 00:14:23,822 --> 00:14:26,116 -என் மகனின் பிறந்தநாள், என் மகனின் பிறந்தநாள். -ஹே, ஹே, ஹே. 220 00:14:26,200 --> 00:14:28,952 -என் மகனின் பிறந்தநாள், என் மகனின் பிறந்தநாள். -சரி, சரி தான். 221 00:14:29,036 --> 00:14:31,538 -சரி தான், சரி தான். வாங்க. நாம... -ஹே, ஹே, ஹே. 222 00:14:31,622 --> 00:14:34,124 நான் இப்போதான ஆரம்பிச்சிருக்கேன். 223 00:14:39,213 --> 00:14:43,634 அடக் கடவுளே. சரி, அம்மா. அது போதும். 224 00:14:43,717 --> 00:14:47,179 நாம மீண்டும் பெரியவங்க மூலைக்குப் போவோம். போகலாம், வாங்க. 225 00:14:49,640 --> 00:14:51,058 அடடே. 226 00:14:51,141 --> 00:14:53,560 யோ, ஜேஸ். நாம கொஞ்சம் பேசணும். 227 00:15:01,568 --> 00:15:03,695 -நான் இப்போவே திரும்பி வந்துடுவேன். சரி. -புரியுது. 228 00:15:23,090 --> 00:15:24,216 என்ன ஆச்சு, கிறிஸ்? 229 00:15:26,260 --> 00:15:27,928 உனக்கு அந்த பத்திரிகையாளர் கிறிஸ்டா குக்கைத் தெரியுமா? 230 00:15:28,512 --> 00:15:32,015 ஆமாம், டிஎம்வியில் கடந்த பத்து வருடங்கள்ல நான் தான் மிகச் சிறப்பா விளையாடறேன்னு சொன்னாங்க. 231 00:15:32,099 --> 00:15:35,727 ஆமாம், யார் கோச் வார்ரிக்கை அடித்ததுன்னு தெரியும்னு கூட சொல்லியிருக்காங்க. 232 00:15:54,538 --> 00:15:56,582 அவங்க எதுவும் கிடைக்குமான்னு விசாரிக்கிறது மாதிரி இருக்கு. 233 00:15:58,208 --> 00:16:00,335 அப்படியே இருந்தாலும்... 234 00:16:03,005 --> 00:16:05,799 நமக்கு இந்த சச்சரவு இப்போ தேவையில்லை. 235 00:16:05,883 --> 00:16:09,094 இதெல்லாம் வெளிய வந்ததுன்னா எனக்கு இப்போ யுனிவெர்சிட்டி ஆஃப் மேரிலாண்டிலிருந்து 236 00:16:09,178 --> 00:16:11,722 கிடைக்க இருந்த ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு தெரியலை. 237 00:16:11,805 --> 00:16:14,933 நான் மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன்ல ஷார்ட்-லிஸ்ட்ல இருக்கேன். 238 00:16:15,559 --> 00:16:17,227 நானும் தான் மெக்டோனல்ட்ஸ் பட்டியல்ல இருக்கேன். 239 00:16:17,311 --> 00:16:20,355 இது நம்ம ரெண்டு பேருக்குமே நல்ல விஷயம் இல்லை. 240 00:16:27,196 --> 00:16:29,364 கிறிஸ்டல், நாம இருவரும் சேர்ந்து இல்லை என்றாலும் 241 00:16:29,448 --> 00:16:34,077 நாம ஒத்துக்கலைன்னா யாரும் பிடிக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். 242 00:16:34,161 --> 00:16:36,163 அன்னிக்கி இரவு உன்னுடன் வேற யார் இருந்தாங்க? 243 00:16:37,497 --> 00:16:40,334 நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி நான் இப்போ பேச தயாரா இல்லை. 244 00:16:40,417 --> 00:16:44,087 ஆனால் என்ன? அவ்வளவு தானா? 245 00:16:44,171 --> 00:16:46,840 அது தான் உன் தீர்வா, பேசாம இருப்பது தானா? 246 00:16:47,633 --> 00:16:49,760 ஆமாம், அது தான். 247 00:16:57,184 --> 00:16:59,520 நல்லா வித்துட்ட, சரி, சரி. 248 00:17:00,145 --> 00:17:01,146 நல்லா வித்துட்ட. 249 00:17:04,608 --> 00:17:06,484 -என் மேலிருந்து கையை எடு. -ஹே... 250 00:17:06,568 --> 00:17:08,654 யாரும் கெக்கே புக்கேன்னு பேச வேண்டாம், மக்களே! 251 00:17:08,737 --> 00:17:10,364 இங்கே தான். இங்கே போடு. 252 00:17:11,949 --> 00:17:12,950 பணம். 253 00:17:14,660 --> 00:17:15,827 வேண்டாம், தொடாதே. 254 00:17:15,911 --> 00:17:16,994 ஈரக் கை. தொடாதே. 255 00:17:17,913 --> 00:17:18,789 புரியுது. 256 00:17:19,665 --> 00:17:21,165 ஆடுவோம்! 257 00:17:21,250 --> 00:17:24,670 அது உங்களுக்கு மோசமான இழப்பு. உங்க டிசைனர் டை எப்படி கொஞ்ச நாள் வேலையில்லாம 258 00:17:24,752 --> 00:17:27,714 இருக்கப் போகதுன்னு மார்தட்டிக்கும் அல்பமான விஷயத்தை நான் செய்ய மாட்டேன். 259 00:17:28,674 --> 00:17:30,801 இப்போ அதைத் தான் செய்த மாதிரி இருந்தது. 260 00:17:30,884 --> 00:17:32,970 இன்னொரு மேட்ச் ஆடுவோமா? மூணுல சிறந்தது. 261 00:17:33,053 --> 00:17:37,766 நான் ஜெயிச்சா, அந்த டை மற்றும் கசங்காத சட்டையுடன் நீ ஒரு பிளேசரும் போடணும். 262 00:17:37,850 --> 00:17:40,394 -சூட்ல நல்ல கம்பீரமா இருக்கும், ஐக். -ஆம். 263 00:17:42,688 --> 00:17:44,064 நான் மீண்டும் விளையாட தயாரா இருக்கேன். 264 00:17:45,440 --> 00:17:46,275 நீங்க எல்லோரும் எப்படி? 265 00:17:46,358 --> 00:17:48,318 இல்ல, நண்பா. நான் போகணும். 266 00:17:48,402 --> 00:17:49,736 என் மனைவியுடன் இன்னிக்கு டேட் இரவு. 267 00:17:49,820 --> 00:17:51,572 -சரி. சரி தான். -ஆம், நான் கிளம்புறேன். 268 00:17:51,655 --> 00:17:53,407 பரவாயில்லை. அப்போ நாங்க இருவர் அணியா விளையாடுறேம். 269 00:17:53,490 --> 00:17:54,616 ஆரம்பிக்கலாம். நான் நல்லாயிருக்கேன். 270 00:17:55,492 --> 00:17:56,702 நான் ரெடி. 271 00:17:56,785 --> 00:17:58,704 இதோ வருது. ஓ, ஆம். 272 00:17:59,580 --> 00:18:02,583 சரி, எனக்கு அழகா இருக்குற, கடுமையான அம்மா இருக்காங்க, 273 00:18:02,666 --> 00:18:04,501 அவங்க கதவை ஒரு ஆண் வந்து தட்ட முடியும்னா 274 00:18:04,585 --> 00:18:06,378 அவன் டெலிவரி செய்யும் யூபிஎஸ் அல்லது ஃபெட்எக்ஸ் ஆளாதான் இருக்க முடியும். 275 00:18:06,461 --> 00:18:08,881 -என்னது? -இதோ பாருங்க. 276 00:18:09,840 --> 00:18:13,051 சரி. இது தான் நான் உங்களுக்கு தயாரிச்ச புரோஃபைல். 277 00:18:13,135 --> 00:18:15,262 உங்க விவரங்களை எழுதியிருக்கேன், படங்களைப் போட்டிருக்கேன். 278 00:18:15,345 --> 00:18:16,346 ஜென்னா 279 00:18:16,430 --> 00:18:19,224 "வேலையில் இருக்கும், உடற்பயிற்சி செய்யும் ஒருவரைத் 280 00:18:19,892 --> 00:18:21,226 -தேடுகிறேன்... -ஆம். 281 00:18:21,310 --> 00:18:23,812 ...அதோட புத்திசாலித்தனமான உரையாடக் கூடியவராக இருக்கணும்." 282 00:18:25,022 --> 00:18:26,315 நீ எப்போ இதையெல்லாம் எழுதின? 283 00:18:26,398 --> 00:18:28,609 விளையாடறீங்களா? இதையெல்லாம் வருடக்கணக்கா எழுதிட்டு இருக்கேன். 284 00:18:29,193 --> 00:18:30,986 அம்மா, என்னை நம்புங்க, சரியா? 285 00:18:31,612 --> 00:18:33,572 நீ செலெக்ட் செய்த படங்கள் நல்லா தான் இருக்கு. 286 00:18:34,156 --> 00:18:37,492 இதை அந்த மேட்ச் வலைதளத்துல போட்ட உடனே, நீங்க வேணும்னா, இன்னிக்கே வெளியே போகலாம். 287 00:18:37,576 --> 00:18:39,286 அது ரொம்ப வேகமா இருக்கே. 288 00:18:39,369 --> 00:18:42,247 நீங்க கடைசியா உங்களுக்குன்னு எதுவும் செய்துகிட்டது எப்போ, சொல்லுங்க? 289 00:18:50,380 --> 00:18:52,299 இதை பெண்களுக்குள்ள ரகசியமா வச்சுக்கலாம். 290 00:19:05,395 --> 00:19:06,730 நாம கேக்கை எடுத்துட்டு வரலாம். 291 00:19:07,397 --> 00:19:08,398 சரி. 292 00:19:17,157 --> 00:19:19,451 -இது நடக்காது. -யோ, நீ சொல்வது புரியுது. 293 00:19:20,035 --> 00:19:22,579 சரி, இதை நேரா என் பிளேயர்கள் கைப்புத்தகத்திலிருந்து எடுத்திருக்கேன். 294 00:19:22,663 --> 00:19:25,123 -பிளேயர்கள் கைப்புத்தகத்தகம்னா என்ன? -இல்ல, இல்ல, பிளேயர் இல்லை. 295 00:19:25,624 --> 00:19:29,378 பிளேயா. சரியா? பாரு, நண்பா, நீ ரொம்ப அழகா இருக்க. 296 00:19:30,045 --> 00:19:31,046 வா போகலாம். 297 00:19:31,839 --> 00:19:34,758 டிரியா. ஹே, டிரியா. என்ன நடக்குது? 298 00:19:34,842 --> 00:19:36,885 -ஹே. உங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கு? நல்லதா? -ஹே. 299 00:19:37,845 --> 00:19:41,139 டிரூ உன்னை "த கீஸ் டு த கிங்டம்"ல சேர்ப்பதற்கு முயற்சி செய்யறான், தெரியுமில்ல? 300 00:19:41,723 --> 00:19:44,017 -அது என்னது? -அது ஒரு பாட்காஸ்ட். 301 00:19:44,101 --> 00:19:47,396 ஓ, அப்படியா? எனவே, நாம என்ன விவாதிக்கப் போறோம்? 302 00:19:48,063 --> 00:19:49,523 சியர்லீடிங். 303 00:19:49,606 --> 00:19:52,693 மற்றும் பெண்ணியம். அதோட ரெண்டுக்கும் எப்படி தொடர்புன்னு பேசலாம். 304 00:19:55,487 --> 00:19:58,448 எனவே, ஏன் என்னைத் குறிப்பாஎடுக்கணும்? 305 00:20:01,410 --> 00:20:02,494 சரி, என்ன தெரியுமா? 306 00:20:02,578 --> 00:20:04,663 -நான் எல்லோருக்கும் டிரிங்க்ஸ வாங்கி வரேன், சரியா? -அடக் கடவுளே. 307 00:20:04,746 --> 00:20:05,789 உங்களுக்கு... உங்களுக்குத் தாகமா இல்ல? 308 00:20:05,873 --> 00:20:07,666 சரி தான். வாங்க. 309 00:20:07,749 --> 00:20:08,709 எனக்காக காத்திருக்க வேண்டாம். 310 00:20:08,792 --> 00:20:11,044 -சரி தான், பின்னர் சந்திப்போம். -மாட்டேன், நான் இல்லை. 311 00:20:13,046 --> 00:20:16,341 சரி, நமக்கு கிடைக்கும் மதிப்போட 312 00:20:16,425 --> 00:20:18,677 நாம சியர் செய்யணுமாங்குறத தீர்மானிக்க இன்னும் சுதந்திரம் இருக்கு. 313 00:20:19,887 --> 00:20:21,263 எல்லோருக்கும் அது தெரியணும். 314 00:20:22,681 --> 00:20:24,641 அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. 315 00:20:27,394 --> 00:20:28,645 ஆனால், உன் ஷோவுல பேசுறேன். 316 00:20:31,356 --> 00:20:32,357 சரி. 317 00:20:39,990 --> 00:20:42,743 பதினெட்டு. ஆகிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் வெற்றி அடைஞ்சுட்டீங்க. 318 00:20:43,452 --> 00:20:45,704 நன்றி. ஏன்னா கஷ்டப்பட்ட நாட்கள் இருந்தது உங்களுக்குத் தெரியும். 319 00:20:46,330 --> 00:20:48,165 ஊ. சரி. கேக். 320 00:20:49,166 --> 00:20:50,584 கையை என் மேலிருந்து எடு. 321 00:20:51,585 --> 00:20:54,004 -ஹே, ஹே. -நலமா இருக்கயா? 322 00:20:54,087 --> 00:20:57,299 -அதை எடுங்க. ஷூட்டர். -இல்லை. 323 00:20:57,382 --> 00:20:59,009 -அங்கே தான். -பின்னாடி போ. 324 00:20:59,092 --> 00:21:01,553 பேசு, பேசு. என்னுடன் பேசு. 325 00:21:02,888 --> 00:21:03,889 அதோ அங்கே இருக்கு. 326 00:21:06,683 --> 00:21:08,352 -நல்லா சொன்ன. -சராசரிகளின் விதி, ஐக். 327 00:21:09,144 --> 00:21:11,647 நீ முதல் இரண்டு ஆட்டத்துல அந்த கடுமையான பால்கள் இதுல வேலை செய்யலை. 328 00:21:11,730 --> 00:21:13,607 உனக்கு ஒரு டெய்லரைப் பார்க்கவா? 329 00:21:13,690 --> 00:21:16,276 சில நாட்கள்லேயே நல்லா தைக்கிற ஒருவரை எனக்குத் தெரியும். 330 00:21:16,360 --> 00:21:18,028 எனவே அந்த விதி ரெண்டு பக்கமும் வேலை செய்யுமில்ல? 331 00:21:18,111 --> 00:21:20,864 சரி, உன்னால கொடுக்க முடிஞ்சதுன்னா, எடுத்துக்கவும் முடியணும். 332 00:21:21,657 --> 00:21:23,617 -நல்லது. -டைபிரேக்கர் விளையாடுவோமா? 333 00:21:23,700 --> 00:21:24,826 நிச்சயமா. 334 00:21:24,910 --> 00:21:26,328 நாளைக்கு நான் சீக்கிரம் எழுந்துக்கணும். 335 00:21:27,788 --> 00:21:29,122 என் முட்டிகள் முன்னாடி மாதிரி இல்லை இப்போ. 336 00:21:29,206 --> 00:21:30,582 -சுத்தமா இல்ல. -கண்டிப்பா. 337 00:21:30,666 --> 00:21:31,542 நிச்சயமா. 338 00:21:32,042 --> 00:21:36,046 -மச்சி, உங்களை தாமதிக்க விரும்பலை, இல்லையா? -ஆனால் எனக்கு போக வேற இடமில்லை. 339 00:21:37,172 --> 00:21:38,173 சரி தான். 340 00:21:42,344 --> 00:21:45,764 நாம உண்மைய நேரடியா பேசுவோம். உங்களுக்கு என்னை பிடிக்கல. 341 00:21:46,265 --> 00:21:47,850 நான் படிக்காத முரடன்னு நீங்க நினைக்கிறீங்க, 342 00:21:47,933 --> 00:21:51,270 உங்க பெயரை தொடர்ந்து கொண்டு போக தகுதியில்லாத கருப்பின முட்டாள்னு நினைக்கிறீங்க, அப்படித் தானே. 343 00:21:51,353 --> 00:21:55,440 நானும் உங்களை, திமிர் பிடிச்ச, ஆணவாமா முகத்தை வச்சுக்குற கருப்பினத்தவர்னு நினைக்கிறேன் 344 00:21:55,524 --> 00:22:01,321 தனக்கு பிஹெச்டி பட்டம் இருப்பதால, திறமைசாலியான பத்து பேர்ல இடம் பெற முடியும்னு நினைக்கிறவர். 345 00:22:01,905 --> 00:22:03,740 எனக்குத் தகுதி இல்லங்கறயா? 346 00:22:03,824 --> 00:22:08,036 தகுதியில்லன்னு சொல்லலை. எனவே நிஜமான ஒண்ணுத்தக்கு விளையாடுவோம். 347 00:22:08,996 --> 00:22:11,206 இந்த பிளேசர்கள் வேண்டாம். டைகள் வேண்டாம். 348 00:22:12,541 --> 00:22:16,461 நான் ஜெயிச்சா, நான் இனி தற்காலிக கோச் இல்ல 349 00:22:17,171 --> 00:22:20,007 அதோட, நீ இந்த சீசன்ல இனி என்னை குத்தம் சொல்லக்கூடாது. 350 00:22:26,180 --> 00:22:27,014 டீல். 351 00:22:28,265 --> 00:22:29,099 ரெடியா. 352 00:22:41,195 --> 00:22:45,866 சரி. வாங்க. வாங்க. வாங்க. அதோ அப்படித் தான். 353 00:22:46,658 --> 00:22:48,869 மூணு, ரெண்டு, ஒண்ணு. 354 00:22:48,952 --> 00:22:53,707 பிறந்தநாள் வாழ்த்துகள் 355 00:22:54,208 --> 00:22:58,337 பிறந்தநாள் வாழ்த்துகள் 356 00:22:59,004 --> 00:23:04,259 பிறந்தநாள் வாழ்த்துகள் 357 00:23:04,760 --> 00:23:09,431 பிறந்தநாள் வாழ்த்துகள் 358 00:23:18,273 --> 00:23:19,942 எதாவது ஒன்றை கேளு, ஜேஸ். 359 00:23:42,506 --> 00:23:46,552 பிறந்தநாள் வாழ்த்துகள்! ஆமாம்! 360 00:23:47,511 --> 00:23:49,972 எனவே, அந்த கரிக்குலம் கமட்டியில என்ன நடக்குது? 361 00:23:50,472 --> 00:23:52,641 பெண்ணே, சொல்ல எதாவது இருந்தா நல்லாதான் இருக்கும். 362 00:23:52,724 --> 00:23:57,479 நாங்க கமிட்டி மற்றும் செயல்முறை திட்டம் எல்லாம் போட்டோம், ஆனால் யாரும் கேட்கலை. 363 00:23:57,563 --> 00:24:01,692 நீ நிஜமாவா சொல்ற? திரு. டூல் ஒரு முட்டாள். 364 00:24:03,777 --> 00:24:05,904 உங்களுக்கு ஆசிரியர்கள் யாரும் பிரச்சினையா இருக்காங்களா? 365 00:24:05,988 --> 00:24:09,324 எனவே, இந்த செமஸ்டர் முழுவதும், மூணு வாசித்தல்ல, 366 00:24:09,408 --> 00:24:11,660 புத்தகங்களும், ஒரு கவிதைத் தொடரும் இருந்தன. 367 00:24:11,743 --> 00:24:13,370 ஆனால் லேங்கஸ்டன் ஹ்யூக்ஸைத் தவிர, 368 00:24:13,453 --> 00:24:15,956 மாற்று நிற இனத்தவர்களின் எழுத்துக்கள் எதுவும் நாங்க படிக்கறதே இல்லை. 369 00:24:18,876 --> 00:24:21,295 சரி, நானும் சில முட்டாள்களை சமாளிச்சிருக்கேன். 370 00:24:21,378 --> 00:24:23,839 ஆனால், அது யாராக இருந்தாலும், உங்க சநதோஷத்தை அவங்களால இழக்காதீங்க. 371 00:24:23,922 --> 00:24:28,677 -நீங்க கோச் எட்வர்ட்ஸின் மனைவி தானே, இல்ல? -ஆம், நான் கோச் எட்வர்ட்ஸின் மனைவி தான். 372 00:24:28,760 --> 00:24:31,763 ஆனால், நான் உங்களுடைய டைவெர்சிட்டி, ஈக்விட்டி, மற்றும் இன்க்ளூஷண் ஆலோசகராவும் ஆகப் போறேன். 373 00:24:32,264 --> 00:24:34,224 அதோட, நாம இதைப் பத்தி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்வோம் 374 00:24:34,308 --> 00:24:37,311 -அதுல இந்த பிரச்சினைகளை சரி செய்வோம். -அடடே, நீங்க சொல்லும் போது நம்பிக்கை வருது. 375 00:24:37,394 --> 00:24:39,938 நிச்சயமா செடர் கோவ்ல, கோச் எட்வர்ட்ஸ் நிறைய தனிப்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பார், 376 00:24:40,022 --> 00:24:42,774 -அதனால உங்களுக்குப் புரியும். -ஆம், எனக்குப் புரியுது. 377 00:24:42,858 --> 00:24:44,735 -பெண்களே, நீங்க இரவை என்ஜாய் செய்யுங்க, சரியா? -நீங்களும். 378 00:24:44,818 --> 00:24:46,528 -ரொம்ப நன்றி. -சரி, ரொம்ப நன்றி. 379 00:24:46,612 --> 00:24:49,239 -ரொம்ப இனிமையானவங்க. -ஆமாம். அடக் கடவுளே. 380 00:24:53,994 --> 00:24:56,788 ம்ம்-ஓ. ஆம்பரின் கம்பெனியில, ஜேஸ் தன்னை மறக்கத் தாயாரா இருக்கானா? 381 00:24:58,207 --> 00:24:59,583 நாங்க உன்னை அங்கே அழைச்சுட்டுப் போகணும். 382 00:25:01,960 --> 00:25:03,795 நான் வீட்டுக்குப் போகலாமான்னு யோசிக்கிறேன். 383 00:25:04,713 --> 00:25:07,007 -யோ. எல்லோரும் உன்னை எதிர்பார்க்கிறாங்க. -என்ன? 384 00:25:07,090 --> 00:25:08,550 அவங்க அப்பாவிடம் எல்லாம் சொல்லி தயார் செய்திருக்கா. 385 00:25:08,634 --> 00:25:09,801 நீ வீட்டுக்குப் போக முடியாது. 386 00:25:13,597 --> 00:25:14,723 சரி தான். 387 00:25:15,516 --> 00:25:17,434 -நீ கேள்விப்பட்டயா? -ஆம். 388 00:25:17,518 --> 00:25:19,520 ஹே, நாம கிளம்பலாம். 389 00:25:22,773 --> 00:25:26,902 என்னன்னா, நான் இங்கே இருக்கேன். இங்கே இருக்கப் போறேன். 390 00:25:27,694 --> 00:25:30,697 ஆனால், நான் வீட்டுக்குப் போக வண்டி வேணும்னா கூப்பிடறேன். 391 00:25:30,781 --> 00:25:33,325 -சரி தான். -சரி, சகோ. சரிப்பா, புரோ. 392 00:25:34,451 --> 00:25:35,911 -ஹே. -ஹான்? 393 00:25:35,994 --> 00:25:39,289 நான் என் வீட்டுல நடத்துற பார்ட்டியை நானே விட்டுட்டு போகமுடியாதுன்னு தெரியுமில்லை உனக்கு. 394 00:25:39,790 --> 00:25:42,709 -உங்களுக்கு எல்லாம் அது புரியுது இல்ல? -சரி, அப்போ நான் உன்னை அப்புறம் சந்திக்கிறேன். 395 00:25:43,210 --> 00:25:44,545 பிறந்தநாள் வாழ்த்துகள், சகோ. 396 00:25:44,628 --> 00:25:47,422 நன்றி, புரோ. ரொம்ப மதிக்கிறேன், நண்பா. அப்போ சரி. 397 00:25:49,883 --> 00:25:52,386 யோ, நீ நலமா தான் இருக்கயா? 398 00:25:53,303 --> 00:25:55,013 ஆம், எனக்கு களைப்பா இருக்கு. 399 00:25:56,056 --> 00:25:57,975 ச்சே. தாத்தா, அதுக்குள்ள களைப்பாயிட்டார். 400 00:25:59,434 --> 00:26:00,811 சரி, சரி, வாங்க. சீக்கிரமா போகலாம். 401 00:26:13,323 --> 00:26:15,325 இங்கே வா, உள்ள வா. இங்கே தான் போடு. 402 00:26:15,409 --> 00:26:16,952 ஆமாம். ம்ம்-ஹம்ம். 403 00:26:18,912 --> 00:26:19,997 ஆம்! அது உனக்கில்லை. 404 00:26:20,581 --> 00:26:22,416 -ஆம், பேபி! -ஃபௌல். 405 00:26:22,499 --> 00:26:25,627 இதோப் பாருங்க அப்பா! மீண்டும் அதே மாதிரி உத்தியா? 406 00:26:25,711 --> 00:26:28,547 ரத்தம் இல்லை, ஃபௌல் இல்ல. நான் உன்னைத் தொடவேயில்லை. 407 00:26:28,630 --> 00:26:31,216 நீ தான் என்னை முழுவதும் தடுத்த. சிலர் அதை அப்பட்டம்னு சொல்லுவாங்க. 408 00:26:31,300 --> 00:26:32,467 சிலர் அதை பொய்னு சொல்லுவாங்க. 409 00:26:32,551 --> 00:26:34,678 எது பொய்னு உனக்குத் தெரியும், நீ என் புட்டத்தை இடிச்சுட்டு 410 00:26:34,761 --> 00:26:35,888 அதை தடுக்குறது போல நடப்பது தான் பொய். 411 00:26:35,971 --> 00:26:38,390 இப்போ உங்க மரியாதையான பேச்சு எல்லாம் காத்துல போயிடுச்சா? 412 00:26:38,473 --> 00:26:40,893 என்னுடைய பழைய நிலையைப் பார்க்க விரும்புறயா? 413 00:26:42,019 --> 00:26:44,980 நான் அடிமட்டத்து சாக்கடையா இருக்க முடியும். 414 00:26:47,858 --> 00:26:51,653 சரி, டாக்டர். அமைதியாகிடுங்க. 415 00:26:52,446 --> 00:26:56,116 சரி... நீங்க என்ன நினைக்கிறீங்க, அண்ணா? 416 00:26:56,825 --> 00:26:58,368 உடல் பட்டது. 417 00:27:00,329 --> 00:27:01,330 நல்லது. 418 00:27:02,831 --> 00:27:03,999 நாம முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். 419 00:27:05,417 --> 00:27:06,502 ரெடி. 420 00:27:13,133 --> 00:27:16,094 -ம்ம்-ம்ம். ஆரம்பிக்கலாம். -சரி, ஆடுவோம். அப்போ ஆடுவோம். 421 00:27:16,178 --> 00:27:20,432 -சரி. தொடங்குவோம். -ம்ம்-ஹம்ம். ஹே. 422 00:27:20,516 --> 00:27:21,642 ஹே! 423 00:27:25,270 --> 00:27:26,855 அது ஃபௌல் இல்லையா? 424 00:27:27,439 --> 00:27:29,107 நீங்க அப்படிச் சொல்லலைன்னா ஃபௌல் இல்ல. 425 00:27:33,362 --> 00:27:37,115 ச்சே! நான் அதை நல்ல விதமா எடுத்துக்கறேன். 426 00:27:39,201 --> 00:27:41,620 -நல்ல ஆட்டம். -நீயும் நல்லா ஆடின. 427 00:28:00,931 --> 00:28:02,975 இப்போது நேரம் சரியாக பதினொன்று, நானும் சரியாக அந்த பிளாக்கில் இருக்கேன் 428 00:28:03,058 --> 00:28:05,727 உறங்கவோ, கொட்டாவி விடவோ, வேறு எதுவும் செய்யவோ நேரமில்லை 429 00:28:05,811 --> 00:28:07,563 பன்னிரெண்டு இன்னும் சற்று நரத்தில் எட்டிப் பார்க்கிறது நேரத்தை எட்ட 430 00:28:07,646 --> 00:28:10,357 நாங்கள் மிகவும் கவனமாக நகர்கிறோம் இந்த பிளாக் மிகவும் சூடேறி உள்ளது 431 00:28:10,440 --> 00:28:12,276 இந்த பிளாக் மிகவும் சூடேறி உள்ளது 432 00:28:12,943 --> 00:28:14,653 இந்த பிளாக் மிகவும் சூடேறி உள்ளது 433 00:28:14,736 --> 00:28:16,572 இந்த பிளாக் மிகவும் சூடேறி உள்ளது 434 00:28:16,655 --> 00:28:18,782 இந்த பிளாக் மிகவும் சூடேறி உள்ளது... 435 00:28:18,866 --> 00:28:21,451 ஓஹோ, ஓஹோ, ஓஹோ, ஓஹோ, ஓஹோ, ஓஹோ. 436 00:28:21,535 --> 00:28:24,371 -ஹே, ஜேஸ் கார்சன், என்ன நடக்குது? -என்ன நடக்குது, நண்பா? 437 00:28:24,454 --> 00:28:25,956 உனக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள், சகோ. 438 00:28:29,501 --> 00:28:32,838 இன்னும் சொல்லப்போனா, எல்லோரும் இப்போ உங்க ஃபோன்களை மேலே ஆட்டணும். 439 00:28:32,921 --> 00:28:35,007 ஃபோன்கள் மேலே. ஃபோன்கள் மேலே. 440 00:28:35,090 --> 00:28:36,675 அவற்றை மேலே போடுங்க, மேலே போடுங்க. 441 00:28:36,758 --> 00:28:38,802 ஹே, ஜேஸ். இது உனக்காக தான். 442 00:28:41,305 --> 00:28:43,682 ஒண்ணு, ரெண்டு, மூணு, சொல்லுங்க... 443 00:28:45,851 --> 00:28:47,603 -நான் உடனே திரும்பி வரேன். -சரி. 444 00:28:52,149 --> 00:28:53,483 கிறிஸ்டல் கொஞ்ச நாளாயிடிச்சு. நல்லாயிருக்கயா? 445 00:28:53,567 --> 00:28:54,401 ஆமாம். 446 00:28:54,484 --> 00:28:55,777 நான் 27 புள்ளிகளை எடுத்தேன் கூல் எனக்கு 35 இருந்தது 447 00:28:55,861 --> 00:28:59,489 ஹாட்! 448 00:28:59,573 --> 00:29:02,242 கேட்க மறந்து போனேன், இந்த ஆள் எப்படி சிறையிலிருந்து வெளியே வந்தார்? 449 00:29:07,080 --> 00:29:08,624 யோ, என்ன கண்றாவி? 450 00:29:09,750 --> 00:29:12,085 -டூட், நிறுத்து. -அது என்னுடைய பெண். 451 00:29:12,169 --> 00:29:14,588 அவருக்கு ஒரு வருஷம் ஆனதும், இரண்டு வருஷம் புரோபேஷன் கொடுத்துட்டாங்க. 452 00:29:14,671 --> 00:29:17,174 -நான் உன் பெண் இல்லை. -யோ, எதுவும் பிரச்சினையா? 453 00:29:18,550 --> 00:29:19,551 நீ சொல்லு. 454 00:29:20,093 --> 00:29:22,471 நீ பின்வாங்காதே. இது இப்போ பெரிசாகுது. 455 00:29:23,639 --> 00:29:24,890 யோ, வாப்பா, நண்பா. சில். 456 00:29:26,141 --> 00:29:27,559 நீங்க தொடருங்க, நாங்க இருந்துக்கறோம். 457 00:29:43,158 --> 00:29:46,537 உனக்கு தான் டி1 கல்லூரி கிடைச்சிடுச்சே, இதெல்லாம் உனக்காக தான் நடக்குது. 458 00:29:46,620 --> 00:29:48,705 இந்த மாதிரி மடத்தனமான சச்சரவுகள் எல்லாத்துலையும் நாம ஈடுபடக் கூடாது. 459 00:29:49,373 --> 00:29:51,083 நாம இதைவிட இன்னும் புத்திசாலித்தனமா நடந்துக்கணும். 460 00:30:00,592 --> 00:30:03,053 உனக்காக ஒரு சர்ச் பார்ட்டியை அனுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். 461 00:30:04,930 --> 00:30:05,931 உனக்கு ஒரு டிரிங்க் தரட்டமா? 462 00:30:08,058 --> 00:30:09,059 வேண்டாம். 463 00:30:10,227 --> 00:30:11,645 இதெல்லாம் செய்ததுக்கு நன்றி. 464 00:30:13,522 --> 00:30:14,690 நீ ஐடிகேயை போய் சந்திக்க விரும்புறயா? 465 00:30:16,817 --> 00:30:18,777 இல்ல, எனக்கு கொஞ்சம் களைப்பா இருக்கு. 466 00:30:19,278 --> 00:30:21,488 நாளைக்கு காலையில நாங்க நியூ யார்க்குக்குப் போகணும். 467 00:30:23,991 --> 00:30:25,075 நான் வீட்டுக்குப் போகணும். 468 00:30:26,326 --> 00:30:27,661 என் பெற்றோர்கள் இங்கே இல்லை. 469 00:30:28,495 --> 00:30:29,496 என் அறைக்குப் போகலாம். 470 00:30:31,081 --> 00:30:32,207 இப்போ என்னால முடியாது. 471 00:30:37,296 --> 00:30:38,297 படமாவது எடுத்துக்கலாமா? 472 00:30:42,009 --> 00:30:43,010 நிச்சயமா. 473 00:31:28,222 --> 00:31:29,223 எனக்கு இதை திரும்ப நிரப்பணும். 474 00:31:36,772 --> 00:31:39,149 -அது அருமையா இருந்தது, நண்பா. -ஆமாம், சகோ. உனக்கு எப்படி இருந்தது, மகனே? 475 00:31:39,233 --> 00:31:41,109 உனக்கு ஆம்பருடன் எப்படி இருந்தது? பார்த்தேன். 476 00:31:42,402 --> 00:31:43,445 ஆமாம். 477 00:31:43,529 --> 00:31:45,280 -அந்த பையன் எப்போதும் பிசியா இருப்பான். -கிட்டத்தட்ட வந்தாச்சு. 478 00:31:45,364 --> 00:31:46,698 -மூச்சு வடு. -இல்லை, புரோ. நீ அப்படியே இரு. 479 00:31:46,782 --> 00:31:49,952 -இல்ல, இல்லயில்ல. இல்ல! -இல்ல, இல்லயில்ல. இல்ல! 480 00:31:54,915 --> 00:31:58,502 -நீ நலமா இருக்கயா, மச்சான்? -இது எங்க அம்மாவுடைய கார், சகோ. 481 00:31:58,585 --> 00:31:59,837 சரி தான். 482 00:31:59,920 --> 00:32:00,921 அடடே. 483 00:32:05,425 --> 00:32:06,927 ஹே, ஹே. இசை ஒலியை குறைச்சிடு. 484 00:32:27,781 --> 00:32:28,615 புரியுது. 485 00:32:29,783 --> 00:32:31,952 அவன் தலை பத்திரம். அவன்... சரி. 486 00:32:32,744 --> 00:32:34,371 -பாரு, சிஜே. -பாருப்பா, நண்பா. 487 00:32:34,454 --> 00:32:36,957 -வா, சிஜே. -நாங்க இருக்கோம், நாங்க கூட இருக்கோம். 488 00:32:37,040 --> 00:32:39,501 உன்னை பிடிச்சுக்கறோம், வா. 489 00:32:39,585 --> 00:32:42,713 யோ. கதவு அசையுது. 490 00:32:44,882 --> 00:32:46,008 நான் சொல்றதைக் கேளு, சிஜே. 491 00:32:46,675 --> 00:32:48,051 -கேட்குறயா? -ஆமாம். 492 00:32:48,135 --> 00:32:52,264 நீ சாப்பிடக்கூடாத ஒண்ணை சாப்பிட்டேன்னு உங்க அப்பாவிடம் சொல்லு. 493 00:32:52,347 --> 00:32:54,183 உனக்கு ஃபூட் பாய்சன் ஆனதாகச் சொல்லு. 494 00:32:54,683 --> 00:32:56,977 அப்புறம் நேர போய் படுத்துடு. 495 00:32:57,811 --> 00:32:59,062 -சரி. -சரி தானே? 496 00:33:11,658 --> 00:33:12,659 ஹலோ, திரு. ரைடர். 497 00:33:14,077 --> 00:33:15,287 எதுவும் பிரச்சினையா, சிஜே? 498 00:33:16,538 --> 00:33:18,373 கொஞ்சம் வயிறு சரியாயில்லை. 499 00:33:19,208 --> 00:33:20,209 அப்படியா? 500 00:33:20,292 --> 00:33:22,419 நிச்சயமா அது ஃபூட் பாய்சனிங் தான். 501 00:33:22,503 --> 00:33:24,254 அவன் ஆட்டத்துக்கு அப்புறம் களைப்பா இருக்கான்னு நினைச்சோம், 502 00:33:24,338 --> 00:33:26,423 அதனால ஏதோ சாப்பிட்டதாக தான் இருக்கணும்னு புரிஞ்சுகிட்டோம். 503 00:33:27,216 --> 00:33:30,928 சரி, அது கொஞ்சம் தமாஷா தான் இருக்கு, ஏன்னா மத்தவங்க யாருக்கும் அப்படி ஆகலயே. 504 00:33:31,595 --> 00:33:34,890 அந்த உணவு எவ்வளவு நேரமா அங்கே இருந்ததுன்னு யாருக்குமே தெரியாதே? 505 00:33:36,975 --> 00:33:39,686 நான் படுக்கணும், அப்பா. 506 00:33:41,271 --> 00:33:42,856 சீக்கிரம் குணமாகிடு, புரோ. 507 00:33:45,692 --> 00:33:51,365 சரி, சிஜே இவ்வளவு நல்ல நண்பர்களுடன் சேர்ந்திருக்கான்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 508 00:33:53,450 --> 00:33:55,869 அவன் உங்களை காலையில, பஸ்ஸுல சந்திப்பான். 509 00:33:57,746 --> 00:34:00,499 -குட் நைட். -உனக்கு... நான்... 510 00:34:00,582 --> 00:34:02,084 -நீங்க இதை திரும்பவும் எடுத்துக்கணும். -ஆம். 511 00:34:09,967 --> 00:34:11,301 நாம டிரூவை கூட்டிட்டு வரணும். 512 00:34:13,428 --> 00:34:15,013 நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். 513 00:34:31,321 --> 00:34:33,949 -யோ, யோ! -என்ன நடக்குது, நண்பா? 514 00:34:34,032 --> 00:34:36,784 -என்ன நடக்குது, சகோ? -எனவே, எல்லாம் நல்லபடியா ஆச்சா? 515 00:34:36,869 --> 00:34:39,955 -பாரு, நண்பா. பக்கிளைப் போடு. -அவன் எப்படி இருந்தது? என்ன ஆச்சு? 516 00:34:40,038 --> 00:34:41,373 -அதாவது... -அவர் நல்லா தான் இருந்தார். 517 00:34:41,456 --> 00:34:42,708 ...நம்பிட்டார்னு நினைக்கிறேன். 518 00:34:43,583 --> 00:34:46,170 அதோட, ஜேஸ் இருக்கானே, அவன் தான்... 519 00:34:46,920 --> 00:34:48,964 அவன் த என்ஃபோர்சருக்கு வாய்ப்பே தரலை. 520 00:34:49,047 --> 00:34:50,007 -நிஜமா. -இல்லை, நண்பா. 521 00:34:50,090 --> 00:34:52,050 எனக்கு ஃபூட் பாய்சனிங் ஆகியிருக்கக்கூடாதான்னு நினைக்க வச்சுட்டார், த என்ஃபோர்சர். 522 00:34:52,134 --> 00:34:54,011 -நீ என்ன சொல்ற? -ஆனால், என்ன, நிஜமா... 523 00:34:54,094 --> 00:34:56,346 இல்ல, அது என்னன்னா அவர் இப்போதான் ஓய்விலேர்ந்து வெளியே வந்திருப்பதால 524 00:34:56,429 --> 00:34:59,641 இனிமே நாம அவர் வீட்டு வாசப்படியை மிதிக்கவே பயப்படணும் நினைச்சார். 525 00:35:00,559 --> 00:35:02,519 இங்கே பின்னாடி ஏன் வாந்தி நாத்தம் அடிக்குதுன்னு யேசிச்சேன், புரோ. 526 00:35:02,603 --> 00:35:04,605 -மச்சி. புரோ. வேண்டாம்... -எனக்குப் புரிஞ்சுடுச்சு. 527 00:35:04,688 --> 00:35:05,814 மக்களே, அந்த பேச்சே வேண்டாம். 528 00:35:05,898 --> 00:35:06,982 -ஆச்சரியம், மச்சி. -நம்பவே முடியலை. 529 00:35:07,065 --> 00:35:08,066 இங்கே நிறுத்து. 530 00:35:09,818 --> 00:35:10,819 சரி. 531 00:35:30,172 --> 00:35:32,841 யோ, நீ... உனக்கு ஒண்ணுமில்லையே? 532 00:35:36,011 --> 00:35:37,346 உன்னிடம் கோபப்பட்டதுக்கு மன்னிச்சிடு. 533 00:35:37,429 --> 00:35:39,348 நீ இரவு முழுவதும் நீயாகவே இல்ல. 534 00:35:39,890 --> 00:35:42,768 -ஆமாம், ஜேஸ். என்ன நடக்குது, நண்பா? -நீ எதைப் பத்தி பேசணும்னு சொன்ன? 535 00:35:43,477 --> 00:35:45,938 ராயலின் பார்ட்டியில, கிறிஸ்டல் எங்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. 536 00:35:46,688 --> 00:35:50,359 அவளுடைய பழைய கோச், கிறிஸ்டா குக்கிடம் யார் அவரை தாக்கினதுன்னு தெரியும்னு சொன்னாராம். 537 00:35:56,532 --> 00:35:58,408 ஆனால் அதெல்லாம் சுத்த கதைன்னு நான் நினைக்கிறேன். 538 00:35:58,492 --> 00:36:01,036 நீ இப்போ வந்து இதை எல்லாம் எங்ககிட்ட சொல்றயா? 539 00:36:01,119 --> 00:36:03,413 நண்பர்களே, அந்த ஆள் சொல்றது எல்லாம் பொய். 540 00:36:04,498 --> 00:36:05,499 அது நல்லதில்லையே. 541 00:36:05,582 --> 00:36:08,418 நாம இவ்வளவு நாள் பாடுபட்டதெல்லாத்தையும் இது கெடுத்துடும் போல இருக்கே, நண்பா! 542 00:36:08,502 --> 00:36:11,505 -அப்படி எதுவும் ஆகாது! நான் நடக்க விட மாட்டேன். -நீ எப்படி அதைச் சொல்ல முடியும்? 543 00:36:11,588 --> 00:36:14,174 நாம எதுவுமே நடக்காத மாதிரி நடந்தால், அவங்க நம்மை தொட முடியாது. 544 00:36:15,259 --> 00:36:18,470 அதோட நான் உறுதியா சொல்றேன், நான் எதையும் சொல்ல மாட்டேன், 545 00:36:20,389 --> 00:36:21,682 என்ன ஆனாலும் சரி. 546 00:36:26,311 --> 00:36:27,312 ச்சே. 547 00:36:27,896 --> 00:36:28,981 எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. 548 00:36:29,481 --> 00:36:31,650 -கடவுளே. -நான் ஜேஸ் பக்கம் தான். 549 00:36:35,070 --> 00:36:36,071 பாரு... 550 00:36:38,991 --> 00:36:43,829 நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்தபோது, பொய் சொல்ல முடியலை, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. 551 00:36:44,913 --> 00:36:45,914 நிஜமா பயந்தேன். 552 00:36:46,999 --> 00:36:52,254 சரி. நான் தினமும் ராத்திரி ஜன்னல் பக்கமா உட்கார்ந்து போலீஸ் வருவதுக்காக காத்திருப்பேன். 553 00:36:53,881 --> 00:36:55,549 என்னால பல மாசமா தூங்க முடியலை. 554 00:36:56,049 --> 00:36:58,760 அதே மாதிரியான நிலையில நான் திரும்பவும் இருக்க விரும்பலை. 555 00:37:01,346 --> 00:37:02,347 நான் மாட்டேன். 556 00:37:04,683 --> 00:37:06,226 எனவே, நீங்க நான் சொல்றதைக் கேட்பீங்க, இல்ல? 557 00:37:06,810 --> 00:37:07,853 ஜேஸ் சொல்றது தான் சரி! 558 00:37:08,520 --> 00:37:09,646 அப்போ எதுவும் நடக்கலை, 559 00:37:10,439 --> 00:37:13,317 இப்பவும் எதுவும் நடக்காது. 560 00:37:34,213 --> 00:37:36,757 சரி, மச்சி. பிறந்தநாள் வாழ்த்துகள். 561 00:37:50,771 --> 00:37:52,439 பிறந்தநாள் வாழ்த்துகள் 562 00:37:56,610 --> 00:37:58,445 ஹேப்பி 18-வது வயசு, ஜேஸ். நான் உன்னை நேசிக்கிறேன், நீ நல்ல மனிதனாக 563 00:37:58,529 --> 00:38:00,531 உருவாகி வருவதைப் பார்த்து ரொம்ப பெருமைப்படறேன். நல்வாழ்த்துகள், அம்மா. 564 00:38:15,587 --> 00:38:16,797 நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். 565 00:38:20,801 --> 00:38:21,802 எந்த வீடியோ? 566 00:38:21,885 --> 00:38:24,221 அந்த பெண்ணும் நீயும் நேத்து இரவு இருந்தீங்களே. 567 00:38:25,681 --> 00:38:28,100 அவளை எனக்கு அறிமுகம் கூட செய்து வைக்கலை. 568 00:38:28,183 --> 00:38:29,560 நான் அவளை ஆட்டத்துல பார்த்தேன். 569 00:38:29,643 --> 00:38:31,895 அவளுடைய குடும்பம் தான் அறிவியல் கட்டடத்துக்கு பண உதவி செய்திருக்காங்கன்னு பார்த்தேன். 570 00:38:31,979 --> 00:38:34,147 -உனக்கு அவள் என்ன வேணும்? -வெறுமனே நண்பர்கள் தான். 571 00:38:35,440 --> 00:38:36,942 ஆனால் அவள் அப்படி நினைக்கலையே. 572 00:38:37,025 --> 00:38:39,403 அவளை விடு, இன்டர்நெட்ல பார்த்தவங்களும் தான். நீ அவளுடன் உறவு வச்சிருக்கயா? 573 00:38:39,486 --> 00:38:41,280 ஓஹோ. அது என் சொந்த விஷயம். 574 00:38:41,363 --> 00:38:44,074 நீ தான் உன் சொந்த விஷயத்தை அப்படி வெளி உலகத்துக்குக் காட்டின. 575 00:38:47,286 --> 00:38:50,330 உன் கவனத்தை சிதற விடாதே உன் எதிர்காலம் அது தான். 576 00:38:50,414 --> 00:38:52,833 என்பிஏவில சேர இன்னும் ரெண்டு வருஷம் தான் இருக்கு. 577 00:38:58,547 --> 00:39:00,674 சரி, அம்மா. நீங்க சரியா தான் சொல்றீங்க. 578 00:39:04,803 --> 00:39:05,804 எனக்குப் புரியுது. 579 00:39:19,067 --> 00:39:20,777 -ஹே, மகனே. எப்படி இருக்க? -ஹே, அப்பா. 580 00:39:50,807 --> 00:39:52,893 நீங்க ஏன் அந்த ஆளை தாக்கல, அப்பா? 581 00:39:53,519 --> 00:39:56,605 அவன் மகனை நான் சஸ்பெண்ட் செய்தேன். கெட்ட செயலுக்கு பரிசு கொடுக்க முடியாது. 582 00:39:56,688 --> 00:39:59,274 அவங்க உனக்கு எரிச்சலைத் தர அனுமதிக்கக்கூடாது, எமரி. 583 00:39:59,358 --> 00:40:01,568 ஏன்னா, எரிச்சல் வந்தால், அவங்களுக்கு வெற்றி. 584 00:40:01,652 --> 00:40:03,779 அதோட, அது அனுமதிச்சா நிறைய ஆபத்து இருக்கு. 585 00:40:04,780 --> 00:40:05,614 இல்லையா? 586 00:40:06,490 --> 00:40:11,036 உன் மரியாதையைப் பெறுகிறவர்களுக்கு மட்டும் தான் பரிசு தரணும். 587 00:40:16,083 --> 00:40:19,086 -பேரத்துல உன் வாக்கைக் காப்பாத்திட்ட. -உங்க குரல்ல ஆச்சரியம் இருக்கு. 588 00:40:19,169 --> 00:40:22,089 நீ என்ன தான் என்னை ஃபௌல் செய்தாலும், உன் ஆட்ட வீரர்கள் ஏன் உன்னை மதிக்கிறாங்கன்னு புரியுது. 589 00:40:23,215 --> 00:40:24,216 நான் போர்டை அழைச்சேன், 590 00:40:24,299 --> 00:40:27,553 அவங்களிடம் நீ இனி தற்காலிகமா இருக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு என் சிபாரிசைச் சொன்னேன். 591 00:40:28,554 --> 00:40:29,763 நீ அதுக்குத் தகுதியானவன் தான். 592 00:40:29,847 --> 00:40:34,935 ஆகவே, நல்வாழ்த்துகள். நீ தான் இப்போது அதிகாரப்பூர்வமா ஹெட் கோச். 593 00:40:37,896 --> 00:40:39,147 ரொம்ப நன்றி, எமரி. 594 00:40:41,191 --> 00:40:46,613 எனக்கு... இது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு எனக்குத் தெரியும். 595 00:40:47,447 --> 00:40:51,076 அதோட, இது என் குடும்பத்துக்கும், பசங்களுக்கும் மட்டும் கிடைக்கிற வெற்றியாக இருக்காது 596 00:40:51,159 --> 00:40:52,703 மொத்த செடர் கோவுக்கே கிடைக்கும் வெற்றி. 597 00:40:54,037 --> 00:40:59,042 அதோட, இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்தறேன், நான் உங்கள ஃபௌல் செய்யலை. 598 00:41:02,921 --> 00:41:04,339 நியூ யார்க்ல வெற்றி பெற நல்வாழ்த்துகள். 599 00:41:17,686 --> 00:41:20,856 வாழ்க்கையில் சரி நடக்கணுங்கற எல்லாத்துக்கும் ஒரு சடங்கு இருக்கு. 600 00:41:32,367 --> 00:41:34,953 நான் சாப்பிட்டதிலேயே இது தான் ருசியான காப்பி. 601 00:41:35,996 --> 00:41:37,122 உனக்குப் பிடிச்சிருப்பது சந்தோஷமா இருக்கு. 602 00:41:38,248 --> 00:41:42,419 ஆனால் இப்போ ஐக் இங்கே செடர் கோவ்ல இருப்பதால ஒரு வித மரியாதை இருக்கு. 603 00:41:43,212 --> 00:41:46,298 ஜெர்சியில முன் பக்கம் அச்சடிச்சிருக்கும் பெயர்தான் அந்த மரியாதையைத் தருது. 604 00:41:48,050 --> 00:41:51,094 தெரியும், ஆனால்... மன்னிக்கணும், ஒரு வினாடி. 605 00:41:51,720 --> 00:41:53,347 பாரி மில்லர் 606 00:41:53,430 --> 00:41:55,807 கோச் வார்ரிக்கின் கதையை இன்னொரு நிருபர் எடுத்தாச்சு 607 00:41:55,891 --> 00:41:56,892 இப்போ அதை கைவிடறோம்! 608 00:42:00,604 --> 00:42:02,940 மன்னிக்கணும், நான்... நான் போகணும். 609 00:42:04,441 --> 00:42:06,235 ஒரு கட்டுரையை இன்னொரு நிருபர் வெளியிடப் பார்க்கிறாங்க. 610 00:42:06,902 --> 00:42:08,779 நான் முந்திப்பேன்னு நினைச்சேன். 611 00:42:09,446 --> 00:42:12,199 -எதுக்கு முந்திப்பீங்கன்னு நினைச்சீங்க? -அது வெளியாகும் போது டெக்ஸ்ட் செய்யறேன். 612 00:42:22,376 --> 00:42:23,377 என்ன நடக்குது, ராயல்? 613 00:42:24,336 --> 00:42:25,337 ஹை, ஜாரெட். 614 00:42:27,005 --> 00:42:27,840 ஜானி. 615 00:42:32,344 --> 00:42:33,512 என்ன ஆச்சு? 616 00:42:35,514 --> 00:42:36,723 எனக்கு... எனக்குத் தலைவலி. 617 00:42:50,445 --> 00:42:53,115 நான் உங்க அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன். 618 00:42:53,198 --> 00:42:57,911 அதோட, நீங்க கொடுத்த ஆதரவு தான் இப்போ உங்க முன்னாடி ஹெட் கோச் நிற்க காரணம். 619 00:42:58,704 --> 00:42:59,913 இனி தற்காலிக கோச் இல்லை. 620 00:43:03,333 --> 00:43:04,334 என்ன நடக்குது? 621 00:43:07,963 --> 00:43:08,797 என்ன கண்றாவி? 622 00:43:08,881 --> 00:43:10,841 ஸ்வெகர் அணி தான் அவரைத் தாக்கியது என்று வார்ரிக் குற்றம் சாட்டுகிறார். 623 00:43:22,102 --> 00:43:23,187 என்ன ஒரு அவமானம்! #அவள்தான்இதுக்கெல்லாம்காரணமாஇருந்தவள் 624 00:43:24,688 --> 00:43:26,356 அவளுக்குஅந்தஆட்டத்தைவிளையாடதத் குதியில்லை! #குவீன்பின் 625 00:43:26,440 --> 00:43:28,567 நாங்க உனக்கு ஆதரவா இருக்கோம் கிறிஸ்! #மேலேஎழு 626 00:43:28,650 --> 00:43:29,693 அவள் தான் இந்த சூழ்நிலையை உருவாக்கியதே... 627 00:43:29,776 --> 00:43:30,611 கிறிஸ்டல். தைரியமா இரு! #மீடூ 628 00:43:30,694 --> 00:43:32,029 உன் கூடைப்பந்து எதிர்காலத்தை மறந்துடு! 629 00:43:34,907 --> 00:43:38,493 யோ, இதுல எதுவும் உண்மை இருக்கான்னு எனக்குத் தெரியணும். 630 00:43:45,792 --> 00:43:47,377 அதுல உண்மை இல்ல, கோச். 631 00:43:50,506 --> 00:43:51,840 உறுதியா சொல்றயா? 632 00:43:53,467 --> 00:43:54,468 ஆமாம். 633 00:44:02,309 --> 00:44:03,894 மீண்டும் பஸ்ஸுல ஏறுவோம். 634 00:45:24,433 --> 00:45:26,435 தமிழாக்கம் அகிலா குமார்