1 00:01:06,984 --> 00:01:07,985 ஜெரிகோ. 2 00:01:10,445 --> 00:01:12,030 அம்மா இங்கு தான் இருக்கிறேன்! 3 00:01:17,369 --> 00:01:18,912 இந்த உணவு சிறப்பாக இருக்கும். 4 00:01:20,873 --> 00:01:22,374 அவருக்குப் பிடிக்காததை செய்யக்கூடாது. 5 00:01:22,457 --> 00:01:25,335 கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சுவையில்லாத உணவை சாப்பிட்டிருப்பாள். 6 00:01:26,420 --> 00:01:27,880 இன்று காலை உங்களுக்கு “ஜிக்யூ”-வில் நேர்காணல் இருக்கு தானே? 7 00:01:28,714 --> 00:01:31,425 டொரோதி இன்று வீட்டிற்கு வந்திருக்கிறாள், நான் அவளுடன் இருக்க வேண்டும். 8 00:01:32,301 --> 00:01:33,927 டொரோதிக்கு இயல்பான சூழ்நிலைதான் தேவை. 9 00:01:35,596 --> 00:01:36,597 நீங்கள் போங்கள். 10 00:01:39,224 --> 00:01:40,642 நான் இங்கிருப்பேன். 11 00:01:40,726 --> 00:01:43,020 இன்று ஒருநாள் காலை நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறோம். 12 00:01:43,812 --> 00:01:45,022 சென்று, உடையை மாற்றிக்கொள்ளுங்கள். 13 00:01:47,733 --> 00:01:48,775 ஜிக்யூ காத்திருக்கின்றனர். 14 00:02:06,835 --> 00:02:07,836 காலை வணக்கம். 15 00:02:08,920 --> 00:02:13,592 - இல்லை. நான் ஷானிடம் சொன்னேன். எனக்கு... - ஷான், வேலைக்குப் போக வேண்டுமே. 16 00:02:14,426 --> 00:02:16,929 கவலைப்படாதீர்கள், நாங்கள் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வோமென அவருக்குத் தெரியும். 17 00:02:18,722 --> 00:02:19,723 என் மகன் எங்கே? 18 00:02:20,474 --> 00:02:22,267 - சரி, உங்களை உட்கார வைக்கிறேன்... - என்னைத் தொடாதே. 19 00:02:23,602 --> 00:02:24,603 நான் நன்றாக இருக்கிறேன். 20 00:02:25,312 --> 00:02:26,605 உங்களுக்கு வலிக்கும், டொரோதி. 21 00:02:27,940 --> 00:02:30,776 நான் சரியாகிவிடுவேன். நீ போய்விடு. 22 00:02:33,820 --> 00:02:38,283 கஷ்டப்படுத்துகிறீர்கள் எனத் தெரிகிறது, அதற்காக கொடூரமாக நடந்து கொள்ளாதீர்கள். 23 00:02:41,411 --> 00:02:43,372 ஏதாவது தேவைப்பட்டால் இந்த மணியை அடியுங்கள். 24 00:02:43,455 --> 00:02:45,249 இன்று யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். 25 00:02:50,504 --> 00:02:51,630 எனவே நிம்மதியாக ஓய்வெடுங்கள். 26 00:02:59,012 --> 00:03:00,931 அவள் ஓட்ஸ் சாப்பிட மறுக்கிறாள். 27 00:03:01,014 --> 00:03:02,015 அழகாக இருக்கிறாய். 28 00:03:05,018 --> 00:03:06,728 எனக்காக இதை செய்ய முடியுமா? 29 00:03:07,896 --> 00:03:11,108 ரொம்ப கஷ்டமானது கிடையாது, இதைச் செய்தால் டொரோதி கண்டிப்பாக சந்தோஷப்படுவாள். 30 00:03:11,817 --> 00:03:13,902 மதிய உணவிற்கு முன், ஜெரிகோவுடன் கொஞ்ச நேரம் செலவழிக்க விரும்புகிறேன். 31 00:03:14,403 --> 00:03:16,238 சரி, இது ஷானின் செயல்முறை போல இருக்காது. 32 00:03:18,240 --> 00:03:19,241 பரவாயில்லை. 33 00:03:20,868 --> 00:03:26,999 ஓ, லியன், டொரோதி வீட்டிலிருக்கும் போது நாம் ஒன்றாக இருக்கக் கூடாது. 34 00:03:28,584 --> 00:03:31,920 ஷான் வேலைக்கு போக வேண்டும். டொரோதிக்கு உடம்பு சரியாக வேண்டும். 35 00:03:32,838 --> 00:03:34,006 நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். 36 00:03:41,513 --> 00:03:44,850 மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து வெளியேறி புறநகருக்குச் சென்றது 37 00:03:44,933 --> 00:03:47,311 {\an8}ஃபிலடெல்ஃபியா மக்களிடையே சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. 38 00:03:47,394 --> 00:03:49,146 {\an8}8 நியூஸ் -ஃபிலடெல்ஃபியா வன்முறை குற்றம் அதிகரிப்பு 39 00:03:49,229 --> 00:03:51,190 {\an8}நம் வரலாற்று சிறப்புமிக்க நகரம் அதன் அழகை இழந்து கொண்டிருக்கிறதா? 40 00:03:51,273 --> 00:03:55,527 மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உள்ளூர் பெண் மார்ஷா, தன் கருத்தை பகிர்ந்துகொள்கிறார். 41 00:03:55,611 --> 00:03:57,821 ஃபில்லி முன்பிருந்தது போல இல்லை. 42 00:03:57,905 --> 00:03:59,489 இந்நகரம்... 43 00:03:59,573 --> 00:04:01,450 நீங்கள் இதையெல்லாம் பார்க்கக் கூடாது. 44 00:04:01,950 --> 00:04:04,203 நம் ஊர் எப்போதும் போல அழகாக இருக்கிறது. 45 00:04:06,288 --> 00:04:09,124 ஜூலியன் உங்களுக்காக ஷக்ஷுக்கா செய்துள்ளார். நன்றாக இருக்கிறதா? 46 00:04:09,958 --> 00:04:13,086 உங்களுக்கு ஏதாவது சுவையாக செய்து தரலாம் என நினைத்தோம். 47 00:04:13,170 --> 00:04:16,255 என் அண்ணன் எங்கே? நான் அவனைப் பார்க்கவேண்டும். 48 00:04:18,050 --> 00:04:19,134 கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். 49 00:04:20,135 --> 00:04:21,220 உங்களுக்கு எப்படியிருக்கிறது? 50 00:04:22,721 --> 00:04:26,391 அரிக்கிறது... வலிக்கிறது. 51 00:04:27,392 --> 00:04:29,186 நீ என் பக்கத்தில் இருக்காதே. 52 00:04:31,188 --> 00:04:34,316 சரி, மருத்துவரிடம் மருந்தை அதிகப்படுத்தச் சொல்கிறேன். 53 00:04:37,611 --> 00:04:38,987 சாப்பிடுங்கள். 54 00:04:40,364 --> 00:04:41,365 டொரோதி. 55 00:04:42,115 --> 00:04:44,076 - சாப்பிடுங்கள். ஒரு வாய் சாப்பிடுங்கள். - வேண்டாம். 56 00:04:45,410 --> 00:04:46,411 அப்படித்தான். 57 00:04:55,212 --> 00:04:57,130 பரவாயில்லை எதேச்சையாக நடந்துவிட்டது. 58 00:04:59,299 --> 00:05:02,427 உங்கள் வயிறு சரியாவதற்கு கொஞ்ச நாட்களாகும் என ஷான் சொன்னார். 59 00:05:04,471 --> 00:05:06,223 ஹே, நான் உங்களிடம் ஒன்று காட்ட வேண்டும். 60 00:05:08,350 --> 00:05:12,229 நீங்கள் வீட்டுக்குத் திரும்பியதை வரவேற்க, இதை பரிசாக தர நினைத்தேன். 61 00:05:15,065 --> 00:05:17,359 இது ஜெரிகோவின் பழைய துணிகளால் ஆனது, 62 00:05:17,442 --> 00:05:20,153 நீங்கள் இல்லாதபோது அவன் அணிந்திருந்த ஆடைகளால் செய்யப்பட்டது. 63 00:05:20,863 --> 00:05:22,406 பெரிதாக வளர்ந்துவிட்டான். 64 00:05:24,157 --> 00:05:27,369 இந்தச் சிறிய பன்றி... 65 00:05:29,246 --> 00:05:30,539 அவன் பழைய ஆடைகளையெல்லாம்... 66 00:05:32,583 --> 00:05:34,668 அப்புறப்படுத்துவது, அவனது அம்மாவின் வேலை. 67 00:05:36,128 --> 00:05:37,754 உன்னுடையதில்லை. 68 00:05:39,840 --> 00:05:41,800 இப்போது அதையும் என்னிடமிருந்து பறித்துக்கொண்டாய். 69 00:06:11,538 --> 00:06:12,789 ஹே, என்ன விஷயம்? 70 00:06:12,873 --> 00:06:15,375 ஏதும் பிரச்சினையில்லையே? டொரோதி என் அழைப்பை எடுக்கவில்லை. 71 00:06:17,211 --> 00:06:18,420 ஒன்றும் பிரச்சினையில்லை. 72 00:06:19,254 --> 00:06:20,589 அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள். 73 00:06:21,089 --> 00:06:22,466 நீ லியனின் ரூமில் இருக்கிறாயா? 74 00:06:23,967 --> 00:06:26,428 என்னிடம்... தனியாகப் பேச விரும்புவாய் என நினைத்தேன். 75 00:06:27,012 --> 00:06:30,015 சரி. டொரோதியை பேச சொல்கிறாயா? எப்படி இருக்கிறாள் என தெரிந்துகொள்கிறேன். 76 00:06:30,098 --> 00:06:32,768 கவலைப்படாதே, ஷான். மோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. 77 00:06:46,532 --> 00:06:48,534 என்மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் எனத் தெரியும். 78 00:06:51,036 --> 00:06:53,997 ஆனால் படிக்கட்டில் நடந்தது ஒரு விபத்து. 79 00:06:57,501 --> 00:07:00,170 அப்புறம், போர்வை விஷயத்திற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 80 00:07:01,421 --> 00:07:03,590 நான் உங்களிடம் கேட்காதது என் தவறு தான். 81 00:07:05,801 --> 00:07:07,219 ஒரு சிறப்பு விருந்தினரைக் காட்டுகிறேன். 82 00:07:18,438 --> 00:07:20,858 ஓ, என் செல்ல மகனே. 83 00:07:21,817 --> 00:07:24,027 அம்மாவிற்கு உன் நினைவாகவே இருந்தது. 84 00:07:24,570 --> 00:07:25,487 அவனை என்னிடம் கொடு. 85 00:07:25,571 --> 00:07:26,989 முதலில் இரண்டு வாய் சாப்பிடுங்கள். 86 00:07:36,415 --> 00:07:38,792 இன்னும் இரண்டு கடி. அப்படித்தான். 87 00:07:44,381 --> 00:07:45,841 - இங்கே வா. - சரி. 88 00:07:46,842 --> 00:07:47,885 - சரி. - ஹாய். 89 00:07:47,968 --> 00:07:50,304 - அம்மாவைப் பார்க்கப் போகிறாயா? - ஹாய். 90 00:07:50,387 --> 00:07:53,557 - ரொம்ப பெரிதாகிவிட்டாய். கடவுளே. - கீழே இறக்குகிறேன். 91 00:07:54,099 --> 00:07:55,809 நன்றாக தவழ்கிறாயா? 92 00:07:55,893 --> 00:07:56,894 அப்படியா? 93 00:07:57,477 --> 00:07:59,396 சீக்கிரமே நடக்க ஆரம்பித்துவிடுவான் என நினைக்கிறேன். 94 00:07:59,479 --> 00:08:00,480 ஆமாம். 95 00:08:01,815 --> 00:08:03,233 என்னால் இப்போது உன்னைத் தூக்க முடியாது, 96 00:08:03,317 --> 00:08:05,569 ஆனால் தூக்கி விட்டால், உன்னை விடவே மாட்டேன். 97 00:08:05,652 --> 00:08:09,573 ஆம். அதன்பிறகு உன்னுடன் தான் எப்போதுமே இருப்பேன், குட்டிப் பையா. 98 00:08:12,284 --> 00:08:15,078 சரி. இன்றைக்கு இது போதும். 99 00:08:15,954 --> 00:08:18,332 இல்லை, கொஞ்ச நேரம் தான் அவனை வைத்திருந்தேன். 100 00:08:18,415 --> 00:08:21,710 ரொம்ப கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள், டொரோதி. இது மருத்துவர்களின் ஆணை. 101 00:08:21,793 --> 00:08:22,794 தயவுசெய்து கொடு. 102 00:08:27,799 --> 00:08:28,884 உன்னை வெறுக்கிறேன். 103 00:08:53,825 --> 00:08:55,452 - ஹே. - ஹே. 104 00:09:00,123 --> 00:09:00,958 ஒன்றும் பிரச்சினையில்லையே? 105 00:09:03,669 --> 00:09:05,629 டொரோதி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். 106 00:09:07,673 --> 00:09:10,175 தனக்கு எது சிறந்தது என தெரிந்ததாக நினைக்கிறாங்க, ஆனால் அவங்களுக்கு தெரியாது. 107 00:09:12,052 --> 00:09:13,178 அவங்களுக்கு... 108 00:09:20,143 --> 00:09:21,144 சில நேரங்களில்... 109 00:09:23,772 --> 00:09:26,233 நாம் நம்புகிறோம் என்பதை பிறருக்குப் புரிய வைப்பது தான் சிறந்தது. 110 00:09:29,570 --> 00:09:30,654 என்ன ஆச்சு, டோப்ஸ்? 111 00:09:32,030 --> 00:09:33,282 இங்கு என்ன செய்கிறாய்? 112 00:09:37,119 --> 00:09:39,454 ஷான் தயாரிப்பிலிருக்கும் போது என்னை சில விஷயங்களை கவனித்துக்கொள்ள சொன்னார். 113 00:09:39,955 --> 00:09:42,291 அதனால் தான், இங்கிருக்கிறேன். 114 00:09:45,627 --> 00:09:46,670 நீ இங்கு என்ன செய்கிறாய்? 115 00:10:27,169 --> 00:10:28,170 டொரோதிக்காக வந்தார். 116 00:10:38,430 --> 00:10:40,390 ஹே, அழகே! 117 00:10:41,683 --> 00:10:44,144 போராட்ட ராணியைப் பார்க்கலாம் என வந்தேன். 118 00:10:45,562 --> 00:10:48,565 அவங்க ஓய்வெடுக்கிறாங்க. பிறகு வந்து பார்க்கிறீர்களா? 119 00:10:49,775 --> 00:10:50,817 அவள் எனக்கு மெசேஜ் அனுப்பினாள். 120 00:10:51,318 --> 00:10:52,402 நானே மேலே போய் பார்த்துக்கொள்கிறேன். 121 00:10:54,947 --> 00:10:56,698 கொஞ்சம்... வழிவிடு. 122 00:10:57,616 --> 00:10:59,743 - இது மியெல் உணவகத்தில் வாங்கியதா? - ஃபியோரெஸில் இருந்து. 123 00:11:02,287 --> 00:11:03,830 அடடா, ரொம்ப சுவையாக இருக்கிறது. 124 00:11:04,331 --> 00:11:05,999 உனக்கு சிறந்ததைத் தான் செய்வேன். 125 00:11:10,629 --> 00:11:12,130 டொரோதிக்காக பூக்கள் வாங்கி வந்தேன். 126 00:11:13,632 --> 00:11:15,259 கதவை மூடுகிறாயா, கோர்ட்? 127 00:11:24,977 --> 00:11:25,978 ஹே. 128 00:11:26,478 --> 00:11:27,354 நீ இங்கு என்ன செய்கிறாய்? 129 00:11:27,437 --> 00:11:29,523 டொரோதிக்கு ஒன்றுமில்லையே? டொரோதி என்னை வீட்டிற்கு வரச் சொன்னாள். 130 00:11:30,274 --> 00:11:31,400 உங்களை அழைத்தாரா? 131 00:11:31,483 --> 00:11:33,402 வெளியே என்ன நடக்கிறது எனப் பார்த்தாயா? 132 00:11:38,657 --> 00:11:41,410 ஷான், டொரோதி உன்னைக் கூப்பிட்டாள். 133 00:11:43,078 --> 00:11:44,079 என்ன நடக்கிறது? 134 00:11:45,414 --> 00:11:48,709 - புது தொட்டி வேண்டும். - தெரியும்! 135 00:11:57,092 --> 00:11:58,468 நாங்கள்தான் முதலில் பார்த்தோம்... 136 00:12:07,853 --> 00:12:09,271 என்ன இது? 137 00:12:28,624 --> 00:12:31,126 - ஒன்றுமில்லை. - சரி, கீழே வருகிறோம். 138 00:12:32,127 --> 00:12:33,587 பிடித்துவிட்டோம். 139 00:12:39,676 --> 00:12:41,637 - மூட்டை பூச்சிகள். - ஐயோ! 140 00:12:41,720 --> 00:12:43,514 அக்கம் பக்கத்தினர் எல்லோரின் வீட்டிலும் இருக்கிறது. 141 00:12:44,014 --> 00:12:45,641 படுக்கையின் ஓரத்தில் பார்க்கச் சொல்கிறது. 142 00:12:49,478 --> 00:12:50,479 ஐயோ! 143 00:12:53,899 --> 00:12:55,526 என் உடம்பு முழுக்க ஊர்வது போல இருக்கிறது. 144 00:12:56,360 --> 00:12:58,278 டொரோதியை என்ன செய்வது? 145 00:12:58,779 --> 00:13:00,864 கடவுளே. நான் ஃப்ராங்கை அழைக்கிறேன்! 146 00:13:08,121 --> 00:13:09,748 என்ன நடக்கிறது? 147 00:13:11,375 --> 00:13:12,376 ஹலோ? 148 00:13:17,881 --> 00:13:19,842 உங்கள் அழைப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம். 149 00:13:19,925 --> 00:13:21,677 - தயவுசெய்து இணைப்பில் காத்திருங்கள்... - ஐயோ. 150 00:13:21,760 --> 00:13:22,928 ...உங்களிடம் சிறிது நேரத்தில் பேசுகிறோம். 151 00:13:25,556 --> 00:13:27,516 உங்கள் அழைப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம். 152 00:13:27,599 --> 00:13:28,600 தயவுசெய்து இணைப்பில் காத்திருங்கள், 153 00:13:28,684 --> 00:13:30,727 எங்கள் பிரதிநிதி உங்களுடன் விரைவில் பேசுவார். 154 00:13:34,857 --> 00:13:35,983 கடவுளே. 155 00:13:37,276 --> 00:13:38,318 அப்பா? 156 00:13:41,363 --> 00:13:43,657 நான் என் சட்டையை அழித்துக் கொள்ளமாட்டேன். 157 00:13:45,909 --> 00:13:46,994 இது டாம் ஃபோர்ட் வடிவமைத்தது. 158 00:13:53,000 --> 00:13:54,334 பூச்சிகளை கொல்பவர்களை அழைத்தாயா? 159 00:13:54,418 --> 00:13:56,712 30 நிமிடமாக இணைப்பில் காத்திருக்கிறேன். 160 00:13:56,795 --> 00:13:57,796 அடக் கடவுளே. 161 00:13:59,256 --> 00:14:00,465 டொரோதி எப்படி இருக்கிறாள்? 162 00:14:00,549 --> 00:14:04,136 நான் அங்கு போகவில்லை. அவள் மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தாள். 163 00:14:04,219 --> 00:14:07,806 அவளை வேறிடத்திற்கு மாற்ற முடியாது, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 164 00:14:08,807 --> 00:14:10,309 சரி, அப்படியே விட்டுவிடுவோம். 165 00:14:10,392 --> 00:14:12,936 அவளை பயமுறுத்துவதால் எந்தப் பயனுமில்லை. உதவி கிடைக்கும் வரை காத்திருப்போம். 166 00:14:13,020 --> 00:14:15,230 அவள் நகரும்போது காயம் ஏற்படலாம். 167 00:14:16,732 --> 00:14:19,443 அவளுக்கு ஒன்றுமில்லை. அவளுடன் லியன் இருக்கிறாள். 168 00:14:32,956 --> 00:14:33,957 அசையாமல் இருங்கள். 169 00:14:34,708 --> 00:14:35,834 என்ன செய்கிறாய்? 170 00:14:35,918 --> 00:14:38,420 நம்மை நாம் கவனித்துக்கொள்ள கொஞ்சம் முயற்சிக்க வேண்டும். 171 00:14:39,546 --> 00:14:42,007 கொஞ்ச நாட்களாக நீங்கள் நீங்களாகவே இல்லை. இது உங்களுக்கு பயனளிக்கும். 172 00:14:42,591 --> 00:14:43,675 லியன். 173 00:14:43,759 --> 00:14:47,221 நான்தான் என் மாமாவிற்கு சவரம் செய்வேன், எனக்கு கைகள் நடுங்காது. 174 00:14:47,304 --> 00:14:50,599 எல்லோரும் எங்கே? கோர்ட்னி எங்கே? 175 00:14:51,391 --> 00:14:52,726 குளிக்கிறார் என நினைக்கிறேன். 176 00:14:53,936 --> 00:14:55,270 குளிக்கிறாளா? 177 00:14:56,146 --> 00:14:59,733 நீங்கள் ஷானையோ, கோர்ட்னியையோ கூப்பிடத் தேவையில்லை. 178 00:14:59,816 --> 00:15:02,027 நமக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நாம் இருவருமே பார்த்துக்கொள்ளலாம். 179 00:15:03,195 --> 00:15:07,115 என்னை விட்டு விலகு, லியன்! 180 00:15:09,409 --> 00:15:12,079 சரி, உங்களை இப்படி பாதியிலேயே விட்டுவிட்டுப் போகிறேன். 181 00:15:12,162 --> 00:15:14,331 கொஞ்சம் உதட்டுச்சாயம் பூசலாமா? 182 00:15:14,873 --> 00:15:17,251 - இதோ, கொஞ்சம் உதட்டுச்சாயம் பூசலாமா? - என்ன, வேண்டாம்! 183 00:15:21,505 --> 00:15:22,506 ஐயோ! 184 00:15:26,927 --> 00:15:27,928 சியர்ஸ். 185 00:15:31,723 --> 00:15:34,685 ஆக, நீ இந்த ஆயாவிடம், 186 00:15:34,768 --> 00:15:37,563 உறவு வைத்துக்கொள்வதைப் பற்றி நான் பேசலாமா? 187 00:15:39,314 --> 00:15:40,357 நீங்கள் பதில் பேச விட மாட்டீர்களே. 188 00:15:40,858 --> 00:15:43,402 கோர்ட்னி இங்கு வந்து ஒன்பது, பத்து மாதங்கள் ஆகியிருக்குமா? 189 00:15:44,027 --> 00:15:45,529 அவளுடன் சுற்றுவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்? 190 00:15:48,073 --> 00:15:53,495 அவள் என்னை சந்தோஷப்படுத்துகிறாள், ஜூலியன். குறைந்தபட்சம் கொஞ்ச நாட்களுக்காவது. 191 00:15:55,247 --> 00:15:57,499 அவள் உன்னை சந்தோஷப்படுத்துகிறாளா? அந்த ஆயா. 192 00:15:59,459 --> 00:16:00,460 லியன். 193 00:16:03,380 --> 00:16:04,464 எனக்குத் தெரியவில்லை. 194 00:16:05,591 --> 00:16:06,592 அது... 195 00:16:10,470 --> 00:16:11,930 என்னால் அதை புரியவைக்க முடியாது. 196 00:16:20,147 --> 00:16:21,481 என்ன இது? 197 00:16:21,565 --> 00:16:24,401 நீ கூப்பிட்ட உடனே வந்தேன், ஆனால் நாங்கள் வேறொன்றைக் கையாள வேண்டி இருந்தது. 198 00:16:24,484 --> 00:16:28,238 டொரோதி, நான் உன்னை பயமுறுத்தவில்லை, ஆனால், நம் வீட்டில் மூட்டை பூச்சிகள் இருக்கின்றன. 199 00:16:28,322 --> 00:16:30,407 மூட்டை பூச்சிகளா? 200 00:16:30,490 --> 00:16:33,619 ஐயோ! கடவுளே! எனக்கு நாள் முழுக்க அரித்துக்கொண்டே இருந்தது! 201 00:16:33,702 --> 00:16:34,995 சுற்றுப்புறம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. 202 00:16:35,078 --> 00:16:36,997 அதை அகற்ற முயற்சி செய்கின்றனர், ஆனால் அது மெதுவாக தான் போகிறது. 203 00:16:37,080 --> 00:16:38,874 அவர்களுக்கும் காரணம் தெரியவில்லை, இங்கிருந்து உன்னை அழைத்துப் போகிறேன். 204 00:16:38,957 --> 00:16:40,250 - கவலைப்படாதே. - கவலைப்படக்கூடாதா? 205 00:16:40,751 --> 00:16:42,794 என் நிலைமை என்னவென்று தெரிகிறதா? 206 00:16:42,878 --> 00:16:44,546 வந்து, நானே உன்னை அழைத்துச் செல்கிறேன். 207 00:16:44,630 --> 00:16:46,340 - வேண்டாம். - நான் உனக்கு உதவுகிறேன், வா. 208 00:16:46,423 --> 00:16:47,508 வலித்தால், நிறுத்தி விடுகிறேன். 209 00:16:47,591 --> 00:16:50,761 வேண்டாம்! நீங்கள் என்னைத் தொடுவதற்கு பூச்சியே என்னைக் கடிக்கட்டும். 210 00:16:51,970 --> 00:16:53,597 ஏன் இப்படி சொல்கிறாய்? 211 00:16:53,680 --> 00:16:55,766 என்னை அவளுடன் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்கள். 212 00:16:58,018 --> 00:16:59,019 டொரோதி. 213 00:17:00,062 --> 00:17:01,063 என் ஃபோனை எடுத்துக் கொடுங்கள். 214 00:17:06,568 --> 00:17:07,569 கோர்ட்னியை உள்ளே அனுப்புங்கள். 215 00:17:16,954 --> 00:17:19,080 உனக்கு இந்த உடைகள் வேண்டாம் தானே? 216 00:17:20,457 --> 00:17:21,458 இருக்கட்டும். 217 00:17:35,347 --> 00:17:36,348 என்ன பிரச்சினை? 218 00:17:37,140 --> 00:17:38,141 ஒன்றுமில்லை. 219 00:17:40,185 --> 00:17:41,311 எனக்குப் புரியவில்லை. 220 00:17:42,437 --> 00:17:45,983 உனக்கு, ஷானுக்கு, டொரோதிக்கு, நான் எவ்வளவோ செய்கிறேன். 221 00:17:46,608 --> 00:17:48,777 ஆனாலும், நீங்கள் எப்போதும் சோகமாகவே இருக்கிறீர்கள். 222 00:17:50,904 --> 00:17:52,656 அது அவ்வளவு எளிதில்லை. 223 00:17:54,575 --> 00:17:58,078 நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தினால் எவ்வளவு கஷ்டமாக இருக்குமென தெரியுமா, ஜூலியன்? 224 00:17:59,538 --> 00:18:03,792 எரிச்சலாக இருக்கும். ஏதோ பூச்சி ஊர்வது போல இருக்கும். 225 00:18:26,523 --> 00:18:28,233 டொரோதியின் கழிவுகளை அகற்ற வேண்டும். 226 00:18:28,984 --> 00:18:30,485 நாங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுகிறோம். 227 00:18:31,361 --> 00:18:33,655 போ. எனக்காக அதைச் செய். 228 00:18:34,239 --> 00:18:35,240 உனக்கு பிரச்சினை இல்லையே? 229 00:18:36,325 --> 00:18:37,367 எனக்கு ஒன்றுமில்லை. 230 00:18:56,178 --> 00:18:57,429 நான் உதவட்டுமா? 231 00:19:28,961 --> 00:19:29,962 இது தற்செயலான விஷயம். 232 00:19:34,174 --> 00:19:36,760 ஆனால் உங்களை சுத்தம் செய்யத்தானே நான் இருக்கிறேன், சரியா? 233 00:19:42,307 --> 00:19:43,433 கையை மேலே தூக்குங்கள். 234 00:19:45,853 --> 00:19:47,312 இதை சுத்தம் செய்து தருகிறேன். 235 00:20:06,707 --> 00:20:07,833 ஐயோ. 236 00:20:08,500 --> 00:20:09,877 பூச்சிகளை அகற்றுபவர்கள் எப்போது வருவார்கள்? 237 00:20:09,960 --> 00:20:11,378 - மூன்று மணி நேரத்தில். - மூன்று மணி நேரமா! 238 00:20:11,461 --> 00:20:14,006 என்னை விட அக்கம் பக்கத்தினர் மும்மடங்கு பணம் கொடுத்திருக்கின்றனர். 239 00:20:15,340 --> 00:20:17,259 ஆறு வண்டிகள் வெளியே இருக்கின்றன. அதில் ஏதாவதொன்று நமக்கு உதவும். 240 00:20:17,342 --> 00:20:18,468 - நான் போகிறேன்! - இரு... 241 00:20:27,936 --> 00:20:29,188 மன்னிக்கவும். 242 00:20:30,606 --> 00:20:31,607 மன்னிக்கவும். 243 00:20:31,690 --> 00:20:34,026 {\an8}மூட்டை பூச்சி 244 00:20:35,611 --> 00:20:38,197 - ஹே! - ஹே, நண்பா. 245 00:20:38,280 --> 00:20:41,241 ஊரிலுள்ள எல்லா பூச்சி நிறுவனத்திற்கும் அழைத்துவிட்டேன், 246 00:20:41,325 --> 00:20:42,993 நான் இங்குதான் இருக்கிறேன். 247 00:20:43,744 --> 00:20:47,998 யாரும் எதுவும் செய்யவில்லை, நீங்கள் யாரையாவது உதவி செய்ய அனுப்பினால், 248 00:20:48,081 --> 00:20:49,791 நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். 249 00:20:49,875 --> 00:20:51,418 சரி, ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, சகோ. 250 00:20:53,003 --> 00:20:54,588 உதவி செய்யக்கூடியவர்கள் யாரையாவது தெரியுமா? 251 00:20:59,468 --> 00:21:00,469 சீக்கிரம் திரும்பி வருகிறேன். 252 00:21:01,053 --> 00:21:02,846 - அற்புதமாக இருக்கிறது, இல்லையா? - கடவுளே. 253 00:21:03,972 --> 00:21:07,392 ஒவ்வொரு நாளும் அவளது பரிசு அதிகரிக்கிறது. ஆச்சரியத்தில் இருப்பாய். 254 00:21:08,727 --> 00:21:09,728 என்ன சொல்கிறீர்கள்? 255 00:21:10,854 --> 00:21:14,775 நமக்கு தீங்கு செய்பவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, அவள் தான் இதைச் செய்தாள். 256 00:21:15,651 --> 00:21:18,779 உனக்கு தெரியவில்லையா? ஒரு போர் வரப் போகிறது. 257 00:21:19,488 --> 00:21:22,199 அவள் எங்களை பாதுகாக்கிறாள். உன் குடும்பத்தைப் பாதுகாக்கிறாள். 258 00:21:23,450 --> 00:21:25,452 கடவுளே, நீங்கள் எல்லாம் என்ன மனிதர்களோ. 259 00:21:25,536 --> 00:21:26,453 இப்படி சொன்னதற்கு மன்னிக்கவும், 260 00:21:26,537 --> 00:21:29,915 இது சரியான பராமரிப்பும், சுத்தமும் இல்லாததால் வந்த பிரச்சினை. இது பில்லி சூனியம் கிடையாது. 261 00:21:30,624 --> 00:21:33,752 நீ அவளுடன் நெருக்கமாக இருக்கும்போது, உன்னால் அதை உணர முடிகிறது, இல்லையா? 262 00:21:33,836 --> 00:21:38,173 அவளை நோக்கி ஏதோவொன்று உன்னை கவர்ந்திழுக்கிறது. 263 00:21:38,924 --> 00:21:40,050 அது தான் அவளுடைய சக்தி. 264 00:21:50,686 --> 00:21:51,687 இன்னும் இங்கு தான் இருக்கிறாயா? 265 00:21:52,312 --> 00:21:56,358 ஆம், பூச்சிகளை அகற்றுபவர்கள் போகும் வரை என்னை இங்கிருக்கச் சொன்னார்கள். 266 00:21:56,859 --> 00:21:59,736 என்னை மன்னித்துவிடு. உன்னை இங்கு சிக்க வைக்க நினைக்கவில்லை. 267 00:22:00,487 --> 00:22:01,655 நீ எதுவும் செய்யவில்லையே. 268 00:22:05,033 --> 00:22:08,662 நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் என் பாட்டி எனக்கு இந்த சாஸை சமைத்து தருவார். 269 00:22:10,205 --> 00:22:13,333 நான் கூடைப்பந்திலோ, கால்பந்திலோ தோற்றுவிட்டால் சமைத்து தருவார். 270 00:22:14,418 --> 00:22:15,961 அவர் நிறைய முறை சமைத்திருக்கிறார் எனச் சொல்லலாம். 271 00:22:16,461 --> 00:22:20,465 இன்று எல்லோரும் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிடலாம் என நினைக்கிறேன். 272 00:22:22,467 --> 00:22:23,552 இதை எனக்காக சமைத்தாயா? 273 00:22:24,094 --> 00:22:25,095 ஆமாம். 274 00:22:29,099 --> 00:22:30,100 சுவை எப்படி? 275 00:22:30,726 --> 00:22:31,977 நன்றாக இருக்கிறது. 276 00:22:32,060 --> 00:22:33,061 சரி. 277 00:22:47,910 --> 00:22:48,911 யாரது? 278 00:22:54,208 --> 00:22:55,209 அடக் கடவுளே. 279 00:22:57,377 --> 00:23:01,673 எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுகிறேன். என் மகனை என்னிடம் காட்டு. 280 00:23:07,846 --> 00:23:09,473 ஒரு காலத்தில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும். 281 00:23:13,268 --> 00:23:14,394 நாம் சேர்ந்து நடனமாடுவோம். 282 00:23:15,938 --> 00:23:17,731 செடிகள் நடுவோம். 283 00:23:19,024 --> 00:23:20,567 ரகசியங்கள் பேசிக் கொள்வோம். 284 00:23:22,861 --> 00:23:25,072 பெண்களுக்கே உரிய நேரத்தை சேர்ந்து செலவழிப்போம், ஞாபகமிருக்கிறதா? 285 00:23:28,492 --> 00:23:30,160 அதெல்லாம் என்னானது? 286 00:23:31,828 --> 00:23:33,705 நீ யாரென்பதை புரிந்துக் கொண்டேன். 287 00:23:35,791 --> 00:23:36,792 நான் யார்? 288 00:23:39,461 --> 00:23:40,462 நீ கெட்டவள். 289 00:23:49,346 --> 00:23:51,098 உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லவா, டொரோதி? 290 00:23:53,642 --> 00:23:56,687 உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி இப்போது எனக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. 291 00:23:58,105 --> 00:24:02,568 ஷானும், ஜூலியனும் உங்கள் மீது நிறைய அன்பு வைத்திருக்கின்றனர். 292 00:24:04,736 --> 00:24:10,450 ஆனால், அதைவிட அதிகமாக என்னைப் பார்த்து பயப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. 293 00:24:13,537 --> 00:24:16,790 ஆரம்பத்தில் அது எனக்குக் கஷ்டமாக இருந்தது, ஆனால் இப்போது அதை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டேன். 294 00:24:18,041 --> 00:24:20,169 உண்மையில், நான் இந்த அறையில் இருக்கிறேன் என தெரிந்தால் 295 00:24:20,961 --> 00:24:23,130 இந்த அறைக்கு வருவதற்கு கூட 296 00:24:23,213 --> 00:24:24,590 அவர்கள் பயப்படுகிறார்கள். 297 00:24:27,217 --> 00:24:29,761 நீங்கள் கத்தினால் கூட வர மாட்டார்கள். 298 00:24:32,764 --> 00:24:34,641 இப்போதைக்கு, உங்களுக்கென்று நான் மட்டும்தான் இருக்கிறேன். 299 00:24:57,080 --> 00:24:59,499 - எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன? - என்ன? 300 00:25:00,000 --> 00:25:02,503 எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன? 301 00:25:02,586 --> 00:25:05,422 தெரியவில்லை. பதினைந்து? இருபது? எல்லா வீடுகளுமே. 302 00:25:20,771 --> 00:25:23,482 எனக்குப் புரியவில்லை. “ஜிக்யூ” நேர்காணலை பாதியிலேயே விட்டுவிட்டு வந்தேன், 303 00:25:23,565 --> 00:25:28,070 ஆனால் அவர்கள் நாளைக்கு என்னை ஒரு முக்கியமான நேர்காணலுக்கு வரச் சொல்கின்றனர். 304 00:25:28,153 --> 00:25:29,613 அதில் நான் எந்தத் தவறும் செய்யக் கூடாது. 305 00:25:29,696 --> 00:25:31,448 - அற்புதம், செஃப். - அதோ, அன்பே. 306 00:25:31,532 --> 00:25:34,368 என் தோல் ரொம்ப அரிக்கிறது, ஃபிராங்க். இந்த வீட்டிலிருந்து வெளியே கூட்டிட்டு போங்க! 307 00:26:14,700 --> 00:26:15,701 டொரோதி? 308 00:26:19,037 --> 00:26:19,872 லியன். 309 00:26:22,291 --> 00:26:23,458 யார் இவர்கள்? 310 00:26:24,459 --> 00:26:27,296 வீட்டிலேயே தங்கி வேலை பார்க்கும் நர்ஸ், அவர்களை வேலைக்கு எடுத்துள்ளேன். 311 00:26:27,921 --> 00:26:31,258 கோர்ட்னியும் நானும் இன்று முழுக்க இதைப் பற்றி ஆராய்ந்தோம். 312 00:26:31,341 --> 00:26:33,468 என்ன? எதற்கு? 313 00:26:36,180 --> 00:26:37,347 எதற்கென்று உனக்கே தெரியும். 314 00:26:40,309 --> 00:26:41,310 நீ இப்போது போகலாம். 315 00:26:44,771 --> 00:26:46,648 உன்னால் இதில் ஜெயிக்க முடியாது, லியன். 316 00:26:52,571 --> 00:26:54,823 நான் கோபப்படாமல் இருக்க ரொம்பவே முயற்சி செய்கிறேன். 317 00:27:37,199 --> 00:27:39,201 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்