1 00:02:32,361 --> 00:02:33,362 அட... 2 00:02:51,797 --> 00:02:55,217 முக்கியத்துவமான வடிவம் 3 00:02:59,179 --> 00:03:03,559 {\an8}மகிமையில் இருந்து வீழ்ச்சி 4 00:03:14,736 --> 00:03:16,947 லூசிஃபர் 5 00:03:32,212 --> 00:03:33,755 - ஹலோ? - எரிக், 6 00:03:33,755 --> 00:03:37,217 நீ ஒரு பெண்ணின் பெயரை உறுதி செய்ய வேண்டும். அந்த வீடியோ கிடைத்ததா? 7 00:03:37,801 --> 00:03:39,761 கிடைத்தது. என்ன விவரம் வேண்டும் என சொல். 8 00:03:40,345 --> 00:03:44,766 சரி, 30 வினாடிக்கு ஒரு சிறுமி தோன்றுவாள், 9 00:03:44,766 --> 00:03:46,226 அவளை நாங்கள் நேர்காணல் செய்தோம். 10 00:03:46,226 --> 00:03:48,353 அவள் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து போட்டிருப்பாள், இல்லையா? 11 00:03:50,314 --> 00:03:51,481 பெயர் தெரியுமா? 12 00:03:51,481 --> 00:03:54,276 தெரியும். லியன் க்ரேசன். 13 00:03:55,152 --> 00:03:57,196 அப்போது அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருந்திருக்கும். 14 00:03:57,196 --> 00:03:58,363 சரி. கொஞ்சம் பொறு. 15 00:03:58,864 --> 00:03:59,907 சரி. 16 00:04:00,490 --> 00:04:01,575 {\an8}குழந்தைகள் தான் எதிர்காலம் 17 00:04:01,575 --> 00:04:03,660 {\an8}போட்டியின் திறமைப் பகுதி. 18 00:04:03,660 --> 00:04:07,247 {\an8}- நான் டொரோதி டர்னர், 8 நியூஸ். - நீ இதைக் கெடுக்கிறாய். எழுந்திரு. 19 00:04:08,790 --> 00:04:10,792 - டொரோதி? - ஆமாம். நான் இணைப்பில் இருக்கிறேன். 20 00:04:11,585 --> 00:04:12,753 மன்னிக்கவும், டொரோதி. 21 00:04:13,253 --> 00:04:16,089 அவள் படிவத்தை பூர்த்தி செய்யவில்லை, அல்லது வேறு பெயர் பயன்படுத்தி இருக்கலாம். 22 00:04:19,301 --> 00:04:20,677 நிச்சயமாகத் தெரியுமா? 23 00:04:20,677 --> 00:04:21,845 ஆமாம், தெரியும். 24 00:04:37,736 --> 00:04:38,904 எப்படி தூங்கினாய்? 25 00:04:40,572 --> 00:04:41,907 குழந்தையைப் போல. 26 00:04:44,868 --> 00:04:46,578 நீ வேறு எதையும் கேட்க மாட்டாயா? 27 00:04:48,622 --> 00:04:49,790 என்னோடு நடனமாடு. 28 00:04:50,457 --> 00:04:53,126 வேண்டாம். நான் நன்றாக ஆட மாட்டேன். 29 00:04:53,126 --> 00:04:54,211 அட. 30 00:04:55,254 --> 00:04:56,380 என்னைப் பின்தொடர்ந்து ஆடு. 31 00:04:58,507 --> 00:05:01,093 பார்ட்டியில் நடந்தது பற்றி நாம் பேச வேண்டும். 32 00:05:01,093 --> 00:05:02,177 இல்லை, பேச வேண்டாம். 33 00:05:02,928 --> 00:05:05,180 இந்த வீட்டில், எல்லோருக்கும் ஏதாவதொரு கஷ்டம் ஏற்படுகிறது. 34 00:05:05,180 --> 00:05:06,265 ஒன்றுமில்லை. 35 00:05:07,558 --> 00:05:09,059 என்னோடு இருந்தால், நீ பாதுகாப்பாக இருப்பாய். 36 00:05:10,185 --> 00:05:11,478 அதற்கு என்ன அர்த்தம்? 37 00:05:12,145 --> 00:05:14,773 இதில் நான் தனியாக இல்லை என்று நீ சொல்ல வேண்டும். 38 00:05:15,315 --> 00:05:18,068 எல்லாம் எவ்வளவு மோசமாகி விட்டது என்று உனக்குப் புரிந்ததாகச் சொல். 39 00:05:18,068 --> 00:05:20,946 ஜூலியன், பேசாதே. 40 00:05:23,198 --> 00:05:24,199 அடச்சே. 41 00:05:25,742 --> 00:05:26,910 நீ என்னைக் கடித்துவிட்டாய். 42 00:05:28,328 --> 00:05:29,371 நீ அதிகமாக பேசுகிறாய். 43 00:05:33,834 --> 00:05:35,627 {\an8}இந்த எமல்ஷன் உடைந்து விடும். இது வந்து... 44 00:05:35,627 --> 00:05:37,671 {\an8}- நான் பேசுவது கேட்கிறதா? - ஆமாம், ஷெஃப். 45 00:05:37,671 --> 00:05:39,339 {\an8}சரி. உன் மோசமான எமல்ஷன். 46 00:05:41,216 --> 00:05:42,509 ஐந்து நிமிடங்கள்! 47 00:05:43,844 --> 00:05:45,846 {\an8}இது முழுமையடைவில்லை என்பது நீ சொல்லும் காரணமா? 48 00:05:46,430 --> 00:05:50,350 {\an8}- என் சமையலறையில் நீ அழுகிறாயா? - இல்லை, ஷெஃப். 49 00:05:50,350 --> 00:05:52,769 {\an8}இந்த எக்ஸ்ஓ சாஸில் இருப்பதை விட உன் கண்ணீரில் உப்பு அதிகம் இருக்கிறது. 50 00:05:52,769 --> 00:05:54,021 {\an8}ஷெஃப், நான் மறந்துவிட்டேன் போல... 51 00:05:54,021 --> 00:05:56,940 காரணம் சொன்னது போதும், டாமினிக். இங்கிருந்து போய்விடு. 52 00:05:56,940 --> 00:05:59,318 வெளியே போ! ஷான்! ஷான்! ஷான்! 53 00:05:59,318 --> 00:06:00,777 அதைப் பாரு. 54 00:06:03,447 --> 00:06:05,240 ஆமாம். சரி தான். 55 00:06:06,700 --> 00:06:08,911 - அப்பா பிரபலமாகி ட்டார். - வெளியே போ. 56 00:06:12,164 --> 00:06:13,832 - என்ன இது? - இது என்னவென்று உனக்கே தெரியும். 57 00:06:13,832 --> 00:06:16,460 தூங்குவதற்கு முன் நீ படிப்பது. ஏதாவது ஆராய்ச்சி செய்கிறாயா? 58 00:06:18,337 --> 00:06:22,090 நாம் இதைப்பற்றி பேச வேண்டும். ஆனால் இங்கே வேண்டாம். 59 00:06:25,969 --> 00:06:28,597 லியன். அவள் தான் பொதுவான காரணம். 60 00:06:29,932 --> 00:06:31,183 அவள் கோபமாக இருந்தால், கெட்டது நடக்கிறது. 61 00:06:31,183 --> 00:06:33,852 அவள் சந்தோஷமாக இருந்தால், நல்லது நடக்கிறது, அதுவும் பிரமாதமாக நடக்கிறது. 62 00:06:33,852 --> 00:06:36,897 அவளுக்கு தகுந்தாற்போல நாம் இருக்கும் வரை, எல்லாம் அப்படியே தொடர்கிறது. 63 00:06:38,106 --> 00:06:42,653 அந்த தொற்று, வீடு இடிந்தது, டொரோதியின் விபத்து, ஜெரிகோ. 64 00:06:44,071 --> 00:06:46,657 {\an8}அதற்கு ஒரு சொல் இருக்கிறது, நான் தேடிக்கொண்டு இருந்தேன். 65 00:06:48,784 --> 00:06:49,910 ஃபாஸ்டியன் பேரம். 66 00:06:51,411 --> 00:06:53,247 இது மோசம். முட்டாள்தனமாக பேசுகிறோம். 67 00:06:53,747 --> 00:06:55,874 லியனின் கல்லறையைப் பார்த்ததாக நீ சொன்னாய், இல்லையா? 68 00:06:57,125 --> 00:07:00,045 லியன் நம்மை ஏமாற்றுகிறாள் என்று நினைத்தோம், ஆனால் அப்படி இல்லை என்றால்? 69 00:07:01,755 --> 00:07:02,756 அவள் இறந்திருந்தால்? 70 00:07:04,424 --> 00:07:06,093 வேறு ரூபத்தில் அவள் திரும்பி வந்திருந்தால்? 71 00:07:08,929 --> 00:07:10,639 தாங்கள் கடவுளின் சேவகர்கள் என அந்த சமூகத்தினர் நம்புகின்றனர். 72 00:07:12,766 --> 00:07:13,934 சரியாக சொன்னாய். 73 00:07:13,934 --> 00:07:15,727 லியன் விலகிய போது, அவர்களைப் பின்பற்றவில்லை. 74 00:07:18,981 --> 00:07:21,024 பிரிந்து சென்ற தேவதை. 75 00:07:27,489 --> 00:07:28,532 என்ன நடக்கிறது? 76 00:07:31,702 --> 00:07:32,703 என்ன... 77 00:07:34,246 --> 00:07:35,497 உன்னால் பேச முடியவில்லையா? 78 00:07:40,836 --> 00:07:43,255 இதை லியன் செய்தாளா? 79 00:07:44,923 --> 00:07:46,049 கீழே என்ன செய்கிறீர்கள்? 80 00:07:46,967 --> 00:07:48,802 வேறு இடத்திற்கு வர விரும்பினேன். 81 00:07:48,802 --> 00:07:50,220 சரி, என்னை அழைத்திருக்கலாமே. 82 00:07:58,103 --> 00:07:59,563 ஜெரிகோவை நடக்க அழைத்துச் செல்கிறாயா? 83 00:08:00,272 --> 00:08:01,273 ஆமாம். 84 00:08:02,191 --> 00:08:05,194 - நானும் வர விரும்புகிறேன். - சீக்கிரமே வரலாம். 85 00:08:07,863 --> 00:08:09,156 இங்கே நலமாக இருப்பீர்களா? 86 00:08:09,156 --> 00:08:12,451 ஆமாம். உண்மையில் நான் ஒரு செய்தியை எழுதுகிறேன். 87 00:08:15,120 --> 00:08:16,163 நான் உதவலாமா? 88 00:08:18,665 --> 00:08:19,791 வேண்டாம். 89 00:08:21,251 --> 00:08:22,461 இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. 90 00:08:24,004 --> 00:08:25,881 வைக்கோற்போரில் ஊசியைத் தேடுவது போல கஷ்டமாக இருக்கு. 91 00:08:27,633 --> 00:08:29,051 அது வேடிக்கையான வார்த்தை. 92 00:08:30,177 --> 00:08:32,136 அதை செய்வது கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. 93 00:08:35,557 --> 00:08:36,600 எப்படியும், கண்டுபிடித்து விடுவீர்கள். 94 00:08:38,477 --> 00:08:39,727 டொரோதி டர்னர் எப்போதும் செய்து முடிப்பார். 95 00:08:41,897 --> 00:08:42,898 சரி. 96 00:08:43,899 --> 00:08:47,194 மாயாஜாலத்தால் அவளைத் தடுத்து நிறுத்த முடியுமா? அந்த நிலை வந்தால் கூட? 97 00:08:52,533 --> 00:08:54,076 “ஓநாயாக மாறும் மனிதன்.” சரி. 98 00:08:56,119 --> 00:08:57,120 பூண்டு? 99 00:08:59,456 --> 00:09:00,457 வேண்டாம். 100 00:09:01,583 --> 00:09:03,836 {\an8}அவளுக்கு பூண்டு அதிகம் சேர்த்த நான் சமைக்கும் பாஸ்தா பிடிக்கும். 101 00:09:03,836 --> 00:09:05,254 {\an8}காட்டேரிகள் 102 00:09:05,254 --> 00:09:06,338 {\an8}சரி. 103 00:09:09,049 --> 00:09:12,094 தண்ணீர் அவளது பலவீனமாக இருக்கலாம். அவள் குளித்துப் பார்த்ததே இல்லை. நீ பார்த்திருக்கிறாயா? 104 00:09:15,681 --> 00:09:16,682 சரி. 105 00:09:18,392 --> 00:09:19,434 சியர்ஸ், நண்பா. 106 00:09:23,272 --> 00:09:24,273 ஹே. 107 00:09:26,775 --> 00:09:28,068 ஹே. 108 00:09:28,068 --> 00:09:31,196 ராஸ்கோ, என்ன இது? எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறாய்? 109 00:09:36,869 --> 00:09:38,537 இப்படி வந்ததற்கு மன்னிக்கவும். 110 00:09:39,121 --> 00:09:40,247 என்ன இது, நண்பா? 111 00:09:40,247 --> 00:09:42,040 உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 112 00:09:42,624 --> 00:09:44,585 உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூடியவர். 113 00:09:53,802 --> 00:09:54,928 ஜார்ஜ். 114 00:09:57,514 --> 00:09:59,766 {\an8}இந்த ஆளும் இவரது அலங்காரங்களும். 115 00:10:02,603 --> 00:10:03,645 ஹலோ, ஷான். 116 00:10:05,272 --> 00:10:06,273 ஹலோ, ஜூலியன். 117 00:10:06,857 --> 00:10:08,442 என்னை வெளியே காத்திருக்கச் சொன்னார். 118 00:10:09,568 --> 00:10:10,569 வாழ்த்துக்கள். 119 00:10:14,823 --> 00:10:17,618 இங்கே எப்படி வந்தீர்கள்? நான் பூட்டி தானே வைத்திருந்தேன். 120 00:10:17,618 --> 00:10:20,329 இதைவிட முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் பேச வேண்டியுள்ளது. 121 00:10:20,913 --> 00:10:23,415 வந்து, இன்று ஒரு முக்கியமான நாள். 122 00:10:24,458 --> 00:10:26,460 இன்று தான் நான் ஒப்புதல் அளிக்கிறேன். 123 00:10:28,462 --> 00:10:31,381 லியன் க்ரேசன் பற்றிய உண்மையை உங்களிடம் சொல்லும் நேரம் வந்துவிட்டது. 124 00:10:32,758 --> 00:10:36,094 “ஒனைடா, விஸ்கான்சினில் பயங்கரமான தீவிபத்தினால் மூன்று பேர் கொண்ட குடும்பம் இறந்தது.” 125 00:10:36,845 --> 00:10:38,055 “லியன் க்ரேசன் என்ற மகளின் உடல் 126 00:10:38,055 --> 00:10:41,808 கிடைக்கவே இல்லை. இறந்ததாக எண்ணப்பட்டாள்.” 127 00:10:42,434 --> 00:10:45,187 ப்ளா, ப்ளா, ப்ளா. அவளுக்கு அப்போது எட்டு வயது. 128 00:10:47,314 --> 00:10:49,650 - எப்படி தீப் பிடித்தது என்று தெரியுமா? - தெரியாது. 129 00:10:52,611 --> 00:10:55,072 உங்கள் குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். 130 00:10:55,614 --> 00:10:57,741 இல்லை, நாங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். 131 00:10:57,741 --> 00:11:01,078 அவள் யார் என்பதை நீங்கள் சொல்ல முயன்றீர்கள், நாங்கள் தான் நம்பவில்லை. 132 00:11:02,704 --> 00:11:07,543 “சர்ச் ஆஃப் லெஸ்ஸர் செயிண்ட்கள்” தேவாலயத்தை விட்டு விலக சமீபத்தில் தான் முடிவு செய்தேன். 133 00:11:09,419 --> 00:11:11,129 என் தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன். 134 00:11:13,549 --> 00:11:17,469 எல்லா தவறையும் விட, உங்கள் குடும்பத்திற்கு நாங்கள் மிக பயங்கரமானத் தவறை செய்திருக்கிறோம். 135 00:11:19,763 --> 00:11:21,431 உங்களிடம் பொய் சொல்லப்பட்டிருக்கிறது. 136 00:11:22,933 --> 00:11:24,017 ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். 137 00:11:24,810 --> 00:11:25,936 எங்களில் பலரைப் போல. 138 00:11:28,772 --> 00:11:33,610 பல காலத்திற்கு முன் ஒரு முறை நான் தூக்கு போட்டுக்கொள்ள முயன்றேன். 139 00:11:35,279 --> 00:11:36,864 நான் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தேன். 140 00:11:39,032 --> 00:11:43,537 ஒரு பெண் என்னை முறைத்துப் பார்த்தபடி மருத்துவமனையில் விழித்து கொண்டேன். 141 00:11:45,956 --> 00:11:47,624 அவளது பெயர் மே மார்க்கம். 142 00:11:49,293 --> 00:11:53,714 நான் இறந்து, இறைவனின் சேவகனாக 143 00:11:54,548 --> 00:11:57,759 மறுபடியும் பிறந்ததாக அவள் சொன்னாள். 144 00:12:01,430 --> 00:12:06,185 எனக்கு வாழ வேறு எந்த உந்துதலும் இல்லை, அதனால் அந்த கூட்டத்தில் சேர்ந்தேன். 145 00:12:07,895 --> 00:12:11,398 அப்போதிலிருந்து, மற்றவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்க்க நாங்கள் ஆண்ட் மற்றும் அங்கிளாக 146 00:12:11,398 --> 00:12:13,066 வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினோம். 147 00:12:13,066 --> 00:12:14,359 அதை மிகச் சிறப்பாக செய்தோம். 148 00:12:19,031 --> 00:12:24,453 லியன் சிறியவளாக இருந்த போது, அவளின் குடும்பம் ஒரு தீ விபத்தில் இறந்தார்கள். 149 00:12:25,996 --> 00:12:29,416 அவளது அம்மா அவளை ரொம்ப கொடுமைப்படுத்தினாள். 150 00:12:31,793 --> 00:12:36,590 எனவே, ஒரு விதத்தில் அந்த இறப்பிற்கு, அவள் தான் காரணம் என்று நம்பினாள். 151 00:12:38,926 --> 00:12:40,761 சரியான நபராக அவள் தெரிந்தாள். 152 00:12:42,262 --> 00:12:44,932 எனக்கு சொல்லப்பட்டதை அவளிடம் சொன்னேன். 153 00:12:45,474 --> 00:12:50,896 அந்த தீ விபத்தில் அவள் இறந்து, இறைவனின் சேவகனாக திரும்பி வந்ததாகச் சொன்னேன். 154 00:12:53,023 --> 00:12:56,235 ஆனால் மனதளவில் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று நாங்கள் புரிந்துகொள்ளவில்லை. 155 00:12:58,612 --> 00:13:03,534 விரைவில் அசாதாரணமான விஷயங்களில் அவள் அதிக நம்பிக்கை வைத்தாள். 156 00:13:05,202 --> 00:13:07,579 அவள் எங்களை விட்டு விலகிய போது, 157 00:13:07,579 --> 00:13:12,042 தான் வேறு எதுவாகவோ ஆவதாக லியன் நம்ப ஆரம்பித்தாள். 158 00:13:25,347 --> 00:13:26,974 {\an8}சாத்தான் 2.0 159 00:13:27,683 --> 00:13:29,017 ஆனால் அது உண்மை இல்லை. 160 00:13:31,186 --> 00:13:35,774 தேவாலயத்தின் நம்பிக்கைகள் எப்போதுமே ஒரு மாயையாக இருந்திருக்கின்றன. 161 00:13:37,192 --> 00:13:42,865 லியன் ஒரு குழப்பமான, மனப்பிறழ்வு கொண்ட முற்றிலும் சாதாரணமான பெண். 162 00:13:42,865 --> 00:13:45,158 - என்ன? - வேறு எதுவும் இல்லை. 163 00:13:45,158 --> 00:13:48,537 அது பொய். நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். 164 00:13:48,537 --> 00:13:51,915 நேற்று ஜெரிகோவின் பிறந்த நாளில், விலங்குகள் வெறி பிடித்தது போல நடந்தன. 165 00:13:52,583 --> 00:13:53,876 ஒரு பெண் கிட்டத்தட்ட இறந்திருப்பாள். 166 00:13:53,876 --> 00:13:56,378 அவள் முகம் இருந்த நிலையை, நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. 167 00:13:56,378 --> 00:13:57,588 அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? 168 00:13:58,172 --> 00:14:02,593 என் தவறுக்கு மன்னிப்பாக இன்று பெவர்லி ஆல்காட்டை மருத்துவமனையில் சந்தித்தேன். 169 00:14:03,302 --> 00:14:06,972 அவளை பாம்பு கடித்திருக்கிறது, ஆனால், முற்றிலும் குணமாகிவிடுவாள். 170 00:14:06,972 --> 00:14:08,056 என்ன? 171 00:14:08,056 --> 00:14:11,852 பெருவியன் பாத்ராப்ஸின் விஷம் உடனடியாக வீங்கச் செய்து, முகம் மற்றும் 172 00:14:12,519 --> 00:14:14,479 கைகால்களை நிறம் மாறச் செய்யும். 173 00:14:21,028 --> 00:14:24,031 எளிமையானத் தீர்வு தான் எப்போதும் சரியானதாக இருக்கும். 174 00:14:24,615 --> 00:14:25,949 அந்த அம்மாவைப் பற்றி என்ன தெரியும்? 175 00:14:25,949 --> 00:14:27,284 பழைய பண்ணைத் தீ விபத்தை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடுகிறார்கள் 176 00:14:27,784 --> 00:14:28,785 லாரா க்ரேசன் 177 00:14:29,286 --> 00:14:33,540 அவள் குடி பழக்கம் உள்ளவள். 2005ல் குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக வழக்கு இருக்கு. 178 00:14:34,166 --> 00:14:35,167 ஒரு மோசமான கார் விபத்து நடந்தது. 179 00:14:35,918 --> 00:14:36,919 சரி. 180 00:14:38,170 --> 00:14:39,254 அங்கே ஏதாவது துப்பு கிடைக்கும். 181 00:14:39,254 --> 00:14:42,758 ஏதாவது தேதிகள் தெரியுமா? பிறந்த நாள், சிறையில் இருந்த தேதி, 182 00:14:42,758 --> 00:14:44,092 இறந்த தேதி, ஏதாவது தெரியுமா? 183 00:14:45,886 --> 00:14:47,638 அவள் அம்மாவைப் பற்றி ஏதோ ஒன்று இருக்க வேண்டும். 184 00:14:48,889 --> 00:14:50,057 லியன் முதலில் வந்த போது, 185 00:14:50,057 --> 00:14:53,977 அவள் என் மீது கோபமாக இருந்த போது, என்னால் சுவைக்கவோ, உணரவோ முடியவில்லை. 186 00:14:53,977 --> 00:14:57,940 சளி பிடித்தாலோ அல்லது சில மருந்துகள் சாப்பிடும் போதோ, சுவை மற்றும் 187 00:14:58,899 --> 00:15:01,193 உணர்ச்சி தற்காலிகமாக இல்லாமல் போகும். 188 00:15:01,693 --> 00:15:04,571 நீ தண்டிக்கப்படுகிறாய் என்று உன்னை நம்ப வைக்க 189 00:15:05,072 --> 00:15:07,241 உன் உணவில் அவள் ஏதாவது கலந்து இருக்கக்கூடும். 190 00:15:07,241 --> 00:15:10,327 எங்கும் சிராய்ப்புகள் இருந்தன. இந்த வீடு என்னைத் தாக்குவது போல இருந்தது. 191 00:15:10,327 --> 00:15:12,996 அது லியனுக்கு பிடித்த ஒரு தந்திரம். 192 00:15:13,705 --> 00:15:16,625 அவள் குழந்தையாக இருக்கும் போது, அவளை நான் கண்டித்தால், 193 00:15:16,625 --> 00:15:20,254 ஒரு மரத்துண்டு அல்லது கிளாஸ் துண்டு அடுத்த நாள் என் நாற்காலியில் இருப்பது 194 00:15:20,254 --> 00:15:22,089 சாதாரணமான விஷயம் தான். 195 00:15:34,351 --> 00:15:35,477 {\an8}அந்த பொம்மை? 196 00:15:35,477 --> 00:15:38,814 {\an8}லியன் எப்போது வீட்டை விட்டு போனாலும், ஜெரிகோ மறுபடியும் பொம்மை ஆகிவிடுகிறான். 197 00:15:38,814 --> 00:15:40,524 இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் தேடி விட்டோம். 198 00:15:40,524 --> 00:15:43,485 அவனை அவள் மறைக்க இடமே கிடையாது. அது எனக்கு நன்றாகத் தெரியும். 199 00:15:44,069 --> 00:15:47,614 பழைய வீடுகளில் எப்போதும் ரகசியங்கள் உண்டு. 200 00:15:48,699 --> 00:15:50,325 மற்றவற்றை விட உன் வீட்டில் அதிகம் உண்டு. 201 00:15:51,451 --> 00:15:55,539 பேபி! 202 00:15:57,916 --> 00:16:01,587 பேபி! எழுந்திரு, குட்டி பேபி! 203 00:16:25,819 --> 00:16:28,363 இந்த இடத்திற்கு கீழே நிறைய சுரங்கபாதைகள் இருக்கின்றன. 204 00:16:28,989 --> 00:16:32,534 இவை மனநலம் குன்றிய உறவினர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக 205 00:16:32,534 --> 00:16:35,370 வசதிவாய்ந்த குடும்பங்களால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. 206 00:16:36,246 --> 00:16:40,792 இது உயர்சமூகத்திடமிருந்து பிரச்சினைகளை மறைப்பதற்காகப் பயன்பட்டது. 207 00:16:41,919 --> 00:16:46,965 லியனுக்கு இந்தச் சுரங்கபாதையைப் பற்றி முன்பே தெரியும். 208 00:16:48,717 --> 00:16:53,680 ஒரு இடத்திற்குச் செல்வதற்கு முன் அந்த இடத்தை பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொள்வது தான் எங்கள் வேலை. 209 00:16:55,724 --> 00:17:00,437 இப்படித்தான் லியன் உங்கள் வாழ்வில் குழந்தையைக் கொண்டு வந்தாள். 210 00:17:02,064 --> 00:17:05,651 இப்படித்தான் அவள் இஷ்டத்திற்கு, அவனை மறைய வைத்து, தோன்ற வைத்தாள். 211 00:17:07,694 --> 00:17:08,737 ஒரு மாயை. 212 00:17:12,406 --> 00:17:14,576 நீ ரொம்ப அறிவாளி, டொரோதி. 213 00:17:15,117 --> 00:17:17,871 தீ விபத்து ஏற்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் அந்த அம்மா லாரா இறந்துவிட்டார். 214 00:17:18,372 --> 00:17:20,958 இறந்த தேதி, ஏப்ரல் 17, 2011. 215 00:17:21,875 --> 00:17:24,086 அடுத்த வருடம் ஏப்ரல் 17ஆம் தேதியைப் பார். 216 00:17:29,258 --> 00:17:31,844 உன் வாசகத்தின் முடிவில் உள்ள பிரதிபலிப்பைப் பார். 217 00:17:32,594 --> 00:17:33,595 என்ன தெரிகிறது? 218 00:17:33,595 --> 00:17:36,098 "சாப்பிடத் தோன்றுமளவிற்கு அழகாக இருக்கிறாய்" என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுண்டா? 219 00:17:36,098 --> 00:17:39,810 {\an8}"ஃபில்லிஸ் பேக் ஷாப் ஆன் 20" ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 220 00:17:40,310 --> 00:17:41,395 {\an8}முகங்களுடன் கூடிய கப்கேக். 221 00:17:41,395 --> 00:17:42,688 {\an8}8 நியூஸ் சிரிக்கும் கப்கேக்ஸ் 222 00:17:42,688 --> 00:17:45,732 {\an8}சொல்லுங்கள், இந்த அற்புதமான யோசனை எப்படி தோன்றியது? 223 00:17:46,567 --> 00:17:49,444 {\an8}இது காதலர் தினத்திற்காகச் விசேஷமாகச் செய்யப்பட்டது, ஆனால், 224 00:17:49,444 --> 00:17:53,782 {\an8}இப்போது ரொம்ப பிரபலமாகிவிட்டது. மக்களுக்கு மக்களைச் சாப்பிட ரொம்ப பிடித்திருக்கிறது. 225 00:17:54,658 --> 00:17:56,243 குறிப்பாகப் பிடிக்காதவர்களைச் சாப்பிடுவது. 226 00:17:57,244 --> 00:17:59,288 {\an8}இவர் எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியர். 227 00:18:01,874 --> 00:18:02,875 {\an8}அவரை சாப்பிட்டுவிட்டேன். 228 00:18:03,959 --> 00:18:06,712 {\an8}பேக் ஷாப்பின் பிரபல உணவுகளான குக்கீஸ், கேக்குகள் மற்றும் பை வரிசையில் 229 00:18:06,712 --> 00:18:10,215 {\an8}கப்கேக்கும் இணைந்திருப்பது நல்ல விஷயம். 230 00:18:10,799 --> 00:18:14,386 மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். நான் டொரோதி டர்னர், 8 நியூஸ். 231 00:18:16,763 --> 00:18:17,890 நீ அவர்களைப் பார்த்தாயா? 232 00:18:17,890 --> 00:18:18,974 அடக் கடவுளே. 233 00:18:18,974 --> 00:18:21,727 அடுத்த வருடம் அதே நாளில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பார். 234 00:18:22,853 --> 00:18:26,440 இல்லை. அவள் வாழ்க்கையையும் இறப்பையும் கட்டுப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். 235 00:18:26,440 --> 00:18:28,108 அந்த நாய் மற்றும்... 236 00:18:28,108 --> 00:18:30,694 {\an8}நேரடி ஒளிபரப்பில், டொரோதியின் சக ஊழியரைத் தாக்கினாள். 237 00:18:30,694 --> 00:18:32,237 {\an8}அந்த மரினோ குடும்பம்? 238 00:18:32,237 --> 00:18:35,991 {\an8}நாம் அனைவரும் எதிர்மறையான விஷயங்களில் அர்த்தத்தைத் தேடுகிறோம். 239 00:18:39,244 --> 00:18:40,245 என் பையனுக்கு என்னானது? 240 00:18:42,122 --> 00:18:46,168 அவன் இறந்துவிட்டான், ஆனால், அந்தக் குழந்தையைப் பார்த்தால் என் மகன் போல உணர்கிறேன். 241 00:18:47,294 --> 00:18:53,175 காணாமல் போனவர்களின் புகார்களைத் தேடினோம். யாரும் புகாரளிக்கவில்லை. என் மகன்தான் என தோன்றுகிறது. 242 00:18:56,428 --> 00:19:03,060 "ஃபிலடெல்ஃபியா என்கொயரர்" செப்டம்பர் 2019-ல் ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தது. 243 00:19:05,521 --> 00:19:08,482 அதிக போதைப்பொருள் பயன்படுத்திய ஒரு பெண், ஃபிட்லர் ஸ்கொயர் பார்க் அருகே இறந்துக் கிடந்தாள். 244 00:19:09,608 --> 00:19:10,609 போதைக்கு அடிமையானவள். 245 00:19:11,777 --> 00:19:14,279 அவள் ஒரு குழந்தையுடன் பயணித்ததாக சிலர் சொல்கின்றனர். 246 00:19:15,739 --> 00:19:18,867 நீல நிற கண்கள் உடைய ஒரு ஆண் குழந்தை. 247 00:19:21,328 --> 00:19:23,830 அவன் காணாமல் போன விஷயம் புகார் அளிக்கப்படவில்லை என்றால், உங்களுக்கு எப்படி தெரியும்? 248 00:19:24,456 --> 00:19:27,376 இது போன்ற விஷயங்களைச் சொல்ல, எங்களில் சிலர் தெருக்களில் வாழ்கிறார்கள். 249 00:19:36,635 --> 00:19:39,137 ...அக்கம்பக்கத்தினர் வேற்றுகிரகவாசி போல் நடந்துகொள்கின்றனர். 250 00:19:39,137 --> 00:19:40,556 {\an8}இன்று காலையில், 251 00:19:40,556 --> 00:19:45,727 {\an8}வானில் பெரிய மிதக்கும் தட்டைப் பார்த்ததாக மூன்று பேர் சொல்கின்றனர். 252 00:19:45,727 --> 00:19:48,313 {\an8}வேற்று கிரகவாசிகள் என்பதெல்லாம் பொய் என சந்தேகவாதிகள் சொல்கின்றனர் 253 00:19:48,313 --> 00:19:51,942 இன்று காலை நடந்த விஷயம் புரளியாக இருக்கலாம் அல்லது மாயையாக இருக்கலாம் என்கின்றனர். 254 00:19:51,942 --> 00:19:53,318 {\an8}எனவே நான் சொல்ல வருவது, 255 00:19:53,318 --> 00:19:57,197 {\an8}வேற்றுகிரகவாசி நண்பர்கள் இங்கு இருந்தார்கள் என்றால், என்னிடம் பேசலாம். 256 00:19:57,197 --> 00:19:58,907 {\an8}ரொம்ப பயமாக இருக்கிறது 257 00:20:02,703 --> 00:20:04,413 ...சொல்ல வருவது, நம் வேற்றுகிரக... 258 00:20:05,414 --> 00:20:08,792 இந்த சிறுமி தன் அம்மாவின் நினைவு நாளன்று உன்னைச் சந்தித்தாள். 259 00:20:09,751 --> 00:20:11,044 ஆச்சரியமாக இருக்கிறது. 260 00:20:12,963 --> 00:20:14,590 அவள் ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாள்? 261 00:20:15,591 --> 00:20:17,384 ஏன் டொரோதிக்கு இப்படிச் செய்தாள்? 262 00:20:17,384 --> 00:20:21,471 லியன் சிறுமியாக இருந்தபோது, டொரோதியை ஒருமுறை சந்தித்திருக்கிறாள். 263 00:20:23,599 --> 00:20:26,393 அவள் அம்மாவை இழந்த பின், அது தீவிரமாகிவிட்டது. 264 00:20:29,521 --> 00:20:32,941 வருடத்தில் ஒருநாள் அவளை டொரோதியைச் சந்திக்க அனுமதித்தேன், 265 00:20:34,443 --> 00:20:36,403 அது அவள் சோகத்தைப் போக்க உதவும் என நினைத்தேன். 266 00:20:37,446 --> 00:20:38,447 8 நியூஸ் - ஏப்ரல் 17 267 00:20:38,447 --> 00:20:41,408 பல வாரங்களுக்கு முன்பே, எந்த உடை அணிய வேண்டும் என திட்டமிட்டுவிடுவாள். 268 00:20:43,785 --> 00:20:47,331 ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பது அவளுக்குப் போதவில்லை. 269 00:20:48,040 --> 00:20:50,876 அவள் டொரோதியின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக விரும்பினாள். 270 00:21:03,805 --> 00:21:07,142 அவள் டொரோதியை பல வாரங்களாகக் கண்காணித்தாள். 271 00:21:24,493 --> 00:21:27,579 உன் மகனின் இறப்பு தான் திருப்புமுனையாக இருந்தது. 272 00:21:40,968 --> 00:21:42,094 அதைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தாள். 273 00:21:49,977 --> 00:21:53,146 கைவிடப்பட்ட குழந்தை தனக்குக் கிடைத்தது கடவுளின் செயல் என நினைத்து, 274 00:21:53,146 --> 00:21:58,151 அவள் விரும்பிய அம்மாவைப் பெறுவதற்கான வாய்ப்பாக இதைக் கருதியிருப்பாள். 275 00:22:01,113 --> 00:22:02,739 எனவே, அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டாள். 276 00:22:07,035 --> 00:22:08,078 ஹலோ, ஜெரிகோ. 277 00:22:11,748 --> 00:22:15,127 உன்னிடம் இதைச் சொல்வதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப் போவதில்லை. 278 00:22:16,670 --> 00:22:17,963 என் மன்னிப்பையும், 279 00:22:19,339 --> 00:22:21,216 அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 280 00:22:24,094 --> 00:22:26,555 உண்மையை ஏற்றுக்கொண்டால் தான் ஆறுதல் கிடைக்கும். 281 00:22:28,432 --> 00:22:30,267 நீ இப்போது தொடங்கலாம் என நினைக்கிறேன். 282 00:22:31,435 --> 00:22:35,898 இப்போது நான் உன்னிடம் கேட்கப் போகும் விஷயம், சுலபமாக இருக்காது... 283 00:22:38,233 --> 00:22:41,320 ஆனால் அது என் சீர்திருத்தத்தின் முக்கியமான பகுதி. 284 00:22:43,363 --> 00:22:46,825 லியனை திரும்ப பெறுவதற்கு உங்களின் உதவி வேண்டும். 285 00:22:52,831 --> 00:22:56,084 எங்களுக்கும் அது தான் வேண்டும், ஜார்ஜ். அவளும், குழந்தையும் போகணும். 286 00:23:04,426 --> 00:23:06,345 நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் பொய்யா? 287 00:23:11,725 --> 00:23:14,311 உங்கள் மீதிருந்த நம்பிக்கைக்காக என் குடும்பத்தை விட்டு வந்தேன். 288 00:23:15,604 --> 00:23:17,397 நீ உன் பங்கைச் செய்துவிட்டாய். 289 00:23:18,857 --> 00:23:20,859 நீ உன் குடும்பத்திடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. 290 00:23:22,611 --> 00:23:24,363 இந்தக் கதை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 291 00:23:57,187 --> 00:23:58,605 இதையெல்லாம் நீங்களே சமைத்தீர்களா? 292 00:24:02,484 --> 00:24:05,320 மேஜையை தயார் செய்கிறாயா? உணவு தயாராகிவிட்டது. 293 00:24:08,323 --> 00:24:09,741 இருவரும் எங்கு சென்றிருந்தீர்கள்? 294 00:24:09,741 --> 00:24:10,951 சகோதர பிணைப்பு. 295 00:24:11,910 --> 00:24:12,911 உன் குரல். 296 00:24:13,996 --> 00:24:15,247 இப்போது கொஞ்சம் பரவாயில்லை. 297 00:24:16,248 --> 00:24:17,499 இதை வெளியே எடுத்துச் செல்கிறீர்களா? 298 00:24:33,182 --> 00:24:34,391 இன்று என்ன செய்தாய், லியன்? 299 00:24:35,267 --> 00:24:37,311 ஜெரிகோவுடன் சந்தைக்குச் சென்றேன். 300 00:24:38,478 --> 00:24:40,439 உன் குரலுக்கு என்ன ஆச்சு, ஜூலியன்? 301 00:24:41,023 --> 00:24:42,316 ஒவ்வாமை. 302 00:24:44,401 --> 00:24:46,403 - நன்றாகத் தெரியுமா? - டோட்டி, உப்பை எடுத்துத் தருகிறாயா? 303 00:24:46,403 --> 00:24:47,654 இதற்கு உப்பு தேவையில்லை. 304 00:24:47,654 --> 00:24:49,823 இப்படித்தான் அம்மா சமைப்பாங்க. 305 00:24:50,324 --> 00:24:53,118 அவங்க நமக்காக சமைத்து தந்த உணவுகளெல்லாம் உனக்கு ஞாபகமிருக்கிறதா? 306 00:24:53,827 --> 00:24:55,829 கடவுளே, அவங்க நம்மை ரொம்ப நேசித்தாங்க. 307 00:24:55,829 --> 00:24:57,164 இன்று நாள் எப்படி இருந்தது, ஷான்? 308 00:24:58,498 --> 00:24:59,499 இன்று ரொம்ப பிரபலமாகிவிட்டேன். 309 00:24:59,499 --> 00:25:01,210 அப்படியா? அற்புதம். 310 00:25:02,252 --> 00:25:03,420 இதற்காக நன்றியோடு இருக்க வேண்டும். 311 00:25:04,004 --> 00:25:06,465 இது நிறைய பேருக்கு நடப்பது தான். இதுவொன்றும் பெரிய விஷயமில்லை. 312 00:25:08,133 --> 00:25:09,301 அது உண்மை இல்லை. 313 00:25:09,927 --> 00:25:12,137 என் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்றிருக்கிறேன். 314 00:25:12,137 --> 00:25:14,306 - அப்படியெல்லாம் செய்யாதீர்கள். - அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யட்டும். 315 00:25:15,516 --> 00:25:16,517 என்ன? 316 00:25:22,773 --> 00:25:24,024 நீங்கள் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 317 00:25:36,912 --> 00:25:37,955 இது நன்றாக இருக்கிறது, இல்லையா? 318 00:25:39,748 --> 00:25:41,792 மீண்டும் நாம் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது? 319 00:25:50,884 --> 00:25:54,721 கடவுளை மரியாதையின்றி பேசியதற்காக இந்த வேலைக்காரனை மன்னித்துவிடுங்கள். 320 00:25:57,182 --> 00:25:59,476 நான் பொய் சொல்லி பாவம் செய்துவிட்டேன். 321 00:26:06,942 --> 00:26:08,110 என் வஞ்சக செயலால், 322 00:26:09,653 --> 00:26:12,698 இந்தக் குடும்பத்தை பேராபத்தில் சிக்க வைத்திருக்கிறேன். 323 00:26:19,705 --> 00:26:24,585 நாங்கள் அனைவருமே ஆபத்தில் இருக்கிறோம். இதுதான் எங்கள் கடைசி நம்பிக்கை. 324 00:26:25,711 --> 00:26:29,006 தயவுசெய்து, 325 00:26:29,798 --> 00:26:35,262 எங்களிடமிருந்து பிரிந்துச் சென்றவளை எங்களிடம் மீண்டும் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பலத்தைக் கொடுங்கள். 326 00:26:41,226 --> 00:26:42,603 என்னை மன்னித்துவிடுங்கள். 327 00:26:44,605 --> 00:26:48,901 என்னை மன்னித்துவிடுங்கள். 328 00:27:19,681 --> 00:27:21,683 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்