1 00:00:47,047 --> 00:00:50,050 அரை மணி நேரத்திற்கு முன், பக்கத்து வீட்டுக்காரர்கள் 2 00:00:50,133 --> 00:00:53,220 இன்று அதிகாலை 1:00 மணிக்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக சொன்னார்கள். 3 00:00:53,303 --> 00:00:55,514 உள்ளே இருக்கும் குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிலை பற்றி 4 00:00:55,597 --> 00:00:59,226 அதிகாரிகள் இன்னும் எந்த தகவலும் சொல்லவில்லை. 5 00:00:59,309 --> 00:01:03,313 இதைப் பற்றி மேலும் விவரங்கள் தொடர்ந்து சொல்லப்படும். நான் இசபெல் கேரிக், 8 நியூஸ் 6 00:01:06,441 --> 00:01:08,986 உனக்கு சந்தோஷமா? 7 00:01:09,069 --> 00:01:12,823 நீ கீழ்ப்படியாததால் வந்த வினை. 8 00:01:14,032 --> 00:01:16,034 அவளுக்கு இதில் எப்படி தொடர்பு இருக்க முடியும்? 9 00:01:21,790 --> 00:01:23,959 அந்த குடும்பத்தை என்ன செய்தீர்கள், ஜார்ஜ்? 10 00:01:26,086 --> 00:01:27,421 நீங்கள் அவர்களைத் தாக்கினீர்களா? 11 00:01:30,424 --> 00:01:32,551 இதை மே செய்தாரா? அவர் தான் இதற்கு காரணமா? 12 00:01:33,844 --> 00:01:35,095 எனக்கு பதில் சொல்லுங்கள். 13 00:01:35,804 --> 00:01:37,681 -என்ன செய்துள்ளீர்கள்? -எனக்குத் தெரியும். 14 00:01:38,765 --> 00:01:42,102 அவர் நம்மை தாக்கி, மோசமாக காயப்படுத்தப் போகிறார். 15 00:01:45,063 --> 00:01:48,609 லியன். அவளைப் பின் தொடர்ந்து, அவளுக்கு என்ன தெரியும் என்று கேளுங்கள். 16 00:01:52,779 --> 00:01:53,906 லியன். 17 00:01:57,701 --> 00:01:58,702 லியன். 18 00:02:00,787 --> 00:02:02,122 நான் உன்னிடம் பேச வேண்டும். 19 00:02:03,332 --> 00:02:05,667 மரினோ வீட்டில் என்ன நடந்தது என நீ எனக்குச் சொல்ல வேண்டும். 20 00:02:05,751 --> 00:02:07,544 தயவு செய்து, என்னை தனியே விடுங்கள். 21 00:02:08,169 --> 00:02:11,298 லியன், எனக்கு நெருக்கடியாக இருக்கு. எதுவானாலும் என்னிடம் சொல்லி விடு. 22 00:02:11,381 --> 00:02:13,717 நான் இங்கு வந்திருக்கவே கூடாது. 23 00:02:13,800 --> 00:02:15,302 ஏன் அப்படி சொல்கிறாய்? ஏன் வந்திருக்கக் கூடாது? 24 00:02:15,385 --> 00:02:20,015 இது... என் இடம் இல்லை, மற்றும் இப்போது எல்லாம் ரொம்ப தாமதமாகிவிட்டது. 25 00:02:20,807 --> 00:02:23,435 மாடியறையில் அடைபட்டிருக்கும் போது, உன்னால் எதையும் சரிசெய்ய முடியாது. 26 00:02:24,520 --> 00:02:26,021 தயவு செய்து, வெளியே வருகிறாயா? 27 00:02:28,857 --> 00:02:29,900 ஜார்ஜ். 28 00:02:29,983 --> 00:02:32,361 இவர்களை மே என்ன செய்தார்? 29 00:02:38,408 --> 00:02:39,409 ஜார்ஜ்? 30 00:02:42,746 --> 00:02:44,748 அவர்கள் தான் இதை செய்தார்கள் என்று நீ நினைக்கிறாயா? 31 00:02:45,582 --> 00:02:47,626 லியன்-ஐ அந்த வீட்டிற்குள் அனுப்பணும் என இவர் பிடிவாதமாக இருந்தார், 32 00:02:47,709 --> 00:02:49,586 இப்போது ஒரு கொடூரமான தாக்குதல் நடந்திருக்கு. 33 00:02:49,670 --> 00:02:51,255 ஒருவேளை அது அவளைக் குறித்து நடந்திருக்கலாம். 34 00:02:52,381 --> 00:02:55,259 ஐயோ, என் கழுத்து அறுபடுவதை நான் விரும்பவில்லை. 35 00:02:59,346 --> 00:03:01,974 அவர் நினைவிழந்து இருக்கிறாரா என்ன? 36 00:03:02,057 --> 00:03:04,017 எனக்குத் தெரியலை. 37 00:03:04,101 --> 00:03:07,062 குற்ற உணர்ச்சியால் தான், நமக்கு பதில் சொல்லாமல் இருக்கிறார். 38 00:03:07,688 --> 00:03:08,897 அவர் நடிக்கிறார். 39 00:03:12,234 --> 00:03:13,402 எனக்குத் தெரியவில்லை, டோட்டி. 40 00:03:14,903 --> 00:03:15,904 இது நல்லது. 41 00:03:15,988 --> 00:03:18,407 அவர்களுக்குத் தேவையான ஏதோ ஒன்று நம்மிடம் இருக்கிறது. 42 00:03:18,490 --> 00:03:21,785 இப்போது நம் கை ஓங்கி இருக்கு, இதன் மூலம் நாம் ஜெரிக்கோவை திரும்ப பெறலாம். 43 00:03:23,203 --> 00:03:25,581 உங்களால் எங்களை கோபப்படுத்த முடியாது! உங்களுக்குக் கேட்கிறதா? 44 00:03:31,837 --> 00:03:33,213 அந்த மரினோக்கள் யார்? 45 00:03:33,297 --> 00:03:36,258 உங்க குடும்பம் போலவே அவர்களும் ஒரு குடும்பம் தான். 46 00:03:36,341 --> 00:03:39,219 நீ எதற்காக அங்கு இருந்திருக்க வேண்டும்? அதை எனக்கு விவரித்து சொல். 47 00:03:39,303 --> 00:03:40,387 அவர் என்னை அனுப்பினார். 48 00:03:40,470 --> 00:03:41,722 யார்? ஜார்ஜ் மாமாவா? 49 00:03:42,347 --> 00:03:45,601 யாரோ ஒருவர் குறியீடுகளை படித்து விட்டு நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொல்வார். 50 00:03:45,684 --> 00:03:50,814 எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு, நான் இங்கே வந்ததால், அவரின் கட்டளையை மீறி விட்டேன். 51 00:03:50,898 --> 00:03:52,107 நான் விதிகளை மீறி விட்டேன். 52 00:03:52,941 --> 00:03:55,485 சரி, விதிகளை மீறினால் என்ன நடக்கும்? 53 00:04:08,332 --> 00:04:10,918 -ஏதாவது தகவல்? -முயற்சிக்கிறேன். 54 00:04:16,298 --> 00:04:17,382 இது என்ன? 55 00:04:17,466 --> 00:04:19,218 இந்த வழிபாட்டு குழுவை பற்றி நான் ஆராய்ந்துள்ளேன். 56 00:04:19,301 --> 00:04:22,638 காவலர்களை விடவும், வேறு எவரையும் விடவும் எனக்கு இந்த குழுவைப்பற்றி நன்றாக தெரியும். 57 00:04:23,514 --> 00:04:26,266 அவர்கள் தான் செய்தார்கள், இன்னும் இயங்குகிறார்கள் என நிரூபிக்கணும். 58 00:04:27,935 --> 00:04:32,397 இம்மாதிரி குழுக்கள் விவேகமானவர்கள், இந்த விஷயம் மூலம் அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். 59 00:04:32,481 --> 00:04:33,982 நீ எதைத் தேடுகிறாய்? 60 00:04:34,066 --> 00:04:37,528 ஆதாரங்கள். ஒருவேளை அவர்கள் இது போன்ற எதையாவது முன்னர் செய்திருக்கலாம். 61 00:04:42,407 --> 00:04:45,536 நண்பா, நீங்கள் நடிப்பதை நிறுத்தலாம். இங்கே நாம் இருவர் தான் இருக்கிறோம். 62 00:04:49,164 --> 00:04:50,666 உங்களுக்கு நான் பேசுவது கேட்கிறது என தெரியும். 63 00:04:56,797 --> 00:04:58,298 சரி. சரி. 64 00:05:15,482 --> 00:05:16,483 அடச்சே. 65 00:05:55,981 --> 00:06:00,360 லியன் 66 00:06:06,783 --> 00:06:08,577 ஹாய், எரிக். நான் டொரோதி டர்னர் பேசுகிறேன். 67 00:06:08,660 --> 00:06:10,037 எப்படி இருக்கிறாய்? 68 00:06:12,998 --> 00:06:15,292 ஆமாம், வந்து, எனக்கு விரைவாக ஒரு உதவி செய்ய வேண்டும். 69 00:06:15,375 --> 00:06:20,214 இசபெல்லின் கதை பற்றி உனக்கு ஏதாவது விவரம் தெரியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 70 00:06:22,925 --> 00:06:24,718 ஆமாம், அந்த மரினோ குடும்பம் பற்றி தான். 71 00:06:26,762 --> 00:06:27,763 ஓ, அப்படியா… 72 00:06:28,514 --> 00:06:30,307 இல்லை, நன்றி. 73 00:06:30,974 --> 00:06:32,684 நீ சிறப்பானவன், எரிக். நன்றி. 74 00:06:34,520 --> 00:06:35,521 மிகவும் மோசமான செய்தி. 75 00:06:36,980 --> 00:06:38,607 மூன்று கொலைகள். 76 00:06:39,650 --> 00:06:40,692 கடவுளே. 77 00:06:40,776 --> 00:06:44,029 இதை கவனியுங்கள், இளைய குழந்தையைக் காணவில்லை. 78 00:06:45,864 --> 00:06:46,949 ஒரு சின்ன பையன். 79 00:07:22,985 --> 00:07:25,487 எஸ்3ஆர்ஜி10. கேம்ஸ் 80 00:07:25,571 --> 00:07:29,449 இந்த வருத்தமான செய்தியினை கேட்ட பிறகு அஞ்சலிகள் குவிந்தாலும், 81 00:07:29,533 --> 00:07:31,076 காணாமல் போயிருக்கும் அந்த பத்து வயது சிறுவன் 82 00:07:31,159 --> 00:07:34,663 செர்ஜியோ மரினோவின் கதி என்னவாயிற்று என்ற கவலை எல்லோருக்கும் தோன்றியுள்ளது. 83 00:07:34,746 --> 00:07:36,456 சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன 84 00:07:36,540 --> 00:07:40,002 மேலும் தன்னார்வலர்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். 85 00:07:40,085 --> 00:07:43,463 ஆனால் மோசமான வானிலை ஏற்பட போவதால், நேரம் கடந்து கொண்டிருக்கிறது. 86 00:07:45,299 --> 00:07:48,677 அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், அப்புறம் அந்த குழந்தையைக் காணவில்லை. 87 00:07:48,760 --> 00:07:50,512 எனக்குத் தெரியும். 88 00:07:50,596 --> 00:07:53,891 குழந்தைகளை கடத்துவது,குடும்பங்களை கொல்வது, இவை எல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது? 89 00:07:54,641 --> 00:07:56,852 பாதுகாப்பிற்கு நம்மிடம் பிடிமானமிருக்கு. 90 00:07:58,103 --> 00:07:59,104 காவலர்கள் தான். 91 00:08:00,731 --> 00:08:02,983 நல்லது. அவர்கள் இங்கே போசோவைத் தேடி வந்திருக்கிறார்கள். 92 00:08:03,066 --> 00:08:05,652 -ஆனால், அவர்களிடம் அவரை ஒப்படைக்கக்கூடாது. -உனக்கென்ன, பைத்தியமா? 93 00:08:05,736 --> 00:08:08,947 நான் தனியாக இவ்வளவு தூரம் நம்மை கொண்டு வந்திருக்கிறேன். நாம் நெருங்கி விட்டோம். 94 00:08:09,031 --> 00:08:10,115 இந்த ஒப்பந்தத்தை ஜார்ஜ் தான் முடிக்கணும். 95 00:08:10,199 --> 00:08:12,826 இப்போது வெளியில் இருந்து எந்த தலையீடும் வரக்கூடாது. 96 00:08:12,910 --> 00:08:14,745 அவர்கள் காவலர்கள், டோட்டி. 97 00:08:14,828 --> 00:08:17,915 சரி, ஃபில்லியின் சிறந்த காவலர்கள் இதுவரை நமக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள்? 98 00:08:19,124 --> 00:08:20,459 பார், அவர்கள் ஜார்ஜை பிடிக்க அனுமதித்தால், 99 00:08:20,542 --> 00:08:23,045 தொலைபேசி ஒலிப்பதற்காக நாம் முன்னர் காத்திருந்த நிலைமைக்கு திரும்பி விடுவோம். 100 00:08:23,128 --> 00:08:24,129 அப்போ நாம் என்ன செய்யப் போகிறோம்? 101 00:08:28,509 --> 00:08:29,510 அவரை மறைத்து வையுங்கள். 102 00:08:29,593 --> 00:08:30,802 அவரை மறைத்து வைக்கணுமா? 103 00:08:32,136 --> 00:08:35,432 அவரை இங்கிருந்து கூட்டிட்டு போங்க, நான் காவலர்களிடம் பேசுகிறேன். 104 00:08:37,267 --> 00:08:38,434 அவரது காலைப்பிடி. 105 00:08:39,186 --> 00:08:40,395 கடவுளே. 106 00:08:42,731 --> 00:08:43,732 சரி. 107 00:08:44,399 --> 00:08:45,692 அடச்சே. 108 00:08:48,695 --> 00:08:49,947 அடச்சே. 109 00:08:50,030 --> 00:08:51,657 கடவுளே. 110 00:08:54,993 --> 00:08:56,119 சரி. 111 00:09:02,084 --> 00:09:03,126 ஆபிசர் ரெய்ஸ். 112 00:09:03,752 --> 00:09:06,380 ஏதும் பிரச்சினை இல்லையே, திருமதி. டர்னர்? 113 00:09:08,340 --> 00:09:10,175 ஜெரிக்கோவைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா? 114 00:09:11,093 --> 00:09:12,803 இல்லை, மன்னிச்சிடுங்க. 115 00:09:14,096 --> 00:09:15,472 நான் உள்ளே வரலாமா? 116 00:09:16,640 --> 00:09:17,724 தாராளமாக வரலாம். 117 00:09:22,396 --> 00:09:24,314 -நான் அவரைக் கீழே போடுகிறேன். -அவரைக் கீழே போடாதே! 118 00:09:24,398 --> 00:09:25,983 அவர் நழுவுகிறார். ஐயோ. 119 00:09:26,066 --> 00:09:28,944 கொடுமை. அடச்சே. 120 00:09:30,070 --> 00:09:31,071 அடச்சே. 121 00:09:34,074 --> 00:09:35,576 அடக் கடவுளே. 122 00:09:36,326 --> 00:09:37,828 நீ எங்கே போகிறாய்? 123 00:09:37,911 --> 00:09:40,372 வாயை மூடு! வீட்டிற்கு ஒரு காவலர் வந்திருக்கிறார். 124 00:09:41,206 --> 00:09:42,749 என்ன இது... 125 00:09:42,833 --> 00:09:46,170 நீ கொஞ்சம் வாயை மூடுகிறாயா? நீ சத்தமாக மூச்சு விடுகிறாய். வாயை மூடு. 126 00:09:48,005 --> 00:09:50,841 உங்க கணவரிடம் பேசலாம் என்று வந்தேன். அவர் வீட்டில் இருக்கிறாரா? 127 00:09:50,924 --> 00:09:52,050 -அடக் கடவுளே. -ஷான்? 128 00:09:52,134 --> 00:09:53,635 ஷான்... ஆமாம். 129 00:09:54,928 --> 00:09:56,638 இதோ அவர் வருகிறார். 130 00:09:58,682 --> 00:10:00,893 திரு. டர்னர். உங்கள் கை எப்படி இருக்கு? 131 00:10:01,602 --> 00:10:03,520 நன்றாக இருக்கிறது. விசாரித்ததற்கு நன்றி. 132 00:10:04,271 --> 00:10:06,732 நாம் தனிமையில் சில வார்த்தைகள் பேசலாம் என்று நினைத்தேன். 133 00:10:07,399 --> 00:10:10,736 அல்லது… எல்லோரும் சேர்ந்து பேசலாமே. 134 00:10:12,863 --> 00:10:13,864 வந்து, உட்காருங்கள். 135 00:10:19,119 --> 00:10:22,080 அந்த வெஸ்ட் செஸ்டர் குடும்பத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 136 00:10:22,164 --> 00:10:26,585 ஆமாம். நாங்கள் இப்போது தான் டிவியில் பார்த்தோம். படுபயங்கரமான சம்பவம். 137 00:10:27,836 --> 00:10:30,339 நீங்கள் அந்த மரினோ குடும்பத்தை சந்தித்ததுண்டா? 138 00:10:30,964 --> 00:10:34,426 இல்லை, எனக்குத் தெரிந்தவரை கிடையாது. 139 00:10:35,177 --> 00:10:37,095 அவர்களது குழந்தைப் பராமரிப்பாளர் லியனை? 140 00:10:39,139 --> 00:10:40,265 இது என்ன? 141 00:10:41,058 --> 00:10:42,142 இங்கே என்ன நடக்கிறது? 142 00:10:44,186 --> 00:10:45,187 அதாவது… 143 00:10:46,522 --> 00:10:49,775 நீங்களே சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். 144 00:10:50,400 --> 00:10:53,278 சீஸஸ் கிரஸ்ட் 145 00:10:56,615 --> 00:11:00,327 ஹே, எப்படி இருக்கீங்க, நண்பர்களே? நான் தான், செர்ஜியோ.எல்லோருக்கும் நல்வரவு. 146 00:11:00,410 --> 00:11:05,499 நான் கால் ஆஃப் டியூட்டி: மார்டன் வார்ஃபர் 2 ரீமாஸ்டர்ட் பற்றி இன்று பேசப் போகிறேன். 147 00:11:05,582 --> 00:11:08,252 எனக்கு இந்த கேமும் அதன் குலாக் புதுப்பித்தலும் மிகவும் பிடிச்சிருக்கு 148 00:11:08,335 --> 00:11:10,796 மேலும் இன்று நம்மிடையே ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். 149 00:11:11,797 --> 00:11:13,173 வேண்டாம். 150 00:11:13,257 --> 00:11:16,677 வாங்க, லியன். நீங்க பார்வையாளர்களுக்கு ஒரு "ஹாய்" சொல்ல வேண்டும். 151 00:11:16,760 --> 00:11:18,720 பயப்படாதீர்கள். இப்போது ஒன்பது பார்வையாளர்கள் தான் இருக்காங்க. 152 00:11:22,891 --> 00:11:24,893 இவங்க தான் என் குழந்தை பராமரிப்பாளர், லியன். 153 00:11:24,977 --> 00:11:27,020 இவங்க இதுவரை வீடியோ கேம்கள் விளையாடாவிட்டாலும் 154 00:11:27,104 --> 00:11:29,523 கால் ஆஃப் டியூட்டி விளையாடுவதில் மிகவும் திறமைசாலி. 155 00:11:29,606 --> 00:11:31,567 முதல் சுற்றில் இவங்க 13 கொலை செஞ்சாங்க. 156 00:11:34,027 --> 00:11:35,904 சரி, செர்ஜியோ, நான் இப்போது போகலாமா? 157 00:11:36,864 --> 00:11:38,198 இன்னும் ஒரு கேம். 158 00:11:42,744 --> 00:11:44,746 நான் ஆதாரம் திரட்டிக் கொண்டிருந்தேன். 159 00:11:44,830 --> 00:11:47,374 ஏதாவது மறுக்க முடியாத ஆதாரம் கிடைக்கும்வரை நான் காத்திருந்தேன். 160 00:11:48,166 --> 00:11:52,462 நீங்கள் செய்தது எந்தளவு சட்டத்திற்கு புறம்பானது என தெரியுமா? உளவு பார்ப்பது. 161 00:11:52,546 --> 00:11:55,632 -நீங்கள் கைது கூட செய்யப்பட்டிருக்கலாம். -சரி, என்னை நம்ப மாட்டீர்கள் என தெரியும். 162 00:11:55,716 --> 00:11:59,636 கடந்த முறை நீங்கள் இங்கே வந்த போது, என்னை ஒரு மனநோயாளி போல நடத்தினீர்கள். 163 00:11:59,720 --> 00:12:03,390 இந்த வழிபாட்டு குழுவிற்கு இதில் தொடர்பு உண்டு என்று நான் நிச்சயம் சொல்கிறேன். 164 00:12:03,473 --> 00:12:05,392 அது தான் லியன் அங்கே இருந்ததற்குக் காரணம். 165 00:12:05,475 --> 00:12:08,645 அவர்கள் என் மகனை கடத்தினார்கள், இப்போது அந்த மரினோ மகனையும் கடத்தி விட்டார்கள். 166 00:12:08,729 --> 00:12:10,022 நீங்கள் முன்னரே என் பேச்சைக் கேட்டிருந்தால், 167 00:12:10,105 --> 00:12:12,065 இது நடைபெறாமல் நாம் தடுத்து இருக்கலாம், 168 00:12:12,149 --> 00:12:14,776 ஆனால் என் மகனுக்கு நான் தான் ஒரே நம்பிக்கை. 169 00:12:14,860 --> 00:12:16,945 டொரோதி, உங்க வருத்தம் எனக்குப் புரிகிறது. 170 00:12:17,029 --> 00:12:18,947 நம்பினாலும் நம்பாவிட்டாலும், நான் உங்களுக்கு உதவ தான் முயற்சிக்கிறேன். 171 00:12:19,031 --> 00:12:22,576 எனக்கு முன்னால் நீங்கள் ஜெரிக்கோவை கண்டுபிடித்தால், நான் அதை நம்புவேன். 172 00:12:32,878 --> 00:12:34,338 லியன்! 173 00:12:41,136 --> 00:12:42,638 இங்கு வேறு யாராவது இருக்கிறார்களா? 174 00:12:43,889 --> 00:12:46,141 இல்லை, இது ஒரு பழைய வீடு. அதனால் சத்தம் வருகிறது. 175 00:12:46,225 --> 00:12:49,228 ஏன்… நான் சொல்வதை கேட்க மறுக்கிறீர்கள்? 176 00:12:49,311 --> 00:12:51,271 இது மே மார்க்கம் பற்றிய ஒரு துப்பு. 177 00:12:51,355 --> 00:12:55,400 டொரோதி, கேளுங்கள். திரு. மரினோ மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 178 00:12:55,484 --> 00:12:57,194 அந்த சிறுவனின் கதி? 179 00:12:57,277 --> 00:13:00,322 அவனைக் காணவில்லை, ஆனால் திரு. மரினோவின் குறிப்பில்... 180 00:13:00,405 --> 00:13:02,199 குறிப்பா? என்ன குறிப்பு? 181 00:13:02,282 --> 00:13:03,992 அவர் ஒரு விவரமான குறிப்பு எழுதியுள்ளார். 182 00:13:04,826 --> 00:13:06,203 நாங்கள் சடலத்தைத் தேடுகிறோம். 183 00:13:11,208 --> 00:13:12,876 உங்களுக்குப் புரிகிறதா? 184 00:13:14,253 --> 00:13:16,505 இல்லை, நீங்க இப்படி நம்பணும் என தான் அவர்கள் நினைக்கிறார்கள். 185 00:13:16,588 --> 00:13:19,550 அவர்களே அந்த குறிப்பை எழுதி இருப்பார்கள். அது ஒரு தந்திரம். 186 00:13:19,633 --> 00:13:22,302 இல்லை, டொரோதி, இதில் எந்த வழிபாட்டுக் குழுவுக்கும் தொடர்பு இல்லை. 187 00:13:23,470 --> 00:13:27,516 சில சமயம் நாம் நினைப்பதையே மனம் கற்பனை செய்யும். எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி... 188 00:13:29,434 --> 00:13:31,979 உங்களுக்குப் புரிய வைக்க நான் முயற்சி செய்கிறேன். 189 00:13:33,480 --> 00:13:35,107 உங்களுக்குப் புரிகிறதா? 190 00:13:37,359 --> 00:13:39,695 ஆக இது எல்லாமே தற்செயலாக நடப்பது தான். 191 00:13:40,946 --> 00:13:43,866 கொஞ்சம் துரதிருஷ்டமானது. நமக்கு எந்த தொடர்பும் இல்லை. 192 00:13:47,286 --> 00:13:48,579 ஆமாம். 193 00:13:49,371 --> 00:13:53,166 சரி, அப்போ எதுவும் மாறவில்லை… நீங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 194 00:13:53,250 --> 00:13:55,377 சரி, நீங்க உங்க வேலையைப் பாருங்க, நானும் என் வேலையைப் பார்க்கிறேன். 195 00:13:55,460 --> 00:13:56,503 ஆக்ஷன். 196 00:13:58,380 --> 00:14:00,257 லியன். ஆக்ஷன். 197 00:14:01,341 --> 00:14:03,093 நீ உன் இரவு உணவை சாப்பிடு, செர்ஜ். 198 00:14:03,177 --> 00:14:05,512 ஆனால் நான் படம் பிடிக்கிறேன். நான் பிரபலமாகப் போகிறேன்! 199 00:14:06,346 --> 00:14:10,142 சரி, இன்றிரவு நீ சரியாக சாப்பிடுவாய் என உன் அம்மாவிடம் சொன்னோம். 200 00:14:10,893 --> 00:14:13,312 எனக்கு அஸ்பாரகஸ் பிடிக்காது. 201 00:14:13,395 --> 00:14:14,396 சரி. 202 00:14:15,689 --> 00:14:17,316 -யார் வருகிறார் என உனக்கே தெரியும். -வேண்டாம். 203 00:14:17,399 --> 00:14:20,569 தாமதமாகிவிட்டது. அவள் ஏற்கனவே கிளம்பி வந்து கொண்டிருக்கிறாள். 204 00:14:20,652 --> 00:14:24,531 நீ கெட்டவனா? நீ மோசமாக நடந்துக் கொண்டாயா? 205 00:14:24,615 --> 00:14:27,284 -ஆன்ட் ஜோஸஃபின் உன்னை பார்க்க வருகிறாள். -வேண்டாம்! 206 00:14:27,367 --> 00:14:28,785 -நீ ஓடி ஒளிந்துக் கொள்! -வேண்டாம்! 207 00:14:34,458 --> 00:14:37,794 மன்னிச்சிடுங்க, திரு. மரினோ. நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். 208 00:14:37,878 --> 00:14:39,338 பரவாயில்லை. 209 00:14:39,421 --> 00:14:41,256 அப்பா, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? 210 00:14:41,965 --> 00:14:45,010 நீ சந்தோஷமாக இருப்பதை பார்க்க நன்றாக இருக்கு, செர்ஜ். அவ்வளவுதான். 211 00:14:47,179 --> 00:14:48,430 அது என்ன சத்தம்? காற்றா? 212 00:15:06,281 --> 00:15:09,535 வந்து, எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா? 213 00:15:10,327 --> 00:15:13,288 கண்டிப்பாக. சரி… நான் போய் கொண்டு வருகிறேன். 214 00:15:21,630 --> 00:15:23,090 டொரோதி, நீங்கள் நலம் தானே? 215 00:15:23,799 --> 00:15:25,509 -நாம் இவரை நகர்த்த வேண்டும். -என்ன? 216 00:15:25,592 --> 00:15:26,635 அவரைத் தூக்கு. 217 00:15:26,718 --> 00:15:28,095 எனக்கு… 218 00:15:29,304 --> 00:15:32,850 தலை வலிக்கிறது. ஊசியால் குத்துவது போல இருக்கு. 219 00:15:34,309 --> 00:15:37,813 -ஒற்றைத் தலைவலி.எனக்கு நன்றாகத் தெரியும். -ஆமாம். 220 00:15:38,730 --> 00:15:40,065 மேலே, மேலே, மேலே, மேலே. 221 00:15:45,946 --> 00:15:47,489 ஒரு நொடி இருங்கள். 222 00:16:07,176 --> 00:16:09,803 நல்லது. நீண்ட இரவு இது. 223 00:16:11,388 --> 00:16:13,640 -உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா? -வேண்டாம். 224 00:16:13,724 --> 00:16:16,351 உண்மையில், எனக்கு கவலையாக இருக்கு, ஷான். 225 00:16:16,435 --> 00:16:19,188 டொரோதி தானே ஒரு ஆபத்தான சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். 226 00:16:19,271 --> 00:16:21,982 ஆமாம், சரி. ஒரு நிருபருக்கான உணர்வு அது... 227 00:16:24,443 --> 00:16:26,236 இந்த மாதிரி விஷயத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். 228 00:16:26,320 --> 00:16:30,657 இந்த சூழல்களில் தங்களை புகுத்திக்கொள்வது டொரோதி போன்றவர்களுக்குப் பிடிக்கும். 229 00:16:30,741 --> 00:16:35,495 இல்லாத ஒரு தொடர்பை அவர்கள் பார்ப்பார்கள். மற்றவர் வலியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். 230 00:16:36,914 --> 00:16:40,375 நான் உங்களை எச்சரிக்க தான் வந்தேன். இது என் வேலை நேரம் கூட கிடையாது. 231 00:16:40,459 --> 00:16:42,252 வந்து, ரொம்ப நன்றி. 232 00:16:42,878 --> 00:16:46,632 வந்து, நான்... இங்கே விரைவாக சுற்றிப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். 233 00:16:46,715 --> 00:16:48,217 அதிகாரப்பூர்வமற்ற முறையில். 234 00:16:50,761 --> 00:16:51,762 எதற்காக? 235 00:16:52,429 --> 00:16:55,516 அந்த மரினோவின் குழந்தை பராமரிப்பாளரை இன்னும் காணவில்லை. 236 00:16:55,599 --> 00:16:59,228 எவ்வளவு சிறிய தொடர்பாக இருந்தாலும், அவள் இங்கிருந்ததை எங்களால் புறக்கணிக்க முடியாது 237 00:16:59,853 --> 00:17:01,939 வேறு காவலர்கள் செய்வதை விட நான் அதை செய்வது நல்லது. 238 00:17:02,022 --> 00:17:04,441 -சரி. -உங்களுக்கு இப்போது புரிகிறது, இல்லையா? 239 00:17:04,525 --> 00:17:06,984 -ஆமாம், ஆமாம். -சரி. 240 00:17:36,640 --> 00:17:40,143 வந்து, இது என் அலுவலகம், ஆனால் அவள் இதை தன் ஆராய்ச்சிக்காக பயன்படுத்துகிறாள். 241 00:17:41,395 --> 00:17:45,774 த சர்ச் ஆஃப் லெஸ்ஸர் செய்ன்ட்ஸ், நான் அவர்களைப் பற்றி விசாரித்தேன். 242 00:17:46,692 --> 00:17:49,403 -அப்படியா? -ஆமாம், விசாரித்தேன். 243 00:17:49,486 --> 00:17:52,698 சிறு சந்தேகம் இருந்தாலும், எல்லா இடங்களிலும் தேடணும். அது தான் என் வேலை. 244 00:17:55,617 --> 00:17:58,745 அவர்கள் அதிசயங்கள் செய்வதாக சொல்லி... மக்களை ஏமாற்றினார்கள். 245 00:17:58,829 --> 00:18:00,497 ஆனால் அவர்கள் போய் நெடுங்காலம் ஆகி விட்டது, ஷான். 246 00:18:08,714 --> 00:18:10,007 -அடக் கடவுளே. -என்ன நடக்கிறது? 247 00:18:10,090 --> 00:18:11,466 அவள் சுற்றிப் பார்க்க வேண்டுமாம். 248 00:18:11,550 --> 00:18:14,344 -அதை ஷான் அனுமதித்தாரா? -கண்டிப்பாக அனுமதித்தான். அது தான் ஷான். 249 00:18:14,428 --> 00:18:15,554 லியன்... 250 00:18:17,097 --> 00:18:18,223 இவரை இங்கிருந்து கூட்டிட்டு போகணும். 251 00:18:21,018 --> 00:18:22,019 இதோ. 252 00:18:23,896 --> 00:18:26,231 அந்த லியனிடம் இவங்களுக்கு இருக்கும் ஆர்வம், 253 00:18:26,315 --> 00:18:29,693 எனக்கு முழுவதுமாக புரியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. 254 00:18:31,778 --> 00:18:32,779 வந்து… 255 00:18:33,697 --> 00:18:37,451 பொம்மையைக் கொண்டு வந்த பிறகு, உதவியாளர் தேவை என டொரோதி விளம்பரம் செய்தாள், 256 00:18:37,534 --> 00:18:39,119 அதற்கு பலர் விண்ணப்பம் செய்தார்கள். 257 00:18:39,203 --> 00:18:41,163 நிறைய விண்ணப்பங்கள் வந்தன, அதில் ஒருத்தி தான் லியன், 258 00:18:41,246 --> 00:18:43,957 அவளைத் தான் டொரோதிக்கு மிகவும் பிடித்தது, மேலும், வந்து... 259 00:18:44,041 --> 00:18:46,752 ஆனால் நிஜத்தைப் பார்த்த போது, 260 00:18:46,835 --> 00:18:49,713 அவள், ஜெரிக்கோ யார் என்பதை அறிந்தவுடன், அவள் பயந்து விட்டாள். 261 00:18:49,796 --> 00:18:52,549 அதாவது, அவள் இந்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பிரிந்து விட்டோம். 262 00:18:52,633 --> 00:18:54,635 பிறகு டொரோதி அவளை தெருவில் பார்த்து விட்டு 263 00:18:54,718 --> 00:18:57,054 அவள் வேறு ஒரு குடும்பத்திற்காக வேலை செய்கிறாள் என புரிந்து கொண்டு, 264 00:18:57,137 --> 00:18:59,264 அவளை வெறுக்க ஆரம்பித்தாள். 265 00:18:59,348 --> 00:19:03,101 அவள், லியன் தான், எங்கள் குழந்தை பராமரிப்பாளர் என்று நினைத்தாள். 266 00:19:04,228 --> 00:19:05,229 அதனால்… 267 00:19:06,980 --> 00:19:10,484 -இது நம்ப முடியாத தற்செயலான விஷயம். -ஆமாம், தெரியும். அது நம்ப முடியாதது தான். 268 00:19:10,567 --> 00:19:14,071 அவள் அதை நம்ப விட்டிருக்கக் கூடாது என்பதை... நான் புரிந்துக் கொண்டேன். 269 00:19:25,249 --> 00:19:27,167 அவங்களிடம்... அவங்களிடம் பேசுங்கள், ஷான். 270 00:19:28,001 --> 00:19:29,002 சரி. 271 00:19:34,633 --> 00:19:35,634 அங்கு என்ன இருக்கிறது? 272 00:19:37,302 --> 00:19:40,264 அது மாடியறை. வந்து, சேமிப்பிடம். 273 00:19:40,347 --> 00:19:43,517 நாங்கள்... அதைப் பூட்டி வைத்துள்ளோம். அது... அந்தரங்கமான இடம். 274 00:19:44,601 --> 00:19:45,602 எனவே... 275 00:20:01,326 --> 00:20:02,661 சரி. சீக்கிரம். 276 00:20:02,744 --> 00:20:04,037 நான் இவ்வளவு எடையை சுமக்கிறேன். 277 00:20:08,792 --> 00:20:11,879 -சரி. இங்கேயே இரு. -என்ன? முடியாது. 278 00:20:33,275 --> 00:20:35,319 அடக் கடவுளே. 279 00:20:42,242 --> 00:20:43,827 டொரோதி தான் இதை செய்தார்களா? 280 00:20:44,995 --> 00:20:47,664 அவள் இங்கே எப்போதாவது வருவாள். 281 00:21:02,262 --> 00:21:03,263 ஷான். 282 00:21:06,099 --> 00:21:08,852 உங்களது குடும்பத்தை காயப்படுத்த என்ன செய்யணும் என தெரியுமா? 283 00:21:11,939 --> 00:21:13,774 மக்கள் பிறப்பிலேயே அப்படி இருப்பதில்லை. 284 00:21:14,608 --> 00:21:16,068 அது இயல்பான விஷயம் அல்ல. 285 00:21:16,151 --> 00:21:18,529 திரு. மரினோ மனவேதனையில் இருந்தார், 286 00:21:18,612 --> 00:21:22,032 அவரது மனைவி உடல்நலமில்லாமல் இருந்தார், அவரால் வேதனையை சமாளிக்க முடியவில்லை. 287 00:21:23,283 --> 00:21:25,118 நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? 288 00:21:28,622 --> 00:21:30,123 உங்களுடைய மனைவிக்கு உதவி தேவை. 289 00:21:36,296 --> 00:21:38,465 -மன்னிச்சிடுங்க. நான்... -நீங்கள் நலம் தானே? 290 00:21:38,549 --> 00:21:40,926 கொஞ்சம் மயக்கமாக இருக்கு. 291 00:21:43,303 --> 00:21:45,514 நான் கீழே போகிறேன். இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. 292 00:22:11,582 --> 00:22:13,500 தொந்தரவுக்கு மன்னிக்கவும், டொரோதி. மீண்டும் இப்படி நடக்காது. 293 00:22:14,418 --> 00:22:17,004 நான் உங்களை வெளியே கூட்டிட்டுப் போகிறேன். 294 00:22:17,796 --> 00:22:21,300 பரவாயில்லை. நானே வெளியே போகிறேன். 295 00:22:21,383 --> 00:22:24,428 கேளுங்கள், நான் எல்லை மீறினேன் என்று எனக்குத் தெரியும். 296 00:22:25,929 --> 00:22:27,389 நான் யாரையும் காயப்படுத்த நினைக்கலை. 297 00:22:28,640 --> 00:22:31,560 உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்வதில், எனக்கு துளியும் விருப்பமில்லை. 298 00:22:37,149 --> 00:22:38,775 வாயை மூடு. 299 00:22:40,611 --> 00:22:41,862 அடக் கடவுளே. 300 00:22:42,946 --> 00:22:44,531 அய்யோ, கொஞ்சம்... 301 00:22:48,452 --> 00:22:51,163 சூழ்நிலையை வேறு விதமாக பார்க்க தொடங்கியதும் என்னை அழையுங்கள். 302 00:22:53,248 --> 00:22:54,625 நான் நம்பகமான தோழியாக இருப்பேன். 303 00:23:10,641 --> 00:23:12,059 அவள் போய்விட்டாள். 304 00:23:13,477 --> 00:23:14,770 நீ என்ன செய்கிறாய்? 305 00:23:14,853 --> 00:23:16,104 நான்... 306 00:23:17,523 --> 00:23:18,982 அதை விட்டுத் தள்ளு! 307 00:23:45,801 --> 00:23:49,221 ஒரு சோகமான வழக்குக்கு ஒரு துயரமான முடிவு. 308 00:23:49,304 --> 00:23:50,556 சில நிமிடங்களுக்கு முன், 309 00:23:50,639 --> 00:23:54,226 மரினோவின் இளைய குழந்தையின் உடல் படிக்கட்டுகளுக்கு அடியில் 310 00:23:54,309 --> 00:23:58,313 மறைவான இடமொன்றில் காணப்பட்டதாக பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 311 00:23:58,397 --> 00:24:00,941 பத்து வயதேயான செர்ஜியோவின், 312 00:24:01,024 --> 00:24:03,610 தலையில் மூன்று குண்டுகள் துளைத்துள்ளன. 313 00:24:03,694 --> 00:24:08,198 சுவர் வழியாக தனது தந்தையாலேயே அவன் சுடப்பட்டதாகத் தெரிகிறது. 314 00:24:08,282 --> 00:24:11,159 நாங்கள் மரினோவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு துணையாக இருப்போம். 315 00:24:11,243 --> 00:24:15,038 இங்கு நிலையத்தில் நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம், 316 00:24:15,122 --> 00:24:18,041 புத்தியற்ற இந்த வன்முறை செயலை நிறுத்த யாராவது ஒருவர் 317 00:24:18,125 --> 00:24:21,253 அங்கு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிகிறது. 318 00:24:30,888 --> 00:24:32,472 இப்போது ஒரு சமரசத்திற்கு வருவோம், ஜார்ஜ். 319 00:24:32,556 --> 00:24:36,018 லியன்-ஐ அழைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் இடத்திற்கு செல்லலாம். 320 00:24:36,101 --> 00:24:39,813 இது உங்களுடைய குடும்பம், உங்களுக்கென்று இருக்கும், சம்பிரதாயங்களை நான் மதிக்கிறேன் 321 00:24:40,439 --> 00:24:42,441 ஆனால் எங்களுடைய பையன் எங்களுக்குத் திரும்ப வேண்டும். 322 00:24:44,776 --> 00:24:48,238 ஜெரிகோவை மீண்டும் அழைத்து வருவதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். 323 00:24:50,574 --> 00:24:51,742 நீங்கள் சம்மதிக்கிறீர்களா? 324 00:24:53,202 --> 00:24:54,786 பதில் சொல்லுங்கள், ஜார்ஜ். 325 00:24:54,870 --> 00:24:56,330 ஒரு சமரசத்திற்கு வருவோம். 326 00:24:57,039 --> 00:24:58,624 நீங்கள் சம்மதிக்கிறீர்களா? 327 00:24:59,875 --> 00:25:02,127 எழுந்திருங்கள், ஜார்ஜ்! எனக்கு பதில் சொல்லுங்கள்! 328 00:25:03,128 --> 00:25:04,296 கடவுளே! கவனமாக இரு! 329 00:25:04,922 --> 00:25:07,007 -சம்மதம் சொல்லுங்க! -அவரை பகைத்துக் கொள்ளாதே. 330 00:25:07,090 --> 00:25:08,717 ஜெரிகோவை மீண்டும் அழைத்து வாருங்கள். 331 00:25:08,800 --> 00:25:10,719 சம்மதம் சொல்லுங்கள். 332 00:25:29,738 --> 00:25:31,031 ஜார்ஜ் மாமா 9780 ஸ்ப்ரூஸ் தெரு 333 00:25:43,627 --> 00:25:44,878 இது அவருக்கு வந்திருக்கு. 334 00:25:45,671 --> 00:25:47,005 சரி, அதைத் திற. 335 00:25:54,012 --> 00:25:56,431 எதற்கும் தள்ளியே நில். 336 00:26:09,486 --> 00:26:10,821 அது பீட்டாமேக்ஸ் டேப்பா? 337 00:26:10,904 --> 00:26:13,407 பீட்டாமேக்ஸா? எந்த முட்டாள் பீட்டாமேக்ஸை இன்னும் பயன்படுத்துவது? 338 00:26:15,325 --> 00:26:16,577 பதில் வந்துவிட்டது. 339 00:26:16,660 --> 00:26:17,870 ஜார்ஜ். 340 00:26:18,745 --> 00:26:21,748 இன்றிரவு லியன் இந்த டேப்பைப் பார்க்கணும். அதை என்னிடம் கொடுங்கள். 341 00:26:23,208 --> 00:26:24,918 நாம் அவளிடம் காட்ட வேண்டும். 342 00:26:25,002 --> 00:26:28,463 நேரம் கிடையாது. உங்க... உங்களுடைய பீட்டாமேக்ஸ் பிளேயர் எங்கே? 343 00:26:28,547 --> 00:26:30,883 -எங்களிடம் பீட்டாமேக்ஸ் பிளேயர் கிடையாது. -தவறான காலக்கட்டம், ஜார்ஜ். 344 00:26:32,509 --> 00:26:36,930 இப்போதே அவள் டேப்பை பார்த்தாக வேண்டும். அவள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 345 00:26:38,974 --> 00:26:39,975 ஆனால், பொறுங்கள், ஜார்ஜ். 346 00:26:40,058 --> 00:26:41,059 அவரைப் போக விடுங்கள். 347 00:26:44,062 --> 00:26:45,355 அது பயனளித்தது. 348 00:26:50,402 --> 00:26:52,070 அவர்களின் மோசடியை நான் அம்பலப்படுத்திவிட்டேன். 349 00:26:52,154 --> 00:26:54,615 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் இணையுங்கள் 350 00:27:05,876 --> 00:27:06,877 கடவுளே! 351 00:29:30,354 --> 00:29:32,356 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்