1 00:00:05,958 --> 00:00:08,916 -அது என்னது? -ஓ, இல்லை. அம்மா? 2 00:00:09,000 --> 00:00:11,166 -அம்மா! அம்மா! -அம்மா! 3 00:00:12,333 --> 00:00:13,500 கமில்லா. 4 00:00:13,583 --> 00:00:15,666 அன்டன் 5 00:00:16,958 --> 00:00:19,333 அம்மா அப்படியே போனதை நம்ப முடியலை. 6 00:00:20,125 --> 00:00:22,166 அவங்களுக்கு என்ன நடக்குது? 7 00:00:22,958 --> 00:00:24,791 ஆல்மா, நீ என்ன செய்திருக்கே? 8 00:00:25,375 --> 00:00:27,041 உலகம் அழிஞ்சிட்டு இருக்கு. 9 00:00:33,541 --> 00:00:36,500 நாம ஏன் இங்கிருக்கோம்? பெக்கா, இதை நீ செய்யறியா? 10 00:00:36,916 --> 00:00:39,083 இல்லை! இது என்னன்னே எனக்கு தெரியாது. 11 00:00:39,166 --> 00:00:43,166 இது என் நினைவு இல்லை. என் நினைவுகளுக்கு அப்பால் நான் போனதில்லை. 12 00:00:47,458 --> 00:00:48,958 இரு, அப்பா? 13 00:00:49,916 --> 00:00:51,416 நிறைய வருத்தம் இருக்கு. 14 00:00:51,500 --> 00:00:53,833 உணர்வுகள் உன்மீது பாயட்டும். பரவாயில்லை. 15 00:00:55,208 --> 00:00:57,416 நம்மை நீ இங்கிருந்து கூட்டி போ. உடனே! 16 00:00:57,500 --> 00:00:58,875 -பெக்கா. -இப்பவே! 17 00:00:58,958 --> 00:01:00,291 பெக்கா! சே! 18 00:01:08,000 --> 00:01:09,583 நீ நல்லாருக்கே. 19 00:01:11,208 --> 00:01:13,375 அப்பா, அது உங்க நினைவா? 20 00:01:14,458 --> 00:01:16,958 இல்லை. அது அவரோட நினைவு இல்லை. 21 00:01:17,583 --> 00:01:20,583 அம்மா அப்பாவை விட்டுப் போகும் பயத்தை தட்டியிருக்கே. 22 00:01:20,666 --> 00:01:22,291 அது நிஜமா இருந்தது. 23 00:01:23,500 --> 00:01:26,416 பெக்கா, இந்த காட்சிகள், 24 00:01:27,375 --> 00:01:30,458 அற்புதமா இருக்கலாம், ஆனால் உணர்ச்சிமயமாகவும் இருக்கும் 25 00:01:30,541 --> 00:01:34,416 முதலில் உனக்கு புரியாத வழிகளில், அதனால் அவற்றை அப்படியே விடு. 26 00:01:34,500 --> 00:01:37,583 -சரி. முயற்சிக்கிறேன். -அப்ப அம்மாவை என்ன செய்யறது? 27 00:01:37,666 --> 00:01:40,166 அவ எதை அனுபவிக்கிறாளோ, அது அவ பிரச்சினை. 28 00:01:40,250 --> 00:01:42,416 உன் பிரச்சினை, விளக்கவுரையை முடிப்பது. 29 00:01:42,500 --> 00:01:44,791 அப்பா, வாங்க! எங்கே போனாங்கன்னே தெரியாது. 30 00:01:44,875 --> 00:01:48,416 -பிரச்சினையில் இருக்கலாம். -சரி! க்ரெடிட் கார்ட்களை பார்க்கிறேன். 31 00:01:52,166 --> 00:01:55,500 மெக்ஸிக்கோவுக்கு விமான டிக்கட் வாங்கியிருக்கா. 32 00:01:57,333 --> 00:01:59,125 தன் குடும்பத்தை பார்க்க போறா. 33 00:01:59,208 --> 00:02:02,416 குடும்பத்தை சந்திக்க நள்ளிரவில் ஓடினாங்களா? 34 00:02:02,500 --> 00:02:03,750 அப்படித்தான் தெரியுது. 35 00:02:03,833 --> 00:02:07,291 அதனால, நீங்க இருவரும் வீட்டுக்கு போய், படுங்க, 36 00:02:07,666 --> 00:02:11,291 போதை தெளியட்டும், குடிகாரிகளே, சரியா? 37 00:02:11,750 --> 00:02:14,708 உங்கம்மா, அவ தயாரா இருக்கும் போது, வீட்டுக்கு வருவா, 38 00:02:14,791 --> 00:02:16,750 எல்லாம் சரி ஆயிடும். 39 00:02:16,833 --> 00:02:18,375 பார்ப்பீங்க. 40 00:02:28,041 --> 00:02:32,875 சில விஷயங்களை எடுக்க வந்தேன். எதை நம்பறதுன்னு இன்னும் உறுதியில்லை. 41 00:02:32,958 --> 00:02:34,041 ஓவோலின் 42 00:02:34,125 --> 00:02:35,625 உன்னை நம்ப ஆசை தான். 43 00:02:38,000 --> 00:02:39,416 ரீட். 44 00:02:54,125 --> 00:02:58,333 ஹலோ. கமில்லா டியாஸை அடைந்தீங்க. ப்ளீஸ் செய்தி சொல்லுங்க. 45 00:02:59,625 --> 00:03:01,500 சரி, நான் இப்ப என்ன செய்வது? 46 00:03:02,958 --> 00:03:04,458 ஹாய், அம்மா, நான் தான். 47 00:03:05,541 --> 00:03:08,541 நாங்க உங்ககிட்ட அப்படி மோதினதுக்கு மன்னிக்கணும். 48 00:03:08,625 --> 00:03:10,750 உங்களை பற்றி ரொம்ப கவலை படறோம். 49 00:03:11,666 --> 00:03:14,083 எடுக்கிற வரை அழைச்சுட்டே இருப்பேன், சரியா? 50 00:03:14,166 --> 00:03:16,250 அதனால எடுக்கிறது நல்லது. 51 00:03:27,625 --> 00:03:28,958 பட்டனை அழுத்து. 52 00:03:29,791 --> 00:03:32,791 நீ மகிழ்ச்சியா இருப்பேன்னு எப்படி நினைக்கிறே? 53 00:03:34,208 --> 00:03:35,750 ஆல்மா. எழுந்திரு. 54 00:03:37,208 --> 00:03:39,125 ஆல்மா. எழுந்திரு. 55 00:03:39,458 --> 00:03:40,500 ஆல்மா. 56 00:03:40,583 --> 00:03:43,000 எழுந்திரு. முக்கியம். வா. 57 00:03:46,208 --> 00:03:47,875 நீ இங்கு இருப்பதில் ஆச்சரியம். 58 00:03:47,958 --> 00:03:51,833 அம்மாவை அழைச்சேன். பதிலில்ல. செய்தி விட்டேன், மெயில்பாக்ஸ் நிரம்பியது. 59 00:03:51,916 --> 00:03:53,875 எத்தனை வாய்ஸ்மெயில் விட்டே? 60 00:03:53,958 --> 00:03:57,208 -முக்கியமில்லை. வந்து, இருபத்தி-ஏழு. -இருபத்தி... 61 00:03:57,291 --> 00:04:00,041 அவங்க அலெஹான்ட்ரோவை பிரிந்து, அவன் ஒத்துக்காம 62 00:04:00,125 --> 00:04:03,416 இந்த பணத்தை பாதுகாப்பான வீட்டுக்கோ எதுக்கோ அனுப்பியிருந்தா? 63 00:04:03,500 --> 00:04:05,916 ஆமாம். அம்மா ஆபத்தில் இருக்கலாம். 64 00:04:06,000 --> 00:04:09,125 -அதைத்தான் நான் சொன்னேன். -அப்ப என்ன செய்யப் போறோம்? 65 00:04:09,208 --> 00:04:12,916 அவங்க குடும்பத்தை சந்திக்க போயிருக்கிறதா அப்பா நினைக்கிறார். 66 00:04:13,000 --> 00:04:15,791 -அழைச்சு அங்கே இருக்காங்களா பார்ப்போம். -சரி. 67 00:04:17,500 --> 00:04:18,750 சேணம் பூட்டு, கூட்டாளி. 68 00:04:19,500 --> 00:04:20,875 ஹலோ, கண்ணுங்களா! 69 00:04:21,000 --> 00:04:21,833 யார் அது? 70 00:04:21,916 --> 00:04:23,833 ஆல்மாவும் பெக்காவும். 71 00:04:23,916 --> 00:04:27,625 ஓ, உங்க காதலன்னு நினைச்சேன். 72 00:04:27,708 --> 00:04:31,208 ஏய் இல்லை! நிறுத்து! 73 00:04:31,291 --> 00:04:33,416 காதலன் இருக்கானா, பாட்டி? 74 00:04:33,500 --> 00:04:38,541 ப்ளீஸ். நான் சர்சுக்கு கூட போற நண்பர் இருக்கார். அவ்வளவு தான். 75 00:04:39,416 --> 00:04:42,583 சரி, என் தேவதைகளே. உங்களை பார்க்க பிடிக்கும். 76 00:04:42,666 --> 00:04:45,083 சொல்லுங்க. என்ன நடக்குது? 77 00:04:45,166 --> 00:04:47,125 அம்மாவை தேடிட்டு இருக்கோம். 78 00:04:47,208 --> 00:04:48,916 நேற்றிரவு மெக்ஸிக்கோவுக்கு விமானம் எடுத்தாங்க. 79 00:04:49,000 --> 00:04:52,125 உங்க கூட இருப்பாங்கன்னு நினைச்சோம். 80 00:04:52,208 --> 00:04:54,750 அவ மெக்ஸிக்கோ வந்துட்டு அழைக்கலையா? 81 00:04:54,833 --> 00:04:57,583 அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரியுமா? 82 00:04:57,666 --> 00:04:59,625 அது, அவ இருக்க வேண்டியது இங்கே. 83 00:04:59,708 --> 00:05:02,125 உங்க இருவரை போல. நீங்க இங்கே இருக்கணும். 84 00:05:02,208 --> 00:05:05,208 எல்லாரும் என்னுடன் இருக்கணும். 85 00:05:05,291 --> 00:05:06,750 நாங்க அங்கே வரலாமா? 86 00:05:06,833 --> 00:05:09,250 ஆமாம்! வாங்க! வந்து என்னை பாருங்க! 87 00:05:09,333 --> 00:05:11,041 ஒருவேளை உங்க அம்மா வந்துட்டு இருக்கலாம். 88 00:05:11,125 --> 00:05:11,958 சரி. 89 00:05:12,041 --> 00:05:12,916 பிரமாதம். 90 00:05:13,000 --> 00:05:14,500 குட்பை, கண்ணுங்களா! 91 00:05:14,583 --> 00:05:16,666 -பை. உங்களை மிஸ் பண்றேன்! -பை! 92 00:05:16,750 --> 00:05:18,333 நாம இரண்டு நாட்களுக்கு போவோம், 93 00:05:18,416 --> 00:05:21,833 அம்மா நல்லா இருக்கிறதை உறுதி செய்துட்டு, திரும்ப வருவோம். 94 00:05:21,916 --> 00:05:23,458 இந்த திட்டம் பிடிச்சிருக்கு. 95 00:05:24,541 --> 00:05:27,333 ஹேய், நாம இருவரும் ஸ்பானிஷ் பேசுவது எவ்வளவு சிறப்பு? 96 00:05:27,791 --> 00:05:29,291 நீ ரொம்ப வினோதம். 97 00:05:50,125 --> 00:05:53,791 ஏய்ய்ய்! என் இரு பேத்திகளை பார்ப்பது மகிழ்ச்சி! 98 00:05:53,875 --> 00:05:57,958 ஓ, கடவுளே, உங்களை பாரு. நீங்க சூப்பர்மாடல்களா? 99 00:05:58,041 --> 00:06:00,250 இல்லை, பாட்டி. 100 00:06:00,333 --> 00:06:01,833 நான் அப்படி. 101 00:06:02,208 --> 00:06:03,041 ஹாய்! 102 00:06:03,125 --> 00:06:05,250 ஹாய், மோன்சே சித்தி! எப்படி இருக்கீங்க? 103 00:06:05,333 --> 00:06:07,708 ஆல்மாவும் பெக்காவும்! கடவுளே! 104 00:06:07,791 --> 00:06:11,708 என் மருமகன்கள், மருமகள்களில் பிடிச்சவங்க! எப்படி இருக்கீங்கன்னு கேட்கணும். 105 00:06:11,791 --> 00:06:14,041 நல்லா ஒத்துப்போகும் காக்டெயில் பார் தெரியும். 106 00:06:14,125 --> 00:06:15,833 ஆஸ்கர் சித்தப்பா ஊர்ல இருக்கார், 107 00:06:15,916 --> 00:06:18,250 ஆனா அணைப்பும், முத்தமும் கொடுக்க விரும்பறார். 108 00:06:18,333 --> 00:06:20,875 ஓ, இல்லை! அணைப்பும் முத்தமும் ரொம்ப பிடிக்கும். 109 00:06:20,958 --> 00:06:24,041 ஆமாம், ரொம்ப நட்பானவை. 110 00:06:26,208 --> 00:06:30,416 உங்கம்மா இன்னும் எங்க அழைப்புகளுக்கு பதில் சொல்லலை. 111 00:06:30,500 --> 00:06:31,916 அவ எங்கிருப்பான்னு எனக்கு தெரியலை. 112 00:06:32,000 --> 00:06:34,375 அவ தனிப்பட்ட நபர். 113 00:06:34,458 --> 00:06:35,833 நிறைய ரகசியங்கள்னு தோணுது. 114 00:06:35,916 --> 00:06:39,666 அப்ப பெக்கா, எப்ப குட்டி ரீடோ பெக்காவோ வர்றாங்க? 115 00:06:39,750 --> 00:06:42,208 ஓ, அது, பார்ப்போம்! 116 00:06:42,291 --> 00:06:45,333 ஆனால் உங்ககிட்ட காட்ட ஒரு விஷயமிருக்கு. 117 00:06:47,041 --> 00:06:48,416 இது பார்த்த மாதிரி இருக்கா? 118 00:06:48,500 --> 00:06:50,666 எங்கம்மாவோட ஓவியத்தை பார்த்தோம். 119 00:06:50,750 --> 00:06:53,416 அலெஹான்ட்ரோன்னு யாரோ கையெழுத்து போட்டிருக்காங்க. 120 00:06:53,500 --> 00:06:56,333 இல்லை. அலெஹான்ட்ரோன்னு யாரையும் தெரியாது. 121 00:06:56,416 --> 00:07:00,000 விசென்டே ஃபெர்னான்டெஸின் மகனை தவிர, அலெஹான்ட்ரோ ஃபெர்னான்டெஸ். 122 00:07:00,083 --> 00:07:01,291 அது யார்? 123 00:07:01,375 --> 00:07:03,958 அவன் புகழ்பெற்ற பாடகன். 124 00:07:04,041 --> 00:07:05,916 அவனை நிஜமா தெரியாது. 125 00:07:06,000 --> 00:07:09,958 அவன் அப்பா ரான்சேராஸ் அழகா பாடுவார். 126 00:07:11,833 --> 00:07:13,416 இருங்க, இருங்க, பாட்டி. 127 00:07:13,500 --> 00:07:18,958 எங்கம்மா பழைய காதலனை சந்திக்கிறாங்களான்னு தெரியுமா? 128 00:07:19,041 --> 00:07:20,416 காதலனா? இல்லை! 129 00:07:20,500 --> 00:07:22,416 இல்லை, அவளுக்கு பழைய காதலன் இல்லை! 130 00:07:22,500 --> 00:07:24,500 உங்கம்மாவுக்கு முன்னாள் காதலன் இருக்கான், ஆனால்... 131 00:07:24,583 --> 00:07:26,625 போதும், மோன்சே! 132 00:07:26,708 --> 00:07:30,333 இல்லை! காதலன்னு யாரையும் தெரியாது! 133 00:07:30,416 --> 00:07:33,291 இதை அருகிலிருந்து பார்ப்பீங்களா? 134 00:07:33,375 --> 00:07:36,041 இதை பார்த்த மாதிரி இல்லைன்னு உறுதி செய்துக்க. 135 00:07:38,375 --> 00:07:41,166 இல்லை. ஒன்றுமில்லை. 136 00:07:41,833 --> 00:07:42,875 சாரி. 137 00:07:54,500 --> 00:07:57,750 பெக்கா! நம்மை அபுலீட்டாவின் நினைவுக்குள் கூட்டி வந்துட்டே. 138 00:07:58,625 --> 00:07:59,833 அது அம்மா. 139 00:08:02,083 --> 00:08:03,833 இங்கே ஏதோ தப்பா இருக்கு. 140 00:08:03,916 --> 00:08:04,791 சாரி. 141 00:08:04,875 --> 00:08:07,000 எனக்கு இந்த ஓவியத்தை தெரியாது. 142 00:08:07,708 --> 00:08:08,791 உனக்கு புரியுதா? 143 00:08:09,833 --> 00:08:11,458 உங்களுக்கு கோபமா, பாட்டி? 144 00:08:11,541 --> 00:08:16,166 இல்லை! அதைப்பற்றி இனிமேல் பேச விரும்பலை. 145 00:08:19,125 --> 00:08:20,291 -சரி. -சரி. 146 00:08:24,625 --> 00:08:28,375 ஹேய்! பெக்கா, திருமண பெருஞ்சுவரில் இடம் பிடிச்சிட்டே. வாழ்த்துக்கள். 147 00:08:28,458 --> 00:08:29,666 ஆமாம். 148 00:08:30,916 --> 00:08:33,041 அம்மா, அப்பாவோட படம் ரொம்ப பிடிக்கும். 149 00:08:33,125 --> 00:08:36,041 ஆமாம். மகிழ்ச்சியா தெரியறாங்க. 150 00:08:39,000 --> 00:08:41,416 அப்ப அபுலீட்டா என்ன மறைக்கிறதா தோணுது? 151 00:08:41,500 --> 00:08:45,166 தெரியலை. நாம உள்ளே போன காட்சி ரொம்ப வினோதமா இருந்தது. 152 00:08:45,250 --> 00:08:48,083 அவங்க அதை எதிர்த்தது போலிருந்தது. 153 00:08:48,166 --> 00:08:51,291 ஆனால் ஒருவேளை அப்பா மாதிரி இவங்க பயமா இருக்கலாமே? 154 00:08:53,291 --> 00:08:55,000 அது நிஜமான நினைவுன்னு தோணுது. 155 00:08:55,083 --> 00:08:57,875 எதுவானாலும், நாம பார்க்க கூடாதுன்னு நினைக்கிறாங்க. 156 00:08:58,416 --> 00:09:00,250 ஒருவேளை நீ இன்னும் மனம் திறக்கணும். 157 00:09:00,583 --> 00:09:02,958 -என்ன சொல்றே? -இயற்கையாவே பச்சாதாபம் பார்ப்பே. 158 00:09:03,041 --> 00:09:07,708 மத்தவங்களோட நினைவுகளை அணுகும் போது, அவங்க உணர்வுகளை எடுத்துக்கறே. 159 00:09:07,791 --> 00:09:10,458 ஆனால் நீ மனம் திறந்து ஒன்றுமில்லாமல் ஆனேன்னா, 160 00:09:10,541 --> 00:09:15,166 உணர்வுகள் உன் வழியாக பாயும், நீயும் தெளிவான உண்மையை உணரலாம். 161 00:09:15,250 --> 00:09:17,916 அது நல்லாவே புரியுது, ரொம்ப எளிமையா தெரியுது. 162 00:09:18,000 --> 00:09:21,291 முயற்சி செய். உனக்கு வரும். அபுலீட்டாவிடம் பேசுவோம். 163 00:09:21,375 --> 00:09:23,583 -மோன்சே சித்தி எப்படி? -அவங்களுக்கு என்ன? 164 00:09:23,666 --> 00:09:25,875 அவங்களுக்கு ஏதோ தெரியும். கேட்கலாமே. 165 00:09:25,958 --> 00:09:27,458 சரி. அங்கே தொடங்குவோம். 166 00:09:29,500 --> 00:09:31,083 அடடே, இது அப்பா. 167 00:09:34,500 --> 00:09:36,916 திரும்பினதும் என்ன சொல்லணும்னு யோசிப்போம். 168 00:09:37,000 --> 00:09:39,166 லா காசா டெல் பூவோ 169 00:09:40,875 --> 00:09:44,125 இன்னும் இரண்டு பலாமஸ், ஒரு விஸ்கி. நன்றி. 170 00:09:44,208 --> 00:09:48,541 நல்ல வேடிக்கையா இருக்கு! என்னை பானங்களுக்கு அழைத்ததுக்கு நன்றி. 171 00:09:48,625 --> 00:09:52,666 பார்ட்டிக்கு போக தப்பிச்சு போகும் சின்ன பெண் போல உணர்றேன். 172 00:09:52,750 --> 00:09:56,166 அது பெக்கா போலிருக்கு! அவ வெளியே போய் பசங்களை முத்தமிடுவா. 173 00:09:56,250 --> 00:10:00,500 வாய்ப்பே இல்லை! நீ பொய் சொல்றே! பெக்கா எப்பவும் நல்ல பெண்ணா நடக்கிறா. 174 00:10:00,583 --> 00:10:03,083 ஆல்மா, நீ பரணில் போதை ஏத்துவே! 175 00:10:04,958 --> 00:10:10,083 அது கிறுக்குத்தனம். நீங்க கச்சிதமான தேவதைகள் போல கமில்லா நடந்துப்பா. 176 00:10:10,166 --> 00:10:14,333 -ஆல்மா அவ்வளவு இல்லை. -இல்லை, ஆல்மா அவ்வளவு இல்லை. 177 00:10:14,416 --> 00:10:15,791 நீங்க எப்படி, சித்தி? 178 00:10:15,875 --> 00:10:18,250 -நானா? அய், அய், அய்! -ஆமாம், நீங்க? 179 00:10:18,333 --> 00:10:22,625 நான் உயர்நிலை பள்ளியில் இருக்கையில், 180 00:10:22,708 --> 00:10:27,125 நான் மக்களிடம் விற்பேன்... ஆங்கிலத்தில் எப்படி சொல்வது... 181 00:10:28,416 --> 00:10:29,541 -கோகெய்ன்? -என்ன? 182 00:10:29,625 --> 00:10:32,833 -அட கடவுளே. -நான் அதை எதிர்பார்க்கலை! என்ன! 183 00:10:32,916 --> 00:10:35,958 அது 80களில். என் ஃபேஷனுக்கு பணம் தேவையா இருந்தது. 184 00:10:36,041 --> 00:10:40,125 ஓ, கடவுளே. எங்கம்மா அப்படி ஏதாவது செய்தாங்களா? வேடிக்கையான விஷயங்கள்? 185 00:10:40,208 --> 00:10:41,958 இல்லை. கடவுளே. 186 00:10:43,041 --> 00:10:45,916 அட... இல்லை. 187 00:10:46,000 --> 00:10:47,708 அந்த நிறுத்தம் எதுக்கு? 188 00:10:47,791 --> 00:10:49,750 -என்ன? -இல்லை. நிறுத்தம் இருந்தது! 189 00:10:49,833 --> 00:10:52,166 -இல்லை! -ஆமாம், இருந்தது. 190 00:10:52,250 --> 00:10:53,916 சொல்ல அது என் ரகசியம் இல்லை. 191 00:10:54,000 --> 00:10:58,125 இல்லை, ப்ளீஸ்! ப்ளீஸ், சித்தி. ப்ளீஸ் சொல்லுங்க. அம்மா ரகசியமா இருப்பாங்க. 192 00:10:58,208 --> 00:11:00,708 அவங்க சொல்லவே மாட்டாங்க. நல்லா தெரிஞ்சுக்கணும். 193 00:11:00,791 --> 00:11:03,666 நான் இதை சொன்னது தெரிஞ்சா கமில்லா என்ன சொல்லுவா? 194 00:11:03,750 --> 00:11:08,208 அவங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டோம். சித்தி, சித்தி! 195 00:11:08,458 --> 00:11:10,833 -சித்தி! - சரி, சரி! அப்ப... 196 00:11:11,791 --> 00:11:14,791 முன்னால, நீங்க காதலனை பற்றி கேட்ட போது... 197 00:11:15,875 --> 00:11:18,750 எங்க சின்ன வயசில, உங்கம்மாவுக்கு காதலன் இருந்தான். 198 00:11:19,333 --> 00:11:21,125 அவன் சர்சில் படிச்சிட்டிருந்தான், 199 00:11:21,208 --> 00:11:24,333 என் எல் செமினாரியோவில், பாதிரி ஆக, 200 00:11:24,416 --> 00:11:28,125 அவங்க ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பினாங்க. 201 00:11:30,791 --> 00:11:33,541 எளிமையா மனம் திறக்கிறாங்க. 202 00:11:33,625 --> 00:11:35,666 பாரு. மோன்சே சித்தி. 203 00:11:39,208 --> 00:11:41,416 சின்ன பெண்ணா இருக்கையில் அவங்களை பார்த்தேன். 204 00:11:42,208 --> 00:11:45,791 அந்த வயதில், படங்கள், தொலைக்காட்சியில் முத்தமிடுவதை பார்த்தேன், 205 00:11:46,291 --> 00:11:48,250 ஆனால் அது போல போலி இல்லை இது. 206 00:11:48,708 --> 00:11:52,833 ஒருத்தர் மீது ஒருத்தருக்கு இருந்த காதலைத்தான் நான் அப்போதிலிருந்து 207 00:11:52,916 --> 00:11:54,916 தேடறேன், அது கிடைக்கவே இல்லை. 208 00:11:55,833 --> 00:11:58,416 அந்த காலத்தில் கமில்லா வேறு நபர். 209 00:11:58,875 --> 00:12:00,500 லேசான இதயம் படைத்தவள். 210 00:12:00,583 --> 00:12:02,625 என் காதலனை நீ சந்திக்கணும். 211 00:12:03,041 --> 00:12:06,750 ஆனால், அதை ரகசியமா வெச்சிருக்கணும், சரியா? 212 00:12:09,625 --> 00:12:13,375 என்னை அவங்க உலகத்துக்குள் கூட்டி வந்தாங்க, எங்க குடும்பத்துக்குள் 213 00:12:13,458 --> 00:12:14,916 இரண்டாம் குடும்பமா இருந்தோம். 214 00:12:16,625 --> 00:12:18,666 ஆனால் கவனமா இருக்க வேண்டியிருந்தது. 215 00:12:27,041 --> 00:12:30,875 அவங்களுக்கிடையே ரகசிய செய்திகள் மாற்றிக்க உங்கம்மா என்னை அனுப்புவா. 216 00:12:35,500 --> 00:12:38,291 போலி பெயர்களை உபயோகிச்சு, ரகசிய இடங்களில் சந்திப்பாங்க. 217 00:12:38,375 --> 00:12:40,000 பிரகாசிக்கும் மலையில் என்னை சந்தி. அன்புடன், மரியா. 218 00:12:40,083 --> 00:12:42,083 சின்ன உளவாளி போல உணர்ந்தேன். 219 00:12:43,041 --> 00:12:47,541 ஆனால் கமில்லா பிரச்சினையில் மாட்டினா, அவனை இன்னொரு சர்சுக்கு அனுப்பிட்டாங்க. 220 00:12:48,000 --> 00:12:49,708 அது அவ இதயத்தை உடைத்தது. 221 00:12:50,250 --> 00:12:51,125 மன்னிச்சிடுங்க. 222 00:12:51,458 --> 00:12:55,500 அதன் பிறகு, உங்கம்மா வேறு நபர் போலாயிட்டா. 223 00:12:56,458 --> 00:12:58,916 அவ வீட்டிலிருந்து போயிட்டா, உங்கம்மாவுக்கும் 224 00:12:59,000 --> 00:13:01,250 எனக்கும் அதே உறவு இல்லை. 225 00:13:02,083 --> 00:13:03,625 நான் இப்ப போயாகணும். 226 00:13:05,958 --> 00:13:08,625 குறிப்புக்கு என்னை குற்றம் சொல்றாளான்னு தெரியலை. 227 00:13:11,333 --> 00:13:14,041 ஆனால் இந்த வரலாற்றுக்கு இன்னும் அதிகமிருக்கு. 228 00:13:14,708 --> 00:13:16,875 எனக்கு 12 வயதாகும் போது, 229 00:13:16,958 --> 00:13:19,916 கமில்லா பல்கலைக்கழகம் போனதா என்னிடம் அம்மா சொன்னாங்க, 230 00:13:20,000 --> 00:13:23,166 ஆனால் பின்னர், எங்கப்பாவிடம் வேறு ஏதையோ சொன்னாங்க 231 00:13:23,250 --> 00:13:25,375 அந்த பையன் பாதிரி ஆனதும், 232 00:13:25,458 --> 00:13:28,666 கமில்லா அவனோட வாழ போனதா சொன்னாங்க. பாவத்தில். 233 00:13:28,750 --> 00:13:32,416 ஓ, கடவுளே. அவரை மாற்றின போதும் அவரோடவே இருந்துட்டாங்களா? 234 00:13:32,500 --> 00:13:34,166 இதைத்தான் சொல்லிக்கிறேன் 235 00:13:34,250 --> 00:13:37,125 ஏன்னா இப்படி நம்பினா வருத்தம் குறைவா இருக்கு. 236 00:13:37,208 --> 00:13:38,958 அவர் பெயர் நினைவிருக்கா? 237 00:13:39,041 --> 00:13:42,333 அலெஹான்ட்ரோவா? அவர் அம்மாவோட ஓவியத்தை வரைந்திருக்கலாமா? 238 00:13:42,416 --> 00:13:47,750 இல்லை, அது பெயரில்லை, ஆனால் நான் சொன்னது போல, குறியீடுகளும் ரகசிய பெயர்களும்தான். 239 00:13:47,833 --> 00:13:50,291 அவளுக்கு மட்டுமே புரியற மாதிரி இருக்கும். 240 00:13:50,375 --> 00:13:51,875 இப்ப எங்கே இருக்கார்? 241 00:13:51,958 --> 00:13:54,750 இல்லை. இல்லை. இதை நான் சொல்ல மாட்டேன். 242 00:13:54,833 --> 00:13:57,291 ப்ளீஸ், சித்தி. அவங்களுக்கு உதவி செய்யணும். 243 00:13:57,375 --> 00:14:00,583 எங்களுக்குள்ளே சுமூகமாக்க பார்க்கிறோம். ப்ளீஸ். 244 00:14:01,000 --> 00:14:02,708 அவ்வளவு தான். சத்தியமா. 245 00:14:15,208 --> 00:14:16,375 அது தான் அவர். 246 00:14:16,500 --> 00:14:18,250 வா. நான் பார்த்துக்கறேன். 247 00:14:20,541 --> 00:14:24,708 ஹலோ. கன்னி க்வாதாலூபே தேவாலயத்துக்கு நல்வரவு. 248 00:14:24,791 --> 00:14:29,125 அருமை. எங்க அம்மாவை தேடறோம். அவங்க பெயர் கமில்லா டியாஸ். 249 00:14:29,208 --> 00:14:33,041 இரு நாட்களுக்கு முன் ஊரை விட்டாங்க, அவங்களிடமிருந்து செய்தியில்லை. 250 00:14:34,166 --> 00:14:35,958 இதை கேட்க வருத்தமா இருக்கு. 251 00:14:36,041 --> 00:14:39,333 அலெஹான்ட்ரோ என்ற பெயர் உங்களுக்கு எதையாவது நினைவூட்டுதா? 252 00:14:39,666 --> 00:14:41,416 "அலெஹான்ட்ரோ," "அலெஹான்ட்ரோ." 253 00:14:42,833 --> 00:14:44,333 இல்லை. எனக்கு தோணலை... 254 00:14:44,416 --> 00:14:47,083 அட! எங்கம்மாவோட உங்க தொடர்பு தெரியும். 255 00:14:47,166 --> 00:14:48,750 நீங்க திரும்பினதும் தெரியும். 256 00:14:48,833 --> 00:14:52,833 அது தெரியாது. உறுதியா தெரியாது. தெரியாது. 257 00:14:52,916 --> 00:14:54,833 இது மிகப்பெரிய குற்றச்சாட்டு. 258 00:14:54,916 --> 00:14:58,083 ஃபாதர், என் சகோதரியை மன்னிங்க. அவ வருத்தப்படறா. 259 00:14:58,916 --> 00:15:01,000 நாங்க அவங்களை பற்றி கவலை படறோம். 260 00:15:01,083 --> 00:15:04,083 அவங்க எங்கே இருக்காங்கன்னு விவரம் தேடறோம். 261 00:15:04,166 --> 00:15:06,708 உங்கம்மாவை நீங்க தொலைச்சதுக்கு வருந்தறேன், 262 00:15:07,333 --> 00:15:11,833 ஆனால் நான் கமில்லாவை பல வருஷங்களா பார்க்கலை. 263 00:15:11,916 --> 00:15:14,625 உங்களுக்கு, உங்க அம்மாவுக்கு பிரார்த்திக்கிறேன். 264 00:15:14,708 --> 00:15:17,416 உங்க நேரத்துக்கு மிக்க நன்றி, ஃபாதர். 265 00:15:17,500 --> 00:15:19,750 -போகலாம். -இந்த ஆள் பொய் சொல்றார்! 266 00:15:19,833 --> 00:15:22,333 -நிறுத்து. -பொய் சொல்றார்! உண்மையை கண்டுபிடி. 267 00:15:22,416 --> 00:15:26,333 அம்மாவை கண்டுபிடிக்கணுமா வேணாமா? உன்னால மட்டும்தான் செய்ய முடியும். 268 00:15:26,541 --> 00:15:28,541 நான் செய்தா, பனியில் மாட்டிப்போம். 269 00:15:28,625 --> 00:15:31,291 -நமக்கு தெரிய வேணாம்னு நினைக்கிறார். -முயற்சி செய். 270 00:15:47,333 --> 00:15:49,875 -வாவ். -நாம இதை செய்யக் கூடாது. 271 00:15:49,958 --> 00:15:51,500 என் கனவு என்ன தெரியுமா? 272 00:15:51,583 --> 00:15:53,166 நான் உன்னிடம் மீண்டும் உறவு வைப்பேன்னு. 273 00:15:53,250 --> 00:15:56,875 கமில்லா, ப்ளீஸ். சோர்வா இருக்கேன். 274 00:15:56,958 --> 00:15:58,333 இல்லை! 275 00:15:59,000 --> 00:15:59,875 திருமணம் செய்து, 276 00:16:00,583 --> 00:16:02,666 குடும்பம் நடத்துவது. 277 00:16:02,750 --> 00:16:03,833 உன்னோடு. 278 00:16:07,750 --> 00:16:10,875 ஆமாம், அந்த வாழ்க்கையை ரசிக்க முடியும். 279 00:16:16,375 --> 00:16:20,166 எனக்கு மாற்றம் கிடைச்சதால என் குடும்பம் ஏற்கனவே வெட்கப்படுது. 280 00:16:20,250 --> 00:16:21,666 நான் வெளியேற்றப்பட்டால், 281 00:16:21,750 --> 00:16:23,291 என்னை மன்னிக்கவே மாட்டாங்க. 282 00:16:25,625 --> 00:16:26,833 கமில்லா. 283 00:16:29,125 --> 00:16:31,708 நம் வாழ்க்கையை அழிக்க கூடாது. 284 00:16:31,791 --> 00:16:34,083 உன் குடும்பத்தையும் நான் அழிக்க விரும்பலை. 285 00:16:34,958 --> 00:16:38,875 நம்மை விட முக்கியமான கடமைகள் நமக்கு இருக்கு. 286 00:16:40,375 --> 00:16:41,750 மன்னிச்சுக்கோ, ஆனால்... 287 00:16:44,166 --> 00:16:45,375 என்னால் முடியாது. 288 00:16:47,750 --> 00:16:49,250 அப்ப அவங்க பிரிஞ்சிட்டாங்க. 289 00:16:49,833 --> 00:16:52,875 இது சரியா இல்லை. எனக்கு பிடிக்கலை. தப்பா இருக்கு... 290 00:16:52,958 --> 00:16:54,625 பரவாயில்லை. நாம போகலாம். 291 00:16:58,791 --> 00:17:01,208 கடினம்னு தெரியும், ஆனால் அந்த வலி உன்னுதில்லை. 292 00:17:01,291 --> 00:17:04,125 தன் ஆன்மாக்களை நோண்டுவது மக்களுக்கு பிடிக்கலைன்னா... 293 00:17:04,208 --> 00:17:05,500 அம்மாவுக்கு உதவறோம். 294 00:17:05,625 --> 00:17:07,875 நான் இதை செய்வதில் அப்பாவுக்கு ஏன் பயம்? 295 00:17:09,500 --> 00:17:12,166 உன்னால இதன் சில அம்சங்களை கையாள முடியாதுன்னு 296 00:17:12,250 --> 00:17:14,458 -நினைக்கிறார் போல. -அவர் சரியா இருக்கலாம். 297 00:17:14,541 --> 00:17:19,333 அப்பாவை மற! உன்னால இது முடியும்னு தெரியும்! நல்ல காரணத்துக்கு செய்யறோம். 298 00:17:19,750 --> 00:17:21,166 -சரி. -சரி. 299 00:17:21,250 --> 00:17:24,666 அபுலீட்டா. தெரிஞ்ச எதையோ நம்மிடம் சொல்ல மாட்டேங்கிறாங்க, 300 00:17:24,750 --> 00:17:26,125 தானே ஏற்க மாட்டேங்கிறாங்க. 301 00:17:26,208 --> 00:17:28,250 அபுலீட்டாவை தொந்தரவு செய்ய வேணாம். 302 00:17:28,333 --> 00:17:31,541 உள்ளே செய்த மாதிரி, அவங்க நினைவுக்குள்ள மனம் திறந்தா, 303 00:17:31,625 --> 00:17:34,125 அவங்க மறைக்கிறதை தெரிஞ்சுக்கலாம். 304 00:17:34,208 --> 00:17:37,708 சரி, நல்லது. இதை செய்வோம், அவங்க தான் இதுக்கு பதில் என 305 00:17:38,041 --> 00:17:41,375 நம்புவோம், அம்மாவை கண்டுபிடிச்சு, வீட்டுக்கு போவோம். 306 00:17:41,458 --> 00:17:43,958 -பெக்கா, நான்... -இல்லை, பரவாயில்லை. போகலாம். 307 00:17:50,333 --> 00:17:51,708 -பாட்டி? -சொல்லு? 308 00:17:51,791 --> 00:17:52,958 நாம பேசலாமா? 309 00:17:53,416 --> 00:17:54,875 நிச்சயமா. என்ன விஷயம், கண்ணே? 310 00:17:55,541 --> 00:17:58,458 ஃபாதர் ரேயஸோட அம்மாவோட உறவை பற்றி தெரியும். 311 00:17:58,541 --> 00:18:00,000 நீ என்ன சொல்றே? 312 00:18:00,666 --> 00:18:02,250 எனக்கு அதைப்பற்றி தெரியாது. 313 00:18:02,333 --> 00:18:06,583 ஓவியத்தை பற்றியோ, அலெஹான்ட்ரோ பற்றியோ நிச்சயமா எதுவும் தெரியாதா? 314 00:18:06,666 --> 00:18:09,916 ப்ளீஸ். இந்த விஷயத்தில் என்னை தொந்தரவு செய்யாதீங்க. 315 00:18:10,000 --> 00:18:11,166 எனக்கு தெரியாது. 316 00:18:11,250 --> 00:18:13,500 -செய். அந்த விஷயத்தை செய். -சரி. 317 00:18:25,125 --> 00:18:27,333 இது தான் அவங்க மறைச்ச நினைவு. 318 00:18:30,208 --> 00:18:31,541 அம்மா அதோ இருக்காங்க. 319 00:19:10,041 --> 00:19:11,708 ஓவியத்தில் இருந்த வீடு. 320 00:19:11,791 --> 00:19:12,875 கமில்லா! 321 00:19:14,208 --> 00:19:15,458 நீ இங்கே என்ன பண்றே? 322 00:19:16,750 --> 00:19:19,250 அம்மா, என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க? 323 00:19:19,333 --> 00:19:20,416 இங்கே தான் வாழறியா? 324 00:19:21,333 --> 00:19:23,041 யாரோட வாழறே? 325 00:19:23,125 --> 00:19:25,458 நீ இனியும் ஃபாதர் ரேயஸோட வாழலைன்னு எனக்கு தெரியும். 326 00:19:25,541 --> 00:19:27,375 உன்னை தேடி வீட்டுக்கு வந்தார். 327 00:19:27,791 --> 00:19:30,708 இங்கே யாருடனோ பாவத்தில் வாழ்ந்துட்டு இருப்பே. 328 00:19:30,791 --> 00:19:32,666 அம்மா, சத்தியமா, அது இல்லை... 329 00:19:32,750 --> 00:19:34,458 நீ இப்படிப்பட்ட பெண்ணா? 330 00:19:34,541 --> 00:19:37,125 யார் வர்றாங்களோ அவங்களோட உறவு வைக்கிறது. 331 00:19:37,208 --> 00:19:40,291 அம்மா, ஏன் இப்படி சொல்றீங்க? 332 00:19:40,375 --> 00:19:43,333 மக்கள் என்ன நினைப்பாங்க, அவங்களுக்கு தெரிஞ்சா... 333 00:19:43,416 --> 00:19:45,541 அம்மா, ப்ளீஸ், நான் விளக்கறேன். 334 00:19:45,625 --> 00:19:47,666 உனக்கு என்ன வேணுமோ செய், 335 00:19:47,750 --> 00:19:49,750 ஆனால் என் வீட்டுக்கு திரும்ப வராதே. 336 00:19:50,833 --> 00:19:53,583 நம்ம குடும்பத்தை சங்கடப்படுத்தி இருக்கே. 337 00:19:54,250 --> 00:19:56,250 அம்மா, ப்ளீஸ்... 338 00:19:56,333 --> 00:19:58,125 அம்மா! 339 00:19:58,458 --> 00:20:01,541 கடவுளே. அபுலீட்டா அம்மாவை இப்படி நடத்தினாங்களா? 340 00:20:03,541 --> 00:20:06,416 அங்கே, அங்கே நிறைய இருக்கு. என்னால முடியலை... 341 00:20:07,125 --> 00:20:08,416 சரி. வெளியே கூட்டி போ. 342 00:20:13,375 --> 00:20:15,208 நான் மோசமான தாய். 343 00:20:17,041 --> 00:20:19,000 கமில்லா எங்கே போனான்னு தெரியாது, 344 00:20:21,000 --> 00:20:22,375 ஆனால் அவ வயது முதிர்ந்தவ. 345 00:20:23,166 --> 00:20:25,875 மீண்டும் அவ வாழ்வில் தலையிட முடியாது. 346 00:20:31,125 --> 00:20:35,625 நான் படுத்துக்க போறேன். 347 00:20:39,541 --> 00:20:41,458 அது பயங்கரமா இருந்தது. 348 00:20:42,708 --> 00:20:44,541 மன்னிச்சுக்கோ, பெக்கா, 349 00:20:44,625 --> 00:20:47,791 ஆனால் குடும்பத்திலுள்ள பிரச்சினை எல்லாம் சரி பண்ணுவோம். 350 00:20:47,916 --> 00:20:49,125 சத்தியமா. 351 00:20:49,208 --> 00:20:52,541 இது எப்படி வேலை செய்யும்னு தெரியலை. என்ன செய்யறேன்னு தெரியலை. 352 00:20:52,625 --> 00:20:54,916 ஆமாம், தெரியும். நீ செய்யறே. 353 00:20:56,833 --> 00:20:58,708 வா. போய் அம்மாவை தேடுவோம். 354 00:21:10,041 --> 00:21:11,541 சரி. 355 00:21:24,666 --> 00:21:27,875 இது தான். இது தான் ஓவியத்தில் இருந்த வீடு. 356 00:21:30,958 --> 00:21:33,333 அப்பா. அவர் கவலையா இருப்பார். 357 00:21:33,791 --> 00:21:38,041 இதெல்லாம் சரி ஆயிடும், பெக்கா. நாம செய்யறதை சரி பண்ணும் சக்தி உனக்கு இருக்கு. 358 00:21:38,416 --> 00:21:39,666 இது தான் வழி. 359 00:21:40,250 --> 00:21:43,333 அந்த கதவுக்கு பின்னால யார் இருப்பான்னு தெரியாது, ஆல்மா. 360 00:21:43,916 --> 00:21:46,000 அம்மாவும் தெரிய கூடாதென நினைக்கிறாங்க. 361 00:21:46,083 --> 00:21:49,791 இதை செய்யாம இருக்க நம் கடைசி வாய்ப்பு இது. 362 00:21:51,250 --> 00:21:52,833 சரி ஆயிடும், சரியா? 363 00:21:56,416 --> 00:21:58,500 ஆல்மா, நான்... 364 00:21:59,291 --> 00:22:01,500 பெக்கா? பெக்கா? 365 00:22:03,291 --> 00:22:04,416 பெக்கா! 366 00:22:52,875 --> 00:22:54,875 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 367 00:22:54,958 --> 00:22:56,958 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்