1 00:00:11,803 --> 00:00:13,013 சரி. 2 00:00:14,515 --> 00:00:18,560 மூன்று, இரண்டு, ஒன்று. மாலை வணக்கம். நான் தான் எமிலி டிக்கின்சன். 3 00:00:26,026 --> 00:00:26,860 என்னை அடையாளம் கண்டீர்களா? 4 00:00:26,944 --> 00:00:30,489 ஆமாம். ஆமாம், நான் தான் எமிலி எலிசபெத் டிக்கின்சன். 5 00:00:36,245 --> 00:00:38,997 என் கவிதை பிரசுரமாகிறது, ஆமாம். ஆமாம், எனக்கு தெரியும், அது வந்து... 6 00:00:39,081 --> 00:00:40,457 ஹே, நண்பர்களே. 7 00:00:45,420 --> 00:00:46,630 நீ அழகாக இருக்கிறாய். 8 00:00:48,173 --> 00:00:49,007 அப்படியா? 9 00:00:49,091 --> 00:00:51,385 நீ அட்டைப்படத்தில் இடம் பெற வேண்டியவள் போல இருக்கிறாய். 10 00:01:01,144 --> 00:01:02,354 அவ்வளவுதான். 11 00:01:05,399 --> 00:01:06,650 நீ தயாரா? 12 00:01:08,026 --> 00:01:10,404 பார்ப்பதற்கும் பார்க்கப்படுவதற்கும் தயாராக இருக்கிறாயா? 13 00:01:11,029 --> 00:01:12,155 அப்படித்தான் நம்புகிறேன். 14 00:01:13,031 --> 00:01:16,118 பார், நம்பிக்கை மட்டும் போதாது. 15 00:01:18,453 --> 00:01:19,663 உனக்கே அது புலப்பட்ட வேண்டும். 16 00:01:20,998 --> 00:01:22,249 உன்னைப் பார். 17 00:01:24,376 --> 00:01:25,794 நீ உன்னையே பார்த்து, 18 00:01:27,629 --> 00:01:28,839 "இதற்கு நான் தகுதியானவள். 19 00:01:30,883 --> 00:01:32,092 இதை நான் சம்பாதித்தேன். 20 00:01:33,343 --> 00:01:36,346 இது நான் மிளிர்வதற்கான நேரம்" என்று சொல். 21 00:01:42,603 --> 00:01:44,521 டிக்கின்சன் 22 00:01:44,605 --> 00:01:46,565 தடைசெய்யப்பட்ட கனியில் சுவை இருக்கும் 23 00:01:55,574 --> 00:01:56,575 நீ என்ன நினைக்கிறாய்? 24 00:01:58,285 --> 00:01:59,286 ரொம்பவும் மரியாதையாக உள்ளது. 25 00:01:59,369 --> 00:02:00,204 ரொம்ப சரி. 26 00:02:00,287 --> 00:02:01,914 இதை விட உங்க பொன்னிற ஆடை பிடிச்சிருக்கு. 27 00:02:01,997 --> 00:02:03,040 ஆனால் இன்று இரவிற்கு அல்ல. 28 00:02:03,582 --> 00:02:05,584 இன்றிரவு, "சிறந்த அறிவு சார்ந்த எண்ணங்கள் எண்ணிக்கொண்டும் 29 00:02:06,668 --> 00:02:11,465 படித்துக்கொண்டும் இருந்ததால், நன்றாக ஆடை உடுத்துவதைப்பற்றி நினைக்கக்கூட 30 00:02:11,548 --> 00:02:13,634 எனக்கு நேரம் இல்லை" என்று சொல்லக்கூடிய ஆடை தேவை. 31 00:02:13,717 --> 00:02:15,594 அந்த கருத்தை தான் வெளிப்படுத்துகிறீர்கள். 32 00:02:18,722 --> 00:02:20,557 ஆனால் இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது. 33 00:02:23,018 --> 00:02:24,102 அதை எடுத்துக் கொடு. 34 00:02:26,313 --> 00:02:27,731 உங்களுக்கு மூக்குக்கண்ணாடி தேவையா? 35 00:02:27,814 --> 00:02:29,816 தேவை இல்லை. எனக்கு பார்வை நன்றாக இருக்கிறது. 36 00:02:30,859 --> 00:02:33,111 ஆனால் இவை என்னை புத்திசாலியாக காண்பிக்கிறதல்லவா? 37 00:02:34,154 --> 00:02:36,949 இன்று இரவு, அறிவு சார்ந்த சிலிர்ப்பான பயணமாக இருக்கப்போகிறது. 38 00:02:37,032 --> 00:02:39,201 இன்று நம்மை ஈர்க்கக்கூடிய ஒரு பேச்சாளர் வருகிறார். 39 00:02:39,284 --> 00:02:42,746 எல்லாவற்றிக்கும் மகுடமாக, சாம் பௌல்ஸ் இன்று இரவு இங்கு வருகிறார். எமிலியோடு. 40 00:02:42,829 --> 00:02:44,665 அவளது கவிதையை அவர் பிரசுரம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு பிறகு 41 00:02:44,748 --> 00:02:46,375 அவர்கள் பொதுவில் தோன்றும் முதல் நிகழ்ச்சி இது. 42 00:02:47,084 --> 00:02:49,586 அதாவது, என்னுடைய இலக்கிய விருந்தில் தான் சாம் பௌல்ஸ் எமிலியை 43 00:02:49,670 --> 00:02:53,257 கண்டறிந்தார் என்ற உண்மையைப்பற்றி மக்கள் பேசப்போகிறார்கள். 44 00:02:53,340 --> 00:02:55,425 அங்கு தான் அவர் அவளை கண்டு கொள்வதற்கு நான் உதவினேன் என்று. 45 00:02:55,509 --> 00:02:56,718 நான் ரசனையை உருவாக்குபவள், ஹாட்டி. 46 00:02:57,386 --> 00:02:58,512 வரலாற்றிலேயே சிறப்பானதொரு 47 00:02:58,595 --> 00:03:01,473 இலக்கிய கூட்டு ஒன்றை நான் இப்போது ஏற்படுத்தி இருக்கிறேன். 48 00:03:01,557 --> 00:03:03,600 கிரேட் பாரிங்டனில் இருக்கும் இல்லத்தரசிகள் இதை செய்கிறார்களா? 49 00:03:03,684 --> 00:03:04,935 இல்லை, செய்ய மாட்டார்கள். 50 00:03:05,352 --> 00:03:06,353 சரிதான். 51 00:03:07,646 --> 00:03:09,481 இப்போது, மக்கள் வந்துவிட்டனர் என நினைக்கிறேன். 52 00:03:10,315 --> 00:03:13,777 இருங்க, கண்டிப்பாக இதை அணிந்துக்கொள்ள விரும்பவில்லையா? 53 00:03:13,861 --> 00:03:17,573 அதாவது, இது நியூ யார்க்கில் இருந்து வந்திருக்கிறது, மிகவும் அழகாக இருக்கிறது. 54 00:03:17,656 --> 00:03:20,576 ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன், ஹாட்டி. இன்று அணிந்து கொள்ள இது சரியானதல்ல. 55 00:03:20,993 --> 00:03:22,786 -மேலும்... -என்ன? 56 00:03:22,870 --> 00:03:25,080 ஒரே உடையில் யாரும் என்னை இரண்டு முறை பார்க்க விரும்பவில்லை. 57 00:03:32,171 --> 00:03:33,172 ஹலோ, குடும்பத்தாரே. 58 00:03:34,631 --> 00:03:36,508 சூ மற்றும் ஆஸ்டினின் வீட்டிற்கு போகிறேன். 59 00:03:39,011 --> 00:03:40,012 நான் உடை மாற்ற வேண்டுமா? 60 00:03:40,095 --> 00:03:44,683 இல்லை, வேண்டாம். நீ அழகாக இருக்கிறாய். உண்மையில், கவர்ச்சியாக. 61 00:03:44,766 --> 00:03:47,769 யாருக்கு தெரியும்? இன்று இரவு நீ யாராவது ஒரு ஆடவரை ஈர்க்கலாம். 62 00:03:47,853 --> 00:03:50,314 நீ திருமணம் செய்துகொள்வாய் என்ற நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன், 63 00:03:50,397 --> 00:03:53,525 ஆனால் லவினியாவின் சமீபத்திய நிச்சயதார்த்தத்தினால் நாம் ஜெயிக்கிறோம். 64 00:03:53,609 --> 00:03:55,652 வேறு யாருக்கும் விருந்திற்கு வர விருப்பமில்லையா? 65 00:03:55,736 --> 00:03:56,820 நான் விரும்புகிறேன், ஆனா... 66 00:03:56,904 --> 00:03:58,197 கண்டிப்பாகக் கூடாது. 67 00:03:58,280 --> 00:04:00,741 சூவும் ஆஸ்டினும் நவீன வாழ்க்கை வாழ்கிறார்கள், 68 00:04:00,824 --> 00:04:02,701 மற்றும் என்னால் அதை அங்கீகரிக்க முடியாது. 69 00:04:02,784 --> 00:04:06,455 அது டிக்கின்சனின் வாழ்க்கை முறை கிடையாது. அது நார்க்ராஸ் முறையும் கிடையாது. 70 00:04:06,538 --> 00:04:08,332 இல்லை, நாங்கள் விருந்திற்குப் போகப் போவதில்லை. 71 00:04:08,415 --> 00:04:10,709 டிக்கின்சன்ஸ் செய்வது போல, 72 00:04:10,792 --> 00:04:14,963 நாங்கள் வீட்டிலேயே எங்களுடைய எண்ணங்களோடு அமைதியாக இருக்கப் போகிறோம். 73 00:04:15,506 --> 00:04:16,507 அவள் சொன்னது போல. 74 00:04:16,589 --> 00:04:18,382 ஒரு அமைதியான இரவு, அன்பே. 75 00:04:18,966 --> 00:04:20,302 கதைப்புத்தகம் மற்றும் அமைதி. 76 00:04:22,304 --> 00:04:24,806 சரி, நான் கிளம்புகிறேன். 77 00:04:26,058 --> 00:04:27,184 சந்தோஷமாக இரு, அன்பே. 78 00:04:28,727 --> 00:04:32,105 தயவு செய்து, மதுபானத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று குறித்துக்கொள். 79 00:04:41,114 --> 00:04:43,158 ஆக, நீங்கள் இருவரும் திருச்சபை ஊழியர்களா? 80 00:04:43,909 --> 00:04:46,537 இன்றிரவு வரும் பேச்சாளர் யார் என தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். 81 00:04:46,620 --> 00:04:50,707 ஹார்ட்விக்கில் ஒரு இலக்கிய விருந்தில் இசை கலைஞரை நானும் டானியலும் பார்த்தோம்.சிறப்பு 82 00:04:50,791 --> 00:04:51,792 இல்லையா, அன்பே? 83 00:04:51,875 --> 00:04:53,752 தெரியவில்லை. அது கொஞ்சம் மோசமாக இருந்தது. 84 00:04:53,836 --> 00:04:55,504 இலக்கிய விருந்து கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். 85 00:04:55,587 --> 00:05:00,259 தத்துவ கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். அறிவு சார்ந்த சவால்களை சந்திக்கலாம். 86 00:05:00,342 --> 00:05:01,969 மனதின் வாழ்க்கை. 87 00:05:02,052 --> 00:05:03,887 இவை எல்லாம் என் போதனைகளிலிருந்து நீ தெரிந்துக்கொண்டதாக நினைத்தேன். 88 00:05:03,971 --> 00:05:06,974 ஓ, இல்லை, ஆமாம். சரிதான். அதிலிருந்துதான் தெரிந்துக் கொண்டேன். 89 00:05:07,057 --> 00:05:09,726 எல்லோருக்கும், வணக்கம். நான் தான். என் கவிதை பிரசுரமாகிறது. 90 00:05:12,521 --> 00:05:14,231 அதாவது, புத்தகத்திலா? 91 00:05:14,314 --> 00:05:16,066 வந்து, த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன். 92 00:05:16,149 --> 00:05:18,026 சாம் பௌல்ஸ் என் கவிதைகளுள் ஒன்றை பிரசுரிக்கிறார். 93 00:05:18,110 --> 00:05:20,988 நீ அதிக புகழ் பெறப் போகிறாய், எமிலி. 94 00:05:21,446 --> 00:05:24,950 சரி, நான் எப்போதுமே இவளின் பெரிய ரசிகையாக இருந்திருக்கிறேன். 95 00:05:25,367 --> 00:05:28,287 -அப்படியா? -நாம் நெருங்கிய நண்பர்கள், எமிலி. 96 00:05:28,370 --> 00:05:30,205 நாம் ஒருவருக்கொருவர் பேசியது கூட இல்லை. 97 00:05:31,790 --> 00:05:34,585 பிரசுரம் செய்யும் எல்லா பெண்களோடும் சாம் பௌல்ஸ் தொடர்பு வைத்துக்கொள்வது தெரியுமா? 98 00:05:36,503 --> 00:05:38,130 நீ என்ன சொல்கிறாய்? அவர் திருமணமானவர். 99 00:05:38,213 --> 00:05:41,592 ஓ, இவளை பிடிச்சிருக்கு. இவள் பழங்காலத்துப் பெண். 100 00:05:42,467 --> 00:05:44,761 இல்லை, அவர் தன் மனைவியை நேசிக்கிறார். 101 00:05:44,845 --> 00:05:46,346 எப்போதும் அவரோடு இல்லாத அவரது மனைவி. 102 00:05:46,430 --> 00:05:49,975 தன் பங்குக்கு அவரும் நன்றாக ஊர் சுற்றுகிறார். 103 00:05:50,392 --> 00:05:54,938 ஓ, ஆமாம். பெண் எழுத்தாளர்களைத் தேடி, புதிய இங்கிலாந்து முழுவதும் சுற்றுகிறார். 104 00:05:55,022 --> 00:05:56,273 ஏய், அது ஒன்றும் உண்மையில்லை. 105 00:05:56,356 --> 00:05:57,983 பெண்களின் எழுத்துக்களை ஆண்கள் பிரசுரிக்க விருப்பப்படாவிட்டால், 106 00:05:58,066 --> 00:05:59,902 பெண்களின் படைப்புகள் எப்படி வெளியிடப்படும்? 107 00:05:59,985 --> 00:06:03,614 பெண்களின் படைப்புகள் பிரசுரிக்கப்படணும் என யார் சொன்னது? அது மிகவும் மோசமானது. 108 00:06:04,031 --> 00:06:06,450 நீங்கள் சாம்-ஐ பற்றி தவறாக நினைக்கிறீர்கள். 109 00:06:07,117 --> 00:06:09,620 சிறந்த திறமையை கண்டறியக்கூடிய ஒரு சிறந்த பதிப்பாசிரியர் அவர். 110 00:06:10,287 --> 00:06:11,580 இதோ என் மேதை. 111 00:06:12,706 --> 00:06:15,125 முன்னணி கவிஞர், எமிலி டிக்கின்சன். 112 00:06:16,627 --> 00:06:19,505 -அந்த முக்கிய செய்தியை சொல்லிவிட்டாயா? -ஆமாம். சொல்லிவிட்டேன். 113 00:06:20,088 --> 00:06:21,381 ஓ, சாம், இது மிக அற்புதமாக இருக்கிறது. 114 00:06:22,257 --> 00:06:24,134 இந்த உடையை விட அற்புதமாக இல்லை. 115 00:06:24,635 --> 00:06:26,720 ஆஹா. இது ரொம்ப அழகா இருக்கு. 116 00:06:27,095 --> 00:06:30,057 பாருங்க, என் கௌரவ விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். 117 00:06:30,432 --> 00:06:32,184 பதிப்பாசிரியர் மற்றும் அவரது கவிஞர். 118 00:06:32,768 --> 00:06:34,436 இப்படிப்பட்ட இலக்கிய விருந்தில் தான் 119 00:06:34,853 --> 00:06:37,022 இந்த அரிய இலக்கிய கூட்டணி நடக்கும், தெரியுமா? 120 00:06:38,023 --> 00:06:40,317 திரு. பௌல்ஸ். நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. 121 00:06:40,400 --> 00:06:43,820 நீ மிகவும் அழகாக இருக்கிறாய், எமிலி. 122 00:06:44,738 --> 00:06:46,532 பொருத்தமான ஆடை அணிந்து இருக்கிறேனா என தெரியலை, சூ. 123 00:06:46,615 --> 00:06:48,659 நீ அற்புதமாக இருக்கிறாய், அன்பே. 124 00:06:48,742 --> 00:06:52,955 நீ தனியாகத் தெரிய வேண்டும். நீதான் புதிய இங்கிலாந்தின் அழகான புது எழுத்தாளர். 125 00:06:53,038 --> 00:06:54,998 கவிதை எப்போது வெளிவர போகிறது? 126 00:06:55,082 --> 00:06:56,667 ஆமாம், அதை படிப்பதற்கு ஆவலாக இருக்கிறது. 127 00:06:57,501 --> 00:06:59,586 அடுத்த வாரம் என நினைக்கிறேன். ஒருவேளை புதன்கிழமை? 128 00:06:59,670 --> 00:07:00,671 அல்லது வெள்ளிக்கிழமை? 129 00:07:00,754 --> 00:07:02,506 நாங்கள் சில விஷயங்களை திட்டமிட்டுள்ளோம். 130 00:07:02,589 --> 00:07:04,174 சரி, அவற்றை தள்ளி வையுங்கள். 131 00:07:04,258 --> 00:07:07,094 எமிலியின் கவிதை படிக்கப்பட வேண்டும். ஒத்துக்கொள்கிறீர்கள் தானே? 132 00:07:07,970 --> 00:07:09,054 நிச்சயமாக. 133 00:07:10,597 --> 00:07:13,392 உங்கள் இருவரையும் சந்திக்க வைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 134 00:07:13,809 --> 00:07:16,103 இதை பற்றி நினைக்கும்போது அது ஏதோ... 135 00:07:17,229 --> 00:07:18,480 விதி என்று தோன்றுகிறது. 136 00:07:19,565 --> 00:07:21,275 ஆகவே, எமிலி... 137 00:07:23,151 --> 00:07:25,237 -நீ தயாரா? -எதற்காக? 138 00:07:25,320 --> 00:07:27,155 எல்லோருக்கும் நான் உன்னை அறிமுகப்படுத்த. 139 00:07:28,740 --> 00:07:30,868 சரி, இந்த இலக்கிய விருந்து எனக்காக தயார் என்று நம்புகிறேன். 140 00:07:31,285 --> 00:07:32,744 தைரியமாக இரு, பெண்ணே. 141 00:07:37,249 --> 00:07:39,126 இன்றிரவு எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள். 142 00:07:39,209 --> 00:07:42,171 பாஸ்டன் ட்ராவெல்லரின் பதிப்பாசிரியர் பெர்டினாண்ட் ஆண்ட்ரூஸ் வந்திருக்கிறார். 143 00:07:42,254 --> 00:07:43,922 அதோ அங்கே ஹேரியட் ப்ரெஸ்காட் ஸ்பாபோர்ட். 144 00:07:44,006 --> 00:07:45,883 கவிஞர், ஹாரியட் ப்ரெஸ்கொட் ஸ்பொபோர்டா? 145 00:07:45,966 --> 00:07:48,719 ஆமாம், நான் சில வருடங்களுக்கு முன் அவளை கண்டறிந்தேன். 146 00:07:48,802 --> 00:07:51,555 இப்போது அவளுக்கு 'தி பிளேமிங் ஃபயர் லில்லி ஆஃப் நியூ இங்கிலாந்து' என்று பெயர். 147 00:07:52,764 --> 00:07:54,725 உன் புனைப்பெயர் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன். 148 00:07:54,808 --> 00:07:56,059 அவர்களோடு பேச ஆசையாக இருக்கிறது. 149 00:07:56,143 --> 00:07:58,770 ஹே, பார். இது சான்ஃபோர்ட் கிஃப்போர்ட். 150 00:07:59,271 --> 00:08:02,691 வா, நீ இவனை சந்திக்க வேண்டும். அவன் ஒரு சிறந்த ஓவியன், முழு பொறுக்கி. 151 00:08:04,234 --> 00:08:05,360 த ஸ்கார்லெட் லெட்டர் நத்தானியேல் ஹாதோர்ன் 152 00:08:05,444 --> 00:08:06,904 சரி. இதை படிக்கலாம். 153 00:08:10,866 --> 00:08:12,409 -ஹே. -ஹே. 154 00:08:12,993 --> 00:08:14,953 -நாம் பேச வேண்டும். -சரி. 155 00:08:16,121 --> 00:08:17,456 சரி, கேள். 156 00:08:18,540 --> 00:08:19,958 நமக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதால், 157 00:08:20,042 --> 00:08:23,253 நான் ஒரு அடக்கமான, சொல்பேச்சு மீறாத மனைவியாக எப்போதும் வீட்டிற்குள்ளே இருந்து 158 00:08:23,337 --> 00:08:25,964 விருந்துகளுக்கு போகாமல் உன் கிழிந்த ஆடைகளை தைத்துக்கொண்டு 159 00:08:26,048 --> 00:08:28,759 அதிலேயே திருப்தி படக்கூடியவளாக இருப்பேன் என்று நீ நினைக்கலாம். 160 00:08:30,135 --> 00:08:31,345 ஆனால் அது உன் தவறான எண்ணம். 161 00:08:31,929 --> 00:08:34,932 நான் ஒன்றும் சுவாரஸ்யமில்லாத டிக்கின்சன் பெண் கிடையாது. 162 00:08:35,015 --> 00:08:38,143 நான் எமிலி போன்ற குணம் உடையவள், ஆனால் மக்களுக்கு இது புரிவதில்லை. 163 00:08:38,977 --> 00:08:41,395 நான் முரட்டுத்தனமானவள் மற்றும் படைப்புத்திறன் கொண்டவள். 164 00:08:42,105 --> 00:08:45,609 உண்மை என்னவென்றால், நான் லோலா மான்டெஸை விட மூர்க்கமானவள். 165 00:08:48,153 --> 00:08:49,154 லோலாவா? 166 00:08:49,238 --> 00:08:54,159 எனவே, இரவு அமைதியாக இருக்கும் என்று நீ நினைத்தால், அது தவறு. 167 00:08:54,576 --> 00:08:55,911 எனக்கு அதை விட சிறப்பானது தேவை. 168 00:08:56,328 --> 00:08:57,746 எனக்கு தூண்டுதல் வேண்டும். 169 00:08:58,956 --> 00:09:00,749 சரி. வந்து... நான் படிக்க முயல்கிறேன். 170 00:09:00,832 --> 00:09:01,792 ஏன்? 171 00:09:01,875 --> 00:09:04,419 வந்து, டிக்கின்சன் குடும்பத்தின் பெண்ணை திருமணம் செய்ய, நான் படிக்க வேண்டும். 172 00:09:04,503 --> 00:09:06,296 ஆக, நீ படிப்பதற்கு இதைத்தான் தேர்ந்தெடுத்தாயா? 173 00:09:06,713 --> 00:09:08,006 த ஸ்கார்லெட் லெட்டரை? 174 00:09:08,090 --> 00:09:09,716 ஆமாம். ஏன் கூடாது? 175 00:09:10,300 --> 00:09:12,135 உண்மையில், இது கொஞ்சம் மோசமானது. 176 00:09:12,553 --> 00:09:16,598 சரி. அப்படி என்றால், இது எதைப் பற்றியது? 177 00:09:17,057 --> 00:09:22,104 இது, காலனித்துவ பாஸ்டன் நகரத்தில், வாழும் ஹெஸ்டர் ப்ரன் என்ற 178 00:09:22,187 --> 00:09:24,314 பெண்ணைப் பற்றியது. 179 00:09:24,398 --> 00:09:26,733 அவள் தன் கணவன் மூழ்கி இறந்து விட்டான் என்று நம்பி, 180 00:09:26,817 --> 00:09:31,280 ஒரு திருச்சபை ஊழியரோடு தகாத உறவு வைத்துக்கொள்கிறாள். 181 00:09:31,363 --> 00:09:33,866 அவன் மேல் காதல் கொண்டு, கர்ப்பம் தரிக்கிறாள். 182 00:09:33,949 --> 00:09:36,910 பிறகு அவளது கணவன் திரும்பி வருகிறான், அதனால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு 183 00:09:36,994 --> 00:09:40,914 தகாத உறவின் அடையாளமாக சிவப்பில் "ஏ" என்ற எழுத்தை மாட்டிக்கொள்ள வற்புறுத்தப்பட்டாள். 184 00:09:41,290 --> 00:09:44,418 சரி. வந்து, அது கேட்பதற்கு மிகவும் மந்தமாக இருக்கிறது. 185 00:09:45,419 --> 00:09:46,962 -என்ன தெரியுமா, ஷிப்? -என்ன? 186 00:09:47,045 --> 00:09:48,046 அது மந்தமானது இல்லை. 187 00:09:48,130 --> 00:09:52,384 இது பாதுகாப்பானதோ, விதிகளுக்கு உட்பட்டதோ, சரியானதோ அல்லது நல்ல நடத்தையோ இல்லை. 188 00:09:53,135 --> 00:09:55,971 உண்மையில், அது ஆபாசமானது. 189 00:09:57,055 --> 00:09:58,473 நீ சொல்வது புரியவில்லை. 190 00:09:59,057 --> 00:10:00,058 சரி. 191 00:10:02,436 --> 00:10:04,479 அறிவு சார்ந்த விருந்தை மறந்துவிடு. 192 00:10:05,606 --> 00:10:07,316 இன்று இரவு நாம் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா? 193 00:10:07,399 --> 00:10:08,400 என்ன? 194 00:10:08,942 --> 00:10:11,028 நாம் ஒரு ஆங்கில பாடம் படிக்கப்போகிறோம். 195 00:10:13,363 --> 00:10:15,741 சான்ஃபோர்ட், நண்பா. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 196 00:10:15,824 --> 00:10:17,826 இப்போது தான், வண்ணக்கலவை இல்லாமல் தோற்றமளிக்கிறீர்கள். 197 00:10:17,910 --> 00:10:19,953 வந்து, நீங்கள் ஒருவரை சந்திக்க வேண்டும். 198 00:10:20,037 --> 00:10:22,789 பிரமிக்கவைக்கும் புது கவிஞர், எமிலி டிக்கின்சன். 199 00:10:23,832 --> 00:10:25,125 இந்த மாதத்திற்கான உனது புது சுவையா? 200 00:10:25,209 --> 00:10:27,628 ஒரு மாதத்தைத் தாண்டியும் அவள் புகழ் பெற்று இருக்கப்போகிறாள். 201 00:10:28,420 --> 00:10:29,546 அவளது கவிதைகள் வசீகரமானவை. 202 00:10:29,630 --> 00:10:32,508 அவை எல்லாம் திடீரென்று வெடித்து சிதறும் எரிமலையின் சக்தி கொண்ட 203 00:10:32,591 --> 00:10:34,676 சிறு எறும்பு புற்றுகள் போன்றவை. 204 00:10:35,636 --> 00:10:38,222 என்னைப் பற்றி இது வரை எல்லோரும் சொன்னதில் இது தான் மிகவும் அற்புதமானது. 205 00:10:38,805 --> 00:10:41,016 வாழ்த்துக்கள், மிஸ்... 206 00:10:41,099 --> 00:10:42,351 டிக்கின்சன். 207 00:10:42,434 --> 00:10:43,977 நீ அவனுக்கு ஏற்றவளாகத் தோன்றுகிறாய். 208 00:10:46,730 --> 00:10:47,731 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 209 00:10:48,482 --> 00:10:51,527 அவர் ஒரு ஓவியர். ஒரு அற்புதமான ஓவியர். 210 00:10:51,610 --> 00:10:54,154 என் ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன என்று சொல்கிறார். 211 00:10:54,947 --> 00:10:56,448 நீங்கள் எதை வரைவீர்கள்? 212 00:10:56,990 --> 00:10:58,825 பெரும்பாலும் ஹட்ஸன் நதியைத்தான். 213 00:10:58,909 --> 00:11:01,620 இந்த ஹட்ஸன் நதி ஓவியங்கள் பள்ளியில் சான்ஃபோர்ட் ஒரு முக்கிய நபர். 214 00:11:01,703 --> 00:11:03,622 வெளிச்சத்தை வைத்து முற்றிலும் புதுமையான ஓவியங்களை தீட்டுகிறார். 215 00:11:04,665 --> 00:11:06,124 ஆமாம், நான் அப்படித்தான் சொல்லுவேன். 216 00:11:07,167 --> 00:11:08,919 "ஓ, இது ஒளியைப் பற்றியது." 217 00:11:09,002 --> 00:11:11,213 "இது ஒளியைப் பற்றியது", என்று அவர்கள் கேட்ட உடனேயே, 218 00:11:11,296 --> 00:11:13,048 அதற்காக நிறைய பணம் கொடுப்பார்கள். 219 00:11:13,131 --> 00:11:15,175 வந்து, ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு ஆதரவாளர் தேவை. 220 00:11:15,259 --> 00:11:17,261 திரு. பௌல்ஸ் உங்களது ஆதரவாளரா? 221 00:11:17,928 --> 00:11:20,430 இல்லை. அவர் என்... 222 00:11:22,057 --> 00:11:23,058 பதிப்பாசிரியர். 223 00:11:24,518 --> 00:11:25,686 இந்த உச்சரிப்பு பிடிச்சிருக்கு. 224 00:11:26,436 --> 00:11:28,939 நல்லது. ஏனென்றால் உங்களிடம் கொடுக்க நிறைய கவிதைகள் இருக்கின்றன, 225 00:11:29,022 --> 00:11:30,399 அவற்றை பிரசுரம் செய்வீர்கள் என நம்புகிறேன். 226 00:11:31,024 --> 00:11:32,609 அவற்றை படிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். 227 00:11:34,152 --> 00:11:35,153 மிகவும் சிறப்பானது. 228 00:11:35,237 --> 00:11:38,907 மிஸ் லூயிசா ப்ராட் தன் வாழ்த்துக்களை சொல்ல சொன்னாள், பௌல்ஸ். 229 00:11:38,991 --> 00:11:39,992 ஓ. அப்படியா? 230 00:11:40,075 --> 00:11:42,578 சமீபத்தில் நீங்கள் வாஷிங்டன் சென்ற போது அவளோடு சேர்ந்து செலவிட்ட 231 00:11:42,661 --> 00:11:44,413 நேரத்தை அவள் மிகவும் ரசித்தாள். 232 00:11:44,496 --> 00:11:46,707 வந்து, நானும் ரசித்தேன். நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். 233 00:11:47,124 --> 00:11:48,333 இன்னும் கொஞ்சம் வேணுமா, எமிலி? 234 00:11:48,417 --> 00:11:52,087 ஓ, கண்டிப்பாக வேண்டும். உங்களது கவனிக்கும் தன்மை எவ்வளவு குறுகியது என்று தெரியும். 235 00:11:52,504 --> 00:11:54,047 போங்கள், போய் எல்லோரோடும் பழகுங்கள். 236 00:11:54,131 --> 00:11:55,757 நான் சூவை பார்க்கவேண்டும். 237 00:11:56,133 --> 00:11:57,759 -எமிலி, இரு... -நான் ஹலோ சொன்னதாக அவளிடம் சொல். 238 00:11:58,468 --> 00:12:01,013 இந்த பணக்காரர்கள் என் ஓவியங்களை விரும்பி வாங்குகிறார்கள். 239 00:12:05,475 --> 00:12:07,477 நீ அணிந்துக்கொள்ள நான் கொடுத்த ஏப்ரன்கள் எங்கே? 240 00:12:07,561 --> 00:12:08,729 அவை அழுக்காகிவிட்டன. 241 00:12:08,812 --> 00:12:11,440 நம் விருந்தாளிகளை கவனிப்பதில் ஹாட்டிக்கு உதவியாக இருக்க சொன்னேன். 242 00:12:11,523 --> 00:12:12,691 சூ. 243 00:12:13,442 --> 00:12:15,402 சிறுமிகளே, நீங்கள் உள்ளே செல்லுங்கள். 244 00:12:15,986 --> 00:12:17,362 இருவரும் சீஸ் சாப்பிடுங்கள். 245 00:12:18,822 --> 00:12:20,616 -அவை விருந்தினர்களுக்கானவை. -சூ. 246 00:12:22,910 --> 00:12:24,328 நீ அவர்களிடம் அப்படி பேசாதே. 247 00:12:24,411 --> 00:12:26,914 அவர்கள் மோசமாக நடந்தால் நான் அப்படித்தான் பேச வேண்டும். 248 00:12:26,997 --> 00:12:29,583 அதாவது, நீ அவர்களுக்காக வருத்தப்படுவாய் என்று நினைத்தேன். 249 00:12:29,666 --> 00:12:32,461 நீ அனாதை ஆக்கப்பட்டாய், உன்னை கவனித்துக் கொள்ள அப்போது யாரும் இல்லை. 250 00:12:32,544 --> 00:12:35,547 அதை நினைவுபடுத்தப்படுவதில் எனக்கு விருப்பமில்லை, ஆஸ்டின். 251 00:12:36,215 --> 00:12:40,761 அவர்கள் நிலைமையில் நான் இருந்தபோது, எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை நான் செய்தேன். 252 00:12:40,844 --> 00:12:44,223 எனக்கு அன்போடு பாதுக்காப்பு கொடுத்த மக்களின் கோபத்தை நான் தூண்டவில்லை. 253 00:12:45,641 --> 00:12:47,059 இது அன்பு என்று நீ நினைக்கிறாயா? 254 00:12:48,060 --> 00:12:51,313 வந்து, எல்லோரும் டிக்கின்சன் குடும்பத்தாரை போல செல்லமாக வளர்வதில்லை. 255 00:12:51,772 --> 00:12:55,275 இந்த பெண்களைப்போல, எனக்கு அனுபவிப்பதற்கு சொத்து எதுவும் இல்லை. 256 00:12:55,359 --> 00:12:57,486 அவர்களின் சொத்து தான் இந்த வீட்டின் செலவுகளுக்கு பணம் தருகிறது. 257 00:12:59,947 --> 00:13:01,782 நமக்கு வேலை செய்வதற்காக அவர்கள் இங்கில்லை. 258 00:13:01,865 --> 00:13:05,035 அவர்களுடைய பணத்தினால் தான் நமக்கு சொந்தமாக ஒரு வீடு என்று ஒன்று இருக்கிறது. 259 00:13:05,577 --> 00:13:10,207 சரி, அப்படி என்றால், நீ தான் அவர்களைப் பயன்படுத்துகிறாய். 260 00:13:17,381 --> 00:13:18,382 திரு. டிக்கின்சன். 261 00:13:19,132 --> 00:13:21,176 -மன்னிக்கவும். -ஹென்ரி. 262 00:13:21,885 --> 00:13:22,886 உனக்கு ஏதாவது தேவையா? 263 00:13:22,970 --> 00:13:24,096 ஆமாம், சார். 264 00:13:25,180 --> 00:13:30,143 இன்று நல்லிரவு, உங்களால் முடிந்தால், டெலிவரி எடுக்க உங்க உதவ வேண்டும். 265 00:13:30,727 --> 00:13:31,728 சரி. 266 00:13:32,813 --> 00:13:34,481 சரி, நிச்சயமாக. 267 00:13:39,069 --> 00:13:42,656 "நீ பாவம் செய்ததாக தோன்றவில்லையா?" 268 00:13:42,739 --> 00:13:45,409 உங்கள் பார்வையில் நான் பாவம் செய்து விட்டேன் என்று நம்புகிறேன். 269 00:13:45,826 --> 00:13:48,287 கடவுளும் அப்படியே பார்ப்பார் என்று யாருக்கு தெரியும்? 270 00:13:48,370 --> 00:13:49,955 "சும்மா இரு, பெண்ணே!" 271 00:13:51,540 --> 00:13:57,337 "இப்போது, உன் மேல்-ஆடையின் மேல் இந்த எழுத்தை அணிந்துக்கொள்." 272 00:13:58,589 --> 00:13:59,590 ரவிக்கை. 273 00:13:59,673 --> 00:14:01,633 நீ உன் பாணியில் சொல்லு, நான் என் பாணியில் சொல்கிறேன். 274 00:14:02,718 --> 00:14:04,052 சரி, திருச்சபை ஊழியரே. 275 00:14:04,136 --> 00:14:06,180 என் மேலாடை உங்களுடையது. 276 00:14:07,014 --> 00:14:08,807 நீ இன்னும் கூட கொஞ்சம் கற்போடு இருக்க வேண்டும் தானே? 277 00:14:09,474 --> 00:14:11,393 -வந்து... இல்லை? -கதாபாத்திரத்தை மாற்றக்கூடாது. 278 00:14:11,476 --> 00:14:12,311 சரி. 279 00:14:13,604 --> 00:14:14,605 மன்னிக்கவும். 280 00:14:16,732 --> 00:14:20,777 இது என் அவமான சின்னம் இல்லை, உங்களுடையது தான். 281 00:14:25,824 --> 00:14:28,702 நான் நினைவில் வைத்து இருந்ததை விட நீ மாறி இருக்கிறாய், லவினியா டிக்கின்சன். 282 00:14:29,703 --> 00:14:30,704 ஹெஸ்டர். 283 00:14:31,371 --> 00:14:32,372 ஹெஸ்டர். 284 00:14:32,998 --> 00:14:35,876 நீ உணர்ச்சிமிக்கவள். எனக்குப் பிடித்திருக்கிறது. 285 00:14:42,841 --> 00:14:43,842 சூ. 286 00:14:44,301 --> 00:14:45,969 எமிலி. என்ன? 287 00:14:46,053 --> 00:14:49,723 இந்த வதந்திகள் பற்றி நான் உன்னிடம் கேட்க வேண்டும். 288 00:14:50,307 --> 00:14:51,308 எந்த வதந்திகள்? 289 00:14:51,391 --> 00:14:53,810 சாம் பௌல்ஸ் தன் மனைவிக்கு துரோகம் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். 290 00:14:55,103 --> 00:14:56,396 சரி. 291 00:14:56,855 --> 00:14:58,774 -வந்து, அது உண்மை இல்லை. -உறுதியாக தெரியுமா? 292 00:14:59,441 --> 00:15:01,151 அவர் என் கவிதைகளை பிரசுரிக்கிறார் என்று தெரிந்த உடனே, 293 00:15:01,235 --> 00:15:03,904 நாங்கள் இருவரும் தொடர்பு வைத்திருப்பதாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். 294 00:15:05,197 --> 00:15:07,241 நான் கேள்விப்பட்டதிலேயே இது தான் மிகவும் அவமரியாதையான ஒன்று. 295 00:15:08,075 --> 00:15:10,452 நீ ஒரு மேதை என்பதால் தான் அவர் உன் கவிதைகளை வெளியிடுகிறார். 296 00:15:10,536 --> 00:15:12,746 -அப்படித்தான் நீ நினைக்கிறாய்... -எமிலி. 297 00:15:12,829 --> 00:15:13,830 அது எனக்குத் தெரிந்தது. 298 00:15:14,456 --> 00:15:17,709 பார், எனக்கு சாமும் தெரியும். மேரியையும் தெரியும். 299 00:15:18,210 --> 00:15:19,962 மேரியும் நானும் ஒன்றாக வளர்ந்தோம், நினைவிருக்கா? 300 00:15:20,045 --> 00:15:21,046 ஆமாம். 301 00:15:22,005 --> 00:15:25,175 எனக்கு முன்னால் அவள் மட்டும் தான் உன் ஒரே தோழியாக இருந்தாள் என ஒருமுறை சொன்னாய். 302 00:15:25,717 --> 00:15:28,220 ஆமாம், நான் மேரியை மிகவும் நேசித்தேன். 303 00:15:28,637 --> 00:15:30,806 மேரி பல வகைகளில் விசேஷமானவள். 304 00:15:31,515 --> 00:15:32,724 உன்னை எனக்கு நினைவூட்டினாள். 305 00:15:33,392 --> 00:15:35,185 நிறைய சிந்திப்பவள். 306 00:15:36,228 --> 00:15:38,188 மேரிக்கு வீட்டை விட்டு வெளியே போக பிடிக்காது. 307 00:15:38,272 --> 00:15:39,481 அவள் ரொம்பவும் வெட்கப்படுவாள். 308 00:15:40,899 --> 00:15:42,776 அவளுக்கு வெளியே தென்படுவதே பிடிக்காது. 309 00:15:43,193 --> 00:15:44,444 என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 310 00:15:45,696 --> 00:15:49,157 இன்றிரவு வெளிப்படுவதற்காக வந்தேன், ஆனால் இதுவரை மோசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. 311 00:15:49,241 --> 00:15:50,617 வந்து, அது எனக்கு கோபம் உண்டாக்குகிறது. 312 00:15:51,159 --> 00:15:53,161 நீ வெளிப்படுவதற்கு தகுதியானவள், எமிலி. 313 00:15:53,912 --> 00:15:55,873 உன் கவிதைகள் பிரசுரம் செய்ய தகுதியானவை. 314 00:15:56,456 --> 00:15:59,585 பெண்களுக்கு நடப்பது எதுவும், நியாயமானதாக இல்லை. 315 00:15:59,668 --> 00:16:04,548 நமக்கு கொஞ்சம் புகழ் வந்தாலும், அல்லது சிறு லட்சியம் வைத்துக்கொண்டாலும், 316 00:16:04,631 --> 00:16:07,426 மோசமான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. 317 00:16:08,093 --> 00:16:10,345 நமக்கு முகத்திற்கு பின்னால் இந்த கொடுமைகள் நடக்கின்றன. 318 00:16:10,429 --> 00:16:13,765 ஆனால், நான் அவற்றை எல்லாம் மதிப்பதில்லை. 319 00:16:13,849 --> 00:16:16,435 நீ அங்கே சென்று, உன் திறமையின் புகழை எடுத்துக்கொள். 320 00:16:16,852 --> 00:16:18,145 நீ இதற்காகதான் பாடுபட்டாய். 321 00:16:19,271 --> 00:16:22,065 சாம் பௌல்ஸ் உன்னை ஒரு எழுத்தாளராக நம்புகிறார். அவ்வளவுதான் தேவை. 322 00:16:23,317 --> 00:16:24,318 நன்றி. 323 00:16:25,194 --> 00:16:26,028 சரி. 324 00:16:26,945 --> 00:16:29,531 இப்போது, நம் இருக்கைகளில் உட்காருவோம். சொற்பொழிவுக்கு நேரமாகிவிட்டது. 325 00:16:36,663 --> 00:16:38,165 இதோ என் சூப்பர்ஸ்டார். 326 00:16:41,793 --> 00:16:43,378 நான் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக நம்புகிறேன். 327 00:16:43,462 --> 00:16:44,588 என்னை கிண்டல் செய்கிறாயா? 328 00:16:44,671 --> 00:16:46,757 இவர்களுக்கு உன் அருமை ஒன்றும் தெரியாது. 329 00:16:46,840 --> 00:16:50,219 ஆனால் ஒருநாள், புகழ் பெறும் முன் எமிலி டிக்கின்சனை ஒரு விருந்தில் சந்தித்ததாக 330 00:16:50,302 --> 00:16:51,720 எல்லோரிடமும் பெருமையடித்துக் கொள்வார்கள். 331 00:16:55,307 --> 00:16:56,850 எல்லோரும், கவனியுங்கள். 332 00:16:56,934 --> 00:16:58,685 உங்கள் இருக்கைகளில் அமருங்கள். 333 00:16:58,769 --> 00:17:00,854 நம் பேச்சாளர் தயாராக இருக்கிறார். 334 00:17:00,938 --> 00:17:04,358 -இது நன்றாக இருக்கப் போகிறது. -அது தெய்வீகமாக இருக்கும் என நம்புகிறேன். 335 00:17:19,373 --> 00:17:20,582 நன்றி. 336 00:17:29,550 --> 00:17:30,884 இது கருத்துக்கள் கொண்டதா? 337 00:17:36,598 --> 00:17:40,102 டபுள்யூ எம் ஜான்சன் ஆர்ச் தெரு பிலடெல்பியா இந்த பக்கம் கவனமாக மேலே தூக்கவும் 338 00:17:51,029 --> 00:17:52,364 இன்று எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? 339 00:17:58,245 --> 00:18:03,500 சுதந்திரம் என்றால் என்ன என்று யாருக்கு தெரியும்? 340 00:18:04,543 --> 00:18:05,544 நூலகத்தில் என்னை சந்தி. 341 00:18:05,627 --> 00:18:07,296 -நீங்கள், சார்? -கடவுளுக்கு கீழ்ப்படிதல். 342 00:18:07,880 --> 00:18:08,964 உன்னை அங்கு சந்திக்கிறேன். 343 00:18:09,047 --> 00:18:10,048 அப்படி இல்லை. 344 00:18:10,591 --> 00:18:13,051 நாம் நாமாகவே இருப்பது தான் சுதந்திரம். 345 00:18:13,135 --> 00:18:15,637 நாம் ஒரு இளமையான, அழகான விதவையாக இருந்தால் கூட. 346 00:18:17,472 --> 00:18:18,891 கிட்டத்தட்ட ஆனால் இல்லை. 347 00:18:19,892 --> 00:18:23,520 சுதந்திரம் என்பது நமது விலங்குகளை கழற்றி 348 00:18:24,688 --> 00:18:28,984 தூக்கி எறிந்துவிட்டு, "ஹே, உலகமே. நான் இங்கிருக்கிறேன்" என்று சொல்வது. 349 00:18:34,072 --> 00:18:35,073 சுதந்திரம் என்பது... 350 00:18:39,244 --> 00:18:40,329 மாயாஜாலமாக இருக்கலாம். 351 00:18:47,336 --> 00:18:50,088 -நன்றி. -இப்போது, என் கதை கேட்க யார் தயார்? 352 00:18:50,589 --> 00:18:54,718 நான் வர்ஜீனியாவில், லூயிசா கவுன்டியில் ஒரு தோட்டத்தில் பிறந்தேன். 353 00:18:55,427 --> 00:18:56,595 அடிமையாக இந்த உலகத்தில் பிறந்தேன். 354 00:18:56,678 --> 00:18:58,055 உங்களுக்கு சொற்பொழிவு பிடிக்கவில்லையா? 355 00:18:58,138 --> 00:19:00,724 ஓ, இல்லை. இதை முன்னரே கேட்டிருக்கிறேன். 356 00:19:01,308 --> 00:19:02,851 உண்மையில், மூன்று முறை. 357 00:19:02,935 --> 00:19:05,187 ஹென்ரி "பாக்ஸ்" பிரவுன் நிறைய விழாக்களில் பங்கேற்பார். 358 00:19:06,355 --> 00:19:08,815 வந்து, எனக்கு பிடித்திருந்தது. அதனால்... 359 00:19:08,899 --> 00:19:10,776 ஓ, ஆமாம். பார், இதோ இதுதான். 360 00:19:10,859 --> 00:19:12,819 -என்ன? -டிக்கென்ஸ். 361 00:19:13,320 --> 00:19:14,571 சார்லஸ் டிக்கென்ஸ்? 362 00:19:14,655 --> 00:19:17,324 மற்றும் டிடெரோட். 363 00:19:18,784 --> 00:19:22,412 பார், நீ இங்கு தான் இருப்பாய். 364 00:19:23,121 --> 00:19:23,956 சரியாக இங்குதான். 365 00:19:25,249 --> 00:19:26,375 எமிலி டிக்கின்சன். 366 00:19:28,794 --> 00:19:30,629 -நானா? -உன் புத்தகங்கள். 367 00:19:30,712 --> 00:19:34,550 புதுமை ஆசிரியருக்கும் ஞானதிற்கும் இடையே. 368 00:19:35,884 --> 00:19:37,094 இது எப்படி இருக்கிறது? 369 00:19:38,053 --> 00:19:40,222 எனக்கு தெரியவில்லை. 370 00:19:40,305 --> 00:19:41,890 ஓ, இல்லை. நீ சரியாக சொன்னாய். 371 00:19:42,474 --> 00:19:43,809 இங்கே போதிய இடம் இல்லை. 372 00:19:43,892 --> 00:19:45,561 உனக்கென்று ஒரு அலமாரி தேவை. 373 00:19:47,479 --> 00:19:48,480 அதை கற்பனை செய். 374 00:19:54,069 --> 00:19:55,946 என்னால் நிறைய விஷயங்களை கற்பனை செய்ய முடியும்... 375 00:19:57,823 --> 00:20:03,871 ஆனால், இது எல்லாம் தடை செய்யப்பட்டதைப் போல தோன்றுகிறது. 376 00:20:05,914 --> 00:20:08,959 தடைசெய்யப்பட்ட கனியில் சுவாரஸ்யமான சுவை இருக்கும், இல்லையா? 377 00:20:16,091 --> 00:20:17,092 ஐயோ. 378 00:20:18,260 --> 00:20:19,511 இது அழகாக இல்லையா? 379 00:20:19,595 --> 00:20:21,388 ஒரு அச்சிடும் அச்சகம். 380 00:20:23,807 --> 00:20:25,225 இது ஒரு சக்தி வாய்ந்த இயந்திரம். 381 00:20:25,893 --> 00:20:27,102 ஆமாம். 382 00:20:27,978 --> 00:20:30,272 இதை வைத்து என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணிப்பார். 383 00:20:30,355 --> 00:20:32,107 புரட்சி செய்யலாம் என நினைக்கிறேன். 384 00:20:34,568 --> 00:20:35,652 ஓ, ஹே. 385 00:20:40,824 --> 00:20:42,409 இது பாதுகாப்பானதா என தெரியவில்லை. 386 00:20:43,202 --> 00:20:44,411 பரவாயில்லை, ஹென்ரி. 387 00:20:44,494 --> 00:20:46,788 என் அனுமதி இல்லாமல் யாரும் இந்த கொட்டகைக்கு வரமாட்டார்கள். 388 00:20:49,333 --> 00:20:51,418 அந்த சொற்பொழிவு மட்டமாக இருந்தது! 389 00:20:51,502 --> 00:20:52,878 ஹே, ஹாட்டி. 390 00:20:52,961 --> 00:20:55,714 "ஓ, பெட்டி, பெட்டி. அந்த பெட்டியின் உள்ளே எப்படி இருந்தது?" 391 00:20:55,797 --> 00:20:58,342 அவன் தப்பித்துப்போக நினைக்கவில்லை என அந்த முட்டாள்களுக்கு தெரியாதா? 392 00:20:58,425 --> 00:21:01,261 -ஹாட்டி. -அவன் குடித்துவிட்டு, தூங்கிவிட்டான். 393 00:21:01,345 --> 00:21:03,889 அது பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்தது. 394 00:21:03,972 --> 00:21:06,808 இவரின் எழுத்துக்களை நீ நமது செய்தித்தாளில் வெளியிட கூடாது, ஹென்ரி. 395 00:21:06,892 --> 00:21:09,895 உனக்கு பதிலாக அவரை முன்பக்கத்தில் வெளியிட்டதால் உனக்கு கோபம். 396 00:21:09,978 --> 00:21:10,979 -இல்லை. -ஆமாம். 397 00:21:11,063 --> 00:21:12,898 இல்லை. நான் நிஜமாக தான் சொல்கிறேன். 398 00:21:12,981 --> 00:21:14,983 அவன், வந்து, சமூகத்திற்கே கெடுதலானவன். 399 00:21:15,067 --> 00:21:17,110 இப்போதெல்லாம் பெட்டிகளில் தேடுகிறார்கள். 400 00:21:17,194 --> 00:21:20,447 என் உறவினன் ஒருவன் ஒரு சர்க்கரை பெட்டியில் தப்பிக்க நினைத்தான். 401 00:21:20,531 --> 00:21:25,911 தன்னை சர்க்கரையால் மூடிக்கொண்டான், ஆனாலும் அவனைப் பிடித்து விட்டார்கள். 402 00:21:25,994 --> 00:21:27,746 இப்போது அவன் மிசிசிப்பியில் மாட்டிக்கொண்டான். 403 00:21:28,247 --> 00:21:29,748 கூடவே, அவன் சர்க்கரை நோயாளி. 404 00:21:31,542 --> 00:21:32,835 ஹே, ஹாட்டி. 405 00:21:35,963 --> 00:21:37,256 இது உன்னை உற்சாகப்படுத்தலாம். 406 00:21:42,511 --> 00:21:43,720 ஓ, அற்புதம். 407 00:21:46,640 --> 00:21:47,641 அந்த பொருளை பாரேன். 408 00:21:47,724 --> 00:21:48,934 அழகாக இருக்கிறது, இல்லையா? 409 00:21:50,519 --> 00:21:52,187 நன்றி, திரு. டிக்கின்சன். 410 00:21:52,271 --> 00:21:53,480 நீங்கள் ஒரு தேவதை. 411 00:21:53,564 --> 00:21:54,565 ஆஸ்டின். 412 00:21:54,648 --> 00:21:58,110 நான் ஒருவரின் வாழ்வை மாற்ற முயற்சிக்கிறேன். 413 00:22:01,071 --> 00:22:05,242 வந்து, நான் ஒரு சுயாதீன எழுத்தாளர், இருந்தும் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. 414 00:22:11,415 --> 00:22:12,666 திரு. பௌல்ஸ். 415 00:22:14,918 --> 00:22:16,503 நீங்கள் சொற்பொழிவை கேட்கவில்லை. 416 00:22:16,587 --> 00:22:18,172 மன்னிக்கவும், சூஸி. 417 00:22:18,255 --> 00:22:19,464 நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். 418 00:22:21,592 --> 00:22:23,468 எங்களுக்கு, நீங்கள் மிகவும் அதிநவீனமானவர். 419 00:22:23,552 --> 00:22:24,595 தி எவர்கிரீன்ஸுக்கா? 420 00:22:24,678 --> 00:22:27,306 புதிய இங்கிலாந்தின் இலக்கிய வாழ்க்கையின் உச்சக்கட்டத்திற்கா? 421 00:22:27,389 --> 00:22:28,390 கண்டிப்பாக இல்லை. 422 00:22:29,725 --> 00:22:32,519 ஆக, உங்களது செய்தித்தாளில் இந்த இலக்கிய விருந்தைப் பற்றி எழுதுவீர்களா? 423 00:22:32,603 --> 00:22:33,729 ஆமாம், கண்டிப்பாக எழுதுவேன். 424 00:22:34,188 --> 00:22:37,107 உங்கள் சந்தோஷமான குழுவைப்பற்றி தெரிந்துக் கொள்ள என் வாசகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 425 00:22:39,067 --> 00:22:41,361 இது தான் நாம் இருக்கவேண்டிய இடம், சூஸி. 426 00:22:41,904 --> 00:22:44,114 சிறப்பான மதுபானம், அழகான மக்கள். 427 00:22:44,489 --> 00:22:46,825 மற்றும் மாசச்சூசெட்ஸிலேயே சிறப்பான கவிஞர். 428 00:22:48,160 --> 00:22:49,578 அருமையான சொற்பொழிவு, சூ. 429 00:22:49,661 --> 00:22:52,206 அந்த பெட்டி விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. 430 00:22:53,207 --> 00:22:55,334 நாங்கள் கிளம்புகிறோம். 431 00:22:55,417 --> 00:22:57,669 சரி, இவ்வளவு நேரம் ஆகி விட்டது என்று நான் உணரவில்லை. 432 00:22:57,753 --> 00:22:58,795 இங்கு வந்ததற்கு நன்றி. 433 00:22:58,879 --> 00:23:02,758 நாங்கள் விடுதியை தாண்டி தான் செல்கிறோம், வேண்டுமானால் உங்களை அங்கே விட்டுவிடுகிறோம் 434 00:23:02,841 --> 00:23:06,136 நன்றி, ஆனால் விடுதியில் இடம் இல்லை. எனவே நான் இங்கே தான் தங்கப்போகிறேன். 435 00:23:06,553 --> 00:23:07,554 இங்கேயா? 436 00:23:08,180 --> 00:23:10,140 சாம் விருந்தினர் அறையில் தங்குகிறார். 437 00:23:10,224 --> 00:23:12,601 துரதிஷ்டவசமாக, அது சிறிய அறை. 438 00:23:13,060 --> 00:23:15,062 கிளாராவும் அன்னாவும் பெரிய அறையை எடுத்துக் கொண்டனர். 439 00:23:15,145 --> 00:23:18,232 விடுங்கள். நான் ஒரு ஸ்டோர் ரூமில் கூட தூங்குவேன். 440 00:23:18,774 --> 00:23:21,109 உண்மையில், நீயும் ஆஸ்டினும், மிக நன்றாக உபசரிக்கிறீர்கள். 441 00:23:21,193 --> 00:23:22,986 தயவு செய்து. எங்கள் இலக்கிய விருந்துக்கு 442 00:23:23,070 --> 00:23:26,073 மேலும் அந்தஸ்து கொடுத்த சாம் பௌல்ஸுக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன். 443 00:23:26,782 --> 00:23:29,326 அந்த இரண்டு அழகான சிறுமிகளையும் உங்க படுக்கையில் பாம்புகளை 444 00:23:29,409 --> 00:23:31,078 போடாமல் இருக்க, நான் உறுதி செய்ய வேண்டும். 445 00:23:31,537 --> 00:23:32,871 இல்லத்தரசியின் கடமைகள். 446 00:23:40,754 --> 00:23:42,464 மனைவியைப்பற்றி பேசும் போது, நான்... 447 00:23:43,590 --> 00:23:45,342 நான் போய் மேரிக்கு தந்தி அனுப்புகிறேன். 448 00:23:45,926 --> 00:23:48,428 நான் சில நாட்கள் வெளியே தங்கினால் அவள் மிகவும் கவலைப்படுவாள். 449 00:23:48,929 --> 00:23:49,930 கண்டிப்பாக. 450 00:23:51,139 --> 00:23:52,724 நான் மேரியை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். 451 00:23:53,141 --> 00:23:54,393 அப்படியா? 452 00:23:57,062 --> 00:23:58,355 அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 453 00:23:58,981 --> 00:24:00,649 -நிஜமாகவே அப்படி நினைக்கிறீர்களா? -ஆமாம். 454 00:24:01,525 --> 00:24:05,863 நீங்கள் இருவரும்... மிகவும் மாறுபட்ட பெண்கள். 455 00:24:11,618 --> 00:24:12,744 எனக்கு ஒரு உதவி செய். 456 00:24:13,412 --> 00:24:14,413 என்ன? 457 00:24:15,539 --> 00:24:16,540 ஏதாவது எழுது. 458 00:24:17,291 --> 00:24:18,292 இன்றிரவு. 459 00:24:19,376 --> 00:24:20,377 நான் முயற்சிக்கிறேன். 460 00:24:22,087 --> 00:24:25,090 உன் அற்புத திறமைக்கு... 461 00:24:26,842 --> 00:24:28,051 மிக அருகில் இருப்பதால், 462 00:24:30,220 --> 00:24:34,266 தூங்க முடியாமல் இருப்பேன் என்று நினைவில் வைத்துக்கொள். 463 00:24:36,602 --> 00:24:37,603 சரியா? 464 00:24:40,898 --> 00:24:42,107 இரவு வணக்கம், கவிஞரே. 465 00:24:43,734 --> 00:24:44,735 இரவு வணக்கம். 466 00:25:16,058 --> 00:25:17,267 அன்புள்ள மேரி, 467 00:25:17,976 --> 00:25:22,523 வாசமிக்க மலர் எதுவும் இல்லை என்பதால் நான் என் இதயத்தை இத்துடன் இணைக்கிறேன். 468 00:27:48,043 --> 00:27:50,045 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்