1 00:00:05,047 --> 00:00:11,011 இந்த எபிசோடில் இளம்வயது தற்கொலைகள் போன்ற விஷயங்கள் பற்றி பேசப்படுகிறது. 2 00:00:11,095 --> 00:00:14,890 பார்வையாளர்களின் கவனத்திற்கு. 3 00:00:19,520 --> 00:00:21,981 இதை பத்தி பேசறது கஷ்டம்னு புரியுது, 4 00:00:22,064 --> 00:00:25,109 ஆனா அன்றிரவு நடந்தது பற்றி நீங்க சொல்லணும். 5 00:00:27,278 --> 00:00:28,821 சரி. 6 00:00:28,904 --> 00:00:30,906 ரேச்சல்! நான் வரேன்! 7 00:00:43,544 --> 00:00:46,130 அவர்களை பார்க்க முடியலை, தெரியுமா. 8 00:00:47,214 --> 00:00:48,841 அவர்களை கேட்க முடிந்தது. 9 00:00:52,052 --> 00:00:54,430 உண்மையை சொல்லணும்னா, இன்னும் கேட்குது. 10 00:00:54,513 --> 00:00:57,600 -ரேச்சல்! -நோரா! 11 00:00:58,517 --> 00:01:00,102 நோரா! 12 00:01:00,186 --> 00:01:02,396 ஒரு நொடி இருந்திருக்கும். 13 00:01:02,480 --> 00:01:04,940 ஒரு மணி நேரம்? தெரியலை. 14 00:01:07,276 --> 00:01:08,861 ஆனா அப்போ, அவ... 15 00:01:08,944 --> 00:01:11,530 நோரா! நோரா! 16 00:01:11,614 --> 00:01:13,407 நோரா! 17 00:01:13,532 --> 00:01:15,284 பொறு, நோரா! 18 00:01:16,368 --> 00:01:18,078 போயிட்டா. 19 00:01:18,913 --> 00:01:20,331 அவ போயிட்டா. 20 00:01:27,588 --> 00:01:29,715 டாட் தான் அவளை முதலில் பார்த்தது. 21 00:01:29,799 --> 00:01:31,050 ரேச்சல்! 22 00:01:32,635 --> 00:01:36,013 -உனக்கு ரத்தம் வருது. எங்கிருந்து வருது? -அவளை இழந்தேன். 23 00:01:36,514 --> 00:01:38,057 எங்களில் சிலர் உறைந்தோம். 24 00:01:39,225 --> 00:01:42,478 ஆனா எங்களில் சிலருக்கு என்ன செய்யணும்னு தெரிஞ்சது. 25 00:01:42,561 --> 00:01:44,855 அதன்மேல் சூடு வைக்கணும். 26 00:01:49,443 --> 00:01:50,986 அவளை பிடிங்க. 27 00:01:52,988 --> 00:01:53,906 இப்போ! 28 00:02:01,956 --> 00:02:05,876 நடந்ததால் சிலர் ரொம்ப பாதிக்கப்பட்டோம், நடந்த விஷயம்... 29 00:02:07,294 --> 00:02:08,921 எங்களை உலுக்கியது. 30 00:02:14,593 --> 00:02:17,221 இல்லை. இல்லை! 31 00:02:18,305 --> 00:02:19,849 நாயே! 32 00:02:20,599 --> 00:02:23,853 குழி இங்கே இருந்தது. நோரா இங்கதான் போட்டா. 33 00:02:31,443 --> 00:02:35,114 நல்லதுனு சொல்ல ஏதுமில்லை... 34 00:02:37,408 --> 00:02:39,827 எப்பவுமே இருக்கப்போவதுமில்லை. 35 00:02:39,910 --> 00:02:42,663 ஆனா எங்களை பத்தி சொல்லணும்னா... 36 00:02:42,746 --> 00:02:44,373 ...அது எங்களை இணைத்தது. 37 00:02:44,456 --> 00:02:47,459 எப்படினு சொல்லத்தெரியலை, 38 00:02:48,794 --> 00:02:50,796 ஆனா முன்பை விட நெருக்கமாக. 39 00:02:52,339 --> 00:02:56,176 ஆம், அது நடந்தபின், நாங்கள்... 40 00:03:00,014 --> 00:03:03,559 வேறு விதமா சொல்லத் தெரியலை, ஒரு குடும்பம் ஆனோம். 41 00:03:05,102 --> 00:03:09,648 எல்லாம் ரொம்ப வேகமா நடந்தது, அதைத் தான் நம்ப முடியலை. 42 00:03:09,732 --> 00:03:14,695 ஒரு மூணு வாரம் முன்னாடி... 43 00:03:15,863 --> 00:03:18,449 எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாது. 44 00:03:21,827 --> 00:03:25,372 ஒரு சங்கடம், ஒரு தூரம் இருந்தது. 45 00:03:26,624 --> 00:03:30,669 நிறைய பார்வைகள், கனிவு. 46 00:03:32,504 --> 00:03:36,342 கவனமா இருந்தோம், வெளிப்படையா பழகலை, 47 00:03:36,425 --> 00:03:39,219 ஒரு புதிய திசையில் அந்நியர்களாய் பயணித்தோம்... 48 00:03:41,180 --> 00:03:44,224 என்ன வரப்போகுதுனு தெரியாம. 49 00:03:49,021 --> 00:03:51,273 யாருக்காவது கேக் வேணுமா? 50 00:03:54,526 --> 00:03:59,239 த வைல்ட்ஸ் 51 00:04:00,658 --> 00:04:03,577 பாஸேஜ்வேஸ் அறிமுக வீடியோ, முதல் டேக். 52 00:04:05,412 --> 00:04:09,249 நான் ஜாஷ் ஹெர்பெர்ட், இந்த ஓய்விடம் செல்வதில் மிகுந்த உற்சாகம். 53 00:04:10,626 --> 00:04:12,086 அருமை. 54 00:04:12,169 --> 00:04:14,463 ரோஸா, என் மருந்துகளை எடுத்து வர்றாங்க. 55 00:04:14,546 --> 00:04:16,799 ஓய்விடத்தில் செய்ய வேண்டியவையை பார்த்தேன். 56 00:04:18,092 --> 00:04:20,260 சொன்னது போல, ரொம்ப உற்சாகம், 57 00:04:20,344 --> 00:04:24,264 மேஜிக் முகாமிற்கு போகும்போது இருந்த அளவு உற்சாகம். 58 00:04:25,391 --> 00:04:29,520 நான் சப்-50 400 ஓடறவன், என் உடல் எடையை விட மூணு மடங்கு பளு தூக்குறவன், 59 00:04:29,770 --> 00:04:34,733 இந்த நின்னுட்டு படகுக்கு துடுப்பு போடறது எனக்கு சவாலா இருக்கும்னு நினைச்சீங்கனா, 60 00:04:34,817 --> 00:04:36,360 போய்த் தொலைங்க. 61 00:04:36,443 --> 00:04:38,112 நான் அறிக்கை தயார் செய்தேன். 62 00:04:38,195 --> 00:04:40,698 "என் விருப்பத்திற்கு எதிரா ஓய்விடத்திற்கு போகிறேன். 63 00:04:40,781 --> 00:04:43,117 கட்டாயம் என்பதால் மட்டுமே இந்த வீடியோ செய்றேன், 64 00:04:43,200 --> 00:04:46,286 நான் செய்ய விரும்பும் சிறு பட்டியலை இப்போ வழங்கறேன்." 65 00:04:46,453 --> 00:04:49,665 இன்னும் யோசிச்சுட்டிருக்கேன், ஆனா இதை முதல் நாள் அணிவேன். 66 00:04:49,748 --> 00:04:53,210 -"ஊசி மேல் நடப்பது போல." -எனக்கு பலப் பரிட்சை. 67 00:04:53,293 --> 00:04:57,423 இந்த பெருந்தலைகளை பத்தி உங்களுக்கு தெரியலைனா, விளக்கலாம் போறதில்லை. 68 00:04:57,506 --> 00:05:00,259 -"தொண்டை புண் பெறவும்." -என்ன சொல்லணும்னு மறந்துட்டேன். 69 00:05:00,342 --> 00:05:03,137 போ, உன்னை பற்றி மூன்று வார்த்தைகளில் விவரி. 70 00:05:04,096 --> 00:05:06,265 "மெக்டானல்டில் சறுக்கு மரத்தை நக்கணும்." 71 00:05:07,057 --> 00:05:08,809 புல்வெளிகளை சீராக்குவேன். 72 00:05:09,226 --> 00:05:11,353 பையனுக்கு சுயவிளம்பரம் செய்ய தெரியலை. 73 00:05:11,437 --> 00:05:13,564 எப்படி செய்யணும்னு சொல்லி தர்றேன். 74 00:05:13,647 --> 00:05:15,983 மூன்று வார்த்தைகளா? தெரியலை. 75 00:05:16,066 --> 00:05:20,529 பெயர் ஸ்காட்டி சிம்ஸ், 850இன் மொக்கை மூலையிலிருந்து உங்களுடன் நேரலையில். 76 00:05:20,612 --> 00:05:24,783 ஆனா வெகு நேரம் இல்லை, ஏன்னா நான் ஆர்வமுள்ள, ஊக்கமுள்ள தொழிலதிபர், 77 00:05:24,867 --> 00:05:27,619 ஃபேஷன், சரும பராமரிப்பு தொழில்களில் பல உத்திகளோடு. 78 00:05:27,703 --> 00:05:29,913 ஸ்காட்டி, மூன்றை விட அதிக வார்த்தைகள். 79 00:05:32,082 --> 00:05:35,335 "நல்ல ரசனை உள்ளவன்", என்னை விவரிக்க மூணு வார்த்தைகள். 80 00:05:35,419 --> 00:05:37,671 சலிப்பூட்டும் வெள்ளை ஆண். 81 00:05:37,755 --> 00:05:39,923 உண்மையாதான் சொல்றேன். 82 00:05:40,007 --> 00:05:41,383 அரிய விஸ்கிகளை சேகரிப்பேன். 83 00:05:41,467 --> 00:05:42,593 ரகசியமாக. 84 00:05:44,970 --> 00:05:48,932 அதை மறைக்க கூட வேண்டாம், ஏன்னா அம்மாக்கு எதுவும் தெரியாது. 85 00:05:53,062 --> 00:05:54,813 வாயில் நல்ல உணர்ச்சி. 86 00:05:54,897 --> 00:05:59,234 நான் ரஃபேல் கார்சியா, சுருக்கமா ராஃப். 87 00:05:59,318 --> 00:06:01,028 பெரும்பாலானோர் ராஃப்னு அழைப்பர். 88 00:06:03,113 --> 00:06:07,910 ஆம், தெரியலை, எல்லாரையும் சந்திக்கப்போவதில் உற்சாகம். 89 00:06:07,993 --> 00:06:10,996 ஹவாய் போனதே இல்லை. 90 00:06:11,080 --> 00:06:13,874 இதற்கு முன் விமானமும் ஏறியதில்லை, 91 00:06:13,957 --> 00:06:16,043 அதை எண்ணி கொஞ்சம் பதட்டம். 92 00:06:18,587 --> 00:06:20,964 -நான் ஏங்கக் கூடியவை-- -உள்ளே வாங்க. 93 00:06:25,260 --> 00:06:27,554 சிரிக்கறீங்க. அது நல்ல முன்னேற்றம். 94 00:06:27,638 --> 00:06:30,307 நம் அன்பான கட்டுப்பாட்டு குழுவை பாராட்டிட்டிருந்தேன். 95 00:06:30,390 --> 00:06:31,767 "அன்பான?" 96 00:06:31,850 --> 00:06:35,771 -அவர்களை அப்படி அழைப்பீங்கனு நினைக்கலை. -34 நாட்கள், டேனியல். 97 00:06:35,854 --> 00:06:39,775 34 நாட்கள் தாக்குபிடித்தனர், பெண்களோ முழு 50 நாட்களும். 98 00:06:40,984 --> 00:06:43,737 அதனால், கடவுளே, பணத்திற்கு பிச்சை எடுத்தது, 99 00:06:43,821 --> 00:06:47,991 என் முதலீட்டாளர்களுக்காக குரங்கு போல் குதித்து நடனமாடியது... 100 00:06:48,075 --> 00:06:50,536 அது எல்லாம் வீண் போகலை. 101 00:06:50,619 --> 00:06:54,206 நமக்கு ஏத்த மாதிரி அந்த பசங்க தோத்தாங்க, 102 00:06:54,289 --> 00:06:56,875 -அவர்களை விரும்பாமல்? -ஆம், அது, 103 00:06:56,959 --> 00:06:58,961 அவர்களை விரைவில் விசாரிக்க போறோம். 104 00:06:59,044 --> 00:07:01,964 -சொல்லிட்டு போக வந்தோம். -சமாளிக்க முடியுமா, டீன்? 105 00:07:02,089 --> 00:07:04,716 -கவலையா இருக்க. -"கவலை"லாம் பட்டதே இல்லை. 106 00:07:05,551 --> 00:07:08,846 சிக்கலான உணர்வுகள் டேனின் பாணி. 107 00:07:11,932 --> 00:07:14,184 இது சோதனையா இருந்ததுனு தெரியும், 108 00:07:14,268 --> 00:07:17,396 ஆனா உங்க இருவரிடமிருந்தும் ஒரு கடைசி முயற்சி கேக்கறேன். 109 00:07:19,439 --> 00:07:22,943 அவர்களுக்குள்ளே தகர்ந்து போனது தெரியும். 110 00:07:23,026 --> 00:07:26,405 எப்படினு தெரிஞ்சா, 111 00:07:26,488 --> 00:07:28,740 நாம் கிரீடம் அணியலாம். 112 00:07:31,034 --> 00:07:34,371 இப்போ, போய் அவர்கள் மனதை திறக்க வைங்க கனவான்களே. 113 00:07:34,454 --> 00:07:36,999 இந்த குட்டி தேவதையிடமிருந்து தொடங்கவும். 114 00:07:37,666 --> 00:07:39,293 எப்படி விழுந்தான்னு தெரியணும். 115 00:07:47,217 --> 00:07:49,928 என்னிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கறீங்க தெரியலை. 116 00:07:50,220 --> 00:07:52,764 நடந்ததை விவரியுங்க. 117 00:07:54,808 --> 00:07:56,685 இதை எடுத்துடலாமே? 118 00:07:56,768 --> 00:07:59,688 "அதீத எச்சரிக்கை"யின் பேரில் இருக்கு அது. 119 00:07:59,771 --> 00:08:02,191 நான் செய்த விஷயத்துனாலயா? 120 00:08:02,274 --> 00:08:05,485 -ஆம், ரஃபேல். -ராஃப். 121 00:08:08,322 --> 00:08:09,990 ராஃப்னு கூப்பிடுங்க. 122 00:08:22,044 --> 00:08:26,381 சரி, ராஃப், முதல் நாள் பற்றி சொல்லுங்களேன்? 123 00:08:39,061 --> 00:08:41,813 எனக்கு பெயர்கள் தெரியாதது நினைவிருக்கு. 124 00:08:41,897 --> 00:08:44,483 அது எப்பவுமே எனக்கு பிரச்சனை. 125 00:08:44,566 --> 00:08:47,986 ஒருவேளை என் பெயரை யாரும் சரியா சொல்லாததால் இருக்கலாம். 126 00:08:48,570 --> 00:08:50,239 ஆனா, ஆம், அது... 127 00:08:52,866 --> 00:08:55,410 முதல் நாளில், அடிப்படைகளை தெரிஞ்சுகிட்டேன். 128 00:08:56,370 --> 00:08:58,914 ஃப்ளாரிடாவிலிருந்து இரண்டு நெருங்கிய நண்பர்கள். 129 00:09:00,832 --> 00:09:04,544 ஜாஷ் எச், அவனது பெயரை ஹை ஸ்கூலிலிருந்து தெரியும். 130 00:09:04,628 --> 00:09:06,713 ஆடம்பர உடைகள் அணிந்த புத்திசாலி. 131 00:09:06,797 --> 00:09:08,966 லக்ராஸ் ஆடும் சீமான். 132 00:09:09,049 --> 00:09:11,635 உணர்ச்சிவசப்படும் கண்ணாடி போட்ட பையன். 133 00:09:11,718 --> 00:09:14,513 அவனது மாற்றாந்தாய் சகோதரன் செத். 134 00:09:14,596 --> 00:09:17,391 அவனது பெயர் எப்படியோ... 135 00:09:19,226 --> 00:09:21,144 என் நினைவில் இருந்தது. 136 00:09:23,563 --> 00:09:26,275 பின்னர், ட்ராக்சூட் பையன், 137 00:09:27,818 --> 00:09:31,029 தன் அம்மாவை வெறுத்தான். 138 00:09:31,113 --> 00:09:33,657 அருமை, அம்மா. அருமையான யோசனை. 139 00:09:33,740 --> 00:09:36,785 இது எப்படி... என்னை எங்கேயாவது காட்டுக்கு 140 00:09:36,868 --> 00:09:40,789 ஏதோ ஒரு மொக்கை கும்பலுடன் அனுப்புவது எப்படி-- 141 00:09:40,872 --> 00:09:44,793 "ஜாலியா இருக்கும்"னு அவ சொன்னா, "ஆம், ஒருவேளை நீ ஏதாவது கத்துக்கலாம்." 142 00:09:44,876 --> 00:09:48,463 முங்கி சாகறது எப்படினு கத்துப்பேன் போல. 143 00:09:48,547 --> 00:09:50,299 என் மூக்கில் டன் கணக்கில் 144 00:09:50,382 --> 00:09:53,260 நீர் எப்படி புகும்னு கத்துப்பேன் போல. 145 00:09:53,343 --> 00:09:58,974 உன்னை முற்றிலும் எப்படி வெறுக்கறதுனு கத்துப்பேன் போல, 146 00:09:59,057 --> 00:10:00,892 கிழட்டு நாயே! 147 00:10:03,395 --> 00:10:04,938 சே! 148 00:10:09,818 --> 00:10:13,780 மன்னிக்கணும், அது வேடிக்கையா இல்லாத மாதிரி என்னால் இருக்க முடியலை. 149 00:10:13,905 --> 00:10:15,574 "கிழட்டு நாயே!" 150 00:10:29,755 --> 00:10:30,797 ஹை. 151 00:10:30,881 --> 00:10:33,425 -நீ நலமா? -இல்லை. 152 00:10:33,508 --> 00:10:36,094 -ஹென்ரி, என்ன இது. இப்போ வேணாம். -என்ன? 153 00:10:36,178 --> 00:10:39,348 தொலைஞ்சிருக்கோம், சாகறோம், மேலே போறோம். யாரும் நலமல்ல. 154 00:10:39,431 --> 00:10:42,559 வேறு மாதிரி கேக்கறேன். இந்த நிலையில் நலமா இருக்கியா? 155 00:10:46,104 --> 00:10:48,023 ஏன் அதை செய்ற? 156 00:10:49,274 --> 00:10:50,609 எதை செய்றேன்? 157 00:10:50,692 --> 00:10:51,985 அழுவது. 158 00:10:52,069 --> 00:10:55,072 அது நலம் தான். அது ஆரோக்கியமானது. 159 00:10:55,781 --> 00:10:58,825 அந்த நடத்தையை சகஜமாக்க வேண்டும். 160 00:10:58,909 --> 00:11:01,912 கடவுளே! இவனுடன் யார் வந்தது? 161 00:11:03,288 --> 00:11:05,040 இவன் எப்பவும் இப்படித்தானா? 162 00:11:06,708 --> 00:11:10,045 -தெரியாது. -நாங்க வெவ்வேறு நண்பர் கும்பல். 163 00:11:11,004 --> 00:11:12,714 -ஹை, ரேஃப். -என்னமோ போ. 164 00:11:12,798 --> 00:11:15,717 பாருங்க, ரொம்ப நேரம் இங்கேயே உட்காந்திருக்கோம். 165 00:11:15,801 --> 00:11:18,345 அழுவதை நிறுத்திட்டு ஏதாவது செய்வோம். 166 00:11:18,428 --> 00:11:20,263 ஹேய், உன் பெயர் என்னன்னு சொன்ன? 167 00:11:20,347 --> 00:11:24,101 தன் பெயர் கிரின்னு சொல்வான், ஆனா பிறப்பால் தலைவன்னு நாமறிவோம். 168 00:11:24,184 --> 00:11:29,314 -ஆரம்பிக்காதே, டெய்லர். -சரி, ஏற்கனவே பிரச்சனை போல. 169 00:11:29,398 --> 00:11:33,276 பாரு, கிரின், கொஞ்ச நேரத்துக்கு ஜாஷை ஜாஷாக இருக்க விடலாமே? 170 00:11:33,360 --> 00:11:36,530 இந்த கொடூரமான கனவில் நாம் விடப்பட்டிருக்கிறோம். 171 00:11:36,613 --> 00:11:39,658 யாருக்கு எப்படி உணரணுமோ அப்படி இருக்கட்டுமே. 172 00:11:39,741 --> 00:11:42,953 உன் அம்மாவை நீ கிழட்டு நாய்னு கூப்பிடணும்னா, கூப்பிட்டுக்கோ. 173 00:11:43,036 --> 00:11:45,038 நிச்சயமா. மோசமானவங்க. 174 00:11:45,122 --> 00:11:48,250 பேசறதை நிறுத்திட்டு கொஞ்சம் நகர்வோமா? 175 00:11:48,333 --> 00:11:50,961 -எங்கே போறது? -எதாவது கிடைக்குதானு பார்க்க. 176 00:11:51,044 --> 00:11:54,548 மர்ம தீவுகள் எதுவும் இல்லை, எல்லாம் கண்டுபிடிச்சாச்சு. 177 00:11:54,631 --> 00:11:55,841 பார், அது உண்மை. 178 00:11:55,924 --> 00:12:00,137 இந்த தீவுகளை இல்லுமினாட்டி பணம் வெச்சி பணக்காரங்க வாங்கிருப்பாங்க. 179 00:12:00,220 --> 00:12:01,680 சரி, எல்லாரும் எழுந்திருங்க! 180 00:12:04,641 --> 00:12:07,436 அவன் சொன்னதை நான் ஏன் கேட்டேன் இப்போ? 181 00:12:07,519 --> 00:12:10,647 அது கேப்டனின் ஆணை குரல், அதை எதிர்க்க முடியாது. 182 00:12:10,730 --> 00:12:13,817 அவனை என் ஹை ஸ்கூலிலிருந்து வெறுக்கிறேன், நானே எழுந்துட்டேன். 183 00:12:13,900 --> 00:12:15,694 நிச்சயமா மீட்பு வருது, 184 00:12:15,777 --> 00:12:18,822 ஆனா பக்கத்தில் ஏதாவது செம ஹோட்டல் இருந்து, 185 00:12:18,905 --> 00:12:21,283 அதை நாம் சோம்பேறித்தனத்தால் பார்க்க தவறினால், 186 00:12:21,366 --> 00:12:23,535 இழப்பு நமக்குதான். 187 00:12:23,618 --> 00:12:26,705 அதனால் அணிகளா பிரிஞ்சு, வெவ்வேறு திசையில் போவோம், 188 00:12:26,788 --> 00:12:29,249 ஏதாவது கிடைச்சா ஒருவரை திரும்பி அனுப்பலாம். 189 00:12:29,332 --> 00:12:32,627 இங்கிருந்து, எல்லாரும் ஒரு அணி. 190 00:12:33,003 --> 00:12:34,838 அதாவது... 191 00:12:39,092 --> 00:12:42,262 அதாவது, இங்கிருந்து. மற்றவர்கள், என்னுடன். 192 00:12:42,345 --> 00:12:43,638 போலாம். 193 00:12:44,306 --> 00:12:47,392 இன்னும் நடக்குது. அவனிடம் அவ்வளவு ஈர்ப்பு. 194 00:12:48,685 --> 00:12:52,314 ஹேய், நீ நலமா? மீண்டு வந்துட்டிருக்கியா? 195 00:12:52,481 --> 00:12:54,900 நல்லாவே மீண்டாச்சு. 196 00:12:54,983 --> 00:12:57,903 அழுகையில் எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். 197 00:12:57,986 --> 00:12:59,821 நல்லது. 198 00:12:59,905 --> 00:13:04,367 பாருங்க, அந்த மூன்று-இலக்கத்திடம் எனக்கு ஆலோசனை கேட்க பிடிக்காட்டியும்-- 199 00:13:04,451 --> 00:13:06,411 -என்னது? -மன்னிக்கணும், 200 00:13:06,495 --> 00:13:09,289 இந்த மதிப்பெண் பெற்றால் இப்படி அழைப்போம்... 201 00:13:09,372 --> 00:13:11,625 மூன்று-இலக்க ஸாட் மதிப்பெண். 202 00:13:11,708 --> 00:13:13,502 சிரித்ததற்கு நன்றி. 203 00:13:13,585 --> 00:13:18,089 அவன் சொல்றது திமிரா இருக்கு, கனிவா இல்லை, ஆனா அவன் சொல்வது தவறில்லை. 204 00:13:18,173 --> 00:13:21,968 இங்கேயே நாம் யோசிச்சுட்டே இருந்தா, அது நம்மை உடைக்கும், 205 00:13:22,052 --> 00:13:25,764 அதனால் நகர்வோம், இந்த இடத்தை விட்டு சீக்கிரமே போயிடலாம். 206 00:13:28,016 --> 00:13:29,392 ஒரு வாரம். 207 00:13:29,476 --> 00:13:33,897 ஒரு வாரம் ஆச்சு, எனக்கு தெரியலை. 208 00:13:33,980 --> 00:13:36,316 சரியா படலை. 209 00:13:36,399 --> 00:13:38,527 அவளில்லாமல் ரொம்ப கனமா இருக்கு. 210 00:13:40,111 --> 00:13:44,533 ரேச்சல், இப்போ அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் வலியாதான் இருக்கும். 211 00:13:50,038 --> 00:13:55,502 ஆனா அதற்கிடையில், நான் இங்கே உன்னுடன் இருக்கேன், எப்படி தெரியுமா... 212 00:13:56,628 --> 00:13:58,255 எப்படி? 213 00:13:59,089 --> 00:14:01,007 நீ அதை விவரிப்பதை கேட்கணும். 214 00:14:04,010 --> 00:14:07,973 நான் நலிந்து போய் மிதப்பது போல, 215 00:14:08,056 --> 00:14:09,975 ஆனா அது பிடிச்சிருக்கு. 216 00:14:10,058 --> 00:14:11,393 நான்... 217 00:14:12,185 --> 00:14:16,398 ஸ்கூலில் ஆபத்தென்று பட்டியலிட்ட எல்லா போதைப்பொருளையும் உட்கொண்டது போல-- 218 00:14:16,481 --> 00:14:19,109 -அழ வெச்சுடுவ போல. -நீ தான் விவரிக்க சொன்ன. 219 00:14:19,192 --> 00:14:21,444 உன்னை சும்மா கலாய்க்கறேன். 220 00:14:22,696 --> 00:14:24,531 உண்மையில்... 221 00:14:26,700 --> 00:14:28,910 எனக்கும் சந்தோஷம் தான். 222 00:14:32,914 --> 00:14:34,666 ஆனா குற்ற உணர்ச்சிகள்... 223 00:14:37,043 --> 00:14:39,129 அதை என்ன செய்வது? 224 00:14:41,798 --> 00:14:44,301 உன் நண்பன், கடவுளிடம் அதை பத்தி பேசினியா? 225 00:14:44,384 --> 00:14:47,596 உண்மையில், சமீபகாலமா அதை அவ்வளவா செய்யவே இல்லை. 226 00:14:47,679 --> 00:14:49,598 பிரார்த்தனை. 227 00:14:53,018 --> 00:14:55,353 அவர் என்ன சொல்வார்னு நினைக்கிற? 228 00:14:58,273 --> 00:15:00,275 நல்லதுக்கு நன்றியுடன் இருக்கணும்னு. 229 00:15:01,568 --> 00:15:03,903 மற்றதை சமாளிக்க அது தேவை. 230 00:15:05,280 --> 00:15:06,573 ஆமெனோ ஆமென். 231 00:15:10,118 --> 00:15:13,455 இதை சொல்வது எனக்கு செம்ம கடுப்பு ஆகுது, தெரியுமா? 232 00:15:13,538 --> 00:15:17,626 அழகிப் போட்டி சாம்பியனிடம் இதை சொல்வது எனக்கு கடுப்பேத்தாது. 233 00:15:17,709 --> 00:15:19,919 இதற்கு மேல் வெளிப்படையா சொல்ல முடியாது. 234 00:15:22,756 --> 00:15:24,382 நீ ரொம்ப அழகு. 235 00:15:51,284 --> 00:15:53,119 என் வலிமை ஏன் கூடவில்லை? 236 00:15:53,203 --> 00:15:57,248 எல்லாத்தையும் தூக்கறேன், பேலியோ உணவு தான் சாப்பிடறேன். 237 00:15:57,332 --> 00:16:00,043 ஒரே சமயத்தில் எல்லாம் வரும் போல, 238 00:16:00,126 --> 00:16:04,297 ஹல்க்கை போல உன் தசைகள் உன் சட்டையை கிழித்துக் கொண்டு புடைக்கும். 239 00:16:04,381 --> 00:16:07,384 எல்லாம் சேர்ந்து உன் மூளையை குழப்பியிருக்கு. 240 00:16:07,842 --> 00:16:09,678 -இங்கே வைப்போம். -ஆம். 241 00:16:09,761 --> 00:16:11,971 முடிச்சாச்சு. 242 00:16:12,055 --> 00:16:13,139 ஆம். 243 00:16:19,145 --> 00:16:22,482 போன முறை இது நமக்கு உதவலை, 244 00:16:22,565 --> 00:16:26,027 ஆனா இங்கே நாமிருக்கிறோம்னு ஆதாரம் விடாமல் உள்ளே போக கூடாது, 245 00:16:26,111 --> 00:16:29,823 இது, சைகை காட்டும் தீ எல்லாம் நமக்கு அவசியம். 246 00:16:29,906 --> 00:16:32,325 "எஸ்ஓஎஸ்"னா என்ன? 247 00:16:33,952 --> 00:16:38,039 எனக்கு இது தெரிஞ்சிருக்கணும், ஆனா முழிக்கிறேன். 248 00:16:38,248 --> 00:16:40,792 யாருக்கு தெரிஞ்சிருக்கும் தெரியுமா? 249 00:16:48,842 --> 00:16:52,470 அது நினைவுபடுத்துது, இப்போ கவனிக்க வேண்டியது என் முறை. 250 00:16:57,434 --> 00:17:00,145 ஹேய். உட்காரலாமா? 251 00:17:07,026 --> 00:17:11,072 பேன்டெஜ் மாத்தணும், அதனால்... 252 00:17:17,954 --> 00:17:19,831 இசைக்க ஆரம்பிக்கட்டுமா? 253 00:17:19,914 --> 00:17:21,708 ராப் பேண்டை போல? 254 00:17:22,459 --> 00:17:26,629 அது நல்ல ஜோக்கா இருக்கும்னு நினைக்கற அளவு நான் முட்டாளா இருக்கேனோ? 255 00:17:26,713 --> 00:17:29,340 நான் அப்படி உனக்கு செய்ய மாட்டேன், தெரியும்ல? 256 00:17:29,424 --> 00:17:32,218 வசூல் ராஜா கருமம்லாம் இல்ல. 257 00:17:37,056 --> 00:17:42,353 உன்னிடம் நேர்மையா சொல்வேன். 258 00:17:44,439 --> 00:17:47,859 ஏழு நாட்கள் ஆச்சு, இவ்வளவு வீக்கம் இருக்க கூடாது. 259 00:17:50,236 --> 00:17:55,241 கடற்கரையில் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்குது. 260 00:17:56,534 --> 00:17:59,078 மண் உள்ளே புகுந்து விடுகிறது. 261 00:18:02,665 --> 00:18:05,335 இன்று நகர்கிறோம், ரேச்சல். 262 00:18:07,253 --> 00:18:10,423 நீ எங்களுடன் வரணும். 263 00:18:13,468 --> 00:18:16,554 -அவளது பொருட்களும், அதுவும்-- -அது இங்கே இருக்கும். 264 00:18:20,517 --> 00:18:22,435 அது இங்கே இருக்கணும். 265 00:18:25,104 --> 00:18:27,315 ஒரு வேளை அவ திரும்பி வந்தால். 266 00:19:08,064 --> 00:19:09,357 மார்த்தா. 267 00:19:10,650 --> 00:19:12,986 என்னிடமிருந்து மறைச்சிருக்க, பெண்ணே. 268 00:19:13,069 --> 00:19:17,657 நம் பொருட்களையெல்லாம் ஒன்று சேர்த்துட்டிருந்தேன், இது கிடைச்சது. 269 00:19:17,740 --> 00:19:20,034 நோரா ராபெர்ட்ஸ் 270 00:19:20,994 --> 00:19:24,747 இது இலக்கியம். நான் சும்மா பார்த்தேன், 271 00:19:24,831 --> 00:19:28,251 ஆனா இது ஜெஃபோட புஸ்தகத்தை காட்டிலும் நல்லது. 272 00:19:28,334 --> 00:19:30,169 குறுகிய வாக்கியங்கள், 273 00:19:30,253 --> 00:19:33,423 கிளர்ச்சிக்கு ஐந்து படுக்கையறை காட்சிகள் இருக்கு, 274 00:19:33,506 --> 00:19:35,216 அவ அங்கே மறுபடியும் போனால். 275 00:19:36,509 --> 00:19:38,177 இது கடற்கரை புத்தகம். 276 00:19:38,261 --> 00:19:41,639 நம்மிடம் அருமையான கடற்கரை புத்தகம் இருக்கு, 277 00:19:41,723 --> 00:19:44,475 நாமளோ கடற்கரையை விட்டு போறோம். 278 00:19:44,559 --> 00:19:46,644 சாரி. என்னிடம் இருப்பதை மறந்தேன். 279 00:19:47,979 --> 00:19:49,314 நீ நலமா? 280 00:19:51,190 --> 00:19:53,359 ஒரு கேள்வி கேட்கலாமா? 281 00:19:55,069 --> 00:19:58,740 இங்கே சிலருக்கு நடுவில் புதிய உணர்வுகளை பார்த்தியா? 282 00:19:59,616 --> 00:20:02,285 எது, மனத்தளர்ச்சி அதிர்வுகள் 283 00:20:02,368 --> 00:20:05,914 மூணு மணியானா வருமே? ரேச்சலுக்கு நியாயமான காரணமிருக்கு-- 284 00:20:05,997 --> 00:20:08,791 இல்லை. கெட்ட அதிர்வுகளை சொல்லலை. நான் சொல்வது... 285 00:20:10,460 --> 00:20:12,420 அழகிய உணர்வுகளை. 286 00:20:14,631 --> 00:20:15,840 அதாவது... 287 00:20:16,758 --> 00:20:21,846 இரண்டு பேருக்கிடையில் நட்பைத் தாண்டிய நெருக்கம்? 288 00:20:21,971 --> 00:20:23,056 ஷோனி. 289 00:20:25,099 --> 00:20:26,142 ஷெல்பியும் டோனியும். 290 00:20:26,309 --> 00:20:29,145 கடவுளே, இப்ப தான் உனக்கு தெரியுமா? 291 00:20:29,228 --> 00:20:31,731 -அது ஒரு வாரமா ஓடிட்டிருக்கு. -ஒரு வாரமா? 292 00:20:31,814 --> 00:20:34,984 அவர்கள் காட்டில் சில்மஷம் செய்வதை பார்த்துட்டியா? 293 00:20:35,068 --> 00:20:36,653 கடவுளே, தெரியாம போச்சே. 294 00:20:36,736 --> 00:20:38,988 எடுத்து வைக்க அவர்களின் உதவி தேடினேன். 295 00:20:40,615 --> 00:20:45,119 காமப் பரவசத்தின் வாசனையை தொலைதூரத்தில் முகர்பவள் நான். ஒருவேளை சைனஸாக இருக்குமோ. 296 00:20:48,081 --> 00:20:48,998 என்ன? 297 00:20:50,291 --> 00:20:51,793 ஒண்ணுமில்லை. அது வெறும்-- 298 00:20:51,876 --> 00:20:54,462 மரம். சைகை தீக்கு, நீ கேட்டது போல. 299 00:20:54,545 --> 00:20:56,589 இல்லை, இது கச்சிதம். 300 00:20:56,756 --> 00:21:01,511 கருத்துரீதியாக. இன்னும் நிறைய கொண்டு வருவனு நினைச்சேன். 301 00:21:01,678 --> 00:21:05,264 -நீ போய் ஒரு மணி நேரம் ஆச்சு? -நீ என்ன என் மேற்பார்வையாளரா? 302 00:21:05,473 --> 00:21:08,267 -கண்காணிப்பு கடிகாரம் வெச்சிருக்கியா? -ஹேய். 303 00:21:08,393 --> 00:21:10,853 என் நேரத்தை எப்படி செலவிட்டா உனக்கு என்ன? 304 00:21:11,729 --> 00:21:15,400 ஏன்னா... உனக்காக ஏங்கினேன். 305 00:21:16,442 --> 00:21:19,404 மற்ற விஷயங்களுக்கு நடுவில். 306 00:21:21,155 --> 00:21:23,741 இங்கே தான் இருக்கேன். எங்கேயும் போயிடலை. 307 00:21:24,659 --> 00:21:27,036 அதை இன்னும் தேடிட்டிருக்கனு தெரியும். 308 00:21:27,120 --> 00:21:29,831 தேடாம முடியாது, ஃபேடின். அந்த குழி, அது... 309 00:21:30,873 --> 00:21:34,919 அது தான் ஒரே ஆதாரம், நான் உண்மையா, மொத்தமா... 310 00:21:36,838 --> 00:21:39,590 லியா, அது கானல். 311 00:21:48,891 --> 00:21:51,561 -எங்கே போற? -நான்-- அப்படி இல்லை. 312 00:21:53,354 --> 00:21:55,189 மீண்டும் முயற்சிக்கலாம்னு. 313 00:21:55,273 --> 00:21:58,860 மரம் சேர்ப்பதை சொதப்பாம செய்ய? 314 00:21:58,943 --> 00:22:02,196 முடிஞ்ச அளவு மானம் போகாமல் இருக்க. 315 00:22:28,347 --> 00:22:32,060 மென்மையா இரு 316 00:22:32,143 --> 00:22:34,312 -பயமா? -இல்லல்ல. 317 00:22:36,606 --> 00:22:39,442 எனக்கு தெரிய கூட இல்லை. 318 00:22:39,525 --> 00:22:43,029 இதன் கிறுக்குத்தனம் அலையலையாய் வருது. 319 00:22:43,112 --> 00:22:45,406 என்னை கடல்நோய்வாய்ப்பட வைக்குது. 320 00:22:45,490 --> 00:22:47,992 என்னிடம் ட்ராமமின் இருக்கு, வேணும்னா. 321 00:22:48,117 --> 00:22:50,912 நீ ஒரு தேவதை, ஆனா அந்த அர்த்தத்தில் சொல்லலை. 322 00:22:50,995 --> 00:22:53,873 ஆன்மீக அர்த்தத்தில் சொன்னேன். 323 00:22:53,956 --> 00:22:57,418 துரதிர்ஷ்டவசமா, வனாந்திரம் எனக்கு ஒத்துப் போவதில்லை. 324 00:22:57,502 --> 00:22:59,962 எனக்கு வலுவூட்டும் சூழலாக அது இல்லை, 325 00:23:00,046 --> 00:23:04,383 தனிப்பட்ட முறையில், இயற்கைத்தாய் வாழ்க, ஆனால் அவள் மீது எனக்கு ஆர்வமில்லை. 326 00:23:05,510 --> 00:23:10,973 ஃப்ராஸ்ட், டென்னிசன், கீட்ஸ், போன்றோருக்கு பிடித்தமானவள். 327 00:23:12,100 --> 00:23:15,686 மற்றவையைப் போல, வெள்ளைக்காரன் அவளையும் தன்னதாக்கிக் கொண்டான். 328 00:23:16,854 --> 00:23:19,899 தெரியும். நான்... 329 00:23:19,982 --> 00:23:21,901 மிகவும் வருந்தறேன். 330 00:23:23,486 --> 00:23:25,321 -நீ கவிஞனா? -என்ன கருமமோ! 331 00:23:25,446 --> 00:23:28,282 இல்லை, கடவுளே, ஆனா அவன் நிச்சயமா. 332 00:23:28,950 --> 00:23:31,953 அவனது கால் விரல் உடைஞ்சது போல. உனக்கு எலும்பு உடைஞ்சிருக்கா? 333 00:23:32,036 --> 00:23:34,497 நாலாம் வகுப்பில் கையை உடைச்சுகிட்டேன். 334 00:23:34,580 --> 00:23:38,960 எனக்கு அப்போ நிறைய நண்பர்கள் கிடையாது, அதனால் நானே பொய் கையெழுத்து போட்டுப்பேன். 335 00:23:39,043 --> 00:23:41,546 இது அடித்தள காயம்னு என் மனநல ஆலோசகர் கூறினார். 336 00:23:41,629 --> 00:23:42,672 நாசம்! 337 00:23:44,048 --> 00:23:49,178 அவனுக்காக வருத்தப்படணும்னு தெரியும், ஆனா என் பச்சாதாபம் வரண்டுவிட்டது. 338 00:23:51,806 --> 00:23:55,393 ராஃப் தானே? சிலர் "ராஃப்" என்றும் "ரேஃப்" என்றும் அழைத்தனர். 339 00:23:55,476 --> 00:23:57,728 -ராஃப் தான், ஆம். -ஆம். 340 00:23:57,812 --> 00:24:02,108 ஆனா என்னமோ போ. உண்மையில், எப்பவுமே விதவிதமா கேட்டிருக்கேன். 341 00:24:02,233 --> 00:24:07,405 சரி, சரி. ராஃப், தான். நல்லது, நல்ல வலுவான பெயர். 342 00:24:07,488 --> 00:24:09,532 கடவுளே! சே! 343 00:24:09,615 --> 00:24:11,826 ஐந்து நிமிட ஓய்வு. ஐந்து நிமிடம். 344 00:24:11,909 --> 00:24:13,703 -ஐந்து நிமிட ஓய்வு வேணும். -போலாம். 345 00:24:15,163 --> 00:24:16,914 வெறும் கால் விரல்தான்... 346 00:24:18,583 --> 00:24:21,294 அந்த அணியில் இருந்திருந்தேன்னா, 347 00:24:21,377 --> 00:24:24,463 அந்த மூன்று-இலக்க பன்னி என்னை பொட்டை என்றிருப்பான். 348 00:24:24,547 --> 00:24:26,007 "மூன்று-இலக்கம்" சொன்ன. 349 00:24:27,925 --> 00:24:30,428 ஆம், நல்லா இருக்கு. அது ஈர்க்குது. 350 00:24:30,511 --> 00:24:33,306 உன் மருந்து பெட்டியில் இதற்கு ஏதேனும் இருக்கா? 351 00:24:33,389 --> 00:24:35,683 ஆம். இதற்கு தேவையான எல்லாம் இருக்கு. 352 00:24:35,766 --> 00:24:38,811 நீ ஐபுப்ரூஃபென் அணியா அசிடமினோஃபென் அணியா? 353 00:24:39,854 --> 00:24:40,855 இரண்டும்? 354 00:24:41,522 --> 00:24:44,150 நீ திரும்பி போகணும்னா, போகலாம். 355 00:24:44,233 --> 00:24:47,028 -ஹீரோவாலாம் ஆக வேணாம். -நிஜம்மாவா? 356 00:24:47,111 --> 00:24:49,488 நான் உங்களின் வேகத்தை தான் குறைப்பேன். 357 00:24:49,572 --> 00:24:52,116 ஆம், நிச்சயமா. உன் இஷ்டம். 358 00:24:52,700 --> 00:24:54,744 நன்றி, மக்களே. உண்மையா. 359 00:25:03,211 --> 00:25:05,087 பரவாயில்லை. 360 00:25:05,171 --> 00:25:06,631 ஹே! நண்பர்களே. 361 00:25:07,548 --> 00:25:08,966 வாழ்த்துக்கள். 362 00:25:13,387 --> 00:25:14,597 சரி. 363 00:25:17,516 --> 00:25:20,353 இந்த புது இடம் பத்தி எனக்கு உறுதியா தெரியலை. 364 00:25:20,436 --> 00:25:22,271 எனக்கு மரங்களே பிடிக்காது. 365 00:25:22,355 --> 00:25:25,858 அவை அமைதியானவை, ஆன்மீகமானவைனு மக்கள் நினைப்பதுண்டு, 366 00:25:25,942 --> 00:25:28,444 ஆனா நான் என்ன சொல்வேன் தெரியுமா? அவை வயதானவை. 367 00:25:28,527 --> 00:25:32,490 கடற்கரையை ஏன் விட்டு போறோம்? இது கிறுக்குத்தனம். 368 00:25:32,573 --> 00:25:37,245 வெயில் இருக்காது, குளிர் காத்து இல்லை, இரவில் குளிர் குறைவு... 369 00:25:38,287 --> 00:25:40,623 அவளை தொலைத்த இடத்திலிருந்து தள்ளி. 370 00:25:48,172 --> 00:25:51,008 ஹேய், நம் எல்லாருக்கும் இது நல்லது. 371 00:26:00,268 --> 00:26:03,854 ஹேய், மார்ட்டி, நம் அனைவருக்கும் இங்கே அற்புதமா வடிவமைச்சிருக்கேன். 372 00:26:07,233 --> 00:26:08,609 நீ நலமா? 373 00:26:09,860 --> 00:26:11,946 நோரா பத்தி நினைக்கறியா அல்லது... 374 00:26:12,780 --> 00:26:13,948 இல்லை. 375 00:26:14,031 --> 00:26:15,741 அப்புறம் என்ன? 376 00:26:15,825 --> 00:26:18,619 பல வருஷமா நாம் சேர்ந்து தூங்கறோம், 377 00:26:18,703 --> 00:26:20,871 ஆனா ஒருவரையொருவர் கொல்லலையே. 378 00:26:20,955 --> 00:26:23,082 சரி, உட்கார். 379 00:26:24,083 --> 00:26:27,378 நான் தனியா படுக்கலாமானு எண்ணினேன். 380 00:26:27,962 --> 00:26:31,674 எனக்கு தூங்கும் போது சூடா இருக்கும், இடம் மிகக் குறைவு, நான்... 381 00:26:31,757 --> 00:26:33,801 உனக்கு வியர்த்துடக் கூடாதே. 382 00:26:33,884 --> 00:26:36,804 அதான் நான் இங்கே தூங்கறேன். 383 00:26:38,264 --> 00:26:40,057 சரி. 384 00:26:40,141 --> 00:26:44,353 ஆனா என் இடத்தை யாருக்கு வேண்ணா கொடுத்துக்கோ. 385 00:26:46,063 --> 00:26:48,107 ஷெல்பிக்கு கொடுக்கலாமே. 386 00:26:52,653 --> 00:26:53,738 அப்போ, தெரியுமா? 387 00:26:56,741 --> 00:26:59,493 உன்னிடம் சொல்லலாம்னு இருந்தேன். நேரம் கிடைக்கலை-- 388 00:26:59,577 --> 00:27:01,412 டோனி, பரவாயில்லை. 389 00:27:02,830 --> 00:27:04,582 உனக்கு பரவாயில்லையா? 390 00:27:08,294 --> 00:27:09,920 சே! 391 00:27:12,048 --> 00:27:14,300 கோடரி எங்கேனு தெரியுமா? 392 00:27:14,383 --> 00:27:18,346 லியா தூக்கிட்டு வர வேண்டிய பொருட்களின் குவியலின் மீது அதை போட்டேன். 393 00:27:18,429 --> 00:27:22,183 -பல மணிநேரங்களுக்குமுன் அவ வந்திருக்கணும். -அவ நலம் தானே? 394 00:27:24,852 --> 00:27:26,020 ஆம். 395 00:27:27,146 --> 00:27:29,607 எப்ப கைவிடறதுனு அவளுக்கு தெரியலை. 396 00:28:03,599 --> 00:28:06,852 நாம திரும்பி போறது நல்லதுனு சொல்றேன். 397 00:28:06,936 --> 00:28:08,813 இது நிச்சயமா வெற்றிடம். 398 00:28:08,896 --> 00:28:10,731 ஏதாவது கிடைக்கும், சரியா? 399 00:28:10,815 --> 00:28:12,608 வெளிச்சம் போகுமுன் இல்லை. 400 00:28:14,068 --> 00:28:16,946 உன் விரல்களை வைத்து என்ன பண்ற அப்பப்போ? 401 00:28:17,029 --> 00:28:20,241 அஸ்தமன நேரம்னு கணிக்கிறேன். ஒவ்வொரு விரலும் 15 நிமிடம். 402 00:28:20,324 --> 00:28:22,952 -நீ என்ன பாய் ஸ்கவுட்டா? -ஆம். 403 00:28:23,035 --> 00:28:25,287 ஒன்பதாம் வகுப்பில் அதை விட்டேன். 404 00:28:25,371 --> 00:28:29,208 கலையுணர்வுடன் என் இஷ்டப்படி வித்தியாசமா ஏதாவது செய்ய விரும்பினேன். 405 00:28:29,291 --> 00:28:30,584 இல்லையா பின்ன. 406 00:28:30,668 --> 00:28:34,964 இந்த ஆண்மை அர்ஜுனன் சொல்வதை ஆமோதிக்க மனமில்லாவிடினும், 407 00:28:35,047 --> 00:28:37,758 ஏதாவது கிடைக்கும்னு தோணுது. 408 00:28:37,842 --> 00:28:42,138 நாம பத்திரிக்கையில் வரும் பிரபலங்கள் வீட்டிற்கு போக போறோம் போல. 409 00:28:42,221 --> 00:28:46,100 -கோடீஸ்வரன் சொந்தக்காரனா இருப்பான். -அப்படி இருக்க வேண்டாம். 410 00:28:46,183 --> 00:28:48,352 என்ன சொல்ற, டேமியன்? 411 00:28:48,436 --> 00:28:49,979 அவன் பெயர் ஹென்ரி தானே. 412 00:28:50,062 --> 00:28:52,064 உன் நண்பன் என்னையும் தி ஓமெனில் 413 00:28:52,148 --> 00:28:55,401 வரும் பேய் பையனையும் ஒப்பிடறான்னு நினைக்கிறேன். 414 00:28:55,484 --> 00:29:00,114 ஆனா ஒரு பணக்கார தனியாளின் வீட்டிற்கு போவதில் சிறிதளவும் விருப்பமில்லை. 415 00:29:00,239 --> 00:29:02,616 -ஏன்? -ஏன்னா நம்மை கொன்னுடுவான். 416 00:29:02,700 --> 00:29:04,743 யோசிச்சு பாருங்க. 417 00:29:04,827 --> 00:29:08,456 ஜெனரல் ஜாராஃப், த மோஸ்ட் டேஞ்ஜரஸ் கேம், போ டாமரன், எக்ஸ் மாகினா... 418 00:29:08,539 --> 00:29:09,707 ட்ராகுலா. 419 00:29:09,790 --> 00:29:11,959 அதுமீறி நுழைந்தவர்களை கொல்வதே அவர்கள் வேலை. 420 00:29:12,042 --> 00:29:15,045 ட்ராகுலா கோடீஸ்வரனல்ல, அவன் சாகாதவன். 421 00:29:15,129 --> 00:29:17,715 பணவீக்கத்தை கணக்கிலெடுத்தால் கோடீஸ்வரனே. 422 00:29:17,798 --> 00:29:20,926 பணமும் தனிமையும் அவர்களை 423 00:29:21,677 --> 00:29:23,888 ரத்தவெறி பிடித்த விசித்திரர்களாக்கியது. 424 00:29:23,971 --> 00:29:27,558 ஒரு எதிர்கால கோடீஸ்வரனா, இந்த தாக்குதலை எதிர்க்கிறேன், சரியா? 425 00:29:27,641 --> 00:29:29,477 நல்ல மக்களும் உள்ளனர். 426 00:29:29,560 --> 00:29:31,020 மெலின்டா கேட்ஸ். 427 00:29:31,103 --> 00:29:32,521 டாடி வார்பக்ஸ். 428 00:29:32,605 --> 00:29:34,773 மிஸ்டர் பீனட். 429 00:29:34,857 --> 00:29:37,902 அவன் பண்புள்ள கனவான். அந்த தொப்பியை தூக்கிட்டே இருப்பான். 430 00:29:37,985 --> 00:29:40,696 மிஸ்டர் பீனட் கோடீஸ்வரனா ஒற்றை கண்ணாடியா? 431 00:29:40,779 --> 00:29:45,034 எல்லாரும் வாயை மூடிட்டு ஏதாவது கிடைக்குதானு பார்க்கறீங்களா? 432 00:29:45,117 --> 00:29:48,245 -"வாயை மூடிட்டு"னு சொல்லணும். -ஏதோ ஒண்ணு. 433 00:29:48,996 --> 00:29:51,582 அப்போ திரும்பி போகலாம், வெட்டி பசங்களா. 434 00:29:51,665 --> 00:29:53,709 நான் சிறுநீர் கழித்தபின். 435 00:29:54,710 --> 00:29:56,795 எனக்கும் போகணும். 436 00:30:02,718 --> 00:30:04,345 நன்றி, நண்பா. 437 00:30:04,428 --> 00:30:06,847 தனிமைக்கு நன்றி, உனக்கு பெரிய மனது. 438 00:30:06,931 --> 00:30:07,890 சரி. 439 00:30:10,267 --> 00:30:11,268 கேள்வி. 440 00:30:13,062 --> 00:30:16,440 -சிறுநீர் கழிக்கும் போது வலிக்குதா? -இல்லை. 441 00:30:17,525 --> 00:30:20,611 எப்பயாவது அடி பட்டிருக்கணும். 442 00:30:20,694 --> 00:30:24,782 தண்ணியில் ரொம்ப நேரம் இருந்திருப்பேன், இப்போ எனக்கு... 443 00:30:24,865 --> 00:30:29,370 -உப்புநீர் ஆண்குறி. -அது மரண தண்டனை போல. 444 00:30:29,453 --> 00:30:33,415 -நிஜமாவா சொல்ற? -இல்லை, உப்புநீர் ஆண்குறி உண்மையில்லை. 445 00:30:33,499 --> 00:30:35,834 -வாழ்க்கை அப்படி தான். -வாழ்க்கை எப்படி? 446 00:30:35,918 --> 00:30:37,336 ஒரு மரண தண்டனை. 447 00:30:39,797 --> 00:30:40,714 என்ன? 448 00:30:41,840 --> 00:30:44,051 இதை உலர வைக்க எதுவும் இல்லையே. 449 00:30:44,134 --> 00:30:46,428 நீ அதை தாண்டி வரணும். 450 00:30:46,512 --> 00:30:50,099 உன்னால் மட்டும் தான் அதை ஆட்டி விடவோ, சும்மா விடவோ முடியலை. 451 00:30:50,182 --> 00:30:53,727 சரி, என்ன இருக்குனு பார்க்கிறேன். 452 00:30:54,812 --> 00:30:56,939 இது எடுத்துக்கோ. பப்ளிக்ஸ் ரசீது. 453 00:31:01,402 --> 00:31:05,906 -இப்போ இதை என்ன செய்வது? -கடவுளே. அப்படியே போடு! 454 00:31:05,990 --> 00:31:10,578 எதிர்காலம் அறியட்டும், என் அம்மா என்னை பூனை உணவு, பல்ப் வாங்க அனுப்பினாங்கனு. 455 00:31:15,124 --> 00:31:17,668 ஹேய், இந்த க்ரனோலா பாரை கீழே போட்டுட்ட போல. 456 00:31:17,751 --> 00:31:21,630 சே, இது என்னிடமிருந்தது மறந்தே போச்சு. 457 00:31:23,424 --> 00:31:26,635 கேளு, நம்மிடமிருக்கும் இந்த பாரோ, வேறு உணவோ, எதுவானாலும், 458 00:31:26,719 --> 00:31:29,555 நமக்குள் ரகசியமாய் இருக்கட்டும். 459 00:31:29,638 --> 00:31:30,598 இல்ல, தெரியும். 460 00:31:30,681 --> 00:31:33,851 இந்த கருமத்திலிருந்து நாம் சீக்கிரமே விமானம் ஏற்றப்படுவோம், 461 00:31:33,934 --> 00:31:37,187 ஒரு வேளை அது நடக்கலைனா, நாம் தான் நம்மை பாத்துக்கணும். 462 00:31:38,147 --> 00:31:40,065 இந்த பணக்கார பசங்களை பார். 463 00:31:40,274 --> 00:31:42,860 அவர்களுக்கு பொருட்களை நிர்வகிக்கத் தெரியுமா? 464 00:31:43,569 --> 00:31:44,403 இல்லை. 465 00:31:45,404 --> 00:31:47,323 நாம் நமக்குனு சேத்துக்கணும். 466 00:31:48,574 --> 00:31:49,992 நீ இதை வெச்சுக்கோ. 467 00:32:38,624 --> 00:32:39,917 ப்ளீஸ், வேண்டாம். 468 00:32:41,877 --> 00:32:44,088 மன்னிக்கணும், நான்... 469 00:32:45,214 --> 00:32:46,715 ஒரு வேகத்தில் எடுத்தேன். 470 00:32:48,884 --> 00:32:52,179 புது முகாமிற்கு கிடைப்பதையெல்லாம் சேகரிக்கிறேன். 471 00:32:58,644 --> 00:32:59,728 நான்... 472 00:33:01,563 --> 00:33:03,524 நான் உனக்கு ஆதரவளிக்கிறேன். 473 00:33:05,150 --> 00:33:07,903 அதாவது, நாம் இங்கிருந்து போவதில் மனமில்லை. 474 00:33:09,363 --> 00:33:12,199 இது தான் நம் வாழ்க்கைனு ஏற்பது போல் இருக்கு, 475 00:33:12,282 --> 00:33:14,243 நம் வீடு அங்கில்லை என்பது போல... 476 00:33:16,328 --> 00:33:18,997 இங்கேயே அதை கட்டணும் என்பது போல. 477 00:33:20,374 --> 00:33:23,252 இந்த ஏற்பு என்ற பண்பிற்கு 478 00:33:23,335 --> 00:33:26,630 ஏன் இவ்வளவு மரியாதை? 479 00:33:26,755 --> 00:33:30,801 கைவிடலுக்கு இன்னொரு பெயர் தானே ஏற்பு? 480 00:33:34,763 --> 00:33:36,974 கைவிட மனமில்லை, ரேச்சல். 481 00:33:44,940 --> 00:33:47,735 இது உதவாதா இருக்கும், ஆனா... 482 00:33:50,738 --> 00:33:53,323 நான் அவளை பத்தி நினைக்கிறேன். 483 00:33:55,451 --> 00:33:57,870 அவளை பத்தி தினமும் நினைக்கிறேன். 484 00:34:01,248 --> 00:34:02,624 அதாவது... 485 00:34:03,834 --> 00:34:05,961 இங்கு வருவது அவளின் யோசனையா? 486 00:34:12,009 --> 00:34:14,595 இதை பற்றி எப்படி கேள்விபட்டாள்னு நினைவிருக்கா? 487 00:34:14,678 --> 00:34:17,139 ஸ்கூலிலா, உன் பெற்றோர்களா இல்லை... 488 00:34:17,890 --> 00:34:20,100 வேறு யாராவது உண்டா? 489 00:34:20,267 --> 00:34:22,644 என்னிடம் ஏன் இதை கேட்கிறாய்னு புரியலை. 490 00:34:22,728 --> 00:34:24,646 முயற்சி செய், ரேச்சல். ஞாபக படுத்து. 491 00:34:24,730 --> 00:34:27,566 அவளுக்கு எப்படி தெரிந்தது, ஏன் இங்கே வந்தாள்னு யோசி. 492 00:34:29,359 --> 00:34:31,195 அவளுக்கு பயம். 493 00:34:31,779 --> 00:34:34,031 எப்படி அவளுக்கு இது தெரிந்தது? 494 00:34:34,114 --> 00:34:38,243 அவளுக்கு பயம், நான்... 495 00:34:39,286 --> 00:34:41,789 நான் இறக்கப் போறேன்னு, அவள்-- 496 00:34:41,872 --> 00:34:44,333 ஆனா அவ இந்த இடத்தை பத்தி எங்க கேள்விப்பட்டா? 497 00:34:44,416 --> 00:34:46,335 அதுதான் காரணம், சரியா? 498 00:34:46,418 --> 00:34:48,962 -அவளுக்கு இதெப்படி தெரிந்தது? -அதனால் தான். 499 00:34:49,046 --> 00:34:51,298 அதனால் தான், சரியா? 500 00:34:51,381 --> 00:34:53,258 நான் இங்கு வரணும்னு விரும்பினாள். 501 00:34:53,926 --> 00:34:57,054 என்னை காப்பாற்ற முயன்றாள்... 502 00:34:57,137 --> 00:34:59,848 இப்போ அவ போயிட்டா, அது என் தவறு. 503 00:35:00,182 --> 00:35:03,393 இப்போ அவ போயிட்டாள், அது என் தவறு. 504 00:35:03,477 --> 00:35:07,064 -அவ உன்னை இங்கே எப்படி கூட்டி வந்தா? -அவ போயிட்டா, என் தவறு! 505 00:35:07,147 --> 00:35:10,609 -அவ போயிட்டா! -ரேச்சல், ரேச்சல், என்னிடம் சொல்லணும்! 506 00:35:10,692 --> 00:35:13,028 -ரேச்சல், ரேச்சல்-- -சந்தோஷமா இப்போ? 507 00:35:13,612 --> 00:35:17,199 அவ போயிட்டா, அது என் தவறு! அதுதானே உனக்கு தெரிஞ்சுக்கணும்? 508 00:35:17,282 --> 00:35:19,868 அவ போயிட்டா, அது என் தவறு! 509 00:35:35,259 --> 00:35:36,635 என்ன கருமம் அது? 510 00:35:37,594 --> 00:35:39,721 அவளுக்கு தெரிஞ்சதை தெரிஞ்சுக்கணும். 511 00:35:39,888 --> 00:35:43,433 ஒரு நூலிழைல தொங்கறவளை வெட்ட போற? 512 00:35:43,517 --> 00:35:44,977 உனக்கு என்ன ஆச்சு? 513 00:35:45,060 --> 00:35:48,063 உன் கற்பனைகளையும், கோட்பாடுகளையும் 514 00:35:48,146 --> 00:35:51,275 இப்பவே எங்கேயாவது புதைச்சிடு. 515 00:35:51,358 --> 00:35:55,153 அதை மறுபடியும் ரேச்சல் பக்கம் கொண்டு போனனா, 516 00:35:55,237 --> 00:35:56,738 உன்னை கொன்னுடுவேன். 517 00:36:02,953 --> 00:36:05,539 சில யதார்த்தங்களை ஏற்பது மிகக் கடினம். 518 00:36:06,999 --> 00:36:10,210 மிக பயம் தரக்கூடியது, 519 00:36:11,253 --> 00:36:12,379 மிக அசிங்கமானது, 520 00:36:12,462 --> 00:36:14,923 மிகப் பெரியது. 521 00:36:16,174 --> 00:36:18,385 நாங்க அங்கே முதலில் போன போது, 522 00:36:18,468 --> 00:36:21,680 தங்களது பயத்தை யாரும் ஒத்துக்க விரும்பலை. 523 00:36:22,264 --> 00:36:24,766 அதுவரை எதுவுமே மனசுக்குள் நுழையலை... 524 00:36:24,850 --> 00:36:28,937 தேடல்னு போனோம், பெரிய வெற்றி இல்லை. 525 00:36:29,021 --> 00:36:31,106 ஏதாவது கிடைக்கும். 526 00:36:31,189 --> 00:36:33,400 மற்றவர்களுக்கு கிடைச்சிருக்கும். 527 00:36:33,483 --> 00:36:35,068 அவங்க திரும்பிட்டாங்க. 528 00:36:38,739 --> 00:36:40,198 அய்யோ என்ன? 529 00:36:51,126 --> 00:36:53,295 அய்யோ. கடவுளே. 530 00:37:04,139 --> 00:37:07,142 அய்யோ. சே. 531 00:37:07,225 --> 00:37:08,477 அய்யோ. 532 00:37:18,779 --> 00:37:20,113 டிஜே. 533 00:37:22,908 --> 00:37:25,327 -ஆமா. -இது எப்படி நடந்தது? 534 00:37:25,410 --> 00:37:26,954 எங்களுக்கு தெரியலை. 535 00:37:28,288 --> 00:37:31,124 எங்களது ஊகம், அவன் சிறுநீர் கழிக்க போனான், 536 00:37:32,042 --> 00:37:34,795 பாறையில் தடுக்கினான், அலைகள் இழுத்து வந்தது... 537 00:37:37,172 --> 00:37:39,383 அலைகள் இழுத்து வந்தபின்... 538 00:37:40,133 --> 00:37:42,177 எனக்கு தெரியலை, ஆனா... 539 00:37:44,888 --> 00:37:46,473 அது என்னை அச்சுறுத்துது. 540 00:37:49,685 --> 00:37:53,271 அந்த தீவில் நடந்த நிறைய விஷயங்கள் போல. 541 00:37:58,777 --> 00:38:02,531 -அது எப்படி நடந்ததுனு தெரியாது. -அந்த அலை மிக மோசம். 542 00:38:02,614 --> 00:38:06,284 ஏதாவது பாறையில் இடிச்சிருப்பான், ஏதாவது அவனை தாக்கியிருக்கும். 543 00:38:06,368 --> 00:38:08,704 சே. இயற்கைகிட்ட விளையாடக் கூடாது. 544 00:38:10,998 --> 00:38:14,292 -இவனை என்ன செய்வது? -இங்கேயே விட முடியாது. 545 00:38:14,710 --> 00:38:17,754 இத்தீவின் அனைத்து ஊனுண்ணிகளும் அவனைத் தேடி வரும். 546 00:38:21,883 --> 00:38:23,260 பின்னர், நம்மை. 547 00:38:24,970 --> 00:38:27,014 கடற்படை இறுதிச் சடங்கு செய்வோம், 548 00:38:28,390 --> 00:38:30,892 சேவையில் என் தந்தையின் நண்பர்கள் சிலரைப் போல. 549 00:38:33,562 --> 00:38:35,272 கடலில். 550 00:38:36,523 --> 00:38:38,191 கண்டிப்பா கூடாது. 551 00:38:38,275 --> 00:38:42,487 -அவனைத்தின்றது அங்கிருக்கும்போதா? -இல்லை, மக்களே. போ சொல்வது சரி. 552 00:38:42,571 --> 00:38:44,489 அது முட்டாள்தனம். 553 00:38:44,698 --> 00:38:47,951 இவனை நம் பக்கத்தில் எங்கேயாவது மறைத்து வைத்தால், 554 00:38:48,035 --> 00:38:49,870 அப்போ நமக்கு பாதுகாப்பு. 555 00:38:53,999 --> 00:38:56,418 ஒசாமா பின் லேடனுக்கு கடலில் தான் அடக்கம். 556 00:38:56,501 --> 00:38:58,628 கடவுளே, அதை பத்தி யாருக்கு கவலை? 557 00:39:00,839 --> 00:39:05,385 சரி, அப்போ, இதை யார் செய்யப் போறாங்க? 558 00:39:06,845 --> 00:39:10,974 ஏன்னா ஒருத்தன் முகத்தை கிழிக்கக்கூடிய ஒன்று அங்கிருக்குனா... 559 00:39:12,100 --> 00:39:13,810 நான் செய்யலை. 560 00:39:18,315 --> 00:39:19,399 நான் செய்றேன். 561 00:39:22,277 --> 00:39:23,695 என்னால் தனியா முடியாது. 562 00:39:24,362 --> 00:39:27,532 ராஃப், நீ கூட வரயா? 563 00:39:30,619 --> 00:39:32,454 சரி. வரேன். 564 00:39:32,537 --> 00:39:34,247 என்னை தேர்ந்தெடுத்தான். 565 00:39:35,624 --> 00:39:38,752 ஏன்னு தெரியலை, ஆனால் என்னை தேர்ந்தெடுத்தான். 566 00:39:40,378 --> 00:39:43,590 இருளில் அவனுடன் செல்ல என்னை தேர்ந்தெடுத்தான், 567 00:39:45,675 --> 00:39:47,219 அதை நான் விரும்பினேன். 568 00:40:56,079 --> 00:40:58,707 புது முகாமில் குளிர் குறைவு. 569 00:40:59,833 --> 00:41:03,420 நல்ல சூழலும் கூட. மார்த்தா வடிவமைத்தது. 570 00:41:03,503 --> 00:41:08,049 உன்னை கிளப்ப நான் இங்கு வரலை. 571 00:41:08,800 --> 00:41:10,802 நீ இங்கே இருக்கணும், நீ இரு. 572 00:41:20,520 --> 00:41:25,025 என்னிடம் ஒரு பள்ளி ஆலோசகர் ஒரு சிற்றேடு கொடுத்தார், 573 00:41:25,108 --> 00:41:27,694 துயரத்தின் ஐந்து நிலைகளாம், அதை பற்றிய ஏடு. 574 00:41:28,612 --> 00:41:31,531 மறுப்பு, பேரம் பேசுவது, அது போன்று. 575 00:41:32,699 --> 00:41:35,452 முட்டாள்தனம். கிறுக்குத்தனம். 576 00:41:37,204 --> 00:41:41,666 அந்த சிற்றேடை வைத்து என் வீட்டிலிருந்து ஒரு சிலந்தியை அப்புறப்படுத்தினேன், 577 00:41:41,750 --> 00:41:43,668 பின் அதை குப்பையில் போட்டேன். 578 00:41:46,129 --> 00:41:50,050 வெறும் ஐந்து மட்டும் இருக்க முடியாதே. 579 00:41:52,844 --> 00:41:55,513 ஒருவரை இழந்தால், 580 00:41:55,597 --> 00:42:01,102 அதன் பின் ஒவ்வொரு நொடியும் புது நரகமாய் தோன்றும். 581 00:42:02,020 --> 00:42:03,813 அதனால், யோசிக்கிறேன், 582 00:42:04,648 --> 00:42:08,944 அவளுக்கு பின் உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் 583 00:42:09,778 --> 00:42:11,446 அத்தனை நிறைய. 584 00:42:14,032 --> 00:42:16,701 ஒரு பில்லியன் கொடிய நிலைகள். 585 00:42:19,079 --> 00:42:21,373 அதனால் உன்னை அவசரப்படுத்தலை. 586 00:42:21,456 --> 00:42:24,668 உனக்கு எவ்வளவு நேரம் தேவைனு நான் முடிவு செய்ய முடியாது. 587 00:42:24,751 --> 00:42:27,754 உன்கூட ஆள் இருந்தா உனக்கு பரவாயில்லைனு நினைக்கிறேன், 588 00:42:27,837 --> 00:42:31,049 ஏன்னா உன்னை நான் இங்கு தனியா விடறதா இல்லை. 589 00:42:31,132 --> 00:42:36,388 நாம் விளையாடக் கூடிய ஆட்டம் ஏதாவது இருக்கா, 590 00:42:36,471 --> 00:42:40,350 பொழுதைப் போக்கவா? 591 00:42:43,561 --> 00:42:45,522 மிஸ் மேரி மாக். 592 00:42:47,649 --> 00:42:49,109 எனக்கு தெரியாதே. 593 00:42:50,485 --> 00:42:54,447 மிஸ் மேரி மாக், மாக், மாக் 594 00:42:55,240 --> 00:42:59,411 உடையோ கருப்பு, கருப்பு, கருப்பு 595 00:42:59,995 --> 00:43:05,166 வெள்ளி பொத்தான், பொத்தான், பொத்தான் 596 00:43:05,250 --> 00:43:09,254 இரு, இது கைதட்டற ஆட்டம் தானே? 597 00:43:12,048 --> 00:43:14,050 நீ என்னை கலாய்க்கற. 598 00:43:18,596 --> 00:43:21,141 என்னை நானே கிண்டல் பண்ணி நகைச்சுவை. 599 00:43:27,188 --> 00:43:29,607 இது என்னனு இப்ப உன்னிடம் சொல்றேன். 600 00:43:31,985 --> 00:43:33,862 என்னால் மீள முடியலை. 601 00:43:35,572 --> 00:43:40,118 இந்த உணர்வை மீறி வெளியே வர முடியலை. 602 00:43:43,371 --> 00:43:44,581 நான்... 603 00:43:46,624 --> 00:43:48,084 சோர்வா இருக்கேன். 604 00:43:50,045 --> 00:43:52,589 நீ என்னிடம் ரொம்ப கனிவாதான் இருக்க, 605 00:43:52,672 --> 00:43:55,884 ஆனா நீ என்னை அப்படி பார்த்துக்க வேணாம். 606 00:43:57,469 --> 00:43:59,512 அதைத்தான் அவ செஞ்சா. 607 00:44:03,224 --> 00:44:06,644 அந்த இடத்தை நிரப்ப நான் இன்னும் தயாராக இல்லை. 608 00:44:38,176 --> 00:44:40,011 நீ வரயா? 609 00:45:01,408 --> 00:45:04,285 இது மேம்படுத்தல் தானே? 610 00:45:05,078 --> 00:45:07,497 அதுதான்னு தெரியும், 611 00:45:08,498 --> 00:45:12,252 ஆனா எல்லா விதத்திலும் ஏதோ சரியா இல்லாத மாதிரி இருக்கு. 612 00:45:13,586 --> 00:45:17,006 தெரியும். நம் சூழல் சப்தத்தை 613 00:45:17,090 --> 00:45:20,552 கடல் சப்தங்களிலிருந்து காட்டு சப்தத்திற்கு மாற்றியிருக்கோம். 614 00:45:20,635 --> 00:45:23,346 ஆனால் அது எனக்கு பொருந்தலை. 615 00:45:23,430 --> 00:45:26,224 இது வேற மாதிரி இருக்கு, அவ்வளவுதான். 616 00:45:30,186 --> 00:45:32,230 அது என்னனு எனக்கு தெரியும். 617 00:45:32,313 --> 00:45:35,442 கடவுளே, மறந்தே போயிட்டேன். 618 00:45:37,819 --> 00:45:40,655 ஒருத்தரை விட்டுட்டோம். 619 00:45:42,407 --> 00:45:44,075 அதோ இருக்கான். 620 00:45:45,410 --> 00:45:46,953 வீட்டிற்கு வருக, மார்க்கஸ். 621 00:45:49,914 --> 00:45:51,833 எரிஞ்சிருப்பான். 622 00:45:51,916 --> 00:45:56,796 மன்னிச்சுடு, கண்ணு. சரியாயிடும். எல்லாம் சரியாயிடும். 623 00:45:58,339 --> 00:46:00,258 சரியாயிடும். 624 00:46:02,260 --> 00:46:04,596 நாம் அனைவரும் காப்பாற்றப்படுவோம். 625 00:46:11,019 --> 00:46:12,979 இதுவல்லவா நம்பிக்கை. 626 00:47:04,072 --> 00:47:07,033 -அவ பெயர் என்ன? -மன்னிக்கணும்? 627 00:47:07,116 --> 00:47:09,744 அந்த ப்ரேஸ்லெட்டுகளை பார்த்திருக்கேன். 628 00:47:09,827 --> 00:47:12,956 அது மாட்டியிருந்தா, உனக்கு ஆள் இருக்குனு அர்த்தம்தானே? 629 00:47:13,039 --> 00:47:15,667 இதுவா, ஆம், இது கிறுக்குத்தனம், தெரியும். 630 00:47:15,750 --> 00:47:18,503 முட்டாள் பசங்களுக்கான கல்யாண மோதிரம் இது. 631 00:47:19,379 --> 00:47:23,132 எனக்கு இது பிடிக்கும். உனக்கும் இது பிடிக்கும் தானே. 632 00:47:23,216 --> 00:47:25,510 வெதுவெதுப்பை கொடுக்க சில. 633 00:47:25,593 --> 00:47:28,054 ஒரு ஸ்வெட்ஷேர்ட், ஒரு பியர் கோட். 634 00:47:28,137 --> 00:47:30,640 இது பியர் இல்லை, ஆனா உனக்கு புரியுதுதானே. 635 00:47:30,723 --> 00:47:33,184 இடிபாடுகளிலிருந்து அலைகள் கொண்டு வந்தது. 636 00:47:35,937 --> 00:47:38,982 "இது ஜாஷ் ஹெர்பெர்ட்டை சேர்ந்தது." 637 00:47:39,065 --> 00:47:40,650 அவனது தாய் அவனை நேசிக்கிறாள். 638 00:47:41,651 --> 00:47:43,236 அவன் வேலைக்காரியை போல. 639 00:47:45,738 --> 00:47:50,410 மரிசாலிடம் சொல்லணும், இப்போ நான் ஜாஷின் உரிமை என்று. 640 00:47:50,493 --> 00:47:52,036 அப்போ, அவ மரிசாலா? 641 00:47:55,081 --> 00:47:58,543 எனக்கும் ஒரு கேர்ள்ஃப்ரெண்ட் உண்டு. ஜூலியா. 642 00:48:00,587 --> 00:48:02,380 போஸ்ட்கார்ட் அனுப்பறேன்னேன், 643 00:48:02,463 --> 00:48:05,842 ஆனா இப்போ புறாவைதான் அனுப்ப முடியும் போல. 644 00:48:08,761 --> 00:48:13,349 ஹேய், உன் மனநிலை பற்றி. நீ நலமா? 645 00:48:15,393 --> 00:48:17,353 நிறைய பேரிடம் இதை கேட்கிறாய். 646 00:48:17,437 --> 00:48:20,189 தெரியும், தெரியும், அது என் வழக்கம். 647 00:48:20,273 --> 00:48:24,402 வட கலிஃபோர்னியாவின் கின்டெர்கார்டென் ஆசிரியர் போல நான்னு ஜூலியா சொல்வா. 648 00:48:24,485 --> 00:48:28,740 இல்லல்ல, அது அருமைன்னு நினைக்கிறேன். 649 00:48:32,118 --> 00:48:34,621 அப்போ, நீ? 650 00:48:39,250 --> 00:48:40,543 இல்லை. 651 00:48:43,254 --> 00:48:44,130 நீ? 652 00:48:46,549 --> 00:48:47,550 இல்லை. 653 00:48:49,093 --> 00:48:51,429 ஆனா என் உள்மனதில் நம்புவதெல்லாம், 654 00:48:51,512 --> 00:48:54,015 "எது உன்னை கொல்லலையோ அது உன்னை வலுவாக்கும்." 655 00:48:57,518 --> 00:48:58,686 நான் இல்லை... 656 00:49:01,981 --> 00:49:05,902 -நீ எது இல்லை? -இன்னும் வலுவாகலை. 657 00:49:06,277 --> 00:49:08,029 ஆனா நீ மாறியிருக்க. 658 00:49:09,030 --> 00:49:11,407 அதை ஒத்துப்பனு நினைக்கிறேன். 659 00:49:11,491 --> 00:49:12,950 எப்படி? 660 00:49:13,034 --> 00:49:18,039 டியுவானாவிலிருந்து வந்த சிறிய நல்ல, அமைதியான கத்தோலிக்க சிறுவன் இல்லை நீங்க. 661 00:49:18,122 --> 00:49:21,334 நீங்க இனி அப்படி இல்லவே இல்லைனு 662 00:49:21,417 --> 00:49:24,170 நான் சொல்லலை, 663 00:49:24,253 --> 00:49:27,548 ஆனா கொஞ்சம் வேறுபாடுகள் இருக்குனு சொல்றேன். 664 00:49:29,008 --> 00:49:30,343 நான் வெறுப்பது... 665 00:49:32,679 --> 00:49:34,722 நம் கட்டுப்பாட்டில் இல்லாதது. 666 00:49:40,520 --> 00:49:42,063 நாம் எதாக மாறுகிறோம் என்பதில். 667 00:49:45,441 --> 00:49:48,319 நாங்க பலவிதமா மாற விரும்ப தொடங்கினோம். 668 00:49:49,529 --> 00:49:51,114 வலிமையுடன். 669 00:49:53,324 --> 00:49:54,784 நேசிக்கப்பட வேண்டி. 670 00:49:58,287 --> 00:49:59,414 பாதுகாப்பாக. 671 00:50:02,625 --> 00:50:04,210 சக்தி வாய்ந்து. 672 00:50:08,881 --> 00:50:10,091 ஏற்கப்பட்டு. 673 00:50:13,094 --> 00:50:14,595 பார்க்கப்பட்டு. 674 00:50:17,306 --> 00:50:18,891 யாருடனாவது. 675 00:50:20,435 --> 00:50:22,353 யாரைப்போலாவது. 676 00:50:24,105 --> 00:50:26,899 அது எல்லாமாகவும் இருக்க விரும்பினோம். 677 00:50:28,359 --> 00:50:30,069 ஆண்களாக இருக்க விரும்பினோம். 678 00:50:31,404 --> 00:50:33,030 ஆனா உண்மை என்னன்னா... 679 00:50:36,743 --> 00:50:39,454 எங்களில் சிலர் பிசாசுகளாக ஆயிட்டிருந்தோம். 680 00:50:46,127 --> 00:50:48,004 இது பிடிக்காதா? 681 00:50:48,087 --> 00:50:50,006 அவ்வளவா குடிப்பதில்லை. 682 00:50:52,467 --> 00:50:55,636 டிஜேக்காக ஒன்றை கீழே கொட்டலாம். 683 00:50:55,720 --> 00:50:58,347 அவன் கணக்குல நாம குளிர் காயறோம், 684 00:50:58,431 --> 00:51:00,308 ஆனாலும், ஒரு மரியாதைக்கு. 685 00:51:04,395 --> 00:51:05,605 இதோ. 686 00:51:06,731 --> 00:51:08,816 -டிஜேக்காக. -டிஜேக்காக. 687 00:51:23,664 --> 00:51:24,957 ஹேய். 688 00:51:27,543 --> 00:51:30,797 நீ நினைச்ச அளவு ரொம்ப கொடுமையா இருந்ததா? 689 00:51:33,925 --> 00:51:36,177 உன்னிடம் கேள்வி கேட்டா பதில் சொல்லு. 690 00:51:36,260 --> 00:51:37,720 சரி, நிச்சயமா. 691 00:51:40,097 --> 00:51:44,060 நான் கற்பனை செய்ய முடியாத அளவு ரொம்ப கொடூரமா இருந்தது, 692 00:51:44,143 --> 00:51:48,064 நீங்க என்னை இதில் ஈடுபடுத்தினீங்க என்பதை நம்ப முடியலை. 693 00:51:48,147 --> 00:51:51,234 அது பாவத்தின் விலை, டெவன். 694 00:51:51,317 --> 00:51:53,194 நாசமா போங்க. 695 00:51:53,277 --> 00:51:56,239 நன்றியே இல்லையே உனக்கு. 696 00:51:56,322 --> 00:51:59,367 நீ செஞ்சதுக்கு, நான் யார் காலெல்லாம் பிடிச்சு-- 697 00:51:59,450 --> 00:52:02,870 "நாசமா போங்க"னு சொன்னது உங்களுக்கு புரியலையா, மா? 698 00:52:04,497 --> 00:52:07,124 ஒண்ணு சொல்லட்டுமா? கேவலமா சொதப்பிட்டேன். 699 00:52:07,208 --> 00:52:10,378 நான் கேவலமான பையன். ஆம். 700 00:52:10,461 --> 00:52:13,673 உலகம் பற்றியும் தெரியாது, தன்னை பற்றியும் தெரியாது, 701 00:52:13,756 --> 00:52:15,925 அப்பப்போ எதையாவது பாழாக்க வேண்டியது, 702 00:52:16,008 --> 00:52:19,011 அப்படிதான் தினம் வாழ்கிறேன். 703 00:52:20,054 --> 00:52:23,182 என் செயலால் ஒருத்தர் இறந்துட்டார். 704 00:52:23,266 --> 00:52:25,059 ஆனா நீங்க, 705 00:52:25,142 --> 00:52:30,606 இந்த பசங்களின் வாழ்க்கையை அழிக்கும் ஒரு வயது முதிர்ந்தவர், 706 00:52:30,690 --> 00:52:32,775 இது விபத்தல்ல. 707 00:52:33,484 --> 00:52:34,610 நீங்க திட்டமிட்டது. 708 00:52:37,822 --> 00:52:39,073 அதை ரசிக்கறீங்க. 709 00:52:41,033 --> 00:52:42,702 நான் சொதப்பலா இருக்கலாம். 710 00:52:43,578 --> 00:52:46,080 ஆனா நீங்க ஒரு சைக்கோ. 711 00:52:55,590 --> 00:52:58,926 இன்று கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி. 712 00:53:00,052 --> 00:53:02,513 உங்களை மீண்டும் அழைப்போம், 713 00:53:02,597 --> 00:53:04,348 நாளையே கூட இருக்கலாம், 714 00:53:04,432 --> 00:53:06,058 அதற்கு தயாரா இருக்கவும். 715 00:53:07,518 --> 00:53:08,769 பார்த்துக்கோங்க. 716 00:53:26,746 --> 00:53:28,956 கத்தாதே. 717 00:53:31,626 --> 00:53:36,672 எங்கள் அன்புக்குரிய ஜேமிக்காக 718 00:55:20,693 --> 00:55:22,695 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 719 00:55:22,778 --> 00:55:24,780 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்