1 00:00:05,339 --> 00:00:06,965 ஒன்று கூடியதற்கு நன்றி, நண்பர்களே. 2 00:00:07,049 --> 00:00:11,011 சில விஷயங்கள் சொல்ல வேண்டி இருப்பதால் தான் இந்த அவசரக் கூட்டம். 3 00:00:11,094 --> 00:00:13,055 ஜோ, பிற்பாடு தேவைப்படும் எனவே நீ படம்பிடி. 4 00:00:14,264 --> 00:00:16,433 இது தான் அந்த விஷயம். 5 00:00:16,892 --> 00:00:18,519 -மீட்டிங் நடக்கிறது! கிளம்பு! -சரி. 6 00:00:18,602 --> 00:00:19,770 பரவாயில்லை. அவன் இருக்கலாம். 7 00:00:19,853 --> 00:00:21,396 நீயும் இதைக் கேட்க விரும்பலாம். 8 00:00:21,480 --> 00:00:22,940 -இல்லை, பரவாயில்லை. -இங்கேயே இருந்து கவனி! 9 00:00:23,023 --> 00:00:24,024 சரி. 10 00:00:24,733 --> 00:00:28,820 மான்ட்ரியலில் இருந்து, இப்போது தான் அழைப்பு வந்தது சில ஆச்சரியமான விஷயங்களைச் சொன்னார்கள். 11 00:00:28,904 --> 00:00:30,864 பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உன் பெயர் உள்ளது. 12 00:00:30,948 --> 00:00:32,323 நீ வழக்கறிஞரை அமர்த்திக்கொள்வது நல்லது. 13 00:00:32,406 --> 00:00:33,909 -நான் சிலரை அழைக்கிறேன். -எனக்கு வழக்கறிஞர் வேண்டாம். 14 00:00:33,992 --> 00:00:36,578 நீ வழக்கறிஞரை அமர்த்த வேண்டும். சிறையில் வழக்கறிஞர் வைக்காமல் தாங்களாகவே வாதாடியவர்களுக்கு 15 00:00:36,662 --> 00:00:39,414 எப்போதும் அதிக தண்டனைக் காலம் கிடைக்கும். பாலியல் துன்புறுத்தல் விவகாரம் எல்லாம் கஷ்டமான விஷயம். 16 00:00:39,498 --> 00:00:41,500 பாலியல் துன்புறுத்தல் வழக்கில் என் பெயர் சொல்லப்படவில்லை. 17 00:00:41,583 --> 00:00:43,335 -நல்ல தற்காப்பு. -இது தற்காப்பில்லை. இதுதான் உண்மை. 18 00:00:43,418 --> 00:00:46,421 நான் யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததேயில்லை. ஜோ, படம்பிடிப்பதை நிறுத்து. 19 00:00:46,505 --> 00:00:47,548 சரி. 20 00:00:48,048 --> 00:00:49,258 சரி, அப்படியானால் என்ன விஷயம்? 21 00:00:49,341 --> 00:00:50,968 மித்திக் குவெஸ்டைத் திரைப்படமாக்க விரும்புகிறார்கள், 22 00:00:51,051 --> 00:00:53,178 அதனுடைய நிர்வாகத் தயாரிப்பாளராக என் பெயர் அறிவிக்கப்படவிருக்கிறது. 23 00:00:53,262 --> 00:00:54,429 அவ்வளவு தான். 24 00:00:54,513 --> 00:00:56,181 ஏற்கனவே நீ நிர்வாகத் தயாரிப்பாளர் தானே? 25 00:00:56,265 --> 00:00:57,975 கேமிற்குத் தான், திரைப்படத்திற்கு இல்லையே. இருந்தாலும்... 26 00:00:58,058 --> 00:00:59,852 -இதைக் கொண்டாடுவோம், நண்பா! -வற்புறுத்த வேண்டாம். 27 00:00:59,935 --> 00:01:03,146 டேவிட், இது அவசரமுமில்லை, ஒரு மீட்டிங்கும் இல்லை. 28 00:01:03,230 --> 00:01:05,065 -இதற்கு எனக்கு நேரமும் இல்லை. -சரி. 29 00:01:05,691 --> 00:01:07,109 கொஞ்சம்... பொறு. எங்கே போகிறாய்? 30 00:01:08,861 --> 00:01:10,612 உன்னுடைய வெற்றி பற்றிய தம்பட்டமெல்லாம் முடித்து விட்டாய் என நினைத்தேன், 31 00:01:10,696 --> 00:01:14,491 சிறைக்கு போகாமல் இருக்க, நான் போய் என் வேலையைப் பார்க்க வேண்டுமே. 32 00:01:14,575 --> 00:01:16,451 உன் சம்பளத்தைப் பற்றிப் பேசினால் இருக்கிறேன், அல்லது... 33 00:01:16,535 --> 00:01:17,995 -சரி. போய்விடு. -சரி. 34 00:01:20,163 --> 00:01:21,874 எவ்வளவு துணிச்சல் இருந்தால், உன்னை அவமதிப்பார்கள். 35 00:01:22,457 --> 00:01:24,168 உன்னுடைய சாதனைகளை அவர்களோடு பகிர விரும்பினாய், 36 00:01:24,251 --> 00:01:26,628 ஆனால் அவர்களோ சோக மூட்டைகளாக இங்கே வந்திருக்கிறார்களே? 37 00:01:27,838 --> 00:01:29,506 -அவர்களைச் சோகமாக்க என்னால் முடியும். -என்ன? 38 00:01:29,590 --> 00:01:30,799 அவர்களை நான் மூட்டையில் போட்டு கட்டி விடுவேன். 39 00:01:30,883 --> 00:01:33,677 வேண்டாம், ஜோ. நீ உன் இயல்பை விட்டு விலகி, கொஞ்சம் கடினமாக நடந்துகொள்கிறாய். 40 00:01:33,760 --> 00:01:35,387 என்ன தெரியுமா? ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள். 41 00:01:35,470 --> 00:01:37,681 -போய் உன் நண்பர்களோடு சேர்ந்து பொழுது போக்கு. -நண்பர்கள். 42 00:01:37,764 --> 00:01:39,558 உண்மையில், உனக்கு என்னவென்று தெரியுமா, ஜோ? 43 00:01:40,851 --> 00:01:44,438 நீ போகும் வழியில், கிரிம்பாப்பிற்குப் போய், அயனை இங்கே வரச் சொல். 44 00:01:45,022 --> 00:01:47,441 எம்கியூவை ஹாலிவுட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. 45 00:01:47,941 --> 00:01:49,693 ஆனால், அதில் வெற்றி அடைவதில் நான் தான் முதல் ஆள். 46 00:01:51,028 --> 00:01:53,238 சரி, நீ அவனை மேலே அனுப்பு. 47 00:01:53,822 --> 00:01:58,076 இந்தச் செய்தியை நான் சொல்லும் போது அவனோட வினோதமான முகம் தொங்கிப்போவதை நான் பார்க்கணும். 48 00:01:59,453 --> 00:02:02,039 இந்த வருடம் பிரிடில்ஸ்பீக்கானது. 49 00:02:14,801 --> 00:02:19,640 அட, கோட், கோட். தயவுசெய்து, எனக்காக வேலை செய். 50 00:02:19,723 --> 00:02:22,184 அவ்வளவு தான். என்னைப் படுத்தாதே, 51 00:02:22,267 --> 00:02:25,771 இல்லையானால் உனக்கு ஃபிரென்ச் ஃபிரைஸ் தர மாட்டேன், ஒன்று கூடத் தர மாட்டேன். 52 00:02:27,731 --> 00:02:28,899 சரி. 53 00:02:34,321 --> 00:02:35,864 அப்படித்தான்! 54 00:02:37,616 --> 00:02:41,161 ஸ்லைஸ், ஸ்லைஸ், பேபி ஸ்லைஸ், ஸ்லைஸ் 55 00:02:42,329 --> 00:02:46,333 மீதிப் பாடல் எப்படி இருக்கும். அயன், மறுபடியும் நான்... 56 00:02:49,253 --> 00:02:50,712 நடக்க முடியாத விஷயத்தை முடித்திருக்கிறேன். 57 00:02:58,887 --> 00:03:02,558 ஹே! டெஸ்டர், என்னுடைய சிப்ஸில் இருந்து உன் அழுக்கான கைகளை எடு. 58 00:03:02,641 --> 00:03:06,520 ஹாய்! மன்னித்துவிடு. பயணத்தின் போது சாப்பிட இருக்கட்டுமே என்று பார்த்தேன். 59 00:03:06,603 --> 00:03:07,688 டோனா வந்திருக்கிறாளா? 60 00:03:07,771 --> 00:03:11,066 இல்லை, அவளுக்கும் அயனுக்கும் கொஞ்சம் பிஸியான வேலை கொடுத்திருக்கிறேன், 61 00:03:11,149 --> 00:03:13,485 அப்போது தான் அவர்கள் என்னைத் தனியே விடுவார்கள். 62 00:03:13,569 --> 00:03:15,946 -அவர்கள் பாலைவனத்திற்கு சென்றிருக்கலாம். -பாலைவனத்திற்கு எதற்கு? 63 00:03:16,029 --> 00:03:17,489 அயனுக்கு அருமையான காட்சி பிடிக்கும். 64 00:03:17,573 --> 00:03:19,658 இப்போது என்ன செய்வார்கள் என்றால், யோசித்துக்கொண்டும், 65 00:03:19,741 --> 00:03:22,244 படிகங்களைத் தள்ளிக் கொண்டும், தியானம் செய்துக்கொண்டும் இருப்பார்கள். 66 00:03:22,327 --> 00:03:24,580 -என்ன? -எப்படியோ, அவர்கள் என்ன செய்தால் என்ன? 67 00:03:24,663 --> 00:03:28,125 நான் வாரக்கணக்கில் இந்த வேலையில் மல்லுக் கட்டிக்கொண்டு இருப்பதைப்பற்றி 68 00:03:28,208 --> 00:03:29,918 அவனுக்குக் கவலையில்லை, ஒருவழியாக இதை முடித்துவிட்டேன். 69 00:03:30,002 --> 00:03:32,296 -ஹே! பிரமாதம்! -இப்போது, இங்கேயிருந்து போ. 70 00:03:32,379 --> 00:03:34,882 இந்த முன்கணிப்பு இயந்திரத்தை நான் சரிசெய்ய வேண்டும். 71 00:03:35,382 --> 00:03:38,010 இரு, நீ இப்போது தானே ஒரு மிகப்பெரிய விஷயத்தை முடித்தாய். 72 00:03:38,093 --> 00:03:40,846 மறுபடியும் வேலை செய்யப் போகக்கூடாது. நாம் இதைக் கொண்டாட வேண்டும். 73 00:03:40,929 --> 00:03:44,141 -நாமா? -ஆமாம், “நாம்” என்று தான் சொன்னேன். 74 00:03:45,184 --> 00:03:46,935 ஆமாம், கண்டிப்பாக. ஏன் கூடாது? 75 00:03:47,019 --> 00:03:49,771 ஸ்கூல் காத்திருக்கட்டும். நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 76 00:03:50,272 --> 00:03:52,357 நாம் ஸ்நாக்ஸ் சாப்பிடப் போக வேண்டும், சரியா? 77 00:03:52,441 --> 00:03:54,443 விருந்து என்றால் பேன் கேக் தான் சிறந்தது. 78 00:03:55,986 --> 00:03:57,988 அதாவது, பேன் கேக்குகள். 79 00:03:58,071 --> 00:04:00,782 உனக்கு பேன் கேக் பிடிக்குமா? மேப்பில் சிரப்? உனக்கு என்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. 80 00:04:00,866 --> 00:04:03,785 -வாஃப்பில்ஸ்? ஏதாவது சொல். -எனக்குப் பேன் கேக் பிடிக்கும். 81 00:04:03,869 --> 00:04:06,121 சரி, நீ எந்த பதிலும் சொல்லவில்லை என்பதால் தான் கேட்டேன். 82 00:04:06,205 --> 00:04:07,664 ஒன்று சொல்லவா? ஏதோ பண்ணு. 83 00:04:07,748 --> 00:04:09,875 அயன் பாலைவனத்துக்குப் போய், அங்கே நிர்வாணமாக, 84 00:04:09,958 --> 00:04:11,793 க்ரிப்டோ நண்பர்களோடு, பியோட் புகைத்துக் கொண்டு இருந்தால், 85 00:04:11,877 --> 00:04:13,712 நானும் ஜாலியாக இருப்பேன். 86 00:04:13,795 --> 00:04:16,882 அது ரொம்பவே தனிப்பட்ட விஷயம். நான் கவலைப்பட வேண்டுமா? டோனா நன்றாக இருக்கிறாளா? 87 00:04:16,964 --> 00:04:20,260 அயன்! 88 00:04:21,053 --> 00:04:23,764 -அயன் எலிசபெத் கிரிம். -இது தான் அவனது நடுப் பெயரா? 89 00:04:23,847 --> 00:04:25,098 இந்த இடத்தின் தலைவர் எங்கே? 90 00:04:25,182 --> 00:04:27,643 டேவிட்டிற்காக அவனை மீட்க வந்திருக்கிறேன். இது மிகவும் முக்கியமான விஷயம். 91 00:04:27,726 --> 00:04:30,020 -அயன்! -கத்துவதை நிறுத்து! அவன் இங்கே இல்லை. 92 00:04:30,103 --> 00:04:32,105 அவனும் டோனாவும் எங்கேயாவது அருமையான லாட்ஜில், ஒருவரை ஒருவர் 93 00:04:32,189 --> 00:04:33,815 காய்ந்த குச்சிகளால் அடித்துக் கொண்டு இருப்பார்கள். 94 00:04:33,899 --> 00:04:35,108 அது தான் நடக்கிறதா என்ன? 95 00:04:35,192 --> 00:04:37,819 நான் அவனுக்கு மெசேஜ் அனுப்பி, டேவிட் அவனைத் தேடிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறேன். 96 00:04:37,903 --> 00:04:39,363 சரி, நல்லது. 97 00:04:40,072 --> 00:04:41,323 வேலை முடிந்தது. 98 00:04:49,081 --> 00:04:50,749 சரி, என்னுடைய இன்றைய வேலை முடிந்துவிட்டது. 99 00:04:52,042 --> 00:04:56,880 நான் என் நண்பர்களோடு 100 00:04:56,964 --> 00:04:59,424 பொழுதைக் கழிக்கப் போகிறேன். 101 00:05:13,063 --> 00:05:16,692 உனக்கு பேன் கேக் பிடிக்குமா, ஜோ? 102 00:05:27,744 --> 00:05:29,830 ஹே, கரோல். உன்னுடைய குப்பையை எடுத்துப் போடவா? 103 00:05:29,913 --> 00:05:31,331 -என்னவோ பண்ணு. -நன்றி. 104 00:05:35,961 --> 00:05:37,379 -உனக்கு ஒன்றுமில்லையே? -பிஸி. 105 00:05:37,462 --> 00:05:38,589 ஆமாம்.தெரிகிறது. 106 00:05:39,464 --> 00:05:41,842 ஒரு துப்புரவாளனாக, நான் நிறைய விஷயங்களைப் பார்க்க முடிகிறது. 107 00:05:42,509 --> 00:05:46,763 மூன்று, நான்கு வேலை விண்ணப்பங்களை நீ குப்பையில் போடுவதையும், 108 00:05:47,264 --> 00:05:49,016 ஓயாமல் “காண்டி கிராஷ்” விளையாடி உன் ஃபோன் திரையில் 109 00:05:49,099 --> 00:05:53,312 உள்ள கறைகளையும், அதில் உன்னுடைய லெவல் 198 என்பதையும் பார்க்க முடிகிறது. 110 00:05:53,395 --> 00:05:54,855 நான் 247 லெவலில் இருக்கிறேன். 111 00:05:54,938 --> 00:05:57,983 பாழாய்ப் போச்சு. பாரு. அதாவது, பழைய பிராட், அதை மிகச் சரியாக சொல்லியிருப்பான். 112 00:05:58,066 --> 00:06:01,778 பரவாயில்லை. நான் சரியில்லை. நானும் பிஸியுமில்லை. 113 00:06:01,862 --> 00:06:04,740 அதாவது, உண்மையில், நான் திண்டாடிக்கொண்டு இருக்கிறேன். 114 00:06:04,823 --> 00:06:06,992 நான் யோசிக்கிறேன். மான்ட்ரியல் உன்னை ஹோடியாக்கியதால் 115 00:06:07,075 --> 00:06:09,453 உனக்கு மனசாட்சி உறுத்துகிறது. 116 00:06:09,536 --> 00:06:10,746 -ஆனால் அவர்களால் முடியாது... -ஹோடி? 117 00:06:10,829 --> 00:06:13,957 ஹோடி. டைவர்சிடி மற்றும் இன்கிளுஷன் துறையின் தலைவர். 118 00:06:14,041 --> 00:06:16,293 ஹோடி. அந்த முழு வார்த்தையையும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டாய். 119 00:06:16,376 --> 00:06:17,628 ஆமாம், அலுத்துவிட்டது. 120 00:06:17,711 --> 00:06:19,713 சரி, உன்னை ஹோடியாக்கினார்கள், ஆனால், உண்மையான வித்தியாசத்தைக் காட்ட, 121 00:06:19,796 --> 00:06:21,298 -அவர்கள் பணம் தரவில்லை. -ஆமாம். 122 00:06:21,381 --> 00:06:24,092 சரி. ஒன்றுமே இல்லாததில் இருந்து நீ நிறைய பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கும். 123 00:06:24,176 --> 00:06:26,094 நான் இதை மட்டும் செய்தாலே போதுமா? 124 00:06:26,178 --> 00:06:29,348 நான் ஹோமியாக இருந்தபோது, பழைய பிராட்இதைத்தான் செய்வான். 125 00:06:31,266 --> 00:06:32,392 சரி, ஹோமி என்றால் என்ன சொல்... 126 00:06:32,476 --> 00:06:34,937 நவீனமயம் மற்றும் இணைய வழி வர்த்தகத்தின் தலைமை அதிகாரி. ஹோமி. 127 00:06:35,896 --> 00:06:39,191 -கண்டிப்பாக. -ஆனால், அதெல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு. 128 00:06:39,691 --> 00:06:40,943 ரொம்ப காலத்திற்கு முன்பு. 129 00:06:42,778 --> 00:06:44,488 அவ்வளவு காலத்திற்கு முன்பெல்லாம் இல்லை. 130 00:06:45,239 --> 00:06:49,117 -நான் பழைய பிராட்டிடம் கொஞ்சம் பேசலாமா? -பொறு, நீ ஹோமியிடம் பேச விரும்புகிறாயா? 131 00:06:50,410 --> 00:06:52,162 ஆம், நான் ஹோமியிடம் பேச விரும்புகிறேன். 132 00:06:55,958 --> 00:06:57,209 என்னுடன் வா. 133 00:07:01,046 --> 00:07:03,090 இப்போதெல்லாம் பல்கேரியாவில் நிறைய படப்பிடிப்புகள் நடக்கின்றன, 134 00:07:03,173 --> 00:07:06,009 ஆனால், ஐஸ்லாந்திலும் இப்படி இருக்குமா எனச் சந்தேகமாக இருக்கிறது. 135 00:07:06,093 --> 00:07:08,679 அங்குதான், என் முன்னாள் மனைவியிடம் காதலைத் தெரிவித்தேன். 136 00:07:08,762 --> 00:07:13,183 வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராக மீண்டும் இங்கு வருவது நிறைவைத் தருகிறது. 137 00:07:13,976 --> 00:07:14,977 இல்லையென்றால், 138 00:07:15,394 --> 00:07:20,232 பழைய தகவல்களை நீ என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள். 139 00:07:20,315 --> 00:07:22,609 மீண்டும் சொல்கிறேன், இது தனிப்பட்ட விஷயமில்லை. 140 00:07:22,693 --> 00:07:23,694 இது வெறும் “பிசினஸ்” தான். 141 00:07:25,279 --> 00:07:26,530 வெறும் “பிசினஸ்” தான். 142 00:07:26,822 --> 00:07:28,490 -நல்லது. -ஆம், உனக்கு பிடிச்சிருக்கா? 143 00:07:28,574 --> 00:07:31,076 எம்கியூவில் நீ தலைமைத் தாங்க ஆரம்பித்ததிலிருந்து 144 00:07:31,159 --> 00:07:32,661 பல விஷயங்கள் மேம்பட்டுள்ளன. 145 00:07:32,744 --> 00:07:34,663 -நீ உன் பழைய அலுவலகத்தை என்னிடம் கொடுத்து... -சரி. 146 00:07:34,746 --> 00:07:38,000 ...புதுபிக்க வாய்ப்பளித்திருக்கிறாய். 147 00:07:38,083 --> 00:07:40,169 நானும், என் செடிகளும் உனக்கு என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம். 148 00:07:40,252 --> 00:07:43,172 சரி, உன்னிடம் நிறைய செடிகளும், பூனை சம்பந்தபட்ட பொருட்களும் இருக்கின்றன. 149 00:07:43,255 --> 00:07:45,591 -பூனை சம்பந்தப்பட்ட பொருட்கள் நிறைய இருக்கு. -என்றாவது ஒருநாள் பூனை வளர்ப்பேன். 150 00:07:46,091 --> 00:07:47,092 வளர்ப்பேன் என நம்புகிறேன். 151 00:07:47,176 --> 00:07:49,094 -உன்னிடம் பூனை இல்லையா? -இல்லை. 152 00:07:49,178 --> 00:07:51,138 இன்னும் ஒரே ஒரு உதவி கேட்கலாமா? 153 00:07:51,221 --> 00:07:52,514 -கண்டிப்பாக. -அதைச் செய்யாதே. 154 00:07:53,390 --> 00:07:54,433 என்ன? 155 00:07:54,516 --> 00:07:56,602 விளையாட்டு வீரர்களுக்கு, மற்ற விளையாட்டின் தழுவல்கள் பிடிக்காது. 156 00:07:57,186 --> 00:07:59,688 -அவர்கள் நம்முடையதை பார்க்கக்கூட இல்லை. -பார்க்க வேண்டியதில்லை, பார்க்கவும் மாட்டார்கள். 157 00:07:59,771 --> 00:08:02,191 அவர்கள் ஆன்லைனில் ஒன்றிணைந்து அதன் நற்பெயரைக் கெடுத்து, 158 00:08:02,274 --> 00:08:04,318 நம்மை மோசமாக விமர்சனம் செய்வார்கள். 159 00:08:04,401 --> 00:08:07,237 -குறிப்பாக என்னை. -சரி, நம்முடையது வித்தியாசமாக இருக்கும். 160 00:08:07,321 --> 00:08:09,489 விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல இதைப் பயன்படுத்த எல்லோருக்குமே அனுமதி உண்டு. 161 00:08:09,573 --> 00:08:14,286 அவர்கள் இதை வெறுப்பார்கள், சரியா? இந்த விளையாட்டு தான் அவர்களின் முக்கியமான விஷயம். 162 00:08:14,369 --> 00:08:16,246 ஒருவரின் பிரத்யேகமான இடத்தில், அப்படியே உள்ளே நுழைந்து 163 00:08:16,330 --> 00:08:17,414 குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. 164 00:08:17,497 --> 00:08:19,166 அவர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள்! 165 00:08:20,751 --> 00:08:22,169 நீ சொல்வது சரிதான். 166 00:08:22,252 --> 00:08:25,756 சிலர் கட்டுப்பாடின்றி இருப்பதை விரும்ப மாட்டார்கள். 167 00:08:26,590 --> 00:08:27,716 வந்து, கண்டிப்பாக... 168 00:08:27,799 --> 00:08:31,303 இது அவனை அழ வைக்கலாம். ஓ, ஆமாம். 169 00:08:31,386 --> 00:08:33,013 -அவனா? -அயன். 170 00:08:33,514 --> 00:08:35,224 அட, கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவனை மேலே வரச் சொன்னேன், 171 00:08:35,307 --> 00:08:36,600 இன்னும் ஏன் வரவில்லை? 172 00:08:36,683 --> 00:08:38,769 ஏனென்றால் அவன் என் நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறான். 173 00:08:39,352 --> 00:08:43,440 அவனின் பிரத்தியேக இடத்திற்குச் சென்று, அவன் முகத்தைப் பார்த்து தகவலைச் சொல்லி, 174 00:08:43,524 --> 00:08:45,025 என் சக்தியை மீட்டெடுக்க வேண்டும். 175 00:08:45,108 --> 00:08:47,528 என் மனைவியிடம் காதலைச் சொல்லிய, ஐஸ்லாந்தின் நீர்வீழ்ச்சியை மீட்டெடுப்பது போல, 176 00:08:47,611 --> 00:08:48,612 என் சக்தியையும் மீட்டெடுப்பேன். 177 00:08:48,695 --> 00:08:50,405 -முன்னாள் மனைவி. -ஆம், அப்படித்தான் சொன்னேன். 178 00:08:51,198 --> 00:08:54,618 ஆம். இது ரொம்ப தனிப்பட்ட விஷயம். 179 00:09:01,625 --> 00:09:05,212 இங்கு ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு வேலை எதுவும் இல்லையா? 180 00:09:05,295 --> 00:09:07,089 சாதாரண உணவை விட ப்ரஞ்ச் சிறப்பாக இருக்கும், ஜோ. 181 00:09:07,172 --> 00:09:08,215 ஆமாம். 182 00:09:08,298 --> 00:09:09,299 -சரியா? -சரி. 183 00:09:09,383 --> 00:09:11,093 இங்கு யாரும் யாரையும் விமர்சனம் செய்ய மாட்டார்கள் 184 00:09:11,176 --> 00:09:13,637 நாம் நாமாக இருக்கலாம்,தெரியுமா? 185 00:09:13,720 --> 00:09:16,473 -இது நம்பத்தகுந்த இடம். -சரியாகச் சொன்னாய். 186 00:09:16,557 --> 00:09:17,975 நாம் பேசலாம், சிரிக்கலாம், 187 00:09:18,058 --> 00:09:19,852 எல்லோருமே சந்தோஷமாக இருப்பார்கள். 188 00:09:19,935 --> 00:09:23,689 ஆமாம், ஜோ. நீ ஏற்கனவே ப்ரஞ்சுக்குச் சென்றிருப்பது போல் நடி. 189 00:09:25,023 --> 00:09:27,025 -“த ப்ரஞ்ச்” என்றா சொன்னாய்? -ஆம். 190 00:09:27,568 --> 00:09:28,735 அது வெறும் ப்ரஞ்ச். 191 00:09:29,695 --> 00:09:33,156 இல்லை, எனக்குத் தெரியும்... ஆஸ்திரேலியாவில் இதை வேறமாதிரி சொல்வோம். 192 00:09:33,240 --> 00:09:34,658 -ஆஸ்திரேலியாவில் "த ப்ரஞ்ச்" எனச் சொல்வீர்களா? -ஆம். 193 00:09:34,741 --> 00:09:37,327 இப்படி சொல்ல மாட்டீர்களா? வித்தியாசமாக இருக்கிறது. 194 00:09:37,411 --> 00:09:38,787 பெண்களே, உங்கள் மேஜை தயாராகிவிட்டது. 195 00:09:38,871 --> 00:09:40,163 மேஜை தயாராகிவிட்டது. 196 00:09:41,999 --> 00:09:43,667 என்ன வேலை செய்கிறீர்கள்? 197 00:09:43,750 --> 00:09:45,878 நீ என்ன செய்கிறாய், ஜோ? வேண்டாம், வேண்டாம். 198 00:09:45,961 --> 00:09:47,671 -ஒரு கேள்வி கேட்டேன். -மன்னியுங்கள். 199 00:09:47,754 --> 00:09:49,590 அதில் என்ன பிரச்சினை என எனக்குப் புரியவில்லை. 200 00:09:50,632 --> 00:09:53,510 ஆம், பெர்க்லே ரொம்ப நன்றாக இருக்கு. அங்கு மீண்டும் போக ஆர்வமாக இருக்கிறேன். 201 00:09:53,594 --> 00:09:55,262 அங்கு அப்படியொரு சமுதாயத்தை உருவாக்குகின்றேன். 202 00:09:57,764 --> 00:09:59,516 கடவுளே! நீ எவ்வளவு ஆர்டர் செய்தாய்? 203 00:09:59,600 --> 00:10:02,311 பேன் கேக் நமக்குத்தான், செல்லங்களே. சாப்பிடுங்கள். 204 00:10:02,394 --> 00:10:05,063 இருந்தாலும், நிறைய சாப்பிடாதீர்கள் கொஞ்சம் வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும், 205 00:10:05,147 --> 00:10:07,733 ஏனென்றால் இப்போது எனக்கு வேலையில்லை. 206 00:10:07,816 --> 00:10:08,984 அதன் கஷ்டம் உங்களுக்குத் தெரியும் தானே. 207 00:10:09,067 --> 00:10:13,405 -நீதானே இதற்கு பணம் தருவாய், பாபி? -ஆம், கண்டிப்பாக. இது ஒரு பார்ட்டி. 208 00:10:13,488 --> 00:10:16,617 ஹே! வேலையில் சிறப்பாகச் செயல்படுகிறேன் 209 00:10:16,700 --> 00:10:19,745 திறமையுள்ளவளாக இருக்கும் எனக்கு அயனின் மதிப்பீடு தேவையில்லை. 210 00:10:19,828 --> 00:10:20,829 அட, ஆமாம்! 211 00:10:20,913 --> 00:10:24,041 கல்லூரியில் சிறப்பாகச் செயல்பட்டு நிறைய நண்பர்களைச் சேர்த்திருக்கிறேன். 212 00:10:24,124 --> 00:10:24,958 ஹேய். 213 00:10:25,042 --> 00:10:26,418 நீ எதைக் கொண்டாடுகிறாய், ஜோ? 214 00:10:27,669 --> 00:10:30,339 என்னுடன் பள்ளியில் படித்த பெண் ஒருத்தி என்னைக் கேலி செய்வாள். 215 00:10:30,422 --> 00:10:32,174 ஒரு சூறாவளியில் அவளது வீட்டை இழந்துவிட்டாள். 216 00:10:36,011 --> 00:10:37,262 நான் தவறாக சொல்லிவிட்டேன், இல்லையா? 217 00:10:39,223 --> 00:10:40,974 இல்லை. அது... அது... 218 00:10:41,350 --> 00:10:42,351 ஆம். 219 00:10:42,434 --> 00:10:45,687 ஒன்று சொல்லவா? இங்கு ஜோ அவளது ப்ரஞ்சை சாப்பிடுகிறாள். 220 00:10:46,939 --> 00:10:48,565 -வெறும் ப்ரஞ்ச் தான். -ம்-ம். 221 00:10:48,649 --> 00:10:49,650 சரி. இல்லை, புரிகிறது. 222 00:10:53,946 --> 00:10:55,614 பிரிடில்ஸ்பீ வந்துவிட்டான்! 223 00:10:57,741 --> 00:10:59,493 முட்டாள்தனமான அலுவலகம். 224 00:11:01,787 --> 00:11:03,205 ஹாய், அயன்! 225 00:11:05,499 --> 00:11:06,625 பாபி? 226 00:11:09,253 --> 00:11:10,420 உன் மிட்டாயை எடுத்துக்கொள்கிறேன். 227 00:11:16,844 --> 00:11:18,470 இது நிஜம் தானா? 228 00:11:19,388 --> 00:11:20,889 சரி, என்னை நிற்க வைக்கப் போகிறாயா? 229 00:11:22,307 --> 00:11:23,600 சரி, என்னுடன் பேசி ஜெயித்து விடு. 230 00:11:24,768 --> 00:11:25,853 மோசம். 231 00:11:26,436 --> 00:11:29,022 அடக் கடவுளே. டோக்கியோ சுரங்கப்பாதை மாதிரி இருக்கு. 232 00:11:31,942 --> 00:11:34,945 பொத்தான் எங்கே? பொத்தான்கள் எங்கே? 233 00:11:39,241 --> 00:11:40,242 லிஃப்டே திற. 234 00:11:42,035 --> 00:11:43,745 லிஃப்டே இயங்கு. 235 00:11:49,459 --> 00:11:51,086 லிஃப்டே திற. 236 00:11:52,838 --> 00:11:54,006 என்ன... 237 00:11:55,549 --> 00:11:56,717 ஹலோ! 238 00:11:59,720 --> 00:12:02,639 சரி, எனக்கு அக்கறை இல்லை தான், ஆனால், 239 00:12:02,723 --> 00:12:05,350 அயன் என் மெசேஜுக்குக் கூட பதிலளிக்காதது எரிச்சலூட்டுகிறது. 240 00:12:05,434 --> 00:12:06,268 ஆம், எரிச்சலூட்டுகிறது. 241 00:12:06,351 --> 00:12:08,395 அவனின் மதிப்பீடு தேவையில்லை எனச் சொன்னாய். 242 00:12:08,478 --> 00:12:11,607 தேவையில்லை. தேவையில்லை. நான் சும்மா... 243 00:12:12,107 --> 00:12:14,276 நீ எனக்கு ஆதரவாக இரு, சரியா, ஜோ? 244 00:12:14,359 --> 00:12:17,070 த ப்ரஞ்சில் பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். 245 00:12:17,154 --> 00:12:18,197 -வெறும் பிரஞ்ச். -ஆம். 246 00:12:18,280 --> 00:12:21,158 ஆமாம், சரிதான். அயனைப் பற்றி நீ சொல்வது சரிதான். 247 00:12:21,241 --> 00:12:22,284 -அவனை அடிக்க வேண்டும். -ஆமாம். 248 00:12:22,367 --> 00:12:24,828 உன் வெற்றி அவனுக்குப் பயத்தைத் தருவதால் உன்னை நிராகரிக்கிறான். 249 00:12:24,912 --> 00:12:26,663 -ஆம். -உன் ஆற்றலை பொறுக்க முடியவில்லை என்பதால் 250 00:12:26,747 --> 00:12:28,373 மற்றவர்களின் கவனம் உன் மீது விழக்கூடாது என நினைக்கிறான். 251 00:12:28,457 --> 00:12:29,499 சரியாகச் சொன்னாய். 252 00:12:30,709 --> 00:12:33,962 அவன் உனக்கு மெசேஜ் அனுப்புவதற்குள், கார் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். 253 00:12:37,549 --> 00:12:39,259 நான் மறுபடியும் தவறாக பேசிவிட்டேன், இல்லையா? 254 00:12:39,843 --> 00:12:40,886 இல்லை, சரியாகத் தான் இருந்தது. 255 00:12:40,969 --> 00:12:42,930 -கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக இருக்கு. -மனசுக்கு கஷ்டமாக இருக்கு. 256 00:12:43,013 --> 00:12:44,181 அவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது. 257 00:12:44,264 --> 00:12:46,433 நம்மளை நாமே ஆறுதல் படுத்திக்கொள்ள பொய் சொல்லலாம் என நினைத்தேன். 258 00:12:46,517 --> 00:12:49,019 நாம் பொய் சொல்லவில்லை, ஜோ, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். 259 00:12:50,729 --> 00:12:51,730 சரி. 260 00:12:53,982 --> 00:12:55,150 அயன் கேவலமானவன். 261 00:12:56,527 --> 00:12:59,196 -ஆம். அயன் கேவலமானவன். -ஆமாம். 262 00:12:59,279 --> 00:13:01,490 -நாம் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள். -ஆமாம்! 263 00:13:01,573 --> 00:13:04,493 நாம், பிரபலமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் திறமைசாலிகள், அன்பே! 264 00:13:04,576 --> 00:13:07,246 ஆம்! ப்ரஞ்சில் உள்ள சக்தி வாய்ந்த பெண்களுக்கு. 265 00:13:07,746 --> 00:13:08,956 -ப்ரஞ்ச்! -சரியாகச் சொல்லிவிட்டாய்! 266 00:13:42,155 --> 00:13:44,908 நான் கல்லூரிக்குத் திரும்பவும் போக மாட்டேன். 267 00:13:46,326 --> 00:13:48,620 அங்கு யாருக்குமே என்னைப் பிடிக்கவில்லை. 268 00:13:48,704 --> 00:13:50,789 என் மெசேஜுக்கு பதில் அனுப்புடா! 269 00:13:50,873 --> 00:13:52,541 அவர்கள் எல்லோரும் ரொம்ப புத்திசாலிகள். 270 00:13:52,624 --> 00:13:58,338 அதாவது, போன வாரம்தான் பியோவூல்ஃப் என்பது ஆசிரியரின் பெயர், 271 00:13:58,422 --> 00:13:59,631 புத்தகத்தின் பெயரில்லை என கண்டுபிடித்தேன். 272 00:13:59,715 --> 00:14:04,761 அவர் பெயர்... அவரது பெயர் “பேயோ வுல்ஃப்” என நினைத்தேன். 273 00:14:06,430 --> 00:14:09,224 அவர்கள் என்னை முட்டாள் என நினைக்கலாம். 274 00:14:09,308 --> 00:14:10,517 அப்படித்தான் நினைப்பார்கள். 275 00:14:11,101 --> 00:14:12,102 ஜோ! 276 00:14:12,186 --> 00:14:14,479 நான் பக்கபலமாக இருக்கிறேன். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். 277 00:14:14,563 --> 00:14:16,440 குறைந்தபட்சம் அவர்கள் உன்னை கவனிக்கிறார்களே. 278 00:14:16,523 --> 00:14:21,862 கடந்த பத்து வருடமாக எல்லா விஷயங்களிலும் அயனுக்கு நான் உறுதுணையாக இருந்தேன்... 279 00:14:21,945 --> 00:14:23,989 ஆனால் அவன் என்னைப் பொருட்படுத்தவே இல்லை. 280 00:14:24,072 --> 00:14:26,033 ரொம்ப மோசம். 281 00:14:31,330 --> 00:14:32,915 ஆக, இதுதான் ப்ரஞ்ச். 282 00:14:34,791 --> 00:14:36,043 எம்கியூ ஸ்டுடியோஸ் கலைத்துறை 283 00:14:36,126 --> 00:14:39,338 விற்பதற்கு பரிசு பெட்டியை மீண்டும் வடிவமைக்க வேண்டுமா? 284 00:14:39,421 --> 00:14:42,132 சீக்கிரம் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதற்கு என் குழு எனக்கு வேண்டும், சரியா? 285 00:14:42,216 --> 00:14:44,051 எனக்கு ரிக், மெல்லி, அப்புறம் கண்டிப்பாக கெல் வேண்டும். 286 00:14:44,134 --> 00:14:47,012 அவர்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டனர். செய்யும் வேலைக்குப் போதுமான சம்பளம் கிடைக்கவில்லை. 287 00:14:47,095 --> 00:14:48,680 அதுதான் பிரச்சினையே, ஃபில். 288 00:14:48,764 --> 00:14:51,308 நாம் இந்த அலுவலகத்தின் மொத்த வழக்கத்தையும் மாற்ற வேண்டும். 289 00:14:51,391 --> 00:14:54,603 சரி. அதனால்தான் உன்னை வாரயிறுதியில் வேலைப் பார்க்கச் சொல்கிறோம். 290 00:14:54,686 --> 00:14:57,523 இந்த முட்டாள் வீரர்களின் பணத்தை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 291 00:14:57,606 --> 00:15:00,609 நீ சொல்வதைப் பார்த்தால் எங்களை வைத்து பணத்தைச் சம்பாதிப்பாய் போல. 292 00:15:00,692 --> 00:15:02,486 நீ இதை எப்படி புரிந்துகொள்கிறாய் எனத் தெரிகிறது. சரி. 293 00:15:02,569 --> 00:15:05,197 ஆனால், எங்களின் நோக்கம் பட்ஜெட்டை அதிகரித்து 294 00:15:05,280 --> 00:15:07,115 புது ஆட்களை உள்ளே கொண்டுவருவது தான். 295 00:15:07,199 --> 00:15:08,784 புது ஆட்களை வேலைக்கு எடுக்கப் போகிறாயா? 296 00:15:09,326 --> 00:15:11,912 இப்போது இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியவில்லை. 297 00:15:13,747 --> 00:15:16,500 -அது என் வேலையில்லை. -என்னுடையதும் இல்லை. 298 00:15:16,583 --> 00:15:18,919 -எனக்குக் குழப்பமாக இருக்கிறது. -சரி, மன்னித்துவிடு. 299 00:15:19,002 --> 00:15:23,006 புரியும்படிச் சொன்னால், நான் ஹோடி, இவன் ஹோமி. 300 00:15:23,090 --> 00:15:25,300 சரி, உண்மையைச் சொன்னால் அவன் முன்னாள் ஹோமி. 301 00:15:25,384 --> 00:15:27,511 ஆனால் இப்போது அவன் எனக்கு உதவுகிறான். புரிகிறதா? 302 00:15:27,594 --> 00:15:28,929 ஹோமி. ஃபஹோமி. 303 00:15:29,012 --> 00:15:32,099 ஹோடி. கஹோடி, தற்போதைய தலைமை அதிகாரி. 304 00:15:32,182 --> 00:15:33,225 என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறாயா? 305 00:15:34,434 --> 00:15:35,435 -என்ன... -வேலையிலிருந்து நீக்குவதா? 306 00:15:35,519 --> 00:15:37,813 -நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? -நீதானே ஹெச்.ஆர் துறையின் தலைமை அதிகாரி. 307 00:15:38,480 --> 00:15:41,108 நான் ஹோடி, ஃபில். அதைத்தான் சொன்னேன் அவ்வளவுதான். 308 00:15:41,191 --> 00:15:43,235 பொறு, கேரல். இல்லை, அவன் சொல்வது சரிதான். 309 00:15:43,986 --> 00:15:45,153 -நான் வேலையிலிருந்து நீக்கப்படுகிறேனா? -இல்லை. 310 00:15:45,237 --> 00:15:46,196 -ஆமாம். -என்ன? 311 00:15:46,280 --> 00:15:48,365 -என்ன? -சரி, இப்போதில்லை, ஆனால் விரைவில் நடக்கும். 312 00:15:48,448 --> 00:15:50,367 இந்த மொத்த மாதிரியுமே பழையதாகிவிட்டது. 313 00:15:50,450 --> 00:15:53,161 நாம் இதை மாற்ற வேண்டுமானால், பெரிய அளவில் செலவாகும். 314 00:15:54,288 --> 00:15:57,207 -ரொம்ப பெரிய அளவில். -கடவுளே. 315 00:15:58,041 --> 00:15:59,084 ஹலோ? 316 00:16:02,129 --> 00:16:03,380 ஹலோ? 317 00:16:04,506 --> 00:16:08,385 எங்குமே பொத்தான் இல்லை. அதாவது, தரையிலும் பொத்தான் இல்லை. 318 00:16:08,468 --> 00:16:09,761 உதவி! 319 00:16:14,725 --> 00:16:17,060 ஒவ்வொரு நாள் காலையிலும் ஹலோ சொல்கிறோம் 320 00:16:17,144 --> 00:16:17,978 நன்றாக இருக்கிறது. 321 00:16:18,061 --> 00:16:19,980 ஒவ்வொரு நாள் காலையிலும் ஹலோ சொல்கிறோம் 322 00:16:20,063 --> 00:16:24,610 தொண்ணூற்று ஒன்று, 92. 323 00:16:28,280 --> 00:16:31,575 பெரிய பாராவில் எழுபத்தாறு டிராம்போன்கள்... 324 00:16:34,077 --> 00:16:38,582 அவற்றைத் தொடர்ந்து திறமையான வித்வான்கள் பலர் இருப்பர் 325 00:16:38,665 --> 00:16:41,210 கட்டுடலாக இருக்க வேண்டும். மனதைச் சீராக வைக்க வேண்டும். 326 00:16:54,223 --> 00:16:57,601 ஆமாம், நீ இங்கே சாகப் போகிறாய். 327 00:17:03,815 --> 00:17:05,483 விளையாடுபவர்கள் என்.எஃப்.டி குறித்து 328 00:17:05,567 --> 00:17:09,195 கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க உன்னைத் தயார்படுத்த விரும்புகிறோம். 329 00:17:09,279 --> 00:17:11,448 -அற்புதம். அற்புதம். -சரிதான். 330 00:17:11,531 --> 00:17:14,952 லூட் பாக்ஸ் எல்லாம் பழைய காலம். எதிர்காலத்தில் என்.எஃப்.டி தான் பயன்படுத்துவோம், சூ. 331 00:17:15,035 --> 00:17:19,373 என்.எஃப்.டியா? ஹேய், புரிந்துவிட்டது. நன்றிகள் தேவையில்லை. 332 00:17:19,455 --> 00:17:23,417 -என்ன சொன்னாய்? -நன்றிகள் தேவையில்லை! 333 00:17:23,919 --> 00:17:26,797 என்-க்கு இல்லை, எஃப்-க்கு தேவை, டி-க்கு நன்றிகள். 334 00:17:26,880 --> 00:17:28,382 -சூ. -அது பரவாயில்லை. 335 00:17:28,464 --> 00:17:30,175 அவள் இதை விழிப்புடன் எதிர்கொள்வது நல்லது தான். 336 00:17:30,259 --> 00:17:32,261 -என்ன சொல்கிறாய்? -வந்து, இந்த விளையாட்டு நிர்வாகத்தின் 337 00:17:32,344 --> 00:17:34,847 மொத்த பாரத்தையும் தன் தலையில் சுமப்பதாக சூ உணர்கிறாள். 338 00:17:35,556 --> 00:17:38,767 கேளுங்கள், விளையாடுபவர்கள் என்.எஃப்.டியை ரொம்பவே வெறுப்பார்கள். 339 00:17:38,851 --> 00:17:40,978 அப்படியில்லை. 1997ல் வந்த டி.எல்.சி ஞாபகம் இருக்கிறதா? 340 00:17:41,061 --> 00:17:42,688 -இருக்கிறது. -2000-ல் அதை இலவசமாக விளையாடினார்கள். 341 00:17:42,771 --> 00:17:44,273 -2006-ல் குதிரைக் கவசம். -அடக் கடவுளே. 342 00:17:44,356 --> 00:17:46,316 பிறகு லூட்பாக்ஸ், சீசன் பாஸ் வந்தன. 343 00:17:46,400 --> 00:17:48,235 விளையாடுபவர்களுக்குப் புதிதாக எது வந்தாலும் பிடிக்காது. 344 00:17:48,318 --> 00:17:51,280 ஆனால், போகப்போக கற்றுக்கொள்வார்கள், பிடிக்க ஆரம்பிக்கும், எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள், 345 00:17:51,363 --> 00:17:52,447 அவர்களின் கோபம் 346 00:17:52,531 --> 00:17:54,408 அடுத்த கட்ட சந்தோஷமாக மாறும். 347 00:17:54,491 --> 00:17:55,909 இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. 348 00:17:55,993 --> 00:17:58,704 -என்.எஃப்.டி நல்லதா, கெட்டதா? -ஆம். 349 00:17:58,787 --> 00:18:00,163 இது பதிலில்லையே. 350 00:18:01,331 --> 00:18:02,332 எங்கே போகிறாய்? 351 00:18:02,416 --> 00:18:04,543 இல்லை. பாதுகாப்பாக இருக்க அடிதளத்திற்குப் போகிறேன். 352 00:18:04,626 --> 00:18:07,504 -ஆட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவா? -இல்லை, உங்களிடமிருந்து! 353 00:18:07,588 --> 00:18:10,299 நீங்கள் வினோதமான யோசனைகளுடன் இங்கு வந்து 354 00:18:10,382 --> 00:18:12,968 என்னை ரொம்பவே கொடுமைப்படுத்துகிறீர்கள். 355 00:18:13,468 --> 00:18:15,846 அடிதளத்தில் இருட்டிலிருப்பது தான் எனக்கு நல்லது. 356 00:18:22,978 --> 00:18:26,106 ஏன் நம் அலுவலகத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள்? 357 00:18:26,190 --> 00:18:27,566 -அவரை எழுப்பலாமா? -டேவிட்! 358 00:18:28,483 --> 00:18:29,526 என்ன... 359 00:18:30,736 --> 00:18:32,112 நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? 360 00:18:32,196 --> 00:18:33,864 நாள் முழுவதும் இங்குதான் இருந்தோம். 361 00:18:33,947 --> 00:18:36,325 -ஓய்வெடுக்கும் அறையில் இருந்தோம். -ஓய்வெடுக்கும் அறை இருக்கிறதா? 362 00:18:37,159 --> 00:18:38,619 அது எங்கிருக்கிறது? 363 00:18:38,702 --> 00:18:39,995 -இந்தப் பக்கம். -இந்தப் பக்கமும். 364 00:18:40,078 --> 00:18:41,371 -இரண்டு வழியாகவும் போகலாம். -இரண்டுமே இல்லை. 365 00:18:42,789 --> 00:18:45,125 உங்கள் இருவரையும் வெறுக்கிறேன். இருவரையுமே இல்லை. 366 00:18:47,294 --> 00:18:49,087 நான் இங்கிருந்து போகிறேன். 367 00:18:49,171 --> 00:18:53,300 சரி, லிஃப்டை எப்படி வரவழைப்பாய்? 368 00:18:53,383 --> 00:18:54,426 எங்கள் மனதால். 369 00:18:54,510 --> 00:18:58,347 நாங்கள் லிஃப்டைப் பற்றி நினைத்தால், அது வந்துவிடும். 370 00:18:59,056 --> 00:19:00,557 -உண்மையாகவா? -இல்லை, சும்மா விளையாடினேன். 371 00:19:00,641 --> 00:19:01,892 பொத்தான் இங்கு தான் இருக்கிறது. 372 00:19:05,145 --> 00:19:06,230 இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. 373 00:19:06,813 --> 00:19:10,150 இந்த சக்தி வாய்ந்த செயல் எப்படி இருக்கிறது? உன் அலுவலகத்தில் சிறுநீர் கழித்துவிட்டேன். 374 00:19:10,234 --> 00:19:12,277 உன் பேன்ட்டிலேயே போய்விட்டாய் போல. 375 00:19:13,070 --> 00:19:15,781 ஆமாம், ஆனால், பேன்ட்டில் போனாலும் உன் அலுவலகத்தில் தானே போனேன். 376 00:19:15,864 --> 00:19:18,617 எனவே... ஐயோ. இது மேலே போகிறதா? இல்லை. 377 00:19:18,700 --> 00:19:20,410 “கீழே” போக வேண்டும் என நினை, டேவிட். 378 00:19:22,412 --> 00:19:24,998 அலுவலகம், சயான். 379 00:19:25,082 --> 00:19:26,124 சயான். 380 00:19:27,626 --> 00:19:29,878 -சரி. அற்புதம். அற்புதம். -அற்புதம். 381 00:19:42,391 --> 00:19:46,520 அடக் கடவுளே. நான் குளூட்டன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். தூக்கமாக வருகிறது. 382 00:19:46,603 --> 00:19:47,771 நாம் எங்கிருக்கிறோம்? 383 00:19:48,355 --> 00:19:50,941 வேகாஸிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இருக்கிறோம். 384 00:19:51,024 --> 00:19:53,068 நாம் ஏன் வேறொரு நகரத்துக்கு வந்திருக்கிறோம்? 385 00:19:53,151 --> 00:19:56,572 நீ இதுவரை செய்யாததைச் செய்ய. 386 00:20:02,411 --> 00:20:03,287 துப்பாக்கிச் சுடும் கிளப் 387 00:20:03,370 --> 00:20:04,413 துப்பாக்கிச் சுடுதலா? 388 00:20:04,496 --> 00:20:07,583 -இல்லை. எனக்குத் துப்பாக்கி பிடிக்காது. -எனக்கு என்ன பிடிக்காது, தெரியுமா? 389 00:20:07,666 --> 00:20:10,711 மட்டமான ஷாம்பெயின் மற்றும் அதிக விலையுள்ள முட்டைகளை சாப்பிட்டு, 390 00:20:10,794 --> 00:20:13,172 இந்த உலகம் ரொம்ப மோசம் என அழும் பெண்களின் குமுறலைக் கேட்கப் பிடிக்காது. 391 00:20:13,255 --> 00:20:15,924 கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்தேன், அது என்னை வழக்கமான வட்டத்திலிருந்து வெளியே கொண்டுவந்தது. 392 00:20:16,008 --> 00:20:17,759 எனக்கு ஒரு புது கண்ணோட்டத்தைக் கொடுத்தது. 393 00:20:17,843 --> 00:20:19,720 இப்போது, நான் உங்களுக்குக் கைமாறு செய்ய விரும்புகிறேன். 394 00:20:20,888 --> 00:20:23,891 -இது ப்ரஞ்சை விட வித்தியாசமாக இருக்கிறது. -இல்லை, இல்லை. 395 00:20:23,974 --> 00:20:26,476 உன் சமூகம் ஒரு மாதிரி, என் சமூகம் ஒரு மாதிரி. 396 00:20:26,560 --> 00:20:28,270 -ஹேய், கென்னி. -ஹேய், அன்பே. 397 00:20:28,353 --> 00:20:29,688 -சுடுகிறாயா இல்லை நசுக்குகிறாயா? -நசுக்குகிறேன். 398 00:20:29,771 --> 00:20:31,231 -சரி. -நசுக்குகிறாயா? 399 00:20:31,315 --> 00:20:33,901 நாம் நசுக்கப்படப் போகிறோமா? அல்லது வேறு யாரையாவது நசுக்கப் போகிறோமா? 400 00:20:33,984 --> 00:20:35,027 அப்படியென்றால் என்ன? 401 00:20:35,110 --> 00:20:38,572 -இந்த இடம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது, ஜோ. -உனக்கு தான் இது அசிங்கமாக தோன்றுகிறது. 402 00:20:39,198 --> 00:20:41,325 இந்த உலகத்தில் இன்னும் 700 கோடி மக்கள் இருக்கின்றனர். 403 00:20:41,408 --> 00:20:44,870 அதில் பல்லாயிரம் பேருக்கு இந்த இடம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றவில்லை. 404 00:20:45,495 --> 00:20:48,665 -இது அரசியல் சம்பந்தப்பட்டதா? -இல்லை, அரசியல் சம்பந்தப்பட்டதில்லை. 405 00:20:48,749 --> 00:20:51,210 இதுதான் உங்கள் பிரச்சினைகளுக்கானத் தீர்வு. 406 00:20:53,212 --> 00:20:55,547 கேளுங்கள், நடப்பது எதையும் கண்டுகொள்ளாதீர்கள், 407 00:20:55,631 --> 00:20:57,132 இந்த உலகத்தில் உள்ளவர்கள் யாரும், 408 00:20:57,216 --> 00:20:59,176 நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் எனப் பார்ப்பதில்லை. 409 00:20:59,259 --> 00:21:00,636 உங்களைப் போல, உங்கள் பிரச்சினைகளுக்கும் 410 00:21:00,719 --> 00:21:02,262 முக்கியத்துவம் கொடுத்தால் அது பெரிதாகத் தெரியும். 411 00:21:02,346 --> 00:21:04,932 பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் புலம்பிக் கொண்டிருப்பீர்கள். 412 00:21:05,015 --> 00:21:07,142 ஆனால் இன்றே, இந்த வழக்கத்தை நாம் மாற்ற வேண்டும். 413 00:21:11,355 --> 00:21:12,523 ஜாலி! 414 00:21:14,274 --> 00:21:15,692 நசுக்குவது. 415 00:21:15,776 --> 00:21:18,445 நாம் அந்த டேங்கை ஓட்டப் போகிறோமா? 416 00:21:18,529 --> 00:21:20,656 இது தவறான செய்தியை அனுப்புகிறது என நினைக்கிறேன்... 417 00:21:20,739 --> 00:21:23,659 அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என யோசிக்காதீர்கள். 418 00:21:23,742 --> 00:21:26,870 அது அயன் ஆகட்டும், உன் வகுப்பு தோழர்களாகட்டும், வேறு யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். 419 00:21:26,954 --> 00:21:29,665 நீங்கள் உங்களை நோக்கி கேட்க வேண்டிய ஒரே கேள்வி, 420 00:21:29,748 --> 00:21:35,754 “டேங்கை ஓட்ட விரும்புகிறீர்களா?” 421 00:21:39,049 --> 00:21:40,217 ஆமாம். 422 00:21:40,300 --> 00:21:41,677 சரி. போகலாம். 423 00:21:47,391 --> 00:21:49,893 -ஆம்! -நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை! 424 00:21:49,977 --> 00:21:51,603 நான் ஆற்றல் மிக்கவளாக உணர்கிறேன்! 425 00:22:00,529 --> 00:22:03,532 பெர்க்லியையிம் பியோவூல்ஃபையும் அடித்து நொறுக்கு! 426 00:22:06,493 --> 00:22:09,913 அப்படித்தான்! நான் எதையாவது நொறுக்க வேண்டும்! 427 00:22:11,498 --> 00:22:13,876 பாபி, அயன் உனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறான்! 428 00:22:13,959 --> 00:22:17,963 யாரு அயனா? அதைக் காரில் தூக்கிப் போடு! அதை நொறுக்குகிறேன்! 429 00:22:20,716 --> 00:22:22,426 ஆம், நொறுக்கிவிடு! 430 00:22:32,019 --> 00:22:33,353 அப்படித்தான்! 431 00:22:34,229 --> 00:22:37,482 இது ப்ரஞ்சை விட நன்றாக இருக்கிறது, ஜோ. 432 00:22:38,692 --> 00:22:41,028 ஆம். 433 00:22:41,528 --> 00:22:42,529 மீண்டும் செய்யணும்! 434 00:22:42,613 --> 00:22:44,448 மீண்டும் செய்யணும்! மீண்டும் செய்யணும்! 435 00:22:44,531 --> 00:22:47,618 மீண்டும் செய்யணும்! மீண்டும் செய்யணும்! மீண்டும் செய்யணும்! 436 00:22:48,911 --> 00:22:49,995 நண்பர்கள். 437 00:24:14,204 --> 00:24:16,206 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்