1 00:00:04,463 --> 00:00:05,464 அற்புதம். 2 00:00:06,507 --> 00:00:08,007 "மித்திக் குவெஸ்ட்-ஐ விட்டு வருவது." 3 00:00:08,090 --> 00:00:09,801 சொல்வதற்கே வினோதமாக இருக்கு. 4 00:00:10,302 --> 00:00:11,637 இங்கு வளர்ந்தது போல உணர்கிறேன். 5 00:00:11,720 --> 00:00:13,096 கேட்க நல்லா இருக்கு, பாபி. 6 00:00:13,180 --> 00:00:16,350 ஆனால் நீ இங்கு சேரும் நாள் எனக்கு தெரிந்தாக வேண்டும். 7 00:00:16,767 --> 00:00:18,393 நீ அங்கு எப்போ அறிவிக்கப் போகிறாய்? 8 00:00:18,477 --> 00:00:19,811 சரி. இன்றே. இப்பொழுதே. 9 00:00:19,895 --> 00:00:21,605 சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன். 10 00:00:21,688 --> 00:00:24,107 அவன் மனசு மாறிக் கொண்டே இருப்பான். 11 00:00:24,775 --> 00:00:26,777 இந்த சுயநலவாதிகள், ஒவ்வொரு சொல்லிற்கும் நாம் தான் அடிபணிய வேண்டும். 12 00:00:26,860 --> 00:00:28,570 அவர்கள் அடிக்கடி தங்கள் மனநிலையை மாற்றுவார்கள். 13 00:00:28,654 --> 00:00:30,030 அவர்கள் எப்படி முடிப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. 14 00:00:30,113 --> 00:00:32,991 சரி, நல்ல செய்தி என்னவென்றால் நீ இனிமேல் கஷ்டப்பட தேவையில்லை. 15 00:00:33,075 --> 00:00:36,036 ஏன்னா இங்கு நாங்கள் நம்பகத்தன்மையும் நிலைப்பாடும் உள்ளவர்கள். 16 00:00:36,411 --> 00:00:39,998 சிறப்பு. ஏன்னா இந்த நாடகம் எல்லாம் எனக்கு சலித்துவிட்டது. 17 00:00:42,000 --> 00:00:44,253 நாம் பேச வேண்டும், அயன். நீ எங்க இருக்க? 18 00:00:44,670 --> 00:00:45,879 நான் இங்கு இருக்கிறேன். 19 00:00:47,089 --> 00:00:49,132 நான் உன்னை இங்கு பார்க்கவில்லை. 20 00:00:49,967 --> 00:00:51,385 மன்னிச்சிடு, இது என்ன? 21 00:00:51,468 --> 00:00:52,761 ஒன்றும் இல்லை. 22 00:00:53,220 --> 00:00:55,722 ஒரு ஆண் உனது கண் முன்னே... 23 00:00:56,890 --> 00:00:58,225 நிலை குலைந்து இருக்கான். 24 00:01:00,435 --> 00:01:02,396 நிறுத்து. 25 00:01:15,617 --> 00:01:18,745 சரி. நிகழ்ச்சிக்கு நீ தயாரா, வைல்ட்_டி? 26 00:01:19,454 --> 00:01:21,540 பிராட், இன்று நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் பரவாயில்லையா? 27 00:01:21,832 --> 00:01:25,043 என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசினால் பிடிக்காதென தெரியும், ஆனா இவ்வளவு நேரம்... 28 00:01:25,127 --> 00:01:27,629 சரிதான். உன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசினால் எனக்கு பிடிக்காது தான். 29 00:01:27,713 --> 00:01:29,673 இப்போ, நீ என் புது பொருளை விளம்பரப்படுத்தணும். 30 00:01:29,756 --> 00:01:31,842 அது காலத்தின் வாள் என அழைக்கப்படும். உட்கார். 31 00:01:31,925 --> 00:01:33,969 சரி, இது நான் விளையாட்டில் அறிமுகம் செய்யும் புது மதிப்புமிக்க பொருள். 32 00:01:34,052 --> 00:01:36,221 ஆனால் 250 ஆயிரம் டாலர்கள் நிர்ணயிக்கப் போகிறேன். 33 00:01:36,305 --> 00:01:38,807 விளையாடுறீங்களா? அதை யாருமே வாங்க மாட்டார்கள். 34 00:01:38,891 --> 00:01:40,184 இல்லை, ஒருவேளை வாங்காமல் இருக்கலாம். 35 00:01:40,267 --> 00:01:42,978 ஆனால் அவர்கள் அதை முயற்சிப்பார்கள், அதை மக்கள் விரும்புவார்கள். 36 00:01:43,061 --> 00:01:45,898 அவர்களால் எட்ட முடியாத ஒன்று அவர்களை காலையில் எழுந்திருக்க செய்யும். 37 00:01:45,981 --> 00:01:47,983 ஹேய்! எனது சாதாரண மக்கள் எங்கே? 38 00:01:48,859 --> 00:01:49,943 இதோ, டேனா. 39 00:01:50,444 --> 00:01:51,486 என்ன நடக்குது, பிராட்லி? 40 00:01:51,570 --> 00:01:54,406 சண்டையின்போது விற்ற ஆடை போட்டிருக்கிறாய். அதை டன் கணக்கில் விற்றுவிட்டேன். 41 00:01:54,489 --> 00:01:56,241 நான் சாதாரணவற்றை தான் ஆதரிபேன். 42 00:01:56,325 --> 00:01:57,451 யார் அந்த முகமூடி மனிதன்? 43 00:01:57,534 --> 00:02:00,495 பார், எல்லோரும் அந்த முகமூடி மனிதன் பூட்டி என தெரிந்ததும் மகிழ்ந்தனர். 44 00:02:00,913 --> 00:02:02,539 கொஞ்சம் கூட எழிலே இல்லாமல் 45 00:02:02,623 --> 00:02:05,334 கதை முடிந்துவிட்டது என நினைத்தேன். 46 00:02:05,417 --> 00:02:06,502 காட்டமான கருத்து. 47 00:02:07,461 --> 00:02:10,130 ஆனால், இறுதியில், பொது மக்களே ஏற்றுக்கொண்டார்கள். 48 00:02:10,214 --> 00:02:12,549 அதனால், நான் அதனுடனே போகிறேன் 49 00:02:12,633 --> 00:02:17,471 மற்றும் மக்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். 50 00:02:18,055 --> 00:02:19,598 அதாவது, எனக்கு என்ன தெரியும்? 51 00:02:21,517 --> 00:02:22,809 சாப்பிடுறீங்களா? 52 00:02:22,893 --> 00:02:24,937 சரி, அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. 53 00:02:25,020 --> 00:02:27,689 நல்லா சிரி, நாம் படப்பிடிப்பை தொடர்கிறோம். 54 00:02:28,148 --> 00:02:29,775 அட, கடவுளே! 55 00:02:30,359 --> 00:02:31,818 வைல்ட்_டி 56 00:02:32,945 --> 00:02:35,239 இன்று உங்களுடன் ஒளிபரப்பி 57 00:02:35,322 --> 00:02:37,783 மின்னஞ்சலில் வந்த இந்த விளையாட்டை விளையாடுவதற்கும் ரொம்ப சந்தோஷம். 58 00:02:38,283 --> 00:02:40,077 இது என் ஆதரவாளர்கள் ஒருவரிடமிருந்து வந்தது. 59 00:02:40,160 --> 00:02:42,788 ஏதோ சரியில்லை. அவள் ரொம்ப சோகமா இருக்கா. 60 00:02:42,871 --> 00:02:43,997 ஆம். 61 00:02:45,541 --> 00:02:47,084 சரி. வாங்க துவங்கலாம். 62 00:02:47,167 --> 00:02:48,919 உன்னால் முக பாவனைகளை புரிஞ்சிக்க முடியாதா? 63 00:02:49,336 --> 00:02:51,171 அது மனநோயாளிகளின் முக்கிய குணம். 64 00:02:51,463 --> 00:02:53,006 நான் ஒன்றும் மன நோயாளி இல்ல, லூ. 65 00:02:54,633 --> 00:02:57,302 ஆம், இல்லாமல் இருக்கலாம். நோயாளிகள் ரொம்ப வசீகரமாக இருப்பாங்க. 66 00:02:58,011 --> 00:03:00,848 அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்னால் சொல்ல முடியும், சரியா? 67 00:03:01,723 --> 00:03:03,767 அப்பம் மிகவும் நன்றாக புசுபுசு என்று இருக்கும். 68 00:03:03,851 --> 00:03:05,727 வேஃபில்ஸ், சற்று மொறு மொறுப்பாக இருந்திருக்கலாம். 69 00:03:05,811 --> 00:03:06,937 நான் ஏதாவது செஞ்சாகணும். 70 00:03:07,271 --> 00:03:09,439 சரி, திட்டம் என்ன? அவளை வசப்படுத்தி காட்டிற்குள் இழுத்து வரப் போறியா? 71 00:03:09,523 --> 00:03:11,316 நான் மனநோயாளி இல்லை, லூ! சரியா? 72 00:03:11,400 --> 00:03:12,901 அவளை வெளியே இழுத்து வரப் போகிறேன்... 73 00:03:13,861 --> 00:03:16,280 வெளியே கூட்டி சென்று உற்சாகப்படுத்தப் போகிறேன். 74 00:03:17,489 --> 00:03:20,117 என்னை மன்னிச்சிடு, ரேச்சல். அவளை கொன்று விடாதே. 75 00:03:20,534 --> 00:03:21,618 நான் ஏன் திரும்பினேன்? 76 00:03:21,702 --> 00:03:23,370 ஏன்னா உனக்கு என்னை பிடிக்கும். 77 00:03:23,453 --> 00:03:26,999 ஆனால் நான் என் கருத்தை தெளிவுப்படுத்தி விட்டேன். எனக்கு உன் மேல் இஷ்டமில்லை. 78 00:03:30,836 --> 00:03:31,712 கிரிம்ம்ம்ம் 79 00:03:35,299 --> 00:03:37,384 இதோ வந்துவிட்டோம். பைபாஸ் சாலை. 80 00:03:40,095 --> 00:03:45,058 இது பைபாஸ் சாலை. பெரிய... நான் சத்தத்தை குறைக்கப் போகிறேன்! 81 00:03:45,142 --> 00:03:46,143 சரி. 82 00:03:46,435 --> 00:03:48,187 பைபாஸ் சாலை. 83 00:03:49,897 --> 00:03:51,607 ஆக, நாம எங்கு போகிறோம்? 84 00:03:51,940 --> 00:03:53,942 சொல்ல முடியாது, பாப். நீ என்னை நம்பித்தான் ஆகணும். 85 00:03:54,026 --> 00:03:58,030 ஆனால் நீ என் கூட இருப்பது எனக்கு முக்கியம் என்பதை மட்டும் நினைவில் கொள். 86 00:03:59,031 --> 00:04:02,242 இது நான் ரொம்ப காலமாக பார்த்துக் கொள்ள வேண்டியது. 87 00:04:03,452 --> 00:04:04,453 சரி. 88 00:04:04,912 --> 00:04:08,707 ஆம், சில நேரங்களில் விஷயம் பெரிதாவதற்குள் அதை கவனிக்க வேண்டும். 89 00:04:09,499 --> 00:04:11,877 எவ்வளவு காலமாக நாம சேர்ந்து வேலை செய்கிறோம்? 90 00:04:11,960 --> 00:04:13,253 எட்டு வருடங்கள் இருக்குமா? 91 00:04:14,087 --> 00:04:15,839 தெரியல. நான் நாள்காட்டியை பார்ப்பதில்லை. 92 00:04:15,923 --> 00:04:17,216 நிச்சயமாக, நிச்சயமாக. 93 00:04:17,841 --> 00:04:21,094 அதாவது வாழ்க்கை வேடிக்கையானது, இல்லையா? 94 00:04:23,972 --> 00:04:24,973 -இல்லை. -சரி. 95 00:04:25,057 --> 00:04:27,100 வந்து, என் எண்ணத்தை சொல்லி முடிக்க விடு. 96 00:04:27,768 --> 00:04:30,103 இருவரும் இவ்வளவு காலம் ஒருவரை ஒருவர் அறிந்திருப்பது வினோதம் தான். 97 00:04:30,187 --> 00:04:32,231 அதாவது, எம்ஐடி-யில் இருந்து நீ கூட்டிட்டு வந்த 98 00:04:32,314 --> 00:04:35,567 19 வயது பெண்ணாக நான் இப்போது இல்லை. 99 00:04:35,651 --> 00:04:37,277 மேலும்... மேலும் சில சமயம், அயன்... 100 00:04:37,361 --> 00:04:39,905 என் நிஜ பெயர் "ஈ-யன்" என உனக்கு தெரியுமா? 101 00:04:40,906 --> 00:04:41,990 என்ன? 102 00:04:42,074 --> 00:04:43,784 "ஈ-யன்" எனது அப்பாவின் பெயர். 103 00:04:44,660 --> 00:04:47,204 அவர்... அவ்வளவு நல்லவர் இல்லை. 104 00:04:50,707 --> 00:04:55,462 நின்டெண்டோவை சரியான நேரத்தில் அமர்தாதற்காக அவர் எனக்கு சிகரெட்டினால் வைத்த சூடு இது. 105 00:04:55,879 --> 00:04:58,215 சீ. அது கொடூர செயல். 106 00:04:59,341 --> 00:05:00,717 உனக்கு இது போன்ற அனுபவங்கள் உண்டா? 107 00:05:02,845 --> 00:05:03,846 இல்லை. 108 00:05:06,056 --> 00:05:07,432 அது நல்லது அல்ல. 109 00:05:08,350 --> 00:05:12,020 எப்படியோ, ஒரு நாள் அவர் பெயர் எனக்கு தேவையில்லை என்று முடிவு செய்தேன். 110 00:05:12,104 --> 00:05:15,232 அதனால் நானே என்னை "அ-யன்" என்று கூப்பிட ஆரம்பித்தேன். 111 00:05:16,149 --> 00:05:17,442 அவ்வளவு தான். 112 00:05:19,903 --> 00:05:21,864 நான் இதுவரை இதை யாரிடமும் சொன்னதில்லை. 113 00:05:23,365 --> 00:05:25,200 இப்போ ஏன் என்னிடம் சொல்கிறாய்? 114 00:05:28,579 --> 00:05:29,955 எனக்குத் தெரியல. 115 00:05:32,916 --> 00:05:36,461 ஹேய், பாப், நான் உன்னையும் உன் வேலையையும் எவ்வளவு மதிக்கிறேன் என 116 00:05:36,545 --> 00:05:38,172 எப்பவும் சொன்னதில்லை என எனக்கு தெரியும், 117 00:05:38,255 --> 00:05:40,674 ஆனால் நான் கடினமாக முயற்சிக்கப் போகிறேன். 118 00:05:41,300 --> 00:05:44,052 சத்தியமாக, நான் கடினமாக முயற்சிப்பேன். இன்னும் நல்லவனாக இருக்கப் போகிறேன். 119 00:05:47,014 --> 00:05:50,809 ஏன், நண்பா? இப்பொழுது ஏன்? ஏன்? 120 00:05:50,893 --> 00:05:53,228 இப்பொழுதாவது நல்ல நேரம், இல்லையா? 121 00:05:55,230 --> 00:05:59,234 சரி, இது நான் திட்டமிட்ட படி நடக்கலை. 122 00:06:07,367 --> 00:06:09,119 இதோ முக்கியமான நபர் வந்துவிட்டார். 123 00:06:09,203 --> 00:06:10,621 வாழ்த்துக்கள், நண்பா. 124 00:06:12,080 --> 00:06:16,418 காலத்தின் வாள் மூலம் நாம் இரண்டரை லட்சம் சம்பாதித்துவிட்டோம். 125 00:06:16,502 --> 00:06:18,795 அது என்ன? ஆம். 126 00:06:20,172 --> 00:06:22,090 வாய்ப்பே இல்ல. நான் இப்போ தான் அதை வெளியிட்டேன். 127 00:06:22,174 --> 00:06:24,134 250 ஆயிரம். அற்புதம். 128 00:06:24,218 --> 00:06:25,427 நீ ரொம்ப சந்தோஷமாக இருக்கணும். 129 00:06:26,261 --> 00:06:28,472 ஆம், அப்படித்தான் இருக்கணும். அதாவாது, அப்படிதான் இருக்கேன். 130 00:06:29,640 --> 00:06:30,933 அப்படி இல்லை. வாந்தி எடுக்கப் போகிறேன். 131 00:06:31,016 --> 00:06:33,977 கடவுளே, நான் காற்றை யாருக்கோ ஒரு வீடு வாங்கும் மதிப்பிற்கு விற்றிருக்கிறேன். 132 00:06:34,061 --> 00:06:35,395 சரி, நான் உட்காரணும். 133 00:06:35,479 --> 00:06:37,022 நீ... நீ நலம் தானே, நண்பா? 134 00:06:37,105 --> 00:06:39,733 இல்லை. இந்த சவுதி இளவரசர்களும் சில்லிகான் பள்ளத் தாக்கின் முட்டாள்களும் 135 00:06:39,816 --> 00:06:41,568 நான் வெளியிடும் எந்த குப்பையை வேண்டுமானாலும் வாங்குவார்கள். 136 00:06:41,652 --> 00:06:44,196 அப்படியானால் எனது வேலைக்கு மதிப்பே இல்லை. 137 00:06:46,156 --> 00:06:47,533 நான் என் வாழ்க்கையில் என்ன செய்கிறேன்? 138 00:06:48,242 --> 00:06:51,703 அயன் என்னை விட்டு பாபி-ஐ அவரது உதவியாளராக தேர்ந்தெடுத்ததால் நானும் அப்படி உணர்கிறேன் 139 00:06:52,120 --> 00:06:54,289 பாபி அயனின் உதவியாளர் அல்ல. நீயும் அல்ல. 140 00:06:54,373 --> 00:06:56,375 சரி, நீங்க அதை முகத்தில் அடித்தது போல சொல்ல வேண்டியது இல்லை, டேவிட். 141 00:07:00,295 --> 00:07:03,006 சரி. கேள். 142 00:07:03,549 --> 00:07:08,303 நிர்வாக தயாரிப்பாளராக, எனது பணியாளர்கள் கஷ்டப்படும் பொழுது உதவுவது என் கடமை. 143 00:07:08,387 --> 00:07:10,889 கவலைப்படாதீங்க. இதற்கு முன் இது போன்ற விஷயங்களை நான் சிறப்பாக கையாண்டுள்ளேன். 144 00:07:11,515 --> 00:07:13,517 டிஜிடல் அஸெட்ஸில் உள்ள டெடி வில்லரியால் தவிர. 145 00:07:13,600 --> 00:07:15,936 எப்படியாகிலும் அவன் அந்த குவாரிக்குள் குதித்திருப்பான். 146 00:07:16,019 --> 00:07:17,813 அதனால், எப்படியோ, துவங்கலாம், 147 00:07:17,896 --> 00:07:21,024 இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் சரியாகிவிடுவீர்கள். 148 00:07:21,692 --> 00:07:23,735 நன்றாக உணர்கிறீர்களா? கேள்விகள் இருக்கா? 149 00:07:25,821 --> 00:07:27,865 -ஆம். -டெடி-க்கு என்ன ஆச்சு? 150 00:07:27,948 --> 00:07:30,075 நீ என்ன நினைக்கிறாயோ அதேதான் நடந்தது. 151 00:07:30,158 --> 00:07:31,493 -என்ன? -அவனது உடலை கண்டுப்பிடித்தார்களா? 152 00:07:31,577 --> 00:07:33,370 போதுமான அளவு கண்டுப்பிடித்தனர். டெடியை பற்றிய இனி கேட்க வேண்டாம். 153 00:07:33,453 --> 00:07:35,080 நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி எதாவது கேள்விகள்? 154 00:07:35,163 --> 00:07:36,540 நாம் தொடரலாம். கிளம்பலாம். 155 00:07:40,043 --> 00:07:42,462 சிறப்பு! சாப்பாட்டு விடுதி. நான் சாப்பிடலாம். 156 00:07:43,422 --> 00:07:46,091 பாப், நீ காரிலேயே காத்திரு. 157 00:07:46,758 --> 00:07:48,093 நான் இதை தனியாக செய்யணும். 158 00:07:48,427 --> 00:07:49,970 ஆனால் நீ என்னை உன்னுடன் வர சொன்னாயே. 159 00:07:50,053 --> 00:07:52,431 ஆம். இது வரை நீ அதை நல்ல முறையில் செய்துவிட்டாய். 160 00:07:53,974 --> 00:07:56,685 சரி. கண்டிப்பாக, நீ போ. 161 00:07:56,768 --> 00:07:57,603 சரி. 162 00:07:57,686 --> 00:07:59,897 உள்ளே சென்று கழிவறையை பயன்படுத்திவிட்டு சீக்கிரமாக வந்து விடவா? 163 00:07:59,980 --> 00:08:00,981 வேண்டாம். 164 00:08:01,064 --> 00:08:02,399 சரி. 165 00:08:02,482 --> 00:08:05,652 சரி, நீ என்ன செய்கிறாயோ அதற்கு என் வாழ்த்துக்கள். 166 00:08:06,945 --> 00:08:08,197 நிஜமாகவே, நன்றி... 167 00:08:09,948 --> 00:08:10,991 கூட்டாளி. 168 00:08:12,993 --> 00:08:16,079 சரி... கூட்டாளி. 169 00:08:39,352 --> 00:08:42,147 ஹேய், டேன் வில்லியம்ஸ். நான்தான் பாபி. 170 00:08:42,563 --> 00:08:43,565 மீண்டும். 171 00:08:43,649 --> 00:08:47,319 பாருங்க, எனது சுழ்நிலை மாறிவிட்டது. 172 00:08:47,402 --> 00:08:49,571 அயனும் நானும் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டோம், 173 00:08:49,655 --> 00:08:51,740 அதனால் எல்லாம் இப்போ வித்தியாசமாக இருக்கப் போகுது. 174 00:08:51,823 --> 00:08:54,326 மன்னியுங்க, ஆக இப்போ எனக்கு நானே உண்மையாக இருந்தால், 175 00:08:54,409 --> 00:08:56,912 நான் இப்போ இங்கு தான் இருக்கணும் என நினைக்கிறேன். 176 00:08:58,163 --> 00:09:00,666 அதனால், மன்னியுங்க. 177 00:09:01,542 --> 00:09:03,919 சரி, விடை பெறுகிறேன். 178 00:09:24,398 --> 00:09:25,899 ஹலோ, பிரெண்டன். 179 00:09:26,775 --> 00:09:27,860 ஹலோ, அப்பா. 180 00:09:31,071 --> 00:09:35,617 இப்பொழுது, எந்த வேலையும் நீண்ட காலமாக செய்தால் அர்த்தமற்றதாகி விடும். 181 00:09:35,701 --> 00:09:37,369 அதனால் தான் நான் ஒரு நாளுக்கான வேலைகளை 182 00:09:37,452 --> 00:09:40,831 சின்ன வேலைகளாக அதற்கு தக்க சன்மானத்துடன் பகுப்பது என்ற 183 00:09:40,914 --> 00:09:43,458 செயல் முறையைக் கொண்டு வந்துள்ளேன். 184 00:09:43,542 --> 00:09:45,836 எனக்கு நானே ஏதாவது சின்னதாக சன்மானங்கள் கொடுத்து 185 00:09:46,545 --> 00:09:49,548 என்னை மகிழ்விக்கப் போகிறேன். 186 00:09:50,883 --> 00:09:51,884 குக்கீயா? 187 00:09:51,967 --> 00:09:54,344 எனது பட்டியலில் உள்ள அனைத்தையும் செய்து விட்டால், 188 00:09:54,428 --> 00:09:56,847 நானே இந்த சுவையான சன்மானத்தை எனக்கு அளித்துக் கொள்வேன். 189 00:09:58,974 --> 00:10:00,058 நான் ஒரு சாக்லட் பிரியன். 190 00:10:00,142 --> 00:10:02,936 உன் வேலையை செய்வதற்கு குக்கீயை உனக்கே கொடுத்துக் கொள்வாயா? 191 00:10:03,645 --> 00:10:04,730 அது மிகவும் வருத்தமானது. 192 00:10:04,813 --> 00:10:09,151 இல்ல, இல்ல. நான் சிறு வேலையை செய்வதற்கு குக்கீயில் சிறிதை அளித்துக் கொள்வேன். 193 00:10:09,234 --> 00:10:10,652 இப்பொழுது சோகமாக இருக்கா? 194 00:10:10,736 --> 00:10:13,155 டெடி ஏன் அந்த முடிவை எடுத்தான் என எனக்கு இப்போ புரியுது. 195 00:10:13,238 --> 00:10:14,489 இல்லை! நான் சொல்வது அது அல்ல... 196 00:10:14,573 --> 00:10:17,492 பார், ஒரு மன நோயை என்னால் குக்கீயால் குணப்படுத்த முடியாதது தான். 197 00:10:18,035 --> 00:10:19,578 நான் உனக்கு ஒன்று சொல்கிறேன், அவன் சாக விருப்பப்பட்டான். 198 00:10:19,661 --> 00:10:22,581 எதுவுமே டெடி தன் வண்டியை அந்த குவாரிக்குள் விட்டதை தடுத்திருக்க முடியாது. 199 00:10:23,165 --> 00:10:24,917 வெளிச்சம் இருக்கும் இடத்தில், அவனுக்கு இருள் மட்டும் தான் தெரிந்தது. 200 00:10:25,000 --> 00:10:29,671 இப்போ, ஒவ்வொருவரும் செய்யும் வேலையை ஊக்குவிக்க என்ன பரிசு தரலாமென யோசிக்கணும். 201 00:10:29,755 --> 00:10:32,174 அதனால், உனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்ன, பிராட்? 202 00:10:32,966 --> 00:10:35,469 -இரை தேடி-இரையை பற்றிய வீடியோக்கள். -என்ன அது? எனக்கு அதைப் பற்றி தெரியாது. 203 00:10:35,552 --> 00:10:37,554 இரக்கமற்ற திமிங்கலம் நீர்நாயை உண்பது போல 204 00:10:37,638 --> 00:10:40,140 அல்லது ஒரு சிறுத்தை மானை தாக்கி அதனின் தொண்டயைக் கிழித்தெறிவது போல. 205 00:10:40,224 --> 00:10:41,225 அந்த மாதிரியானவைகள். 206 00:10:41,308 --> 00:10:43,352 முதலை மலைப்பாம்பைக் கடிக்கும், ஆனால் பைத்தான் முதலையை 207 00:10:43,435 --> 00:10:46,230 சுற்றிக்கொண்ட பின் இரண்டும் இறந்து விடும் வீடியோவைப் பார்த்திருக்கிறாயா? 208 00:10:46,313 --> 00:10:47,481 -அது நன்றாக இருந்தது. -ஆம், சரி. 209 00:10:47,564 --> 00:10:49,399 நாம் குக்கீயையே பரிசாக வைத்துக் கொள்ளலாம், நண்பர்களே. 210 00:10:49,483 --> 00:10:51,693 அது எளிதான பரிசாகத் தெரிகிறது. 211 00:10:51,777 --> 00:10:54,947 அடுத்து நாம் கண்டுப்பிடிக்க வேண்டியது சமாளிக்கக்கூடிய ஒரு வேலை. 212 00:10:55,030 --> 00:10:57,199 அதனால், உன்னால் அடுத்து எதை செய்து முடிக்க முடியும், பிராட்? 213 00:10:57,282 --> 00:10:59,618 தெரியல. கொலிசியத்திற்கு பெயர் வைக்கும் உரிமையை மில்லியன் 214 00:10:59,701 --> 00:11:01,203 டாலருக்கு விற்கலாம் என நினைக்கிறேன். 215 00:11:01,870 --> 00:11:04,164 அது ஒரு நல்ல யோசனை. வாழ்த்துக்கள்! 216 00:11:04,248 --> 00:11:06,875 "கொலிசியமிற்கு பெயர் வைக்கும் உரிமை" எனக்கு பிடிச்சிருக்கு. 217 00:11:07,292 --> 00:11:11,338 ஹேய், என்ன தெரியுமா? வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது இது தான் 218 00:11:11,421 --> 00:11:13,924 பிராடிற்கு ஒரு குக்கீ பரிசாக தரப்படும். 219 00:11:15,092 --> 00:11:16,927 இதோ வாங்கிக் கொள். 220 00:11:18,136 --> 00:11:19,721 நான் இதை மறுபடியும் செய்யப் போகிறேன். 221 00:11:19,805 --> 00:11:22,099 அதைப் பார். உனக்கு அதில் சில சாக்லேட் துண்டுக்கள் கிடைச்சிருக்கு. 222 00:11:22,182 --> 00:11:23,559 அது நல்லா இருக்கும். 223 00:11:23,642 --> 00:11:26,854 சரி, ஜோ, இன்றைக்கு நீ எதை வெற்றிகரமாக செய்து முடிக்கப் போகிறாய்? 224 00:11:27,396 --> 00:11:30,399 ஒவ்வொரு நாளும் நான் செய்ய நினைப்பது தான்: எல்லாரும் தங்கள் இலக்கை அடைய நான் உதவணும். 225 00:11:30,482 --> 00:11:31,984 சிறப்பானது மற்றும் விசித்திரமானதல்ல. 226 00:11:32,067 --> 00:11:34,152 மற்றும் நீ அதை இன்றே செய்து முடிக்கலாம். அது உன் வேலை. 227 00:11:34,236 --> 00:11:35,487 ஆனால் அயன் இங்கு இல்லை. 228 00:11:35,571 --> 00:11:38,991 ஆனால் நான் இங்கிருக்கிறேன், நான்தான் உன் முதலாளி, சரியா? 229 00:11:39,074 --> 00:11:41,201 எனக்கு உதவி செய். புரியுதா? 230 00:11:42,160 --> 00:11:44,496 -புரியுது என நினைக்கிறேன். -அவள் நினைக்கிறாளாம். பாரு. 231 00:11:44,580 --> 00:11:46,540 நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நம்பமுடியலை. 232 00:11:46,623 --> 00:11:50,169 சரி, அதனால், இன்றைக்கு உங்களுக்கு உதவி செய்வது தான் என் வேலை. 233 00:11:50,252 --> 00:11:54,840 எனவே, ஒருவிதத்தில், உங்களுக்கு உதவுவது என்னை நல்ல உதவியாளராக மாற்றக்கூடும். 234 00:11:55,799 --> 00:11:58,760 இது மிகவும் குழப்பமாய் இருக்கு. பேசாமல் குறிப்புகள் எடுக்கப் போகிறேன். 235 00:11:59,261 --> 00:12:00,679 இதை கவனி. 236 00:12:00,762 --> 00:12:02,931 ஹேய், ஜோ, நீ எனக்கு உதவி செய்கிறாய். 237 00:12:03,473 --> 00:12:05,642 குக்கீயை வென்று விட்டாய். இதைப் பார். 238 00:12:06,518 --> 00:12:08,854 மற்றும் பாதியாக. நீ இதை பெற்றுக்கொள். 239 00:12:09,980 --> 00:12:11,315 சரி, நண்பர்களே. 240 00:12:13,025 --> 00:12:14,026 சீயர்ஸ். 241 00:12:26,121 --> 00:12:27,289 நீ தான் புதியவளா? 242 00:12:27,998 --> 00:12:29,249 என்ன, என்ன சொன்னீங்க? 243 00:12:30,334 --> 00:12:32,419 -நீ இங்கு அயனோடு வந்தாய், அல்லவா? -ஓ, ஆமாம். 244 00:12:32,503 --> 00:12:34,046 நீ வரும் போது பார்த்தேன். என் பெயர் ஷனன். 245 00:12:34,505 --> 00:12:36,590 ஹாய். நான் பிரெண்டனின் அம்மா. 246 00:12:37,925 --> 00:12:39,092 -ஹாய், ஷனன். -ஹாய். 247 00:12:39,176 --> 00:12:40,719 மன்னிக்கவும், பிரெண்டன் யார்? 248 00:12:40,802 --> 00:12:43,013 அடடா. அது மிகவும் அற்புதம். பூட்டி. 249 00:12:43,096 --> 00:12:45,933 அப்போ, பிரெண்டன் தான் பூட்டி ஷூ. 250 00:12:46,016 --> 00:12:48,227 அயன் ஏன் பூட்டியை சந்திக்கிறான்? 251 00:12:48,310 --> 00:12:50,103 அட, கடவுளே. அவன் உன்னிடம் சொல்லவில்லையா? 252 00:12:50,562 --> 00:12:53,398 அவன் எப்போதும் அப்படித்தான். வாவ். நிச்சயமாக அவன் சொல்லமாட்டான். 253 00:12:53,482 --> 00:12:55,859 சரி, அவன் ஏன் சொல்ல வேண்டும்? அது அவனுடைய மகன் தான். 254 00:12:56,235 --> 00:12:57,319 என்ன சொல்றீங்க? 255 00:12:58,362 --> 00:13:00,739 பூட்டி ஷூ அயனுடைய மகனா? 256 00:13:00,822 --> 00:13:02,866 கடவுளே, அவன் உன் கிட்ட எதுவுமே சொல்றதில்லை, அப்படி தானே? 257 00:13:04,701 --> 00:13:06,119 நாங்கள் ஒன்றாக இருந்தபோதும் அவன் அப்படித்தான். 258 00:13:06,203 --> 00:13:08,330 ஓ, இல்லை. நாங்கள்... நாங்கள் ஒன்றாக இல்லை. 259 00:13:08,413 --> 00:13:10,332 நாங்கள் வெறும் சகாக்கள் தான். சக ஊழியர்கள். 260 00:13:10,415 --> 00:13:12,793 சமமான சக ஊழியர்கள். உண்மையில் ஒரே அணியினர். 261 00:13:12,876 --> 00:13:17,798 அவன் உன்னை கருவுறச்செய்வதற்கு முன் நான் உனக்கு சில அறிவுரை சொல்லலாமா? 262 00:13:17,881 --> 00:13:20,425 அவன் என்னை கருவுறச்செய்ய மாட்டான். நாங்க அதை செய்ய மாட்டோம்... ஒருபோதும்... 263 00:13:20,509 --> 00:13:23,679 ஓ, இல்லை, இல்லை. உன் மீது எப்படி அக்கறைக் காட்டி, நீ தான் உலகத்திலேயே 264 00:13:23,762 --> 00:13:28,809 முக்கியமான நபராகவும், நீங்கள் இருவரும் நிரந்தரமாக சேர்ந்து இருக்கப் போவதாகவும் 265 00:13:28,892 --> 00:13:31,603 உணர வைக்க, அவனுக்குத் தெரியும். 266 00:13:31,687 --> 00:13:32,938 நீங்கள் இருவரும் கூட்டாளிகள். 267 00:13:33,021 --> 00:13:34,731 பின் நீ பாதுகாப்பாக உணரும் போது, 268 00:13:35,232 --> 00:13:37,317 அவன் வேறொரு இடத்தில் கவனம் செலுத்துவான். 269 00:13:37,401 --> 00:13:38,694 பெரும்பாலும் அவன் மீதே. 270 00:13:38,777 --> 00:13:42,573 நீ அவனை விட்டுவிட்டு வேறொரு விஷயத்தில் ஆர்வமாக இருந்தால் அதை அவன்... 271 00:13:43,866 --> 00:13:44,908 ஒரு நொடியில் உணருவான். 272 00:13:45,742 --> 00:13:49,621 பின் அவனது கவனம் திரும்பவும் உன் மேல் திரும்பும். 273 00:13:50,247 --> 00:13:51,623 ஆனால் இது அர்த்தமற்றது. 274 00:13:53,750 --> 00:13:55,002 அவன் உணர்வுகளுக்கு, 275 00:13:55,085 --> 00:13:57,296 ஆதரவு அளிக்க, அவனுக்கு யாராவது ஒருவர் தேவை. 276 00:13:57,379 --> 00:13:58,422 உனக்கு புரியுதா? 277 00:13:59,131 --> 00:14:00,549 அவனுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கணும். 278 00:14:00,632 --> 00:14:03,260 உன் தேவைகளை விடுத்து, அவனுக்காக எப்போதும் இருக்க வேண்டும், 279 00:14:03,969 --> 00:14:07,264 அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கணும். 280 00:14:09,600 --> 00:14:10,976 நான் சொல்வது சரியா? 281 00:14:12,853 --> 00:14:15,272 சரி, ஷனன். 282 00:14:15,355 --> 00:14:19,151 நீங்க உண்மையிலேயே... உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க தான். 283 00:14:19,776 --> 00:14:21,987 ஆனால் நான் திரும்பப் போய்... 284 00:14:22,070 --> 00:14:23,322 இங்கு உட்கார்ந்து இருக்கணும். 285 00:14:24,907 --> 00:14:25,908 காத்துக் கொண்டு. 286 00:14:44,259 --> 00:14:46,178 கேடுகெட்டவன். 287 00:14:48,472 --> 00:14:49,765 இந்தாங்க. 288 00:14:51,433 --> 00:14:52,643 -நன்றி. -நன்றி. 289 00:14:55,270 --> 00:14:56,855 ஆக... 290 00:14:58,899 --> 00:15:02,444 உன் வாழ்க்கை எப்படி இருக்கு? 291 00:15:02,528 --> 00:15:03,612 என்னை ஏன் இங்க கூப்பிட்டீங்க? 292 00:15:05,280 --> 00:15:08,867 உன் குழந்தை பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டதா? 293 00:15:08,951 --> 00:15:10,369 ஏன்னா நான் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 294 00:15:10,744 --> 00:15:12,204 எனக்கு 14 வயதாகிறது, அப்பா. 295 00:15:12,871 --> 00:15:15,207 சரி. சரி, அது இல்லை... 296 00:15:15,290 --> 00:15:16,583 தவறான நேரத்தில் சொல்லிவிட்டேன். 297 00:15:16,917 --> 00:15:18,669 மன்னிச்சிடு, எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கு. 298 00:15:18,752 --> 00:15:21,839 பதிநான்கு. பதிநான்கு, சரி. ஓ, நீ இன்னும் உறவு கொள்ளவில்லையா? 299 00:15:21,922 --> 00:15:24,174 -என்ன கண்றாவி இது, அப்பா? -இதையும் சரியான நேரத்தில் கேட்கலை போல. 300 00:15:24,258 --> 00:15:26,218 நான் ஒன்றும் உறவு கொள்ளலை. நீங்க... 301 00:15:26,927 --> 00:15:30,597 மன்னிச்சிடு, செல்லமே. நான் வந்து... இது எனக்கு பரிட்சயமில்லாதது. 302 00:15:30,681 --> 00:15:32,850 -நீ என்னைப் பொறுத்துக்கொள்வாயா? -ஆம், சரி, வேண்டாம். 303 00:15:32,933 --> 00:15:36,103 உங்க தேவைகள் என்னவென்று, இந்த சந்திப்பில் துவக்கத்திலேயே சொல்லுங்க. 304 00:15:36,728 --> 00:15:37,729 சரி, பாரு. 305 00:15:37,813 --> 00:15:40,399 பிரெண்டன், நீ இதைப் புரிந்து கொள்ளவது கஷ்டம் என தெரியும், 306 00:15:40,482 --> 00:15:44,361 ஆனா, நானும் உன் அம்மாவும் சேர்ந்து முடிவு எடுத்து தான், நான் பிரிந்துச் சென்றேன். 307 00:15:44,444 --> 00:15:46,613 பிறகு, திடீரென பல வருடங்களுக்குப் பிறகு, 308 00:15:46,697 --> 00:15:50,325 நீ எம்கியூ விளையாட்டுகளை ஒளிபரப்ப ஆரம்பித்தாய், மிகவும் பிரபலமானாய், 309 00:15:50,409 --> 00:15:51,910 நான் என்ன செய்வதென தெரியாமல் நின்றேன். 310 00:15:51,994 --> 00:15:54,162 உங்களிடம் பேச ஏதாவது வழி கிடைக்குமா என முயன்றேன். 311 00:15:54,246 --> 00:15:56,540 இது மூக்கை சுத்தி தொடுற மாதிரி உனக்குத் தெரியலையா? 312 00:15:56,623 --> 00:15:59,251 வந்து, மன்னியுங்க. பத்து வருடங்களாகப் பார்க்காத 313 00:15:59,334 --> 00:16:01,253 அப்பாக்களுடன் பேசும் பழக்கம் எனக்குக் கிடையாது, 314 00:16:01,336 --> 00:16:05,591 என் மூளை கொஞ்சம் குழம்பி இருந்தது, அதற்காக மன்னியுங்கள், இழிவானவரே! 315 00:16:05,674 --> 00:16:08,218 நீதான் முகமூடி மனிதன் என தெரிந்திருந்தால், நான் அப்படி செய்திருக்க மாட்டேன். 316 00:16:08,302 --> 00:16:10,971 ஓ, அருமை. என்னை தற்கொலை செய்யச் சொன்னீங்களே, அது எப்படி? 317 00:16:11,054 --> 00:16:13,015 -நான் உன்னை தற்கொலை செய்யச் சொல்லல. -ஆம், அவர் சொன்னார். 318 00:16:13,098 --> 00:16:14,933 அப்படி சொன்னது நானில்லை. அது நானில்லை. 319 00:16:15,017 --> 00:16:18,353 அது, ஜோ. என் உதவியாளர். பார்க்கப்போனால், அவள் டேவிட்-இன் உதவியாளர். 320 00:16:19,062 --> 00:16:21,899 அவள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணுபவள். 321 00:16:21,982 --> 00:16:23,317 நாங்க அவளை வேலையை விட்டு நீக்கணும். 322 00:16:23,400 --> 00:16:26,195 அருமை. உங்க நிறுவனத்தை ரொம்ப கட்டுக்கோப்பா வச்சிருக்கீங்க போல, அப்பா. 323 00:16:26,278 --> 00:16:27,529 பார், பிரெண்டன். 324 00:16:28,071 --> 00:16:30,949 நான் ஒரு நல்ல தகப்பனாக இருந்ததே இல்லை. 325 00:16:31,366 --> 00:16:33,035 ஆனால், நான் அனைத்தையும் அக்கறையாய் பார்த்துக்கொண்டேன். 326 00:16:33,118 --> 00:16:36,580 பள்ளி, வீடு. இவை எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொண்டேன். 327 00:16:37,080 --> 00:16:40,417 உண்மை என்னவென்றால், நான் இல்லாமலேயே நீ நன்றாக வளர்ந்தாய். 328 00:16:40,501 --> 00:16:42,336 உன்னைப் பார், அன்பே. 329 00:16:42,419 --> 00:16:44,338 உன்னிடம் நல்ல வேலை இருக்கு, 330 00:16:44,421 --> 00:16:46,965 உன்னிடம் பணம் இருக்கு, உன் அம்மாவுடன் நல்ல உறவில் இருக்கிறாய். 331 00:16:47,049 --> 00:16:48,342 எனக்குத் தெரியலை. 332 00:16:48,884 --> 00:16:54,681 உண்மையில், நான் சரியான முடிவு எடுத்ததாகத் தான் தோணுது. 333 00:16:56,975 --> 00:16:59,895 -"நான்" என்று ஒன்பது முறை சொல்லிட்டீங்க. -நான் சொன்னேனா? 334 00:16:59,978 --> 00:17:02,105 -இப்போ, பத்து. -அருமை, இந்த மாதிரி தான் எண்ணுவாயா? 335 00:17:02,189 --> 00:17:04,147 நீ "மழை மனிதன்" மாதிரி. அட, கடவுளே. 336 00:17:04,942 --> 00:17:06,652 நீ உண்மையிலேயே, ஒரு அறிவாளி தான். 337 00:17:06,983 --> 00:17:08,069 ஹேய், என் மகன் ஒரு அறிவாளி. 338 00:17:09,444 --> 00:17:10,739 ஹேய், என் பையன் ஒரு அறிவாளி. 339 00:17:11,949 --> 00:17:15,160 அருமை, எல்லாமே உங்களைப் பற்றி தான். 340 00:17:15,242 --> 00:17:18,413 உங்களுக்கு ரொம்பக் குற்ற உணர்வு ஏற்பட்டிருக்கு அதனால் கடைசி வாய்ப்பாக 341 00:17:18,497 --> 00:17:21,500 மீண்டும் சேர விரும்புகிறீர்கள் என நினைத்தேன். 342 00:17:21,583 --> 00:17:22,960 -ஆனால், இல்லை, வேண்டாம். -ஆமாம். 343 00:17:23,041 --> 00:17:26,171 நீங்க ஏதும் தவறு செய்யவில்லை, நீங்க ஒரு மோசமான ஆள் இல்லை, 344 00:17:26,255 --> 00:17:28,549 நீங்க எதையும் குளறுபடி செய்யல என என்னிடம் சொல்ல ஆசைப்படுறீங்க. 345 00:17:28,632 --> 00:17:31,468 ஏன்னா, எப்பவும் எல்லாமே உங்களைப் பற்றி மட்டும் தான். 346 00:17:31,552 --> 00:17:33,887 -இல்லை,இல்லை. அது உண்மை இல்லை. நான்... -"நான்". 347 00:17:33,971 --> 00:17:35,764 -நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்... -"நான்" 348 00:17:35,848 --> 00:17:37,057 -எனக்குத் தெரியும், ஆனால், நான்... -இன்னும் இரண்டு. 349 00:17:37,140 --> 00:17:38,517 -சரி, ஆனால் நான்... -"நான்" 350 00:17:39,893 --> 00:17:44,147 நல்லது, நான் என்று இல்லாமல் ஒருவரால் எப்படி பேச முடியும்? 351 00:17:44,231 --> 00:17:47,150 சரி, தெரியுமா, இந்த மாதிரி எல்லாம் பேசும் வயதை நான் கடந்துவிட்டேன். 352 00:17:47,234 --> 00:17:49,069 இரு, கொஞ்சம் பொறு. எங்குப் போகிறாய்? 353 00:17:49,152 --> 00:17:51,613 இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள், அயன். 354 00:17:52,030 --> 00:17:53,740 -சரி, மகனே... -இல்லை! 355 00:17:56,326 --> 00:17:57,786 உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. 356 00:18:03,333 --> 00:18:06,670 தகவலுக்காக, இந்த உரையாடலுக்கு நான் பூஜ்ஜியம் ஆசனக்குழிகள் தருகிறேன். 357 00:18:09,965 --> 00:18:11,049 பூட்டி வெளியேறுகிறான்! 358 00:18:17,514 --> 00:18:19,391 ஹேய், டேன் வில்லியம்ஸ். 359 00:18:19,474 --> 00:18:22,269 நான் தான், உங்க புது படைப்பு இயக்குனர், பாபி. 360 00:18:22,352 --> 00:18:23,437 சரி தான். நான் மீண்டும் அழைத்தேன். 361 00:18:23,520 --> 00:18:25,230 என் முந்திய செய்தியை புறக்கணித்து விடுங்கள். 362 00:18:25,314 --> 00:18:28,734 எனக்கும் மித்திக் குவெஸ்ட்-க்கும் எல்லாம் முடிந்தது. இந்த நாடகங்கள் சலித்துவிட்டன. 363 00:18:28,817 --> 00:18:31,486 இந்த முறை நிச்சயமாக. அதனால், எனக்கு இந்த வேலை வேண்டும். 364 00:18:31,904 --> 00:18:34,698 பிரமாதம். திரும்ப அழையுங்கள். நன்றி. பை. 365 00:18:37,326 --> 00:18:39,620 ஹேய், உள்ள என்ன முடிவாச்சு? நீ நலம் தானே? 366 00:18:40,037 --> 00:18:41,663 அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. 367 00:18:42,414 --> 00:18:45,000 உண்மையிலா? நீ இவ்வளவு தூரம் இங்கே அழைத்து வந்த 368 00:18:45,083 --> 00:18:47,586 ஒருத்தரிடம் பகிர்ந்துக்கொள்ள, உன்னிடம் எதுவுமே இல்லையா? 369 00:18:48,962 --> 00:18:50,589 இல்லை. நான் விரும்பவில்லை. நாம் போகலாமா? 370 00:18:50,672 --> 00:18:54,259 இல்லை. உண்மையிலேயே நீ என்னிடம் சொல்ல மாட்டாயா? 371 00:18:55,219 --> 00:18:58,889 பூட்டி உன் மகன் என தெரியும். உன் முன்னாள் மனைவியை சந்தித்தேன். அவள்தான் சொன்னாள். 372 00:18:58,972 --> 00:19:01,141 ஷனன், அவள் எப்படி இருந்தாள்? 373 00:19:01,225 --> 00:19:03,769 -நிச்சயமாக வெறிபிடித்த மாதிரி இருக்கிறாள்! -சரி. 374 00:19:03,852 --> 00:19:05,812 என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? 375 00:19:06,230 --> 00:19:07,314 ஆதரவுக்காக. 376 00:19:07,731 --> 00:19:09,983 நிச்சயமாக. ஏன்னா, நான் உனக்கு உணர்வு பூர்வமாக ஆதரவு கொடுக்கும் ஒரு மிருகம், 377 00:19:10,067 --> 00:19:13,487 இந்த உஷ்ணமான காரில், ஒரு மணி நேரமாக உட்கார்ந்திருக்கும் அந்த நாயைப் போல்! 378 00:19:14,696 --> 00:19:16,031 எந்த நாய்? 379 00:19:17,491 --> 00:19:20,953 சரி, வந்து, அங்கு, முன்னர், ஒரு நாய் இருந்தது, 380 00:19:21,036 --> 00:19:23,288 இது ஒரு பொருத்தமான உருவகம்! 381 00:19:23,372 --> 00:19:25,374 சரி, நாம் இதை இப்ப செய்யாமல் இருக்கலாமா, பாபி? 382 00:19:25,457 --> 00:19:28,126 நீ சொல்வது சரி. இனிமேல் இதை செய்ய வேண்டாம். நான் விட்டு விலகுகிறேன். 383 00:19:29,086 --> 00:19:32,673 கோல்ட் அலையன்ஸ்-இல் படைப்பு இயக்குனராக வேலைக்குச் சேரலாம் என்று இருக்கிறேன். 384 00:19:32,756 --> 00:19:33,757 நீ என்ன... 385 00:19:35,717 --> 00:19:37,344 நீ அதற்கு என்ன சொல்லப் போகிறாய்? 386 00:19:39,137 --> 00:19:41,098 நீ அதை செய்ய ஆசைப்பட்டால், என்னால் உன்னை தடுக்க முடியாது. 387 00:19:44,226 --> 00:19:45,435 அது தான் உன்னுடைய பதிலா? 388 00:19:45,519 --> 00:19:46,520 ஆமாம். 389 00:19:47,980 --> 00:19:50,858 என்னவென்றாலும், சரி. காருக்குள் ஏறு. நான் ஒட்டுகிறேன். 390 00:19:52,067 --> 00:19:54,987 அந்த நாய்! அது தான் அந்த நாய்! அங்கே, பாரு. அது நிஜம் தான். 391 00:19:55,070 --> 00:19:57,698 அது நிஜ நாய். அது கூட காரை விட்டு இறங்கி சிறுநீர்கழிக்கப் போயிருக்கு! 392 00:19:57,781 --> 00:20:01,535 வந்து, என்ன தெரியுமா, அயன், இனி நான் அந்த நாயாக இருக்க மாட்டேன். நீ தான் அந்த நாய்! 393 00:20:02,661 --> 00:20:05,956 -நீ ஏன் நாய்களை இவ்வளவு வெறுக்கிறாய்? -நான் நாய்களை வெறுக்கலை. 394 00:20:06,039 --> 00:20:08,584 நான் சொல்வதைக் கவனமாகக் கேள், அயன். 395 00:20:09,084 --> 00:20:12,838 நான் உன்னைத்தான் வெறுக்கிறேன். 396 00:20:14,631 --> 00:20:17,009 மன்னிச்சிடு. இப்போ தான் நான் ஒன்றைக் கவனித்தேன். 397 00:20:17,092 --> 00:20:19,553 உன் வகிடு, உன் தலையின் தவறான பகுதியில் இருக்கு என நினைக்கிறேன். 398 00:20:19,636 --> 00:20:22,973 அதை நாம் வேறு பக்கம் நகர்த்தினால், உன் முகம் முழுவதும் தெரியும். 399 00:20:24,683 --> 00:20:26,810 நான் உன் முகத்தைக் காயப்படுத்தப் போகிறேன்! 400 00:20:27,269 --> 00:20:28,395 வண்டியில் ஏறு! 401 00:20:30,230 --> 00:20:31,315 சரி. 402 00:20:37,779 --> 00:20:40,699 சரி, பிராட். ஆக, இப்போ நீ உன் அடுத்த விலை உயர்ந்த பொருளை கண்டுபிடித்து விட்டாய், 403 00:20:40,782 --> 00:20:42,576 டேனாவை இதை விளம்பரப்படுத்த சொல்லணும் 404 00:20:42,659 --> 00:20:45,454 நீ உன் குக்கீயின் இரண்டாவது பாகத்தைப் பெறப் போகிறாய். 405 00:20:46,079 --> 00:20:48,498 -டேனா எங்கே? -போய் விட்டாள், அப்பா. 406 00:20:48,582 --> 00:20:49,708 எதுவாக இருந்தாலும். பரவாயில்லை. 407 00:20:49,791 --> 00:20:53,003 ம்... சரி, டேனா எங்கே என்று கண்டு பிடிப்பது தான் நம் அடுத்த வேலை. 408 00:20:53,086 --> 00:20:54,087 நான் அதைச் செய்கிறேன். 409 00:20:54,171 --> 00:20:57,883 டேனாவைக் கண்டுபிடித்து பிராட்க்கு உதவுவது, நான் உங்களுக்கு உதவுவது போல் ஆகும். 410 00:20:57,966 --> 00:20:59,301 அதை நான் செய்கிறேன். 411 00:21:00,093 --> 00:21:01,595 அவள் செயல்முறையை ஏற்றுக்கொண்டாள். 412 00:21:02,387 --> 00:21:04,223 நீ இங்க என்ன செய்றீங்க, சி.டபிள்யூ? 413 00:21:04,306 --> 00:21:07,226 ஏதோ ஊதா கோமாளியின் வேடிக்கையான செயலைப் பார்த்துக் கொண்டே, 414 00:21:07,518 --> 00:21:10,270 அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பானத்தைக் குடிக்கிறேன். 415 00:21:11,522 --> 00:21:12,898 ராஸ்கோ. தரமானது. 416 00:21:12,981 --> 00:21:15,234 ஆம். மில்லியன் கணக்கான மக்கள் அவனை நேசிக்கிறார்கள். 417 00:21:15,317 --> 00:21:17,611 அப்படியென்றால், நன்றாகத் தான் இருக்கும், இல்லையா? 418 00:21:17,694 --> 00:21:18,695 கவனத்தைக் கவர தவறாக நடக்கிறானா? 419 00:21:18,779 --> 00:21:20,197 ஆம், 8 வயது குழந்தையைப் போல. 420 00:21:20,280 --> 00:21:22,658 சரி, அருமை. என் செயல்முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 421 00:21:22,741 --> 00:21:25,577 உங்களுக்கு வெகுமதி அளிக்கப் போதுமான குக்கீ இருக்கா என தெரியாது என்ற போதிலும். 422 00:21:27,204 --> 00:21:28,205 ஓ, இது பாபி. 423 00:21:31,416 --> 00:21:32,876 அட, கடவுளே. 424 00:21:36,713 --> 00:21:37,714 அது என்ன? 425 00:21:38,924 --> 00:21:42,177 முகமூடி மனிதன் அயனின் மகன்! 426 00:21:42,928 --> 00:21:44,763 அது அவனுடைய மகன்! 427 00:21:44,847 --> 00:21:47,558 கதைக்களம் கதையின் காட்சிக்கு பொருத்தமானதாக அமைக்கப்பட்டுள்ளது 428 00:21:47,975 --> 00:21:52,563 தரமான இலக்கியம் அதன் சரியான சிம்மாசனத்தில் மீண்டும் அமர்கிறது! 429 00:21:58,610 --> 00:21:59,736 -ஓ, கடவுளே. -கன்றாவி! 430 00:22:00,237 --> 00:22:02,781 -அது என்னை தாக்கியது! தாக்கியது! -பொறு பொறு! அவனைக் கொலை செய்! 431 00:22:02,865 --> 00:22:05,534 முயற்சிக்கிறேன். முயற்சிக்கிறேன். எப்படி இவ்வளவு வேகமாக இருக்காங்க? 432 00:22:05,617 --> 00:22:06,618 தொடர வேண்டுமா? 433 00:22:06,702 --> 00:22:08,203 -இல்லை. -கொடுமை. 434 00:22:09,621 --> 00:22:11,123 நம் முகங்களை தின்றுவிட்டன. 435 00:22:13,292 --> 00:22:15,627 என்னை வெளியே கூடிட்டு வந்ததற்கு ரொம்ப நன்றி. எனக்கு ரொம்ப தேவைப்பட்டது. 436 00:22:16,295 --> 00:22:17,629 சரி. நிச்சயமாக. 437 00:22:17,713 --> 00:22:19,798 ஜாம்பி இரத்தத்தைச் சிந்துவது உனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரியும், 438 00:22:19,882 --> 00:22:21,592 ஆக இது உன்னை மகிழ்விக்கும் என நினைத்தேன். 439 00:22:22,092 --> 00:22:24,720 நாம் ஒரு சிறிய வரையறுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒருவருக்கொருவர் 440 00:22:24,803 --> 00:22:27,347 அருகில் உட்கார்ந்து விளையாடுவதை நீ அறிவாய், இல்லையா? 441 00:22:27,931 --> 00:22:30,058 நாம் வேலையில் செய்வதையே மீண்டும் உருவாக்கினோம். 442 00:22:31,518 --> 00:22:35,772 சரி. நல்லது, எப்படியும், நாம என்ன செய்தோம் என்று உனக்குத் தெரியும். 443 00:22:36,732 --> 00:22:38,650 ஆம். நீ சொல்வது சரிதான் என நினைக்கிறேன். 444 00:22:41,653 --> 00:22:43,113 நீ இல்லாமல் நான் தவித்தேன், ரேச். 445 00:22:46,450 --> 00:22:47,534 உண்மையாகவா? 446 00:22:48,744 --> 00:22:49,745 ஆம். 447 00:22:52,706 --> 00:22:53,790 ஹேய்! 448 00:22:53,874 --> 00:22:55,125 -கருமம்! -இருவரும் என்ன செய்றீங்க? 449 00:22:55,209 --> 00:22:57,586 கடவுளே, ஜோ. நீ இங்கு என்ன செய்கிறாய்? 450 00:22:58,921 --> 00:23:02,216 என் வேலையை செய்கிறேன், இருவரும் எப்போதாவது அதைச் செய்வதைப் பற்றி யோசிக்கணும். 451 00:23:02,299 --> 00:23:03,842 நாங்கள் இங்கு இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? 452 00:23:03,926 --> 00:23:05,052 இது கஷ்டமான விஷயம் இல்லை. 453 00:23:05,135 --> 00:23:08,722 அற்பமான வாழ்க்கையை வாழும் எளிய மக்கள். இப்போ, வேலைக்கு திரும்புங்கள். 454 00:23:08,805 --> 00:23:10,182 நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீ சொல்லக்கூடாது. 455 00:23:10,265 --> 00:23:12,434 ஆம். களவாணியாக இருக்காதே, ஜோ. 456 00:23:12,518 --> 00:23:14,144 நான் களவாணி இல்லை. 457 00:23:14,728 --> 00:23:17,481 நான் டேவிட் பிரிடில்ஸ்பீ-யின் உதவியாளர். 458 00:23:17,564 --> 00:23:18,732 இப்பவே, கிளம்புங்க! 459 00:23:40,128 --> 00:23:42,130 உற்சாகமாக இரு, இளவரசியே. 460 00:23:43,549 --> 00:23:44,591 சரி, பாப். 461 00:23:44,675 --> 00:23:46,051 "சரி, பாப்." 462 00:23:46,510 --> 00:23:49,513 கடவுளே, நீ என்ன ஒரு நாடகக்காரன். 463 00:23:51,557 --> 00:23:52,558 ஆமாம். 464 00:23:53,684 --> 00:23:54,810 -நண்பா. -அவர்களைப் பிடித்துவிட்டேன், டேவிட். 465 00:23:54,893 --> 00:23:56,061 வலிக்கிறது. 466 00:23:56,144 --> 00:23:59,106 சோம்பேறி மாணவர்களைப் போல அரங்கத்தில் வேலையை புறக்கணித்துக் கொண்டிருந்தனர். 467 00:23:59,189 --> 00:24:01,191 அற்புதம். மாட்டி கொண்டார்கள். 468 00:24:01,275 --> 00:24:03,110 ஹேய், சிறப்பான வேலை, ஜோ. 469 00:24:03,193 --> 00:24:04,444 நாங்க இப்போது வேலை செய்யப் போகலாமா? 470 00:24:04,528 --> 00:24:06,864 பொறு. ஒரு நிமிடம் இரு. உண்மையில் பிராட் ஒரு வேலை செய்ய வேண்டி இருக்கு. 471 00:24:06,947 --> 00:24:08,031 சரியா, பிராட்? 472 00:24:09,575 --> 00:24:12,494 டேனா, கொலிசியத்திற்கு பெயரிடும் உரிமையை ஒரு மில்லியன் டாலருக்கு விற்கிறோம். 473 00:24:12,578 --> 00:24:15,122 ஒளிப்பரப்பில் இதைப் பற்றி நீ எது வேண்டுமானாலும் சொல். பரவாயில்ல. 474 00:24:15,205 --> 00:24:17,791 யாரவது சில முட்டாள் அதை வாங்கி, அதை "முட்டாள் அரசனின் நகரம்" என்று சொல்வான். 475 00:24:17,875 --> 00:24:19,168 பிரமாதம். புரிந்ததா, டேனா? 476 00:24:20,002 --> 00:24:21,086 அப்படித்தான் நினைக்கிறேன். 477 00:24:21,170 --> 00:24:22,546 நல்லது. எனவே, நீ போ. 478 00:24:23,589 --> 00:24:25,299 -நீயும். -நான் போகிறேன். 479 00:24:27,718 --> 00:24:29,094 நண்பர்களே. வாங்க. வட்டத்தை உருவாக்குங்க. 480 00:24:30,053 --> 00:24:31,138 சும்மா வா. 481 00:24:31,638 --> 00:24:33,974 ஒன்று சொல்லவா? நம்மை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 482 00:24:34,057 --> 00:24:36,518 இன்று நாம் செய்யத் திட்டமிட்டதை நாம் அனைவரும் செய்துவிட்டோம். 483 00:24:36,602 --> 00:24:38,395 நீ எனக்கு மிகவும் அருமையாக உதவி செய்தாய், ஜோ 484 00:24:38,729 --> 00:24:40,480 மற்றும், பிராட், உன் வாழ்க்கை அர்த்தமற்றது என 485 00:24:40,564 --> 00:24:42,733 உணர்ந்தாலும், நீ விடாமுயற்சியுடன் உன் வேலையைச் செய்தாய். 486 00:24:42,816 --> 00:24:45,235 என்னைப் பொறுத்தவரை, உங்க பணிகளை முடிக்க இருவருக்கும் நான் உதவினேன், 487 00:24:45,319 --> 00:24:47,779 யாரும் பாறை குவாரிக்குள் குதிக்கவில்லை. 488 00:24:48,197 --> 00:24:49,907 சரியா? என்னைப் பொருத்தவரை அது முக்கியமான சாதனை. 489 00:24:49,990 --> 00:24:55,204 கூடுதலாக, நாம் கடைசித் துண்டு குக்கீக்கு உழைத்திருக்கிறோம். 490 00:24:58,624 --> 00:24:59,917 வெறும் இரண்டு துண்டுகள் தான் இருக்கு 491 00:25:01,627 --> 00:25:03,545 தெரியுமா? நீங்க இதை எடுத்துக் கொள்ளுங்க. 492 00:25:04,630 --> 00:25:06,548 -நிச்சயமாகவா? -ஆமாம். 493 00:25:08,592 --> 00:25:09,801 இதோ. 494 00:25:11,428 --> 00:25:12,679 எடுத்து, கடிங்க. 495 00:25:16,183 --> 00:25:18,852 என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதில் மிகவும் சுவையானது இதுதான். 496 00:25:18,936 --> 00:25:21,438 ஆம். கடைசி ஒன்று... 497 00:25:22,105 --> 00:25:23,899 உண்மையில் மிகவும் நன்றாக இருக்கும். 498 00:25:25,776 --> 00:25:26,902 பிராட். 499 00:25:27,319 --> 00:25:30,030 உன் வாளை அதிக விலைக்கு வாங்கியவர் யார் என கண்டுபிடித்து விட்டேன். 500 00:25:30,113 --> 00:25:31,281 அது சவுதி இளவரசர் இல்லை. 501 00:25:31,365 --> 00:25:34,326 நகரும் வீடுகளில் வசிக்கும் வயதானவர். வினோதமானது. 502 00:25:34,409 --> 00:25:35,994 நகரும் வீடா? அவரால் அதை எப்படி வாங்க முடிந்தது? 503 00:25:36,370 --> 00:25:37,788 அவரது வாழ்நாள் சேமிப்பாக இருக்கலாம். 504 00:25:39,540 --> 00:25:41,124 கடவுளே. அவ்வளவு தான். 505 00:25:41,917 --> 00:25:44,962 சரி, கோடீஸ்வரனிடமிருந்து ஒரு மில்லியன் டாலர்களை எடுப்பது பெரிய விஷயம் இல்லை. 506 00:25:45,045 --> 00:25:48,465 வேறு எதுவும் இல்லாதவரிடம், இருந்த கடைசி குக்கீயையும் எடுத்துக்கொள்வது பற்றியது. 507 00:25:48,549 --> 00:25:49,883 நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். 508 00:25:49,967 --> 00:25:52,219 இது நம் ஆட்டக்காரர்களிடம் இருக்கும் கடைசி டாலர் எடுப்பதைப் பற்றி. இல்லை, கடைசி பைசா. 509 00:25:52,302 --> 00:25:55,722 இல்லை, ஒரு பைசாவின் கடைசிப் பகுதி. சின்ன-சின்ன பரிவர்த்தனை. 510 00:25:55,806 --> 00:25:59,059 இரு, குட்டி பரிவர்த்தனைகள். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 511 00:25:59,142 --> 00:26:00,686 அதனால்தான் நான் இதைச் செய்கிறேன். 512 00:26:01,478 --> 00:26:02,980 நன்றி, டி-மேன். 513 00:26:03,063 --> 00:26:04,439 இது பாடம் அல்ல. 514 00:26:04,940 --> 00:26:06,859 ஹேய். அதை ஏன் தூக்கி எறிந்தாய்? 515 00:26:07,317 --> 00:26:09,152 அந்தக் கன்றாவியை நான் சாப்பிட மாட்டேன். 516 00:26:15,576 --> 00:26:17,119 நீ அதைக் குப்பையிலிருந்து எடுத்து வந்தாய். 517 00:26:17,494 --> 00:26:19,413 ஆமாம், எடுத்தேன், பாஸ். 518 00:26:23,333 --> 00:26:25,127 -நன்றி, ஜோ. -எந்தப் பிரச்சினையும் இல்லை. 519 00:26:42,102 --> 00:26:44,688 உன்னைப் பார். நீ எங்கிருந்தாய்? 520 00:26:44,771 --> 00:26:47,191 யாரையாவது கழுத்தை நெறித்து கொன்றாயா? 521 00:26:47,941 --> 00:26:48,984 உனக்குத் தெரியுமா, லூ? 522 00:26:49,067 --> 00:26:50,777 நீ என்ன வேண்டுமானாலும் சொல், நண்பா. 523 00:26:51,904 --> 00:26:53,989 ஏன்னா அது எதுவும் என் மனநிலையை பாதிக்கப் போவதில்லை. 524 00:26:54,531 --> 00:26:55,991 அட, கடவுளே! 525 00:26:56,909 --> 00:26:58,327 வைல்ட்_டி 526 00:26:59,328 --> 00:27:02,956 எனக்குப் பிடித்த சில பழைய பள்ளி விளையாட்டுகளை ஒரு உண்மையான அரங்கத்தில் 527 00:27:03,040 --> 00:27:04,499 விளையாடி விட்டு திரும்பி வந்துள்ளேன். 528 00:27:04,583 --> 00:27:07,961 இப்போது, எனக்கு புதிய விஷயங்கள் பிடிக்கும் என உங்களுக்குத் தெரிந்திருக்கும், 529 00:27:08,045 --> 00:27:10,297 ஆனால் சில நேரங்களில் நீங்க பழைய விஷயத்திற்குச் சென்று 530 00:27:10,380 --> 00:27:13,008 அவை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என புரிந்துக்கொள்ள வேண்டும். 531 00:27:13,091 --> 00:27:15,469 தாமதம் இன்றி மீண்டும் ஷாடோ வுல்ஃப் டன்ஜன்-க்கு போகலாமா? 532 00:27:16,094 --> 00:27:18,347 எந்தவொரு வசீகரமான சேர்க்கைக்கான கோரிக்கைகளை நான் ஏற்கிறேன். 533 00:27:18,430 --> 00:27:19,681 அதனால், தகவல் தொடர்பில் தொடர்புக் கொள்ளுங்கள். 534 00:27:19,765 --> 00:27:20,766 கருத்து! 535 00:27:21,850 --> 00:27:24,228 "மற்றொரு போலியான பெண் ஆட்டக்காரி." 536 00:27:25,604 --> 00:27:28,190 சரி, நான் வெறுப்பவர்களை புறக்கணிக்கப் போகிறேன். 537 00:27:28,607 --> 00:27:29,733 வெறுப்பவர்களே, போய் வாருங்கள், 538 00:27:29,816 --> 00:27:30,817 வெறுப்பவர்கள் 539 00:27:30,901 --> 00:27:33,028 "இந்தக் கேவலமானவள் மித்திக் குவெஸ்ட்-க்கு வேலை செய்கிறாள்." 540 00:27:35,322 --> 00:27:36,573 என்ன நடக்குது? 541 00:27:36,657 --> 00:27:39,076 அவளது தகவல் தொடர்பிற்கு வெறுக்கத்தக்க கருத்துகள் ஏன் வருகிறது? 542 00:27:39,159 --> 00:27:41,286 நண்பர்களே, நான் போலி ஆட்டக்காரர் அல்ல. 543 00:27:41,370 --> 00:27:43,914 எனக்கு அனைத்தையும் விட வீடியோகேம் பிடிக்கும். 544 00:27:44,373 --> 00:27:48,585 அவர்கள் அவளை ஒரு இரகசிய ஊழியர் என அடையாளம் கண்டுவிட்டனர். அவள் கதை முடிந்தது. 545 00:27:48,669 --> 00:27:53,507 சரி, இது முரட்டுத்தனம் மற்றும் இனவெறி. இந்த வாயால் உங்க அம்மாவை முத்தமிடுவீங்களா? 546 00:27:53,590 --> 00:27:55,467 வந்து, எதுவும் உன் மனநிலையை பாதிக்காது என்பது தானே நல்ல விஷயம் 547 00:28:01,932 --> 00:28:04,059 நிறுத்தும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அயன் கிரிம் 548 00:28:08,355 --> 00:28:09,356 நீ வருகிறாயா? 549 00:28:10,107 --> 00:28:11,108 இல்லை. 550 00:28:12,609 --> 00:28:15,696 நீ சின்னக் குழந்தையைப் போல் வண்டியில் உட்கார்திருக்கப் போகிறாயா? 551 00:28:17,614 --> 00:28:18,615 அப்படித்தான் நினைக்கிறேன். 552 00:28:18,699 --> 00:28:20,617 நான் கோல்ட் அலையன்ஸ்-க்கு போவதில் மகிழ்கிறேன் 553 00:28:20,701 --> 00:28:23,871 ஏன்னா அங்காவது நான் சொல்வது எடுபடும், என் சிந்தனைக்கு மரியாதை தருவார்கள். 554 00:28:24,288 --> 00:28:26,790 ஒருவேளை அவர்கள் அதை ஒரு வழிமுறை மூலம் நுழைக்கலாம், 555 00:28:26,874 --> 00:28:29,418 குறைந்த பட்சம் என் கழுத்து நரம்பு புடைக்காது, 556 00:28:29,501 --> 00:28:31,003 அடுத்து எந்த வகையான பயங்கரத்தை 557 00:28:31,086 --> 00:28:34,214 இந்த இடம் தரப்போகிறது என்ற பதட்டமும் இருக்காது. 558 00:28:42,306 --> 00:28:44,641 ஹேய். ஹேய், டேன் மனிதா. 559 00:28:44,725 --> 00:28:47,644 நான் தான் படைப்பு இயக்குனர், பாபி. 560 00:28:47,728 --> 00:28:50,772 என்ன ஆச்சு? உங்களைப் பார்க்க இரண்டு வாரங்கள் காத்திருக்க முடியாது. 561 00:28:51,273 --> 00:28:55,110 கேளுங்க, பாபி, இது சரிப்படும் என எனக்குத் தோன்றவில்லை. 562 00:28:55,194 --> 00:28:57,070 நான் உங்க திறமையை மிகவும் மதிக்கிறேன், 563 00:28:57,529 --> 00:29:02,951 உங்க கலை மனோபாவம் எங்க ஸ்டுடியோவுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். 564 00:29:03,035 --> 00:29:06,914 இல்லை, இல்லை, ஏன்னா நான் உண்மையில் அந்த அளவிற்கு... 565 00:29:07,998 --> 00:29:09,166 கலையாற்றல் கொண்டவள் இல்லை. 566 00:29:09,249 --> 00:29:10,834 சிலர் என்னை இயந்திரத்தனமானவள் என சொல்வார்கள். 567 00:29:10,918 --> 00:29:13,295 உண்மையில்... நான் ரொம்ப நிதானமானவள். 568 00:29:13,378 --> 00:29:15,255 நீங்க என்னை நம்பணும், டேன். நான்... 569 00:29:16,215 --> 00:29:18,342 இங்க இருப்பவர்களில் நான் ஒருத்தி தான் பகுத்தறிவுள்ளவள். 570 00:29:18,425 --> 00:29:20,469 மன்னிச்சிடுங்க, பாபி. பிரியாவிடை பெறுகிறேன். 571 00:29:24,181 --> 00:29:25,390 அடச்சீ. 572 00:29:26,975 --> 00:29:28,477 -ஹேய், பாப். -அட, கடவுளே. 573 00:29:29,728 --> 00:29:32,981 நான் எல்லாவற்றையும் கேட்டேன். மிகவும் எதிர்பார்க்காதது. 574 00:29:35,025 --> 00:29:36,360 சரி, உன்னை உள்ளே பார்க்கிறேன். 575 00:29:55,170 --> 00:29:57,631 நான் அவருடைய சீன காதலியைப் பார்த்தேன். 576 00:29:58,048 --> 00:30:00,551 அருமை. அது உண்மையில் இனவெறி தான், அம்மா. 577 00:30:00,968 --> 00:30:04,179 அது சீன பெண்ணாக இல்லாதிருந்தாலொழிய. ஆனால் உங்களை தெரியும், அவள் சீனக்காரி இல்லை. 578 00:30:04,596 --> 00:30:06,431 நான் மற்ற ஆண்களுடன் பழகுகிறேன் என்று சொன்னாயா? 579 00:30:07,933 --> 00:30:10,102 ஆம். பிரிந்த என் தந்தையை சந்திப்பின் போது, 580 00:30:10,185 --> 00:30:13,188 நீங்க பலருடன் தொடர்புக் கொள்கிறீர்கள் என்ற உண்மையை சொன்னேன். 581 00:30:13,730 --> 00:30:16,400 கடவுளே தற்காலிக ஓட்டுநர் உரிமம் கிடைக்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. 582 00:30:19,695 --> 00:30:21,572 உனக்கு கொஞ்சம் கோழி வருவல் வேண்டுமா, செல்லமே? 583 00:30:23,699 --> 00:30:24,741 வேண்டும். 584 00:30:25,951 --> 00:30:27,077 எனக்கும் தான். 585 00:31:30,474 --> 00:31:32,476 தமிழாக்கம்: மேனகா மணிகண்டன்