1 00:00:05,255 --> 00:00:07,049 1 ஆட்டக்காரர் 2 00:00:07,132 --> 00:00:10,636 2 ஆட்டக்காரர்கள் 3 00:00:16,517 --> 00:00:18,185 செவன் ஓக்ஸ் தொடக்கப்பள்ளி 4 00:00:24,483 --> 00:00:27,778 உங்கள் மகனின் வகுப்பில் சூரிய குடும்பத்தைப் பற்றி பாடம் நடத்துகிறார்கள். 5 00:00:28,487 --> 00:00:33,075 ஒவ்வொருவரும் ஒரு கோளைப் பற்றிய ஆய்வறிக்கையைச் சமர்பிக்க வேண்டும். 6 00:00:34,034 --> 00:00:39,998 உங்கள் மகன் கண்டுபிடிக்கப்படாத கோளைப் பற்றிய 7 00:00:40,082 --> 00:00:44,044 ஆய்வறிக்கையைத் தான் சமர்பிப்பேன் என அடம்பிடிப்பதாக அவனது ஆசிரியர் கூறுகிறார். 8 00:00:44,127 --> 00:00:45,128 அப்படியொரு கோள் இருக்கலாமே. 9 00:00:45,212 --> 00:00:49,132 பல்லாயிரக்கணக்கான பால்மண்டலங்கள் உள்ளன. அதில் டார்டுரஸ் இருக்காது என யார் சொன்னது? 10 00:00:49,216 --> 00:00:50,676 விஞ்ஞானிகள். 11 00:00:50,759 --> 00:00:54,221 ஆனால் அவர்கள் புதுப்புது கோள்களைக் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்... 12 00:00:55,222 --> 00:00:56,223 முதல்வர் டக்கார்ட் 13 00:00:56,306 --> 00:00:58,517 இதற்காகத் தான் உங்களை இங்கு வரவழைத்தேன். 14 00:00:58,600 --> 00:01:02,604 ஆசிரியரை எதிர்த்து பேசுவது, தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில்லை. சகமாணவர்களுடன் சண்டைப்போடுகிறான். 15 00:01:02,688 --> 00:01:04,605 டென்னிஸ் ஹோகன் ஒரு முட்டாள்! 16 00:01:04,690 --> 00:01:05,941 பார்த்துப் பேசு. 17 00:01:07,359 --> 00:01:09,987 நாங்கள் அவனை நினைத்து ரொம்ப கவலைப்படுகிறோம். 18 00:01:10,070 --> 00:01:12,698 -நானும் தான். -கவலைப்பட்டால் மட்டும் போதாது. 19 00:01:13,991 --> 00:01:16,660 அவன் படிக்கக் கஷ்டபடுகிறான் எனப் புரிகிறது, 20 00:01:16,743 --> 00:01:20,831 ஆனால் ஆசிரியர்கள் அவனுக்குப் புரியும்படி... வேறு விதத்தில் கற்றுக் கொடுக்கலாமே. 21 00:01:20,914 --> 00:01:25,169 கற்றுக்கொள்ள விரும்பாத சிறுவனுக்கு, ஆசிரியர்களால் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. 22 00:01:25,252 --> 00:01:29,798 அந்தப் பொறுப்பு அவனிடமும், அவன் பெற்றோர்களிடமும் இருக்க வேண்டும். 23 00:01:29,882 --> 00:01:30,924 பெற்றோர். 24 00:01:32,926 --> 00:01:36,305 அவன் ஏற்கனவே குறைந்த மதிப்பெண் வாங்குவோர் பட்டியலில் தான் இருக்கிறான். 25 00:01:36,388 --> 00:01:40,517 அவன் மதிப்பெண்கள் உயரவில்லை என்றால், சிறப்பு வகுப்புக்கு மாற்றப்படுவான். 26 00:01:40,601 --> 00:01:42,519 வேண்டாம்! எல்லா மோசமான மாணவர்களும் அங்கு தான் இருப்பார்கள்! 27 00:01:42,603 --> 00:01:46,648 அமைதி. கண்ணா, உட்கார். தயவுசெய்து, உட்கார். 28 00:01:48,025 --> 00:01:49,902 நாங்கள் வேறு ஏதாவது செய்ய முடியுமா? 29 00:01:50,485 --> 00:01:53,697 அவனக்குக் கொடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை முடிக்கிறானா எனப் பாருங்கள். 30 00:01:53,780 --> 00:01:55,616 அது அவன் மதிப்பெண்களை உயர்த்தலாம். 31 00:01:55,699 --> 00:01:59,995 ஆனால், தன் நடத்தையை சரிசெய்வது அவனது பொறுப்பு. 32 00:02:01,371 --> 00:02:02,372 கண்டிப்பாக. 33 00:02:02,873 --> 00:02:07,169 கவலைப்படாதீர்கள். அவனுக்குக் கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். 34 00:02:11,632 --> 00:02:12,799 நிர்வாகம் 35 00:02:12,883 --> 00:02:14,760 ஆசிரியர்களைத் திட்டக்கூடாதெனத் தெரியும், அம்மா, 36 00:02:14,843 --> 00:02:17,304 ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை... 37 00:02:17,387 --> 00:02:21,808 ஒன்று சொல்லவா, அயன்? போதும் பேசாதே. இந்தா. 38 00:02:22,851 --> 00:02:23,977 இது என்ன? 39 00:02:24,853 --> 00:02:25,979 உனக்குக் கிடைக்க வேண்டியது. 40 00:02:27,523 --> 00:02:29,441 டென்னிஸ் ஹோகன் ஒரு முட்டாள் தான். 41 00:02:30,234 --> 00:02:31,235 வா. 42 00:02:50,754 --> 00:02:52,130 நிறுத்து! 43 00:02:52,214 --> 00:02:53,715 சிரப் போதும்! 44 00:02:54,925 --> 00:02:56,176 பாபி! 45 00:02:56,260 --> 00:02:57,845 -ஹே. -ஓய்! சிரப் போதும். 46 00:02:57,928 --> 00:02:59,137 அம்மா சொல்வதைக் கேள். 47 00:02:59,221 --> 00:03:01,640 எனக்கு டகலோக் தெரிந்தால் கேட்டிருப்பேன். 48 00:03:01,723 --> 00:03:04,393 கற்றுக்கொள். நான் உன்னைவிட சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டேன். 49 00:03:04,476 --> 00:03:05,936 கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் கற்றுக்கொண்டீர்கள். 50 00:03:06,019 --> 00:03:08,272 அதனால் தான் அவளுக்கு அழகான கணவர் கிடைத்தார். 51 00:03:09,231 --> 00:03:10,899 டகலோக் காதலுக்கேற்ற மொழி. 52 00:03:12,693 --> 00:03:16,905 அப்புறம்? வாரயிறுதியில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளாய்? 53 00:03:16,989 --> 00:03:18,907 ஃப்ரெயா மற்றும் குழுவோடு விளையாடப் போகிறேன். 54 00:03:19,908 --> 00:03:22,411 ஃப்ரெயாவா? யார் அது? புது நண்பரா? 55 00:03:22,494 --> 00:03:25,873 இல்லை. “ஃபைனல் ஃபேண்டஸி”-யில் வரும் கதாபாத்திரம், அம்மா. அது ஒரு வீடியோ கேம். 56 00:03:26,206 --> 00:03:27,791 அது அற்புதமாக இருக்கும். 57 00:03:28,667 --> 00:03:29,668 அவளின் வார்த்தைகள். 58 00:03:29,751 --> 00:03:30,961 ரொம்ப அற்புதமாக இருக்கும். 59 00:03:31,044 --> 00:03:33,422 கடைசி எதிரியான கூஜாவுடன் விளையாடும் கட்டத்திற்கு வந்துவிட்டேன். 60 00:03:33,505 --> 00:03:36,884 முழு விளையாட்டையும் இன்று வென்றுவிடுவேன் என நினைக்கிறேன். 61 00:03:36,967 --> 00:03:37,968 சரி. 62 00:03:38,051 --> 00:03:40,345 -வேண்டாம். வீடியோ கேம் விளையாடக் கூடாது. -இல்லை. இல்லை. 63 00:03:41,013 --> 00:03:44,516 ஏதாவது விளையாட வேண்டுமென்றால், பியானோ வாசி. அது ஜாலியாக இருக்கும். 64 00:03:45,225 --> 00:03:46,768 அவருக்கு ஜாலியென்றால் என்னவென்றே தெரியாது போல. 65 00:03:47,936 --> 00:03:49,563 இல்லை, உன் அம்மா சொல்வது சரிதான். 66 00:03:49,646 --> 00:03:52,274 இசை நிகழ்ச்சியில் சிறப்பாக வாசிக்க வேண்டுமென்றால் நீ பயிற்சி செய்யவேண்டும். 67 00:03:52,691 --> 00:03:55,444 இசை நிகழ்ச்சியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 68 00:03:55,527 --> 00:03:56,945 நான் ஏன் விளையாடக் கூடாது? 69 00:03:57,654 --> 00:04:00,282 வேண்டாம். நீ வீடியோ கேமில் நிறைய நேரம் செலவழிக்கிறாய். 70 00:04:00,866 --> 00:04:02,659 நம்மிடம் இணையதளம் இருந்தால் நிறைய நேரம் செலவழிக்க மாட்டேன். 71 00:04:03,243 --> 00:04:05,871 இணையத்தில் இருக்கும் வழிகாட்டியைப் பயன்படுத்தி சீக்கிரமே வென்றுவிடுவேன். 72 00:04:05,954 --> 00:04:08,165 -சரி. -வழிகாட்டி வேண்டுமென்றால், 73 00:04:08,248 --> 00:04:13,420 முன்கதவு வழியாக நடந்துசென்று, உன் சகோதரியைப் போல வெளியே போய் விளையாடு. 74 00:04:29,853 --> 00:04:31,605 இன்னும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. 75 00:04:31,688 --> 00:04:36,235 தண்டனைகள், பரிசுகள், சர்க்கரை இல்லாத சாப்பாடு, சர்க்கரை போட்ட சாப்பாடு, எல்லாமே முயற்சித்தேன். 76 00:04:36,318 --> 00:04:39,279 -அடித்துப் பார்த்தாயா? -அப்பா. 77 00:04:43,158 --> 00:04:47,913 பார், சாரா, இதை உன்னிடம் சொல்ல கஷ்டமாக இருக்கு, 78 00:04:48,455 --> 00:04:51,625 ஆனால் அந்தக் கேடுகெட்ட வக்கீலிடமிருந்து உனக்கு இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. 79 00:04:52,292 --> 00:04:53,710 மறுபடியுமா? 80 00:04:56,255 --> 00:04:58,882 அவன் என்னைக் கடுப்பேற்றுவதற்காகவே இப்படிச் செய்கிறான். 81 00:04:58,966 --> 00:05:01,802 அவன் உன்னை நீதிமன்றத்திற்கு அழைக்கிறான் என்றால், வழக்குப் போட்டிருப்பான். 82 00:05:01,885 --> 00:05:04,304 என்ன வழக்காக இருந்தால் என்ன? நான் தான் அவனது அம்மா. 83 00:05:06,431 --> 00:05:08,392 பிரச்சினைகளுடன் போராடும் அம்மா. 84 00:05:13,021 --> 00:05:14,231 சாரா, அவன் ஜெயிக்க வாய்ப்பிருக்கு. 85 00:05:18,193 --> 00:05:19,361 ஜெயிக்க மாட்டான். 86 00:05:20,779 --> 00:05:21,780 ஜெயிக்க மாட்டான். 87 00:05:23,615 --> 00:05:28,287 நீ ஒரு நல்ல அம்மா என்பது எனக்குத் தெரியும். 88 00:05:28,871 --> 00:05:31,874 ஆனால் நீ அவனை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். 89 00:05:34,793 --> 00:05:35,794 சரி, நான் பார்த்துக்கொள்கிறேன். 90 00:05:43,969 --> 00:05:45,220 எப்படி போகிறது, மகனே? 91 00:05:46,138 --> 00:05:49,141 எப்படி போகிறதென நினைக்கிறீர்கள்? நான் ஒரு மக்கு. 92 00:05:49,808 --> 00:05:50,851 அப்படிச் சொல்லாதே. 93 00:05:51,643 --> 00:05:53,061 நீ ஒரு புத்திசாலிக் குழந்தை. 94 00:05:53,770 --> 00:05:56,690 நீ... மற்றவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறாய், அவ்வளவுதான். 95 00:05:59,026 --> 00:06:02,613 ஒருவேளை, இன்னும் கொஞ்சம் கடினமாக முயன்றால்... 96 00:06:02,696 --> 00:06:03,906 முயற்சிக்கிறேன் தான்! 97 00:06:04,531 --> 00:06:06,200 முயற்சிக்கும் போதுதான் நான் ஒரு மக்கு என தெரிந்துகொண்டேன்! 98 00:06:07,743 --> 00:06:10,495 ரொம்ப கடினமாக முயற்சித்தும் என்னால் முடியவில்லை. 99 00:06:10,996 --> 00:06:12,789 கோபமாக இருக்கிறாய் எனத் தெரிகிறது. 100 00:06:12,873 --> 00:06:15,876 உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால்... எப்படியென்று தெரியவில்லை. 101 00:06:17,961 --> 00:06:19,338 ஒருவேளை நீங்களும் மக்காக இருக்கலாம். 102 00:06:22,966 --> 00:06:24,218 அப்படியும் இருக்கலாம். 103 00:06:28,597 --> 00:06:29,681 இதையெல்லாம் படிக்கிறாயா? 104 00:06:30,349 --> 00:06:33,769 எனக்குப் படிக்கத் தெரியும். நான் மக்கு தான், முட்டாளில்லை. 105 00:06:37,439 --> 00:06:39,900 பொறு. இது பாலியல் சம்பந்தமாக இருக்கிறது. 106 00:06:40,567 --> 00:06:41,985 இது அறிவியல் புனைகதை எரோட்டிக்கா. 107 00:06:42,653 --> 00:06:46,949 சரி. அறிவியல் புனைகதை எரோட்டிக்கா. ஆமாம். 108 00:06:49,243 --> 00:06:51,119 அந்த சனி கிரகம் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன? 109 00:06:51,203 --> 00:06:53,664 அதைவிட சிறந்த பல கிரகங்கள் உள்ளன. 110 00:06:53,747 --> 00:06:57,543 என் மழுங்கிய மூளையினால் இந்த தாளில் அதை எழுதி என்னால் நிரூபிக்க முடியவில்லை. 111 00:07:08,387 --> 00:07:10,472 -என்னோடு வா. -நாம் எங்கே போகிறோம்? 112 00:07:11,223 --> 00:07:12,516 ஒரு நல்ல இடத்திற்கு. 113 00:07:22,442 --> 00:07:27,406 அப்பா. கடைசி எதிரியான குஜா, ஃப்லேர் ஸ்டார் என்னும் வித்தையை பயன்படுத்துகிறான் 114 00:07:27,489 --> 00:07:30,367 அது நம் முழு அணிக்கும் பேரழிவைக் கொடுக்கும். 115 00:07:30,450 --> 00:07:33,829 நன்றாக உள்ளதே. பயிற்சி செய். 116 00:07:40,752 --> 00:07:44,381 ஆனால் என் கணக்குப் படி, நாம் ஹோலி டேமேஜுக்கு எதிராக கவசம் அணிந்தால்... 117 00:07:44,464 --> 00:07:45,465 கவனம் செலுத்து. 118 00:07:53,390 --> 00:07:56,226 மேலும், ஐகோவா அல்லது டாகரா என என்னால் முடிவு செய்ய முடியவில்லை. 119 00:07:56,310 --> 00:07:58,937 பாபி, வீடியோ கேம்களில் எப்படி வெற்றி பெற வேண்டும் என 120 00:07:59,021 --> 00:08:02,774 கற்பதற்கு பயன்படுத்தும் ஆற்றலை நீ ஏன் பியானோ கற்பதில் காட்டக்கூடாது? 121 00:08:02,858 --> 00:08:05,944 ஏனென்றால் எனக்கு பியானோ பிடிக்கவில்லை. இது சலிப்பாக உள்ளது. 122 00:08:07,279 --> 00:08:10,240 இதை உன் வீடியோ கேம் என நினைத்துக்கொள். சரியா? 123 00:08:11,033 --> 00:08:14,745 இந்த இசை நிகழ்ச்சி தான் நீ ஜெயிக்க வேண்டிய ஒரு வில்லன். 124 00:08:16,330 --> 00:08:19,291 சரி, அப்படி செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? 125 00:08:20,709 --> 00:08:24,004 ஒரு வில்லனை வெல்லும்போது, புதையல் அல்லது 126 00:08:24,087 --> 00:08:27,799 கவசம் அல்லது ஒரு புதிய ஆயுதம் போன்ற சிறப்பான ஏதாவது கிடைக்கும். 127 00:08:28,634 --> 00:08:33,554 சரி, நீ மிகவும் கடினமாக பயிற்சி செய்து, இந்த இசை நிகழ்ச்சியில் சாதித்துவிட்டால், 128 00:08:34,181 --> 00:08:35,849 -உனக்கு ஏதாவது வாங்கித் தருவேன். -இன்டர்நெட்? 129 00:08:35,933 --> 00:08:38,268 இல்லை, அது இல்லை. 130 00:08:38,352 --> 00:08:42,940 உன் அம்மாவிடமிருந்து நாம் மறைக்கும் அளவிற்கு சிறப்பானதாக இருக்கும். 131 00:08:43,023 --> 00:08:44,900 அவரிடமிருந்து உங்களால் எதையுமே மறைக்க முடியாது. 132 00:08:45,817 --> 00:08:48,403 உனக்கு டகலோக் புரியும் என்பதை நீ பல வருடங்களாக அம்மாவிடம் மறைத்துள்ளாய். 133 00:08:48,487 --> 00:08:49,821 என்ன? அப்படி எல்லாம் இல்லையே. 134 00:08:50,489 --> 00:08:51,490 உண்மையாகவா? 135 00:08:52,950 --> 00:08:56,161 உங்கள் பொய்கள் அவ்வளவு நன்றாக இல்லை. 136 00:08:58,288 --> 00:08:59,873 -அடச்சே. -பார்த்துப் பேசு. 137 00:08:59,957 --> 00:09:01,124 மன்னியுங்கள். 138 00:09:01,667 --> 00:09:03,043 அடச்சே. 139 00:09:05,170 --> 00:09:07,798 சரி. சம்மதிக்கிறேன். சிறப்பானதாக இருக்க வேண்டும். 140 00:09:09,007 --> 00:09:10,008 முழுதாக வாசிக்க வேண்டும். 141 00:09:10,509 --> 00:09:11,510 சரி. 142 00:09:14,263 --> 00:09:18,475 ஹே, அப்பா. நான் கூஜாவுடன் சண்டைப் போடுவதை பார்க்கிறீர்களா? 143 00:09:21,478 --> 00:09:22,604 சரி, நான் தான் முதலில் போவேன். 144 00:09:25,858 --> 00:09:26,900 உன் கிரகத்தைப் பற்றிச் சொல். 145 00:09:27,609 --> 00:09:31,071 அதில் வளையங்கள் இருக்கும். அது சூரியனில் இருந்து ஆறாவது கிரகம். 146 00:09:31,154 --> 00:09:33,073 மேலும் இது இரும்பு-நிக்கல் கருவைக் கொண்டது. 147 00:09:33,156 --> 00:09:35,534 சனிக் கிரகம் வேண்டாம். அதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். 148 00:09:36,076 --> 00:09:38,745 இரும்பு-நிக்கல் விஷயம் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அதனால் என்ன? 149 00:09:38,829 --> 00:09:42,082 நீ அறிக்கை கொடுக்க விரும்பிய கிரகத்தைப் பற்றி சொல். 150 00:09:42,583 --> 00:09:43,584 டார்டுரஸ் தானே? 151 00:09:43,667 --> 00:09:46,503 ஆமாம். டார்டுரஸைப் பற்றி சொல். 152 00:09:47,004 --> 00:09:48,005 அம்மா. 153 00:09:51,091 --> 00:09:53,844 நமது நெபுலாவிற்கு வெளியே உள்ளதால், அதன் வளிமண்டலம் வேறுபடும். 154 00:09:55,429 --> 00:09:57,181 அதில் சுவாசிக்கக்கூடிய சிவப்பு நீராவி இருக்கும். 155 00:10:01,018 --> 00:10:02,186 எப்படி என்றால்... 156 00:10:04,271 --> 00:10:05,856 இப்படியா? 157 00:10:06,982 --> 00:10:08,025 வேறென்ன? 158 00:10:09,776 --> 00:10:10,903 அங்கு நீர் உள்ளது. 159 00:10:11,778 --> 00:10:14,239 ஆனால், அது பயோலுமினசென்ட் நானோக்ரிலால் நிரப்பப்பட்டுள்ளது. 160 00:10:14,323 --> 00:10:15,407 பயோலுமினசென்ட்டா? 161 00:10:15,908 --> 00:10:17,326 பயோலுமினசென்ட்... 162 00:10:20,662 --> 00:10:21,955 நானோக்ரில். 163 00:10:22,748 --> 00:10:26,919 ஆம்! மற்றும் அந்த மலைகள், அவை பூமியில் உள்ள மலைகள் போல இருக்காது. 164 00:10:27,002 --> 00:10:28,879 அவை கிரகத்தின் மேற்பரப்பில் சறுக்கி, 165 00:10:28,962 --> 00:10:31,465 கிரகத்தின் நிலவுகளின் ஈர்ப்பு விசையால் இழுத்துச் செல்லப்படுகின்றன. 166 00:10:31,548 --> 00:10:35,636 அருமையாக உள்ளது. எத்தனை நிலவுகள் உள்ளன? 167 00:10:35,719 --> 00:10:39,723 50 இருக்கும். மேலும் ஒவ்வொன்றும் அதன் சொந்த சுற்றுப்பாதை மற்றும் வடிவத்தைக் கொண்டிருக்கும். 168 00:10:41,350 --> 00:10:42,726 இது போலவா? 169 00:11:45,873 --> 00:11:49,293 ஹேய்! நீங்கள் என்ன கருமத்தை செய்கிறீர்கள்? 170 00:11:50,586 --> 00:11:51,795 ஓடு! 171 00:11:51,879 --> 00:11:54,590 -அதற்கான பணத்தைக் கட்டுங்கள்! -மன்னிக்கவும்! 172 00:11:56,925 --> 00:11:59,428 அந்த குப்பையை அப்படியே விட்டுவிட்டு வந்தது ஆச்சரியமாக இருக்கு! 173 00:11:59,511 --> 00:12:02,681 குப்பையா? என்ன குப்பை? அது உன் திறமை! 174 00:12:03,265 --> 00:12:05,517 உன் அறிவைப் பார்த்து வியக்கிறேன். 175 00:12:05,601 --> 00:12:08,020 நான் பார்த்ததிலேயே நீதான் மிகவும் புத்திசாலியான குழந்தை. 176 00:12:08,103 --> 00:12:09,271 அம்மா. 177 00:12:09,813 --> 00:12:10,814 உன்னிடம் திறமை உள்ளது. 178 00:12:11,398 --> 00:12:14,735 மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றால், உனக்கு திறமை இல்லை என்றாகிவிடாது. 179 00:12:15,360 --> 00:12:18,530 இது உண்மையான திறன். அது டார்டுரஸ் போல உண்மையானது. 180 00:12:19,489 --> 00:12:20,949 நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், அன்பே. 181 00:12:21,033 --> 00:12:22,201 நானும் உங்களை நேசிக்கிறேன். 182 00:12:24,494 --> 00:12:26,246 உன் கிரகத்தை உருவாக்க இப்போது நாம் பொருட்களைப் கொண்டு வர வேண்டும். 183 00:12:26,330 --> 00:12:27,331 -சரி. -பார்ப்போம். 184 00:12:28,874 --> 00:12:31,376 கொஞ்சம் பசை. டேப். 185 00:12:31,460 --> 00:12:33,670 வர்ணங்கள். இதோ இங்கே. 186 00:12:34,296 --> 00:12:35,547 அந்தப் பந்துகள். 187 00:12:36,381 --> 00:12:37,508 -அம்மா. -என்ன? 188 00:12:37,591 --> 00:12:39,176 உறுதியாகவே நான் அந்த அறிக்கையை செய்ய வேண்டாமா? 189 00:12:39,259 --> 00:12:42,930 இல்லை, வேண்டியதில்லை. உன் ப்ராஜெக்டை உன் விருப்பப்படியே செய். 190 00:12:43,013 --> 00:12:45,599 -ஆனால்... -வேண்டாம். நான் உன் ஆசிரியரிடம் பேசிக்கொள்கிறேன். 191 00:12:46,391 --> 00:12:47,392 சரியா? 192 00:12:48,519 --> 00:12:51,146 நீ பசியாக இருப்பாய். நான் உனக்காக பேன்கேக் செய்யப் போகிறேன். சரி. 193 00:12:51,230 --> 00:12:53,607 ஆம், மூளைக்கான சத்து உணவு. மற்றும் சாக்லேட் சிப்ஸ். 194 00:12:53,690 --> 00:12:55,943 மற்றும், அடித்த கிரீம்... தம்ப்டாக்ஸ்! 195 00:12:56,026 --> 00:12:58,320 -தம்ப்டாக்ஸா? -ஆம். உன் கிரகத்திற்காக! 196 00:12:58,403 --> 00:12:59,821 அடக் கடவுளே, அது எங்காவது இருக்கும் என தெரியும். 197 00:12:59,905 --> 00:13:01,698 நிச்சயம், அது இங்கு எங்காவது தான் இருக்கும். 198 00:13:01,782 --> 00:13:04,660 சரி, இதோ டேப். இல்லை, நீ... நீ போ... நான் கொண்டு வருகிறேன். 199 00:13:04,743 --> 00:13:06,828 போ. அந்த பசை. 200 00:13:07,871 --> 00:13:09,289 இங்கே இருக்கு. அப்புறம்... 201 00:13:15,087 --> 00:13:16,672 பிளேஸ்டேஷன் 202 00:13:17,422 --> 00:13:20,592 அருமை. அது ஒரு டன் அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 203 00:13:20,676 --> 00:13:22,302 ஆம், ஆனால் நாம் போதுமான அளவு வேகமாக குணமடையவில்லை. 204 00:13:24,388 --> 00:13:27,099 -ஓய், அவனை அடி! -நான் “தண்டர்” முறையை பயன்படுத்தப் போகிறேன். 205 00:13:29,268 --> 00:13:33,313 -அது உதவவில்லை என நினைக்கிறேன். -ஐயோ, அவன் நம்மை தாக்கப் போகிறான். 206 00:13:33,397 --> 00:13:35,566 ஐயோ! 207 00:13:36,733 --> 00:13:37,860 அடச்சே! 208 00:13:38,735 --> 00:13:39,945 ஜெயித்திருப்போம். 209 00:13:40,028 --> 00:13:40,988 கேம் முடிந்தது 210 00:13:41,071 --> 00:13:42,239 நாம் மீண்டும் விளையாடலாம். 211 00:13:42,948 --> 00:13:46,034 ஒன்று சொல்லவா? இது அருமையாக இருக்கு. 212 00:13:46,118 --> 00:13:47,953 எனக்குத் தெரியும். 213 00:13:50,455 --> 00:13:51,748 என்னது இது? 214 00:13:52,875 --> 00:13:54,751 வந்து, நான் சும்மா... 215 00:13:54,835 --> 00:13:56,837 பயிற்சியில் இருந்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறோம். 216 00:13:57,588 --> 00:13:59,631 சரி, ஐந்து நிமிடமாகிவிட்டது. அதை நிறுத்து. 217 00:14:00,465 --> 00:14:03,927 -ஆனால் இன்னும் கேமை சேவ் செய்யவில்லையே. -பாபி லீவானாங், நான் சொன்னதைச் செய். 218 00:14:06,263 --> 00:14:07,681 -சரி. -சரி. 219 00:14:08,599 --> 00:14:09,641 -இல்லை. -என்ன... 220 00:14:10,684 --> 00:14:12,436 என் அன்பே... 221 00:14:12,519 --> 00:14:15,397 நீங்கள் ஏன் அவளை ஊக்குவிக்குறீர்கள்? 222 00:14:15,480 --> 00:14:18,192 என் மகளை நான் நேசிக்கிறேன் என்பதால். 223 00:14:18,275 --> 00:14:20,277 நானும் அவளை நேசிக்கிறேன் என நீங்கள் நினைக்கவில்லையா? 224 00:14:23,113 --> 00:14:26,033 அவள் ஒரு திரையை வெறித்துப் பார்க்கிறாள், அவ்வளவு தான். 225 00:14:27,117 --> 00:14:30,204 பிறகு அவளுக்கு எப்படி நண்பர்கள் கிடைப்பார்கள்? 226 00:14:30,704 --> 00:14:33,373 நானும் அவளைப் பற்றி கவலைப்படுகிறேன். 227 00:14:33,457 --> 00:14:36,543 அவள் சற்று... வித்தியாசமானவள். 228 00:14:37,544 --> 00:14:41,006 நான் அவளுக்கு நண்பனாக இல்லையென்றால், வேறு யார் இருப்பார்கள்? 229 00:15:04,947 --> 00:15:06,031 அம்மா! 230 00:16:05,382 --> 00:16:06,383 அம்மா? 231 00:16:08,594 --> 00:16:13,307 என்னுடைய ப்ராஜெக்டை முடித்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. 232 00:16:14,683 --> 00:16:18,854 அது நம்முடைய கிரகம் என்பதால், அதற்கு “சாரியன்” என்று பெயரிட முடிவு செய்திருக்கிறேன். 233 00:16:20,397 --> 00:16:22,900 பிரமாதம், செல்லமே. 234 00:16:28,822 --> 00:16:31,033 உங்களால் என்னை பள்ளிக்கு கூட்டிச் செல்ல முடியுமா? 235 00:16:32,701 --> 00:16:34,244 எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நான்... 236 00:16:35,871 --> 00:16:37,497 உன் தாத்தாவைக் கேளேன். 237 00:16:38,832 --> 00:16:40,626 அவர் வேலையாக இருக்கிறார். 238 00:16:48,634 --> 00:16:49,760 பரவாயில்ல, அம்மா. 239 00:19:06,396 --> 00:19:09,149 டிரேசி, உன்னாலும் பெருமைப்படுகிறேன். சரியா? 240 00:19:10,317 --> 00:19:11,318 ஹே, அப்பா. 241 00:19:11,401 --> 00:19:12,903 இந்த இசை நிகழ்ச்சியை நன்றாக செய்ததற்கு 242 00:19:12,986 --> 00:19:15,364 நீங்கள் எனக்கு என்ன பரிசு தர வேண்டும் என கண்டுபிடித்துவிட்டேன். 243 00:19:16,657 --> 00:19:18,784 எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். 244 00:19:19,576 --> 00:19:22,871 சைக்கிளா? இரு, அது என்ன வீடியோ கேமா? 245 00:19:22,955 --> 00:19:27,417 இல்லை, பெடல், சக்கரம், கைப்பிடிகள் எல்லாம் வைத்த நிஜமான சைக்கிள். 246 00:19:27,501 --> 00:19:29,920 அப்போது தான் நான் என் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாட முடியும். 247 00:19:30,796 --> 00:19:32,297 வாங்கித் தரேன், பாப். 248 00:19:32,881 --> 00:19:35,551 எனக்கு இசை ஞானமே இல்லை. ஆனால் நான் ஒரு ப்ரேக் டான்சர். 249 00:19:35,634 --> 00:19:37,344 -உன்னால் அதை நம்ப முடிகிறதா? -இல்லை. 250 00:19:45,227 --> 00:19:48,105 சீக்கிரம் வந்துவிட்டாயே. இந்த முறை என்ன விஷயம்? 251 00:19:48,188 --> 00:19:50,315 தாமாதமாக வந்ததற்கான அனுமதிச் சீட்டை கொண்டுவர என் ஆசிரியார் சொன்னார். 252 00:19:50,399 --> 00:19:51,859 நீ தாமதமாகத்தான் வந்திருக்கிறாய். 253 00:19:52,860 --> 00:19:54,611 10:15 ஆகப் போகிறதே. 254 00:19:54,695 --> 00:19:57,531 உன் அம்மா தானே உன்னை வழக்கமாக பள்ளிக்கு அழைத்து வருவார்கள்? 255 00:19:57,614 --> 00:19:59,366 ஆமாம், அவர் படுக்கையில் ஓய்வெடுக்கிறார். 256 00:20:01,743 --> 00:20:02,828 படுக்கையில் ஓய்வெடுக்கிறாரா? 257 00:20:11,211 --> 00:20:12,546 இது அடிக்கடி நடக்குமா? 258 00:20:14,756 --> 00:20:16,800 உன் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாத போது, 259 00:20:16,884 --> 00:20:21,847 உனக்கு உதவ... வீட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா? 260 00:20:22,472 --> 00:20:24,933 தாத்தா இருக்கிறார், ஆனால் அவர் இரவு வேலை பார்ப்பவர். 261 00:20:26,727 --> 00:20:27,811 அப்படியா. 262 00:20:29,730 --> 00:20:30,898 இதனால் எனக்கு ஏதாவது பிரச்சினை வருமா? 263 00:20:33,859 --> 00:20:34,860 இல்லை. 264 00:20:36,612 --> 00:20:37,779 வரவே வராது. 265 00:20:41,867 --> 00:20:45,120 இதை மிஸ். மில்லரிடம் கொடு, மதிய உணவின் போது, என் அலுவலகத்துக்கு வந்து பார்க்கச் சொல். 266 00:20:55,714 --> 00:20:56,924 தாத்தா! 267 00:20:57,007 --> 00:20:59,927 தாத்தா! என்னுடைய ப்ராஜெக்டைப் பாருங்கள்! 268 00:21:00,010 --> 00:21:03,305 இது தப்பான கிரகம் என்றும், இது கட்டுரையே இல்லை என்றும் என் ஆசிரியர் சொன்னார், 269 00:21:03,388 --> 00:21:05,432 ஆனால் நான் நீண்ட விளக்கம் தந்திருந்தேன் 270 00:21:05,516 --> 00:21:08,310 அது நன்றாக இருந்ததாகத்தான் தோன்றுகிறது, எனவே தான் எனக்கு டி கிரேட் கொடுத்திருப்பார். 271 00:21:08,393 --> 00:21:10,354 அம்மாவிடம் என் கிரேட் பற்றி சொல்லப் போகிறேன். 272 00:21:10,437 --> 00:21:11,647 அயன். 273 00:21:14,858 --> 00:21:16,109 ஹே, செல்லம். 274 00:21:17,152 --> 00:21:18,362 அப்பா? 275 00:21:20,781 --> 00:21:22,824 உனக்காக சில பொருட்களை பேக் செய்துவிட்டேன். 276 00:21:24,409 --> 00:21:26,245 நீ கொஞ்ச காலம் என்னோடு தங்கப் போகிறாய். 277 00:21:27,371 --> 00:21:29,998 -எனக்கு இஷ்டமில்லை. -நல்லதுக்காகத்தான் சொல்கிறேன். 278 00:21:31,834 --> 00:21:34,670 -பாரு, இவனை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்... -இதில் நீங்கள் தலையிடாதீர்கள், ஜோ. 279 00:21:34,753 --> 00:21:37,047 நானாக இருந்தாலும், உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்வேன். 280 00:21:37,130 --> 00:21:39,007 அவள் மருந்துகளை எடுத்துக்கொள்கிறாளா என்றும் பார்த்தக்கொள்வேன். 281 00:21:39,091 --> 00:21:40,300 சரி, நாம் கிளம்பலாம். 282 00:21:41,510 --> 00:21:43,554 -என்னை அனுப்பாதீர்கள். -அயன்... 283 00:21:45,472 --> 00:21:47,015 அவனுடைய பெயர் இயான். 284 00:21:57,484 --> 00:21:58,485 சரி... 285 00:21:59,903 --> 00:22:05,659 கண்ணா, உன் அம்மாவால் உன்னைப் பார்த்துக்கொள்ள முடியாது. 286 00:22:05,742 --> 00:22:07,411 -அவங்களால் முடியும். -இல்லை, அவளால் முடியாது. 287 00:22:07,494 --> 00:22:08,787 -அவங்க களைப்பாக இருக்காங்க. -அதனால் நீ... 288 00:22:08,871 --> 00:22:10,289 -அதனால் தான்... -அவங்க எழுந்து விடுவாங்க! 289 00:22:10,372 --> 00:22:11,748 -இல்லை! வா! அயன்! -அம்மா! அம்மா! 290 00:22:11,832 --> 00:22:15,919 -அம்மா! முடியாது! வேண்டாம்! வேண்டாம்! -வா! அயன்! 291 00:22:16,003 --> 00:22:18,046 -வா. -அம்மா! 292 00:22:18,130 --> 00:22:20,215 அம்மா, எழுந்திருங்கள்! 293 00:22:28,307 --> 00:22:32,227 அம்மா! அப்பா! நானும் டிரேசியோடு சைக்கிள் ஒட்டப் போகிறேன். 294 00:22:34,229 --> 00:22:36,523 ஜாக்கிரதை, இதோ ஃப்ரீகாஸாய்ட் வருகிறாள். 295 00:22:37,816 --> 00:22:39,193 ஹே, எங்கே போகிறாய்? 296 00:22:39,776 --> 00:22:41,403 எப்படியோ போ, டிரேசி! 297 00:22:48,911 --> 00:22:50,287 மெல்பர்ன் சீபுருக் நூலகம் 298 00:23:09,348 --> 00:23:10,349 டாக்பைல் 299 00:23:11,600 --> 00:23:13,644 டாக்பைலில் தேடுதல் ஃபைனல் ஃபேன்டசி IX இன் செயல் விளக்கம் 300 00:23:13,727 --> 00:23:15,646 ஃபைனல் ஃபேன்டசி IX வழிகாட்டி மற்றும் செயல் விளக்கம் 301 00:23:18,649 --> 00:23:20,943 ஸூஸின் மேஸா? 302 00:23:21,735 --> 00:23:24,154 டூம்ஸ்டே மந்திரமா? அருமை! 303 00:23:25,656 --> 00:23:26,698 மன்னியுங்கள். 304 00:23:30,452 --> 00:23:33,205 இரு, அவர் கடைசி வில்லனில்லை தானே? 305 00:23:33,789 --> 00:23:34,831 விடுங்களேன்! 306 00:23:36,834 --> 00:23:38,877 உங்களுக்கான விளையாட்டை உருவாக்குங்கள்! 307 00:23:42,297 --> 00:23:44,424 இங்கே கிளிக் செய்யவும்! 308 00:23:46,218 --> 00:23:48,637 பயனர்கள் உருவாக்கிய விளையாட்டுகள் 309 00:23:50,806 --> 00:23:52,266 சாரியன் 310 00:23:54,643 --> 00:23:57,396 சாரியன் 311 00:24:27,217 --> 00:24:29,970 என்னை ஒரு ஸ்டூலில் உட்காரச் சொன்னார்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். 312 00:24:30,053 --> 00:24:31,263 உட்காருவது என்பது ஒரு சம்பிரதாயம். 313 00:24:32,389 --> 00:24:34,141 நீங்கள் ஸ்டூலில் உட்கார அவர் விரும்புகிறார். 314 00:24:34,224 --> 00:24:37,519 அவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக நாம் உட்காரப் போவதில்லை, சரியா? 315 00:24:38,145 --> 00:24:41,440 நேற்று கால்களுக்கு அதிக பயிற்சி கொடுத்ததால், இப்போது, நான் உட்காரப் போகிறேன். 316 00:24:42,941 --> 00:24:47,988 “ட்வின் டாக்கர்ஸ்” விளையாட்டை நான் தவறாகக் கணித்துவிட்டேன் என்று சிலர் சொல்லலாம். 317 00:24:49,781 --> 00:24:53,076 இருந்தாலும், 2.1 மில்லியன் கேம்கள் விற்றுவிட்டன, அதைப்பற்றி இப்போது விவாதிக்க முடியாது, இல்லையா? 318 00:24:58,290 --> 00:25:01,627 சரி. எப்படியோ, சுமார் மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. 319 00:25:01,710 --> 00:25:04,296 இதோடு வகுப்பை முடித்துக்கொள்ளலாம். 320 00:25:04,796 --> 00:25:07,633 கடைசியாக அவன் எழுதியதெல்லாம் தேவையில்லாதது, 321 00:25:07,716 --> 00:25:09,885 அதை நீங்கள் உபயோகிக்க வேண்டாம், அப்படியே புறக்கணித்து விடுங்கள். 322 00:25:18,519 --> 00:25:21,146 -ஹாய். திரு. கிரிம். நான்... -அயன். 323 00:25:21,647 --> 00:25:25,400 ஒரு புரோகிராமராக உங்கள் கேம் தான் ஊக்கப்படுத்தியது. என் பெயர் பாபி. 324 00:25:26,318 --> 00:25:27,778 இதையே தான் பலரும் சொல்கிறார்கள். 325 00:25:27,861 --> 00:25:29,613 -ட்வின் டாக்கர்ஸ் கேம்... -இல்லை. நான்... 326 00:25:29,696 --> 00:25:31,323 ...வீடியோ கேம் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 327 00:25:31,406 --> 00:25:33,992 இல்லை, உண்மையில், நான் சாரியன் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தேன். 328 00:25:36,662 --> 00:25:37,913 -சாரியன்? -ஆமாம். 329 00:25:41,834 --> 00:25:43,752 நீண்ட காலமாக நான் அந்த விளையாட்டைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. 330 00:25:44,586 --> 00:25:47,256 அதுதான் நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விஷயம். 331 00:25:49,091 --> 00:25:50,300 அப்போது, எனக்குப் பத்து வயது என்பதால், 332 00:25:50,384 --> 00:25:52,302 அதனுடைய கோட் மோசம் என்று எனக்குத் தெரியவில்லை. 333 00:25:54,805 --> 00:25:55,806 நீ வேடிக்கையானவள். 334 00:25:55,889 --> 00:25:58,225 ஆக, ஏதாவது புது கேமுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளீர்களா, அல்லது... 335 00:25:58,308 --> 00:26:01,979 ஆமாம். அதைப் பற்றி உன்னிடம் சொல்கிறேன். 336 00:26:02,062 --> 00:26:04,273 அதெல்லாம் ஏன் ஒன்றுக்கும் உதவாமல் போனது என்று நீ சொல்லலாம். 337 00:26:04,356 --> 00:26:05,399 நிச்சயம் சொல்கிறேன்! 338 00:26:07,150 --> 00:26:08,360 அது ஒரு ஜோக். 339 00:26:10,779 --> 00:26:12,531 உனக்கு நகைச்சுவை பற்றி தெரியாது போல, இல்லையா? 340 00:26:13,240 --> 00:26:14,950 வந்து, எனக்குத் தெரியும், நான்... 341 00:26:17,035 --> 00:26:18,370 உங்கள் தாடி பிடிச்சிருக்கு. 342 00:26:18,453 --> 00:26:20,873 -உனக்குப் பிடிச்சிருக்கா? நன்றி. -இல்லை. நான் ஜோக்குக்காகச் சொன்னேன். 343 00:26:25,002 --> 00:26:28,297 -சரி. நான் கிளம்புகிறேன். -நானும் உங்களோடு வருகிறேன். 344 00:26:30,132 --> 00:26:31,133 சரி. 345 00:26:33,343 --> 00:26:35,387 -அந்த கேமைப் பற்றிக் கேட்க விரும்புகிறாயா? -ஆமாம்! 346 00:26:35,470 --> 00:26:40,100 சரி. பெரிய, நிறைய பேர் விளையாடக்கூடிய ஒரு கேமைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன். 347 00:26:40,184 --> 00:26:41,643 தற்காலத்துக்கு முந்தைய காலத்துக்கான கேம் மாதிரி. 348 00:26:41,727 --> 00:26:43,103 -அருமை. -சரி. 349 00:26:43,854 --> 00:26:47,983 அதற்கு “கிரிம் குவெஸ்ட்” என்று பெயரிட நினைக்கிறேன். 350 00:26:49,693 --> 00:26:51,403 -அது தற்காலிக பெயரா அல்லது... -ஆமாம், அதுவும் சரிதான். நன்றாக இருக்கிறது. 351 00:26:51,486 --> 00:26:53,280 -வேறு ஏதாவது பெயரிடலாமா... -இது தான் இறுதி... 352 00:26:53,363 --> 00:26:55,949 -...அது கொஞ்சம் அகங்கார தொனியாகத் தோன்றுகிறது. -அதுதான் இறுதியான பெயர். 353 00:28:18,532 --> 00:28:20,534 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்