1 00:00:06,048 --> 00:00:11,929 நீல சப்டைட்டில் ஜப்பானிய வசனங்கள். மஞ்சள் சப்டைட்டில் கொரிய வசனங்கள். 2 00:01:03,355 --> 00:01:06,149 (ஜப்பானிய மொழியில்) திரு. கோ! வரவேற்கிறேன். 3 00:01:07,985 --> 00:01:10,070 - சரக்குகளை இறக்கு. - சரி, சார். 4 00:01:10,070 --> 00:01:11,822 இப்போதே இறக்குங்கள். 5 00:01:13,031 --> 00:01:16,326 உங்கள் பயணம் லாபகரமாக அமைந்தது போல தெரிகிறது. 6 00:01:17,077 --> 00:01:18,704 அப்போது அது யாராக இருக்கும்? 7 00:01:18,704 --> 00:01:21,415 ரஷ்யர்களா அமெரிக்கர்களா? 8 00:01:23,125 --> 00:01:24,710 அது தெளிவாகத் தெரியவில்லை. 9 00:01:24,710 --> 00:01:28,213 நீ இங்கேயே இரு. வேலையாட்கள் மீது கண் இருக்கட்டும். 10 00:01:29,339 --> 00:01:31,633 யாரும் திருடாமல் பார்த்துக்கொள். 11 00:01:31,633 --> 00:01:34,595 நீங்கள் சொன்னபடியே எல்லாம் நடக்கும். 12 00:01:34,595 --> 00:01:36,096 கவலை வேண்டாம். 13 00:02:04,291 --> 00:02:06,335 ஒசாகா 14 00:02:17,804 --> 00:02:22,518 "நம்முடைய தேசத்தின் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறோம். 15 00:02:23,477 --> 00:02:27,189 நம்முடைய வீரம்மிக்க படைவீரர்கள் போர்க்களங்களில் சூறாவளி போல தாக்குகிறார்கள்..." 16 00:02:27,189 --> 00:02:28,982 வேண்டுமென்றே தோற்காமல் இருப்பது நல்லது! 17 00:02:28,982 --> 00:02:31,401 "...நம்முடைய கோழைத்தனமான எதிரிகள் பயந்து பின்வாங்குகிறார்கள்." 18 00:02:44,498 --> 00:02:45,541 மொஸாசு! 19 00:02:50,337 --> 00:02:51,839 (கொரிய மொழியில்) அண்ணா! 20 00:02:51,839 --> 00:02:52,965 வா! 21 00:02:57,469 --> 00:03:00,055 வாருங்கள், வீட்டின் சுவையைப் பெறுங்கள்! 22 00:03:00,055 --> 00:03:03,350 - காலை வணக்கம்! - அண்ணா! பொறு! 23 00:03:03,350 --> 00:03:05,978 உங்கள் ரேஷன் அரிசியோடு சேர்த்து சாப்பிடுங்கள்! 24 00:03:05,978 --> 00:03:08,313 சுவையாக இருக்கும், வயிறு நிறையும்! 25 00:03:08,313 --> 00:03:11,733 வாருங்கள், வீட்டின் சுவையைப் பெறுங்கள்! 26 00:03:11,733 --> 00:03:14,695 - கிம்ச்சி! சுவையான கிம்ச்சி விற்பனைக்கு! - நான் வென்றுவிட்டேன்! 27 00:03:14,695 --> 00:03:17,406 - நியாயமில்லை! அண்ணா! - நோவா... 28 00:03:17,406 --> 00:03:21,201 - நீதான் வெல்கிறாய். - அவன் கையை விட்டுவிடாதே என்று சொன்னேனே. 29 00:03:21,201 --> 00:03:22,995 அவனை எதற்காக ஊக்கப்படுத்துகிறாய்? 30 00:03:22,995 --> 00:03:26,707 அம்மா, அப்படி செய்யவில்லை என்றால், அவனை சரியான நேரத்திற்கு வீட்டைவிட்டு கிளப்ப முடியாது. 31 00:03:27,332 --> 00:03:29,001 கொஞ்சம் கிம்ச்சி கிடைக்குமா? 32 00:03:30,294 --> 00:03:33,005 திரு. கிம், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. 33 00:03:33,005 --> 00:03:34,131 ஆம். 34 00:03:35,924 --> 00:03:38,010 நீங்கள் வேறு கடைக்கு போய்விட்டீர்களோ என்று பயந்தேன். 35 00:03:38,010 --> 00:03:42,472 நான் எப்படி வேறு கடைக்குப் போவேன்? உங்களுடையதை யாருடைய கிம்ச்சியுடனும் ஒப்பிட முடியாது. 36 00:03:43,599 --> 00:03:45,017 வேலையாக இருந்தீர்களா? 37 00:03:45,893 --> 00:03:47,477 ஆம், கொஞ்சம் வேலையாக இருந்தேன். 38 00:03:49,563 --> 00:03:53,275 உங்களிடம் பொருட்கள் குறைவாக இருக்கின்றன. விற்பனை நன்றாக இருக்கிறது என்று நம்புகிறேன். 39 00:03:53,275 --> 00:03:56,195 அது உண்மையாக இருந்திருக்கலாம். 40 00:03:56,195 --> 00:04:00,073 முட்டைக்கோஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 41 00:04:01,241 --> 00:04:03,535 இதுதான் என்னுடைய கடைசி தொகுதி. 42 00:04:03,535 --> 00:04:08,290 என் மைத்துனி ஊறுகாய் போட ஏதாவது கிடைக்குமா என்று சந்தை முழுக்க தேடுகிறார், ஆனால்... 43 00:04:09,625 --> 00:04:10,792 அப்போது என்ன செய்வீர்கள்? 44 00:04:12,586 --> 00:04:14,171 எப்படியாவது சமாளித்துவிடுவோம். 45 00:04:14,171 --> 00:04:15,756 எப்போதும் அப்படித்தான். 46 00:04:18,634 --> 00:04:19,635 இதோ. 47 00:04:20,344 --> 00:04:23,222 உன்னைப் பார்த்தால் பணத்தைக் கையாளக்கூடியவன் போல தெரிகிறது. 48 00:04:23,222 --> 00:04:26,016 அது நல்ல செய்தி. நான் மிகவும் பணக்காரனாக திட்டமிடுகிறேன். 49 00:04:27,643 --> 00:04:29,811 நீங்கள் நம்பக்கூடிய ஒரு மகன் உங்களுக்கு இருக்கிறான். 50 00:04:29,811 --> 00:04:32,272 - நன்றி. நலமாக இருங்கள். - மீண்டும் வருகிறேன். 51 00:04:32,773 --> 00:04:34,066 குட்பை. 52 00:04:39,947 --> 00:04:43,408 அவர் நிச்சயமாக உளவாளியாகவோ அல்லது ஏதோவொன்றாகவோ இருப்பார். 53 00:04:45,202 --> 00:04:47,329 கேலியாகக் கூட நீ அப்படிச் சொல்லக் கூடாது. 54 00:04:48,247 --> 00:04:49,414 யாருக்குக் கேட்டது? 55 00:04:49,915 --> 00:04:52,584 உனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையில் இல்லை. 56 00:04:52,584 --> 00:04:56,004 - அதைப் பார்! - என்ன அது? மேலே! 57 00:05:04,429 --> 00:05:06,348 - அம்மா? - அமெரிக்க விமானங்கள்! 58 00:05:13,981 --> 00:05:15,566 அம்மா, பாருங்கள்! 59 00:05:16,066 --> 00:05:17,276 ஏதோ விழுகிறது. 60 00:05:33,125 --> 00:05:35,335 பிடித்துவிட்டேன்! என்ன இது? 61 00:05:36,336 --> 00:05:37,963 நோவா, இதில் என்ன போட்டிருக்கிறது? 62 00:05:37,963 --> 00:05:40,215 "ஜப்பான் மக்களுக்கு, 63 00:05:40,215 --> 00:05:44,678 இந்த கொடூரமான போரை நிறுத்தும்படி உங்கள் பேரரசரிடம் சொல்லுங்கள். 64 00:05:45,470 --> 00:05:49,433 ஜப்பான் சரணடையவில்லை என்றால், நிலைமை மோசமாகிவிடும். 65 00:05:50,058 --> 00:05:53,729 பின்விளைவுகளை ஏற்றுக்கொண்டு புதிய, சிறந்த மற்றும் அமைதியை விரும்பும் 66 00:05:53,729 --> 00:05:58,609 ஜப்பானை உருவாக்கும் பணியைத் தொடங்குமாறு நாங்கள் உறுதியாக பரிந்துரைக்கிறோம்." 67 00:05:59,359 --> 00:06:00,611 அதற்கு என்ன அர்த்தம்? 68 00:06:01,445 --> 00:06:02,905 விஷயங்கள் எப்படி மோசமாகும்? 69 00:06:03,488 --> 00:06:07,409 அம்மா, உங்களுக்குப் புரியவில்லையா? அமெரிக்கர்கள் வருகிறார்கள். 70 00:06:28,096 --> 00:06:31,683 இரண்டாம் உலகப் போர் 71 00:07:57,227 --> 00:07:59,479 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 72 00:08:15,579 --> 00:08:17,998 உங்களைப் போன்ற புத்திசாலித்தனமான 73 00:08:17,998 --> 00:08:20,459 முதலீட்டாளர்களிடமிருந்து 500 மில்லியன் யென் நிதியுதவியுடன், 74 00:08:20,459 --> 00:08:22,753 என்னால் என்னுடைய முந்தைய அனுபவத்தை வேலையில் காட்ட முடியும். 75 00:08:23,712 --> 00:08:25,881 இதுவரை எவ்வளவு திரட்டி இருக்கிறீர்கள்? 76 00:08:25,881 --> 00:08:27,841 கிட்டத்தட்ட என் இலக்கை அடைந்துவிட்டேன். 77 00:08:27,841 --> 00:08:29,801 முதலீட்டாளர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். 78 00:08:30,385 --> 00:08:33,764 மிதமான முதலீடுகள், குறைவான ஆபத்துகள், 79 00:08:33,764 --> 00:08:37,142 குறிப்பாக இது போன்ற இறங்கு முகத்தில் இருக்கும் சந்தையில், 80 00:08:37,142 --> 00:08:39,394 வருமானம் கணிசமான அளவில் இருக்கும். 81 00:08:39,394 --> 00:08:42,397 நீங்களே சொந்தமாக நிதியை நிர்வகிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? 82 00:08:42,397 --> 00:08:44,024 அது முதலீட்டார்களின் செலவுகளை குறைக்கும். 83 00:08:44,525 --> 00:08:45,984 தவிர, 84 00:08:45,984 --> 00:08:48,403 நான் நடுநிலையானவன். 85 00:08:49,071 --> 00:08:51,698 டாலரோ யென்னோ, எதன் மதிப்பு உயர்ந்தாலும், 86 00:08:51,698 --> 00:08:53,242 எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. 87 00:08:53,242 --> 00:08:57,538 ஆனால் ஷிஃப்லிஸில் நீங்கள் நிச்சயமாக நடுநிலையோடு இல்லை. 88 00:08:58,247 --> 00:08:59,873 நாங்கள் கேள்விப்பட்டோம். 89 00:08:59,873 --> 00:09:05,546 அந்த நில உரிமையாளர் மீதான உங்கள் அனுதாபம் காரணமாக நீங்கள் சமரசம் செய்துக்கொண்டீர்கள். 90 00:09:08,298 --> 00:09:12,803 நாங்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டதால் அந்த ஒப்பந்தம் நடக்காமல் போனது. 91 00:09:13,887 --> 00:09:17,975 அந்த பெண், அந்த இடத்தை ஒருபோதும் விற்கப் போவதில்லை. 92 00:09:18,517 --> 00:09:21,103 திரு. அபேக்கு இல்லை. கோல்டன் ஹோட்டல்ஸுக்கும் இல்லை. 93 00:09:22,521 --> 00:09:24,523 நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், 94 00:09:24,523 --> 00:09:28,527 விசுவாசத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்வது ஆபத்தானது. 95 00:09:33,699 --> 00:09:36,201 மாமோரு யோஷி உடனான உங்கள் தொடர்பு... 96 00:09:37,202 --> 00:09:38,829 எங்களுக்கு கவலையளிக்கிறது. 97 00:09:41,123 --> 00:09:42,708 வெளிப்படையாகச் சொன்னால், 98 00:09:43,417 --> 00:09:44,960 அவருடைய தொடர்புகள். 99 00:09:50,257 --> 00:09:53,677 டோக்கியோ இப்போது 11 மில்லியன் மக்களைக் கொண்ட பெருநகரமாகிவிட்டது, 100 00:09:55,220 --> 00:09:57,639 இருந்தாலும் ஒரு கிராமம் போலத்தான் தோன்றுகிறது. 101 00:10:00,976 --> 00:10:02,311 நீங்கள் கவலைப்பட தேவையில்லை. 102 00:10:03,145 --> 00:10:05,314 எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 103 00:10:09,776 --> 00:10:11,612 டோக்கியோ 104 00:10:32,758 --> 00:10:35,761 ப்ராக், கேள். அது பரபரப்பு இல்லை. 105 00:10:36,637 --> 00:10:38,388 அதாவது, நிக்கே குறியீட்டைப் பார்! 106 00:10:40,349 --> 00:10:41,475 அட, நண்பா. 107 00:10:41,475 --> 00:10:44,019 கல்லூரியில் நான் உன்னை உற்சாகப்படுத்தவில்லை என்றால் 108 00:10:44,019 --> 00:10:46,855 நீ அந்த கோல்ட்மேன் சேக்ஸ் வேலையில் இருந்திருப்பாயா? 109 00:10:48,690 --> 00:10:51,568 நான்... நான் மிகப்பெரிய முதலீட்டைக் கேட்கவில்லை. அது... 110 00:10:55,948 --> 00:10:58,825 கேள், உன்னிடம் என்ன சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால்... 111 00:11:02,955 --> 00:11:04,164 சீக்கிரம் பேசுவோம், சரி. 112 00:11:53,964 --> 00:11:55,132 ஹேய்! 113 00:11:56,216 --> 00:11:59,553 இன்று என்ன கேவலமான உணவை சாப்பிடுகிறாய்? 114 00:12:13,275 --> 00:12:17,070 கேளுங்கள்! நீங்கள் இதையும் கற்றுக்கொள்ள வேண்டும். 115 00:12:18,071 --> 00:12:19,740 இது பெயோசொட் கெங்ஜியோங். 116 00:12:19,740 --> 00:12:21,742 இது பொதுவாக காரமாக இருக்கும், 117 00:12:21,742 --> 00:12:23,911 ஆனால் இப்போது மிளகாய்கள் இல்லை. இருந்தாலும்... 118 00:12:30,834 --> 00:12:32,961 சுவையாக இருக்கிறது. என்னால் இவற்றை 100 சாப்பிட முடியும். 119 00:12:34,254 --> 00:12:35,756 நுல்ஜுன் ஹோபக்ஜன். 120 00:12:35,756 --> 00:12:40,427 கடந்த இலையுதிர் காலத்தில், என் பெரியம்மா கிராமத்தில் இருக்கும் ஒரு பண்ணைக்குப் போய் 121 00:12:40,427 --> 00:12:44,598 ஒரு பெரிய பூசணியை வாங்கி வந்தார். 122 00:12:44,598 --> 00:12:48,602 என் அண்ணன் தலையைவிட ஐந்த மடங்கு பெரியது! 123 00:12:48,602 --> 00:12:53,482 குளிர்காலம் முழுவதும் இது வேண்டும், அதனால் ஒவ்வொரு கடியையும் ரசித்து சாப்பிடு என்றார். 124 00:12:53,482 --> 00:12:55,192 நான் செய்தேன்! 125 00:12:59,530 --> 00:13:02,658 பாண்டோ! மேஜையை விட்டு இறங்கு! 126 00:13:04,743 --> 00:13:05,994 கீழே இறங்கு! 127 00:13:08,747 --> 00:13:09,748 சுவரைப் பார்த்து நில்! 128 00:13:23,178 --> 00:13:25,013 ஹேய், பாண்டோ. 129 00:13:25,973 --> 00:13:27,099 அது உண்மையா? 130 00:13:28,684 --> 00:13:30,602 உன்னைப் பற்றிய வதந்தி. 131 00:13:34,439 --> 00:13:35,607 ஹேய், நாற்றம் வீசும் வாய் கொண்டவனே. 132 00:13:36,483 --> 00:13:37,651 உன்னிடம்தான் பேசுகிறேன். 133 00:13:43,115 --> 00:13:45,826 உன் குடும்பம் பன்றிகளோடு வசிப்பதாக கேள்விப்பட்டேன். 134 00:13:46,535 --> 00:13:49,454 பன்றிகள் உன் வீட்டில் தூங்குகின்றன என்றும். அது உண்மையா? 135 00:13:52,165 --> 00:13:53,876 பாருங்கள், அவன் அதை மறுக்கவில்லை! 136 00:13:54,501 --> 00:13:57,004 அது உண்மையில்லை என்றால், அவன் மறுத்திருப்பான். சரிதானே? 137 00:14:05,554 --> 00:14:07,764 அந்த வம்பிழுப்பவன் என்னிடம் வர அனுமதிக்கிறான்! 138 00:14:08,849 --> 00:14:11,310 அந்த முட்டாள் என்னை தொந்தரவு செய்ய முயற்சிப்பது எனக்குத் தெரியும், 139 00:14:11,310 --> 00:14:12,978 ஆனால் என்ன செய்ய! 140 00:14:13,645 --> 00:14:16,064 ஒருநாள் அவன் முகத்தை உடைக்கப் போகிறேன்... 141 00:14:16,064 --> 00:14:17,191 நோவா. 142 00:14:18,775 --> 00:14:20,944 நீ எப்படி உணர்கிறாய் என்று தெரியும். 143 00:14:22,362 --> 00:14:25,324 பாதிக்கப்பட்டது நீ மட்டும் இல்லை. நாம் எல்லோரும் அந்த கோபத்தோடுதான் வாழ்கிறோம். 144 00:14:25,324 --> 00:14:26,867 குறிப்பாக இங்கே. 145 00:14:28,493 --> 00:14:29,912 உன்னைச் சுற்றிப் பார். 146 00:14:30,495 --> 00:14:33,790 கோபமான கணவன்கள் தங்கள் மனைவிகளை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். 147 00:14:34,541 --> 00:14:38,128 சோர்வான அம்மாக்கள் பிள்ளைகளை அடிக்கிறார்கள். சகோதரர்கள் சகோதரர்களை வெறுக்கிறார்கள். 148 00:14:38,128 --> 00:14:39,463 ஆனால், நோவா, 149 00:14:40,214 --> 00:14:44,301 அந்த கோபம், எதுவும் செய்ய முடியாத இயலாமையிலிருந்து வருகிறது. 150 00:14:45,469 --> 00:14:47,721 அது அப்படித்தான் இருக்கும். 151 00:14:48,555 --> 00:14:50,098 உனக்கு அதைப் பிடிக்கவில்லை என்றால்... 152 00:14:51,600 --> 00:14:54,102 ஒரு கொரியனாக வாழாதே, நோவா. 153 00:14:54,686 --> 00:14:57,689 அது உன் கற்பனையில் மட்டும் இருந்தாலும் கூட. 154 00:15:14,248 --> 00:15:15,666 ஆரவாரம் செய்கிறார்கள்! 155 00:15:15,666 --> 00:15:18,168 இப்போது உங்களுக்கு திருப்தி என்று நம்புகிறேன். 156 00:15:18,168 --> 00:15:21,672 எங்களுடைய பெரிய பங்களிப்பான இராணுவ தளவாடங்களோடு. 157 00:15:21,672 --> 00:15:24,550 ஆம். எல்லோருக்கும் மகிழ்ச்சி. 158 00:15:25,259 --> 00:15:30,305 இதற்கு அடுத்த ஒப்பந்தங்களில், எங்களுடைய விசுவாசத்திற்கு 159 00:15:30,305 --> 00:15:31,932 வெகுமதி கிடைக்கும் என்று அர்த்தமா? 160 00:15:31,932 --> 00:15:34,101 கிடைக்கவில்லை என்றால், 161 00:15:34,101 --> 00:15:38,021 உங்களை கோபப்படுத்த வேண்டியிருக்கும், திரு. கோ. 162 00:15:38,021 --> 00:15:42,067 உங்களை கோபப்படுத்தினால் என்ன நடக்கும் என்று ஒசாகாவில் எல்லோரும் தெரியும் போல தெரிகிறது. 163 00:15:42,651 --> 00:15:46,113 என்னைப் பற்றி பேசும்போது, நான் கை, கால்களோடு இருக்க ஆசைப்படுகிறேன். 164 00:15:49,533 --> 00:15:54,746 மருமகனை மகிழ்விப்பதை பற்றி கவலைப்படுவதைவிட, நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம். 165 00:15:55,455 --> 00:15:59,793 எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய பெருந்தன்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜாலியாக இருங்கள். 166 00:16:02,671 --> 00:16:06,717 திரு. இனோவ். எங்கள் காலனியில் அரிசி மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன, 167 00:16:06,717 --> 00:16:09,344 ஆனால் இப்போது அதை எங்களுக்கு அனுப்புவது சாத்தியமற்றதாக இருக்கிறது. 168 00:16:09,344 --> 00:16:10,429 ஆம். 169 00:16:10,429 --> 00:16:14,224 கொரியர்களின் முதுகில் அரிசி மூட்டையைக் கட்டி, அவர்களை நீந்தி கடக்கவைப்போம் என்கிறேன். 170 00:16:15,350 --> 00:16:17,811 அந்த சோம்பேறி இழிபிறவிகள் செய்யட்டும். 171 00:16:29,364 --> 00:16:31,617 அந்த இரண்டு விருந்தினர்களும் எங்கே என்று பார். 172 00:16:33,493 --> 00:16:35,746 அவர்கள் சென்று நீண்ட நேரமாகிவிட்டது. 173 00:16:42,920 --> 00:16:44,630 அப்படியென்றால் அது நடக்கிறதா? 174 00:16:44,630 --> 00:16:46,840 அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 175 00:16:47,716 --> 00:16:49,760 ஆனால் சில செய்திகள் இடைமறிக்கப்பட்டிருக்கின்றன. 176 00:16:50,844 --> 00:16:53,347 குண்டு வீச்சு சீக்கிரம் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது. 177 00:16:53,347 --> 00:16:54,640 சீக்கிரமா? 178 00:16:55,349 --> 00:16:56,558 சில நாட்களுக்குள். 179 00:16:57,684 --> 00:17:00,312 சீக்கிரம் உன் குடும்பத்தை நகரத்திலிருந்து வெளியேற்று. 180 00:17:01,980 --> 00:17:06,693 நான் ஏற்கனவே என் குடும்பத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டேன். நான் காலையில் கிளம்புகிறேன். 181 00:17:09,154 --> 00:17:13,659 ஆனால் முதலில், அந்த அருமையான உணவை சாப்பிடாமல் நாம் வெளியேறக்கூடாது. 182 00:17:14,409 --> 00:17:19,830 திரு. கோ மிகவும் திறமைசாலி. அவரால் எப்படி இவ்வளவு உணவை கண்டுபிடிக்க முடிகிறது. 183 00:17:28,841 --> 00:17:31,385 நீ சமாளிக்க முடியாத பிரச்சினையை ஏற்படுத்திவிட்டாய். 184 00:17:31,385 --> 00:17:33,595 திரு. அபே மோதல்போக்கில் இருக்கிறார். 185 00:17:34,471 --> 00:17:35,889 என்னை நம்பு, நான் அதை உணர்கிறேன். 186 00:17:36,390 --> 00:17:38,600 இன்றிரவு அவருடைய மிகப்பெரிய விருது நிகழ்ச்சி இருக்கிறது. 187 00:17:38,600 --> 00:17:41,812 ஆண்டின் சிறந்த ஜப்பான் தொழிலதிபர். அது மிகப்பெரிய கௌரவம். 188 00:17:42,813 --> 00:17:44,481 அவருக்கு என் வாழ்த்துகளை சொல். 189 00:17:54,366 --> 00:17:56,952 எனவே, நேர்மையாகச் சொல். 190 00:17:56,952 --> 00:17:58,620 நிஜமாகவே எவ்வளவு முதலீட்டை திரட்டி இருக்கிறாய்? 191 00:18:02,457 --> 00:18:03,500 வாய்ப்பே இல்லை. பூஜ்ஜியமா? 192 00:18:06,128 --> 00:18:07,754 - பூஜ்ஜியம். - எல்லோடெயில். 193 00:18:12,801 --> 00:18:14,261 நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும். 194 00:18:15,304 --> 00:18:16,763 நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 195 00:18:16,763 --> 00:18:18,307 உன் பரிதாபம் எனக்குத் தேவையில்லை. 196 00:18:19,391 --> 00:18:20,601 உனக்கு உதவ விரும்புகிறேன். 197 00:18:21,935 --> 00:18:22,936 நிஜமாகவா? 198 00:18:24,688 --> 00:18:27,774 உன்னைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று நினைக்க. 199 00:18:29,401 --> 00:18:32,112 நீ பழைய விஷயங்களை கிளறாதே, டெட்சுயா. 200 00:18:32,112 --> 00:18:33,572 எனக்கே என் மீது பரிதாபம் ஏற்படுகிறது. 201 00:18:34,198 --> 00:18:36,783 எப்போதும் பரிதாபத்துக்குரியவனாக இருப்பதுதான் உன் சிறப்பு. 202 00:18:40,245 --> 00:18:41,538 200 மில்லியன். 203 00:18:43,498 --> 00:18:46,502 எல்லாவற்றிற்கும் மேலாக, நீ என் பழைய நண்பன். 204 00:18:47,127 --> 00:18:48,712 நான் பள்ளி மாறியபோது, 205 00:18:49,296 --> 00:18:53,717 நீ என்னிடம் நல்லவிதமாக நடந்துகொண்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 206 00:18:54,343 --> 00:18:58,430 நீயும் மற்றவர்களைப் போல மோசமாக நடந்திருக்க முடியும். 207 00:18:59,806 --> 00:19:01,850 புதிதாக சேர்ந்த மாணவர்கள்தான் எப்போதுமே எளிய இலக்கு. 208 00:19:03,101 --> 00:19:04,269 ஆனால் நீ... 209 00:19:07,731 --> 00:19:09,942 நீ அந்த விளையாட்டை விளையாடியதேயில்லை. 210 00:19:09,942 --> 00:19:11,318 அது ஒரு முட்டாள்தனமான விளையாட்டு. 211 00:19:12,611 --> 00:19:13,612 அதனால்தான். 212 00:19:20,244 --> 00:19:21,245 நன்றி. 213 00:19:22,120 --> 00:19:23,247 சிப்பி மீன். 214 00:19:33,882 --> 00:19:35,133 தயாரா? 215 00:19:37,678 --> 00:19:38,679 ஒன்று! 216 00:19:42,140 --> 00:19:43,141 இரண்டு! 217 00:19:44,560 --> 00:19:45,561 மூன்று! 218 00:19:47,688 --> 00:19:50,440 அந்த அமெரிக்க அயோக்கியர்கள் நம் மண்ணில் காலடி வைக்கும் போது, 219 00:19:50,440 --> 00:19:53,360 அவர்கள் நம் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கொள்ளையடித்து களங்கப்படுத்துவார்கள், 220 00:19:53,360 --> 00:19:55,320 இதை நெருப்புக் காடாக மாற்றுவார்கள்! 221 00:19:55,988 --> 00:19:59,992 எனவே அந்த அரக்கன்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டும், இல்லையா? 222 00:20:11,920 --> 00:20:13,922 மிகவும் அருமை. 223 00:20:16,675 --> 00:20:18,552 இப்போது கவனமாகக் கேளுங்கள். 224 00:20:19,761 --> 00:20:23,265 நாம் வெறும் வைக்கோல் பொம்மையை குத்தப்போவதில்லை. 225 00:20:24,433 --> 00:20:26,185 இவன்தான் எதிரி! 226 00:20:26,810 --> 00:20:29,479 அந்த அயோக்கியர்கள் நம் வீடுகளை கொளுத்துவார்கள், 227 00:20:29,479 --> 00:20:32,191 நம் குழந்தைகளை திருடுவார்கள், 228 00:20:32,191 --> 00:20:37,571 அவர்கள் நம்மை வேறு என்ன கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள் என்று யாருக்குத் தெரியும்? 229 00:20:37,571 --> 00:20:39,740 எனவே நான் உங்களிடம் கேட்கிறேன், 230 00:20:40,324 --> 00:20:43,744 அந்த மிருகத்தனமான அமெரிக்கர்கள் உங்களை தாக்க அனுமதிக்கப் போகிறீர்களா? 231 00:20:43,744 --> 00:20:45,120 இல்லை! 232 00:20:45,746 --> 00:20:49,708 அவர்கள் உங்கள் குடும்பத்தைத் துண்டாடுவதற்கு அனுமதிக்கப் போகிறீர்களா? 233 00:20:49,708 --> 00:20:50,959 இல்லை! 234 00:20:51,793 --> 00:20:53,295 அப்படியென்றால் தாக்குங்கள்! 235 00:21:00,344 --> 00:21:04,139 அதை ஏன் சேதப்படுத்துகிறாய்? அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. 236 00:21:04,139 --> 00:21:05,516 ஆனால், அம்மா, அதுதான் விஷயம்! 237 00:21:05,516 --> 00:21:09,394 எதிரிகள் மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி தாக்க வேண்டும். 238 00:21:11,813 --> 00:21:12,814 நீ போ. 239 00:21:22,699 --> 00:21:25,244 இலக்கில் கவனம் செலுத்துங்கள்! கவனம் செலுத்துங்கள்! 240 00:21:30,541 --> 00:21:33,293 நிஜமாகவே, நான் உன்னைப் பற்றி ஆர்வமாக இருந்தேன். 241 00:21:36,213 --> 00:21:40,467 நீ எப்படி இருக்கிறாய், வசதியாக இருக்கிறாயா இல்லையா. 242 00:21:43,929 --> 00:21:46,181 நீ ஒரு போதகரை திருமணம் செய்துகொண்டாய், இல்லையா? 243 00:21:46,723 --> 00:21:48,225 நோய்வாய்ப்பட்டவர். 244 00:21:48,225 --> 00:21:51,061 அவர் நோயிலிருந்து குணமடைந்தார், 245 00:21:53,105 --> 00:21:54,648 மகிழ்ச்சியாக சில ஆண்டுகளை கழித்தோம். 246 00:21:56,942 --> 00:21:57,943 ஆனால் பிறகு... 247 00:22:00,487 --> 00:22:02,155 போலீசார் அவரை கூட்டிப் போய்விட்டார்கள். 248 00:22:02,865 --> 00:22:04,241 நிஜமாகவா, எதற்காக? 249 00:22:04,825 --> 00:22:07,911 தொழிலாளர்கள் சரியான ஊதியத்திற்காக போராட உதவுவதற்காக. 250 00:22:10,038 --> 00:22:13,750 அது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு. 251 00:22:15,711 --> 00:22:19,464 பிறகு எப்படி சமாளிக்கிறாய்? 252 00:22:20,841 --> 00:22:26,013 நான் இன்னும் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். அவருடைய அண்ணன் இருக்கிறார். 253 00:22:27,097 --> 00:22:30,809 கடந்த ஆண்டு நாகசாகியில் உள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலை வேலைக்கு அனுப்பப்பட்டார். 254 00:22:32,936 --> 00:22:36,982 அவர் அனுப்பிய பணம் தேவையான நேரத்தில் வரமாக இருந்தது, 255 00:22:36,982 --> 00:22:40,194 ஆனால் சமீப காலமாக, அவருக்கு உறுதிமொழி பத்திரங்களைத்தான் கொடுக்கிறார்கள். 256 00:22:41,612 --> 00:22:45,282 இப்போது கொஞ்சம் காய்கறிகள்தான் இருக்கின்றன. அதை விற்றவுடன்... 257 00:22:49,369 --> 00:22:51,205 அப்புறம் என் அம்மா. 258 00:22:51,788 --> 00:22:54,374 ஏன்? உன் அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டதா? 259 00:22:54,958 --> 00:22:57,753 அவர் கடைசியாக கடிதம் எழுதி மூன்று மாதங்கள் ஆகிறது. 260 00:22:59,838 --> 00:23:01,089 என் அம்மா... 261 00:23:04,384 --> 00:23:05,761 தனியாக இருக்கிறார். 262 00:23:08,847 --> 00:23:12,226 அது ஒரு போராட்டம், இல்லையா? 263 00:23:13,143 --> 00:23:16,605 இருந்தாலும், நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். 264 00:23:18,398 --> 00:23:21,693 இல்லையென்றால், என் குழந்தைகள், 265 00:23:22,402 --> 00:23:24,905 அவர்கள் அம்மாவின் கண்ணீரை மட்டுமே பார்ப்பார்கள். 266 00:23:26,198 --> 00:23:27,574 எனக்கு அது வேண்டாம். 267 00:23:33,163 --> 00:23:34,706 ஆனால், சுன்ஜா... 268 00:23:39,878 --> 00:23:45,592 இங்குள்ள சில பெண்கள் கறுப்புச் சந்தையில் விற்க அரிசி ஒயின் தயாரிப்பதாகக் கேள்விப்பட்டேன். 269 00:23:46,301 --> 00:23:47,553 ஒருவேளை நீயும் நானும்... 270 00:23:47,553 --> 00:23:49,721 ஆனால் அது சட்டவிரோதம் இல்லையா? 271 00:23:50,305 --> 00:23:55,185 நீயே சொன்னாய். நீ விற்க எதுவும் இல்லை. 272 00:23:56,436 --> 00:23:59,231 சலவை செய்வதற்கு எனக்குக் கொடுக்க யாரிடமும் பணமும் இல்லை. 273 00:24:03,861 --> 00:24:06,280 சுன்ஜா, நான்... 274 00:24:10,033 --> 00:24:11,618 நான் விரக்தியில் இருக்கிறேன். 275 00:24:17,583 --> 00:24:19,126 என்னை தவறாக நினைக்காதே. 276 00:24:21,211 --> 00:24:23,172 நான் உன்னைத் திட்டவில்லை, 277 00:24:23,172 --> 00:24:24,756 ஆனால் என் நிலைமையை நினைத்து... 278 00:24:24,756 --> 00:24:26,133 பரவாயில்லை. 279 00:24:35,559 --> 00:24:37,895 உன் பையன்கள் நன்றாக வளர்கிறார்கள். 280 00:24:50,949 --> 00:24:53,035 ஒசாகா 281 00:24:57,998 --> 00:25:00,000 பிரம்மாண்ட திறப்புவிழா 282 00:25:15,724 --> 00:25:16,767 பாட்டி! 283 00:25:17,351 --> 00:25:18,602 நீ வந்துவிட்டாய்! 284 00:25:18,602 --> 00:25:21,480 குறைந்தபட்சம் திறப்பதற்கு முன் வந்துவிட்டாய். 285 00:25:23,357 --> 00:25:25,275 குறைந்தபட்சம் அயர்ன் செய்திருக்க வேண்டும். 286 00:25:27,694 --> 00:25:29,738 நான் ஏன் கவலைப்படுகிறேன் என்று வியக்கிறாய். 287 00:25:30,447 --> 00:25:31,990 - சாலமன்! - அப்பா! 288 00:25:32,616 --> 00:25:35,577 - எப்படி இருக்கிறேன்? - அருமையாக இருக்கிறீர்கள்! 289 00:25:35,577 --> 00:25:37,829 நீங்கள் இருவருமே! 290 00:25:37,829 --> 00:25:39,206 இல்லையா? 291 00:25:39,206 --> 00:25:41,959 பளபளப்பான உரிமையாளர்களுடன் பளபளப்பான புதிய தொழில். 292 00:25:42,459 --> 00:25:43,460 கச்சிதம், சரிதானே? 293 00:25:44,044 --> 00:25:45,212 வாழ்த்துகள். 294 00:25:46,338 --> 00:25:49,091 எப்படியோ, எல்லாம் வேலை செய்தது. நிம்மதியாக இருக்கிறேன். 295 00:25:50,384 --> 00:25:52,970 எனவே, நிதி திரட்டுவது எப்படி போகிறது? 296 00:25:53,846 --> 00:25:56,098 இன்று ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் போட்டேன். 297 00:25:56,849 --> 00:25:58,433 டெட்சுயாவை நினைவிருக்கிறதா? 298 00:25:59,893 --> 00:26:03,021 எப்போதும் மூக்கை நோண்டிக்கொண்டிருக்கும் அந்த அழுமூஞ்சி பையனா? 299 00:26:03,689 --> 00:26:05,649 அவன் இப்போதெல்லாம் மூக்கை நோண்டுவதில்லை. 300 00:26:06,149 --> 00:26:08,193 தான் உண்மையான நண்பன் என்பதை அவன் நிரூபித்தான். 301 00:26:08,694 --> 00:26:12,197 அவனைப் போன்ற ஒருவன் முதலீடு செய்தால், அது எல்லாம் நிஜமாகிவிடும். 302 00:26:12,197 --> 00:26:13,282 அப்படியா? 303 00:26:14,324 --> 00:26:15,325 பார். 304 00:26:16,952 --> 00:26:19,413 உன் பாட்டியும் நானும் பேசினோம். 305 00:26:20,414 --> 00:26:25,752 நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை நாங்கள் தவறவிட விரும்பவில்லை. 306 00:26:33,886 --> 00:26:35,470 இது என்ன? 307 00:26:35,470 --> 00:26:36,930 அதைத் திற. 308 00:26:41,602 --> 00:26:44,313 7,00,000 டாலர்கள் 309 00:26:49,276 --> 00:26:50,944 இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது? 310 00:26:51,987 --> 00:26:54,615 இந்த இடத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கினேன். 311 00:26:54,615 --> 00:26:59,077 அப்போது இன்னும் கடன் வாங்கினீர்களா? 312 00:26:59,703 --> 00:27:01,496 அதில் என்ன பிரச்சினை? 313 00:27:01,496 --> 00:27:04,917 இப்போதெல்லாம் வங்கிகள் தாராளமாக பணத்தைக் கொடுக்கின்றன. 314 00:27:04,917 --> 00:27:06,585 வட்டி கிட்டத்தட்ட ஒன்றுமில்லை. 315 00:27:07,961 --> 00:27:10,839 இருந்தாலும் அது கடன்தான். 316 00:27:10,839 --> 00:27:12,090 இது என்ன? 317 00:27:12,674 --> 00:27:15,552 நாங்கள் உனக்காக இதைச் செய்கிறோம், நீ குறைதான் சொல்வாயா? 318 00:27:16,136 --> 00:27:17,346 அப்படியில்லை. 319 00:27:18,013 --> 00:27:21,892 ஆனால் ஏதாவது நடந்தால்... நான் தோல்வியடைந்தால், இந்தப் பணம்... 320 00:27:21,892 --> 00:27:23,977 நீ என் மகன். 321 00:27:26,313 --> 00:27:28,899 நானே உன்னை நம்பவில்லை என்றால், 322 00:27:29,608 --> 00:27:32,402 பிறகு யார் நம்புவார்கள்? 323 00:27:34,071 --> 00:27:38,617 உன்னால் முடிந்ததைச் செய். நீ வெற்றி பெறுவாய். 324 00:27:40,619 --> 00:27:44,039 டனாகா அகியோ. யோஷிடா இசாமு. 325 00:27:44,706 --> 00:27:47,459 இரண்டாவது இடத்தில், நகாமுரா மினோரு. 326 00:27:48,836 --> 00:27:50,462 முதல் இடத்தில்... 327 00:27:52,005 --> 00:27:53,465 பாண்டோ நோபுவோ. 328 00:27:59,179 --> 00:28:01,598 கடந்த வாரம் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்வோம். 329 00:28:18,365 --> 00:28:19,700 பாண்டோ. 330 00:28:20,826 --> 00:28:22,327 உன்னிடம் பேச வேண்டும். 331 00:28:33,547 --> 00:28:36,383 நீ வகுப்பில் என்ன புத்தகம் படிக்கிறாய்? 332 00:28:38,927 --> 00:28:40,762 டாம் சாயரின் சாகசங்கள். 333 00:28:41,513 --> 00:28:42,848 அமெரிக்க புத்தகமா? 334 00:28:43,599 --> 00:28:45,934 அது தடைசெய்யப்பட்டது என்று உனக்குத் தெரியும். 335 00:28:47,352 --> 00:28:48,353 மன்னித்துவிடுங்கள். 336 00:28:51,315 --> 00:28:53,525 உன் வேலையில் கொஞ்சம் முயற்சி செய். 337 00:28:53,525 --> 00:28:55,110 உன் மனம்... 338 00:28:55,694 --> 00:28:57,779 அது உனக்காக பல கதவுகளைத் திறக்கலாம். 339 00:28:58,572 --> 00:28:59,698 என்ன மாதிரியான கதவுகள்? 340 00:29:00,199 --> 00:29:03,118 இந்த மோசமான சேரிகளில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு. 341 00:29:03,619 --> 00:29:05,245 பல்கலைக்கழகம், ஒருவேளை. 342 00:29:05,871 --> 00:29:08,290 நான் டோக்கியோவில் உள்ள வசேடாவுக்குச் சென்றேன்... 343 00:29:08,290 --> 00:29:09,917 ஆனால் நான் வெளியேற விரும்பவில்லை. 344 00:29:10,834 --> 00:29:14,129 நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். ஒரு போதகராக ஆக. 345 00:29:18,967 --> 00:29:22,012 உன் அப்பா இப்போது வீட்டில் இல்லை என்று கேள்விப்பட்டேன். 346 00:29:22,012 --> 00:29:23,222 அவர் திரும்பி வருவார். 347 00:29:24,223 --> 00:29:25,224 என்ன? 348 00:29:26,892 --> 00:29:27,893 என் அப்பா, 349 00:29:28,644 --> 00:29:30,103 அவர் வீட்டிற்கு வருவார். 350 00:29:31,897 --> 00:29:33,148 அதனால்தான் நான் இங்கே இருக்க வேண்டும். 351 00:29:35,442 --> 00:29:38,612 அவர் வரவில்லை என்றால்? 352 00:29:39,530 --> 00:29:40,822 நான் சொன்னேனே. 353 00:29:40,822 --> 00:29:42,324 நான் போக மாட்டேன். 354 00:29:56,797 --> 00:29:57,798 இதோ. 355 00:29:59,675 --> 00:30:02,344 இனி எனக்கு இது தேவைப்படாது. 356 00:30:02,344 --> 00:30:04,680 வசேடா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு பயிற்சித் தேர்வுகள் 357 00:30:04,680 --> 00:30:06,682 ஆனால், என்னால் முடியாது... 358 00:30:08,016 --> 00:30:09,017 உங்களுக்கே தெரியும். 359 00:30:10,018 --> 00:30:11,812 உன் திறமை எனக்குத் தெரியும். 360 00:30:13,981 --> 00:30:15,399 நோவா பேக். 361 00:30:29,788 --> 00:30:33,375 இந்தப் புத்தகம் ஒகாவா எய்ச்சிக்குச் சொந்தமானது (கோ யங் ஹோ) 362 00:30:53,520 --> 00:30:55,272 அது சட்டவிரோதம். 363 00:30:55,272 --> 00:30:57,858 ஆனால், கியுங்கீ, நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 364 00:30:58,442 --> 00:31:01,195 நம் சேமிப்பு தீர்ந்துவிட்டது, வரவு எதுவுமில்லை. 365 00:31:01,195 --> 00:31:03,906 சுன்ஜா, உனக்கு ஏதாவது நடந்தால்... 366 00:31:03,906 --> 00:31:05,115 நான் கவனமாக இருப்பேன். 367 00:31:05,908 --> 00:31:10,078 பொருளாதார போலீஸுக்கு இங்கே தகவல் கொடுப்பவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். 368 00:31:10,662 --> 00:31:12,539 வருந்துகிறேன், ஆனால் அது மிகவும் ஆபத்தானது! 369 00:31:13,248 --> 00:31:14,416 நான் அனுமதிக்க மாட்டேன். 370 00:31:15,375 --> 00:31:16,960 அப்படியென்றால் நாம் பட்டினி கிடந்தது சாகவா? 371 00:31:18,962 --> 00:31:20,631 இதையெல்லாம் யார் செய்வார்கள் தெரியுமா? 372 00:31:20,631 --> 00:31:21,965 பசியில் இருக்கும் மக்கள். 373 00:31:23,342 --> 00:31:25,594 பசியில் இருக்கும் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள். 374 00:31:29,806 --> 00:31:30,807 கியுங்கீ... 375 00:31:33,560 --> 00:31:39,858 நேற்று இரவு தூங்கும்போது மொஸாசுவின் வயிறு பொறுமுவது கேட்டது. 376 00:31:44,279 --> 00:31:46,365 நம் பிள்ளைகளும் பசியோடு இருக்கிறார்கள். 377 00:31:54,414 --> 00:31:56,333 அது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? 378 00:31:59,336 --> 00:32:04,591 அன்று ரேஷன் அரிசியில் புழுக்கள் இருப்பதை பார்த்தேன். புழுக்கள்! 379 00:32:09,346 --> 00:32:11,014 அதைவிட கொடுமை, 380 00:32:12,307 --> 00:32:17,229 அவர்களின் வயிற்றை நிரப்பும் நம்பிக்கையுடன் அவர்களை விட்டு போக நினைத்தேன். 381 00:32:19,857 --> 00:32:21,900 அதில் அவமானம் இல்லை. 382 00:32:23,235 --> 00:32:25,779 ஆனால் நாம் இன்னும் அந்த நிலைக்குப் போகவில்லை. 383 00:32:29,783 --> 00:32:31,034 கியுங்கீ. 384 00:32:32,744 --> 00:32:37,082 இப்போதைக்கு நம் பிள்ளைகளுக்கு புழுக்களை உணவாக கொடுப்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டாமா? 385 00:32:44,089 --> 00:32:46,008 எனக்கு ஒரு சத்தியம் செய். 386 00:32:47,676 --> 00:32:51,680 ஒவ்வொரு இரவும், நீ வீட்டிற்கு வந்துவிட வேண்டும். 387 00:32:55,058 --> 00:32:56,435 நான் வருவேன் என்பது உங்களுக்குத் தெரியும். 388 00:32:57,519 --> 00:32:59,146 நான் வருவேன் என்பது உங்களுக்குத் தெரியும். 389 00:33:41,480 --> 00:33:43,815 அது வெறும் பயிற்சிதான். வேலையை தொடர்வோம். 390 00:35:17,034 --> 00:35:18,076 போ. 391 00:35:18,076 --> 00:35:19,620 கவலைப்படாதே. 392 00:35:19,620 --> 00:35:21,079 இவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். 393 00:35:21,622 --> 00:35:23,165 உன்னை தனியாக போக வைத்ததற்கு வருந்துகிறேன். 394 00:35:23,165 --> 00:35:25,709 பரவாயில்லை. நான் விற்பதில் கைத்தேர்ந்தவள். 395 00:35:26,376 --> 00:35:28,629 ஆனால், உன் கணவர் கோபப்படுவதற்கு முன், சீக்கிரம் போ. 396 00:35:34,092 --> 00:35:35,093 மறந்துவிடாதே. 397 00:35:35,969 --> 00:35:37,846 உன் புன்னகையை மட்டும் காட்டு. 398 00:35:57,741 --> 00:36:00,327 - சாலமன்? - ஓ, டெட்சுயா. இப்போது ஒசாகாவில் இருக்கிறேன். 399 00:36:00,327 --> 00:36:01,411 என்ன? 400 00:36:01,912 --> 00:36:03,121 அபே... 401 00:36:05,249 --> 00:36:07,793 என் முதலீடுகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். 402 00:36:10,045 --> 00:36:11,088 ஆனால்... 403 00:36:11,088 --> 00:36:13,549 அவர் நம் இருவரையும் அழித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். 404 00:36:13,549 --> 00:36:15,384 நீ என்னை ஏமாற்றுவதாக அவர் சொல்கிறார். 405 00:36:15,968 --> 00:36:17,553 நீ என்ன சொல்கிறாய், டெட்சுயா? 406 00:36:19,555 --> 00:36:21,598 மன்னித்துவிடு. என்னால் முடியாது. 407 00:36:22,891 --> 00:36:23,892 சாலமன்? 408 00:36:25,477 --> 00:36:27,354 - இணைப்பில் இருக்கிறாயா? - கவலைப்படாதே. 409 00:36:28,355 --> 00:36:30,065 புரிகிறது. 410 00:36:30,065 --> 00:36:31,608 மன்னித்துவிடு, சாலமன். 411 00:36:31,608 --> 00:36:32,943 எனக்குத் தெரியும். 412 00:36:39,741 --> 00:36:42,494 சாலமன். அங்கே என்ன செய்கிறாய்? 413 00:36:43,203 --> 00:36:44,538 என்னுடன் கடைக்கு வா. 414 00:36:46,498 --> 00:36:48,917 - என்ன? - தெருவின் கடைசியில் இருக்கும் மளிகைக் கடை. 415 00:36:48,917 --> 00:36:50,544 இப்போது கேக் தயாராக இருக்கும். 416 00:36:50,544 --> 00:36:51,962 நமக்கு சில கப்புகளும் தேவை. 417 00:36:51,962 --> 00:36:55,090 திராட்சை ஜூஸ் பரிமாற வேண்டாம் என்று உன் அப்பாவிடம் சொன்னேன். 418 00:36:59,928 --> 00:37:01,638 ஏன் அங்கே சும்மா நிற்கிறாய்? 419 00:37:02,139 --> 00:37:03,307 நான் போகிறேன். 420 00:37:57,569 --> 00:38:01,198 உங்கள் ஆர்டரை எடுத்தவருக்கு நீங்கள் சொன்னது புரியாமல் போயிருக்கலாம். 421 00:38:02,324 --> 00:38:04,284 அவர்களால் "50" ஐப் புரிந்துகொள்ள முடியவில்லையா? 422 00:38:04,284 --> 00:38:06,203 பாட்டி, என்ன நடக்கிறது? 423 00:38:06,787 --> 00:38:10,666 நான் 50 பேருக்கு கேக் ஆர்டர் செய்தேன், ஆனால் இதைத்தான் கொடுக்கிறார். 424 00:38:12,125 --> 00:38:13,919 இது உங்கள் தவறு இல்லையா? 425 00:38:14,545 --> 00:38:17,297 கேளுங்கள், இது ஒரு பிரத்தியேகமான ஆர்டர். 426 00:38:17,840 --> 00:38:19,174 அது இங்கே எழுதப்பட்டிருக்கிறது. 427 00:38:19,174 --> 00:38:21,260 ஆனால் நாங்கள் ஆர்டர் செய்தது இது இல்லை. 428 00:38:23,011 --> 00:38:24,638 எப்படி இருந்தாலும், 429 00:38:24,638 --> 00:38:28,225 அரைகுறையான ஜப்பானிய மொழி புரியாமல் போனதற்கு என்னைக் குறை சொல்லாதீர்கள். 430 00:38:28,225 --> 00:38:29,518 அரைகுறையா? 431 00:38:30,769 --> 00:38:33,730 நான் சொல்கிறேன், நீங்கள் இந்த நாட்டில் வாழப் போகிறீர்கள் என்றால், 432 00:38:33,730 --> 00:38:37,067 எங்கள் மொழியை நீங்கள் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். 433 00:38:40,237 --> 00:38:41,280 போகலாம். 434 00:38:41,280 --> 00:38:44,449 இது கேக்கைப் பற்றியது இல்லை, சரிதானே? 435 00:38:44,449 --> 00:38:46,702 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை, 436 00:38:46,702 --> 00:38:48,787 ஆனால் எங்கள் சேவை பிடிக்கவில்லை என்றால், 437 00:38:48,787 --> 00:38:50,956 வேறு எங்காவது வாங்கிக்கொள்ளுங்கள். 438 00:38:50,956 --> 00:38:54,209 உங்களைப் போன்றவர்களுக்கு என்றே கடைகள் இருக்கின்றன, இல்லையா? 439 00:38:54,793 --> 00:38:56,628 நீ என்ன சொன்னாய்? 440 00:39:00,090 --> 00:39:02,676 போகாதே. என் கேள்விக்கு பதில்சொல். 441 00:39:02,676 --> 00:39:05,804 நீ யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ம்? 442 00:39:06,930 --> 00:39:10,350 உன்னை போலவே நானும் இங்கேதான் பிறந்தேன். 443 00:39:10,934 --> 00:39:14,188 நான் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். புரிகிறதா? 444 00:39:14,771 --> 00:39:17,983 உன் மாதச் சம்பளத்தை நான் ஒரே நாளில் சம்பாதிப்பேன்! 445 00:39:17,983 --> 00:39:21,820 நீ எங்களை வீழ்த்த முடியாத நிலையில் இருக்கிறாய்! முட்டாள்! 446 00:39:48,305 --> 00:39:50,599 வீட்டில் யாராவது இருக்கிறீர்களா? 447 00:39:52,768 --> 00:39:54,853 கள்ளச் சந்தையில் சோதனை நடந்தது. 448 00:39:57,397 --> 00:39:59,316 சுன்ஜா கைது செய்யப்பட்டாள். 449 00:40:00,025 --> 00:40:01,860 அவளை கூட்டிச் சென்றார்கள்! 450 00:40:01,860 --> 00:40:02,945 என்ன? 451 00:40:04,154 --> 00:40:08,033 அவள் இப்போது எங்கே? அவளை எங்கே கூட்டிச் சென்றிருப்பார்கள்? 452 00:40:14,831 --> 00:40:19,545 வயதான நீதிபதி வருவார் என்று நம்புவோம். குறைந்தபட்சம் அவர் நியாயமாக நடக்கலாம். 453 00:40:21,088 --> 00:40:23,423 இளைஞன் வரமாட்டான் என்று நம்புவோம். 454 00:40:23,423 --> 00:40:25,717 அவன் குரூரமானவன். 455 00:40:42,025 --> 00:40:43,735 கனவு 456 00:41:14,558 --> 00:41:18,478 சாலமன், இன்று நீ என்னை பயமுறுத்திவிட்டாய். 457 00:41:21,565 --> 00:41:23,108 உங்களை பயமுறுத்தியதற்கு வருந்துகிறேன். 458 00:41:24,151 --> 00:41:25,402 ஆனால், பாட்டி... 459 00:41:29,323 --> 00:41:30,490 இப்போது... 460 00:41:32,534 --> 00:41:33,994 மிகவும் கடினமாக இருக்கிறது. 461 00:41:37,414 --> 00:41:38,957 இனியும் என்னால் முடியாது. 462 00:41:40,042 --> 00:41:41,043 நான்... 463 00:41:43,587 --> 00:41:48,217 எப்போதும் உங்கள் மீது பரிதாபப்பட்டுக்கொண்டு என்னால் வாழ முடியாது. 464 00:42:30,759 --> 00:42:32,010 எழுந்திருக்க வேண்டிய நேரம். 465 00:42:35,389 --> 00:42:37,933 பெரியம்மா, போலீஸ் என்ன சொன்னார்கள்? 466 00:42:41,061 --> 00:42:45,899 இன்னும் எந்த செய்தியும் இல்லை, ஆனால் அதிகாரி அதைப் பார்ப்பதாக உறுதியளித்தார். 467 00:42:52,656 --> 00:42:56,535 இன்று வீட்டில் இருந்து உங்களுடன் காத்திருக்கலாமா? 468 00:42:59,454 --> 00:43:02,249 நீங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று உங்கள் அம்மா விரும்புவாள். 469 00:43:03,041 --> 00:43:04,251 அது உனக்கே தெரியும். 470 00:43:20,475 --> 00:43:22,728 மொஸாசு, எழுந்திரு. 471 00:43:28,066 --> 00:43:30,402 அவன் வருகிறான். தயாராய் இரு. 472 00:43:30,402 --> 00:43:31,778 என்ன நடக்கிறது? 473 00:43:32,404 --> 00:43:33,405 அவன் வருகிறான். 474 00:43:44,708 --> 00:43:45,959 பெயர்? 475 00:43:45,959 --> 00:43:47,294 ரியு கிமிகோ. 476 00:43:48,712 --> 00:43:51,715 உன்னுடைய மூன்றாவது குற்றம், சரி. 477 00:43:51,715 --> 00:43:54,551 அவன் எனக்கு பணம் கொடுக்காமல் ஓட முயன்றான்! 478 00:43:54,551 --> 00:43:56,053 இரண்டு மாத சிறை தண்டனை. 479 00:43:56,053 --> 00:43:57,179 இரண்டு மாதங்களா? 480 00:43:59,515 --> 00:44:01,600 - பெயர்? - ஹயாஷி அசுகா. 481 00:44:01,600 --> 00:44:03,894 முதல் குற்றம். மூன்று வார சிறை தண்டனை. 482 00:44:06,480 --> 00:44:07,481 பெயர்? 483 00:44:10,692 --> 00:44:11,902 பாண்டோ நோபுகோ. 484 00:44:14,029 --> 00:44:18,367 ஓ. அது நீதானா. 485 00:44:23,997 --> 00:44:25,165 நீ போகலாம். 486 00:44:36,635 --> 00:44:38,679 அடுத்த முறை அதிர்ஷ்டம் ஏற்படும் என்று நினைக்காதே. 487 00:44:43,100 --> 00:44:45,519 அது நினைவிருக்கட்டும். 488 00:44:51,942 --> 00:44:53,026 அடுத்து. 489 00:44:54,152 --> 00:44:55,320 பெயர்? 490 00:45:03,829 --> 00:45:10,252 இந்த விருதை ஏற்றுக்கொள்வது ஒரு பெரிய கௌரவம். 491 00:45:10,252 --> 00:45:13,130 நான் போற்றும் 492 00:45:13,130 --> 00:45:18,385 என் சகநாட்டு மக்களிடம் இருந்து இப்படியொரு விருதுக்கு தகுதியான எதையாவது 493 00:45:18,385 --> 00:45:22,890 நான் செய்துவிட்டேனா என்று நான் தாழ்மையோடு நினைத்துப் பார்க்கிறேன். 494 00:45:36,695 --> 00:45:40,073 நான் சொல்லிக்கொண்டிருந்தது போல, 495 00:45:40,073 --> 00:45:43,243 இந்த விருதைப் பெறுவது பெருமையாக இருக்கிறது. 496 00:45:43,243 --> 00:45:48,290 இன்று நாம் இங்கே வர என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை மீண்டும் நினைத்துப் பார்த்தால்... 497 00:45:49,124 --> 00:45:52,294 ஒரு காலத்தில் எரிந்த இடிபாடுகளாக இருந்த ஒரு நாடு. 498 00:45:52,294 --> 00:45:57,424 ஆனால் அந்த சாம்பலில் இருந்து நாம் எழுந்தோம்... 499 00:46:04,056 --> 00:46:05,057 திரு. கிம். 500 00:46:07,643 --> 00:46:09,144 நான் காவல் நிலையத்துக்குப் போயிருந்தேன், 501 00:46:09,645 --> 00:46:11,563 நீங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டதாகச் சொன்னார்கள். 502 00:46:12,940 --> 00:46:16,360 ஆனால் நான் அங்கே இருந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? 503 00:46:18,028 --> 00:46:19,530 என்னுடன் வரும்படி கேட்டுக்கொள்கிறேன். 504 00:46:22,908 --> 00:46:24,826 நான் காரில் ஏற வேண்டுமா? 505 00:46:26,161 --> 00:46:27,788 என்னை எங்கே கூட்டிச் செல்வீர்கள்? 506 00:46:29,081 --> 00:46:30,874 சொல்லும் சுதந்திரம் எனக்கு இல்லை. 507 00:48:28,825 --> 00:48:31,787 பூமியின் ஆழத்தில் காணப்படும் ஒரு கனிமம். 508 00:48:31,787 --> 00:48:33,288 அதன் பெயர் டங்ஸ்டன். 509 00:48:33,288 --> 00:48:36,124 பதப்படுத்திவிட்டால், அது அரிப்பை எதிர்க்கும். 510 00:48:37,751 --> 00:48:42,548 விமானங்கள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் போன்ற பலவற்றிற்கும் பயன்படும். 511 00:48:43,215 --> 00:48:45,926 இதுதான் போரை சாத்தியமாக்குகிறது. 512 00:48:53,267 --> 00:48:54,852 எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்? 513 00:48:57,437 --> 00:49:00,566 நான் உன்னைத் தேட வேண்டியதில்லை. நான் உன்னை தொலைக்கவே இல்லை. 514 00:49:03,318 --> 00:49:05,946 திரு. கிம், அவன் எனக்காக வேலை செய்கிறான். 515 00:49:07,364 --> 00:49:10,909 பல ஆண்டுகளுக்கு முன்பே அவனிடம் உன்னையும் உன் பிள்ளைகளையும் கண்காணிக்க வேலைக்கு வைத்தேன். 516 00:49:11,451 --> 00:49:12,452 குறிப்பாக நோவாவை. 517 00:49:17,249 --> 00:49:18,667 அவன் ஒரு புத்திசாலி பையன், 518 00:49:19,835 --> 00:49:21,670 ஆனால் அவன் அதை தன்னை மேம்படுத்துவதில் பயன்படுத்துவதில்லை. 519 00:49:27,759 --> 00:49:29,469 உங்களுக்கு என்ன வேண்டும்? 520 00:49:34,349 --> 00:49:35,475 குண்டு மழை பொழியப்போகிறது. 521 00:49:36,351 --> 00:49:37,811 அதை பல வருடங்களாக கேட்கிறோம். 522 00:49:37,811 --> 00:49:39,229 இந்த முறை அது நிஜம். 523 00:49:40,647 --> 00:49:41,982 அது சீக்கிரத்தில் நடக்கும். 524 00:49:43,066 --> 00:49:45,736 தொழிற்சாலைகளை குறிவைக்கும் சிறிய குண்டுகள் மட்டுமில்லை. 525 00:49:45,736 --> 00:49:47,738 முழு நகரத்தையே தரைமட்டமாக்கும் குண்டுகள். 526 00:49:48,488 --> 00:49:50,949 அமெரிக்கர்கள் இதையெல்லாம் எரிக்க விரும்புகிறார்கள். 527 00:49:51,533 --> 00:49:53,493 எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? 528 00:49:57,414 --> 00:49:59,333 நீ அரிசி ஒயின் தயாரிப்பது எனக்கு எப்படித் தெரியும்? 529 00:50:00,959 --> 00:50:04,838 அல்லது நோவாவின் ஆசிரியர் வேறுவிதமாக நடிக்கும் கொரியர் என்று? 530 00:50:05,923 --> 00:50:08,133 மற்றவர்களுக்கு தெரியாததை தெரிந்துகொள்வதுதான் என் வேலை. 531 00:50:08,884 --> 00:50:11,178 அப்படித்தான் நான் உயிர்பிழைக்க கற்றுக்கொண்டேன். 532 00:50:11,178 --> 00:50:12,596 நீயும் அதையே செய்ய வேண்டும். 533 00:50:14,389 --> 00:50:16,600 நீ, உன் மைத்துனி, இரண்டு பையன்கள் எல்லோரும் 534 00:50:16,600 --> 00:50:18,727 கிராமப்புறத்தில் தங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். 535 00:50:20,312 --> 00:50:22,231 என் கணவரை சிறையில் விட்டுவிட்டு போக மாட்டேன். 536 00:50:22,231 --> 00:50:23,690 உனக்கு நான் சொல்வது புரிகிறதா? 537 00:50:25,025 --> 00:50:28,487 இந்த நகரத்தை அழிக்க அமெரிக்கர்கள் தங்கள் விமானங்களை அனுப்புகிறார்கள்! 538 00:50:29,446 --> 00:50:31,365 உனக்குத் தெரிந்த எல்லாம் அழிந்துவிடும். 539 00:50:32,491 --> 00:50:34,326 அதற்கு அர்த்தம் உனக்குப் புரியும் என்று நினைக்கிறாய். 540 00:50:36,453 --> 00:50:37,454 இல்லை. 541 00:50:38,497 --> 00:50:39,581 உனக்குத் தெரியாது. 542 00:50:40,874 --> 00:50:42,084 எனக்குத் தெரியும். 543 00:50:42,668 --> 00:50:43,961 நான் சொன்னேனே. 544 00:50:45,754 --> 00:50:46,755 அது சாத்தியமில்லை. 545 00:50:47,673 --> 00:50:52,427 தானாக சிக்கிக்கொண்ட முட்டாளுக்காக உன் பிள்ளைகளை பணயம் வைக்க நீ தயாரா? 546 00:50:52,427 --> 00:50:54,221 நான் அவரை விட்டுவிட்டு போக மாட்டேன். 547 00:50:56,265 --> 00:50:57,307 நான் மாட்டேன். 548 00:51:03,146 --> 00:51:04,147 நீ... 549 00:51:07,276 --> 00:51:09,236 நிஜமாகவே நீ அவனைப் பற்றி கவலைப்படுகிறாய். 550 00:51:11,780 --> 00:51:12,990 இல்லையா? 551 00:52:36,907 --> 00:52:38,909 வசனத் தமிழாக்கம் அருண்குமார்