1 00:00:08,383 --> 00:00:13,347 நீல சப்டைட்டில் ஜப்பானிய வசனங்கள். மஞ்சள் சப்டைட்டில் கொரிய வசனங்கள். 2 00:00:28,820 --> 00:00:30,030 (ஜப்பானிய மொழியில்) தயாரா? 3 00:00:32,908 --> 00:00:33,909 இதோ. 4 00:00:38,288 --> 00:00:41,500 நான் பார்த்துக்கொள்கிறேன், ஆனால் பக்கத்திலேயே இரு. 5 00:00:43,210 --> 00:00:46,129 சீக்கிரம்! ரயிலில் இடம் இருக்காது. 6 00:00:56,765 --> 00:00:58,725 உஷ். அவர்கள் வருகிறார்கள். 7 00:00:59,893 --> 00:01:01,019 அவர்களைத் தாக்கு! 8 00:01:03,939 --> 00:01:05,274 அவர்களை தப்பிக்க விடாதே! 9 00:01:38,724 --> 00:01:40,517 பூம்! 10 00:01:44,563 --> 00:01:48,859 உன் இதயத்தைத்தான் குறி வைத்தேன், முதல் முறையிலேயே தாக்கிவிட்டேன்! 11 00:01:48,859 --> 00:01:53,363 - ஆம், நான் பார்த்தேன்! - இல்லை! நாங்கள்தான் முதலில் உங்களை தாக்கினோம்! 12 00:01:53,363 --> 00:01:56,325 வாயு முகமூடியை அணிவது என் முறை. 13 00:01:56,325 --> 00:01:57,534 அதைக் கொடு! 14 00:01:57,534 --> 00:01:59,411 திரும்ப அவரேதான். 15 00:02:10,672 --> 00:02:12,007 அது என் வீடு. 16 00:02:18,764 --> 00:02:19,765 அம்மா? 17 00:02:31,735 --> 00:02:32,778 நான் வீட்டிற்குப் போகிறேன். 18 00:02:33,487 --> 00:02:34,863 நீங்களும்தான். 19 00:02:44,748 --> 00:02:49,336 அவனுடைய அப்பாவின் உடல்... அது திரும்ப கிடைக்குமா? 20 00:02:51,505 --> 00:02:55,884 அது உடல் பாகம் எவ்வளவு மீதமிருக்கிறது என்பதைப் பொறுத்தது. 21 00:03:01,348 --> 00:03:04,852 ஆனால், மொஸாசு, போதகர் ஹு சொன்னது நினைவிருக்கட்டும். 22 00:03:04,852 --> 00:03:07,062 கடவுள் நமக்கு காவலாக இருந்து காப்பாற்றுவார். 23 00:03:07,062 --> 00:03:09,147 நீ அதை நம்புகிறாய்தானே? 24 00:03:09,147 --> 00:03:12,693 அது யாரென்று பார். 25 00:03:13,944 --> 00:03:15,445 பாண்டோ. 26 00:03:33,714 --> 00:03:34,965 {\an8}(கொரிய மொழியில்) மொஸாசு. 27 00:03:35,966 --> 00:03:37,885 சீக்கிரம் வா. உலரவைத்த துணிகளை எடுக்க உதவி செய். 28 00:03:40,220 --> 00:03:43,098 பெரியம்மா, ஏன் எப்போதும் என்னை மட்டும் உதவிக்கு கூப்பிடுகிறீர்கள்? 29 00:03:43,098 --> 00:03:45,058 அப்படி பேசாதே நோவா! 30 00:03:45,058 --> 00:03:47,186 நீ விளையாட மட்டுமே செய்கிறாய் என்பதால். 31 00:03:47,186 --> 00:03:48,729 சீக்கிரம் வா! 32 00:03:48,729 --> 00:03:52,149 "நாம் ஜப்பானிய மொழியை அமெரிக்க வார்த்தைகளின் 33 00:03:52,149 --> 00:03:56,403 கலப்படம் இல்லாமல் பேசுவதை நினைவில்கொள்ள வேண்டும். 34 00:03:57,154 --> 00:04:01,992 'பெருடோ' என்று ஒரு காலத்தில் அழைத்ததை இப்போது 'பெல்ட்' என்று அழைக்கிறோம். 35 00:04:01,992 --> 00:04:05,996 இதற்குத்தான் நம்முடைய அறிஞர்கள் தங்கள் படிப்பை அர்ப்பணித்திருக்க வேண்டும்." 36 00:04:33,690 --> 00:04:34,942 பெரியம்மா! 37 00:04:38,612 --> 00:04:39,863 நீங்கள் நலமா? 38 00:04:41,865 --> 00:04:45,077 உன்னால்... உனக்கு நான் சொல்வது புரிகிறதா? 39 00:04:48,539 --> 00:04:49,540 அது நீதானா, நோவா? 40 00:04:55,254 --> 00:04:58,048 - நோவா... - என்னை அழைத்தாயா? 41 00:05:01,051 --> 00:05:02,177 நோவா. 42 00:05:03,262 --> 00:05:05,556 என்ன இது? யாரது? 43 00:05:06,056 --> 00:05:07,140 நான் நினைக்கிறேன்... 44 00:05:08,392 --> 00:05:11,687 அது அவர்தான் என்று... நினைக்கிறேன். 45 00:05:15,566 --> 00:05:16,692 இசாக்? 46 00:05:27,369 --> 00:05:29,955 கியுங்கீ, நான் திரும்பி வந்துவிட்டேன். 47 00:05:33,876 --> 00:05:34,960 நான்... 48 00:05:36,753 --> 00:05:38,338 வீட்டிற்கு வந்துவிட்டேன். 49 00:05:46,138 --> 00:05:48,015 நான் வந்துவிட்டேன். 50 00:07:13,976 --> 00:07:16,228 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 51 00:07:35,664 --> 00:07:37,833 டோக்கியோ 52 00:07:51,555 --> 00:07:53,307 ஹென்னெஸி. எதுவும் கலக்காமல். 53 00:07:53,807 --> 00:07:56,018 கொஞ்சம் தண்ணீர். 54 00:07:59,062 --> 00:08:00,898 நீ இங்கே என்ன செய்கிறாய்? 55 00:08:05,194 --> 00:08:06,904 கருணை காட்டும்படி கெஞ்சி கேட்க வந்தேன். 56 00:08:10,866 --> 00:08:14,953 சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? 57 00:08:19,374 --> 00:08:23,629 நீயும் நானும் ஒரே பண்பு கொண்டவர்கள். 58 00:08:25,380 --> 00:08:27,424 நம் இருவருடைய அப்பாவும் 59 00:08:28,300 --> 00:08:31,887 நிதி ரீதியாக பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். 60 00:08:35,265 --> 00:08:38,602 உன்னைப் போல, யாராவது என் வழியல் குறுக்கே நிற்கும்போது, 61 00:08:39,645 --> 00:08:44,024 நானே களத்தில் இறங்கி சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்வேன். 62 00:08:46,276 --> 00:08:48,445 நான் மகத்துவமானவன் என்பதை 63 00:08:48,445 --> 00:08:53,534 இந்த உலகுக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது. 64 00:08:54,993 --> 00:08:56,036 இப்போது? 65 00:08:57,996 --> 00:09:01,124 ஆண்டின் சிறந்த ஜப்பான் தொழிலதிபர். 66 00:09:04,253 --> 00:09:08,423 ஒரு காலத்தில் என்னை அழிக்க முயற்சி செய்த அதே மக்கள் விருது கொடுக்கிறார்கள். 67 00:09:12,594 --> 00:09:14,179 நான் உன்னை சந்தித்த தருணத்திலிருந்து, 68 00:09:15,556 --> 00:09:18,517 நீ என் வழியில் குறுக்கிடுவாய் என்று எனக்குத் தெரியும். 69 00:09:20,227 --> 00:09:23,522 உன்னுடைய தோல்விக்கு இப்போது நான் பொறுப்பாகிறேன். 70 00:09:26,900 --> 00:09:29,319 அதனால் கருணை கிடையாது. 71 00:09:30,821 --> 00:09:36,243 ஏனென்றால் இந்த ஊரை எச்சரிக்க நான் உன்னைப் பயன்படுத்துகிறேன். 72 00:09:38,912 --> 00:09:43,125 என்னை ஏமாற்றினால், கடுமையான தண்டனை கொடுப்பேன். 73 00:10:07,232 --> 00:10:09,776 அவர் எங்கே? உள்ளே இருக்கிறாரா? 74 00:10:12,738 --> 00:10:13,822 சுன்ஜா. 75 00:10:15,365 --> 00:10:17,034 உன்னை நீ தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 76 00:10:57,491 --> 00:10:58,534 யார் அது? 77 00:11:00,285 --> 00:11:01,662 நான்தான். 78 00:11:12,047 --> 00:11:13,382 நான்தான். 79 00:11:14,800 --> 00:11:16,260 சுன்ஜா. 80 00:11:16,969 --> 00:11:18,637 ஆம், நான்தான். 81 00:11:21,765 --> 00:11:24,893 என்ன இது? இப்படி எல்லோரையும் பயமுறுத்தி இருக்கிறீர்கள். 82 00:11:30,399 --> 00:11:33,777 தினமும் இரவும் பகலும் உங்களுக்காக வேண்டினேன். 83 00:11:34,987 --> 00:11:37,197 அது உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். 84 00:11:41,618 --> 00:11:44,454 பலருடன் ஒப்பிடும்போது நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். 85 00:11:45,789 --> 00:11:48,500 உங்கள் அண்ணனுக்கும் அண்ணிக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். 86 00:11:49,293 --> 00:11:51,587 அவர்கள் எங்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டனர். 87 00:11:51,587 --> 00:11:57,509 என் அண்ணன் வெகுதூரம் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். 88 00:11:59,386 --> 00:12:03,724 நான் அவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். 89 00:12:14,318 --> 00:12:18,155 நீ என்னை இந்த நிலைமையில் பார்க்க நான் விரும்பவில்லை. 90 00:12:18,155 --> 00:12:19,781 அல்லது பிள்ளைகள். 91 00:12:23,452 --> 00:12:25,287 ஏன் அதற்கெல்லாம் கவலைப்படுகிறீர்கள்? 92 00:12:27,497 --> 00:12:29,708 நீங்கள் முதலில் குணமாக வேண்டும். 93 00:12:33,378 --> 00:12:34,379 ஆம். 94 00:12:35,005 --> 00:12:36,590 இது மிகவும் சலிப்பூட்டுகிறது. 95 00:12:41,678 --> 00:12:43,180 கொஞ்சம் தூங்குங்கள். 96 00:12:49,436 --> 00:12:51,188 என்னை விட்டுப் போகாதே. 97 00:12:53,732 --> 00:12:54,942 சுன்ஜா. 98 00:12:56,151 --> 00:12:59,238 நான் சென்று மருத்துவரை அழைத்து வருகிறேன். 99 00:12:59,988 --> 00:13:01,907 நீங்கள் சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள். 100 00:13:23,971 --> 00:13:25,848 அவர் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். 101 00:13:27,099 --> 00:13:29,268 ஆனால் நாம் எங்கே ஒருவரை கண்டுபிடிக்கப் போகிறோம்? 102 00:13:29,268 --> 00:13:32,354 நான் புரிந்துகொண்டபடி, அவர்கள் யுத்தம் நடக்கும் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்... 103 00:13:32,354 --> 00:13:34,189 மருத்துவமனைகளில் இன்னும் சிலர் இருப்பார்கள். 104 00:13:35,023 --> 00:13:36,316 நாம் ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். 105 00:13:39,194 --> 00:13:40,195 சுன்ஜா! 106 00:13:46,118 --> 00:13:47,452 ஒருவேளை... 107 00:13:48,495 --> 00:13:50,247 ஒருவேளை மிகவும் தாமதமாகிவிட்டால்? 108 00:13:50,873 --> 00:13:53,125 நீ அவருக்குப் பக்கத்தில் இருக்க வேண்டாமா? 109 00:13:53,834 --> 00:13:56,879 நீ அவருடன் எவ்வளவு நேரம் இருக்கப் போகிறாய் என்று உனக்குத் தெரியாது. 110 00:13:59,006 --> 00:14:02,384 கியுங்கீ, மறந்துவிட்டீர்களா? 111 00:14:03,302 --> 00:14:05,846 அவர் ஏற்கனவே மரணத்தை வென்றிருக்கிறார். 112 00:14:06,805 --> 00:14:10,642 மருத்துவரின் கவனிப்பைப் பெற முடிந்தால், அவரால் மரணத்தை மீண்டும் வெல்ல முடியும். 113 00:14:12,019 --> 00:14:13,020 எனக்குத் தெரியும். 114 00:14:32,039 --> 00:14:34,958 மீண்டும் நீயா! இங்கே எதற்காக வந்தாய்? 115 00:14:35,792 --> 00:14:37,252 இப்போது மணி என்னவென்று தெரியுமா? 116 00:14:37,920 --> 00:14:39,880 - பாட்டி. - போய் தொலை! 117 00:14:40,464 --> 00:14:42,049 நான் போக எந்த இடமும் இல்லை. 118 00:14:42,841 --> 00:14:44,343 உதவி கேட்க யாரும் இல்லை. 119 00:14:49,097 --> 00:14:50,098 பாட்டி. 120 00:15:05,239 --> 00:15:07,324 வெளியே போ!! 121 00:15:11,036 --> 00:15:13,163 முதலில் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 122 00:15:16,875 --> 00:15:18,418 உங்கள் வீடு இப்படி இருப்பதற்கு 123 00:15:19,753 --> 00:15:20,921 காரணமே நான்தான். 124 00:15:23,841 --> 00:15:25,300 நீயா... 125 00:15:26,134 --> 00:15:29,513 உங்களிடம் கையெழுத்து போடாதீர்கள் என சொன்ன பிறகு, ஷிஃப்லிஸ் என்னை வேலையிலிருந்து நீக்கியது. 126 00:15:30,806 --> 00:15:32,933 அதனால் என் விசா ரத்தாகிவிட்டது. 127 00:15:33,475 --> 00:15:35,227 இப்போது இங்கே சிக்கிக்கொண்டேன். 128 00:15:36,562 --> 00:15:38,021 அது மட்டும் இல்லை, திரு. அபே... 129 00:15:38,021 --> 00:15:40,858 போதும். என் வீட்டுக்கு என்ன ஆனது? 130 00:15:45,737 --> 00:15:48,574 நான் ஒருவரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன். 131 00:15:49,157 --> 00:15:53,954 அவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உங்களை வெளியேற்ற முயற்சி செய்தார். 132 00:15:55,831 --> 00:15:58,917 நாங்கள் இந்த இடத்தை வாங்கி, அதை மீண்டும் 133 00:16:00,210 --> 00:16:03,338 திரு. அபே மற்றும் ஷிஃப்லிஸுக்கு விற்கப் போகிறோம். 134 00:16:04,715 --> 00:16:06,925 என் வாழ்வாதாரத்திற்கு அந்த பணம் தேவை. 135 00:16:08,302 --> 00:16:11,138 - நான் விரக்தியில் இருந்தேன்... - அதை ஒரு காரணம் என்று சொல்கிறாயா? 136 00:16:15,726 --> 00:16:17,895 ஆனால் வழக்கமாக நடப்பது அதுதானே? 137 00:16:19,313 --> 00:16:24,109 நாம் உயிர் பிழைப்பதற்காக ஒருவருக்கொருவர் துரோகம் செய்கிறோம், 138 00:16:25,319 --> 00:16:27,654 நாம் அவர்களுக்காகத்தான் வேலை செய்கிறோம் என்பதை உணராமல். 139 00:16:29,114 --> 00:16:31,992 இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 140 00:16:32,534 --> 00:16:34,453 கருணைக்காக கெஞ்ச நம்மை வற்புறுத்துகிறார்கள். 141 00:16:42,503 --> 00:16:43,837 கடைசியாக. 142 00:16:45,255 --> 00:16:47,132 நீ அதை புரிந்துகொண்டாய். 143 00:17:22,251 --> 00:17:25,127 நான்தான். நோவா. 144 00:17:38,267 --> 00:17:42,980 நோவா, போய் செக்ஸ்டன் ஹுவை அழைத்து வா... 145 00:17:42,980 --> 00:17:45,315 இப்போது அவர்தான் நம்முடைய போதகர். 146 00:17:47,317 --> 00:17:48,527 போதகரா? 147 00:17:49,111 --> 00:17:53,240 ஆம். சில வருடங்களுக்கு முன்பு போதகர் யூ இறந்துவிட்டார். 148 00:17:54,908 --> 00:17:56,076 அப்படியா. 149 00:18:01,999 --> 00:18:03,333 போ. 150 00:18:05,252 --> 00:18:06,962 போதகர் ஹு வை அழைத்து வா. 151 00:18:08,297 --> 00:18:10,924 சீக்கிரம். உன்னால் முடியுமா? 152 00:18:12,342 --> 00:18:13,427 முடியும். 153 00:18:21,977 --> 00:18:24,688 நோவா, தந்தி அலுவலகத்திற்குப் போ. 154 00:18:25,397 --> 00:18:27,441 உன் பெரியப்பாவுக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். 155 00:18:27,441 --> 00:18:32,362 ஆனால், பெரியம்மா, அப்பா என்னிடம் போதகர் ஹுவை அழைத்து வரச் சொன்னார். 156 00:18:34,781 --> 00:18:35,782 அப்படியா. 157 00:18:36,992 --> 00:18:38,994 அவர் ஒன்றாக பிரார்த்தனை செய்ய விரும்புகிறார். 158 00:18:38,994 --> 00:18:40,662 - அப்படியென்றால் போ. - சரி. 159 00:18:40,662 --> 00:18:43,916 நான் என்ன செய்ய? என்னால் தந்தி அலுவலகத்திற்குப் போக முடியும். 160 00:18:48,629 --> 00:18:50,631 இது எவ்வளவு முக்கியம் என்று உனக்குப் புரிகிறதா? 161 00:18:50,631 --> 00:18:52,216 என்னால் முடியும். 162 00:18:52,216 --> 00:18:54,718 பெரியப்பாவுக்கு செய்தி கிடைப்பதை உறுதி செய்கிறேன். 163 00:19:26,416 --> 00:19:30,462 ஹலோ, நாகசாகியில் இருக்கும் என் பெரியப்பாவுக்கு தந்தி அனுப்ப வேண்டும். 164 00:19:31,004 --> 00:19:33,382 இது மிகவும் முக்கியமானது. 165 00:19:39,763 --> 00:19:42,015 உனக்கு படிக்க தெரியுமா? 166 00:19:51,149 --> 00:19:52,526 இருபத்தோரு எழுத்துகள். 167 00:19:52,526 --> 00:19:53,610 என்பது சென். 168 00:19:57,823 --> 00:20:01,034 செய்தி சரிதானா என்பதை சரிபார்த்துக்கொள். 169 00:20:05,747 --> 00:20:08,250 {\an8}இசாக் வீட்டுக்கு வந்துவிட்டார். 170 00:20:08,250 --> 00:20:10,294 {\an8}அவர் மரண படுக்கையில் இருக்கிறார். 171 00:20:23,182 --> 00:20:24,892 போதகரே! அவர் வந்துவிட்டார்! 172 00:20:24,892 --> 00:20:26,226 நோவா. 173 00:20:26,226 --> 00:20:30,189 இத்தனை வருடங்களுக்குப் பிறகு, என் அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார். 174 00:20:30,814 --> 00:20:34,026 ஆனால் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். 175 00:20:36,028 --> 00:20:39,156 அவருக்கு உதவுங்கள். உங்களால் முடியும் என்று தெரியும். 176 00:20:39,656 --> 00:20:42,326 நாங்கள் கொஞ்சம் தனியாக பேசலாமா? 177 00:20:44,411 --> 00:20:46,246 கடைசியாக என் அப்பா திரும்பி வந்துவிட்டார். 178 00:20:47,414 --> 00:20:48,874 தயவுசெய்து, என்னோடு வாருங்கள். 179 00:20:48,874 --> 00:20:50,459 அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். 180 00:20:51,335 --> 00:20:53,295 அவரை குணப்படுத்தும்படி கடவுளிடம் சொல்லுங்கள். 181 00:20:53,962 --> 00:20:56,048 என் பிரார்த்தனை போதுமானதாக இருக்காது என்று நினைக்கிறேன். 182 00:20:56,048 --> 00:20:59,551 உங்கள் பிரார்த்தனைகளை கடவுள் கேட்பார் என்று தெரியும். 183 00:21:00,511 --> 00:21:02,262 நோவா, அது அவ்வளவு எளிதில்லை என்பது உனக்கே தெரியும். 184 00:21:02,262 --> 00:21:03,972 ஆனால், அது நடக்க வேண்டும்! 185 00:21:07,976 --> 00:21:10,229 நான் நல்லவனாக இருக்கிறேன், 186 00:21:11,230 --> 00:21:12,272 இல்லையா? 187 00:21:13,357 --> 00:21:15,609 நான் நல்லவனாக இருக்க மிகவும் முயற்சி செய்தேன். 188 00:21:18,028 --> 00:21:20,614 இந்த முறை ஆண்டவரால் மறுக்க முடியாது. 189 00:21:22,866 --> 00:21:24,660 மறுபடியும் முடியாது. 190 00:21:30,415 --> 00:21:31,708 என் பொருட்களை எடுத்து வருகிறேன். 191 00:21:48,392 --> 00:21:51,311 அவருக்கு மருத்துவர் தேவை. 192 00:21:52,521 --> 00:21:54,022 அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். 193 00:21:54,022 --> 00:21:56,817 நீயும் பையன்களும் நகரத்திலிருந்து வெளியேறுவதற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். 194 00:21:57,442 --> 00:21:59,903 யாருக்காக என்று கூட நீங்கள் கேட்க வேண்டியதில்லை. 195 00:21:59,903 --> 00:22:01,280 உங்களுக்கு தெரியும். 196 00:22:02,698 --> 00:22:03,907 எனவே சொல்லுங்கள். 197 00:22:05,534 --> 00:22:08,203 அவரை முன்பே விடுவித்திருக்க முடியுமா? 198 00:22:10,247 --> 00:22:13,041 இப்போதுதான் அவனை விடுவிக்க முடிந்தது, 199 00:22:13,625 --> 00:22:15,169 ஏனென்றால் சிறை அதிகாரி ஒருவரையும் அவருடைய 200 00:22:15,169 --> 00:22:17,880 குடும்பத்தையும் நகரத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதாக நான் வாக்குறுதி அளித்தேன். 201 00:22:18,714 --> 00:22:21,300 எல்லோரும் வெளியேற துடிக்கிறார்கள். 202 00:22:22,092 --> 00:22:23,343 உன்னைத் தவிர எல்லோரும். 203 00:22:28,307 --> 00:22:29,892 நீ என்னிடம் வரும் அளவுக்கு 204 00:22:30,559 --> 00:22:32,102 அவநம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 205 00:22:32,686 --> 00:22:33,687 ஆம். 206 00:22:43,989 --> 00:22:45,324 இதுதான் ஒப்பந்தம். 207 00:22:46,491 --> 00:22:47,951 ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன். 208 00:22:48,535 --> 00:22:50,370 நகரத்தில் மீதமிருக்கும் சிறந்தவர்களில் ஒருவரை. 209 00:22:50,370 --> 00:22:51,538 அதற்கு பதிலாக, 210 00:22:52,706 --> 00:22:56,585 நீயும் பையன்களும் என்னுடன் வரவேண்டும். 211 00:22:58,295 --> 00:23:00,172 அவன் வந்தாலும் வராவிட்டாலும். 212 00:23:02,424 --> 00:23:03,967 சத்தியம் செய். 213 00:23:47,845 --> 00:23:52,891 அந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை மறப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது. 214 00:23:53,517 --> 00:23:55,060 ஆனால் இப்போது பார். 215 00:23:57,521 --> 00:24:00,774 போருக்குப் பிறகு நான் இந்த இடத்தை வாங்கியபோது, 216 00:24:00,774 --> 00:24:03,902 கிட்டத்தட்ட சும்மா கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 217 00:24:04,862 --> 00:24:05,863 என்ன? 218 00:24:06,655 --> 00:24:07,781 நான் விளையாடவில்லை. 219 00:24:07,781 --> 00:24:10,409 இதை நான் வேறு எப்படி வாங்கியிருக்க முடியும்? 220 00:24:12,452 --> 00:24:13,453 எதற்காக என்று வியக்கிறேன். 221 00:24:14,663 --> 00:24:17,749 இந்த நிலத்தைப் பற்றி எப்போதும் சில விசித்திரமான வதந்திகள் உண்டு. 222 00:24:18,584 --> 00:24:19,877 என்ன மாதிரியான வதந்திகள்? 223 00:24:22,880 --> 00:24:25,257 இன்னொரு உயிருக்கு உணவளிப்பதுதான் என் விதி. 224 00:24:25,966 --> 00:24:28,343 அதற்கு பசி தீரவே தீராது. 225 00:24:32,014 --> 00:24:35,684 பாட்டி, பொறுங்கள். என்ன மாதிரியான வதந்திகள்? 226 00:24:36,268 --> 00:24:38,770 எல்லா விவரங்களும் யாருக்கு நினைவிருக்கும்? 227 00:24:39,771 --> 00:24:42,691 இங்கே இருந்த ராணுவப் பள்ளியைப் பற்றியது. 228 00:24:44,443 --> 00:24:46,778 ஒரு நாள் லாரிகள் வர ஆரம்பித்தன. 229 00:24:47,613 --> 00:24:48,822 பிணங்களை ஏற்றிக்கொண்டு. 230 00:24:54,036 --> 00:24:56,538 இராணுவப் பள்ளிக்கு ஏன் பிணங்களைக் கொண்டுவருவார்கள்? 231 00:24:57,581 --> 00:24:58,665 யாருக்குத் தெரியும்? 232 00:24:59,416 --> 00:25:03,045 அது போரின்போது என்பதால் யாரும் கேள்வி கேட்கவில்லை. 233 00:25:04,129 --> 00:25:07,049 அவ்வளவுதானா? அப்போது அந்த அளவுக்கான வதந்திகள்தான் இருந்தனவா? 234 00:25:08,383 --> 00:25:11,136 மெதுவாக சாப்பிடு, இல்லையென்றால் மீண்டும் நோய்வாய்ப்படுவாய். 235 00:25:11,136 --> 00:25:13,347 - பாட்டி. - என்ன? 236 00:25:13,347 --> 00:25:15,307 உன்னிடம் இன்னும் கேள்விகள் இருக்கிறதா? 237 00:25:15,307 --> 00:25:17,017 நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்! 238 00:25:17,809 --> 00:25:19,478 இது நீண்ட காலத்துக்கு முன்பு. 239 00:25:20,062 --> 00:25:23,023 இறந்தவர்களை தொந்தரவு செய்வது... அதில் என்ன பயன்? 240 00:25:31,949 --> 00:25:34,952 ஆனால் அந்த எலும்புகள் இன்னும் இங்கே இருக்குமா? 241 00:25:41,542 --> 00:25:42,835 பாட்டி. 242 00:25:47,631 --> 00:25:49,341 நான் அதை மறக்க வேண்டியிருந்தது. 243 00:25:50,759 --> 00:25:52,219 புரிகிறதா? 244 00:25:53,262 --> 00:25:55,430 அதை மறக்க நான் மிகவும் முயன்றேன். 245 00:25:56,056 --> 00:25:58,809 அல்லது என்னால் நான் எப்படி இங்கே வசிக்க முடியும்? 246 00:26:01,228 --> 00:26:03,897 ஆனால் அந்த எலும்புகள், ஒருவேளை அவை நமக்கு ஏதாவது கொடுக்கலாம். 247 00:26:06,191 --> 00:26:07,192 நீ என்ன பேசுகிறாய்? 248 00:26:08,902 --> 00:26:10,112 உங்களுக்குப் புரியவில்லையா? 249 00:26:10,612 --> 00:26:12,364 இப்படித்தான் நாம் எதிர்த்து போராட வேண்டும். 250 00:26:14,616 --> 00:26:19,788 இதை வைத்து அவர்கள் நம் பின்னால் வருவதை நிறுத்தலாம். 251 00:26:24,251 --> 00:26:27,504 பாருங்கள்! அவர் என்னைப் போல சிறியவனாக இருந்தபோது, 252 00:26:27,504 --> 00:26:31,842 அவர் தன் சொந்த வீட்டில் புஷ்-அப் செய்து சாதனை படைத்தார். 253 00:26:31,842 --> 00:26:34,428 உறுதியாக அவர் இப்போது பெரும் பணக்காரராக இருப்பார். 254 00:26:34,428 --> 00:26:40,142 பணக்காரனாக இருப்பது உனக்கு அவ்வளவு முக்கியமா? 255 00:26:40,809 --> 00:26:46,940 நிச்சயமாக! நாம் பணக்காரர்களாக இருந்தால், சிறந்த மருத்துவர்களை ஏற்பாடு செய்திருப்பேன், 256 00:26:46,940 --> 00:26:49,276 நமக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கியிருப்பேன். 257 00:26:49,860 --> 00:26:52,696 நம்மிடம் ஏதாவது பணம் மீதமிருந்தால், 258 00:26:52,696 --> 00:26:58,368 பெரியம்மாவால் கள்ளச் சந்தையில் சர்க்கரை வாங்கி மிட்டாய் செய்ய முடியலாம். 259 00:27:04,791 --> 00:27:05,959 ஒன்றுமில்லையே? 260 00:27:10,297 --> 00:27:17,304 நானும் ஒரு காலத்தில் பல அறைகளை கொண்ட 261 00:27:19,223 --> 00:27:21,016 பெரிய வீட்டில் வளர்ந்தேன். 262 00:27:22,518 --> 00:27:25,270 பெரும்பாலான அறைகளில் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும். 263 00:27:25,270 --> 00:27:28,357 நான் நிச்சயமாக திருட்டுத்தனமாக நுழைந்திருப்பேன். 264 00:27:29,483 --> 00:27:31,360 நீ நிச்சயம் செய்வாய். 265 00:27:32,986 --> 00:27:38,659 ஆனால் விஷயம் என்னவென்றால், அந்த பெரிய வீட்டை நான் மிஸ் செய்யவில்லை, 266 00:27:40,035 --> 00:27:42,829 அதில் வாழ்ந்த மக்களைத்தான் மிஸ் செய்கிறேன். 267 00:27:43,830 --> 00:27:46,041 உண்மையான செல்வம், மொஸாசு... 268 00:27:47,042 --> 00:27:49,670 நேசிக்கப்படுவதுதான். 269 00:27:50,838 --> 00:27:55,050 ஆனால், அப்பா, அது ஏன் இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும்? 270 00:27:55,717 --> 00:27:58,971 நான் நேசிக்கப்படும் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன். 271 00:28:05,435 --> 00:28:06,854 என்ன நடக்கிறது? 272 00:28:06,854 --> 00:28:08,355 மறுபடியும் மின்தடை. 273 00:28:09,147 --> 00:28:11,024 இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் நடக்கிறது. 274 00:28:11,024 --> 00:28:12,526 லாந்தர் விளக்கு ஏற்றுகிறேன். 275 00:28:19,825 --> 00:28:21,034 இதோ. 276 00:28:25,205 --> 00:28:27,583 எனவே நீங்கள் பயப்பட வேண்டாம். 277 00:28:41,096 --> 00:28:43,390 நன்றி, மகனே. 278 00:28:47,895 --> 00:28:48,896 அவர்கள் வந்துவிட்டார்கள்! 279 00:28:49,897 --> 00:28:50,981 அப்பா. 280 00:29:00,407 --> 00:29:03,744 உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி, சகோதரரே. 281 00:29:05,412 --> 00:29:06,872 போதகரே, வந்துவிட்டீர்கள். 282 00:29:07,664 --> 00:29:08,665 நிச்சயமாக நான் வர வேண்டும். 283 00:29:08,665 --> 00:29:10,542 கடைசியாக அவரை வீட்டில் பார்க்க... 284 00:29:10,542 --> 00:29:12,878 போதகரிடம் நான் தனியாக பேச வேண்டும். 285 00:29:17,549 --> 00:29:19,009 வாருங்கள். 286 00:29:19,009 --> 00:29:21,386 நோவா இருக்கட்டும். 287 00:29:23,096 --> 00:29:24,348 அப்பா. 288 00:29:25,224 --> 00:29:28,018 மொஸாசு, விளக்குகளை ஏற்ற எனக்கு உதவு. 289 00:29:35,025 --> 00:29:37,694 ஆனால், பாட்டி, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், 290 00:29:37,694 --> 00:29:41,698 கோல்டன் போன்ற நிறுவனம் இந்த நிலத்தை ஒருபோதும் தொடாது. 291 00:29:42,324 --> 00:29:44,076 எப்படி மீண்டும் அதைப்பற்றி யோசிக்கிறாய்? 292 00:29:44,076 --> 00:29:45,744 தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 293 00:29:46,411 --> 00:29:48,956 இந்த இடத்தை அபேக்கு விற்ற பிறகு, 294 00:29:48,956 --> 00:29:51,917 அந்த எலும்புகள் பற்றி வதந்திகளை பரப்புவோம்... 295 00:29:51,917 --> 00:29:54,294 அவை இன்னும் இங்கே இருக்கின்றனவா என்பது கூட நமக்குத் தெரியாது! 296 00:29:54,294 --> 00:29:59,925 அது முக்கியமில்லை. அது போன்ற வதந்தி கோல்டனை மூட்டை கட்ட வைத்துவிடும். 297 00:30:01,051 --> 00:30:02,511 நான் உறுதியாக சொல்கிறேன். 298 00:30:03,095 --> 00:30:07,891 அவர்கள் இல்லாமல், அபே கணிசமான கடனை வைத்திருப்பார். 299 00:30:07,891 --> 00:30:12,563 எப்படி நீ இறந்தவர்களைச் சுரண்ட நினைக்கலாம்? 300 00:30:12,563 --> 00:30:16,733 கடந்த காலத்திற்கு நான் பொறுப்பில்லை. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 301 00:30:17,568 --> 00:30:18,652 போதும்! 302 00:30:28,537 --> 00:30:31,164 அப்படியென்றால் இதெல்லாம் எதற்காக? 303 00:30:32,124 --> 00:30:34,251 அந்த எல்லா அயராத உழைப்பும்? 304 00:30:38,297 --> 00:30:41,508 அது நீதான், இல்லையா? 305 00:30:43,969 --> 00:30:46,305 என்னைக் காட்டிக்கொடுத்தவன் நீதான். 306 00:30:53,353 --> 00:30:54,354 போதகரே? 307 00:30:55,731 --> 00:30:58,775 ஆம். நீங்கள் சொல்வது சரிதான். 308 00:31:00,152 --> 00:31:01,361 அது நான்தான். 309 00:31:03,488 --> 00:31:07,701 உனக்கு என்னைப் பிடிக்காது என்ற சந்தேகம் நீண்ட காலமாக எனக்கு இருந்தது. 310 00:31:11,371 --> 00:31:12,539 ஏன்? 311 00:31:16,043 --> 00:31:17,878 எனக்கு உங்களை பிடிக்காமல் இல்லை. 312 00:31:23,258 --> 00:31:25,052 நான் உங்களை வெறுத்தேன். 313 00:31:26,929 --> 00:31:32,142 உங்களை பொறுத்தவரை, நேசிக்கப்படுவது மிகவும் எளிதாக இருந்தது. 314 00:31:33,977 --> 00:31:35,187 ஆனால் என் விஷயத்தில்... 315 00:31:38,857 --> 00:31:41,151 என்னுடைய சொந்த பெற்றோர் கூட என்னை கைவிட்டார்கள். 316 00:31:43,070 --> 00:31:45,989 எல்லோரும் என்னைத் தூக்கி எறிய விரும்பும்போது 317 00:31:45,989 --> 00:31:48,408 போதகர் யூ தான் என்னை ஏற்றுக்கொண்டார். 318 00:31:49,034 --> 00:31:52,746 அவர் என்னை தன் சொந்த மகன் போல வளர்த்தார், நேசித்தார், 319 00:31:52,746 --> 00:31:54,873 நீங்கள் வரும் வரை, 320 00:31:56,083 --> 00:31:57,918 பிறகு அவருடைய அன்பு குறைத்தது. 321 00:32:11,932 --> 00:32:14,017 எனவே உங்களைப் பற்றி அவர்களிடம் தெரிவித்தேன். 322 00:32:18,605 --> 00:32:21,900 ஆனால் எனக்கு ஏற்படும் என்று நான் நினைத்த திருப்தி... 323 00:32:22,818 --> 00:32:24,611 ஏற்படவில்லை. 324 00:32:25,195 --> 00:32:30,492 உங்கள் விடுதலைக்காக நான் மனதார வேண்டிக்கொண்டேன். 325 00:32:30,492 --> 00:32:34,997 உன்னால்தான் நான் இங்கே இருக்கிறேன் என்று நினைக்கிறாயா? 326 00:32:37,499 --> 00:32:39,751 உங்கள் குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை, 327 00:32:39,751 --> 00:32:42,880 ஆனால் சத்தியமாக அந்த பிரார்த்தனை குரல்களில் என்னுடையதும் இருந்தது. 328 00:32:42,880 --> 00:32:45,174 நான் பரிகாரம் செய்ய முயற்சி செய்தேன், 329 00:32:45,174 --> 00:32:49,052 கடவுளிடம் மட்டுமில்லை, உங்கள் குடும்பத்தினரிடமும் நோவாவிடமும்... 330 00:33:01,106 --> 00:33:03,775 முழு மனதோடு முயற்சித்தேன். 331 00:33:10,782 --> 00:33:12,993 எனக்கு மன்னிப்பு இல்லை என்பதை புரிந்துகொள்கிறேன். 332 00:33:13,702 --> 00:33:14,995 நீங்கள் எப்போதும் என்னை மன்னிக்க மாட்டீர்கள்... 333 00:33:14,995 --> 00:33:16,622 நான் உன்னை மன்னிக்கிறேன். 334 00:33:21,919 --> 00:33:23,587 நான் உன்னை மன்னிக்கிறேன். 335 00:33:23,587 --> 00:33:24,671 கூடாது. 336 00:33:25,506 --> 00:33:28,133 நீங்கள் அவரை மன்னிக்கக் கூடாது. ஒருபோதும்! 337 00:33:29,384 --> 00:33:31,011 இத்தனை வருடங்கள்... 338 00:33:31,595 --> 00:33:33,138 அவரால்... 339 00:33:33,138 --> 00:33:34,932 நீ என்னை நம்ப வேண்டும், நோவா. 340 00:33:35,682 --> 00:33:38,268 நான் உன்னிடமிருந்து என்ன திருடினேன் என்று தெரியும். 341 00:33:38,268 --> 00:33:41,188 வெளியே போங்கள்! எங்களை விட்டு விலகி இருங்கள்! 342 00:33:41,188 --> 00:33:43,106 - நோவா! - என்னை மன்னித்துவிடு, நோவா. 343 00:33:43,106 --> 00:33:44,316 நிஜமாகவே, நான் வருந்துகிறேன்! 344 00:33:45,275 --> 00:33:47,444 போதகரே, என்ன நடக்கிறது? 345 00:33:48,195 --> 00:33:49,196 நோவா. 346 00:33:55,661 --> 00:33:56,745 அப்பா. 347 00:34:01,124 --> 00:34:02,251 ஏன்? 348 00:34:08,382 --> 00:34:10,509 எனக்குத் தெரியும். இதெல்லாம் சொல்வதற்கு நான் யார்? 349 00:34:12,010 --> 00:34:14,638 நிஜ துயரத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? 350 00:34:17,766 --> 00:34:20,476 வெறும் வயிறோடு தூங்கப் போவதை பற்றி... 351 00:34:22,396 --> 00:34:24,481 அது என்னால் கற்பனை செய்ய முடியாதது. 352 00:34:29,069 --> 00:34:32,281 நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தேன். 353 00:34:35,074 --> 00:34:37,452 நீங்கள் என்னை வெறுப்பது புரிகிறது. 354 00:34:41,831 --> 00:34:43,917 நீங்கள் என்னைப் பார்க்கும் விதத்தைப் பார்க்கும்போது... 355 00:34:46,085 --> 00:34:47,963 என் பாட்டி என்னைப் பார்க்கும் விதம்... 356 00:34:50,507 --> 00:34:52,384 எப்படி உங்களை நீங்களே கேட்காமல் இருக்க முடிகிறது... 357 00:34:55,721 --> 00:35:00,350 "இதற்குத்தான் நிஜமாகவே அதையெல்லாம் நான் அனுபவித்தேனா?" 358 00:35:05,898 --> 00:35:06,982 இல்லையா? 359 00:35:08,400 --> 00:35:10,903 நிச்சயமாக அதெல்லாம் அர்த்தமற்றது என்று சொல்வீர்கள். 360 00:35:18,493 --> 00:35:21,121 இவ்வளவு நேரம் உங்களை கண்விழிக்க வைத்ததற்கு வருந்துகிறேன். 361 00:35:25,834 --> 00:35:28,128 நான் திரும்பி வரமாட்டேன். சத்தியமாக. 362 00:35:31,048 --> 00:35:34,176 நான் எப்படி வாழ்ந்தேன் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 363 00:35:38,388 --> 00:35:41,850 நன்றாக வாழ்ந்த வாழ்க்கை அது. 364 00:35:43,685 --> 00:35:46,647 என் மகன்களே, உடைந்த எலும்புகளை கொண்ட நோய்வாய்பட்ட உடல்... 365 00:35:46,647 --> 00:35:49,441 நான் உங்களுக்கு கொடுக்க இதுதான் இருக்கிறது. 366 00:35:50,025 --> 00:35:53,195 ஆனாலும், இதை நினைவில்கொள்ளுங்கள்: 367 00:35:54,530 --> 00:35:56,782 அந்த போதகரின் விதியும் நம்முடையதும்... 368 00:35:58,075 --> 00:36:00,577 நிறைய விஷயங்களில் ஒரே மாதிரிதான். 369 00:36:05,332 --> 00:36:06,708 நோவா, 370 00:36:08,168 --> 00:36:14,007 கருணை என்பது ஒரு பரிசோ அல்லது சக்தியோ இல்லை. 371 00:36:14,007 --> 00:36:18,637 கருணை என்பது ஒப்புக்கொள்வது. 372 00:36:19,847 --> 00:36:24,685 உயிர் பிழைப்பதற்கு ஒரு விலை இருக்கிறது. 373 00:36:30,732 --> 00:36:34,486 உங்கள் இருவரிடமும் நான் சொல்ல விரும்பும் நிறைய இருக்கிறது. 374 00:36:35,863 --> 00:36:38,031 ஆனால் இந்த ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். 375 00:36:39,700 --> 00:36:41,952 எதுவாக இருந்தாலும் சரி... 376 00:36:48,584 --> 00:36:50,294 நீங்கள் என் மகன்கள்... 377 00:36:53,213 --> 00:36:55,174 நான்தான் உங்கள் அப்பா. 378 00:37:06,852 --> 00:37:07,895 நான் வந்துவிட்டேன்! 379 00:37:09,688 --> 00:37:12,191 மருத்துவரை கூட்டி வந்திருக்கிறேன். அவர் நமக்கு உதவப் போகிறார். 380 00:37:12,900 --> 00:37:14,318 இப்போது சரியாகிவிடும். 381 00:37:16,028 --> 00:37:19,740 - அப்பா! - இது நல்லதில்லை. அறையை காலி செய்யுங்கள். 382 00:37:20,532 --> 00:37:22,492 மருத்துவர் அவருக்கு உதவுவார். 383 00:37:22,492 --> 00:37:24,953 மொஸாசு, நோவா, வாருங்கள். 384 00:38:16,713 --> 00:38:18,006 அம்மா! 385 00:38:25,848 --> 00:38:27,307 வெளிப்படையாகச் சொல்கிறேன். 386 00:38:28,684 --> 00:38:32,271 உங்கள் கணவரின் நுரையீரல், சளியால் நிரம்பியிருக்கிறது. 387 00:38:33,480 --> 00:38:36,233 நாம் அவற்றை ஒரு மருத்துவமனையில் அகற்றலாம், 388 00:38:37,150 --> 00:38:39,069 ஆனால் இன்னும் அதிக கவலையளிப்பது, 389 00:38:39,653 --> 00:38:42,322 அவருக்கு செப்சிஸ் இருக்கிறது. 390 00:38:43,156 --> 00:38:44,241 அவருக்கு இன்னும் அதிக காலம்... 391 00:38:47,536 --> 00:38:49,621 இருப்பதாக நான் நினைக்கவில்லை. 392 00:38:53,417 --> 00:38:57,212 ஆனால் உங்களால் ஏதாவது செய்ய முடியும்தானே. 393 00:38:58,463 --> 00:38:59,882 தயவுசெய்து. 394 00:38:59,882 --> 00:39:02,467 பணமாக இருந்தால் கவலைப்படாதீர்கள். 395 00:39:03,719 --> 00:39:05,512 அவரிடம் சொல்லுங்கள். 396 00:39:05,512 --> 00:39:08,557 என்ன செலவானாலும் நான் கொடுப்பேன். அவர் கவலைப்படத் தேவையில்லை. 397 00:39:08,557 --> 00:39:11,018 நான்... நான் பணத்தை ஏற்பாடு செய்வேன். 398 00:39:11,018 --> 00:39:14,605 உங்கள் கணவருக்கு, அதிகபட்சம், 399 00:39:15,522 --> 00:39:17,733 இன்னும் சில மணிநேரங்கள்தான் இருக்கின்றன. 400 00:39:28,285 --> 00:39:30,704 அவருக்கு அவர்கள் செய்தது... 401 00:39:31,205 --> 00:39:32,956 அது பயங்கரமான விஷயம். 402 00:39:33,665 --> 00:39:35,083 நான் அவருக்காக வருந்துகிறேன். 403 00:39:56,647 --> 00:39:58,607 என்னை மன்னித்துவிடு. 404 00:40:00,484 --> 00:40:02,611 எனக்குத் தெரியாது 405 00:40:03,403 --> 00:40:06,406 இது நமக்கு இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று. 406 00:40:06,990 --> 00:40:08,784 மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. 407 00:40:10,285 --> 00:40:14,039 நீங்கள் இல்லாத வருடங்களில், 408 00:40:15,249 --> 00:40:20,045 பலர் என்னிடம் வந்து உங்கள் கருணையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். 409 00:40:21,463 --> 00:40:24,633 நீங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்தீர்கள். 410 00:40:25,926 --> 00:40:29,596 14 வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த மனிதர் அவர்தான், 411 00:40:30,305 --> 00:40:32,558 இப்போது நான் பார்க்கும் மனிதரும் அவர்தான். 412 00:40:34,434 --> 00:40:36,478 உலகம் மாறியிருக்கலாம்... 413 00:40:38,856 --> 00:40:41,316 ஆனால் நீங்கள் மாறவில்லை. 414 00:40:46,572 --> 00:40:52,411 பையன்கள் வளர்வதைப் பார்க்க விரும்புகிறேன். 415 00:40:56,123 --> 00:40:58,125 சுன்ஜா... 416 00:40:59,376 --> 00:41:04,173 என் மனைவி, உன் கையைப் பிடித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். 417 00:41:05,674 --> 00:41:07,509 நான்... 418 00:41:10,721 --> 00:41:13,223 நான் வாழ விரும்புகிறேன். 419 00:41:15,475 --> 00:41:17,686 மிகவும். 420 00:41:20,105 --> 00:41:23,567 நான் வாழ்வதற்கு ஏங்கி சாகிறேன். 421 00:41:32,951 --> 00:41:35,245 நான் இறந்ததும்... 422 00:41:37,706 --> 00:41:41,043 நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும். 423 00:41:43,754 --> 00:41:46,006 அப்படியெல்லாம் பேசாதீர்கள். 424 00:41:46,965 --> 00:41:53,472 கொடுப்பதற்கு உன்னிடம் ஏராளமான அன்பு இருக்கிறது. 425 00:41:55,098 --> 00:41:56,308 எனக்குத் தெரியும். 426 00:41:57,809 --> 00:42:03,065 என் கணவரால் நேசிக்கப்படுவது, 427 00:42:04,525 --> 00:42:06,360 உங்களால் பாராட்டப்படுவது... 428 00:42:10,155 --> 00:42:12,574 எனக்கு அதுதான் எல்லாமே. 429 00:42:17,538 --> 00:42:22,668 ஆனால் நீ எப்படி உன் வாழ்க்கையை தொடர்வாய்? 430 00:42:29,341 --> 00:42:31,593 எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். 431 00:42:33,929 --> 00:42:36,139 நான் சத்தியம் செய்கிறேன். 432 00:42:37,933 --> 00:42:39,893 நம் பிள்ளைகள்... 433 00:42:41,728 --> 00:42:43,939 நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள். 434 00:42:46,775 --> 00:42:48,652 நோவாவும் மொஸாசுவும்... 435 00:42:51,196 --> 00:42:52,948 அவர்கள் செழித்து வளர்வார்கள். 436 00:43:54,468 --> 00:43:58,138 உன் அப்பாவைப் போல இன்னொரு மனிதர் இருக்க மாட்டார். 437 00:44:00,390 --> 00:44:02,267 நீங்கள் அதை மறந்துவிடாதீர்கள். 438 00:44:04,269 --> 00:44:05,479 எப்போதும். 439 00:45:57,049 --> 00:45:58,759 நீ இங்கே என்ன செய்கிறாய்? 440 00:45:58,759 --> 00:46:00,135 ஒப்பந்தம் முடிந்தது. 441 00:46:00,135 --> 00:46:03,180 அவர் அபே மற்றும் கோல்டனுக்கு 1.4 பில்லியன் யென்களுக்கு விற்பார். 442 00:46:03,180 --> 00:46:06,642 நாம் 10% கட்டணத்தைப் பெறுவோம். 443 00:46:07,392 --> 00:46:10,646 ஆனால் இதை தெரிந்துகொள்ளுங்கள். அந்த ஹோட்டல் ஒருபோதும் கட்டப்படாது. 444 00:46:11,688 --> 00:46:13,649 ஏனென்றால் நாம் அதை நடக்கவிட மாட்டோம். 445 00:46:14,483 --> 00:46:16,026 அதோடு அபேவுக்கு தெரியவரும் 446 00:46:17,236 --> 00:46:20,864 நான்தான் அவருக்கு அதைச் செய்தேன் என்று. 447 00:46:44,847 --> 00:46:47,724 இது பயிற்சி இல்லை! இது நிஜ விமானத் தாக்குதல்! 448 00:46:47,724 --> 00:46:49,601 பதுங்கும் இடத்திற்கு சீக்கிரம் போங்கள்! 449 00:46:50,644 --> 00:46:52,729 - சீக்கிரம், ஓடுங்கள்! - சீக்கிரம்! 450 00:46:52,729 --> 00:46:54,189 என்ன செய்கிறாய்? நாம் போக வேண்டும்! 451 00:46:54,189 --> 00:46:55,315 ஓடுங்கள்! போகலாம்! 452 00:46:55,315 --> 00:46:57,818 - பொறுங்கள், என் அம்மா... - அம்மா! 453 00:46:57,818 --> 00:46:58,902 சுன்ஜா! 454 00:46:59,653 --> 00:47:01,196 - ஆனால் என் கணவர்! - ஓடுங்கள்! 455 00:47:01,196 --> 00:47:04,408 இல்லை, என்னால் என் கணவரை விட்டுவிட்டு வர முடியாது! 456 00:48:27,783 --> 00:48:29,785 வசனத் தமிழாக்கம் அருண்குமார்