1 00:00:07,841 --> 00:00:13,805 நீல சப்டைட்டில் ஜப்பானிய வசனங்கள். மஞ்சள் சப்டைட்டில் கொரிய வசனங்கள். 2 00:00:42,626 --> 00:00:43,836 (கொரிய மொழியில்) நோவா! 3 00:00:43,836 --> 00:00:46,505 சுன்ஜா, நாங்கள் இங்கே இருக்கிறோம். 4 00:00:52,302 --> 00:00:53,303 அதோ அங்கே இருக்கிறான்! 5 00:00:58,475 --> 00:00:59,852 நான் அவரைப் பார்க்கிறேன்! 6 00:01:01,103 --> 00:01:02,771 நீ எங்கே போயிருந்தாய்? 7 00:01:02,771 --> 00:01:04,188 நாம் சீக்கிரம் கிளம்ப வேண்டும். 8 00:01:08,235 --> 00:01:09,778 என் கணவர் இறந்துவிட்டார். 9 00:01:10,821 --> 00:01:13,532 சுன்ஜா, யார் இவர்கள்? 10 00:01:13,532 --> 00:01:16,952 இவர் கோ ஹான்சு, குடும்ப நண்பர். 11 00:01:16,952 --> 00:01:19,371 கிராம பகுதியில் நாம் தங்க ஒரு இடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். 12 00:01:20,372 --> 00:01:22,624 பாதுகாப்பான இடத்துக்குப் போகும்படி நம்மை அறிவுறுத்தி இருக்கிறார்கள். 13 00:01:22,624 --> 00:01:24,585 அந்த பாதுகாப்பான இடம் உங்களை காப்பாற்றாது. 14 00:01:24,585 --> 00:01:27,337 ஆனால் என் கணவர் இங்கே இல்லை. 15 00:01:27,337 --> 00:01:29,006 அவருடைய அனுமதியில்லாமல் நாம் இங்கிருந்து போகக்கூடாது. 16 00:01:29,006 --> 00:01:31,633 நீங்கள் அவருடைய அனுமதியைப் பெறுவதற்குள், எல்லோரும் இறந்துவிடுவீர்கள். 17 00:01:31,633 --> 00:01:35,304 குண்டுவீசத் தொடங்கியதும், அமெரிக்கர்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள். 18 00:01:35,304 --> 00:01:36,722 நீங்கள் போக வேண்டும். 19 00:01:37,639 --> 00:01:40,225 இது மிகவும் அவசரகதி என்று தெரியும், ஆனால் நாம் இவர்களை நம்பலாம். 20 00:01:40,225 --> 00:01:42,311 திரு. கோ நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பார். 21 00:01:43,353 --> 00:01:45,314 உள்ளே செல்லுங்கள். தேவையானதை மட்டும் பேக் செய்யுங்கள். 22 00:01:45,314 --> 00:01:47,232 - சீக்கிரம். - போகலாம். 23 00:01:52,279 --> 00:01:54,531 நோவா, இன்னொரு போர்வையை பேக் செய்! 24 00:02:03,290 --> 00:02:05,000 என்ன செய்கிறீர்கள்? நமக்கு நேரமில்லை. 25 00:02:07,211 --> 00:02:08,794 என்னால் இவற்றை தூக்கி வீச முடியாது. 26 00:02:09,505 --> 00:02:12,174 இவை எங்கள் பரம்பரை சொத்து. என் கணவரும் நானும்... 27 00:02:12,174 --> 00:02:14,092 என்ன நடக்கிறது என்று புரியவில்லையா? 28 00:02:14,092 --> 00:02:16,011 நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை! 29 00:02:17,304 --> 00:02:19,681 ஆனால் இவை பல தலைமுறைகளாக எங்களிடம் இருக்கின்றன. 30 00:02:20,182 --> 00:02:21,767 நான் இவற்றை இழக்க மாட்டேன். 31 00:02:24,853 --> 00:02:25,896 தள்ளுங்கள். 32 00:02:26,688 --> 00:02:28,232 போய் பேக்கிங்கை முடியுங்கள். இதை நான் எடுத்து வைக்கிறேன். 33 00:02:31,985 --> 00:02:33,153 சீக்கிரம். 34 00:02:36,240 --> 00:02:38,075 மொஸாசு, உன் தொப்பி எங்கே? 35 00:02:38,075 --> 00:02:39,576 ஏற்கனவே அதை பேக் செய்துவிட்டேன்! 36 00:03:12,401 --> 00:03:14,319 சீக்கிரம், வண்டியில் ஏறுங்கள். 37 00:03:17,239 --> 00:03:18,240 சீக்கிரம். 38 00:03:42,014 --> 00:03:42,931 ஜியுன்... 39 00:03:42,931 --> 00:03:45,434 அவளுக்கு யாருமில்லை. 40 00:03:45,434 --> 00:03:48,604 அதற்கு வாய்ப்பில்லை. இப்போது காரை நிறுத்த முடியாது. 41 00:03:48,604 --> 00:03:50,397 இல்லையென்றால், நம்மால் நகரத்தைவிட்டு போக முடியாது. 42 00:03:54,067 --> 00:03:57,237 அவளும் குழந்தைகளும் ஏற்கனவே பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். 43 00:03:57,738 --> 00:03:59,031 நாம் அவளைத் திரும்ப பார்ப்போம். 44 00:04:00,574 --> 00:04:02,451 (ஜப்பானிய மொழியில்) வாளிகளை நிரப்புங்கள்! 45 00:04:15,547 --> 00:04:19,259 ஏறுங்கள்! சீக்கிரம்! கூரையை மூடுங்கள்! 46 00:04:24,806 --> 00:04:28,227 எங்களையும் ஏற்றிக்கொள்ளுங்கள்! 47 00:04:28,227 --> 00:04:30,479 எங்களுக்கு கருணை காட்டுங்கள்! 48 00:04:30,479 --> 00:04:33,190 என் மகள்! உடல் நலமில்லாமல் இருக்கிறாள்! 49 00:04:35,192 --> 00:04:36,568 எங்களையும் ஏற்றிக்கொள்ளுங்கள்! 50 00:06:32,392 --> 00:06:34,269 எழுந்துவிட்டாய். 51 00:06:35,521 --> 00:06:36,522 நாம் வந்துவிட்டோம். 52 00:07:24,361 --> 00:07:25,779 மொஸாசு, கவனம் இருக்கட்டும். 53 00:07:37,165 --> 00:07:40,210 சுன்ஜா, நாம் நிஜமாகவே இங்கே இருக்க வேண்டுமா? 54 00:07:40,210 --> 00:07:41,503 அதுதான் நடக்கிறதா? 55 00:07:42,629 --> 00:07:45,048 இந்த இடத்தை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்த மற்ற சிலரை அழைத்திருக்கிறேன். 56 00:07:45,048 --> 00:07:47,092 அவர்கள் தேவையான பொருட்களை கொண்டு வருவார்கள். 57 00:07:47,092 --> 00:07:48,427 போர்வைகளையும் அது போன்றவைகளையும். 58 00:07:48,427 --> 00:07:50,679 ஆனால் இது அழுக்கான தரை. 59 00:07:51,305 --> 00:07:52,514 சமையல்கட்டு இல்லை. 60 00:07:52,514 --> 00:07:54,683 நாங்கள் எப்போது வீடு திரும்ப முடியும்? 61 00:07:54,683 --> 00:07:56,560 போர் முதலில் முடிவுக்கு வர வேண்டும். 62 00:07:57,603 --> 00:07:59,646 உங்கள் வீடு இன்னமும் இருக்குமா என்பது சந்தேகம்தான். 63 00:07:59,646 --> 00:08:02,024 கிம் சாங்கோவையும் உங்களுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டேன். 64 00:08:04,401 --> 00:08:06,028 அதற்கு வாய்ப்பே இல்லை. 65 00:08:06,695 --> 00:08:08,405 அவர் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர். 66 00:08:08,405 --> 00:08:11,325 சுன்ஜா, யோசெப் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ஒருபோதும். 67 00:08:11,325 --> 00:08:12,659 இவர் சொல்வது சரிதான். 68 00:08:12,659 --> 00:08:15,245 எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவருடன் நாங்கள் எப்படி வசிக்க முடியும்? 69 00:08:15,245 --> 00:08:16,955 இது போல அபத்தமாக பேசாதே. 70 00:08:17,539 --> 00:08:19,208 இது நகரம் என்று நினைக்கிறாயா? 71 00:08:19,208 --> 00:08:20,751 நீ பிள்ளைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். 72 00:08:20,751 --> 00:08:23,003 நான் கிராமப்புறத்தில் வளர்ந்தவள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். 73 00:08:23,003 --> 00:08:25,214 - நானும்தான். - உரிய மரியாதையுடன் சொல்கிறேன், 74 00:08:25,214 --> 00:08:27,132 உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேலைக்காரர்கள் இருப்பார்கள். 75 00:08:28,008 --> 00:08:29,259 அதோடு நீங்கள்... 76 00:08:29,259 --> 00:08:31,720 கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நீங்கள் கிராமத்தில் வசிக்கவில்லை. 77 00:08:32,554 --> 00:08:34,306 இது போன்ற நேரங்களில், மக்கள் மாறுவார்கள். 78 00:08:34,306 --> 00:08:37,392 விரக்தியில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. 79 00:08:38,184 --> 00:08:39,311 நான் சொல்வதைக் கேளுங்கள். 80 00:08:40,854 --> 00:08:43,190 அவன் இங்கே தங்கட்டும். நான் அவனை நம்புகிறேன். 81 00:08:45,651 --> 00:08:46,860 செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 82 00:08:49,947 --> 00:08:51,865 நோவா, காரிலிருந்து பொருட்களை இறக்க உதவி செய். 83 00:08:51,865 --> 00:08:55,327 கியுங்கீ, இது நாம் எதிர்பார்த்தது போல இல்லை என்பது எனக்குத் தெரியும்... 84 00:08:55,327 --> 00:08:57,079 இந்த விஷயத்தில் நான் சொல்வதைக் கேள். 85 00:08:57,829 --> 00:09:00,123 நான் வறுமையை நினைத்து பயப்படவில்லை. நான் அதை சமாளித்துவிடுவேன். 86 00:09:00,123 --> 00:09:02,376 கடினமாக உழைக்கவும் நான் பயப்படவில்லை. 87 00:09:02,376 --> 00:09:03,877 நான் உனக்கு உறுதியளிக்கிறேன். 88 00:09:08,423 --> 00:09:09,800 ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது... 89 00:09:10,717 --> 00:09:12,719 நான் விலங்கைவிட சிறந்தவள் இல்லை என்று தெரியவருவது... 90 00:09:15,055 --> 00:09:16,849 யோசெப் எங்கோ இருக்கும்போது... 91 00:09:30,571 --> 00:09:32,823 நிஜமாகவே போக வேறு இடம் இல்லையா? 92 00:09:32,823 --> 00:09:33,907 இல்லை. 93 00:09:34,616 --> 00:09:36,660 நம்மை போன்ற கொரியர்களுக்கு இல்லை. 94 00:09:38,161 --> 00:09:40,873 என்னால் முடிந்ததை செய்து உங்களுக்கு அதை சௌகரியமாக்கப் பார்க்கிறேன். 95 00:09:41,456 --> 00:09:42,875 எனக்கு அது வேண்டாம். 96 00:09:42,875 --> 00:09:44,710 நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்வதையும் நான் விரும்பவில்லை. 97 00:09:45,794 --> 00:09:48,088 நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருந்தாலும், 98 00:09:49,631 --> 00:09:51,425 இதற்கு மேல் உங்களிடமிருந்து எதுவும் வேண்டாம். 99 00:09:52,384 --> 00:09:56,346 என் உதவியை ஏற்றுக்கொள்வதை உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையா? 100 00:09:58,098 --> 00:10:00,267 - உங்கள் இருவருக்கும் உதவ... - அது என்னை பயமுறுத்துகிறது. 101 00:10:03,228 --> 00:10:05,147 நீ கவலைப்படத் தேவையில்லை. அவனுக்குத் தெரிய வராது. 102 00:10:05,147 --> 00:10:06,440 அவன் புத்திசாலி பையன். 103 00:10:07,441 --> 00:10:09,860 - அவன் எதையாவது உணர்வான்... - அவன் ஒருபோதும் சந்தேகிக்க மாட்டான். 104 00:10:09,860 --> 00:10:11,570 அது அவனால் கற்பனை செய்ய முடியாத ஒன்று. 105 00:10:11,570 --> 00:10:12,863 அது ஆபத்தானது. 106 00:10:12,863 --> 00:10:15,490 என் மகனுக்கு ஆபத்து ஏற்படும்படி ஏதாவது செய்வேன் என்று நினைக்கிறாயா? 107 00:10:18,702 --> 00:10:20,454 எனக்கு எப்படி தெரியும்? 108 00:10:21,455 --> 00:10:23,790 நமக்கு ஒருவரையொருவர் நன்றாக தெரியும் என்பது போல பேசுகிறீர்கள். 109 00:10:25,667 --> 00:10:26,752 நமக்குத் தெரியாது. 110 00:10:28,420 --> 00:10:29,588 அது உண்மையில்லை. 111 00:10:31,840 --> 00:10:33,675 பதினான்கு வருடங்கள். 112 00:10:34,968 --> 00:10:37,179 நான் அந்த வளைகுடாவில் வாழ்ந்த பெண் இல்லை. 113 00:10:40,766 --> 00:10:42,351 நான் இப்போது... 114 00:10:56,198 --> 00:10:58,158 நான் ஒரு விதவை. 115 00:10:59,409 --> 00:11:00,994 என் அம்மாவைப் போல. 116 00:11:26,228 --> 00:11:27,312 சுன்ஜா. 117 00:12:57,194 --> 00:12:59,446 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 118 00:13:38,527 --> 00:13:40,612 ஜூன் 1945 119 00:13:48,161 --> 00:13:51,081 அது நிஜமா என்று மேற்பார்வையாளரிடம் கேட்க வேண்டும். 120 00:13:51,748 --> 00:13:53,417 அதை விடு. 121 00:13:53,417 --> 00:13:56,336 அவர்களைப் பார்! எவ்வளவு குண்டாக இருக்கிறார்கள். 122 00:13:57,129 --> 00:13:59,715 நம்மைவிட அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது என்பது தெரிந்ததுதான். 123 00:14:02,009 --> 00:14:03,302 அவர்களை கண்டுகொள்ளாதே. 124 00:14:03,302 --> 00:14:06,221 எப்படி முடியும்? அவர்கள் பேசுவதை நிறுத்துவதே இல்லை. 125 00:14:07,681 --> 00:14:10,684 அவர்கள் நிஜமாக என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாம். 126 00:14:10,684 --> 00:14:12,853 அதனால் உனக்கு என்ன பயன்? 127 00:14:15,272 --> 00:14:17,566 நான் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள்தானே? 128 00:14:17,566 --> 00:14:19,401 அந்த வார்த்தைக்காவது அர்த்தம் புரிந்தது. 129 00:14:20,694 --> 00:14:22,029 நாம் ஒரே வேலையைத்தான் செய்கிறோம், 130 00:14:22,029 --> 00:14:24,281 ஆனால் நாம் சோம்பேறியாக இருப்பதைப் போல பேசுகிறார்கள். 131 00:14:24,281 --> 00:14:26,366 இப்படிப் பேசுவதை நீ கேட்பது இது முதல் முறை இல்லை. 132 00:14:26,366 --> 00:14:27,910 ஏன் இப்படி கவலைப்படுகிறாய்? 133 00:14:28,577 --> 00:14:31,079 அழகாக இருப்பவள்தான் என்னை எரிச்சலூட்டுகிறாள். 134 00:14:31,830 --> 00:14:33,415 அவளைப் பார்! 135 00:14:33,415 --> 00:14:35,292 அவள் நம்மைவிட அழகாக இருப்பதாக நினைக்கிறாள். 136 00:14:36,251 --> 00:14:39,296 மற்றவர்களைவிட தான் ஒசத்தி என்று நினைக்க அவள் யார்? 137 00:14:39,838 --> 00:14:42,257 பேசுவதை விட்டுவிட்டு வேலையைப் பார்த்திருந்தால், 138 00:14:42,257 --> 00:14:44,092 இந்நேரம் வேலையை முடித்திருக்கலாம். 139 00:14:44,092 --> 00:14:47,304 பாருங்கள்! எல்லோரும் கூடுதல் வேலை பாருங்கள். 140 00:14:47,304 --> 00:14:49,348 நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல நீ யார்? 141 00:14:50,307 --> 00:14:53,143 நாங்கள் உன்னைப் போன்றவர்களுக்கு வேலை செய்யவில்லை! 142 00:14:57,356 --> 00:14:58,982 அதில் உறுதியாக இருக்கிறாயா? 143 00:15:00,609 --> 00:15:02,653 அங்கே என்ன வெட்டிப் பேச்சு? 144 00:15:03,612 --> 00:15:05,322 வேலையைப் பாருங்கள். 145 00:15:16,792 --> 00:15:18,335 ஏதாவது பிரச்சினையா? 146 00:15:29,346 --> 00:15:30,722 போ! இங்கிருந்து போ! 147 00:15:30,722 --> 00:15:31,890 அது இங்கிருந்து போகிறது! 148 00:15:31,890 --> 00:15:32,975 உதவி செய்! 149 00:15:32,975 --> 00:15:34,852 அது சுதந்திரமாக இருக்க விரும்புகிறது! 150 00:15:34,852 --> 00:15:37,062 ஓடிக்கொண்டே இரு! அவன் உன்னைப் பிடிக்க விடாதே! 151 00:15:41,483 --> 00:15:42,317 சீக்கிரம், ஓடு! 152 00:15:42,317 --> 00:15:45,487 - மொஸாசு, அது ஓடுகிறது! - ஓடிக்கொண்டே இரு! போ! 153 00:15:45,487 --> 00:15:46,572 உதவி! 154 00:15:49,199 --> 00:15:51,451 - எங்களுக்கு உதவுங்கள். - போ! 155 00:15:52,077 --> 00:15:53,579 திரு. கிம், இதோ! 156 00:15:55,581 --> 00:15:56,498 பிடித்துவிட்டேன். 157 00:15:56,498 --> 00:15:59,418 நியாயமே இல்லை. இருவரும் சேர்ந்து அதைப் பிடித்துவிட்டீர்கள். 158 00:15:59,418 --> 00:16:01,003 உனக்கு நன்றி சொல்ல மாட்டேன். 159 00:16:01,003 --> 00:16:02,462 இதை கொண்டு போகிறீர்களா? 160 00:16:07,801 --> 00:16:10,095 இது பள்ளியைவிட மிகவும் ஜாலியாக இருக்கிறது. 161 00:16:10,095 --> 00:16:11,847 நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா? 162 00:16:12,472 --> 00:16:14,516 நாம் திரும்பி போக மாட்டோம் என்று நம்புகிறேன். 163 00:16:15,976 --> 00:16:18,645 போர் நிரந்தரமாக நீடிக்கப் போவதில்லை. 164 00:16:19,438 --> 00:16:23,317 தவிர, இதைத்தான் உன் வாழ்க்கையில் நீ செய்ய விரும்புகிறாயா? 165 00:16:23,817 --> 00:16:26,862 கோழிகளைப் பிடிப்பதும், அவற்றின் கழிவுகளை சுத்தப்படுத்துவதுமா? 166 00:16:27,946 --> 00:16:29,907 எனக்கு அது பரவாயில்லை. 167 00:16:30,908 --> 00:16:35,162 கோ ஹான்சு நம்மை இங்கே கூட்டிவரவில்லை என்றால்? 168 00:16:35,996 --> 00:16:38,373 நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தானே? 169 00:16:38,373 --> 00:16:39,958 ஆனால் அம்மா செய்வது நியாயமில்லை. 170 00:16:39,958 --> 00:16:42,878 திரு. கோவை நம்மிடம் அறிமுகம் செய்வதற்கு அவருக்கு ஏன் இவ்வளவு நாட்கள் ஆனது? 171 00:16:43,629 --> 00:16:47,132 நாம் சாப்பிடக் கூடிய அந்த மிட்டாய்களை நினைத்துப் பார். 172 00:16:47,716 --> 00:16:49,384 காலத்தை வீணடித்துவிட்டார். 173 00:16:56,850 --> 00:16:58,560 ஹலோ. 174 00:17:00,687 --> 00:17:05,233 உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்காது. 175 00:17:06,108 --> 00:17:08,444 அன்று இரவு நான் இங்கே இருந்தேன். 176 00:17:09,655 --> 00:17:10,989 நினைவிருக்கிறது. 177 00:17:10,989 --> 00:17:13,659 நான் வருத்தப்பட்டேன். 178 00:17:13,659 --> 00:17:15,368 உங்கள் பேரன், 179 00:17:16,453 --> 00:17:17,746 அவன் எப்படி இருக்கிறான்? 180 00:17:22,125 --> 00:17:25,921 அன்று இரவு அவன் அப்படி பேசியிருக்கக் கூடாது. 181 00:17:25,921 --> 00:17:28,590 பொதுவாக அப்படி நடந்துகொள்ள மாட்டான். 182 00:17:29,258 --> 00:17:32,469 இல்லை, நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 183 00:17:34,388 --> 00:17:38,058 கவுண்டரில் இருந்தவன், மரியாதையாக நடக்கவில்லை. 184 00:17:38,058 --> 00:17:42,312 அதை கேள்வி கேட்க உங்கள் பேரனுக்கு தைரியம் இருந்தது. 185 00:17:47,025 --> 00:17:48,902 நான் உங்களை சங்கடப்படுத்துகிறேன் என்பது புரிகிறது. 186 00:17:49,820 --> 00:17:51,613 அது என்னுடைய எண்ணம் இல்லை. 187 00:17:52,197 --> 00:17:53,198 நான் மன்னிப்பு கேட்கிறேன். 188 00:18:35,032 --> 00:18:36,658 சாலமன், உனக்கு என்ன வேண்டும்? 189 00:18:41,246 --> 00:18:43,498 நில உரிமையாளர், அவர் நிலத்தை விற்க விரும்புகிறார். 190 00:18:44,750 --> 00:18:46,126 இந்த முறை உண்மையாகவே. 191 00:18:46,919 --> 00:18:49,630 அட, நீ மிகவும் விரக்தியில் இருக்க வேண்டும். 192 00:18:50,714 --> 00:18:52,090 நீ விரக்தியில்தான் இருக்கிறாய். 193 00:18:52,090 --> 00:18:54,885 நீ நிதி திரட்டுவதைப் பற்றி கேள்விப்பட்டேன். 194 00:18:55,469 --> 00:18:57,095 அது உனக்கு நடக்காமல் போனதற்கு வருந்துகிறேன். 195 00:18:59,348 --> 00:19:02,726 அபே. அவர்தான் இலக்கு. 196 00:19:09,566 --> 00:19:11,443 வெளியே போ. நீ மாறவே இல்லை. 197 00:19:12,694 --> 00:19:13,737 ஆனால் நான் மாறிவிட்டேன். 198 00:19:15,155 --> 00:19:17,991 மூன்று மாதங்களை தள்ளவே என் வங்கிக்கணக்கில் பணம் உள்ள நிலையில், 199 00:19:17,991 --> 00:19:20,702 நீங்கள் இழக்க எதுவும் இல்லாத ஒருவரைப் பார்க்கிறீர்கள் என்று சொல்லலாம். 200 00:19:20,702 --> 00:19:22,454 இல்லையா? ஆனால் உனக்கு என் உதவி தேவை, சரியா? 201 00:19:23,038 --> 00:19:24,456 - ஆம். - சரி. 202 00:19:24,456 --> 00:19:25,791 நான் ஏன் உதவ வேண்டும்? 203 00:19:29,419 --> 00:19:31,046 ஏனென்றால் நீங்கள் இங்கே செய்வது, 204 00:19:31,964 --> 00:19:34,132 கடினமாக உழைப்பதும், 205 00:19:34,132 --> 00:19:36,260 ஒரு அலுவலகத்தின் சாதாரண பணியாளர் போல இருப்பதும்தான், 206 00:19:37,928 --> 00:19:40,097 தொடர்ந்து எட்டு வருடங்களாக உயர் பதவியில் ஆதிக்கம் செலுத்தியது 207 00:19:40,097 --> 00:19:41,557 அந்த டாம் ஆண்ட்ரூஸ் இல்லை. 208 00:19:44,393 --> 00:19:46,937 பிறகு மீண்டும், நீங்கள் அவர்களுடைய கவனத்தை பெறவே இல்லை, சரிதானே? 209 00:19:46,937 --> 00:19:48,856 சாலமன், நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 210 00:19:48,856 --> 00:19:51,400 டாம், நீங்கள் இங்கே இருப்பதற்கான நிஜ காரணத்தைப் பற்றி பேசுகிறேன். 211 00:19:53,569 --> 00:19:55,112 எதற்காக உங்களை நியூ யார்க்கிலிருந்து அனுப்பினார்கள் என்று. 212 00:20:09,751 --> 00:20:12,838 வாடிக்கையாளர்களின் சொத்து விஷயத்தில் அலட்சியமாக நான் இருந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய்தானே? 213 00:20:21,889 --> 00:20:24,516 அதைப் பற்றி உன்னிடம் நான் விளக்கத் தேவையில்லை, 214 00:20:24,516 --> 00:20:30,230 ஆனால் ஒருவன்... எனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுத்தான். 215 00:20:31,481 --> 00:20:35,569 அவன் ஈடுபடும் எல்லாவற்றிலும் வெற்றி பெறும் திறமை அவனிடம் இல்லை என்று சொல்லும் தைரியம் இருந்ததால். 216 00:20:35,569 --> 00:20:37,487 பிறகு எனக்கு எதிராக அவன் மூர்க்கமாக நடந்துகொண்டான், 217 00:20:37,487 --> 00:20:41,825 அவன் என்னுடைய ஒவ்வொரு வியாபாரத்தையும் ஜாக்கிரதையாக ஆய்வு செய்தான். 218 00:20:43,327 --> 00:20:44,453 யார் செய்தார்கள் தெரியுமா? 219 00:20:45,787 --> 00:20:46,955 பால்ட்வின் யூனைடெட். 220 00:20:46,955 --> 00:20:49,291 யார் அது? அது முக்கியமில்லை. 221 00:20:49,291 --> 00:20:50,542 அது முக்கியமில்லை, சாலமன். 222 00:20:50,542 --> 00:20:52,753 படிவங்களில் முறைகேடுகள் இருந்தன. 223 00:20:52,753 --> 00:20:54,463 நான் அவற்றை நிரப்பினேன் என்பதால் இல்லை. 224 00:20:54,463 --> 00:20:57,633 கண்டிப்பாக இல்லை. அது உன்னைப் போல ஒரு வீணாய்ப் போன ஆய்வாளன் செய்தது. 225 00:20:57,633 --> 00:20:59,259 ஆனால் நிறுவனம் நீங்கள் தவறு செய்யவில்லை என்றது. 226 00:20:59,259 --> 00:21:00,385 கடைசியாக, ஆம். 227 00:21:01,094 --> 00:21:02,304 இருந்தாலும் என்னை துரத்திவிட்டார்கள். 228 00:21:04,556 --> 00:21:09,228 ஹலோ, டோக்கியோ, என் சிறை தண்டனை. 229 00:21:14,191 --> 00:21:15,734 டாம், உங்களுக்கு என்ன வேண்டும்? 230 00:21:21,073 --> 00:21:24,034 நான் என் பிள்ளைகளை வருடத்துக்கு ஒரு முறைக்கு மேல் பார்க்க வேண்டும். 231 00:21:26,203 --> 00:21:28,664 அவர்கள் என்னை வெறுக்காமல் இருந்தால் போதும். 232 00:21:28,664 --> 00:21:31,166 இல்லை, நிஜமாகவே எனக்கு என்ன வேண்டுமென்றால் 233 00:21:31,166 --> 00:21:35,671 என் முன்னாள் மனைவி ஒரு பணக்கார, புதிய கணவனை கட்டிக்கொண்டு, 234 00:21:35,671 --> 00:21:37,297 என்னைத் தனியாக விட்டால் போதும். 235 00:21:37,297 --> 00:21:38,924 அது மிகவும் நன்றாக இருக்கும். 236 00:21:45,597 --> 00:21:47,474 இல்லை, நீங்கள் நிஜமாகவே ஆசைப்படுவது அதற்கு இல்லை, டாம். 237 00:21:49,768 --> 00:21:50,978 உங்களுக்கு வீட்டிற்குப் போக வேண்டும். 238 00:21:51,603 --> 00:21:52,813 உண்மையில் அதுதான் இல்லையா? 239 00:22:04,658 --> 00:22:08,954 அடுத்த ஆண்டு இதே நாள் நீங்கள் வீட்டில் இருக்கலாம் என்று நான் சொன்னால்? 240 00:22:09,997 --> 00:22:11,832 இந்த நிறுவனத்திலிருந்து விலகி, 241 00:22:11,832 --> 00:22:14,585 உங்கள் சொந்த பணத்தில் அடுத்த நிறுவனத்தை அமைத்துக்கொண்டு, 242 00:22:14,585 --> 00:22:18,589 டாம் ஆண்ட்ரூஸ் தோற்றவன் இல்லை என்று உலகத்துக்குக் காட்டலாம். 243 00:22:23,468 --> 00:22:25,387 நிஜமாகத்தான் சொல்கிறேன். அது நடக்கலாம். 244 00:22:27,723 --> 00:22:29,558 ஆனால் அதில் நிபந்தனைகள் இருக்கின்றன. 245 00:22:53,498 --> 00:22:56,460 அம்மா! அவர் வருவார் என்று தெரியும்! 246 00:22:56,460 --> 00:22:57,711 மொஸாசு! 247 00:22:58,629 --> 00:23:00,297 ஹேய், பொறு! 248 00:23:06,470 --> 00:23:07,804 திரு. கோ! 249 00:23:12,976 --> 00:23:14,436 அம்மா, பாருங்கள்! 250 00:23:15,812 --> 00:23:17,814 இசையை நான் எவ்வளவு மிஸ் செய்தேன் என்பதை உணரவில்லை. 251 00:23:18,482 --> 00:23:20,234 சுன்ஜா, அதைக் கேள். 252 00:23:21,109 --> 00:23:23,362 இது ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 253 00:23:24,321 --> 00:23:25,906 வேறு என்ன கொண்டுவந்தீர்கள்? 254 00:23:25,906 --> 00:23:27,991 - மொஸாசு! - அங்கே. 255 00:23:29,117 --> 00:23:30,369 ஆஹா! 256 00:23:30,369 --> 00:23:33,038 பார், நோவா! அவர் கொண்டு வருவார் என்று சொன்னேனே. 257 00:23:33,038 --> 00:23:34,414 எனக்குப் பிடித்தது. 258 00:23:34,414 --> 00:23:36,333 நோவா, இவை உனக்கு. 259 00:23:37,042 --> 00:23:39,336 நீ அவற்றைப் படிக்க வேண்டும். கவனமாக. 260 00:23:39,336 --> 00:23:41,964 இவற்றை உங்களுக்காக மொழிபெயர்க்க வேண்டுமா? 261 00:23:41,964 --> 00:23:44,800 எனக்கு அவற்றைப் படிக்கத் தெரியும். உன்னால் முடியுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 262 00:23:44,800 --> 00:23:46,760 நான் மொழியைப் பற்றி பேசவில்லை, 263 00:23:46,760 --> 00:23:49,596 ஆனால் அதில் சொல்லப்பட்டவை, சொல்லப்படாதவை எல்லாம். 264 00:23:49,596 --> 00:23:53,892 வேறு விதமாக சொன்னால், நீ இல்லாததை படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 265 00:23:55,185 --> 00:23:57,771 ஆஹா, இங்கே நிறைய இருக்கிறது. 266 00:24:01,024 --> 00:24:03,068 இது என்ன? 267 00:24:03,652 --> 00:24:05,112 அதை கவனமாக எடு. 268 00:24:05,863 --> 00:24:07,072 நீ காத்தாடி விட்டிருக்கிறாயா? 269 00:24:07,072 --> 00:24:08,699 இல்லை, ஒருபோதும் இல்லை. 270 00:24:10,576 --> 00:24:12,661 நீங்கள் இருவரும் எப்படி விடுகிறீர்கள் என்று பார்ப்போமா? 271 00:24:12,661 --> 00:24:13,954 ஆம்! 272 00:24:15,497 --> 00:24:17,833 - போகலாம். - ஆற்றங்கரைக்குப் போவோம். 273 00:24:17,833 --> 00:24:19,543 அது பொருத்தமாக இருக்கும்! 274 00:24:19,543 --> 00:24:20,627 வாருங்கள்! 275 00:24:22,421 --> 00:24:23,797 என்ன செய்கிறீர்கள்? 276 00:24:25,549 --> 00:24:29,344 சுன்ஜா, ஒவ்வொரு பையனுக்கும் காத்தாடி பறக்கவிட தெரிந்திருக்க வேண்டும். 277 00:24:36,351 --> 00:24:37,519 பிள்ளைகளா. 278 00:24:41,148 --> 00:24:43,066 நீ கவனமாக இருக்க வேண்டும். 279 00:24:44,193 --> 00:24:47,738 இந்த அலுவலக அறையில் இருந்தவன் நன்றாக வேலை செய்யவில்லை என்று கேள்விப்பட்டேன். 280 00:24:47,738 --> 00:24:51,783 அவன் தோல்விக்கு அலுவலகம்தான் காரணம் என்று நினைக்கிறாயா? 281 00:24:51,783 --> 00:24:53,493 அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 282 00:24:54,119 --> 00:24:55,370 ஆனால் அவன் இதற்கு கொஞ்சம்... 283 00:24:56,413 --> 00:24:59,082 அதிகப்படியானவன் என்று கேள்விப்பட்டேன். 284 00:25:01,460 --> 00:25:04,421 மிகவும் திமிரானவன் கூட. 285 00:25:05,130 --> 00:25:09,510 அவன் தன்னை அமெரிக்கக்காரனாக நினைத்தான் என்று கேள்விப்பட்டேன். 286 00:25:11,178 --> 00:25:13,096 அதுதான் காரணமாக இருக்கும். 287 00:25:16,934 --> 00:25:18,602 எதற்கு இங்கே வந்தாய்? 288 00:25:18,602 --> 00:25:20,896 நான் டாமிடம் நல்ல செய்தியைச் சொல்ல வந்தேன். 289 00:25:21,730 --> 00:25:24,191 நில உரிமையாளர் விற்க முடிவு செய்திருக்கிறார். 290 00:25:26,360 --> 00:25:28,487 உனக்கு அதில் பங்கு இருக்கும் என்று நினைக்கிறேன். 291 00:25:29,404 --> 00:25:30,656 இருக்கிறது. 292 00:25:30,656 --> 00:25:33,158 - உன் பங்கு என்ன? - ஐந்து சதவீதம். 293 00:25:36,537 --> 00:25:37,579 அப்படியா. 294 00:25:39,581 --> 00:25:40,874 வாழ்த்துகள். 295 00:25:40,874 --> 00:25:42,000 நன்றி. 296 00:25:48,549 --> 00:25:49,883 வேறு ஏதாவது இருக்கிறதா? 297 00:25:53,887 --> 00:25:55,305 நீ தெரிந்துகொள்ள வேண்டும்... 298 00:25:57,224 --> 00:25:59,810 நீதான் இங்கே உயர்ந்த பதவியில் இருந்திருக்க வேண்டும். 299 00:26:05,357 --> 00:26:08,443 நீ இங்குள்ள எல்லோரையும் விட கடினமாக உழைக்கிறாய். 300 00:26:08,443 --> 00:26:10,487 நீ புத்திசாலி கூட. 301 00:26:11,947 --> 00:26:15,701 இதை தெரிந்த ஒருவருக்கு பைத்தியம் பிடிக்க வேண்டும். 302 00:26:17,244 --> 00:26:21,832 ஏனென்றால் அந்த நாள் வரவே வராது, 303 00:26:23,041 --> 00:26:24,918 அது நம் இருவருக்கும் தெரியும். 304 00:26:30,340 --> 00:26:32,885 அதற்கு நீ எவ்வளவுதான் தகுதியானவளாக இருந்தாலும் சரி. 305 00:26:35,971 --> 00:26:37,472 நான் அதற்காக வருந்துகிறேன். 306 00:26:49,860 --> 00:26:51,153 நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன். 307 00:26:52,321 --> 00:26:53,572 மனதார சொல்கிறேன். 308 00:27:05,125 --> 00:27:06,543 ஒரு நொடி. 309 00:27:38,116 --> 00:27:39,826 இரவு உணவு சாப்பிட விரும்புகிறாயா? 310 00:27:41,495 --> 00:27:44,373 டேட் போலவா? 311 00:27:46,291 --> 00:27:48,544 அமெரிக்கர்கள் அப்படித்தான் செய்வார்களா? 312 00:27:48,544 --> 00:27:51,797 எல்லாவற்றையும் தெளிவாக? 313 00:27:51,797 --> 00:27:56,301 இல்லை. முதலில் குளிக்க வேண்டுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 314 00:27:59,680 --> 00:28:00,973 தயவுசெய்து குளி. 315 00:28:04,768 --> 00:28:06,103 ஒரு நிபந்தனை. 316 00:28:06,770 --> 00:28:07,771 அது என்ன? 317 00:28:09,064 --> 00:28:10,399 இடத்தை நான் தேர்வு செய்வேன். 318 00:28:59,573 --> 00:29:00,991 இதோ. 319 00:29:04,119 --> 00:29:06,955 இன்று அவை எல்லா உணவையும் சாப்பிடுகின்றன. 320 00:29:07,748 --> 00:29:09,875 அவை பல நாட்களாக சாப்பிடவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். 321 00:29:10,375 --> 00:29:15,005 அது நிஜமில்லை. நேற்றுதான் அவற்றுக்கு வயிறார உணவளித்தேன். 322 00:29:16,507 --> 00:29:18,884 அப்படியென்றால் தினமும் இங்கே வருவீர்களா? 323 00:29:19,426 --> 00:29:21,011 வார இறுதி நாட்கள் தவிர. 324 00:29:22,137 --> 00:29:23,972 வார இறுதி நாட்களில் குழந்தைகள் அதிகமாக இருப்பார்கள். 325 00:29:25,557 --> 00:29:27,518 உங்களுக்குக் குழந்தைகளைப் பிடிக்காதா? 326 00:29:27,518 --> 00:29:29,144 இல்லை, எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். 327 00:29:29,144 --> 00:29:31,021 எல்லோரையும் இல்லை. 328 00:29:31,897 --> 00:29:34,858 ஆனால் இவை குழந்தைகளைக் கண்டு பயப்படும். 329 00:29:37,653 --> 00:29:39,154 கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள். 330 00:29:46,537 --> 00:29:48,497 ஓ, எனக்கு அதைப் பிடிக்கவில்லை. 331 00:29:48,497 --> 00:29:52,042 அவன் எல்லா உணவையும் திருடுகிறான். 332 00:29:52,042 --> 00:29:54,002 அதை ஏன் ஆண் என்று நினைக்கிறீர்கள்? 333 00:29:54,002 --> 00:29:55,963 அது பெண். 334 00:29:57,673 --> 00:29:58,799 அப்படியா? 335 00:29:59,800 --> 00:30:02,678 ஆனால் அதனிடம் கவனமாக இருங்கள். 336 00:30:02,678 --> 00:30:06,181 அது சாப்பிட ஆரம்பித்தவுடன், எப்போது நிறுத்துவது என்று அதற்கு தெரியாது. 337 00:30:07,766 --> 00:30:10,561 இகைனோ வார்டில் இருக்கும் பன்றிகளைவிட மோசமானவை. 338 00:30:12,271 --> 00:30:14,648 அங்கேதான் வளர்ந்தீர்களா? 339 00:30:15,148 --> 00:30:16,859 இல்லை. 340 00:30:17,818 --> 00:30:20,028 நான் யோங்டோவில் பிறந்தேன். 341 00:30:21,154 --> 00:30:23,365 யோங்டோ? அது எங்கே இருக்கிறது? 342 00:30:28,120 --> 00:30:29,872 அது இங்கே இல்லை. 343 00:30:33,083 --> 00:30:35,419 நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 344 00:30:35,419 --> 00:30:37,087 நான் போக வேண்டும். 345 00:30:42,092 --> 00:30:45,596 என் பேரன். 346 00:30:45,596 --> 00:30:46,763 அவன் நல்ல பையன். 347 00:30:48,098 --> 00:30:51,643 ஆனால் இப்போது கஷ்டப்படுகிறான். 348 00:30:54,980 --> 00:30:57,191 இது கஷ்ட காலமாக இருக்க வேண்டும். 349 00:30:59,443 --> 00:31:02,362 எளிதானது இல்லை. 350 00:31:03,405 --> 00:31:08,202 அவனுக்கு, வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் என்று நம்பினேன். 351 00:31:10,078 --> 00:31:12,539 நான் அவனுடைய வயதில் இருந்தபோது, 352 00:31:13,332 --> 00:31:18,086 நான் ரேஷன் வரிசையில் நின்று, விமானத் தாக்குதல் எச்சரிக்கை பயிற்சி பெற்றேன். 353 00:31:18,086 --> 00:31:21,882 அமெரிக்கர்கள் வந்து எங்களை படுகொலை செய்வார்கள் என்று நினைத்தோம். 354 00:31:26,762 --> 00:31:31,767 பைத்தியம் பிடித்த உலகில் வாழாததற்கு 355 00:31:31,767 --> 00:31:34,102 நீங்கள் அவனைக் குறை சொல்ல முடியுமா? 356 00:31:35,479 --> 00:31:40,567 ஆனால் அதற்கு வாழ்க்கை அவனுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லையா? 357 00:31:41,944 --> 00:31:42,945 இல்லை. 358 00:31:43,987 --> 00:31:47,991 காலங்கள் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை எளிதானது இல்லை. 359 00:31:48,700 --> 00:31:50,452 நாம் கடவுள்களாக இல்லாவிட்டால். 360 00:31:58,043 --> 00:32:00,462 நீங்கள் எல்லோரும் பறந்து போகும் நேரம்! 361 00:32:20,482 --> 00:32:21,942 இன்னும் உயரமாக போ! 362 00:32:21,942 --> 00:32:23,235 போ! 363 00:32:24,444 --> 00:32:25,904 வேகமாக! 364 00:32:27,531 --> 00:32:29,283 அதை இன்னும் உயரமாக பறக்கவிடு. 365 00:32:29,283 --> 00:32:30,742 ஓடிக்கொண்டே இரு! 366 00:32:31,827 --> 00:32:34,538 - அதை கீழே வர விடாதே! - வேகமாக! 367 00:32:34,538 --> 00:32:37,958 இன்னும்! இதோ! 368 00:32:39,418 --> 00:32:42,504 மொஸாசு, கவனமாக இரு, விழுந்துவிடாதே! 369 00:32:42,504 --> 00:32:45,841 ஜாலியாக இருக்கிறது! பொறு! 370 00:33:04,526 --> 00:33:06,028 நோவா! மொஸாசு! 371 00:33:07,362 --> 00:33:08,572 நோவா! 372 00:33:13,368 --> 00:33:14,703 அம்மா! 373 00:33:14,703 --> 00:33:17,789 - மொஸாசு, என்னிடம் வா. - அம்மா. 374 00:33:38,018 --> 00:33:39,978 அவை வடக்கு நோக்கி போகின்றன. 375 00:33:39,978 --> 00:33:43,774 அவற்றுக்கு நாகசாகி இலக்காக இருந்தால், அவை எதிர் திசையில் சென்றிருக்கும். 376 00:33:46,652 --> 00:33:48,445 அந்த விமானங்கள் உங்கள் கணவரை நோக்கி போகவில்லை. 377 00:33:55,744 --> 00:33:57,871 - கியுங்கீ! - நான் அவரை போக விடுவேன். 378 00:34:17,683 --> 00:34:19,935 இங்கே. எல்லாம் முடிந்தது. 379 00:34:22,771 --> 00:34:27,693 இப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்க என் மைத்துனர் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். 380 00:34:28,819 --> 00:34:30,904 எல்லோரும் அவர் மீது பொறாமைப்பட வேண்டும். 381 00:34:31,572 --> 00:34:32,906 அப்படித்தான் நம்புகிறேன். 382 00:34:33,489 --> 00:34:34,949 இது பொருந்தும் என்று நம்புகிறேன். 383 00:34:36,827 --> 00:34:38,328 நான் போய் இதை கொடுத்துவிட்டு விடுகிறேன். 384 00:34:38,328 --> 00:34:40,621 நேரமாகிவிட்டது. காலையில் போங்கள். 385 00:34:40,621 --> 00:34:43,083 நாளை அங்கே போவதாக மேற்பார்வையாளர் சொன்னார். 386 00:34:43,958 --> 00:34:46,210 இவற்றை சீக்கிரம் அனுப்ப விரும்புகிறேன். 387 00:34:47,379 --> 00:34:49,755 தவிர, இன்றிரவு எனக்கு நல்ல தூக்கம் கிடைக்குமா என்று தெரியவில்லை. 388 00:34:53,969 --> 00:34:55,094 கியுங்கீ, 389 00:34:56,889 --> 00:34:59,391 உறுதியாக அவர் நன்றாக இருப்பார். 390 00:35:02,728 --> 00:35:03,937 எனக்குத் தெரியும். 391 00:35:07,441 --> 00:35:08,859 ஆனால் நாளை? 392 00:35:10,152 --> 00:35:11,528 அல்லது அதற்கு அடுத்த நாள்? 393 00:35:16,867 --> 00:35:20,037 அவர் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார் என்று நீ உறுதியாக சொல்ல முடியாது. 394 00:35:20,037 --> 00:35:21,330 அதற்கு வாய்ப்பில்லை. 395 00:35:23,540 --> 00:35:25,667 நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்... 396 00:35:26,418 --> 00:35:28,587 அவர் தனியாக இருப்பதை நினைத்துப் பார்க்க... 397 00:35:30,464 --> 00:35:32,132 அது நியாயமாக தெரியவில்லை. 398 00:35:51,527 --> 00:35:52,528 நோவா. 399 00:35:54,613 --> 00:35:56,240 போதும். 400 00:35:56,240 --> 00:35:57,407 படுக்கைக்குப் போ. 401 00:36:07,918 --> 00:36:09,086 நீ... 402 00:36:11,797 --> 00:36:13,131 உன் அப்பா, 403 00:36:14,383 --> 00:36:16,051 நீ அவரை மறந்துவிடக்கூடாது. 404 00:36:16,927 --> 00:36:18,178 அது உனக்கு தெரியும்தானே? 405 00:36:20,430 --> 00:36:22,474 என்னால் எப்படி முடியும்? 406 00:36:42,369 --> 00:36:46,081 எனக்குத் தெரியும். ஒரு திருடன் இருக்கிறான்! 407 00:36:47,416 --> 00:36:49,585 யாரோ முட்டைகளை திருடுகிறார்கள்! 408 00:36:51,128 --> 00:36:52,671 என்ன? 409 00:36:52,671 --> 00:36:54,298 கடந்த சில நாட்களாக, 410 00:36:54,298 --> 00:36:56,592 முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. 411 00:36:56,592 --> 00:36:59,011 நான் மேற்பார்வையாளரிடம் சொன்னபோது, 412 00:36:59,011 --> 00:37:01,013 நான் சொல்வது சரிதான் என்றார். 413 00:37:01,722 --> 00:37:03,932 அவர் மிகவும் கோபப்பட்டார். 414 00:37:04,558 --> 00:37:07,853 ஆனால் நாம் திருடனைப் பிடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தேன். 415 00:37:07,853 --> 00:37:10,022 அவரிடம் ஏன் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தாய்? 416 00:37:10,022 --> 00:37:11,481 நீ எப்படி அவனைப் பிடிப்பாய்? 417 00:37:13,609 --> 00:37:15,986 ஒரு பொறி வைக்கலாம் என்று நினைத்தேன். 418 00:37:16,945 --> 00:37:18,864 - பொறியா? - அது என்ன? 419 00:37:18,864 --> 00:37:20,657 அது வேலை செய்யாது. 420 00:37:20,657 --> 00:37:24,661 நிஜமாகவே அந்தத் திருடனை பிடிக்க வேண்டும் என்றால், மறைந்திருந்து கண்காணிக்க வேண்டும். 421 00:37:24,661 --> 00:37:26,496 அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும். 422 00:37:26,496 --> 00:37:27,706 அதுதான் சரி! 423 00:37:27,706 --> 00:37:30,209 அம்மா, நான் அதைச் செய்யலாமா? தயவுசெய்து. 424 00:37:31,460 --> 00:37:34,755 அது பாதுகாப்பானதா? யாராவது ஆபத்தாக இருந்தால்? 425 00:37:34,755 --> 00:37:37,966 இரண்டு பையன்களுக்கும் எனக்கும் சமாளிக்கும் பலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். 426 00:37:37,966 --> 00:37:39,134 அது யாராக இருந்தாலும் சரி. 427 00:37:39,134 --> 00:37:42,554 உடனடியாக அவனைப் பிடித்து, இதை முளையிலேயே கிள்ளுவது நல்லது. 428 00:37:43,305 --> 00:37:45,933 அம்மா, அவருக்கு அதெல்லாம் தெரியும். 429 00:37:45,933 --> 00:37:47,809 அவரைப் பார்த்தாலே தெரியும். 430 00:37:48,560 --> 00:37:51,104 - உறுதியாக அது பரவாயில்லை என்று... - பிறகு அதுதான் திட்டம். 431 00:37:51,104 --> 00:37:52,731 போய் உன் அண்ணனிடம் சொல். 432 00:37:52,731 --> 00:37:56,568 இரவு உணவிற்குப் பிறகு, நாம் மறைந்திருந்து கண்காணிக்க சரியான இடத்தைக் கண்டுபிடிப்போம். 433 00:37:56,568 --> 00:37:59,446 - அது எப்படி? - எனக்கு இந்த திட்டம் பிடித்திருக்கிறது. 434 00:37:59,446 --> 00:38:01,114 நான் என் அண்ணனிடம் சொல்கிறேன். 435 00:38:01,865 --> 00:38:03,700 இந்த இடம் இன்னும் சிறப்பாகிக்கொண்டே வருகிறது. 436 00:38:05,327 --> 00:38:06,703 உறுதியாகவா? 437 00:38:07,287 --> 00:38:08,664 கவலைப்படாதீர்கள். 438 00:38:08,664 --> 00:38:12,251 அநேகமாக சில கிராமவாசிகள் பசியோடு சுற்றித்திரிவார்கள். 439 00:38:13,418 --> 00:38:16,088 நானும் வரலாமா? 440 00:38:18,048 --> 00:38:19,925 நீங்கள் எங்களுடன் வர விரும்புகிறீர்களா? 441 00:38:19,925 --> 00:38:22,886 மறைந்திருந்து கண்காணிப்பது பற்றி இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். 442 00:38:22,886 --> 00:38:24,179 சுவாரஸ்யமானதாகத் தெரிகிறது. 443 00:38:28,267 --> 00:38:29,977 ஆனால் நான் வருவது தொந்தரவாக இருக்கும் என்றால்... 444 00:38:29,977 --> 00:38:31,979 நீங்கள் வருவதால் உறுதியாக பையன்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 445 00:38:44,241 --> 00:38:46,493 இதற்கு முன்பு யாகிடோரி சாப்பிட்டிருக்கிறாயா? 446 00:38:46,493 --> 00:38:47,578 நிச்சயமாக. 447 00:38:49,872 --> 00:38:50,873 வாருங்கள்! 448 00:38:53,041 --> 00:38:54,084 இரண்டு பீர்கள். 449 00:39:08,891 --> 00:39:10,475 இங்கே சாப்பாடு நன்றாக இருக்கும். 450 00:39:11,602 --> 00:39:12,936 அதோடு விலை குறைவாக இருக்கும். 451 00:39:13,604 --> 00:39:15,564 என் நிலைமைக்கு பொருத்தமானது. 452 00:39:18,984 --> 00:39:20,152 நன்றி. 453 00:39:35,626 --> 00:39:36,752 உனக்குத் தெரியும்... 454 00:39:39,171 --> 00:39:42,716 நமக்கிடையே விஷயங்கள் எளிதாக இருந்ததில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். 455 00:39:44,927 --> 00:39:47,304 அது பெரும்பாலும் என் தவறுதான். 456 00:39:48,222 --> 00:39:52,518 ஆனால் நான் இப்போது இந்த நிலைமையில் இருக்கிறேன். 457 00:39:53,852 --> 00:39:55,479 நான் பாசாங்கு செய்வதை விட்டுவிட்டேன். 458 00:39:58,941 --> 00:40:01,443 இது உனக்கு ஒத்துவராது என்றால்... 459 00:40:03,445 --> 00:40:04,780 நீ தாராளமாக கிளம்பிப் போகலாம். 460 00:40:06,448 --> 00:40:07,824 மனது காயப்படாது. 461 00:40:09,284 --> 00:40:13,121 ஆனால் நீ இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 462 00:40:16,875 --> 00:40:19,378 நான் எப்பொழுதும் இப்படி மோசமான நிலையில் இருக்கப் போவதில்லை. 463 00:40:20,379 --> 00:40:22,214 நான் புத்திசாலி. 464 00:40:22,214 --> 00:40:23,674 வெறி கொண்டவன். 465 00:40:25,050 --> 00:40:28,095 இப்போது எனக்கு இந்த விளையாட்டின் விதிகள் புரிந்துவிட்டன. 466 00:40:28,095 --> 00:40:33,350 ஒருவருக்கு மோசமானதை செய்து நான் வெற்றி பெற மாட்டேன். 467 00:40:35,185 --> 00:40:36,854 ஆனால் அதை செய்பவர்கள்... 468 00:40:40,023 --> 00:40:43,360 அவர்கள் நியாயமாக விளையாடுகிறார்கள். 469 00:40:47,197 --> 00:40:51,743 நான் சொன்னது போல, இது உனக்கு ஒத்துவராது என்றால், 470 00:40:54,121 --> 00:40:55,247 நான் புரிந்துகொள்வேன். 471 00:41:15,601 --> 00:41:16,810 சியர்ஸ். 472 00:41:23,609 --> 00:41:24,818 சியர்ஸ். 473 00:41:34,328 --> 00:41:36,413 பல மணிநேரமாகிவிட்டது. 474 00:41:37,623 --> 00:41:40,042 இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்? 475 00:41:41,043 --> 00:41:42,628 இரண்டு மணிநேரம்தான் ஆகிறது. 476 00:41:43,170 --> 00:41:45,047 அமைதியாக இரு. 477 00:41:45,047 --> 00:41:46,924 நீயே திருடனையும் பயமுறுத்தி துரத்தப் போகிறாய். 478 00:41:46,924 --> 00:41:48,425 மொஸாசு. 479 00:41:48,425 --> 00:41:50,677 இன்றிரவு யாரையும் பிடிக்க முடியாமல் போகலாம். 480 00:41:50,677 --> 00:41:53,597 அவன் புத்திசாலியாக இருந்தால், சில இரவுகள் வராமல் இருப்பான். 481 00:41:54,556 --> 00:41:57,184 இன்றிரவு அது நடக்காது என்கிறீர்களா? 482 00:41:57,184 --> 00:41:58,894 யாரால் சொல்ல முடியும்? 483 00:42:03,148 --> 00:42:07,736 திரு. கிம், திரு. கோவை எங்கே சந்தித்தீர்கள்? 484 00:42:09,238 --> 00:42:10,239 நோவா. 485 00:42:11,031 --> 00:42:12,407 அது அவமரியாதையான செயல். 486 00:42:12,407 --> 00:42:13,784 பரவாயில்லை. 487 00:42:15,869 --> 00:42:18,455 சில நாட்களாகவே நீ அதைக் கேட்க நினைத்திருக்கிறாய் என்று என்னால் சொல்ல முடியும். 488 00:42:21,500 --> 00:42:24,253 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரை கப்பல்துறையில் சந்தித்தேன். 489 00:42:24,920 --> 00:42:26,296 நான் அப்போது அங்கே வேலை செய்துகொண்டிருந்தேன். 490 00:42:27,130 --> 00:42:29,550 என்னால் முடிந்த வேலைகளை செய்துகொண்டு, 491 00:42:30,092 --> 00:42:32,010 நிறைய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருப்பேன். 492 00:42:32,845 --> 00:42:34,263 என்ன மாதிரியான பிரச்சினை? 493 00:42:34,263 --> 00:42:36,807 சண்டையில் ஈடுபடுவது. 494 00:42:36,807 --> 00:42:38,058 நான் முட்டாளாக இருந்தேன். 495 00:42:39,643 --> 00:42:41,144 விவரமில்லாதவனாக. 496 00:42:41,144 --> 00:42:42,646 கோபமாகவும் கூட. 497 00:42:43,939 --> 00:42:45,232 ஒரு ஆபத்தான கலவை. 498 00:42:46,024 --> 00:42:47,776 ஏன் கோபமாக இருந்தீர்கள்? 499 00:42:59,371 --> 00:43:03,041 கொரியாவில், என் அப்பாவுக்கு கொஞ்ச நிலம் இருந்தது. 500 00:43:03,667 --> 00:43:06,670 அதிகம் இல்லை, ஆனால் அவர் எங்களுக்கு சோறு போட்டார். 501 00:43:07,504 --> 00:43:09,381 ஆனால் ஜப்பானியர்கள் வந்ததும், 502 00:43:09,381 --> 00:43:13,844 விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 503 00:43:14,428 --> 00:43:19,057 ஒரு எழுத்தர் தவறாக, என் அப்பாவின் நிலம் மிகப்பெரியது என்று பதிவு செய்துவிட்டார். 504 00:43:21,268 --> 00:43:26,940 வரிக் கட்டணம் வந்ததும், என் அப்பாவால் கட்ட முடியவில்லை. 505 00:43:28,108 --> 00:43:31,570 அவரிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டது. 506 00:43:34,364 --> 00:43:35,365 கடைசியாக, 507 00:43:37,242 --> 00:43:40,787 என் இளைய சகோதர, சகோதரிகள் பல்வேறு குடும்ப உறுப்பினர்களிடம் அனுப்பப்பட்டார்கள். 508 00:43:43,081 --> 00:43:46,126 அதற்காக என் அம்மா மிகவும் கண்ணீர் விட்டு அழுதார். 509 00:43:49,713 --> 00:43:51,673 அவருக்கு என் அப்பா மீதிருந்த அன்பு, 510 00:43:53,175 --> 00:43:54,551 கசந்துவிட்டது. 511 00:44:00,390 --> 00:44:03,227 ஒரு நாள் காலை, என் அப்பா வயல்களுக்கு போனார். 512 00:44:04,728 --> 00:44:06,897 ஒரு காலத்தில் அவருடையதாக இருந்த வயல்களுக்கு. 513 00:44:10,150 --> 00:44:11,985 அவர் திரும்பி வரவே இல்லை. 514 00:44:16,990 --> 00:44:19,284 நான் அவரை அங்கேயே புதைத்தேன்... 515 00:44:22,704 --> 00:44:25,123 ஒருகாலத்தில் அவருடைய உருளைக்கிழங்குகள் வளர்ந்த இடத்தில். 516 00:44:28,210 --> 00:44:30,003 அதற்கு பிறகு நான் வீட்டைவிட்டு வந்துவிட்டேன். 517 00:44:45,269 --> 00:44:46,603 அங்கே பாருங்கள்! 518 00:44:48,605 --> 00:44:50,732 எத்தனை பேர் இருக்கிறார்கள்? 519 00:44:55,737 --> 00:44:56,947 கதவுகளுக்குப் போங்கள். 520 00:45:03,871 --> 00:45:05,289 மாட்டிக்கொண்டோம்! ஓடுங்கள்! 521 00:45:05,289 --> 00:45:07,958 - போ! - அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? 522 00:45:07,958 --> 00:45:09,168 அவர்கள் தப்பிக்கிறார்கள்! 523 00:45:09,168 --> 00:45:10,711 அவர்களை பற்றி கவலைப்படாதே. 524 00:45:12,045 --> 00:45:13,046 ஒருவனைப் பிடித்துவிட்டேன். 525 00:45:18,093 --> 00:45:19,261 அவன்! 526 00:45:21,013 --> 00:45:22,181 இந்தப் பையனை உனக்குத் தெரியுமா? 527 00:45:22,181 --> 00:45:24,892 நோவாவை பள்ளியில் துன்புறுத்துபவன் அவன்தான். 528 00:45:24,892 --> 00:45:27,895 தயவுசெய்து. கோவிலில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தெரிந்தால், என்னை அடிப்பார்கள். 529 00:45:29,021 --> 00:45:30,606 நீ வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவனா? 530 00:45:32,399 --> 00:45:34,693 ஏன் எங்கள் முட்டைகளை திருடுகிறாய்? 531 00:45:34,693 --> 00:45:37,279 எங்கள் 20 பேருக்கு போதுமான உணவு இல்லை. 532 00:45:38,113 --> 00:45:39,615 நாங்கள் எப்போதும் பட்டினி கிடக்கிறோம். 533 00:45:40,949 --> 00:45:43,952 எனவே நீ இவனை என்ன செய்ய விரும்புகிறாய்? 534 00:45:47,164 --> 00:45:48,165 நானா? 535 00:45:48,165 --> 00:45:52,753 நீ முடிவு செய். நான் இவனை ஒரு எச்சரிக்கையுடன் போக சொல்லலாம். 536 00:45:54,129 --> 00:45:57,508 அல்லது என்னவோ நடக்கட்டும் என்று இவனை மீண்டும் கோவிலுக்குக் கூட்டிப்போய் விட்டுவிடலாம். 537 00:46:06,266 --> 00:46:07,809 அவனை விட்டுவிடுங்கள். 538 00:46:07,809 --> 00:46:11,104 ஆனால் அவன் உனக்கு பல மோசமான விஷயங்களைச் செய்திருக்கிறான்! 539 00:46:12,773 --> 00:46:15,817 போ. நோவா மனம் மாறுவதற்கு முன். 540 00:46:18,654 --> 00:46:19,655 ஹேய்! 541 00:46:29,498 --> 00:46:31,959 மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதே. புரிந்ததா? 542 00:46:38,215 --> 00:46:40,175 நீ எப்படி அவனை போக விடலாம்? 543 00:46:40,175 --> 00:46:41,802 நீ அவனை பழிவாங்கியிருக்கலாம். 544 00:46:42,469 --> 00:46:44,179 உன் அண்ணன் செய்தது சரிதான். 545 00:46:44,179 --> 00:46:47,891 வேறு வழியை விட உன் எதிரி உனக்கு கடன்பட்டிருப்பது நல்லது. 546 00:46:49,309 --> 00:46:51,311 உறுதியாக நோவாவிற்கு அது ஏற்கனவே தெரிந்திருக்கிறது. 547 00:46:51,311 --> 00:46:52,563 அப்படியா? 548 00:46:52,563 --> 00:46:54,731 நான் அதை நினைவில்கொள்ள வேண்டும். 549 00:47:00,112 --> 00:47:01,446 போகலாம். தாமதமாகிவிட்டது. 550 00:47:02,281 --> 00:47:04,032 அது சுவாரஸ்யமாக இல்லையா, பெரியம்மா? 551 00:47:04,032 --> 00:47:06,326 மிக அதிகமாக. 552 00:47:06,326 --> 00:47:09,454 இன்றிரவு நம்மால் தூங்க முடிந்தால் ஆச்சரியம்தான். 553 00:47:18,463 --> 00:47:19,756 ஹலோ? 554 00:47:19,756 --> 00:47:21,175 முடிந்தது. 555 00:47:21,758 --> 00:47:24,303 இப்போது அந்த இடம் அபேவுக்கு சொந்தமாகிவிட்டது. 556 00:47:27,055 --> 00:47:30,517 இப்போது நம் வேலைக்கான நேரம். அந்த திட்டம் வேலை செய்யட்டும். 557 00:47:31,643 --> 00:47:33,645 அது வேலை செய்யும். எனக்குத் தெரியும். 558 00:50:32,950 --> 00:50:34,952 வசனத் தமிழாக்கம் அருண்குமார்