1 00:00:17,059 --> 00:00:18,393 (கொரிய மொழியில்)இன்னொன்றா? 2 00:00:18,393 --> 00:00:20,395 எத்தனை பேர் நம்மை தாக்க வருகிறார்கள்? 3 00:00:20,395 --> 00:00:24,191 அமெரிக்கா எவ்வளவு பெரியது என்று உங்களுக்குத் தெரியாதா? 4 00:00:24,191 --> 00:00:26,693 அவர்களிடம் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இருப்பார்கள். 5 00:00:27,528 --> 00:00:29,655 அவர்கள் எல்லோருமே இங்கே வருகிறார்களா? 6 00:00:30,155 --> 00:00:31,406 (ஜப்பானிய மொழியில்) யாருக்குத் தெரியும்? 7 00:00:31,406 --> 00:00:34,284 வருத்தப்படுவதைவிட முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. 8 00:00:34,284 --> 00:00:35,452 இல்லையா? 9 00:00:36,078 --> 00:00:38,413 அது சரி. நீ சொல்வதும் சரிதான். 10 00:00:45,504 --> 00:00:47,047 ஆனால் உன் அண்ணன் எங்கே? 11 00:00:47,047 --> 00:00:49,174 இந்த வேலையில் அவன் உன்னோடு இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. 12 00:00:49,716 --> 00:00:52,386 ஒருவேளை எங்காவது சுற்றிக்கொண்டிருக்கலாம். 13 00:00:52,386 --> 00:00:54,346 அவன் அந்த முட்டாளுடன் இல்லையென்றால், 14 00:00:54,346 --> 00:00:57,891 கோ ஹான்சுவிடமிருந்து வாங்கிய சலிப்பான புத்தகங்களில் ஒன்றைப் படித்துக்கொண்டிருப்பான். 15 00:00:57,891 --> 00:01:00,853 உண்மையில், அவன் ஜாலியாகவே இல்லை! 16 00:01:02,729 --> 00:01:05,022 சில விஷயங்களால் நீ வருத்தப்படுவது தெரிகிறது. 17 00:01:05,022 --> 00:01:08,527 அதாவது, ஜாலியாக இருக்கப் போவதில்லை என்றால் 18 00:01:08,527 --> 00:01:10,696 இங்கே வாழ்வதில் என்ன பயன், சரிதானே? 19 00:01:11,446 --> 00:01:14,491 ஆனால் உனக்கு இது தெரிய வேண்டும். 20 00:01:15,450 --> 00:01:17,327 இப்போது குடும்பத்துக்கு உன் அண்ணன்தான் பொறுப்பு. 21 00:01:17,327 --> 00:01:20,247 அது எவ்வளவு பாக்கியமோ அதே அளவு சுமையும் கூட. 22 00:01:20,247 --> 00:01:22,207 சுமை எங்கே இருக்கிறது? 23 00:01:22,207 --> 00:01:24,751 எல்லாமே அவனுக்குத்தான் முதலில் கிடைக்கிறது. 24 00:01:24,751 --> 00:01:26,086 கிடைக்கிறது, 25 00:01:26,753 --> 00:01:28,172 ஆனால் அவன் பெரியவனாகும்போது, 26 00:01:28,922 --> 00:01:31,341 குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் சுமை அவன் மீது விழும். 27 00:01:33,302 --> 00:01:35,470 தோற்றுவிடக் கூடாது, அதுவும் மூத்தவன் கூடவே கூடாது. 28 00:01:37,598 --> 00:01:39,641 இப்போது அதற்கான அர்த்தம் உனக்குப் புரியாமல் இருக்கலாம், 29 00:01:40,142 --> 00:01:43,061 ஆனால் என்னை நம்பு, நீ எளிதான வாழ்க்கையை வாழ்கிறாய். 30 00:01:43,979 --> 00:01:45,522 எனக்கு நன்றாகத் தெரியும். 31 00:01:46,523 --> 00:01:48,150 சரி, உன் வேலையைப் பார். 32 00:01:57,743 --> 00:01:59,203 பிடித்துவிட்டேன்! 33 00:01:59,203 --> 00:02:01,622 நீ இருந்த இடத்திலிருந்து நன்றாக தெரிந்தது. 34 00:02:02,706 --> 00:02:05,042 கோழையின் சாக்குபோக்கு வார்த்தைகள். 35 00:02:08,920 --> 00:02:11,089 இந்த இடத்தில் நிறைய பாம்புகள் இருக்கின்றன. 36 00:02:13,425 --> 00:02:16,053 யார் உண்மையான கோழை என்று உனக்குக் காட்டுகிறேன். 37 00:02:21,225 --> 00:02:24,895 போர் இப்படியே தொடர்ந்தால், 38 00:02:25,604 --> 00:02:27,981 நாம் நிரந்தரமாக இங்கேயே வாழலாம். 39 00:02:29,149 --> 00:02:30,817 எனக்கு அதில் பிரச்சினை இல்லை. 40 00:02:31,401 --> 00:02:33,570 நீ சொந்த ஊருக்குப் போக விரும்பவில்லையா? 41 00:02:35,030 --> 00:02:36,031 விரும்புகிறேன். 42 00:02:36,657 --> 00:02:38,492 ஆனால் திரும்ப பள்ளிக்குப் போக விரும்பவில்லை. 43 00:02:39,076 --> 00:02:40,994 ஆனால் நீ மிகவும் பிரபலமானவன். 44 00:02:42,246 --> 00:02:44,581 என் அப்பாவைப் போல பள்ளி இல்லை என்று நினைக்கிறேன். 45 00:02:46,208 --> 00:02:49,920 அவர் வாழ்க்கையில் ஒரு பரிட்சையில் கூட தேர்ச்சி பெற்றதில்லை, 46 00:02:50,420 --> 00:02:53,799 ஆனால் நான் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், என்னை வெளுத்துவிடுவார். 47 00:02:53,799 --> 00:02:57,302 இந்த வருடம் நீ வகுப்பில் முதலிடம் பிடித்திருப்பதால், 48 00:02:57,302 --> 00:02:59,263 அவரால் எனக்கு எப்போதும் பிரச்சினைதான். 49 00:03:01,056 --> 00:03:06,103 நீ கொரியன் என்று என் சகோதரன் சொன்னதும் அவருடைய முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும். 50 00:03:06,103 --> 00:03:08,230 அன்று இரவு இரண்டு கைகளாலும் என்னை அடித்தார். 51 00:03:13,318 --> 00:03:14,528 ஹேய்! 52 00:03:14,528 --> 00:03:17,614 ஆசிரியர் ஒகாவா இப்போது நம்மைப் பார்ப்பது போல கற்பனை செய். 53 00:03:19,116 --> 00:03:21,535 நிஜமில்லை என்று நினைத்து தன் கண்களை துடைத்துவிட்டு பார்ப்பார். 54 00:03:23,620 --> 00:03:24,621 என்ன பிரச்சினை? 55 00:03:26,832 --> 00:03:29,168 எனவே நாம் இப்போது நண்பர்களா? 56 00:03:33,297 --> 00:03:34,381 கேள். 57 00:03:34,381 --> 00:03:37,718 நான் உன்னிடம் மோசமாக நடந்துகொண்டேன் என்று தெரியும். 58 00:03:38,677 --> 00:03:40,596 அதோடு 59 00:03:41,221 --> 00:03:42,222 அதற்காக வருந்துகிறேன். 60 00:03:43,557 --> 00:03:46,393 இப்போது நண்பர்களாக இருக்கலாமா? 61 00:03:53,317 --> 00:03:54,359 இதோ. 62 00:04:03,410 --> 00:04:07,497 அவற்றை எதுவும் செய்யாதே. அவை தங்கள் தோலை உரிக்கப்போகின்றன. 63 00:04:09,833 --> 00:04:11,084 என்னவாக ஆக? 64 00:04:12,085 --> 00:04:13,545 யாருக்குத் தெரியும்? 65 00:04:13,545 --> 00:04:17,089 ஆனால் சீக்கிரம் அவை தானாக வெளிப்படும். 66 00:04:21,220 --> 00:04:22,721 அவை பயமுறுத்துகின்றன. 67 00:04:38,737 --> 00:04:41,114 நன்றி. ஆனால்... 68 00:04:41,114 --> 00:04:42,991 ஏதாவது பிரச்சினையா? 69 00:04:44,326 --> 00:04:47,204 உன் வேலையைப் பார். உனக்கு என்ன அக்கறை? 70 00:04:47,204 --> 00:04:50,040 திரு. கிம் என்னை திட்டுவது சரிதான். 71 00:04:50,666 --> 00:04:53,502 நான் என் வேலைக்குத் திரும்ப வேண்டும். 72 00:04:56,463 --> 00:04:58,715 வண்டியில் உரம் இருக்கிறது. 73 00:04:58,715 --> 00:05:01,468 நான் திரும்பி வருவதற்குள் அதை இறக்கு. 74 00:06:15,501 --> 00:06:17,461 சுன்ஜா, என்ன விஷயம்? 75 00:06:21,507 --> 00:06:22,508 அம்மா. 76 00:08:19,458 --> 00:08:21,710 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 77 00:08:51,865 --> 00:08:56,453 ...மாணவர்கள் கற்களை வீசினார்கள், தற்காலிகமாக இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 78 00:08:56,453 --> 00:08:59,748 ஆனால் காலை 1 மணிக்குப் பிறகு, கூட்டத்தினரின் உற்சாகம்... 79 00:09:02,793 --> 00:09:06,463 நான் ஃபோனுக்கு அருகில் இல்லை. உங்கள் செய்தியைப் பதிவு செய்யுங்கள். 80 00:09:06,463 --> 00:09:08,799 சாலமன், இருக்கிறாயா? 81 00:09:08,799 --> 00:09:11,426 உன் குரலைக் கேட்டு பல நாட்களாகிவிட்டது. 82 00:09:11,426 --> 00:09:13,554 பிஸியாக இல்லாதபோது என்னை அழை. 83 00:09:14,555 --> 00:09:17,057 ஓ, நான் உன் பாட்டி. 84 00:09:43,625 --> 00:09:47,671 பாட்டி, கப்பல் நிஜமாகவே பெரிதாக இருந்ததா? 85 00:09:47,671 --> 00:09:50,549 இல்லை, அவ்வளவு பெரிதாக இல்லை. 86 00:09:51,258 --> 00:09:53,427 குறைந்தபட்சம் அதில் பாய்மரம் இருந்ததா? 87 00:09:54,344 --> 00:09:55,679 இல்லை. 88 00:09:55,679 --> 00:09:57,264 பாய்மரமும் இல்லை. 89 00:09:58,098 --> 00:10:00,058 கப்பல் உண்மையில் சின்னதாகத்தான் இருந்தது. 90 00:10:01,018 --> 00:10:04,396 குறிப்பாக எத்தனை பேர் அதில் இருந்தோம் என்பதை கருத்தில் கொண்டால். 91 00:10:05,230 --> 00:10:08,317 அந்த பலமான கடல் அலைகள் மோதியதால் எல்லோரும் 92 00:10:08,942 --> 00:10:11,528 ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தோம். 93 00:10:12,446 --> 00:10:14,156 அந்த பயணம்... 94 00:10:16,992 --> 00:10:18,035 அது கடினமானது. 95 00:10:20,454 --> 00:10:24,791 நான் கப்பலில் சவாரி செய்ய விரும்புகிறேன். 96 00:10:25,626 --> 00:10:26,793 எதற்காக? 97 00:10:26,793 --> 00:10:28,587 நீ எங்கே போவாய்? 98 00:10:30,839 --> 00:10:31,924 ஆப்பிரிக்காவுக்கு. 99 00:10:32,758 --> 00:10:33,675 ஆப்பிரிக்காவா? 100 00:10:35,511 --> 00:10:37,304 அது அவ்வளவு தூரமா? 101 00:10:37,304 --> 00:10:39,014 மிகவும் தூரம். 102 00:10:39,640 --> 00:10:43,268 என்னுடைய மங்கா புத்தகங்களில் ஒன்றில், நான் ஒரு சிங்கத்தின் புகைப்படத்தைப் பார்த்தேன். 103 00:10:43,268 --> 00:10:45,854 அது மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. 104 00:10:46,480 --> 00:10:48,815 நேராக ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நிஜமாகவே விரும்புகிறேன். 105 00:10:48,815 --> 00:10:50,192 சிங்கமா? 106 00:10:51,360 --> 00:10:52,611 சிங்கம். 107 00:10:54,238 --> 00:10:56,949 சிங்கம். 108 00:11:04,164 --> 00:11:05,290 நோவா. 109 00:11:06,166 --> 00:11:07,417 மொஸாசு. 110 00:11:11,755 --> 00:11:15,634 நீங்கள் கொரியர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 111 00:11:16,218 --> 00:11:18,887 இரத்தத்திலும் சதையிலும் கொரியர்கள், அதுதான் நீங்கள். 112 00:11:19,471 --> 00:11:22,516 நாங்கள் கொரியர்களாக இல்லாவிட்டால், யாராக இருந்திருப்போம்? 113 00:11:24,268 --> 00:11:26,770 நீ சொல்வது சரிதான். மிகவும் சரி. 114 00:11:33,944 --> 00:11:36,738 மொஸாசு, உட்கார். சாப்பிடலாம். 115 00:11:37,781 --> 00:11:40,492 நோவா, இன்று நீ பிரார்த்தனை செய்கிறாயா? 116 00:11:44,329 --> 00:11:46,415 எங்கள் பரலோகத் தகப்பனாகிய கர்த்தருக்கு, 117 00:11:46,415 --> 00:11:49,251 நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உணவிற்காக உங்களுக்கு நன்றி. 118 00:11:50,169 --> 00:11:54,923 அதோடு எங்களுடைய பாட்டியை பூஸானிலிருந்து பத்திரமாக கொண்டு வந்ததற்கு நன்றி. 119 00:11:54,923 --> 00:11:57,551 கடவுளின் பெயரால், நாம் பிரார்த்தனை செய்கிறோம். 120 00:11:58,135 --> 00:11:59,720 - ஆமென். - ஆமென். 121 00:12:04,975 --> 00:12:07,519 இது மிகவும் அதிகம். பையன்களுக்கு கொஞ்சம் கொடு. 122 00:12:07,519 --> 00:12:08,645 சாப்பிடுங்கள். 123 00:12:09,271 --> 00:12:10,397 சாப்பிடுங்கள். 124 00:12:15,986 --> 00:12:18,113 பாட்டி, உங்களுக்காக, 125 00:12:18,113 --> 00:12:24,036 பெரியம்மா மேற்பார்வையாளரிடம் அவர் கோழிகளில் ஒன்றை நாங்கள் அறுக்கலாமா என்று கேட்டார். 126 00:12:24,036 --> 00:12:25,495 அவர் சரி என்றார். 127 00:12:25,996 --> 00:12:28,498 அம்மா தலையை திருகுவதைப் பார்த்தேன். 128 00:12:28,498 --> 00:12:30,000 அவர் அதை நன்றாக செய்தார். 129 00:12:30,000 --> 00:12:32,461 உன் அம்மா இளம் வயதிலேயே அதைத் தொடங்கிவிட்டாள். 130 00:12:33,587 --> 00:12:34,588 சாப்பிடு. 131 00:12:36,840 --> 00:12:38,759 திரு. கோ ஹான்சு! 132 00:12:39,468 --> 00:12:44,223 நீங்கள் எங்களுக்கு செய்த எல்லாவற்றையும்... எப்படி திருப்பி செலுத்தப் போகிறோம்? 133 00:12:44,223 --> 00:12:46,683 அதற்கு அவசியமில்லை. தயவுசெய்து, உட்காருங்கள். 134 00:12:47,935 --> 00:12:50,062 விடுதியில் என்னை அவரால் கண்டுபிடிக்க முடியாதபோது, 135 00:12:50,062 --> 00:12:52,272 அவருடைய ஆட்களை அனுப்பி என்னைத் தேடச் சொன்னார். 136 00:12:52,272 --> 00:12:54,900 அது எளிதான காரியம் இல்லை. 137 00:12:57,694 --> 00:12:59,988 எங்களோடு சேர்ந்து சாப்பிடுகிறீர்களா? 138 00:13:02,032 --> 00:13:03,450 இரவு உணவை சாப்பிட்டுவிட்டேன், 139 00:13:04,618 --> 00:13:05,994 ஆனால் நான் உட்காரலாமா? 140 00:13:07,454 --> 00:13:08,539 தயவுசெய்து. 141 00:13:13,210 --> 00:13:16,088 இன்றிரவு நன்றாக சாப்பிடுவோம். நன்றி. 142 00:13:27,683 --> 00:13:29,309 பார்த்தீர்களா? எப்போதும் முதலில் அவனுக்குத்தான்! 143 00:13:46,243 --> 00:13:47,327 வருகிறேன்! 144 00:13:51,957 --> 00:13:53,458 ஒரு நொடி. 145 00:14:01,175 --> 00:14:04,052 பாட்டி! இங்கே என்ன செய்கிறீர்கள்? 146 00:14:05,512 --> 00:14:08,307 என்னுடைய மெஸ்சேஜ் உனக்குக் கிடைக்கவில்லையா? 147 00:14:11,185 --> 00:14:13,854 கடைசியாக எப்போது சுத்தம் செய்தாய்? 148 00:14:15,314 --> 00:14:16,565 இன்றுதான் சுத்தம் செய்தேன். 149 00:14:18,066 --> 00:14:21,486 ஆனால், பாட்டி, எதற்காக டோக்கியோ வந்தீர்கள்? 150 00:14:26,700 --> 00:14:28,160 ஒரு கனவு கண்டேன். 151 00:14:29,661 --> 00:14:32,915 கனவா? என்னைப் பற்றியா? 152 00:14:33,582 --> 00:14:35,209 விவரங்கள் சரியாக ஞாபகமில்லை, 153 00:14:36,376 --> 00:14:38,003 ஆனால் நான் கண்விழித்தபோது... 154 00:14:39,338 --> 00:14:40,839 யாரையாவது எதிர்பார்க்கிறாயா? 155 00:14:40,839 --> 00:14:43,675 நான் ஒரு தோழியோடு இரவு உணவுக்குப் போயிருக்க வேண்டும். 156 00:14:43,675 --> 00:14:45,135 என்னை அழைத்துப் போக வந்திருக்கிறாள். 157 00:14:49,806 --> 00:14:51,975 - இதைப் பார்த்தாயா? - நவோமி... 158 00:14:51,975 --> 00:14:54,186 அந்த நிலத்தின் அடியில் எலும்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 159 00:14:55,020 --> 00:14:56,396 யாரது? 160 00:15:00,442 --> 00:15:01,610 என் பாட்டி. 161 00:15:04,947 --> 00:15:07,324 அவருக்கு டோக்கியோவில் திடீரென வேலை வந்துவிட்டது. 162 00:15:07,950 --> 00:15:09,535 இச்சிசாகி. 163 00:15:09,535 --> 00:15:11,495 ஷிஃப்லிஸில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். 164 00:15:11,495 --> 00:15:13,205 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 165 00:15:13,205 --> 00:15:15,791 நான் கத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். 166 00:15:15,791 --> 00:15:17,793 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 167 00:15:17,793 --> 00:15:19,795 டேட்டிங்கா? 168 00:15:19,795 --> 00:15:22,339 பாட்டி, என்னை ஏன் சங்கடப்படுத்துகிறீர்கள்? 169 00:15:22,339 --> 00:15:24,591 கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியதற்கு வருந்துகிறேன்... 170 00:15:24,591 --> 00:15:25,759 கவலைப்படாதே. 171 00:15:25,759 --> 00:15:27,219 நீங்கள் தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள். 172 00:15:27,219 --> 00:15:29,179 உங்கள் வருகையை அனுபவியுங்கள். 173 00:15:29,179 --> 00:15:31,181 இரவு உணவுக்கு வெளியே போகிறீர்களா? 174 00:15:32,558 --> 00:15:33,976 விசேஷமாக எங்கும் இல்லை. 175 00:15:33,976 --> 00:15:36,186 தெருவின் கடைசியில் இருக்கும் பாஸ்தா உணவகத்துக்குத்தான். 176 00:15:37,104 --> 00:15:38,647 அடடா. 177 00:15:38,647 --> 00:15:41,525 அவளைப் பார். எலும்பும் தோலுமாக இருக்கிறாள். 178 00:15:42,401 --> 00:15:44,069 பிறகு அழைக்கிறேன். 179 00:15:44,778 --> 00:15:46,780 - உள்ளே வா! - பரவாயில்லை. 180 00:15:46,780 --> 00:15:48,490 இவ்வளவு தூரம் வந்துவிட்டாய். 181 00:15:48,490 --> 00:15:51,368 தயவுசெய்து, எனக்குப் பிரச்சினையில்லை. 182 00:15:51,368 --> 00:15:54,121 நான் வீட்டிலிருந்து எவ்வளவு விலா எலும்பு உணவை கொண்டுவந்திருக்கிறேன் பார். 183 00:15:54,746 --> 00:15:57,916 அதோடு சாலமனுக்குப் பிடித்த பஞ்சான். 184 00:15:58,542 --> 00:15:59,835 உள்ளே வா. 185 00:16:02,462 --> 00:16:04,298 காலணியை அணிந்து வா! 186 00:16:04,298 --> 00:16:06,383 தரை மிகவும் அழுக்காக இருக்கிறது. 187 00:16:06,925 --> 00:16:08,385 நீ இங்கே இருக்க வேண்டியதில்லை. 188 00:16:09,720 --> 00:16:12,472 உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். 189 00:16:22,399 --> 00:16:26,820 நேற்று இரவு, 60 B-29s விமானங்கள் 190 00:16:26,820 --> 00:16:32,492 கண்மூடித்தனமாக நகர மையத்தில் குண்டுகளை வீசின... 191 00:16:32,492 --> 00:16:35,204 நான் பள்ளிக்குப் போக விரும்பியது பற்றி 192 00:16:35,204 --> 00:16:37,122 உன் பாட்டிக்கும் எனக்கும் கடுமையான சண்டை நடக்கும். 193 00:16:38,123 --> 00:16:41,835 அப்போது அது வேறு காலகட்டமாக இருந்தது. 194 00:16:44,379 --> 00:16:47,925 அம்மா, வேண்டுமென்றால் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். 195 00:16:48,759 --> 00:16:49,843 படிக்கவா? 196 00:16:51,303 --> 00:16:53,180 இப்போது அதற்கு காலம் கடந்துவிட்டது. 197 00:16:53,805 --> 00:16:55,516 நீதான் இப்போது நன்றாக படிக்க வேண்டும். 198 00:16:55,516 --> 00:16:56,850 புரிகிறதா? 199 00:17:06,318 --> 00:17:07,569 கடவுளே. 200 00:17:07,569 --> 00:17:10,781 இந்த சூட்டில் ஒருவர் எப்படி தூங்க முடியும்? 201 00:17:13,116 --> 00:17:15,160 நான் கொஞ்சம் காற்று வாங்கப் போகிறேன். 202 00:17:15,160 --> 00:17:16,244 சரி. 203 00:17:35,556 --> 00:17:36,807 கியுங்கீ? 204 00:17:51,405 --> 00:17:52,823 எந்த பிரச்சினையும் இல்லையே? 205 00:18:13,927 --> 00:18:15,137 ஏன் இந்த ராத்திரியில் வெளியே வந்திருக்கிறாய்? 206 00:18:16,263 --> 00:18:17,598 என்னால் தூங்க முடியவில்லை. 207 00:18:18,307 --> 00:18:19,600 ஆனால் ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள்? 208 00:18:20,142 --> 00:18:22,728 - மேற்பார்வையாளரைத் தேடிக்கொண்டிருந்தேன். - ஏதாவது பிரச்சினையா? 209 00:18:23,770 --> 00:18:24,938 இல்லை. 210 00:18:24,938 --> 00:18:26,815 சில விஷயங்களை தீர்க்க வேண்டியிருந்தது. 211 00:18:26,815 --> 00:18:27,858 சரி... 212 00:18:30,569 --> 00:18:33,238 மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 213 00:18:34,239 --> 00:18:35,616 அது ஒன்றுமில்லை. 214 00:18:35,616 --> 00:18:36,700 அது உண்மை இல்லை. 215 00:18:37,618 --> 00:18:39,661 அது உங்களுக்கு அதிக சிரமத்தையும் செலவையும் வைத்திருக்கும். 216 00:18:42,956 --> 00:18:44,374 நான் இப்போது போகிறேன். 217 00:18:48,629 --> 00:18:49,755 சுன்ஜா. 218 00:18:55,010 --> 00:18:56,553 நீ எப்போதாவது கார் ஓட்டியிருக்கிறாயா? 219 00:18:59,765 --> 00:19:00,807 காரா? 220 00:19:02,726 --> 00:19:04,019 ஓட்ட விரும்புகிறாயா? 221 00:19:06,313 --> 00:19:07,773 விளையாடுகிறீர்களா? 222 00:19:08,941 --> 00:19:10,192 நிஜமாகத்தான் சொல்கிறேன். 223 00:19:11,944 --> 00:19:13,028 ஏறு. 224 00:19:13,028 --> 00:19:15,739 எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது கார் ஓட்ட வேண்டும். 225 00:19:18,534 --> 00:19:19,826 வா. 226 00:19:35,384 --> 00:19:37,386 பிரேக்கை மெதுவாக விடு. 227 00:19:38,929 --> 00:19:39,930 போ. 228 00:19:46,353 --> 00:19:47,479 ஹலோ. 229 00:19:47,479 --> 00:19:49,314 நல்ல செய்தி கேட்க விரும்புகிறாயா? 230 00:19:49,857 --> 00:19:51,024 ஒரு நிமிடம். 231 00:19:52,401 --> 00:19:54,152 நான் இதற்கு பதிலளிக்க வேண்டும். 232 00:20:00,784 --> 00:20:02,661 அதை இப்படிப் பிடி. 233 00:20:05,747 --> 00:20:07,916 இவை மிகவும் மெல்லியவை. 234 00:20:09,751 --> 00:20:12,004 நான் இப்போதெல்லாம் அதிகம் சமைப்பதில்லை. 235 00:20:12,546 --> 00:20:13,839 தெரிகிறது. 236 00:20:14,631 --> 00:20:16,717 உன் கைகளை மட்டும் பார். 237 00:20:21,013 --> 00:20:22,139 என்ன? 238 00:20:22,139 --> 00:20:25,225 நீ சொன்னது போலவே. கோல்டன் ஹோட்டல்ஸ். அவர்கள் தயங்குகிறார்கள். 239 00:20:26,768 --> 00:20:29,479 - எனவே அவர்கள் பின்வாங்குகிறார்களா? - அப்படித்தான் தெரிகிறது. 240 00:20:30,272 --> 00:20:32,149 அப்படியென்றால், டாம், எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. 241 00:20:32,816 --> 00:20:33,817 எனக்குத் தெரியும். 242 00:20:33,817 --> 00:20:36,403 ஆனால் நான் தொடர்வதற்கு முன், ஒன்று கேட்க வேண்டும். 243 00:20:36,403 --> 00:20:37,863 இதைப் பற்றி உறுதியாக இருக்கிறாயா? 244 00:20:38,822 --> 00:20:40,616 ஏனென்றால் அபேவுக்கு அது நீதான் என்று தெரியும்போது, 245 00:20:40,616 --> 00:20:43,327 யாரும் உன்னைப் பார்த்து பொறாமைப்படாமல் போகலாம். 246 00:20:44,203 --> 00:20:47,039 அது பரவாயில்லை. என்னைப் பார்த்து மக்கள் பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை. 247 00:20:48,790 --> 00:20:50,083 கடனைக் கோருங்கள். 248 00:20:52,044 --> 00:20:56,465 என் சிறுவயதில், எப்போதும் இரவு உணவு செய்ய உதவுவேன். 249 00:20:59,134 --> 00:21:03,305 ஒவ்வொரு இரவும் என் அம்மா ஒரு விருந்தே தயார் செய்வார். 250 00:21:04,848 --> 00:21:08,310 பிறகு நானும் என் சகோதரனும், 251 00:21:08,310 --> 00:21:10,812 என் அப்பாவுக்காக அவருடன் காத்திருப்போம். 252 00:21:13,315 --> 00:21:16,568 ஆனால் அவர் அதிகம் வீட்டிற்கு வந்ததில்லை. 253 00:21:26,245 --> 00:21:28,705 என் வாழ்க்கையின் பெரும்பகுதி, 254 00:21:28,705 --> 00:21:33,544 சமைப்பதில்தான் என் வாழ்க்கையை கழித்தேன். 255 00:21:35,045 --> 00:21:38,549 ஆனால் அது வித்தியாசமானது. 256 00:21:40,092 --> 00:21:42,761 மற்றவர்களுக்கு நீ செய்யும் உணவும், 257 00:21:43,971 --> 00:21:47,099 உன் குடும்பத்திற்காக நீ செய்யும் உணவும். 258 00:21:47,099 --> 00:21:49,893 சுவையில் வித்தியாசம் தெரிந்துவிடும். 259 00:21:54,106 --> 00:21:59,027 உன் அம்மாவின் சமையல், சுவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். 260 00:22:11,582 --> 00:22:14,960 அவன் நிஜமாகவே போராடினான். 261 00:22:17,963 --> 00:22:19,298 ஷிஃப்லிஸில். 262 00:22:20,007 --> 00:22:23,886 அவன் தோற்பான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்ததால். 263 00:22:26,889 --> 00:22:29,183 ஒருவேளை நானும் அப்படி நினைத்திருக்கலாம். 264 00:22:30,809 --> 00:22:34,396 ஆனால் அந்த பேரத்தில் அவன் செய்தது... 265 00:22:36,481 --> 00:22:41,361 இதற்கு முன்பு நான் யாரும் அப்படியொரு 266 00:22:43,071 --> 00:22:45,657 நிலைப்பாட்டை எடுத்து பார்த்ததில்லை. 267 00:22:47,659 --> 00:22:48,744 நான்... 268 00:22:50,579 --> 00:22:52,748 அது எனக்கு சக்தியைக் கொடுத்தது. 269 00:23:03,717 --> 00:23:04,718 எதுவும் பிரச்சினை இல்லையே? 270 00:23:05,511 --> 00:23:06,678 நிச்சயமாக. 271 00:23:07,346 --> 00:23:09,056 ஏன் அப்படிக் கேட்கிறாய்? 272 00:23:10,516 --> 00:23:13,477 தடிமனாக இருக்க வேண்டும். இப்படி. 273 00:23:13,477 --> 00:23:14,853 அவளை விடு! 274 00:23:14,853 --> 00:23:16,813 என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியும். 275 00:23:31,995 --> 00:23:35,249 ஆக்சிலேட்டரையும் கிளட்ச்சையும் ஒன்றாக அழுத்தக் கூடாது. 276 00:23:46,009 --> 00:23:47,636 நீ மிகவும் மோசமாக ஓட்டுகிறாய். 277 00:23:59,064 --> 00:24:00,399 இதோ. 278 00:24:01,942 --> 00:24:03,193 இப்போது நன்றாக ஓட்டுகிறாய். 279 00:24:21,211 --> 00:24:22,713 தூங்குகிறார்கள். 280 00:24:22,713 --> 00:24:25,090 ஏன் இந்நேரத்தில் வந்தாய்? 281 00:24:25,090 --> 00:24:27,551 என்னோடு வா. உனக்கு ஒன்றை காட்ட வேண்டும். 282 00:24:28,468 --> 00:24:31,054 என்னால் முடியாது. என் அம்மா சீக்கிரம் வந்துவிடுவார். 283 00:24:31,054 --> 00:24:32,848 என்னை நம்பு. 284 00:24:32,848 --> 00:24:35,559 இதைத் தவறவிட்டதற்காக வருத்தப்படுவாய். 285 00:24:39,188 --> 00:24:40,856 சீக்கிரம்! வா, நோவா. 286 00:24:42,733 --> 00:24:43,734 நோவா! 287 00:24:47,988 --> 00:24:48,989 பொறு! 288 00:24:50,616 --> 00:24:51,617 எனக்காக காத்திரு! 289 00:25:05,130 --> 00:25:06,298 இது சுவையாக இருக்கிறது. 290 00:25:07,382 --> 00:25:09,551 இப்போது இவருக்கு உன்னைப் பிடித்துவிடும். 291 00:25:10,177 --> 00:25:13,180 நீ என்ன பேசுகிறாய்? எனக்கு அவளைப் பிடிக்காதது போல. 292 00:25:15,390 --> 00:25:18,060 நீ நீண்ட நேரம் வேலை செய்வாய் போல. 293 00:25:19,186 --> 00:25:20,687 நீ உன் வேலையை ரசிக்கிறாயா? 294 00:25:22,022 --> 00:25:24,608 பெரும்பாலும், அதற்கு நான் பெருமைப்படுகிறேன். 295 00:25:25,442 --> 00:25:28,403 குறிப்பாக வேலை கடினமாக இருக்கும்போது. 296 00:25:28,904 --> 00:25:30,531 பல நாட்கள் அப்படித்தான் இருக்குமா? 297 00:25:31,782 --> 00:25:33,951 நேர்மையாகச் சொன்னால், எண்ண முடியாத அளவுக்கு அதிக நாட்கள். 298 00:25:35,536 --> 00:25:38,038 ஆனால் அது மெல்ல மெல்ல சரியாகிக்கொண்டே வருகிறது. 299 00:25:40,749 --> 00:25:43,585 உண்மையில், ஒரு ஒப்பந்தத்தில் வேலை செய்கிறேன். 300 00:25:43,585 --> 00:25:45,796 அது நான் எதிர்பார்த்த ஒரு ஒப்பந்தம். 301 00:25:46,672 --> 00:25:47,506 என்ன அது? 302 00:25:49,258 --> 00:25:52,344 நான் அந்த நிறுவனத்தை சில காலமாக கண்காணிக்கிறேன். 303 00:25:53,804 --> 00:25:56,348 - யோட்சுபா ஃபைனான்ஸ். - தனிநபர் கடன் வழங்கும் நிறுவனமா? 304 00:25:57,599 --> 00:26:00,978 கடைசியாக அவர்கள் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட ஒப்புக்கொள்ளவைத்தேன். 305 00:26:00,978 --> 00:26:03,772 ஆஹா, அது அற்புதமானது. 306 00:26:06,733 --> 00:26:08,777 ப்ராஸ்பெக்டஸ் வெளிவந்துவிட்டதா? 307 00:26:08,777 --> 00:26:09,736 அடுத்த வாரம். 308 00:26:09,736 --> 00:26:11,154 மதிப்பீட்டு வரம்பு என்ன? 309 00:26:11,154 --> 00:26:13,115 30 முதல் 50 பில்லியன் யென். 310 00:26:13,115 --> 00:26:15,659 வர்த்தகத்துக்கான அளவு என்ன? 25% இருக்குமா? 311 00:26:15,659 --> 00:26:17,703 இல்லை, இப்போது 10% மட்டும்தான். 312 00:26:17,703 --> 00:26:22,040 அதை உயர்த்தும்படி நிறுவனர்களை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கிறேன், 313 00:26:23,292 --> 00:26:25,586 ஆனால் அவர்கள் பயப்படுகிறார்கள். 314 00:26:25,586 --> 00:26:27,212 அதுதான் உண்மையான பணம். 315 00:26:27,212 --> 00:26:29,548 தெரியும். சம்மதிக்க வைப்பேன் என்று நம்புகிறேன். 316 00:26:31,091 --> 00:26:33,552 ஆனால் இது கண்டிப்பாக இரகசியமானது. 317 00:26:35,721 --> 00:26:37,431 அது நிறுவனத்தின் விதிமுறைகள். 318 00:26:37,431 --> 00:26:39,600 நான் யாரிடம் சொல்லப் போகிறேன்? 319 00:26:40,267 --> 00:26:43,353 எனக்குத் புரிந்ததெல்லாம், நீ மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிகிறது. 320 00:26:45,355 --> 00:26:47,065 இதைப் பற்றி எனக்கு நல்ல உணர்வு இருக்கிறது. 321 00:26:48,233 --> 00:26:50,068 இது பெரியது. 322 00:26:57,367 --> 00:26:58,702 உண்மையைச் சொன்னால், 323 00:26:58,702 --> 00:27:02,247 நீதான் எனக்கு வழி காட்டினாய். 324 00:27:04,291 --> 00:27:05,834 அதாவது எப்படி எச்சரிக்கையோடு இருப்பது என்று. 325 00:27:08,253 --> 00:27:13,342 நீ உன் நிலைப்பாட்டில் நின்று, ஒப்பந்தத்தை முடித்தாய். 326 00:27:14,676 --> 00:27:17,221 அந்த வயதானவள் விற்றுவிட்டாளா? எப்போது? 327 00:27:18,680 --> 00:27:20,974 சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தத்தை முடித்தோம். 328 00:27:23,769 --> 00:27:26,104 அவள் ஒருபோதும் விற்கமாட்டாள் என்றுதானே சொன்னாள்? 329 00:27:27,564 --> 00:27:29,233 அவள் ஏன் மனதை மாற்றிக்கொண்டாள்? 330 00:27:30,108 --> 00:27:32,027 நீ அவளிடம் திரும்பிப் போனாயா? 331 00:27:33,278 --> 00:27:34,404 அது அவருடைய விருப்பம். 332 00:27:35,781 --> 00:27:37,241 அவருக்கு ஏராளமான பணம் கிடைத்தது. 333 00:27:38,367 --> 00:27:39,868 அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. 334 00:27:43,121 --> 00:27:44,873 பாட்டி, என்னை அப்படிப் பார்க்காதீர்கள். 335 00:27:44,873 --> 00:27:48,085 நான் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 336 00:27:49,211 --> 00:27:50,546 என்னை நம்புங்கள். 337 00:27:53,674 --> 00:27:55,092 இந்த சுரைக்காய் நன்றாக இருக்கிறது. 338 00:27:56,510 --> 00:27:58,637 உன் முதல் முறை மோசமாக இல்லை. 339 00:27:59,721 --> 00:28:02,140 உன் பாட்டிக்கு மட்டுமே உதவி செய்தேன். 340 00:28:10,190 --> 00:28:12,067 நான் திரும்பிப் போக வேண்டும். 341 00:28:12,651 --> 00:28:14,653 சுன்ஜா என்னைப் பற்றி கவலைப்படுவாள். 342 00:28:15,946 --> 00:28:17,739 நாம் கொரியாவில் இருந்திருந்தால், 343 00:28:19,241 --> 00:28:22,035 உங்களைப் போன்ற ஒருவரிடம் என்னால் பேசக்கூட முடியாது. 344 00:28:25,622 --> 00:28:26,915 ஆனால் இங்கே... 345 00:28:29,793 --> 00:28:31,545 நீயும் நானும் ஒரு தானியக்களஞ்சியத்தை பகிர்ந்துகொள்கிறோம். 346 00:28:40,596 --> 00:28:42,472 நாம் எப்போதாவது திரும்புவோமா? 347 00:28:45,142 --> 00:28:47,102 என்ன நடந்தாலும் நாம் திரும்புவோம். 348 00:28:49,354 --> 00:28:51,064 நான் இங்கே சாக மாட்டேன். 349 00:28:52,608 --> 00:28:54,109 எனக்கும்தான். 350 00:28:58,572 --> 00:29:00,073 ஒருவேளை நாம் திரும்பினால்... 351 00:29:02,284 --> 00:29:04,453 உங்கள் சோகம் கொஞ்சம் குறையலாம். 352 00:29:08,081 --> 00:29:09,416 என் சோகமா? 353 00:29:09,416 --> 00:29:11,752 உங்கள் கண்களில் தெரிகிறது. 354 00:29:14,588 --> 00:29:16,423 அது என்னை ஒடுக்குகிறது. 355 00:29:18,133 --> 00:29:20,010 ஏனென்றால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. 356 00:29:24,681 --> 00:29:26,892 மறுபடியும் வரம்பு மீறி பேசிவிட்டேன். 357 00:29:29,186 --> 00:29:31,522 நாம் ஒருவருக்கொருவர் சில கதைகளை சொல்லிக்கொண்டதால், 358 00:29:32,231 --> 00:29:34,316 நட்பாகிவிட்டதாக நினைக்காதீர்கள். 359 00:29:51,708 --> 00:29:52,876 கவனி! 360 00:30:00,008 --> 00:30:01,051 உனக்கு ஒன்றுமில்லையே? 361 00:30:01,051 --> 00:30:02,636 நான் நன்றாக இருக்கிறேன். 362 00:30:20,696 --> 00:30:21,905 நாம் அதை வெளியே தள்ள வேண்டும். 363 00:30:22,406 --> 00:30:24,157 நான் ஓடிப் போய் திரு. கிம்மையும் நோவாவையும் கூட்டி வரலாம். 364 00:30:24,157 --> 00:30:26,869 பரவாயில்லை. இதை நாம் இருவருமே செய்யலாம். 365 00:30:30,247 --> 00:30:32,082 மூன்று சொல்லும்போது தள்ளு. 366 00:30:32,082 --> 00:30:33,917 ஒன்று, இரண்டு, மூன்று! 367 00:30:35,460 --> 00:30:37,588 சீக்கிரம், அதைத் தவறவிடுவோம். 368 00:30:48,974 --> 00:30:50,475 ஏராளமாக. 369 00:31:05,449 --> 00:31:06,783 இது அற்புதமாக இருக்கிறது. 370 00:31:13,081 --> 00:31:14,458 ஒன்றைப் பிடித்துவிட்டேன்! 371 00:31:16,585 --> 00:31:17,586 கடைசி முறை. 372 00:31:25,552 --> 00:31:26,803 நகர்கிறது. 373 00:31:29,056 --> 00:31:30,057 அப்படித்தான். 374 00:31:30,641 --> 00:31:31,975 அப்படித்தான்! 375 00:31:33,519 --> 00:31:35,479 போதும். 376 00:31:44,780 --> 00:31:45,822 நாம் செய்துவிட்டோம். 377 00:32:32,995 --> 00:32:33,996 அது ஒன்றுமில்லை. 378 00:32:33,996 --> 00:32:35,247 நாம் இப்படி செய்யக்கூடாது. 379 00:32:35,247 --> 00:32:36,498 சுன்ஜா. 380 00:32:39,209 --> 00:32:41,962 நாம் இருவர்... யார் என்ன சொன்னாலும் இது சரிதான். 381 00:32:41,962 --> 00:32:43,172 எனக்குத் தெரியும். 382 00:32:46,216 --> 00:32:48,802 உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, நான் என் கணவரை இழந்தேன். 383 00:32:48,802 --> 00:32:51,054 அவன் போய்விட்டான். நீ அவனுக்கு எதற்கும் கடன்படவில்லை. 384 00:32:51,054 --> 00:32:52,306 நீங்கள் சொல்வது தவறு. 385 00:32:53,557 --> 00:32:55,100 நான் அவருக்கு எல்லாவற்றுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். 386 00:32:57,311 --> 00:32:58,812 எவ்வளவு காலத்துக்கு? 387 00:33:00,314 --> 00:33:01,315 சொல். 388 00:33:02,232 --> 00:33:04,776 அந்த கல்லறைக்கு இன்னும் எவ்வளவு காலம் சேவை செய்ய வேண்டும்? 389 00:33:07,237 --> 00:33:09,198 நீயும் மகிழ்ச்சிக்கு தகுதியானவள்தான். 390 00:33:09,198 --> 00:33:11,366 நீ எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. 391 00:33:14,244 --> 00:33:16,330 நான் செய்யும் எல்லாமே உனக்காகத்தான். 392 00:33:16,330 --> 00:33:17,998 உனக்கும் நோவாவுக்கும். அவை எல்லாமே! 393 00:33:21,043 --> 00:33:23,545 உன் இதயத்தில், நீ அதை உணர்வது எனக்குத் தெரியும். 394 00:33:24,296 --> 00:33:27,424 என் இதயம்... அதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. 395 00:33:34,890 --> 00:33:35,933 சுன்ஜா. 396 00:34:16,014 --> 00:34:17,641 வெப்பம் தூங்கவிடவில்லையா? 397 00:34:17,641 --> 00:34:19,309 அது அவர்தான், இல்லையா? 398 00:34:20,893 --> 00:34:22,228 அவர்தான் அப்பா. 399 00:34:37,744 --> 00:34:39,161 அது என்ன? 400 00:34:45,002 --> 00:34:46,795 சுஞ்சா, உனக்குத் தெரியும், 401 00:34:47,838 --> 00:34:51,632 அந்த பையனுக்கு தெரியவே கூடாது. 402 00:34:55,804 --> 00:34:56,889 எனக்குத் தெரியும். 403 00:34:58,891 --> 00:35:01,935 உங்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தாலும், 404 00:35:02,769 --> 00:35:04,646 - நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... - அம்மா. 405 00:35:08,734 --> 00:35:10,402 நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. 406 00:35:12,404 --> 00:35:14,239 அது எனக்கே ஞாபகம் இருக்கிறது. 407 00:35:24,791 --> 00:35:26,084 உன்னை குளிப்பாட்டுகிறேன். 408 00:35:30,589 --> 00:35:32,799 அந்த சேற்றை கழுவ வேண்டும். 409 00:35:36,803 --> 00:35:38,388 என்ன பிரச்சினை, திரு. கோ? 410 00:35:38,388 --> 00:35:39,473 வெளியே வா. 411 00:35:40,974 --> 00:35:42,017 என்ன செய்கிறீர்கள்? 412 00:35:43,810 --> 00:35:47,272 நான் கண்டுபிடிக்கமாட்டேன், என்னிடமிருந்து திருடலாம் என்று நினைக்கிறாயா? 413 00:35:47,272 --> 00:35:49,525 என்ன பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை... 414 00:35:52,736 --> 00:35:54,321 என்னை அவ்வளவு முட்டாள் என்று நினைத்தாயா? 415 00:35:54,321 --> 00:35:55,239 மறைந்திரு. 416 00:36:02,120 --> 00:36:05,207 நிறுத்துங்கள்! 417 00:36:05,207 --> 00:36:06,416 தயவுசெய்து. 418 00:36:18,303 --> 00:36:21,598 நிறுத்துங்கள். தயவுசெய்து! 419 00:36:22,224 --> 00:36:24,935 போதும். நிறுத்துங்கள்! 420 00:36:30,357 --> 00:36:32,901 ஆனால் அது ஒரு சில கோழிகள்தான். 421 00:36:32,901 --> 00:36:34,027 என்னை மன்னித்துவிடுங்கள்! 422 00:37:00,345 --> 00:37:01,346 நோவா! 423 00:37:05,767 --> 00:37:06,852 நோவா. 424 00:37:12,566 --> 00:37:13,775 நோவா! 425 00:37:53,315 --> 00:37:56,652 சாலமன், கேள். 426 00:37:58,987 --> 00:38:02,783 நீ என்ன செய்துகொண்டிருந்தாலும், உன் மனதில் என்ன திட்டம் இருந்தாலும், 427 00:38:04,201 --> 00:38:06,286 இனி அதைப்பற்றி நான் கேட்க மாட்டேன். 428 00:38:07,329 --> 00:38:09,414 நான் உன் பொய்களைக் கேட்க விரும்பவில்லை. 429 00:38:10,541 --> 00:38:11,667 அதற்கு பதிலாக, 430 00:38:12,417 --> 00:38:14,503 நான் உன்னிடம் ஒன்றைக் கேட்பேன். 431 00:38:16,880 --> 00:38:19,508 நீ யார் என்பதை மறந்துவிடாதே. 432 00:38:21,051 --> 00:38:22,469 அதை நீ செய்வாயா? 433 00:38:24,805 --> 00:38:25,931 செய்ய நினைக்கிறேன். 434 00:40:15,082 --> 00:40:16,250 ஹலோ. 435 00:40:17,459 --> 00:40:18,585 நான் காடோ. 436 00:40:21,088 --> 00:40:22,381 யார் நீங்கள்? 437 00:40:23,549 --> 00:40:27,177 காடோ, நான் கிம் சுன்ஜா பேசுகிறேன். 438 00:40:29,012 --> 00:40:32,391 எவ்வளவு தாமதமாகிவிட்டது என்று தெரிகிறது. 439 00:40:33,016 --> 00:40:36,395 காலையில் மீண்டும் அழைக்கவா? 440 00:40:37,813 --> 00:40:42,943 பரவாயில்லை. உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறேன். 441 00:40:43,861 --> 00:40:45,153 காத்திருக்கிறீர்களா? 442 00:40:45,153 --> 00:40:47,531 நான் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டேன். 443 00:40:49,616 --> 00:40:52,286 நான் டோக்கியோவில் இருக்கிறேன். 444 00:40:53,287 --> 00:40:55,622 என் பேரனைப் பார்க்க வந்தேன். 445 00:40:55,622 --> 00:40:57,165 அவனைப்பற்றி கவலையாக இருந்தது. 446 00:40:58,333 --> 00:41:01,670 ஆனால் அவனுக்கு ஒரு டேட் இருந்தது. 447 00:41:03,672 --> 00:41:04,840 காதலியா? 448 00:41:07,092 --> 00:41:10,304 இந்த காலத்தில் யாருக்குத் தெரியும்? 449 00:41:10,304 --> 00:41:12,890 அவள் எப்படிப்பட்டவள்? 450 00:41:15,767 --> 00:41:17,352 அவள் ஜப்பானியர். 451 00:41:18,645 --> 00:41:19,646 சரி. 452 00:41:20,522 --> 00:41:23,275 அது பிரச்சினையா? 453 00:41:25,360 --> 00:41:29,198 அதை மாற்ற முடியாது. 454 00:41:30,866 --> 00:41:33,076 நீங்கள் சொன்னது போல, 455 00:41:33,869 --> 00:41:39,875 நீங்களும் நானும் நிறைய பார்த்திருக்கிறோம். 456 00:41:39,875 --> 00:41:43,754 அது உண்மைதான். நாம் இருவரும் இப்போது இளமையாக இல்லை. 457 00:41:45,047 --> 00:41:47,257 ஆனால் எனக்குத் தெரியும், 458 00:41:47,257 --> 00:41:50,010 எனக்கு இருக்கும் கொஞ்ச காலத்தில், 459 00:41:51,053 --> 00:41:54,223 நான் பார்ப்பதை நான் தேர்வு செய்ய வேண்டும். 460 00:41:56,642 --> 00:41:59,478 நாம் அந்த உரிமையைப் பெறவில்லையா? 461 00:43:10,257 --> 00:43:13,427 நோவா, அரிசியை உள்ளே கொண்டு வர உதவு. 462 00:43:13,427 --> 00:43:16,388 இங்கே இன்னும் சில மூட்டைகள் இருக்கின்றன. 463 00:44:38,136 --> 00:44:39,555 அம்மா! 464 00:44:40,848 --> 00:44:43,517 - அது என்ன சத்தம்? - என்ன நடக்கிறது? 465 00:44:43,517 --> 00:44:46,061 - வெளியே போவோம். - விமானத் தாக்குதலா? 466 00:44:46,061 --> 00:44:47,354 அவை வருகின்றனவா? 467 00:44:50,440 --> 00:44:52,067 அது என்ன? 468 00:44:53,443 --> 00:44:54,862 அது அரிசி கொட்டகை. 469 00:46:35,587 --> 00:46:36,880 கியுங்கீ! 470 00:46:42,427 --> 00:46:44,054 கியுங்கீ, பொறுங்கள்! 471 00:46:46,139 --> 00:46:47,224 கியுங்கீ! 472 00:46:50,435 --> 00:46:51,937 நில்லுங்கள்! 473 00:47:01,530 --> 00:47:03,323 நாம் மிகவும் கடினமாக உழைத்தோம். 474 00:47:04,408 --> 00:47:05,617 அந்த எல்லா மாதங்களும்! 475 00:47:06,618 --> 00:47:08,537 அதெல்லாம் எப்படி அழிந்து போகும்? 476 00:47:10,914 --> 00:47:12,958 இது எப்படி நடக்கும்? 477 00:47:14,543 --> 00:47:16,170 எனக்குத் தெரியாது. 478 00:47:16,712 --> 00:47:18,130 நீங்கள் ஏன் வந்தீர்கள்? 479 00:47:19,173 --> 00:47:21,133 நான் உங்களை பின்தொடரச் சொன்னேனா? 480 00:47:23,051 --> 00:47:24,261 ஏன் என்று உங்களுக்கே தெரியும். 481 00:47:34,188 --> 00:47:36,648 உங்களுக்கு சாவுக்கு பிறகான வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் எனக்கு இல்லை. 482 00:47:39,026 --> 00:47:40,819 இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? 483 00:47:45,407 --> 00:47:46,825 ஏனென்றால் எனக்கு இது அவ்வளவுதான். 484 00:47:50,329 --> 00:47:51,997 இந்த ஒரு வாழ்க்கை. 485 00:47:52,664 --> 00:47:54,875 இன்று அமெரிக்கர்கள் வந்தால்... 486 00:47:57,753 --> 00:47:59,963 அவர்கள் நம் மீது குண்டுகளை வீசினால்... 487 00:48:02,758 --> 00:48:04,092 இங்கே... 488 00:48:06,136 --> 00:48:08,722 நான் நல்ல வாழ்க்கை வாழ்ந்தேன் என்று என்னால் நிஜமாக சொல்லிக்கொள்ள முடியுமா? 489 00:48:10,724 --> 00:48:12,267 வாழ்க்கையை நன்றாக வாழ்ந்ததாக? 490 00:48:15,395 --> 00:48:16,563 அப்படியா? 491 00:50:11,220 --> 00:50:13,222 வசனத் தமிழாக்கம் அருண்குமார்