1 00:00:15,766 --> 00:00:17,768 - (ஜப்பானிய மொழியில்) சியர்ஸ். - சியர்ஸ். 2 00:00:24,191 --> 00:00:25,651 காட்டமாக இருக்கிறது. 3 00:00:28,195 --> 00:00:29,613 ஆனால் சுவையாக இருக்கிறதுதானே? 4 00:00:31,031 --> 00:00:32,491 மார்கரிட்டாவா? 5 00:00:32,491 --> 00:00:33,575 ஆம். 6 00:00:41,166 --> 00:00:43,544 இதில் டோர்ட்டியா சிப்ஸை முக்கி எடுங்கள். 7 00:00:52,427 --> 00:00:54,763 - சுவையாக இருக்கிறது. - சுவையாக, ஆம். 8 00:01:00,978 --> 00:01:02,312 ஹலோ. 9 00:01:02,312 --> 00:01:03,939 கொஞ்ச காலமாக உன்னைப் பார்க்கவில்லை. 10 00:01:07,651 --> 00:01:10,112 (கொரிய மொழியில்) இதோ. இதைப் பிடி. 11 00:01:10,112 --> 00:01:12,614 ஏன் இவ்வளவு நேரம்? 12 00:01:14,032 --> 00:01:15,993 நம்மிடம் கிட்டத்தட்ட எல்லாமே தீர்ந்துவிட்டது. 13 00:01:17,077 --> 00:01:18,412 நன்றி. 14 00:01:19,246 --> 00:01:20,998 பாட்டி! எனக்குக் கொஞ்சம் கிம்ச்சி வேண்டும். 15 00:01:20,998 --> 00:01:22,165 வா. 16 00:01:29,381 --> 00:01:31,175 சைனீஸ் நூடுல்ஸ்! 17 00:01:36,305 --> 00:01:38,140 இது சல்சா சாஸ். 18 00:01:38,140 --> 00:01:40,350 - சல்சா. - சல்சா. 19 00:01:44,980 --> 00:01:46,190 நன்றி. 20 00:01:49,193 --> 00:01:50,569 அதைப் பார்த்தீர்களா? 21 00:01:50,569 --> 00:01:55,574 ஒரு விரலை கூட உயர்த்த வேண்டியதில்லை. 22 00:02:16,929 --> 00:02:18,639 அதை நான் செய்கிறேன். 23 00:02:28,232 --> 00:02:30,484 வினோதமாக உணர்கிறேன். 24 00:02:30,984 --> 00:02:34,029 இது மிகவும் சூடாகிவிட்டது. 25 00:02:35,197 --> 00:02:38,158 இரண்டாவது மார்கரிட்டா ரொம்ப அதிகம்தான் போல. 26 00:02:38,158 --> 00:02:40,118 நாம் குடிபோதையில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். 27 00:02:41,787 --> 00:02:43,372 நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம்? 28 00:02:46,625 --> 00:02:51,755 அன்று சாப்பிட்ட இரவு உணவுக்கும் நீங்கள்தான் பணம் கொடுத்தீர்கள். 29 00:02:51,755 --> 00:02:54,174 நான்தான் உங்களை இங்கே அழைத்தேன். 30 00:02:55,717 --> 00:02:58,136 அடுத்த சாகசத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். 31 00:03:02,015 --> 00:03:05,143 - எவ்வளவு? - 3,326 யென்கள். 32 00:03:11,358 --> 00:03:13,777 - கிரெடிட் கார்டுகளை ஏற்பீர்களா? - ஆம். 33 00:03:17,406 --> 00:03:19,032 எனக்கு ரசீது கிடைக்குமா? 34 00:03:21,368 --> 00:03:24,246 இந்த காத்திருப்பு மிகவும் கடினமாக இருக்கிறது. 35 00:03:25,789 --> 00:03:29,334 ஆனால் நாளை சீக்கிரம் வர வேண்டுமா இல்லை வரவே வேண்டாமா என்பதை என்னால் 36 00:03:29,334 --> 00:03:30,752 தீர்மானிக்க முடியாது. 37 00:03:31,753 --> 00:03:33,547 அந்த முட்டாள்தனத்தை நிறுத்து! 38 00:03:34,882 --> 00:03:35,883 அவன் தேர்ச்சி பெற்றுவிட்டான். 39 00:03:36,466 --> 00:03:38,677 நோவா வசேடாவுக்குப் போகிறான். 40 00:03:38,677 --> 00:03:40,470 ஆனால் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? 41 00:03:40,470 --> 00:03:42,598 என்னைப் போன்ற முட்டாள்களுக்குக் கூட தெரியும். 42 00:03:42,598 --> 00:03:44,766 அவன் மிகவும் கஷ்டப்பட்டு படித்தான்... 43 00:03:44,766 --> 00:03:46,435 இதைப் பற்றி பேசியது போதும்! 44 00:03:47,019 --> 00:03:49,062 இப்படியே பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன்? 45 00:03:49,605 --> 00:03:52,858 ஒன்றும் செய்ய முடியாது, எனவே ஏன் அதையே பேச வேண்டும்? 46 00:03:57,946 --> 00:03:59,531 நாளை நமக்குத் தெரிந்துவிடும். 47 00:04:01,867 --> 00:04:03,327 அது நம் கையில் இல்லை. 48 00:04:06,538 --> 00:04:12,127 சைனீஸ் நூடுல்ஸ்! நல்ல விலை! வாருங்கள்! வாருங்கள்! 49 00:04:12,127 --> 00:04:17,716 சைனீஸ் நூடுல்ஸ்! நல்ல விலை! வாருங்கள்! 50 00:04:17,716 --> 00:04:19,134 சுவையான நூடுல்ஸ்! 51 00:04:20,469 --> 00:04:23,263 அவர்கள் விரும்புவது நம்மிடம் வேலை வாங்குவதுதான். 52 00:04:23,263 --> 00:04:24,556 அது சரிதான்! 53 00:04:25,933 --> 00:04:32,606 இந்த தோல்வியடைந்த ஜப்பானிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப இரத்தம் சிந்திய கைகள்! 54 00:04:34,107 --> 00:04:38,278 அப்போதும் கூட, அவர்கள் நம் பள்ளிகளை இடித்து தள்ளுகிறார்கள், 55 00:04:38,278 --> 00:04:41,448 நம் பெயர்களை அவர்களின் பொது பதிவேட்டில் பதிவிடும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். 56 00:04:42,407 --> 00:04:44,576 நாம் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். 57 00:04:44,576 --> 00:04:45,869 நீங்கள் சொல்வது சரிதான்! 58 00:04:47,204 --> 00:04:48,705 அதனால் ஏற்பட்ட அவமானம்! 59 00:04:52,251 --> 00:04:56,505 நாம் நம் சுய இருப்புக்கான போராட்டத்தில் இருக்கிறோம். 60 00:04:57,631 --> 00:05:02,010 அவர்களுடைய போர் முடிந்திருக்கலாம், ஆனால் நம்முடைய போர் தொடர்கிறது! 61 00:05:04,513 --> 00:05:08,350 இங்கே மட்டுமில்லை, ஆனால் நம்முடைய தாய்நாட்டிலும்தான். 62 00:05:08,350 --> 00:05:12,563 ஊழல் முதலாளித்துவ சக்திகள் நம் தேசத்தை துண்டாட அச்சுறுத்தும் இடத்தில். 63 00:05:12,563 --> 00:05:17,276 - ஆம்! - ஜெஜூவில் என்ன நடந்தது என்று பாருங்கள்! 64 00:05:17,276 --> 00:05:19,945 ஜெஜூ! 65 00:05:19,945 --> 00:05:22,155 கோபப்பட நமக்கு உரிமை இருக்கிறது! 66 00:05:22,155 --> 00:05:23,782 அது சரிதான்! 67 00:05:24,366 --> 00:05:28,620 ஒட்டுமொத்த கிராமங்களும் படுகொலை செய்யப்பட்டபோதும் கோபப்படாமல் எப்படி இருப்பது? 68 00:05:29,413 --> 00:05:31,707 நம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 69 00:05:31,707 --> 00:05:38,380 நம் தாய்மொழியை பேசுபவர்களாலேயே நம் தாய் தந்தையரின் ரத்தம் சிந்தப்பட்டது. 70 00:05:41,800 --> 00:05:46,096 ஆனால் அப்படி சொன்னாலும், நாம் நம் கொரிய சகோதரர்களைக் குறை சொல்லக்கூடாது. 71 00:05:46,680 --> 00:05:50,642 நம்மை விடுவிக்க வந்தவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் 72 00:05:50,642 --> 00:05:53,520 கேடுகெட்ட அமெரிக்கர்களால் அவர்கள் புனிதத்தன்மையை இழந்துவிட்டனர்! 73 00:05:54,104 --> 00:05:55,814 அது சரிதான்! 74 00:05:55,814 --> 00:05:58,233 போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது! 75 00:05:58,233 --> 00:06:01,111 - போராடுவோம்! - நம் நாட்டுக்காக! 76 00:06:01,695 --> 00:06:04,239 நாம் போராடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்! 77 00:06:05,365 --> 00:06:07,034 கொரியர்களுக்காக! 78 00:06:07,659 --> 00:06:09,620 கொரியர்களால்! 79 00:06:10,287 --> 00:06:11,997 ஒரு நாட்டிற்காக! 80 00:06:12,873 --> 00:06:15,501 எல்லோரும் கோஷமிடுவோம்! 81 00:06:16,376 --> 00:06:23,217 - வாழ்க கொரியா! - வாழ்க கொரியா! 82 00:07:56,602 --> 00:07:58,854 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 83 00:08:40,229 --> 00:08:42,397 திரு. கிம்! தயவுசெய்து, சொல்வதைக் கேள்... 84 00:08:42,397 --> 00:08:43,482 எனவே அது நீதான். 85 00:08:45,859 --> 00:08:48,987 என் மனைவியின் பிரச்சினை உனக்கே தெரியும். இன்னும் உடல்நிலை சரியில்லை. 86 00:08:49,738 --> 00:08:51,657 வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை! 87 00:08:53,367 --> 00:08:54,368 தயவுசெய்து! 88 00:09:08,799 --> 00:09:12,177 பிலோஃபன் 89 00:09:12,177 --> 00:09:13,762 - ஹேய். - ஆம், சார். 90 00:09:14,555 --> 00:09:15,764 இதை பின்பக்கம் எடுத்துச்செல். 91 00:09:15,764 --> 00:09:18,267 எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார். 92 00:09:18,267 --> 00:09:19,351 சரி, சார். 93 00:09:28,902 --> 00:09:30,320 உட்காரு. 94 00:09:30,320 --> 00:09:32,322 வேறு எதுவும் இல்லை என்றால், வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கிறேன். 95 00:09:32,322 --> 00:09:33,615 உட்காரு என்றேன். 96 00:09:45,878 --> 00:09:47,296 அதுதான் கடைசி. 97 00:09:48,463 --> 00:09:51,049 உங்களுக்கு ஏற்கனவே மற்ற வேலைகள் இருக்கும் என்று நம்புகிறேன். 98 00:09:51,592 --> 00:09:53,343 எனக்கு உங்களைப் பற்றி கவலையில்லை. 99 00:09:54,094 --> 00:09:56,638 அமெரிக்கர்கள் வெளியேறும்போது என்ன நடக்கும் என்று நினைக்கிறாய்? 100 00:09:56,638 --> 00:09:58,473 தெருவில் விபச்சாரிகளின் எண்ணிக்கை குறையும். 101 00:09:59,600 --> 00:10:01,560 தெருவில் எப்போதும் விபச்சாரிகள் இருப்பார்கள். 102 00:10:02,686 --> 00:10:04,396 நல்லதோ கெட்டதோ, 103 00:10:04,897 --> 00:10:07,858 இந்த நாட்டிற்கு சுதந்திரமாக இருப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. 104 00:10:08,358 --> 00:10:10,444 இந்த நாடு என்ன செய்கிறது என்பதில் எனக்கு என்ன கவலை? 105 00:10:10,444 --> 00:10:12,112 இதுபோன்ற முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லாதே. 106 00:10:12,613 --> 00:10:14,031 உனக்கே நன்றாகத் தெரியும், 107 00:10:14,990 --> 00:10:16,450 அதன் விளைவு எல்லோரையும் பாதிக்கும். 108 00:10:16,450 --> 00:10:19,536 எனவே எல்லாமே போருக்கு முந்தைய நிலைமைக்கு திரும்பும். 109 00:10:19,536 --> 00:10:21,079 அப்போதும் நிலைமை மோசம்தான். 110 00:10:22,497 --> 00:10:24,750 நாம் அந்த நிலைமைக்குத் திரும்ப முடியாது. 111 00:10:27,628 --> 00:10:29,463 ஆனால் அது நமக்கு ஒரு வாய்ப்பு. 112 00:10:31,840 --> 00:10:35,052 கள்ள சந்தைகள் நம்முடையது, என்னிடம் திட்டம் இருக்கிறது. 113 00:10:35,886 --> 00:10:37,346 உனக்கும்தான். 114 00:10:38,931 --> 00:10:41,517 நீ நீண்ட காலம் என் அடியாளாக இருக்க மாட்டாய். 115 00:10:44,186 --> 00:10:45,479 எனக்குப் புரிகிறது. 116 00:10:47,272 --> 00:10:49,483 - யூகி. - எனக்கு அது தேவையில்லை. 117 00:10:50,025 --> 00:10:51,401 நீ ஒன்றும் துறவியில்லை. 118 00:10:55,781 --> 00:10:57,741 அவனை நன்றாக கவனித்துக்கொள். 119 00:10:58,575 --> 00:11:00,744 அவன் பிரச்சினைகளை மறக்க செய். 120 00:12:34,630 --> 00:12:35,672 திரு. சுகிஹாரா. 121 00:12:35,672 --> 00:12:37,883 சொல்லாமல் வந்ததற்கு மன்னித்துவிடு. 122 00:12:39,218 --> 00:12:43,096 திரு. யோஷி ஒரு தகவலை சொல்லச் சொன்னார். 123 00:12:54,316 --> 00:12:55,359 என்ன விஷயம்? 124 00:12:56,860 --> 00:12:59,947 திரு. யோஷி தன்னுடைய வருத்தங்களை தெரிவித்தார். 125 00:13:01,240 --> 00:13:07,996 ஆனால் உன் நிலைமையை நீ முழுமையாக புரிந்துகொள்வது நல்லது என்று அவர் நம்புகிறார். 126 00:13:08,664 --> 00:13:10,707 அது அவருடைய எண்ணம். 127 00:13:10,707 --> 00:13:12,167 என்னுடைய நிலைமையா? 128 00:13:24,346 --> 00:13:27,683 அவன் பெயர் குனிசானே சுயோஷி. 129 00:13:29,017 --> 00:13:31,019 குனிசானே குடும்பத்தின் மூத்த மகன். 130 00:13:36,233 --> 00:13:37,234 அதனால்... 131 00:13:38,443 --> 00:13:40,821 முன்னாள் காதலனா? 132 00:13:40,821 --> 00:13:44,783 இல்லை. அந்த புகைப்படம் சில நாட்கள் முன்பு எடுக்கப்பட்டது. 133 00:13:47,244 --> 00:13:48,287 அதேதான். 134 00:13:49,538 --> 00:13:51,999 உனக்குத் தெரியாது என்று திரு. யோஷி நினைத்தார். 135 00:13:54,293 --> 00:13:56,795 இன்று மாலை அவள் என்ன செய்கிறாள் என்று அவளிடம் நீ கேட்டுப்பார்... 136 00:13:56,795 --> 00:13:58,088 திரு. யோஷி தன்னுடைய 137 00:13:58,755 --> 00:14:02,217 தாத்தாவின் உலகத்திலிருந்து தன் உறவை துண்டித்துவிட்டதாக என்னிடம் சொன்னார். 138 00:14:03,385 --> 00:14:07,306 யகுசா மட்டும்தான் இந்த கேவலமான தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறாயா? 139 00:14:08,307 --> 00:14:11,810 சமரசமாக நடந்துகொள்வதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது உன் உலகத்திலும் நடைபெறுகிறது. 140 00:14:14,479 --> 00:14:16,481 அது மனித இயல்பு. 141 00:14:18,525 --> 00:14:21,445 யார் நீ? நிஜமாகவே? 142 00:14:33,081 --> 00:14:35,792 எனக்கு உன்னைப் போல நன்றாக கொரிய மொழி பேச வராது. 143 00:14:36,543 --> 00:14:39,796 உண்மை என்னவென்றால் எனக்குப் பேசத் தெரியாது. 144 00:14:40,631 --> 00:14:42,466 நீ ஜப்பானில் வசிக்கிறாயா? 145 00:14:43,967 --> 00:14:45,761 உன் குடும்பத்தைப் போல, 146 00:14:46,553 --> 00:14:49,890 என் தாத்தா பாட்டி போருக்கு முன்பாக இங்கே வந்தார்கள். 147 00:14:51,308 --> 00:14:52,351 ஆனால்... 148 00:14:53,644 --> 00:14:56,271 அதுதான் நமக்குள் இருக்கும் பொதுவான விஷயம். 149 00:14:58,899 --> 00:15:00,567 உனக்குச் சொல்கிறேன். 150 00:15:02,319 --> 00:15:04,696 எனக்கு திரு. யோஷியை பல வருடங்களாக தெரியும். 151 00:15:05,280 --> 00:15:08,575 அவர் அடிக்கடி நிலையை மாற்றிக்கொள்பவரோ, சூதாடியோ இல்லை. 152 00:15:08,575 --> 00:15:12,663 குழப்பம் அல்லது நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்பவரோ இல்லை. 153 00:15:13,205 --> 00:15:17,209 அவருக்கு சந்தேகம் வந்தால், உன் உறவை துண்டித்துவிடுவார். 154 00:15:17,209 --> 00:15:21,797 அவர் சமரசம் செய்யப்பட்டதாக உணர்ந்தால்... 155 00:15:23,757 --> 00:15:25,676 இன்னும் மோசமாக நடந்துகொள்வார். 156 00:15:28,095 --> 00:15:31,390 திரு. யோஷி அந்த கோல்ஃப் மைதானத்தை விரும்புகிறார். 157 00:15:48,407 --> 00:15:51,326 நான்கு இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்து, 158 00:15:51,326 --> 00:15:54,329 அவர்களில் ஒருவரின் தலையை துண்டித்ததற்காக கடந்த வாரம் சுடோமு மியாசாகி 159 00:15:54,329 --> 00:15:56,874 கைது செய்யப்பட்டார். 160 00:15:56,874 --> 00:15:59,751 - ஹலோ. - நான்தான். 161 00:16:00,252 --> 00:16:03,046 உன் குரலைக் கேட்பதற்காக அழைத்தேன். 162 00:16:03,547 --> 00:16:04,882 உன்னை மிஸ் செய்கிறேன். 163 00:16:04,882 --> 00:16:06,258 நானும்தான். 164 00:16:06,258 --> 00:16:10,429 ஆனால் இந்த தாக்கல், எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் ஆகிறது. 165 00:16:10,429 --> 00:16:12,139 உனக்கு ஓய்வு தேவை. 166 00:16:12,139 --> 00:16:14,850 இன்றிரவு நாம் சேர்ந்து சாப்பிடலாமா? 167 00:16:16,435 --> 00:16:21,231 ஆசைதான், ஆனால் எல்லாம் அச்சிடப்படும் வரை நான் காத்திருக்க வேண்டும். 168 00:16:22,524 --> 00:16:24,443 ஆனால் இந்த வார இறுதி எப்படி? 169 00:16:24,443 --> 00:16:26,028 அப்போதே அதைச் செய்வோம். 170 00:16:26,695 --> 00:16:29,156 நான் வேலைக்குத் திரும்ப வேண்டும். 171 00:16:30,115 --> 00:16:31,491 உன்னைப் பிறகு அழைக்கிறேன். 172 00:16:36,705 --> 00:16:38,207 அவசரம் 173 00:16:38,207 --> 00:16:39,917 சிசிஐ சர்வதேச வங்கி 174 00:16:51,386 --> 00:16:55,724 பேமெண்ட் டிமாண்ட். தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள். 175 00:16:57,726 --> 00:16:59,019 மொஸாசு. 176 00:16:59,019 --> 00:17:02,773 உனக்குப் பிடித்த நூடுல்ஸ் கடையிலிருந்து நீ சாப்பிட ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். 177 00:17:02,773 --> 00:17:04,608 உனக்குப் பசிக்கவில்லையா? சாப்பிடு. 178 00:17:06,944 --> 00:17:10,446 இன்று மதிய உணவில் இருந்து என் வயிறு நிரம்பி இருக்கிறது. 179 00:17:10,446 --> 00:17:12,366 பல நாட்களுக்குப் பசிக்காது என்று நினைக்கிறேன். 180 00:17:13,325 --> 00:17:15,243 மதிய உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? 181 00:17:15,953 --> 00:17:18,579 ஒரு நண்பருடன் மெக்சிகன் உணவகத்துக்குப் போனேன். 182 00:17:18,579 --> 00:17:21,208 மெக்சிகன் உணவகத்துக்கா? நீங்களா? 183 00:17:21,750 --> 00:17:22,876 ஆம், நான்தான். 184 00:17:23,794 --> 00:17:25,712 அது நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறதா? 185 00:17:26,672 --> 00:17:28,089 யார் அந்த நண்பர்? 186 00:17:31,260 --> 00:17:33,679 பறவைகளுக்கு என்னோடு சேர்ந்து உணவளிக்கும் ஒரு நண்பர். 187 00:17:33,679 --> 00:17:35,347 உனக்குப் புரியாது. 188 00:17:35,848 --> 00:17:37,099 பறவைகளா? 189 00:17:38,517 --> 00:17:41,979 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? யாரையாவது பார்க்கிறீர்களா? 190 00:17:43,021 --> 00:17:44,940 நான் அவரை மளிகை கடையில் சந்தித்தேன். 191 00:17:45,732 --> 00:17:47,943 அவர் மிகவும் நல்ல மனிதர். 192 00:17:47,943 --> 00:17:52,322 ஆனால் நீ நிஜமாகவே அந்த மெக்சிகன் உணவகத்தில் சாப்பிட்டு பார்க்க வேண்டும். 193 00:17:52,322 --> 00:17:54,199 உணவு காரமாக இருந்தது. 194 00:17:54,199 --> 00:17:57,369 அந்த மார்கரிட்டா... 195 00:17:57,911 --> 00:17:59,621 அது மிகவும் காட்டமாக இருந்தது. 196 00:18:00,497 --> 00:18:02,040 இப்போது பின்பக்கம் சுத்தம் செய்யப் போகிறேன். 197 00:18:11,675 --> 00:18:14,428 நீங்கள் இந்த வழியில் வரலாம். இந்த வழியில். 198 00:18:16,430 --> 00:18:18,223 ஒருவரையொருவர் தள்ளாதீர்கள். 199 00:18:20,100 --> 00:18:21,476 வரிசையில் நில்லுங்கள். 200 00:18:25,898 --> 00:18:27,482 அந்த பையன் எங்கே? 201 00:18:27,482 --> 00:18:29,401 அவன் இந்நேரம் வந்திருக்க வேண்டும். 202 00:18:29,401 --> 00:18:32,821 காத்திருப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியாது என்று நீதானே சொன்னாய்? 203 00:18:38,243 --> 00:18:39,745 சீக்கிரம் வந்துவிடுவான். 204 00:18:57,888 --> 00:19:00,098 வசேடா பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவோரின் பட்டியல் 205 00:19:30,420 --> 00:19:31,797 அம்மா! 206 00:19:37,052 --> 00:19:38,971 வாழ்க கொரியா! 207 00:19:43,684 --> 00:19:45,018 இங்கிருக்கிறாய். 208 00:20:01,159 --> 00:20:02,286 ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான படிப்புகள் 209 00:20:02,286 --> 00:20:03,787 உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 210 00:20:03,787 --> 00:20:06,164 முதல் ஆண்டுகளுக்கான வகுப்புகளின் பட்டியல் இதோ. 211 00:20:06,164 --> 00:20:07,666 நான் ஏன் பதட்டமாக இருக்கிறேன்? 212 00:20:10,711 --> 00:20:14,339 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வரலாறு. ரொமாண்டிசிசம் பற்றிய கவலைகள். 213 00:20:14,339 --> 00:20:17,467 - அரசுப் பத்திரங்களின் கோட்பாடு. - ச்சே! சித்திரவதை போல தெரிகிறது. 214 00:20:17,467 --> 00:20:19,428 உறுதியாக அதைப் படிக்க விரும்புகிறாயா? 215 00:20:20,637 --> 00:20:22,764 பேசுவதை நிறுத்திவிட்டு சாப்பிடு. 216 00:20:22,764 --> 00:20:25,559 எப்படியும் அந்த வாயிலிருந்து பயனுள்ள எதுவும் வருவதில்லை. 217 00:20:25,559 --> 00:20:28,812 நான் உன்னோடு டோக்கியோவுக்கு ஓடிவந்துவிடலாம். 218 00:20:28,812 --> 00:20:33,317 இந்த பேச்சுகளுக்கு உன் சலிப்பான வகுப்புகளே மேலானதாக இருக்க வேண்டும். 219 00:20:33,317 --> 00:20:35,444 என்ன சொன்னாய்? 220 00:20:36,486 --> 00:20:38,572 நோவா. அது என்ன? 221 00:20:40,532 --> 00:20:42,284 மற்ற செலவுகளின் பட்டியல் இருக்கிறது. 222 00:20:43,869 --> 00:20:45,120 என்ன மாதிரியானவை? 223 00:20:45,913 --> 00:20:47,372 நுழைவு கட்டணம், 224 00:20:47,998 --> 00:20:50,501 புத்தகங்கள், மாணவர் செயல்பாடுகள், 225 00:20:51,084 --> 00:20:53,629 பரிசோதனை பயிற்சி, உபகரண செலவுகள்... 226 00:20:54,129 --> 00:20:55,422 மொத்த தொகை எவ்வளவு? 227 00:20:57,174 --> 00:20:58,926 சுமார் 2,400 யென். 228 00:21:01,970 --> 00:21:04,848 கல்வி மற்றும் தங்கும் செலவு இல்லாமலா? 229 00:21:08,560 --> 00:21:09,978 நாம் என்ன செய்வது? 230 00:21:12,356 --> 00:21:14,775 திரு. கோவிடம் உதவி கேட்கலாம். 231 00:21:14,775 --> 00:21:18,320 இல்லை. வேறு ஒருவருடைய பணமும் எனக்கு வேண்டாம். 232 00:21:19,530 --> 00:21:22,741 நோவா. நாம் முழுவதையும் திருப்பித் தந்துவிடுவோம். 233 00:21:23,867 --> 00:21:26,036 கல்லூரிக்குப் பக்கத்தில் தந்தி அலுவலகம் இருக்கும் என்று நம்புகிறேன். 234 00:21:26,036 --> 00:21:28,121 எனக்கு அங்கே வேலை கிடைக்கும். 235 00:21:28,121 --> 00:21:29,206 இல்லை. 236 00:21:30,207 --> 00:21:32,668 கடந்த இரண்டு ஆண்டுகள் உனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பார்த்தேன். 237 00:21:32,668 --> 00:21:34,545 நீ உன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 238 00:21:34,545 --> 00:21:38,173 - ஆனால், அம்மா, கட்டணம்... - பணத்தை ஏற்பாடு செய்வோம். 239 00:21:39,049 --> 00:21:40,968 திரு. கோவிடம் பணம் வாங்காமலேயே. 240 00:21:40,968 --> 00:21:42,344 எப்படி? 241 00:21:42,344 --> 00:21:44,972 அதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. 242 00:21:46,265 --> 00:21:48,350 இப்போது சாப்பிடுங்கள். உணவு ஆறி போய்விடும். 243 00:21:49,893 --> 00:21:52,271 ஆம், சாப்பிடுங்கள். 244 00:21:53,230 --> 00:21:54,314 இதோ, இதைச் சாப்பிடு. 245 00:22:07,828 --> 00:22:10,581 சகாய் கையால் செய்யப்பட்ட தோல் பொருட்கள் 246 00:23:50,556 --> 00:23:51,807 மாலை வணக்கம். 247 00:23:52,307 --> 00:23:54,726 சரியான இடத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை. 248 00:23:55,435 --> 00:23:56,812 விருந்தினரின் பெயர் என்ன? 249 00:23:59,773 --> 00:24:00,774 சார்? 250 00:24:07,155 --> 00:24:09,116 - சியர்ஸ். - சியர்ஸ். 251 00:25:01,877 --> 00:25:03,253 என்ன செய்கிறாய்? 252 00:25:04,171 --> 00:25:05,339 அம்மா. 253 00:25:10,761 --> 00:25:11,970 என்ன இதெல்லாம்? 254 00:25:12,804 --> 00:25:16,808 சில மாதங்களுக்கு முன்பு நமக்கு கிடைத்த சர்க்கரை கொஞ்சம் இருப்பது நினைவிற்கு வந்தது. 255 00:25:17,351 --> 00:25:20,395 அது கொஞ்சம் மிட்டாய்கள் செய்ய போதுமானதாக இருக்க வேண்டும். 256 00:25:20,395 --> 00:25:24,274 அவை நன்றாக விற்றால், இன்னும் கொஞ்சம் சர்க்கரையைப் பெற முயற்சி செய்யலாம். 257 00:25:27,444 --> 00:25:30,364 பஸ் நிறுத்தத்துக்குப் பக்கத்தில் இரண்டாவது வண்டியை அமைக்கலாம். 258 00:25:30,364 --> 00:25:34,117 அதை பயன்படுத்தும் நிறைய இளைஞர்களும் குடும்பங்களும் இருக்கிறார்கள். 259 00:25:39,706 --> 00:25:42,459 உணவகம் என்ன ஆனது? 260 00:25:50,008 --> 00:25:51,385 சில வருடங்கள் காத்திருப்போம். 261 00:25:52,219 --> 00:25:53,762 நோவா கல்லூரி படிப்பை முடிக்கட்டும். 262 00:25:54,972 --> 00:25:57,724 ஆம், அப்புறம் பார்க்கலாம். 263 00:26:11,113 --> 00:26:12,447 அம்மா. 264 00:26:12,447 --> 00:26:14,283 தூங்குங்கள். என்னால் இதைச் செய்ய முடியும். 265 00:26:14,283 --> 00:26:17,286 இப்போது தூக்கம் வரும் என்று நினைக்கிறாயா? 266 00:26:22,082 --> 00:26:23,417 சீக்கிரம், அதை கொண்டு வா. 267 00:26:38,849 --> 00:26:42,436 சத்தியமாக, உங்களுக்கு இவற்றை தெரியாதென்று தெரிந்திருந்தால், 268 00:26:42,936 --> 00:26:44,813 நான் அதை ஒருபோதும் செய்திருக்க மாட்டேன். 269 00:26:44,813 --> 00:26:48,775 ஆனால் நீங்களும் குடும்பத்தினரும் கள்ளச் சந்தையில் இருந்து வெளியேறுவதாக கேள்விப்பட்டோம். 270 00:26:49,902 --> 00:26:50,903 யார் அப்படி சொன்னது? 271 00:26:51,612 --> 00:26:53,113 எல்லோரும்தான் சொல்கிறார்கள். 272 00:26:56,200 --> 00:26:59,286 கைப்பற்ற முயற்சிக்கும் அந்த நபர், 273 00:26:59,286 --> 00:27:00,704 அவனுடைய பெயர் என்ன? 274 00:27:06,793 --> 00:27:08,337 நீ அவனைப் பார்த்து பயப்படுகிறாயா? 275 00:27:09,463 --> 00:27:11,381 நான் சில விஷயங்களைக் கேள்விப்பட்டேன். 276 00:27:11,381 --> 00:27:14,301 தயவுசெய்து, நான் அதில் ஈடுபட மாட்டேன். 277 00:27:21,600 --> 00:27:22,893 யோஷி இசாமு. 278 00:27:23,560 --> 00:27:25,312 சத்தியமாக அவ்வளவுதான் எனக்குத் தெரியும். 279 00:27:33,362 --> 00:27:36,114 அவனைப் பற்றிய எல்லாவற்றையும் நீ கண்டுபிடி. 280 00:27:36,615 --> 00:27:39,993 எதையும் விட்டுவிட கூடாது. எனக்கு எல்லாம் தெரிய வேண்டும். 281 00:28:05,644 --> 00:28:07,437 எவ்வளவு காலமாக அவனைப் பார்க்கிறாய்? 282 00:28:07,437 --> 00:28:09,398 அது அப்படியில்லை. 283 00:28:10,190 --> 00:28:11,692 பிறகு என்ன அது? 284 00:28:13,360 --> 00:28:16,488 எங்கள் குடும்பங்களுக்கு இடையே நீண்ட கால பழக்கம் இருக்கிறது. 285 00:28:19,032 --> 00:28:20,242 எங்களுடைய சிறு வயதிலிருந்தே, 286 00:28:20,242 --> 00:28:23,787 நாங்கள் சரியான ஜோடியாக இருப்போம் என்று எங்கள் பெற்றோர்கள் மனதில் பதிந்துவிட்டது. 287 00:28:24,496 --> 00:28:26,331 அவன் அப்படித்தான் நினைக்கிறானா? 288 00:28:28,417 --> 00:28:30,711 அவனுடைய பெற்றோர்கள் நினைப்பதை அவனும் நினைக்கிறான். 289 00:28:34,464 --> 00:28:35,716 நீ? 290 00:28:37,885 --> 00:28:41,305 என்னை நானே சமாதானப்படுத்த முயன்ற ஒரு காலம் இருந்தது. 291 00:28:44,266 --> 00:28:45,851 ஆனால் இனி இல்லை. 292 00:28:47,227 --> 00:28:48,854 ஆனால் நீ... 293 00:28:50,022 --> 00:28:51,523 நீயும் அதற்கு ஒப்புக்கொண்டாய். 294 00:28:52,024 --> 00:28:53,817 அவர்கள் என் பெற்றோர்கள். 295 00:28:53,817 --> 00:28:55,444 நான் என்ன செய்வது? 296 00:28:55,944 --> 00:28:59,740 நான் உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரியும். 297 00:29:01,700 --> 00:29:03,327 ஆம், நீ சொல்லியிருக்க வேண்டும். 298 00:29:09,416 --> 00:29:13,212 இதைக் காப்பாற்ற வழியே இல்லையா? 299 00:29:15,464 --> 00:29:20,469 இனி ஒருபோதும் திரும்பிப் பார்க்கமாட்டாய் என்று எனக்கு சத்தியம் செய்கிறாயா? 300 00:29:21,261 --> 00:29:22,471 இனி ஒருபோதும் பார்க்க மாட்டேன். 301 00:29:24,640 --> 00:29:25,974 அதை உன்னால் செய்ய முடியுமா? 302 00:29:27,518 --> 00:29:29,311 நான் முயற்சிக்க விரும்புகிறேன். 303 00:29:32,314 --> 00:29:34,149 அது போதாது. 304 00:29:38,946 --> 00:29:41,865 அடுத்த ஜென்மத்தில், ஒருவேளை. 305 00:29:43,116 --> 00:29:46,203 அல்லது நீ நீயாகவும், 306 00:29:47,996 --> 00:29:49,665 நான் நானாகவும் இல்லாதபோது. 307 00:29:51,708 --> 00:29:53,752 அதுதானே உண்மை? 308 00:30:14,648 --> 00:30:15,858 நீ... 309 00:30:19,486 --> 00:30:22,030 அபேவின் கடனை திருப்பி கேள். 310 00:30:23,532 --> 00:30:24,867 அபே? 311 00:30:25,367 --> 00:30:26,827 ஆனால் ஏன்? 312 00:30:33,417 --> 00:30:34,501 இல்லை. 313 00:30:34,501 --> 00:30:37,629 புதைந்திருந்த எலும்புகள் பற்றிய கதை, அதை நீதான் கசியவிட்டாயா? 314 00:30:37,629 --> 00:30:39,548 உன்னை இதில் இழுத்துவிட நான் ஒருபோதும் நினைக்கவில்லை. 315 00:30:40,716 --> 00:30:41,717 நீ என்னை நம்ப வேண்டும். 316 00:30:42,384 --> 00:30:45,554 ஆனால் இப்போது, அது பணத்தைப் பற்றியது மட்டுமில்லை. 317 00:30:45,554 --> 00:30:47,306 அவர் தெரிந்துகொள்ள வேண்டும். 318 00:30:47,806 --> 00:30:48,891 இல்லை. 319 00:30:48,891 --> 00:30:52,853 நான் இங்கே இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். 320 00:30:52,853 --> 00:30:54,271 நீ சொன்னாலும்... 321 00:30:54,271 --> 00:30:55,898 நான் கேட்கிறேன். தயவுசெய்து. 322 00:30:55,898 --> 00:30:57,524 அதை நீ என்னிடம் கேட்க முடியாது! 323 00:30:59,359 --> 00:31:03,113 அது அபேவை அழித்தாலும், நான் அவருக்குச் செய்தது பற்றிய வதந்திகள் பரவும். 324 00:31:03,113 --> 00:31:04,865 முழு துறைக்கும் தெரிந்துவிடும். 325 00:31:04,865 --> 00:31:06,450 மன்னித்துவிடு, ஆனால் என்னால் முடியாது. 326 00:31:07,201 --> 00:31:08,535 அது உனக்கே தெரியும். 327 00:31:13,207 --> 00:31:17,127 அப்படியென்றால், நான் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன். நான் செய்வேன் என்று உனக்குத் தெரியும். 328 00:31:18,212 --> 00:31:24,718 உன்னைத் தடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 329 00:32:40,252 --> 00:32:41,795 என்னைப் பார்க்க விரும்பினீர்களா? 330 00:33:00,689 --> 00:33:02,107 இதை எடுத்துவிடு. 331 00:33:10,490 --> 00:33:12,117 புதிய மருத்துவர் என்ன சொன்னார்? 332 00:33:13,285 --> 00:33:14,912 அதெல்லாம் முடிந்துவிட்டன. 333 00:33:21,251 --> 00:33:26,798 நீயும் நானும், எப்பொழுதும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம், இல்லையா? 334 00:33:29,343 --> 00:33:35,182 வெளிப்படையாக பேசுவதின் பலத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். 335 00:33:36,183 --> 00:33:38,310 அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 336 00:33:39,770 --> 00:33:40,896 ஆம். 337 00:33:42,689 --> 00:33:45,275 இப்போதெல்லாம் எல்லோரும் அதிகமாக பேசுகிறார்கள். 338 00:33:46,693 --> 00:33:49,029 அவர்கள் எதையாவது உளறுகிறார்கள். 339 00:33:50,113 --> 00:33:52,866 ஆனால் அமெரிக்கர்கள் சீக்கிரம் போய்விடுவார்கள். 340 00:33:54,284 --> 00:33:56,703 அப்போது உங்கள் வளர்ந்துவரும் நட்சத்திரம் அதிகாரத்துக்கு வருவான். 341 00:33:57,204 --> 00:33:59,289 குரோகனே. 342 00:33:59,289 --> 00:34:02,668 உனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்திவிட்டாய். 343 00:34:02,668 --> 00:34:06,046 ஆனால் அவன் தான் செய்ய வேண்டிய வேலையைப் புரிந்துவைத்திருக்கிறான். 344 00:34:07,297 --> 00:34:10,801 அவனுக்கு இன்னும் வயது போதாது, ஆனால் மிகவும் திமையானவன். 345 00:34:10,801 --> 00:34:12,636 லட்சியவாதி. 346 00:34:14,137 --> 00:34:18,308 நீங்கள் இரண்டையும் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 347 00:34:20,018 --> 00:34:21,770 கட்சி இன்னும் வளர்ந்து வருகிறது. 348 00:34:21,770 --> 00:34:25,482 விசுவாசங்கள் மாறும். 349 00:34:25,482 --> 00:34:26,483 அதேதான். 350 00:34:28,569 --> 00:34:30,237 அந்த காரணத்துக்காகத்தான்... 351 00:34:33,447 --> 00:34:36,577 அதை உறவால் இணைக்க திட்டமிட்டிருக்கிறேன். 352 00:34:40,414 --> 00:34:45,085 உன்னுடைய விசுவாசம் கூட அப்படித்தான் பெறப்பட்டது. 353 00:34:46,920 --> 00:34:50,924 பாதி ஜப்பானியராக இருந்தாலும், கெய்கோவை அவன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தது, 354 00:34:50,924 --> 00:34:55,637 நம் குடும்பத்தின் மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 355 00:34:55,637 --> 00:34:57,054 நான் அதை அனுமதிக்க மாட்டேன். 356 00:34:57,054 --> 00:34:59,141 அவள் என் மகள்! 357 00:35:02,227 --> 00:35:06,148 உன் மகள்களுக்கு அப்பாவாக நடிக்கத் தொடங்குவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. 358 00:35:08,233 --> 00:35:11,153 அந்த ஒரு மகன்தான் இருக்கிறான் என்று 359 00:35:11,153 --> 00:35:15,866 நம் இருவருக்கும் தெரியும். 360 00:35:15,866 --> 00:35:19,536 அந்த மறைவான வாழ்க்கை. 361 00:35:20,537 --> 00:35:22,206 இதை நினைவில் வைத்துக்கொள். 362 00:35:22,998 --> 00:35:25,459 உனக்காகத்தான், 363 00:35:26,877 --> 00:35:30,005 நான் அந்தக் குடும்பத்தைத் தொட்டதில்லை. 364 00:35:31,173 --> 00:35:35,260 அப்படி என்னை யோசிக்க வைத்துவிடாதே. 365 00:35:54,238 --> 00:35:55,572 அம்மா. 366 00:35:57,115 --> 00:35:58,116 நோவா. 367 00:35:58,909 --> 00:36:00,410 ஏன் இவ்வளவு சீக்கிரம் விழித்துவிட்டாய்? 368 00:36:05,415 --> 00:36:07,125 நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 369 00:36:08,544 --> 00:36:09,962 என்ன? 370 00:36:09,962 --> 00:36:11,505 உனக்கு உடம்பு சரியில்லையா? 371 00:36:15,259 --> 00:36:16,593 நான் வசேடாவுக்குப் போகப்போவதில்லை. 372 00:36:17,803 --> 00:36:19,972 பணத்தைப் பற்றி கவலைப்படாதே என்று சொன்னேன். 373 00:36:20,639 --> 00:36:22,057 அதை நான் பார்த்துக்கொள்கிறேன். 374 00:36:22,933 --> 00:36:23,976 எனக்கு அது வேண்டாம். 375 00:36:25,477 --> 00:36:27,312 உங்கள் கனவுகளை விலையாக கொடுக்க வேண்டாம். 376 00:36:27,980 --> 00:36:29,231 நான் அதைச் செய்ய மாட்டேன். 377 00:36:32,526 --> 00:36:33,527 நோவா... 378 00:36:35,529 --> 00:36:39,992 அந்த உணவகம், அது வெற்றிகரமாக நடக்காதது. 379 00:36:41,076 --> 00:36:42,286 எனக்கு இப்போதுதான் புரிகிறது. 380 00:36:42,286 --> 00:36:43,871 நான் உங்களை நம்ப மாட்டேன். 381 00:36:43,871 --> 00:36:46,415 இந்தக் குடும்பத்தை கவனித்துக்கொள்வது என் கடமை. 382 00:36:46,415 --> 00:36:49,668 பல்கலைக்கழகம் போவது எப்படி உன் கடமையாக இல்லாமல் போகும்? 383 00:36:51,753 --> 00:36:55,799 நோவா, அது உனக்காக மட்டுமில்லை. 384 00:36:56,884 --> 00:36:59,094 அது நம் எல்லோருக்காகவும்தான். 385 00:37:00,429 --> 00:37:01,889 நான் சில ஆண்டுகள் அங்கே இருப்பேன். 386 00:37:01,889 --> 00:37:04,183 ஆண்டுக்கணக்கில் ஆகும்! எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இவ்வளவும் அனுபவித்த பிறகு... 387 00:37:04,183 --> 00:37:05,726 என்னால் தாங்க முடியவில்லை. 388 00:37:07,186 --> 00:37:09,104 எல்லா பாரத்தையும் சுமக்க உங்களை தனியாக விட்டுவிட்டு போவது... 389 00:37:09,104 --> 00:37:10,439 போதும். 390 00:37:11,732 --> 00:37:14,193 எனக்கு உன் பாட்டியும் பெரியம்மாவும் இருக்கிறார்கள். 391 00:37:17,779 --> 00:37:18,989 நீங்கள் ஏமாற்றமடைந்திருப்பது எனக்குத் தெரியும்... 392 00:37:18,989 --> 00:37:20,782 உன்னை நினைத்துதான் நான் ஏமாற்றமடைகிறேன்! 393 00:37:21,283 --> 00:37:22,993 நீ இதை விட நன்றாக இருக்க தகுதியானவன். 394 00:37:23,869 --> 00:37:25,329 நான் அதிலிருந்து மீண்டுவந்துவிடுவேன். 395 00:37:27,247 --> 00:37:29,291 இதுதான் என் வீடு. 396 00:37:30,209 --> 00:37:31,919 நான் இங்கேதான் இருக்க வேண்டும். 397 00:37:32,461 --> 00:37:33,712 நோவா. 398 00:37:34,338 --> 00:37:35,422 நோவா! 399 00:37:45,516 --> 00:37:47,768 அவன் செலவுகளைப் பற்றி கவலைப்படுகிறான், எங்களை இங்கே விட்டுவிட்டு போக... 400 00:37:47,768 --> 00:37:49,228 நீ என்ன பேசுகிறாய்? 401 00:37:51,146 --> 00:37:52,856 வசேடாவிற்கு போகத்தான் வேண்டும். 402 00:37:53,482 --> 00:37:54,691 அவனுக்குப் புரியவை. 403 00:37:56,693 --> 00:37:58,362 நான் முயற்சித்திருப்பேன் என்று தோன்றவில்லையா? 404 00:38:02,157 --> 00:38:03,867 அவன் மனம் மாற மாட்டேன் என்கிறான். 405 00:38:04,368 --> 00:38:06,245 ஏனென்றால் அந்த பையனுக்குப் புரியவில்லை. 406 00:38:06,245 --> 00:38:10,207 உணவு இல்லாமல் பசியோடு அத்தனை வருடங்கள் இருந்தோம். 407 00:38:11,792 --> 00:38:15,921 சாப்பிட்டது போன்ற உணர்வை பெற என் அப்பாவின் விரல்களை கடிப்பேன். 408 00:38:17,673 --> 00:38:19,258 இது ஏற்க முடியாதது. 409 00:38:20,384 --> 00:38:21,718 அவன் போக வேண்டும். 410 00:38:21,718 --> 00:38:24,263 அது எனக்குப் புரிகிறது, ஆனால் எப்படி? 411 00:38:24,263 --> 00:38:26,056 அவனுக்கு நிலைமையை தெளிவாக புரியவை. 412 00:38:27,391 --> 00:38:30,060 என்ன வேண்டுமானாலும் செய்து அவனுக்குப் புரியவை. 413 00:38:31,520 --> 00:38:34,898 இந்த உலகம் நிஜத்தில் எப்படி இருக்கிறது என்று அவனைப் பார்க்கவை. 414 00:38:34,898 --> 00:38:37,317 உன்னால் அவனை ஒப்புக்கொள்ளவைக்க முடியாவிட்டால், நான் செய்வேன். 415 00:38:53,292 --> 00:38:54,960 உறுதியாக அவள் எதுவும் செய்ய மாட்டாளா? 416 00:38:56,086 --> 00:38:57,504 அவள் மறுக்கிறாள். 417 00:38:58,797 --> 00:39:00,424 சரி, நாம் இப்போது என்ன செய்வது? 418 00:39:00,424 --> 00:39:03,302 ஏனென்றால் அவளை வைத்துக்கொண்டு என்னால் இயக்குனர்களை ஒப்புக்கொள்ளவைக்க முடியாது. 419 00:39:06,263 --> 00:39:08,473 அப்படியென்றால் நாம் அவளை அகற்ற வேண்டும், இல்லையா? 420 00:39:09,641 --> 00:39:11,059 நீ என்ன சொல்கிறாய்? 421 00:39:16,190 --> 00:39:17,816 யோட்சுபா ஃபைனான்ஸ். 422 00:39:17,816 --> 00:39:19,610 நிதி முறைகேடு. 423 00:39:21,570 --> 00:39:23,197 எப்படி செய்வது என்று உங்களுக்கே தெரியும், டாம். 424 00:40:19,545 --> 00:40:21,255 காடோ டாட்சுமி 425 00:40:29,555 --> 00:40:32,599 இல்லை, இந்த முறை காணாமல் போனவர் இல்லை. 426 00:40:33,100 --> 00:40:35,185 அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். 427 00:40:35,185 --> 00:40:41,650 இந்த நபரைப் பற்றிய எல்லாவற்றையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 428 00:40:43,485 --> 00:40:44,653 மீண்டும், அவருடைய பெயர்... 429 00:40:47,656 --> 00:40:49,283 காடோ டாட்சுமி. 430 00:40:50,075 --> 00:40:51,743 அவர் ஜப்பானியர். 431 00:40:52,327 --> 00:40:54,872 என்ன கண்டுபிடிக்க முடிந்தாலும் சரி. 432 00:40:55,455 --> 00:40:56,456 ஆம். 433 00:40:56,999 --> 00:40:58,500 அவசரமானது. 434 00:40:58,500 --> 00:41:00,711 பணம் கூடுதலாக கொடுக்கிறேன். 435 00:41:02,671 --> 00:41:03,672 பார்ப்போம். 436 00:41:33,744 --> 00:41:34,786 அம்மா. 437 00:41:50,469 --> 00:41:52,429 நீ வீட்டிற்கு அந்த டோஃபு வாங்கி வந்ததிலிருந்து, 438 00:41:52,429 --> 00:41:55,766 அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. 439 00:42:04,608 --> 00:42:05,609 மேடம்! 440 00:42:08,654 --> 00:42:10,697 நானே வர நினைத்தேன். 441 00:42:10,697 --> 00:42:12,282 நோவா இங்கே அடிக்கடி வருவதாகக் கேள்விப்படுகிறேன். 442 00:42:13,617 --> 00:42:15,369 இரண்டு தட்டுகளை தயார் செய்கிறேன். 443 00:42:15,369 --> 00:42:17,704 சிரமப்படாதே. 444 00:42:17,704 --> 00:42:20,791 இதில் எந்த சிரமமும் இல்லை. 445 00:42:21,708 --> 00:42:23,752 - தயவுசெய்து, உட்காருங்கள். - சரி. 446 00:42:33,428 --> 00:42:35,514 அம்மா, இங்கே ஏன் என்னைக் கூட்டி வந்தீர்கள்? 447 00:42:36,723 --> 00:42:41,562 நீ வேறு எதையெல்லாம் கருத்தில்கொள்கிறாய் என்று பார்க்க. 448 00:42:44,189 --> 00:42:45,899 அப்படி இல்லை. 449 00:42:46,817 --> 00:42:49,444 அந்த கைகளைப் பார். 450 00:42:50,988 --> 00:42:53,240 இன்னும் மிகவும் மென்மையாக இருக்கிறது. 451 00:43:01,707 --> 00:43:06,837 அவளைப் பார்க்கும்போது இங்கே என்னுடைய ஆரம்ப காலத்தை நினைவுபடுத்துகிறது. 452 00:43:07,754 --> 00:43:10,132 இவ்வளவு காலம் இங்கே இருப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. 453 00:43:12,801 --> 00:43:16,972 நாங்கள் அந்நியர்களாக இருந்தாலும் அவருடன் வரும்படி உன் அப்பா என்னிடம் சொன்னார். 454 00:43:18,265 --> 00:43:22,311 நாங்கள் வந்தபோது, இந்த உலகத்தைப் பற்றி எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். 455 00:43:23,937 --> 00:43:25,314 குறிப்பாக எனக்கு. 456 00:43:25,939 --> 00:43:28,108 அப்போது யோங்டோதான் என் உலகம். 457 00:43:30,861 --> 00:43:35,699 உன் அப்பா எனக்கு அவருடைய கடவுள் நம்பிக்கை பற்றிக் கற்றுக்கொடுக்க தொடங்கியபோது, 458 00:43:36,366 --> 00:43:38,702 அதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருந்தது. 459 00:43:41,455 --> 00:43:43,916 ஆரம்பத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். 460 00:43:47,544 --> 00:43:52,633 ஆனால் பிறகு, அவர் சொர்க்கத்தைப் பற்றி சொன்னார்... 461 00:43:55,260 --> 00:43:56,929 எனக்கு எல்லாம் புரிந்தது. 462 00:44:00,182 --> 00:44:01,475 நான்... 463 00:44:03,852 --> 00:44:07,731 நான் சொர்க்கத்தைப் பற்றி நினைக்கும்போது, யோங்டோவைப் பார்க்கிறேன். 464 00:44:10,025 --> 00:44:13,862 உன்னுடைய சொர்க்கம் என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடையது எனக்குத் தெரியும். 465 00:44:15,197 --> 00:44:16,823 அது இது இல்லை. 466 00:44:17,658 --> 00:44:19,409 நீ இங்கேயே இருந்தால்... 467 00:44:22,829 --> 00:44:26,875 நீ இங்கே உட்கார்ந்துகொண்டு நீ எடுத்த முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பாய். 468 00:44:29,419 --> 00:44:31,421 அது நடக்க என்னால் அனுமதிக்க முடியாது. 469 00:44:31,421 --> 00:44:34,091 நான் உன் அப்பாவுக்கு ஒரு சத்தியம் செய்துகொடுத்தேன். 470 00:44:38,470 --> 00:44:40,013 என்ன நடந்தாலும், 471 00:44:42,182 --> 00:44:44,685 நீயும் உன் தம்பியும் நன்றாக செழித்து வளர்வீர்கள் என்று. 472 00:44:51,900 --> 00:44:54,278 நான் அந்த சத்தியத்தைக் காப்பாற்ற நினைக்கிறேன். 473 00:45:00,617 --> 00:45:02,911 காத்திருப்புக்கு வருந்துகிறேன். 474 00:45:05,873 --> 00:45:08,041 உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். 475 00:45:08,625 --> 00:45:09,835 சாப்பிட்டுப் பார்க்கிறேன். 476 00:45:13,964 --> 00:45:14,965 சுவையாக இருக்கிறது. 477 00:45:14,965 --> 00:45:17,759 இதற்காக செய்யப்பட்ட எல்லா வேலைகளும் சுவையில் தெரிகிறது. 478 00:45:17,759 --> 00:45:18,844 நன்றி. 479 00:45:20,596 --> 00:45:24,141 நிச்சயமாக டோக்கியோவில், டோஃபு இன்னும் சுவையாக இருக்கும். 480 00:45:24,641 --> 00:45:26,018 எவ்வளவு பெரிய நகரம் அது. 481 00:45:29,646 --> 00:45:34,776 ஆனால் அந்த டோஃபு சாப்பிடும்போது எங்களை நினைத்துப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். 482 00:45:36,904 --> 00:45:39,573 அது எப்படி இந்த அளவுக்கு சுவையாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. 483 00:45:42,326 --> 00:45:43,744 நான் அங்கே இருக்கும்போது... 484 00:45:45,078 --> 00:45:46,914 இதை நான் மிஸ் செய்வேன் என்று எனக்குத் தெரியும். 485 00:46:58,569 --> 00:47:00,571 வசனத் தமிழாக்கம் அருண்குமார்