1 00:00:14,264 --> 00:00:17,059 நம்முடைய நோவா வசேடா பல்கலைக்கழகத்துக்குப் போகிறான்! 2 00:00:19,770 --> 00:00:23,106 (கொரிய மொழியில்) நீ சிறுவனாக இருக்கும்போது அடிக்கடி இங்கே ஓடி ஆடுவாய். 3 00:00:23,899 --> 00:00:27,152 உன்னுடைய அந்த அன்பு அப்பா எப்போதும் உன்னைத் துரத்துவார்! 4 00:00:36,495 --> 00:00:38,330 எனக்குத் தெரிந்த கப்பல்துறை தொழிலாளி 5 00:00:38,330 --> 00:00:41,667 தன் பயணத்திற்கு செலுத்த தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் விற்றுவிட்டான். 6 00:00:41,667 --> 00:00:45,379 அநேகமாக இந்நேரம் அந்த கேடுகெட்டவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கலாம். 7 00:00:45,379 --> 00:00:47,422 அவன் அங்கே போயிருந்தால், அதைத்தான் செய்வான். 8 00:00:47,422 --> 00:00:52,052 பயணம் மிகவும் ஆபத்தானதாகி வருகிறது என்றும் கேள்விப்பட்டேன். 9 00:01:02,729 --> 00:01:06,400 இவ்வளவு மகிழ்ச்சியான நாளில் ஏன் இப்படி இருக்கிறாய்? 10 00:01:06,400 --> 00:01:08,443 நீ மிகவும் நன்றாக செய்தாய்! 11 00:01:08,443 --> 00:01:10,904 அழுவதை இப்போதே நிறுத்து. அவன் அம்மா அழ கூட இல்லை. 12 00:01:36,930 --> 00:01:38,891 எனவே எல்லோரும் உனக்காக கூடியிருக்கிறார்கள். 13 00:01:40,809 --> 00:01:41,935 வெளிப்படையாக. 14 00:01:42,519 --> 00:01:43,896 அதிகப்படியாக இருக்கிறது. 15 00:01:45,606 --> 00:01:46,982 அது உனக்குப் பழகிவிடும். 16 00:01:46,982 --> 00:01:48,692 இது வெறும் ஆரம்பம்தான். 17 00:01:54,656 --> 00:01:55,657 இதோ. 18 00:02:04,124 --> 00:02:07,586 இந்த வாட்ச்... இதில்தான் எல்லாமே தொடங்கியது. 19 00:02:12,382 --> 00:02:13,383 திறந்து பார். 20 00:02:24,311 --> 00:02:26,188 உணவு தயார்! 21 00:02:26,688 --> 00:02:28,398 இது இப்போது உன்னுடையது. 22 00:02:29,566 --> 00:02:30,859 நன்றி. 23 00:02:30,859 --> 00:02:32,611 வந்து உட்காருங்கள்! 24 00:02:33,403 --> 00:02:34,988 தயவுசெய்து எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். 25 00:02:37,032 --> 00:02:38,033 போகலாம். 26 00:02:38,617 --> 00:02:42,329 சுன்ஜா, அங்கே நின்றுகொண்டு இருக்காதே. உட்காரு. 27 00:02:48,877 --> 00:02:49,920 இதை அங்கே கொடு. 28 00:02:50,838 --> 00:02:51,880 கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன். 29 00:02:54,258 --> 00:02:56,552 அவசரப்படாதே. மற்றவர்களுக்காக காத்திரு. 30 00:02:56,552 --> 00:02:58,345 இன்று, எனக்குதான் முதலில் பரிமாற வேண்டும். 31 00:03:03,684 --> 00:03:06,562 இந்த ஈரல் புதியது. கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்கள். 32 00:03:26,164 --> 00:03:29,334 நம் நோவாவுக்காக, சியர்ஸ் சொல்வோம்! 33 00:03:37,217 --> 00:03:39,344 அதைப் பார்த்தாயா? என் பேரன்! 34 00:03:39,344 --> 00:03:41,305 அவன் வசேடாவுக்குப் போகிறான்! 35 00:05:05,931 --> 00:05:08,183 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 36 00:05:25,617 --> 00:05:27,953 (ஜப்பானிய மொழியில்) மீண்டும் கணக்கீடு செய்யுங்கள். 37 00:05:27,953 --> 00:05:30,873 குறிப்பாக அதிகப்படியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலைமைகளுக்கு. 38 00:05:30,873 --> 00:05:33,458 நாங்கள் பல முறை கணக்கீடு செய்துவிட்டோம். 39 00:05:33,458 --> 00:05:35,544 மீண்டும் சரிபாருங்கள். 40 00:05:35,544 --> 00:05:38,172 ஆண்டறிக்கைகளுடன் சேர்த்து. 41 00:05:39,047 --> 00:05:41,383 இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு, 42 00:05:41,383 --> 00:05:43,594 எதிர்காலத் திருத்தங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். 43 00:05:44,303 --> 00:05:46,638 தயவுசெய்து இன்றைக்குள் திருப்பிக் கொடுங்கள். 44 00:05:52,561 --> 00:05:53,562 மன்னிக்கவும். 45 00:05:54,146 --> 00:05:56,273 குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். 46 00:05:56,273 --> 00:05:58,817 இயக்குநர் உங்களை சந்திப்பு அறையில் பார்க்க விரும்புகிறார். 47 00:06:07,868 --> 00:06:09,203 மன்னிக்கவும். 48 00:06:11,038 --> 00:06:13,498 - என்னை அழைத்தீர்களா? - இச்சிசாகி. உட்காரு. 49 00:06:21,715 --> 00:06:23,800 ஒரு விஷயத்தை அவசரமாக விவாதிக்க வேண்டும். 50 00:06:24,551 --> 00:06:25,969 ஐபிஓ-வுக்கு ஏதாவது பிரச்சினையா? 51 00:06:27,471 --> 00:06:30,641 டாம், விஷயத்தை நீயே விளக்கு. 52 00:06:31,808 --> 00:06:33,727 நீ பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக 53 00:06:33,727 --> 00:06:36,355 குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 54 00:06:36,355 --> 00:06:37,606 குறிப்பாக, 55 00:06:37,606 --> 00:06:41,401 ஐபிஓ பற்றி இரகசிய வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவித்தது. 56 00:06:43,362 --> 00:06:46,156 நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உனக்குப் புரிகிறதா? 57 00:06:51,703 --> 00:06:53,455 ஒரு யோசனை இருப்பதாக நினைக்கிறேன். 58 00:06:53,455 --> 00:06:55,541 எனவே, நீ அதை மறுக்க மாட்டாயா? 59 00:06:58,335 --> 00:07:00,838 ஒப்புக்கொள்கிறேன், அது தொழில் நெறிகெட்ட செயல். 60 00:07:00,838 --> 00:07:03,048 நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். 61 00:07:04,007 --> 00:07:07,177 ஆனால் எந்த முக்கியத் தகவலும் பகிரப்படவில்லை என்று உறுதியளிக்கிறேன். 62 00:07:07,803 --> 00:07:10,138 ஐபிஓவை பாதிக்க எதுவும் இல்லை. 63 00:07:10,138 --> 00:07:13,976 நம்முடைய பாதுகாப்புத் துறை இன்னும் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 64 00:07:14,726 --> 00:07:17,396 நல்ல வேலையாக, மேலும் சேதத்தைத் தடுக்க இந்த விஷயம் முன்கூட்டியே 65 00:07:17,396 --> 00:07:19,106 எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது... 66 00:07:19,106 --> 00:07:21,817 மேலும் சேதம் ஏற்பட்டிருக்காது. 67 00:07:21,817 --> 00:07:25,779 ஆம், ஏனென்றால் டாம் நம்முடைய வாடிக்கையாளரிடம் உறுதியளித்திருக்கிறார். 68 00:07:29,157 --> 00:07:30,617 கின்யூவிடம் பேசினீர்களா? 69 00:07:31,535 --> 00:07:35,581 அவர்கள் நம்மிடம் இருந்து நேரடியாக தெரிந்துகொள்வதை உறுதிப்படுத்தினேன். 70 00:07:36,582 --> 00:07:38,000 அதுதான் செய்ய வேண்டிய சரியான விஷயம். 71 00:07:38,959 --> 00:07:40,002 அப்படி சொல்லும்போது, 72 00:07:40,002 --> 00:07:43,046 நம் மீது மோசமான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. 73 00:07:45,340 --> 00:07:47,426 நான் சொன்னது போல, 74 00:07:47,426 --> 00:07:49,428 அது மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட குறைபாடு. 75 00:07:49,428 --> 00:07:51,180 இனி அப்படி ஒருபோதும் நடக்காது. 76 00:07:52,306 --> 00:07:54,266 நான் வாடிக்கையாளர்களை அழைத்து 77 00:07:54,266 --> 00:07:56,310 அட்டவணைப்படி செயல்படுகிறோம் என்பதை தெரியப்படுத்துகிறேன்... 78 00:07:56,310 --> 00:07:59,438 நிலைமையின் தீவிரத்தை நீ புரிந்துகொண்டது போல தெரியவில்லை. 79 00:07:59,438 --> 00:08:03,734 உன்னுடைய செயல்பாடுகள் இந்த நிறுவனத்தை மோசமான அபாயங்களில் தள்ளியிருக்கலாம். 80 00:08:03,734 --> 00:08:06,069 உன்னுடைய நிலைப்பாடு என்ன? 81 00:08:06,069 --> 00:08:08,989 நிர்வாகத்தில் இருக்கும் சில பெண்களில் ஒருவராக, 82 00:08:08,989 --> 00:08:11,366 நீ ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். 83 00:08:15,579 --> 00:08:17,414 நான் அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். 84 00:08:19,124 --> 00:08:21,585 இருந்தாலும், நான் ஒரு பெண் என்பதால் என் மொத்த தொழில் வாழ்க்கையிலும், 85 00:08:21,585 --> 00:08:23,962 நான் கறைபடாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் சொன்னால், 86 00:08:23,962 --> 00:08:25,380 அது சாத்தியமற்றது. 87 00:08:26,340 --> 00:08:28,717 அது அநியாயம், இல்லையா? 88 00:08:30,260 --> 00:08:33,722 குறிப்பாக மற்றவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படும்போது. 89 00:08:46,026 --> 00:08:47,027 தயவுசெய்து. 90 00:08:48,028 --> 00:08:50,072 எனக்கும் அதே வாய்ப்பைக் கொடுங்கள். 91 00:08:51,657 --> 00:08:53,450 அதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. 92 00:08:53,951 --> 00:08:55,661 நாங்கள் உன் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வோம். 93 00:08:55,661 --> 00:08:56,995 உடனடியாக. 94 00:08:58,205 --> 00:08:59,206 அது ஒரு அவமானம். 95 00:09:04,711 --> 00:09:05,963 யாருக்கு? 96 00:10:01,935 --> 00:10:05,189 முடிந்தது. கடனை திரும்பப் பெற இப்போதுதான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. 97 00:10:05,189 --> 00:10:07,482 அபேவிடம் இப்போது 30 மில்லியன் டாலர்கள் இருக்கின்றன. 98 00:10:07,482 --> 00:10:10,319 ஷிஃப்லிஸ் எவ்வளவு சீக்கிரம் சொத்தை ஏலம் எடுக்கும்? 99 00:10:10,319 --> 00:10:12,404 கடனை திருப்பி செலுத்த அபே எவ்வளவு போராடுகிறார் என்பதை பார்க்க வேண்டும். 100 00:10:12,404 --> 00:10:14,656 ஆனால் அதற்குப் பிறகு, எல்லாம் ஏற்கனவே தயாராக இருக்கின்றன. 101 00:10:14,656 --> 00:10:16,283 நாம் விவாதித்த விலைக்கு கேட்டால், 102 00:10:16,283 --> 00:10:18,785 ஏலம் ஒரு சம்பிரதாயமாகத்தான் இருக்கும். 103 00:10:18,785 --> 00:10:22,039 - கூடுதல் தகவலுடன் அழையுங்கள். - தொடர்பிலேயே இருப்பேன். 104 00:10:26,335 --> 00:10:28,795 நீ திட்டமிட்டபடியே எல்லாம் நடக்கிறது. 105 00:10:30,547 --> 00:10:32,341 நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்... 106 00:10:33,967 --> 00:10:36,970 உன்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை. 107 00:10:39,056 --> 00:10:41,016 நான் நினைத்தது தவறு போல தெரிகிறது. 108 00:10:47,439 --> 00:10:50,567 இசாமு யோஷி யார்? 109 00:10:50,567 --> 00:10:53,028 சரியான நபருக்கு சரியான உதவி செய்த 110 00:10:53,028 --> 00:10:55,239 ஏதோவொரு அதிர்ஷ்டக்கார ரவுடி. 111 00:10:55,239 --> 00:10:59,284 அந்த சந்தைகளை இழப்பது நமக்கு பேரிழப்பாக இருக்கும். 112 00:11:01,495 --> 00:11:02,996 இருக்கும்தான், 113 00:11:04,289 --> 00:11:05,999 ஆனால் தற்காலிகமாக மட்டுமே. 114 00:11:08,335 --> 00:11:09,336 அதற்கு பதிலாக, 115 00:11:10,128 --> 00:11:13,632 நீ அந்த புதிய சுரங்கப்பாதை தடங்களைப் பற்றி யோசி. 116 00:11:19,221 --> 00:11:21,056 ஒப்பந்தம் நமக்குக் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார்களா? 117 00:11:22,140 --> 00:11:23,600 ஒப்பந்தம் செய்துவிட்டோம். 118 00:11:25,227 --> 00:11:29,022 இது நாம் முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய படி. 119 00:11:31,775 --> 00:11:34,987 மீதி உன் கையில்தான் இருக்கிறது. 120 00:11:34,987 --> 00:11:36,738 ஆனால் ஒன்று சொல்கிறேன். 121 00:11:41,159 --> 00:11:42,244 இருந்தாலும், 122 00:11:42,911 --> 00:11:45,497 ஒரு நிபந்தனை இருக்கிறது. 123 00:11:49,585 --> 00:11:50,878 குரோகனே... 124 00:11:51,628 --> 00:11:54,173 விழாவை தனிப்பட்ட முறையில் நடத்த விரும்புகிறான். 125 00:11:56,341 --> 00:11:58,552 அவன் ஒரு பெரிய விவகாரத்தைத் தவிர்ப்பான். 126 00:12:02,014 --> 00:12:03,724 தனிப்பட்ட முறையில் என்றால்? 127 00:12:06,602 --> 00:12:07,811 நீ அங்கே இருக்கக்கூடாது என்று 128 00:12:09,146 --> 00:12:11,940 விரும்புவான். 129 00:12:18,488 --> 00:12:19,698 அது 130 00:12:20,490 --> 00:12:21,783 ஏற்றுக்கொள்ள முடியாதது. 131 00:12:24,119 --> 00:12:25,787 எனக்குத் தெரியும். 132 00:12:30,626 --> 00:12:32,586 ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள். 133 00:12:36,965 --> 00:12:37,966 ஆம். 134 00:12:39,384 --> 00:12:41,053 ஏனென்றால் அதைத்தான் செய்தாக வேண்டும். 135 00:13:01,657 --> 00:13:02,658 ஜாக்பாட்! 136 00:13:03,242 --> 00:13:04,451 இவ்வளவுதானா? 137 00:13:05,035 --> 00:13:07,037 இது சூதாட்டமா? 138 00:13:07,037 --> 00:13:09,248 இப்போது நான் செய்ததை பார்க்கவில்லையா? 139 00:13:09,248 --> 00:13:11,458 நான் அதை அழுத்தும் நேரத்தைக் கணக்கிட்டு, 140 00:13:11,458 --> 00:13:14,419 கொடுக்க வேண்டிய சரியான அழுத்தத்தைக் கண்டுபிடித்தேன்... 141 00:13:15,045 --> 00:13:18,257 இதை உன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று நிஜமாகவே நினைக்கிறாயா? 142 00:13:18,841 --> 00:13:20,384 இது வெற்றி இல்லை. 143 00:13:20,384 --> 00:13:22,511 பிறகு இதை என்னவென்று சொல்வாய்? 144 00:13:22,511 --> 00:13:25,764 நான் இதை பரிசுகளுக்காக மாற்றப்போகிறேன். வருகிறாயா? 145 00:13:26,265 --> 00:13:27,266 இங்கேயே இருக்கிறேன். 146 00:13:50,873 --> 00:13:52,207 அது உண்மையா? 147 00:13:53,083 --> 00:13:54,209 ஹேய், இதை எடுத்துக்கொள். 148 00:13:54,209 --> 00:13:56,170 உன் அண்ணனுக்கும் கொஞ்சம் கொடு. 149 00:15:29,388 --> 00:15:33,225 வேர்களை சேதப்படுத்தாமல் கவனமாக இருங்கள். 150 00:15:35,018 --> 00:15:36,019 பார்த்தீர்களா? 151 00:15:36,019 --> 00:15:37,688 இதில் இன்னும் உயிர் இருக்கிறது. 152 00:15:39,481 --> 00:15:42,067 ஆனால் இடம் மாற்றுவதால் அது உயிர் பிழைக்குமா? 153 00:15:43,193 --> 00:15:45,612 இந்த விஷயத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததில்லை. 154 00:15:46,864 --> 00:15:50,117 நீங்கள் அதை கவனமாக கண்காணிக்க வேண்டும். 155 00:15:50,117 --> 00:15:54,413 சரியான அளவு சூரிய ஒளியும் தண்ணீரும் அதற்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள். 156 00:16:03,172 --> 00:16:04,756 நீங்கள் சொன்ன அந்த இடம்... 157 00:16:04,756 --> 00:16:06,300 கனெக்டிகட். 158 00:16:06,300 --> 00:16:07,885 அங்கே நிறைய மரங்கள் இருக்கின்றனவா? 159 00:16:07,885 --> 00:16:10,012 ஏராளமாக. 160 00:16:10,012 --> 00:16:12,639 நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். 161 00:16:13,724 --> 00:16:15,475 மிகவும் உயரமானவை. 162 00:16:17,895 --> 00:16:20,022 என்னால் அமெரிக்கா சென்று அதைப் பார்க்க முடிந்திருக்கலாம். 163 00:16:21,398 --> 00:16:23,775 அது என்னுடைய நீண்டநாள் கனவு. 164 00:16:24,568 --> 00:16:26,361 அப்புறம் ஏன் போகவில்லை? 165 00:16:26,904 --> 00:16:27,905 திரு. காடோ, 166 00:16:27,905 --> 00:16:32,159 உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் மீதமிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். 167 00:16:33,452 --> 00:16:35,704 அது வழக்கமாக இருப்பதைவிட கடினம் இல்லை. 168 00:16:37,122 --> 00:16:38,123 அது உண்மைதான். 169 00:16:39,291 --> 00:16:42,669 ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விலையுயர்ந்தது. 170 00:16:43,837 --> 00:16:45,756 குறைந்தபட்சம் எனக்கு. 171 00:16:47,132 --> 00:16:50,427 இங்கே விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. 172 00:16:51,762 --> 00:16:54,932 மக்கள் தங்கள் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வார்கள் என்பது ஆச்சரியம்தான். 173 00:16:56,767 --> 00:16:58,685 ஆனால் அது அப்படித்தான், இல்லையா? 174 00:17:00,646 --> 00:17:02,397 நம்மிடம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றார்கள், 175 00:17:03,982 --> 00:17:07,402 ஆனால் அதற்காக எப்படி பணம் சம்பாதிப்பது என்று யாரும் நம்மிடம் சொல்லவில்லை. 176 00:17:15,868 --> 00:17:16,869 நேர்மையாகச் சொன்னால்... 177 00:17:18,579 --> 00:17:22,000 நான் என் மகளோடு போய் தங்கலாம் என்று யோசிக்கிறேன். 178 00:17:23,210 --> 00:17:24,627 அவள் நகோயாவில் இருக்கிறாள். 179 00:17:25,420 --> 00:17:26,672 நகோயாவா? 180 00:17:27,631 --> 00:17:29,174 ஆனால் அவ்வளவு தூரமாகவா? 181 00:17:30,759 --> 00:17:33,387 நான் இப்போது சுமையாகிவிட்டேன். 182 00:17:41,395 --> 00:17:43,647 இப்போது அது உன் பொறுப்பு. 183 00:17:46,358 --> 00:17:48,318 குடும்பத்தைக் கவனிப்பது. 184 00:17:48,318 --> 00:17:49,862 அந்த பேச்சை விடு. 185 00:17:50,654 --> 00:17:53,198 நீ என்னவோ மறைந்துபோவதைப் போல பேசுகிறாய். 186 00:17:55,075 --> 00:17:56,660 நான் மறைந்துபோக மாட்டேன். 187 00:17:58,120 --> 00:18:00,455 இந்த இடத்தைவிட டோக்கியோ நூறு மடங்கு பெரியது. 188 00:18:00,455 --> 00:18:01,832 கொஞ்சம் பொறு. 189 00:18:02,749 --> 00:18:05,419 அடுத்த முறை நீ வீட்டிற்கு வரும்போது, இங்கிருக்கும் எல்லாமே உனக்கு 190 00:18:05,419 --> 00:18:08,338 மிகச்சிறியதாகத் தோன்றும். 191 00:18:09,006 --> 00:18:10,132 உன் பேச்சைப் பார்! 192 00:18:10,674 --> 00:18:12,509 திடீரென்று புத்திசாலித்தனமாகப் பேசுகிறாய். 193 00:18:13,844 --> 00:18:16,555 சரி உன்னிடம் கேட்கிறேன், நீ எப்படி? 194 00:18:16,555 --> 00:18:18,724 நான் இல்லாமல் நீ என்ன செய்யப் போகிறாய்? 195 00:18:19,892 --> 00:18:21,852 என்னைப் பற்றி கவலைப்படாதே. 196 00:18:25,439 --> 00:18:27,149 என்னிடம் திட்டங்கள் இருக்கின்றன. 197 00:18:29,193 --> 00:18:30,736 நான்... 198 00:18:30,736 --> 00:18:31,987 அமெரிக்காவிற்குப் போகிறேன். 199 00:18:34,698 --> 00:18:35,574 நிஜமாகத்தான் சொல்கிறேன். 200 00:18:35,574 --> 00:18:38,202 நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இங்கிருந்து கிளம்பிவிடுவேன். 201 00:18:40,537 --> 00:18:42,247 அமெரிக்காவில் என்ன இருக்கிறது? 202 00:18:44,041 --> 00:18:45,292 பெரிய கார்கள். 203 00:18:46,502 --> 00:18:47,628 பெரிய வீடுகள். 204 00:18:48,795 --> 00:18:51,840 அண்டை வீட்டாரின் துர்நாற்றத்தை முகர முடியாத அளவுக்கு விசாலமான இடம். 205 00:18:53,550 --> 00:18:57,346 உலகிலிருக்கும் எல்லா இனிப்புகளும். 206 00:18:57,346 --> 00:18:59,097 எனவே, அதுதான், இல்லையா? 207 00:18:59,681 --> 00:19:03,560 உன் வயிற்றை நிரப்பு அவ்வளவு தூரம் போக விரும்புகிறாய். 208 00:19:06,563 --> 00:19:07,648 விஷயம் அது இல்லை. 209 00:19:08,565 --> 00:19:12,778 அமெரிக்காவில், இங்கே எல்லோரும் என்னைப் பார்க்கும் நபராக நான் அங்கே இருக்க வேண்டியதில்லை. 210 00:19:14,446 --> 00:19:15,781 அதனால்தான் போக விரும்புகிறேன். 211 00:19:22,663 --> 00:19:24,915 கடந்த சில வருடங்களாக அவர் தனியாக வசிக்கிறார். 212 00:19:24,915 --> 00:19:26,875 தன் குடும்பத்தை எப்போதாவதுதான் பார்க்கிறார். 213 00:19:28,085 --> 00:19:29,545 அவருடைய நிதி நிலைமை... 214 00:19:29,545 --> 00:19:30,963 அவர் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்? 215 00:19:31,463 --> 00:19:34,341 நீங்கள் சந்தேகப்பட்டது போல, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சொத்துகள் இல்லை. 216 00:19:34,341 --> 00:19:36,927 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அச்சு நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 217 00:19:36,927 --> 00:19:38,470 அவர் இப்போது 27 மில்லியன் யென் 218 00:19:39,137 --> 00:19:40,973 அடமானத்துடன் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். 219 00:19:41,765 --> 00:19:43,851 சிக்கனமாக வாழ்கிறார். 220 00:19:43,851 --> 00:19:46,728 ஆனால் கடந்த சில வாரங்களாக, 221 00:19:46,728 --> 00:19:49,398 என் அம்மாவை அடிக்கடி சாப்பிட அழைத்துச் சென்றிருக்கிறார். 222 00:19:51,191 --> 00:19:53,986 அவர் என் அம்மாவை கவர முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. 223 00:19:55,404 --> 00:19:59,324 எனவே, கேள்வி என்னவென்றால், அவருக்கு என்ன வேண்டும்? 224 00:20:01,326 --> 00:20:03,370 ஆனால் ஒரு விஷயம் என்னைத் தொந்தரவு செய்கிறது. 225 00:20:05,289 --> 00:20:07,124 அவர் போரில் பங்கேற்றவர். 226 00:20:07,624 --> 00:20:09,543 அவர் தலைமுறையினர் எல்லோரும் ஆயுதப்படைகளில் பணியாற்ற உத்தரவிடப்பட்டனர். 227 00:20:10,127 --> 00:20:11,545 உண்மைதான், ஆனால்... 228 00:20:12,379 --> 00:20:15,257 மிகச்சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 229 00:20:32,191 --> 00:20:34,151 இது கடன். 230 00:20:34,151 --> 00:20:35,986 இதை அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். 231 00:20:36,737 --> 00:20:37,946 என்ன இது? 232 00:20:37,946 --> 00:20:41,783 இது என் மகனின் பணம் இல்லை. இது என்னுடையது. 233 00:20:42,618 --> 00:20:45,662 உணவகத்தை விற்றதில் நான் சேமித்த பணம். 234 00:20:47,414 --> 00:20:51,126 ஆனால் இதை ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள். 235 00:20:51,126 --> 00:20:55,339 உங்களிடம் அதிக காலம் மீதமில்லை என்பதால். 236 00:20:56,840 --> 00:20:59,092 நம் இருவருக்குமே இல்லை. 237 00:21:00,928 --> 00:21:02,638 இதை என்னால் வாங்க முடியாது. 238 00:21:02,638 --> 00:21:05,015 எனக்கு இது தேவையில்லை. 239 00:21:17,277 --> 00:21:21,240 அப்படியென்றால் நாம் ஒன்றாகப் போகலாம். 240 00:21:25,160 --> 00:21:26,286 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 241 00:21:27,621 --> 00:21:28,830 அதை கருத்தில் கொள்வீர்களா? 242 00:21:30,666 --> 00:21:34,294 உங்களுடன் அமெரிக்காவைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். 243 00:21:37,881 --> 00:21:39,299 அன்புள்ள ஆண்டவரே, 244 00:21:39,299 --> 00:21:42,386 நீங்கள் எங்களை ஆசீர்வதித்த எல்லாவற்றுக்கும் சேர்த்து 245 00:21:42,386 --> 00:21:46,807 இன்றிரவு எங்களுக்கு வழங்கிய உணவுக்காக நாங்கள் நன்றி சொல்கிறோம். 246 00:21:46,807 --> 00:21:51,770 நீங்கள் எங்களுக்குக் கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள். 247 00:21:52,312 --> 00:21:55,315 இனியும் கேட்பது சுயநலம் என்று எனக்குத் தெரியும், 248 00:21:55,315 --> 00:21:58,986 ஆனால் நோவா எங்களைவிட்டு பிரிந்துபோக தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், 249 00:21:59,653 --> 00:22:03,532 அவனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 250 00:22:04,449 --> 00:22:08,662 பலர் தொலைந்துபோகும் இவ்வளவு பெரிய நகரத்தில், 251 00:22:08,662 --> 00:22:15,502 அவன் பாதை மாறிப் போகாதபடி அவனுக்கு வழிகாட்டுங்கள். 252 00:22:16,003 --> 00:22:18,297 அவன் நல்ல பையன். 253 00:22:18,297 --> 00:22:20,966 எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி, கடவுளே. 254 00:22:21,592 --> 00:22:24,678 அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 255 00:22:26,555 --> 00:22:28,348 உங்கள் மகனின் பெயரால், நாங்கள் பிரார்த்திக்கிறோம். 256 00:22:28,348 --> 00:22:29,474 ஆமென். 257 00:22:30,809 --> 00:22:32,227 அது அழகாக இருந்தது. 258 00:22:33,395 --> 00:22:34,479 அது மிகவும் நன்றாக இருந்தது. 259 00:22:36,106 --> 00:22:39,443 அண்ணா, இது போன்ற உணவு உனக்கு வசேடாவில் கிடைக்கும் என்று நினைக்கிறாயா? 260 00:22:42,487 --> 00:22:46,366 அங்கே ஒரு தேவாலயத்தைக் கண்டுபிடி. அவர்கள் உனக்கு உதவுவார்கள். 261 00:22:47,492 --> 00:22:48,619 சரி. 262 00:22:58,462 --> 00:22:59,922 யோசெப், 263 00:23:00,547 --> 00:23:02,883 நீங்கள் சாப்பிடத் தயார் என்று நான் நினைக்கவில்லை. 264 00:23:05,010 --> 00:23:07,179 என் தம்பியின் மூத்த மகனின் கடைசி இரவு, 265 00:23:07,971 --> 00:23:09,765 எனக்கு அழைப்பு கூட இல்லையா? 266 00:23:10,349 --> 00:23:12,309 இந்த வீட்டில் எனக்கு இவ்வளவுதான் மரியாதையா? 267 00:23:14,895 --> 00:23:16,230 மன்னித்துவிடுங்கள். 268 00:23:49,429 --> 00:23:50,639 இதுதானா? 269 00:23:51,807 --> 00:23:53,475 அவனை இப்படித்தான் வழியனுப்புவாயா? 270 00:23:58,105 --> 00:24:00,399 இது எனக்கு விருந்து, சத்தியமாக. 271 00:24:15,414 --> 00:24:17,207 இதை சுவைத்துப் பார்த்தாயா? 272 00:24:18,959 --> 00:24:20,669 இதை எப்படிச் சாப்பிடுவது? 273 00:24:21,670 --> 00:24:23,797 எப்போதும் எல்லாவற்றிலும் அதிக உப்பு போடுகிறாய். 274 00:24:23,797 --> 00:24:24,882 மன்னித்துவிடுங்கள். 275 00:24:25,924 --> 00:24:28,468 - நான் வேறு ஏதாவது செய்கிறேன்... - அதைவிடு. 276 00:24:28,468 --> 00:24:29,887 அதுவும் அப்படித்தான் இருக்கும். 277 00:24:42,691 --> 00:24:44,818 இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருப்பீர்கள்? 278 00:24:48,155 --> 00:24:49,156 என்ன? 279 00:24:51,658 --> 00:24:53,118 உங்கள் ஒழுக்கம் என்ன ஆனது? 280 00:24:54,745 --> 00:24:58,207 கடந்த சில வருடங்களாக நான் கவனிக்காமல் இருக்கும்போது இதுதான் நடந்ததா? 281 00:24:59,374 --> 00:25:00,667 நான் சொல்வதைக் கேள். 282 00:25:01,919 --> 00:25:06,298 உன் அண்ணிடம் இருந்து நீ கற்றுக்கொண்டிருந்தால், நீ இதைவிட நன்றாக நடந்துகொள்வாய்! 283 00:25:06,298 --> 00:25:07,424 பெரியப்பா! 284 00:25:09,801 --> 00:25:13,138 அவனுடன் ஒப்பிடும்போது நான் குறைவாகவே சாதித்திருப்பது எனக்குத் தெரியும். 285 00:25:13,680 --> 00:25:17,935 ஒருபோதும் நான் அவன் அளவுக்கு புத்திசாலியாகவோ நல்லவனாகவோ பெருந்தன்மையானவனாகவோ இருக்கமாட்டேன். 286 00:25:17,935 --> 00:25:19,770 அவனுடைய கடின உழைப்பால் அவனுக்கு அது கிடைத்தது. 287 00:25:19,770 --> 00:25:21,104 அது எனக்குத் தெரியும். 288 00:25:22,314 --> 00:25:24,483 ஆனால் பெரியம்மாவும் கடினமாக உழைக்கிறார்... 289 00:25:24,483 --> 00:25:25,567 மொஸாசு, போதும். 290 00:25:25,567 --> 00:25:27,236 அவர் என்ன தவறு செய்தார்? 291 00:25:28,320 --> 00:25:29,446 அல்லது எங்களில் யாராவது? 292 00:25:30,280 --> 00:25:33,283 நாங்கள் உங்களை இப்படி ஆக்கவில்லை! 293 00:25:33,283 --> 00:25:34,576 மொஸாசு. 294 00:25:47,005 --> 00:25:48,507 அவன் சொல்வது சரிதான். 295 00:25:51,802 --> 00:25:52,803 நோவா. 296 00:25:54,429 --> 00:25:55,556 என்ன நடக்கிறது? 297 00:25:57,224 --> 00:25:58,684 மொஸாசு, எனக்கு உதவு. 298 00:25:58,684 --> 00:26:00,185 என்ன செய்கிறீர்கள்? 299 00:26:00,185 --> 00:26:01,728 உங்களை வெளியே கூட்டிப் போகிறோம். 300 00:26:02,479 --> 00:26:03,605 நிறுத்துங்கள். 301 00:26:04,731 --> 00:26:05,899 நிறுத்துங்கள் என்றேன். 302 00:26:06,483 --> 00:26:07,985 - என்னை விட்டு விலகுங்கள்! - நோவா. 303 00:26:07,985 --> 00:26:11,363 பெரியப்பா, எனக்காக இதைச் செய்யுங்கள், ஒரே ஒருமுறை! 304 00:26:13,031 --> 00:26:14,157 என்னால் முடியாது! 305 00:26:27,254 --> 00:26:28,672 அவரை விடுங்கள். 306 00:26:28,672 --> 00:26:30,549 அவர் இன்னும் தயாரில்லை. 307 00:26:30,549 --> 00:26:31,675 பிறகு எப்போது? 308 00:26:32,968 --> 00:26:35,179 ஐந்து வருடங்களாக அவர் வீட்டைவிட்டு வெளியே போகவில்லை. 309 00:26:37,055 --> 00:26:38,640 இன்னும் எவ்வளவு காலம் நாம் இப்படியே தொடர்வது? 310 00:26:38,640 --> 00:26:39,808 போதும். 311 00:26:55,991 --> 00:26:57,075 நான் செய்கிறேன். 312 00:27:13,091 --> 00:27:14,134 நான் செய்கிறேன். 313 00:27:16,803 --> 00:27:17,930 கவனமாக. 314 00:27:55,509 --> 00:27:56,510 என்னால் முடியாது. 315 00:28:02,224 --> 00:28:03,225 என்னை மன்னித்துவிடுங்கள். 316 00:28:03,225 --> 00:28:04,893 ஆனால், பெரியப்பா, 317 00:28:04,893 --> 00:28:06,895 இதைவிட மோசமானதை நீங்கள் எதிர்கொண்டதில்லையா? 318 00:28:08,313 --> 00:28:09,439 யோசெப். 319 00:28:09,439 --> 00:28:10,774 கியுங்கீ. 320 00:28:10,774 --> 00:28:12,276 அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் 321 00:28:35,632 --> 00:28:37,009 என்ன இது? 322 00:28:37,009 --> 00:28:39,011 நாம் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். 323 00:29:07,372 --> 00:29:08,749 அடுத்த வீரர்! 324 00:29:10,709 --> 00:29:12,961 மீண்டும் அந்த பையன். 325 00:29:25,807 --> 00:29:27,476 ஸ்டிரைக்! 326 00:29:28,769 --> 00:29:30,896 இந்த முறை அடிக்க முயற்சி செய். 327 00:29:40,531 --> 00:29:41,949 ஸ்டிரைக் இரண்டு! 328 00:30:00,467 --> 00:30:01,343 அவன் அடித்துவிட்டான்! 329 00:30:08,141 --> 00:30:09,184 ஓடு! 330 00:30:10,936 --> 00:30:12,646 ஓடு! போ! 331 00:30:15,899 --> 00:30:17,067 வேகமாக! 332 00:30:18,068 --> 00:30:19,570 - தொடர்ந்து ஓடு! - சுற்றி வா! 333 00:30:25,951 --> 00:30:26,952 போ! 334 00:30:27,911 --> 00:30:28,912 வேகமாக! 335 00:30:32,624 --> 00:30:34,835 - சேஃப்! - ஹோம் ரன்! 336 00:31:19,296 --> 00:31:21,256 வாட்ச் எப்படி திரும்ப கிடைத்தது? 337 00:31:21,256 --> 00:31:22,925 அந்த அடகு கடைக்காரர். 338 00:31:24,092 --> 00:31:25,344 நான் உன்னிடம் சொன்னேனே. 339 00:31:25,344 --> 00:31:27,054 எனக்கு நீ ஒருபோதும் தொலையவில்லை. 340 00:31:27,638 --> 00:31:29,765 ஆனால் அதைக் கொடுத்து அவனை ஏன் சிரமப்படுத்த வேண்டும்? 341 00:31:31,558 --> 00:31:32,559 சுன்ஜா, 342 00:31:33,810 --> 00:31:35,938 என்னைக் காப்பாற்றியது போல அந்த வாட்ச் உன்னைக் காப்பாற்றியது. 343 00:31:37,147 --> 00:31:38,607 இப்போது, அது நோவாவின் கையில் இருக்கிறது. 344 00:31:44,488 --> 00:31:46,198 அவனுக்காக நீ கவலைப்படத் தேவையில்லை. 345 00:31:47,407 --> 00:31:49,368 அவன் பெரிய ஆளாக வருவான். நீ பார்ப்பாய். 346 00:31:54,248 --> 00:31:55,249 இப்போது, 347 00:31:56,041 --> 00:31:58,210 நான் கவலைப்பட வேண்டியது என் மகளைப் பற்றித்தான். 348 00:32:01,880 --> 00:32:04,424 என்னைக் கேவலமாக நினைக்கும் ஒருவனை அவள் திருமணம் செய்யப்போகிறாள். 349 00:32:06,218 --> 00:32:07,386 அவன் ஜப்பான்காரன். 350 00:32:14,184 --> 00:32:16,311 அதனால்தான் அவன் உங்களை கேவலமாக நினைக்கிறானா? 351 00:32:18,272 --> 00:32:19,565 அப்படித்தான் நினைக்கிறேன். 352 00:32:22,192 --> 00:32:23,902 இந்த விஷயங்களை வைத்து யாரால் சொல்ல முடியும்? 353 00:32:26,572 --> 00:32:30,284 சத்தமாக சொன்னதைவிட சொல்லாமல்விட்ட விஷயங்கள் உண்மையாக இருக்கலாம். 354 00:32:34,705 --> 00:32:36,748 அவன் அவளை நன்றாக வைத்துக்கொள்வானா? 355 00:32:38,417 --> 00:32:39,418 எனக்குத் தெரியாது. 356 00:32:48,260 --> 00:32:49,761 நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். 357 00:32:51,722 --> 00:32:53,056 திருமணம்... 358 00:32:56,476 --> 00:32:58,020 அது வெறும் சம்பிரதாயம்தான் என்று. 359 00:32:59,855 --> 00:33:01,899 உங்களுக்கு அது நல்லதாக முடிந்தது. 360 00:33:03,901 --> 00:33:05,152 அப்படியா நீ இதைப் பார்க்கிறாயா? 361 00:33:11,491 --> 00:33:13,410 இது மாதிரி விஷயத்தையெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது. 362 00:33:15,621 --> 00:33:17,456 நான் உள்ளே போக வேண்டும். 363 00:33:17,456 --> 00:33:18,957 பையன்கள் சீக்கிரம் வந்துவிடுவார்கள். 364 00:33:20,834 --> 00:33:21,835 சுன்ஜா. 365 00:33:25,672 --> 00:33:26,673 உனக்கு நினைவிருக்கிறதா? 366 00:33:28,842 --> 00:33:31,178 சலவை குளத்தில் அந்த நாட்களை. 367 00:33:33,805 --> 00:33:36,099 அப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம். 368 00:33:37,768 --> 00:33:39,937 ஆனால் அதை உணரக்கூட முடியாத அப்பாவியாக. 369 00:33:42,523 --> 00:33:44,358 இப்போது உள்ளே புழுங்கிக்கொண்டிருக்கிறேன். 370 00:33:47,694 --> 00:33:49,821 எவ்வளவு காலம் நான் இந்த மறைவு வாழ்க்கை வாழ்கிறேனோ... 371 00:33:51,823 --> 00:33:54,117 அவ்வளவு அது மோசமாகிக்கொண்டே போகும். 372 00:33:57,329 --> 00:33:58,539 நான் அதை உணர்கிறேன். 373 00:34:02,334 --> 00:34:03,544 நான் என்ன செய்வது? 374 00:34:12,386 --> 00:34:14,263 உங்களுக்குள் மோசமாகிக்கொண்டே போகும் அதை... 375 00:34:16,889 --> 00:34:18,684 நீங்கள் அதை அகற்ற வேண்டும். 376 00:34:34,283 --> 00:34:35,284 சுன்ஜா. 377 00:34:44,585 --> 00:34:45,585 நன்றி. 378 00:35:04,479 --> 00:35:09,276 நாடகாவா செய்தித்தாள் ஆகஸ்ட் 3, 1948 379 00:35:09,276 --> 00:35:13,739 {\an8}பலவான் தீவில் போர் கைதிகளின் படுகொலை 380 00:35:14,448 --> 00:35:16,700 ஏன் இப்படிச் செய்தாய்? 381 00:35:17,826 --> 00:35:20,162 அவர் ஏழை என்பதாலா? 382 00:35:20,162 --> 00:35:22,456 நம்மிடம் பணம் இருப்பதால். 383 00:35:23,624 --> 00:35:25,792 இது இப்படி ஆனதற்கு வருந்துகிறேன். 384 00:35:26,460 --> 00:35:29,671 ஆனால் உண்மையை தெரிந்துகொள்வது நல்லதில்லையா? 385 00:35:32,799 --> 00:35:35,135 நீ அதை என்னவென்று நினைக்கிறாய்? 386 00:35:38,055 --> 00:35:43,936 அவருடைய படைப்பிரிவு 139 அமெரிக்க போர்க் கைதிகளை படுகொலை செய்திருக்கிறது. 387 00:35:43,936 --> 00:35:45,979 அது பரவாயில்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? 388 00:35:46,480 --> 00:35:47,940 நான் அப்படிச் சொன்னேனா? 389 00:35:51,527 --> 00:35:53,946 எட்சுகோவுடன் எவ்வளவு காலம் இருந்தாய்? 390 00:35:55,572 --> 00:35:59,826 இப்போது சாலமனுக்கு ஒரு ஜப்பானிய காதலி இருக்கிறாள். 391 00:36:02,955 --> 00:36:04,706 உங்கள் இருவருக்கும் ஏன் அது பரவாயில்லை, 392 00:36:05,874 --> 00:36:08,043 ஆனால் எனக்கு ஒரு நண்பர் இருந்தால்... 393 00:36:08,961 --> 00:36:10,087 நண்பரா? 394 00:36:11,380 --> 00:36:12,506 ஆம், நண்பர். 395 00:36:17,094 --> 00:36:18,554 ஏனென்றால் நான் தனிமையில் இருக்கிறேன். 396 00:36:22,057 --> 00:36:26,186 நான் நேசித்தவர்களில் நிறைய பேர்... 397 00:36:27,104 --> 00:36:28,605 அவர்கள் இறந்துவிட்டார்கள். 398 00:36:41,076 --> 00:36:43,495 உன் ஆசிரியர் சொல்வதைக் கேள், புரிகிறதா? 399 00:36:44,788 --> 00:36:46,540 என் சாப்பாட்டை மிஸ் செய்யும்போது திரும்பி வா. 400 00:36:47,791 --> 00:36:48,876 வருவேன். 401 00:36:54,423 --> 00:36:56,258 போதும். 402 00:36:56,258 --> 00:36:59,386 அம்மா, இப்படியே போனால் நாங்கள் ரயிலை தவறவிடுவோம். 403 00:37:05,475 --> 00:37:08,645 அடிக்கடி எங்களுக்கு கடிதம் எழுதுவாய்தானே? 404 00:37:08,645 --> 00:37:10,564 இல்லையென்றால், கவலைப்படுவோம். 405 00:37:10,564 --> 00:37:11,648 செய்கிறேன். 406 00:37:11,648 --> 00:37:13,317 சத்தியமாக. 407 00:37:15,819 --> 00:37:17,487 உன் அம்மா சொன்னதைக் கேட்டாய். 408 00:37:17,487 --> 00:37:18,864 நீ கிளம்ப வேண்டும். 409 00:37:19,615 --> 00:37:21,283 நாம் ஏற்கனவே விடைபெற்றுவிட்டோம். 410 00:38:20,509 --> 00:38:21,635 அண்ணா! 411 00:38:29,434 --> 00:38:30,894 போகாதே. 412 00:38:31,603 --> 00:38:33,689 நீ இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாது. 413 00:38:36,191 --> 00:38:38,694 நீயே சொன்னாயே. நீ அமெரிக்கா போகிறாய். 414 00:38:40,737 --> 00:38:42,573 உனக்கும் உன் கனவுகள் உண்டு. 415 00:38:45,158 --> 00:38:46,702 அவற்றுக்காகப் போராடு. 416 00:38:47,327 --> 00:38:48,412 சொன்னது கேட்டதா? 417 00:38:49,496 --> 00:38:51,164 நீ செய்ய வேண்டியது அதுதான். 418 00:38:57,004 --> 00:38:58,755 எதிர்காலத்தைப் பார், மொஸாசு. 419 00:39:01,758 --> 00:39:03,260 எப்போதும் எதிர்காலத்தைப் பார். 420 00:40:09,034 --> 00:40:10,661 டோக்கியோ 421 00:40:56,373 --> 00:40:57,708 வரிசையில் அடுத்தவர். 422 00:40:59,877 --> 00:41:02,337 - பெயர்? - பாண்டோ, நோபுவோ. 423 00:41:08,218 --> 00:41:09,845 ஓ, அது நீதானா. 424 00:41:10,888 --> 00:41:13,432 ஹேய்! அந்த விசேஷ டெலிவரியைக் கொண்டுவாருங்கள். 425 00:41:13,432 --> 00:41:14,725 சரி, சார். 426 00:41:21,356 --> 00:41:23,859 நோவா, என்ன அது? 427 00:41:24,735 --> 00:41:26,069 தெரியவில்லை. 428 00:41:30,490 --> 00:41:32,075 பாண்டோ நோபுவோ 429 00:41:32,075 --> 00:41:35,245 அது இன்று காலை காரில் வந்தது. 430 00:41:35,245 --> 00:41:36,955 அது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. 431 00:41:59,478 --> 00:42:01,146 என்னைத் தேடுகிறீர்களா? 432 00:42:01,146 --> 00:42:03,524 எவ்வளவு நாட்களாக அந்த முட்டாள்களுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாய்? 433 00:42:04,399 --> 00:42:06,985 உறுதியாக அவர்கள் நல்ல மனிதர்கள். 434 00:42:08,987 --> 00:42:11,114 அந்த நல்ல மனிதர்கள் என்ன சொல்கிறார்கள்? 435 00:42:12,658 --> 00:42:14,701 போர் நமக்கு நன்றாக போகவில்லையாம். 436 00:42:14,701 --> 00:42:15,911 "நமக்கா"? 437 00:42:17,746 --> 00:42:18,956 வடக்கு இராணுவம். 438 00:42:26,547 --> 00:42:27,756 நான் போரில்... 439 00:42:29,216 --> 00:42:30,634 சேர விரும்புகிறேன். 440 00:42:32,719 --> 00:42:34,721 ஏன் இவ்வளவு முட்டாள்தனமான செயலைச் செய்ய நினைக்கிறாய்? 441 00:42:35,222 --> 00:42:36,306 அது நம் நாடு. 442 00:42:38,225 --> 00:42:39,393 அவர்கள் நம் மக்கள். 443 00:42:40,853 --> 00:42:42,437 தெற்கும் அப்படித்தான். 444 00:42:44,356 --> 00:42:46,692 ஒருவன் எந்த பக்கம் பிறந்தான் என்பது வெறும் அதிர்ஷ்டம்தான். 445 00:42:47,317 --> 00:42:49,361 அங்கே கடவுளின் செயல் இல்லை. 446 00:42:50,028 --> 00:42:51,780 நான் என் வீட்டை மிஸ் செய்கிறேன். 447 00:42:53,115 --> 00:42:54,867 நம்மை போன்றவர்களுக்கு, 448 00:42:56,410 --> 00:42:57,619 வீடு என்பது கிடையாது. 449 00:43:04,543 --> 00:43:06,128 நீ ஏற்கனவே முடிவெடுத்துவிட்டாய்? 450 00:43:06,712 --> 00:43:07,713 ஆம். 451 00:43:14,595 --> 00:43:16,847 எனக்காக நீ செய்ய வேண்டிய கடைசி வேலை ஒன்று இருக்கிறது. 452 00:43:18,682 --> 00:43:20,893 அதற்குப் பிறகு, சுதந்திரமாக நீ விரும்பியதைச் செய்யலாம். 453 00:43:21,476 --> 00:43:22,477 யார் அது? 454 00:43:24,271 --> 00:43:25,689 இந்த முறை அப்படி இல்லை. 455 00:43:28,775 --> 00:43:31,195 இந்த முறை, நான் ஒருவரை நண்பராக்கிக்கொள்ள உதவப் போகிறாய். 456 00:43:43,207 --> 00:43:46,251 நீ இப்போது திரும்பிப் போய், ஓய்வெடு. 457 00:43:47,252 --> 00:43:49,880 - அம்மா. - இப்படி போவது எனக்கு எளிதாக இருக்கும். 458 00:43:50,380 --> 00:43:51,715 கவலைப்படாதே. 459 00:43:52,758 --> 00:43:54,134 எனக்கு வழி தெரியும். 460 00:44:02,768 --> 00:44:06,438 நோவா, உன் தாத்தா... 461 00:44:08,398 --> 00:44:11,318 நான் பறக்க வேண்டும் என்று அவர் எப்போதும் சொல்வார். 462 00:44:13,570 --> 00:44:15,614 உயரே பற என்று. 463 00:44:16,323 --> 00:44:20,744 இந்த உலகம் நிஜத்தில் எவ்வளவு பெரியது என்பதை என்னால் பார்க்க முடிவதற்காக. 464 00:44:27,918 --> 00:44:29,586 இப்போது உன்னுடைய முறை, நோவா. 465 00:44:31,213 --> 00:44:32,756 நீ உயர பறக்க வேண்டும். 466 00:44:38,762 --> 00:44:40,931 ஆனால் எனக்கு ஒரு சத்தியம் செய்கிறாயா? 467 00:44:43,600 --> 00:44:44,852 அடிக்கடி... 468 00:44:47,396 --> 00:44:49,731 நீ திரும்பி வந்து, என்னிடம் சொல்ல வேண்டும். 469 00:44:52,651 --> 00:44:54,236 எனக்கும் தெரிய வேண்டும்... 470 00:44:57,072 --> 00:44:59,491 அது எவ்வளவு பெரியது என்று. 471 00:45:07,457 --> 00:45:08,542 செய்வேன். 472 00:46:30,958 --> 00:46:32,417 பேக் செய்திருக்கிறாய். 473 00:46:33,001 --> 00:46:34,336 எங்காவது போகிறாயா? 474 00:46:35,420 --> 00:46:36,421 ஆம். 475 00:46:36,421 --> 00:46:39,800 வடக்கில் நம் சகோதரர்களுடன் நான் போரில் சேரப்போகிறேன். 476 00:46:41,677 --> 00:46:43,011 ஏன்? 477 00:46:44,805 --> 00:46:46,640 நீ வடக்கைச் சேர்ந்தவன் கூட இல்லை. 478 00:46:46,640 --> 00:46:49,643 என்னால் இங்கே இருந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. 479 00:46:50,561 --> 00:46:51,979 என்னைப் போல என்று சொல்கிறாயா? 480 00:46:53,480 --> 00:46:55,274 நீங்கள் தேவைப்படும் குடும்பம் உங்களுக்கு இருக்கிறது. 481 00:47:00,779 --> 00:47:03,282 உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன். 482 00:47:04,700 --> 00:47:06,201 என்னை இந்த வீட்டிற்குள் அனுமதித்ததற்காக. 483 00:47:08,912 --> 00:47:10,706 நீ அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். 484 00:47:12,583 --> 00:47:14,459 அது என்னுடைய முடிவு இல்லை. 485 00:47:14,459 --> 00:47:15,961 ஆனால் நீங்கள் அனுமதித்தீர்கள். 486 00:47:15,961 --> 00:47:17,045 அப்படியா? 487 00:47:18,213 --> 00:47:19,715 எனக்கு என்ன வழி இருந்தது? 488 00:47:32,186 --> 00:47:34,146 நீ செய்ய விரும்பும் அந்த விஷயம். 489 00:47:35,981 --> 00:47:37,232 அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 490 00:47:38,942 --> 00:47:40,152 ஆனால் உண்மையில்... 491 00:47:43,572 --> 00:47:45,073 நான் அதை மதிக்கிறேன். 492 00:47:49,411 --> 00:47:50,621 ஒருவேளை... 493 00:47:59,213 --> 00:48:01,632 அதனால்தான் அவள் உன்னை நேசிக்கிறாள். 494 00:48:07,179 --> 00:48:09,097 உங்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். 495 00:48:10,807 --> 00:48:12,351 அவள் உன்னைப் பார்க்கும் விதம். 496 00:48:14,269 --> 00:48:16,188 அதற்காக நான் எவ்வளவு வேண்டினாலும்... 497 00:48:18,148 --> 00:48:20,150 அவள் என்னை அப்படிப் பார்த்ததில்லை. 498 00:48:22,653 --> 00:48:25,072 நான் உங்களுக்கு தீங்கு செய்ய ஒருபோதும் நினைத்ததில்லை. 499 00:48:25,072 --> 00:48:26,365 ஆனால் நீ செய்தாய். 500 00:48:34,206 --> 00:48:35,415 அதற்காக நான் வருந்துகிறேன். 501 00:48:47,135 --> 00:48:48,720 நான் உன்னை தங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 502 00:48:53,767 --> 00:48:55,143 ஏனென்றால் நீ போய்விட்டால், 503 00:48:56,812 --> 00:48:57,980 அவள் உடைந்துவிடுவாள். 504 00:49:01,066 --> 00:49:02,776 நீ நினைப்பதைவிட அவர் வலிமையானவர். 505 00:49:02,776 --> 00:49:04,778 அப்படிப்பட்ட வலிமை எனக்கு வேண்டாம்! 506 00:49:07,573 --> 00:49:09,366 எனக்கு தியாகி வேண்டாம், 507 00:49:10,242 --> 00:49:12,619 நான் அவளுடைய கூண்டாக இருக்க விரும்பவில்லை. 508 00:49:13,412 --> 00:49:14,288 அவள்... 509 00:49:16,582 --> 00:49:18,166 நான் அவளுக்குக் கொடுக்கக்கூடியதைவிட, 510 00:49:19,209 --> 00:49:21,253 இன்னும் சிறப்பானவற்றுக்கு அவள் தகுதியானவள். 511 00:49:21,962 --> 00:49:24,298 அவள் எப்போதும் இன்னும் நன்றாக இருக்க தகுதியானவள். 512 00:49:29,052 --> 00:49:30,053 அதனால்... 513 00:49:39,980 --> 00:49:41,190 போய் அவளிடம் சொல். 514 00:49:44,776 --> 00:49:46,195 அவள் சுதந்திரமானவள். 515 00:49:47,196 --> 00:49:48,197 நான் சொன்னது கேட்டதா? 516 00:49:50,282 --> 00:49:53,160 அவள் வழியில் நிற்கும் சுவராக நான் இருக்க மாட்டேன். 517 00:49:55,537 --> 00:49:56,914 என்னால் முடியாது. 518 00:50:03,670 --> 00:50:04,922 இப்படி இல்லை. 519 00:50:04,922 --> 00:50:06,924 நீங்கள் தேவையில் இருக்கும்போது முடியாது. 520 00:50:49,091 --> 00:50:50,300 திரு. கிம். 521 00:50:53,136 --> 00:50:54,388 யோசெபுக்குத் தெரியும். 522 00:50:56,723 --> 00:50:57,933 நீ கவலைப்படத் தேவையில்லை. 523 00:50:59,017 --> 00:51:00,602 அவர் உன்னோடு சமாதானம் ஆகிவிட்டார். 524 00:51:01,270 --> 00:51:02,271 அவர் உன்னை... 525 00:51:03,272 --> 00:51:04,481 போக அனுமதிப்பதாகச் சொன்னார். 526 00:51:08,652 --> 00:51:09,653 கியுங்கீ. 527 00:51:16,785 --> 00:51:18,287 ஏதாவது சொல், கியுங்கீ. 528 00:51:19,371 --> 00:51:21,790 என்னை என்ன செய்வது என்பதை நீங்கள் இருவரும் முடிவு செய்தீர்களா? 529 00:51:23,083 --> 00:51:24,334 அதுதான் நடந்ததா? 530 00:51:27,129 --> 00:51:28,130 அப்படி இல்லை. 531 00:51:28,130 --> 00:51:30,132 அப்படியென்றால் பேச்சுவார்த்தையா? 532 00:51:30,924 --> 00:51:32,551 இல்லை, நிச்சயமாக இல்லை. 533 00:51:33,302 --> 00:51:34,928 உன் மீதான என் உணர்வுகள் உனக்கே தெரியும். 534 00:51:36,680 --> 00:51:39,099 பண்ணையில் அன்றைய இரவிலிருந்து, நான் தடுமாறியதில்லை. 535 00:51:39,892 --> 00:51:42,269 இது சாத்தியம் என்று நான் நினைக்கவே இல்லை. 536 00:51:50,485 --> 00:51:51,653 கியுங்கீ? 537 00:51:54,489 --> 00:51:55,574 அன்று இரவு, 538 00:51:56,700 --> 00:51:58,368 நான் என் சத்தியங்களை மீறிவிட்டேன். 539 00:51:59,453 --> 00:52:00,704 சில மணிநேரம் கழித்து, 540 00:52:02,372 --> 00:52:04,499 என் கணவர் கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். 541 00:52:05,751 --> 00:52:07,586 நாம்தான் காரணம் என்று நீ நினைக்கக்கூடாது... 542 00:52:07,586 --> 00:52:10,005 அதில் அர்த்தமில்லை என்று எனக்குத் தெரியும். 543 00:52:12,216 --> 00:52:16,345 நான் இந்த உலகத்திற்கு அர்த்தமற்றவள் என்பதை நீண்ட காலத்துக்கு முன்பே ஏற்றுக்கொண்டுவிட்டேன். 544 00:52:17,387 --> 00:52:19,056 ஆனால் குண்டு வெடித்தது பற்றி தெரிந்ததும், 545 00:52:19,056 --> 00:52:21,099 இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனை செய்தேன். 546 00:52:21,099 --> 00:52:23,519 அவரைக் காப்பாற்றும்படி இறைவனிடம் மன்றாடினேன். 547 00:52:24,478 --> 00:52:25,896 நான் உடன்படிக்கை செய்துகொண்டேன். 548 00:52:31,568 --> 00:52:33,403 என் கணவர் திரும்பி வந்தார். 549 00:52:40,410 --> 00:52:41,995 ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன். 550 00:52:43,872 --> 00:52:45,666 நீயும் என்னை நேசிக்கிறாய். எனக்குத் தெரியும். 551 00:52:48,585 --> 00:52:49,878 அந்த அன்பு, 552 00:52:51,255 --> 00:52:52,965 அது என்னை பயமுறுத்துகிறது. 553 00:52:59,096 --> 00:53:00,138 நீ போ. 554 00:53:03,475 --> 00:53:06,186 போரிடு, நீ பிழைப்பாய். 555 00:53:07,938 --> 00:53:08,939 நீ பிழைக்க வேண்டும். 556 00:53:13,443 --> 00:53:16,321 ஏனென்றால் நீ இல்லாத ஒரு உலகத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணம், 557 00:53:16,321 --> 00:53:17,990 அதை என்னால் தாங்க முடியாது. 558 00:53:27,207 --> 00:53:29,376 போர் முடித்ததும், எங்களிடம் திரும்பி வா. 559 00:53:33,213 --> 00:53:35,674 உன் மனைவியையும் அழகான குழந்தைகளையும் கூட்டி வா. 560 00:53:36,550 --> 00:53:38,177 நீ அதைச் செய்வாய், இல்லையா? 561 00:53:45,100 --> 00:53:46,185 இப்படிச் செய்யாதே. 562 00:54:08,624 --> 00:54:13,003 அமெரிக்கர்களை வீழ்த்துங்கள்! 563 00:54:13,670 --> 00:54:18,717 அவர்களுடைய ஏகாதிபத்திய வெற்றிகளில் நம்மை பகடைக்காய்களாக ஆக்குவதற்காக மட்டும்தான் 564 00:54:19,301 --> 00:54:23,347 நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் புரிந்துகொள்வதாக அவர்கள் உறுதியளித்தார்கள்! 565 00:54:23,347 --> 00:54:26,433 அவர்களுடைய தீய திட்டம் இப்போது நம் வளாகத்தையும் அடைந்துவிட்டது. 566 00:54:27,017 --> 00:54:30,938 நாம் எழுந்து போராட வேண்டிய நேரம் இது! 567 00:54:30,938 --> 00:54:32,439 சொல்லுங்கள். 568 00:54:32,439 --> 00:54:35,859 எங்களுடன் சேர உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? 569 00:54:35,859 --> 00:54:39,112 இந்த தீயதை களையெடுக்கும் முடிவை கோருவதற்கு. 570 00:54:39,655 --> 00:54:42,115 என்னுடன் எழுவீர்களா? 571 00:54:43,325 --> 00:54:45,244 அப்படியென்றால் எங்கள் போராட்டத்தில் சேருங்கள்! 572 00:55:04,096 --> 00:55:06,098 என்னை ஏன் சந்திக்க வேண்டும் என்றாய்? 573 00:55:09,309 --> 00:55:10,602 யார் நீ? 574 00:55:10,602 --> 00:55:12,104 உங்களை பயமுறுத்தியதற்கு மன்னியுங்கள். 575 00:55:12,604 --> 00:55:14,106 நான் யோஷி இசாமு. 576 00:55:16,984 --> 00:55:19,361 சந்தைகளில் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். 577 00:55:20,237 --> 00:55:21,572 எப்படி உள்ளே வந்தாய்? 578 00:55:21,572 --> 00:55:23,323 நான் வாசல் வழியாக உள்ளே வந்தேன். 579 00:55:25,742 --> 00:55:26,910 ஹான்சு எங்கே? 580 00:55:28,328 --> 00:55:29,413 அவன் எங்கே? 581 00:55:30,873 --> 00:55:32,624 அவர் அங்கே நின்று நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். 582 00:57:27,447 --> 00:57:29,449 வசனத் தமிழாக்கம் அருண்குமார்