1 00:00:11,094 --> 00:00:12,346 சுன்ஜா? 2 00:00:14,848 --> 00:00:16,140 சுன்ஜா? 3 00:00:25,275 --> 00:00:26,401 (கொரிய மொழியில்) சுன்ஜா? 4 00:00:30,447 --> 00:00:31,573 நாம் வந்துவிட்டோம். 5 00:00:42,042 --> 00:00:44,294 ஒசாகா 1931 6 00:00:55,264 --> 00:00:57,641 இது கடினமான பயணம் என்பதை நான் அறிவேன், 7 00:00:57,724 --> 00:00:59,309 ஆனால் விரைவில் என் சகோதரன் வீட்டில் இருப்போம். 8 00:01:07,985 --> 00:01:09,027 இசாக்! 9 00:01:09,111 --> 00:01:10,237 சகோதரா! 10 00:01:12,823 --> 00:01:13,824 யோசெப்! 11 00:01:21,498 --> 00:01:23,709 எப்படி இவ்வளவு உயரமானாய்? 12 00:01:23,792 --> 00:01:26,044 நான் பிரிந்து வரும்போது நீ குள்ளமாக இருந்தாய். 13 00:01:26,128 --> 00:01:29,298 என்னிடமிருந்து வளர்ச்சியை திருடிவிட்டாய்! 14 00:01:29,381 --> 00:01:31,049 அதற்காக மிகவும் கடினமாக ஜெபித்தேன். 15 00:01:32,426 --> 00:01:33,635 சகோதரா, 16 00:01:34,178 --> 00:01:36,513 இது என் மனைவி, சுன்ஜா. 17 00:01:42,603 --> 00:01:47,065 கியுங்கீயும் நானும் செய்தியறிந்து ஆச்சரியப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். 18 00:01:47,149 --> 00:01:48,692 ஏற்கனவே கர்ப்பமாக இருக்கிறாள். 19 00:01:49,193 --> 00:01:50,402 நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். 20 00:01:50,485 --> 00:01:52,154 அப்படித்தான் இதைப் பார்க்கிறோம். 21 00:01:54,781 --> 00:01:56,408 எப்படி இருக்கிறாய்? 22 00:01:56,491 --> 00:01:58,577 மீண்டும் நிலத்தில் இருப்பதில் நிம்மதி அடைகிறேன், 23 00:02:00,245 --> 00:02:02,289 அதோடு உங்கள் வீட்டிற்கு வரவேற்றதற்கு நன்றி... 24 00:02:02,372 --> 00:02:04,833 தேவையில்லை. நாம் இப்போது ஒரே குடும்பம். 25 00:02:05,417 --> 00:02:06,418 ஆனால் நாம் போக வேண்டும். 26 00:02:06,502 --> 00:02:09,588 உன்னை சீக்கிரம் வீட்டிற்கு அழைத்துப் போகவில்லையெனில், கியுங்கீ கோபப்படுவாள். 27 00:02:11,840 --> 00:02:13,300 வேண்டாம். 28 00:02:13,383 --> 00:02:15,260 நானே இவற்றை எடுத்து வருகிறேன். 29 00:02:16,637 --> 00:02:17,763 போகலாம். 30 00:02:25,812 --> 00:02:29,191 பூஸான் 1989 31 00:03:07,980 --> 00:03:11,024 ஆஹா, இந்த இடத்தைப் பார்! 32 00:03:13,944 --> 00:03:15,237 அதோ வண்டி வருகிறது. 33 00:03:47,227 --> 00:03:49,188 இன்னும் தொழிற்சாலையில் தான் பணியாற்றுகிறாயா? 34 00:03:49,271 --> 00:03:51,398 பொது இடத்தில் ஜப்பானிய மொழியில் பேசுவது நல்லது. 35 00:03:52,024 --> 00:03:54,234 (ஜப்பானிய மொழியில்) இப்போது பிஸ்கட் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இருக்கிறேன். 36 00:03:54,318 --> 00:03:56,445 என் முதலாளி என்னை நம்புகிறார். 37 00:03:57,487 --> 00:03:59,072 ஹேய், அதைப் பார்! 38 00:03:59,656 --> 00:04:01,241 அவர்கள் இப்போது ஒரு சுரங்கப்பாதையை கட்டுகின்றனர். 39 00:04:01,825 --> 00:04:04,828 டோக்கியோவில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முதல் இரயில் சேவை துவங்கப்பட்டது, 40 00:04:04,912 --> 00:04:07,497 எனவே ஆசியாவில் ஒசாகாவிற்கு இரண்டாவது இடம் தான். 41 00:04:08,457 --> 00:04:10,542 அது எல்லாவற்றையும் மாற்றிவிடும். 42 00:04:11,543 --> 00:04:14,838 ஆனால் நாம் ஏற்கனவே எதிர்காலத்தில் இருப்பது போல உணர்கிறேன். 43 00:04:24,223 --> 00:04:25,557 அதைப் பார்! 44 00:04:26,517 --> 00:04:29,603 எனக்கு ஏழு வயதுதான் இருக்கும், இவற்றைவிட பெரிய சிப்பிகளை பிடிப்பேன். 45 00:04:31,271 --> 00:04:34,233 எவ்வளவு விலை உயர்ந்தது பார்! 46 00:04:34,316 --> 00:04:38,362 நான் அவற்றுக்காக நீரில் மூழ்குவதை என் அப்பா வந்து பார்ப்பார். 47 00:04:44,826 --> 00:04:46,411 இரண்டு எடுத்துக்கொள்கிறேன். 48 00:04:46,495 --> 00:04:47,829 எனக்கில்லையா. 49 00:04:48,455 --> 00:04:49,831 உனக்கு ஒன்றை தருவதாக யார் சொன்னது? 50 00:04:51,959 --> 00:04:55,671 உணவகத்தில் காலை உணவிற்கு பிறகு எனக்கு பசி எடுக்கக் கூட இல்லை, 51 00:04:55,754 --> 00:04:57,172 இருந்தாலும் எப்படி வேண்டாம் என்பேன்? 52 00:04:57,256 --> 00:04:58,799 கண்டிப்பாக நான் இதை சாப்பிட வேண்டும். 53 00:04:59,299 --> 00:05:03,971 அம்மா, அறைக்கான கட்டணத்தில் உணவும் அடங்குமென்று சொன்னேனே. 54 00:05:04,054 --> 00:05:06,056 இதை வீண் செலவு என்பார்கள். 55 00:05:06,139 --> 00:05:08,934 பணக்காரனாக வளர்ந்தவர்கள் தான் இப்படி முட்டாள்தனமான விஷயங்களை நினைப்பார்கள். 56 00:05:12,896 --> 00:05:16,149 வா. உன் அத்தையின் சாம்பலை தூவலாம். 57 00:05:17,150 --> 00:05:18,151 அம்மா! 58 00:05:29,872 --> 00:05:31,123 சீக்கிரம் வாருங்கள்! 59 00:05:31,748 --> 00:05:33,083 என் பின்னாலேயே இருங்கள்! 60 00:05:42,676 --> 00:05:44,052 யோசெப், 61 00:05:44,678 --> 00:05:46,096 இது என்ன இடம்? 62 00:05:47,556 --> 00:05:48,974 இது இகைனோ, 63 00:05:49,600 --> 00:05:51,185 நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் பகுதி. 64 00:05:55,314 --> 00:05:56,982 கவனமாக கேள், இசாக். 65 00:05:57,900 --> 00:05:59,318 இன்னும் உளவாளிகள் சுற்றித் திரிகிறார்கள். 66 00:05:59,860 --> 00:06:01,069 தேவாலயத்திலும் தான் என நினைக்கிறேன். 67 00:06:01,612 --> 00:06:04,948 நீ கவனமின்றி இருக்கக்கூடாது, புரிகிறதா? 68 00:06:06,533 --> 00:06:09,828 நான் என்ன செய்கிறேன் பார், முதல் நாளே உன்னை பயமுறுத்துகிறேன். 69 00:06:12,497 --> 00:06:17,628 முதல் வருடம் இங்கே எங்களுக்கு எவ்வளவு மோசமாக இருந்தது என உன்னால் கற்பனை செய்ய முடியாது. 70 00:06:19,213 --> 00:06:21,507 சுற்றிப் பார், அதற்கான காரணம் உனக்கே புரியும். 71 00:06:22,966 --> 00:06:26,220 வயிறு பசிக்கும், ஆனால் வேலை இருக்காது. 72 00:06:26,303 --> 00:06:28,305 அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். 73 00:06:29,806 --> 00:06:32,100 நம் வீடு எத்தனை முறை சேதப்படுத்தப்பட்டது தெரியுமா? 74 00:06:32,184 --> 00:06:35,646 நாங்கள் போலீஸிடம் சென்றால், அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள். 75 00:06:35,729 --> 00:06:38,482 இங்குள்ள கொரியர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. 76 00:06:41,318 --> 00:06:42,945 ஆனால் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, 77 00:06:43,946 --> 00:06:46,073 நாம் இன்னும் அதிர்ஷ்டசாலிகள் தான். 78 00:06:51,870 --> 00:06:54,498 போ! இப்போதே போ! 79 00:06:54,581 --> 00:06:57,251 உன் பன்றிகளை இப்படி விடாதே என்று உன்னிடம் சொன்னேன்! 80 00:07:00,587 --> 00:07:02,047 அடச்சே! 81 00:07:06,718 --> 00:07:07,803 நாங்கள் வந்துவிட்டோம்! 82 00:07:09,847 --> 00:07:11,098 கியுங்கீ! 83 00:07:11,181 --> 00:07:16,019 முதல் சீன-ஜப்பானிய மற்றும் ரஷிய-ஜப்பானியப் போரைத் தொடர்ந்து, 84 00:07:16,103 --> 00:07:19,106 மஞ்சூரியாவும் மங்கோலியாவும் நம் நாட்டின் உயிர்நாடியாக மாறிவிட்டன... 85 00:07:25,904 --> 00:07:27,614 இசாக்! 86 00:07:27,698 --> 00:07:29,241 நன்றாக வளர்ந்துவிட்டாய். 87 00:07:29,324 --> 00:07:31,827 ஆனால் நீங்கள் இன்னும் மாறவேயில்லை. 88 00:07:32,369 --> 00:07:34,037 மாறவில்லையா? 89 00:07:34,121 --> 00:07:35,622 இப்போது எனக்கு வயதாகிவிட்டது. 90 00:07:41,044 --> 00:07:42,671 இது சுன்ஜா தானே? 91 00:07:43,172 --> 00:07:45,424 நீண்ட பயணத்திற்குப் பிறகு நீ களைப்பாக இருப்பாய். 92 00:07:46,049 --> 00:07:47,676 எப்படி உணர்கிறாய்? 93 00:07:48,802 --> 00:07:50,095 நன்றாக இருக்கிறேன். 94 00:07:50,179 --> 00:07:52,389 தயவுசெய்து கவலைப்படாதீர்கள். 95 00:07:53,932 --> 00:07:55,309 ஆனால் உனக்கு பசிக்கிறது தானே? 96 00:07:55,392 --> 00:07:56,643 உட்கார். 97 00:08:05,360 --> 00:08:07,237 இன்று, நீ சாப்பிட்டால் போதும். 98 00:08:08,113 --> 00:08:10,282 நீங்கள் வந்ததை கொண்டாட விசேஷமான உணவுகள் இருக்கின்றன. 99 00:09:48,046 --> 00:09:49,882 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 100 00:10:09,484 --> 00:10:13,405 டோக்கியோ 101 00:10:31,632 --> 00:10:33,383 நீ வந்துவிட்டாய்! 102 00:10:35,219 --> 00:10:38,263 உன் முகத்தில் தெரிகிறது. ஏற்கனவே கேள்விப்பட்டாயா? 103 00:10:38,347 --> 00:10:40,057 நீ இங்கு வந்ததில் மகிழ்ச்சி. 104 00:10:40,140 --> 00:10:42,142 நான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை அறிமுகம் செய்கிறேன். 105 00:10:43,560 --> 00:10:45,771 இது சாலமன், சர்வதேச பள்ளியில் என் வகுப்புத் தோழன். 106 00:10:45,854 --> 00:10:47,981 அமெரிக்காவில் வெற்றிகரமானவராக இருப்பவர். 107 00:10:48,065 --> 00:10:49,691 இவ்வளவு காலத்திற்கு பிறகு டோக்கியோ குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 108 00:10:49,775 --> 00:10:53,695 அதிக பணம் இருந்தும் அதை செலவழிக்க நேரமில்லாத நகரம். 109 00:10:53,779 --> 00:10:54,780 சிறப்புமிக்கது. 110 00:10:54,863 --> 00:10:57,449 பார்த்தாயா? இவன் பெண்களை வசீகரித்துவிடுவான். 111 00:10:58,325 --> 00:11:01,370 எனவே இவன் ஏன் அந்த ஒரு பெண்ணோடு நின்றுவிட்டான் என்பது மர்மம் தான். 112 00:11:01,453 --> 00:11:02,829 மிகவும் தீவிரமாக... 113 00:11:02,913 --> 00:11:04,581 -ஹனா. -ஆம், ஹனா. 114 00:11:04,665 --> 00:11:05,874 அவளுக்கு என்ன ஆனது? 115 00:11:06,834 --> 00:11:09,211 அவளைக் காணவில்லை. 116 00:11:09,294 --> 00:11:12,089 அப்படிப்பட்ட பெண்தான் தேவையென்றால், அவர்கள் இருக்கும் இடம் உனக்குத் தெரியும். 117 00:11:12,172 --> 00:11:13,924 குமிகோ மீண்டும் தனியாக இருக்கிறாள். 118 00:11:15,133 --> 00:11:17,135 அவளை அழைக்க வேண்டாம் என்று சொன்னேனே. 119 00:11:17,219 --> 00:11:18,929 உன் கவனத்தை ஈர்க்க வந்திருக்கிறாள். 120 00:11:22,224 --> 00:11:23,684 இவளது மூத்த சகோதரி, 121 00:11:23,767 --> 00:11:25,936 எங்கள் நிச்சயதார்த்த விழாவை நாங்கள் தாமதப்படுத்த அவள் தான் காரணம். 122 00:11:26,019 --> 00:11:30,065 அவளது பெற்றோர் முதலில் அவளுக்கு மணம் முடிக்க விரும்பினர், ஆனால் யாரும் முன் வரவில்லை. 123 00:11:32,609 --> 00:11:34,403 எனவே, இப்போது நிலைமை என்ன? 124 00:11:35,612 --> 00:11:38,574 டோக்கியோவின் ஒவ்வொரு வங்கியிலும் திரு. அபே உன்னை நிராகரிக்க வைக்கிறார். 125 00:11:39,700 --> 00:11:42,661 யார் கவலைப்பட்டார்கள்? எப்படியும் நான் மீண்டும் நியூயார்க்கிற்கு திரும்பி விடுவேன். 126 00:11:42,744 --> 00:11:44,538 கண்டிப்பாக போகிறாயா? 127 00:11:44,621 --> 00:11:45,789 உனக்கு என்ன தெரியும்? 128 00:11:46,957 --> 00:11:49,459 இல்லை, ஒன்றுமில்லை. 129 00:11:50,711 --> 00:11:53,088 ஆனால் டாம் ஆண்ட்ரூஸ், 130 00:11:53,922 --> 00:11:55,924 நான் அவரை அதிகம் நம்பமாட்டேன். 131 00:11:56,008 --> 00:11:59,011 அவர் தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்வதில் மும்முரமாக இருக்கிறார். 132 00:11:59,094 --> 00:12:02,139 நிதி முறைகேடுகள், வாடிக்கையாளர்களின் சொத்துக்கள். 133 00:12:03,140 --> 00:12:04,975 வாய்ப்பே இல்லை. அவர் அப்படிப்பட்டவர் அல்ல. 134 00:12:05,058 --> 00:12:07,686 அதனால் தான் நியூயார்க்கிலிருந்து அவரை டோக்கியோவிற்கு அனுப்பினார்கள். 135 00:12:08,270 --> 00:12:09,730 எதுவும் வெளியே தெரியாமல் தடுக்க. 136 00:12:11,231 --> 00:12:12,232 என்ன நடந்ததென்றால், 137 00:12:12,316 --> 00:12:14,610 அவர் தன் வேலையை இதற்கு மேலும் கெடுத்துக்கொள்ள முடியாது. 138 00:12:14,693 --> 00:12:17,613 அவர் என்னை வேலை நீக்கம் செய்வார் என்று நினைக்கிறாயா? 139 00:12:17,696 --> 00:12:19,198 இல்லையா? 140 00:12:20,365 --> 00:12:23,535 உன் நற்பெயரைக் காக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். 141 00:12:24,494 --> 00:12:28,123 ஆனால் நிஜமாக, நீ ஏன் அதை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. 142 00:12:31,335 --> 00:12:32,336 எனக்கும் தான். 143 00:12:35,506 --> 00:12:39,092 நான் மற்ற விருந்தினர்களை வரவேற்க வேண்டும், உன்னை பிறகு பார்க்கிறேன். 144 00:12:40,427 --> 00:12:41,470 ஹேய், 145 00:12:41,553 --> 00:12:43,514 ஹனாவை எங்கே தேட வேண்டும் என்று எனக்குத் 146 00:12:43,597 --> 00:12:45,474 தெரிய வேண்டும் என்று முன்பு நீ சொன்னதன் அர்த்தம் என்ன? 147 00:12:46,350 --> 00:12:47,684 நான் எங்கே தேட வேண்டும்? 148 00:12:48,435 --> 00:12:49,645 அப்படிப்பட்ட விஷயத்திற்கு, 149 00:12:50,229 --> 00:12:51,522 யோஷிவாரா பகுதி, 150 00:12:51,605 --> 00:12:52,981 உகிசுதானி இரயில் நிறுத்தத்திற்கு அருகில். 151 00:12:58,987 --> 00:13:00,239 ஹாய். 152 00:13:24,137 --> 00:13:26,223 அவன் என்ன நினைக்கிறான்? 153 00:13:26,974 --> 00:13:28,517 மெதுவாக பேசுங்கள். 154 00:13:30,227 --> 00:13:32,020 அப்படிப்பட்ட பெண்ணை அவன் எப்படி மணக்கலாம்? 155 00:13:35,107 --> 00:13:36,525 அவள் இன்னும் இளமையானவள் தான். 156 00:13:38,026 --> 00:13:39,695 அவள் பழகட்டும். 157 00:13:41,321 --> 00:13:45,158 நாம் வரும்போது பெரியவர்களாக இருந்தோமா? நாமும் அதே வயதில் தான் இருந்தோம். 158 00:13:47,578 --> 00:13:51,832 அப்போது மிகவும் கஷ்டப்பட்டோம். உங்களுக்கு நினைவில்லையா? 159 00:13:55,586 --> 00:13:57,546 நான் அது குறித்து மட்டும் பேசவில்லை. 160 00:13:59,756 --> 00:14:01,967 நான் எதிர்பார்த்ததை விட நீண்ட காலமாக அவள் கர்ப்பமாக இருக்கிறாள். 161 00:14:03,093 --> 00:14:04,845 நீயும் அதை பார்த்தாய், இல்லையா? 162 00:14:08,056 --> 00:14:11,894 அதோடு இசாக், தார்மீக அணுகுமுறையால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவன், 163 00:14:12,686 --> 00:14:14,104 அப்படி ஒரு பெண்... 164 00:14:15,439 --> 00:14:17,649 அவனை சிக்க வைக்க அவள் திட்டமிட்டிருக்கலாம். 165 00:14:18,775 --> 00:14:19,776 யோசெப். 166 00:14:19,860 --> 00:14:21,904 நமக்கு தெரியாத ஒருவரை வீட்டில் சேர்த்திருக்கிறோம். 167 00:14:22,487 --> 00:14:24,072 அது உனக்கு கவலையளிக்கவில்லையா? 168 00:14:33,916 --> 00:14:36,001 நான் அவர்களை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது. 169 00:14:48,555 --> 00:14:52,267 அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்கள். கவலைப்படாதே. 170 00:14:59,066 --> 00:15:00,901 ஆனால் இந்த இடம்... 171 00:15:03,237 --> 00:15:05,989 நாம் இங்கே வேண்டாதவர்கள் என்பது போல உணர்கிறேன். 172 00:15:11,912 --> 00:15:13,664 நானும் அப்படி உணர்கிறேன். 173 00:15:19,378 --> 00:15:20,754 இவ்வளவு காலமாக, 174 00:15:20,838 --> 00:15:22,506 நான் வீட்டிலிருந்து போக நினைத்தேன். 175 00:15:24,299 --> 00:15:25,884 இப்போது அதை செய்துவிட்டதால்... 176 00:15:29,346 --> 00:15:33,016 சுன்ஜா, நீ என்னை வெறுத்துவிடுவாய் என்று கவலைப்பட்டேன். 177 00:15:33,934 --> 00:15:35,269 உங்களை வெறுப்பதா? 178 00:15:37,271 --> 00:15:40,023 என்னை காப்பாற்றிய ஒருவரை என்னால் எப்படி வெறுக்க முடியும்? 179 00:15:40,107 --> 00:15:42,442 நமக்கிடையே இந்த கடன் இருப்பதை நான் விரும்பவில்லை. 180 00:15:43,569 --> 00:15:45,320 நீ எனக்கு எதுவும் கடன்படவில்லை. 181 00:15:48,073 --> 00:15:49,658 நீங்களே சொல்லிவிட்டீர்கள். 182 00:15:52,035 --> 00:15:53,829 பார்வைக்கெட்டிய வரை நல்வாய்ப்புகள் தெரியவில்லை. 183 00:15:53,912 --> 00:15:56,039 ஆனால் நீ அவற்றைப் பார்த்து பயப்படவில்லை. 184 00:15:56,123 --> 00:15:57,916 நீங்கள் நினைத்தது தவறு. 185 00:15:58,000 --> 00:15:59,334 நான் மிகவும் பயந்தேன். 186 00:16:03,881 --> 00:16:05,424 உனக்கு அது தெரியவில்லை, 187 00:16:07,217 --> 00:16:08,260 இல்லையா? 188 00:16:16,351 --> 00:16:20,105 உனக்கு மனோபலம் அதிகம். 189 00:16:23,567 --> 00:16:26,653 உன்னிடமிருந்து எனக்கு தேவையான தைரியத்தை நான் பறித்துக்கொண்டாலும் கூட 190 00:16:28,197 --> 00:16:29,990 இன்னும் உன்னிடம் மனோபலம் மீதமிருக்கும். 191 00:16:36,747 --> 00:16:38,415 அதோடு இந்த குழந்தை... 192 00:16:40,751 --> 00:16:42,669 என் பெயரை சுமக்கப்போகும் இந்த குழந்தை, 193 00:16:44,171 --> 00:16:45,756 அவன் என் பெயரை காப்பாற்றுவான். 194 00:16:49,176 --> 00:16:51,303 மரணம் என்னை அடைய முடியாது. 195 00:16:53,931 --> 00:16:59,311 அதனால் என் அண்ணனோ, அண்ணியோ எதை நம்பினாலும், அவர்கள் நினைப்பது தவறுதான். 196 00:17:00,938 --> 00:17:03,524 நான்தான் உனக்கு சுமையாக இருக்கக் கூடாது. 197 00:17:50,237 --> 00:17:52,197 நீ பதற்றமாகவும் இருக்கிறாய். 198 00:18:54,510 --> 00:18:56,803 நான் உன்னை ஒருநாள் பார்த்தேன், 199 00:18:57,346 --> 00:18:59,306 வணிக வளாகத்தில் ஆடிக்கொண்டிருந்தாய். 200 00:19:01,433 --> 00:19:02,726 நீ அங்கு இருந்தாயா? 201 00:19:06,688 --> 00:19:08,857 எங்கிருந்து அந்த ஆட்டம் வந்தது? 202 00:19:09,441 --> 00:19:11,026 யாருக்குத் தெரியும். 203 00:19:13,737 --> 00:19:15,906 நான் அந்த கூட்ட அறையை விட்டு வெளிவந்த போது, 204 00:19:16,740 --> 00:19:19,201 நான் பெரும் மனக்குழப்பத்தில் இருந்தேன். 205 00:19:20,118 --> 00:19:22,955 ஆனால் நான் வெளியே வந்து அந்த இசையை கேட்டதும்... 206 00:19:23,789 --> 00:19:25,415 அதை விவரிப்பது கடினம். 207 00:19:27,084 --> 00:19:29,711 என்னால் பறக்க முடியும் என்று உணர்ந்தேன். 208 00:19:31,713 --> 00:19:33,465 நான் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன். 209 00:19:34,424 --> 00:19:36,051 ஆனால் நீ பறந்து செல்லவில்லை. 210 00:19:36,969 --> 00:19:38,971 ஈர்ப்பு விசை வென்றுவிட்டது. 211 00:19:44,226 --> 00:19:46,144 ஒருவேளை வேறு காரணம் இருக்கிறதோ? 212 00:19:47,229 --> 00:19:49,439 ஒருவேளை ஹனாவா? 213 00:19:51,942 --> 00:19:53,527 அலுவலக சுவர்கள் ஒன்றும் அவ்வளவு தடிமன் அல்ல. 214 00:19:54,069 --> 00:19:57,072 நீ எல்லாவற்றையும் கேட்டுவிட்டாயா? 215 00:19:58,156 --> 00:19:59,449 என்னை மன்னித்துவிடு. 216 00:19:59,533 --> 00:20:01,660 நான் ஒட்டுக்கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. 217 00:20:04,496 --> 00:20:06,415 ஆனால் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும், 218 00:20:08,250 --> 00:20:09,960 நான் ஆர்வமாக இருந்தேன். 219 00:20:12,838 --> 00:20:14,423 அவள் உனக்கு முக்கியமானவளாக இருக்க வேண்டும். 220 00:20:16,967 --> 00:20:19,011 இருந்தாள், 221 00:20:20,596 --> 00:20:22,139 ஆனால் பல ஆண்டுகளாக அவளை பார்க்கவில்லை. 222 00:20:24,266 --> 00:20:26,560 நேர்மையாக சொல்வதென்றால், அவளை மறக்கத் தொடங்கிவிட்டேன். 223 00:20:28,979 --> 00:20:31,607 இவ்வளவு காலத்திற்கு பிறகு அப்போதுதான் அவள் அழைத்தாள். 224 00:20:33,275 --> 00:20:36,486 இன்னும் உன்னுடன் இல்லாத ஒன்று உன்னை மிகவும் பாதிக்காது. 225 00:20:40,407 --> 00:20:42,117 நாங்கள் சந்தித்த முதல் முறையிலிருந்து, 226 00:20:42,201 --> 00:20:44,119 அவள் என் இதயத்தில் இருக்கிறாள். 227 00:20:47,664 --> 00:20:49,374 எனக்கு 14 வயது. 228 00:20:51,543 --> 00:20:53,504 என் தந்தையுடைய தோழியின் மகள் அவள். 229 00:20:54,171 --> 00:20:56,381 வினோதமான சூழ்நிலைகள். 230 00:20:56,465 --> 00:21:00,135 ஆனால் அதுவே ஈர்ப்பின் ஒரு அங்கமாக இருக்கலாம். 231 00:21:03,055 --> 00:21:04,389 நம்மை மனதை ஆட்டிப்படைக்கும்... 232 00:21:06,225 --> 00:21:10,395 அந்த சக்தி சிலரிடம் இருக்கிறது. 233 00:21:14,233 --> 00:21:15,734 ஹனாவிடம் அந்த சக்தி இருந்தது. 234 00:21:18,612 --> 00:21:20,072 நீங்கள் இருவரும் ஏன் பிரிந்தீர்கள்? 235 00:21:21,573 --> 00:21:23,158 நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். 236 00:21:24,493 --> 00:21:25,911 அதன் பிறகு கொஞ்ச காலத்தில்... 237 00:21:28,789 --> 00:21:30,457 அவள் வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். 238 00:21:32,584 --> 00:21:34,127 நீ அவளைத் தேட முயற்சிக்கலாம். 239 00:21:35,587 --> 00:21:38,882 அதைச் செய்ய வேண்டுமா என நிச்சயமாக தெரியவில்லை. 240 00:21:40,425 --> 00:21:43,262 நான் இப்படி இருப்பது அவளுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை. 241 00:21:45,305 --> 00:21:48,100 திரு. பேக், உனக்கு சிக்கலான பெண்ணைத்தான் பிடிக்கிறது. 242 00:21:49,560 --> 00:21:51,520 அந்த நில உரிமையாளர் போல. 243 00:21:52,688 --> 00:21:54,606 என்ன? இப்போது அதை ஏன் இழுக்கிறாய்? 244 00:21:55,190 --> 00:21:59,152 எவ்வளவு பணத்தாலும் அவரை வாங்க முடியாது. 245 00:22:02,656 --> 00:22:05,033 அப்படியென்றால் அதுதான் அவரது திட்டம் என்று நினைக்கிறாயா? 246 00:22:06,577 --> 00:22:07,661 என்ன திட்டம்? 247 00:22:08,745 --> 00:22:10,539 உன்னை அவமானப்படுத்துவது. 248 00:22:12,541 --> 00:22:14,710 அதைப் பற்றி யோசிக்கையில், அது வெளிப்படையாக தெரிகிறது. 249 00:22:25,888 --> 00:22:27,973 செல்வி நவோமி ஒரு பெண்ணாக 250 00:22:28,056 --> 00:22:30,017 பிறந்தது அவளது துரதிஷ்டம், 251 00:22:31,351 --> 00:22:32,769 குறிப்பாக இந்த நாட்டில். 252 00:22:34,730 --> 00:22:38,901 நீ தேவையில்லை என்று இருக்கும் ஒரு வேலையில் சேருவது... 253 00:22:40,986 --> 00:22:45,741 அதை வெற்றி என்று அழைப்பாயா? 254 00:22:54,166 --> 00:22:56,293 திரு. பேக், உன் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது 255 00:22:57,377 --> 00:22:58,795 என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 256 00:23:13,435 --> 00:23:18,857 ஒரு மாதத்திற்குப் பிறகு 257 00:23:37,584 --> 00:23:39,378 என்னை மன்னித்துவிடுங்கள். 258 00:23:39,461 --> 00:23:41,255 நிறைய நேரம் தூங்கிவிட்டேன். 259 00:23:41,338 --> 00:23:44,216 குழந்தை வளர வளர, அம்மாவிற்கு தூக்கம் அவசியம். 260 00:23:45,592 --> 00:23:47,261 நான் துணியை உலர்த்துகிறேன். 261 00:23:52,391 --> 00:23:53,684 மெதுவாக செய். 262 00:23:53,767 --> 00:23:55,644 சிரமப்படாதே. 263 00:23:59,481 --> 00:24:02,067 இன்று காலை இசாக் கிளம்பிய சத்தம் கூட எனக்குக் கேட்கவில்லை. 264 00:24:02,985 --> 00:24:05,153 அவன் நாளுக்குநாள் முன்னதாகவே எழுந்து விடுகிறான். 265 00:24:05,737 --> 00:24:07,781 தேவாலய வேலை அவனுக்கு ஏற்றதாக இருப்பதாக தெரிகிறது. 266 00:24:25,841 --> 00:24:26,884 என்ன ஆனது? 267 00:24:26,967 --> 00:24:28,051 உனக்கு வலிக்கிறதா? 268 00:24:31,680 --> 00:24:37,227 அந்த வாசனை... நீங்கள் இதை துவைத்துவிட்டீர்கள். 269 00:24:41,607 --> 00:24:44,568 சில வாரங்கள் ஆகிவிட்டது, அதோடு இவை மோசமாக துர்நாற்றம் வீசியது. 270 00:24:44,651 --> 00:24:47,279 நான் உணரவில்லை... 271 00:24:48,071 --> 00:24:51,116 இது மட்டும்தான் என்னிடம் இருந்தது. 272 00:24:54,494 --> 00:24:57,372 கொஞ்ச காலம்... 273 00:24:58,999 --> 00:25:01,293 இது இன்னும் கொஞ்ச காலத்திற்கு தேவைப்பட்டது. 274 00:25:03,629 --> 00:25:05,422 சுன்ஜா. 275 00:25:07,883 --> 00:25:10,052 இது எப்போது போகும்? 276 00:25:12,763 --> 00:25:14,389 இந்த வலி, 277 00:25:16,266 --> 00:25:19,645 இது எப்போது நிற்கும்? 278 00:25:25,359 --> 00:25:27,528 இது போகாது. 279 00:25:33,033 --> 00:25:35,494 ஆனால் நீ அதை தாங்கிக்கொள்ள கற்றுக்கொள்வாய். 280 00:25:38,121 --> 00:25:39,164 என்னை நம்பு. 281 00:26:42,352 --> 00:26:43,979 கண்டிப்பாக இதுதானா? 282 00:26:45,939 --> 00:26:47,983 இங்குதான் உங்கள் அப்பா புதைக்கப்பட்டாரா? 283 00:26:48,066 --> 00:26:49,526 நீ என்ன சொல்கிறாய்? 284 00:26:49,610 --> 00:26:51,904 என் அப்பாவை நான் புதைத்த இடத்தை நான் எப்படி மறப்பேன்? 285 00:26:53,488 --> 00:26:54,740 சரியாக இந்த இடம்தான். 286 00:26:55,741 --> 00:26:59,745 இந்த வாகன நிறுத்தத்தை கட்டியபோது அவரது கல்லறையை நகர்த்தி இருப்பார்கள். 287 00:27:04,166 --> 00:27:05,292 அம்மா, 288 00:27:05,375 --> 00:27:08,003 அவர்கள் அதை சரியாக செய்திருப்பார்கள். 289 00:27:08,086 --> 00:27:10,047 கவலைப்படாதீர்கள் கண்டுபிடித்து விடுவோம். 290 00:27:13,258 --> 00:27:14,301 மன்னிக்கவும். 291 00:27:14,384 --> 00:27:16,094 எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. 292 00:27:17,012 --> 00:27:19,681 நீங்கள் என் கணவருடன் பேச வேண்டும். அவர் உள்ளே இல்லை. 293 00:27:21,433 --> 00:27:23,519 உங்கள் கணவருடன் ஏற்கனவே பேசிவிட்டோம். 294 00:27:24,978 --> 00:27:27,314 ஆனால் அவரிடம் பணம் இல்லாததால், 295 00:27:27,397 --> 00:27:30,359 160 யென் கடனை அடைப்பது அவருடைய குடும்பத்தின் கையில் உள்ளது. 296 00:27:32,361 --> 00:27:34,071 அந்த முத்திரை, 297 00:27:34,154 --> 00:27:35,948 அது உங்கள் கணவருடையது, இல்லையா? 298 00:27:39,451 --> 00:27:40,619 ஆம். 299 00:27:42,246 --> 00:27:44,790 நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 300 00:27:46,375 --> 00:27:48,168 உங்களிடம் 20 இருந்தால் கொடுங்கள். 301 00:27:49,086 --> 00:27:50,546 எங்கள் முதலாளி, 302 00:27:50,629 --> 00:27:53,131 அவர் இந்த வாரம் திருப்தியடைய அது போதும். 303 00:27:55,092 --> 00:27:56,176 160 யென், 304 00:27:57,094 --> 00:27:58,470 அதுதான் முழுத் தொகையா? 305 00:27:58,554 --> 00:27:59,555 நான் பார்த்துக்கொள்கிறேன். 306 00:27:59,638 --> 00:28:02,808 வட்டியும் சேர்த்தால் இப்போது இரட்டிப்பாகும். 307 00:28:09,314 --> 00:28:10,983 கடன் எப்போது பெறப்பட்டது? 308 00:28:12,609 --> 00:28:13,861 இரண்டு மாதங்களுக்கு முன். 309 00:28:13,944 --> 00:28:16,113 அவருடைய தம்பிக்கு இப்போதுதான் திருமணம் ஆனது, கூடுதல் கட்டணம் தேவை என்றார். 310 00:28:20,617 --> 00:28:22,494 சில மணி நேரத்தில் பணம் வந்துவிடும். 311 00:28:22,578 --> 00:28:25,247 -யாரிடம் கொண்டு வருவது? -உங்களுக்குப் புரியவில்லை போல... 312 00:28:25,330 --> 00:28:28,709 பேசி ஆற்றலை வீணடிக்காதீர்கள். பணத்தை எங்கே கொண்டு வருவது என்று சொல்லுங்கள். 313 00:28:28,792 --> 00:28:29,793 கப்பல்துறைக்கு, 314 00:28:29,877 --> 00:28:32,129 வலை பழுதுபார்க்கும் கடைக்கு மேலே ஒரு அலுவலகம் உள்ளது. 315 00:28:32,880 --> 00:28:35,048 அப்படியானால் 20 யென் கொடுப்பீர்களா? 316 00:28:35,132 --> 00:28:36,758 எங்கள் முதலாளிக்கு தெரியப்படுத்தலாமா? 317 00:28:36,842 --> 00:28:38,677 முழுத் தொகையும் கிடைக்கும் என்று சொல்லுங்கள். 318 00:28:51,190 --> 00:28:52,316 ஆனால் சுன்ஜா… 319 00:28:53,901 --> 00:28:55,736 இப்படிப்பட்ட கடிகாரம் எங்கிருந்து கிடைத்தது? 320 00:28:58,822 --> 00:29:00,824 அம்மா கொடுத்தார். 321 00:29:01,408 --> 00:29:03,410 அவசர தேவைகளுக்கு என்னிடம் ஏதாவது வேண்டும் என விரும்பினார். 322 00:29:05,204 --> 00:29:07,915 கியுங்கீ, அதை உடனே செலுத்த வேண்டும். 323 00:29:09,541 --> 00:29:11,001 யோசெப் இதை கையாள்வார் என நாம் நம்ப வேண்டும். 324 00:29:11,084 --> 00:29:12,920 அவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார் என நம்புகிறேன், 325 00:29:14,421 --> 00:29:18,300 ஆனால் இப்போது பணம் செலுத்துவது மிகவும் சிரமமானது. 326 00:29:18,383 --> 00:29:20,427 இப்படி நடப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். 327 00:29:21,094 --> 00:29:26,183 எங்கள் ஊரில், பல விவசாயிகள் மோசமான பருவத்திற்குப் பிறகு கந்துவட்டிக்காரர்களை 328 00:29:26,266 --> 00:29:27,851 நாடினார்கள், விதைகள் அல்லது உபகரணங்களை வாங்க. 329 00:29:27,935 --> 00:29:29,269 பலர் வீடுகளை இழந்தனர். 330 00:29:29,353 --> 00:29:31,146 இதை எப்படி அவரால் செய்ய முடிந்தது? 331 00:29:31,230 --> 00:29:33,565 அப்படிப்பட்டவர்களிடம் செல்ல. 332 00:29:34,399 --> 00:29:37,361 வேறு ஏதாவது வாய்ப்பு இருந்ததா? 333 00:29:41,448 --> 00:29:43,283 இது என் கடன் 334 00:29:44,910 --> 00:29:47,454 அதை நான்தான் செலுத்த வேண்டும். 335 00:29:49,456 --> 00:29:55,087 அவரது கல்லறை சரியான முறையில் நகர்த்தப்பட்டது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா, 336 00:29:55,170 --> 00:29:58,090 அவர் எங்காவது பாதுகாப்பாக இருக்கிறாரா? 337 00:29:59,299 --> 00:30:00,759 உங்கள் கவலை எனக்குப் புரிகிறது, 338 00:30:00,843 --> 00:30:03,011 ஆனால் கோப்பு இல்லாமல், எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது. 339 00:30:04,721 --> 00:30:07,766 அறிக்கைக்கான கோரிக்கையை செயலாக்குவதன் மூலம் தொடங்குவோம். 340 00:30:08,475 --> 00:30:09,768 உங்கள் பெயர்? 341 00:30:10,477 --> 00:30:14,773 கிம் சுன்ஜா. எனது ஜப்பானிய பெயர் பாண்டோ நோபுகோ. 342 00:30:15,774 --> 00:30:17,359 நீங்கள் அவர்களில் ஒருவர். 343 00:30:17,901 --> 00:30:20,028 எப்போது சென்றீர்கள்? 344 00:30:20,571 --> 00:30:22,364 1931. 345 00:30:22,447 --> 00:30:25,367 உங்களுக்கு ஜப்பானிய குடியுரிமை உள்ளதா? 346 00:30:27,327 --> 00:30:28,704 இல்லை. 347 00:30:28,787 --> 00:30:31,999 -நான் நிரந்தர குடியிருப்பாளர். -தென் கொரிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள். 348 00:30:32,082 --> 00:30:34,126 எங்களுக்கு என் தாத்தாவின் கல்லறையை கண்டுபிடிக்க வேண்டும்... 349 00:30:59,484 --> 00:31:00,777 அம்மா? 350 00:31:03,989 --> 00:31:05,157 அம்மா, 351 00:31:05,866 --> 00:31:06,867 அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள். 352 00:31:06,950 --> 00:31:08,327 அவர்கள் இடத்தைக் கண்டுபிடிப்பார்கள். 353 00:31:08,410 --> 00:31:10,579 அதை எப்படிச் சொல்ல முடியும்? 354 00:31:10,662 --> 00:31:12,372 இங்கு நிறைய மாறிவிட்டது. 355 00:31:12,456 --> 00:31:14,374 உயிருள்ளவர்களைக் கண்டுபிடிப்பதே சாத்தியமில்லை, 356 00:31:14,458 --> 00:31:16,627 இறந்தவர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள். 357 00:31:17,252 --> 00:31:18,420 மன்னிக்கவும்! 358 00:31:19,838 --> 00:31:22,132 இடமாற்றக் கோரிக்கைகள் தொடர்பான எங்கள் கோப்புகளைப் 359 00:31:22,216 --> 00:31:24,343 பார்க்கும்போது ஒரு குறிப்பு கிடைத்தது. 360 00:31:24,426 --> 00:31:26,220 ஷின் போகீ என்ற பெயர் 361 00:31:26,303 --> 00:31:27,971 உங்களுக்குத் தெரியுமா? 362 00:32:45,174 --> 00:32:47,259 இவரை உங்களுக்குத் தெரியுமா? 363 00:32:47,885 --> 00:32:49,678 இவள் என் மூத்த சகோதரி. 364 00:32:49,761 --> 00:32:52,097 நாங்கள் பல வருடங்களாக இவளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். 365 00:32:53,056 --> 00:32:55,809 அவளுக்கு இப்போது 29 வயது இருக்கும். 366 00:32:57,186 --> 00:32:58,854 இதே கதையோடு ஒருவர் வாரத்திற்கு 367 00:32:58,937 --> 00:33:00,439 ஒருமுறை இங்கு வருகிறார். 368 00:33:01,481 --> 00:33:02,816 அது பொய்யல்ல. 369 00:33:04,151 --> 00:33:06,195 எல்லாரும் அப்படித்தான் சொல்வார்கள். 370 00:33:06,278 --> 00:33:07,988 எப்படி இருந்தாலும், 371 00:33:08,071 --> 00:33:09,990 மன்னிக்கவும், என்னால் உதவ முடியாது. 372 00:33:18,207 --> 00:33:19,208 ஹருகி? 373 00:33:25,756 --> 00:33:27,007 சாலமனா? 374 00:33:42,981 --> 00:33:44,566 வந்துவிடுகிறேன்! 375 00:33:48,403 --> 00:33:49,947 என்ன? 376 00:33:50,030 --> 00:33:52,157 இன்று என்ன விற்க விரும்புகிறீர்கள்? 377 00:33:54,868 --> 00:33:56,703 என்ன? நான் உண்மையில் அவ்வளவு மாறிவிட்டேனா? 378 00:33:56,787 --> 00:33:58,830 அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 379 00:34:04,127 --> 00:34:05,921 சுன்ஜா? 380 00:34:08,382 --> 00:34:11,092 சுன்ஜா, நிஜமாகவே நீதானா? 381 00:34:11,176 --> 00:34:12,844 சகோதரி! நான்தான். 382 00:34:12,928 --> 00:34:15,054 போக்கி, என் சகோதரி! 383 00:34:15,138 --> 00:34:16,681 திரும்பி வந்துவிட்டாய். 384 00:34:23,063 --> 00:34:25,274 நிச்சயமாக இது ஒரு சிறந்த பொருள். 385 00:34:26,733 --> 00:34:28,652 ஆனால் இந்தப் பகுதியில் இது போன்றவற்றுக்கு 386 00:34:29,527 --> 00:34:32,239 தேவை அதிகமில்லை என்று சொல்ல வருந்துகிறேன். 387 00:34:33,364 --> 00:34:36,659 இன்றைய இளைஞர்கள், இதை மணிக்கட்டில் அணிவதை விரும்புகிறார்கள். 388 00:34:37,995 --> 00:34:39,705 என்னால் 40 கொடுக்க முடியும். 389 00:34:43,625 --> 00:34:46,378 உங்களை தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன். நல்ல நாளாக அமையட்டும். 390 00:34:46,962 --> 00:34:49,547 குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருப்பதால், உங்களுக்கு உதவ விரும்புகிறேன். 391 00:34:49,630 --> 00:34:51,967 நான் 50 வரை கொடுக்க தயாராக இருக்கிறேன், 392 00:34:53,051 --> 00:34:56,388 நான் அதை திரும்ப சம்பாதிக்க முடியுமா என உறுதியாக தெரியவில்லை என்றாலும். 393 00:34:56,471 --> 00:34:58,473 இது குறைந்தது 300 மதிப்புடையது. 394 00:34:59,057 --> 00:35:00,601 இது சுவிட்சர்லாந்தில் இருந்து வருகிறது. 395 00:35:00,684 --> 00:35:02,728 அங்கே சிறந்த கடிகாரங்களை செய்கிறார்கள். 396 00:35:02,811 --> 00:35:05,480 நீங்கள் சுவிட்சர்லாந்தில் இல்லை, இல்லையா? 397 00:35:09,026 --> 00:35:10,694 புரிகிறது. 398 00:35:10,777 --> 00:35:12,279 வருகிறோம். 399 00:35:14,239 --> 00:35:15,908 நீங்கள் பூஸானைச் சேர்ந்தவர். 400 00:35:17,242 --> 00:35:19,494 உங்கள் உச்சரிப்பிலிருந்தே என்னால் சொல்ல முடியும். 401 00:35:20,829 --> 00:35:22,956 உங்கள் பெற்றோர், அங்கு என்ன செய்கிறார்கள்? 402 00:35:23,498 --> 00:35:25,125 என் அம்மா மட்டும்தான். 403 00:35:25,209 --> 00:35:26,835 அவர் சொந்த தங்கும் விடுதியை நடத்துகிறார். 404 00:35:27,711 --> 00:35:30,172 புத்திசாலி தொழிலதிபராக இருக்க வேண்டும். 405 00:35:31,340 --> 00:35:32,799 நல்லது. 406 00:35:34,218 --> 00:35:35,636 225 யென். 407 00:35:35,719 --> 00:35:36,762 முந்நூறு. 408 00:35:37,596 --> 00:35:38,972 அதுதான் என் விலை. 409 00:36:11,421 --> 00:36:13,882 கியுங்கீ, என்ன? 410 00:36:15,217 --> 00:36:17,219 நாம் அங்கே போக முடியாது. 411 00:36:17,302 --> 00:36:18,971 அது மரியாதைக்குரியதாக இருக்காது. 412 00:36:19,054 --> 00:36:21,348 இந்தப் பணத்தை நாம் கொடுக்கும் வரை கடன் தீராது. 413 00:36:22,891 --> 00:36:25,143 யோசெப்பிடம் கொடுக்க முடியாதா? 414 00:36:26,520 --> 00:36:29,481 இப்படிப்பட்ட சங்கடமான வேலை ஆண்களுக்குரியது, நம்முடையது அல்ல. 415 00:36:31,108 --> 00:36:33,652 அவர் என்னிடம் இருந்து பணத்தை பெறுவார் என்று நினைக்கிறீர்களா? 416 00:36:41,201 --> 00:36:44,788 நான் போகிறேன். எனக்காக வீட்டில் காத்திருங்கள். 417 00:36:48,208 --> 00:36:49,459 இல்லை, நீ போகக்கூடாது! 418 00:36:53,046 --> 00:36:54,214 நான் போகவில்லை என்றால், 419 00:36:54,923 --> 00:36:56,175 பிறகு என்ன நடக்கும்? 420 00:37:02,055 --> 00:37:03,807 உனக்குப் புரியவில்லை... 421 00:37:05,809 --> 00:37:08,145 நான் இங்கு வருவதற்கு முன், 422 00:37:08,228 --> 00:37:10,480 நான் சமைத்ததோ என் துணிகளை துவைத்ததோ இல்லை. 423 00:37:12,941 --> 00:37:16,028 என் பெற்றோருக்கு தெரியாத யாரிடமும் நான் பேசியதில்லை. 424 00:37:17,321 --> 00:37:19,281 என் பணத்தைக் கூட நான் கையாண்டதில்லை. 425 00:37:21,533 --> 00:37:24,244 எல்லாவற்றையும் செய்ய கற்றுக்கொள்வது, 426 00:37:24,328 --> 00:37:26,538 மிகவும் கடினமாக இருந்தது, சுன்ஜா. 427 00:37:28,207 --> 00:37:29,750 ஆனால் பிறகு உன்னைப் பார்க்கிறேன். 428 00:37:31,376 --> 00:37:33,795 நீ சில வாரங்களாகத்தான் இங்கு இருக்கிறாய். 429 00:37:36,089 --> 00:37:37,382 நான் முட்டாள் போல உணர்கிறேன். 430 00:37:42,721 --> 00:37:44,681 இன்று காலை என்னிடம் கேட்டாய் 431 00:37:44,765 --> 00:37:46,642 வலி எப்போது நீங்கும் என்று. 432 00:37:49,144 --> 00:37:53,732 உண்மை என்னவென்றால், நான் இங்கு எப்போதும் பயத்தில் இருக்கிறேன். 433 00:37:56,193 --> 00:37:57,861 இந்த நிலையான பயம்... 434 00:38:01,698 --> 00:38:04,159 இன்னும் எவ்வளவு காலம் இதனுடன் நான் வாழ வேண்டும்? 435 00:38:13,752 --> 00:38:17,548 நாம் ஒன்றாக பயப்படுவோம். 436 00:38:19,383 --> 00:38:21,844 ஒருவேளை அதிலிருந்து கொஞ்சம் பலம் கிடைக்கலாம். 437 00:38:24,555 --> 00:38:25,639 நீ அப்படியா நினைக்கிறாயா? 438 00:38:27,015 --> 00:38:28,267 ஆம். 439 00:38:47,494 --> 00:38:48,829 நகருங்கள். 440 00:38:55,878 --> 00:38:57,171 சாப்பிடு. 441 00:39:13,520 --> 00:39:15,439 நீ போன பிறகு... 442 00:39:18,233 --> 00:39:21,111 எங்கள் வாழ்வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது போல உணர்ந்தோம். 443 00:39:23,197 --> 00:39:27,367 உன் அம்மா, குறிப்பாக, அதை ஆழமாக உணர்ந்தார். 444 00:39:29,870 --> 00:39:33,874 அவரை அப்படி பார்க்க டோங்கிக்கும் எனக்கும் 445 00:39:33,957 --> 00:39:37,711 கடினமாக இருந்தது. 446 00:39:41,215 --> 00:39:47,304 பிறகு போர் மூண்டது, மேலும் சூழ்நிலைகள் கடினமாகின. 447 00:39:52,059 --> 00:39:55,729 உன் தாய்க்கு நாங்கள் பாரமாக இருந்தோம். அது எங்களுக்குத் தெரியும். 448 00:39:58,690 --> 00:39:59,816 ஆனால் அப்போதும், 449 00:39:59,900 --> 00:40:01,401 எங்களை அனுப்ப அவர் மறுத்தார். 450 00:40:05,614 --> 00:40:11,203 பிறகு, ஒரு நாள், டோங்கியையும் என்னையும் ஒருவர் அணுகினார்... 451 00:40:13,247 --> 00:40:19,336 மஞ்சூரியாவில் நல்ல தொழிற்சாலை வேலைகளை எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார். 452 00:40:21,839 --> 00:40:26,969 உன் அம்மாவை இங்கே தனியாக விட்டு செல்லும் யோசனையை வெறுத்தோம்... 453 00:40:29,596 --> 00:40:35,978 ஆனால் இன்னும் எவ்வளவு காலம் அவரால் எங்களை வைத்திருக்க முடியும்? 454 00:40:36,687 --> 00:40:39,439 தவிர, நீ போனது, 455 00:40:40,107 --> 00:40:45,571 எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் எங்கள் வாழ்க்கை இங்கு இருக்கிறது என்று உணர்த்தியது. 456 00:40:47,239 --> 00:40:49,992 டோங்கி, குறிப்பாக, 457 00:40:50,534 --> 00:40:52,870 அவள் உண்மையில் உலகைப் பார்க்க விரும்பினாள். 458 00:40:58,166 --> 00:41:01,253 போர் முடிந்ததும் திரும்பி வந்தபோது 459 00:41:02,421 --> 00:41:04,339 உன் அம்மா இறந்தது தெரிந்தது. 460 00:41:05,299 --> 00:41:07,134 உண்மை என்னவென்றால், 461 00:41:07,217 --> 00:41:08,886 நான் நிம்மதி அடைந்தேன். 462 00:41:10,929 --> 00:41:13,390 நாங்கள் எவ்வளவு மாறிவிட்டோம் என்று அவர் பார்ப்பதை 463 00:41:13,473 --> 00:41:14,975 நான் விரும்பவில்லை. 464 00:41:19,771 --> 00:41:24,776 திரும்ப வருவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், திரும்பி வந்ததில் மகிழ்ந்தேன். 465 00:41:27,487 --> 00:41:29,573 ஆனால் டோங்கிக்கு, 466 00:41:29,656 --> 00:41:31,658 அந்த மகிழ்ச்சி சீக்கிரம் மறைந்தது... 467 00:41:36,496 --> 00:41:39,416 அவள் ஒரு காலத்தில் இருந்த இளம் பெண்ணாக… 468 00:41:41,710 --> 00:41:44,004 வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் வாழ்வது சாத்தியமில்லை 469 00:41:45,631 --> 00:41:47,633 என்பதை அவள் உணர்ந்தபோது. 470 00:41:53,430 --> 00:41:55,432 நாம் சலவை செய்யும் இடம் நினைவிருக்கிறதா? 471 00:41:58,143 --> 00:41:59,228 அங்குதான்… 472 00:42:02,439 --> 00:42:03,649 நான் அவளை கண்டுபிடித்தேன். 473 00:42:20,415 --> 00:42:23,335 சிலர் கனவிலேயே 474 00:42:23,877 --> 00:42:28,757 வாழ்கிறார்கள் என்பது உனக்குப் புரியவரும். 475 00:42:31,260 --> 00:42:35,597 அப்படிப்பட்ட காலங்களை தாங்கிக்கொள்ளும்படி அவர்கள் படைக்கப்படவில்லை. 476 00:43:02,541 --> 00:43:04,960 நீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்களா? 477 00:43:25,189 --> 00:43:26,815 இவர்களை சந்தித்தேன். 478 00:43:28,150 --> 00:43:30,027 இவன் சாலமன். 479 00:43:30,110 --> 00:43:32,070 இவன் குழந்தையாக இருந்தபோதிலிருந்து எனக்குத் தெரியும். 480 00:43:33,197 --> 00:43:34,781 இவனை வரவேற்றிடுங்கள். 481 00:43:35,866 --> 00:43:36,992 அது நோரிகோ. 482 00:43:38,869 --> 00:43:40,078 அவளுடைய சகோதரர், தகாஷி. 483 00:43:43,040 --> 00:43:44,541 மசாகோ. 484 00:43:44,625 --> 00:43:46,543 மிகவும் அழகான இளைஞன். 485 00:43:46,627 --> 00:43:48,754 அவன் எனக்கான பரிசா? 486 00:43:49,630 --> 00:43:52,508 அவன் உங்களுக்கு கொஞ்சம் வயதானவன் என்று நீங்கள் நினைக்கவில்லையா? 487 00:43:52,591 --> 00:43:55,552 நீ சொல்வது சரிதான், ஆனால் இப்படியொரு அழகான பையனுக்காக 488 00:43:55,636 --> 00:43:57,221 நான் விதிவிலக்கு அளிக்க முடியும். 489 00:43:59,473 --> 00:44:00,474 இவர்தான், 490 00:44:01,725 --> 00:44:03,519 சடோரு. 491 00:44:06,271 --> 00:44:08,524 இவன் மொஸாசுவின் மகன். 492 00:44:15,906 --> 00:44:18,450 உன் அப்பாவைப் பற்றி இன்னும் அடிக்கடி பேசுகிறேன். 493 00:44:19,576 --> 00:44:22,913 அவர் என்னுடைய நல்ல நண்பர், ஒருமுறை என் உயிரைக் காப்பாற்றினார். 494 00:44:24,414 --> 00:44:26,375 ஆனால் அதெல்லாம் வெகு காலத்திற்கு முன்பு. 495 00:44:28,293 --> 00:44:31,380 இப்போது இதுதான் என் வீடு. 496 00:44:50,607 --> 00:44:52,192 என் உறுதிமொழிப் பத்திரத்தைக் கொடு. 497 00:45:30,355 --> 00:45:32,232 எனக்குப் போதும். நீங்கள் சாப்பிடுங்கள். 498 00:45:32,816 --> 00:45:34,985 நீ எங்கள் விருந்தினர். 499 00:45:35,861 --> 00:45:37,029 நன்றி. 500 00:45:38,030 --> 00:45:39,448 இது சுவையாக இருக்கிறது. 501 00:45:39,948 --> 00:45:41,533 இல்லையா? 502 00:45:44,661 --> 00:45:45,996 நிறைவாக சாப்பிடு. 503 00:45:58,675 --> 00:46:01,136 போக்கி இல்லாவிட்டால்… 504 00:46:03,180 --> 00:46:09,061 நெரிசலான, குறிக்கப்படாத கல்லறையில் உள்ள பலரில் ஒருவராக என் அப்பா இருப்பார். 505 00:46:10,604 --> 00:46:14,900 அவளுடைய கருணைக்கு எப்படி திருப்பி செலுத்துவது என்று தெரியவில்லை. 506 00:46:18,070 --> 00:46:21,990 அவர் உங்களுக்காக செய்திருக்கிறார். 507 00:46:29,915 --> 00:46:33,043 இறுதியில், 508 00:46:33,126 --> 00:46:34,753 நான்தான் அதிர்ஷ்டசாலி. 509 00:46:38,632 --> 00:46:39,842 ஆனால்… 510 00:46:41,885 --> 00:46:44,805 என் மனதிற்கு, அது சரியாக படவில்லை. 511 00:46:46,640 --> 00:46:49,184 பிழைப்பது அவமானமில்லை அம்மா. 512 00:46:56,441 --> 00:47:00,612 நீண்ட காலத்துக்கு முன்பு ஒருவர் என்னிடம் சொன்னார், 513 00:47:01,405 --> 00:47:04,950 "முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு அடிக்கும், 514 00:47:05,868 --> 00:47:08,996 வேறொருவர் வீழ வேண்டும்" என்று. 515 00:47:10,622 --> 00:47:12,833 அப்போது என்னால் அதை நம்ப முடியவில்லை. 516 00:47:15,627 --> 00:47:17,588 ஆனால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது... 517 00:47:19,548 --> 00:47:22,509 ஒருவேளை அவர் சொன்னது சரிதானோ என்று. 518 00:47:28,056 --> 00:47:32,227 உங்களிடம் யார் இப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, 519 00:47:33,937 --> 00:47:37,399 ஆனால் அது எனக்கு சரியாகப் படவில்லை. 520 00:47:46,700 --> 00:47:47,701 ஹேய், 521 00:47:49,494 --> 00:47:51,330 வீட்டிற்குப் போவோம். 522 00:47:51,413 --> 00:47:52,414 நிஜமாகவா? 523 00:47:53,207 --> 00:47:55,417 ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. 524 00:47:57,836 --> 00:47:59,546 நான் திரும்பி வர முடியும். 525 00:48:01,840 --> 00:48:03,967 இப்போது அது எனக்கு தெரிகிறது. 526 00:48:25,197 --> 00:48:27,282 நீங்கள் காணாமல் போனபோது, என் அப்பா உங்களுக்காக துக்கப்பட்டார், 527 00:48:27,991 --> 00:48:32,246 உங்கள் மனைவியும் சகோதரரையும் போல. 528 00:48:35,415 --> 00:48:38,752 நான் பலரை காயப்படுத்தியது எனக்குத் தெரியும். 529 00:48:38,836 --> 00:48:41,004 நான் அப்படிச் சொல்லவில்லை. 530 00:48:41,880 --> 00:48:43,507 நீங்கள் எவ்வளவு நேசிக்கப்பட்டீர்கள் 531 00:48:44,091 --> 00:48:46,718 என்பதற்காக அதை சொன்னேன். 532 00:48:47,636 --> 00:48:49,555 அது உண்மைதான்... 533 00:48:51,390 --> 00:48:52,766 ஆனால்… 534 00:48:53,475 --> 00:48:56,144 அவர்கள் நேசித்த ஹருகி வேறு மனிதன். 535 00:48:57,437 --> 00:48:59,523 நான் இப்போது இருக்கும் நபராக அப்போது இருந்திருக்க முடியாது. 536 00:49:01,191 --> 00:49:06,947 என்னிடம் இங்கு அதிகம் பணம் இல்லாதிருக்கலாம், ஆனால் நான் நானாகவே இருக்க முடியும். 537 00:49:13,912 --> 00:49:15,455 தயவுசெய்து. 538 00:49:26,550 --> 00:49:27,634 மன்னித்துவிடுங்கள். 539 00:49:30,804 --> 00:49:32,389 நான் என்ன செய்கிறேன்? 540 00:49:39,605 --> 00:49:42,357 நான் எப்போதும் உன் மீது பரிதாபப்பட்டேன். 541 00:49:44,109 --> 00:49:45,694 உன் குடும்பத்தின் நம்பிக்கைகள் 542 00:49:45,777 --> 00:49:47,863 மற்றும் கனவுகளின் சுமையோடு நீ வளர்ந்தாய். 543 00:49:47,946 --> 00:49:50,073 அது சாத்தியமற்றதாக இருந்திருக்க வேண்டும். 544 00:49:52,075 --> 00:49:53,827 ஆனால், 545 00:49:54,536 --> 00:49:57,247 அதிகம் பணம் கொண்ட ஒருவன் மேல் பரிதாபப்படுவது 546 00:49:58,040 --> 00:50:00,167 எப்படியோ தவறாக தோன்றுகிறது. 547 00:50:03,921 --> 00:50:08,008 நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். 548 00:50:50,884 --> 00:50:51,969 சுன்ஜா… 549 00:50:54,263 --> 00:50:56,265 நாம் செய்தது தவறா? 550 00:51:04,690 --> 00:51:07,359 மரியாதையுடன், அவள் கடிகாரத்தை 551 00:51:07,442 --> 00:51:11,864 விற்க வருவாள் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என நான் கேட்கலாமா? 552 00:51:16,994 --> 00:51:18,579 அவள் கனவுலகில் வாழ்பவனை மணந்திருக்கிறாள். 553 00:51:21,081 --> 00:51:25,210 அவளை விட பலவீனமான ஒரு ஆணை. அதற்கான விலையை அவள் கொடுப்பாள். 554 00:51:28,922 --> 00:51:31,049 310 யென், உங்கள் சிரமங்களுக்காக. 555 00:51:52,196 --> 00:51:58,243 விற்பனைக்கு குரோஹானா எண்டர்பிரைசஸ் 556 00:52:10,631 --> 00:52:13,050 டாம், கேளுங்கள், நீங்கள் என் மீது கோபமாக இருப்பது எனக்குத் தெரியும், 557 00:52:13,133 --> 00:52:15,260 ஆனால் மாமோரு யோஷியுடன் ஏதோ மர்மம் நடப்பதாக நினைக்கிறேன். 558 00:52:15,344 --> 00:52:17,638 அவர் நிறைய சொத்துக்களை விற்பதாகக் கேள்விப்படுகிறேன். 559 00:52:17,721 --> 00:52:19,681 ஹேய், நீ அழைத்ததில் மகிழ்ச்சி. 560 00:52:19,765 --> 00:52:21,892 -தொடர்பு கொள்ள நினைத்தேன். -ஏன்? 561 00:52:22,392 --> 00:52:24,478 ஷிஃப்லிஸ் உன்னை பதவி நீக்கம் செய்கிறது. சரியா? 562 00:52:24,561 --> 00:52:27,147 அவர்கள் கோல்டன் அண்ட் அபேவிடம் இருந்து பெரும் அழுத்தத்தை பெறுகிறார்கள். 563 00:52:27,231 --> 00:52:28,690 இதைச் செய்ய நீங்கள் அனுமதிக்கக் கூடாது. 564 00:52:29,274 --> 00:52:31,944 நீ நம்பினாலும் இல்லாவிட்டாலும், நான் உனக்கு உதவ முயற்சித்தேன். 565 00:52:32,027 --> 00:52:34,571 டாம், எனது விசா. அது ஷிஃப்லிஸ் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டது. 566 00:52:34,655 --> 00:52:36,448 அதாவது என்னால் திரும்பிப் போக முடியாது. 567 00:52:37,491 --> 00:52:39,743 நீ உடனடியாக ஒரு வழக்கறிஞரைத் தொடர்புகொள்ள வேண்டும், நண்பா. 568 00:52:39,826 --> 00:52:41,954 அவர்களால் ஏதாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள்... 569 00:52:42,037 --> 00:52:43,705 நான் இன்னொரு அழைப்பை ஏற்க வேண்டும். துண்டித்து விடாதீர்கள். 570 00:52:44,790 --> 00:52:46,083 ஹலோ, என்ன? 571 00:52:46,166 --> 00:52:50,128 சாலமன், நான் தனியாக இறக்க விரும்பவில்லை. 572 00:52:50,212 --> 00:52:51,380 விரும்பவில்லை! 573 00:52:51,463 --> 00:52:52,840 ஹனா, 574 00:52:52,923 --> 00:52:54,049 என்ன நடந்தது? 575 00:52:57,010 --> 00:52:58,095 ஹனா! 576 00:52:58,178 --> 00:52:59,429 நீ வர வேண்டும்! 577 00:53:01,181 --> 00:53:02,766 இப்போதே வா… 578 00:53:05,185 --> 00:53:06,812 தாமதமாகிவிடும் முன். 579 00:54:05,495 --> 00:54:07,497 வசனத் தமிழாக்கம் அருண்குமார்