1 00:00:22,231 --> 00:00:24,066 (ஜப்பானிய மொழியில்) சாலமன், டெட்சுயாவுக்குக் காட்டு. 2 00:00:24,149 --> 00:00:26,318 சரி, நான் பார்க்கிறேன். 3 00:00:26,401 --> 00:00:28,737 ஒசாகா 1975 4 00:00:39,122 --> 00:00:41,291 சாலமன், யாரது? 5 00:00:43,544 --> 00:00:44,545 ஹனா. 6 00:00:47,089 --> 00:00:49,925 நீ வருவதை என்னிடம் சொல்லியிருக்கலாமே. 7 00:00:50,008 --> 00:00:51,885 வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 8 00:00:51,969 --> 00:00:55,889 இப்போது அங்கிருக்கும் சிறுமிகளுக்கு நீ யாருக்குச் சொந்தமானவள் என்று தெரிந்திருக்கும். 9 00:01:03,438 --> 00:01:05,649 அவளுடைய நடத்தைக்கு என்ன காரணம்? 10 00:01:11,446 --> 00:01:13,031 சாலமன், பார். 11 00:01:13,115 --> 00:01:14,533 இன்று என்னிடம் பணம் இல்லை. 12 00:01:23,333 --> 00:01:24,334 பார். 13 00:01:26,795 --> 00:01:28,922 சிற்றுண்டி கெட்டியாக இருக்கிறது. 14 00:01:31,717 --> 00:01:33,427 நீ அதை வாங்கப் போவதில்லை என்றால் தொடாதே. 15 00:01:34,678 --> 00:01:37,389 இது சுற்றப்பட்டிருக்கிறது. தொடுவதற்காகத்தான் இருக்கிறது. 16 00:01:54,281 --> 00:01:56,158 அமெரிக்க இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறாயா? 17 00:01:57,201 --> 00:01:58,911 பல்பொருள் கடை போலவா? 18 00:01:58,994 --> 00:02:03,373 எல்லாம் பேக் செய்யப்பட்டு, வாங்க தயாராக. பல வகைகளில். எனக்குப் பிடித்திருக்கிறது. 19 00:02:05,918 --> 00:02:06,960 ஹேய். 20 00:02:07,044 --> 00:02:11,340 நாம் இருவரும் ஒன்றாக அமெரிக்காவிற்கு போக வேண்டும். 21 00:02:15,052 --> 00:02:18,388 நீ என்ன பேசுகிறாய்? அவ்வளவு பணம் நம்மிடம் இல்லை. 22 00:02:23,143 --> 00:02:26,688 பணம் கிடைக்கும் வழி முக்கியமில்லை என்றால் பணம் கிடைப்பது எளிதுதான். 23 00:02:27,397 --> 00:02:30,150 கண்டிப்பாக பணம் எங்கிருந்து வருகிறது என்பது முக்கியம் தான். 24 00:02:30,734 --> 00:02:32,819 சாலமனை காப்பாற்று. 25 00:02:34,071 --> 00:02:36,740 உன் குடும்பம் உன்னை நன்றாக வளர்த்திருக்கிறது. உனக்காக சலிப்பான வாழ்க்கை காத்திருக்கிறது. 26 00:02:37,699 --> 00:02:39,159 எனக்கு அப்படி இல்லை. 27 00:02:39,243 --> 00:02:41,078 நான் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். 28 00:02:41,161 --> 00:02:45,040 ஹவாய். பேரிஸ். பெங்குவின்கள். 29 00:02:46,041 --> 00:02:48,126 ஆனால் அனைத்திலும் முக்கியமாக, ஹவாய். 30 00:02:52,005 --> 00:02:53,298 கடை நிறுத்தம் 31 00:02:54,299 --> 00:02:55,551 திரு. நகானோ, 32 00:02:55,634 --> 00:02:59,930 நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று என் அம்மா எப்போதும் பாராட்டுவார். 33 00:03:01,557 --> 00:03:04,685 ஆனால் உங்களுக்கு திருமணமாகிவிட்டது, இல்லையா? அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 34 00:03:04,768 --> 00:03:07,688 உன் அம்மாவின் கோழி வறுவலை சுவைத்திருக்கிறேன், ஹனா. 35 00:03:08,272 --> 00:03:10,774 அந்த வாய்ப்பை இழந்தது நான்தான் என உன் அம்மாவிடம் சொல். 36 00:03:22,953 --> 00:03:24,788 மிட்டாய்கள் 37 00:03:28,208 --> 00:03:29,626 எடுக்க வேண்டாம். 38 00:03:31,128 --> 00:03:34,840 பள்ளியில் உள்ள அந்த கேடுகெட்டவர்களை விட நான் முக்கியமானவள் என்பதை நிரூபித்து காட்டு. 39 00:03:36,383 --> 00:03:38,093 நான் எப்படி உணர்கிறேன் என்று உனக்குத் தெரியும். 40 00:03:38,177 --> 00:03:39,261 எடு. 41 00:03:56,904 --> 00:03:58,864 பொறு, உன் பாக்கெட்டில் என்ன இருக்கிறது? 42 00:03:59,781 --> 00:04:00,782 ஓடு! 43 00:04:04,077 --> 00:04:05,245 ஹனா! 44 00:04:07,080 --> 00:04:08,290 திரு. நகானோ, நான்தான் எடுத்தேன்! 45 00:04:08,373 --> 00:04:10,292 நீ இப்படிப்பட்டவனாக ஆகிவிட்டாய்! 46 00:04:10,876 --> 00:04:13,003 -உனக்கு வெட்கமாக இல்லையா? -மன்னித்துவிடுங்கள். இதற்கு பணம் தருகிறேன். 47 00:04:13,086 --> 00:04:14,922 விவாகரத்தான அம்மாவோடு அவளது வாழ்க்கை மோசமாக இருக்கிறது. 48 00:04:15,005 --> 00:04:16,548 சத்தியமாக, நாங்கள் திரும்ப வரமாட்டோம்! 49 00:04:17,507 --> 00:04:19,551 நீ அவ்வளவு சீக்கிரத்தில் தப்பிக்க முடியாது! 50 00:04:19,635 --> 00:04:22,971 திருடர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். 51 00:04:23,055 --> 00:04:24,473 விபச்சாரி மகனே! 52 00:04:24,556 --> 00:04:26,850 ஹலோ? என் கடையில் திருடனை பிடித்து வைத்திருக்கிறேன். வந்து கைது செய்யுங்கள். 53 00:04:26,934 --> 00:04:29,061 வேண்டாம், என் அப்பா என்னை கொன்றுவிடுவார்! 54 00:04:29,144 --> 00:04:32,231 இன்னொரு கொரியன், இவர்களால் பிரச்சினைதான். 55 00:04:32,314 --> 00:04:34,399 இவனை கைது செய்ய வேண்டும். 56 00:04:34,483 --> 00:04:36,485 இப்போதே. 57 00:04:36,568 --> 00:04:40,113 ஆனால் ஏதாவது செய்யவில்லை என்றால், இவன் ஒருபோதும் திருந்தமாட்டான். 58 00:04:50,832 --> 00:04:52,042 உடனடியாக வாருங்கள். 59 00:04:57,548 --> 00:04:59,216 சாலமன், நிறுத்து! 60 00:04:59,299 --> 00:05:02,135 அப்படிச் செய்யாதே! சாலமன்! 61 00:05:27,661 --> 00:05:28,954 அடிபட்டிருக்கிறதா? 62 00:05:29,037 --> 00:05:31,290 இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். 63 00:05:31,373 --> 00:05:33,166 நீங்கள் இவனுடைய அப்பாவா? 64 00:05:38,797 --> 00:05:42,384 இவன் இதற்கு முன்பு ஒருபோதும் இப்படிச் செய்ததில்லை. 65 00:05:42,968 --> 00:05:45,345 அதனால் தான் இதை முதல் குற்றம் என்றழைக்கிறோம். 66 00:05:46,847 --> 00:05:48,515 இது இப்படித்தான் தொடங்கும். 67 00:05:50,767 --> 00:05:52,769 இல்லை, இவன் இதை மீண்டும் செய்யமாட்டான். 68 00:05:52,853 --> 00:05:54,229 நான் சத்தியம் செய்கிறேன். 69 00:05:55,772 --> 00:05:58,609 கடையின் உரிமையாளர் இவனது பள்ளியில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்… 70 00:05:58,692 --> 00:06:00,235 பிறகு இவனை இடைநீக்கம் செய்வார்கள்! 71 00:06:00,319 --> 00:06:02,446 நீக்கவும் செய்யலாம். 72 00:06:02,529 --> 00:06:03,822 ஆனால் இவன் ஒரு குற்றம் செய்திருக்கிறான். 73 00:06:03,906 --> 00:06:05,949 அது வெறும் மிட்டாய்தான்! 74 00:06:08,285 --> 00:06:10,370 இவன் செய்தது தவறு என்று தெரியும், 75 00:06:10,454 --> 00:06:13,332 இதற்காக இவனை கடுமையாக கண்டிப்பேன். 76 00:06:13,415 --> 00:06:15,375 இவனை விட்டுவிடுங்கள் என்றுதான் கேட்கிறேன். 77 00:06:18,045 --> 00:06:19,046 ஹலோ? 78 00:06:21,048 --> 00:06:23,050 சொல்லுங்கள், அந்த பிரச்சினையைதான் தீர்த்துக்கொண்டிருக்கிறேன். 79 00:06:25,427 --> 00:06:26,428 ஏன் அப்படி? 80 00:06:29,139 --> 00:06:31,225 ஆனால் திருடர்களை… 81 00:06:32,017 --> 00:06:33,602 புரிகிறது. 82 00:06:33,685 --> 00:06:35,771 சரி. எனக்குப் புரிகிறது. 83 00:06:41,235 --> 00:06:42,402 என்னைப் பார். 84 00:06:46,490 --> 00:06:48,992 உங்களுக்கு செல்வாக்குமிக்க நண்பர் ஒருவர் இருப்பதாக தெரிகிறது. 85 00:06:52,120 --> 00:06:53,747 நீங்கள் இப்போது போகலாம். 86 00:06:56,542 --> 00:07:00,170 -அவ்வளவுதானா? -இவனை விடுவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். 87 00:07:10,347 --> 00:07:11,932 அழைத்தது யார்? 88 00:07:12,808 --> 00:07:14,476 இப்போது அது முக்கியமில்லை. 89 00:07:15,227 --> 00:07:16,228 நடந்ததை சொல். 90 00:07:16,311 --> 00:07:18,021 ஏன் இப்படியொரு செயலை செய்தாய்? 91 00:07:19,398 --> 00:07:20,816 இது அவள் தவறுதான், இல்லையா? 92 00:07:20,899 --> 00:07:22,818 -இல்லை! -உண்மையைச் சொல். 93 00:07:23,861 --> 00:07:25,362 ஹனாவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 94 00:07:32,619 --> 00:07:33,620 நல்லது. 95 00:07:34,997 --> 00:07:36,123 உன்னை நம்புகிறேன். 96 00:07:37,249 --> 00:07:40,711 இனி இப்படி ஒருபோதும் நடக்கக்கூடாது. 97 00:07:44,006 --> 00:07:45,883 ஆனால் நீ அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது. 98 00:07:47,801 --> 00:07:49,553 நான் உன்னை அமெரிக்காவிற்கு அனுப்புகிறேன். 99 00:07:51,513 --> 00:07:54,474 -நான் முடிவெடுத்துவிட்டேன். -நான் போக விரும்பவில்லை! 100 00:07:54,558 --> 00:07:58,770 தெரியுமா, உன் அம்மாவிற்கு நீ இங்கே வளர்வது ஒருபோதும் பிடிக்கவில்லை. 101 00:07:59,897 --> 00:08:03,817 உன்னை என்னுடனேயே வைத்திருக்க விரும்பினேன். நான் சுயநலமாக இருந்தேன். 102 00:08:04,526 --> 00:08:06,403 நான் நினைத்தது தவறு என்று இப்போது புரிகிறது. 103 00:08:06,486 --> 00:08:07,821 இல்லை, ஹனாவை விட்டு போக மாட்டேன்! 104 00:08:10,073 --> 00:08:13,035 இன்றிரவு எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் தெரியுமா? 105 00:08:13,744 --> 00:08:15,746 நான் போக விரும்பவில்லை. இதுதான் என் வீடு. 106 00:08:15,829 --> 00:08:19,499 உன்னை எப்போதும் திருடனாகவே பார்ப்பார்கள். நீ போகிறாய். 107 00:08:19,583 --> 00:08:22,211 உன் பாட்டி சோகமாக இருப்பார், 108 00:08:23,128 --> 00:08:25,506 ஆனால் இதுதான் உனக்கு சிறந்தது என்று அவரை சமாதானம் செய்வேன். 109 00:08:27,466 --> 00:08:28,467 காரில் ஏறு. 110 00:09:48,046 --> 00:09:49,882 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 111 00:10:08,025 --> 00:10:09,735 (கொரிய மொழியில்) உனக்கு என்ன பைத்தியமா? 112 00:10:09,818 --> 00:10:11,528 அந்த இடங்களுக்கு எப்படிப்பட்ட பெண்கள் போவார்கள் தெரியுமா? 113 00:10:11,612 --> 00:10:12,988 மெதுவாக பேசுங்கள். 114 00:10:13,071 --> 00:10:14,656 அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது! 115 00:10:14,740 --> 00:10:16,200 எப்படி தெரிந்தது என்று நினைக்கிறாயா? 116 00:10:17,284 --> 00:10:19,036 நாங்கள் உதவதான் முயற்சித்தோம். 117 00:10:20,037 --> 00:10:21,955 நான் இனி இந்த குடும்பத் தலைவன் இல்லையா? 118 00:10:22,039 --> 00:10:24,458 ஏனென்றால் அதைத்தான் நீங்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்! 119 00:10:24,541 --> 00:10:26,835 அப்படி இல்லை. 120 00:10:26,919 --> 00:10:28,587 கண்டிப்பாக அப்படித்தான். 121 00:10:31,965 --> 00:10:34,635 அதோடு நீ. உனக்கு வெட்கமாக இல்லையா? 122 00:10:35,802 --> 00:10:38,972 நீங்கள் இருவரும் வெட்கமின்றி செயல்படுவதால் இங்குள்ள… 123 00:10:40,891 --> 00:10:43,644 நம் மக்களுக்கு விஷயங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. 124 00:10:43,727 --> 00:10:45,771 நம்மை அவர்கள் கேவலமாக நினைப்பதில் வியப்பேதுமில்லை! 125 00:10:46,605 --> 00:10:48,482 இவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 126 00:10:48,565 --> 00:10:50,025 அது என்னுடைய யோசனை. 127 00:10:50,901 --> 00:10:53,779 நீ இந்த வீட்டிற்குள் நுழையும் வரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 128 00:10:53,862 --> 00:10:55,197 இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? 129 00:10:56,698 --> 00:10:58,575 ஏதோ அறிவுகெட்டவள் என் கடன்களை அடைத்திருப்பது தெரிந்தால், 130 00:10:59,076 --> 00:11:01,495 நான் மீண்டும் எப்படி வெளியே தலை காட்டுவேன்? 131 00:11:01,578 --> 00:11:02,788 என்னை அவர்கள் ஆண்மகனாக மதிக்க மாட்டார்கள்! 132 00:11:02,871 --> 00:11:04,623 ஏன் இப்படி பேசுகிறீர்கள்? 133 00:11:13,674 --> 00:11:15,175 உனக்கு அந்த கடிகாரம் எப்படி கிடைத்தது? 134 00:11:18,428 --> 00:11:20,180 என் அம்மா எனக்குக் கொடுத்தார். 135 00:11:21,890 --> 00:11:22,933 உன் அம்மாவா? 136 00:11:25,853 --> 00:11:28,814 தங்கும்விடுதியை நடத்தும் விதவையிடம் இப்படி ஒரு கடிகாரம் இருந்ததா? 137 00:11:37,072 --> 00:11:38,866 என்னால் இங்கு சுவாசிக்க முடியவில்லை. 138 00:11:45,664 --> 00:11:48,750 நாங்கள் செய்தது தவறுதான். அதற்காக வருந்துகிறோம். 139 00:11:50,002 --> 00:11:51,503 தயவுசெய்து, வீட்டிற்கு வாருங்கள். 140 00:12:16,653 --> 00:12:18,655 -சுன்ஜா! -இப்படி நடக்கக்கூடாது. 141 00:12:20,324 --> 00:12:22,117 குழந்தை வெளியே வருவதற்கான நேரம் இதுவல்ல. 142 00:12:26,330 --> 00:12:28,582 டோக்கியோ 1989 143 00:12:32,461 --> 00:12:35,839 துரதிர்ஷ்டவசமாக, எங்களால் முடிந்தது இவ்வளவுதான். 144 00:12:37,716 --> 00:12:41,094 உங்கள் மகள் கொஞ்ச காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். 145 00:12:42,596 --> 00:12:44,848 இப்போது, சிகிச்சை பெரும் கட்டத்தை தாண்டிவிட்டார். 146 00:12:48,143 --> 00:12:52,773 இங்கே எயிட்ஸ் நோயாளி இருப்பதாக வதந்திகள் பரவினால்… 147 00:12:54,691 --> 00:12:57,903 வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நாங்கள் அவரை பராமரிக்கத் தயாராக இல்லை. 148 00:12:59,279 --> 00:13:01,323 தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள். 149 00:13:01,406 --> 00:13:03,909 அவரை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க அறிவுறுத்துகிறேன். 150 00:13:03,992 --> 00:13:05,369 அவரை பாதுகாக்க ஒரு குடும்ப மருத்துவர்… 151 00:13:05,452 --> 00:13:09,957 இல்லை. உங்கள் பராமரிப்பை பெற அவள் தகுதியானவள்தான். 152 00:13:10,040 --> 00:13:11,959 உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. 153 00:13:12,042 --> 00:13:16,088 ஆனால் உங்கள் மகளை பராமரிக்கும்படி என் ஊழியர்களிடம் கேட்க முடியாது… 154 00:13:16,171 --> 00:13:17,464 நான் சிகிச்சை அளிக்கிறேன். 155 00:13:20,801 --> 00:13:22,553 நோயாளியை வேறு இடத்திற்கு மாற்றலாம். 156 00:13:24,263 --> 00:13:27,224 உங்கள் மகளை எங்களால் பராமரிக்க முடியும் என்று நினைக்கிறேன். 157 00:13:27,850 --> 00:13:30,310 மிக்க நன்றி. 158 00:13:33,480 --> 00:13:34,481 மிகவும் நல்லது. 159 00:13:35,399 --> 00:13:36,775 முன்வந்ததற்கு நன்றி. 160 00:13:41,822 --> 00:13:45,242 வெளிப்படையாக சொன்னால், இதற்கு எந்த மருந்தும் இல்லை. 161 00:13:46,994 --> 00:13:49,496 அவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. 162 00:13:51,206 --> 00:13:53,292 சில மாதங்களாகவும் இருக்கலாம். 163 00:13:55,586 --> 00:14:00,299 சில வாரங்கள் அல்லது நாட்களாகவும் இருக்கலாம். 164 00:14:16,815 --> 00:14:20,569 உங்களிடம் வர தயங்கினேன், ஆனால் வேறு வழி தெரியவில்லை. 165 00:14:20,652 --> 00:14:24,531 கப்பல்துறையில் அந்த கும்பலுடன் அவன் இருப்பதாகத்தான் முதலில் நினைத்தேன், 166 00:14:24,615 --> 00:14:27,618 ஆனால் இப்போது மிகவும் ஆபத்தான ஒன்றில் ஈடுபட்டிருப்பானோ என்று பயப்படுகிறேன். 167 00:14:27,701 --> 00:14:30,621 எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அவன் என் மூத்த மகன். 168 00:14:31,330 --> 00:14:33,081 அவனுக்கு ஏதாவது நடந்தால்… 169 00:14:34,249 --> 00:14:38,253 நீங்கள் அவனிடம் பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். 170 00:14:39,171 --> 00:14:41,381 நான் அவனிடம் பேசுவேன் என்று எது உங்களை நினைக்க வைத்தது? 171 00:14:41,465 --> 00:14:43,258 பாஸ்டர் யோ தான் இதற்கு சரியானவர். 172 00:14:44,009 --> 00:14:47,262 ஆனால் நீங்கள் இளையவர், சுறுசுறுப்பானவர். 173 00:14:47,346 --> 00:14:50,182 நீங்கள் அவனை நன்றாக புரிந்துகொள்வீர்கள். 174 00:14:51,850 --> 00:14:53,769 நான் வெறும் கத்துக்குட்டி. என்னால் முடியாது… 175 00:14:53,852 --> 00:14:55,646 அவன் என் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இல்லை. 176 00:14:55,729 --> 00:14:57,940 குறைவாக தெரிந்துகொண்டால், பாதுகாப்பாக இருப்பேன் என்கிறான். 177 00:14:58,649 --> 00:15:00,442 அதன் மூலம் அவன் என்ன சொல்ல வருகிறான்? 178 00:15:03,362 --> 00:15:05,864 நான் ஏற்கனவே என் கணவரை இழந்துவிட்டேன். 179 00:15:05,948 --> 00:15:08,575 நான் என் மகனையும் இழந்துவிட்டால்… 180 00:15:08,659 --> 00:15:09,868 கவலைப்படாதீர்கள். 181 00:15:13,705 --> 00:15:15,707 நான் அவனிடம் போகிறேன். 182 00:15:20,295 --> 00:15:23,966 நீங்கள் இளையவர், ஆடம்பர வளர்ப்பால் உங்களுக்கு எதுவும் தெரியாது 183 00:15:24,049 --> 00:15:27,469 என்று சிலர் நினைப்பது எனக்குத் தெரியும், 184 00:15:27,553 --> 00:15:30,222 ஆனால் நீங்கள் எங்களுடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 185 00:15:32,724 --> 00:15:36,395 நன்றி, ஆனால் நான் என்னை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. 186 00:15:37,563 --> 00:15:39,982 என்னால் முடிந்ததை செய்கிறேன். 187 00:15:40,816 --> 00:15:45,571 நீங்கள் அவனை தொடர்புகொள்வீர்கள். உங்களால் முடியும். 188 00:15:48,031 --> 00:15:49,157 நன்றி. 189 00:15:51,243 --> 00:15:52,995 போகலாம். 190 00:16:27,946 --> 00:16:30,324 எனவே உங்களை வைத்தும் முயற்சி செய்யலாம் என்று என் அம்மா நினைத்திருக்கிறார். 191 00:16:31,533 --> 00:16:34,912 ஒரு தாயின் அன்பு அவ்வளவு எளிதில் மறையாது. 192 00:16:34,995 --> 00:16:36,455 அதற்கு நன்றியுடன் இரு. 193 00:16:38,874 --> 00:16:40,334 நான் ஒரு இடத்துக்கு போக வேண்டும். 194 00:16:43,670 --> 00:16:45,088 உன்னோடு நடந்து வருகிறேன். 195 00:16:48,050 --> 00:16:49,301 நல்லது. 196 00:16:54,223 --> 00:16:55,933 தினமும், இந்த தெருக்களில் நடந்தாலும், 197 00:16:56,808 --> 00:16:59,937 என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறது. 198 00:17:01,939 --> 00:17:03,524 உன் அப்பா குறித்து கேள்விப்பட்டேன். 199 00:17:05,192 --> 00:17:07,361 அவர் இறந்தபோது உனக்கு என்ன வயது? 200 00:17:09,070 --> 00:17:10,239 பதினான்கு. 201 00:17:12,281 --> 00:17:14,492 சிறுவனாக இருந்துகொண்டு, குடும்பத்திற்காக சம்பாதிப்பது, 202 00:17:14,576 --> 00:17:16,244 பெரும் சுமையாக இருந்திருக்க வேண்டும். 203 00:17:16,328 --> 00:17:18,454 இந்த மாதிரியான கதை இங்கே யாரிடம் இல்லை? 204 00:17:19,164 --> 00:17:20,832 எல்லோரிடமும் கேளுங்கள். 205 00:17:22,041 --> 00:17:24,877 உங்களைப் போன்றவர்களுக்கு என்ன தெரியும்? 206 00:17:26,547 --> 00:17:28,966 கோகா-கோலா 207 00:17:32,886 --> 00:17:35,514 ஹனா, நீ அமெரிக்கா போக வேண்டும். 208 00:17:35,597 --> 00:17:37,474 அங்கிருப்பவர்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரியும். 209 00:17:39,768 --> 00:17:44,606 கல்லூரியில் ஒரு தோழன் இருக்கிறான், அவனது அப்பா ஒரு பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். 210 00:17:45,232 --> 00:17:46,650 நான் அவரை தொடர்பு கொள்கிறேன். 211 00:17:47,442 --> 00:17:48,652 நான் சொல்வதைக் கேட்கிறாயா? 212 00:17:54,366 --> 00:17:56,285 ஹனா, நான் சொல்வதைக் கேள். 213 00:17:58,328 --> 00:17:59,788 நடந்தது நடந்ததுதான். 214 00:18:00,914 --> 00:18:02,124 என்ன? 215 00:18:03,792 --> 00:18:06,712 அப்படி பேசிய ஒரே 14 வயது பையன் நீதான், சாலமன். 216 00:18:07,296 --> 00:18:09,548 நான் அமெரிக்கா போகப் போவதில்லை. 217 00:18:09,631 --> 00:18:11,550 பிறகு என்ன செய்யப் போகிறாய்? 218 00:18:11,633 --> 00:18:13,427 இங்கேயே இருப்பது எதையும் மாற்றாது. 219 00:18:15,470 --> 00:18:16,930 நான் அப்படியே சாகிறேன். 220 00:18:21,977 --> 00:18:26,440 சாலமன், இன்னும் நீ நகைச்சுவைக்கு சிரிப்பதில்லை. 221 00:18:28,066 --> 00:18:29,401 ரொம்ப அழகு. 222 00:18:32,821 --> 00:18:35,866 உன்னால் உண்மையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இல்லையா? 223 00:18:39,161 --> 00:18:40,746 ஒருபோதும் முடியாது. 224 00:18:44,958 --> 00:18:47,002 நீங்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம், பாஸ்டர். 225 00:18:49,296 --> 00:18:51,548 அவர்களும் நானும், 226 00:18:51,632 --> 00:18:53,342 நிலத்திற்கு அடியில் செல்கிறோம்… 227 00:18:54,343 --> 00:18:55,511 எதற்காக? 228 00:18:56,011 --> 00:18:59,890 சுரங்கப்பாதைகள் அதிக வேலையாட்களை தூரமாகவும், வேகமாகவும் கொண்டு செல்ல முடியும் என்பதால். 229 00:19:00,724 --> 00:19:02,976 எங்களைப் போல அவர்கள் இன்னும் கடினமாக உழைப்பார்கள் என்பதால். 230 00:19:04,269 --> 00:19:06,355 ஆனால் நாங்கள் வெகுமதிகள் கேட்டதாக உங்களுக்குத் தெரியுமா? 231 00:19:07,648 --> 00:19:12,528 தெருக்களில் மலம் கழிக்கும் விலங்குகளில் இருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டும் ஏதோ ஒன்று. 232 00:19:12,611 --> 00:19:14,696 நீ சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 233 00:19:14,780 --> 00:19:17,282 ஆனால் இப்படி வெளிப்படையாக பேச… 234 00:19:18,200 --> 00:19:19,493 நீயும் உன் குடும்பம் மட்டும் அல்ல, 235 00:19:19,576 --> 00:19:21,703 நாங்கள் எல்லோரும் அதிகாரிகளின் தண்டனையை அனுபவிப்போம். 236 00:19:21,787 --> 00:19:22,913 இந்த மக்கள் எல்லோரும்! 237 00:19:22,996 --> 00:19:24,790 எனக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? 238 00:19:25,666 --> 00:19:27,835 என் அம்மாவின் முகம் என் கனவுகளில் வந்து என்னை எழுப்பி, 239 00:19:27,918 --> 00:19:30,003 கண்ணீர் வரவழைத்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? 240 00:19:30,671 --> 00:19:33,131 எல்லோரைப் பற்றியும் யோசிக்கிறேன். என் சகோதரர்கள், சகோதரிகள், 241 00:19:33,215 --> 00:19:35,968 நான் சந்திக்கப் போகும் அந்நியர்களைக் கூட. 242 00:19:37,386 --> 00:19:41,640 ஆனால் என் பயங்களை என்னை ஆட்கொள்ள அனுமதித்தால்… 243 00:19:44,643 --> 00:19:47,312 என் பண்புகளை என்னால் அடையாளம் காண முடியாது. 244 00:19:49,022 --> 00:19:50,941 பிறகு அதை என்னுடைய உடல் என்று எப்படி அழைப்பது? 245 00:19:53,026 --> 00:19:55,779 உடலில்லாமல், என்னை ஒரு மனிதனென்று அழைக்க முடியுமா? 246 00:20:08,876 --> 00:20:10,210 சாலமன்… 247 00:20:13,255 --> 00:20:15,257 நீ அமெரிக்க சென்ற பிறகு… 248 00:20:18,510 --> 00:20:23,390 நான் அந்த ஆடம்பார வீடுகளை எல்லாம் முறைத்துப் பார்த்து… 249 00:20:25,434 --> 00:20:28,979 இப்படிப்பட்ட குடும்பத்தில் வளர்ந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்வேன். 250 00:20:29,563 --> 00:20:31,648 கண்டிப்பாக, அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு 251 00:20:31,732 --> 00:20:37,112 தங்களுக்கு நல்லதே நடக்காது என்ற வெறுமை உணர்வு ஒருபோதும் தோன்றாது. 252 00:20:41,158 --> 00:20:44,536 அப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவனிடமிருந்து தான் எனக்கு இந்த நோய் பரவியது. 253 00:20:45,537 --> 00:20:46,872 தெரியுமா, 254 00:20:46,955 --> 00:20:51,627 தங்கள் சாமுராய் மூதாதையர்களைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவனிடம். 255 00:20:52,753 --> 00:20:54,254 நீ இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்? 256 00:20:55,005 --> 00:21:01,094 ஏனென்றால் நான் எப்படி என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும். 257 00:21:02,346 --> 00:21:07,309 அதோடு என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று நீ பார்க்க வேண்டும். 258 00:21:08,894 --> 00:21:12,314 உனக்குத் தெரிந்த ஹனா இறந்துவிட்டாள். 259 00:21:27,579 --> 00:21:32,626 நாங்கள் மனிதர்கள் அல்ல. அவர்களுக்கு. 260 00:21:35,921 --> 00:21:39,091 இந்த அவமானம், குடிக்கவும், 261 00:21:40,133 --> 00:21:41,385 சண்டை போடவும், 262 00:21:42,678 --> 00:21:44,972 வீட்டிற்கு வந்து மனைவியை அடிக்கவும் எங்களை தூண்டுகிறது. 263 00:21:47,099 --> 00:21:49,810 நாங்கள் இழிவானவர்கள் அல்ல என்பதை இப்போதாவது தெரிந்துகொண்டோம். 264 00:21:51,979 --> 00:21:53,480 இன்னும் இழிவானவர்கள் கூட இருக்கிறார்கள். 265 00:21:56,024 --> 00:21:57,818 நாங்கள் அவர்களின் விதிகளுக்கு கட்டுப்படுகிறோம், 266 00:21:59,027 --> 00:22:02,698 ஆனாலும் இன்னும் பசியோடும் குளிரிலும் கிடக்கவில்லையா? 267 00:22:06,159 --> 00:22:07,870 அந்த விதிகளை தகர்க்கும் நேரம் வந்துவிட்டது. 268 00:22:08,996 --> 00:22:10,497 பார்த்து கவனமாக பேசு. 269 00:22:12,374 --> 00:22:15,210 இதைவிட குறைவாக பேசியவர்கள் எல்லாம் கைது செய்திருக்கிறார்கள். 270 00:22:23,260 --> 00:22:25,262 உங்களுக்கு இன்னும் புரியவில்லை, இல்லையா? 271 00:22:25,345 --> 00:22:27,222 நீங்கள் பணக்காரர் என்பதால் இருக்கலாம். 272 00:22:27,806 --> 00:22:28,807 நில். 273 00:22:29,975 --> 00:22:32,895 உன் அம்மாவிடம் நான் என்ன சொல்வது? 274 00:22:33,562 --> 00:22:38,567 அம்மாவின் அன்புக்கு நன்றியுள்ள ஒரு மகன் இருக்கிறான் என்று அவரிடம் சொல்லுங்கள். 275 00:22:48,035 --> 00:22:50,287 சாலமன், என்னைப் பார். 276 00:22:54,833 --> 00:22:57,294 நீ ஒருபோதும் அவர்களில் ஒருவனாக முடியாது, 277 00:22:57,377 --> 00:22:59,338 உன்னிடம் நல்ல ஆடைகள், ஆடம்பர பட்டங்கள் இருந்தாலும் கூட. 278 00:23:04,051 --> 00:23:06,887 கண்டிப்பாக, நீ ஒருபோதும் அவர்களைப் போல பணக்காரனாகவோ 279 00:23:06,970 --> 00:23:08,639 வெற்றியாளனாகவோ ஆக முடியாது, 280 00:23:09,389 --> 00:23:10,724 ஆனால் முட்டாளாக இருக்காதே. 281 00:24:11,577 --> 00:24:13,662 உனக்கு மோசமான நாள் அமைந்ததாக தெரிகிறது. 282 00:24:15,998 --> 00:24:19,251 எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் மாமோரு யோஷி. 283 00:24:19,751 --> 00:24:24,214 எனக்கும் உன்னை தெரியும். ஒப்பந்தத்தை கெடுத்தவன். 284 00:24:24,923 --> 00:24:26,633 அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களா? 285 00:24:28,093 --> 00:24:31,096 நானும் நல்ல பெயர் பெற்றவன் அல்ல. 286 00:24:34,433 --> 00:24:35,809 நான் நினைக்கிறேன் நம் இருவருக்கும்… 287 00:24:37,936 --> 00:24:40,022 பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. 288 00:24:42,816 --> 00:24:44,151 நீ நலமா? 289 00:24:45,944 --> 00:24:47,487 என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 290 00:24:48,447 --> 00:24:51,783 பெண்கள் என்றென்றும் குழந்தை பெற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள், இல்லையா? செல்லுங்கள். 291 00:24:52,409 --> 00:24:55,370 யோசெப்பை சென்று தேடுங்கள், சீக்கிரம். 292 00:24:55,454 --> 00:24:56,705 கியுங்கீ கவலையாக இருக்கிறார். 293 00:24:59,791 --> 00:25:01,543 ஆம், சீக்கிரம் அவரைத் தேடு. 294 00:25:02,711 --> 00:25:05,047 இப்படி இருக்கும்போது அவர் யோசித்து செயல்பட மாட்டார். 295 00:25:05,130 --> 00:25:07,424 எங்கு போவார் என்று தெரியுமா? 296 00:25:07,508 --> 00:25:09,635 பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பாரில் இருப்பார். 297 00:25:10,594 --> 00:25:13,722 ஆனால் அவரை தரக்குறைவாக நினைக்காதே. 298 00:25:15,891 --> 00:25:18,560 கவலையை விடு. பிரச்சினையை தீர்க்கிறேன். 299 00:25:36,286 --> 00:25:37,913 நான் யார் தெரியுமா? 300 00:25:40,290 --> 00:25:42,125 நான் உயர் வகுப்பைச் சேர்ந்தவன்! 301 00:25:43,961 --> 00:25:49,633 என் குடும்பம் பியாங்யாங்கில் உள்ள பழமையான பரம்பரைகளுள் ஒன்று! 302 00:25:49,716 --> 00:25:54,555 ஆஹா, நீ உயர் வகுப்பினரா? நீ சொல்லவே வேண்டாம்? 303 00:25:55,472 --> 00:25:57,641 நான், நானும் உயர் வகுப்பை சேர்ந்தவன் தான்! 304 00:25:59,017 --> 00:26:01,395 இங்கே இருக்கும் இந்த நல்ல மனிதரும்தான். 305 00:26:01,478 --> 00:26:03,814 நானும்! உயர் வகுப்பினர்! 306 00:26:05,649 --> 00:26:08,402 என்னை கேலி செய்ய நீ யார்? 307 00:26:09,945 --> 00:26:15,492 என் முதலாளி என்னை நம்பியிருக்கிறார். 308 00:26:15,576 --> 00:26:20,080 உங்கள் இழிபிறவிகள் பற்றி இப்படிச் சொல்ல முடியுமா? 309 00:26:20,789 --> 00:26:23,709 எல்லா வழிகளிலும், நான் பார்ப்பது போலவே. 310 00:26:23,792 --> 00:26:25,752 எனக்கு எப்போதும் வியப்பாக இருக்கும், 311 00:26:26,753 --> 00:26:30,215 உன் வேலையை இவ்வளவு காலம் எப்படி தக்கவைத்துக்கொண்டாய் என்று. 312 00:26:30,299 --> 00:26:33,802 யார் நீ? ஜப்பானியர்களுக்கு உளவாளியா? 313 00:26:33,886 --> 00:26:35,971 அல்லது திருடனா? 314 00:26:38,557 --> 00:26:39,600 யோசெப்! 315 00:26:42,936 --> 00:26:44,229 நீ இங்கே என்ன செய்கிறாய்? 316 00:26:51,570 --> 00:26:52,738 அவள் உன்னை அனுப்பினாளா? 317 00:26:54,781 --> 00:26:56,408 சுன்ஜாவுக்கு பிரசவ வலி. 318 00:27:01,538 --> 00:27:02,539 போ. 319 00:27:03,248 --> 00:27:04,917 நான் குடித்து முடிக்க வேண்டும். 320 00:27:06,293 --> 00:27:08,295 அங்கு என்னால் எந்த பயனும் இல்லை. 321 00:27:10,756 --> 00:27:12,758 இப்போது உன்னை நினைத்து நீயே வருந்துகிறாய். 322 00:27:21,642 --> 00:27:23,894 ஹேய்! இங்கே இன்னொரு கோப்பை கொடு! 323 00:27:23,977 --> 00:27:26,939 நீ ஏன் இங்கே இருக்கிறாய்? உன் மனைவியிடம் போ. 324 00:27:28,065 --> 00:27:30,067 அவள்தான் உன்னைத் தேடி கண்டுபிடிக்க சொன்னாள். 325 00:27:32,444 --> 00:27:35,948 நீ எப்படி? நீ உயர் வகுப்பை சேர்ந்தவனா? 326 00:27:37,199 --> 00:27:38,867 அது இப்போது முக்கியமா? 327 00:27:38,951 --> 00:27:40,702 அந்த விஷயங்கள் எல்லாம் இங்கே ஒன்றுமில்லை. 328 00:27:45,499 --> 00:27:47,125 ****. 329 00:27:48,210 --> 00:27:49,878 அவர்கள் விரும்புவது இதைத்தான், 330 00:27:50,546 --> 00:27:52,089 நமக்குள் சண்டைப்போட்டுகொள்வதை. 331 00:27:53,423 --> 00:27:57,678 ஹேய், இப்போது நாம் எல்லோரும் ஒன்றுதான் என்று நீ நம்புகிறாயா? 332 00:27:58,846 --> 00:28:01,390 உன் தேவைகளையெல்லாம் நிறைவேற்றும் வேலைக்காரனைப் பெற்ற நீயா? 333 00:28:01,473 --> 00:28:04,268 அவன் இப்போது எங்கே? 334 00:28:05,853 --> 00:28:11,567 தொலைந்து போனதை எண்ணி வாழ்வது நம் பெற்றோரின் கஷ்டங்களை எளிதாக்கிவிடாது. 335 00:28:13,652 --> 00:28:15,279 அது முட்டாளின் யோசனை, சகோதரா. 336 00:28:23,787 --> 00:28:25,914 நமக்குள் சண்டையிட்டுக்கொள்வதில் என்ன பயன்? 337 00:28:49,771 --> 00:28:52,191 உன் குடும்பம் நிச்சயமாக உன்னை முதலீடாக கருதுகிறது. 338 00:28:52,858 --> 00:28:56,278 சோட், யேல். விலையுயர்ந்த படிப்பு. 339 00:28:56,820 --> 00:28:58,947 உங்களைப் பற்றியும் அதையே சொல்ல முடியும். 340 00:28:59,031 --> 00:29:01,491 UCLA, ஸ்டான்போர்ட் சட்ட பல்கலைக்கழகம். 341 00:29:03,285 --> 00:29:05,078 இப்போது இருவரும் திரும்பி வந்துவிட்டோம். 342 00:29:05,704 --> 00:29:08,999 உன் அப்பாவின் பச்சிங்கோ பார்லர் நன்றாக போவதாக கேள்விப்பட்டேன். 343 00:29:09,833 --> 00:29:12,044 ஏன் திடீரென்று பச்சிங்கோவை இழுக்கிறீர்கள்? 344 00:29:13,212 --> 00:29:14,630 பச்சிங்கோ எனக்கு ஆர்வமூட்டுகிறது. 345 00:29:15,839 --> 00:29:18,926 ஏன்? அது வேறு வழிகள் இல்லாதவர்களுக்கானது. 346 00:29:19,009 --> 00:29:20,552 நீண்ட காலத்திற்கு முன்பு அப்படி இருந்திருக்கலாம். 347 00:29:22,721 --> 00:29:24,139 எனக்குப் புரியவில்லை. 348 00:29:24,973 --> 00:29:26,934 நாம் பச்சிங்கோவில் நுழைய வேண்டுமா? 349 00:29:27,017 --> 00:29:28,227 இங்கே இல்லை. 350 00:29:28,852 --> 00:29:32,189 சந்தையில் கூட்டம் அதிகமாக உள்ளது, உன் தந்தை போன்றவர்களுக்கு நன்றி. 351 00:29:33,106 --> 00:29:35,526 ஆனால் கொரியா, தாய்லாந்து, மக்காவில். 352 00:29:36,360 --> 00:29:38,862 யாருக்குத் தெரியும்? வேகாஸ் கூட. 353 00:29:43,283 --> 00:29:48,539 உங்களுடைய இந்த மாபெரும் யோசனை, 354 00:29:49,540 --> 00:29:51,792 இது முறையானதா? 355 00:29:51,875 --> 00:29:53,877 அதாவது சட்டப்பூர்வமானதா? 356 00:29:57,381 --> 00:29:58,423 ஆம். 357 00:30:01,260 --> 00:30:02,261 நான்… 358 00:30:03,512 --> 00:30:05,264 நான் என் தாத்தாவை மிகவும் நேசித்தேன். 359 00:30:06,223 --> 00:30:09,476 ஆனால் அவர் யார் அல்லது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று 360 00:30:09,560 --> 00:30:11,687 எனக்குத் தெரியாமல் இல்லை. 361 00:30:12,312 --> 00:30:13,480 நான் அதை மறுக்கவில்லை. 362 00:30:14,314 --> 00:30:16,400 உலகம் அவரை ஒரு வில்லனாக பார்த்திருக்கலாம், 363 00:30:17,234 --> 00:30:18,402 ஆனால் எனக்கு, 364 00:30:19,486 --> 00:30:21,196 அவருடைய சொந்த மகனான 365 00:30:22,155 --> 00:30:23,615 போதைக்கு அடிமையான எனது 366 00:30:23,699 --> 00:30:26,159 அப்பாவிடமிருந்து அவர்தான் என்னைக் காப்பாற்றினார். 367 00:30:27,619 --> 00:30:29,037 நான் சொல்ல வருவது என்னவென்றால்… 368 00:30:30,831 --> 00:30:33,041 என் தாத்தா பற்றி நான் வெட்கப்படவில்லை. 369 00:30:34,793 --> 00:30:35,919 இருந்தாலும்… 370 00:30:38,755 --> 00:30:40,132 நான் அவர் இல்லை. 371 00:30:41,091 --> 00:30:42,342 அதோடு நம்மைப் போன்றவர்கள், 372 00:30:43,135 --> 00:30:45,637 நம் குடும்பத்தினரின் வழியில் நடக்க வேண்டிய அவசியமில்லை. 373 00:30:47,181 --> 00:30:48,765 இனி கிடையாது. 374 00:30:51,935 --> 00:30:53,520 கொஞ்சம் யோசித்துப் பார். 375 00:31:04,031 --> 00:31:05,991 உன்னுடைய ரௌடி காதலன் எங்கே? 376 00:31:08,577 --> 00:31:12,748 பச்சிங்கோ பார்லர் வைத்திருப்பதால், அவர் ரௌடி என்று அர்த்தம் இல்லை. 377 00:31:14,666 --> 00:31:16,043 நாங்கள் அவசரமாக இங்கு வந்தோம், 378 00:31:17,002 --> 00:31:19,129 எனக்குத் தேவையான பொருட்களைப் பெற அவர் திரும்பிச் சென்றார். 379 00:31:24,134 --> 00:31:26,178 நான் எப்போதும் வியப்படைந்தேன். 380 00:31:27,095 --> 00:31:30,224 அவர் தேர்வு செய்ய நிறைய பெண்கள் இருந்தார்கள் என்று உறுதியாக நம்புகிறேன், 381 00:31:31,058 --> 00:31:32,726 கொரியராக இருந்தாலும். 382 00:31:34,311 --> 00:31:36,605 ஆனால் அவர் ஏன் உன்னைத் தேர்ந்தெடுத்தார்? 383 00:31:37,648 --> 00:31:40,067 எத்தனை முறை நீ மற்ற ஆண்களுடன் உடலுறவு கொண்டாய் என்பதை 384 00:31:40,150 --> 00:31:42,694 கேள்விப்பட்ட பிறகும் உன்னை விட்டு விலகவில்லை. 385 00:31:48,158 --> 00:31:49,159 பேசாமல் இரு. 386 00:31:52,287 --> 00:31:53,830 என்னை சண்டையிட வைக்க முடியாது. 387 00:31:55,332 --> 00:31:58,669 அப்படியென்றால் நான் சாகும் வரை என்னை சலிப்படைய செய்வாயா? 388 00:31:58,752 --> 00:32:01,880 அப்படியென்றால், ஒரு கத்தியை எடுத்து வா நான் இப்போதே இறந்துவிடுகிறேன்! 389 00:32:11,515 --> 00:32:12,850 பாட்டி, 390 00:32:14,059 --> 00:32:15,269 நீங்களும் வந்திருக்கிறீர்கள். 391 00:32:17,312 --> 00:32:19,189 இது ஒரு மோசமான குடும்ப சந்திப்பு. 392 00:32:20,107 --> 00:32:22,150 போய் எனக்கு காபி வாங்கி வா. 393 00:32:32,828 --> 00:32:38,250 எட்சுகோ உன்னை கண்டுபிடிக்க பெரும் தொகையைச் செலவிட்டாள். 394 00:32:39,334 --> 00:32:44,173 கொரியர்களாகிய நீங்கள் பணத்தின் மெது வெறி கொண்டவர்கள். 395 00:32:45,424 --> 00:32:47,509 அது நம்பிக்கையற்றது என்று எல்லாரும் அவளிடம் சொன்னார்கள், 396 00:32:47,593 --> 00:32:49,970 ஆனால் அவள் கைவிடவில்லை. 397 00:32:51,346 --> 00:32:56,894 எந்த அம்மாவாலும் தன் குழந்தையை விட்டுக்கொடுக்க முடியாது. 398 00:32:56,977 --> 00:32:58,228 ஏன் இங்கே வந்தீர்கள்? 399 00:32:59,146 --> 00:33:03,609 உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு அவளை பிடிக்காது. 400 00:33:05,360 --> 00:33:08,572 உங்கள் செல்லப் பேரனுடன் நான் இருப்பதை நீங்கள் வெறுத்தது போல. 401 00:33:11,992 --> 00:33:17,206 சாலமனையும் என்னையும் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். 402 00:33:27,216 --> 00:33:29,009 பாட்டி, 403 00:33:29,635 --> 00:33:32,513 எல்லோரும் உங்களை புனிதர் என்று நினைக்கிறார்கள். 404 00:33:35,307 --> 00:33:38,101 ஆனால் நீங்கள்தான் என்னை ஓடிப்போகச் சொன்னீர்கள் 405 00:33:38,185 --> 00:33:40,354 என்பது சாலமனுக்கு எப்போதாவது தெரியவந்தால், 406 00:33:41,230 --> 00:33:43,190 அவன் என்ன சொல்வான் என்று நினைக்கிறீர்கள்? 407 00:33:48,946 --> 00:33:50,364 என்ன? 408 00:33:51,323 --> 00:33:55,369 சாலமன் அமெரிக்கா சென்ற பிறகு என்ன சொன்னீர்கள் என்பது நினைவில்லையா? 409 00:34:01,875 --> 00:34:04,837 அவன் எங்களிடமிருந்து விலகிச் சென்றது நல்லது என்று சொன்னீர்கள். 410 00:34:06,046 --> 00:34:10,926 ஏனென்றால் அவன் இங்கேயே இருந்திருந்தால் நாங்கள் அவனை கெடுத்துவிடுவோம் என்று. 411 00:34:11,802 --> 00:34:14,554 என்னைக் குறிப்பிட்டீர்கள். நான் அவனை கெடுத்துவிடுவேன் என்று. 412 00:34:16,014 --> 00:34:18,641 அப்படிச் சொன்னதற்காக நான் உங்களை வெறுக்கிறேன், 413 00:34:18,725 --> 00:34:21,478 நீங்கள் சொல்வது சரி என்று தெரிந்தாலும்! 414 00:34:23,522 --> 00:34:26,525 நான் உன்னைப் பற்றி பேசியதாக நினைத்தாயா? 415 00:34:32,989 --> 00:34:37,369 நான் அந்த வார்த்தைகளை… என்னைப் பற்றி சொன்னேன். 416 00:34:40,246 --> 00:34:41,415 உங்களைப் பற்றியா? 417 00:34:48,922 --> 00:34:52,426 ஒருமுறை, எனக்கு இன்னொரு மகன் இருந்தான். 418 00:34:55,387 --> 00:34:57,472 அவனும் நல்லவனாகத்தான் இருந்தான். 419 00:35:00,267 --> 00:35:06,023 ஆனால் நான் அவனுடைய வாழ்க்கையை கெடுத்ததால்… 420 00:35:08,066 --> 00:35:09,568 அவன் இப்போது இல்லை. 421 00:35:43,435 --> 00:35:46,480 குழந்தை ஏன் வரவில்லை? 422 00:35:47,731 --> 00:35:49,399 எனக்குத் தெரியவில்லை. 423 00:35:50,817 --> 00:35:51,860 போதும்! 424 00:35:52,444 --> 00:35:54,947 இவ்வளவு சத்தத்தில் எப்படி தூங்குவது? 425 00:35:56,949 --> 00:35:59,451 இங்கே நுழைய உங்களுக்கு உரிமை இல்லை! 426 00:36:00,702 --> 00:36:01,870 அந்த இடுப்பைப் பார்! 427 00:36:01,954 --> 00:36:03,580 என்ன செய்கிறீர்கள்? 428 00:36:04,206 --> 00:36:06,542 இதை எப்படி செய்வது என்று அறியும் அளவுக்கு போதுமான பன்றிகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். 429 00:36:06,625 --> 00:36:08,627 எனக்கு உதவுங்கள். 430 00:36:08,710 --> 00:36:10,003 வா! 431 00:36:12,339 --> 00:36:16,426 கேள்! கூடுதல் சுத்தமான துணிகள். அதோடு தண்ணீர். இப்போதே! 432 00:36:16,510 --> 00:36:18,637 எழுந்து நில்! 433 00:36:18,720 --> 00:36:20,681 இதற்கு மேல் எனக்கு சத்தி இல்லை. 434 00:36:21,265 --> 00:36:22,432 தள்ளு! 435 00:36:22,516 --> 00:36:24,601 ஒன்றாக! 436 00:36:24,685 --> 00:36:27,145 அம்மா! 437 00:36:27,229 --> 00:36:29,565 மேலும்! 438 00:36:31,441 --> 00:36:36,738 இந்த பிரச்சினைகள் நிறைந்த உலகில் 439 00:36:36,822 --> 00:36:43,662 உங்கள் நம்பிக்கை என்ன? 440 00:36:44,496 --> 00:36:50,752 செல்வத்தையும் செழிப்பையும் 441 00:36:52,171 --> 00:36:58,677 நீங்கள் அனுபவித்தது போதாதா? 442 00:36:59,261 --> 00:37:00,345 சியர்ஸ்! 443 00:37:04,349 --> 00:37:06,310 சிறப்பு உயர் போலீஸ் அதிகாரி. வழக்கமான ஆய்வு. 444 00:37:10,314 --> 00:37:12,107 உன் பையை நான் சோதிக்க வேண்டும். 445 00:37:18,655 --> 00:37:21,283 -எழுந்திரு. -ஏதாவது பிரச்சினையா? 446 00:37:21,783 --> 00:37:24,036 நான் எந்தத் தவறும் செய்யவில்லை. 447 00:37:24,119 --> 00:37:26,205 உன் பையை கொடு. நான் உள்ளே பார்க்க வேண்டும். 448 00:37:26,288 --> 00:37:27,998 என்னுடைய பணிக்கான உடைகள்தான். 449 00:37:28,081 --> 00:37:29,416 இப்போதே ஒப்படை. 450 00:37:45,641 --> 00:37:49,436 ஹேய், உன் கோட் பாக்கெட்டுகளுக்குள் என்ன இருக்கிறது? 451 00:37:50,521 --> 00:37:51,772 எழுந்திரு. 452 00:37:54,775 --> 00:37:56,026 சீக்கிரம். 453 00:38:08,705 --> 00:38:11,041 தயவுசெய்து. அவை என் பன்றிகளுக்கு. 454 00:38:27,891 --> 00:38:29,142 அசையாதே. 455 00:38:41,989 --> 00:38:45,701 ஒருமுறை நன்றாக தள்ளு! நீ நன்றாக செய்கிறாய். 456 00:38:46,451 --> 00:38:49,246 நன்றாக செய்கிறாய். இன்னும் கொஞ்சம்! 457 00:38:50,706 --> 00:38:52,875 குழந்தை வெளியே வருவதற்கு நீ தள்ள வேண்டும். 458 00:38:52,958 --> 00:38:55,627 -இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. -அட, இன்னும் ஒருமுறை! 459 00:38:55,711 --> 00:38:57,171 உன்னால் முடியும். 460 00:38:57,254 --> 00:38:59,131 சுன்ஜா, நீ வலிமையானவள். 461 00:38:59,214 --> 00:39:02,843 செய், இன்னும் ஒருமுறை! இன்னும் கொஞ்சம். 462 00:39:02,926 --> 00:39:05,012 பிறகு குழந்தை வெளியே வந்துவிடும். 463 00:39:05,095 --> 00:39:07,598 அது வரும். தள்ளிக்கொண்டே இரு! 464 00:39:07,681 --> 00:39:09,349 நீ நன்றாக செய்கிறாய். 465 00:39:11,351 --> 00:39:13,270 நாம் எல்லோரும் எப்படி அங்கே அமர்ந்திருக்க முடிந்தது? 466 00:39:16,481 --> 00:39:18,192 நான் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்க… 467 00:39:18,275 --> 00:39:19,860 நிச்சயமாக நீ எதுவும் செய்யவில்லை! 468 00:39:20,694 --> 00:39:23,697 அதற்குப் பெயர்தான் உயிர் பிழைத்தல். 469 00:39:24,698 --> 00:39:26,450 நீ ஏன் அதை உன் பிரச்சினையாக நினைக்கிறாய்? 470 00:39:27,326 --> 00:39:30,621 இன்னும் எவ்வளவு காலம் இதை செய்வாய்? நீ பட்ட துன்பம் போதவில்லையா? 471 00:39:31,914 --> 00:39:35,584 அவளைப் போன்ற ஒரு பெண்ணின் மீது பரிதாபப்பட்டு, அவளை வீட்டிற்கு அழைத்து வர… 472 00:39:37,169 --> 00:39:38,837 அதை நிறுத்து! 473 00:39:46,428 --> 00:39:48,847 சுன்ஜா பற்றி நீ அப்படி பேசக் கூடாது. 474 00:39:50,599 --> 00:39:52,351 நான் அதை அனுமதிக்க மாட்டேன். 475 00:39:52,976 --> 00:39:54,937 மன்னித்துவிடு. நான் தவறாக பேசிவிட்டேன். 476 00:39:55,020 --> 00:39:56,855 இது உன் வார்த்தைகள் மட்டுமல்ல, 477 00:39:56,939 --> 00:39:59,107 உன் எண்ணங்களும் அவைதான். 478 00:40:02,611 --> 00:40:03,779 சகோதரா… 479 00:40:06,782 --> 00:40:08,951 இந்த வருடம் நான் இறந்திருக்க வேண்டும். 480 00:40:11,036 --> 00:40:13,205 ஆனால் அதற்கு பதிலாக, உன் முன் நிற்கிறேன். 481 00:40:13,956 --> 00:40:15,916 அதற்கு சுன்ஜாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 482 00:40:19,670 --> 00:40:24,341 அவள் என்ன செய்தாள், அவளால் என்ன செய்ய முடியும் என்று உனக்குத் தெரியாது. 483 00:40:26,593 --> 00:40:29,221 ஆனால் எனக்குத் தெரியும். 484 00:40:31,932 --> 00:40:34,101 வருகிறது! 485 00:40:34,184 --> 00:40:35,185 தள்ளிக்கொண்டே இரு! 486 00:40:35,269 --> 00:40:37,771 இன்னொரு முறை, தள்ளு! 487 00:40:41,233 --> 00:40:44,319 தலை தெரிகிறது. குழந்தை வருகிறது! 488 00:40:44,987 --> 00:40:47,656 சுன்ஜாவிடம், எனக்கு இந்த உணர்வு ஏற்படுகிறது… 489 00:40:49,741 --> 00:40:51,118 ஒருவேளை என் வாழ்க்கை… 490 00:40:52,744 --> 00:40:54,872 எப்படியாவது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்று. 491 00:40:57,583 --> 00:41:00,002 பெரிய அளவில் இல்லை, 492 00:41:00,085 --> 00:41:02,129 ஆனால் என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று தோன்றுகிறது. 493 00:41:04,923 --> 00:41:07,759 என் குழந்தை இப்படி ஒரு உலகில் வளர்வதை நான் விரும்பவில்லை. 494 00:41:10,053 --> 00:41:11,346 எனக்கு என் குழந்தை வேண்டும்… 495 00:41:15,350 --> 00:41:18,187 அதன் உருவத்தை நான் தடவி பார்க்க, 496 00:41:18,270 --> 00:41:22,065 இந்தக் குழந்தை செழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 497 00:41:25,903 --> 00:41:29,281 சகோதரா, நம் பிள்ளைகள் அதற்கு கூட தகுதியானவர்கள் இல்லையா? 498 00:41:31,116 --> 00:41:32,618 நீ தகுதியானவன், 499 00:41:33,744 --> 00:41:34,870 நானும்தான். 500 00:41:50,010 --> 00:41:53,472 சுன்ஜா, ஆண் குழந்தை. 501 00:42:11,740 --> 00:42:13,700 எனக்கு இந்த முகத்தைத் தெரியும். 502 00:42:19,039 --> 00:42:20,624 என் அம்மா. 503 00:42:23,961 --> 00:42:25,128 என் அப்பா. 504 00:42:30,342 --> 00:42:32,052 எனக்கு இவனை தெரியும். 505 00:42:41,728 --> 00:42:43,939 வாருங்கள், உங்கள் மகனைப் பாருங்கள். 506 00:42:44,022 --> 00:42:45,524 மகனா? 507 00:43:04,835 --> 00:43:06,128 என் மகன். 508 00:43:10,924 --> 00:43:13,135 அவர்கள் நம்மைப் போல வளர்வார்கள் என்று நினைக்கையில். 509 00:43:19,766 --> 00:43:21,185 மைத்துனரே… 510 00:43:25,230 --> 00:43:27,608 குழந்தைக்கு பெயர் வைப்பீர்களா? 511 00:43:33,155 --> 00:43:34,239 நானா? 512 00:43:35,407 --> 00:43:36,867 அந்த கௌரவத்துக்கு நான் தகுதியானவன் அல்ல. 513 00:43:52,424 --> 00:43:54,092 நீங்கள் இந்தக் குடும்பத்தின் தலைவர். 514 00:43:57,471 --> 00:43:59,431 இது கௌரவம் அல்ல, கடமை. 515 00:44:41,014 --> 00:44:45,143 புதிய உலகைத் திறந்தவன்… 516 00:44:48,605 --> 00:44:50,148 நம்பிக்கை கொண்டவன்… 517 00:44:53,819 --> 00:44:55,445 யாரும் நம்பிக்கை கொள்ளாதபோது. 518 00:45:00,534 --> 00:45:01,952 இவனுக்கு நோவா என்று பெயரிடுவோம். 519 00:45:18,677 --> 00:45:19,928 நான் உனக்கு… 520 00:45:21,471 --> 00:45:23,015 அருவருப்பானவளாக தெரிகிறேனா? 521 00:45:31,440 --> 00:45:36,904 நீ வலியில் இருக்கிறாய் என்றுதான் கவலைப்படுகிறேன். 522 00:45:42,367 --> 00:45:44,286 நீ இன்னும் என் ஹனா தான். 523 00:45:46,163 --> 00:45:48,081 எப்போதும் எதுவும் அதை மாற்றாது. 524 00:46:04,806 --> 00:46:06,433 இன்னும் கொஞ்சம் இருக்கிறதா? 525 00:46:08,810 --> 00:46:11,396 எனக்கு எவ்வளவு பசி இருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. 526 00:46:15,108 --> 00:46:19,530 எப்போதும் இன்னும் கொஞ்சம் உண்டு. சாப்பிடு. 527 00:46:40,008 --> 00:46:43,053 பாட்டி, இதெல்லாம் எங்கிருந்து கிடைத்தது? 528 00:46:43,136 --> 00:46:45,347 ஹோட்டலில் எடுத்துச்செல்லக் கூடிய எரிவாயு அடுப்பு இருந்தது. 529 00:46:45,430 --> 00:46:47,349 பக்க உணவுகளை வீட்டிலிருந்து கொண்டு வந்தேன். 530 00:46:48,725 --> 00:46:50,477 வீட்டில் இருந்து பக்க உணவுகளை கொண்டு வந்தீர்களா? 531 00:46:51,144 --> 00:46:53,981 எவ்வளவு நாட்கள் இங்கு இருப்போம் என்று தெரியவில்லை. 532 00:46:54,064 --> 00:46:55,858 இந்த பெட்டி எவ்வளவு பிடிக்கிறது பார். 533 00:46:55,941 --> 00:46:58,527 -வந்து சாப்பிடு. -எனக்குப் பசியில்லை. 534 00:46:58,610 --> 00:47:00,654 இப்போதுதான் நீ பலமாக இருக்க வேண்டும். 535 00:47:00,737 --> 00:47:03,073 -சாப்பிடு. -நான் சாப்பிட விரும்பவில்லை என்று சொன்னேன். 536 00:47:12,708 --> 00:47:14,293 திருமதி. ஹானிடம் கையெழுத்திட வேண்டாம் என்று 537 00:47:15,335 --> 00:47:17,671 சொன்னதால் வங்கி என்னை பணிநீக்கம் செய்துவிட்டது. 538 00:47:21,091 --> 00:47:22,676 இது உங்கள் தவறு. 539 00:47:23,844 --> 00:47:25,053 நீங்கள்தான் என்னை அவர் மீது பாவப்பட வைத்தீர்கள், 540 00:47:26,305 --> 00:47:27,890 என்னை பலவீனப்படுத்தினீர்கள். 541 00:47:28,515 --> 00:47:30,601 அது பலவீனம் அல்ல. 542 00:47:32,686 --> 00:47:33,896 அது எதுவாக இருந்தாலும், 543 00:47:34,646 --> 00:47:35,981 அது என்னை அழித்துவிட்டது. 544 00:47:38,483 --> 00:47:40,652 நான் கடினமாக உழைத்த எல்லாவற்றையும். 545 00:47:45,824 --> 00:47:49,536 உன் வாழ்க்கை கடினமானது என்று நீ நினைக்கிறாயா? 546 00:47:49,620 --> 00:47:50,996 எனவே இப்போது நீங்களும். 547 00:47:53,373 --> 00:47:55,250 எதற்காக என்னை வெறுக்கிறீர்கள், 548 00:47:56,043 --> 00:47:58,837 உங்களுக்கு கிடைக்காதது எனக்குக் கிடைத்ததாலா, உங்களைப் போல துன்பப்படாமல் இருந்ததற்காகவா? 549 00:48:02,966 --> 00:48:05,010 நல்லது. நீங்கள் சரியாக சொன்னீர்கள். 550 00:48:06,637 --> 00:48:08,472 அதை நான் ஒருபோதும் வெல்ல மாட்டேன். 551 00:48:09,973 --> 00:48:11,767 எனக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது, தெரிந்துகொள். 552 00:48:12,809 --> 00:48:14,102 நீண்ட காலத்துக்கு முன்பு 553 00:48:17,856 --> 00:48:21,735 அளவில்லாத செல்வத்தை நான் பெற்றிருக்கலாம், ஆனால் நான் அதை நிராகரித்தேன். 554 00:48:25,113 --> 00:48:26,573 இது போருக்கு முன்பு நடந்தது. 555 00:48:29,785 --> 00:48:32,120 உன் தாத்தாவை நான் திருமணம் செய்வதற்கு முன். 556 00:48:36,917 --> 00:48:38,460 நீங்கள் ஏன் அதை ஏற்கவில்லை? 557 00:48:43,674 --> 00:48:47,886 நான் எப்படி இரண்டு வாழ்க்கையை வாழ்வேன்? 558 00:48:48,720 --> 00:48:51,932 ஒன்று வெளிப்படையான வாழ்க்கை, இன்னொரு பாதி மறைக்கப்பட்டது. 559 00:48:56,019 --> 00:48:57,646 அது முக்கியமான ஒன்று. 560 00:48:59,773 --> 00:49:01,525 வெற்றியை விட முக்கியமானது 561 00:49:01,608 --> 00:49:04,236 அந்த வெற்றியை நீ எப்படி அடைந்தாய் என்பது. 562 00:49:07,072 --> 00:49:08,365 எனக்குத் தெரியும், பாட்டி. 563 00:49:09,032 --> 00:49:10,284 நான் முயற்சி செய்கிறேன். 564 00:49:41,648 --> 00:49:43,108 உங்களுக்குத் தாமதமாகிவிடும். 565 00:49:54,536 --> 00:49:56,788 நீங்கள் ஏன் உங்கள் மேலங்கியை அணிவதில்லை? 566 00:50:01,752 --> 00:50:03,795 கடவுளுக்கு நான் மேலங்கியோடு தேவைப்படமாட்டேன். 567 00:50:07,549 --> 00:50:08,884 இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. 568 00:50:29,947 --> 00:50:31,698 என்ன? 569 00:50:34,034 --> 00:50:35,744 எனக்கு இப்போது ஒரு மகன் இருக்கிறான். 570 00:50:38,622 --> 00:50:40,541 நீ தோல்வியுற்ற இடத்தில், 571 00:50:41,667 --> 00:50:43,627 வேறொரு பெண் வெற்றி பெற்றுவிட்டாள். 572 00:50:46,171 --> 00:50:47,381 நீ கேட்கிறாயா? 573 00:50:50,467 --> 00:50:53,762 சில பெண்கள் அதிக அனுசரணையுடன் இருக்கிறார்கள், இல்லையா? 574 00:50:53,846 --> 00:50:55,848 அவளைப் பற்றி உனக்கு நான் விளக்க வேண்டியதில்லை. 575 00:50:57,391 --> 00:50:58,642 ஆனால் இதனுடன், 576 00:50:59,142 --> 00:51:01,854 உன் மணவாழ்க்கைக்குரிய கடமைகளில் இருந்து நீ விடுவிக்கப்படுகிறாய். 577 00:51:04,231 --> 00:51:05,691 நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய். 578 00:51:07,317 --> 00:51:11,280 இந்தக் கல்யாணம் உனக்கு சாபமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். 579 00:51:12,239 --> 00:51:14,575 இது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என நினைக்கிறேன். 580 00:51:15,868 --> 00:51:17,369 ஆனால் அது மிகவும் தாமதமானது. 581 00:51:18,203 --> 00:51:19,329 என் உடல், 582 00:51:20,372 --> 00:51:22,124 நீங்கள் அதை கெடுத்துவிட்டீர்கள். 583 00:51:28,881 --> 00:51:29,923 ஆனால்… 584 00:51:31,717 --> 00:51:33,552 உன் செல்ல மகன், 585 00:51:35,012 --> 00:51:37,264 அவன் உன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 586 00:52:33,737 --> 00:52:35,739 வசனத் தமிழாக்கம் அருண்குமார்