1 00:00:18,393 --> 00:00:20,479 (கொரிய மொழியில்) அப்பா, வந்துவிட்டேன். 2 00:00:28,612 --> 00:00:30,405 ஹான்சு, மீண்டும் தாமதமாக வந்திருக்கிறாய். 3 00:00:31,323 --> 00:00:34,243 செய்தியை கொடுக்க நகரத்தைத் தாண்டி போக வேண்டியிருந்தது. 4 00:00:35,452 --> 00:00:37,788 நீ ஒரு ஆசிரியர், வேலைக்கார பையன் அல்ல. 5 00:00:38,372 --> 00:00:40,582 ஒருவேளை இதைப்பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவது நல்லது. 6 00:00:41,750 --> 00:00:42,876 சரி. 7 00:00:44,086 --> 00:00:46,296 வா! எனக்குப் பசிக்கிறது. 8 00:00:46,380 --> 00:00:48,215 நம் தரமான உணவை சாப்பிட போகலாம். 9 00:00:51,385 --> 00:00:52,594 போகலாம். 10 00:01:38,640 --> 00:01:41,852 ஹான்சு! 11 00:01:53,238 --> 00:01:55,741 (ஜப்பானிய மொழியில்) உன் அப்பா என்னிடம் சொன்னது உண்மையா? 12 00:01:56,325 --> 00:01:59,453 அவரை விட நீ நன்றாக கணக்கு போடுவாயா? 13 00:02:02,664 --> 00:02:05,417 அவர் என் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதால், 14 00:02:05,959 --> 00:02:08,044 அவர் அப்படி சொன்னாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 15 00:02:09,170 --> 00:02:10,797 அது ஒரு நல்ல அப்பாவிற்கான அடையாளம். 16 00:02:11,590 --> 00:02:14,384 முட்டாள்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை காரணமில்லாமல் புகழ்வார்கள். 17 00:02:21,808 --> 00:02:23,894 அப்படியென்றால் எப்போது எனக்காக வேலை செய்யப் போகிறாய்? 18 00:02:25,020 --> 00:02:28,524 நிர்வாகம் செய்ய வேண்டிய பல தொழில்கள் என்னிடம் இருக்கின்றன. 19 00:02:29,191 --> 00:02:31,610 அபாகஸில் விரைவாக கணக்கிடும் ஒருவரைத் தேடுகிறேன். 20 00:02:31,693 --> 00:02:34,238 உங்களுக்காக வேலை செய்ய அவன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், முதலாளி, 21 00:02:35,072 --> 00:02:38,033 ஆனால் இவன் ஏற்கனவே ஒரு பணக்கார அமெரிக்க குடும்பத்துக்கு 22 00:02:38,116 --> 00:02:40,661 கணக்கு ஆசிரியராக பணியாற்றுகிறான். 23 00:02:41,537 --> 00:02:42,663 உங்களுக்கே தெரியும், 24 00:02:43,288 --> 00:02:47,042 சமூகத்தில் பின்தங்கிய எங்களைப் போன்றவர்களுக்கு இந்த வேலை மிகவும் அரிதானது. 25 00:02:48,877 --> 00:02:51,046 அமெரிக்கர்களிடமும் நல்ல பெயர் வாங்க நினைக்கிறாயா? 26 00:02:51,547 --> 00:02:55,425 ஹோம்ஸ் குடும்பம் என்னிடம் நன்றாக நடந்துகொள்கிறது. 27 00:02:55,509 --> 00:02:56,718 நிச்சயம் நன்றாக நடந்துகொள்வார்கள். 28 00:02:57,427 --> 00:03:00,180 எந்தவொரு எதிர்மறையான விளைவுகளும் இல்லையென்றால் நன்றாக நடப்பது எளிதுதான். 29 00:03:00,848 --> 00:03:02,057 பேசியதே வீண். 30 00:03:06,436 --> 00:03:07,563 உன் ஜப்பானிய மொழி, 31 00:03:08,355 --> 00:03:10,023 நன்றாக மேம்பட்டு இருக்கிறது. 32 00:03:12,192 --> 00:03:15,696 ஆனால் நீ நிஜமாக எங்களில் ஒருவனாக வேண்டுமானால், நீ கடினமாக உழைக்க வேண்டும். 33 00:03:23,787 --> 00:03:26,081 ஜெண்டா, நன்றாக சண்டையிட்டாய். 34 00:04:33,482 --> 00:04:37,611 யோகோஹாமா 1923 35 00:05:01,426 --> 00:05:04,638 மக்கள் சொல்வதைப் போலத்தான் உன் நடத்தையும் இருக்கிறது. 36 00:05:05,222 --> 00:05:08,892 நீ உன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், நீ அதற்குத் தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும். 37 00:05:08,976 --> 00:05:10,394 உன் அப்பாவை கேள். 38 00:05:10,894 --> 00:05:14,106 தேவையில்லை என்றால் நான் அந்த மோசமான துயரத்தை அனுபவிக்க மாட்டேன். 39 00:05:14,189 --> 00:05:15,774 அதற்குள் துயரமா? 40 00:05:15,858 --> 00:05:18,610 குறைந்தபட்சம் மது அருந்தும் நேரம் வரை அது காத்திருக்காதா? 41 00:05:18,694 --> 00:05:20,654 உன் துயரத்தைக் கேட்கும் மனப்பான்மை எனக்கு வந்துவிட்டது. 42 00:05:20,737 --> 00:05:22,698 என்னை கிண்டல் செய்கிறீர்கள், எனக்கு நிஜமான கோபம் இருக்கிறது, அம்மா. 43 00:05:23,198 --> 00:05:26,034 அப்படியா? என்ன கோபம், மகனே? 44 00:05:26,702 --> 00:05:28,537 உனக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லையா? 45 00:05:28,620 --> 00:05:30,831 ஆபத்திற்கு தங்குமிடம் தேவையா? 46 00:05:30,914 --> 00:05:34,293 ஒருவேளை மருந்தே இல்லாத உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறாயா? 47 00:05:34,376 --> 00:05:37,129 -மருத்துவரை அழைக்கட்டுமா? -இப்படி செய்வதைத்தான் வெறுக்கிறேன். 48 00:05:37,212 --> 00:05:38,589 ஆனால் நான் செய்யத்தான் வேண்டும். 49 00:05:39,173 --> 00:05:44,219 9 மணிக்கு உணவு பரிமாற வேண்டும் என சமையல்காரரிடம் சொல்லுங்கள். 50 00:05:44,303 --> 00:05:48,557 இன்றிரவு முக்கியமான விருந்தினர்கள் வருகிறார்கள். எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். 51 00:05:52,519 --> 00:05:54,563 "எஸ்ஸேஸ் ஆன் தி தியரி ஆஃப் நம்பர்ஸ்." 52 00:05:54,646 --> 00:05:56,857 ஹான்சு, இதெல்லாம் உங்களுக்கு நன்றாக புரிகிறதா? 53 00:05:58,108 --> 00:05:59,359 அப்படித்தான் நினைக்கிறேன். 54 00:06:00,527 --> 00:06:02,863 அருமை. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 55 00:06:05,991 --> 00:06:09,036 ஆனால் நிஜமாக, அம்மா, நான் ஒன்று நினைக்கிறேன். ஹான்சுவை ஏன் நம்மோடு அழைத்து போகக்கூடாது? 56 00:06:09,703 --> 00:06:12,331 அடுத்த வருடம் யேல் பல்கலைக்கழகத்தில் இவன் எனக்கு ஒரு வரமாக இருப்பான். 57 00:06:12,831 --> 00:06:15,083 இல்லையென்றால், நான் தேர்ச்சி பெறமாட்டேன். அது உங்களுக்கே தெரியும். 58 00:06:15,167 --> 00:06:16,543 நல்ல யோசனை. 59 00:06:19,713 --> 00:06:21,340 அவர் அப்பாவிடம் பேசுவார். 60 00:06:22,299 --> 00:06:23,592 அப்பாவைப் பற்றி பேசுகையில், 61 00:06:24,510 --> 00:06:27,095 ஹான்சு, ஓடிச்சென்று அவரிடம் இதை கொடுக்க முடியுமா? 62 00:06:29,014 --> 00:06:30,015 நான் போக வேண்டும். 63 00:06:30,098 --> 00:06:33,185 ஆனால் நீ, எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிடு. 64 00:06:33,769 --> 00:06:34,978 முயற்சிப்பாயா? 65 00:07:27,155 --> 00:07:28,991 ஏன் பின்வாங்குகிறீர்கள் என்றே புரியவில்லை. 66 00:07:29,074 --> 00:07:31,326 நம்முடையது அல்லாத ஒரு நாட்டில் முதலீடு செய்யப்பட்ட 67 00:07:31,410 --> 00:07:33,954 கணிசமான அளவு மூலதனத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். 68 00:07:34,037 --> 00:07:36,415 அட, இவர்களுக்கு நாம் இங்கு இருப்பது அல்லது நம் பணம் தேவையா என்று வியக்கிறேன். 69 00:07:36,498 --> 00:07:37,708 அதனால் என்ன? 70 00:07:37,791 --> 00:07:39,585 பணம் சம்பாதிப்பவர்கள் நாமாக இருக்கும் வரை. 71 00:07:39,668 --> 00:07:41,044 ஆனால் எவ்வளவு காலத்திற்கு? 72 00:07:41,128 --> 00:07:44,006 யோகோஹாமா இதை தயாராக, சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும், ஆனால் இந்த நாட்டின் மற்ற பகுதிகள்? 73 00:07:44,089 --> 00:07:46,550 அவர்கள் நமக்கு எதிராக அமெரிக்க சித்தாந்தங்களை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். 74 00:07:46,633 --> 00:07:49,094 இப்போது, நிஜமாக, 75 00:07:49,178 --> 00:07:52,347 இப்படி சிதறடிக்கப்பட்ட நாடு எப்படி பழைய நிலைக்கு திரும்ப முடியும்? 76 00:07:52,431 --> 00:07:54,933 நான் உனக்குச் சொல்கிறேன், முன்னேற்றத்தின் மாற்றத்தை 77 00:07:55,017 --> 00:07:57,269 எதிர்க்கும், விமர்சிக்கும் முட்டாளாக இருக்காதே. 78 00:07:57,352 --> 00:07:59,563 ஏனென்றால் அப்படிப்பட்டவர்களுக்கு என்ன நடக்குமென்று தெரியும்தானே? 79 00:07:59,646 --> 00:08:02,566 வங்கியில் பணத்துடன் இருக்கப்போவது நாமாகத்தான் இருப்போம். 80 00:08:02,649 --> 00:08:03,901 சரி... 81 00:08:03,984 --> 00:08:04,985 இங்கே பார். 82 00:08:05,068 --> 00:08:08,488 என்னைக் காப்பாற்ற இவ்வளவு அன்போடு வந்த இந்த இளைஞன் யார்? 83 00:08:08,572 --> 00:08:09,615 இன்னொரு தகவல். 84 00:08:18,749 --> 00:08:21,210 தகவல் பெறப்பட்டது. 85 00:08:21,293 --> 00:08:22,461 இப்போது, சொல். 86 00:08:23,086 --> 00:08:25,631 இப்போதெல்லாம் என் மகன் எப்படி படிக்கிறான்? 87 00:08:25,714 --> 00:08:28,342 அவனால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறான், சார். 88 00:08:29,301 --> 00:08:32,179 அப்படியென்றால், இன்னும் மெச்சும் அளவுக்கு இல்லை. 89 00:08:34,765 --> 00:08:35,974 இனிய மாலையாக அமையட்டும். 90 00:08:40,938 --> 00:08:42,481 இவன் மிகவும் புத்திசாலி. 91 00:08:42,563 --> 00:08:44,942 வாழ்க்கையில் எப்படி வெற்றியடைகிறான் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். 92 00:09:01,834 --> 00:09:04,586 நமக்கென்று ஒரு சிறந்த வீரர் இருக்கக்கூடாதென்று சபிக்கப்பட்டோமா? 93 00:09:05,170 --> 00:09:09,174 முட்டாள்தனமான எண்ணங்களை உன் மூளையில் போட்டு குழப்பிக்கொள்ளாதே. 94 00:09:09,258 --> 00:09:12,219 நினைவிருக்கட்டும், நீ அவர்களில் ஒருவன் அல்ல. 95 00:09:13,720 --> 00:09:16,932 ஆனால் அமெரிக்கர்கள், ஏன் பல விஷயங்களில் சிறந்து விளங்குகிறார்கள்? 96 00:09:17,599 --> 00:09:19,852 ஒருவர் ஒரு விஷயத்தில் தான் சிறப்பாக இருக்க வேண்டும். 97 00:09:19,935 --> 00:09:21,061 ஒன்றில். 98 00:09:21,144 --> 00:09:24,231 ஆனால் அது என்னவாக இருந்தாலும், நீ அதில் மிகச்சிறந்தவனாக இருக்க வேண்டும். 99 00:09:24,815 --> 00:09:26,400 நீங்கள் அபாகஸில் சிறந்து விளங்குவது போலவா? 100 00:09:27,067 --> 00:09:28,485 அது வெறும் கருவிதான். 101 00:09:28,986 --> 00:09:31,780 இல்லை, நான் மற்றவர்களுக்காக பணம் சம்பாதிப்பதில் வல்லவன். 102 00:09:32,739 --> 00:09:35,242 நீங்கள் நமக்காக ஏன் பணம் சம்பாதிக்க முடியாதா? 103 00:09:36,118 --> 00:09:37,619 நான் என்ன சொன்னேன்? 104 00:09:38,203 --> 00:09:41,206 ஒருவர் ஒரு விஷயத்தில் தான் சிறந்து விளங்க வேண்டும். 105 00:09:42,708 --> 00:09:45,627 பிறகு நான் எதில் சிறந்து விளங்க வேண்டும்? 106 00:09:47,337 --> 00:09:49,965 உனக்கு வேறு வழி இருக்குமென்று நினைக்கிறாயா? 107 00:09:50,549 --> 00:09:53,427 பெரும்பாலான நேரங்களில், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 108 00:09:53,510 --> 00:09:54,553 அது மறுக்க முடியாதது. 109 00:09:56,847 --> 00:09:58,432 முதலில் நீங்கள், அப்பா. 110 00:10:02,394 --> 00:10:05,022 என் வயதிலேயே தெரியுமா? 111 00:10:07,900 --> 00:10:10,611 என் அப்பாவைப் போலவே நான் ஒரு மீனவனாவேன் என்று நினைத்தேன். 112 00:10:11,737 --> 00:10:13,655 அப்போது அப்படித்தான் இருந்தது. 113 00:10:17,576 --> 00:10:19,286 ஆனால் நீ, 114 00:10:19,369 --> 00:10:21,205 நீ மீனவனாக இருக்க மாட்டாய். 115 00:10:22,956 --> 00:10:25,125 மறைவான அறைகள் வேண்டாம், பந்தய சீட்டுகள் வேண்டாம், 116 00:10:25,209 --> 00:10:26,919 தரையில் இரத்தத்தை சுத்தம் செய்யக்கூடாது. 117 00:10:27,836 --> 00:10:31,715 உன் விஷயம் என்னவாக இருந்தாலும், நம்மை குத்துச் சண்டை அரங்கிலிருந்து வெளியேற்றப் போகிறது. 118 00:10:39,848 --> 00:10:44,228 நான் அவர்களோடு அமெரிக்க வர வேண்டுமென்று கேட்பார்கள் என்று நினைக்கிறேன். 119 00:10:44,311 --> 00:10:45,312 யேல் பல்கலைக்கழகத்திற்கு. 120 00:10:46,063 --> 00:10:47,523 அவர்கள் உன் படிப்பிற்கு பணம் செலுத்துவார்களா? 121 00:10:47,606 --> 00:10:48,649 இல்லை. 122 00:10:48,732 --> 00:10:51,401 எனக்கில்லை, ஆண்ட்ரூவிற்கு. 123 00:10:51,485 --> 00:10:53,320 அவர்களின் முட்டாள் மகனுக்கா? 124 00:10:55,197 --> 00:10:58,534 அவனுக்கு அந்த சலுகைகள் இல்லையென்றால், அவனால் இந்த உலகத்தில் வாழ முடியாது. 125 00:11:02,329 --> 00:11:07,251 அதற்கு பதிலாக, அந்த போதாமையை என் மகன் சுமக்க வேண்டியிருக்கிறது. 126 00:11:13,423 --> 00:11:14,466 ஆனால், அப்பா, 127 00:11:15,300 --> 00:11:18,887 அமெரிக்காவில், நம்மைப் போன்றவர்களும் முன்னுக்கு வர முடியும் என்று சொல்கிறார்கள். 128 00:11:22,140 --> 00:11:23,183 "நம்மைப் போன்றவர்கள்." 129 00:11:24,893 --> 00:11:27,771 நமது நம்பிக்கைகளையும் கனவுகளையும் நமக்கு எதிராக பணையம் வைப்பதன் மூலம், 130 00:11:28,647 --> 00:11:31,525 அவர்கள் அப்படித்தான் நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள். 131 00:11:39,908 --> 00:11:41,159 ஆனால் அதனுடன் கூட, 132 00:11:41,869 --> 00:11:43,787 நீ அந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். 133 00:11:44,663 --> 00:11:46,206 நீ அமெரிக்கவிற்குப் போகிறாய். 134 00:11:47,624 --> 00:11:48,959 ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? 135 00:11:50,169 --> 00:11:51,211 நான் என்ன செய்வேனா? 136 00:11:51,753 --> 00:11:53,422 நாம் ஒரு அணி, எப்போதும் ஒன்றாகவே இருப்போம் 137 00:11:54,006 --> 00:11:56,133 என்று எப்போதும் சொல்வீர்கள். 138 00:11:59,970 --> 00:12:03,098 ஒருவேளை நம் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். 139 00:12:03,807 --> 00:12:07,519 உன்னால் சாதிக்க முடியும் எனும்போது நம்மை நாமே ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? 140 00:12:08,729 --> 00:12:11,481 உயரத்தை அடையும் நேரம் வந்துவிட்டது. 141 00:12:13,317 --> 00:12:14,526 ஹான்சு, 142 00:12:15,068 --> 00:12:19,990 என்னால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய உனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 143 00:12:27,581 --> 00:12:30,501 இரவு வானில், இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன. 144 00:12:31,418 --> 00:12:35,714 அவை ஒன்றுடன் ஒன்று அருகிலிருப்பது போல தோன்றும், நிஜத்தில், அவை மிக, மிக தொலைவில் இருக்கும். 145 00:12:37,341 --> 00:12:40,719 நம்மால் கற்பனை செய்ய முடியாத தூரத்தில். 146 00:12:41,678 --> 00:12:43,222 ஆனால் இருந்தாலும் கூட, 147 00:12:43,305 --> 00:12:44,890 இங்கிருந்து, 148 00:12:46,391 --> 00:12:48,435 அவை பிரிக்க முடியாததாக தோன்றும். 149 00:12:49,645 --> 00:12:50,812 இல்லையா? 150 00:13:06,745 --> 00:13:07,746 குடியுங்கள். 151 00:13:47,119 --> 00:13:48,620 என்ன கொடுமை இது? 152 00:13:48,704 --> 00:13:50,372 நான் இதற்கு முன்பு இதை செய்ததில்லை. 153 00:13:50,455 --> 00:13:51,498 சத்தியமாக. 154 00:13:52,749 --> 00:13:54,751 நான் கொஞ்சம் பணத்தை கடனாக எடுத்துக்கொண்டேன். 155 00:13:54,835 --> 00:13:58,130 எனக்கு பணம் கிடைத்தவுடன் அதை திருப்ப கொடுத்துவிடலாம் என நினைத்தேன். 156 00:13:59,006 --> 00:14:01,091 உடனடியாக பணம் தேவைப்பட்டது, 157 00:14:01,175 --> 00:14:03,802 இல்லையென்றால், உங்களிடம் கேட்டிருப்பேன். 158 00:14:03,886 --> 00:14:05,387 எனக்கு வெட்கமாக இருக்கிறது. 159 00:14:06,221 --> 00:14:09,433 தயவுசெய்து அவகாசம் கொடுங்கள். பணத்தைக் கொண்டு வருகிறேன். 160 00:14:10,434 --> 00:14:12,394 பணம் தராமல் ஓடினால் நடப்பது உனக்கே தெரியும். 161 00:14:12,477 --> 00:14:14,188 ஆனால் நான் எங்கே போவேன்? 162 00:14:14,897 --> 00:14:16,148 எனக்கு ஒரு மகன் இருக்கிறான். 163 00:14:16,940 --> 00:14:20,360 நான் ஓடிப்போவதை அவனை ஒருபோதும் பார்க்க விடமாட்டேன். 164 00:14:21,195 --> 00:14:23,530 உனக்கு பிற்பகல் மணி அடிக்கும் வரை நேரமிருக்கிறது. 165 00:14:24,198 --> 00:14:25,991 சரி, பிற்பகல் வரை. 166 00:14:26,658 --> 00:14:27,659 சத்தியம் செய்கிறேன். 167 00:14:29,203 --> 00:14:31,872 அவள் பிரச்சினை என்று உனக்கு எச்சரித்தேன். 168 00:14:47,387 --> 00:14:48,764 அப்பா. 169 00:14:51,850 --> 00:14:53,018 அப்பா! 170 00:14:55,729 --> 00:14:56,813 எவ்வளவு பணம்? 171 00:14:57,648 --> 00:14:58,690 இருநூறு யென்கள். 172 00:14:59,274 --> 00:15:00,943 நான் சொன்னது கேட்டதுதானே. 173 00:15:01,026 --> 00:15:02,736 அதை உடனடியாக திருப்ப செலுத்தப் போகிறேன். 174 00:15:04,404 --> 00:15:05,989 அந்த பணத்தைத் திருடியிருக்கிறீர்கள். 175 00:15:06,782 --> 00:15:07,783 இல்லை. 176 00:15:08,784 --> 00:15:10,494 அவள் என்னிடம் கெஞ்சினாள். நான் என்ன செய்வேன்? 177 00:15:10,577 --> 00:15:12,621 இல்லை என்று சொல்லுங்கள். 178 00:15:16,208 --> 00:15:18,377 எல்லாமே உனக்கு எளிதாக இருக்கிறது 179 00:15:19,294 --> 00:15:21,421 ஏனென்றால் நீ ஒருபோதும் ஒரு பெண்ணுடன் இருந்ததில்லை. 180 00:15:22,881 --> 00:15:24,675 ஆனால் ஒருநாள், நீ காதலிப்பாய், 181 00:15:24,758 --> 00:15:28,303 நீயும் அவளிடம் உன்னை இழப்பாய். 182 00:15:33,600 --> 00:15:34,810 நீங்கள் செய்ததை நான் செய்ய மாட்டேன். 183 00:15:36,270 --> 00:15:37,312 ஒருபோதும் மாட்டேன். 184 00:15:46,613 --> 00:15:49,157 உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள். 185 00:15:52,536 --> 00:15:56,206 ஆனால் அந்த அளவிற்கு செல்வீர்கள் என்று நினைக்கவில்லை. 186 00:15:59,585 --> 00:16:02,462 நான் ஏழை என்று உனக்கே தெரியும். 187 00:16:10,470 --> 00:16:11,513 ஆம். 188 00:16:11,597 --> 00:16:13,348 சரி, 189 00:16:13,432 --> 00:16:14,808 நடந்தது நடந்ததுதான். 190 00:16:15,601 --> 00:16:17,686 ஆனால் நான் உடனடியாக பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும். 191 00:16:20,105 --> 00:16:21,190 எவ்வளவு மீதம் இருக்கிறது? 192 00:16:28,405 --> 00:16:30,115 நீ வாங்கியதை கொடுக்க முடியுமா? 193 00:16:30,199 --> 00:16:32,201 அதை எனக்காக வாங்கவில்லை. 194 00:16:35,245 --> 00:16:38,081 ஒரு நண்பருக்காக பணம் வாங்கினேன். 195 00:16:38,165 --> 00:16:39,499 நீ அந்த பணத்தை கடன் கொடுத்தாயா? 196 00:16:41,835 --> 00:16:43,170 இல்லை. 197 00:16:44,379 --> 00:16:46,548 மீண்டும் அந்த பணம் எனக்கு கிடைக்காது. 198 00:16:47,382 --> 00:16:50,802 அவன்... அவன் அப்படித்தான். 199 00:16:59,269 --> 00:17:03,899 எனக்குத் தெரிந்த புத்திசாலி நீங்கள்தான், இருந்தாலும்... 200 00:17:14,492 --> 00:17:16,161 நான் சென்று திரு. ஹோம்ஸை சந்திக்கிறேன். 201 00:17:17,329 --> 00:17:18,329 வேண்டாம். 202 00:17:18,955 --> 00:17:20,374 நிலைமையை அவரிடம் சொன்னால், 203 00:17:20,457 --> 00:17:21,959 அவர் கடனாக பணம் கொடுப்பார். 204 00:17:25,212 --> 00:17:27,297 அவர் உன்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போகக்கூடாது என்று முடிவெடுத்தால்? 205 00:17:28,382 --> 00:17:30,008 அதைப் பற்றி இப்போது யாருக்கு கவலை? 206 00:17:31,552 --> 00:17:34,012 ரையோச்சி எவ்வளவு ஆபத்தானவன் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 207 00:17:34,805 --> 00:17:37,349 நீ போகிறாய். அது தான் முடிவு. 208 00:17:37,975 --> 00:17:38,976 நான் போகமாட்டேன். 209 00:17:39,643 --> 00:17:41,228 நன்றி கெட்டவனே! 210 00:17:41,311 --> 00:17:44,189 உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகும், நான் சொல்வதை கேட்க மாட்டாயா? 211 00:17:45,190 --> 00:17:46,191 அப்பா. 212 00:17:47,276 --> 00:17:48,694 உன் கண்களில், 213 00:17:49,528 --> 00:17:52,781 பொறுப்பற்ற ஒருவனின் பிம்பத்தைப் பார்க்கிறேன். 214 00:17:55,492 --> 00:17:57,077 உங்களை நான் அப்படி நினைக்கவில்லை. 215 00:17:57,160 --> 00:17:59,162 போ! 216 00:17:59,663 --> 00:18:01,415 நீ அந்த கப்பலில் ஏறி 217 00:18:01,498 --> 00:18:03,292 இந்த கேடுகெட்ட இடத்தைவிட்டு போக வேண்டும்! 218 00:18:04,793 --> 00:18:06,128 நான் போக மாட்டேன்! 219 00:18:06,211 --> 00:18:07,462 சொல்வதைக் கேள்! 220 00:18:08,630 --> 00:18:09,923 போ. 221 00:18:12,134 --> 00:18:13,927 என்றைக்கும் திரும்பி வந்துவிடாதே. 222 00:18:14,428 --> 00:18:15,429 ஒருபோதும்! 223 00:18:18,056 --> 00:18:19,057 நான் மறுக்கிறேன். 224 00:18:21,977 --> 00:18:23,854 உங்களை விட்டு போக மாட்டேன். 225 00:18:32,362 --> 00:18:33,906 உன்னை மீண்டும் பார்க்க விரும்பவில்லை, கேட்டதா? 226 00:18:34,656 --> 00:18:37,409 நீ உன் சொந்தக் காலில் நில்! இங்கிருந்து போய்விடு! 227 00:18:42,873 --> 00:18:43,916 அப்பா! 228 00:18:45,042 --> 00:18:46,418 இப்போதிருந்து... 229 00:18:48,921 --> 00:18:50,839 உன் மனதில் இருந்து என்னை தூக்கி எறிந்துவிடு. 230 00:18:53,967 --> 00:18:55,969 அதுதான் உனக்கு நல்லது. 231 00:19:01,850 --> 00:19:03,769 அதுதான் ஒரே வழி. 232 00:19:26,124 --> 00:19:27,793 நில். நீ அதை பார்க்க வேண்டாம். 233 00:19:41,932 --> 00:19:45,644 கடனை அடைக்கும் வரை இங்கே வேலை செய்கிறேன். 234 00:19:48,647 --> 00:19:50,023 இதற்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை. 235 00:19:51,984 --> 00:19:53,277 அவனை போக விடுங்கள். 236 00:19:59,241 --> 00:20:01,159 எவ்வளவு மணி நேரம் ஆனாலும் நான் வேலை செய்கிறேன். 237 00:20:01,243 --> 00:20:02,661 எனக்கு சம்பளம் கூட தர வேண்டாம். 238 00:20:04,496 --> 00:20:07,583 ஆனால் என் மகன் இதில் ஒரு அங்கமாக இருக்கக்கூடாது. 239 00:20:10,210 --> 00:20:11,628 நீ என்னிடமிருந்து திருடிவிட்டாய், 240 00:20:12,296 --> 00:20:16,884 நான் ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என நினைக்கிறாய்? 241 00:20:19,219 --> 00:20:23,682 இந்த உலகில், நீ எப்படி பார்க்கப்படுகிறாய் என்பதுதான் எல்லாமே. 242 00:20:24,183 --> 00:20:27,561 இப்படிப்பட்ட அவமானம் என்னைப் பின்தொடரும். 243 00:20:28,353 --> 00:20:30,606 என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. 244 00:20:31,106 --> 00:20:33,650 நான் கவலைப்படுவதெல்லாம் என் மகனைப் பற்றித்தான். 245 00:20:34,234 --> 00:20:38,322 அவன் பயிற்றுவிக்கும் குடும்பம் அவனை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறது. 246 00:20:40,324 --> 00:20:42,534 என்னை சாகச் சொன்னால் கூட நான் செத்துவிடுவேன்! 247 00:20:42,618 --> 00:20:44,119 ஆனால் அவனுக்கு இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. 248 00:20:44,203 --> 00:20:45,287 தயவுசெய்து, அவனை அப்படியே விட்டுவிடுங்கள். 249 00:20:45,370 --> 00:20:47,414 இந்தக் கடனை நான்தான் அடைக்க வேண்டும். 250 00:20:48,582 --> 00:20:49,583 முதலாளி! 251 00:20:50,292 --> 00:20:51,418 அப்பா. 252 00:20:52,753 --> 00:20:53,754 எழுந்திருங்கள், அப்பா 253 00:20:54,838 --> 00:20:56,048 ஜென்டா. 254 00:21:04,806 --> 00:21:07,184 ஒரு அப்பாவின் அன்பு உன்னதமானது. 255 00:21:08,143 --> 00:21:09,853 நானே ஒரு அப்பாதான். 256 00:21:11,730 --> 00:21:13,232 அது வெறும் மாயையாக இருந்தாலும் கூட 257 00:21:13,732 --> 00:21:17,152 உயர் மட்டத்தில் இருக்கும் மனிதன் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். 258 00:21:21,698 --> 00:21:26,411 தாராள மனப்பான்மை அதிக சக்தி வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். 259 00:21:31,041 --> 00:21:34,336 நீங்கள் எவ்வளவு தூரம் தாராள மனப்பான்மையுடன் செயல்படுகிறாய் என்று பார்ப்போம், சிறுவனே. 260 00:21:38,131 --> 00:21:39,550 என்ன... 261 00:21:44,805 --> 00:21:47,182 வெளியே போ! ஹான்சு, ஓடு! 262 00:21:50,269 --> 00:21:51,311 ஹான்சு! 263 00:22:04,032 --> 00:22:05,158 ஹான்சு! 264 00:22:08,203 --> 00:22:09,329 ஹான்சு! 265 00:22:17,421 --> 00:22:18,630 ஹான்சு. 266 00:22:18,714 --> 00:22:20,007 ஹான்சு! 267 00:22:21,842 --> 00:22:23,218 ஹான்சு! 268 00:22:29,558 --> 00:22:33,520 12:10 PM 269 00:23:55,227 --> 00:23:58,313 சுயநினைவுக்கு வா! நகரு! 270 00:23:58,397 --> 00:23:59,690 உயர்ந்த இடத்துக்கு போ! 271 00:24:01,024 --> 00:24:03,902 நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்படலாம். ஓடு! 272 00:24:09,491 --> 00:24:10,701 இந்த வழியாக! 273 00:24:30,762 --> 00:24:32,931 நாம் காத்திருக்க வேண்டும். 274 00:24:49,948 --> 00:24:52,159 நிஜமாகவே அதைச் செய்திருப்பீர்களா? 275 00:24:54,286 --> 00:24:55,871 என் அப்பாவை கொன்றிருப்பீர்களா? 276 00:24:57,623 --> 00:24:59,333 அவருடைய மரியாதைக்காக, 277 00:25:00,209 --> 00:25:02,753 அவர் செலுத்த வேண்டிய கடன் இருந்தது. 278 00:25:05,506 --> 00:25:07,716 ஆனால் அவருக்கு கிடைத்த மரணம்... 279 00:25:12,763 --> 00:25:14,264 இங்கு வந்ததிலிருந்து, 280 00:25:16,141 --> 00:25:21,855 என் அப்பா எத்தனையோ அவமானங்களைச் சகித்துக்கொண்டதை நான் பார்க்க நேர்ந்தது. 281 00:25:24,733 --> 00:25:27,945 அவரை அப்படியே விட்டுவிட்டு வருவது எனக்கு… 282 00:25:38,539 --> 00:25:42,125 எனக்காக வேலை செய்வது உன் அப்பாவுக்கு அவமானமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 283 00:25:43,460 --> 00:25:45,629 எனவே அவருடைய தியாகத்தை வீணாக்காதே. 284 00:25:46,338 --> 00:25:47,422 நீ என்ன செய்ய வேண்டும் என்பது உனக்கே தெரியும். 285 00:25:50,926 --> 00:25:53,178 உன்னுடைய அந்த அமெரிக்க குடும்பத்தைப் பின்தொடரு, நான் சொல்வதைக் கேட்கிறாயா? 286 00:25:53,846 --> 00:25:56,348 இதையெல்லாம் மறந்துவிடு, அவரையும் கூட. 287 00:26:02,271 --> 00:26:04,147 எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 288 00:26:04,731 --> 00:26:06,441 அவர் என் அப்பா. 289 00:26:06,525 --> 00:26:08,777 -எனக்கு இருந்ததெல்லாம் அவர்தான்! -எழுந்திரு! 290 00:26:11,488 --> 00:26:12,823 நன்றாகப் பார்! 291 00:26:15,742 --> 00:26:17,578 இன்று நீ மட்டும் பாதிக்கப்படவில்லை. 292 00:26:18,954 --> 00:26:21,415 இன்று எண்ணற்ற புதிய அனாதைகள் உருவாகியிருக்கிறார்கள். 293 00:26:22,624 --> 00:26:24,251 ஆனால் இது போன்ற சமயங்களில், 294 00:26:24,960 --> 00:26:26,920 ஒரு மனிதன் தன் விதியை உருவாக்குகிறான். 295 00:26:28,422 --> 00:26:30,507 கஷ்டப்பட்டு முன்னேறுபவர்கள் இருப்பார்கள், 296 00:26:32,426 --> 00:26:34,845 அதோடு தங்கள் துயரங்களிலேயே மூழ்கிக்கிடப்பவர்களும் இருப்பார்கள். 297 00:26:37,639 --> 00:26:39,433 அந்த முட்டாள்களில் ஒருவனாக இருக்காதே. 298 00:26:41,810 --> 00:26:43,187 நான் என் குடும்பத்தைத் தேடப் போகிறேன். 299 00:26:43,270 --> 00:26:44,771 நீ கிளம்பு. 300 00:26:45,355 --> 00:26:47,107 அந்தப் புதிய வாழ்க்கையைப் பெறு. 301 00:27:10,631 --> 00:27:11,924 ஹான்சு? 302 00:27:12,007 --> 00:27:13,008 ஆண்ட்ரூ. 303 00:27:14,510 --> 00:27:16,470 உன்னை பார். என் கடவுளே. 304 00:27:17,596 --> 00:27:18,931 உன் அப்பா எங்கே? 305 00:27:21,099 --> 00:27:22,267 ஹான்சு. 306 00:27:23,018 --> 00:27:24,353 அது பெரிய துயரம். 307 00:27:25,604 --> 00:27:27,356 நீ எங்களுடன் வருகிறாய், இல்லையா? 308 00:27:28,899 --> 00:27:30,609 தெரிந்துகொள், நாங்கள் திரும்பி வர மாட்டோம். 309 00:27:32,486 --> 00:27:33,779 நானும் வருகிறேன். 310 00:27:35,239 --> 00:27:36,907 இதையெல்லாம் ஏற்றி முடியுங்கள். 311 00:27:37,699 --> 00:27:41,286 ஆண்ட்ரூ, வெள்ளி மெழுகுவர்த்தி தண்டு. அது பணியாளரின் சரக்கறையில் உள்ளது. 312 00:27:42,538 --> 00:27:44,289 அவன் வீட்டிற்குள் போகக்கூடாது. 313 00:27:44,373 --> 00:27:46,208 அவன் வேகமாக வந்துவிடுவான். இல்லையா? 314 00:27:46,959 --> 00:27:48,627 இதை ஒரு கை பிடி. 315 00:27:51,713 --> 00:27:53,048 பொறு. 316 00:28:07,980 --> 00:28:09,439 ஆம், நாம் போக வேண்டும். 317 00:28:11,400 --> 00:28:12,776 திரு. ஹோம்ஸ்? 318 00:28:12,860 --> 00:28:14,111 அவர்... 319 00:28:14,194 --> 00:28:17,197 படகை தயார் செய்ய முன்பே சென்றார். நாங்கள் உடனே கப்பலேறி புறப்படுகிறோம். 320 00:28:17,281 --> 00:28:18,866 வண்டியை இங்கேயே விடுங்கள். 321 00:28:18,949 --> 00:28:20,742 சாலைகள், அவை அழிந்துவிட்டன. 322 00:28:20,826 --> 00:28:22,953 பிறகு எப்படி கடலுக்குச் செல்வோம்? 323 00:28:26,290 --> 00:28:29,126 -இல்லை, நாம் அங்கு போகக்கூடாது. -அதுதான் ஒரே வழி. 324 00:28:31,712 --> 00:28:33,380 வண்டியை மறந்துவிடு. 325 00:28:34,256 --> 00:28:35,757 சாலைகள் எல்லாம் அழிந்துவிட்டன. 326 00:28:36,717 --> 00:28:38,302 உங்கள் குடும்பங்களைக் கண்டுபிடியுங்கள். 327 00:29:45,244 --> 00:29:47,079 -அம்மா? -ஆண்ட்ரூ! 328 00:29:48,413 --> 00:29:50,666 -அம்மா! -திருமதி. ஹோம்ஸ்! 329 00:29:54,586 --> 00:29:56,338 அம்மா! ஹான்சு! 330 00:29:56,421 --> 00:29:57,422 ஆண்ட்ரூ! 331 00:30:18,360 --> 00:30:20,362 அம்மா, சீக்கிரம்! இந்த வழியாக! ஓடுங்கள்! 332 00:31:21,840 --> 00:31:23,175 நீங்கள். 333 00:31:39,024 --> 00:31:45,572 8:48 PM 334 00:33:24,630 --> 00:33:26,089 என்ன? 335 00:33:46,401 --> 00:33:48,654 நீ என்ன செய்கிறாய்? 336 00:34:25,440 --> 00:34:26,817 நீங்கள் இப்போது வெளியே வரலாம். 337 00:34:27,525 --> 00:34:29,235 இனி மறைந்திருக்க வேண்டியதில்லை. 338 00:34:30,279 --> 00:34:31,362 இப்போது வெளியே வா. 339 00:34:32,197 --> 00:34:34,241 நான் இங்கே இருக்கிறேன். 340 00:34:39,996 --> 00:34:40,998 தயவுசெய்து உட்காருங்கள். 341 00:34:49,172 --> 00:34:51,007 மது ஏதாவது இருக்கிறதா? 342 00:34:51,091 --> 00:34:55,012 துரதிர்ஷ்டவசமாக, நிலநடுக்கத்தில் எல்லாம் மண்ணில் சிந்திவிட்டது. 343 00:34:55,094 --> 00:34:57,181 தேநீர் கிடைக்கும். 344 00:35:54,947 --> 00:35:57,407 உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருந்ததா? 345 00:35:58,575 --> 00:36:03,288 என்னால் வீட்டிற்குப் போக முடியவில்லை. கோயிலுக்கு அருகிலிருந்த பாலம் இடிந்துவிட்டது. 346 00:36:05,582 --> 00:36:07,876 அதோடு ஸ்டேஷனுக்குப் பின்னால் உள்ள சாலைகள் தீயில் எரிகின்றன. 347 00:36:09,753 --> 00:36:12,923 நான் பூங்காவின் பாலத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது இங்கே வந்தேன். 348 00:36:15,259 --> 00:36:18,846 ஆனால் நாம் இந்த சாலையில் இருந்தால், நான் அவர்களை அடைய முடியும். 349 00:36:20,597 --> 00:36:21,932 அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். 350 00:36:34,236 --> 00:36:36,655 என்ன? என்ன நடந்தது? 351 00:36:37,823 --> 00:36:40,868 நேகிஷி சிறையிலிருந்து நிறைய சிறைவாசிகள் தப்பித்திருக்கிறார்கள். 352 00:36:41,577 --> 00:36:44,538 தப்பிச் சென்றவர்களில் முன்னூறு கொரிய கைதிகளும் அடங்குவார்கள். 353 00:36:45,122 --> 00:36:47,374 இப்போது அவர்கள் இந்த வழியாக வருகிறார்கள். 354 00:36:47,457 --> 00:36:51,295 அவர்கள் தப்பிக்க சில காலமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். 355 00:36:51,378 --> 00:36:54,798 இப்போது அவர்கள் நிலநடுக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். 356 00:36:54,882 --> 00:36:56,717 அவர்கள் என்ன செய்வார்கள்? 357 00:36:56,800 --> 00:36:58,510 எரித்து கொல்வார்களா? 358 00:36:59,094 --> 00:37:02,931 அவர்கள் என்ன பிரச்சினையை ஏற்படுத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும். 359 00:37:03,015 --> 00:37:05,017 நம் பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் இருக்கிறார்கள். 360 00:37:05,100 --> 00:37:07,186 இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? 361 00:37:07,269 --> 00:37:08,854 அமைதியாக இரு. 362 00:37:10,814 --> 00:37:12,858 நீங்கள் கேட்டீர்கள்தானே? கொரிய கும்பல் ஒன்று தப்பித்திருக்கிறது! 363 00:37:13,442 --> 00:37:17,446 அவர்கள் இங்கு நடந்து வர பல மணிநேரம் ஆகும்... 364 00:37:17,529 --> 00:37:19,615 அவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். 365 00:37:19,698 --> 00:37:22,951 பெண்ணே, இதையெல்லாம் எங்கே கேள்விப்பட்டாய்? 366 00:37:23,035 --> 00:37:25,954 -நீங்கள் யார்? -கேள்வி கேட்பவர். இப்போது பதில் சொல். 367 00:37:27,039 --> 00:37:29,166 கிணற்றின் தண்ணீரைக் குடிக்காதீர்கள். 368 00:37:29,249 --> 00:37:31,126 அதில் கொரியர்கள் விஷம் கலந்துவிட்டதாக சொல்கிறார்கள். 369 00:37:31,210 --> 00:37:32,711 ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்து. 370 00:37:32,794 --> 00:37:35,088 வா. என் குடும்பத்தை நான் கண்டுபிடிக்க வேண்டும். 371 00:37:36,381 --> 00:37:38,217 நன்றி. நான் உனக்கு என்ன தரவேண்டும்? 372 00:37:38,300 --> 00:37:40,052 இன்று, எதுவும் வேண்டாம். 373 00:37:45,641 --> 00:37:49,186 ஏதோ நடக்கிறது. அருகிலேயே இரு. 374 00:37:55,359 --> 00:37:57,569 அவர் அவர்களில் ஒருவர். அவரை எப்படி நம்புவது? 375 00:37:57,653 --> 00:37:59,780 எங்களுக்கு உதவுங்கள்! 376 00:37:59,863 --> 00:38:01,490 கொட்டகையின் உரிமையாளரை எனக்குத் தெரியும். 377 00:38:01,573 --> 00:38:03,075 கொட்டகைக்குச் செல்லுங்கள். 378 00:38:03,158 --> 00:38:05,410 அவர் உங்களை அங்கே ஒளிந்துகொள்ள அனுமதிப்பார். 379 00:38:05,911 --> 00:38:07,996 வேகமாக! சீக்கிரம்! 380 00:38:08,080 --> 00:38:10,290 -அவர் என்ன சொல்கிறார்? -அவருக்கு உரிமையாளரை தெரியுமாம். 381 00:38:10,791 --> 00:38:12,167 கொட்டகைக்குள் போகச் சொன்னார். சீக்கிரம்! 382 00:38:21,718 --> 00:38:23,512 நீயும் அவர்களுடன் ஒளிந்து கொள்ள வேண்டும். 383 00:38:24,680 --> 00:38:26,807 நேரமில்லை. வண்டியில் ஏறு! 384 00:38:28,225 --> 00:38:29,518 சீக்கிரம்! 385 00:38:37,943 --> 00:38:39,862 அசையாதே. மூச்சு கூட விடாதே. 386 00:38:46,285 --> 00:38:48,537 -சீக்கிரம்! -அவர்களைத் தேடு! 387 00:38:51,039 --> 00:38:53,834 நான்கு பேர் இந்த வழியாக ஓடி வந்தார்கள். அவர்கள் எங்கே போனார்கள்? 388 00:38:55,586 --> 00:38:56,753 அவர்கள் என்ன செய்தார்கள்? 389 00:38:56,837 --> 00:38:59,756 கொரியர்கள் நகரம் முழுவதும் கலவரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். 390 00:38:59,840 --> 00:39:00,924 இன்னும் இருக்கிறது. 391 00:39:01,550 --> 00:39:04,553 இடிந்த வீடுகளுக்குள் சென்று, மதிப்புள்ள பொருட்களை திருடுகிறார்களாம். 392 00:39:04,636 --> 00:39:06,930 அவர்களைப் பிடிக்க வேண்டும், இல்லையென்றால் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். 393 00:39:09,224 --> 00:39:10,976 அந்த விலங்குகள். 394 00:39:13,103 --> 00:39:14,813 அவர்கள் நம்மிடம் இதைச் செய்ய எவ்வளவு தைரியம்? 395 00:39:15,564 --> 00:39:17,649 அவர்களை உள்ளே அனுமதித்தோம், 396 00:39:18,233 --> 00:39:20,152 அவர்களுக்கு வேலை கொடுத்தோம், 397 00:39:20,986 --> 00:39:22,738 அதற்கு இதைத்தான் நாம் பெறுகிறோம். 398 00:39:22,821 --> 00:39:25,407 அவர்களைப் பார்த்தீர்களா இல்லையா? சொல்லுங்கள். 399 00:39:25,490 --> 00:39:26,575 அவர்கள் தப்பித்துவிடுவார்கள். 400 00:39:28,619 --> 00:39:30,454 ஆம், நாங்கள் அவர்களைப் பார்த்தோம். 401 00:39:31,371 --> 00:39:33,207 நான்கு பேர். 402 00:39:42,090 --> 00:39:43,217 அந்த வழியாக போனார்கள்! 403 00:39:45,636 --> 00:39:46,803 வாருங்கள் போகலாம்! 404 00:39:48,555 --> 00:39:50,015 அங்கு என்ன இருக்கிறது? 405 00:39:52,100 --> 00:39:53,519 வெறும் கொட்டகைதான். 406 00:39:55,437 --> 00:39:57,814 உரிமையாளர் இல்லாதது நல்லது. 407 00:39:57,898 --> 00:40:02,611 ஆனால் அவர் திரும்பி வரும்போது இந்த குழப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைவார். 408 00:40:09,409 --> 00:40:10,452 அதை சோதனை செய்யுங்கள். 409 00:40:12,412 --> 00:40:15,541 முதியவர் சொன்னது கேட்கவில்லையா? அவர்கள் அந்த வழியில் செல்லவில்லை என்றார். 410 00:40:17,292 --> 00:40:19,294 நீங்கள் பார்க்காதபோது அவர்கள் பதுங்கியிருக்கலாம். 411 00:40:20,003 --> 00:40:21,588 அவர்கள் தந்திரக்காரர்கள். 412 00:40:25,676 --> 00:40:27,928 கண்டுபிடித்துவிட்டேன்! அவர்கள் இங்கே இருக்கிறார்கள்! 413 00:40:28,428 --> 00:40:29,513 போகலாம்! 414 00:40:35,102 --> 00:40:36,812 அதை கொளுத்துங்கள்! 415 00:40:51,034 --> 00:40:52,202 நாம் போக வேண்டும். 416 00:40:53,370 --> 00:40:54,621 உன்னால் எதுவும் செய்ய முடியாது. 417 00:40:54,705 --> 00:40:56,331 உன்னையும் தூக்கி தீயில் எறிவார்கள். 418 00:41:50,636 --> 00:41:55,098 2:12 AM 419 00:42:16,787 --> 00:42:18,413 அவர்களில் சிலரை எனக்குத் தெரியும். 420 00:42:30,759 --> 00:42:31,969 அப்பா! 421 00:42:39,685 --> 00:42:42,896 காத்திருந்தோம், பிறகு இறந்துவிட்டீர்கள் என்று நினைத்தோம். 422 00:42:43,605 --> 00:42:47,150 நீங்கள் நினைத்திருப்பீர்கள். 423 00:42:47,901 --> 00:42:49,236 உங்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறேன். 424 00:42:49,319 --> 00:42:51,822 இப்படிப்பட்ட நேரத்தில் கூட எப்படி கேலி செய்ய தோன்றுகிறது? 425 00:42:55,450 --> 00:42:56,869 ஏனென்றால் நாம் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம். 426 00:43:17,764 --> 00:43:20,309 ஹான்சு, வா. 427 00:43:26,440 --> 00:43:28,358 கொஞ்ச காலத்துக்கு நாம் இவனை கவனித்துக்கொள்வோம். 428 00:43:32,529 --> 00:43:34,865 நீ இன்னும் உன் அப்பாவின் கடனை அடைக்க வேண்டும். 429 00:45:41,575 --> 00:45:43,076 செப்டம்பர் 1, 1923 அன்று, 430 00:45:43,160 --> 00:45:47,623 கான்டோ பகுதியில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 431 00:45:49,666 --> 00:45:54,546 100,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின, 432 00:45:56,465 --> 00:45:58,175 ஜப்பானிய பயங்கரவாதிகளால் ஏற்பட்ட 433 00:45:58,258 --> 00:46:00,928 அழிவுகளுக்குப் பலியாக்கப்பட்ட 434 00:46:01,011 --> 00:46:02,846 அப்பாவி கொரியர்கள் உட்பட. 435 00:46:05,098 --> 00:46:09,686 கொலை செய்யப்பட்ட கொரியர்களின் சரியான எண்ணிக்கை சர்ச்சைக்குரியது... 436 00:46:12,022 --> 00:46:17,402 ஆனால் பல வரலாற்றாசிரியர்கள் உயிரிழப்புகள் பல ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்கின்றனர். 437 00:46:25,869 --> 00:46:27,829 மின் ஜின் லீயின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 438 00:47:37,858 --> 00:47:39,860 வசனத் தமிழாக்கம் அருண்குமார்