1 00:00:09,426 --> 00:00:12,930 ஒசாகா 1938 2 00:00:17,809 --> 00:00:21,021 (ஜப்பானிய மொழியில்) நான் என்ன செய்தாலும், அதேதான் நடக்கிறது. 3 00:00:21,104 --> 00:00:23,565 அவர்கள் எப்போதும் என்னிடம் வம்பு செய்கிறார்கள். 4 00:00:23,649 --> 00:00:25,567 ஹேய், பயந்தாங்கொள்ளியாக இருக்காதே! 5 00:00:25,651 --> 00:00:26,818 சங்கடமாக இருக்கிறது. 6 00:00:27,444 --> 00:00:30,948 ஆனால் கண்ணீரை அடக்க முடியவில்லை. 7 00:00:31,031 --> 00:00:32,824 அடுத்த முறை, அழுவது அவர்களாகத்தான் இருப்பார்கள். 8 00:00:32,908 --> 00:00:36,537 எப்போதும் அப்படிதான் சொல்கிறாய், ஆனால் நாம் ஒருபோதும் வெல்வதில்லை. 9 00:00:38,539 --> 00:00:41,250 ஏனென்றால் நீ எப்போதும் பின்வாங்கிவிடுகிறாய்! 10 00:00:41,333 --> 00:00:43,585 உன்னிடம் சொன்னேனே, இப்படி… 11 00:00:44,837 --> 00:00:46,004 (கொரிய மொழியில்) நோவா! 12 00:00:47,589 --> 00:00:50,133 வருகிறேன்! இன்று எனக்கு பார்ட்டி இருக்கிறது. 13 00:00:50,217 --> 00:00:53,387 உன் அத்தை செய்த அரிசி இனிப்பு பலகாரத்தைக் கொண்டு வர மறக்காதே! 14 00:00:53,470 --> 00:00:54,721 அப்பா! 15 00:00:56,974 --> 00:00:58,725 நகரு! பூண்டின் துர்நாற்றம் வீசுகிறது. 16 00:01:04,397 --> 00:01:06,024 நோவா, இப்படி இருக்காதே. 17 00:01:06,608 --> 00:01:10,112 இன்றைய கொண்டாட்டம் உன் தம்பியைப் பற்றியது மட்டும் அல்ல. 18 00:01:12,656 --> 00:01:14,074 நீ புரிந்துகொள்ள வேண்டும், 19 00:01:14,157 --> 00:01:17,494 நீண்ட காலமாக, எங்கள் குழந்தைகளில் பலர் தங்கள் முதல் வயதுக்கு முன்பே இறந்துவிடுவார்கள். 20 00:01:18,161 --> 00:01:20,247 இந்த கொண்டாட்டம், நம் எல்லோருக்குமானது. 21 00:01:20,747 --> 00:01:21,874 தெரியவில்லை. 22 00:01:21,957 --> 00:01:24,835 எப்போதும் அவன்தான் முக்கியம் என்பது போலவே உணர்கிறேன். 23 00:01:27,337 --> 00:01:28,422 நோவா, 24 00:01:29,006 --> 00:01:30,799 நீ இப்போது அண்ணனாகிவிட்டாய். 25 00:01:30,883 --> 00:01:33,385 உன் தம்பி பல விஷயங்களுக்கு உன்னை நம்பி இருப்பான். 26 00:01:33,468 --> 00:01:36,305 ஆனால் சத்தியமாக எனக்கும் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்ததா? 27 00:01:40,225 --> 00:01:42,853 அப்படிப்பட்ட விஷயத்தைப் பற்றி நான் எப்படி பொய் சொல்வேன்? 28 00:01:44,354 --> 00:01:46,148 நம்மிடம் அப்போது வசதியில்லை, 29 00:01:46,231 --> 00:01:47,941 ஆனால் ஒருபோதும் உன் தேவைகளில் குறைவைக்கவில்லை. 30 00:01:48,025 --> 00:01:49,902 அதற்காக உன் அம்மாவிற்கு நீ நன்றி சொல்ல வேண்டும். 31 00:01:49,985 --> 00:01:52,905 நான் சிகப்பு நூலை தான் எடுத்தேன் என்று நிச்சயமாக தெரியுமா? 32 00:01:52,988 --> 00:01:55,490 அது எங்களை எவ்வளவு சந்தோஷப்படுத்தியது என்று உனக்குத் தெரியாது. 33 00:01:55,574 --> 00:01:58,035 ஆனால் எனக்கு அது ஒரு அற்புதமான எதிர்காலம் அல்ல, இல்லையா? 34 00:01:59,578 --> 00:02:02,080 நான் ஏன் வில்லையும் அம்பையும் எடுக்கவில்லை? 35 00:02:02,164 --> 00:02:03,165 நோவா, 36 00:02:04,041 --> 00:02:07,294 என்னை நம்பு, நீண்ட வாழ்க்கையை பரிகசிக்க எதுவுமில்லை. 37 00:02:08,002 --> 00:02:11,173 மொஸாசு நாணயங்களை எடுப்பது நல்லது. 38 00:02:11,256 --> 00:02:14,927 அவன் நிறைய சாப்பிடுவான், எனவே அவன் பணக்காரனாக இருக்க வேண்டும். 39 00:02:15,719 --> 00:02:18,555 அப்பா, ஏன் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்? நான் தீவிரமாக சொல்கிறேன். 40 00:02:18,639 --> 00:02:20,349 நீங்கள் அதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். 41 00:02:40,369 --> 00:02:43,121 எங்கள் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாட வந்த எல்லோருக்கும் நன்றி. 42 00:02:43,914 --> 00:02:46,583 நீங்கள் பார்ப்பதைப் போலவே, அவன் நன்றாக வளர்கிறான். 43 00:02:47,918 --> 00:02:49,419 கடவுள் எங்களை நன்றாக ஆசீர்வதித்திருக்கிறார். 44 00:02:52,256 --> 00:02:54,383 இந்த பாரம்பரிய டோல்ஜாபி 45 00:02:54,967 --> 00:02:59,721 எங்களை உங்கள் அனைவருடனும், முன்பு வந்தவர்களுடனும் ஒன்றாக பிணைக்கிறது... 46 00:02:59,805 --> 00:03:01,974 பேசியது போதும். 47 00:03:02,558 --> 00:03:05,477 உன் பிரசங்கத்திற்கு கொஞ்சம் மீதம் வை. 48 00:03:06,061 --> 00:03:10,190 என் மகனின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள என் அண்ணன் ஆர்வமாக இருக்கிறான். 49 00:03:10,274 --> 00:03:11,608 நான் எப்படி அதை மறுக்க முடியும்? 50 00:03:13,569 --> 00:03:17,614 மொஸாசு தனது விதியை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 51 00:03:17,698 --> 00:03:19,700 அவனுக்காக நான் எடுக்க முடியாதா? 52 00:03:23,203 --> 00:03:26,790 மொஸாசு, எடு! 53 00:04:36,652 --> 00:04:38,403 மின் ஜின் லீ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 54 00:05:19,486 --> 00:05:20,612 எனவே, 55 00:05:21,196 --> 00:05:23,156 அது வருகிறது. 56 00:05:24,992 --> 00:05:26,076 மரணம். 57 00:05:28,620 --> 00:05:30,414 உங்களை அதற்காக தயார் செய்வேன். 58 00:05:37,045 --> 00:05:41,967 அவள்… அதிக வலியில் இருக்கிறாளா? 59 00:05:42,050 --> 00:05:44,386 அவள் எங்களிடம் சொல்வதில். 60 00:05:46,805 --> 00:05:47,806 ஆம். 61 00:05:48,515 --> 00:05:49,808 பயங்கரமான வலியில். 62 00:05:51,435 --> 00:05:53,187 அவளுக்கு மார்ஃபின் கொடுக்கலாம். 63 00:05:53,937 --> 00:05:55,522 ஆனால் நான் அவளுடைய வலியை 64 00:05:55,606 --> 00:05:59,401 குறைக்கத் தேவையான மருந்தின் அளவை உங்களிடம் தெரிவிக்க வேண்டும், 65 00:06:00,068 --> 00:06:01,695 அவள் உடல் ரீதியாக நம்மோடு இருப்பார், 66 00:06:01,778 --> 00:06:04,948 ஆனால் சுயநினைவு இருக்காது. 67 00:06:07,451 --> 00:06:10,662 இல்லை. அவள் அப்படி இருப்பதை நான் விரும்பவில்லை. 68 00:06:10,746 --> 00:06:13,290 ஆனால் எட்சுகோ, ஹனாவிற்கு எது சிறந்தது... 69 00:06:13,373 --> 00:06:16,960 இதில் தலையிடாதே! 70 00:06:26,553 --> 00:06:28,805 மெதுவாக போ! 71 00:06:28,889 --> 00:06:30,265 நீங்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வீர்கள், 72 00:06:30,349 --> 00:06:32,643 உங்களை தரையில் இருந்துதான் நாங்கள் தூக்க வேண்டும். 73 00:06:32,726 --> 00:06:35,812 இங்கே இப்போது பலர் இருக்கின்றனர். 74 00:06:35,896 --> 00:06:36,939 அம்மா! 75 00:06:37,856 --> 00:06:39,191 அம்மா! 76 00:06:41,068 --> 00:06:42,986 என்ன விஷயம்? அடிபட்டுவிட்டதா? 77 00:06:43,070 --> 00:06:44,613 கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்தேன். 78 00:06:45,531 --> 00:06:47,199 ஏன் அவர் வரவில்லை? 79 00:06:48,283 --> 00:06:49,409 என்ன சொல்கிறாய்? 80 00:06:49,493 --> 00:06:51,537 உன் அப்பா உன்னை பள்ளியில் இருந்து அழைத்து வர வில்லையா? 81 00:06:53,664 --> 00:06:54,998 அம்மா, பாருங்கள். 82 00:06:55,082 --> 00:06:56,416 ஏதோ நடக்கிறது. 83 00:06:59,044 --> 00:07:03,257 நகருங்கள். தயவுசெய்து நகருங்கள். 84 00:07:03,924 --> 00:07:05,801 அங்கே சோதனை செய்தீர்களா? 85 00:07:05,884 --> 00:07:08,345 அவர் ஒரு தேச துரோகி என்கிறார்கள். 86 00:07:12,808 --> 00:07:13,892 திருமதி. பேக்! 87 00:07:17,145 --> 00:07:18,605 என் கணவர் எங்கே? 88 00:07:21,483 --> 00:07:23,068 அவர் கைதாகி இருக்கிறார். 89 00:07:23,777 --> 00:07:25,028 கைதா? 90 00:07:25,654 --> 00:07:26,822 எதற்காக? 91 00:07:26,905 --> 00:07:29,366 அவர்கள் சொல்லவில்லை. 92 00:07:29,950 --> 00:07:32,911 குற்றத்தின் தன்மை மிகவும் தீவிரமானது என்பதால். 93 00:07:32,995 --> 00:07:34,371 இப்போது அவர் எங்கிருக்கிறார்? 94 00:07:34,454 --> 00:07:36,874 அவரை உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரிக்கிறார்கள். 95 00:07:37,541 --> 00:07:39,751 அவர்கள் இவரை வேறு யாரோ என்று தவறாக நினைத்திருக்க வேண்டும். 96 00:07:41,003 --> 00:07:42,963 அவரை உடனடியாக பார்க்க வேண்டும். 97 00:07:43,046 --> 00:07:44,131 மகளே, சொல்வதைக் கேள். 98 00:07:44,214 --> 00:07:48,302 இங்கு வந்தவர்கள் குறிப்பாக இசாக்கைத் தேடி வந்திருக்கிறார்கள். 99 00:07:49,011 --> 00:07:50,679 அப்படியென்றால் என்ன அர்த்தம் தெரியுமா? 100 00:07:51,680 --> 00:07:54,850 அவரை யாரோ காட்டிக்கொடுத்து இருக்கிறார்கள். 101 00:07:55,934 --> 00:07:58,353 நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும், 102 00:07:59,021 --> 00:08:00,606 நீ பிரார்த்தனை செய்ய வேண்டும். 103 00:08:05,235 --> 00:08:06,361 நோவா, 104 00:08:06,445 --> 00:08:08,447 உன் பெரியப்பாவை கண்டுபிடி. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வா. 105 00:08:09,031 --> 00:08:10,032 உன்னால் அதை செய்ய முடியுமா? 106 00:08:10,866 --> 00:08:11,867 இப்போதே போ. 107 00:08:24,213 --> 00:08:25,506 நிகோ நிகோ ஒசாகா ஜப்பான் 108 00:08:40,187 --> 00:08:41,855 நோவா, இங்கே என்ன செய்கிறாய்? 109 00:08:41,938 --> 00:08:44,775 -நீங்கள் வர வேண்டும்! அப்பா கைதாகி இருக்கிறார். -கைதா? 110 00:08:44,858 --> 00:08:47,194 -அவன் கைதாகி இருக்கிறானா? -அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 111 00:08:47,277 --> 00:08:48,737 இப்போது அம்மா அங்கிருக்கிறார். 112 00:08:49,321 --> 00:08:50,739 என் முதலாளியிடம் சொல்ல வேண்டும். 113 00:08:52,616 --> 00:08:54,076 இங்கேயே இரு. 114 00:09:06,171 --> 00:09:07,506 ஒரு மணிநேரம் இருக்கிறது. 115 00:09:09,049 --> 00:09:10,467 உன் அப்பாவை வெளியே கொண்டு வருவோம். 116 00:09:12,678 --> 00:09:14,388 இது எனக்குப் புரியவில்லை. 117 00:09:16,265 --> 00:09:17,474 இது எப்படி சாத்தியம்? 118 00:09:18,475 --> 00:09:21,311 நீதான் ஒப்பந்தத்தை முடித்தாய். 119 00:09:21,395 --> 00:09:23,188 அவர்கள் ஏன் உன்னை பணிநீக்கம் செய்தார்கள்? 120 00:09:23,272 --> 00:09:25,691 கடைசி நிமிடத்தில் அவர் மனதை மாற்றிக்கொண்டார். 121 00:09:26,817 --> 00:09:27,901 ஆனால் எதற்காக? 122 00:09:28,569 --> 00:09:30,571 நான் சொன்னேன் என்பதால். 123 00:09:31,989 --> 00:09:33,407 நீ எதற்காக அப்படி செய்தாய்? 124 00:09:33,991 --> 00:09:35,534 வேண்டுமென்றுதான். 125 00:09:40,873 --> 00:09:43,292 எனக்குப் புரியவில்லை, ஆனால் நிறுத்து. 126 00:09:44,001 --> 00:09:46,253 திரும்ப அமெரிக்கா சென்றுவிடு, புரிகிறதா? 127 00:09:46,336 --> 00:09:47,588 என்னால் போக முடியாது. 128 00:09:48,338 --> 00:09:49,756 விசா முடிந்துவிட்டது. 129 00:09:53,802 --> 00:09:55,012 நாம் என்ன செய்யப் போகிறோம்? 130 00:09:55,095 --> 00:09:58,056 அமெரிக்கா தீர்வில்லை. அதை அடைய முடியாது. 131 00:09:58,140 --> 00:09:59,516 நீ என்ன பேசுகிறாய்? 132 00:09:59,600 --> 00:10:03,896 அப்பா, இப்போது யாரும் என்னை வேலையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். 133 00:10:05,189 --> 00:10:07,858 என்னுடன் வேலை செய்யக்கூடிய ஒரே நபர் 134 00:10:07,941 --> 00:10:09,443 திரு. யோஷி தான். 135 00:10:11,820 --> 00:10:14,323 அவர் என்னை பார்க்க நேற்று வந்திருந்தார். 136 00:10:15,824 --> 00:10:17,284 நடந்ததைக் கேட்டார். 137 00:10:17,367 --> 00:10:19,244 அவர் என்ன கொடுத்தாலும் எனக்கு கவலையில்லை. 138 00:10:19,328 --> 00:10:21,330 அவனுடன் நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. 139 00:10:21,413 --> 00:10:23,332 அவர் பச்சிங்கோ பார்லர்களை திறக்க விரும்புகிறார்... 140 00:10:23,415 --> 00:10:24,666 பச்சிங்கோவா? நீயா? 141 00:10:24,750 --> 00:10:27,669 நீங்களும் பாட்டியும் இதில் எந்த அவமானமும் இல்லை என எப்போதும் சொல்வீர்கள்... 142 00:10:27,753 --> 00:10:30,047 எனக்கு, ஆம், ஆனால் என் மகனுக்கு? 143 00:10:31,423 --> 00:10:35,302 யோஷி உன்னிடம் என்ன சொல்லி இருப்பான் என்று தெரியும். 144 00:10:35,886 --> 00:10:38,597 அவை சட்டப்பூர்வமானது என்று சொல்லியிருப்பான், 145 00:10:38,680 --> 00:10:39,890 இல்லையா? 146 00:10:39,973 --> 00:10:42,100 எனக்கு எப்படித் தெரியும் தெரியுமா? 147 00:10:43,143 --> 00:10:45,687 அவனது தாத்தாவும் இதே விஷயத்தை என்னிடம் ஒருமுறை சொன்னார் என்பதால் தெரியும். 148 00:10:50,400 --> 00:10:55,405 உன்னைப் போலவே நானும் விரைவாக நிறைய சம்பாதிக்க நினைத்தேன். 149 00:10:57,241 --> 00:11:02,371 உன் அம்மாவிற்கும், பாட்டிக்கும் நன்றி சொல்ல வேண்டும், அதன் விளைவுகளால் பாதிக்கப்படவில்லை. 150 00:11:02,454 --> 00:11:05,541 அவர்கள் இல்லையென்றால், என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும். 151 00:11:06,583 --> 00:11:08,585 அது நடந்து நீண்ட காலமாகிறது. 152 00:11:08,669 --> 00:11:10,420 மாமோரு யோஷிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை... 153 00:11:10,504 --> 00:11:12,130 அவனுக்கும் அதே இரத்தம் தான்! 154 00:11:12,214 --> 00:11:14,508 தாத்தா இரத்தம்தான் பேரன் உடம்பிலும் ஓடுகிறது. 155 00:11:14,591 --> 00:11:16,260 இது அபத்தம். 156 00:11:16,343 --> 00:11:18,804 நான் இதை அனுமதிக்க மாட்டேன்! 157 00:11:18,887 --> 00:11:20,639 உலகில் உள்ள எல்லா செல்வங்களும் கிடைத்தாலும்... 158 00:11:20,722 --> 00:11:23,809 பணம், வெற்றி. அது முக்கியமில்லை என்பது போல பேசுகிறீர்கள். 159 00:11:26,144 --> 00:11:28,146 நான் சொல்ல வருவது அதுவல்ல. 160 00:11:28,230 --> 00:11:29,481 எனக்குப் புரிகிறது, 161 00:11:30,148 --> 00:11:31,233 ஆனால் உங்கள் கனவுகள், 162 00:11:32,442 --> 00:11:35,320 அவை எனக்குப் போதுமானதாக இல்லை. 163 00:11:47,791 --> 00:11:50,419 நோவா, அவர்கள் என்ன சொல்கிறார்கள்? 164 00:11:50,502 --> 00:11:55,132 அப்பாவை "போலீஸ் உயரதிகாரிகள்" விசாரிக்கிறார்களாம். 165 00:11:56,842 --> 00:12:01,096 அப்பா பலவீனமாக இருக்கிறார், அவர் சிறையிலேயே இறந்துவிடுவர் என்று சொல்கிறார். 166 00:12:12,274 --> 00:12:13,275 என்ன நடக்கிறது? 167 00:12:13,358 --> 00:12:15,527 பெரியப்பா சிக்கலில் இருக்கிறார். 168 00:12:19,114 --> 00:12:24,453 அப்பா நிரபராதி என்றால் அவர் வீட்டிற்கு வந்துவிடுவார் என்று சொல்கிறார், 169 00:12:24,536 --> 00:12:28,165 ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால்... 170 00:12:31,251 --> 00:12:33,003 இப்போது போதும் நிறுத்துங்கள் என்கிறார். 171 00:12:34,046 --> 00:12:36,798 மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். 172 00:13:00,614 --> 00:13:02,950 நான் என் முதலாளியிடம் சென்று நிலைமையை விளக்குகிறேன். 173 00:13:05,577 --> 00:13:08,705 என்னை நடத்திய விதம் குறித்து அறிந்தால் அவர் மிகவும் கோபப்படுவார். 174 00:13:08,789 --> 00:13:11,333 அப்போது அவர் நமக்கு உதவுவாரா? 175 00:13:12,000 --> 00:13:15,045 இசாக் இன்றிரவே வீட்டிற்கு வந்துவிடுவாரா? 176 00:13:15,587 --> 00:13:19,049 என் தம்பி ஒரு இரவு கூட சிறையில் தூங்கமாட்டான். 177 00:13:21,760 --> 00:13:23,637 இசாக் அங்கே இருக்கமாட்டான். 178 00:13:23,720 --> 00:13:24,847 ஒருபோதும். 179 00:13:29,893 --> 00:13:31,186 ஏன் சோகமாக இருக்கிறாய்? 180 00:13:33,105 --> 00:13:34,982 இப்போது என்ன சொன்னேன்? 181 00:13:35,065 --> 00:13:37,234 நீங்கள் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வருவீர்கள். 182 00:13:37,317 --> 00:13:40,320 நிச்சயமாக. நான் அவனை சீக்கிரம் அழைத்து வருவேன். 183 00:13:50,038 --> 00:13:51,123 மன்னிக்கவும், மேடம். 184 00:13:51,206 --> 00:13:52,916 ஒரு நிமிஷம். 185 00:13:53,000 --> 00:13:54,543 உனக்கு என்ன வேண்டும்? 186 00:13:54,626 --> 00:13:56,837 உன் கணவரையும் கைது செய்திருக்கிறார்களா? 187 00:13:57,713 --> 00:13:59,464 என்னுடைய மைத்துனரை. 188 00:13:59,548 --> 00:14:00,799 மூன்று மாதங்களுக்கு முன்பு. 189 00:14:01,341 --> 00:14:02,509 மூன்று மாதங்களா? 190 00:14:02,593 --> 00:14:05,137 அப்போதிலிருந்து அவரைப் பார்க்கவில்லையா? 191 00:14:05,679 --> 00:14:06,680 இல்லை. 192 00:14:07,431 --> 00:14:09,016 உங்கள் கணவர் எப்போது கைதானார்? 193 00:14:10,350 --> 00:14:11,852 இன்று காலை. 194 00:14:12,895 --> 00:14:15,105 ஆனால் ஒரு பெரும் தவறு நடந்திருக்கிறது. 195 00:14:15,189 --> 00:14:18,525 அவர் வெறும் பாஸ்டர் தான். அவர் அரசியலில் ஈடுபடவில்லை. 196 00:14:19,818 --> 00:14:21,778 நீங்கள் பாஸ்டர் பேக்கின் மனைவி. 197 00:14:21,862 --> 00:14:23,197 எப்படி... 198 00:14:23,697 --> 00:14:25,699 என் கணவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? 199 00:14:29,578 --> 00:14:31,163 இங்கு வேண்டாம். 200 00:14:33,415 --> 00:14:35,042 நோவா, போகலாம். 201 00:14:50,265 --> 00:14:52,809 நிஜமாக எல்லா இடங்களிலும் உளவாளிகள் இருக்கிறார்களா? 202 00:14:52,893 --> 00:14:55,562 குறிப்பாக இப்போது அவர்கள் போருக்குத் தயாராவதால். 203 00:14:55,646 --> 00:14:58,649 ஆனால் எப்பொழுதும் எங்கோ போர் நடந்து கொண்டே இருக்கிறது இல்லையா? 204 00:14:58,732 --> 00:15:00,442 அதற்கும் இதற்கும் என்ன சம்பத்தம்? 205 00:15:00,526 --> 00:15:04,321 துரதிர்ஷ்டத்தின் விளைவாக மிகவும் பாதிக்கப்படுவது நாம்தானே? 206 00:15:04,821 --> 00:15:08,075 உங்கள் கணவர் தான் அதை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். 207 00:15:10,786 --> 00:15:13,163 அப்படியென்றால், என் கணவரை உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? 208 00:15:13,247 --> 00:15:15,207 என் மைத்துனருக்கு அவரை நன்றாகத் தெரியும். 209 00:15:15,290 --> 00:15:18,210 முதலில், இங்குள்ள தொழிற்சாலைகளில் உள்ள மற்ற 210 00:15:18,293 --> 00:15:22,172 ஆண்களைப் போலவே, அவருக்கும் உங்கள் கணவர் மீது சந்தேகம் இருந்தது. 211 00:15:23,215 --> 00:15:28,053 ஆனால் பாஸ்டர் அவர்களின் நம்பிக்கையை பெற்றார், அவர்களின் அன்பையும் தான். 212 00:15:29,263 --> 00:15:33,851 எண்ணிக்கையில் சக்தி இருக்கிறது என்பதை அவர்களுக்கு போதித்தார். 213 00:15:34,685 --> 00:15:37,980 அப்படிப்பட்ட சக்தி பற்றி நாங்கள் கேட்டுப் பழகியதில்லை. 214 00:15:39,815 --> 00:15:41,859 அவர் எங்களைப் பெருமையாக உணர வைத்தார். 215 00:15:43,151 --> 00:15:44,862 என் கணவர் எல்லாவற்றையும் செய்தாரா? 216 00:15:46,071 --> 00:15:47,406 அவர்தான் செய்தார். 217 00:15:48,031 --> 00:15:50,450 நாங்கள் பசி கொடுமையில் இருந்தபோதும் கூட, 218 00:15:50,534 --> 00:15:53,495 அவரது நம்பிக்கையை உணவாக பெற்றோம். 219 00:15:54,705 --> 00:15:56,331 ஆனால் இப்போது நாங்கள் என்ன செய்வோம்? 220 00:16:04,506 --> 00:16:05,757 உனக்கு என்ன வயது? 221 00:16:06,842 --> 00:16:08,510 ஏழு. 222 00:16:10,137 --> 00:16:13,265 ஒரு பையனுக்கு அப்பா இருக்க வேண்டும். 223 00:16:15,893 --> 00:16:16,935 இப்போது வாருங்கள். 224 00:16:17,019 --> 00:16:19,021 நடந்ததை திரு. ஹசெகவாவிடம் சொல்ல வேண்டும். 225 00:16:19,605 --> 00:16:23,108 -யாரது? -உனக்கு ஹசெகவாவை தெரியாதா? 226 00:16:26,778 --> 00:16:29,323 வெளிப்படையாக, எனக்கு எதுவும் தெரியாது. 227 00:16:30,407 --> 00:16:33,368 அப்படியென்றால் நீ அவரை சந்திக்கும் நேரமிது. 228 00:16:39,958 --> 00:16:41,376 அம்மா! 229 00:16:42,961 --> 00:16:44,505 எதற்காக அவரை கைது செய்திருக்கிறார்கள்? 230 00:16:45,172 --> 00:16:46,673 எனக்குத் தெரியவில்லை. 231 00:16:47,257 --> 00:16:49,760 ஏன் என்று போலீசார் கூறவில்லை. 232 00:16:49,843 --> 00:16:52,179 பொதுவாக, எதற்காக கைது செய்கிறோம் என்று ஒருவருக்குச் சொல்வார்கள். 233 00:16:52,262 --> 00:16:55,390 உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன், திரு. ஷிமாமுரா. 234 00:16:55,891 --> 00:16:57,935 மொத்த விஷயமும் அபத்தமானது. 235 00:16:58,018 --> 00:17:00,479 என் தம்பியை அந்த தேசவிரோத நபர்களுடன் சம்பந்தப்படுத்த... 236 00:17:00,562 --> 00:17:02,648 நீ என்ன சொன்னாய்? தேசவிரோதிகள் என்றா? 237 00:17:03,148 --> 00:17:05,943 ஆம், இதில் எந்த அர்த்தமும் இல்லை, சரிதானே? 238 00:17:06,026 --> 00:17:09,363 என் தம்பி அதுபோன்ற விஷயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டான். 239 00:17:09,863 --> 00:17:13,157 இது ஒரு அரசியல் குற்றம் என்று நீ ஒருபோதும் சொல்லவில்லை. 240 00:17:14,367 --> 00:17:16,662 ஆனால் என் தம்பி நிரபராதி... 241 00:17:16,744 --> 00:17:18,789 -அதை போலீசார் நம்பமாட்டார்கள். -சத்தியம் செய்கிறேன்... 242 00:17:18,872 --> 00:17:21,708 நீ அவர் குடும்பத்தில் ஒருத்தன் என்றாய். அதைத்தான் நீ சொன்னாய். 243 00:17:23,836 --> 00:17:25,753 நீ என்னை தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளுகிறாய். 244 00:17:26,755 --> 00:17:29,383 மற்ற பணியாளர்கள் உன்னை மதிக்கிறார்கள். 245 00:17:30,008 --> 00:17:33,011 ஆனால் நீ உன் இரத்த சொந்தத்தை எதிர்க்க மாட்டாய் என்கிறார்கள். 246 00:17:34,471 --> 00:17:39,017 உன் தம்பியின் உடம்பில் ஓடும் இரத்தம் தான் உன் உடம்பிலும் ஓடுகிறது. 247 00:17:39,643 --> 00:17:43,272 தயவுசெய்து, எனக்கு இந்த வேலை வேண்டும். என் குடும்பம் என்னை நம்பியே இருக்கிறது. 248 00:17:43,856 --> 00:17:47,609 மன்னித்துவிடு, ஆனால் உன்னை வேலையிலிருந்து நீக்கத்தான் வேண்டும். 249 00:18:25,731 --> 00:18:27,065 சொல்... 250 00:18:30,569 --> 00:18:32,821 நீ எனக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும். 251 00:18:33,322 --> 00:18:35,115 என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன். 252 00:18:39,745 --> 00:18:42,623 நான் இறந்த பிறகு, 253 00:18:45,417 --> 00:18:49,922 எனக்காக என் அம்மாவை கவனித்துக்கொள். 254 00:19:02,267 --> 00:19:03,560 ஹனா. 255 00:19:08,815 --> 00:19:10,484 பயப்படுகிறாயா? 256 00:19:12,236 --> 00:19:14,196 பயப்படுகிறேன். 257 00:19:17,783 --> 00:19:22,579 என் வாழ்க்கை இப்படி முடியும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. 258 00:19:24,248 --> 00:19:25,874 இங்கே, 259 00:19:26,917 --> 00:19:29,878 இந்த கேவலமாக அறையில். 260 00:19:32,130 --> 00:19:35,467 ஆனால் ஹவாயில். 261 00:19:35,551 --> 00:19:38,929 அது ஒரு மகத்தான மரணமாக இருந்திருக்கும். 262 00:19:40,973 --> 00:19:44,017 என் பாதங்கள் கதகதப்பான மணலில் புதைந்திருக்கும் போது. 263 00:19:45,060 --> 00:19:47,938 அலைகளின் ஓசை எனக்கு ஆறுதல் அளிக்கும்போது. 264 00:19:51,275 --> 00:19:54,361 ஆனால் முடிவில் எல்லாம் ஒன்றுதான் என்று நினைக்கிறேன். 265 00:19:56,655 --> 00:19:58,782 இறப்பு விரும்பத்தகாததுதான். 266 00:20:03,912 --> 00:20:10,085 நான் ஓடிவிட்டேன், சாலமன். நான் எல்லாவற்றையும் வீணடித்தேன். 267 00:20:12,171 --> 00:20:15,674 உனக்கு அப்படி நடக்க நான் விரும்பவில்லை. 268 00:20:18,677 --> 00:20:20,095 என்னை மன்னித்துவிடு. 269 00:20:21,597 --> 00:20:23,682 நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்? 270 00:20:29,188 --> 00:20:32,149 உன்னை இங்கேயே விட்டுவிட்டேன். மன்னித்துவிடு. 271 00:20:35,444 --> 00:20:39,489 நான் முன்கூட்டியே உன்னை தேடாததற்கு மன்னித்துவிடு. 272 00:20:40,240 --> 00:20:42,951 நான் அவர்களின் விதிகளை ஏற்றுக்கொண்டேன். 273 00:20:45,787 --> 00:20:50,459 அவர்கள் என்னிடம் கேட்ட எல்லாவற்றையும் செய்தேன். 274 00:20:59,092 --> 00:21:02,262 அவர்கள் உன்னை முட்டாளாக்கிவிட்டனர், இல்லையா? 275 00:21:04,139 --> 00:21:05,432 ஆம். 276 00:21:06,016 --> 00:21:08,519 என்னை முட்டாளாக்கிவிட்டனர். 277 00:21:33,001 --> 00:21:34,711 சாலமன், 278 00:21:34,795 --> 00:21:38,674 நீ பரிதாபப்படுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. 279 00:21:38,757 --> 00:21:40,300 போதும். 280 00:21:41,468 --> 00:21:45,305 என்ன ஆனாலும் சரி, எல்லாவற்றையும் எடுத்துக்கொள். 281 00:21:46,014 --> 00:21:48,851 அவர்களுக்கு கருணை காட்டாதே. 282 00:21:50,644 --> 00:21:56,066 ஏனென்றால் அவர்கள் நமக்கு என்ன கருணை காட்டினார்கள்? 283 00:22:00,404 --> 00:22:02,239 அவர்களை விடாதே. 284 00:22:07,286 --> 00:22:09,121 எனக்காக செய். 285 00:22:20,132 --> 00:22:23,510 நம் பாஸ்டரை கைது செய்திருக்கிறார்கள். 286 00:22:29,641 --> 00:22:35,022 ஹசெகவாவும் அவரது மகளும் கைது நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து தலைமறைவாக உள்ளனர். 287 00:22:35,606 --> 00:22:39,693 சென்று, அவரிடம் பேசுங்கள். உனக்கான பதில் அவரிடம் கிடைக்கும். 288 00:22:43,280 --> 00:22:45,449 உள்ளே வர சொல்கிறார். 289 00:22:55,459 --> 00:22:58,086 நான் அப்பாவை போல இருப்பதாக சொல்கிறார். 290 00:23:09,973 --> 00:23:12,142 அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார், 291 00:23:12,226 --> 00:23:14,436 உங்களைப் பார்த்தால் சகோதரி போன்ற உணர்வு ஏற்படுவதாக சொல்கிறார். 292 00:23:15,270 --> 00:23:16,939 சரி. 293 00:23:18,023 --> 00:23:20,859 ஆனால் நீங்கள் இருவரும் எனக்கு அந்நியர்கள் தான். 294 00:23:22,277 --> 00:23:23,987 உங்களைப் பற்றி அவர் ஒருபோதும் சொன்னதில்லை. 295 00:23:32,829 --> 00:23:35,415 நாம் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள அப்பா விரும்பவில்லை. 296 00:23:45,634 --> 00:23:47,177 நம்மை காப்பாற்ற, 297 00:23:47,261 --> 00:23:49,847 அவர் தன் முகத்தை மறைக்க வேண்டியிருந்தது. 298 00:23:49,930 --> 00:23:51,849 அது போல ஏதோ சொல்கிறார். 299 00:23:52,432 --> 00:23:54,560 ஆனால் இது என்ன இடம்? 300 00:23:55,143 --> 00:23:57,396 உண்மையாக யார் நீங்கள்? 301 00:24:09,867 --> 00:24:13,036 இவர் ஒரு பேராசிரியர், அதோடு... 302 00:24:13,120 --> 00:24:18,166 ஒரு... இடதுசாரி சிந்தனையாளரோ ஏதோ? 303 00:24:33,390 --> 00:24:38,604 இவரும் அப்பாவும் பிற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றிணைக்க கனவு கண்டனர். 304 00:24:39,479 --> 00:24:43,984 அமைதிக்காகவும், நியாயமான கூலிக்காகவும் போராட. 305 00:24:45,944 --> 00:24:48,363 அப்படியென்றால் அது உண்மைதான். 306 00:24:48,906 --> 00:24:51,491 நீங்கள் இருவரும் பேரரசருக்கு எதிராக வேலை செய்திருக்கிறீர்கள். 307 00:24:57,581 --> 00:25:00,250 "பேரரசர் தான் இவர்களுக்கு எதிராக சண்டையிடுகிறார்." 308 00:25:02,419 --> 00:25:04,296 அதனால், 309 00:25:04,880 --> 00:25:07,174 இப்போது நமக்கு என்ன நடக்கும்? 310 00:25:07,257 --> 00:25:09,635 ஆண்களாகிய நீங்கள் இந்தக் கனவுகளில் மூழ்கிக்கிடக்கும் போது, 311 00:25:09,718 --> 00:25:11,220 எங்களுக்கு உணவையோ, 312 00:25:11,303 --> 00:25:13,722 என் குழந்தைகளுக்கு உடைகளையும் கொடுக்கப் போவது யார்? 313 00:25:16,808 --> 00:25:20,103 உங்களைப் பற்றி நாங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? 314 00:25:24,733 --> 00:25:27,444 அப்பா உங்களுக்காகவும் எனக்காகவும் தான் இதை செய்ததாக சொல்கிறார். 315 00:25:34,368 --> 00:25:37,120 என்னிடம் இப்படி பேச உங்களுக்கு என்ன தைரியம்? 316 00:25:38,413 --> 00:25:40,165 உங்கள் கைகளைப் பாருங்கள். 317 00:25:41,667 --> 00:25:45,879 நீங்கள் ஒருநாளும் உடல் உழைப்பு செய்ததில்லை. 318 00:25:45,963 --> 00:25:47,589 என் பயங்கள் 319 00:25:47,673 --> 00:25:50,259 அர்த்தமற்றவை என்று என்னிடம் சொல்வதற்கு நீங்கள் யார்? 320 00:25:55,389 --> 00:25:57,641 இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை. 321 00:25:57,724 --> 00:26:00,227 நாம் உன் அப்பாவை விடுவிக்க வேண்டும். 322 00:26:02,020 --> 00:26:03,355 நாம் அவரை கண்டுபிடிக்க முடியாது என்கிறார். 323 00:26:11,738 --> 00:26:13,824 இவர் பொய் சொல்கிறார்! 324 00:26:14,658 --> 00:26:16,952 அப்பா துரோகம் செய்ததால் இனி அவர் ஒருபோதும் வீட்டிற்கு வரப்போவதில்லை என்கிறார்! 325 00:26:19,288 --> 00:26:21,164 அம்மா, போலீஸ்! 326 00:26:34,136 --> 00:26:35,596 எனக்கு திருப்திதான். 327 00:26:35,679 --> 00:26:37,806 நாம் ஒன்றாக நல்ல கூட்டாளிகளாக இருப்போம். 328 00:26:38,473 --> 00:26:41,894 நான் பச்சிங்கோ குறித்து இங்கே பேச வரவில்லை. 329 00:26:43,270 --> 00:26:46,023 கோல்டன் ஹோட்டல்ஸ், இன்னமும் அவர்கள் ஆட்டத்தில் இருக்கிறார்கள். 330 00:26:59,995 --> 00:27:02,581 உன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக யூகிக்கிறேன்? அதைக் கேட்போம். 331 00:27:03,582 --> 00:27:05,334 கோல்டன் மற்றும் திரு. அபேவுக்கு இடையே, 332 00:27:05,417 --> 00:27:08,545 கிட்டத்தட்ட பத்து பில்லியன் யென்கள் ஏற்கனவே திட்டத்தில் போடப்பட்டிருக்கின்றன. 333 00:27:09,046 --> 00:27:12,132 ஆனால் சுற்றியுள்ள சொத்துக்களை சீக்கிரம் விற்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. 334 00:27:12,216 --> 00:27:14,426 அந்த முக்கியமான நிலம் கிடைக்காமல் இருக்கும்போது. 335 00:27:15,052 --> 00:27:17,721 இங்கே ஒரு வாய்ப்பு இருக்கிறது, இலாபகரமான ஒன்று. 336 00:27:18,222 --> 00:27:21,850 ஏனென்றால் அந்தப் பெண்ணின் நிலம் யாருக்குக் கிடைக்கிறதோ அவர் எதையும் கேட்கலாம். 337 00:27:21,934 --> 00:27:24,269 இப்போது அவர் உனக்கு விற்பார் என்று எது உன்னை நினைக்கவைப்பது எது? 338 00:27:24,811 --> 00:27:26,438 அவர் விற்க மாட்டார். எனக்குத் தெரியும். 339 00:27:26,522 --> 00:27:29,107 ஆனால் நீங்கள்… 340 00:27:32,236 --> 00:27:33,862 உங்களுக்கு உங்கள் வழிகள் உள்ளன, இல்லையா? 341 00:27:37,241 --> 00:27:38,450 நீங்கள் அவரை விற்க வைக்கலாம். 342 00:27:39,201 --> 00:27:41,078 கோல்டன் மற்றும் திரு. அபேவுக்கு விற்பதை நான் கையாள்வேன். 343 00:27:42,579 --> 00:27:45,332 அதற்காக அவர்களை நிறைய பணம் கொடுக்க வைப்பேன். அதுதான் விஷயம். 344 00:27:53,340 --> 00:27:54,424 எல்லாவற்றையும் யோசித்துவிட்டாயா? 345 00:27:55,801 --> 00:27:57,386 இரண்டு வருடங்களில், அந்த நிலமெல்லாம் இப்போது 346 00:27:57,469 --> 00:28:00,389 உள்ளதை விட நான்கில் ஒரு பங்கு மதிப்புள்ளதாக மாறும் என்று நான் சொன்னால்? 347 00:28:00,472 --> 00:28:01,765 வாய்ப்பில்லை. 348 00:28:02,349 --> 00:28:04,893 அங்கிருக்கும் எல்லாவற்றுக்கும் என்ன அடமானமாக வைப்பதாக நினைக்கிறாய்? 349 00:28:04,977 --> 00:28:06,645 பொதுவாக வேறு சில நிறுவன சொத்துக்கள். 350 00:28:09,606 --> 00:28:12,943 வங்கிகள் அந்த நிலத்தையே அடமானமாக எடுத்துக்கொண்டதாக நான் சொன்னால்? 351 00:28:13,944 --> 00:28:15,279 அது பைத்தியக்காரத்தனம். 352 00:28:16,113 --> 00:28:17,531 இருந்தாலும், அது உண்மைதான். 353 00:28:18,156 --> 00:28:19,867 எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. 354 00:28:19,950 --> 00:28:23,453 எதுவும் மாறாது என்ற பேராசையில் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வதில் பரபரப்பாக இருக்கிறார்கள். 355 00:28:24,580 --> 00:28:25,747 ஆனால் அது நடக்கும். 356 00:28:26,331 --> 00:28:30,752 முதல் வங்கி கடனை திருப்பிக் கேட்டவுன், அது எல்லாம் அழிவுக்கு வரும். 357 00:28:35,966 --> 00:28:37,551 எனவே நாம் விரைந்து செயல்படுவது நல்லது. 358 00:28:56,445 --> 00:28:58,363 இன்னொரு விஷயம் இருக்கிறது. 359 00:28:59,281 --> 00:29:02,492 ஆனால் இது தனிப்பட்ட விஷயம். 360 00:29:03,660 --> 00:29:06,914 ஒரு நண்பருக்காக ஒன்று செய்ய விரும்புகிறேன். 361 00:29:10,042 --> 00:29:14,004 நீ ஓரிரு நாட்களில் 362 00:29:14,087 --> 00:29:17,549 எப்படி இருக்கிறது என்று பார்க்க காத்திருக்க விரும்பவில்லையா? 363 00:29:22,888 --> 00:29:23,931 அந்த வழியில்... 364 00:29:24,014 --> 00:29:25,599 அம்மா. 365 00:29:27,601 --> 00:29:33,315 நான் குணமாகவில்லை. 366 00:29:36,860 --> 00:29:41,073 நான் மிகவும்... சோர்வாக இருக்கிறேன். 367 00:29:45,744 --> 00:29:49,581 நான் நிரந்தர தூக்கத்திற்கு தயாராக இருக்கிறேன். 368 00:30:06,765 --> 00:30:09,351 நான் மருத்துவரிடம் சென்று சொல்கிறேன். 369 00:30:12,396 --> 00:30:13,689 அம்மா. 370 00:30:25,534 --> 00:30:28,078 எனக்குத் தெரியும். 371 00:30:30,122 --> 00:30:31,456 எனக்குத் தெரியும். 372 00:30:42,092 --> 00:30:43,677 எனக்குப் புரியவில்லை. 373 00:30:43,760 --> 00:30:45,304 எல்லாம் எப்படி தவறாகப் போனது? 374 00:30:46,680 --> 00:30:50,017 தைரியமாக இரு. உன்னை நினைத்து வருத்தப்படாதே. 375 00:30:50,100 --> 00:30:51,518 இது இன்னும் முடியவில்லை. 376 00:30:52,060 --> 00:30:53,854 ஆனால் அம்மா… 377 00:30:54,479 --> 00:30:56,315 ஒரு பெண் செத்துக்கொண்டிருக்கிறாள். 378 00:30:56,398 --> 00:30:58,066 கொஞ்சம் கவனமாக யோசி. 379 00:30:58,150 --> 00:30:59,860 எனக்குத் தெரியும், 380 00:30:59,943 --> 00:31:02,070 ஆனால் உங்களுக்கு கவலை இல்லையா? 381 00:31:02,154 --> 00:31:04,615 இத்தனை வருடங்களுக்குப் பிறகு 382 00:31:04,698 --> 00:31:07,034 அவர்கள் ஏன் மீண்டும் நம் வாழ்வில் நுழைகிறார்கள்? 383 00:31:08,619 --> 00:31:10,746 சாலமன் நல்ல பையன். 384 00:31:11,705 --> 00:31:12,706 அவனை சரியாக வளர்த்தோம்... 385 00:31:12,789 --> 00:31:14,791 ஆனால் நோவா சரியாக வளர்க்கப்படவில்லையா? 386 00:31:14,875 --> 00:31:16,293 அவனுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். 387 00:31:18,086 --> 00:31:23,050 நாம் அவர்களை நேசிப்பதால் நமக்கு அவர்களைப் பற்றி தெரியும் என்று அர்த்தமல்ல. 388 00:31:29,139 --> 00:31:31,558 ஜப்பானின் தொழிலாளர் சங்கங்களின் பொதுக்குழுவுடன் 389 00:31:31,642 --> 00:31:34,228 உன் கணவரின் ஈடுபாடு பற்றி உனக்குத் தெரியுமா? 390 00:31:34,978 --> 00:31:35,979 அது என்ன? 391 00:31:43,278 --> 00:31:47,533 அரசுக்கு எதிரான இலக்கியம் எதையாவது படித்தோ அல்லது எழுதியோ இருக்கிறாயா? 392 00:31:47,616 --> 00:31:49,576 நான்… 393 00:31:52,663 --> 00:31:55,874 எனக்கு எழுத படிக்க தெரியாது. 394 00:32:04,007 --> 00:32:09,388 பேரரசருக்கு எதிரான கருத்து கொண்ட கூட்டங்களுக்கு போயிருக்கிறாயா? 395 00:32:10,347 --> 00:32:12,140 நான் கூட்டத்திற்கு சென்றதில்லை. 396 00:32:12,224 --> 00:32:14,726 இன்று வரை இதுபோன்ற வார்த்தைகளை கூட நான் கேட்டதே இல்லை. 397 00:32:19,189 --> 00:32:22,276 இருந்தாலும் நீ ஓரு கிளர்ச்சியாளரை திருமணம் செய்திருக்கிறாய். 398 00:32:27,197 --> 00:32:29,533 எனக்குத் தெரிந்து அவர்... 399 00:32:31,368 --> 00:32:33,495 ஒரு கணவன், 400 00:32:33,579 --> 00:32:35,289 ஒரு அப்பா, 401 00:32:35,372 --> 00:32:36,957 ஒரு போதகர்… 402 00:32:40,627 --> 00:32:42,546 நல்ல மனிதர். 403 00:32:51,597 --> 00:32:53,515 மன்னித்துவிடுங்கள். 404 00:32:54,975 --> 00:32:57,227 இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று தெரியவில்லை. 405 00:32:58,812 --> 00:32:59,813 அம்மா? 406 00:32:59,897 --> 00:33:03,025 நான் சாலமனுக்கு அப்படி நடக்க விடுவேன் என்று நினைக்கிறாயா? 407 00:33:03,108 --> 00:33:04,860 உனக்குப் பைத்தியமா? 408 00:33:08,238 --> 00:33:10,449 சாலமன் உன் சகோதரன் இல்லை. 409 00:33:10,991 --> 00:33:13,243 அப்போது நடந்ததை, 410 00:33:14,161 --> 00:33:17,247 மீண்டும் நடக்க விடமாட்டேன். 411 00:33:50,280 --> 00:33:52,241 வா போகலாம். 412 00:34:07,130 --> 00:34:09,007 இது விரைவில் வேலை செய்யும். 413 00:34:10,634 --> 00:34:12,219 ஐந்து முதல் பத்து நிமிடங்களில். 414 00:34:12,761 --> 00:34:14,263 தேவைப்பட்டால், என்னை அழையுங்கள். 415 00:34:16,849 --> 00:34:19,810 என்னைப் பார்த்தாலே என் நோய் உனக்கு வந்துவிடாது. 416 00:34:21,770 --> 00:34:23,938 அவள் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. 417 00:34:30,654 --> 00:34:33,614 ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மருந்து வேலை செய்வதை உணர்வீர்கள். 418 00:34:34,408 --> 00:34:36,159 அப்போது நான் உங்களை சரிபார்க்கிறேன், 419 00:34:36,243 --> 00:34:38,620 ஆனால் ஏதாவது தேவைப்பட்டால், இதை அழுத்துங்கள். 420 00:34:39,288 --> 00:34:41,123 நான் உடனே வந்துவிடுவேன். 421 00:34:41,915 --> 00:34:43,292 வேறு ஏதாவது வேண்டுமா? 422 00:34:44,458 --> 00:34:45,710 நன்றி. 423 00:34:50,757 --> 00:34:52,801 சாலமன்… 424 00:34:52,885 --> 00:34:53,886 அவன் எங்கே? 425 00:35:01,351 --> 00:35:03,187 அவன் எப்போது வருவான்? 426 00:35:23,123 --> 00:35:24,333 நோவா. 427 00:35:25,459 --> 00:35:26,460 அப்பா! 428 00:35:27,503 --> 00:35:29,129 -நோவா! -போதும்! 429 00:35:31,548 --> 00:35:33,467 -அப்பா! -வாயை மூடு! 430 00:35:33,550 --> 00:35:35,594 -நோவா! -அப்பா! 431 00:35:35,677 --> 00:35:37,554 என் அப்பாவை விடுங்கள்! 432 00:35:40,224 --> 00:35:41,225 நோவா! 433 00:35:41,892 --> 00:35:45,020 அப்பா! 434 00:35:46,980 --> 00:35:50,025 என் தந்தையை கூட்டிப் போகாதீர்கள்! அவர் எங்களை விட்டு போக முடியாது! 435 00:35:54,488 --> 00:35:57,449 அப்பா, போகாதீர்கள்! 436 00:35:57,533 --> 00:35:59,034 எங்களை விட்டு நீங்கள் போகக்கூடாது! 437 00:35:59,117 --> 00:36:00,494 அப்பா! 438 00:36:14,424 --> 00:36:15,759 அப்பா! 439 00:36:37,197 --> 00:36:42,244 ...கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகிவிட்டது கடைசி விண்கல் இவ்வளவு அருகில் வந்து. 440 00:36:42,327 --> 00:36:45,706 சூரியனை நோக்கிய அதன் பாதையில், 441 00:36:45,789 --> 00:36:51,587 இந்த விண்கல் பூமிக்கு 500,000 மைல்களுக்குள் வந்தது. 442 00:36:52,713 --> 00:36:55,841 மணிக்கு 46,000 மைல் வேகத்தில் அந்த விண்கல் பயணிப்பதாக 443 00:36:55,924 --> 00:36:58,594 விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்... 444 00:36:58,677 --> 00:37:00,846 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 445 00:37:00,929 --> 00:37:04,516 இந்த மருத்துவமனையின் இயக்குனரால் கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் உங்களிடம் உள்ளன. 446 00:37:04,600 --> 00:37:05,809 ஆம், ஆனால் நீங்கள் எப்படி... 447 00:37:05,893 --> 00:37:07,227 அது முக்கியமில்லை. 448 00:37:08,061 --> 00:37:10,147 நீ ஒரு பயணம் செய்யப்போகிறாய். தயாரா? 449 00:37:10,772 --> 00:37:13,442 -நான் போக வேண்டும். -எங்கே போகிறீர்கள்? 450 00:37:13,525 --> 00:37:14,860 நீ என்ன சொல்கிறாய்? 451 00:37:17,279 --> 00:37:18,864 கவனம்! 452 00:37:20,115 --> 00:37:23,035 அவன் என்ன செய்கிறான்? மெதுவாக! 453 00:37:23,118 --> 00:37:24,745 நீ மிக வேகமாக செல்கிறாய்! 454 00:38:07,204 --> 00:38:08,205 ஹவாய். 455 00:38:23,136 --> 00:38:24,137 அம்மா! 456 00:38:57,754 --> 00:38:59,089 அம்மா… 457 00:39:00,215 --> 00:39:02,176 தூங்கப் போகிறேன். 458 00:39:08,056 --> 00:39:09,099 இனிமையான கனவுகள். 459 00:39:10,642 --> 00:39:12,811 என் ஹானா செல்லம். 460 00:39:20,110 --> 00:39:21,612 இனிமையான கனவுகள். 461 00:40:47,281 --> 00:40:49,741 எல்லாவற்றையும் நான் இப்போது பார்த்துக்கொள்ளப் போகிறேன். 462 00:40:50,909 --> 00:40:52,327 கவலைப்படாதே. 463 00:41:53,680 --> 00:41:56,558 இந்த கடிகாரம் ஒரு சாபம் என்று நினைப்பேன். 464 00:41:58,477 --> 00:42:00,854 ஆனால் இப்போது எனக்குப் புரிகிறது, 465 00:42:02,606 --> 00:42:05,526 இந்த கடிகாரம் நம் குடும்பத்தைக் காப்பாற்றியது. 466 00:42:20,123 --> 00:42:23,043 ஒருவேளை இது உனக்கும் அதை செய்யலாம். 467 00:42:24,837 --> 00:42:26,880 அதுதான் என் நம்பிக்கை. 468 00:42:40,018 --> 00:42:41,436 6 ஆம் வகுப்பு கணிதம் சமூக அறிவியல் 469 00:43:18,891 --> 00:43:20,434 அந்த நாய்களுக்கு என்ன ஆனது? 470 00:43:21,185 --> 00:43:22,811 தூரமாக கூட்டிச் செல்! 471 00:43:22,895 --> 00:43:24,479 நீ தெருவில் எல்லோரையும் எழுப்புகிறாய். 472 00:44:05,854 --> 00:44:06,855 சுன்ஜா, 473 00:44:06,939 --> 00:44:08,232 இது என்ன? 474 00:44:12,194 --> 00:44:13,820 கிம்ச்சி செய்கிறாயா? 475 00:44:13,904 --> 00:44:15,489 ஆனால் எதற்கு இவ்வளவு? 476 00:44:16,073 --> 00:44:17,866 ஒரு பாதியை புளிக்க வைப்பேன், 477 00:44:17,950 --> 00:44:19,826 இன்னொரு பாதியை சந்தைக்கு கொண்டு போகிறேன். 478 00:44:21,245 --> 00:44:24,164 புதிய கிம்ச்சியை விரும்புபவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். 479 00:44:28,168 --> 00:44:30,170 அவர் மகிழ்ச்சியடைய மாட்டார். 480 00:44:31,421 --> 00:44:33,382 நமக்கு என்ன வழி இருக்கிறது? 481 00:44:42,724 --> 00:44:44,810 தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள். 482 00:44:50,816 --> 00:44:52,693 எனக்கு வேறு வேலை கிடைக்கும் என்று நீ நினைக்கவில்லையா? 483 00:44:53,485 --> 00:44:55,237 அதற்காகத்தான் இது, இல்லையா? 484 00:44:56,738 --> 00:44:59,491 நீ தெரிந்துகொள்ள சொல்கிறேன், டயர் தொழிற்சாலையில் வேலை இருப்பதாக அறிந்தேன். 485 00:44:59,992 --> 00:45:01,910 நிச்சயமாக, உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியும். 486 00:45:01,994 --> 00:45:04,955 சுன்ஜா இதை தற்காலிகமாகத்தான் செய்கிறாள் என்று உறுதியாக நம்புகிறேன் 487 00:45:06,456 --> 00:45:09,293 அவமரியாதை செய்யவில்லை. நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 488 00:45:09,877 --> 00:45:12,296 ஆனால் நமக்கு பணம் வருவது நின்றுவிட்டது, 489 00:45:12,379 --> 00:45:14,882 சில நாட்களில் நமது சேமிப்பு தீர்ந்துவிடும். 490 00:45:15,674 --> 00:45:17,676 நான் இப்போது பையன்களைப் பற்றி யோசிக்க வேண்டும். 491 00:45:17,759 --> 00:45:19,344 நான் நினைக்கவில்லை என்று நினைக்கிறாயா? 492 00:45:19,428 --> 00:45:21,889 என் தம்பி எங்கோ சிறையில் இருக்கிறான் என்பது எனக்கு வலி 493 00:45:21,972 --> 00:45:23,557 ஏற்படுத்துகிறது என நீ நினைக்கவில்லையா? 494 00:45:25,392 --> 00:45:27,144 சிறையில் இருக்கிறான்! 495 00:45:31,899 --> 00:45:35,819 நான் பிச்சை எடுத்தாலும், கடன் வாங்கினாலும், அந்தச் சிறுவர்கள் பசியால் வாட மாட்டார்கள். 496 00:45:36,320 --> 00:45:38,071 என் வீட்டில் அது நடக்காது. 497 00:45:39,615 --> 00:45:41,867 அப்படியானால் நான் உங்களுக்கு உதவுகிறேன். 498 00:45:43,577 --> 00:45:45,829 ஏனென்றால் நான் ஏதாவது செய்யவில்லை என்றால்… 499 00:45:48,040 --> 00:45:50,709 இந்த இயலாமையை என்னால் தாங்க முடியாது. 500 00:46:33,335 --> 00:46:35,379 ஏன் வருத்தமாக இருக்கிறாய்? 501 00:46:37,297 --> 00:46:39,716 நீ பள்ளிக்குச் செல்லவில்லையா? 502 00:46:44,429 --> 00:46:46,098 நான் உன் வயதில் இருந்தபோது, 503 00:46:46,890 --> 00:46:49,101 எங்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. 504 00:46:51,353 --> 00:46:55,274 இது ஒரு பாக்கியம். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே. 505 00:46:56,859 --> 00:46:58,443 நீங்கள் யார்? 506 00:47:00,445 --> 00:47:01,697 நீ ஏன் இந்த வழியாகப் போகிறாய்? 507 00:47:01,780 --> 00:47:03,574 குறுக்குவழி ஒன்று இருக்கிறதே. 508 00:47:04,241 --> 00:47:07,035 என் பள்ளி எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 509 00:47:07,619 --> 00:47:09,204 எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். 510 00:47:10,080 --> 00:47:12,082 அதுதான் என்னைக் காப்பாற்றுகிறது. 511 00:47:13,500 --> 00:47:15,502 அதை நினைவில் கொள். 512 00:47:19,423 --> 00:47:21,884 என் அப்பாவுக்கு இந்த வழி பிடிக்கும். 513 00:47:22,551 --> 00:47:24,344 ஏன்? 514 00:47:24,428 --> 00:47:28,432 தெருவின் முடிவில் ஒரு வயதான பெண்மணி பியானோ வைத்திருக்கிறார். 515 00:47:29,183 --> 00:47:32,436 அவர் தினமும் காலையில் நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது வாசிப்பார். 516 00:47:33,353 --> 00:47:36,106 என் அப்பாவுக்கு இசையைக் கேட்பது பிடிக்கும். 517 00:47:43,238 --> 00:47:45,490 கான்டோ நிலநடுக்கம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? 518 00:47:48,035 --> 00:47:50,120 பெரியவர் கேட்கும் போது நீ பதிலளிக்க வேண்டும். 519 00:47:50,829 --> 00:47:52,039 இல்லை. 520 00:47:52,539 --> 00:47:54,208 நீ பிறப்பதற்கு முன் அது நடந்தது. 521 00:47:54,875 --> 00:47:56,710 பயங்கர நிலநடுக்கம். 522 00:47:59,588 --> 00:48:03,091 அதற்கு முன்பு, அதற்கு பின்பு என்று காலத்தை பிரிக்கும் அளவுக்கு அது மிக மோசமாக இருந்தது. 523 00:48:06,637 --> 00:48:08,222 அப்போது நானும் என் அப்பாவை இழந்தேன். 524 00:48:08,931 --> 00:48:11,642 என் அப்பா போய்விட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? 525 00:48:15,562 --> 00:48:18,315 சரி, பாதுகாப்பு. 526 00:48:20,108 --> 00:48:21,109 அது சரிதான். 527 00:48:21,193 --> 00:48:22,653 சீக்கிரம் கற்றுக்கொள்கிறாய். 528 00:48:24,154 --> 00:48:25,447 எனவே, இதைக் கற்றுக்கொள். 529 00:48:26,949 --> 00:48:28,408 நோவா, 530 00:48:29,159 --> 00:48:30,953 உயிர்பிழைப்பது மட்டும் போதாது. 531 00:48:31,537 --> 00:48:33,956 மக்கள் வேறுவிதமாகச் சொல்வார்கள், ஆனால் புறக்கணி. 532 00:48:34,748 --> 00:48:35,958 அதைப்பற்றி யோசி. 533 00:48:36,583 --> 00:48:38,627 கரப்பான் பூச்சிகள் கூட உயிர்பிழைக்கும். 534 00:48:39,211 --> 00:48:41,296 அது நமக்கு போதுமானதாக இருக்க வேண்டுமா? 535 00:48:52,474 --> 00:48:54,935 உன்னை சுற்றியுள்ள எல்லோரையும் விட சிறப்பாக இரு. 536 00:48:56,937 --> 00:48:59,439 கொரியர்களை மட்டுமல்ல, ஜப்பானியர்களை விடவும் கூட. 537 00:48:59,523 --> 00:49:02,234 உனக்கு வேண்டியதை அவர்களால் மறுக்க முடியாத அளவுக்கு நன்றாக இரு. 538 00:49:02,317 --> 00:49:03,819 தவறு செய்யாதே. 539 00:49:06,196 --> 00:49:08,740 நீ எழுச்சி பெறுவதை அவர்கள் வெறுப்பார்கள். 540 00:49:10,117 --> 00:49:13,579 ஆனால் அவர்கள் வெறுப்புடன் இருந்தாலும், உன்னை மதிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. 541 00:49:14,955 --> 00:49:16,999 நான் சொல்வது புரிகிறதா? 542 00:49:18,500 --> 00:49:19,877 ஆம். 543 00:49:21,753 --> 00:49:22,838 இன்னொரு விஷயம். 544 00:49:23,422 --> 00:49:24,965 கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்காதே. 545 00:49:26,008 --> 00:49:27,593 எதிர்காலம். 546 00:49:28,719 --> 00:49:30,554 எப்போதும் எதிர்காலத்தில் கவனம் செலுத்து. 547 00:49:46,820 --> 00:49:49,364 இப்போது பள்ளிக்குச் செல், வருத்தத்தோடு இருப்பதை நிறுத்து. 548 00:49:49,448 --> 00:49:51,033 நாளை, குறுக்குவழியில் செல். 549 00:49:51,909 --> 00:49:53,994 முட்டாள்கள்தான் வேறு வழியை தேர்ந்தெடுப்பார்கள். 550 00:49:55,996 --> 00:49:57,539 நோவா, 551 00:49:58,749 --> 00:50:00,000 ஒரு முட்டாளாக வாழாதே. 552 00:50:19,603 --> 00:50:22,064 நீ தனியாக செல்வதை நான் விரும்பவில்லை. 553 00:50:23,273 --> 00:50:26,360 யார் மொஸாசுவைப் பார்த்துக்கொள்வார்கள் அல்லது இரவு உணவைத் தயார் செய்வார்கள்? 554 00:50:27,110 --> 00:50:28,529 கவலை வேண்டாம். 555 00:50:28,612 --> 00:50:29,738 நான் நன்றாக இருப்பேன். 556 00:50:35,410 --> 00:50:36,245 நீ, 557 00:50:36,328 --> 00:50:39,748 இன்று குறும்பு செய்யக்கூடாது, புரிகிறதா? 558 00:50:44,461 --> 00:50:47,339 இவன் முகத்தைப் பார்க்கும்போது, இதுதான் எல்லாவற்றிலும் கடினமானது என்று நினைக்கிறேன். 559 00:50:47,422 --> 00:50:50,092 ஆனால் நீ இவனுக்காக இதைச் செய்தாய் என்பதை அறிந்தே வளர்வான். 560 00:50:50,175 --> 00:50:52,636 இவருடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு இவனை வளர்த்தார் என்று. 561 00:51:18,245 --> 00:51:19,288 வழிவிடுங்கள். 562 00:51:19,371 --> 00:51:20,414 வழிவிடுங்கள். 563 00:51:22,040 --> 00:51:23,333 மன்னியுங்கள். 564 00:51:26,378 --> 00:51:27,379 வழிவிடுங்கள். 565 00:51:30,716 --> 00:51:31,925 நீ என்ன செய்வதாக நினைக்கிறாய்? 566 00:51:32,009 --> 00:51:33,427 அதை தள்ளு! 567 00:51:34,678 --> 00:51:38,015 போ. இங்கிருந்து போ! அந்த நாற்றத்தால் வாடிக்கையாளர்களை விரட்டிவிடுவாய். 568 00:51:38,098 --> 00:51:39,141 சீக்கிரம் இங்கிருந்து போ! 569 00:51:39,808 --> 00:51:41,852 மன்னியுங்கள். இதுதான் எனது முதல் நாள். 570 00:51:48,192 --> 00:51:49,526 இங்கே நிறுத்த முயற்சிக்காதே! 571 00:51:49,610 --> 00:51:51,486 உன் நாற்றமடிக்கும் வண்டியை இங்கிருந்து தள்ளு! 572 00:51:51,570 --> 00:51:55,157 என் மகன் அதில் சிறுநீர் கழிக்க வேண்டுமா? 573 00:52:24,269 --> 00:52:25,270 வழிவிடுங்கள். 574 00:52:25,854 --> 00:52:27,231 வழிவிடுங்கள். 575 00:52:29,942 --> 00:52:31,109 வழிவிடுங்கள். 576 00:52:32,361 --> 00:52:35,197 இளம்பெண்ணே, இங்கே வா! 577 00:52:38,075 --> 00:52:39,076 இங்கே வா. 578 00:52:43,664 --> 00:52:45,415 நீ இங்கே விற்கலாம். 579 00:52:46,208 --> 00:52:48,919 நன்றி! தயவுசெய்து மீண்டும் வாருங்கள். 580 00:52:49,837 --> 00:52:51,380 வந்து பாருங்கள்! 581 00:52:51,463 --> 00:52:53,966 ஒன்றின் விலைக்கு இரண்டு! 582 00:52:54,675 --> 00:52:56,218 தயவுசெய்து மீண்டும் வாருங்கள். 583 00:52:58,804 --> 00:53:01,807 வந்து பாருங்கள்! எங்களிடம் உலர்ந்த இறைச்சிகள் இருக்கின்றன! 584 00:53:02,850 --> 00:53:03,976 வரவேற்கிறோம்! 585 00:53:04,059 --> 00:53:05,602 தயவுசெய்து, வந்து சுவைத்துப் பாருங்கள். 586 00:53:09,606 --> 00:53:13,193 கிம்ச்சி. புதிய கிம்ச்சி! 587 00:53:13,277 --> 00:53:15,028 வந்து சுவைத்துப் பாருங்கள். 588 00:53:16,905 --> 00:53:19,283 நகரத்திலேயே கம்மி விலையில்! 589 00:54:03,911 --> 00:54:07,706 கிம்ச்சி! புதிய கிம்ச்சி விற்பனைக்கு! 590 00:54:07,789 --> 00:54:09,208 சுவைத்துப் பாருங்கள்! 591 00:54:13,962 --> 00:54:16,340 கொஞ்சம் கிம்ச்சி எப்படி? 592 00:54:16,423 --> 00:54:20,219 இப்போதுதான் செய்தது! சுவைத்துப் பாருங்கள்! 593 00:54:31,146 --> 00:54:33,649 எப்போதாவது கிம்ச்சி சாப்பிட்டிருக்கிறீர்களா? 594 00:54:33,732 --> 00:54:37,277 இப்போதுதான் செய்தது! சுவைத்துப் பாருங்கள்! 595 00:54:37,945 --> 00:54:40,822 கொஞ்சம் கிம்ச்சி எப்படி? மலிவானது, உண்மையிலேயே! 596 00:54:40,906 --> 00:54:44,743 ஒருமுறை. சுவைத்துப் பாருங்கள்! 597 00:54:46,036 --> 00:54:47,371 கொஞ்சம் கிம்ச்சி எப்படி? 598 00:54:47,454 --> 00:54:49,456 நகரத்திலேயே சுவையான கிம்ச்சி! 599 00:54:51,250 --> 00:54:53,794 கிம்ச்சி எப்படி? 600 00:54:53,877 --> 00:54:55,921 இன்றைக்கு சிறப்பு விலையில்! 601 00:54:56,630 --> 00:54:59,341 கிம்ச்சி! புதிய கிம்ச்சி! 602 00:54:59,424 --> 00:55:01,009 தயவுசெய்து, சுவைத்துப் பாருங்கள்! 603 00:55:01,093 --> 00:55:02,177 ஒசாகாவிலேயே சிறந்த கிம்ச்சி! 604 00:55:05,347 --> 00:55:07,349 நன்றி! 605 00:55:07,891 --> 00:55:10,269 எப்போதாவது கிம்ச்சி சாப்பிட்டிருக்கிறீர்களா? 606 00:55:10,352 --> 00:55:13,188 இப்போதுதான் செய்தது! சுவைத்துப் பாருங்கள்! 607 00:55:13,897 --> 00:55:16,400 வந்து சுவைத்துப் பாருங்கள்! 608 00:55:16,483 --> 00:55:18,151 நகரிலேயே சுவையான கிம்ச்சி! ஏமாற்றமடைய மாட்டீர்கள்! 609 00:55:18,235 --> 00:55:19,903 சுவைத்துப் பாருங்கள். 610 00:55:20,988 --> 00:55:23,240 நகரத்திலேயே சுவையான கிம்ச்சி! 611 00:55:23,323 --> 00:55:26,410 உலகின் சிறந்த கிம்ச்சி! வாருங்கள்! சுவைத்துப் பாருங்கள்! 612 00:55:35,460 --> 00:55:37,963 உலகின் சிறந்த கிம்ச்சி! 613 00:55:38,839 --> 00:55:40,757 என் அம்மாவின் பிரத்தியோக செய்முறை! 614 00:55:40,841 --> 00:55:42,968 இது என் நாட்டின் உணவு! 615 00:55:54,438 --> 00:55:59,985 காலனித்துவ ஆட்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரியர்கள் ஜப்பானுக்கு குடிபெயர்ந்தனர். 616 00:56:03,405 --> 00:56:06,575 அவர்களில் சுமார் 8,00,000 பேர் ஜப்பானிய அரசாங்கத்தால் 617 00:56:06,658 --> 00:56:09,703 தொழிலாளர்களாக இங்கே அழைத்து வரப்பட்டனர். 618 00:56:12,664 --> 00:56:15,626 இரண்டாம் உலகப் போரின் முடிவில் பெரும்பான்மையானவர்கள் 619 00:56:15,709 --> 00:56:17,753 தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பினர். 620 00:56:20,964 --> 00:56:26,386 ஆனால் சுமார் 6,00,000 பேர் அங்கேயே இருந்து நாடற்ற மக்களாக ஆனார்கள். 621 00:56:29,348 --> 00:56:33,352 இவை அந்த பெண்களின் கதைகளுள் சில. 622 00:56:36,563 --> 00:56:40,150 அவர்கள் சகித்துக்கொண்டு நிலைத்திருக்கிறார்கள். 623 00:56:49,117 --> 00:56:52,496 ஜப்பான் 2021 624 00:56:59,044 --> 00:57:03,006 எனக்கு 18 வயது இருக்கும் போது நான் இங்கு வந்தேன் என்று நினைக்கிறேன். 625 00:57:03,090 --> 00:57:04,341 ஹாங் சா-சுல் 626 00:57:04,424 --> 00:57:07,761 எனக்கு அப்போது 13 வயது. 627 00:57:08,262 --> 00:57:10,389 படகில் வந்தோம். 628 00:57:11,139 --> 00:57:12,975 விமானத்தில் அல்ல. 629 00:57:13,058 --> 00:57:14,268 யி ஹாங்-டல் 630 00:57:16,061 --> 00:57:19,064 இதிலிருக்கும் எனக்கு 22 வயது, நான் இளமையாக இருக்கிறேன். 631 00:57:19,982 --> 00:57:23,318 எனக்கு திருமணம் ஆன பிறகு நான் ஜப்பான் வந்தபோது எனக்கு 20 வயது. 632 00:57:23,402 --> 00:57:25,571 நான் கொரியாவிலிருந்து இங்கு தனியாக வந்தேன். 633 00:57:25,654 --> 00:57:27,531 நான் தனியாக இருந்தேன். 634 00:57:27,614 --> 00:57:28,615 யூ சக் நாம் 635 00:57:28,699 --> 00:57:32,452 நான் அழுதுகொண்டே இருந்தேன். நிறைய அழுதேன். 636 00:57:33,954 --> 00:57:39,543 இங்கு 11 வயதில் வந்து 13 வயதில் வேலை செய்ய ஆரம்பித்தேன். 637 00:57:40,252 --> 00:57:45,716 நான் சோகத்தோடு வளர்ந்தேன். 638 00:57:45,799 --> 00:57:47,092 சு நாம்-சன் 639 00:57:47,176 --> 00:57:50,721 அதனால் மற்றவர்களிடம் கருணை காட்டுவது எனக்கு கடினமானது. 640 00:57:50,804 --> 00:57:53,348 அதற்குக் காரணம் நான் வளர்ந்த விதமோ என்று 641 00:57:53,432 --> 00:57:57,936 எனக்கு வியப்பாக இருக்கிறது. 642 00:57:59,354 --> 00:58:01,857 இங்கு வந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன். 643 00:58:03,275 --> 00:58:07,696 அவற்றைப் பற்றி இப்போது சிந்திக்க எனக்குப் பிடிக்கவில்லை, உங்களுக்கே தெரியும்... 644 00:58:08,906 --> 00:58:10,282 ஐம் யோங்-கில் 645 00:58:10,365 --> 00:58:13,118 நான் பல விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேன். 646 00:58:13,744 --> 00:58:16,038 இறந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். 647 00:58:16,121 --> 00:58:17,122 கிம் யோங்-ரே 648 00:58:17,206 --> 00:58:20,209 நான் சிறுமியாக இருந்தேன். 649 00:58:20,292 --> 00:58:22,586 அது போரின் போது. 650 00:58:22,669 --> 00:58:29,676 இராணுவ போலீஸ் வந்து நீண்ட முடி வைத்திருந்தவர்களின் 651 00:58:29,760 --> 00:58:33,889 ஜடையைப் பிடித்தது இழுத்துச் சென்றார்கள். 652 00:58:33,972 --> 00:58:35,933 அவர்கள் அப்படி செய்வதைப் பார்த்திருக்கிறேன். 653 00:58:36,016 --> 00:58:37,017 காங் பன்-டூ 654 00:58:37,100 --> 00:58:40,938 சாப்பிடுவதற்கு கொஞ்சம் முட்டைக்கோஸ் இருந்தாலே எங்கள் அதிர்ஷ்டம். 655 00:58:41,021 --> 00:58:47,277 ஆனால், அவை எல்லாம் பேரரசருக்கு சொந்தம் என்பதால், அதை கொடுக்கும்படி கட்டளையிடுவார்கள். 656 00:58:47,361 --> 00:58:51,240 உங்களுக்குச் சொந்தமான எதுவும் நிஜமாகவே உங்களுக்குச் சொந்தமானது அல்ல. 657 00:58:51,323 --> 00:58:55,202 அதனால் நாங்கள் எல்லோரும் கிம்ச்சி சாப்பிட்டோம். 658 00:58:55,285 --> 00:58:57,412 எங்களிடம் சாப்பிட எதுவும் இருக்காது, 659 00:58:57,496 --> 00:59:00,082 அதனால் நாங்கள் அதிகம் கிம்ச்சியைத்தான் சாப்பிட்டோம். 660 00:59:00,666 --> 00:59:02,626 எங்கள் தட்டுகளில் மிகக் குறைவான உணவுகளே இருந்தன, 661 00:59:02,709 --> 00:59:04,336 அதனால் நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்டதே கிடையாது. 662 00:59:04,419 --> 00:59:05,420 ரி சாங்-வோன் 663 00:59:05,504 --> 00:59:09,258 எங்கள் கிண்ணங்களை தலைகீழாக கவிழ்த்து ஏதாவது மீதம் இருக்கிறதா என்று பார்ப்போம். 664 00:59:09,341 --> 00:59:11,844 அப்படித்தான் நாங்கள் வாழ்ந்தோம். 665 00:59:11,927 --> 00:59:14,221 இப்போது வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதாக இருக்கிறது. 666 00:59:15,472 --> 00:59:18,600 என்னால் ஜப்பானிய மொழியில் பேச முடியவில்லை. 667 00:59:18,684 --> 00:59:20,853 அதனால் மிகவும் கஷ்டப்பட்டேன். 668 00:59:21,728 --> 00:59:24,147 இதைச் சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை, 669 00:59:24,231 --> 00:59:29,736 ஆனால் எனது பிள்ளைகளால் கொரியாவில் வாழ முடியவில்லை. 670 00:59:29,820 --> 00:59:33,490 எனவே அவர்கள் ஜப்பானிய சமுதாயத்தோடு இணைவதை நான் உறுதி செய்தேன். 671 00:59:34,366 --> 00:59:36,994 ஜப்பானில் வாழ பழகிவிட்டீர்களா? 672 00:59:37,077 --> 00:59:38,287 வரலாற்றாசிரியர் ஜாக்கி கிம்-வாச்சுட்காவின் குரல் 673 00:59:38,787 --> 00:59:41,248 நான் இப்போது பழகிவிட்டேன். 674 00:59:41,915 --> 00:59:43,750 அது கடினமாக இருந்தது. 675 00:59:46,753 --> 00:59:48,589 இப்போது இதுதான் என் சொந்த ஊர். 676 00:59:49,298 --> 00:59:54,052 என்னால் கொரியா செல்ல முடியாது. என்னால் என் நாட்டிற்கு செல்ல முடியாது. 677 00:59:54,136 --> 00:59:57,014 எனவே இப்போது இதுதான் என் சொந்த ஊர். 678 00:59:59,308 --> 01:00:01,351 அதெல்லாம் ஒரு கனவு. 679 01:00:01,435 --> 01:00:03,103 இதுவும் ஒரு கனவுதான். அதுவும் ஒரு கனவுதான். 680 01:00:03,187 --> 01:00:05,522 அவையெல்லாமே இப்போது கனவுகள்தான். 681 01:00:10,360 --> 01:00:13,822 அப்போது நான் மிகவும் இளமையாக இருந்தேன். 682 01:00:26,376 --> 01:00:28,962 சரி… 683 01:00:29,922 --> 01:00:32,966 என் வாழ்க்கையின் சிறந்த நேரம் இதுதான். 684 01:00:33,050 --> 01:00:35,010 எது உங்களை அப்படி நினைக்க வைக்கிறது? 685 01:00:35,093 --> 01:00:37,679 ஏனென்றால் எல்லோரும் அருகிலேயே இருந்தனர். 686 01:01:02,120 --> 01:01:03,580 உங்களுக்கு வயது என்ன? 687 01:01:04,706 --> 01:01:06,750 எனக்கு 98 வயது. 688 01:01:06,834 --> 01:01:09,294 எனக்கு 85 வயது. 689 01:01:10,712 --> 01:01:13,131 எனக்கு 80... 690 01:01:13,215 --> 01:01:14,258 இல்லை, 90. 691 01:01:14,341 --> 01:01:15,634 எனக்கு 98 வயதா? 692 01:01:15,717 --> 01:01:16,718 ஒருவேளை 99? 693 01:01:16,802 --> 01:01:18,345 எனக்கு 93 வயது. 694 01:01:18,428 --> 01:01:19,555 நீங்கள் எப்போது பிறந்தீர்கள்? 695 01:01:19,638 --> 01:01:22,724 1917 இல். 696 01:01:22,808 --> 01:01:24,768 எனக்கு 92 வயது. 697 01:01:24,852 --> 01:01:29,690 அன்று எனக்கு 100 வயதானது, அதனால் அவர்கள் எனக்காக கொண்டாடினார்கள். 698 01:01:29,773 --> 01:01:31,942 அதனால்தான் நான் இப்படி இருக்கிறேன். 699 01:01:32,025 --> 01:01:34,486 எனக்கு 95 வயது என்று நினைக்கிறேன். 700 01:01:34,570 --> 01:01:36,029 பசுவின் ஆண்டில் பிறந்தேன். 701 01:01:37,489 --> 01:01:42,953 எனக்காக நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. 702 01:01:43,036 --> 01:01:47,916 நான் என் சொந்த வழியை, சொந்த பாதையை உருவாக்கினேன், அதனால் எந்த வருத்தமும் இல்லை 703 01:01:48,000 --> 01:01:51,587 நான் தேர்ந்தெடுத்து நடந்த பாதை பற்றி. 704 01:01:51,670 --> 01:01:55,674 என் மகன் மிகவும் கடினமாக உழைக்கிறான். 705 01:01:55,757 --> 01:01:59,761 எனக்கு நல்ல மருமகளும் நல்ல பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 706 01:01:59,845 --> 01:02:04,641 பாட்டி என்று எல்லோரும் அழைப்பார்கள், அதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். 707 01:02:04,725 --> 01:02:08,604 உங்கள் புன்னகை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. 708 01:02:10,147 --> 01:02:15,444 யாராவது என்னை திருமணம் செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? 709 01:02:15,527 --> 01:02:20,407 என் புன்னகை பற்றி சொல்கிறீர்கள். என் புன்னகை... 710 01:02:21,950 --> 01:02:28,081 என் பேச்சு சலிப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன், ஆனால் கேட்டதற்கு நன்றி. 711 01:03:23,387 --> 01:03:25,389 வசனத் தமிழாக்கம் அருண்குமார்