1 00:00:02,711 --> 00:00:04,755 என் சக உலக குடிமக்களே. 2 00:00:04,755 --> 00:00:10,594 இன்று 0942 UTC மணியளவில், நம் உலகத்தை ஆக்கிரமித்த ஏலியன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது 3 00:00:10,594 --> 00:00:13,263 உலகளாவிய சமூகம் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். 4 00:00:20,521 --> 00:00:24,191 {\an8}ஃபோல்க்ஸ்டோன், கென்ட், இங்கிலாந்து 5 00:00:38,080 --> 00:00:39,957 -ஹேய்! ரோட்டைப் பார்த்து ஓட்டு, சகோ! -ச்சே. மன்னித்துவிடுங்கள். 6 00:00:39,957 --> 00:00:41,166 மான்டி! 7 00:00:42,543 --> 00:00:44,753 அதைக் கண்டுபிடித்தாயா? மருத்துவமனையின் முகவரியை. 8 00:00:46,630 --> 00:00:48,090 இந்தக் கட்டிடம்தான் என்று நினைக்கிறேன். 9 00:00:48,799 --> 00:00:50,133 ஏழாவது நிர்வாக மாவட்டம். 10 00:00:50,717 --> 00:00:52,010 காஸ்பர் ரசனைக்காரன். 11 00:00:52,636 --> 00:00:54,638 மன்னித்துவிடு, அது பிரெஞ்சு மொழியா? 12 00:00:54,638 --> 00:00:57,432 அவனது உச்சரிப்பு சரியாக இருக்காது என்று மான்டியின் பிரெஞ்சு ஆசிரியர் சொல்வார். 13 00:00:57,432 --> 00:01:00,227 எனக்கு நன்றாக பிரெஞ்சு தெரியும், சரியா? எனக்குக் கொஞ்சம் பயிற்சி தேவை. 14 00:01:00,227 --> 00:01:02,312 ஓ, சரி. அமைதி, பிரச்சினை இல்லை. நான் சொல்வதை திருப்பிச் சொல். 15 00:01:02,896 --> 00:01:05,607 ஷயா லபாஃப், ஸோயி டெஷனல், 16 00:01:06,275 --> 00:01:07,985 டிமோத்தே ஷலாமே. 17 00:01:07,985 --> 00:01:09,945 -பியான்ஸே? ஆம். -பியான்ஸே? 18 00:01:09,945 --> 00:01:13,490 -தயவுசெய்து இசையை மாற்றலாமா? -இல்லை, பென். அதை இப்போதே திருப்பிக் கொடு. 19 00:01:13,490 --> 00:01:15,492 -ட்ராப். ராப். -பென். நிறுத்து. 20 00:01:15,492 --> 00:01:17,411 -பென், நிறுத்து. -அதிகமான ராப். 21 00:01:17,411 --> 00:01:19,496 பொறு, என்ன இது? 22 00:01:26,920 --> 00:01:28,338 இது "கிஸ் ஃப்ரம் எ ரோஸ்" பாடல்தானே? 23 00:01:29,089 --> 00:01:30,966 -பென், இப்போதே அதை நிறுத்து. -நீ விளையாடுகிறாயா? 24 00:01:30,966 --> 00:01:32,593 -பென். -சத்தத்தை அதிகப்படுத்து. 25 00:01:34,344 --> 00:01:37,389 அடச்சே. மெதுவாகப் போ. மான்டி, மெதுவாகப் போ. பார்! 26 00:01:50,027 --> 00:01:51,278 அடச்சே. 27 00:01:55,741 --> 00:01:57,117 எல்லோரும் என்ன பார்க்கிறார்கள்? 28 00:01:58,535 --> 00:01:59,786 ஹேய். என்... 29 00:02:03,916 --> 00:02:04,917 ஹலோ. 30 00:02:05,417 --> 00:02:07,461 -என்ன நடக்கிறது? -சுரங்கம் மூடப்பட்டது. போகக்கூடாது. 31 00:02:07,961 --> 00:02:10,339 மூடப்பட்டதா? எதற்காக? 32 00:02:10,339 --> 00:02:12,257 ஃபிரான்சிலிருந்து கடைசி ரயில் இங்கே வந்து சேரவில்லை. 33 00:02:12,257 --> 00:02:13,550 உள்ளே போன கண்காணிப்பு குழு, வெளியே வரவே இல்லை. 34 00:02:13,550 --> 00:02:16,136 இப்போது பிரெஞ்சு அரசு தங்கள் முனையை நிரந்தரமாக மூடுவதாக அச்சுறுத்துகிறது. 35 00:02:16,136 --> 00:02:19,431 நீயும் ஜாக்குவார் காரும் இப்போதே திரும்பலாம், அல்லது மற்றவர்களைப் போல காத்திருக்கலாம். 36 00:02:19,932 --> 00:02:22,976 -எதற்காக காத்திருக்க வேண்டும்? -என்ன, காரில் ரேடியோ இல்லையா? 37 00:02:23,477 --> 00:02:25,437 அவர் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அது மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. 38 00:02:38,951 --> 00:02:40,619 என்ன விஷயம்? என்ன நடக்கிறது? 39 00:02:44,706 --> 00:02:47,251 ...எண்ணிக்கையில் குறைவாகவும், குறைந்த பலத்தோடும் இருக்கிறோம். 40 00:02:47,251 --> 00:02:49,503 நாம் வெற்றி பெறுவோம் என்று என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது, 41 00:02:49,503 --> 00:02:52,965 ஆனால் என்ன சொல்ல முடியும் என்றால், எங்கே வலிக்குமோ அங்கே அவற்றைத் தாக்க முயற்சிப்போம். 42 00:02:52,965 --> 00:02:54,716 -"அவற்றைத் திருப்பித் தாக்கவா"? என்... -நம் வலியின் ஒரு பகுதியை அவை அனுபவிக்கட்டும்... 43 00:02:54,716 --> 00:02:57,469 -அது... அது ஒரு தாக்குதல். நடந்திருக்க வேண்டும். -மான்டி? 44 00:02:57,469 --> 00:02:59,096 -ஒன்றும் பிரச்சினையில்லை. -"நீ தலை குனிந்திருப்பதை 45 00:02:59,096 --> 00:03:00,472 அவர்கள் பார்க்க அனுமதிக்காதே." 46 00:03:00,472 --> 00:03:03,642 எனவே இப்போது உங்களிடம் கேட்கிறேன், மேலே பாருங்கள். 47 00:03:03,642 --> 00:03:05,811 மேலே பாருங்கள். நாம் இனி... 48 00:03:06,603 --> 00:03:08,480 நீ என்ன செய்கிறாய்? ஏதோ நடக்கிறது. 49 00:03:08,480 --> 00:03:10,232 ஆம், அந்த சுரங்கப்பாதை வழியாக ஃபிரான்ஸுக்குப் போகிறோம். 50 00:03:10,232 --> 00:03:12,734 -நாமா? -உனக்கு மூளை குழம்பிவிட்டதா? 51 00:03:12,734 --> 00:03:14,653 வண்டியை திருப்பு. 52 00:03:30,878 --> 00:03:32,129 உன்னைப் புரிந்துகொள்கிறேனா என்று பார்ப்போம், 53 00:03:32,129 --> 00:03:34,798 இராணுவ எச்சரிக்கைகளுக்கு பிறகும் நீ உள்ளே செல்லும் முனைப்புடன் இருக்கிறாயா? 54 00:03:34,798 --> 00:03:37,551 -நம்மை கைது செய்வார்களா? -இல்லை, கைதாகமாட்டோம். 55 00:03:38,719 --> 00:03:40,554 -கைதாவோமா? -சுரங்கப்பாதை அங்கே இருக்கிறது. 56 00:03:44,057 --> 00:03:45,267 அடச்சே. 57 00:03:45,267 --> 00:03:47,644 வாய்ப்பே இல்லை. யார் கண்ணிலும் படாமல் அந்த வேலியை தாண்ட முடியாது. 58 00:03:47,644 --> 00:03:49,104 பிறகு எப்படி உள்ளே போகப் போகிறோம்? 59 00:03:51,148 --> 00:03:53,358 -அங்கே! மான்டி, அங்கே வண்டியை நிறுத்து. -சரி. 60 00:04:04,786 --> 00:04:07,456 -இது சுரங்கப்பாதைக்குச் செல்கிறதா? -நேரில் சென்று பார்ப்போம். 61 00:04:09,249 --> 00:04:10,334 ஹேய், பொறு. 62 00:04:10,334 --> 00:04:12,044 நான் டிக்கியில் இருந்து நெம்புகோலை எடுக்கிறேன். 63 00:04:15,172 --> 00:04:17,757 என்னால் இவ்வளவுதான் வர முடியும். இராணுவ வீரர்கள் இறந்திருந்தால்... 64 00:04:17,757 --> 00:04:19,593 தெரியுமா, அது... 65 00:04:23,597 --> 00:04:25,849 சரி, பார். இது என்னைப் பற்றியது அல்ல, சரியா? நான்... 66 00:04:29,186 --> 00:04:30,646 அவளுக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன். 67 00:04:33,273 --> 00:04:34,274 எல்லாம் நன்றாக இருக்கிறது. 68 00:04:35,025 --> 00:04:37,027 நீ எங்களை இவ்வளவு தூரம் கூட்டிவந்திருக்கிறாய், 69 00:04:37,861 --> 00:04:39,029 எனவே நன்றி. 70 00:04:40,113 --> 00:04:42,783 இதற்கு நாம் அம்மா அப்பாவைக் காப்பாற்றப் போவதில்லை என்று அர்த்தமா? 71 00:04:47,204 --> 00:04:48,205 நான் உதவட்டுமா? 72 00:04:55,671 --> 00:04:58,590 நிச்சயமாக நாம் அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்றப் போகிறோம், சரியா? 73 00:04:59,466 --> 00:05:01,301 பார், நாம் அங்கு சென்றதும், 74 00:05:02,010 --> 00:05:04,555 நீ என் பேச்சைக் கேட்டு, சொல்வதைச் செய்ய வேண்டும், 75 00:05:04,555 --> 00:05:08,976 எப்பவும் போல என்னை எரிச்சலூட்டுவது, சிணுங்குவது, என்னைச் சார்ந்தே இருப்பது என எதுவும் கூடாது. 76 00:05:08,976 --> 00:05:10,060 சரியா? உன்னால் முடியுமா? 77 00:05:10,060 --> 00:05:12,479 ஆம், நீ வழக்கம் போல முட்டாளாக, எரிச்சலூட்டுபவனாக... 78 00:05:12,479 --> 00:05:13,730 -ஆம். - ...இல்லாத வரை... 79 00:05:13,730 --> 00:05:15,148 ஆம். வாயை மூடு. 80 00:05:18,902 --> 00:05:20,237 என்ன? நாங்கள் வரமாட்டோம் என்று நினைத்தாயா? 81 00:05:20,737 --> 00:05:21,989 போகலாம். 82 00:05:22,906 --> 00:05:24,950 நன்றாக தள்ளு, மடையா. 83 00:05:46,680 --> 00:05:47,681 அடச்சே. இராணுவ வீரர்கள். 84 00:05:47,681 --> 00:05:50,017 சீக்கிரம். அவர்கள் நம்மை பார்ப்பதற்கு முன். போ. 85 00:06:16,627 --> 00:06:17,461 இதோ வந்துவிட்டோம். 86 00:06:17,461 --> 00:06:20,005 தென்புற சுரங்கப்பாதைக்கு 100 மீட்டர் தூரம் 87 00:06:24,009 --> 00:06:27,304 திரும்பிப் போக முடியாத இடத்திற்கு வந்தது போல தெரிகிறது. என்ன? 88 00:06:27,930 --> 00:06:29,598 கவலைப்படாதே. இப்படி நடக்கும் என்று தெரியும். 89 00:06:30,557 --> 00:06:31,975 பென், அது என்ன? 90 00:06:31,975 --> 00:06:34,311 சுரங்க இரயில் பாதைக்கான எங்கள் வகுப்பு பயணத்திலிருந்து என் அறிக்கை. 91 00:06:34,311 --> 00:06:36,021 நான் வரைபடத்தையும் எல்லாவற்றையும் வரைந்திருக்கிறேன். பார்த்தாயா? 92 00:06:40,609 --> 00:06:41,860 நானும் ஒன்றை உதவிக்காக கொண்டு வந்திருக்கிறேன். 93 00:06:43,737 --> 00:06:46,782 ஏலியன் விரட்டி. வீட்டுத் தயாரிப்பு ஃப்ளேம்த்ரோவர். 94 00:06:47,491 --> 00:06:48,909 பாண்ட் இதை 'லிவ் அன்ட் லெட் டை' படத்தில் செய்தார். 95 00:06:48,909 --> 00:06:52,579 ஆம், ஆனால் ஆல்ஃப், நிஜ வாழ்க்கையில், அது உன் கையை பொசுக்கிவிடும். 96 00:06:58,877 --> 00:07:00,128 இப்போது என்ன நடந்தது? 97 00:07:00,128 --> 00:07:01,213 அவை நம்மை தாக்குகின்றனவா? 98 00:07:01,922 --> 00:07:03,423 அல்லது நாம் அவற்றை தாக்குகிறோமா? 99 00:07:03,423 --> 00:07:04,341 மின்சாரம் இன்னும் இருக்கிறது. 100 00:07:05,050 --> 00:07:06,176 நல்லது. போகலாம்! 101 00:07:08,804 --> 00:07:11,515 மன்னித்துவிடுங்கள். இப்போது நிலைமையின் தீவிரத்தன்மையை புரிந்தவன் நான் மட்டுமாக 102 00:07:11,515 --> 00:07:14,434 இருக்க விரும்பவில்லை, ஆனால் அங்கே ஏதோ மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கிறது. 103 00:07:15,102 --> 00:07:17,729 எனவே, புதிய திட்டம், அதை என்னவென்று பார்க்கப் போகிறோம்... 104 00:07:17,729 --> 00:07:19,314 இல்லை! இங்கேயே இருப்போம். 105 00:07:19,898 --> 00:07:22,109 நாம் திரும்ப வெளியே போனால், நம்மை பார்த்து தடுத்துவிடுவார்கள். 106 00:07:22,109 --> 00:07:25,112 -ஆம், ஆனால் அங்கே என்ன இருக்கிறதென்று தெரியாது. -நீ சொல்வது சரிதான். தெரியாது. 107 00:07:25,654 --> 00:07:28,532 ஆனால் காஸ்பரிடம் போவதற்கு இந்த சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்று நமக்குத் தெரியும். 108 00:07:29,658 --> 00:07:33,161 பணியாளர் நுழைவாயில் ரயில் சுரங்கப்பாதையுடன் இணைகிறது என்று இதில் இருக்கிறது. 109 00:07:38,041 --> 00:07:41,545 பார், பயப்படுவது சரிதான். 110 00:07:42,713 --> 00:07:44,256 பயப்படாமல் இருப்பதுதான் வழக்கத்துக்கு மாறானது. 111 00:07:44,840 --> 00:07:47,426 ஆனால் அந்த ஏலியன்கள் இங்கே வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. 112 00:07:48,010 --> 00:07:50,721 எனக்கு மிகவும் சலித்துப்போய்விட்டது! 113 00:07:54,474 --> 00:07:59,313 முக்கியமான அறுவை சிகிச்சையில், அறுவை சிகிச்சை மேஜையில் உள்ள உடல் ஒன்றைத் 114 00:08:00,397 --> 00:08:01,607 தேர்ந்தெடுக்கும் தருணம் 115 00:08:02,399 --> 00:08:04,735 வரும் என்று என் அம்மா ஒருமுறை சொன்னார். 116 00:08:05,569 --> 00:08:06,987 எதிர்த்து போராட 117 00:08:06,987 --> 00:08:09,448 அல்லது போராடாமல் விட, அது நடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். 118 00:08:10,699 --> 00:08:13,327 நம் நண்பன் நமக்காக காத்திருக்கிறான். 119 00:08:14,328 --> 00:08:17,623 அவனைக் கண்டுபிடிக்க முடிந்தால், ஒருவேளை நம் இனத்துக்கு குறைந்தபட்சம் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. 120 00:08:18,498 --> 00:08:20,250 எனவே அந்த தருணம் இதுதான். 121 00:08:20,250 --> 00:08:23,253 நாம் போராடுகிறோமா அல்லது கைவிடுகிறோமா? 122 00:08:28,884 --> 00:08:30,302 காஸ்பருக்காக. 123 00:08:34,972 --> 00:08:36,015 காஸ்ப்புக்காக. 124 00:08:37,351 --> 00:08:38,559 காஸ்பர். 125 00:08:44,232 --> 00:08:45,943 ஆம். சரி. நாங்களும் வருகிறோம். 126 00:10:29,338 --> 00:10:31,173 இது நிஜமாகவே முக்கியமான வெற்றி. 127 00:10:31,173 --> 00:10:32,716 இப்போது இணைபவர்களுக்காக சொல்கிறேன், 128 00:10:32,716 --> 00:10:36,512 உலக பாதுகாப்புக் கூட்டணி ஏழு ஏலியன் கப்பல்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியிருக்கிறது. 129 00:10:36,512 --> 00:10:40,140 இதுவரை, ஏலியன் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்வினையோ, 130 00:10:40,140 --> 00:10:42,226 தாய்க்கப்பலில் இருந்து எந்த பதில் தாக்குதலோ வரவில்லை. 131 00:10:42,226 --> 00:10:45,646 ஆனால் நாம் பலத்த சேதத்தை உண்டாக்கி இருக்கிறோம் என்று கூட்டணிப் படைகள் 132 00:10:45,646 --> 00:10:47,856 நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 133 00:10:47,856 --> 00:10:53,111 WDC தலைவர் பென்யா மபோட் மோதல் நடந்த இடங்களுக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்... 134 00:12:32,878 --> 00:12:35,380 நீ முக்கியமான நாளை தவறவிடுகிறாய், காஸ்பர். 135 00:12:36,757 --> 00:12:39,092 நீ ஏன் கண்விழித்து ஜாலியாக இருக்கக் கூடாது, ம்? 136 00:12:40,260 --> 00:12:42,179 அவன் ஜாலியாக இல்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? 137 00:12:46,141 --> 00:12:48,268 இவனைப் பற்றி மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும். 138 00:12:48,268 --> 00:12:50,229 எதையும் அனுமானிப்பது வெட்கக்கேடானது. 139 00:12:50,229 --> 00:12:52,439 அவனது மூளை செயல்பாடுகளில் இருந்து, கேப்ரியல், 140 00:12:52,439 --> 00:12:55,067 அவனுக்கு ஒவ்வொரு மணிநேரமும் சராசரியாக ஏழு வலிப்புகள் வருவதாக நாம் கருதலாம். 141 00:12:55,943 --> 00:12:57,653 அவன் ஜாலியாக இல்லாமல் இருக்கலாம். 142 00:13:00,739 --> 00:13:01,823 நியாயம்தான். 143 00:13:06,828 --> 00:13:10,666 இந்த குழந்தைகள், ஏலியன்களுடனான அவர்களின் தொடர்பு பற்றி பல ஆராய்ச்சிகள் செய்கிறோம். 144 00:13:11,583 --> 00:13:13,752 முக்கியமான தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். 145 00:13:16,171 --> 00:13:18,298 ஒருவேளை இன்றைக்கு பிறகு, நமக்கு ஒன்று தேவைப்படாது. 146 00:13:19,466 --> 00:13:21,718 இதைப் பற்றி பேசும்போது, எங்களில் சிலர் இன்று மாலை 147 00:13:21,718 --> 00:13:23,804 மது குடிக்கப் போகிறோம். ஒரு சின்ன வெற்றி கொண்டாட்டம். 148 00:13:23,804 --> 00:13:25,097 நீயும் வருகிறாயா? 149 00:13:26,515 --> 00:13:27,391 வெற்றி. 150 00:13:28,976 --> 00:13:31,478 ஒரு பிரச்சினை பற்றி எப்போது சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்பது தெரிவதுதான், 151 00:13:31,478 --> 00:13:33,146 ஒரு நரம்பியல் நிபுணர் கற்கக் கூடிய மிக முக்கியமான திறன், எஸ்மே. 152 00:13:36,567 --> 00:13:39,778 குறிப்பாக, நோயாளி காப்பாற்ற முடியாத கட்டத்தைத் தாண்டும்போது. 153 00:13:48,328 --> 00:13:50,873 எழுந்திரு, காஸ்பர். 154 00:13:54,877 --> 00:13:57,880 பள்ளியில், பாலங்களைப் பற்றி படிப்பதில் முழு வாரத்தையும் கழித்தோம், 155 00:13:57,880 --> 00:13:59,923 ஆனால் சுரங்கப்பாதைகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கின்றன, 156 00:13:59,923 --> 00:14:02,968 ஏனென்றால் சுரங்கப்பாதைகள் நீளம், ஆழம், 157 00:14:02,968 --> 00:14:04,887 அழுத்தம் பற்றியவை. 158 00:14:05,929 --> 00:14:09,600 பாருங்கள். மேலே இருப்பது தெரிகிறதா? அது அழுத்தத்தை குறைக்கும் குழாய்களில் ஒன்று. 159 00:14:09,600 --> 00:14:11,727 இது மற்ற ரயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. 160 00:14:11,727 --> 00:14:14,354 அவை இல்லையென்றால், இங்குள்ள அழுத்தத்தால் ஷாம்பெயின் மூடியைப் போல நம் தலை 161 00:14:14,354 --> 00:14:17,983 -நொறுங்கிவிடும் என்று செல்வி. மால்கின் சொன்னார். -கடவுளே, பென். போதும் நிறுத்து. 162 00:14:17,983 --> 00:14:19,776 அவை மகிழ்விக்கும் தகவல்கள்தான். 163 00:14:19,776 --> 00:14:21,778 அப்படியா? நீ எங்களை ஒரு மணிநேரமாக மகிழ்விக்கிறாய். 164 00:14:21,778 --> 00:14:23,322 இப்போது அமைதியாக இரு, சரியா? 165 00:14:24,364 --> 00:14:25,699 யாராவது அதை உணர்கிறீர்களா? 166 00:14:26,658 --> 00:14:28,118 -குளிரையா? -தெரிகிறது. 167 00:14:28,118 --> 00:14:30,245 நாம் ஐஸில் இருப்பது போல இருக்கிறது... 168 00:14:30,245 --> 00:14:31,747 மான்டியின் காதல் வாழ்க்கை போல. 169 00:14:31,747 --> 00:14:33,081 அது வடிகட்டிய முட்டாள்தனம், நண்பா. 170 00:14:33,081 --> 00:14:35,751 உண்மைதான், மான்டி. பிரெக்ஸிட் நடந்ததிலிருந்து உனக்கு தோழியே இருந்ததில்லை. 171 00:14:35,751 --> 00:14:36,835 பென்னி! 172 00:14:36,835 --> 00:14:39,171 -அது உண்மைதான். -யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. 173 00:14:39,171 --> 00:14:40,881 அழுத்தம், வயரிங் மற்றும் நீ பேசிய பிற 174 00:14:40,881 --> 00:14:42,966 விஷயங்களைப் போல யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. 175 00:14:42,966 --> 00:14:44,426 ஹேய், நான் சொல்வதை செய்வதாக உறுதியளித்தாய். 176 00:14:44,426 --> 00:14:47,012 பேசுவதை நிறுத்து என்று இப்போது சொல்கிறேன், சரியா? 177 00:14:47,012 --> 00:14:48,096 நல்லது. 178 00:14:48,805 --> 00:14:51,350 உன் அம்மாவுடன் ஃபோனில் 24 மணிநேரமும் தொடர்பில் இருக்கும்போது யாருக்கு காதல் வாழ்க்கை வேண்டும்? 179 00:14:51,350 --> 00:14:52,601 வாயை மூடு. 180 00:14:57,272 --> 00:14:59,191 கடவுளே, தங்கைகள் மிகவும் மோசமானவர்கள். 181 00:14:59,191 --> 00:15:01,193 நானும் தங்கையாக இருக்கிறேன். 182 00:15:01,193 --> 00:15:03,403 நீ இப்போது அவளை எரிச்சலூட்டுகிறாய். 183 00:15:05,614 --> 00:15:07,783 அவள் பதற்றமாக இருக்கலாம். அதாவது, 184 00:15:08,408 --> 00:15:10,285 -யார் இருக்க மாட்டார்கள்? -நீ விளையாடுகிறாய். 185 00:15:10,786 --> 00:15:13,121 கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் நம் தலைக்கு மேலே இருக்கும்போது, இருட்டான, 186 00:15:13,121 --> 00:15:15,290 கைவிடப்பட்ட ரயில் சுரங்கப்பாதையில் மகிழ்ச்சியாக நடக்கிறோம். 187 00:15:16,250 --> 00:15:17,376 எல்லா குழந்தையின் கனவு, இல்லையா? 188 00:15:17,376 --> 00:15:19,670 ஆம். பல காலங்களுக்கு நினைவில் இருக்கக் கூடிய ஒரு தேடல். 189 00:15:20,671 --> 00:15:22,381 ஆல்ஃபியின் அம்மா நன்றாக முத்தமிடுவாரா? 190 00:15:22,965 --> 00:15:25,592 ஆம், இல்லை. அவர் முதல் பத்து பேரில் நிச்சயமாக இருப்பார். 191 00:15:25,592 --> 00:15:27,302 ஜுடி டென்ச்சுக்கு அடுத்ததாக வருவார், எனவே... 192 00:15:29,763 --> 00:15:31,348 எனவே, அதை எப்போது கண்டுபிடித்தாய்? 193 00:15:32,015 --> 00:15:33,183 காஸ்பர் பற்றி? 194 00:15:33,684 --> 00:15:34,685 என்ன கண்டுபிடித்தேன்? 195 00:15:35,352 --> 00:15:37,396 அவன், தெரியவில்லை, விசேஷமானவன் என்று. 196 00:15:38,605 --> 00:15:41,024 முதலில் எனக்குத் தெரியவில்லை. 197 00:15:42,317 --> 00:15:43,318 யோசித்துப் பார்த்தால், 198 00:15:44,027 --> 00:15:45,028 ஆம். 199 00:15:45,737 --> 00:15:47,364 அவனைப் பற்றி எப்போதும் ஏதோ ஒன்று இருந்தது. 200 00:15:48,198 --> 00:15:53,829 மற்றவர்களால் கேட்க முடியாத பாடலை இவனால் கேட்க முடிந்தது போல. 201 00:15:54,371 --> 00:15:55,831 அவனது பழங்கால வாக்மேன் போல. 202 00:15:56,665 --> 00:15:57,666 பழங்கால பொருள். 203 00:15:57,666 --> 00:16:00,210 கடவுளே, இப்போது அதை நினைக்கிறேன், எப்போதும் அவனை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன். 204 00:16:00,210 --> 00:16:02,504 ஆனால் உண்மை என்னவென்றால், அது அருமையான விஷயம் என்று நினைத்தேன். 205 00:16:02,504 --> 00:16:03,839 பொய் சொல்கிறாய். 206 00:16:04,506 --> 00:16:06,258 நீ அவனை தொந்தரவு செய்யவில்லை, நீ அவனை வெறுத்தாய். 207 00:16:07,801 --> 00:16:10,512 அட. அது ஒன்றும் ரகசியம் இல்லை. 208 00:16:10,512 --> 00:16:12,306 நீ அவனிடம் மோசமாக நடந்துகொண்டாய். 209 00:16:15,726 --> 00:16:18,270 நான் சொல்வதை தவறாக புரிந்துகொள்ளாதே. நீ இங்கிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 210 00:16:19,563 --> 00:16:22,691 நீ எதற்காக இங்கிருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. 211 00:16:25,485 --> 00:16:28,071 நீ சொன்னது போல, நம் உலகத்தை மீட்க வேண்டும், சரியா? 212 00:16:28,071 --> 00:16:29,281 அது மிக சுலபம். 213 00:16:29,281 --> 00:16:30,574 "அது மிக சுலபமா"? 214 00:16:32,367 --> 00:16:34,203 கண்டிப்பாக. அதாவது, நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்? 215 00:16:35,913 --> 00:16:37,080 அடச்சே! 216 00:16:38,207 --> 00:16:39,208 அடக் கடவுளே. 217 00:16:47,257 --> 00:16:48,300 கண்காணிப்பு குழு. 218 00:16:50,010 --> 00:16:51,345 ஏலியன்கள் இதைச் செய்திருக்கின்றன. அவை இங்கிருக்கின்றன. 219 00:16:55,432 --> 00:16:56,433 ஓய், நீ நலமா? 220 00:16:56,433 --> 00:16:58,268 -பின்னாடி வா! -சகோ, நான் உதவ முயற்சிக்கிறேன். 221 00:16:58,268 --> 00:17:00,395 அவனுக்குத் தேவையில்லை, இல்லையா? உன்னிடமிருந்து இல்லை. 222 00:17:00,395 --> 00:17:02,523 உங்கள் இருவரின் உதவியும்தான். நான் ஒன்றும் நோயாளி அல்ல. 223 00:17:02,523 --> 00:17:05,192 நான் இதைப் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. 224 00:17:06,984 --> 00:17:08,569 பொறு. பென்னி எங்கே? 225 00:17:09,863 --> 00:17:10,864 ச்சே. அவள் எங்கே போனாள்? 226 00:17:11,615 --> 00:17:13,742 -பென்னி? -அவள் நம் பின்னாடியே வந்தாள், இல்லையா? 227 00:17:13,742 --> 00:17:15,536 ஒருவேளை நம்மை கடந்து போயிருக்கலாம். 228 00:17:17,162 --> 00:17:18,955 பென், இப்போதே இங்கே திரும்பி வா. 229 00:17:21,834 --> 00:17:23,042 பென்? 230 00:17:28,006 --> 00:17:29,925 அடக் கடவுளே. 231 00:17:31,593 --> 00:17:32,678 -ஓடுங்கள்! -போ! 232 00:17:34,471 --> 00:17:35,639 -மான்டி. -ச்சே. 233 00:17:35,639 --> 00:17:39,309 -ச்சே, என் கால் சிக்கிக்கொண்டது! -மான்டி, எழுந்திரு. மான்டி! 234 00:17:39,309 --> 00:17:40,811 இழு! 235 00:17:41,478 --> 00:17:42,771 என் லைட்டர் எங்கே? 236 00:17:42,771 --> 00:17:44,565 -ச்சே, என் லைட்டர் கிடைக்கவில்லை. -நண்பர்களே. 237 00:17:45,190 --> 00:17:46,650 ச்சே! 238 00:17:58,996 --> 00:18:00,163 ச்சே. 239 00:18:05,210 --> 00:18:06,420 ச்சே. 240 00:18:07,713 --> 00:18:09,214 அதற்கு என்ன ஆனது? 241 00:18:09,756 --> 00:18:11,967 தெரியவில்லை, உடல்நிலை சரியில்லாதது போல தெரிந்தது. 242 00:18:12,759 --> 00:18:15,262 மிகவும் குளிர்கிறது. என்னால் இங்கே அதை உணர முடிகிறது. 243 00:18:15,262 --> 00:18:16,513 அது சுவாசிப்பதை நிறுத்தியது என்று நினைக்கிறேன். 244 00:18:16,513 --> 00:18:18,640 அது சுவாசிக்குமா? அல்லது நுரையீரல் இருக்கிறதா... 245 00:18:18,640 --> 00:18:20,434 என்னவோ, யாருக்குக் கவலை? 246 00:18:20,434 --> 00:18:23,896 பென்னியைக் காணவில்லை, நீங்கள் எல்லோரும் இதன் உடற்கூறியல் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள். 247 00:18:24,396 --> 00:18:27,065 நான் இப்போது பென்னி சுவாசிப்பதை பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறேன். 248 00:18:27,065 --> 00:18:29,860 என்னுடைய சுவாசம் துர்நாற்றமடிக்கும் என்று எப்போதும் சொல்வாய். 249 00:18:29,860 --> 00:18:31,278 பென். கடவுளே. 250 00:18:31,987 --> 00:18:34,948 வா. இனிமேல் அப்படி ஓடிப் போகாதே, சரியா? 251 00:18:34,948 --> 00:18:36,700 நான் ஓடவில்லை, ஆராய்ந்து கொண்டிருந்தேன். 252 00:18:36,700 --> 00:18:40,120 அந்த ஏலியனை உனக்குப் பிடிக்கும் என்றால், நான் கண்டுபிடித்தது உனக்கு மிகவும் பிடிக்கும். 253 00:18:43,624 --> 00:18:44,583 உடைந்தது. 254 00:18:57,721 --> 00:18:58,972 வீடு. 255 00:19:15,989 --> 00:19:18,450 சீக்கிரம். 256 00:19:22,955 --> 00:19:25,457 அவை இறந்துவிட்டன, அது முடிந்துவிட்டது! 257 00:19:25,457 --> 00:19:27,584 இதைப் பார்க்க வேண்டிய சரியான நபர். 258 00:19:28,168 --> 00:19:29,419 ஒரு நொடி, ப்ரிஷா. 259 00:19:30,754 --> 00:19:33,173 ஆசுவாசப்படுத்திக்கொள்ள கொஞ்சம் நடந்தேன், 260 00:19:33,173 --> 00:19:37,010 இங்கிருந்து சில தெருக்கள் தள்ளி, இதைப் பார்த்தேன். 261 00:19:38,846 --> 00:19:40,681 இது எல்லா இடங்களிலும் நடக்கிறது. 262 00:19:42,057 --> 00:19:43,350 அவை இறந்து கொண்டிருக்கின்றன, எஸ்மே. 263 00:19:44,309 --> 00:19:45,143 நாம் சாதித்துவிட்டோம். 264 00:19:46,228 --> 00:19:47,396 நாம் சாதித்துவிட்டோம். 265 00:19:54,278 --> 00:19:56,488 -அது என்ன? -குறுக்குவழி. வரைபடத்தில் உள்ளன. 266 00:19:56,488 --> 00:19:58,866 -நாம் அதன் வழியாக வந்தோம். -அது எங்கே செல்கிறது? 267 00:19:58,866 --> 00:20:01,076 தொழிலாளர்களுக்கான இன்னொரு சுரங்கப்பாதையாக இருக்கலாம். 268 00:20:01,660 --> 00:20:05,163 இடறி விழ தண்டவாளங்கள் ஏதும் இல்லை, அதாவது நாம் வேகமாக போகலாம். 269 00:20:06,039 --> 00:20:07,124 வழிகாட்டு. 270 00:20:13,922 --> 00:20:15,424 பார்த்தீர்களா? நான் என்ன சொன்னேன்? 271 00:20:22,389 --> 00:20:23,891 பென்னி, கவனமாக இரு, முட்டாள். 272 00:20:23,891 --> 00:20:25,642 பரவாயில்லை. நானும் முதலில் பயந்தேன். 273 00:20:25,642 --> 00:20:29,605 ஆனால் அவை முழுதாக இறந்துவிட்டன. இரத்தம் உறைந்தது போல. 274 00:20:35,235 --> 00:20:38,071 அதனால்தான் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கிறது. இவை எல்லாம் இருப்பதால். 275 00:20:38,071 --> 00:20:41,325 இவற்றைக் கொல்ல அவர்கள் வானொலியில் சொன்ன தாக்குதல் இதுவாகத்தான் இருக்குமோ? 276 00:20:41,325 --> 00:20:44,453 இருக்கலாம். ஒருவேளை அவை சுருண்டு விழுந்து நம்மை விட்டுவிடலாம். 277 00:20:44,453 --> 00:20:45,787 அது அருமையாக இருக்கும்தானே? 278 00:20:45,787 --> 00:20:48,248 தயவுசெய்து. இவை எல்லாம் நோய்வாய்ப்பட்டு இறக்காது, பென். 279 00:20:48,248 --> 00:20:49,583 அது உனக்குத் தெரியாது. 280 00:20:49,583 --> 00:20:51,293 நீ சமீபத்தில் வானத்தைப் பார்த்தாயா, நண்பா? 281 00:20:51,293 --> 00:20:53,420 அங்கே நன்றாக பரிமாண வளர்ச்சி அடைந்த எதையும் நீ பார்க்கவில்லை, இல்லையா? 282 00:20:53,420 --> 00:20:56,256 நிச்சயமாக, இங்கு எதுவும் பரிமாண வளர்ச்சி அடைந்து பார்த்ததில்லை. 283 00:20:56,256 --> 00:20:59,051 நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்துங்கள். 284 00:20:59,051 --> 00:21:00,928 ஜமிலா, என்ன நடக்கிறது? 285 00:21:10,896 --> 00:21:12,064 என்ன இது? 286 00:21:12,064 --> 00:21:13,148 தெரியாது. 287 00:21:24,326 --> 00:21:25,953 நான் ஏதாவது முயற்சிக்கிறேன். 288 00:22:12,291 --> 00:22:15,919 அது என்ன சத்தம்? என் அம்மாவின் அலங்கார மணியோசைப் போல இருக்கிறது. 289 00:22:21,717 --> 00:22:23,886 நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். 290 00:22:23,886 --> 00:22:25,554 அது ஒரு நிகழ்ச்சி அல்ல. 291 00:22:26,722 --> 00:22:28,307 அது ஒரு பரிமாற்றம். 292 00:22:29,433 --> 00:22:32,102 அவற்றிடம் இருந்து ஒரு செய்தி. 293 00:22:32,102 --> 00:22:33,228 யாருக்கு? 294 00:22:33,812 --> 00:22:35,230 அது சொன்னது என்ன? 295 00:22:37,482 --> 00:22:38,692 எடுங்கள். 296 00:22:40,110 --> 00:22:41,945 -போகலாம். -போகலாம். 297 00:23:09,264 --> 00:23:11,016 இங்கே என்ன நடந்தது? 298 00:23:11,600 --> 00:23:12,851 அவர் பாதுகாவலரா? 299 00:23:14,102 --> 00:23:16,021 ஏதோ கடைசி கட்ட போராட்டம் போல தெரிகிறது. 300 00:23:17,189 --> 00:23:18,857 நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை, இல்லையா? 301 00:23:22,069 --> 00:23:24,571 இது காட்ஸில்லா படம் போல இருக்கிறது. 302 00:23:25,155 --> 00:23:27,699 அவை, ஏதோ ஒன்றைப் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லது... 303 00:23:27,699 --> 00:23:29,409 என்ன? மேலும் சுரங்கப்பாதைகளா? 304 00:23:30,911 --> 00:23:31,912 இது. 305 00:23:33,914 --> 00:23:34,915 கடவுளே. 306 00:23:34,915 --> 00:23:36,875 அவர்களால் சரியான நேரத்தில் கேட்டை மூட முடியவில்லை. 307 00:23:37,459 --> 00:23:38,877 ஏலியன்கள் அவர்களை கொலை செய்திருக்கின்றன. 308 00:23:41,421 --> 00:23:42,965 பென்னி? 309 00:23:42,965 --> 00:23:45,634 பென், ஹேய். ஹேய். என்னைப் பார். ஒன்றுமில்லை, சரியா? 310 00:23:45,634 --> 00:23:47,386 இது இன்னொரு பயத்தால் ஏற்படும் மூச்சுத்திணறல். நீ நலமா? 311 00:23:47,386 --> 00:23:49,721 -நாம் நலம். நீ நலமாக இருக்கிறாய், பென்னி. நன்றாக. -நான் அதை உணர்கிறேன். 312 00:23:49,721 --> 00:23:51,014 -என்ன உணர்கிறாய்? -நான் அதை உணர்கிறேன். 313 00:23:55,727 --> 00:23:57,062 -நான் அதை உணர்கிறேன். -என்ன உணர்கிறாய்? 314 00:24:04,570 --> 00:24:07,781 டாக்டர். டாக்டர், நீங்கள் சொல்வது கேட்கவில்லை... 315 00:24:08,448 --> 00:24:10,993 சரியாகக் கேட்கவில்லை. 316 00:24:11,910 --> 00:24:14,371 இது செயின்ட் லூயிஸ் மருத்துவமனை. ஏதோ பிரச்சினை. 317 00:24:15,205 --> 00:24:16,874 ஹலோ, நான் டாக்டர் கக்னியூக். 318 00:24:16,874 --> 00:24:18,792 ...அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையான தாக்குதலுக்கு ஆளானவர்கள் போல தெரிகிறது. 319 00:24:19,751 --> 00:24:21,044 இங்கே நிரம்பிவிட்டார்கள், 320 00:24:21,044 --> 00:24:23,505 எங்களுக்கு யாராவது வேண்டும்... 321 00:24:23,505 --> 00:24:26,049 -இங்கே நிரம்பிவிட்டார்கள், எங்களுக்கு ஒருவர்... -டாக்டர், இருக்கிறீர்களா? 322 00:24:31,138 --> 00:24:33,223 அவசர சிகிச்சை 323 00:24:46,737 --> 00:24:49,865 மெதுவாக. சுவாசி. 324 00:24:49,865 --> 00:24:51,408 எது உனக்கு இதை செய்தது? 325 00:24:51,408 --> 00:24:54,077 என்னை விடு. எல்லோரையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல். 326 00:24:54,077 --> 00:24:56,455 எனக்கு இங்கே உதவி தேவை! 327 00:25:00,417 --> 00:25:03,378 அவை வருகின்றன... 328 00:25:03,378 --> 00:25:05,214 இன்னும் மோசமாக இருக்கின்றன. 329 00:25:28,362 --> 00:25:29,738 போ, உடனே! உடனே போ! 330 00:25:29,738 --> 00:25:31,949 -ச்சே. அவரை நகர்த்து! -ச்சே. நாம் என்ன செய்வது? 331 00:25:32,741 --> 00:25:35,285 டார்வின். டார்வின், போ! பென்னி, என்னோடு வா. 332 00:25:36,620 --> 00:25:37,704 தள்ளு. 333 00:25:41,333 --> 00:25:42,918 நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 334 00:25:43,669 --> 00:25:44,670 ஹேய், பென்னி. 335 00:25:44,670 --> 00:25:46,588 பென்னி. பென்னி, என்னைப் பார். 336 00:25:47,172 --> 00:25:50,050 ஹேய். கண்ணை மூடு, சரியா? 337 00:25:50,676 --> 00:25:52,386 நாம் ஒன்றாக புதிரில் நடக்க போகிறோம், சரியா? 338 00:25:52,386 --> 00:25:55,681 உன்னால் புதிரைப் பார்க்க முடிகிறதா? அருமை, சரி. நீ முன்னோக்கி நடக்கிறாய். 339 00:25:55,681 --> 00:25:58,767 இருபுறமும் உயரமான வேலிகள் உன்னை பாதுகாக்கின்றன. ஆனால் பாதை பிரிகிறது. 340 00:25:58,767 --> 00:26:00,102 எங்கே போக வேண்டும் என்று தெரியும்தானே? திரும்பு... 341 00:26:00,102 --> 00:26:01,854 -இடது. -அதோ. இடதுபுறம் திரும்பு. 342 00:26:01,854 --> 00:26:02,980 இப்போது, முன்னோக்கி நடக்கிறாய். 343 00:26:02,980 --> 00:26:05,274 பிறகு ஒரு மூலை இருக்கிறது. பிறகு திரும்பு... 344 00:26:05,274 --> 00:26:07,234 -சரி. -மிகச்சரி. சரி, ஆம். 345 00:26:07,818 --> 00:26:10,070 வாஜோ. வாஜோ... 346 00:26:12,865 --> 00:26:15,075 எல்லோரும், கேளுங்கள்! குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்! 347 00:26:15,075 --> 00:26:18,328 தேவையான ஆராய்ச்சிகள், உங்களால் முடிந்த எல்லாவற்றையும் சேகரியுங்கள். 348 00:26:19,705 --> 00:26:21,081 சீக்கிரம்! 349 00:26:23,584 --> 00:26:25,169 எஸ்மே, என்ன நடக்கிறது? 350 00:26:25,169 --> 00:26:27,629 அவை இறக்கவில்லை, கேப்ரியல். 351 00:26:27,629 --> 00:26:30,424 திரும்பி வருகின்றன. 352 00:26:30,424 --> 00:26:32,676 அவை இன்னும் மோசமாகிவிட்டன. 353 00:26:36,138 --> 00:26:38,307 உங்களால் முடிந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். 354 00:26:38,307 --> 00:26:40,058 இது வழக்கமான சோதனை இல்லை. 355 00:26:42,686 --> 00:26:44,605 சாரா, என் கோப்புகளை எடுத்துக்கொள். 356 00:26:45,898 --> 00:26:47,024 எஸ்மே. 357 00:26:47,024 --> 00:26:49,026 -இவனுடைய நிலையில், நம்மால் முடியாது... -தெரியும். 358 00:26:49,026 --> 00:26:52,821 -நல்லதை விட பாதிப்பு அதிகம் ஆகும். -தெரியும் என்றேன். மற்றவர்களுக்கு உதவச் செல். 359 00:26:54,656 --> 00:26:55,782 கேப்ரியல்? 360 00:26:56,283 --> 00:26:58,869 அங்குள்ள பாதுகாவலர்களிடம் என்ன நடந்தாலும் இந்தப் பையனை பாதுகாக்க சொல். 361 00:27:07,669 --> 00:27:09,713 நீ பிழைத்துக்கொள்பவன், காஸ்பர். 362 00:27:11,423 --> 00:27:13,550 பிழைத்துக்கொள். 363 00:27:17,179 --> 00:27:19,848 -பயமாக இருக்கிறது. -இல்லை, உனக்கு இல்லை. இங்கே இருக்கிறோம். 364 00:27:19,848 --> 00:27:22,100 -நீ எங்கே திரும்புவாய்? -இடது. பிறகு வலது. 365 00:27:22,100 --> 00:27:23,185 பிறகு மீண்டும் வலது. 366 00:27:23,185 --> 00:27:26,396 ஆம். இப்போது நீ என்னுடன் தோட்டத்தின் மையத்தில் இருக்கிறாய். 367 00:27:27,022 --> 00:27:28,065 நீ அங்கே வந்துவிட்டாய். 368 00:27:29,358 --> 00:27:30,651 அப்படியா? 369 00:27:32,110 --> 00:27:33,737 பின்னால் வாருங்கள், நண்பர்களே! உடனே! 370 00:27:43,747 --> 00:27:46,250 அவை என்ன? மிகப்பெரிதாக இருக்கின்றன! 371 00:27:46,959 --> 00:27:49,253 அடக் கடவுளே. அவை என்ன? 372 00:27:51,588 --> 00:27:54,341 -ஆல்ஃப்? என்ன செய்கிறாய்? ஆல்ஃப்! -ச்சே... 373 00:28:01,390 --> 00:28:02,432 அப்படித்தான்! 374 00:28:03,642 --> 00:28:06,937 அது வேலை செய்யவில்லை. நெருப்பு வேலை செய்யவில்லை! 375 00:28:07,604 --> 00:28:08,981 வாருங்கள்! 376 00:28:09,565 --> 00:28:10,482 போ. தாவு. 377 00:28:12,651 --> 00:28:14,611 -நாம் கதவை மூட வேண்டும். -இங்கே. 378 00:28:14,611 --> 00:28:16,113 வா. சுத்து. 379 00:28:17,072 --> 00:28:18,782 செய்யுங்கள், நண்பர்களே! திருப்புங்கள். 380 00:28:20,200 --> 00:28:22,911 -நண்பர்களே, கேட் உடையப் போகிறது. சீக்கிரம். -அவ்வளவுதான், நிறைய வந்துவிட்டன. 381 00:28:25,372 --> 00:28:27,541 -இதற்கு மேல் வேகமாக நகராது! -சுத்து! சீக்கிரம்! 382 00:28:27,541 --> 00:28:30,127 நண்பர்களே. நண்பர்களே, சீக்கிரம்! சீக்கிரம் டார்வின்! மூடு! 383 00:28:42,139 --> 00:28:44,099 கோக்கேல்ஸ் - ஃபிரான்ஸ் ஃபோல்க்ஸ்டோன் - இங்கிலாந்து 384 00:28:46,185 --> 00:28:48,896 நாம் இங்கே இருக்க முடியாது. வா. 385 00:28:50,564 --> 00:28:52,107 போ. பென்னி, போ. 386 00:29:18,133 --> 00:29:20,677 கதகதப்பான நெருப்புக்கு இப்போது நான் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன். 387 00:29:20,677 --> 00:29:24,139 என் பையில் சில போர்வைகள் இருந்தன, ஆனால் அவை போய்விட்டன. 388 00:29:24,681 --> 00:29:26,642 கருவி, உணவு... 389 00:29:26,642 --> 00:29:28,393 தயவுசெய்து இப்போது உணவைப் பற்றி குறிப்பிடாதே. 390 00:29:29,353 --> 00:29:30,479 இன்னும் எவ்வளவு தூரம்? 391 00:29:33,148 --> 00:29:36,443 அந்த ஏலியன்கள் சாகவில்லை என்று நினைக்கிறேன். அவை தூங்கியிருக்கின்றன. 392 00:29:37,027 --> 00:29:39,446 ஆம், ஆனால் அவை பரிமாண வளர்ச்சி அடைவது போல வேறு மாதிரியாக எழுந்தன. 393 00:29:39,446 --> 00:29:41,573 அருமை. முதலில் வந்ததோடு எப்படி போராடுவது என்பதே நமக்குத் தெரியாது. 394 00:29:41,573 --> 00:29:43,116 வேறு எப்படி இவற்றை நிறுத்துவது... 395 00:29:45,202 --> 00:29:46,578 -இவற்றை... -கடவுளே. 396 00:29:50,249 --> 00:29:52,042 அந்த ஏலியன்களை மோதியது போல தெரிகிறது. 397 00:29:52,626 --> 00:29:54,711 எனவே அந்த மக்கள் எல்லோரும் இதிலிருந்து வந்தவர்கள். 398 00:29:55,879 --> 00:29:57,464 சரி, அந்த வழி அடைக்கப்பட்டிருக்கிறது. 399 00:29:58,048 --> 00:30:00,384 ஆம். அங்கே ஒரு மின் கம்பி இருக்கிறது. 400 00:30:00,384 --> 00:30:01,802 இந்த வழியாக போகலாம். 401 00:30:16,316 --> 00:30:17,985 இது அடைக்கப்பட்டிருக்கிறது. அப்படி போவோம். 402 00:30:22,823 --> 00:30:24,032 அடச்சே. 403 00:30:27,369 --> 00:30:31,331 இது இரயிலுக்கு உள்ளே கார் விபத்து போல இருக்கிறது. 404 00:30:31,331 --> 00:30:32,416 என்னவொரு குழப்பம். 405 00:30:33,709 --> 00:30:35,711 பார், பென்னி சோர்வடைந்துவிட்டாள், நடுங்குகிறாள். 406 00:30:35,711 --> 00:30:38,297 அவள் ஓய்வெடுக்க வேண்டும், இந்த நேரத்தில் நாம் இங்கே மாட்டிக்கொண்டிருப்பதால், நாம்... 407 00:30:38,297 --> 00:30:39,798 எனவே நீ கைவிடுகிறாய், இல்லையா? 408 00:30:39,798 --> 00:30:42,301 -எனக்குத் தெரியும். -நான் கைவிடவில்லை, முட்டாள். 409 00:30:42,301 --> 00:30:44,178 -கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்கிறேன். -"ஓய்வு வேண்டுமா"? 410 00:30:44,178 --> 00:30:45,345 எனவே நீதான் இப்போது அணியின் தலைவன். 411 00:30:45,345 --> 00:30:47,431 இருவரும் சண்டை போடுவதை நிறுத்துங்கள். 412 00:30:47,431 --> 00:30:48,682 ஜாம், நீ என்ன நினைக்கிறாய்? 413 00:30:51,393 --> 00:30:52,227 அதை விடு. 414 00:30:52,227 --> 00:30:55,814 நானும் டார்வினும் நாம் இழந்ததுக்கு மாற்றாக ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறோம். 415 00:30:55,814 --> 00:30:57,774 போகலாம். உன் இடைவேளையை அனுபவி, சரியா? 416 00:31:05,157 --> 00:31:06,658 இல்லை. சரி. 417 00:31:07,951 --> 00:31:10,370 -அப்படியென்றால், இதைப் பார்ப்போம், சரியா? -இதுவா? 418 00:31:10,370 --> 00:31:11,830 -ஆம். -இதுவா? 419 00:31:12,873 --> 00:31:14,416 ஆம், அருமை. இது நன்றாக இருக்கும். 420 00:31:15,125 --> 00:31:16,627 சரி, பென்னி. உள்ளே போ. 421 00:31:19,922 --> 00:31:22,299 பார், பார். போர்வை, எல்லாம் இருக்கிறது. 422 00:31:22,299 --> 00:31:24,009 சரி, பென்னி, படுத்துக்கொள். 423 00:31:27,221 --> 00:31:29,723 சரி. தலையணை கோட்டையே, இதோ வருகிறோம். 424 00:31:32,184 --> 00:31:35,896 இரவு விளக்கோடு நிறைவாக இருக்கிறது. 425 00:31:37,439 --> 00:31:38,607 சரி. 426 00:31:39,233 --> 00:31:40,317 சரி. 427 00:31:44,655 --> 00:31:45,656 குட் நைட், பென். 428 00:31:54,373 --> 00:31:55,916 நீ ரொம்ப நேரமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 429 00:31:56,625 --> 00:31:57,626 ஏதோ பிரச்சினையா? 430 00:31:58,293 --> 00:31:59,586 இதையெல்லாம் தவிர கேட்கிறேன். 431 00:32:00,712 --> 00:32:02,005 நீ அவளிடம் நன்றாக நடந்துகொள்கிறாய், தெரியுமா? 432 00:32:03,966 --> 00:32:05,384 நீ ஆச்சரியப்படுகிறாய். 433 00:32:06,051 --> 00:32:08,178 நான் உன்னை அப்படி பார்த்ததே இல்லை. 434 00:32:10,848 --> 00:32:12,558 அவளுக்கு என்ன தேவை என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. 435 00:32:16,436 --> 00:32:20,190 முன்பு அந்த விஷயம் என்ன? "இடதுபுறம் திரும்பு, வலதுபுறம் திரும்பு..." 436 00:32:23,151 --> 00:32:24,486 அது. 437 00:32:24,486 --> 00:32:25,571 புதிர். 438 00:32:26,655 --> 00:32:27,906 வினோதம், இல்லையா? 439 00:32:29,241 --> 00:32:33,036 சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் நிலவரம் மோசமாக இருந்தபோது, பென்னிக்கு... 440 00:32:33,579 --> 00:32:34,913 ஒருவித பாதிப்பு ஏற்படும், தெரியுமா? 441 00:32:35,497 --> 00:32:39,042 வரைபடங்கள் போன்ற சில விஷயங்கள் மட்டுமே அவளை அமைதிப்படுத்துவதை கவனித்தேன்... 442 00:32:39,042 --> 00:32:40,169 அதோடு பேருந்து வழித்தடங்களும். 443 00:32:40,878 --> 00:32:43,714 அவற்றை எல்லா இடங்களிலும் வைப்போம். அவள் பயப்படும்போது ஒன்றை எடுத்து, 444 00:32:43,714 --> 00:32:45,215 ஒரு பாதையைக் கண்டுபிடிப்போம். 445 00:32:46,758 --> 00:32:51,805 ஆனால், ஒருமுறை நாங்கள் நடந்து சென்ற போது சைக்கிள் ஓட்டுபவன் ஒருவன் அடிபட்டான். 446 00:32:52,598 --> 00:32:56,185 மெர்சிடிஸ் அவனை இடித்துத் தள்ளியது. அவன் பறந்துபோய் விழுந்தான், 447 00:32:56,810 --> 00:32:57,936 பென்னியிடம் இருந்து கொஞ்ச தூரத்தில். 448 00:32:58,645 --> 00:33:00,230 -கடவுளே. -ஆம். 449 00:33:00,731 --> 00:33:02,065 பென்னி பதற்றமாகிவிட்டாள். 450 00:33:02,649 --> 00:33:04,818 அதாவது அவள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது. வரைபடம் இல்லை, எதுவும் இல்லை. 451 00:33:05,694 --> 00:33:09,823 எனவே, அந்த இடத்திலேயே, நான் இந்த புதிரை உருவாக்கினேன். 452 00:33:10,657 --> 00:33:14,745 கடவுளே, மிகவும் முட்டாள்தனமாகத் தெரிகிறது, "இடதுபுறம் திரும்பு. வலதுபுறம் திரும்பு." 453 00:33:15,579 --> 00:33:17,456 அன்றிலிருந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். 454 00:33:18,916 --> 00:33:20,292 நீ அதை சரி செய்துவிட்டாய். 455 00:33:21,793 --> 00:33:23,128 அதை குணப்படுத்தினாய். 456 00:33:25,088 --> 00:33:27,966 கேள், இதற்கெல்லாம் நீ காரணம் இல்லை. உனக்கு அது தெரியும், இல்லையா? 457 00:33:27,966 --> 00:33:29,468 நான்தான் காரணம். 458 00:33:32,095 --> 00:33:33,555 இந்த முழு குழப்பத்துக்கும் நான்தான் காரணம். 459 00:33:35,057 --> 00:33:38,060 ஏலியன்களால் சூழப்பட்டு, ஒரு சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். 460 00:33:38,060 --> 00:33:41,355 சாப்பிட எதுவும் இல்லாமல், வெளியேற வழி இல்லாமல் இருக்கிறோம். 461 00:33:43,732 --> 00:33:45,192 என்னால் அதை சரிசெய்ய முடியாது. 462 00:33:48,862 --> 00:33:50,280 என் அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். 463 00:33:50,822 --> 00:33:52,824 நான் வீட்டில் இருந்திருந்தால், நாம் எல்லோரும் நன்றாக இருந்திருப்போம். 464 00:33:52,824 --> 00:33:55,536 நான் இருந்திருக்கமாட்டேன். பென் இருந்திருக்கமாட்டாள். 465 00:33:56,912 --> 00:33:59,164 நான் சொன்ன எதுவும் அவளை வீட்டை விட்டு வெளியே கொண்டு வரவில்லை. 466 00:33:59,665 --> 00:34:00,749 அதாவது எதுவும். 467 00:34:01,875 --> 00:34:02,918 ஆனால் நீ செய்தாய். 468 00:34:03,502 --> 00:34:04,503 நீ எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தாய். 469 00:34:05,254 --> 00:34:06,797 அது அவளை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது பார். 470 00:34:07,923 --> 00:34:11,426 பார், அது முக்கியமில்லை, சரியா? இப்போது ஓய்வு தேவைப்படுவது பென்னிக்கு மட்டுமில்லை. 471 00:34:11,426 --> 00:34:13,053 நீ ஏன் அவளுடன் தூங்கக் கூடாது? நான் கண்காணித்துக்கொள்கிறேன். 472 00:34:13,053 --> 00:34:16,348 இல்லை, எனக்குத் தூக்கம் வேண்டியதில்லை. நான் யோசிக்க வேண்டும். 473 00:34:17,516 --> 00:34:18,684 கொஞ்சம் நட. 474 00:34:19,184 --> 00:34:21,436 -பொதுவாக அது எனக்கு உதவும். -சரி. புரிந்தது. நன்றி. 475 00:34:24,313 --> 00:34:26,650 மன்னித்துவிடு. தனியாக இருக்க விரும்புகிறேன். 476 00:34:26,650 --> 00:34:27,943 நல்லது. எல்லாம் நல்லது. 477 00:34:46,545 --> 00:34:48,213 இன்னொரு ஜோடி அவசர உதவி விளக்குகள். 478 00:34:48,714 --> 00:34:50,757 -மொத்தம் எத்தனை? -ஐந்து. 479 00:34:51,550 --> 00:34:54,969 இரண்டு தண்ணீர் பாட்டில்கள், சில பிஸ்கட்கள், ஒரு ஸ்பேனர். 480 00:34:55,512 --> 00:34:59,725 கொஞ்சம் ரப்பர் கயிறு, யாரோ ஆல்ப்ஸ் மலையேற்றத்துக்கு பயன்படுத்திய கருவி. 481 00:35:03,103 --> 00:35:06,148 இதை கடந்து செல்ல வழி இல்லை. இதுதான் முடிவு. 482 00:35:06,148 --> 00:35:08,609 பிரயோசனமான ஏதாவது கிடைத்ததா? கடுகடுவென்று இருக்கிறாய், ம்? 483 00:35:09,693 --> 00:35:11,528 ஆம். சில பிஸ்கட்கள், எனவே... 484 00:35:11,528 --> 00:35:13,113 ஓ, அருமை. எனக்கு பயங்கர பசி. 485 00:35:13,113 --> 00:35:15,616 ஹேய்! அவசரநிலைகளுக்கு மட்டும்தான். 486 00:35:15,616 --> 00:35:17,618 சுற்றிப் பார், நண்பா. இதுதான் அதற்கு அர்த்தம். 487 00:35:17,618 --> 00:35:19,828 ஆல்ஃப், அவன் சொல்வது சரிதான். பாதை அடைபட்டுவிட்டது. 488 00:35:19,828 --> 00:35:22,039 அதை கடந்து செல்ல முடியாது. 489 00:35:22,539 --> 00:35:25,125 அதோடு, எப்படியும் எனக்குப் பசிக்கிறது, எனவே... 490 00:35:25,125 --> 00:35:27,628 அருமை. இந்த கொடுமைக்காரனோடு சேர்ந்துகொண்டாய். 491 00:35:28,212 --> 00:35:31,298 இவன் பள்ளியில் உன்னை சித்திரவதை செய்யும்போது... காஸ்பரை சித்திரவதை செய்யும்போது, 492 00:35:31,298 --> 00:35:33,008 உனக்காக நின்றது யார்? 493 00:35:33,675 --> 00:35:34,843 -நீ தான் நின்றாய். -ஆம். 494 00:35:35,427 --> 00:35:37,346 நீ எனக்குத் தேவைப்பட்டாலும், தேவைப்படவில்லை என்றாலும். 495 00:35:39,431 --> 00:35:40,641 என்ன? 496 00:35:40,641 --> 00:35:43,602 பார். எல்லாவற்றுக்கும் சண்டைப்போட வேண்டியதில்லை, ஆல்ஃபி. 497 00:35:44,186 --> 00:35:47,397 நாம் வாழ்வதற்கு காரியங்களைச் செய்கிறோம். ஆம், மான்டி அப்போது ஒரு கேவலமானவனாக இருந்தான், 498 00:35:47,397 --> 00:35:53,070 இன்னும் கூட சில நேரங்களில் இருக்கலாம், ஆனால் இப்போது நீ அவனைப் போலவே மோசமாக நடந்துகொள்கிறாய். 499 00:36:01,578 --> 00:36:02,829 நல்லது. என்னவோ. 500 00:36:03,622 --> 00:36:04,998 ஆனால் நான் இன்னும் உன்னை நம்பவில்லை. 501 00:36:04,998 --> 00:36:09,753 -உனக்கு என்னை தெரியும் என்று நினைக்கிறாய் தானே? -இல்லை, இல்லவே இல்லை. அதுதான் பிரச்சினை. 502 00:36:09,753 --> 00:36:10,921 நல்லது. 503 00:36:11,880 --> 00:36:13,757 என்ன வேண்டுமானாலும் கேள். நான் திறந்த புத்தகம் போன்றவன். 504 00:36:14,716 --> 00:36:15,801 திறந்த புத்தகமா, ம்? 505 00:36:17,845 --> 00:36:19,847 சரி. "கிஸ் ஃப்ரம் ஏ ரோஸ்." 506 00:36:20,430 --> 00:36:24,142 அந்த 90-களின் அருவருப்பானது உன் பிளேலிஸ்ட்டில் என்ன செய்கிறது? 507 00:36:24,142 --> 00:36:26,436 -மான்டிக்கு காதல் தோல்வியா? -உனக்கு அது தெரிய வேண்டியதில்லை. 508 00:36:27,896 --> 00:36:31,608 உன்னை நம்ப வேண்டும் என்றால், இதுதான் அதற்கான விலை. 509 00:36:31,608 --> 00:36:34,403 திறந்த புத்தகம் என்றாய், அதில் நான் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன். 510 00:36:37,197 --> 00:36:38,198 கொடுமை. 511 00:36:45,747 --> 00:36:47,708 இது என் பெற்றோரின் பாடல், சரியா? 512 00:36:50,127 --> 00:36:53,505 எனக்கு ஐந்து வயதோ என்னவோ இருக்கும்போது அவர்கள் அதற்கு நடனமாடுவதை பார்த்திருக்கிறேன். 513 00:36:54,464 --> 00:36:58,051 ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். நிஜ சிரிப்பு. 514 00:36:58,886 --> 00:37:01,221 அதனால், ஆம். நான் சில நேரங்களில் அதைக் கேட்பேன், 515 00:37:01,763 --> 00:37:06,310 ஏனென்றால் அது ஒரு காலத்தில்... விஷயங்கள் நன்றாக இருந்ததை நினைவுபடுத்தும். 516 00:37:09,563 --> 00:37:10,856 இப்போது சந்தோஷமா, முட்டாள்? 517 00:37:46,850 --> 00:37:49,686 நல்லது. நடக்கிறேன். 518 00:38:16,380 --> 00:38:17,881 இது பஸ்ஸில் நடந்தது போல, இல்லையா? 519 00:38:21,468 --> 00:38:24,096 விபத்துக்கு முன் திரு. எட்வர்ட்ஸ் ஓட்டிய ஒன்று. 520 00:38:25,347 --> 00:38:27,975 நொறுங்கிய சோடா டின் போல இருந்தது. 521 00:38:29,434 --> 00:38:30,644 அதிலிருந்து நாம் உயிருடன் வெளியேறினோம். 522 00:38:31,478 --> 00:38:32,813 நான் மீண்டும் கனவு காண்கிறேன். 523 00:38:35,315 --> 00:38:36,483 ஒரு விதத்தில். 524 00:38:37,067 --> 00:38:38,110 ஆம். 525 00:38:39,152 --> 00:38:40,696 எனவே நான் கனவு காண்கிறேன் என்றால், 526 00:38:42,197 --> 00:38:43,657 நீ எங்கே இருக்கிறாய்? 527 00:38:49,746 --> 00:38:50,831 நான் அவற்றோடு இருக்கிறேன். 528 00:38:51,331 --> 00:38:52,332 சரி, 529 00:38:53,375 --> 00:38:54,668 என்னில் ஒரு பகுதி. 530 00:38:57,129 --> 00:39:02,259 உன்னுடனும் அந்த இராணுவ வீரர் ட்ரெவாண்டேவுடனும், மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, 531 00:39:03,135 --> 00:39:04,803 ஏதோ என்னை இழுப்பதை உணர்ந்தேன். 532 00:39:04,803 --> 00:39:06,930 அது... அது ஒரு திசைகாட்டியின் முள் போல இருந்தது. 533 00:39:06,930 --> 00:39:08,807 அந்த இழுவையை பின்தொடர்ந்தேன், 534 00:39:10,017 --> 00:39:12,394 அது என்னை நேராக அவற்றின் உலகத்திற்கு அழைத்துச் சென்றது. 535 00:39:14,313 --> 00:39:15,480 அவற்றுக்குள். 536 00:39:15,480 --> 00:39:17,065 "அவற்றுக்குள்ளா"? 537 00:39:17,816 --> 00:39:21,904 ஆனால் என்னுடைய எல்லா முயற்சியையும் பயன்படுத்தி உன்னை தொடர்புகொண்டேன் என்பதை தெரிந்துகொள். 538 00:39:23,280 --> 00:39:24,781 நீ இங்கே இருக்கிறாய். 539 00:39:25,991 --> 00:39:27,075 உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். 540 00:39:29,828 --> 00:39:30,954 நானும்தான். 541 00:39:33,165 --> 00:39:34,499 நான் வெளியேற விரும்பினேன். 542 00:39:35,292 --> 00:39:36,627 நான்... முடியும் என்று நினைத்தேன். 543 00:39:38,629 --> 00:39:40,589 இங்கே நிலைமை மோசமடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். 544 00:39:40,589 --> 00:39:43,133 ரேடியோவில் தாக்குதல் பற்றி ஏதோ சொன்னார்கள். 545 00:39:43,842 --> 00:39:46,803 ஒருவேளை அது வேலை செய்திருக்கலாம். ஒருவேளை நாம் அவற்றைக் காயப்படுத்தியிருக்கலாம். 546 00:39:46,803 --> 00:39:49,932 அதனால்தான் விளக்குகள் மின்னுகின்றன. அதோடு... ஒலி... 547 00:39:49,932 --> 00:39:51,642 அவை கோபப்பட்டிருக்க வேண்டும். 548 00:39:51,642 --> 00:39:53,352 அவை எந்த சிக்னல் அனுப்பினாலும், 549 00:39:53,352 --> 00:39:55,604 அதாவது, அவை வலுவாக இருக்க வேண்டும், ஏனென்றால்... 550 00:39:57,439 --> 00:39:59,191 -என்னால் இறுதியாக உன்னைப் பார்க்க முடிகிறது. -உன்னைப் பார்க்க முடிகிறது. 551 00:40:00,984 --> 00:40:03,195 அதன் அர்த்தம் உனக்குத் தெரியவில்லையா? 552 00:40:03,195 --> 00:40:05,197 நீ இன்னும் திரும்புவதற்கான வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாய். 553 00:40:06,365 --> 00:40:10,911 என்னிடம் திரும்பிவா. நான் உன்னை அடையும் வழியைக் கண்டுபிடிப்பது போல. 554 00:40:12,412 --> 00:40:14,248 -அப்படியா? -ஆம். 555 00:40:15,582 --> 00:40:17,584 நீ அவற்றோடு இருந்தால், நீ அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 556 00:40:17,584 --> 00:40:21,296 அவை என்ன, அவற்றோடு எப்படி சண்டையிடுவது, அவற்றை எப்படி முடிப்பது என்பது பற்றி. 557 00:40:21,797 --> 00:40:24,633 பிறகு, ஒன்றாக, நாங்கள் உன்னை திரும்பப் பெற முடியும். உங்கள் எல்லோரையும். 558 00:40:25,759 --> 00:40:27,719 நீ முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 559 00:40:28,262 --> 00:40:30,305 நீ விரும்பினால் நான் செய்வேன். 560 00:40:35,060 --> 00:40:36,478 நான் கைவிடமாட்டேன். 561 00:40:38,230 --> 00:40:39,231 எப்போதும். 562 00:40:45,612 --> 00:40:47,781 ஹேய், மான்டி. மான்டி. 563 00:40:48,448 --> 00:40:50,659 -என்ன? -உனக்கு திசைகளைப் பற்றி நன்றாகத் தெரியும் தானே? 564 00:40:50,659 --> 00:40:51,743 "இடதுபுறம் திரும்பு, வலதுபுறம் திரும்பு"? 565 00:40:52,327 --> 00:40:53,912 ஆம். ஆம். 566 00:40:53,912 --> 00:40:55,372 இதை சரிசெய்வதற்கான நேரம். 567 00:41:45,422 --> 00:41:46,798 மான்டி! 568 00:41:49,259 --> 00:41:51,261 மான்டி, நீ எங்கே இருக்கிறாய்? 569 00:41:51,261 --> 00:41:53,972 ஆல்ஃபி! 570 00:41:53,972 --> 00:41:57,100 -என்ன? என்ன நடந்தது? -அவை வருகின்றன. எனக்கு சத்தம் கேட்டது. 571 00:41:59,561 --> 00:42:01,146 யாரோ என் பையில் தேடியிருக்கிறார்கள். 572 00:42:01,146 --> 00:42:02,689 எனக்குத் தெரியும். அவன் என்ன எடுத்திருக்கிறான்? 573 00:42:03,190 --> 00:42:04,441 -ஏறும் கருவி. -என்ன? 574 00:42:04,441 --> 00:42:06,318 எழுந்துவிட்டீர்கள். நல்லது. 575 00:42:07,236 --> 00:42:08,237 ஏனென்றால் நாம் கிளம்புகிறோம். 576 00:42:08,237 --> 00:42:09,863 வாருங்கள், நண்பர்களே. 577 00:42:12,491 --> 00:42:17,579 பார்த்தீர்களா? இதைக் கடந்து செல்லும் பாதை இது. கயிற்றைப் பின்தொடருங்கள், கண்ணாடியை கவனியுங்கள். 578 00:42:17,579 --> 00:42:19,248 அவன் சில ஜன்னல்களை உடைக்க வேண்டியிருந்தது. 579 00:42:19,248 --> 00:42:20,332 மான்டி! 580 00:42:21,667 --> 00:42:22,835 நீ இதைச் செய்தாயா? 581 00:42:22,835 --> 00:42:24,002 ஆம், நான்தான் செய்தேன். 582 00:42:24,795 --> 00:42:26,213 தயாரா? 583 00:42:26,213 --> 00:42:27,506 அருமை. 584 00:42:27,506 --> 00:42:28,674 என்னைப் பின்தொடரு, பென். 585 00:43:21,351 --> 00:43:23,145 -ஏதாவது வெட்டு ஏற்பட்டதா? -இல்லை. 586 00:43:23,145 --> 00:43:24,897 எல்லாம் நலமா? சரி. 587 00:43:29,401 --> 00:43:32,487 -அவை வருகின்றன. போகலாம்! வாருங்கள். -போ. 588 00:43:41,914 --> 00:43:44,124 நாம் மேல்நோக்கி ஓடுவதை கவனித்தாயா? 589 00:43:44,124 --> 00:43:45,834 நாம் முடிவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும். 590 00:43:46,627 --> 00:43:47,628 பார்! 591 00:43:50,339 --> 00:43:51,840 -ஓ, இல்லை. -என்ன கொடுமை? 592 00:43:53,550 --> 00:43:55,344 -நண்பர்களே, தயவுசெய்து... -சுவர்களைப் பாருங்கள். 593 00:43:55,886 --> 00:43:56,970 என்ன? 594 00:44:00,307 --> 00:44:01,183 கடவுளே. 595 00:44:01,183 --> 00:44:03,894 அவை வெடிபொருட்கள். அவர்கள் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை உடைக்கப் போகிறார்கள். 596 00:44:03,894 --> 00:44:05,521 -அடக் கடவுளே. -ச்சே. உதவி! 597 00:44:05,521 --> 00:44:07,272 உதவி! 598 00:44:08,440 --> 00:44:10,484 யாராவது இருக்கிறீர்களா! தயவுசெய்து! உதவி! தயவுசெய்து! 599 00:44:10,484 --> 00:44:11,902 தயவுசெய்து! உதவி! 600 00:44:12,778 --> 00:44:13,779 யாராவது இருக்கிறீர்களா! 601 00:44:24,915 --> 00:44:25,791 ஹேய்! 602 00:44:25,791 --> 00:44:29,545 சுரங்கப்பாதையில் யாரோ இருக்கிறார்கள்! ஹேய்! யாரோ உள்ளே இருக்கிறார்கள்! 603 00:44:29,545 --> 00:44:32,256 -நீ என்ன சொல்கிறாய்? -குழந்தைகள் போல தெரிகிறது, சார். 604 00:44:32,256 --> 00:44:34,716 எனக்கு ஆறு பேர் தேவை, உடனே! 605 00:44:45,018 --> 00:44:46,645 அடக் கடவுளே. அங்கே யாரோ ஒருவர் இருக்கிறார். 606 00:44:46,645 --> 00:44:48,480 -வாருங்கள். -சீக்கிரம்! 607 00:44:48,480 --> 00:44:51,066 மேலே ஏறுங்கள்! அவளைத் தூக்கு! 608 00:44:51,066 --> 00:44:53,235 -சீக்கிரம்! -பென், போ. 609 00:44:53,235 --> 00:44:54,319 வா! 610 00:45:02,119 --> 00:45:03,996 -மான்டி! -அந்த இடத்தை காலி செய்யுங்கள்! 611 00:45:03,996 --> 00:45:05,455 சீக்கிரம்! 612 00:45:05,455 --> 00:45:07,666 -வா! -வா. நான் உன்னைப் பிடித்துக்கொண்டேன். 613 00:45:07,666 --> 00:45:08,876 சீக்கிரம், அவை வருகின்றன! 614 00:45:11,336 --> 00:45:12,629 வெடிபொருட்களை தயார் செய்யுங்கள்! 615 00:45:12,629 --> 00:45:13,881 -டார்வின்! -மான்டி! 616 00:45:20,387 --> 00:45:21,638 நான் சிக்னல் கொடுத்தவுடன்! 617 00:45:23,974 --> 00:45:26,602 மூன்று, இரண்டு, ஒன்று! 618 00:46:00,844 --> 00:46:02,095 எல்லோரும் வந்துவிட்டார்கள்! 619 00:46:08,268 --> 00:46:12,231 நன்றி, நண்பா. 620 00:46:12,231 --> 00:46:13,857 -சரி, பரவாயில்லை. -ச்சே. 621 00:46:13,857 --> 00:46:15,484 -மான்டி! -பென். 622 00:46:15,484 --> 00:46:18,487 -ஹேய். நீ அங்கே இறந்துவிட்டாய் என்று நினைத்தேன். -ஆம், நானும்தான். 623 00:46:19,363 --> 00:46:21,281 -நீ நலமா? -ஆ! 624 00:46:23,492 --> 00:46:26,453 -சின்ன வெட்டுதான். -அடடா. 625 00:46:26,453 --> 00:46:27,538 டார்வின். 626 00:46:28,205 --> 00:46:30,582 -யாரோ வருகிறார்கள். -மருத்துவர். மருத்துவர்! 627 00:46:30,582 --> 00:46:32,125 வா. இவனைத் தூக்கு. 628 00:46:32,125 --> 00:46:33,377 போ. 629 00:46:34,920 --> 00:46:37,130 வா. உனக்கு ஒன்றும் ஆகாது, சரியா? 630 00:46:37,130 --> 00:46:39,341 பார், இங்கே மருத்துவர்கள் இருக்கிறார்கள். உனக்கு சிகிச்சை தருவார்கள். 631 00:46:39,341 --> 00:46:41,009 இவர்கள் உன்னை சரி செய்துவிடுவார்கள். 632 00:46:44,805 --> 00:46:46,181 சரி, சகோ. 633 00:46:49,142 --> 00:46:53,897 -காஸ்பர். காஸ்பரைக் கண்டுபிடி. -என்ன? 634 00:47:00,779 --> 00:47:02,281 நாம் அவனை அழைத்துச் செல்ல வேண்டும். 635 00:47:09,705 --> 00:47:13,000 -இவன்... -நன்றாக இருக்கிறான். இவனுக்கு சரியாகிவிடும். 636 00:47:13,542 --> 00:47:15,752 ஹேய், அவர்கள் மருத்துவர்கள். அவனைப் பார்த்துக் கொள்வார்கள். 637 00:47:15,752 --> 00:47:17,504 சின்ன காயம்தான், பென். ஒன்றும் ஆகாது. 638 00:47:19,506 --> 00:47:20,841 அவன் என்ன சொன்னான்? 639 00:47:21,884 --> 00:47:23,010 நாம் காஸ்பரைக் கூட்டி வருவோம். 640 00:47:30,309 --> 00:47:31,602 சரி, அவனைக் கூட்டி வருவோம். 641 00:49:50,949 --> 00:49:52,951 வசனத் தமிழாக்கம் அருண்குமார்