1 00:00:53,679 --> 00:00:54,721 காலை வணக்கம். 2 00:00:55,848 --> 00:00:57,266 காபி அடுப்பில் இருக்கிறது. 3 00:00:59,893 --> 00:01:00,936 சீக்கிரம் எழுந்துவிட்டீர்களா? 4 00:01:02,563 --> 00:01:04,272 உலகம் மோசமான நிலைக்குப் போனதிலிருந்துதான். 5 00:01:09,736 --> 00:01:11,238 நீ இதைப் பார்க்க விரும்புகிறாயா? 6 00:01:11,989 --> 00:01:14,074 யார் எங்கே காணாமல் போனார்கள் என்ற தகவல்களா? 7 00:01:14,074 --> 00:01:16,618 கடத்தப்பட்டார்கள். மார்டின் அவை லீசாவை "கடத்திவிட்டன" என்றார். இங்கிருந்து. 8 00:01:16,618 --> 00:01:18,954 அதை திடீரென உணர்ந்தபோது எனக்கு தூக்கம் வரவில்லை. 9 00:01:18,954 --> 00:01:23,876 நீ சொன்ன சிறுவன் ஃபெலிக்ஸ் கடத்தப்படுவதற்கு முன்பு வில்லியம்ஸின் சோளக்கொல்லை பொம்மையை பார்த்திருந்தால், 10 00:01:23,876 --> 00:01:26,378 கடத்தப்பட்ட மற்ற இடங்களில் உள்ள விஷயங்களையும் அவன் பார்த்திருக்க வேண்டும், சரிதானே? 11 00:01:26,378 --> 00:01:30,299 எட்னா ரெனால்ட்ஸை கடைசியாகப் பார்த்த இந்த மூலையில், ஒரு தண்ணீர் குழாய் இருக்கிறது. 12 00:01:30,299 --> 00:01:33,844 முட்டாள் ஒருவன் அதில் முகத்தை வரைந்திருக்கிறான். ஒருவேளை அவன் அந்த முகத்தைப் பார்த்திருக்கலாம். 13 00:01:33,844 --> 00:01:36,722 டெலோரஸ் கிம்மை கடைசியாகப் பார்த்த அழகு நிலையம். 14 00:01:36,722 --> 00:01:40,475 அடையாளம் கத்தரிக்கோல் வடிவத்தில் இருந்தது. ஒருவேளை அவன் அதை வரைந்திருக்கலாம். 15 00:01:40,475 --> 00:01:41,977 அல்லது அதுதான் இடத்தைப் பற்றிய தகவல்களாக இருக்கலாம். 16 00:01:41,977 --> 00:01:43,437 எண்கள். 17 00:01:43,437 --> 00:01:47,399 ஒருவேளை ஷெரிஃப் டைசனின் பேட்ஜ் போல இந்த ஓவியங்கள் ஒன்றில் அவை இருக்கலாம். 18 00:01:47,983 --> 00:01:51,445 நான் ஒவ்வொரு ஓவியத்தையும், வரியையும், வார்த்தையையும், எண்ணையும் சோதிக்கிறேன். 19 00:01:52,529 --> 00:01:54,656 - அது இங்குதான் எங்கோ இருக்க வேண்டும். - அல்லது கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 20 00:01:54,656 --> 00:01:56,366 நான் கண்டுபிடித்ததும் ஓய்வெடுக்கிறேன். 21 00:02:05,042 --> 00:02:06,793 - நான்... - சுறுசுறுப்பானவரா? 22 00:02:06,793 --> 00:02:07,961 நான்... 23 00:02:08,753 --> 00:02:12,216 - "உன்னைப் போலத்தான்" என்று சொல்ல வந்தேன். - அடடா. 24 00:02:16,345 --> 00:02:18,639 எல்லோரும் காணாமல் போகும் நகரத்தில் சுற்றித்திரிவது உங்களுக்கு 25 00:02:18,639 --> 00:02:21,141 எப்படி இருக்கும் என்று நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறேன். 26 00:02:21,141 --> 00:02:25,812 ஆனால் நேற்று இரவு அவர்களில் ஒருவர் திரும்பி வரும் வரை நீங்கள் உங்கள் நிதானத்தை இழக்கவில்லை. 27 00:02:27,981 --> 00:02:28,982 இப்போது... 28 00:02:35,948 --> 00:02:39,117 நீங்கள் எல்லோரையும் தேடவில்லை, இல்லையா? 29 00:02:41,203 --> 00:02:42,496 நீங்கள் யாரையோ தேடுகிறீர்கள். 30 00:02:46,083 --> 00:02:47,459 பில்லியா? 31 00:02:49,670 --> 00:02:50,879 என்ன? 32 00:02:50,879 --> 00:02:51,964 எனக்கு இந்த எண்ணைத் தெரியும். 33 00:02:56,260 --> 00:02:59,721 அது ஒரு பிளேட். வண்டியின் எண். பென் ஷெல்டனுக்குச் சொந்தமானது. 34 00:03:00,681 --> 00:03:06,270 அவரது உறவினர்கள், கேலும் செட்தும், அவரது வண்டியை ஒருநாள் எடுத்துச்சென்று இங்கே தொலைந்து போனார்கள். 35 00:03:06,270 --> 00:03:07,896 காணாமல் போன முதல் இருவர் அவர்கள்தான். 36 00:03:07,896 --> 00:03:10,649 ஷெரிஃப் டைசன் வண்டியைக் கண்டுபிடித்தார், ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை, 37 00:03:10,649 --> 00:03:12,943 பிறகு அவரும் அதே இடத்தில் தொலைந்து போனார். 38 00:03:12,943 --> 00:03:14,945 பிறகு ஷெல்டனும் அவரது மனைவியும் கூட தொலைந்து போனார்கள். 39 00:03:15,863 --> 00:03:16,864 இந்த இடத்தில். 40 00:03:25,372 --> 00:03:26,707 சுழல்கள். 41 00:03:33,463 --> 00:03:34,673 ஒருவேளை... 42 00:03:35,799 --> 00:03:37,342 ஒரு சுழல் வடிவில்... 43 00:03:38,969 --> 00:03:40,137 நகர்வதாக... 44 00:03:43,265 --> 00:03:44,308 யோசித்தால்? 45 00:03:46,852 --> 00:03:48,187 இங்கே மையத்தில் என்ன இருக்கிறது? 46 00:03:50,022 --> 00:03:51,398 அது பென் ஷெல்டனின் பண்ணை. 47 00:03:56,987 --> 00:04:02,117 பென் தொலைந்து போன பிறகு, இராணுவம் கையகப்படுத்தும் வரை பண்ணை காலியாகவே இருந்தது. 48 00:04:02,117 --> 00:04:05,078 அவர்கள் அதை உணவையும் மற்ற பொருட்களையும் வைக்கும் கிடங்காக மாற்றிவிட்டார்கள். 49 00:04:09,917 --> 00:04:12,586 அவர்கள் அதை மட்டுமே வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 50 00:04:16,714 --> 00:04:17,716 வாருங்கள். 51 00:04:37,236 --> 00:04:40,322 இந்த படைகள், பாதுகாப்பு, போர்க்காலம் போல தயார் நிலை. 52 00:04:40,322 --> 00:04:42,157 அவர்கள் எதை பாதுகாக்கிறார்கள்? 53 00:04:43,242 --> 00:04:45,244 அவர்கள் உணவை பாதுகாப்பதற்கு வாய்ப்பே இல்லை. 54 00:04:50,040 --> 00:04:51,875 அவர்கள் நிச்சயமாக எதையோ மறைக்கிறார்கள். 55 00:04:53,126 --> 00:04:54,378 ஹேய், வாருங்கள். 56 00:05:13,981 --> 00:05:15,566 அருகில் சென்று நன்றாக பார்க்க வேண்டும். 57 00:05:46,555 --> 00:05:48,557 அங்கே கீழே என்ன இருக்கிறது? 58 00:05:53,896 --> 00:05:56,064 - சிக்னல் அதிகரிக்கிறது. - சரி. அது செயல்பாட்டில் இருக்கிறது. 59 00:05:56,565 --> 00:05:57,941 தயாராகுங்கள். 60 00:06:06,700 --> 00:06:08,785 மீட்பு படை, உங்கள் நிலைக்குப் போங்கள். 61 00:06:19,171 --> 00:06:21,048 ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டோம். அவரை மேலே தூக்குங்கள்! 62 00:06:35,729 --> 00:06:36,897 சார்ஜ், அங்கே பாருங்கள்! 63 00:06:37,564 --> 00:06:39,775 அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள்! உங்களுக்குப் பின்னால்! 64 00:06:49,660 --> 00:06:52,746 - ச்சே. ஓடுங்கள்! ஓடிக்கொண்டே இருங்கள். - பொறு! 65 00:06:52,746 --> 00:06:54,248 ச்சே. 66 00:06:55,374 --> 00:06:59,419 நகராதே! உன் கைகளை மேலே தூக்கு. 67 00:07:01,129 --> 00:07:02,130 சரி, அமைதியாக இரு. 68 00:08:36,892 --> 00:08:39,186 யோ, காஸ்ப். இது என்ன மர்மமான இடம்? 69 00:08:42,313 --> 00:08:44,024 இங்குதான் என்னை வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். 70 00:08:44,608 --> 00:08:45,692 என்ன, உனக்குத் தெரியாதா? 71 00:08:46,902 --> 00:08:49,363 இவை என் அம்மா கையாண்டது மாதிரியான அறிக்கைகள் போன்றவை இல்லை. 72 00:08:50,280 --> 00:08:52,574 அதாவது, இவை எல்லாமே ஃபிரெஞ்சு மொழியில் இருக்கின்றன. எனவே, யாருக்குத் தெரியும்? 73 00:08:53,742 --> 00:08:56,870 அவர்கள் இங்கே என்ன செய்திருந்தாலும், அது அவர்களை காப்பாற்றவில்லை போல தெரிகிறது. 74 00:08:57,955 --> 00:09:00,165 உன்னைத் தவிர, நண்பா. நீ உயிர் பிழைத்துக்கொண்டாய். 75 00:09:02,376 --> 00:09:03,961 என்ன நடந்தது, காஸ்ப்? 76 00:09:04,545 --> 00:09:08,674 உறுதியாகத் தெரியவில்லை. நான் கண்விழித்தது கூட எனக்கு உண்மையில் நினைவில்லை. 77 00:09:11,134 --> 00:09:12,344 இங்கேதான் படுத்திருந்தேன். 78 00:09:16,974 --> 00:09:19,393 அதிர்ஷ்டவசமாக அவை உள்ளே நுழைந்தபோது நீ இங்கே இல்லை, இல்லையா? 79 00:09:20,769 --> 00:09:23,063 இவர்கள் என்ன ஆனார்கள்? இவர்கள் இங்கே இருந்தார்களா? 80 00:09:25,816 --> 00:09:27,651 எவா - எல்கின் - நடோரி - ப்ரிஷா 81 00:09:27,651 --> 00:09:28,735 யார் இவர்கள்? 82 00:09:28,735 --> 00:09:30,571 ஓ, பொறு. நீதான் இதை வரைந்திருக்கிறாய், சரியா? 83 00:09:33,448 --> 00:09:34,825 ஆம், வரைந்திருப்பேன். 84 00:09:35,325 --> 00:09:36,535 ஆனால் எனக்கு அது ஞாபகம் இல்லை. 85 00:09:41,415 --> 00:09:42,708 நான் இவர்களைப் பார்த்தேனா என்று தெரியாது. 86 00:09:42,708 --> 00:09:44,793 நீ இவர்களை பார்க்கவில்லை என்றால் எப்படி இவர்களை வரைந்தாய்? 87 00:09:44,793 --> 00:09:49,506 எவா, எல்கின், நடோரி. கேட்டமாதிரி இருக்கிறதா? 88 00:09:49,506 --> 00:09:50,674 அவர்கள்... 89 00:09:50,674 --> 00:09:53,427 தனிச்சிறப்புவாய்ந்த குழந்தைகள். அவர்கள் எல்லோரும் இங்கே இருந்திருக்கிறார்கள். 90 00:09:53,427 --> 00:09:54,887 நீ கூடத்தான், காஸ்பர் 91 00:09:56,013 --> 00:09:58,182 இவர்கள் இந்த வார்டில் உன்னுடன் நோயாளிகளாக இருந்திருக்கிறார்கள். 92 00:09:58,849 --> 00:10:02,019 நோயாளிகள் போல தெரியவில்லை. "தனிச்சிறப்புவாய்ந்த குழந்தைகள்"? 93 00:10:02,019 --> 00:10:05,022 - இவர்களை வைத்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். - ஆனால் எதற்காக? 94 00:10:05,022 --> 00:10:07,482 - எதற்காக இவர்களை பரிசோதனை செய்தனர்? - யாருக்குத் தெரியும்? 95 00:10:08,483 --> 00:10:09,693 இவனைச் செய்யவில்லை. 96 00:10:09,693 --> 00:10:11,862 இவையெல்லாம் உலக பாதுகாப்பு கூட்டணியின் ஒரு அங்கம். 97 00:10:11,862 --> 00:10:15,115 அப்படியென்றால் இது இராணுவத்துடையது. எனவே குழந்தைகள் ஒவ்வொருவரும்... 98 00:10:15,115 --> 00:10:16,200 நீயும்... 99 00:10:17,117 --> 00:10:18,118 ஒரு ஆயுதமாக இருக்கலாம். 100 00:10:18,118 --> 00:10:20,704 - அது நமக்குத் தெரியாது. - ஆனால் அர்த்தம் தருகிறது, சரிதானே? 101 00:10:20,704 --> 00:10:23,707 இவர்கள் ஆபத்தானவர்களாக இல்லாவிட்டால் ஏன் இங்கேயே பூட்டி வைக்கப்பட்டார்கள்? 102 00:10:23,707 --> 00:10:26,418 அது... அது ஒரு நல்ல கேள்வி. 103 00:10:27,836 --> 00:10:32,633 காஸ்ப், நீ ஏலியன்களை எப்படி வெல்வது என்று கண்டுபிடிக்கப் போகிறாய் என்று என் கனவில் சொன்னாய். 104 00:10:33,342 --> 00:10:34,551 கண்டுபிடித்தாயா? 105 00:10:36,595 --> 00:10:39,181 மற்றவர்கள். குழந்தைகள், அவர்கள்தான் தீர்வுக்கான ஒரே வழியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். 106 00:10:39,181 --> 00:10:41,642 - நிஜமாகவா? - நான் அவர்களை உணர்கிறேன். 107 00:10:43,268 --> 00:10:44,269 அவர்கள் பேசுவதைக் கேட்கிறேன். 108 00:10:50,150 --> 00:10:53,320 நான் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற பிறகும். அது அவர்கள்தான் என்று எனக்குத் தெரியாது. 109 00:10:55,155 --> 00:10:56,990 முதலில், அது நீயென்று நினைத்தேன், ஜாம். 110 00:11:00,702 --> 00:11:04,289 ஆனால் அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள். இன்னும் பேசுகிறார்கள். 111 00:11:08,335 --> 00:11:09,878 அவர்கள் இப்போது அமைதியாக இருக்கின்றனர். 112 00:11:10,963 --> 00:11:12,297 அவர்கள் வெகு தொலைவில் இருப்பது போல இருக்கிறது. 113 00:11:15,217 --> 00:11:16,218 அழைக்கிறார்கள். 114 00:11:18,804 --> 00:11:20,472 நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தெரியவில்லை. 115 00:11:21,598 --> 00:11:22,599 இணைக்கப்பட்டு. 116 00:11:24,268 --> 00:11:28,063 ஆனால் ஒருவேளை... ஒருவேளை நாங்கள் அதை எதிர்த்து போராட பயன்படுத்தலாம். 117 00:11:28,564 --> 00:11:29,731 அப்படியென்றால் அவர்களைக் கண்டுபிடிப்போம். 118 00:11:29,731 --> 00:11:32,276 சரி, காஸ்ப். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பாரிஸில் எங்காவதா? 119 00:11:32,276 --> 00:11:33,986 - இன்னும் தொலைவில் என்று நினைக்கிறன். - எனக்குப் புரியவில்லை. 120 00:11:34,862 --> 00:11:38,323 காஸ்பர்தான் தீர்வு என்று நினைத்தேன். இப்போது அந்த மற்ற குழந்தைகள்தான் தீர்வு என்று சொல்கிறோம். 121 00:11:38,323 --> 00:11:40,492 இவனுக்கு அவர்களை சந்தித்தது கூட ஞாபகமில்லை. 122 00:11:40,492 --> 00:11:43,662 ஓ, இல்லை. ஆனால், இல்லை, கவலைப்படாதே, ஏனென்றால் அவனுடைய மூளை அதிநவீனமானது இல்லையென்றாலும் 123 00:11:43,662 --> 00:11:46,248 அவர்கள் பேசுவது இவன் மூளைக்குக் கேட்கிறது. 124 00:11:47,207 --> 00:11:50,335 இதில் ஏதாவது உனக்கு இயல்பானதாக தெரிகிறதா? 125 00:11:50,335 --> 00:11:52,129 - அட, மான்டி. தேவையில்லை... - இல்லை, ஆல்ஃப். 126 00:11:52,838 --> 00:11:53,839 எனக்குப் புரிகிறது. 127 00:11:54,548 --> 00:11:57,217 இது கொஞ்சம் கிறுக்குத்தனமானது, ஆனால் இந்த மொத்த பயணமே கிறுக்குத்தனமானதுதான். 128 00:11:57,926 --> 00:11:59,803 ஒவ்வொரு கிறுக்குத்தனமான விஷயமும்தான் நம்மை இங்கே கொண்டு வந்திருக்கிறது. 129 00:12:01,138 --> 00:12:02,139 காஸ்பரிடம். 130 00:12:03,140 --> 00:12:06,351 போரில் வெற்றி பெற அந்த குழந்தைகள் உதவுவார்கள் என அவன் சொன்னால், அவர்களைக் கண்டுபிடிப்போம். 131 00:12:08,478 --> 00:12:11,273 - அட, நம்மிடம் இழக்க என்ன இருக்கிறது? - எங்கிருந்து தொடங்குவது என்றே நமக்குத் தெரியாது. 132 00:12:11,273 --> 00:12:12,858 இது எப்படி? 133 00:12:12,858 --> 00:12:15,319 ஆர்லியானுக்கு அருகில் ஒரு ஆய்வகம் இருக்கிறது. 134 00:12:15,319 --> 00:12:17,988 அல்லது அவர்கள் ஒன்றை கட்டியிருக்கலாம். அது சரிதானா, காஸ்ப்? 135 00:12:19,573 --> 00:12:20,908 ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். 136 00:12:22,201 --> 00:12:24,953 எனக்குக் கேட்டால், நாம் அவர்களின் குரலைப் பின்தொடரலாம். 137 00:12:25,579 --> 00:12:27,831 - எனக்கு அது போதும். போகலாம். - நானும் வருகிறேன். 138 00:12:27,831 --> 00:12:29,333 சரி, கண்டிப்பாக. ஏன் கூடாது? 139 00:12:29,333 --> 00:12:32,669 நீ சொன்னது போல, இழக்க எதுவுமில்லை, சரியா? நம்முடைய உயிர்களைத் தவிர. 140 00:12:38,383 --> 00:12:40,469 அங்கே இருக்கிறது. பியர்ஸ் முகாம். 141 00:12:40,469 --> 00:12:41,887 எனவே, நீ என்ன நினைக்கிறாய்? 142 00:12:50,103 --> 00:12:51,855 நாம் உன் மகளை திரும்ப பெறப் போகிறோம். 143 00:12:55,817 --> 00:12:56,944 உள்ளே போக ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். 144 00:13:01,365 --> 00:13:03,408 மிகவும் செங்குத்தாக இருப்பதாக தோன்றவில்லையா, கிளார்க்? 145 00:13:03,408 --> 00:13:05,661 நாம் நுழைவாயில் வழியாக சென்றுவிடுவோம் என்று யூகிக்கிறேன். 146 00:13:05,661 --> 00:13:08,956 தங்குமிடங்களை வைத்துப் பார்த்தால், குறைந்தது 50 ஆயுதம் ஏந்திய வீரர்கள் அங்கே இருக்க வேண்டும். 147 00:13:08,956 --> 00:13:12,751 நாம் யூகிக்கும் முன்பு, அந்த முகாமை கண்காணிக்க ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். 148 00:13:13,585 --> 00:13:15,379 நம்மால் முடிந்த தகவல்களைச் சேகரிப்போம். 149 00:13:15,379 --> 00:13:17,631 கிளார்க், நாம் நிற்காமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம். 150 00:13:19,091 --> 00:13:20,092 நம்மைப் பார். 151 00:13:21,009 --> 00:13:23,470 40 பேரோடு தொடங்கினோம். இப்போது 12 பேராக குறைந்துவிட்டோம். 152 00:13:24,596 --> 00:13:26,640 - நாம் ஜாக்கை இழந்துவிட்டோம். - பதினான்கு. 153 00:13:28,892 --> 00:13:30,394 லூக்கையும் என்னையும் சேர்த்தால் 14 பேர். 154 00:13:30,394 --> 00:13:32,688 நான் ஏதாவது செய்யக்கூடிய நபர்களைப் பற்றி பேசுகிறேன். 155 00:13:32,688 --> 00:13:34,147 நான் உங்கள் துப்பாக்கியை சுத்தம் செய்கிறேன், ஹேன்லி. 156 00:13:34,147 --> 00:13:37,693 சரி, இப்போது. மக்கள் தங்கள் கவலைகளை தெரிவிக்க வரவேற்கப்படுகிறார்கள். 157 00:13:39,069 --> 00:13:40,070 வேறு யாராவது? 158 00:13:40,070 --> 00:13:43,156 கோபிக்க வேண்டாம், ஆனால் நம்மில் எத்தனை பேரை இழக்க தயாராக இருக்கிறோம்? 159 00:13:43,949 --> 00:13:44,950 ஒருத்தியை மீட்க? 160 00:13:45,993 --> 00:13:46,994 ஒருத்தியா? 161 00:13:47,578 --> 00:13:49,246 அவள் "ஒருத்தி" அல்ல, அவள் சாரா. 162 00:13:49,246 --> 00:13:50,539 நான் சொல்வது உனக்குப் புரியும். 163 00:13:51,290 --> 00:13:54,877 பெயர்கள் முக்கியம். அவை இல்லாமல், மக்களை எளிதில் மறந்துவிடுவார்கள். 164 00:13:54,877 --> 00:13:56,879 நான் என்ன மறக்கவில்லை என்பதைச் சொல்கிறேன். 165 00:13:57,963 --> 00:14:00,174 அவை நம்மிடம் வருவதற்கு காரணம் அவன்தான். 166 00:14:00,174 --> 00:14:02,843 - இல்லை, அது நமக்குத் தெரியாது. - அவற்றை அவன் உணர்கிறான். 167 00:14:02,843 --> 00:14:05,512 - அது இருவழி பாதை இல்லை என்று நினைக்கிறாயா? - அது அப்படி இல்லை. 168 00:14:05,512 --> 00:14:07,389 பனியில் அவன்தான் நம் உயிர்களை காப்பாற்றினான். 169 00:14:07,389 --> 00:14:10,517 - அவன் ஏலியன்களை முன்னேற விடாமல் தடுத்தான். - அவன் அவற்றிடம் அதைச் சொன்னான். 170 00:14:10,517 --> 00:14:12,394 - அவன் அவற்றிடம் வேறு என்ன சொல்லியிருக்கிறான்? - பின்னால் போ. 171 00:14:12,394 --> 00:14:14,688 - ஏன்? உண்மை தெரிந்துவிடும் என்ற பயமா? - பின்னால் போ என்றேன்! 172 00:14:14,688 --> 00:14:17,065 எல்லோரும், கொஞ்சம்... அமைதியாக இருங்கள். 173 00:14:17,566 --> 00:14:19,443 நீ எங்களிடம் விஷயங்களை மறைக்கிறாய். 174 00:14:21,028 --> 00:14:23,447 அந்த ஏலியன் பொருள் பற்றியா? 175 00:14:25,240 --> 00:14:26,241 நீயா? 176 00:14:26,825 --> 00:14:29,203 நீயும் கேட்டுவிட்டாய். நிஜமாகவா? 177 00:14:31,079 --> 00:14:34,416 சரி, நல்லது. நல்லது. செல்லுங்கள். போங்கள். 178 00:14:35,417 --> 00:14:39,004 நீங்கள் எனக்குத் தேவையில்லை. நானே செய்வேன். 179 00:14:44,051 --> 00:14:47,221 நீ நினைப்பது தவறு, தெரியுமா? அவர்கள் உனக்குத் தேவை. 180 00:14:48,680 --> 00:14:50,390 இவர்களின் உதவி உனக்கு அங்கே தேவைப்படும். 181 00:14:51,683 --> 00:14:52,684 இங்கேயே இரு. 182 00:14:55,062 --> 00:14:56,063 அவர்களிடம் பேசு. 183 00:14:56,730 --> 00:14:57,981 நான் அவர்களிடம் பேச முயற்சித்தேன். 184 00:14:58,524 --> 00:15:01,276 இல்லை. வீரர்களாக அல்ல. மக்களாக. 185 00:15:02,528 --> 00:15:05,364 பயந்துபோனவர்கள், தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். 186 00:15:06,406 --> 00:15:07,658 நீ யாரென்று அவர்களுக்குக் காட்டு. 187 00:15:26,260 --> 00:15:31,181 மருத்துவப் பள்ளியில், புற்றுநோய் வார்டில் பயிற்சிக்காக மருத்துவரை ஒரு வாரம் கவனித்தேன். 188 00:15:33,267 --> 00:15:36,562 தங்களுக்கு முற்றிய புற்றுநோய் இருப்பதை மக்கள் தெரிந்துகொள்வதை நான் பார்த்தேன்... 189 00:15:36,562 --> 00:15:39,106 - நீ என்ன சொல்ல வருகிறாய்? - நீ வேறு எங்காவது போக வேண்டுமா? 190 00:15:43,610 --> 00:15:45,028 நான் அதைப் பற்றி மறந்துவிட்டேன். 191 00:15:46,196 --> 00:15:48,991 அல்லது நடந்தவற்றை பற்றிய எண்ணங்களை தவிர்க்கிறேன். 192 00:15:48,991 --> 00:15:52,119 மற்றதைப் போலவே அதைத் தவிர்த்தேன். 193 00:15:55,622 --> 00:15:59,751 வார இறுதியில் அந்த மருத்துவர் என்னிடம் ஒன்றைச் சொன்னார். 194 00:16:01,211 --> 00:16:05,424 அவர், "தங்களைவிட ஏதாவது ஒன்றுக்காக அதிகமாக போராடத் தயாராக இருப்பவர்கள்தான் 195 00:16:06,800 --> 00:16:10,554 உயிர் பிழைப்பதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளவர்கள்" என்றார். 196 00:16:12,598 --> 00:16:17,269 ஒருவேளை அது அவர்களது குடும்பமாக, அவர்களுடைய அன்பிற்குரியவர்களாக, ஆனால் ஏதாவது இருக்கலாம். 197 00:16:19,146 --> 00:16:20,814 உயிர் பிழைப்பதை காட்டிலும் பெரிதான ஒன்று. 198 00:16:23,317 --> 00:16:24,818 நான் அதை மறந்துவிட்டேன். 199 00:16:26,987 --> 00:16:28,572 நான் உங்களைச் சந்திக்கும் வரை. 200 00:16:29,781 --> 00:16:31,825 நீங்கள் போராடுவதைப் பார்க்கும் வரை. 201 00:16:32,659 --> 00:16:33,744 உங்கள் உயிர்களை பணயம் வைத்து. 202 00:16:34,745 --> 00:16:35,954 இன்னும் சிலவற்றிற்காக... 203 00:16:38,457 --> 00:16:40,000 உங்கள் உயிரைக் கொடுக்கிறீர்கள். 204 00:16:42,669 --> 00:16:45,506 என்னுடைய மகளைத் தேடுவதில் உங்கள் அன்பிற்குரியவர்களை இழந்ததற்காக வருந்துகிறேன். 205 00:16:48,008 --> 00:16:49,176 அப்படிப்பட்ட வேதனை... 206 00:16:53,931 --> 00:16:58,852 ஆனால் நீங்கள் நிறுத்த விரும்பினால், சொல்லுங்கள், எனக்குப் புரிகிறது. 207 00:16:59,561 --> 00:17:00,562 என்னை நம்புங்கள். 208 00:17:02,439 --> 00:17:04,775 உங்களை சந்திப்பதற்கு முன்பு நானும் அதைத்தான் செய்திருப்பேன். 209 00:17:05,858 --> 00:17:06,859 உங்கள் எல்லோரையும். 210 00:17:34,805 --> 00:17:36,515 - ஹேய்! - நான்தான். 211 00:17:36,515 --> 00:17:38,016 வான் வழியாக கண்காணிக்கிறார்கள். இங்கே வாருங்கள். 212 00:17:39,977 --> 00:17:42,604 இதைப் பிடியுங்கள். இதை அந்த சார்ஜென்ட்டிடம் இருந்து எடுத்தேன். 213 00:17:42,604 --> 00:17:44,815 நான் முன்பு தேடப்படும் நபராக இல்லாவிட்டால்... 214 00:17:47,234 --> 00:17:48,235 இது உங்களுடைய முதல் அனுபவம் இல்லையா? 215 00:17:48,944 --> 00:17:51,280 உண்மையில் அனுபவம் பெற்றவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். 216 00:17:52,030 --> 00:17:54,199 - நாம் போக வேண்டும்! - இன்னும் இல்லை. வாருங்கள். 217 00:17:54,199 --> 00:17:55,409 அது இங்கேதான் எங்கோ இருக்கிறது. 218 00:17:55,409 --> 00:17:56,910 அங்கே நாம் என்ன பார்த்தோம்? 219 00:17:56,910 --> 00:17:59,496 அந்த துளை. அந்த நீல ஒளி. ஏறக்குறைய அது உயிருடன் இருப்பது போல இருந்தது. 220 00:17:59,496 --> 00:18:01,665 ஏனென்றால் அங்கே கீழே ஏதோ இருக்கிறது. ஏலியன்கள் அனுப்பிய ஏதோ ஒன்று. 221 00:18:01,665 --> 00:18:04,251 அது என்ன என்பதை யாரும் கண்டுபிடிப்பதை இராணுவம் விரும்பவில்லை. 222 00:18:04,251 --> 00:18:06,628 நம்மைப் பாதுகாப்பது போல நடித்து, நம்மிடம் பொய் சொல்கிறார்கள். 223 00:18:06,628 --> 00:18:08,922 அந்த பையன், காஸ்பர், அவன் எதையாவது பார்த்திருப்பான் என்று நினைக்கிறாயா? 224 00:18:08,922 --> 00:18:10,465 அவர் வெறுமனே எதையோ பார்க்கவில்லை. 225 00:18:13,969 --> 00:18:15,220 அவன் அதைப் பார்த்திருக்கிறான். 226 00:18:18,599 --> 00:18:20,851 பென்னின் பண்ணையில் என்ன நடக்கிறது? 227 00:18:21,602 --> 00:18:23,020 எனக்குத் தெரியவில்லை. 228 00:18:24,188 --> 00:18:26,398 ஆனால் நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். வாருங்கள், போகலாம். 229 00:18:26,398 --> 00:18:28,108 எனக்கு பாதுகாப்பான இடம் ஒன்றைத் தெரியும். 230 00:18:45,125 --> 00:18:47,961 அது ஒருவித வெளியேறுவதற்கான மையமாக இருந்திருக்க வேண்டும். 231 00:18:47,961 --> 00:18:49,546 இது திறந்திருக்கிறது. 232 00:19:09,775 --> 00:19:11,276 எந்த ஆபத்தும் இல்லை. போகலாம். 233 00:19:18,158 --> 00:19:19,409 சரி. அதைச் சொல். 234 00:19:20,410 --> 00:19:21,453 என்ன? 235 00:19:21,453 --> 00:19:25,249 தெளிவாக நீ ஏதோ சொல்ல நினைக்கிறாய். எனவே உன் மண்டை வெடிப்பதற்குள் சொல்லிவிடு. 236 00:19:28,377 --> 00:19:29,628 நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய் என்று நினைத்தேன். 237 00:19:30,712 --> 00:19:34,216 எங்களைப் போல. அதாவது, நாம் கடந்து வந்த எல்லாவற்றிற்கும் பிறகு. 238 00:19:35,092 --> 00:19:36,677 இப்போது கடைசியாக காஸ்பரைக் கண்டுபிடித்தோம். 239 00:19:37,803 --> 00:19:38,804 அப்படியா? 240 00:19:39,930 --> 00:19:43,267 அதாவது, அந்த மருத்துவமனையில் அவன் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான்? 241 00:19:43,892 --> 00:19:46,228 - எஞ்சியிருக்கும் ஒரே ஒருவன். - அல்லது விட்டுச்செல்லப்பட்ட ஒருவன். 242 00:19:46,812 --> 00:19:48,355 ஆம், எப்படியிருந்தாலும். ஏன்? 243 00:19:49,898 --> 00:19:54,111 பார், என் சொந்த கேவலமான வழியில் யோசித்தால், உங்களைப் போலவே அவனையும் எனக்குத் தெரியும். 244 00:19:54,111 --> 00:19:56,738 நான் அவன் கண்களைப் பார்த்தேன். நான் ஏற்படுத்திய பயத்தைப் பார்த்தேன். 245 00:19:56,738 --> 00:19:57,823 அதோடு வலியையும். 246 00:19:57,823 --> 00:20:01,076 ஆம், நான் அதில் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் விஷயம் என்னவென்றால், அவனைப் பார்த்தேன். 247 00:20:01,827 --> 00:20:07,624 இப்போது நான் அவனைப் பார்க்கிறேன், நான்... எனக்கு எதுவும் தெரியவில்லை. வெற்றிடம் போல. 248 00:20:09,001 --> 00:20:10,586 நீயும் அதைப் பார்க்கவில்லை என்று சொல். 249 00:20:11,795 --> 00:20:15,591 கேள். காஸ்பரின் கனவுகள்தான் நம்மை அவனிடம் கூட்டி வந்தன. 250 00:20:16,508 --> 00:20:18,927 அதனால் அவை நம்மை எங்கே கூட்டிச் சென்றாலும் கனவுகளை நான் நம்புவேன். 251 00:20:21,638 --> 00:20:24,349 அது உன்னால் முடியுமா? அவனை நம்ப முடியுமா? 252 00:20:26,977 --> 00:20:27,978 நான் உன்னை நம்புகிறேன். 253 00:20:29,146 --> 00:20:31,023 உன் கனவுகளைதான் நான் பின்தொடர்வேன். 254 00:20:33,150 --> 00:20:36,695 ...புதிய, இன்னும் வீரியமான ஏலியன்களின் தாக்குதல்கள் பரவலாகத் தொடர்கின்றன. 255 00:20:36,695 --> 00:20:39,948 பசிபிக் வடமேற்கிலிருந்து ராக்கி மலைப் பகுதியை நோக்கி. 256 00:20:39,948 --> 00:20:41,408 அவை தென்படுவது அதிகரிக்கும்போது... 257 00:20:42,326 --> 00:20:44,411 - ஏன் குரைக்கிறாய்? - அமோனியா அளவுகள்... 258 00:20:45,078 --> 00:20:46,246 இந்த பகுதிகளில், 259 00:20:46,246 --> 00:20:49,833 அதிகரித்த தாக்குதல்களின் எண்ணிக்கை, சமூகங்களை வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளுகிறது, 260 00:20:49,833 --> 00:20:52,044 சில நேரங்களில் நம்பத்தகாத நிலப்பரப்புகளுக்குக் கூட. 261 00:20:56,173 --> 00:20:59,468 ...இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகள் பரவி வருகிறது... 262 00:20:59,468 --> 00:21:00,677 மாலை வணக்கம், மார்லீன். 263 00:21:00,677 --> 00:21:03,138 ...தீவிரமான சூழ்நிலை உருவாகிறது... 264 00:21:04,932 --> 00:21:05,933 அங்கே. 265 00:21:06,892 --> 00:21:09,061 இப்போது விருந்தோம்பல் பகுதி முடிந்துவிட்டது. 266 00:21:09,937 --> 00:21:12,189 ஏன் இரண்டு தேடப்படும் குற்றவாளிகள் என் வீட்டில் இருக்கிறார்கள்? 267 00:21:12,189 --> 00:21:15,192 மெதுவாக பேசுங்கள். இப்போதுதான் இரட்டைக் குழந்தைகளைத் தூங்கவைத்தேன். 268 00:21:16,360 --> 00:21:17,653 இது எனக்குத் தெரியும்... 269 00:21:19,112 --> 00:21:20,697 நான்... எனக்குத் தெரியும். 270 00:21:20,697 --> 00:21:23,116 என்னை நம்பு, நாங்கள் போக வேறு இடம் இருந்தால், நாங்கள்... 271 00:21:23,116 --> 00:21:24,618 நீ ஆபத்தானவனா? 272 00:21:25,202 --> 00:21:26,203 இவனா? 273 00:21:26,203 --> 00:21:27,663 இல்லை. கடவுளே, இல்லை. 274 00:21:27,663 --> 00:21:29,498 ஏனென்றால் அப்படித்தான் சொல்கிறார்கள். 275 00:21:30,123 --> 00:21:31,667 மேடம், சத்தியம் செய்கிறேன், நாங்கள்... 276 00:21:31,667 --> 00:21:34,253 மன்னிக்கவும், இது ஒரு குடும்ப உரையாடல். 277 00:21:38,215 --> 00:21:39,675 நாம் இன்னும் குடும்பம்தானே? 278 00:21:41,426 --> 00:21:42,511 அதாவது, சட்டப்படி? 279 00:21:48,433 --> 00:21:49,852 சரி, குறைந்தபட்சம் அது இருக்கிறது. 280 00:21:50,561 --> 00:21:54,815 மார்லீன், எங்களிடம் பேசுவது கூட நீ எடுக்கும் ரிஸ்க்தான். 281 00:21:54,815 --> 00:21:56,942 எனக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்று என்னால் சொல்ல முடியாது. 282 00:21:56,942 --> 00:21:58,819 ஆனால் அது மதிப்புக்குரியதாக இருக்கும். 283 00:22:00,320 --> 00:22:01,697 பில்லியைக் கண்டுபிடிக்க. 284 00:22:07,619 --> 00:22:08,620 நீ... 285 00:22:10,205 --> 00:22:12,541 பில்லிக்கு என்ன நடந்தது தெரியுமா? அவர் எங்கே என்று தெரியுமா? 286 00:22:12,541 --> 00:22:16,587 எங்களிடம் ஒரு உண்மையான தடயம் இருக்கிறது. எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. 287 00:22:18,172 --> 00:22:19,339 எங்களுக்கு அதைக் கொடுக்க முடியுமா? 288 00:22:20,924 --> 00:22:22,885 அது வசதியானது இல்லை, ஆனால் இரவு தங்க நன்றாக இருக்கும். 289 00:22:22,885 --> 00:22:25,179 - நன்றி. - சூரிய உதயம் வரை நேரம் தருகிறேன். 290 00:22:34,354 --> 00:22:35,355 கடவுளே. 291 00:22:38,150 --> 00:22:39,568 எனவே, அதைப் பற்றி பேச விரும்புகிறீர்களா? 292 00:22:43,197 --> 00:22:44,198 பில்லி பற்றியா? 293 00:22:44,198 --> 00:22:47,826 ஆம். அவர் யார்? அவருடைய கணவர் அல்லது ஏதாவதா? 294 00:22:49,620 --> 00:22:51,163 இல்லை, அவர் என்னுடையவர். 295 00:22:56,168 --> 00:22:58,128 நாம் சும்மா உட்காரலாமா? 296 00:23:12,017 --> 00:23:14,937 பில்லி கெட்டவர் இல்லை. சரிதானே. 297 00:23:16,146 --> 00:23:17,564 அவர் பொய் சொல்லவில்லை, ஏமாற்றவில்லை. 298 00:23:18,941 --> 00:23:22,027 ஆனால் எங்கள் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது, அது ஒருபோதும் சரியாகவில்லை. 299 00:23:24,613 --> 00:23:26,323 பேச்சு சண்டைக்கு வழிவகுத்தது... 300 00:23:27,574 --> 00:23:29,159 அதனால், பேசுவதை நிறுத்தினோம். 301 00:23:30,702 --> 00:23:31,703 பல மாதங்களுக்கு. 302 00:23:33,205 --> 00:23:38,043 பிறகு, ஒரு நாள் தனக்கு குழந்தை வேண்டும் என்றார். 303 00:23:40,754 --> 00:23:45,717 அதற்கு நான், "நல்ல நகைச்சுவை, எனக்கு விவாகரத்து வேண்டும்" என்றேன். 304 00:23:49,263 --> 00:23:50,973 அது நகைச்சுவை இல்லை என்று நினைக்கிறேன். 305 00:23:57,187 --> 00:23:59,940 அவர் தனது அக்கா, மார்லீனுடன் தங்குவதற்காக இங்கே வந்தார். 306 00:24:02,943 --> 00:24:06,488 இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஷெரிஃப் டைசன் காணாமல் போனார், ஏலியன்கள் வந்தன. 307 00:24:07,865 --> 00:24:10,701 பிறகு மற்றவர்கள் காணாமல் போனார்கள், இராணுவம் வந்தது. 308 00:24:11,535 --> 00:24:12,786 பிறகு பில்லி காணாமல் போனார். 309 00:24:15,163 --> 00:24:16,164 பிறகு நீ வந்தாய். 310 00:24:18,667 --> 00:24:20,043 அவர் போக வேண்டும் என்று விரும்பினேன். 311 00:24:22,462 --> 00:24:23,589 ஆனால் இப்படி இல்லை. 312 00:24:25,424 --> 00:24:28,844 இது எல்லாம் என் தவறு என்று தோன்றுகிறது. 313 00:24:44,443 --> 00:24:45,903 என் மகன் உடம்பு சரியில்லாமல் இருந்தான். 314 00:24:52,576 --> 00:24:54,494 அவனுடைய சிறிய உடல் வலித்தது, தெரியுமா? 315 00:24:57,915 --> 00:24:58,916 கடுமையாக. 316 00:25:04,630 --> 00:25:07,132 ஒரு கணம் நான் வலி போக வேண்டும் என்று விரும்பினேன். 317 00:25:10,052 --> 00:25:14,348 எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்த எல்லா வலிகளும்... 318 00:25:17,059 --> 00:25:18,060 நின்றுவிட விரும்பினேன். 319 00:25:23,190 --> 00:25:24,191 பிறகு... 320 00:25:27,152 --> 00:25:29,571 மருத்துவர் வந்து அந்த செய்தியை சொன்னார், தெரியுமா? 321 00:25:35,994 --> 00:25:38,830 அப்படிப்பட்ட ஒருவரை இழப்பது நிஜமாகவே உங்களை உலுக்கிவிடும். 322 00:25:45,796 --> 00:25:47,214 அது எப்போதாவது நிற்குமா? 323 00:25:51,844 --> 00:25:52,845 நின்றால் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 324 00:25:55,180 --> 00:25:56,181 உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 325 00:26:27,296 --> 00:26:28,297 வாருங்கள். 326 00:26:31,466 --> 00:26:33,427 நாம் நகரத்தைவிட்டு வெளியேறும்போதே இந்த மழை பெய்கிறது. 327 00:26:34,428 --> 00:26:36,972 - நம் ஊரைப் போலவே. - இது ஒன்றும் நம் ஊர் போல இல்லை. 328 00:26:37,598 --> 00:26:38,724 தேவையானவற்றைப் பெறுவோம், சரியா? 329 00:26:39,433 --> 00:26:40,809 ஓய், இங்கே பார். 330 00:26:44,521 --> 00:26:46,773 ஓ, ஆம்! பொருட்களை பெறும் நேரம்! 331 00:26:51,612 --> 00:26:53,488 மழை வந்தாலும் பரவாயில்லை, இந்த ரெயின் கோட்டில் மூழ்கிவிடுவேன். 332 00:26:53,488 --> 00:26:55,532 பெரியதுதான் எஞ்சியிருக்கிறது. இதை வைத்துதான் சமாளிக்க வேண்டும், சரியா? 333 00:26:55,532 --> 00:26:57,826 ஏலியன் தாக்குதல்கள் பரவுவதாக செய்தி வருகிறது... 334 00:26:57,826 --> 00:26:59,244 இதற்குப் பதிலாக இது எப்படி? 335 00:26:59,244 --> 00:27:01,872 - அது பயனற்றது, பென். இப்போது அதை கீழே போடு. - என்ன? இல்லை. 336 00:27:01,872 --> 00:27:03,624 பார்த்தாயா? லேபில்கள். புத்தம் புதியவை. 337 00:27:03,624 --> 00:27:05,000 அது வேலை செய்யுமா? 338 00:27:05,626 --> 00:27:06,877 நான் அதை வேலை செய்யவைப்பேன். 339 00:27:06,877 --> 00:27:10,214 - சரி, அதை என்னிடம் கொடு. சரியா? - இல்லை. நீ அதை குப்பைத்தொட்டியில் வீசுவாய். 340 00:27:10,214 --> 00:27:11,381 - பென், அதைக் கொடு. - இல்லை! 341 00:27:11,381 --> 00:27:12,799 - பென், இப்போது அதை விடு! - இல்லை! 342 00:27:16,887 --> 00:27:18,055 பரவாயில்லை. 343 00:27:18,055 --> 00:27:19,681 - அது அவையா? - நிச்சயமாக அவைதான். 344 00:27:19,681 --> 00:27:22,976 காஸ்ப், அவற்றை உன்னால் உணர முடிகிறதா? அம்மாவின் மருத்துவமனை போல. நெருக்கத்தில் இருக்கின்றனவா? 345 00:27:22,976 --> 00:27:25,437 அட, நீ அவற்றுடன் இணைப்பில் இருக்கிறாய் என்று நினைத்தேன். 346 00:27:25,437 --> 00:27:26,563 நான் எதையும் உணரவில்லை. 347 00:27:27,272 --> 00:27:30,067 அது நல்லது, இல்லையா? ஒருவேளை அவை சென்றிருக்கலாம். 348 00:27:31,985 --> 00:27:33,779 ச்சே! அது நெருக்கமாக இருந்தது! 349 00:27:33,779 --> 00:27:35,864 அவை கட்டிடங்களுக்குள் நுழைவது போல தெரிகிறது. 350 00:27:35,864 --> 00:27:37,407 இல்லை. இல்லை. 351 00:27:37,407 --> 00:27:40,160 ஹேய். வோவ். உனக்கு ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை, பென். என் கைகளைப் பிடித்துக்கொள். 352 00:27:40,160 --> 00:27:41,578 சரி, பென். நீ நன்றாக இருக்கிறாய். 353 00:27:42,412 --> 00:27:44,665 அவை உடைத்துக்கொண்டு வரப் போகின்றன, சரியா? சும்மா உட்கார்ந்திருக்கிறோம். 354 00:27:45,207 --> 00:27:46,416 உன் ஜெடாய் வேலையை காட்ட வேண்டிய நேரம், ஸ்கைவாக்கர். 355 00:27:47,209 --> 00:27:50,045 மான்டி சொல்வது சரிதான். நாம் இங்கே இருக்க முடியாது. வாருங்கள். 356 00:27:55,217 --> 00:27:56,218 அடச்சே! 357 00:27:57,386 --> 00:28:01,181 காஸ்ப்? எங்களுக்கு ஒரு வழியைச் சொல்ல முடியுமா? எந்த வழி பாதுகாப்பானது என்று சொல்ல முடியுமா? 358 00:28:08,772 --> 00:28:10,065 இந்த வழியாக. 359 00:28:10,858 --> 00:28:12,234 நல்லது, போகலாம். 360 00:28:12,234 --> 00:28:13,318 காஸ்பர், நீ வழிநடத்து. 361 00:28:35,215 --> 00:28:37,217 ஓடுங்கள்! 362 00:28:38,468 --> 00:28:39,469 ஓடுங்கள்! 363 00:28:40,721 --> 00:28:42,973 அடச்சே! இது ஒரு முட்டுச்சந்து! ச்சே! 364 00:28:43,682 --> 00:28:44,766 நண்பர்களே, நாம் என்ன செய்வது? 365 00:28:45,559 --> 00:28:46,977 நண்பர்களே, இந்த வழியாக! 366 00:28:49,229 --> 00:28:52,065 - அவை வருகின்றன. - திற! போ. 367 00:28:52,065 --> 00:28:53,150 போ. 368 00:28:58,280 --> 00:29:00,282 - சீக்கிரம்! - போ! 369 00:29:00,908 --> 00:29:02,117 கடவுளே. 370 00:29:04,244 --> 00:29:06,455 - அடக் கடவுளே. - போ, பென்னி. இதோ. 371 00:29:07,873 --> 00:29:09,208 இது ஒரு ஐந்து மாடி கட்டிடம்! 372 00:29:10,334 --> 00:29:13,045 ஓய்! என்ன? நீ எங்களை நேராக அவற்றிடம் கூட்டி வந்துவிட்டாய்! 373 00:29:13,045 --> 00:29:15,047 ஹேய், நாம் என்ன செய்வது? நாம் என்ன செய்வது? 374 00:29:15,047 --> 00:29:16,340 காஸ்ப்? 375 00:29:16,340 --> 00:29:19,510 இனி அவன் பேச்சைக் கேட்க மாட்டேன்! நாம் இந்த நிலையில் இருப்பதற்கு அவன்தான் காரணம்! 376 00:29:19,510 --> 00:29:22,721 திற. திற! இதைத் திற! 377 00:29:22,721 --> 00:29:25,349 திற! 378 00:29:25,349 --> 00:29:30,020 - திற! திற! இதைத் திற. - பென்னி. 379 00:29:30,020 --> 00:29:31,688 திற. 380 00:29:33,690 --> 00:29:35,234 எனக்குக் கேட்கிறது! அவை வருகின்றன! 381 00:29:35,234 --> 00:29:37,986 - திற! - உன்னை நம்பி, இப்போது இங்கே மாட்டிக்கொண்டோம்! 382 00:29:39,071 --> 00:29:40,155 சரி. 383 00:29:40,656 --> 00:29:43,033 நீயும் நானும். இடது, வலது, இடது. நாம் நன்றாக இருக்கிறோம். 384 00:29:44,201 --> 00:29:45,285 நாம் நன்றாக இருக்கிறோம். 385 00:29:45,911 --> 00:29:46,912 இல்லை, நாம் நன்றாக இல்லை. 386 00:30:15,566 --> 00:30:16,567 போகலாம்! 387 00:30:39,006 --> 00:30:41,341 ஹேய். கேம்ப் ஆல்மேன் பற்றி கேள்விப்பட்டாயா? 388 00:30:41,842 --> 00:30:43,093 - என்ன? - அது ஏலியன்களிடம் போய்விட்டது. 389 00:30:45,012 --> 00:30:47,347 ஒரு முழுப்படையும் ஒரே இரவில் அழிக்கப்பட்டுவிட்டது. 390 00:30:48,223 --> 00:30:49,683 - ச்சே. - ஹலோ? 391 00:30:54,062 --> 00:30:56,565 என்ன, சிறுவனே? தொலைந்துவிட்டாயா? 392 00:30:57,357 --> 00:30:58,358 எனக்கு உதவி தேவை. 393 00:31:00,611 --> 00:31:02,446 உன் குடும்பம் எங்கே? அவர்கள் நன்றாக இருக்கிறார்களா? 394 00:31:03,071 --> 00:31:05,699 அவர்கள் இல்லை. நான் மட்டும்தான். 395 00:31:08,160 --> 00:31:09,620 என்னிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. 396 00:31:12,789 --> 00:31:13,790 நான் இதை தெரியப்படுத்துகிறேன். 397 00:31:15,667 --> 00:31:16,793 உனக்கு உடம்பு சரியில்லையா? 398 00:31:18,962 --> 00:31:20,714 நீ பார்க்க அவ்வளவு மோசமாக இல்லை. 399 00:31:20,714 --> 00:31:22,799 நான் உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது எப்படி? 400 00:31:22,799 --> 00:31:24,259 உன்னை சோதிக்க மருத்துவரை அழைக்கிறேன். 401 00:31:24,259 --> 00:31:25,511 அது உனக்குப் பரவாயில்லையா? 402 00:31:26,678 --> 00:31:28,972 முதலில் உங்கள் நண்பரைப் பார்க்கும்படி அவரிடம் சொல்லுங்கள். 403 00:31:38,273 --> 00:31:39,274 வேறு யாருமில்லை. 404 00:31:44,863 --> 00:31:47,115 உன் அம்மாவை பெருமைப்பட வைத்துவிட்டாய். போ. கேட்டைத் திற. 405 00:32:04,883 --> 00:32:07,803 நீ செய்வது சரியானதாக இருக்கட்டும், கிளார்க். அவள் ஆபத்தான இடத்துக்குள் போகிறாள். 406 00:32:11,765 --> 00:32:13,809 - கவனி! - அடச்சே! 407 00:32:17,896 --> 00:32:19,690 - போ! - இந்த வழியாக! என்னை பின்தொடர்! 408 00:32:22,901 --> 00:32:26,488 டிரக்கைவிட்டு இறங்கு! கீழே இறங்கு! இப்போதே! 409 00:32:28,740 --> 00:32:31,118 கீழே இறங்கு என்றேன். இப்போதே! 410 00:32:31,118 --> 00:32:32,202 பொறுமை. 411 00:32:34,371 --> 00:32:35,747 அவளை சோதனை செய். 412 00:32:40,210 --> 00:32:42,713 அடடா இது. ஏலியன் ஒரு எதிரியாக நமக்கு கிடைத்திருப்பது மிகவும் மோசமானது. 413 00:32:42,713 --> 00:32:45,007 மனிதர்கள் எதிரிகளாக மாறுவதைப் பற்றியும் கவலைப்பட வேண்டுமா? 414 00:32:45,007 --> 00:32:46,675 - எதுவுமில்லை. - சரி, நீ என்ன 415 00:32:46,675 --> 00:32:48,844 செய்வதாக நினைக்கிறாய் என்று என்னிடம் சொல்கிறாயா? 416 00:32:50,470 --> 00:32:52,347 உங்கள் எல்லோரையும் ஒரு மைய இடத்திற்கு கூட்டி வந்திருக்கிறேன். 417 00:32:52,347 --> 00:32:54,892 நீங்கள் சுற்றிவளைக்கப்பட்டீர்கள்! துப்பாக்கிகளை கீழே போடுங்கள்! 418 00:32:54,892 --> 00:32:56,435 கீழே போடுங்கள், இப்போதே! 419 00:32:59,897 --> 00:33:01,899 உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள்! 420 00:33:01,899 --> 00:33:05,152 - கீழே! - அதாவது நீங்களும்தான், கார்ப்பொரல். 421 00:33:05,652 --> 00:33:07,654 யாருக்கும் குண்டடிபடாத நாளாக இதை மாற்றுவோம். 422 00:33:07,654 --> 00:33:08,906 சரி. பொறுமை! 423 00:33:16,663 --> 00:33:17,664 நகருங்கள். 424 00:33:20,834 --> 00:33:22,920 - நன்றாக ஒட்டினாய். - சரியாக எண்ணினாய். 425 00:33:23,670 --> 00:33:25,964 நீ சொன்னது சரிதான். அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். 426 00:33:26,465 --> 00:33:28,800 ஒரு இராணுவ தளத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா? 427 00:33:29,635 --> 00:33:31,470 மெஸ் ஹாலில் மீது ஒரு கண் வை. 428 00:33:34,223 --> 00:33:35,349 அவளைத் தேடிப் போவோம். 429 00:33:48,320 --> 00:33:49,821 இது என்ன கொடுமை? 430 00:33:55,118 --> 00:33:56,954 - ஆஹா. அது வேலை செய்ததை நம்ப முடியவில்லை. - நான் சொன்னேனே. 431 00:33:56,954 --> 00:33:58,872 எல்லோரும் சாப்பிட வேண்டும். காக்கைகளும் கூட. 432 00:33:58,872 --> 00:34:00,415 - சார், சாலை அடைக்கப்பட்டிருக்கிறது... - ஹேய்! 433 00:34:00,415 --> 00:34:01,792 மார்லீனுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லிவிடுங்கள். 434 00:34:03,669 --> 00:34:05,754 அவள் மீண்டும் நம் இருவரையும் பார்க்க விரும்புவாளா என்று தெரியவில்லை. 435 00:34:05,754 --> 00:34:09,091 நாம் பில்லியைக் கண்டுபிடிப்போம். அதோடு மற்ற எல்லோரையும். 436 00:34:12,678 --> 00:34:13,846 ஹேய், ஓடுங்கள்! 437 00:34:14,888 --> 00:34:16,889 இதை வைத்திருங்கள். ஒருவேளை அவசியம் ஏற்பட்டால், சரியா? 438 00:34:19,393 --> 00:34:20,393 நீ வெற்றி பெறுவாய். 439 00:34:21,728 --> 00:34:23,063 இது உன்னுடைய முதல் அனுபவம் இல்லை. 440 00:34:38,453 --> 00:34:40,330 போகலாம், நண்பர்களே! போகலாம்! 441 00:35:25,876 --> 00:35:26,877 ஜமிலா. 442 00:35:28,587 --> 00:35:29,588 கவனமாக இரு, சரியா? 443 00:35:40,098 --> 00:35:41,266 ஹேய். 444 00:35:44,144 --> 00:35:46,730 காஸ்ப். கவனமாக பிடி. சூடாக இருக்கிறது. 445 00:35:50,526 --> 00:35:51,527 குளிர்கிறதா? 446 00:35:52,152 --> 00:35:53,570 ஓ, இல்லை. நன்றாக இருக்கிறேன். 447 00:35:59,243 --> 00:36:00,744 பாரிஸில் ரொம்ப நேரம், இல்லையா? 448 00:36:01,662 --> 00:36:03,247 பாழாய்ப் போன நகரம் கிட்டத்தட்ட நம்மை கொன்றுவிட்டது. 449 00:36:05,874 --> 00:36:07,459 நான் கிட்டத்தட்ட நம்மைக் கொன்றுவிட்டேன். 450 00:36:09,336 --> 00:36:10,838 நீ முயற்சித்தாய், காஸ்ப். 451 00:36:12,965 --> 00:36:15,509 நீ இன்னும் குணமடைகிறாயோ என்னவோ, சரியா? 452 00:36:17,177 --> 00:36:18,303 இன்னும் நினைவில் இருக்கிறது. 453 00:36:23,642 --> 00:36:28,438 நினைவுகொள்ள நான் உனக்கு உதவ முடியும். நம்மை நினைவுகொள்ள. வேண்டாமா? 454 00:36:37,364 --> 00:36:39,074 நீ வரைந்த ஓவியத்தை வைத்திருந்தேன். 455 00:36:40,367 --> 00:36:41,577 இந்த நேரமெல்லாம். 456 00:36:42,953 --> 00:36:45,497 இதனால் நான் உன்னை மறக்க மாட்டேன் என்று நினைப்பேன். 457 00:36:46,832 --> 00:36:51,587 ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு இது நான் என்னை மறக்காமல் இருக்க என்று புரிந்துகொண்டேன். 458 00:36:53,213 --> 00:36:56,466 நீ என்னைப் பார்த்த விதம், காஸ்ப். 459 00:36:58,969 --> 00:37:00,137 நீ என்னை நம்ப வைத்தாய். 460 00:37:03,015 --> 00:37:05,726 எனக்காக நீ இதைச் செய்ய முடிந்தால், உனக்காக நான் அதைச் செய்ய முடியும். 461 00:37:06,727 --> 00:37:07,728 சரியா? 462 00:37:11,815 --> 00:37:13,233 எல்லாம் துண்டுகளாக இருக்கின்றன. 463 00:37:14,526 --> 00:37:20,782 இது எனக்கு முழுதாக நினைவில்லாத கனவு போன்றது, தெரியுமா? எல்லாம் நினைவுகளும் நழுவுகின்றன. 464 00:37:57,986 --> 00:38:01,156 நாம் ஒன்றாகக் கேட்ட முதல் பாடல் இது. பழைய பாடல். 465 00:38:24,888 --> 00:38:27,349 நாம் பஸ்ஸில் இருந்தோம், இல்லையா? 466 00:38:28,392 --> 00:38:29,393 ஆம். 467 00:38:34,481 --> 00:38:35,482 என்னிடம் ஒரு நோட்புக் இருந்ததா? 468 00:38:36,859 --> 00:38:38,026 உன் நோட்புக். 469 00:38:38,610 --> 00:38:40,487 ஆம். அது திறந்து விழுந்தது. 470 00:38:43,532 --> 00:38:44,533 ஆம். 471 00:38:45,450 --> 00:38:46,451 பிறகு நீ... 472 00:38:51,790 --> 00:38:52,791 எனக்கு நினைவிருக்கிறது. 473 00:39:35,417 --> 00:39:37,336 சரி. சாரா மாலிக். 474 00:39:37,336 --> 00:39:39,505 இந்த உயரம். எட்டு வயது. 475 00:39:39,505 --> 00:39:41,381 நீண்ட பழுப்பு நிற முடி. அவள் எங்கே? 476 00:39:47,596 --> 00:39:50,224 நீங்கள் வெளியே என்ன சொல்லியிருந்தாலும், நாங்கள் உங்கள் எதிரி அல்ல. 477 00:39:50,224 --> 00:39:53,060 மரியாதையுடன் சொல்கிறேன், மேடம், உங்கள் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 478 00:39:54,520 --> 00:39:56,146 நீங்கள் மூவ்மென்ட்டை சேர்ந்தவர், இல்லையா? 479 00:39:56,146 --> 00:39:58,857 நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அது உங்களுக்குத் தெரிகிறது என்று நம்புகிறேன். 480 00:39:58,857 --> 00:40:00,943 வாயிலில் இருந்த இரண்டு பேரை தலையில் தாக்கியிருக்கிறீர்கள். 481 00:40:00,943 --> 00:40:02,277 எங்களுக்கு என் மகள் வேண்டும். 482 00:40:03,195 --> 00:40:06,031 அவளை ஒப்படையுங்கள், போய்விடுகிறோம், அவள் இங்கே இருக்கிறாள் என்பது தெரியும். 483 00:40:11,078 --> 00:40:12,621 கேளுங்கள். நீங்கள் பொறுப்பாளர் இல்லையென்றால், 484 00:40:12,621 --> 00:40:14,540 யார் என்று சொல்லுங்கள், நாங்கள் அவர்களிடம் பேசுவோம். 485 00:40:14,540 --> 00:40:15,791 யாரும் பொறுப்பில் இல்லை. 486 00:40:17,835 --> 00:40:19,753 - உயரதிகாரி யார்? - நான். 487 00:40:21,338 --> 00:40:24,258 ஆனால் நான் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே கார்ப்பொரல் ஆக்கப்பட்டேன். அதிகாரப்பூர்வமாக அல்ல. 488 00:40:25,133 --> 00:40:27,928 மற்ற படைகள் மற்ற இடங்களை வலுப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுவிட்டன. 489 00:40:27,928 --> 00:40:29,388 எனவே யாரும் இங்கே பொறுப்பாளர் இல்லை? 490 00:40:29,388 --> 00:40:32,683 மறு உத்தரவு வரும் வரை எங்கள் இடத்தை பாதுகாக்கிறோம். எங்கள் கடமையைச் செய்கிறோம். 491 00:40:32,683 --> 00:40:35,519 அதனால்தான் கூடுதல் தகவலுக்கான உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறேன். 492 00:40:44,778 --> 00:40:46,113 என் கோரிக்கையை நிராகரிக்கிறீர்களா? 493 00:40:46,113 --> 00:40:48,991 இந்த புறக்காவல் நிலையத்தின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான எல்லா விஷயங்களும் 494 00:40:48,991 --> 00:40:52,411 இரகசியமாக கருதப்படுகின்றன, பொதுமக்களுடன் பகிரப்படாது. 495 00:40:52,411 --> 00:40:53,495 சரி. 496 00:40:56,039 --> 00:40:57,332 அவள் என் மகள். 497 00:40:58,292 --> 00:40:59,293 எங்கே அவள்? 498 00:41:04,798 --> 00:41:06,341 என்ன? அங்கேயா? 499 00:41:12,389 --> 00:41:13,515 இங்கேதான்... 500 00:41:20,647 --> 00:41:24,026 படூம் 501 00:41:31,700 --> 00:41:32,784 எனக்கு உதவுங்கள். 502 00:41:35,329 --> 00:41:36,496 மன்னித்துவிடுங்கள். 503 00:41:43,378 --> 00:41:44,379 ஆம். 504 00:41:46,423 --> 00:41:47,466 நானும்தான். 505 00:41:50,802 --> 00:41:52,638 - அனீஷா. - கடவுளே. 506 00:41:52,638 --> 00:41:53,722 அனீஷா! 507 00:41:53,722 --> 00:41:54,973 இவனைப் படுக்கவையுங்கள். 508 00:41:54,973 --> 00:41:56,892 - நீ என்ன செய்கிறாய்? - இவனைப் படுக்கவையுங்கள்! 509 00:41:58,310 --> 00:42:00,771 - அவனை குறிவை. - இதைச் செய்வதற்கான வழி இது இல்லை. 510 00:42:01,313 --> 00:42:03,941 - அனீஷா. - இதோ. ப்ரோபோஃபால். 511 00:42:03,941 --> 00:42:05,150 நீ என்ன செய்கிறாய்? 512 00:42:05,150 --> 00:42:08,362 பொதுவாக, நான் 40 மில்லிகிராம் கொடுப்பேன். 513 00:42:08,362 --> 00:42:11,031 உன் விஷயத்தில், 60 என்று வைத்துக்கொள்வோம். 514 00:42:11,532 --> 00:42:13,617 என்ன திட்டம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறாயா? 515 00:42:13,617 --> 00:42:16,411 அவள் இங்கே இருந்திருக்கிறாள், கிளார்க். அந்த அறையில். 516 00:42:17,329 --> 00:42:21,208 இப்போது, இவன் கண்விழிக்கும்போது தவறவிடப் போகும் ஒன்றை நான் அகற்றுவதற்கு முன்பு 517 00:42:21,208 --> 00:42:24,169 அவள் எங்கே இருக்கிறாள் என்று சொல்ல நான் இவனுக்கு ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கப் போகிறேன். 518 00:42:24,169 --> 00:42:26,421 அனீஷா, இது... இது நீ இல்லை. 519 00:42:26,421 --> 00:42:29,341 மிகச்சரியா இதுதான் நான்! நான் அவளுடைய அம்மா! 520 00:42:29,341 --> 00:42:31,051 கேள். நானும் மக்களை இழந்திருக்கிறேன், சரியா? 521 00:42:31,051 --> 00:42:34,096 குடும்பத்தை இழந்திருக்கிறேன். நான்... ச்சே. தயவுசெய்து நிறுத்து. 522 00:42:34,096 --> 00:42:35,389 அனீஷா. 523 00:42:35,931 --> 00:42:37,015 மேடம், தயவுசெய்து... 524 00:42:37,015 --> 00:42:38,600 இப்போது சொல் அல்லது ஒருபோதும் முடியாது. 525 00:42:38,600 --> 00:42:41,019 தயவுசெய்து. கேள். தயவுசெய்து! தயவுசெய்து... 526 00:42:41,019 --> 00:42:42,229 - பேசு! - கடவுளே, தயவுசெய்து... 527 00:42:42,229 --> 00:42:44,064 - எங்கே அவள்? - அவள் இங்கே இல்லை! 528 00:42:45,607 --> 00:42:46,817 அவள் இங்கே இல்லை. 529 00:42:47,317 --> 00:42:49,361 நிர்வாகியின் அலுவலகத்தில் தேடினேன், இது கிடைத்தது. 530 00:42:49,361 --> 00:42:50,696 நேற்று இரவு சாராவுடன் கிளம்பியிருக்கிறார்கள். 531 00:42:51,822 --> 00:42:53,949 - நான் வருந்துகிறேன், அனீஷா. - ஓக்லஹோமா? 532 00:42:53,949 --> 00:42:56,493 ஆம். அது இராணுவ தளம் இல்லை. 533 00:42:57,369 --> 00:42:58,620 ப்ராஜக்ட் ஐடபெல்? 534 00:42:59,913 --> 00:43:01,123 இது என்ன? 535 00:43:01,123 --> 00:43:02,666 நாம் அடுத்து அங்குதான் போகிறோம். 536 00:43:04,251 --> 00:43:05,711 கவலைப்படாதே. அவளைக் கண்டுபிடிப்போம். 537 00:43:06,211 --> 00:43:07,462 இல்லை, கண்டுபிடிக்க மாட்டீர்கள். 538 00:43:08,005 --> 00:43:09,715 நீங்கள் அவளை ஒருபோதும் அடைய மாட்டீர்கள். 539 00:43:12,009 --> 00:43:14,386 - நாங்கள் உன்னை அடைந்தோம். - உனக்குப் புரியவில்லை. 540 00:43:14,386 --> 00:43:15,470 ப்ராஜக்ட் ஐடபெல், 541 00:43:16,221 --> 00:43:18,390 இந்த இடத்தைப் போல கைவிடப்பட்ட பயணிகள் நிலையம் இல்லை. 542 00:43:18,390 --> 00:43:19,808 அதுதான் தொடக்கப்புள்ளி. 543 00:43:19,808 --> 00:43:21,560 அங்கிருந்துதான் இவை எல்லாமே தொடங்கியது. 544 00:43:22,644 --> 00:43:25,856 சொல்வதைக் கேள். உன் மகளை கொண்டுசென்றிருந்தால், அவள் கதை முடிந்தது என்று அர்த்தம். 545 00:43:26,356 --> 00:43:27,941 உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. 546 00:44:19,284 --> 00:44:20,786 போகலாம். என்னைப் பின்தொடருங்கள். 547 00:45:24,683 --> 00:45:25,767 அன்புள்ள ரோஸ். 548 00:45:26,727 --> 00:45:28,103 இதுதான் அந்த குறிப்பு. 549 00:45:28,103 --> 00:45:31,940 நாம் அருகருகே படுத்திருந்தபோது என்னால் சொல்ல முடியாத விஷயங்கள், 550 00:45:31,940 --> 00:45:34,109 ஏனென்றால் அதை எப்படி சொல்வது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. 551 00:45:34,109 --> 00:45:35,402 அதாவது, இன்னும் இல்லை, ஆனால்... 552 00:45:37,529 --> 00:45:40,532 ஒருவேளை நம்மை ஒன்றிணைத்த எல்லா விஷயங்களும் தற்செயலானவையாக இல்லாமல் போகலாம். 553 00:45:41,909 --> 00:45:43,660 நம் சந்திப்பு தற்செயலானது அல்ல. 554 00:45:44,453 --> 00:45:45,579 எனக்கு ஒருவர் தேவைப்பட்டார். 555 00:45:47,623 --> 00:45:50,042 நமக்குத் தெரியாவிட்டாலும், நம் எல்லோருக்கும் ஒருவர் தேவை. 556 00:45:58,842 --> 00:46:00,928 அந்த வரைபடங்கள், காட்சிகள். 557 00:46:00,928 --> 00:46:04,014 ஒருவேளை புதிர் துண்டுகள் ஒன்றோடு ஒன்று சேர்வதைப் போல 558 00:46:04,014 --> 00:46:06,808 அவற்றை எல்லாம் ஒன்றிணைப்பது, நீங்கள்தான். 559 00:46:06,808 --> 00:46:07,976 ஒரு விளக்கு போல. 560 00:46:08,519 --> 00:46:09,895 எனக்கு வழி காட்டுகிறது. 561 00:46:10,521 --> 00:46:11,647 எல்லையைச் சுற்றி யாரும் இல்லை. 562 00:46:22,157 --> 00:46:25,202 இவற்றின் மையத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டினீர்கள். 563 00:46:32,209 --> 00:46:33,418 வீட்டிற்கு என்னை வழிநடத்துகிறீர்கள். 564 00:48:07,387 --> 00:48:09,389 வசனத் தமிழாக்கம் அருண்குமார்