1 00:00:13,514 --> 00:00:16,308 இந்த நில அதிர்வு மையப்பகுதிகளை இங்கே பார்க்கிறீர்களா? 2 00:00:16,308 --> 00:00:19,770 ஏலியன் செயல்பாடுகளை பொருத்திப் பார்த்தால்... 3 00:00:22,648 --> 00:00:25,400 நில அதிர்வுகள் ஏலியன் இல்லாத பகுதிகளில் ஏற்பட்டிருக்கின்றன. 4 00:00:27,069 --> 00:00:28,570 டாக்டர் கஸ்டில்லோ இணைப்பில் இருக்கிறார். 5 00:00:28,570 --> 00:00:29,988 அவர் காத்திருக்கட்டும். 6 00:00:30,656 --> 00:00:32,156 அமேசான் பகுதியில், 7 00:00:32,156 --> 00:00:35,035 ஏலியன் செயல்பாட்டினால் பூகம்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 8 00:00:35,035 --> 00:00:38,830 ஐடபெல் ப்ராஜெக்ட்டில், பள்ளத்தில் இருந்து பூகம்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 9 00:00:38,830 --> 00:00:40,249 கடவுளே. 10 00:00:40,999 --> 00:00:45,003 எனவே, ஏலியன்கள் இல்லாத பகுதிகள் என்பவை நிஜமாகவே ஏலியன்கள் அற்றவை அல்ல. 11 00:00:45,587 --> 00:00:50,217 இந்த நில அதிர்வுகளின் மையப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஏலியன் இருப்பிற்கான ஆதாரம் என்று நம்புகிறோம். 12 00:00:51,051 --> 00:00:52,261 ஆனால் எப்படி? 13 00:00:52,886 --> 00:00:54,221 அது எப்படி சாத்தியம்? 14 00:00:54,805 --> 00:00:56,223 நாம் அவற்றை பார்த்திருப்போம், இல்லையா? 15 00:00:56,223 --> 00:00:59,309 அவற்றால் தங்கள் விண்கப்பலை மறைத்துக்கொள்ள முடியும். எங்களுடைய தற்போதைய விளக்கம் என்னவென்றால்... 16 00:00:59,309 --> 00:01:00,894 அவற்றால் தங்களையே மறைந்துகொள்ள முடியுமா? 17 00:01:02,354 --> 00:01:03,689 அவை எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். 18 00:01:06,024 --> 00:01:09,862 ஜனாதிபதி மேடம், ஏலியன் பற்றிய எங்கள் தகவல் உங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த நினைத்தோம். 19 00:01:10,571 --> 00:01:12,656 அது அழிக்கப்படுவதற்கு முன்பு, அது தன்னைத்தானே வெளிப்படுத்தியது... 20 00:01:12,656 --> 00:01:13,740 ஒரு போர்டல் என்று. 21 00:01:13,740 --> 00:01:15,576 ஆம், அறிக்கை கிடைத்தது. 22 00:01:15,576 --> 00:01:18,287 உளவாளியை அழிக்க காரணமாக இருந்த விஞ்ஞானியிடமிருந்து. 23 00:01:18,287 --> 00:01:20,747 மிட்சுகி நம்மை காப்பாற்றிவிட்டாள், ஜனாதிபதி மேடம். 24 00:01:21,623 --> 00:01:23,000 அவள்தான் பூகம்பங்களை நிறுத்தினாள். 25 00:01:23,000 --> 00:01:24,459 நான் அவளிடம் பேச வேண்டும். 26 00:01:24,459 --> 00:01:27,254 அவள் பேசும் நிலைமையில்... இல்லை. 27 00:01:27,254 --> 00:01:29,089 அவள் பேசும் நிலைமையில் இல்லையா? 28 00:01:30,215 --> 00:01:33,719 நம்மை ஏலியன்கள் சுற்றிவளைத்துவிட்டன. மக்கள் இறக்கிறார்கள். உணவு தீர்ந்து வருகிறது. 29 00:01:33,719 --> 00:01:35,721 செல்வி யமடோவிடமும் பேச முடியாதா? 30 00:01:35,721 --> 00:01:37,639 பேச முடியாது, இல்லை. 31 00:01:38,765 --> 00:01:41,977 உங்கள் மேற்பார்வையில் நம்முடைய இரண்டு புத்திசாலிகளை இழந்துவிட்டோம். 32 00:01:41,977 --> 00:01:43,979 அதோடு அவர்களுக்கு முன்பாக போன விஞ்ஞானியும். 33 00:01:43,979 --> 00:01:45,480 அது சரிதானே? 34 00:01:56,283 --> 00:01:57,492 எனக்கு தரவு வேண்டும்... 35 00:02:00,787 --> 00:02:02,414 அது எங்கே போனது? 36 00:02:03,040 --> 00:02:05,584 அறிக்கை. அது இங்கேதானே இருந்தது. 37 00:02:07,669 --> 00:02:09,338 ஒரு தனித்துவமான வடிவம் இருக்க வேண்டும். 38 00:02:09,838 --> 00:02:11,173 வடிவம். 39 00:02:11,757 --> 00:02:15,969 அவை ஒரு நெட்வொர்க், ஒரு ஹைவ் அமைப்பு. 40 00:02:17,221 --> 00:02:19,056 எங்கோ ஒரு சமிக்ஞை இருக்கிறது. 41 00:02:23,519 --> 00:02:28,148 என்னால் அதை வரைபடமாக்க முடியும். சமிக்ஞையை கண்டுபிடிக்க முடிந்தால், அதைப் பின்தொடரலாம்... 42 00:02:48,877 --> 00:02:50,337 நீ நலமா? 43 00:02:52,965 --> 00:02:54,216 உனக்கு என்ன வேண்டும்? 44 00:02:55,926 --> 00:02:57,386 நான் ஜனாதிபதியிடம் பேசினேன். 45 00:02:58,679 --> 00:03:01,765 மற்ற போர்ட்டல்களில் கிடைத்த தரவை அவர்கள் நமக்குத் தரப் போவதில்லை. 46 00:03:01,765 --> 00:03:05,143 ஏன்? அங்கிருப்பது போர்ட்டல்கள். 47 00:03:05,143 --> 00:03:08,355 உலகம் முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெட்வொர்க் அது. நாம் அதை வரைபடமாக்க முடியும். 48 00:03:08,355 --> 00:03:10,983 அவர்களின் விஞ்ஞானிகள் அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 49 00:03:11,984 --> 00:03:13,735 உனக்கு ஓய்வு தேவை என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். 50 00:03:13,735 --> 00:03:15,904 நம்மிடம் உளவாளி இல்லை என்பதால்... 51 00:03:18,532 --> 00:03:19,658 மிட்சுகி. 52 00:03:19,658 --> 00:03:20,951 நான் ஒரு விஷயத்தை நெருங்கிவிட்டேன். 53 00:03:20,951 --> 00:03:22,536 நான் அதை உணர்கிறேன். 54 00:03:25,831 --> 00:03:28,333 சில நேரங்களில் உடல் மற்றும் மன ரீதியான இழப்பு திருப்புமுனையாக உணரப்படலாம். 55 00:03:33,046 --> 00:03:34,173 ஓய்வெடு. 56 00:03:35,966 --> 00:03:37,009 தயவுசெய்து. 57 00:03:52,733 --> 00:03:54,067 என்னைப் பின்தொடரு. 58 00:04:04,286 --> 00:04:05,454 ஓய்வு. 59 00:04:06,955 --> 00:04:08,081 சரி. 60 00:04:08,707 --> 00:04:09,791 ஓய்வு. 61 00:04:17,048 --> 00:04:18,382 என்னைப் பின்தொடரு. 62 00:04:18,382 --> 00:04:19,468 எதற்காக? 63 00:04:23,597 --> 00:04:25,265 என்னைப் பின்தொடரு. 64 00:04:41,031 --> 00:04:42,991 எதுவுமில்லை... 65 00:04:43,534 --> 00:04:48,121 இங்கே எதுவுமில்லை... நேர விரையம்தான்... 66 00:04:49,122 --> 00:04:51,583 செயலிழப்பு... 67 00:04:58,757 --> 00:05:01,802 பறவைகள் நமது கிரகத்தின் காந்தப்புலத்துடன் இணைந்துள்ளன. 68 00:05:02,553 --> 00:05:05,264 அந்த புலத்துடன் ஏலியன்கள் இணைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். 69 00:05:07,182 --> 00:05:08,809 எல்லாமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. 70 00:05:08,809 --> 00:05:11,019 எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறது, மிட்சுகி. 71 00:05:11,687 --> 00:05:12,771 நீ கூட. 72 00:05:23,240 --> 00:05:25,325 நீயே உன்னை அமைதிப்படுத்து. 73 00:05:25,826 --> 00:05:26,910 நீயே உன்னை அமைதிப்படுத்து. 74 00:05:27,828 --> 00:05:29,621 ...இணைக்கப்பட்டிருக்கிறது... 75 00:05:29,621 --> 00:05:32,499 ...இணைக்கப்பட்டிருக்கிறது, எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறது... 76 00:05:34,710 --> 00:05:35,836 எதனுடன்? 77 00:05:41,049 --> 00:05:43,218 எதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது? 78 00:05:43,719 --> 00:05:45,387 ஹலோ. நான் பேசுவது கேட்கிறதா? 79 00:05:45,387 --> 00:05:47,181 எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறது, மிட்சுகி. 80 00:05:48,891 --> 00:05:50,350 யாராவது இருக்கிறீர்களா? 81 00:05:55,105 --> 00:05:57,816 பையன்... மறுபுறம்... 82 00:05:58,650 --> 00:06:00,861 அவன்தான் தீர்வுக்கான திறவுகோல். 83 00:06:02,029 --> 00:06:03,280 நான் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். 84 00:07:43,130 --> 00:07:45,340 - இதை சரிபார்க்கிறீர்களா? - இப்போதே சரிபார்க்கிறேன். 85 00:07:45,340 --> 00:07:46,633 எனக்குப் புரியவில்லை. நாம் இவனை இழக்கிறோம். 86 00:07:46,633 --> 00:07:48,385 - பரவாயில்லை. - எனக்குப் புரியவில்லை. 87 00:07:49,845 --> 00:07:51,221 நாம் இவனை இழக்கிறோம். 88 00:07:51,221 --> 00:07:53,098 - எபிநெஃப்ரினை முயற்சி செய். - இவனை எழுப்பு. 89 00:07:53,098 --> 00:07:54,099 பின்னால் போ. 90 00:08:02,024 --> 00:08:03,609 ஹேய். என்னைப் பார். 91 00:08:04,443 --> 00:08:06,445 - உன் பெயர் என்ன? - காஸ்பர் மாரோ. 92 00:08:06,445 --> 00:08:08,280 - எங்கே இருக்கிறாய்? - ஃபிரான்ஸில். 93 00:08:08,280 --> 00:08:11,033 சரி. எங்களுடனேயே இரு. 94 00:08:11,033 --> 00:08:12,701 என்ன நடந்தது? 95 00:08:16,622 --> 00:08:17,706 ஒரு ஒளியைப் பார்த்தேன். 96 00:08:19,458 --> 00:08:21,793 நான் இதற்கு முன்பு பார்த்திராத பிரகாசத்துடன் ஒரு ஒளியைப் பார்த்தேன். 97 00:08:21,793 --> 00:08:24,213 இந்த முறை ஏலியன்கள் என்னைத் தாக்கின. 98 00:08:24,213 --> 00:08:27,674 நான் ஒளிக்கு எவ்வளவு நெருக்கமாக போகிறேனோ, அவ்வளவு அவை திருப்பித் தாக்குவது போல இருந்தது. 99 00:08:27,674 --> 00:08:29,343 அவை பாதுகாக்க விரும்பும் ஒன்று இருக்கிறதா? 100 00:08:29,343 --> 00:08:32,721 அது என்ன இடம் என்று கண்டுபிடிக்க முடியுமா? அந்த ஒளியின் அர்த்தம் என்ன? 101 00:08:32,721 --> 00:08:34,806 - எனக்குத் தெரியவில்லை. - WDC-க்கு ஒரு வரைபடம் தேவை. 102 00:08:34,806 --> 00:08:35,890 அது இன்னும் தயாராகவில்லை. 103 00:08:35,890 --> 00:08:38,602 இவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், கேப்ரியல். 104 00:08:38,602 --> 00:08:41,563 நான் திரும்ப உள்ளே போக வேண்டும். அது என்ன இடம் என்று கண்டுபிடிக்க வேண்டும். 105 00:08:41,563 --> 00:08:44,107 ஆனால் நீ திரும்ப விழிக்க முடியாத கோமா நிலைக்கு போனால் என்ன செய்வது? 106 00:08:44,107 --> 00:08:48,695 அது நடந்தால், அவை என்னைக் காயப்படுத்துவதைப் போலவே நானும் அவற்றை காயப்படுத்துவேன். 107 00:08:48,695 --> 00:08:53,784 இல்லை. நான் WDC உடன் கலந்தாலோசிக்கும் வரை யாரும் எதுவும் செய்யக் கூடாது. புரிந்ததா? 108 00:09:26,775 --> 00:09:27,776 ஹேய். 109 00:09:33,907 --> 00:09:35,033 நன்றி. 110 00:09:41,540 --> 00:09:42,541 என்ன? 111 00:09:42,541 --> 00:09:46,170 உங்களால் அடுத்த இடத்தில் சாராவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நான் தொடர்ந்து தேடுவேன். 112 00:09:46,670 --> 00:09:47,754 நாம். 113 00:09:49,089 --> 00:09:50,674 நாம் அவளைத் தொடர்ந்து தேடுவோம். 114 00:09:51,341 --> 00:09:56,180 ஆனால் நபர்களை இழக்கும் எல்லா இடங்களுக்கும் உங்களை அழைத்துப் போக முடியாது. 115 00:09:58,265 --> 00:10:03,812 ஏதாவது நடந்து என்னால் லூக்கை என்னுடன் அழைத்துப்போக முடியாவிட்டால், அவனை கவனித்துக் கொள்வீர்களா? 116 00:10:03,812 --> 00:10:04,897 நீ கேட்கவே தேவையில்லை. 117 00:10:04,897 --> 00:10:05,981 நான் கேட்க வேண்டும். 118 00:10:06,690 --> 00:10:07,941 எனக்காக. 119 00:10:09,693 --> 00:10:11,361 நான் ரைடருக்கும் அதையே செய்வேன். 120 00:10:11,361 --> 00:10:12,779 நீ செய்வாய் என்று தெரியும். 121 00:10:14,948 --> 00:10:15,949 என்ன? 122 00:10:19,328 --> 00:10:21,205 அது உன் நல்ல குணங்களில் ஒன்று. 123 00:10:24,333 --> 00:10:27,503 உன் பலம், உன் விடாமுயற்சி. 124 00:10:29,213 --> 00:10:31,048 நீ நேசிக்கும் ஒன்றுக்காக நீ போராடும் விதம். 125 00:10:33,592 --> 00:10:35,010 நமக்கு அதிக நேரம் கிடைத்திருக்கலாம். 126 00:10:37,554 --> 00:10:38,972 என்றாவது ஒரு நாள் கிடைக்கலாம். 127 00:10:42,559 --> 00:10:44,353 எல்லோரும், எழுந்து வேலையைப் பாருங்கள். 128 00:10:44,353 --> 00:10:46,313 பதினைந்து நிமிடங்களில் எல்லோரும் தங்கள் 129 00:10:46,313 --> 00:10:48,607 உடைமைகளை எடுத்துக்கொண்டு பயணத்துக்குத் தயாராகுங்கள். 130 00:10:49,983 --> 00:10:51,401 சென்று சாராவைக் கண்டுபிடிப்போம். 131 00:10:58,200 --> 00:10:59,535 பரவாயில்லை, செல்லம். 132 00:10:59,535 --> 00:11:02,079 மருத்துவர் இன்னும் சில சோதனைகளை நடத்த வேண்டுமாம். 133 00:11:05,374 --> 00:11:06,583 ஹேய், சாரா. 134 00:11:07,459 --> 00:11:08,710 என் அம்மா வேண்டும். 135 00:11:09,461 --> 00:11:11,088 தெரியும், செல்லம். எனக்குத் தெரியும். 136 00:11:12,089 --> 00:11:14,466 ஏலியன் விண்கப்பலின் உடைந்த பாகத்தைப் பற்றி மீண்டும் உன்னுடன் பேச வேண்டும். 137 00:11:15,050 --> 00:11:16,760 நான் ஏற்கனவே எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். 138 00:11:16,760 --> 00:11:18,887 ஒருவேளை நீ மறந்த ஏதாவது இருக்கலாம். 139 00:11:18,887 --> 00:11:21,098 எங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிவது மிகவும் முக்கியம். 140 00:11:21,098 --> 00:11:23,225 நீ ஏன் அதை ஞாபகப்படுத்த முயற்சிக்கக் கூடாது? 141 00:11:23,225 --> 00:11:24,434 எதையும். 142 00:11:32,067 --> 00:11:34,945 அதனிடம் எப்படி பேசுவது என்று என் அண்ணனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 143 00:11:36,822 --> 00:11:41,076 -"அதனிடம் பேசுவது" என்று என்ன சொல்கிறாய்? - பேசுவது அல்ல, ஆனால் உணர்வது. 144 00:11:42,077 --> 00:11:43,370 உணர்வதா? 145 00:11:43,370 --> 00:11:45,330 என் அம்மாவை எப்போது நான் பார்க்க முடியும்? 146 00:11:47,207 --> 00:11:49,001 நாங்கள் அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். 147 00:11:53,130 --> 00:11:55,799 அந்த உடைந்த துண்டு உன் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். 148 00:11:56,383 --> 00:11:57,426 அதற்கு நீண்ட நேரம் ஆகாது. 149 00:11:59,344 --> 00:12:00,721 படு. சரி. 150 00:12:08,353 --> 00:12:11,815 பத்து வெவ்வேறு சுரங்க ரயில் நிலையங்கள் இருக்கின்றன, அவற்றுக்கிடையே தடங்கள் இல்லை. 151 00:12:12,441 --> 00:12:14,193 நீங்கள் எல்லோரும் ஒரே இடத்திற்குப் போனீர்களா? 152 00:12:15,444 --> 00:12:16,862 அவனது ஓவியங்கள் என்ன ஆனது? 153 00:12:16,862 --> 00:12:18,030 அதுதான் அந்த ஒளியா? 154 00:12:18,030 --> 00:12:19,323 ஆம். 155 00:12:20,741 --> 00:12:23,493 இவை அந்த இடத்தின் வெவ்வேறு தகவல்கள். 156 00:12:23,493 --> 00:12:26,371 அதாவது, அந்த இடத்திற்குப் போகாதவர்களுக்கு இவை எதுவும் புரியாது. 157 00:12:26,371 --> 00:12:29,082 நான் அங்கே திரும்பப் போக வேண்டும். அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். 158 00:12:29,082 --> 00:12:30,584 கிடைக்கும் எல்லா தகவல்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். 159 00:12:30,584 --> 00:12:32,961 நீ அங்கு இருக்கும்போது குழந்தைகளால் உனக்கு உதவ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாயா? 160 00:12:32,961 --> 00:12:34,463 பத்து வெவ்வேறு சுரங்க ரயில் நிலையங்கள். 161 00:12:36,882 --> 00:12:39,051 ப்ரிஷாவுக்கு இன்னொரு குரல் கேட்கிறது. 162 00:12:39,051 --> 00:12:40,219 சரிதானே, ப்ரிஷா? 163 00:12:40,219 --> 00:12:43,305 ஆம், எங்கள் எல்லோராலும் வேறொரு குரலைக் கேட்க முடிகிறது. 164 00:12:43,305 --> 00:12:45,182 பொறு. என்ன வேறொரு குரல்? 165 00:12:46,266 --> 00:12:48,101 வெளியே இன்னொருவன் இருக்கிறான். 166 00:12:48,101 --> 00:12:50,479 அவை தொடர்புகொள்ளும் இன்னொருவன். 167 00:12:50,479 --> 00:12:52,231 அது யாரென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். 168 00:12:52,231 --> 00:12:53,565 ஒருவேளை அவனால் நமக்கு உதவ முடியலாம். 169 00:12:55,025 --> 00:12:56,735 WDC இடமிருந்து தகவல் வந்ததா? 170 00:12:56,735 --> 00:12:58,195 இப்போது ஒரு சந்திப்பு இருக்கிறது. 171 00:12:58,862 --> 00:13:02,032 காஸ்பர், இதைப் பற்றிய என்னுடைய கருத்து உனக்கே தெரியும், ஆனால் அது அவர்களின் முடிவாக இருக்கும். 172 00:13:05,702 --> 00:13:07,496 நான் திரும்ப உள்ளே போவதை அவர் விரும்பவில்லை. 173 00:13:07,496 --> 00:13:10,499 ஆனால் அவரும் டாக்டர்தானே. அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதற்கு காரணம் இருக்கலாம். 174 00:13:10,499 --> 00:13:13,252 ஆம், ஆனால் என்னை கவனித்துக்கொள்வது எப்படி மற்றவர்களுக்கு உதவும்? 175 00:13:13,252 --> 00:13:14,920 அது உனக்கு உதவுகிறது, இல்லையா? 176 00:13:14,920 --> 00:13:17,881 அடுத்த முறை நீ ஆழ்தூக்கத்திற்கு போகும்போது நான் உன்னுடன் வந்தால்? 177 00:13:17,881 --> 00:13:20,008 அதன் மூலம் நான் உன்னை நம் உலகத்துடன் இணைப்பில் வைத்திருக்க முடியும். 178 00:13:20,008 --> 00:13:21,426 கொஞ்சம் பொறு. நீ என்ன சொல்கிறாய்? 179 00:13:21,426 --> 00:13:23,136 அதாவது, உன்னால் எப்படி அதைச் செய்ய முடியும்? 180 00:13:23,136 --> 00:13:24,721 மருத்துவர்கள் என்னை செய்ய வைப்பார்கள். 181 00:13:25,222 --> 00:13:27,891 நான் என் கனவில் காஸ்பைப் பார்த்தேன். அப்படித்தான் அவனைக் கண்டுபிடித்தோம். 182 00:13:27,891 --> 00:13:29,935 அவன் என்னுடனும் ஏலியன்களுடனும் இருந்தான். 183 00:13:29,935 --> 00:13:31,728 நீ ஒருபோதும் விழிக்கவில்லை என்றால்? 184 00:13:31,728 --> 00:13:33,230 நான் விழிப்பேன். 185 00:13:33,230 --> 00:13:34,773 அது வெறும் கனவுகள்தான். 186 00:13:34,773 --> 00:13:38,652 எப்படியிருந்தாலும், காஸ்ப் தனது மனதில் என்னைப் பார்த்ததுதான் அவனை நம் உலகில் வைத்திருந்தது. 187 00:13:38,652 --> 00:13:41,530 எனவே அதுவே ஏலியன்களுக்கு எதிரான நம்முடைய சிறந்த ஆயுதமாக இருக்கலாம். 188 00:13:42,614 --> 00:13:45,409 - உனக்கு அது பரவாயில்லையா, நண்பா? - ஹேய்! அது என்னுடைய முடிவு. 189 00:13:45,409 --> 00:13:47,828 அவனுடையதோ வேறு யாருடையதோ இல்லை. 190 00:13:47,828 --> 00:13:50,414 ஒருவேளை அதைத்தான் அவை விரும்பலாம். இவன் விருப்புவதை. 191 00:13:50,414 --> 00:13:52,541 - நீ அவற்றோடு மறுபுறம் இருப்பது. - ஹேய்! 192 00:13:53,250 --> 00:13:55,294 - நான் அவற்றின் பக்கம் இல்லை! - அவன் இல்லை என்பது உனக்குத் தெரியும். 193 00:13:55,294 --> 00:13:57,921 அப்படியா? காஸ்பர் பழைய மாதிரி இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். 194 00:13:57,921 --> 00:14:00,174 வருந்துகிறேன், நண்பா, அது உண்மைதான். அது உனக்கும் தெரியும். 195 00:14:00,174 --> 00:14:02,718 நாங்கள் எல்லோரும் அதைப் பற்றி கொஞ்சம் தனித்தனியாக பேசியிருக்கிறோம். 196 00:14:03,302 --> 00:14:06,763 ஒவ்வொரு முறையும் நீ உன் உயிரை பணயம் வைப்பது எனக்குத் தெரியும்... 197 00:14:06,763 --> 00:14:08,390 நீ எங்கே சென்றாலும். 198 00:14:08,390 --> 00:14:10,601 ஆனால் இன்னொருவரை அதில் இழுத்துவிட எந்த காரணமும் இல்லை! 199 00:14:10,601 --> 00:14:12,311 இது எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியும், நண்பா. 200 00:14:12,978 --> 00:14:15,772 இது நான் ஏலியனாக இருப்பது பற்றியோ, நான் அவற்றுடன் இருப்பது பற்றியோ இல்லை. 201 00:14:15,772 --> 00:14:17,441 இது நீ அவளுடன் இருப்பது பற்றியது. 202 00:14:18,025 --> 00:14:20,569 ஏனென்றால் நீ ஜமிலாவை நேசிக்கிறாய், அது பரவாயில்லை. 203 00:14:20,569 --> 00:14:24,323 ஆனால் அவள் உன்னைத் திரும்ப நேசிக்காததற்கு நீ என் மீது கோபத்தைக் காட்ட வேண்டியதில்லை! 204 00:14:32,122 --> 00:14:34,208 நீ செய்யலாம் என்று WDC சொல்லிவிட்டது. 205 00:14:36,585 --> 00:14:38,337 - என்ன பிரச்சினை? - ஒன்றுமில்லை, பென். 206 00:14:38,337 --> 00:14:39,463 எல்லோரும் நன்றாக இருக்கிறோம். 207 00:15:05,906 --> 00:15:07,115 இது ப்ராஜக்ட் ஐடபெல்லா? 208 00:15:07,115 --> 00:15:10,202 இன்று நாங்கள் யாரையும் இங்கு எதிர்பார்க்கவில்லை. அனுப்பியது யார்? 209 00:15:10,202 --> 00:15:11,453 ஜெனரல் மிட்செல். 210 00:15:12,037 --> 00:15:13,872 நாங்கள் கொலராடோவில் உள்ள பியர்ஸ் முகாமைச் சேர்ந்தவர்கள். 211 00:15:13,872 --> 00:15:15,374 நாங்கள் மூவ்மென்ட் உறுப்பினர்களால் தாக்கப்பட்டோம். 212 00:15:15,374 --> 00:15:18,961 எங்கள் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டார்கள். பாதி பேரை கொன்றுவிட்டார்கள். 213 00:15:18,961 --> 00:15:21,129 பிறகு வயோமிங்கிலிருந்து வேட்டையாடி கொல்பவை வருவதாகக் கேள்விப்பட்டோம். 214 00:15:21,129 --> 00:15:22,506 எங்களை அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்தேன். 215 00:15:22,506 --> 00:15:24,842 என்னால் கண்டுபிடிக்க முடிந்த மிக நெருக்கமான செயல்பாட்டில் உள்ள இராணுவ தளம் இதுதான். 216 00:15:24,842 --> 00:15:27,719 அந்தப் பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தோம். மிகவும் ஆபத்தான நிலையில். 217 00:15:28,804 --> 00:15:30,556 எல்லோருடைய அடையாள அட்டைகளும் வேண்டும். 218 00:15:32,015 --> 00:15:33,058 அவர்களுடையது திருடப்பட்டது. 219 00:15:34,142 --> 00:15:37,229 அவர்கள் எங்களைத் தாக்கியபோது அது என்னிடம் இல்லாததால் இன்னும் என்னுடையது இருக்கிறது. 220 00:15:42,109 --> 00:15:44,111 பாதுகாப்பு மீறல். பிரிவு F-இல். 221 00:15:44,736 --> 00:15:46,029 மீண்டும். 222 00:15:48,782 --> 00:15:50,200 என்ன அது? 223 00:15:50,200 --> 00:15:52,536 ஃப்ரன்ட் ஒன்று, ஃப்ரன்ட் ஒன்பது, நான் பேசுவது கேட்கிறதா? 224 00:15:52,536 --> 00:15:56,081 கேட்டது, ஓவர். எனக்கு தென்கிழக்கு பக்கத்தில் கூடுதல் காப்பு தேவை. இப்போதே. 225 00:15:56,081 --> 00:15:58,250 - பின்னால் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்? - சுமார் பத்து. 226 00:15:58,250 --> 00:16:00,586 தளத்திற்குச் செல்லுங்கள். நகரத்தின் மையம், அதைக் கண்டுபிடிப்பது எளிது. 227 00:16:00,586 --> 00:16:03,338 எல்லோரையும் பதிவு செய்து, தயாராக இருக்கச் சொல், நமக்குத் தேவைப்படலாம். 228 00:16:14,099 --> 00:16:15,726 தளத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம்? 229 00:16:15,726 --> 00:16:18,729 நான்கு மைல்கள். இந்த முட்டாள் நம்மை தவறாக வழிநடத்தவில்லை என்றால். 230 00:16:18,729 --> 00:16:21,231 பாருங்கள், திட்டங்களைப் பார்த்தேன். அவர்கள் மாற்றியிருந்தால், எனக்குத் தெரியாது. 231 00:16:21,231 --> 00:16:22,774 சாரா அங்கே இல்லை என்றால்? 232 00:16:23,859 --> 00:16:25,694 - அவள் அங்கே இருக்கிறாள். - எப்படி உனக்குத் தெரியும்? 233 00:16:26,278 --> 00:16:27,446 உடைந்த துண்டு. 234 00:16:29,156 --> 00:16:30,199 என்னால் உணர முடிகிறது. 235 00:16:31,283 --> 00:16:32,659 அது அங்கே இருந்தால், அவளும் இருக்கிறாள். 236 00:16:35,996 --> 00:16:40,292 தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் சீருடையில் இருந்தார்கள். வரும்போதே இறந்த நிலையில். 237 00:16:40,834 --> 00:16:42,794 இன்னும் வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 238 00:16:43,295 --> 00:16:44,379 எல்லோரையும் தளத்தில் வைத்திரு. 239 00:16:44,379 --> 00:16:47,132 மறுஅறிவிப்பு வரும் வரை மக்கள் பாதுகாப்பு அமைப்பை விட்டுவிடுங்கள். 240 00:16:47,132 --> 00:16:49,009 எல்லா ஆதாரங்களையும் பாதுகாத்திடுங்கள். 241 00:16:49,009 --> 00:16:50,427 சார். 242 00:17:18,413 --> 00:17:20,499 அந்தப் பையன், உனக்கு அவனைத் தெரியுமா? 243 00:17:20,499 --> 00:17:21,875 அவன் உன் ஞாபகத்தில் இருப்பவன் இல்லையா? 244 00:17:21,875 --> 00:17:24,461 நீ அவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றால், 245 00:17:25,170 --> 00:17:27,923 அவன் உன் மனதில் இல்லையென்றால் என்ன நடந்தது என்று நினைக்கிறாய்? 246 00:17:29,007 --> 00:17:32,928 அது அவர்களுடைய நினைவில் இருந்தது. 247 00:17:35,639 --> 00:17:37,516 உன் மனதை திற... 248 00:17:38,934 --> 00:17:40,602 தடையைத் தகர்த்து... 249 00:17:41,270 --> 00:17:42,813 தடையைத்... தகர்த்து... 250 00:17:43,814 --> 00:17:45,315 உள்ளே நுழைய அனுமதி. 251 00:18:10,924 --> 00:18:12,134 மன்னித்துவிடு. 252 00:18:15,012 --> 00:18:16,471 நான் சொன்னதற்கு. 253 00:18:17,097 --> 00:18:19,016 நான் சொன்னதை எப்படி சொன்னேன் என்பதற்கு. 254 00:18:19,892 --> 00:18:22,394 அதை விட நான் உனக்கு கடன்பட்டிருக்கிறேன். உனக்கு "நன்றி" சொல்ல கடன்பட்டிருக்கிறேன். 255 00:18:23,312 --> 00:18:25,939 நீ ஒரு கண்டம் தாண்டி பயணித்தாய், 256 00:18:27,065 --> 00:18:28,275 நீ ஆபத்தை எதிர்கொண்டாய்... 257 00:18:31,570 --> 00:18:32,571 எனக்காக. அதோடு... 258 00:18:33,322 --> 00:18:34,489 என்னை மன்னித்துவிடு. 259 00:18:35,657 --> 00:18:37,242 - நான் நன்றி... - உனக்காக நான் அதைச் செய்யவில்லை. 260 00:18:37,242 --> 00:18:38,577 எனவே நன்றி தேவையில்லை. 261 00:18:39,620 --> 00:18:40,954 மன்னிப்பும் தேவையில்லை. 262 00:18:41,830 --> 00:18:43,123 நீ சொன்னது சரிதான். 263 00:18:45,250 --> 00:18:46,543 என் உணர்வுகளைப் பற்றி. 264 00:18:49,421 --> 00:18:52,758 பார், உன் உயிரைப் பணயம் வைக்க நீ விரும்பினால், தொடர்ந்து செய். எனக்குக் கவலை இல்லை. 265 00:18:53,967 --> 00:18:55,636 ஆனால் நான் அவளைப் பற்றி கவலைப்படுகிறேன். 266 00:18:56,261 --> 00:18:57,554 நான் அவளைப் பற்றி கவலைப்படுகிறேன். 267 00:18:59,056 --> 00:19:01,391 கேள், இந்த முழு உலகமே? இது எல்லாம் கேவலம். 268 00:19:02,184 --> 00:19:03,268 நேர்மையாகச் சொல்வதென்றால், 269 00:19:03,268 --> 00:19:06,730 இனி சண்டைபோட என்ன எஞ்சியிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, அவளைத் தவிர. 270 00:19:06,730 --> 00:19:10,275 எனவே உனக்கு அக்கறை இருந்தால், அதாவது, கொஞ்சம் கூட, 271 00:19:10,275 --> 00:19:14,196 நான் சொல்வது சரி என உனக்கே தெரியும், அவளுக்காக இப்போது உன்னால் செய்ய முடிந்ததைச் செய்வாய். 272 00:19:18,325 --> 00:19:19,326 விட்டுவிடு. 273 00:19:42,516 --> 00:19:44,017 ஹேய். நாங்கள் மீண்டும் வருவோம். 274 00:19:44,017 --> 00:19:45,644 உங்கள் குடும்பத்திடம் அழைத்துச் செல். 275 00:19:46,728 --> 00:19:47,729 போகலாம்! 276 00:20:03,328 --> 00:20:04,329 ஹாய். 277 00:20:06,748 --> 00:20:08,166 அங்கே ஏதோ இருக்கிறது. 278 00:20:09,501 --> 00:20:10,836 அது என்னவென்று தெரியவில்லை. 279 00:20:14,047 --> 00:20:15,174 வித்தியாசமாக உணர்கிறேன். 280 00:20:15,883 --> 00:20:20,012 சண்டைக்கு தயாராகி, அனுமதிக்கப்படாதது சலிப்பை தருகிறது. அதற்கு காரணம் என்ன? 281 00:20:21,263 --> 00:20:22,681 எப்போது என்னை நம்புவீர்கள்? 282 00:20:24,308 --> 00:20:27,102 நீதான் அவனுக்கு பாதுகாப்பு. இந்த சண்டையில் உன் பங்கு அதுதான். 283 00:20:28,604 --> 00:20:29,605 நீ அதற்கு தயாரா? 284 00:20:31,690 --> 00:20:34,193 இந்தக் குழுவில் உன்னைவிட எனக்கு நம்பிக்கையானவர்கள் யாரும் இல்லை. 285 00:20:34,902 --> 00:20:35,986 சரி. 286 00:20:36,653 --> 00:20:38,113 நாம் V வடிவத்தில் முன்னேறுவோம். 287 00:20:38,113 --> 00:20:40,949 தளத்தின் வெளிப்புற எல்லையில் தண்ணீர் பம்ப்பைத் தேடுங்கள். 288 00:20:41,533 --> 00:20:43,702 கார்போரல் சொன்னது சரி என்றால், நாம் மிகவும் நெருக்கத்தில் இருக்கிறோம். 289 00:20:43,702 --> 00:20:45,954 குனிந்து செல்லுங்கள், உங்கள் துணையுடன் இணைந்திருங்கள். 290 00:20:48,123 --> 00:20:49,249 உங்கள் உயிர் அவர்களை சார்ந்திருக்கிறது. 291 00:20:51,752 --> 00:20:52,753 இதோ. 292 00:20:53,587 --> 00:20:54,713 ரைடருடன் இரு. 293 00:20:57,049 --> 00:20:58,050 நான் உன்னை நேசிக்கிறேன். 294 00:20:59,593 --> 00:21:00,677 நானும் உங்களை நேசிக்கிறேன். 295 00:21:25,285 --> 00:21:28,956 நகருங்கள். மீண்டும் சொல்கிறேன். எல்லோரும் நகருங்கள். 296 00:21:32,209 --> 00:21:34,795 சரி, மீதமுள்ளவர்கள். செல்லுங்கள்! 297 00:22:35,439 --> 00:22:36,773 எங்களுக்கு கூடுதல் வீரர்கள் தேவை. 298 00:22:46,783 --> 00:22:48,202 பொறுமையாக. 299 00:22:48,202 --> 00:22:49,119 சரியான தேர்வு. 300 00:22:57,503 --> 00:22:59,213 நுழைவு கட்டுப்பாடு 301 00:23:01,757 --> 00:23:02,758 கவனித்துக்கொள்ளுங்கள். 302 00:23:12,184 --> 00:23:15,020 ...காத்திருங்கள். நிலைமையின் அறிக்கையைக் கொடுக்கிறோம். 303 00:23:15,020 --> 00:23:16,897 சரி, பிராவோ டூ. 304 00:23:18,023 --> 00:23:19,816 மேலே தாக்குதல்காரர்கள் இருக்கிறார்களா? 305 00:23:24,071 --> 00:23:26,156 மேற்புறம், நாங்கள் இப்போது நகர்கிறோம். 306 00:23:26,156 --> 00:23:28,242 அங்கு சென்றவுடன் நிலைமைப் பற்றி தெரிவிக்கிறோம். 307 00:23:28,242 --> 00:23:29,618 கேட்டது, பிராவோ டூ. 308 00:24:09,408 --> 00:24:12,160 சாரா. சாரா, செல்லம். 309 00:24:14,663 --> 00:24:16,290 - ஹேய். - ஹலோ? 310 00:24:16,290 --> 00:24:17,749 ஹேய். 311 00:24:19,001 --> 00:24:20,002 நீங்கள் யார்? 312 00:24:20,002 --> 00:24:22,212 தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் இரண்டு குடிமக்கள். 313 00:24:25,424 --> 00:24:26,758 நீங்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 314 00:24:29,303 --> 00:24:31,221 உங்கள் பூட்ஸ் மிகவும் தாழ்வாக இருக்கிறது. 315 00:24:31,930 --> 00:24:33,015 யார் நீங்கள்? 316 00:24:35,017 --> 00:24:37,853 நீ யாரை அழைத்தாய்? சாரா? 317 00:24:39,229 --> 00:24:40,606 நீண்ட பழுப்பு முடியா? 318 00:24:41,315 --> 00:24:43,108 இவ்வளவு உயரமா? எட்டு அல்லது ஒன்பது வயதா? 319 00:24:49,823 --> 00:24:52,784 - அவள் எங்கே என்று உனக்குத் தெரியுமா? - நேற்று அவளை இங்கு அழைத்து வந்தார்கள். 320 00:24:52,784 --> 00:24:55,329 அவளைக் கண்டுபிடிக்க என்னால் உதவ முடியும். நீங்கள் யார் பக்கம்? 321 00:24:56,330 --> 00:24:58,123 - மூவ்மென்ட். - சரி. 322 00:24:58,123 --> 00:25:02,419 எங்களை வெளியே விடுங்கள், ஏனென்றால் நாம் ஒரே சண்டையைத்தான் போடுகிறோம், சரியா? 323 00:25:05,005 --> 00:25:06,507 ஹேய். 324 00:25:06,507 --> 00:25:09,384 இராணுவ சிறையின் இந்தப் பக்கத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? அட. 325 00:25:18,268 --> 00:25:20,896 இருவரும் பின்னால் செல்லுங்கள். 326 00:25:22,439 --> 00:25:23,482 நகராதீர்கள். 327 00:25:26,360 --> 00:25:27,486 நுழைவு கட்டுப்பாடு 328 00:25:42,084 --> 00:25:44,586 உங்கள் பெண், அவள் மருத்துவப் பிரிவில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். 329 00:25:44,586 --> 00:25:46,129 என்னால் உனக்கு காட்ட முடியும், சரியா? 330 00:25:50,717 --> 00:25:51,760 வாருங்கள். 331 00:26:00,143 --> 00:26:01,854 - அடச்சே. - ஹேய்! 332 00:26:04,982 --> 00:26:06,233 அடடா. ச்சே. 333 00:26:09,945 --> 00:26:12,197 - எனக்கு என் அம்மா வேண்டும்! - நாம் போக வேண்டும். 334 00:26:14,491 --> 00:26:15,993 துப்பாக்கியைக் கொடு. நான் நன்றாக சுடுவேன். 335 00:26:21,498 --> 00:26:24,209 ஹேய், கேள். அவளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், துப்பாக்கியை என்னிடம் கொடு. 336 00:26:24,209 --> 00:26:27,504 நான் ஒரு கடற்படை வீரன். நான்கு முறை போருக்குச் சென்றவன், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவன். 337 00:26:27,504 --> 00:26:28,755 உங்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு நான்தான். 338 00:26:28,755 --> 00:26:30,132 ஊடுருவல்காரர்கள், பிரிவு 3-இல்! 339 00:26:36,096 --> 00:26:39,057 நான் சொன்னவுடன், ஓடு. அவர்கள் உன் மகளோடு நகர்ந்துகொண்டிருப்பார்கள். 340 00:26:39,057 --> 00:26:41,685 நாங்கள் இங்கேயே இருந்து, எங்களால் முடிந்தவரை அவர்களை நிறுத்துகிறோம். 341 00:26:42,561 --> 00:26:43,979 தயாரா? 342 00:26:55,240 --> 00:26:57,242 கவனமாக. என்னுடன் இருங்கள். 343 00:26:57,242 --> 00:26:59,328 நபரை பாதுகாப்பான பகுதிக்கு கூட்டிச்செல்கிறோம். 344 00:26:59,328 --> 00:27:00,412 சரி. 345 00:27:05,042 --> 00:27:06,043 சாரா. 346 00:27:07,211 --> 00:27:09,129 என்னுடன் இருங்கள். 347 00:27:27,773 --> 00:27:29,233 சுடாதே! தயவுசெய்து! 348 00:27:31,818 --> 00:27:33,612 என் மகள் எங்கே? 349 00:27:37,366 --> 00:27:38,825 போக வேண்டிய நேரம்! செல்லுங்கள்! 350 00:28:24,538 --> 00:28:27,541 சாரா, நான் அம்மா! நகராதே! நான் உன்னை தூக்கிக்கொள்கிறேன்! 351 00:28:28,834 --> 00:28:30,210 திரும்பி வாருங்கள்! 352 00:28:40,387 --> 00:28:42,890 துப்பாக்கியை போட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் இருந்து விலகிச் செல். 353 00:29:27,267 --> 00:29:28,268 பில்லி. 354 00:29:42,741 --> 00:29:44,076 நான் மான்டியிடம் மன்னிப்பு கேட்டேன். 355 00:29:46,995 --> 00:29:48,872 நீ என்னுடன் வருவது பற்றி அவன் சொன்னது சரிதான். 356 00:29:53,919 --> 00:29:54,920 காஸ்ப், 357 00:29:55,712 --> 00:29:58,715 நான் தொடர்ந்து இந்த முடிவுகளை எடுத்து வருகிறேன். 358 00:29:59,967 --> 00:30:04,179 பேருந்தில், நாங்கள் விபத்துக்குள்ளாகும் முன், அவை இங்கே இருப்பது நமக்குத் தெரியும் முன்பே. 359 00:30:05,180 --> 00:30:09,101 வீட்டில், நான் என் குடும்பத்தை சேனலில் விட்டுவிட்டு வந்தபோது. 360 00:30:09,101 --> 00:30:13,063 தொடர்ந்து உன்னைத் தேட நம் நண்பர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஒப்புக்கொள்ளவைத்தபோது. 361 00:30:15,357 --> 00:30:16,567 மருத்துவமனையில் 362 00:30:18,026 --> 00:30:19,027 உன்னைக் கண்டுபிடித்தபோது. 363 00:30:22,739 --> 00:30:23,866 மான்டி சொன்னது சரிதான். 364 00:30:25,868 --> 00:30:27,995 இப்போது உன்னிடம் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. 365 00:30:28,787 --> 00:30:30,789 நான் உன்னை அடையாளம் காணவில்லை என்பதில்லை. 366 00:30:31,915 --> 00:30:35,961 அது உன்னில் சில பகுதிகளை நீயே அடையாளம் காண முடியாததுதான், அதுதான் என்னை பயமுறுத்துகிறது. 367 00:30:36,795 --> 00:30:42,050 ஏனென்றால் இடையிலிருப்பதை உன் கண்களில் பிரதிபலிப்பது போல என்னால் பார்க்க முடிகிறது. 368 00:30:45,053 --> 00:30:49,057 ஆனால் உன்னுடன் இருப்பதற்கு நான் அதே முடிவுகளை தொடர்ந்து எடுக்கிறேன். 369 00:30:50,392 --> 00:30:51,977 அப்படியென்றால் நான்தான் தவறான தேர்வு, ஜாம். 370 00:30:53,520 --> 00:30:56,940 இது எல்லாம் எங்கே தொடங்கியது, எங்கு முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, 371 00:30:56,940 --> 00:30:59,234 ஆனால் நீ காயப்படுவதை நான் விரும்பவில்லை. 372 00:30:59,234 --> 00:31:03,030 நீ மீண்டும் காணாமல் போவதற்காக நான் உன்னைத் தேடி வரவில்லை. 373 00:31:05,449 --> 00:31:07,576 நான் உன்னிடம் என்னைத் தேடி வரச் சொல்லவில்லை. 374 00:31:11,455 --> 00:31:12,873 எனவே, அவ்வளவுதானா? 375 00:31:14,249 --> 00:31:17,252 நான் உன்னை விட்டுவிட வேண்டும் என்கிறாயா? 376 00:31:19,755 --> 00:31:20,756 உன்னால் முடியுமா? 377 00:32:04,925 --> 00:32:08,011 ஆய்வகம் 378 00:32:13,809 --> 00:32:14,810 மிட்சுகி? 379 00:32:20,691 --> 00:32:22,067 மிட்சுகியைப் பார்த்தாயா? 380 00:32:22,067 --> 00:32:24,236 இல்லை. அவளைப் பார்த்து பல மணிநேரம் ஆகிவிட்டது. 381 00:32:28,782 --> 00:32:30,701 - ச்சே! - மிட்சுகி எங்கே? 382 00:32:30,701 --> 00:32:32,911 தெரியவில்லை நாங்கள் அவளைப் பார்க்கவில்லை. ஆனால், மாயா, பார். 383 00:32:32,911 --> 00:32:36,373 அந்த கப்பல். மீண்டும் தொடர்புகொள்வது போல செயல்படுகிறது. 384 00:32:36,373 --> 00:32:40,377 - அது அங்கிருந்து வரவில்லை. - வானத்திலிருந்தா? வேறு கப்பலிலிருந்தா? 385 00:33:19,458 --> 00:33:21,084 இணைக்கப்பட்டிருக்கிறது... 386 00:33:21,084 --> 00:33:23,045 எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறது... 387 00:33:23,045 --> 00:33:26,840 நான் அவற்றை என் மூளைக்குள் அனுமதிக்க முடிந்தால், நான் அவற்றின் மூளைக்குள் நுழைய முடியும்... 388 00:33:28,675 --> 00:33:31,011 ஹைவ்வோடு ஒன்றாக இருக்கலாம்... 389 00:33:41,897 --> 00:33:43,732 ஹைவ்வோடு ஒன்றாக இருக்கலாம்... 390 00:33:44,983 --> 00:33:46,610 அவற்றுடன் ஒன்றாக. 391 00:33:47,986 --> 00:33:50,155 அவற்றுடன் ஒன்றாக... 392 00:33:57,579 --> 00:33:59,081 வெளிச்சம்... 393 00:33:59,081 --> 00:34:01,083 அந்த வெளிச்சத்தைப் பின்தொடரு... 394 00:34:01,083 --> 00:34:02,960 மறுபக்கத்துக்கு. 395 00:34:23,938 --> 00:34:25,399 மறுபக்கம். 396 00:35:23,081 --> 00:35:24,082 ஹலோ? 397 00:35:43,018 --> 00:35:44,144 ஹலோ? 398 00:35:46,188 --> 00:35:47,189 ஹலோ? 399 00:35:49,358 --> 00:35:50,442 நான் பேசுவது கேட்கிறதா? 400 00:35:52,694 --> 00:35:53,779 நீ எங்கே இருக்கிறாய்? 401 00:35:56,990 --> 00:35:58,116 நீதான் அவன். 402 00:35:59,743 --> 00:36:00,827 அந்த பையன். 403 00:36:03,664 --> 00:36:04,706 யார் நீ? 404 00:36:04,706 --> 00:36:05,791 நான் உன்னைப் பார்த்தேன். 405 00:36:07,668 --> 00:36:08,836 போர்ட்டல் மூலமாக. 406 00:36:10,170 --> 00:36:11,338 டேவிட் போவி. 407 00:36:14,007 --> 00:36:15,676 ஒருமுறை ஒருவர் என்னை அப்படி அழைத்தார். 408 00:36:25,185 --> 00:36:26,186 நீ... 409 00:36:29,231 --> 00:36:30,566 நீ நிஜமானவனா? 410 00:36:32,317 --> 00:36:33,569 நான் வேறு என்னவாக இருப்பேன்? 411 00:36:34,278 --> 00:36:35,279 அவற்றின் ஒன்றாக? 412 00:36:39,825 --> 00:36:40,868 நான் நிஜமானவன். 413 00:36:52,546 --> 00:36:53,714 இது என்ன இடம்? 414 00:36:55,591 --> 00:36:56,800 இதுதான் என் மனம் செல்லும் இடம்... 415 00:36:58,719 --> 00:36:59,803 நான் இணைக்கப்பட்டிருக்கும்போது. 416 00:37:03,473 --> 00:37:04,641 அவற்றுடனா? 417 00:37:05,601 --> 00:37:08,395 இன்று, அவை ஒரு ஹைவ் என்று கேள்விப்பட்டேன். 418 00:37:09,771 --> 00:37:10,856 எல்லாமே ஒன்று. 419 00:37:11,857 --> 00:37:12,858 ஒரு மனம். 420 00:37:13,650 --> 00:37:14,651 எனவே, இங்கேதான்... 421 00:37:16,820 --> 00:37:18,071 அவை இணைகின்றன. 422 00:37:39,635 --> 00:37:40,677 நாங்கள் எங்கே இருந்தோம் என்று எனக்குத் தெரியும். 423 00:37:40,677 --> 00:37:41,762 மிட்சுகி! 424 00:37:44,306 --> 00:37:46,308 போர்ட்டல்கள் எங்கே செல்கின்றன என்று எனக்குத் தெரியும். 425 00:37:46,308 --> 00:37:47,768 தாய் கப்பலுக்கு. 426 00:39:25,449 --> 00:39:27,451 வசனத் தமிழாக்கம் அருண்குமார்