1 00:00:24,650 --> 00:00:26,026 ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டது. 2 00:00:26,109 --> 00:00:27,694 இந்தக் காற்றில் அதிக நச்சுத்தன்மை இருக்கிறது. நாம் ஓய்வெடுக்க வேண்டும். 3 00:00:27,778 --> 00:00:29,196 ஓய்வெடுங்கள். 4 00:00:29,279 --> 00:00:30,531 நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 5 00:00:31,240 --> 00:00:32,533 எனக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும். 6 00:00:33,825 --> 00:00:35,577 என்னால் இப்படியே தொடர்ந்து வர முடியாது. 7 00:00:36,703 --> 00:00:38,705 ஹேய். நீங்கள் ஒரு மருத்துவர்தானே? 8 00:00:40,207 --> 00:00:41,208 இனி இல்லை. 9 00:00:41,291 --> 00:00:43,836 பாருங்கள், நீங்கள் அனுபவிப்பது என்னவென்று எனக்குப் புரிகிறது. 10 00:00:43,919 --> 00:00:45,754 இந்தப் போரில் நான் மக்களை இழந்திருக்கிறேன். குடும்பத்தை. 11 00:00:45,838 --> 00:00:47,548 அதனால்தான் நான் இதில் சேர்ந்தேன். 12 00:00:47,631 --> 00:00:49,174 ஆனால் நாம் எதற்காக போராடுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். 13 00:00:49,258 --> 00:00:50,884 முக்கிய மிஷனை செய்து முடிக்கத்தான் இங்கே இருக்கிறோம். 14 00:00:50,968 --> 00:00:52,219 அவர்கள் நிற்கப் போவதில்லை. 15 00:00:52,302 --> 00:00:55,013 அவள் நிற்கப் போவதில்லை. நாம் நிற்க முடியாது. 16 00:00:56,181 --> 00:00:58,934 அவனால் தொடர முடியவில்லை என்றால், அவனால் தொடர முடியாது. 17 00:00:59,977 --> 00:01:01,395 அவனும் மனிதன்தான், தெரியுமா? 18 00:01:01,478 --> 00:01:03,564 நாமும் மனிதர்கள்தான். 19 00:01:03,647 --> 00:01:06,400 நீங்கள் அதை மறந்துவிட்டால், நாம் ஏற்கனவே இந்தப் போரில் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம். 20 00:01:14,491 --> 00:01:16,368 - எனக்கு இது தேவை. - ஒரு மணிநேரம் பயன்படுத்திவிட்டாய். 21 00:01:16,451 --> 00:01:17,452 என் நுரையீரல் எரிகிறது. 22 00:01:24,084 --> 00:01:25,169 போதும்! 23 00:01:28,964 --> 00:01:30,549 என்ன செய்கிறீர்கள்? நமக்கு அது தேவை. 24 00:01:30,632 --> 00:01:32,509 இல்லை! நமக்குத் தேவையில்லை. 25 00:01:33,135 --> 00:01:35,762 நமக்குத் தேவைப்படும் எதையும், அவர்கள் கொடுப்பார்கள். 26 00:01:35,846 --> 00:01:38,557 - ஆனால் என் நுரையீரல்… - புதிய உலகத்துக்கு தகுந்தாற்போல மாறுகிறது. 27 00:01:39,516 --> 00:01:44,062 நீ உணரும் அந்த எரிச்சல்தான் இதை முடிப்பதற்கான உந்துசக்தி. 28 00:01:45,564 --> 00:01:47,149 அந்தக் காற்றை உன் நுரையீரலுக்குள் அனுமதி. 29 00:01:48,525 --> 00:01:49,776 அதை சுவாசியுங்கள்! 30 00:01:50,527 --> 00:01:51,778 இப்போதே. 31 00:01:52,905 --> 00:01:54,072 அது எப்படி இருக்கிறது? 32 00:01:54,948 --> 00:01:56,283 எரிகிறது. 33 00:01:57,075 --> 00:01:57,910 நல்லது. 34 00:01:58,493 --> 00:01:59,995 அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 35 00:02:00,746 --> 00:02:03,040 இவை எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. 36 00:02:03,123 --> 00:02:04,875 நம் எதிரிகள் அங்கே இருப்பதற்கு கூட. 37 00:02:04,958 --> 00:02:07,544 நாம் அவர்களை வெல்லவிட்டால், 38 00:02:07,628 --> 00:02:12,341 அவர்கள் தாய்க்கப்பலையும் நம் அன்புக்குரியவர்கள் எல்லோரையும் அழித்துவிடுவார்கள். 39 00:02:13,592 --> 00:02:15,594 ஆனால் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தினால், 40 00:02:15,677 --> 00:02:17,888 நாம் இன்று இந்தப் போரை வென்றால், 41 00:02:18,680 --> 00:02:24,144 நம்முடைய மீட்பர்களுக்கு நாம் நம்முடைய தகுதியை நிரூபிப்போம். 42 00:02:24,853 --> 00:02:30,400 உங்கள் சாகாவரத்தைப் பெற நீங்கள் தயாரா? 43 00:02:32,945 --> 00:02:34,112 இப்போது கொஞ்சம் யதார்த்தமற்றவராக இல்லாமல் இருப்பது 44 00:02:34,196 --> 00:02:35,948 யதார்த்தமற்றதாக இருக்கும் என்று என்னுடைய ஒரு நண்பர் ஒருமுறை சொன்னார். 45 00:02:36,031 --> 00:02:37,032 இது… 46 00:02:37,824 --> 00:02:39,785 இது கொஞ்சம் கூட யதார்த்தமில்லை. 47 00:02:44,498 --> 00:02:47,084 ஹேய். நீங்கள் இங்கே திரும்பி வருவதற்கு பயப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 48 00:02:47,167 --> 00:02:48,377 நாம் எல்லோரும்தான் பயப்படுகிறோம். 49 00:02:48,460 --> 00:02:51,338 நாம் உள்ளே போவோம், அந்தப் புதிர் போன்ற வழியாக எங்களை மையத்திற்குக் கூட்டிப் போங்கள், 50 00:02:51,421 --> 00:02:53,799 நாம் வெடிகுண்டு வைத்துவிட்டு, வெளியே வந்துவிடுவோம், நம் வேலை முடிந்தது. 51 00:02:53,882 --> 00:02:55,384 உள்ளே போய்விட்டு, வெளியே வருவோம். 52 00:02:55,467 --> 00:02:57,010 - ட்ரெவ்? - சரி. 53 00:02:57,636 --> 00:02:58,929 உங்களால் இதைச் செய்ய முடியும். 54 00:03:00,222 --> 00:03:01,932 நான் அங்கே காஸ்பரை இழந்தேன். 55 00:03:02,975 --> 00:03:03,976 நானும்தான். 56 00:03:05,561 --> 00:03:06,562 உங்களிடம் வந்தேன். 57 00:03:06,645 --> 00:03:10,482 அங்கே அவனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள பாதி உலகத்தைக் கடந்து வந்தேன். 58 00:03:10,566 --> 00:03:12,067 எனக்கு இனி கவலை இல்லை. 59 00:03:12,901 --> 00:03:14,444 நான் எதிர்காலத்திற்காக போராடுகிறேன், ட்ரெவ். 60 00:03:14,945 --> 00:03:16,405 நம் எதிர்காலத்துக்காக. நம் எல்லோருடைய எதிர்காலத்துக்காக. 61 00:03:17,322 --> 00:03:20,158 இது நீங்கள் இருக்க விரும்பாத இடம் என்று எனக்குத் தெரியும். 62 00:03:20,993 --> 00:03:23,161 ஆனால் அங்கே இருப்பதை நாம் அழித்தால், பிறகு, 63 00:03:24,204 --> 00:03:27,249 ஒருவேளை உங்களைத் தொந்தரவு செய்யும் நினைவுகள் எல்லாவற்றையும் நீங்கள் அழிக்கலாம். 64 00:03:30,127 --> 00:03:32,880 வெர்னா, இதை நீங்கள் பார்க்க வேண்டும். 65 00:03:42,055 --> 00:03:44,308 அதிகபட்சம் அரை மைல் போல தெரிகிறது. 66 00:03:44,391 --> 00:03:45,434 அவள் தனியாக இருக்கிறாள். 67 00:03:47,644 --> 00:03:49,229 தாய் கொடுக்கிறார். 68 00:03:50,856 --> 00:03:52,024 பரவி செல்லுங்கள். 69 00:03:52,107 --> 00:03:53,901 எல்லா பக்கங்களிலிருந்தும் அவளைத் தாக்கவா? 70 00:03:55,027 --> 00:03:56,028 இல்லை. 71 00:03:56,612 --> 00:03:57,863 அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். 72 00:03:59,156 --> 00:04:00,657 நிச்சயமாக நீங்கள் தனியாகப் போவது பரவாயில்லையா? 73 00:04:02,034 --> 00:04:03,869 பரவி செல்லுங்கள். மற்றவர்களைக் கண்டுபிடியுங்கள். 74 00:04:04,578 --> 00:04:05,913 இரு நபர்கள் அணிகளாக. 75 00:04:06,413 --> 00:04:07,539 அவர்கள் வருவார்கள். 76 00:04:08,290 --> 00:04:10,876 அவர்களைப் பார்த்தவுடன் சுடுங்கள். 77 00:04:12,503 --> 00:04:13,504 நீ. 78 00:04:14,713 --> 00:04:15,839 இங்கே வா. 79 00:04:15,923 --> 00:04:17,298 அந்தக் காயத்தைப் பார்க்கிறேன். 80 00:04:30,103 --> 00:04:31,480 கடைசி சோதனை. 81 00:06:24,384 --> 00:06:25,511 இன்னும் யாரும் கண்ணில் படவில்லை. 82 00:06:25,594 --> 00:06:26,678 வெப்ப சிக்னல்கள் இல்லை. 83 00:06:27,971 --> 00:06:29,640 இது அவர்களுடைய பாதை என்று உறுதியாக நம்புகிறாயா? 84 00:06:29,723 --> 00:06:30,724 ஆம், உறுதியாக நம்புகிறேன். 85 00:06:30,807 --> 00:06:32,100 நாம் வேகமாக நகர வேண்டும். 86 00:06:32,184 --> 00:06:33,602 நம்மால் முடியாது, அனீஷா. 87 00:06:33,685 --> 00:06:36,146 ஹேய்! இங்கே ஒன்று கிடைத்திருக்கிறது. 88 00:06:36,772 --> 00:06:37,940 காலடித்தடங்கள். 89 00:06:43,153 --> 00:06:44,780 ஒன்று இங்கே முடிகிறது. 90 00:06:44,863 --> 00:06:47,324 மீதமுள்ளவை இரு நபர் அணிகளாகப் பிரிகின்றன. 91 00:06:47,407 --> 00:06:49,660 அவை புதியவை, விளிம்புகள் இன்னும் கூர்மையாக இருக்கின்றன. 92 00:06:49,743 --> 00:06:51,119 நாம் எதைப் பின்தொடருவது? 93 00:06:51,203 --> 00:06:52,621 பல இருக்கின்றன. 94 00:06:53,580 --> 00:06:55,916 இது அவளாக இருக்க வேண்டும். வெர்னா. 95 00:06:55,999 --> 00:06:57,334 அது உங்களுக்குத் தெரியாது. 96 00:06:57,417 --> 00:07:00,546 அவள் யாரையும் பின்வாங்கவும் பிரியவும் விட மாட்டாள். 97 00:07:01,588 --> 00:07:02,923 அது அவள்தான். 98 00:07:08,470 --> 00:07:10,180 அவள் தாய்க்கப்பலுக்குப் போகிறாள். 99 00:07:18,772 --> 00:07:20,107 இங்கே ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். 100 00:07:22,901 --> 00:07:24,194 ஆனால் இது… 101 00:07:24,278 --> 00:07:27,239 இது நிச்சயமாக மனிதக் காலடி இல்லை. 102 00:07:28,949 --> 00:07:30,284 என்ன அது? 103 00:07:32,494 --> 00:07:33,579 அது வேட்டையாடிக் கொல்வது இல்லை. 104 00:07:33,662 --> 00:07:35,747 இது மிட்சுகி பார்த்த அந்த ஏலியன்களில் ஒன்றாக இருக்க வேண்டும். 105 00:07:36,456 --> 00:07:38,458 இது எதுவாக இருந்தாலும், புதியதில்லை. அது போய் நீண்ட நேரமாகிவிட்டது. 106 00:07:39,293 --> 00:07:41,086 அவற்றைப் பற்றித்தான் நாம் கவலைப்படுகிறோம். 107 00:07:41,170 --> 00:07:43,172 பிரிந்து போவோம்… 108 00:07:44,631 --> 00:07:45,716 ஒளிந்துகொள்ளுங்கள்! 109 00:07:52,306 --> 00:07:54,725 - சேம்! - எனக்கு 11 மணி திசையில் இருவர் சுடுகிறார்கள். 110 00:07:55,309 --> 00:07:57,519 - குனியுங்கள்! - இரண்டு மணி திசையில் இன்னும் இருவர். 111 00:08:01,940 --> 00:08:03,233 அவள் இருக்கிறாளா? 112 00:08:03,317 --> 00:08:04,818 அவள் உனக்குத் தெரிகிறாளா? வெர்னா? 113 00:08:04,902 --> 00:08:06,320 உருவங்கள்தான் தெரிகின்றன. எனக்குத் தெரியாது. 114 00:08:06,403 --> 00:08:07,571 சேம்சன்! 115 00:08:07,654 --> 00:08:09,364 எனக்குத் தெரியாது. 116 00:08:15,537 --> 00:08:17,372 ஹேய்! பின்னால் வாருங்கள்! 117 00:08:39,352 --> 00:08:40,812 உனக்கு அது தேவைப்படாது. 118 00:08:40,895 --> 00:08:41,980 என்னிடம் துப்பாக்கி இல்லை. 119 00:08:43,357 --> 00:08:44,525 உன் நண்பர்கள், 120 00:08:45,651 --> 00:08:46,777 அவர்கள்தான் எனக்கு இதைச் செய்தார்கள். 121 00:08:46,860 --> 00:08:49,571 அவர்கள் இப்போது என்னுடைய மீதமுள்ள ஆட்களை கொன்றுகொண்டிருக்கிறார்கள். 122 00:08:50,405 --> 00:08:51,657 நான் தன்னந்தனியாக இருக்கிறேன். 123 00:08:54,326 --> 00:08:56,370 நமக்குள் பொதுவானது அது மட்டும் இல்லை. 124 00:08:57,579 --> 00:08:58,664 சரிதானே? 125 00:08:58,747 --> 00:09:00,207 நீ யார் என்று எனக்குத் தெரியும். 126 00:09:01,291 --> 00:09:02,459 நல்லது. 127 00:09:03,210 --> 00:09:04,545 நீ யார் என்று எனக்கும் தெரியும். 128 00:09:05,587 --> 00:09:07,923 உன்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், மிட்சுகி. 129 00:09:08,549 --> 00:09:12,636 எனக்கு உன்னைப் பற்றி நீண்ட நாட்களாகத் தெரியும். 130 00:09:12,719 --> 00:09:14,054 நான் சொல்லியாக வேண்டும், 131 00:09:15,180 --> 00:09:19,226 நான் உன் சக்திகளால் ஈர்க்கப்பட்டேன். 132 00:09:20,477 --> 00:09:21,687 உனக்குக் கிடைத்த பரிசு. 133 00:09:23,188 --> 00:09:24,690 அவர்களுடன் தொடர்புகொள்ள. 134 00:09:26,191 --> 00:09:27,860 அவர்களைப் போல இருக்க. 135 00:09:29,444 --> 00:09:34,199 நீ அவர்களைவிட மிகப் பெரிய ஒன்றின் ஒரு பகுதி என்று 136 00:09:34,700 --> 00:09:39,872 தெரியாத மனிதர்கள் நிறைந்த உலகில் வாழ்வது கடினமாக இருக்க வேண்டும். 137 00:09:41,123 --> 00:09:42,791 அவர்கள் உனக்குச் செய்தது எனக்குத் தெரியும். 138 00:09:43,417 --> 00:09:44,751 உன் கழுத்தில் இருக்கும் அந்தத் தழும்பு. 139 00:09:47,546 --> 00:09:48,964 அது எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும். 140 00:09:55,888 --> 00:10:01,685 ஏலியன்கள் கொலையாளிகள் என்று அவர்கள் சொல்கிறார்கள், ஆனால் நமக்கு உண்மை தெரியும், இல்லையா? 141 00:10:03,353 --> 00:10:06,398 மனிதகுலத்தின் குரூரத்தன்மை நமக்குத் தெரியும். 142 00:10:07,399 --> 00:10:09,234 ஏலியன்கள் கொல்வதையும் நான் பார்த்திருக்கிறேன். 143 00:10:09,318 --> 00:10:11,153 நான் மக்களை இழந்திருக்கிறேன். 144 00:10:11,236 --> 00:10:13,113 எனக்கு ஞாபகம் கூட இல்லாத மக்கள்… 145 00:10:13,197 --> 00:10:14,698 நீ யாரை இழந்தாயோ… 146 00:10:16,533 --> 00:10:18,118 அவரை நீ திரும்பப் பெறலாம் என்று 147 00:10:19,119 --> 00:10:20,412 நான் சொன்னால் என்ன செய்வாய்? 148 00:10:21,371 --> 00:10:25,918 உன் அன்புக்குரியவர்கள் அந்த விண்கப்பலுக்குள் இருக்கிறார்கள் என்றால்? 149 00:10:27,461 --> 00:10:32,466 அவர்களுடைய ஆவி, அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. 150 00:10:33,342 --> 00:10:34,760 அது உண்மை இல்லை. 151 00:10:36,094 --> 00:10:37,888 அது வெறும் நினைவுகள்தான். 152 00:10:37,971 --> 00:10:39,306 நான் அதை நம்பவில்லை. 153 00:10:39,389 --> 00:10:40,891 ஆனால் நான் நம்பினாலும், 154 00:10:41,725 --> 00:10:44,811 குறைந்தபட்சம் உனக்கு அவர்களின் நினைவாவது கிடைக்கும். 155 00:10:46,772 --> 00:10:49,024 அது இப்போது உன்னிடம் இருப்பதைவிட அதிகம். 156 00:10:49,650 --> 00:10:51,193 இல்லையா, மிட்சுகி? 157 00:11:03,413 --> 00:11:04,498 எனக்கு குண்டடி பட்டுவிட்டது. 158 00:11:13,549 --> 00:11:14,800 சரி. 159 00:11:16,927 --> 00:11:19,346 - மோசமான காயமா? - புல்லட் வெளியேறிவிட்டது. 160 00:11:19,847 --> 00:11:22,432 சுத்தமாக இருக்கிறது, ஆனால் இரத்த ஓட்டத்தைத் துண்டிக்க வேண்டும். 161 00:11:22,516 --> 00:11:23,600 சரி. 162 00:11:28,105 --> 00:11:29,231 - நீ தயாரா? - ஆம். 163 00:11:34,278 --> 00:11:35,571 என்னுடன் இருங்கள்! 164 00:11:36,446 --> 00:11:37,823 ஹேய். 165 00:11:38,532 --> 00:11:39,533 நன்றி, டாக்டர். 166 00:11:44,079 --> 00:11:45,163 இதோ. 167 00:11:45,247 --> 00:11:46,582 ஒன்றுமில்லை. 168 00:11:46,665 --> 00:11:48,292 உனக்கு ஒன்றுமாகாது. 169 00:11:48,375 --> 00:11:50,377 எனக்கு ஒன்றுமில்லை! போ! 170 00:11:57,384 --> 00:11:58,510 எனக்கு பாதுகாப்பு கொடுங்கள்! 171 00:12:09,313 --> 00:12:10,314 அவள் எங்கே? 172 00:12:10,981 --> 00:12:11,982 வெர்னா எங்கே? 173 00:12:12,065 --> 00:12:13,192 எல்லா இடங்களிலும் இருக்கிறார். 174 00:12:13,275 --> 00:12:14,818 அவள் எங்கே என்று சொல். 175 00:12:14,902 --> 00:12:16,445 இரட்சிப்பு வருகிறது. 176 00:12:17,237 --> 00:12:19,031 அதற்கு என்ன அர்த்தம்? 177 00:12:19,114 --> 00:12:22,075 அவர் விண்கப்பலுக்குப் போகிறார், அவர் உங்கள் எல்லோரையும் நிறுத்தப் போகிறார். 178 00:12:22,826 --> 00:12:25,329 நீங்கள் சோதனையின் ஒரு பகுதிதான். 179 00:12:25,913 --> 00:12:27,456 அவளுக்கு எப்படி வழி தெரிந்தது? 180 00:12:28,832 --> 00:12:30,542 தாய் கொடுக்கிறார். 181 00:12:31,210 --> 00:12:32,586 அவர் உங்களுடைய ஒருவரை எங்களுக்குக் கொடுத்தார். 182 00:12:40,844 --> 00:12:42,304 ஓடு, ஜேசன், ஓடு! 183 00:12:43,055 --> 00:12:44,348 வெர்னா கப்பலுக்குப் போகிறாள். 184 00:12:44,431 --> 00:12:46,433 அவளிடம் மிட்சுகி இருக்கிறாள் என்று நினைக்கிறேன். 185 00:12:46,517 --> 00:12:47,768 அது எப்படி உங்களுக்குத் தெரியும்? 186 00:12:47,851 --> 00:12:49,269 இவன் என்னிடம் சொன்னான். 187 00:12:49,978 --> 00:12:51,063 மிட்சுகிதான் அவள் உள்ளே நுழைவதற்கான வழி. 188 00:12:51,146 --> 00:12:53,148 அவள் ஏலியன்களுடன் தொடர்புகொள்வதற்கான வழி. 189 00:12:53,815 --> 00:12:54,900 அவள் வெல்வதற்கான வழி. 190 00:12:54,983 --> 00:12:56,193 நாம் அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும். 191 00:12:56,276 --> 00:12:57,361 இதை முடிக்க வேண்டும். 192 00:12:57,444 --> 00:13:00,072 நமக்கான மிஷன் ஒன்றுதான், உன்னுடையதும் என்னுடையதும். 193 00:13:00,948 --> 00:13:01,949 போங்கள். 194 00:13:02,741 --> 00:13:05,160 நான் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன். அவர்களை பிஸியாக வைத்திருக்கிறேன். 195 00:13:07,621 --> 00:13:08,747 என்னைப் பின்தொடருங்கள்! 196 00:13:29,601 --> 00:13:30,894 பிரபஞ்சமெனும் பெருங்கடல். 197 00:13:32,896 --> 00:13:34,189 இதை முன்பே செய்திருக்கிறீர்கள். 198 00:13:34,273 --> 00:13:36,149 இங்கே தனியாக உயிர் பிழைத்தீர்கள். 199 00:13:37,651 --> 00:13:38,986 இப்போது நீங்கள் தனியாக இல்லை. 200 00:13:41,196 --> 00:13:42,281 - ட்ரெவ்? - ஆம். 201 00:13:43,198 --> 00:13:44,366 நீங்கள் தனியாக இல்லை. 202 00:13:47,703 --> 00:13:49,872 அந்த இருண்ட பாதையைக் கண்டுபிடிப்போமா? 203 00:14:14,271 --> 00:14:16,023 காஸ்பர் கடைசியாக செய்தது அதுதான். 204 00:14:17,941 --> 00:14:19,484 அந்த உடைந்த துண்டை வைத்து. 205 00:14:20,485 --> 00:14:21,778 காஸ்பர்! 206 00:14:23,739 --> 00:14:26,742 அவன் திருப்பி வீசப்பட்டபோது, அவன் அதை கையில் வைத்திருந்தான். ம்… 207 00:14:27,242 --> 00:14:28,619 அது தகவல்தொடர்புகளைத் துண்டித்திருக்கிறது. 208 00:14:29,703 --> 00:14:32,080 இங்கே எந்த மின்னோட்டமும் இல்லை, பரிமாற்றமும் இல்லை. 209 00:14:37,085 --> 00:14:41,215 இறந்த நரம்பு போல எல்லா நரம்பியல் சிக்னல்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. 210 00:14:42,007 --> 00:14:43,300 அதனால்தான் இது இருட்டாக இருக்கிறது. 211 00:14:46,053 --> 00:14:47,179 அது வேலை செய்யும். 212 00:14:47,262 --> 00:14:48,472 வெடிகுண்டு. 213 00:14:49,431 --> 00:14:50,432 அது வேலை செய்யும். 214 00:14:52,059 --> 00:14:56,230 உங்களிடம் இருந்த அந்த சின்ன உடைந்த துண்டால் இதைச் செய்ய முடியும் என்றால்… 215 00:14:56,772 --> 00:14:57,773 நான் ஒரு மாமேதை. 216 00:14:57,856 --> 00:14:59,858 அது புதிய செய்தி இல்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும். ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டேன். 217 00:14:59,942 --> 00:15:02,236 நாம் அந்த வெடிகுண்டை இலக்குக்குக் கொண்டுபோக வேண்டும். 218 00:15:04,738 --> 00:15:05,906 அவன் எப்படி இருக்கிறான்? 219 00:15:07,783 --> 00:15:08,951 ட்ரெவாண்டே? 220 00:15:11,537 --> 00:15:12,704 எப்படி இருக்கிறீர்கள்? 221 00:15:13,205 --> 00:15:14,873 கடைசி கட்ட வேலையைச் செய்ய நீங்கள் தயாரா? 222 00:15:15,999 --> 00:15:17,167 இரண்டு ஆண்டுகள். 223 00:15:17,960 --> 00:15:19,670 இரண்டு ஆண்டுகள் நான் இங்கே இருந்தேன். 224 00:15:20,838 --> 00:15:22,089 என்னால் தூங்க முடியவில்லை. 225 00:15:22,714 --> 00:15:25,968 என் கண்களைக் கூட மூடவில்லை. 226 00:15:27,177 --> 00:15:30,347 ஏனென்றால் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றைக் கேட்பதுதான், அவற்றை உணருவதுதான். 227 00:15:30,430 --> 00:15:32,099 இப்போது எனக்கு அது எல்லாம் ஞாபகம் வருகிறது. 228 00:15:33,767 --> 00:15:35,394 என்னால் இன்னும் அவற்றை உணர முடிகிறது. 229 00:15:37,813 --> 00:15:39,022 என்னால் இன்னும் அவற்றைக் கேட்க முடிகிறது. 230 00:15:39,106 --> 00:15:40,190 எனக்கு எதுவும் கேட்கவில்லை, ட்ரெவ். 231 00:15:40,274 --> 00:15:41,775 ஆம், ஆனால் அவை இன்னும் இங்கே இருக்கின்றன. 232 00:15:41,859 --> 00:15:43,485 ஆம், அவை இருக்கின்றன. 233 00:15:43,569 --> 00:15:46,488 எனவே, அவை நம்மைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு இதைச் செய்வோமா, ம்? 234 00:15:48,282 --> 00:15:49,533 இரண்டு ஆண்டுகள். 235 00:15:49,616 --> 00:15:50,617 ட்ரெவ்… 236 00:15:51,994 --> 00:15:53,036 நீங்கள் அதைச் சொன்னீர்கள். 237 00:15:53,996 --> 00:15:55,497 இரண்டு ஆண்டுகள், அவற்றால் உங்களைக் கொல்ல முடியவில்லை. 238 00:15:55,581 --> 00:15:58,125 அவை கொன்றிருக்க வேண்டும், ஏனென்றால் நான் சாவதற்குத் தகுதியானவன். 239 00:15:59,042 --> 00:16:01,587 ஆம், சரி, நீங்கள் சாகவில்லை. 240 00:16:03,172 --> 00:16:04,298 இங்கே இருக்கிறீர்கள். 241 00:16:05,090 --> 00:16:07,050 எனவே அதற்கு ஒரு காரணம் இருக்கலாம். 242 00:16:07,134 --> 00:16:09,011 ஒருவேளை நீங்கள் உயிர்வாழ ஒரு காரணம் இருக்கலாம். 243 00:16:09,636 --> 00:16:11,096 நீங்கள் உயிர் பிழைத்தீர்கள், ட்ரெவ். 244 00:16:13,473 --> 00:16:14,683 நானும்தான். 245 00:16:15,684 --> 00:16:18,187 எல்லாவற்றிற்கும் பிறகு நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கலாம். 246 00:16:19,521 --> 00:16:20,522 அவ்வளவு காலமும். 247 00:16:24,109 --> 00:16:28,447 ஒருவேளை நாம்தான் இதை முடிக்க வேண்டும் என்று இருக்கலாம், இவை எல்லாவற்றையும், ஒன்றாக. 248 00:16:30,991 --> 00:16:32,326 சரி. 249 00:16:33,952 --> 00:16:34,995 சரி, சிறுமியே. 250 00:16:35,078 --> 00:16:36,496 இன்னும் நான் சிறுமி இல்லை. ஆனால் ஆம். 251 00:16:36,580 --> 00:16:38,165 ஆம். நான் சொல்வது உங்களுக்குத் தெரியும். 252 00:16:38,832 --> 00:16:39,833 சரி. 253 00:16:41,251 --> 00:16:42,836 நாங்கள் தயார், நிகில். 254 00:16:47,966 --> 00:16:49,176 நிகில், நீங்கள் தயாரா? 255 00:16:50,385 --> 00:16:51,386 நிகில்? 256 00:16:52,221 --> 00:16:53,680 என்ன… என்ன நடக்கிறது? 257 00:16:54,640 --> 00:16:55,891 என் குரலைக் கேளுங்கள். 258 00:16:55,974 --> 00:16:58,977 இராணுவ தளத்தில் வீரர்களுக்கு இதேதான் நடந்தது. 259 00:16:59,061 --> 00:17:00,771 இங்கே என்னுடன் இருக்கிறீர்கள். 260 00:17:00,854 --> 00:17:01,980 எங்களுடன். 261 00:17:03,899 --> 00:17:04,900 அவன் சிக்கியிருக்கிறான். 262 00:17:06,359 --> 00:17:08,362 அவன் ஒரு நினைவில் சிக்கியிருக்கிறான். 263 00:17:10,364 --> 00:17:11,573 ஓய். 264 00:17:12,782 --> 00:17:14,535 நிகில். 265 00:17:15,452 --> 00:17:16,744 நிகில், எழுந்திருங்கள். 266 00:17:18,247 --> 00:17:19,373 நிகில்! 267 00:17:25,878 --> 00:17:26,880 உனக்கு அது கேட்கிறதா? 268 00:17:28,423 --> 00:17:29,591 ஆம். 269 00:17:30,509 --> 00:17:31,510 எனக்குக் கேட்கிறது. 270 00:18:02,541 --> 00:18:03,876 இது மாறுகிறது. 271 00:18:12,217 --> 00:18:13,802 இது ஒரு புதிய சிக்னல். 272 00:18:13,886 --> 00:18:15,053 புதிய செய்தி. 273 00:18:18,140 --> 00:18:19,224 அது என்ன சொல்கிறது? 274 00:18:24,396 --> 00:18:26,398 நீ அதைத் தொடவில்லையா? 275 00:18:27,024 --> 00:18:28,442 நான் தொட்டால், என் மனம்… 276 00:18:29,818 --> 00:18:31,820 நான்… நான் அதிகம் பார்ப்பேன். 277 00:18:31,904 --> 00:18:34,907 உன்னால் ஹைவ் மனதைப் பார்க்க முடியுமா? 278 00:18:36,241 --> 00:18:38,702 கடவுளின் சக்தியைத் தொடு. 279 00:18:41,163 --> 00:18:42,706 நீ ஏன் நிறுத்தினாய்? 280 00:18:43,332 --> 00:18:44,666 என் மனதால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. 281 00:18:45,375 --> 00:18:47,044 அது போதுமான அளவு வலிமையாக இல்லை. 282 00:18:53,509 --> 00:18:55,135 அவர்கள்தான் அதை உனக்குப் பொருத்தினார்களா? 283 00:18:55,636 --> 00:18:58,096 அந்த வடிவமைப்பை எனக்குத் தெரியும். அது தர்மேக்ஸிலிருந்து வந்தது. 284 00:18:58,180 --> 00:19:00,599 அவர்கள் இப்படித்தான் வேட்டையாடிக் கொல்பவற்றை அடக்கினார்கள். 285 00:19:00,682 --> 00:19:01,934 அவற்றின் சக்திகளைக் குறைத்தார்கள். 286 00:19:02,935 --> 00:19:04,645 இப்போது அவர்கள் அதை உனக்குச் செய்கிறார்கள். 287 00:19:05,729 --> 00:19:09,274 மோசமானது. அதை நீயே உனக்குச் செய்துகொள்கிறாய். 288 00:19:11,068 --> 00:19:15,447 நீ அதை கட்டவிழ்த்துவிட வேண்டிய நேரத்தில் அடக்கி வைக்கிறாய். 289 00:19:47,104 --> 00:19:48,105 தாக்கு. 290 00:19:51,650 --> 00:19:52,860 அதுதான் அந்த சிக்னல். 291 00:19:52,943 --> 00:19:54,570 செய்தி. "தாக்கு." 292 00:19:55,779 --> 00:19:58,657 அதைத்தான் ஹைவ் மீண்டும் மீண்டும் சொல்கிறது. 293 00:19:59,324 --> 00:20:01,743 நிகில், என் குரலைக் கேளுங்கள். 294 00:20:01,827 --> 00:20:04,705 நீங்கள் என்னுடன் இங்கே இருக்கிறீர்கள். எங்களுடன். 295 00:20:05,747 --> 00:20:07,457 ட்ரெவ், ஏதாவது சொல்லுங்கள். 296 00:20:08,208 --> 00:20:10,085 ட்ரெவ், தயவுசெய்து. அட. நீங்கள்… 297 00:20:10,794 --> 00:20:12,129 இல்லை. இல்லை. 298 00:20:13,255 --> 00:20:16,758 ட்ரெவாண்டே. ட்ரெவாண்டே, இல்லை. 299 00:20:16,842 --> 00:20:19,011 என்னுடன் இருங்கள். ட்ரெவாண்டே. 300 00:20:20,220 --> 00:20:21,346 ட்ரெவாண்டே! 301 00:20:23,724 --> 00:20:25,392 ஹேய், நண்பா. கேட்கிறதா? சாவேஸ்? 302 00:20:27,436 --> 00:20:28,604 ச்சே! 303 00:20:29,271 --> 00:20:30,981 ட்ரெவாண்டே? சுயநினைவுக்கு வாருங்கள். 304 00:20:31,064 --> 00:20:33,233 - தயவுசெய்து. என் குரலைக் கேளுங்கள். - எனக்குப் பக்கத்தில் வரும் எவரும் இறக்கிறார்கள். 305 00:20:33,901 --> 00:20:34,902 என் குரலைக் கேளுங்கள். 306 00:20:34,985 --> 00:20:37,738 இப்படி செய்யாதீர்கள். சுயநினைவுக்கு வாருங்கள்! 307 00:21:10,812 --> 00:21:12,314 கதவைத் திறக்காதீர்கள். 308 00:21:13,148 --> 00:21:14,316 கதவைத் திறக்காதீர்கள். 309 00:21:20,822 --> 00:21:22,324 அங்கே ஏதோ இருக்கிறது. 310 00:21:24,535 --> 00:21:25,786 அங்கேயே இரு. 311 00:21:27,079 --> 00:21:29,414 நில், இல்லையென்றால் இவளைக் கொன்றுவிடுவேன். 312 00:21:29,498 --> 00:21:31,834 நீ என் கணவரைக் கொன்றாய். 313 00:21:33,794 --> 00:21:35,754 நீ அவரை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டாய். 314 00:21:36,547 --> 00:21:39,341 மனித வாழ்க்கை ஒரு வரம்பு கொண்டது. 315 00:21:39,925 --> 00:21:42,302 நாங்கள் எல்லையற்ற தன்மைக்காகப் போராடுகிறோம். 316 00:21:42,386 --> 00:21:44,555 அப்படியென்றால் உன் உயிரைக் கொடு. 317 00:21:45,556 --> 00:21:49,935 உன் தங்கை மகனை நீ தியாகம் செய்தது போல உன் உயிரை தியாகம் செய். 318 00:21:50,811 --> 00:21:56,275 அவன் உன்னை அம்மா போல நேசித்தான், நீ ஒன்றுமில்லாததற்கு அவனைக் கொன்றாய். 319 00:21:56,358 --> 00:21:57,609 என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. 320 00:21:57,693 --> 00:21:59,069 ஓ, எனக்கு எல்லாம் தெரியும். 321 00:22:00,237 --> 00:22:01,822 உன்னுடைய எல்லா பொய்களையும் தெரியும். 322 00:22:02,322 --> 00:22:03,574 ஆரம்பத்திலிருந்தே. 323 00:22:03,657 --> 00:22:07,703 நீ இன்னொரு அடி எடுத்து வைத்தால், இவளைக் கொன்றுவிடுவேன். 324 00:22:07,786 --> 00:22:09,746 பிறகு உன்னைக் கொன்றுவிடுவேன். 325 00:22:13,542 --> 00:22:19,173 உன் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பினால், அதற்கு இதுதான் வழி, அனீஷா. 326 00:22:19,673 --> 00:22:22,676 நீங்கள் எல்லோரும் புதிய உலகில் ஒன்றாக இருக்கலாம். 327 00:22:22,759 --> 00:22:24,428 சுற்றிப் பார்! 328 00:22:24,511 --> 00:22:26,054 அவை நம் உலகத்தை அழிக்கின்றன. 329 00:22:26,638 --> 00:22:30,184 நாம் தகுதியானவர்கள் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும். 330 00:22:30,267 --> 00:22:31,351 எதற்கு தகுதியானவர்கள் என்று? 331 00:22:32,311 --> 00:22:36,190 நாம் இழந்த எல்லோருடனும் மீண்டும் இணைவது. 332 00:22:36,273 --> 00:22:39,651 நாம்… நம்மை நிரூபிக்க வேண்டும். 333 00:22:39,735 --> 00:22:41,570 பிறகு நாம்… அவர்களைத் திரும்பப் பெறலாம். 334 00:22:41,653 --> 00:22:45,199 அவர்களால் நிரந்தரமாக நம்மோடு ஒன்றாக இருக்க முடியும். 335 00:22:47,242 --> 00:22:49,244 இதெல்லாம் அதற்காகத்தான், இல்லையா? 336 00:22:50,913 --> 00:22:52,331 நீ ஒருவரை இழந்தாய். 337 00:22:53,457 --> 00:22:55,167 இதையெல்லாம் நீயே கற்பனை செய்துகொண்டாய், அதனால் நீ… 338 00:22:55,250 --> 00:22:56,919 நான் எதையும் கற்பனை செய்யவில்லை. 339 00:22:57,461 --> 00:22:58,837 நான் பார்த்தேன்… 340 00:22:58,921 --> 00:23:01,423 நீ பார்க்க விரும்பியதைப் பார்த்தாய். 341 00:23:02,549 --> 00:23:06,470 உன்னால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால், நீ பொய்களை உருவாக்கியிருக்கிறாய். 342 00:23:06,553 --> 00:23:08,388 உனக்கு என்னைத் தெரியாது. 343 00:23:10,432 --> 00:23:11,767 அந்தப் பார்வையை எனக்குத் தெரியும். 344 00:23:11,850 --> 00:23:13,393 அந்த வலியை எனக்குத் தெரியும். 345 00:23:13,477 --> 00:23:15,103 நான் அதை கிட்டத்தட்ட மறந்திருந்தேன்… 346 00:23:16,813 --> 00:23:19,191 அதையெல்லாம் நீ திரும்ப ஞாபகப்படுத்தும் வரை. 347 00:23:22,778 --> 00:23:26,573 நீ சுட மாட்டாய் என்று எனக்குத் தெரியும். 348 00:23:27,157 --> 00:23:29,785 ஏனென்றால் நீ அந்த விண்கப்பலுக்குள் போக ஒரே வழி அவள்தான். 349 00:23:31,870 --> 00:23:38,627 உனக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாத அளவுக்கு நீ அறியாதவளாக இருக்கிறாய். 350 00:23:42,881 --> 00:23:47,261 மிட்சுகி, எங்கே போக வேண்டும் என்று அவளிடம் சொன்னாயா? 351 00:23:48,554 --> 00:23:49,763 உள்ளே போகும் வழியை? 352 00:23:55,394 --> 00:23:56,395 போகலாம். 353 00:23:56,478 --> 00:23:58,230 மிட்சுகி, போகலாம். 354 00:23:58,313 --> 00:23:59,940 நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். 355 00:24:01,275 --> 00:24:02,901 நான் உன்னைச் சுடப் போவதில்லை. 356 00:24:10,409 --> 00:24:11,827 என் குரலைக் கேளுங்கள். தயவுசெய்து. 357 00:24:11,910 --> 00:24:13,537 என் குரலைக் கேளுங்கள். 358 00:24:13,620 --> 00:24:16,123 இதைச் செய்யாதீர்கள். சுயநினைவுக்கு வாருங்கள். 359 00:24:17,749 --> 00:24:19,459 எனக்கு அந்த வார்த்தைகள் தெரியும். 360 00:24:31,221 --> 00:24:32,848 நிஜம் இல்லை. 361 00:24:33,724 --> 00:24:34,933 இது நிஜம் இல்லை. 362 00:24:36,685 --> 00:24:39,771 நான் எப்போதும் உன்னிடம் வருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடிந்தது. 363 00:24:43,108 --> 00:24:45,068 இப்போது, நீ உன்னிடம் வருவதற்கான வழியைக் கண்டுபிடித்தாய். 364 00:24:47,029 --> 00:24:51,116 சேனல் சுரங்கப்பாதையில் நீ சத்தியம் செய்ததைப் போலவே, நினைவிருக்கிறதா? 365 00:24:53,535 --> 00:24:54,786 நீ இறப்பதைப் பார்த்தேன். 366 00:24:56,788 --> 00:24:58,290 ஆம், என்னில் சில பகுதி இறந்தது. 367 00:24:58,957 --> 00:25:00,542 இல்லை, இது அவை செய்வது. இல்லை… 368 00:25:02,127 --> 00:25:03,128 இது நிஜமாக இருக்க முடியாது. 369 00:25:03,212 --> 00:25:04,546 ஏன் முடியாது? 370 00:25:06,673 --> 00:25:08,717 நான் கோமாவில் இருந்தபோது நீ என்னைத் தொடர்புகொண்டாய். 371 00:25:10,802 --> 00:25:11,929 என்ன நடக்கிறது? 372 00:25:13,680 --> 00:25:16,266 நீ என் கையைப் பிடித்தபோது நான் இன்னும் உயிருடன் இருந்ததை நீ உணர்ந்தாய். 373 00:25:17,434 --> 00:25:18,769 அந்த தருணம்… 374 00:25:20,103 --> 00:25:21,438 நான் உனக்கு ஒரு செய்தியை அனுப்பினேன். 375 00:25:24,608 --> 00:25:29,988 கைவிடாதே என்று சொல்ல என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து உன்னைத் தொடர்புகொண்டேன். 376 00:25:31,949 --> 00:25:32,950 கைவிடாதே என்று சொல்ல. 377 00:25:33,534 --> 00:25:35,118 நீ என் கையைப் பிடித்தாய். 378 00:25:37,037 --> 00:25:38,288 நீ பிடித்திருந்தாய். 379 00:25:40,290 --> 00:25:41,375 பல மணிநேரங்களாக. 380 00:25:43,418 --> 00:25:44,795 இன்னும் என்னால் உன்னை உணர முடிகிறது. 381 00:25:47,047 --> 00:25:48,423 நீ ஒருபோதும் போக விடவில்லை, ஜாம். 382 00:25:51,134 --> 00:25:52,761 இப்போது நீ இங்கே இருக்கிறாய். 383 00:26:03,981 --> 00:26:05,148 அவள் போய்விட்டாளா? 384 00:26:05,732 --> 00:26:06,733 உன்னை விட்டுவிட்டு போய்விட்டாளா? 385 00:26:11,530 --> 00:26:12,823 நீங்கள் ஏன் அவளைச் சுடவில்லை? 386 00:26:12,906 --> 00:26:14,199 சரியாக சுடும் இடத்தில் நான் இல்லை. 387 00:26:14,283 --> 00:26:15,951 அவளைப் பிடிக்க நீங்கள் ஏன் என்னைச் சுடவில்லை? 388 00:26:16,034 --> 00:26:17,619 நீ எதிரி இல்லை, மிட்சுகி. 389 00:26:27,504 --> 00:26:28,672 கதவைத் திறக்காதீர்கள். 390 00:26:30,465 --> 00:26:32,384 தயவுசெய்து, கதவைத் திறக்காதீர்கள். 391 00:26:32,885 --> 00:26:33,969 ஓய். 392 00:26:36,138 --> 00:26:38,515 காஸ்பர், உன்னால் இவர்களுக்கு உதவ முடியுமா? 393 00:26:41,268 --> 00:26:42,352 அது ரொம்ப சக்தி வாய்ந்தது. 394 00:26:43,478 --> 00:26:44,479 என்னால் அதை நிறுத்த முடியாது. 395 00:26:44,563 --> 00:26:45,731 பிறகு நீ எப்படி எனக்கு உதவுகிறாய்? 396 00:26:45,814 --> 00:26:47,482 ஏனென்றால் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம், ஜாம். 397 00:26:48,567 --> 00:26:50,485 எப்போதும், நானும் நீயும். 398 00:26:52,196 --> 00:26:54,531 எதனாலும் அதைத் தடுக்க முடியாது. 399 00:26:59,203 --> 00:27:00,579 காஸ்பர், தயவுசெய்து. 400 00:27:00,662 --> 00:27:02,831 அதை நிறுத்த ஒரு வழி இருக்க வேண்டும். 401 00:27:03,457 --> 00:27:04,875 அவை ரொம்ப வலிமையானவை. 402 00:27:05,834 --> 00:27:06,835 ஏலியன்கள், 403 00:27:07,753 --> 00:27:09,004 அவற்றுக்கு நம் பலவீனங்களைத் தெரியும். 404 00:27:09,963 --> 00:27:12,591 நம்மை எங்கே தாக்குவது, எப்படி காயப்படுத்துவது என்று அவற்றுக்குத் தெரியும். 405 00:27:13,258 --> 00:27:15,344 நீங்கள் செய்யக்கூடிய ஏதாவது இருக்க வேண்டும். 406 00:27:16,136 --> 00:27:17,554 என்னை மன்னித்துவிடுங்கள். 407 00:27:17,638 --> 00:27:20,057 - நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்துவிட்டோம்… - இல்லை, என் மகனைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள். 408 00:27:20,140 --> 00:27:22,142 அவன் இந்த உலகில் இரண்டு ஆண்டுகளாகத்தான் இருக்கிறான். 409 00:27:22,226 --> 00:27:24,603 - நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். - நாங்கள் செய்துவிட்டோம்… 410 00:27:24,686 --> 00:27:26,021 எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம். 411 00:27:30,317 --> 00:27:32,986 நாம் நினைத்து ரொம்பவும்… பயப்படும் நினைவுகள். 412 00:27:35,405 --> 00:27:36,949 நாம் புதைக்க முயற்சித்த எல்லா விஷயங்களும். 413 00:27:37,032 --> 00:27:38,325 ஓய். 414 00:27:38,992 --> 00:27:40,911 இந்தக் குடியிருப்புகளில் எல்லாவற்றையும் நடத்துபவன் நான்தான். 415 00:27:40,994 --> 00:27:43,413 இங்கே சூதாட்டம் நடக்கிறது என்று எனக்குத் தெரியும். 416 00:27:43,497 --> 00:27:44,873 இங்கே சூதாட்டம் நடக்கவில்லை, சார். 417 00:27:45,457 --> 00:27:46,750 - எனக்குத் தெரியும் என்றேன். - இல்லை, வேண்டாம். 418 00:27:48,126 --> 00:27:50,504 எனவே, எனக்குத் தெரிய வேண்டும், இங்கே அதை நடத்தும் பொறுப்பாளர் யார்? 419 00:27:51,129 --> 00:27:52,548 எனக்கு என் பணம் வேண்டும். 420 00:27:55,592 --> 00:27:58,512 நான் சொன்னது போல, நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 421 00:27:58,595 --> 00:28:00,514 யார் அது? நீயா? 422 00:28:01,139 --> 00:28:02,850 - அப்பா… - நீங்கள் குழந்தைகளைப் பயமுறுத்துகிறீர்கள். 423 00:28:03,433 --> 00:28:05,143 - வீட்டை விட்டு வெளியே போங்கள். - அப்பா? 424 00:28:05,727 --> 00:28:07,521 - வீட்டை விட்டு வெளியே போங்கள். வெளியே போங்கள்! - ஹேய்! 425 00:28:07,604 --> 00:28:09,064 பியா! 426 00:28:09,147 --> 00:28:10,482 - பியா! - அம்மா… 427 00:28:10,566 --> 00:28:11,608 அம்மா. 428 00:28:11,692 --> 00:28:15,028 அவள் அவர்களிடம் போவதற்கு முன்பு நாம் அவளைத் தடுக்க வேண்டும். 429 00:28:18,073 --> 00:28:19,074 நீ எனக்கு உதவுவாயா? 430 00:28:20,409 --> 00:28:22,411 நீ எதிரி இல்லை, மிட்சுகி. 431 00:28:24,496 --> 00:28:27,499 நான் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 432 00:28:30,294 --> 00:28:31,461 என்னைப் பார். 433 00:28:34,298 --> 00:28:35,299 நீ சொன்னது சரிதான். 434 00:28:35,966 --> 00:28:37,718 நாம் ஏலியன்களைப் போல இல்லை. 435 00:28:38,260 --> 00:28:40,012 நாம் ஒன்றாக யோசிப்பதில்லை. 436 00:28:41,513 --> 00:28:42,848 நாம் ஒன்றாகப் போராடுவதில்லை. 437 00:28:44,474 --> 00:28:46,143 நாம் ஒன்றாக குணமடைவதில்லை. 438 00:28:48,145 --> 00:28:49,980 நமக்கு பலவீனம் இருக்கிறது. 439 00:28:51,565 --> 00:28:52,566 அம்மா. 440 00:28:53,150 --> 00:28:55,068 நீ என்ன செய்துவிட்டாய்? 441 00:28:55,736 --> 00:28:57,029 பணத்திற்காக… 442 00:28:58,071 --> 00:28:59,698 நீ என்ன செய்துவிட்டாய்? 443 00:29:00,282 --> 00:29:01,283 பியா? 444 00:29:03,952 --> 00:29:07,623 ஆனால் நாம் ஒருவருக்காக ஒருவர் முயற்சி செய்கிறோம். 445 00:29:08,290 --> 00:29:09,625 என்னுடன் போராடு. 446 00:29:11,710 --> 00:29:13,128 நம்மால் ஒன்றாகப் போராட முடியும். 447 00:29:14,213 --> 00:29:15,255 சரியா? 448 00:29:26,433 --> 00:29:28,352 அவர் என்னிடம் சொன்ன கடைசி விஷயம் அதுதான். 449 00:29:28,435 --> 00:29:29,436 கிளார்க். 450 00:29:31,730 --> 00:29:32,856 "முயற்சி செய்துகொண்டே இரு." 451 00:29:35,734 --> 00:29:38,487 முயற்சி செய்துகொண்டே இருக்க நாங்கள் சத்தியம் செய்தோம். 452 00:29:46,370 --> 00:29:47,746 போகலாம். 453 00:29:57,798 --> 00:29:59,132 நீ வருகிறாயா? 454 00:30:02,386 --> 00:30:03,637 மிட்சுகி? 455 00:30:05,514 --> 00:30:06,932 என்னை மன்னித்துவிடுங்கள். 456 00:30:17,985 --> 00:30:19,319 அவை நெருங்கி வருகின்றன. 457 00:30:21,321 --> 00:30:22,823 நீ எப்படி இங்கே பிழைத்திருக்கிறாய்? 458 00:30:57,774 --> 00:30:59,568 நீ இப்போது என்ன சொல்கிறாய்? 459 00:31:02,029 --> 00:31:03,113 தாக்கு… 460 00:31:04,406 --> 00:31:05,449 தாக்கு… 461 00:31:33,852 --> 00:31:34,937 நிகில். 462 00:31:38,857 --> 00:31:40,025 மிட்சுகி. 463 00:31:40,776 --> 00:31:42,528 இல்லை. 464 00:31:43,111 --> 00:31:44,112 மிட்சுகி. 465 00:31:48,909 --> 00:31:50,536 இல்லை. மன்னியுங்கள், வேண்டாம். 466 00:31:50,619 --> 00:31:53,121 நாம் இதைச் செய்ய முடியாது. என்னால் இதைச் செய்ய முடியாது. 467 00:31:53,205 --> 00:31:54,706 நீங்கள் இதைச் செய்ய என்னால் அனுமதிக்க முடியாது! 468 00:31:55,958 --> 00:31:56,959 போ! 469 00:31:57,751 --> 00:31:59,086 தூரம் போ! 470 00:32:02,714 --> 00:32:04,258 மிட்சுகி! 471 00:32:04,341 --> 00:32:06,844 மிட்சுகி, எழுந்திரு! மிட்சுகி! 472 00:32:06,927 --> 00:32:08,053 எழுந்திரு! 473 00:32:08,136 --> 00:32:09,429 என்னை மன்னித்துவிடு. 474 00:32:09,513 --> 00:32:10,806 மிட்சுகி! 475 00:32:11,348 --> 00:32:13,725 இது நிஜமா? 476 00:32:14,601 --> 00:32:16,270 நீ என்னைக் காப்பாற்ற முயற்சித்தாயா? 477 00:32:16,353 --> 00:32:17,563 மிட்சுகி. 478 00:32:19,731 --> 00:32:21,400 நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? 479 00:32:21,483 --> 00:32:22,860 அது… 480 00:32:24,152 --> 00:32:25,279 முக்கியமானதாக இருந்திருக்குமா? 481 00:32:25,362 --> 00:32:28,240 ஆம், இருந்திருக்கும். 482 00:32:28,323 --> 00:32:30,200 ரொம்ப தாமதமாகிவிட்டது. 483 00:32:30,284 --> 00:32:32,870 நான் எல்லோருக்கும் துரோகம் செய்கிறேன். 484 00:32:35,330 --> 00:32:37,374 நான் எல்லாவற்றையும் அழிக்கிறேன். 485 00:32:56,476 --> 00:32:57,477 அடடா. 486 00:33:04,484 --> 00:33:06,361 காஸ்பர், இல்லை. 487 00:33:09,198 --> 00:33:10,908 காஸ்பர், வேண்டாம். 488 00:33:10,991 --> 00:33:12,701 நீ இங்கே இறந்தது… 489 00:33:16,330 --> 00:33:19,708 அவருக்கு ஞாபகம் வருகிறது. 490 00:33:22,002 --> 00:33:23,170 நான் சொன்னது போல, 491 00:33:24,338 --> 00:33:25,506 நம்முடைய பலவீனம் அவற்றுக்குத் தெரியும். 492 00:33:28,675 --> 00:33:30,469 நாம் ஒருபோதும் புதைக்காத விஷயங்கள். 493 00:33:34,056 --> 00:33:35,516 நான் அதைக் கடந்துவிட்டதாக நினைத்தேன். 494 00:33:37,226 --> 00:33:38,352 நான் உண்மையில் செய்தேன். 495 00:33:39,895 --> 00:33:43,398 பிறகு ட்ரெவாண்டேவைப் பார்த்தேன், அது எல்லாம் திரும்பி ஞாபகம் வந்துவிட்டது. 496 00:33:43,482 --> 00:33:47,069 இந்த இடம் உனக்குச் செய்த செயலுக்காக இதை அழிக்க இங்கே வந்தேன். 497 00:33:47,653 --> 00:33:48,904 நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். 498 00:33:51,573 --> 00:33:53,158 நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. 499 00:33:54,993 --> 00:33:56,954 நீ என்னை நம்புவதை ஒருபோதும் நிறுத்தாதது போல. 500 00:33:57,037 --> 00:33:58,205 இப்போது எனக்குப் புரிகிறது. 501 00:34:01,124 --> 00:34:02,918 எனக்கு… எனக்கு எல்லாம் புரிகிறது. 502 00:34:06,672 --> 00:34:08,465 என்னால் புதைக்க முடியாத விஷயம் நீதான். 503 00:34:10,634 --> 00:34:12,886 நீதான் என்னுடைய உறுதியான நினைவு, காஸ்ப். 504 00:34:14,929 --> 00:34:16,348 நீதான் என்னுடைய பலவீனம். 505 00:34:17,641 --> 00:34:18,641 ஜாம்? 506 00:34:20,476 --> 00:34:21,937 நான் உன்னை ஒருபோதும் விடவில்லை. 507 00:34:24,273 --> 00:34:25,690 நான் உன்னை ஒருபோதும் விடவில்லை. 508 00:34:31,029 --> 00:34:32,197 ஜாம்? 509 00:34:45,335 --> 00:34:46,335 ஜாம், 510 00:34:47,420 --> 00:34:48,880 நீ என்ன செய்கிறாய்? 511 00:35:19,995 --> 00:35:21,163 நீ என்ன செய்கிறாய்? 512 00:35:22,748 --> 00:35:24,082 ஜாம். 513 00:35:27,211 --> 00:35:28,378 உன்னைப் போக விடுகிறேன். 514 00:35:33,008 --> 00:35:34,384 குட்பை, காஸ்பர். 515 00:36:04,706 --> 00:36:05,707 அடச்சே. 516 00:36:15,342 --> 00:36:16,510 மிட்சுகி! 517 00:36:17,970 --> 00:36:19,304 நான் அவர்களுக்கு உதவ வேண்டும்! 518 00:36:23,767 --> 00:36:25,269 ஓடு, மிட்சுகி! 519 00:36:56,675 --> 00:36:58,302 என்னால் சரியான நேரத்தில் அங்கே போக முடியாது. 520 00:37:52,981 --> 00:37:53,982 அது… 521 00:37:55,692 --> 00:37:56,902 மிட்சுகி. 522 00:38:21,009 --> 00:38:22,719 அவர் அவற்றை அவர் பக்கம் இழுக்கிறார். 523 00:38:24,429 --> 00:38:25,430 அவளை நோக்கி. 524 00:38:26,181 --> 00:38:27,474 அவர் நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார். 525 00:38:28,183 --> 00:38:29,726 எனவே சென்று, அவற்றை அழிப்போம். 526 00:38:30,352 --> 00:38:32,604 வந்து என்னைப் பிடியுங்கள். 527 00:39:11,768 --> 00:39:12,811 போகலாம். 528 00:39:15,981 --> 00:39:17,900 அவர் வீணாக இறந்தார். 529 00:39:17,983 --> 00:39:19,318 என் கணவர். 530 00:39:20,402 --> 00:39:25,365 நீ அவரைக் கொன்றாய், அவர்கள் எல்லோரையும், ஒன்றுமில்லாததற்காக! 531 00:39:31,580 --> 00:39:34,082 அவர்கள் ஒரு சிறந்த உலகத்திற்காக இறந்தார்கள். 532 00:39:35,292 --> 00:39:36,835 நீங்கள் எல்லோரும் அதற்காக இறக்கப் போகிறீர்கள். 533 00:39:47,346 --> 00:39:48,597 காஸ்பர். 534 00:39:49,473 --> 00:39:50,807 இங்கேதான் நான் அவனை இழந்தேன். 535 00:39:51,725 --> 00:39:53,227 இங்கேதான் நாம் அவனை விட்டுவிட்டு போகப் போகிறோம். 536 00:39:55,145 --> 00:39:56,522 கடந்த காலத்தை மாற்ற முடியாது, ட்ரெவ். 537 00:39:56,605 --> 00:39:59,358 ஆம், நாம் முடிந்த வரை வேகமாக கடந்த காலத்தை அங்கேயே விட்டுவிட்டு கடந்து போக வேண்டும். 538 00:40:00,317 --> 00:40:01,527 அப்படியென்றால் இங்கிருந்து வெளியேறுவோம். 539 00:40:02,152 --> 00:40:03,362 நாம் மிட்சுகியிடம் போக வேண்டும். 540 00:40:04,780 --> 00:40:06,865 அவர் நம்மிடமிருந்து அவற்றை விலக்கி வைத்திருக்கிறார். 541 00:40:06,949 --> 00:40:09,535 - நாம் அவற்றுக்கு பக்கத்தில் போனால், அவை… - நான் அவள் இல்லாமல் வெளியேற மாட்டேன். 542 00:40:12,371 --> 00:40:15,374 நான் மீண்டும் அவளை விட்டுவிட்டு போக மாட்டேன். 543 00:40:16,959 --> 00:40:17,960 சரி. 544 00:40:20,128 --> 00:40:21,964 சரி. பரவாயில்லை. 545 00:40:33,851 --> 00:40:34,852 ஓடுங்கள். 546 00:40:46,780 --> 00:40:48,323 மிட்சுகி! 547 00:40:49,867 --> 00:40:52,661 மிட்சுகி! நீ எங்கே இருக்கிறாய்? 548 00:40:53,495 --> 00:40:54,872 மிட்சுகி! 549 00:40:56,832 --> 00:40:58,500 மிட்சுகி! 550 00:41:06,300 --> 00:41:07,426 மிட்சுகி! 551 00:41:10,387 --> 00:41:11,638 நான் இங்கே இருக்கிறேன்! 552 00:41:12,347 --> 00:41:13,724 மிட்சுகி! 553 00:41:17,978 --> 00:41:19,479 மிட்சுகி! 554 00:41:44,796 --> 00:41:46,215 அது இறக்கிறது. 555 00:41:47,049 --> 00:41:48,425 நாங்கள் அதைச் செய்துவிட்டோம். 556 00:42:11,949 --> 00:42:13,283 மிட்சுகி. 557 00:42:38,183 --> 00:42:39,184 மிட்சுகி. 558 00:42:43,480 --> 00:42:44,690 மிட்சுகி! 559 00:43:02,749 --> 00:43:04,126 உன் மனதைத் திற. 560 00:43:08,297 --> 00:43:10,174 அது என்ன என்று உனக்கு எப்போதாவது ஞாபகம் வந்ததா? 561 00:43:13,010 --> 00:43:14,261 உள்ளே நுழைய அனுமதி. 562 00:43:36,241 --> 00:43:40,871 என்னால் சூர்யோதயத்தைப் பார்க்க முடியாது. 563 00:43:52,758 --> 00:43:55,385 நீயும் சுதந்திரமாக இருக்கலாம். 564 00:43:58,388 --> 00:44:01,934 நான் இப்படிச் செய்வதை நீ வெறுப்பாய் என்று தெரியும். 565 00:44:04,019 --> 00:44:05,145 எனவே, நான் உன்னை நேசிக்கிறேன். 566 00:44:11,985 --> 00:44:13,070 மிட்சுகி. 567 00:44:21,495 --> 00:44:23,038 நாம் உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும். 568 00:44:23,121 --> 00:44:25,707 நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். போ. போ. போ! 569 00:44:43,183 --> 00:44:44,393 அது முடிந்துவிட்டது, வெர்னா. 570 00:44:52,359 --> 00:44:56,780 நீங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டீர்கள். 571 00:44:58,907 --> 00:45:03,954 நான் என் சகோதரியைப் பார்க்க விரும்பினேன். 572 00:45:46,622 --> 00:45:47,998 நிலைமை எப்படி இருக்கிறது? 573 00:45:48,081 --> 00:45:49,541 நம் படைகள் மீண்டும் வேட்டையாடிக் கொல்பவற்றை 574 00:45:49,625 --> 00:45:52,002 நிறுத்தி வருவதாக வட ஆப்பிரிக்காவிலிருந்து செய்திகள் வருகின்றன. 575 00:45:52,794 --> 00:45:55,797 கிழக்கு கடற்பரப்பில் இருக்கும் WDC படைகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. 576 00:45:55,881 --> 00:45:57,758 தாய்க்கப்பல் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திவிட்டது. 577 00:45:57,841 --> 00:46:00,219 அவற்றின் நரம்பியல் நெட்வொர்க் முழுதாக செயலிழந்துவிட்டது. 578 00:46:03,263 --> 00:46:05,390 வேட்டையாடிக் கொல்பவை தாங்களாகவே செயல்படுகின்றன. 579 00:46:05,474 --> 00:46:07,351 - சிக்னல் இல்லை. - ஹைவ் மனது இல்லை. 580 00:46:07,434 --> 00:46:09,186 மைய கட்டளை அமைப்பு இல்லை. 581 00:46:09,770 --> 00:46:11,104 இப்போது இது ஒரு நியாயமான சண்டை. 582 00:46:13,190 --> 00:46:14,191 சார். 583 00:46:16,443 --> 00:46:18,779 எங்களுக்கு இறந்த மண்டலத்தில் சில நகர்வுகள் தெரிகின்றன. 584 00:46:18,862 --> 00:46:21,114 வெப்ப சிக்னல்கள். மனிதர்களுடையது. 585 00:46:24,451 --> 00:46:25,786 அவர்கள் நம்முடையவர்களா? 586 00:46:25,869 --> 00:46:27,287 நிச்சயமாகத் தெரியவில்லை. 587 00:46:36,880 --> 00:46:39,299 எங்களுக்கு முன் களங்களில் இருந்து புதிய செய்திகள் வருகின்றன. 588 00:46:39,383 --> 00:46:41,760 போர் மாறிவிட்டதாகத் தெரிகிறது. இராணுவப் படைகள் இப்போது… 589 00:46:41,844 --> 00:46:43,554 டியான்ஜின் மாகாணத்தில் 590 00:46:43,637 --> 00:46:44,638 முதல் வெற்றி பதிவாகியிருக்கிறது. 591 00:46:44,721 --> 00:46:47,182 நம் படைகள் படையெடுப்பாளர்களை மீண்டும் வெல்லத் தொடங்கியிருக்கின்றன. 592 00:46:47,266 --> 00:46:50,352 போர்ட்டல் மண்டலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் காற்று நச்சுத்தன்மையின் 593 00:46:50,435 --> 00:46:53,772 அளவு பல ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது, அது மனிதகுலத்துக்கு… 594 00:46:53,856 --> 00:46:59,486 இரண்டு மற்றும் ஐந்தாவது போர்ட்டல் மண்டலங்களை உதவிப் படைகள் அடைந்திருக்கின்றன. 595 00:46:59,570 --> 00:47:02,614 இராணுவ வீரர்களால் ஒரு குழுவை 596 00:47:02,698 --> 00:47:04,950 போர்ட்டலுக்குள் தள்ள முடிந்திருக்கிறது. 597 00:47:05,033 --> 00:47:08,161 ஏலியன்கள் இப்போது தனியாகப் போராடி வருவதை 598 00:47:08,245 --> 00:47:10,247 WDC-இன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 599 00:47:10,330 --> 00:47:12,583 ஹைவ் மனதுடன் இணைப்பு இல்லாத நிலையில் 600 00:47:12,666 --> 00:47:15,252 வேட்டையாடிக் கொல்பவற்றுக்கு எதிரான யுக்தி இதுவரை வெற்றிகரமாக இருப்பதாக 601 00:47:15,335 --> 00:47:17,087 சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன… 602 00:47:44,656 --> 00:47:46,200 சீஃப் கோல், பணிக்குத் தயார், சார். 603 00:47:49,912 --> 00:47:51,413 அதாவது தளபதி கோல். 604 00:48:00,714 --> 00:48:02,633 பகுதி ஆறில் எந்த அறிகுறியும் இல்லை, சார். 605 00:48:02,716 --> 00:48:03,800 தொடர்ந்து தேடுங்கள். 606 00:48:03,884 --> 00:48:05,636 அவள் அங்கே எங்காவது இருக்க வேண்டும். 607 00:48:05,719 --> 00:48:08,013 சார், ஒருவேளை நீங்கள் கொஞ்சம் தூங்கலாம். 608 00:48:08,096 --> 00:48:09,640 நாம் அவளைக் கண்டுபிடிக்கும் வரை இல்லை. 609 00:48:13,393 --> 00:48:16,980 யமடோ, மிட்சுகி 610 00:48:37,376 --> 00:48:38,377 அம்மா! 611 00:49:01,608 --> 00:49:02,818 நான் மிகவும் வருந்துகிறேன். 612 00:49:08,657 --> 00:49:10,868 உன் அப்பா இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னார். 613 00:49:17,124 --> 00:49:18,709 அவர் இதை உங்கள் எல்லோருக்கும் எழுதினார். 614 00:49:20,419 --> 00:49:21,670 அது முடிந்துவிட்டதா, அம்மா? 615 00:49:25,048 --> 00:49:26,091 எனக்குத் தெரியவில்லை. 616 00:49:30,637 --> 00:49:32,055 ஆனால் என்ன நடந்தாலும்… 617 00:49:33,932 --> 00:49:36,476 நாம் அதை ஒன்றாக சமாளிப்போம். 618 00:49:39,605 --> 00:49:40,731 போகலாம். 619 00:49:59,499 --> 00:50:06,465 பூமி - நாள் 1, படையெடுப்புக்குப் பின்பு 620 00:51:36,763 --> 00:51:38,765 வசனத் தமிழாக்கம் அருண்குமார்