1 00:00:08,717 --> 00:00:10,552 {\an8}சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல்... 2 00:00:10,552 --> 00:00:12,179 {\an8}வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 3 00:00:12,179 --> 00:00:14,806 {\an8}...டைனோசர்கள் இந்த பூமியை ஆண்டன. 4 00:00:15,682 --> 00:00:18,727 அவை பூமியின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஆட்கொண்டன, 5 00:00:19,311 --> 00:00:23,148 அதோடு, அனைத்து வடிவங்களிலும், உருவங்களிலும் காணப்பட்டன. 6 00:00:24,358 --> 00:00:27,402 அதில் சில, உண்மையாகவே அற்புதமாக இருந்தன. 7 00:00:30,822 --> 00:00:34,535 டி. ரெக்ஸ் மிகச் சிறப்பாக நீந்தக் கூடிய விலங்கு என்றும்... 8 00:00:36,787 --> 00:00:40,082 இறகுகளை உடைய வெலோசிரப்ட்டர்கள் மிக சாமர்த்தியமான வேட்டை விலங்குகள் என்றும், 9 00:00:42,000 --> 00:00:45,963 மற்றும் சில டைனோசர்களுக்கு மிகவும் விசித்திரமான நடத்தைகள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியும். 10 00:00:48,841 --> 00:00:52,594 ஆனால் தினமும் புதிதாக ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது 11 00:00:52,594 --> 00:00:57,641 அவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்கை எப்படி இருந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 12 00:01:02,604 --> 00:01:05,482 இந்த முறை Prehistoric Planet-ல், 13 00:01:05,482 --> 00:01:08,026 நீங்கள் புதிய விலங்குகளை பார்க்கலாம்... 14 00:01:09,403 --> 00:01:13,740 ...அவற்றின் துணைத் தேடலைப் பற்றி கிடைத்துள்ள புதிய புரிதல்களைக் காணலாம்... 15 00:01:15,576 --> 00:01:18,203 ...ஒரு குடும்பத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்... 16 00:01:19,496 --> 00:01:21,415 மற்றும் அவற்றின் மாபெரும் யுத்தங்களையும் பார்க்க முடியும். 17 00:01:29,506 --> 00:01:33,969 இயற்கை அன்னை தன் அழகை சிறப்பாக வெளிப்படுத்திய காலத்திற்கு பயணிக்கிறோம். 18 00:01:37,514 --> 00:01:41,727 இது தான் Prehistoric Planet 2. 19 00:01:54,656 --> 00:02:00,078 சதுப்பு நிலங்கள் 20 00:02:01,121 --> 00:02:04,625 வடகிழக்கு ஆசியாவின் அடர்ந்த சதுப்பு நிலங்கள். 21 00:02:08,211 --> 00:02:13,425 வெள்ளப் பெருக்குள்ள இந்த தாழ்ந்த-நிலப்பரப்புப் பகுதியில், கணக்கற்ற தீவுகள் உள்ளன. 22 00:02:19,348 --> 00:02:23,101 அவை அனைத்துமே, நிதானமாக ஓடும் நீரால் சூழப்பட்டுள்ளதால்... 23 00:02:26,522 --> 00:02:31,068 அவை புது உயிரினங்களின் சரணாலயங்களாகவும் மாறும் தகுதியைப் பெறுகிறது. 24 00:02:36,740 --> 00:02:42,788 ஒரு இளம் டெரோசார், அதாவது ஒரு அஷ்ஹார்கிட். வெளிவந்து சில மணி நேரங்களே ஆகியுள்ளது. 25 00:02:51,547 --> 00:02:53,298 ஒரு தீவில் இருப்பதால், 26 00:02:53,298 --> 00:02:57,511 பாதுகாப்பான இந்த இடத்தில், அது அதன் முதல் அடிகளை எடுத்து வைக்க முடிகிறது. 27 00:03:09,690 --> 00:03:15,487 இப்போது நடை பழகிவிட்டதால், அடுத்தது தன் இறக்கைகளை பயன்படுத்த வேண்டும். 28 00:03:18,448 --> 00:03:22,286 அவற்றை ஒழுங்காக இயங்கச் செய்ய, இன்னும் சற்று பயிற்சி தேவை. 29 00:03:25,998 --> 00:03:28,166 அதன் உயரம் ஒரு-அடி தான் என்றாலும், 30 00:03:28,166 --> 00:03:32,504 இறக்கைகள் 30-அடி நீளத்திற்கு விரியும் ஒரு ராட்சஸ விலங்காக வளரப் போகிறது. 31 00:03:33,630 --> 00:03:36,967 அப்படி வளர, தாராளமான உணவு தேவைப்படும்... 32 00:03:40,095 --> 00:03:43,807 இந்த சிறிய தீவினால் அதைத் தர முடியாது. 33 00:03:48,979 --> 00:03:50,522 இரையைத் தேட, அது இந்த இடத்தை விட்டுச் சென்று 34 00:03:51,190 --> 00:03:55,360 தீவைச் சூற்றியுள்ள சதுப்பு நிலக்காடுகளை அடைய வேண்டும். 35 00:04:04,494 --> 00:04:09,291 முதல் முறை பறப்பது, குறிப்பாக அது திறந்த வெளித் தண்ணீரின் மேல் எனில், ஆபத்தான விஷயம் தான். 36 00:04:12,461 --> 00:04:14,546 இன்று இளம் தென்றல் வீசுகிறது. 37 00:04:15,047 --> 00:04:17,925 அதனால் அதற்கு இன்னும் சற்று உயரத்தில் பறக்க முடியும். 38 00:04:36,109 --> 00:04:39,363 ஆனால் இந்த இளம் விலங்கிற்கு இன்னும் போதுமான வலிமை வரவில்லை. 39 00:05:01,301 --> 00:05:05,097 ஷேமோசூக்கஸ். பதினைந்து-அடி-நீள வேட்டை விலங்குகள். 40 00:05:07,891 --> 00:05:10,018 இந்தத் தீவு பாதுகாப்பைத் தரலாம், 41 00:05:10,519 --> 00:05:13,856 ஆனால் கட்டாயமாக, சுற்றியுள்ள தண்ணீரில் அந்த பாதுகாப்பு இல்லை. 42 00:05:19,236 --> 00:05:23,323 மேலெழுவதை சரிவரச் செய்யவில்லை எனில், உயரப் பறப்பது கடினம். 43 00:05:29,580 --> 00:05:32,249 இது போதுமான உயரமாக இல்லை. 44 00:05:43,552 --> 00:05:45,304 அவற்றில் இன்னும் வலிமையுடன் பறக்கக்கூடியவை 45 00:05:45,304 --> 00:05:48,432 காட்டுப் பகுதியின் பாதுகாப்பை கிட்டத்தட்ட எட்டிவிட்டன. 46 00:05:51,018 --> 00:05:53,687 மற்றவர்கள் இதுவரை முயற்சிக்கவே இல்லை. 47 00:06:54,248 --> 00:06:56,625 நூலிழையில், பிரமிப்பூட்டும் விதத்தில் தப்பித்தது. 48 00:06:58,293 --> 00:07:01,672 அதற்கு பரிசாக கிடைப்பதை சேகரிக்கும் நேரம் இது. 49 00:07:14,184 --> 00:07:18,647 இந்த செழிப்பான சதுப்பு நிலக்காடுகளில், அதற்குத் தேவையான உணவு அனைத்தும் கிடைக்கும். 50 00:07:32,244 --> 00:07:34,872 இங்கே தென் அமெரிக்காவின் ஈரநிலங்களில், 51 00:07:34,872 --> 00:07:39,334 நீண்ட கோடை நாட்கள் இன்னும் அபாரமான விருந்தை உருவாக்குகின்றன. 52 00:07:40,961 --> 00:07:44,673 இந்த சதுப்பு நலங்களில் அனைத்து வகையான விலங்குகளும் நிரம்பி வழிகின்றன. 53 00:07:53,724 --> 00:07:55,642 வேட்டை விலங்குகள் அதற்காக ஒன்று கூடுகின்றன. 54 00:08:04,943 --> 00:08:08,238 பயங்கரமான மூன்றடி நீளமுள்ள கார்மீன் வகை. 55 00:08:16,163 --> 00:08:19,875 ஒரு ராட்சஸ ஆஸ்ட்ரோராப்டருக்கு அது தான் மதிய உணவு. 56 00:08:25,714 --> 00:08:30,677 அவை வெலோசிராப்டர்களின் இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு, ஆனால் அவற்றை விட மிகப் பெரியவை. 57 00:08:37,226 --> 00:08:42,147 தலையிலிருந்து வால் வரை, இருபதடி நீளமும், சுமார் 400 கிலோவுக்கும் மேல் எடையும் உள்ளன. 58 00:08:56,036 --> 00:08:59,540 முதலைகளுக்கு உள்ள பற்களைப் போல இவற்றுக்கும் இருப்பதால், 59 00:08:59,540 --> 00:09:03,794 இந்த வகை டைனோசர்கள், மீன் பிடிப்பதில் மிக திறமைசாலிகள். 60 00:09:12,302 --> 00:09:15,556 வருடத்தில் பெரும்பாலான நாட்களில் தனிமையில் தான் வேட்டையாடும். 61 00:09:17,307 --> 00:09:20,352 ஆனால் கோடை காலத்தில் மீன்களின் எண்ணிக்கை கூடும்போது, 62 00:09:21,728 --> 00:09:24,815 ஆஸ்ட்ரோராப்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. 63 00:09:32,489 --> 00:09:36,785 மிகப் பெரிய விலங்குகள், அதிக மீன் கிடைக்கக்கூடிய இடங்களை தனக்கென தக்க வைக்க முயற்சிக்கின்றன. 64 00:09:41,331 --> 00:09:43,125 எதிரிகளை அவை துளியும் பொறுப்பதில்லை. 65 00:10:01,101 --> 00:10:05,480 இன்னும் வலுவாக வளர்ச்சி அடையாத விலங்குகளுக்கு, வருடத்தின் இந்த கட்டம் பெரும் சவாலாக அமைகிறது. 66 00:10:08,734 --> 00:10:12,821 இந்த இளம் ஆண் விலங்கின் சிறகுகள், இன்னும் விடலைப் பருவத்தின் நிறத்தில் தான் உள்ளன, 67 00:10:12,821 --> 00:10:16,366 ஆகவே, அதற்கு மீன் பிடிக்க ஒரு நல்ல இடம் கிடைப்பது அரிது. 68 00:10:21,371 --> 00:10:25,042 எனினும், இங்கு உணவு கிடைப்பதற்கு வேறு பல வழிகள் உள்ளன. 69 00:10:30,714 --> 00:10:35,344 உணவு தாராளமாக கிடைக்கும் இச்சூழலில், வளர்ந்த விலங்குகள் உணவை வீணாக்குகின்றன. 70 00:10:38,847 --> 00:10:42,351 மீனின் மிக ருசியான பகுதிகளை மட்டு உண்டு மற்றவற்றை பெரும்பாலும் களைகின்றன. 71 00:10:49,399 --> 00:10:54,196 அந்த விடலை விலங்கிற்கு, மிச்சம் மீதி எதுவானாலும் உண்ண உகந்த உணவு தான். 72 00:10:56,365 --> 00:10:57,950 ஆனால் அது ஆபத்தானது. 73 00:11:08,627 --> 00:11:11,547 வெற்றி பெற, அது திருட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 74 00:11:34,319 --> 00:11:37,281 அடிபட்டு, வெறும் கையுடன் வர வேண்டியதாயிற்று. 75 00:11:40,033 --> 00:11:43,036 ஆனால் சுற்றிலும் வளர்ந்த விலங்குகள் இன்னும் விருந்தை உண்ட வண்ணம் இருக்கையில், 76 00:11:43,036 --> 00:11:44,955 அதற்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்கலாம். 77 00:12:02,389 --> 00:12:05,893 இரு வளர்ந்த விலங்குகள், அதிக மீன் கிடைக்கக்கூடிய இடத்திற்காக சண்டையிடுகின்றன. 78 00:12:28,332 --> 00:12:31,168 இந்த இளம் விலங்கிற்கு அதன் உத்தியை நடத்த இதுவே சரியான சமயம்... 79 00:12:33,712 --> 00:12:35,923 இப்போது தப்பிக்கும் நேரம். 80 00:12:40,135 --> 00:12:41,136 வெற்றி. 81 00:12:42,012 --> 00:12:44,515 அதுவும் துண்டுகளாக இல்லாமல், அதிகமாகவே கிடைத்துள்ளது. 82 00:12:47,267 --> 00:12:48,519 இது நல்ல பாடமாக அமைகிறது. 83 00:12:49,436 --> 00:12:52,231 மீண்டும் அடுத்த ஆண்டு, நல்ல சூழல்கள் உருவாகும் போது, 84 00:12:52,231 --> 00:12:56,652 அது அதற்கென்று சொந்தமாக ஒரு மீன் பிடிக்கும் இடத்தை போராடி பெற முடியலாம். 85 00:13:05,744 --> 00:13:10,541 மடகாஸ்கரின் வடக்குப் பகுதியில், ஏற்கனவே சுற்றுச்சூழல் மாறி வருகின்றன. 86 00:13:12,292 --> 00:13:17,422 பல மாதங்களுக்குப் பின் முதல் முறையாக மழை பெய்து, வரண்ட நிலத்தில் நீர் பாய்ச்சுகிறது. 87 00:13:25,597 --> 00:13:30,185 குட்டைகளும், கால்வாய்களும் மீண்டும் நீரால் நிரம்பும் போது, விலங்குகள் மீண்டும் வருகின்றன. 88 00:13:53,333 --> 00:13:55,586 அவை அனைத்துமே டைனோசர்கள் இல்லை. 89 00:14:04,094 --> 00:14:06,430 இந்த சேற்று நீர் குட்டைகளில் புதைந்து இருப்பது... 90 00:14:08,807 --> 00:14:11,560 ஒரு பயங்கரமான அரக்கன். 91 00:14:25,032 --> 00:14:28,702 பியல்ஜிபூஃபோ, அரக்கத் தேரை. 92 00:14:32,122 --> 00:14:37,044 ஒரு சிறிய டைனோசரை முழுவதுமாக விழுங்கக்கூடிய அளவிற்கு பெரிய உருவத்தை உள்ளது. 93 00:14:39,880 --> 00:14:41,965 ஆனால் இந்த ஆண் இங்கு வேட்டையாட வரவில்லை. 94 00:14:44,218 --> 00:14:46,762 அது இனப்பெருக்கத்திற்காக துணையைத் தேடி வந்துள்ளது. 95 00:14:49,890 --> 00:14:55,729 பெண் அரக்கத் தேரைகளை எளிதில் ஈர்க்க முடியாது, ஆகையால் அது ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும். 96 00:14:58,190 --> 00:15:00,817 அப்போது தான் அவற்றை உள்ளே வரவழைக்க முடியும். 97 00:15:15,207 --> 00:15:18,544 அதன் ஆழ்ந்த தவளைச் சத்தம், வெகு தூரம் கேட்கிறது. 98 00:15:45,612 --> 00:15:48,657 அது எதிர்பார்த்தது இதை இல்லை. 99 00:15:53,871 --> 00:15:56,957 ஐம்பதடி-நீள ரப்பீட்டோசார்கள். 100 00:16:05,591 --> 00:16:10,137 மண் குழம்பில் குளிக்கலாம் என்று ஈர்க்கப்பட்டு அவை இங்கு வந்துள்ளன. 101 00:16:14,099 --> 00:16:18,103 ஆனால் பியல்ஜிபூஃபோவிற்கு, அவை வந்த நேரம் மிக மோசமானது. 102 00:16:34,286 --> 00:16:39,458 அதற்கான குட்டை இப்போது, 70 டன்கள் எடையுள்ள சாரோபாட்களுக்குக் கீழே மறைந்திருந்தது. 103 00:16:47,174 --> 00:16:49,343 மிக குறுகிய கால அவகாசம் தான் அதற்குள்ளது. 104 00:16:51,678 --> 00:16:56,266 பென் அரக்கத் தேரைகள், மழைகாலத்தின் தொடக்கத்தில் மட்டும் தான் இனப்பெருக்கம் செய்ய இணங்கும். 105 00:17:01,271 --> 00:17:03,023 அதற்கு ஒரு புதிய குட்டையைத் தேட வேண்டும். 106 00:17:08,362 --> 00:17:09,363 அங்கு ஒன்று உள்ளது. 107 00:17:21,165 --> 00:17:23,085 அதை அடைவது மிக ஆபத்தான விஷயம். 108 00:18:05,085 --> 00:18:07,337 ஒரு வழியாக அங்கே வந்து சேர்ந்துவிட்டது... 109 00:18:09,923 --> 00:18:12,259 ஆனால் அது அங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 110 00:18:23,729 --> 00:18:27,274 காரணமில்லாமல் அதற்கு அரக்கத் தேரை என பெயர் இடவில்லை. 111 00:18:32,279 --> 00:18:34,656 இப்போது அதன் இசைத் திறனை அதிகமாக்கும் நேரம்... 112 00:18:38,410 --> 00:18:45,167 ஆனால் இந்த சாரோபாட்களின் திருப்தி அடைந்த கர்ஜனைக்கு மேல் கேட்கும் படி அது கத்த இயலாது. 113 00:18:54,635 --> 00:18:55,719 அதிர்ஷ்டவசமாக, 114 00:18:55,719 --> 00:19:00,849 ரப்பீட்டோசார்கள் மணற்குழம்பில் அளைவதை விட இன்பம் தரும் ஒரு விஷயம் உள்ளது... 115 00:19:03,810 --> 00:19:06,271 அது தான் உணவு. 116 00:19:10,734 --> 00:19:12,778 பசியுடன் வந்த அந்த மந்தை, பயணத்தைத் தொடர்கின்றன... 117 00:19:14,988 --> 00:19:19,409 இருந்த போதும், பயனுள்ள விஷயம் ஒன்றை செய்து விட்டு தான் சென்றுள்ளன. 118 00:19:23,539 --> 00:19:28,544 தண்ணீர் நிறைந்த பல ராட்சஸ பாதத்தடங்கள். 119 00:19:37,886 --> 00:19:42,599 தன் துணைக்கானத் தேடலைத் தொடர, அந்த பியல்ஜிபூஃபோவுக்கு உகந்த இடம். 120 00:20:04,830 --> 00:20:07,666 அரக்கத் தேரையால் இங்கே மட்டும் தான் பிழைத்திருக்க முடியும், 121 00:20:07,666 --> 00:20:12,462 ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிலப்பரப்பு பருவ மழையின் வெள்ளத்தில் மூழ்குகிறது. 122 00:20:15,048 --> 00:20:18,552 இருந்தபோதிலும், மாறி வரும் பருவநிலைகளால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் 123 00:20:18,552 --> 00:20:20,888 மழை பெய்வதை உறுதியாகச் சொல்ல முடியாது. 124 00:20:26,643 --> 00:20:32,524 வட அமெரிக்காவில், உள்ளடங்கிய இந்த வடிநிலத்தில், கடந்தகாலத்தில், பல அடி ஆழத்திற்கு நீர் இருந்தது. 125 00:20:36,361 --> 00:20:40,282 ஆனால் தசாப்தங்களாக நிலவிய வறட்சிக்குப் பின், இப்போது உலர்ந்து காணப்படுகிறது. 126 00:20:47,664 --> 00:20:51,460 இருந்தபோதிலும், சில டைனோசர்கள் இன்னும் இங்கு தான் உள்ளன. 127 00:21:02,137 --> 00:21:04,723 பேக்கிசெஃபேலோசார்களின் மந்தை இது, 128 00:21:06,058 --> 00:21:09,811 பருமனான, அரை வட்ட வடிவத்தை உடைய மண்டை ஓடுகளை உள்ள இவை, விசித்திரமான விலங்குகள் தான். 129 00:21:22,282 --> 00:21:25,369 அவற்றுக்கு பிடித்தமான உணவென்பது பழங்களும், இலைகளும்... 130 00:21:28,622 --> 00:21:33,961 ஆனால், இப்போது வேறு வழியின்றி அவை பூச்சிகளையும் வேர்களையும் புசிக்கின்றன. 131 00:21:48,976 --> 00:21:51,937 இந்த மந்தையை வழி நடத்துவது ஒரு பெரும் ஆண் விலங்கு. 132 00:21:54,523 --> 00:22:00,445 அதுவே ஒழுங்கைப் பராமரிக்கிறது, ஆகவே அனைத்தும் அவற்றுக்கான உணவை நிம்மதியுடன் தேட முடிகிறது. 133 00:22:17,379 --> 00:22:21,300 ஆனால் அந்த மந்தையில் கலவரம் மூண்டு வருகிறது. 134 00:22:24,386 --> 00:22:27,139 அந்த இளம் ஆண், அதன் வலிமையைக் காட்டி, ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. 135 00:22:40,027 --> 00:22:45,991 ஆதிக்கம் செலுத்தும் ஆண், இளம் விலங்கிற்கு பாடம் கற்பிப்பதோ, அல்லது வெளியேற்றுவதோ அவசியம். 136 00:22:55,876 --> 00:22:58,128 அது தன் வண்ணமயமான தலைப்பாகையை காட்டிக்கொள்கிறது... 137 00:23:05,385 --> 00:23:07,679 இளம் விலங்கை பயமுறுத்த முயற்சி செய்கிறது. 138 00:23:14,978 --> 00:23:17,314 ஆனால் அது அவ்வளவு எளிதாக பின்வாங்கப் போவதில்லை. 139 00:24:07,155 --> 00:24:12,411 பத்தங்குல-பருமனான மண்டையோடு உள்ளதால் வலிமையாக, தலையோடு தலை மோதுவதைத் தாங்க முடிகிறது. 140 00:24:34,558 --> 00:24:36,518 வயது அதிகமான ஆணின் எடை அதிகம், 141 00:24:37,936 --> 00:24:41,732 ஆனால் அந்த இளம் விலங்கிற்கு வேகமும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் அதிகமுள்ளது, 142 00:24:42,733 --> 00:24:45,569 ஆகவே அதுவே அதற்குச் சாதகமாக அமைகிறது. 143 00:24:57,164 --> 00:24:58,999 வெற்றியை அறிவிக்க ஆழ்ந்த குரலில் கத்துகிறது. 144 00:25:10,219 --> 00:25:12,387 ஆனால் சற்று அவசரப்பட்டுவிட்டது. 145 00:25:28,070 --> 00:25:31,073 தோற்கும் விலங்கு மிக கடுமையாக தண்டிக்கப்படும். 146 00:25:38,622 --> 00:25:39,623 மந்தையிலிருந்து விரட்டப்படும். 147 00:25:45,045 --> 00:25:49,216 தனிமையில், அது தன்னைக் காப்பாற்றிக் கொள்வது கடினம். 148 00:25:55,097 --> 00:25:58,684 ஆனால் வெற்றி பெற்ற விலங்கிற்கும் வாழ்க்கை எளிதாக இருக்காது 149 00:25:58,684 --> 00:26:03,772 ஏனெனில், அந்த நிலத்திற்கு தண்ணீர் மீண்டும் வர வேண்டும், அதுவும் விரைவாக வர வேண்டும். 150 00:26:12,072 --> 00:26:14,491 பரந்து விரிந்துள்ள இந்த கண்டத்தில், 151 00:26:14,491 --> 00:26:19,079 100,000 சதுர மைல்களுக்கும் மேல் சதுப்பு நிலங்கள் உள்ளன... 152 00:26:21,957 --> 00:26:25,794 அதில் பெரும்பாலானவை வருடம் முழுவதும் நீர் நிரம்பியே உள்ளன. 153 00:26:33,051 --> 00:26:34,636 இப்போது வசந்தகாலத்தில், 154 00:26:34,636 --> 00:26:39,808 அங்கு கூடி வரும் மந்தைகளுக்கு, புத்திளம் தளிர்கள் மிகச் செழுமையான உணவகத்தை உருவாக்குகிறது. 155 00:26:55,324 --> 00:26:59,036 ஆனால் எங்கெல்லாம் பெரும் அளவில் தாவர உண்ணிகள் உள்ளனவோ... 156 00:27:01,663 --> 00:27:03,707 அங்கெல்லாம் சிறந்த வேட்டை விலங்குகளும் உள்ளன. 157 00:27:15,260 --> 00:27:16,261 டி. ரெக்ஸ்... 158 00:27:18,847 --> 00:27:22,142 இந்த பூமியின் நிலப்பரப்பில் உள்ள வலிமை மிகுந்த வேட்டை விலங்குகள். 159 00:27:24,895 --> 00:27:27,105 வழக்கமாக அவை அவற்றின் இரை மீது திடீர் தாக்குதல் செய்யும்... 160 00:27:30,359 --> 00:27:32,736 ஆனால் இப்போது அவற்றை அதிகமான கண்கள் கவனிக்கின்றன... 161 00:27:34,905 --> 00:27:37,908 தாக்குதலுக்கு இது உகந்த நேரமில்லை. 162 00:27:48,752 --> 00:27:50,629 இருள் வருகிறது, 163 00:27:50,629 --> 00:27:54,758 வெட்ட வெளியில் மேய்ந்திருந்த சில மந்தைகள் 164 00:27:54,758 --> 00:27:57,344 காட்டினுள் அடைக்கலம் புகுகின்றன. 165 00:28:01,557 --> 00:28:05,519 இப்போது வேட்டை விலங்குகளுக்குச் சாதகமாக வாய்ப்புகள் அமைகின்றன. 166 00:28:19,199 --> 00:28:23,245 டிரைனோசர்களுக்கு மற்ற டைனோசர்களை விட மிகப் பெரிய கண்கள் உள்ளன, 167 00:28:24,913 --> 00:28:27,958 அதனால் அவை மிகக் குறைவான ஒளியிலும் துல்லியமாக பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. 168 00:28:48,687 --> 00:28:53,025 அதோடு, அவற்றின் பாதங்கள், பஞ்சணைப் போல் மெத்தென இருப்பதால், 169 00:28:53,692 --> 00:28:56,445 அவற்றால் காட்டினுள் சத்தமில்லாமல் வலம் வர முடிகிறது. 170 00:29:07,581 --> 00:29:09,917 இது எட்மான்டோசார்களின் கூட்டம். 171 00:29:21,220 --> 00:29:22,721 அவற்றுக்கு கவசம் எதுவும் இல்லை, 172 00:29:22,721 --> 00:29:26,934 ஆனால் டி. ரெக்ஸைப் போலவே பெரியவை, மற்றும் இரு மடங்கு விரைவாக நகரக்கூடியவை. 173 00:29:31,438 --> 00:29:33,899 இதில் ஒன்றை பிடிப்பதற்கு சாமர்த்தியம் தேவை. 174 00:29:46,245 --> 00:29:50,457 ஒவ்வொரு வேட்டை விலங்கும் எச்சரிக்கையுடன் அதன் இடத்திற்கு செல்கின்றது. 175 00:30:00,634 --> 00:30:04,263 அதன் பின், வேண்டுமென்றே ஒலி எழுப்புகிறது. 176 00:30:16,692 --> 00:30:19,528 அந்த எட்மன்டோசார்கள் பீதியடைகின்றன. 177 00:30:28,829 --> 00:30:30,956 இப்போது வேட்டை விலங்குகள் அருகில் வந்துவிட்டதை அவை அறிகின்றன, 178 00:30:32,040 --> 00:30:34,543 ஆனாலும் அவை எங்கே உள்ளன என அவற்றுக்கு துல்லியமாக தெரியாது. 179 00:30:37,713 --> 00:30:39,631 வலையை விரிக்க இதுதான் சரியான நேரம். 180 00:30:43,218 --> 00:30:44,928 ஒரு டி. ரெக்ஸ் பாய்ந்து வருகிறது. 181 00:30:55,272 --> 00:31:01,737 அந்த மந்தை பீதி அடைந்து, நேராக மற்ற டி. ரெக்ஸ் தாக்குவதற்கு தயாராக உள்ள இடத்திற்கு போகிறது. 182 00:31:42,361 --> 00:31:44,947 வரலாற்று காலத்திற்கு முன்... 183 00:31:49,117 --> 00:31:53,330 பூமியின் சதுப்பு நிலப்பரப்புகளில் வாழ்ந்த மிகச் சிறந்த வேட்டை விலங்கினால்... 184 00:31:58,794 --> 00:32:02,714 கச்சிதமாக நிரைவேற்றப்பட்ட திட்டம். 185 00:32:12,975 --> 00:32:15,978 PREHISTORIC PLANET: விளக்க உரை 186 00:32:19,273 --> 00:32:22,109 உண்மையாகவே பேக்கிசெஃபேலோசார் தலையோடு தலை மோதிக்கொண்டனவா? 187 00:32:22,109 --> 00:32:26,363 இது தான் பேக்கிசெஃபேலோசாரின் மண்டையோடு, 188 00:32:26,363 --> 00:32:28,824 ஒரு 16-அடி-நீள தாவர உண்ணி. 189 00:32:29,950 --> 00:32:32,202 இவ்வளவு வருட ஆய்வுகளுக்குப் பின்னும், 190 00:32:32,202 --> 00:32:37,374 நாம் இன்னும் புரிந்து கொள்ள முயல்வது, அதன் தலையின் விசித்திர வடிவத்தை தான். 191 00:32:48,051 --> 00:32:50,220 {\an8}கண்டிப்பாக, பேக்கிசெஃபேலோசார்களின் அடையாளப் படுத்தும் அங்கமாக இருந்தது... 192 00:32:50,220 --> 00:32:51,680 {\an8}டாக்டர். சுசானா மேய்ட்மென்ட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 193 00:32:51,680 --> 00:32:53,515 {\an8}...அவற்றின் தலையில் காணப்படும் இந்த விசித்திரமான அரை-வட்ட வடிவம் தான். 194 00:32:56,768 --> 00:33:01,815 அதைச் சுற்றிலும் தொடர்ச்சியாக சிறிய குமிழ் போன்ற கட்டிகளும் உருண்டைகளும் உள்ளன. 195 00:33:02,441 --> 00:33:04,484 எனவே அவை பார்க்க டிராகன்களைப் போல உள்ளன. 196 00:33:06,528 --> 00:33:07,821 {\an8}பேராசிரியர் பால் பார்ரெட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 197 00:33:07,821 --> 00:33:09,573 {\an8}இந்த அரை-வட்ட வடிவத்திலுள்ள மண்டையோடுகள், சில சமயத்தில் 30 செ.மீ. வரை பருமனாகலாம், 198 00:33:09,573 --> 00:33:11,867 {\an8}ஆகையால் இவை மிகவும் உறுதியானவை என்று 199 00:33:12,701 --> 00:33:14,536 அவற்றை முதன்முதலில் பார்த்த அறிஞர்கள் நினைத்தனர். 200 00:33:14,536 --> 00:33:17,664 சமூக தரவரிசை போட்டிகளில், அந்த விலங்குகள் தலையோடு தலை மோதிக்கொள்வதற்குத் தான் 201 00:33:17,664 --> 00:33:19,875 அவை பயன்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. 202 00:33:22,211 --> 00:33:26,757 இன்றும், பிக்ஹார்ன் ஷீப் போன்ற விலங்குகள், இப்படி தலையோடு தலை மோதுகின்றன. 203 00:33:28,717 --> 00:33:32,137 தடியான மண்டையோடு இருப்பதால் அவை மூளையை பாதிக்காமல் பார்த்துக்கொள்கின்றன. 204 00:33:35,307 --> 00:33:39,686 ஆனால் இது பேக்கிசெஃபேலோசாரின் அரை-வட்ட-வடிவமைப்பை முழுவதுமாக விளக்குகிறதா? 205 00:33:43,232 --> 00:33:46,401 பல பேலியன்டோலோஜிஸ்டுகள் அந்த மண்டையோடுகளின் உள்ளே பார்க்க வேண்டும் என நினைத்தனர். 206 00:33:47,736 --> 00:33:50,864 பேக்கிசெஃபேலோசாரின் அரை-வட்ட-வடிவங்களை பல துண்டுகளாக வெட்டினார்கள், 207 00:33:50,864 --> 00:33:54,243 அப்படிச் செய்தபோது தான், அது தலையோடு தலை நேராக பாதிப்பில்லாமல் மோதுவதற்கு, அவ்வளவு 208 00:33:54,243 --> 00:33:57,204 உறுதியானதாக இல்லை என கண்டுபிடித்தார்கள். 209 00:33:58,372 --> 00:34:04,419 எனினும், அந்த அவரை-வட்ட-வடிவ மண்டையோட்டிற்கு வேறு உபயோகம் இருப்பதையும் கண்டுபடித்தனர். 210 00:34:05,629 --> 00:34:09,591 அதன் மேற்பரப்பு சின்னச்சின்ன நார்களாலான ஒரு வலையால் பிணையப்பட்டிருந்தது. 211 00:34:11,176 --> 00:34:14,137 ஒளி வீசும் நிற தோலின் ஒத்துழைப்போடு, 212 00:34:14,137 --> 00:34:16,139 அவை துணையை ஈர்க்க பயன்பட்டிருக்கலாம். 213 00:34:17,808 --> 00:34:24,147 2013-ம் ஆண்டு இன்னொரு புதிய கண்டுபிடிப்பு வரும் வரை, 214 00:34:24,857 --> 00:34:27,317 இந்த புதிய கருத்து ஏற்கப்பட்டது. 215 00:34:29,360 --> 00:34:31,237 தழும்புகள் நிறைந்து ஒரு பேக்கிசெஃபேலோசாரைக் 216 00:34:31,237 --> 00:34:37,034 கண்டுபிடித்தனர், அதன் மூலம், தலையின் மேற்புறத்தில் காயங்கள் இருந்தும் அது பிழைத்துள்ளது என்றும், 217 00:34:38,661 --> 00:34:40,956 அதோடு அது ஒரு முறை மட்டும் நடந்ததல்ல என்பதையும் அறிகிறோம். 218 00:34:41,998 --> 00:34:45,127 அவர்கள் மீண்டும் வரலாற்று அருங்காட்சியங்கள் சேர்த்து வைத்திருந்தவற்றை பரிசீலித்தபோது, 219 00:34:45,127 --> 00:34:48,172 இந்த காயங்கள் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உண்மையாக இருந்துள்ளன என கண்டுபிடித்தனர், 220 00:34:48,172 --> 00:34:51,925 அதுவும் வெவ்வேறு பேக்கிசெஃபேலோசார்களின் வகைகளிலும், அவை ஒரே இடத்தில் இருந்தன என்றும். 221 00:34:53,802 --> 00:34:56,679 அவை தலையோடு தலை மோதியதற்கு இது நல்ல ஆதாரமாக இருக்கலாம். 222 00:35:02,394 --> 00:35:04,646 ஆகையால் மண்டையோடுகள் உறுதியாக இருந்தது 223 00:35:04,646 --> 00:35:07,816 பேக்கிசெஃபேலோசாரின் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க மட்டும் தானா? 224 00:35:11,153 --> 00:35:15,490 இதை கண்டுபிடிக்க, விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்ப ஸ்கேனிங்கை பயன்படுத்தினர். 225 00:35:17,159 --> 00:35:20,996 எலும்புகளின் வர்சுவல் மாடல்களை உருவாக்க சிடீ ஸ்கேன்களை பயன்படுத்தி, 226 00:35:20,996 --> 00:35:24,124 அதைக் கொண்டு ஒரு விமானத்தின் பாகத்தையோ, செயற்கை இடுப்பையோ சோதிக்கும் அதே முறையை 227 00:35:24,124 --> 00:35:28,337 உபயோகித்து, பலவித பொறியியல் சோதனைகளை அவற்றின் மீது செய்து பார்க்க இயலும். 228 00:35:29,588 --> 00:35:33,258 இது தான் இறுதியாக ஆதாரத்தைத் தந்தது. 229 00:35:37,429 --> 00:35:39,181 பேக்கிசெஃபேலோசாரின் அரை-வட்ட-வடிவங்கள், 230 00:35:39,181 --> 00:35:42,059 மிக உயர்ந்த அளவு அழுத்தங்களை தாங்கும் வலிமை கொண்டவையாக இருந்ததை அறிந்தனர். 231 00:35:44,311 --> 00:35:47,397 அவை தலையோடு தலை மோதுவது, அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்களிடையே பாயும் 232 00:35:47,397 --> 00:35:49,066 ஒரு வித சக்தியைப் போன்றது. 233 00:35:54,780 --> 00:35:58,325 இப்போது நாம் அறிவது, பேக்கிசெஃபேலோசார்கள் அவற்றின் தலையை 234 00:35:58,325 --> 00:35:59,952 அச்சுறுத்தும் வலிமையான ஆயுதமாகவும்... 235 00:36:02,287 --> 00:36:04,206 அதே சமயம் வண்ண மயமான காட்சிப் பொருளாகவும் உபயோகித்துள்ளன. 236 00:36:07,292 --> 00:36:12,297 அவை வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய உலகத்தில் யார் ஆதிக்கம் செல்லும் என்பதைக் காட்ட இரு வழிகள். 237 00:38:46,201 --> 00:38:48,203 தமிழாக்கம் அகிலா குமார்