1 00:00:08,717 --> 00:00:10,552 {\an8}சமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்... 2 00:00:10,552 --> 00:00:12,179 {\an8}வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 3 00:00:12,179 --> 00:00:14,806 {\an8}...டைனோசர்கள் இந்த பூமியை ஆண்டன. 4 00:00:15,682 --> 00:00:18,727 அவை பூமியின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஆட்கொண்டன 5 00:00:19,311 --> 00:00:23,148 அதோடு, அனைத்து வடிவங்களிலும், உருவங்களிலும் காணப்பட்டன. 6 00:00:24,358 --> 00:00:27,402 அதில் சில, உண்மையாகவே அற்புதமாக இருந்தன. 7 00:00:30,822 --> 00:00:34,535 டி. ரெக்ஸ் மிகச் சிறப்பாக நீந்தக் கூடிய விலங்கு என்றும், 8 00:00:36,787 --> 00:00:40,082 இறகுகளை உடைய வெலோசிரப்ட்டர்கள் மிக சாமர்த்தியமான வேட்டை விலங்குகள் என்றும், 9 00:00:42,000 --> 00:00:45,963 மற்றும் சில டைனோசர்களுக்கு மிகவும் விசித்திரமான நடத்தைகள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியும். 10 00:00:48,841 --> 00:00:52,594 ஆனால் தினமும் புதிதாக ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது 11 00:00:52,594 --> 00:00:57,641 அவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்கை எப்படி இருந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 12 00:01:02,604 --> 00:01:05,482 இந்த முறை Prehistoric Planet-ல் 13 00:01:05,482 --> 00:01:08,026 நீங்கள் புதிய விலங்குகளை பார்க்கலாம்... 14 00:01:09,403 --> 00:01:13,740 அவற்றின் துணைத் தேடலைப் பற்றி கிடைத்துள்ள புதிய புரிதல்களைக் காணலாம், 15 00:01:15,576 --> 00:01:18,203 ஒரு குடும்பத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்... 16 00:01:19,496 --> 00:01:21,415 மற்றும் அவற்றின் மாபெரும் யுத்தங்களையும் பார்க்க முடியும். 17 00:01:29,506 --> 00:01:33,969 இயற்கை அன்னை தன் அழகை சிறப்பாக வெளிப்படுத்திய காலத்திற்கு பயணிக்கிறோம். 18 00:01:37,514 --> 00:01:41,727 இது தான் Prehistoric Planet 2. 19 00:01:54,448 --> 00:01:57,868 வட அமெரிக்கா 20 00:02:00,829 --> 00:02:03,749 நிலத்தின் உள்ளிருக்கும் பெரும் கடலின் கரை 21 00:02:03,749 --> 00:02:06,835 வட அமெரிக்காவை கிட்டத்தட்ட பாதியாக பிரிக்கிறது. 22 00:02:09,838 --> 00:02:12,883 இங்கே தெற்குப் பகுதியில், கடல் நீர் கீழே இறங்கும் போது, 23 00:02:13,800 --> 00:02:16,220 பெரும் விலங்குகள் கடற்கரைக்கு வருகின்றன. 24 00:02:33,904 --> 00:02:37,074 இந்த அலமசார்ஸ்கள் நூறடி நீளமும் 25 00:02:37,074 --> 00:02:39,159 80 டன் எடையும் உடையவை. 26 00:02:43,872 --> 00:02:47,501 இவை தான் இந்த கண்டத்திலேயே மிக பெரிய டைனோசர்களாகும். 27 00:02:51,505 --> 00:02:54,925 அவற்றின் மாபெரும் உருவத்தை எந்த விலங்காலும் எதிர்கொள்ள இயலாது. 28 00:02:58,679 --> 00:03:01,098 அதில் சில, பல காலத்திற்கு உயிர் வாழ்கின்றன. 29 00:03:06,812 --> 00:03:10,065 இந்த ஆண் விலங்கிற்கு 70 வயதாகிறது. 30 00:03:20,868 --> 00:03:24,580 இந்த மந்தையில் உள்ள பல விலங்குகள் இதனுடைய கன்றுகளாக இருக்கலாம். 31 00:03:27,124 --> 00:03:30,669 ஆனால் அதன் நீண்ட ஆயுள் இப்போது முடியப் போகிறது. 32 00:03:36,800 --> 00:03:41,221 அதன் பெரிய உருவம் செயலிழந்து வருகிறது. 33 00:04:04,912 --> 00:04:07,372 அதன் வாழ்க்கை இன்றிரவுடன் முடியலாம். 34 00:04:20,093 --> 00:04:21,136 அதிகாலை. 35 00:04:22,513 --> 00:04:26,016 அதற்குள்ளே இந்த டுரூவோடோண்டிஸ்டுகள் மோப்பம் பிடித்துவிட்டன. 36 00:04:32,231 --> 00:04:34,733 புதிதாக எது வந்தாலும் அவை ஆர்வத்துடன் அதை ஆராய்வதுண்டு... 37 00:04:37,528 --> 00:04:39,905 குறிப்பாக அவை தின்பண்டங்களாக இருப்பின். 38 00:04:44,409 --> 00:04:48,956 ஆனால், மூன்று-அங்குல-பருமன் உள்ள தோலை கடிப்பது அவற்றுக்கு இயலாத காரியம். 39 00:04:50,958 --> 00:04:52,334 மிகவும் எரிச்சலூட்டுவது. 40 00:05:08,517 --> 00:05:10,269 டிரைனோசரஸ் ரெக்ஸ்... 41 00:05:13,355 --> 00:05:15,524 வட அமெரிக்காவின் முதன்மை வேட்டை விலங்கு. 42 00:05:20,070 --> 00:05:22,155 அதன் ஆறு-அங்குல-நீளமுள்ள பற்களால், 43 00:05:22,656 --> 00:05:26,660 அலமசாரின் இருக்கமான தோலை கடித்து உண்பது அதற்கு ஒரு பிரச்சினையே இல்லை. 44 00:05:55,272 --> 00:05:58,817 டுரூவோடோன்டிட்களை வேண்டுமானால் டி. ரெக்ஸ் அச்சுறுத்தலாம், 45 00:05:58,817 --> 00:06:03,655 ஆனால் இது போன்ற பெரிய சடலங்கள், விரைவிலேயே கடும் போட்டியை வரவழைக்கக்கூடும். 46 00:06:15,375 --> 00:06:19,254 கெட்சல்கோவட்லஸ், ஒரு ராட்சஸ டெரோசார் வகை விலங்கு. 47 00:06:24,968 --> 00:06:29,348 ஒரு முழுவதுமாக வளர்ந்த டிரைனோசரஸுக்கு சவால் விடக்கூடிய சில விலங்குகளில் இதுவும் ஒன்று. 48 00:06:43,237 --> 00:06:45,948 அறு-அடி-நீளமுள்ள அலகினால் ஒரு முறை கொத்தினால் கூட 49 00:06:45,948 --> 00:06:48,909 சுலபமாக டி. ரெக்ஸின் கண்ணை அது காயப்படுத்தலாம். 50 00:06:53,247 --> 00:06:57,167 இருப்பினும், அது பன்வாங்குவதாகத் தெரியவில்லை. 51 00:07:09,471 --> 00:07:12,224 ஆனால் இன்னொரு கெட்சல்கோவாட்லஸ் அந்த இடத்தில் வந்தவுடன்... 52 00:07:14,601 --> 00:07:15,811 விஷயங்கள் தலைகீழாக மாறுகின்றன. 53 00:07:24,820 --> 00:07:28,282 என்ன இருந்தாலும், ஒன்றின் பலத்தை விட, இரண்டின் பலம் அதிகம் தானே. 54 00:08:05,277 --> 00:08:08,572 இப்போது, டி. ரெக்ஸுக்கு, இது மிகவும் ஆபத்தான விஷயம். 55 00:08:14,578 --> 00:08:17,706 சில சமயம் போராடாமல் இருப்பதே சிறந்தது. 56 00:08:20,209 --> 00:08:23,462 இப்போதைக்கு, அந்க பறக்கும் ராட்சஸர்கள் வென்று விட்டார்கள். 57 00:08:27,841 --> 00:08:30,135 அவற்றால் இயன்ற அளவு, அவை விரைவாக உண்கின்றன. 58 00:08:34,972 --> 00:08:39,269 எப்படியானாலும், நிச்சமாக டி. ரெக்ஸ், இந்த பறக்கும் எதிரிப் படை போன பின் 59 00:08:40,687 --> 00:08:43,524 அதன் பங்கை எடுத்துக்கொள்ள மீண்டும் வரும். 60 00:08:56,286 --> 00:09:00,874 வட அமெரிக்காவைச் சூழ்ந்திருக்கும் நீர் நிலைகளில், மற்ற ராட்சஸ வேட்டை விலங்குகள் உள்ளன. 61 00:09:03,252 --> 00:09:05,337 ஆனால் அவற்றுக்கு எதிரிகளே இல்லை. 62 00:09:09,675 --> 00:09:11,093 மோசசார்கள். 63 00:09:17,391 --> 00:09:19,351 அவை பார்க்க சூறா மீன்களைப் போல இருந்தாலும், 64 00:09:19,351 --> 00:09:22,855 உண்மையில் அவை ராட்சஸ நீர் ஓணாண்களே. 65 00:09:29,111 --> 00:09:32,155 உருவ அளவு, வேகம் மற்றும் வலுவான தாடைகள் பொருந்தியிருப்பதால் 66 00:09:32,155 --> 00:09:36,243 ஆழ்கடலில் வெகு சில உயிரினங்களே இந்த வேட்டை விலங்கிடமிருந்து பாதாகாப்பாக உள்ளன. 67 00:09:42,374 --> 00:09:47,129 மெக்கிஸிகோ வளைகுடாவில், இந்த குளோபிடென்ஸ் மோசொசார், ஒரு குறிப்பிட்ட 68 00:09:47,129 --> 00:09:49,756 வகையான இரையைத் தேடுகிறது. 69 00:09:58,640 --> 00:10:02,019 டைகர் அமோனைட்கள், ஸ்பீனோடிஸ்கஸ். 70 00:10:03,979 --> 00:10:06,982 ஒவ்வொரு வருடமும் பெரும் அளவில் இதன் பெண் இனம் ஆழ்கடலிலிருந்து 71 00:10:06,982 --> 00:10:10,360 கடற்கரைக்கு, கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றன. 72 00:10:15,365 --> 00:10:20,746 அவை எல்லாம் சமீபத்தில் நடந்த இனச்சேர்க்கைக்குப் பின் நூற்று கணக்கான கருமுட்டைகளை சுமக்கின்றன. 73 00:10:35,135 --> 00:10:37,596 இந்த கருமுட்டைகளை அவை ஆழம் குறைவானப் பகுதிகளில் இடவேண்டும். 74 00:10:41,099 --> 00:10:44,144 அங்கு தான் மோசொசார் காத்திருக்கின்றது. 75 00:10:56,240 --> 00:10:58,992 டைகர் அமோனைட்களே வேட்டை விலங்குகள் தான். 76 00:11:00,827 --> 00:11:05,832 சீர் செய்யப்பட்ட அமைப்பும், வலிமாயான சைஃபனும் ஒருசேர இருப்பதால், இவற்றுக்கு மிகுந்த 77 00:11:05,832 --> 00:11:09,044 வேகத்துடன் நீரைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. 78 00:11:17,511 --> 00:11:19,513 ஆனால் மோசொசார்களாலும் அப்படிச் செய்ய முடியும். 79 00:11:34,361 --> 00:11:39,741 குளோபிடென்ஸுக்கு பரந்த, உருண்டையான பற்கள் இருப்பதால், காற்றை அதில் வைத்துக் கொண்டு 80 00:11:40,826 --> 00:11:43,745 அமோனைட்டுகளை நீரில் மிதக்க உதவி செய்யும் ஓடுகளை உடைத்து, கீழே வீழ்த்துகின்றன. 81 00:11:44,872 --> 00:11:48,375 அவற்றின் பாதுகாப்பு ஓடுகள் இல்லாமல், வேறு வழியின்றி, அவை தரைமட்டத்தில் விழுகின்றன. 82 00:11:57,176 --> 00:12:02,264 அமோனைட்டுகள் தப்பித்துச் செல்லும் முன், அவற்றில் பலவற்றை மோசொசார்கள் செயலிழக்கச் செய்கின்றன. 83 00:12:42,179 --> 00:12:45,349 ஒருவழியாக, இப்போது அவற்றை உண்ணலாம். 84 00:12:57,277 --> 00:13:00,322 குளோபிடென்ஸ் பலவற்றை கொன்றிருக்கலாம்... 85 00:13:04,117 --> 00:13:10,332 ஆனால் அமோனைட்டுகளின் எண்ணிக்கையில் அது மிகச் சிறிய பாதிப்பையே எற்படுத்துகிறது. 86 00:13:13,627 --> 00:13:15,921 அந்த கூட்டத்தில் பெரும்பாலானவை 87 00:13:15,921 --> 00:13:19,049 தப்பித்து முட்டைகளை இடும் இடத்திற்கான பயணத்தை வெற்றிகரமாக தொடர்கின்றன. 88 00:13:42,865 --> 00:13:46,869 அந்த கற்பாறைகள் உள்ள கடலின் அடிதளத்தில், விரிசல்களும், ஓட்டைகளும் நிறைந்திருப்பதால், 89 00:13:48,620 --> 00:13:52,916 அமோனைட்டுகள் அவற்றின் அரிதான முட்டை பைகளை இணைத்து வைப்பதற்கு அதுவே சிறந்த இடம். 90 00:13:57,921 --> 00:14:00,215 அதன் பிறகு அந்த பெண் அமோனைட்டுகள் அவற்றின் மீது அக்கறை காட்டுவதில்லை. 91 00:14:06,805 --> 00:14:09,141 ஆனால் இந்த பாதுகாப்பான கடற்கரை ஓர தொட்டில்களில் 92 00:14:09,808 --> 00:14:13,020 அந்த முட்டைகள், அடுத்த தலைமுறையை உண்டாக்குகின்றன. 93 00:14:25,324 --> 00:14:28,160 இந்தக் கடற்கரை ஓரங்கள் உயிரோட்டமுள்ள ஒரு இடம். 94 00:14:30,787 --> 00:14:34,333 இருப்பினும், வெறும் நூறு மைல்கள் தொலைவில், 95 00:14:34,333 --> 00:14:36,168 வெறுமை குடிகொண்டுள்ளது. 96 00:14:40,172 --> 00:14:44,259 இந்த இடத்தில், பூமியின் மையப் பகுதியில் நடைபெறும் வலிமை மிக்க அசைவுகள், 97 00:14:44,259 --> 00:14:46,345 ராக்கி மலைத் தொடரை வளர்த்து வருகின்றன. 98 00:14:52,726 --> 00:14:58,065 நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாரமான மாற்றங்கள், அருகே உள்ள ஆறுகளிலிருந்து இந்த ஏரியை பிரித்துவிட்டது. 99 00:15:02,069 --> 00:15:06,865 பலமாக அடிக்கும் காற்றாலும், தீவிரமான கோடையாலும், அந்த நீர், ஆவியாக மாறுகின்றது. 100 00:15:10,410 --> 00:15:15,541 அந்த நீரில் கலந்திருக்கும் தாது சத்துக்களின் அளவு, விஷமாக மாறும் அளவிற்கு அதிகமாக உள்ளது. 101 00:15:19,294 --> 00:15:23,131 அந்நீரின் விஷத்தன்மையால், பெரும்பாலான விலங்குகளுக்கு அது குடிக்க தகுதியற்றதாக உள்ளது. 102 00:15:33,267 --> 00:15:38,772 இருப்பினும் ஒவ்வொரு வருடமும், அனைத்து வகையான விலங்களுகளும் இந்த இடத்திற்ரு வருகை தருகின்றன. 103 00:15:41,817 --> 00:15:43,610 கூட்டம் கூட்டமாக இருக்கும் ஸ்டிஜினெட்டா, 104 00:15:43,610 --> 00:15:47,698 வாத்து இனத்தின் புராண காலச் சொந்தம், அவற்றின் பயணத்தின் இடையே, இங்கு நிற்கின்றன. 105 00:15:51,451 --> 00:15:53,245 அவற்றுடன் மற்ற இனங்களும் வருவதுண்டு. 106 00:15:57,124 --> 00:15:59,042 டைனோசர்களும் இங்கு வருகின்றன. 107 00:16:11,763 --> 00:16:16,602 ஒரு பெக்டினோடான் இனத்தைச் சேர்ந்த குடும்பம். அவற்றுக்கு இறகுகள் உள்ளன ஆனால் பறக்க முடியாது. 108 00:16:25,736 --> 00:16:27,905 அவற்றை பேணுவது அவற்றின் தந்தை. 109 00:16:42,628 --> 00:16:46,715 இந்த வகை டைனோசர்களும், ஸ்டிஜினெட்டாவும் இரண்டுமே இங்கு வந்து கூடுவது 110 00:16:46,715 --> 00:16:49,968 ஒரு பருவகால விருந்தக்காக. 111 00:16:57,017 --> 00:16:58,018 ஈக்கள். 112 00:17:04,441 --> 00:17:09,530 இந்த பூச்சிகளின் புழுக்களால் அந்த ஏரியின் நச்சு உப்புக்களை சுத்திகரிக்க முடிகிறது, 113 00:17:09,530 --> 00:17:13,909 அதன் விளைவாக, அவை பிரம்மாண்டமான எண்ணிக்கைகளில் பெருகுகின்றன. 114 00:17:15,702 --> 00:17:17,663 இப்போது அந்த புழுக்கள் வளர்ந்த நிலையை அடைந்து... 115 00:17:19,790 --> 00:17:21,415 லட்சக் கணக்கில் பூச்சிகளாகின்றன. 116 00:17:25,712 --> 00:17:30,801 இந்த ஏரியின் தற்காலிக விருந்தினருக்கு அவை புரதம் மிகுந்த, ஊட்டமிகுந்த உணவாகின்றன. 117 00:17:48,777 --> 00:17:52,781 டைனோசார்களில், குறிப்பாக பெக்டினோடான்கள், புத்திசாலியானவை. 118 00:17:54,408 --> 00:17:58,996 அந்த பூச்சிகளை பிடித்து உண்ணுவதற்கான எளிய முறையை கண்டிபிடிக்க, அதிக நேரமெடுக்கவில்லை. 119 00:18:27,399 --> 00:18:31,195 ஆனால் அவற்றின் தந்தைக்கோ, இன்னும் பெரியதொரு இரையின் மீது கண்ணுள்ளது. 120 00:18:38,619 --> 00:18:41,246 பெக்டினோடான்கள் புத்திசாலிகள் மட்டும் அல்ல, 121 00:18:41,246 --> 00:18:44,249 அவை திறமையான வேட்டை விலங்குகளும் கூட. 122 00:18:58,555 --> 00:19:01,892 அது அருகே வருவதை ஸ்டிஜினெட்டாகள் அறியவில்லை. 123 00:19:27,918 --> 00:19:28,919 வெற்றி. 124 00:19:38,762 --> 00:19:41,473 அந்த குடும்பத்திற்கு இன்னும் கணிசமான அளவு உணவு கிடைக்கிறது, 125 00:19:42,850 --> 00:19:44,351 அதுவும் சிறப்பானது தான். 126 00:19:45,561 --> 00:19:48,939 அந்த பூச்சிகள் குறுகிய கலத்திற்கு தான் கிடைக்கும். 127 00:19:51,108 --> 00:19:55,112 அதன் பின் அந்த டைனோசர் குடும்பம் இரை தேடி வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். 128 00:20:04,079 --> 00:20:05,163 மேலும் வடக்கே, 129 00:20:05,163 --> 00:20:08,000 ராக்கி மலைத் தொடர்கள் இன்னும் உயர்ந்து வருகின்றன. 130 00:20:09,459 --> 00:20:13,172 அப்படி நேர்கையில், அந்த நிலபரப்பு இன்னும் உயரமாகவும், குளிர்ச்சியும் அடைந்து 131 00:20:13,172 --> 00:20:16,008 பசும் ஊசியிலைக் காடுகளாக மாறுகின்றது. 132 00:20:22,431 --> 00:20:27,394 வசந்த காலம் வரும்போது, அந்த மரங்களில் பல விசித்திரமான கூவல்கள் எதிரொலிக்கின்றன. 133 00:20:31,732 --> 00:20:33,650 வட அமெரிக்காவின் மிக கனரக கவசத்தை உள்ள 134 00:20:33,650 --> 00:20:37,613 டைனோசர்களில் ஒரு வகைக்கு, இப்போது இனப் பெருக்க காலம் வந்துவிட்டது. 135 00:20:45,245 --> 00:20:46,496 டிரைசெராடாப்ஸ். 136 00:20:53,003 --> 00:20:57,758 ஒவ்வொரு வருடமும், பெரும் அளவில் இந்த ராட்சஸ விலங்குகள், இந்த இடைவெளிகளில் கூடுகின்றன. 137 00:21:06,808 --> 00:21:09,895 அதில் பெண்ணினம், அவற்றின் இனச் சேர்க்கைக்கான துணையைத் தேடி வந்துள்ளன. 138 00:21:15,192 --> 00:21:18,904 ஆறு-டன் எடையுள்ள ஆண் விலங்குகள், போராடி அவற்றின் வலிமையை எடுத்துக் காட்ட வேண்டும். 139 00:21:31,542 --> 00:21:34,878 இந்த இளம் ஆண் விலங்கு, சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. 140 00:21:38,715 --> 00:21:42,135 ஒரு மீட்டர்-நீளமுள்ள அதன் கண்கவர் கொம்புகளை காட்டிக் கொண்டும்... 141 00:21:44,179 --> 00:21:46,598 அதன் வண்ணமிகு தலைப்பாகையையும் பெண் விலங்குகளுக்கு தெரியும் படி காட்டுகிறது. 142 00:21:52,020 --> 00:21:53,689 அதன் கொம்புகள் மிகவும் அழகாக உள்ளது போலத் தோன்றுகிறது. 143 00:21:54,398 --> 00:21:56,191 எந்த போராட்டத்தினாலும் இன்னும் அது பாதிக்கப்படவில்லை. 144 00:21:59,361 --> 00:22:01,071 இருந்தாலும், ஒரு பெண் விலங்கிற்கு, 145 00:22:01,071 --> 00:22:07,327 எந்த வித அடியும் இல்லாமல் இருப்பது, முக்கியமான ஒரு பலவீனத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம். 146 00:22:09,830 --> 00:22:11,707 அனுபவமின்மை. 147 00:22:18,672 --> 00:22:22,926 டிரைசெராடாப்ஸின் வாழ்க்கையில் இது போன்ற சந்திப்புக் கூட்டங்கள், மிக முக்கிய நிகழ்ச்சிகள். 148 00:22:25,637 --> 00:22:30,642 வளர்ந்த விலங்குகளுக்கு பெற்றோர்களாக, வருடத்தில் கிடைக்கும் சிறந்த வாய்ப்பு இது தான். 149 00:22:33,478 --> 00:22:36,607 எதிர்பார்ப்புகளுடன் உள்ள இளைஞர்கள் மட்டும் இங்கு வரவில்லை. 150 00:22:52,664 --> 00:22:56,752 பத்து டன் எடைக்கும் மேல் உள்ள ஒரு 30-வயது ஆண் விலங்கும் இங்கு வந்துள்ளது. 151 00:22:59,963 --> 00:23:02,382 அதனிடம் குறைவில்லாமல் இருக்கும் ஒரு விஷயம் யாதெனில், 152 00:23:02,382 --> 00:23:05,344 பல தசாப்தங்களாக உள்ள அடிகளும் தழும்புகளும் தான். 153 00:23:11,475 --> 00:23:12,559 அதற்கு வயதாகியிருக்கலாம், 154 00:23:12,559 --> 00:23:16,563 ஆனால் ஒரு தெம்பான, இளம் வயது எதிரிக்கு சவாலாக அமையக்கூடிய வலிமை அதனிடம் உள்ளது. 155 00:23:29,952 --> 00:23:31,161 பணயம் அதிகமாக உள்ளது, 156 00:23:32,913 --> 00:23:35,541 ஆனாலும் இரண்டுமே பின்வாங்கத் தயாராக இல்லை. 157 00:24:06,321 --> 00:24:09,741 அந்த வயதான விலங்கிற்கு நான்கு டன் எடை கூடுதலாக இருப்பது அதற்கு சாதகமாக உள்ளது... 158 00:24:12,536 --> 00:24:14,580 அதோடு, அந்த சாதகத்தைப் பயனுள்ளதாக ஆக்கும் திறமையும் உள்ளது. 159 00:24:19,918 --> 00:24:23,380 அந்த இளம் ஆணின் கொம்புகள் இப்போது அதன் அழகை இழந்து விட்டது. 160 00:24:54,953 --> 00:24:57,414 அந்த வயது முதிர்ந்த ஆண் விலங்கின் ஆற்றல் 161 00:24:57,414 --> 00:25:00,584 நிச்சயமாக இந்த பெண் விலங்கை ஈர்த்துள்ளது போலும். 162 00:25:16,099 --> 00:25:19,645 தோற்ற ஆண் விலங்கிற்கு, இந்த வருடம் இனச் சேர்க்கைக்கு இனி துணை கிடைக்காது. 163 00:25:23,190 --> 00:25:28,362 இருந்தாலும், அதற்கு புதிதாக கிடைத்துள்ள வீரத் தழும்பு, ஒருவேளை அடுத்த வருடம் இந்த இடத்தில் 164 00:25:28,362 --> 00:25:31,865 இனச் சேர்க்கை கூட்டம் நடக்கும்போது, ஒரு பெண் விலங்கை அதன் பக்கம் ஈர்க்கலாம். 165 00:25:37,621 --> 00:25:40,666 தாவரங்களை உண்டு வாழும் டைனோசர்களான டிரைசெராடாப்ஸ்களுக்கு, 166 00:25:40,666 --> 00:25:45,796 வட அமெரிக்காவின் பரந்து விரியும் பசும் காடுகள் உண்பதற்கு தாராளமாக உணவைத் தருகின்றது, 167 00:25:45,796 --> 00:25:47,339 ஆண்டு முழுவதும். 168 00:25:50,050 --> 00:25:53,595 ஆனால் தொலை தூரத்தில் உள்ள வட அமெரிக்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு, 169 00:25:53,595 --> 00:25:55,931 உணவு கிடைப்பதே கடினம் தான். 170 00:25:58,851 --> 00:26:00,644 இங்கே ஆர்க்டிக் வட்டத்தின் உள்ளே, 171 00:26:00,644 --> 00:26:04,690 வருடத்தில் மூன்று மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைப்பதே அரிது. 172 00:26:09,611 --> 00:26:12,781 நீண்ட குளிர்காலம் முடிந்து சூரிய ஒளியின் வெப்பம் ஒருவழியாக மீண்டும் வரும் போது... 173 00:26:15,158 --> 00:26:18,954 இறகுகள் உள்ள ஓரின்தோமைமஸ், விரைந்து செயல்பட்டு அதை பயன்படுத்திக்கொள்கின்றது. 174 00:26:27,254 --> 00:26:32,718 அனைத்து டைனோசர் வகையிலும், இவை தான் வேகமாக ஓடக்கூடியவை. 175 00:26:34,178 --> 00:26:38,849 இவற்றால் புதிதாக முளைத்த தாவரங்களைத் தேடி வெகு தூரம் வரை செல்ல முடியும். 176 00:26:45,147 --> 00:26:49,359 மிக விரைந்து ஓடக்கூடிய ஆற்றல் இருப்பதால் வேட்டை விலங்குகள் அவற்றை பிடிப்பது கடினம். 177 00:26:56,992 --> 00:26:58,702 கடும் குளிர்காலத்திற்கு பின், 178 00:26:58,702 --> 00:27:02,998 இந்த பெண் நனுக்சார் ஒரு இரையை பிடித்து சாப்பிடும் கட்டாயத்தில் உள்ளது. 179 00:27:08,545 --> 00:27:14,051 டி. ரெக்ஸ் வகையைச் சேர்ந்தாலும், அதை விட சிறியது, எச்சரிக்கையுள்ளது, வேகமும் உள்ளது. 180 00:27:18,514 --> 00:27:22,768 இங்கே பதுங்கி பாய இடம் இல்லாததால், திடீர் தாக்குதல் சாத்தியமில்லை. 181 00:27:30,275 --> 00:27:34,279 மாறாக, அது பீதியை கிளப்பும் உத்தியை கடைப்பிடிக்கிறது. 182 00:27:53,507 --> 00:27:56,093 அது தன் இரையை துல்லியமாக தேர்வு செய்வது அவசியம்... 183 00:27:58,887 --> 00:28:00,430 அதே போல் அதை விடாது தொடர்ந்து துரத்தவும் வேண்டும். 184 00:28:13,902 --> 00:28:18,073 ஓரின்தோமைமஸ்களின் திடீரென விரைந்து செல்லும் ஆற்றல் அவற்றுக்கு சாதகமாக அமைகிறது. 185 00:28:24,037 --> 00:28:27,749 ஒவ்வொரு முறை தோல்வியைத் தழுவும் போதும் மேசித்து வைத்திருக்கும் சக்தியை இழக்கிறது... 186 00:28:31,336 --> 00:28:34,173 அதனால் அது பட்டினியால் இறக்கும் அபாயத்தை நெருங்கி வருகிறது. 187 00:28:40,596 --> 00:28:41,680 வசந்தகாலமாக இருந்தாலும், 188 00:28:41,680 --> 00:28:46,894 இந்த தொலை தூர வடக்குப்பகுதியில், உறைய வைக்கும் காற்று, வெப்பத்தை வேகமாக குறைக்கும். 189 00:29:15,506 --> 00:29:21,595 பனி துகள்களும், பாறைகளில் வளரும் புதர்களும் இந்த நனுக்சாருக்கு இரண்டாம் வாய்ப்பைத் தரலாம். 190 00:29:29,186 --> 00:29:31,396 இப்போது அதை அடையாளம் காண்பது கடினம். 191 00:29:36,401 --> 00:29:39,947 முன்னேறும் ஒவ்வொரும் அங்குலமும், அதை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கிறது. 192 00:30:18,360 --> 00:30:20,445 அது தன் இரையைத் தேர்ந்தெடுக்கிறது. 193 00:31:07,367 --> 00:31:10,078 இந்த பரிசு இந்த பெண் விலங்கிற்கு மட்டும் இல்லை. 194 00:31:19,046 --> 00:31:20,631 அது ஒரு தாயும் கூட. 195 00:31:29,223 --> 00:31:31,391 அதன் குட்டிகளுக்கு இது புதிதாக வேட்டையாடப்பட்ட இறைச்சி. 196 00:31:33,310 --> 00:31:35,562 பல வாரங்களுக்கு பின் கிடைக்கும் முதல் உணவாகவும் இருக்கலாம். 197 00:31:46,698 --> 00:31:48,867 அந்த குட்டிகள் தழைக்க வேண்டும் எனில், 198 00:31:48,867 --> 00:31:53,664 இப்போது கிடைத்துள்ள வெற்றியை மீண்டும் மீண்டும் அது பெற வேண்டும். 199 00:31:58,043 --> 00:32:01,964 அதன் குட்டிகள் வளர்ந்து, வேட்டையில் சேரும் வயதை அடையும் வரை இதைச் செய்ய வேண்டும், 200 00:32:01,964 --> 00:32:05,467 அதன் பின் அவை அவற்றுக்கான இரையைத் தேடிக்கொள்ளும். 201 00:32:12,057 --> 00:32:16,854 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இங்கே, தொலை தூரத்தில் இருக்கும் 202 00:32:17,354 --> 00:32:19,648 வட அமெரிக்க கண்டத்தின் எல்லையில், 203 00:32:20,232 --> 00:32:22,568 இது போன்ற மிக கடுமையான சூழல்கள் தான் நிலவியிருந்தது. 204 00:32:33,871 --> 00:32:35,873 PREHISTORIC PLANET: விளக்க உரை 205 00:32:39,918 --> 00:32:41,920 {\an8}டிரைசெராடாப்ஸ்களுக்கு தலைப்பாகை இருப்பது ஏன்? 206 00:32:44,047 --> 00:32:49,386 வரலாற்றிற்கு முந்தைய காலத்திலிருந்து நம் கைவசம் உள்ள மிக அதிசயமான மண்டையோடுகளில் இதுவும் ஒன்று. 207 00:32:50,095 --> 00:32:55,475 தாவரங்களை உண்ணும் டைனோசர் வகையைச் சேர்ந்த ஒரு டிரைசெராடாப்ஸின் மண்டையோடு இது. 208 00:33:00,647 --> 00:33:03,817 அதன் தலையின் பின் புறம் உள்ள அந்த பெரிய 209 00:33:04,735 --> 00:33:07,821 தலைப்பாகைப் போன்ற உறுப்பால் இந்த டைனோசரை உடனே அடையாளம் காணலாம். 210 00:33:11,366 --> 00:33:14,912 இந்த முதல் புதைப்படிமம் கிடைத்து, சுமார் 140 வருடங்களுக்கு பின் 211 00:33:14,912 --> 00:33:17,206 விஞ்ஞானிகள் இப்போதும் இதைக் குறித்து வியந்து கேட்பது 212 00:33:18,707 --> 00:33:21,084 "இந்த தலைப்பாகை எதற்காக இருந்தது?" என்பதை தான். 213 00:33:23,128 --> 00:33:24,546 இவை மாபெரும் உடலுறுப்பு என்பதால், 214 00:33:24,546 --> 00:33:26,798 {\an8}தசைகள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பை கொடுத்திருக்கிறது... 215 00:33:26,798 --> 00:33:28,342 {\an8}பேராசிரியர் பால் பார்ரெட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 216 00:33:28,342 --> 00:33:30,636 {\an8}...அதோடு அந்த உறுப்புகளைத் தாங்கும் தசைகளின் ஆற்றலிலும் அதன் பங்கு இருக்கிறது. 217 00:33:31,595 --> 00:33:34,515 இத்தனை விஷயங்களில் பங்களித்திருப்பதால், அந்த விலங்கின் வாழ்க்கை முறைக்கு 218 00:33:34,515 --> 00:33:35,933 அது முக்கியமானது தான் என அறியலாம். 219 00:33:37,142 --> 00:33:38,143 ஆனால் எதனால் முக்கியமானது? 220 00:33:41,396 --> 00:33:45,359 டிரைசெராடாப்ஸின் புதைப்படிமத்தில் உள்ள காயத் தழும்புகளை பார்க்கும் போது, 221 00:33:45,359 --> 00:33:49,196 அந்த தலைப்பாகை, சண்டையிடும் போது தற்காப்பு ஆயுதமாக முக்கியத்துவம் பெற்றுள்ளதை காட்டுகிறது. 222 00:33:51,281 --> 00:33:52,991 {\an8}மண்டையோட்டில் ம்ம், அடிபட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது... 223 00:33:52,991 --> 00:33:54,451 {\an8}டாக்டர். சுசானா மேய்ட்மென்ட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 224 00:33:54,451 --> 00:33:56,662 {\an8}...அதாவது மண்டையோட்டில் அடிபட்டு, காயம் ஆறிய இடங்கள். 225 00:33:58,497 --> 00:34:03,001 ஒரு வேட்டை விலங்கு, தலைப்பாகையின் ஒரு பகுதியை குத்தி எடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 226 00:34:03,752 --> 00:34:07,714 அதிலிருந்து இது ஒரு வகையான தற்காப்பு உறுப்பாக இருக்கலாம் என புலப்படுகிறது. 227 00:34:11,844 --> 00:34:13,594 ஆனால் இன்னொரு விஷயமும் உள்ளது. 228 00:34:17,224 --> 00:34:22,980 அந்த தலைப்பாகை, இனச் சேர்க்கைக்கு துணையை ஈர்க்க உதவியிருக்கலாம் என்பது இன்னொரு சாத்தியக்கூறு. 229 00:34:25,815 --> 00:34:27,650 கொம்புகள் போன்ற உறுப்புகள், அந்த விலங்கின் 230 00:34:27,650 --> 00:34:30,821 ஆரோக்கிய நிலையின் குறியாக விளங்குவதையும், அதிக அளவில் சந்ததிகளை ஈன்றெடுக்க அந்த விலங்கின் 231 00:34:30,821 --> 00:34:34,032 ஆற்றலைக் குறிப்பதாக அறிப்படுவதையும் தற்சமயம் வாழும் விலங்குகளில் நாம் காண்கிறோம். 232 00:34:37,536 --> 00:34:38,620 மூஸ் மானினத்தில், 233 00:34:38,620 --> 00:34:42,623 பெரும் கொம்புகள் இருப்பது, ஒரு ஆண் மானுக்கு அழகு என புரிகிறது. 234 00:34:43,166 --> 00:34:46,043 இனச் சேர்க்கைக்கான முதிர்ச்சியை அடையும் போது இது மிக முக்கியமாகிறுது. 235 00:34:49,672 --> 00:34:52,967 இதே கூற்று, டிரைசெராடாப்ஸின் தலைப்பாகைக்கும் பொருந்துமா? 236 00:34:55,094 --> 00:34:56,679 அது தற்காப்புக்காக மட்டுமே பயன்பட்டிருந்தால், 237 00:34:56,679 --> 00:34:58,849 அவை, வயது வந்த விலங்குகளில் உள்ள அதே அளவு வளர்ச்சியை, 238 00:34:58,849 --> 00:35:02,352 குட்டிகளும் பெற்றிருக்க வேண்டும், ஆனால், அது போன்ற வளர்ச்சியை நாம் குட்டிகளிடம் காணவில்லை. 239 00:35:03,937 --> 00:35:05,814 {\an8}குட்டிகளிடம் அவை மிகச் சிறியதாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது 240 00:35:05,814 --> 00:35:08,859 {\an8}அதோடு அவை மாபெரும் உறுப்புகளாக வளர்ந்து வருவதை 241 00:35:08,859 --> 00:35:10,527 {\an8}பிற்காலத்தில் விலங்கு பெரிதாகி, முதிர்ச்சி அடைந்த பின்பே காண முடிகிறது. 242 00:35:10,527 --> 00:35:12,738 {\an8}டிரைசெராடாப்ஸின் மண்டையோடு வளர்ச்சி 243 00:35:12,738 --> 00:35:14,907 {\an8}அவை பாலியல் வெளிப்பாடில் பயன்பட்டதற்கு 244 00:35:14,907 --> 00:35:17,409 {\an8}இது மட்டும் தான் ஆதாரம் என்றில்லை. 245 00:35:18,827 --> 00:35:21,914 அந்த தலைப்பாகைகளின் மேல் மட்டத்தில் ஆழ்ந்த மடிப்புகள் உள்ளன. 246 00:35:22,456 --> 00:35:25,125 இந்த மடிப்புகளில் இரத்த நாளங்களும், நரம்புகளும் இருந்திருக்கலாம், 247 00:35:25,125 --> 00:35:28,253 அதன் மூலம் அந்த உறுப்பின் சருமத்தை மிளிரும்படி செய்திருக்கக் கூடும். 248 00:35:30,047 --> 00:35:31,673 இது கண்கவர் வண்ணங்களை உடையதாக அமைந்திருக்கலாம், 249 00:35:31,673 --> 00:35:35,719 அதன் துணையாக வரக்கூடிய விலங்கிடம் காட்டிக்கொள்ள பரந்த இடப்பரப்பை கொண்டதாகவும் இருந்திருக்கலாம். 250 00:35:42,851 --> 00:35:45,020 இப்போது, டிரைசெராடாப்ஸின் மிக பிரபலமான 251 00:35:45,020 --> 00:35:50,234 உறுப்பிற்கு, உண்மையிலேயே பல வகையான பயன்பாடுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 252 00:35:52,444 --> 00:35:54,655 தாக்குதலுக்கும், தற்காப்பிற்கும் சிறப்பாக பயன்பட்டது... 253 00:35:59,952 --> 00:36:03,080 ஆனால் அதோடு துணையை வசீகரிக்க மிகவும் இன்றியமையாதது. 254 00:36:09,545 --> 00:36:14,591 நண்பரானாலும் எதிரியானாலும், பார்க்க அது கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும். 255 00:38:49,288 --> 00:38:51,290 தமிழாக்கம் அகிலா குமார்